Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடைசி வாகன அணியுடன் யாழ்மண்ணில் சிங்களபடை நடமாட்டம் முடக்கப்பட்ட அந்த நாளில் இருந்து 2009 மே 18ம்நாள் வரைக்கும் தமிழர்களின் மண்ணின் ஏதாவது ஒரு பகுதி சுதந்திரமாகவே இருந்தது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு தாயகத்தில் போராட்டகளத்தில் ஒரு சின்ன தடங்கல் நான் போனால் அதனை தீர்க்கமுடியும் என்று நம்பிக்கையுடன் சொல்லி சென்ற கிட்டு வல்லாதிக்க துரோகத்தனத்தால் வங்ககடலில் ஒன்பது தோழர்களுடன் ஆகுதி ஆகி இருபத்து இரண்டு வருசங்கள் ஓடிமறைந்துவிட்டன.

2009 மே க்கு பின்னர் ஏறத்தாள முழுஇனமுமே ராஜதந்திரிகளாக பரிணமித்திருக்கும் ஒரு பொழுதில் கிட்டு போன்ற முழுமையான வீரமும்,தியாகமும்,அர்ப்பணமும்,அதே நேரம் ராஜதந்திரமும் நிறைந்த வீரர்களே இந்த இனத்துக்கு தேவையாக இருக்கும் ஒரு தருணத்தில் இப்போது அவனதும் அவனுடன் வங்ககடலில் தீயுடன் கலந்த ஒன்பதுமாவீரர்களின் நினைவுவந்துள்ளது.

கிட்டுவின் எல்லாவிதமான ஆளுமைகளுக்குள்ளும் அதி சிறப்பானது எதுவென்றால் அவனது தேடல் தெரிந்து கொள்ளும் ஆவல்.அதனைத்தான் சொல்லலாம்.

ஏறத்தாள பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கிய பொழுதுகளில் இருந்தே கிட்டு இந்த விடுதலைஅமைப்பினுள் இருந்ததால் எல்லாவிதமான வளங்கள் அவை பெரிதோ சிறிதோ அவை அனைத்தையும் விடுதலைக்காக எப்படி பயன்படுத்துவது என்பதற்காகவே அவன் தேடினான்.இந்த தேடலுக்கு ஊடாகவே அவனது அனைத்து ஆளுமைகளும் வளர்ந்தன என்று சொல்லலாம்.

ஒரு பீல்ட்மார்சலையும் விட அதிகப்படியான போரியல்அறிவும் நுணுக்கங்களும் அவனுள் எழுந்தது எப்படி என்று பார்த்தால் அவன் தினமும் கற்றுக்கொண்டு இருந்ததாலேயே என்று சொல்லலாம்.

கற்பது என்றால் வெறுமனே புத்தகத்தை படிப்பது என்று அர்த்தம் அல்ல.அவன் பார்க்கும் கேட்கும், படிக்கும், அறியும் ஒவ்வொன்றையும் தனது தாயகவிடுதலைக்காக எப்படி பயன்படுத்துவது என்பதே அவனது கற்றலாக இருந்தது. 80களின் ஆரம்பத்தில் தலைவருடன் தமிழ்நாட்டில் நீண்டகாலம் நின்றே ஆக வேண்டும் என்ற ஒரு கட்டாயம் ஏற்பட்டபோது அந்த காலப்பகுதியையும் ஏதாவது கற்பதற்கே பயன்படுத்தினான்.தங்க இருப்பிடமும் உணவும் கேள்விக்குறியாக இருந்த அந்த பொழுதுகளில் நாளைய வளர்ச்சியை மனதில் கொண்டு தலைவரின் அனுமதியை பெற்று லித்தோ பிரிண்டிங்,ஸ்கிறீன் பிரிண்டிங்,

புகைப்படம் அச்சிடுதல் என எல்லாம் கற்றான்.

பின்பொருநாள் மிக கவலையுடன் சொன்னான் ராகங்களை பற்றி மதுரையில் படிப்பதற்கு தயாராகி கொண்டிருந்த பொழுதில்தான் தலைவரின் கட்டளைக்கு இணங்க பொன்னம்மானுடன் தாயகம் திரும்பவேண்டி வந்துவிட்டது என்று.இல்லையென்றால் எங்கள் விடுதலை கானங்களுக்கு இன்னும் செழுமை சேர்ந்திருக்க முடியும் என்று..

அவனது கற்றல் என்பது பிராந்திய வல்லாதிக்க புலானாய்வு ஓநாய்கள் எந்தநேரமும் அவனை வட்டமிட்ட பொழுதுகளிலும் இங்கிருந்து அவனுக்கு முன்பின் அறிமுகமே இல்லாத மெக்சிக்கோவில் ஒரு பெரும் ராஜதந்திர முன்னெடுப்புக்காக போய்நின்ற நேரத்திலும் அங்கும் ஓவியத்தை கற்றுக்கொண்டு அதனை எமது தமிழீழ எழுச்சிக்கு உரம்சேர்க்க பயன்படுத்திய எல்லைவரை நீண்டது.

