Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் செவ்வியுடன் வெளியான புரொன்ட்லைன் இதழ் கொழும்பில் தடுத்து வைப்பு (2ம் இணைப்புடன் )

Featured Replies

பிரபாகரனின் செவ்வியுடன் வெளியான புரொன்ட்லைன் இதழ் கொழும்பில் தடுத்து வைப்பு FEB 18, 2015 | 5:08by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

frontline-prabha-300x199.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வியை மறுபிரசுரம் செய்திருந்த, இந்தியாவின் புரொன்ட்லைன் சஞ்சிகை சிறிலங்காவில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தி ஹிந்து நாளிதழ் குழுமத்தினால் வெளியிடப்படும், புரொன்ட்லைன் சஞ்சிகையில், 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வி ஒன்று வெளியாகியிருந்தது.

அந்தச் செவ்வியை தற்போது புரொன்ட்லைன் மறுபிரசுரம் செய்துள்ளது.

புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வியுடன் வெளியாகியுள்ள புரொன்ட்லைன் சஞ்சிகையை, இலங்கையில் விற்பனைக்காக விடுவிக்க சிறிலங்கா சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதன் பிரதிகளை அவர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி அனுமதி கோரியிருந்தனர்.

ஆனால், பாதுகாப்பு அமைச்சு எந்தக் கருத்தையும் கூறாமல், ஊடக அமைச்சையே தீர்மானிக்கும் படி அனுப்பி விட்டதாக, ஊடக அமைச்சின் செயலர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.

தற்போது தாம் இந்த இதழில் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விடயங்கள் உள்ளடங்கியுள்ளதா என்று ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புரொன்ட்லைன் இதழைத் தடைசெய்வது குறித்த எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

http://www.puthinappalakai.net/2015/02/18/news/3797

 

 

பிரபாகரனின் செவ்வியுடன் வெளியான புரொன்ட்லைன் இதழ்களை விடுவிக்க ரணில் உத்தரவு FEB 18, 2015 | 8:34by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

Ranil-wickramasinghe-300x199.jpgகட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த புரொன்ட்லைன் இதழ்களை விடுவிக்குமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

1987ம் ஆண்டு வெளியான விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வியை மறுபிரசுரம் செய்திருந்த புரொன்ட்லைன் இதழ்களை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தடுத்து வைத்திருந்தனர்.

புரொன்ட்லைன் சஞ்சிகை தனது 30வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், கடந்த 30 ஆண்டுகளில் வெளியான முக்கியமான செவ்விகளை இந்த இதழில் வெளியிட்டிருந்த்து.

இதில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வியும் ஒன்றாகும்.

இந்த செவ்வியைக் காரணம் காட்டி சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த புரொன்ட்லைன் இதழ்களை விடுவிக்குமாறு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த செவ்வி நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என்று சிறிலங்கா பிரதமர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமைகள் ஏற்பட்டால், அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெறுமாறும் சுங்கத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள 187 புரொன்ட்லைன் இதழ் பிரதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு உரிமைகேரி யாரும் வரவில்லை என்றும், சுங்கத் திணைக்களப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/02/18/news/3802

 

உரிமை கோரி வருபவர் கைது செய்யப்படமாட்டார் என்பதற்கான உத்தரவாதத்தை புற்றுப் பாம்பாகவிருப்பவர் வெளியிடவில்லையே?

 

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.