Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் இதய வலியைப் புரியாத வேலாயுதங்கள்!

Featured Replies

np-3215-03-620x601.png

மலையக மக்களை மாற்றானிடம் அடகு வைத்து வாழ்ந்தவர்களுக்கு

பொது வாக்கெடுப்பு’ அர்த்தமற்றது, என்று கூற என்ன அருகதை உண்டு?

*******************************************

மு.வே.யோகேஸ்வரன்

*********************************

மலையக மக்கள் யார்..? எங்கள் இரத்த நாடிகள்!..என்றோ ஒருநாள் , ஒரு பொன்னம்பலம் அவர்களை சிங்களவர்களோடு சேர்ந்து கொண்டு புறக்கணித்தார்..அவர்கள் சிலரின் குடியுரிமையை பறித்தார்.. என்பதற்காக தந்தை செல்வாவோ,அல்லது தம்பி பிரபாகரனோ ஒருபோதும் புறக்கணிக்கவில்லை..என்பதை நம் மலைய உறவுகள் நன்கு அறிவார்கள்!..அதற்கு மாறாக தலைவர் பிரபாகரனின் காலத்தில்..வடக்கிற்கு இடம் பெயர்ந்து வந்த மலையகத்தை சேர்ந்த எங்கள் உறவுகளுக்கு வன்னிப் பகுதியில் குடியிருப்புகளும் வாழ்வாதாரங்களும் அமைத்துக் கொடுத்தவர்தான் புலித் தலைவர் என்பதை உலகம் நன்கு அறியும்..!..அதுபோல் ஈழ விடுதலைப் போரில் எண்ணற்ற மலையக உறவுகளும் இணைந்து போராடினார்கள்..அது மட்டும் அல்ல..நிராயுத பாணிகளாக தனித்து மலைகளில் வாழும் எங்கள் உறவுகள் மீது..எவன் ஒருவன் ஆயுதங்களைப் பிரயோகிக்க முனைவானோ..இனி அவனை அங்கு சென்றே புலிகள் வேட்டையாடுவார்கள் என்று..தலைவர்..அதற்கான நடவடிக்கை சிலவற்றிலும் ஈடு பட தயாராக இருந்தவர் என்பதை அநேக மலையகப் போராளிகள் நன்கு அறிவார்கள்!

விடுதலைக்காக எம்மோடு சேர்ந்து அவர்களில் பலர் ஆயுதம் தூக்கினார்கள்..அதில் சில தளபதிகள் கூட உண்டு..அதுபோல்..

அநேக மா வீரர்களும் அதில் அடங்குவர்..மண்ணாலோ..அல்லது கடலாலோ போடப்பட்டிருக்கும் …எல்லைகள் ஒருபோதும் தமிழின் இதய நாடிகளின் சுற்றோட்டத்தை தடுத்துவிட முடியாது.. என்பதற்கு அன்றும் இன்றும் மலையக மக்கள்போல் தமிழக மக்களும் ஆதாரமாக விளங்குகிறார்கள்!..இரத்தத்தையும் சதையையும் பிரிக்க முடியும் என்று எவன் ஒருவன் சொல்கிறானோ,அவன் மண்டையில் மசாலா இல்லாதவனே..!..தமிழை அழிக்க நினைப்பவனே!

ஆனால்..மலையக மக்களுக்குக்காக வாக்கு வேட்டை ஆடிக் கொண்டே காலம் காலமாக சீனி மூட்டைகளை தமது உடலில் சேமித்து வைத்திருக்கும் தொண்டமான் பரம்பரை, மலையக மக்களின் வாழ்வை..65 வருடங்களாக எந்த விதத்தில் உயர்த்தினார்கள்?..’அவர்களின் புறாக் கூடு போன்ற ‘லயங்கள் ‘ கோபுரங்கள் ஆகினவா..? இல்லை..அங்கு வாழும் மலையக மக்கள் ‘பஜிரோ’க்களில் போகமுடிந்ததா..? அல்லது அவர்களின் உடலில் ஓட்டை போட்டுக் கொண்டிருக்கும் அட்டைகள்தான் அவர்களின் குருதியை குடிக்காமல் இருந்ததா..? இருக்கிறதா..?

