Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு; இன அழிப்புக்கு யாரும் பொறுப்பாளிகள் இல்லை.

Featured Replies

யூகோஸ்லாவியாவில்  இருந்து பிரிந்த சேர்பியாவும்  குரோஷியாவும்  தமக்கிடையே  இனப்படுகொலைகளில் ஈடு படவில்லை என்று சர்வதேச நீதிமன்றம் என்று தீர்ப்பளித்தது.
 
1991 ல் Vukovar நகரம் உள்ளிட்ட பலபகுதிகளில் சேர்பியா  இனஅழிப்புக்களில் ஈட்டுபட்டதாக  குரவேசியா குற்றம்சாட்டி இருந்தது.
 
இதேவேளை குரவேசியாவிலிருந்து  200,000 க்கும் மேற்பட்ட செர்பியர்கள் பலவந்தமாக  வெளியேற்றப்பட்டதாக  சேர்பியாவும்  ஒரு எதிர் மனுவைத் தாக்கல் செய்திருந்திருந்தது.
 
1991-1995 போரின் போது, பெரும்பாலும் குரவேசிய இன மக்களே கொல்லப்பட்டனர்.
 
இன்று செவ்வாய் கிழமை, நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறிய  நீதிபதி பீட்டர் ரொம்கா, இருதரப்பு குற்றச்சாட்டுக்களையும்  நிராகரித்தார்.
 
போரின் போது இருபக்க படைகளும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வந்தது உண்மை  எனினும், எந்தஒரு தரப்பும்,  "இனப்படுகொலை இடம்பெறுவதற்கு குறிப்பிட்ட நோக்கம் ஏதும் இருந்ததற்கான "  போதுமான ஆதாரங்கள் எவையும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றார் நீதிபதி பீட்டர் ரொம்கா.
 
Forces on both sides had carried out violent acts during the war, Judge Tomka said. However, neither side had provided sufficient evidence to demonstrate the "specific intent required for acts of genocide".

Edited by Small Point

  • தொடங்கியவர்
"செர்பியாவும், குரேஷியாவும் இனப்படுகொலை செய்யவில்லை"
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்
பகிர்க

குரேஷிய சுதந்திரப் போரின் போது, செர்பியாவோ அல்லது குரேஷியாவோ இனப்படுகொலையை செய்யவில்லை என்று தெ ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

150203153700_serbia_croatia_icc_640x360_தீர்ப்பளித்த நீதிபதிகள்

1990களின் ஆரம்பத்தில் நடைபெற்ற வன்செயல்களில் இரு தரப்புகளும் குற்றங்களை இழைத்திருந்தாலும், நீதிமன்றத்தில் இரு தரப்புகளும் பரஸ்பரம் எழுப்பிய இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை நிருப்பிக்கத் தவறிவிட்டன என்று நீதிபதிகள் கூறினர்.

இந்தப் பிரதேசத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்ய இரு நாடுகளும் ஒத்துழைக்கவேண்டுமென்றும் நீதிபதிகள் கூறினர்.

குரேஷியப் பிரதமர் ஸோரான் மிலனோவிச் தான் இந்தத் தீர்ப்பு குறித்து திருப்தியடையாவிட்டாலும், அதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். செர்பிய அதிபர் டோமிஸ்லாவ் நிக்கோலிச் இனி நீடித்த அமைதி நிலவும் என்று நம்புவதாகச் செய்தியாளர்களிடம் கூறினார்

உகோவர் என்ற நகரத்திலும் இன்ன பிற இடங்களிலும், செர்பியா 1991 ஆம் ஆண்டு இனப்படுகொலை செய்ததாக குரேஷியா குற்றம்சாட்டியது. குரேஷியாவில் இருந்து இரண்டு லட்சம் செர்பியர்கள் வெளியேற்றப்பட்டதைக் காட்டி செர்பியா வழக்குப் பதிவு செய்தது.

கடந்த 1991 ஆம் ஆண்டுக்கும் 1995 ஆம் ஆண்டுக்கும் இடையே நடைபெற்ற போரில் 20 ஆயிரம்பேர் வரைக் கொல்லப்பட்டனர். இதில் அதிகமானோர் குரேஷியாவைச் சேர்ந்தவர்கள்.

இந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி

 

http://www.bbc.co.uk/tamil/global/2015/02/150203_icjjudegement

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.