Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஊழல்! ஆதாரங்கள் வெளியிட தயார்….

Featured Replies

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக தகுந்த ஆதராங்களுடன் வெளிபடுத்த கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் தாயாராக உள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் பிறின்ஸ் தேவசுதன் தெரிவித்துள்ளார்

கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களின் நலன்கள் தொடர்பாக பல்கலைக் கழக நிருவாகம் அக்கறையின்றி செயற்படுவதைக் கண்டித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிவேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு

“கடந்த 25.01.2015 அன்று மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டஊடகஅறிக்கைமற்றும் 30.01.2015 அன்று இடம் பெற்றமாணவகளின் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாகதெளிவுபடுத்தல்

கடந்த25.01.2015அன்றுகிழக்குப் பல்கலைக்கழகமாணவர் ஒன்றியத்தினால் “கிழக்குபல்கலைக்கழகத்தில் கடந்தகாலத்தில் இடம் பெற்றபலமோசடிகளைகண்டும் காணாமலும் மாணவர் நலனில் அக்கறைசெலுத்தாதமுன்னைய மூதவையில் அங்கம் வகித்துமீண்டும் நியமனம் பெற்றஉறுப்பினர்களைநீக்ககோரல்.”

என்றதலைப்பிடப்பட்ட ஊடக அறிக்கை வெளியிடப்பட்டமை தாங்கள் அறிந்ததே. ஆனால் அன்று வரை மேற்குறிப்பிட்ட விடயத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக எந்த வொருநடவடிக்கையினையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்கவில்லை என்பதனை 31.01.2015 என்று இடம் பெற்ற மூதவை முதலாவது அமர்வு தெளிவுபடுத்துகின்றது. இதனால் மாணவர்களாகிய நாங்கள் அதிருப்திஅடைகின்றோhம்.

மேலும் 30.01.2015 அன்று மாணவர்கள் மற்றும் மாணவர் ஒன்றியம் நடாத்தியபோராட்டத்தின் உண்மைதன்மையினையும் மாணவர் போராட்டத்தின் முக்கியவிடயங்கள் தொடர்பாக எந்தவொரு செய்தியையும் வெளியிடவில்லை.

இதனால் மேற்படிவிடயங்கள் தொடர்பாகஉண்மைத் தன்மையைமக்களுக்கு தெளிவுபடுத்து முகமாக கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் எதிர்வரும் வாரத்தில் ஒர்பத்திரிகை மாநாட்டை தகுந்த ஆதாரங்களுடன் நாடாத்தி தெளிவுபடுத உத்தேசித்துள்ளோம்.

மாணவர் சமூகத்தின் நியாயமானகோரிக்கைகள் தொடர்பாக28.01.2015அன்றுகௌரவ பிரதமர் ரணில் விங்கிரமசிங்கஅவர்களின் கூற்றுக்குஅமையகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற ஊழல் தொடர்பாகஉடனடியாகவிசாரனைக்குழுநியமிக்கப்படவேண்டும்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றஊழல்கள் தொடர்பானசெய்திகள் ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டபோதிலும் அந்தஊடகங்கள் பக்கச் சார்பாகசெயற்படுகின்றதா? என்று மாணவர்கள் கவலையடைகின்றனர்.

ஊழல் தொடர்பான விசாரனைக்குழுவினை அமைக்குமாறுகௌரவ பிரதமரிடம் கோரிக்கை விடுத்தோமேதவிர ஊழலுடன் தொடர்புடைய உபவேந்தரிடம் முன்வைக்கவேண்டிய நியாயம் தான் என்ன?

எமது போராட்டமானது தனியொருநபருக்கு ஏதிரானது அல்ல. பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற ஊழலுக்கு எதிரானது என்பதை பொதுமக்களுக்கும் பல்கலைக்கழகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் தெரிவிப்பதோடு இப்போராட்டத்திற்குஉரியஅதிகாரிகள் உரியநடவடிக்கைஎடுக்காவிடில் இது மட்டக்களப்புமாவட்டம் தழுவியபோராட்டமாகஅமையும் என்பதையும்தெரிவிக்கின்றோம்.

எமதுநியாயமானகோரிக்கையினைஏற்றுஉங்களதுஎதிர்காலசெல்வங்களின் கல்விக்காகநீங்களும் எங்களோடுகைகோர்க்குமாறுமட்டக்களப்பின் அனைத்துகல்வியின்பாலும்,பிரதேசஅபிவிருத்தியின்பாலும் அக்கறைகொண்டஅமைப்புக்களையும் மகளிர் அமைப்புக்களையும், சிவில் சமூகம், பிரஜைகள் சபை, அரசியல் தலைவர்கள், ஊழலுக்கு எதிரான அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒன்றுதிரண்டு “பொறுத்ததுபோதும் பொங்கிஎழு” என்பதைப் போல் “நீபொரிதா? நான் பெரிதா?

என்பதைவிடஎமதுசொத்தானபல்கலைக்கழகம் பெரிது”என்று ஊழல் அற்றதுய்மையானகல்விக்கூடமாகமாற்றஉங்கள் அனைவரையும் எங்களோடுஒன்றினையுமாறும் அன்போடுஅழைக்கின்றோhம்.

அத்தோடு மேற்படி எமது ஊழலுக்கெதிரான போராட்டத்ததுக்கு வலுச்சேர்க்கும் வகையில் தங்கள் கைவசம் ஏதாவது தகவல்கள், ஆதாரங்கள், பத்திரங்கள் சாட்சிகள் ஏதாவது இருப்பின் தயவுசெய்துபின்வரும் மின்னஞ்சல் முகவரிமற்றும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டுதந்து உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்”

studentunioneusl@gmail.com

0094 65 3064793

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.