மலையக மக்கள் சிங்களவர்களோடு சேர்ந்து பூகோள ரீதியாக.. வாழ்பவர்கள்..ஆனால்..சிங்களவர்கள் அங்கே அனுபவிக்கும் அநேக உரிமைகள் அந்த மண்ணில் பெரும்பாலும் அவர்களுக்கு மறுக்கப் படுகின்றன!..ஆனால்..அவர்களின் வாக்குபலத்தால் மட்டும்.அன்றில் இருந்து இன்றுவரை பல தொண்டை மான்கள் ..வயிறு வளர்த்து வருகிறார்கள்..அவர்களுக்கு ‘லயன்களை’பற்றி சொல்லிப் பிழைக்க மட்டுமே தெரியும்.. அவர்களின் சுருதி லயன்களை பற்றி என்ன தெரியும்?

காலம் காலமாக ஆட்சிக் கட்டிலில் ஏறிக் கொன்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் செம்பு தூக்கிப் பிழைப்பதற்காக, அவர்கள் அடகு வைப்பது மலையக மக்களின் வாழ்வைத்தான்!..பதுளை மாவட்டத்தில் அண்மையில்..

மண்சரிவில் சிக்கி மாண்டவர்கள் என்ன சிங்களவர்களா..? இல்லையே! ..சிங்களவர்கள் அங்கே ஒய்யார மாளிகைகளில் வாழ்கிறார்கள்..எங்கள் உறவுகளோ புறாக் கூடுகளில்தான் வாழ்கிறார்கள்..அதனால்தான் மண் சரிவு அவர்களுக்கு உயிர்ச் சரிவாகிப் போனது..உழைப்பவனுக்காக….உறுதியான வீடுகள் அங்கே கட்டப் பட்டிருந்தால், ஏன் அவர்கள் உயிரோடு புதைந்திருக்க வேண்டும்?

கண்ணீரால் எழுதப் பட்ட கதை அது..பள்ளிக்குச் சென்ற சிறுவர்-சிறுமியர்..பசியோடு வந்து.. தம் பெற்றோரை அம்மண்ணுக்குள் தேடிய அவலம் அங்கே நடந்தது..ஏன்?..இந்த மலையக தமிழ் அரசியல் வாதிகளின் செம்பு தூக்கிப் பிழைக்கும் செயலால்தான்!

கொடுங்கோலன் ராஜபக்சா காலத்தில், வட -கிழக்கில் அழிக்கப் பட்ட எங்கள் மக்களின் வாழ்வுக்கு இந்த சண்டை மான்கள் என்ன செய்தார்கள்?.. இனப் பேய் ராஜபக்சாவின் அரசைப் பலப் படுத்திக் கொண்டிருந்தார்கள்!..எங்கள் மக்களின் உயிர்களை குடித்த சிங்கள இனவாதிகளால் ஏவப் பட்ட ஒவ்வொரு எறிகணையிலும்,விமானக் குண்டிலும்.. ..ராஜபக்சாவின் கரங்கள் எப்படிப் பதிந்தனவோ..அதுபோல்தான் அவனுக்கு செம்பு தூக்கிய இந்தப் போலி கொழும்பு.. அரசியல் வாதிகளின் கரங்களும் பதிந்துள்ளன..!..என்பதை நாம் மறந்துவிடப்போவதில்லை!

அல்லது எங்கள் பேரன் பேத்திகளும் விட்டுவிடப் போவதில்லை!

நாம்..இதுவரை சுமார் 3 லெட்சம் தமிழ் மக்களை கடந்த 66 ஆண்டுகளாக இலங்கையில் சிங்களவனுக்குப் பறி(பலி) கொடுத்தவர்கள்..

