Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் அதிகரிக்கிறது தரை ஓசோன் அளவு:சிக்கலில் கோயம்பேடு, தி.நகர், வள்ளலார் நகர்

Featured Replies

Tamil_News_large_117888220150208045006.j

 

சென்னையில் உள்ள கல்லுாரிகளிலேயே, அதிகமான முனைவர்களை உருவாக்கும் பெருமை, சென்னை மாநில கல்லுாரிக்கு உண்டு. அதில், ஆண்டுக்கு சராசரி 30 முனைவர்களை உருவாக்கும், இயற்பியல் துறைக்கு சென்றோம். ஆய்வு மாணவர்கள் சிலரைசந்தித்தோம். அவர்களின் சிறுசிறு ஆய்வு முடிவுகள் சில, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகின்றன. 
சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருக்க, தாவரங்கள் வேண்டும் என, சூழலியல் ஆய்வாளர்கள் கூவிக்கொண்டிருக்கும் வேளையில், சில தாவரங்களை அழித்தே ஆக வேண்டும் என, பேசி வரும், பேராசிரியர், ஆர்.சாமுவேல் செல்வராஜிடமும் பேசினோம். அவர் கூறியதாவது:இப்போது, உலகம் முழுவதும், வெப்பமயமாதலை பற்றி பேசி கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில், காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தாவரங்களை பற்றி பேச வேண்டியது, அவசியம். பொதுவாக நீர்நிலைகளின் எதிரி, ஆகாய தாமரை. அது, சாதகமான சூழலில் விரைவாக வியாபிக்கும். நீர்வழித்தடங்களை ஆக்கிரமிக்கும். நீர்போக்குவரத்தை தடுக்கும்.
 
ஓடும் நீர் தேங்கும் போது, பல்வேறு குப்பைக்கூளங்கள் தேங்கும். நீர்நிலைகள் துார்ந்துபோகும். நீர் மாசுபடும். நீர்வாழ் உயிரினங்கள் வாழ முடியாத தன்மைக்கும், விலங்குகள் பருகமுடியாத தன்மைக்கும் மாறும். சாதகமற்ற சூழலிலும் ஆகாய தாமரை தாக்குப்பிடிக்கும்; அது நீர்நிலைகளின் எதிரி. மரங்கள் இருக்கும் இடம் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால், அதிக வெப்பத்தை வெளியிடும் ஒரே மரம், கருவேல மரம். தென் தமிழகத்தின் சிலபகுதிகளில், வாழ்வாதாரமாக கருதப்படும் இந்த மரங்கள், மண்ணின் எதிரி.
 
இவை, பொதுவாக பகலில், ஒளிச்சேர்க்கை செய்வது இல்லை. அதிகாலை நேரத்தில் கிடைக்கும், ஈரப்பதத்தில் இருந்தும், பூமிக்கடியில் இருந்து நீரை உறிஞ்சியும் ஒளிச்சேர்க்கை நடத்துகிறது. இதனால், அந்த மரங்கள் உள்ள பகுதிக்குள் நுழையும் போதே வேர்த்து விடும். விலங்குகள் கூட, அதன் கீழ் நிற்காது. இந்த மரங்களை, உடனடியாக பூமியை விட்டு அகற்றினால் தான், நிலத்தடி நீர் கொஞ்சமாவது மிஞ்சும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
 
மேலும், பூமியில் உள்ள தரை ஓசோன் அளவை பற்றி ஆய்வு நடத்திய, மாணவர்களை அறிமுகப்படுத்தினார். அந்த மாணவர் குழு, தமிழகம் முழுவதும், 11 மாவட்டங்களில், குறிப்பிட்ட இடங்களில், தொடர்ந்து தரை ஓசோன் குறித்த ஆய்வுகளை நடத்தியிருக்கிறது.
 
கன்னியாகுமரியில் ஆய்வு நடத்திய, சச்சின் என்ற மாணவர் கூறியதாவது: தரை ஓசோன், வளிமண்டல ஓசோன் என, ஓசோனை இரண்டாக பிரிக்கலாம். தரையில் இருந்து ௬ முதல் ௧௨ கி.மீ., வரை, தரை ஓசோன் வியாபித்திருக்கும். தரையில், ஓசோன் அதிகரித்தாலும், வளிமண்டலத்தில், ஓசோன் குறைந்தாலும் ஆபத்து தான். வளிமண்டல ஓசோன் குறைந்தால், சூரியக்கதிர்கள், நேரடியாக பூமியை தாக்கும். அதனால், உயிரினங்களுக்கு பல்வேறு ஆபத்துகள் வரும்.
 
தரையளவு ஓசோன் அதிகரித்தால், மகசூல் இழப்பு, உயிரினங்களுக்கான சுவாச கோளாறுகள், மயக்கம், தலைசுற்றல், வாந்தி, உள்ளிட்ட பாதிப்புகள் வர வாய்ப்புண்டு. கன்னியாகுமரியின் செண்பகராமன் புதுார் பகுதியில், தொடர்ந்து ஓசோன் அளவை எடுத்தபோது, நான் அதிர்ச்சியடைந்தேன். கடற்கரை பகுதியாக இருந்தாலும், அங்கு தரை ஓசோன் அளவு அதிகமாக இருந்தது. அதிலும், செங்கல் சூளைகள் அதிகம் இருக்கும் பகுதிகளில், இன்னும் அதிகமாக இருந்தது. அந்த ஆய்வு முடிவுகளை, புள்ளியியல் விவரங்களாக பதிவு செய்திருக்கிறேன்.
 