போரியல் என்று எடுத்து கொண்டாலும் அவனது மிகச்சிறந்த பல்கலை நாட்களாக அண்ணையுடன் தமிழ்நாட்டில் நின்றிருந்த காலங்களே அமைந்திருந்தன.நாள் ஒன்றின் 24மணிநேரமும் தலைவருடன் நின்றிருந்த அந்த நாட்களில் தலைவர் தனது பட்டறிவுகளை, நுணுக்கங்களை எல்லாம் கிட்டுவுடன் கதைக்க கதைக்க இவனும் கேள்வி கேள்விகளை தொடுத்து இன்னும் இன்னும் பெற்றுக்கொண்டான்.

தமிழீழவிடுதலைப்புலிகளின் முதலாவது சிங்கள காவல்நிலையம் மீதான தாக்குதல்,முதலாவது கண்ணி வெடி தாக்குதல் போன்றனவற்றில் கிட்டு பங்குகொள்ளமுடியாமல் தமிழ்நாட்டில் நின்றிருந்தாலும் இங்கே நடந்த தாக்குதல்களின் ஒவ்வொரு அசைவுகளும் கிட்டுவாலும் தலைவராலும் அலசி அலசி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதனூடான பெறுபேறுகள் பாடங்கள் என்பன ஒரு பெரும் எதிர்கால தாக்குதல்களுக்கு அடித்தளமான அறிவை பெற அமைந்தன என்றால் மிகை இல்லை.கிட்டு தமிழ்நாட்டில் இருந்து 82இறுதியில் வந்து இறங்கும்போது முழுமையான தளபதிக்குரிய தயார்நிலையிலேயே தலைவரால் உருவாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றான்.

தேசியவிடுதலைப்போராட்டம் வேகம் பெறவேண்டிய நேரத்தை உணர்ந்த தலைவரின் வழிநடாத்தலில் தாயகத்தில் சீலனும் கிட்டுவும் சேர்ந்து மிகமிக வேகமாக செயற்பாடுகளில் இறங்குகிறார்கள்.

அதிலும் உமையாள்புரம் தாக்குதலில் தற்செயலாக வெடித்துவிட்ட கண்ணிவெடியால் தயார்நிலைக்குவந்த சிங்களராணுவ கவசவாகனம் போராளிகள் நின்றிருந்த இடத்தை நோக்கி செறிவான சூடுகளை கொடுத்தபடி வந்து கொண்டிருந்த போது கிட்டு தனது ஜி3 ஆல் மிக துணிவுடன் கவசவாகனத்தை சுட்டு நிலை தடுமாற வைத்ததால்தான் அன்று போராட்டம் காப்பாற்றப்பட்டது.அந்த சம்பவம் கிட்டுவின் நேரக்கணிப்பு,அசாத்தியமான அசாதாரணமான நிலையிலும்கூட நிலை தடுமாறாமல் குறிபார்த்து தாக்கு நடாத்தும் துணிவு,சாவைப்பற்றி கவலைப்படாத வீரம் என்பனவற்றை அமைப்பு முழுமையாக தெரிந்துகொண்டது.

அந்த துணிவும் தகுந்த தருணத்தில் உகந்த முடிவை எடுக்கும் ஆற்றலும்தான் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பிறகு தமிழர்கள் தமது மண்ணில் எவரது ஆக்கரமிப்பு இன்றி சுதந்திரமாக நிற்கும் நிலையை உருவாக்கியது.யாழ் காவல்நிலைய தாக்குதலின் மறுநாள் பலாலியில் இருந்து யாழ் குருநகருக்கு வந்த கடைசி வாகன அணியுடன் யாழ்மண்ணில் சிங்களபடை நடமாட்டம் முடக்கப்பட்ட அந்த நாளில் இருந்து 2009 மே 18ம்நாள் வரைக்கும் தமிழர்களின் மண்ணின் ஏதாவது ஒரு பகுதி சுதந்திரமாகவே இருந்தது.இதற்கு முன்னுரை எழுதிய வீரன் என்ற முறையில் கிட்டு காலத்தை வென்று நிற்பான்.மிகக்குறைந்த போராளிகளை வைத்து கொண்டு மரபுவழியிலான ஒரு ராணுவத்தை முடக்கி வைத்திருக்கும் போரியல் என்பது கிட்டுவின் அதி நுட்பம்நிறைந்த ஆற்றலே.

இவை எல்லாவற்றையும் அவன் சாதிக்க காரணமாக அமைந்தது அவன் முழுமையாக இதனை பற்றியே சிந்தித்தவன் என்ற ஒரே காரணத்தால்தான்.

சும்மா இருப்பது என்பது அவனது அகராதியில் இல்லாத வார்த்தை.ஏதாவது ஒரு கொஞ்சநேரம் கிடைத்தால்கூட 'அந்த இரசாயணமாஸ்ரரிடம் போவோம் என்று சொல்லி கரணவாய்பகுதியில் வாழ்ந்த அவரிடம் சென்று எப்படி குண்டுகளில் பாதுகாப்பாக இரசாயணபொருட்களை பொருத்துவது என்று பாடம் கேட்க தொடங்கி விடுவான்.திடீரென களத்தில் பத்திரிகைக்கு ஆச்சு கோக்க போய்விடுவான்.இல்லையென்றால் தெருவில் யாராவது வயோதிப தந்தையுடனோ தாயுடனோ அவர்களின் அரசியலை கேட்டபடி இருப்பான்.