இனியும் எங்களுக்கு ரோச நரம்பு இல்லை என்று, இந்த கொழும்பு அரசியல் வாதிகள் நினைத்தால் 13 வதோடு போய் படுத்துக் கொள்ளட்டும்..!..1958..1977..1983..இவைகளை இவர்கள் மறந்துவிடலாம்..

மீன் அனுப்பிய சன்லைட் பெட்டிகளுக்குள் எங்கள் உறவுகள் தலை துண்டிக்கப் பட்டு, வடக்கிற்கு பார்சல் செய்யப் பட்டு வந்ததை நாங்கள் மறக்கத் தயாரில்லை! கொதிக்கும் ..தார் பீப்பாக்களுக்குள் எங்கள் உறவுகளை போட்டு..துடிக்க,துடிக்க கொன்றதை எங்களால் மறக்க முடியாது!

வடக்கில் இருந்து இலங்கை படைகளை முற்றாக வெளியேற்ற இந்த வேல்.. ஆயுதங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை..வடக்கில் உள்ள எங்கள் மக்களின் பூர்வீக காணிகளை திரும்பக் கொடுக்கும் வல்லமை, இந்தச் சூலாயுதங்களுக்கு நிச்சயம் இல்லை..

கொக்கிளாயில்..மண்கிண்டி மலையில்..மணலாறில்..கொக்கு தொடுவாயில்,நாவற் குழியில் ..அத்து மீறிக் குடியேற்றப்பட்ட சிங்களவர்களை விரட்டி அடிக்க இந்த வெற்று ஆயுதங்களுக்கு வீறு இல்லை..அப்படி இருக்க, இங்கே தமிழ் நாட்டில் வந்து கொண்டு, பொது வாக்கெடுப்பு என்பது அர்த்தம் இல்லாதது..என்று சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி உண்டு?..

நாளை ஓர் இனக்கலவரம் அங்கே நடக்காது என்பதற்கு இந்த பிச்சாண்டிகள்’ உத்தரவாதம் அளிப்பார்களா.?

நாளை மீண்டும் சிங்கள இனப்பேயாம் ராஜபக்சாவின் உறவுகள் எங்கள் தலைகளை கொழும்பில் கொட்டகேனாவில், கண்டியில், அனுராத புரத்தில்,திருகோணமலையில் ,வெட்டிச் சரிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு?..வெறும்

பிட்சா பாத்திரங்களை பறி கொடுத்தவர்கள் அல்ல நாம்..இலட்சக் கணக்கான அரிய உயர்களை பறி கொடுத்தவர்கள்!..இசைப் பிரியாக்களை அந்தச் சிங்களத் தசைப், பிரியர்கள் அங்குலம் அங்குலம் ஆக வதைத்தபோது, இந்த கொழும்புமாநகரப் பொன்மனச் செல்வன் எங்கே போயிருந்தார்?

இன்று சென்னைக்கு வந்து கொண்டு, பொது வாக்கெடுப்பு’.. என்பது அர்த்தம் அற்றது, என்று சொல்ல சிங்களவன் போடும்.. எலும்பை நக்குவோருக்கு என்ன உரிமை உண்டு?

நாங்கள் 40000 மாவீரர்களை ஆயுதங்களோடு தமிழுக்காக.. தமிழ் மண்ணுக்காக பறி கொடுத்தவர்கள்..ஒன்றரை லெட்ச மக்களை முள்ளி வாய்க்காலில் இழந்தவர்கள்..!..நீங்கள் எதை பறி கொடுத்தீர்கள் ?

கோவணத்தை.. என்று வேண்டுமானால் சொல்லலாம்..வேறு என்ன உண்டு..இழந்தோம், என்று சொல்வதற்கு?.

சுகமாக..ஏசியில்..ஓசியில்.. கொழும்பில் இருந்து கொண்டு, சீமை வாழ்வில் சல்லாபிக்கும் உங்களுக்கு பொது வாக்கெடுப்பை பற்றி பேச என்ன தகுதி உண்டு?

http://www.velichaveedu.com/32150809/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.