மேலும், ஓசோனை பாதிக்கும் காரணிகளை ஆய்வு செய்து, அதை, முன்னறிவிப்பு நிகழ்வுகளாக கொடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.
 
மாணவி, பத்மா கூறியதாவது: நான், சென்னையின், பல்வேறு இடங்களில், 14 மாதங்களில் செய்த ஆய்வின் அடிப்படையில், வடசென்னையில், தரை ஓசோன் அதிகம் இருந்தது. குறிப்பாக, தி.நகர், கோயம்பேடு, வள்ளலார் நகர் ஆகிய மூன்று இடங்களை, தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்திய போது, வள்ளலார் நகரில், தரை ஓசோனின் அளவு அதிகம் இருந்தது.
 
கோயம்பேடு, தி.நகர் பகுதிகளில், வாகன புகை அதிகம் இருந்தாலும், வள்ளலார் நகர் பகுதியில், ஏற்றுமதி, இறக்குமதியினால், பெரிய வாகனங்களின் எண்ணிக்கையும், அதனால் பெருகும் மாசும், ஓசோன் அதிகரிப்பிற்கு, காரணமாக இருக்கலாம். மேலும், ஓசோன் அதிகம் இருக்கும் பகுதிகளில் உள்ள, தக்காளி செடிகளையும், சாதாரண இடங்களில் வளரும் தக்காளி செடிகளையும் தொடர்ந்து ஆய்வு செய்தபோது, ஓசோன் உள்ள செடிகள் குறைந்த மகசூலும், குறைந்த நோய் எதிர்ப்பு தன்மையும் கொண்டிருந்தன. அதேபோல், அங்கு இருக்கும் மக்களுக்கும், நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருக்கும் வாய்ப்புகளும் இருக்கலாம். இவற்றை, பல்வேறு துறைகளுடன் இணைந்து தான், ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
 
மாணவி நஜிமா கூறியதாவது:கடந்த நான்கு ஆண்டுகால, ஓசோன் அளவை ஆய்வு செய்த போது, அது நிலையாக இருப்பதை அறிய முடிகிறது. ஆனால், கார்பன் அளவு அதிகரித்திருக்கிறது. அதனால், ஓசோனை உருவாக்கும் காரணிகளை ஆய்வு செய்தேன். அதில், சல்பேட்டுகள், நைட்ரேட்டுகள், சரியாக எரிக்கப்படாத பெட்ரோலிய பொருட்களின் புகை, அதிக வெப்பம் உள்ளிட்டவை, ஓசோனை உருவாக்குகின்றன.
 
இதை, அந்தந்த இடங்களில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனாலும், டில்லி உள்ளிட்ட பல்வேறு தலைநகரங்களோடு ஒப்பிடுகையில், சென்னையில் உள்ள தரை ஓசோனின் அளவு குறைவுதான். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
 
இன்னும் சில மாணவர்கள், செயற்கை மழை உருவாக்க, மின்சக்தியின் மூலம் மின்னலை உருவாக்கும் காரணிகளை ஆய்ந்து வருவதாகவும், மேகங்களின் செறிவு, போக்கு, மழைப்பொழிவு போன்ற நிகழ்வுகளை, மிகச்சிறிய கருவிகள் மூலம், துல்லியமாக ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறினர். சில மாணவர்கள், காற்றின் திசைவேகத்தில், தகவல்களை அனுப்பும் விதமாக, செயற்கை படிகங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்தனர்.
 
தரை ஓசோன்அதிகரித்தால்...தரைக்காற்றில், ௧ மில்லியனில், 0.01 பங்கு (0.01 பி.பி.எம்.,) ஓசோன் இருந்தால், சராசரியாக இருக்கும். மில்லியனில், 0.1 முதல் 1 பங்கு அளவு ஓசோன் அதிகரித்தாலே, தலைவலி, கண் எரிச்சல், மூச்சுக்குழல் அரிப்பு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆனால், இந்த அளவையும் தாண்டி ஓசோன் அளவு காணப்படுகிறது.ஓசோன் அளவு அதிகரிக்க முக்கிய காரணம், வெப்பம். வெப்பத்தை உருவாக்கும் காரணிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
 
கோரிக்கை என்ன?:மாநில கல்லுாரியில், இளநிலை மாணவர்களை கண்காணிக்கவே, மொத்த ஆசிரியர்களுக்கும் நேரம் சரியாக இருக்கிறது. இதனால், முதுநிலை வகுப்புகள் பாதிக்கப்படுகின்றன. முதுநிலை மற்றும், ஆய்வு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கு தனி தலைமை வேண்டும் என்பதும், மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்கள், சலுகைகளை, உடனுக்குடன் ஆய்வு மாணவர்களுக்கு தெரிவித்து, ஆய்வுகளை மேம்படுத்த வேண்டும் என்பதும் மாணவர்களின் கோரிக்கை.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.