இரவுகளின் நெடுநேரங்களுக்கு வாசிக்கும் ஒரு அசுரபசி அவனுக்கு..தலைவர் நீண்ட ஓய்வில்லாது புயலாக வீசும் எமது விடுதலைவரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு என்பது இதனை குறிப்பிட்டுத்தான்.ஆம்.அவன் ஓய்வில்லாத ஒரு போராளி.இந்த இடத்தில் தலைவரின் ஒரு குணாதிசயம் பற்றி சொல்லி விட்டுத்தான் அங்கால் செல்ல முடியும்.

கிட்டுவின் மிகச்சிறிய வயதில் இருந்தே நட்புவட்டத்தில் இருந்தவர்களாலேயே உணர்ந்துகொள்ள முடியாத அவனது ஆற்றல்களை எல்லாம் அடையாளம் காண எப்படித்தான் தலைவரால் முடிந்ததோ இன்னும் இன்றும் ஆச்சயர்யமே.அதிலும் கிட்டுவுக்கே தெரியாது அவனுள் ஆழ்ந்திருந்த ஆற்றல்களை எப்படித்தான் அவனுக்கே அடையாளம் காட்ட இந்த மகத்தான தலைவனால் முடிந்ததோ..

கிட்டு என்பது தலைவரின் உருவாக்கம்.இப்படி மிகமிகச் சிறிய விடயம் மிகமிக பெரிய விடயம் என்று அவன் எதிலுமே பாகுபாடு பார்ப்பது இல்லை.செய்நேர்த்தி என்பது எல்லாவற்றிலும் இருக்கவேண்டும்.அது ஒழுங்காக இருந்தால் என்றாவது வெற்றி பெறலாம் என்பதில் நம்பிக்கை கொண்டவன் அவன்.அவனது கவனிப்பில வெளியான களத்தில் பத்திரிகையாகட்டும்,புலம்பெயர் தேசமொன்றில் மக்களுக்கு அறிவிக்க வேண்டிய ஒரு துண்டுப்பிரசுமாகட்டும் எல்லாவற்றிலும் ஏதேனும் பிழைகள் இல்லாமல் அழகாக நேர்த்தியாக மக்களுக்கு புரியும்படி இருக்கவேண்டும் என்பதே அவனது குறிக்கோள்.

இந்த செய்நேர்த்தி அச்சுஊடகத்தில் மட்டும் என்றில்லை ஒளிவீச்சில்,அமைப்பின் ஒலிபரப்பில், தலைவர் முதன்முதலில் அனிதாபிரதாப் க்கு கொடுத்த பேட்டியின்போது தலைவரின் தலைமுடி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தானே முடிவெட்டியது வரை அவனது ஈடுபாடு.

பேராட வெளிக்கிட்டபோது எங்களைப்போன்றே ஒருவன் அவன்.முழுமையாக அவன் தன் வீடு துறந்து வெளிக்கிட்ட அந்த நாளில் இருந்து வங்ககடலில் தீயுடன் சங்கமமாகும்வரைக்கும் போராடுவதற்காக கற்றுக்கொண்டு இருந்த மகத்தானவன் கிட்டு.

ஏராளம் கனவுகள் அவனுக்கு..

வாழவேண்டும் என்ற கனவுகள் அல்ல அவை.எமது மக்களை இப்படி இப்படி வளமாக வாழ்வைக்க வேண்டும்.உலகின் அனைத்து அறிவுகளும் எம் மண்ணில் கொண்டுவந்து குவிக்க வேண்டும் என்று ஆயிரமாயிரம் கனவுகள்.

அவை எல்லாம் வெறுமனே ஒரு கடற்பரப்பில் ஆதிக்கம் நாணி நிற்க தமிழரின் வீரத்தை சொல்லியபடி தீக்குள் வெந்த அந்த நாளுடன் முடிந்துவிடுமா..?முடிந்துவிடத்தான் விடமுடியுமா..?

கிட்டுவும் அவனுடன் மரணித்த தோழர்களும் எமக்கு என்றென்றும் சொல்லிக் கொண்டிருக்கும் பாடம் ஒன்றே ஒன்றுதான். விடுதலைப் போராட்டம் என்பது பகுதிநேர ஓய்வுநேர பொழுதுபோக்கு வேலை அல்ல.முழுமையான ஈகம்.

முழுநேரமும் விடுதலைக்காக வாழ்தல் போராடுதல் என்பதே அவர்கள் மரணிப்பின் செய்திகள் ஆகும். இந்த இருபத்திஇரண்டாவது நினைவுநாளில் இதனை மனம் செலுத்தி நினைவுகொள்வோம்.

 

https://www.facebook.com/ramkumar.thiagaragah/posts/888801524485270

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.