Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கப்பம் பெறும் நோக்கில் 28 தமிழ் இளைஞர்களை படுகொலை செய்த உயர் கடற்படை அதிகாரிகள்?

Featured Replies

கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் 28 தமிழ் இளைஞர்களை உயர் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட கும்பல் ஒன்று படுகொலை செய்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
 
இந்த உயர் கடற்படை அதிகாரிகள் குழுவில் முன்னாள் கடற்படைப் பேச்சாளர் ஒருவரும் உள்ளடங்குவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
 
 
கடத்தல்கள் மற்றும் கொலைகளுடன் தொடர்புடைய மூன்று உயர் கடற்படை அதிகாரிகளில் ஒருவர் தற்போது வெளிநாட்டில் பயிற்சி நெறியொன்றில் கலந்து கொண்டுள்ளதாகவும், விரைவில் அவர் இலங்கைக்கு அழைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
 
திருகோணமலை மற்றும் கொழும்பில் அமைந்துள்ள இரண்டு கடற்படை முகாம்களில் இந்த இளைஞர்கள் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் எனவும், கப்பம் பெற்றுக் கொண்டதன் பின்னர் இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
 
உயர் கடற்படை அதிகாரி ஒருவரின் காரியாலயத்தை சோதனையிட்ட போது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் கடவுச்சீட்டுக்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் காணப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. கல்கிஸ்ஸ, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே அதிகளவில் கடத்திக் கொல்லப்பட்டுள்ளனர்.
 
 
கடற்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட கும்பல் தமிழ் இளைஞர்களை கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடத்தி கொலை செய்தமை தொடர்பில் மிக முக்கியமான சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
 
கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 28 பேரில் 11 பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான சகல விபரங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
 
சம்பவத்துடன் தொடர்புடைய உயர் கடற்படை அதிகாரிகளை காப்பாற்றும் முனைப்புக்களில் நீதித்துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகளும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
 
 

28 தமிழ் இளைஞர்களை கடத்திப் படுகொலை செய்த 9 சிறிலங்கா கடற்படையினர் விரைவில் கைது FEB 20, 2015 | 10:29by கார்வண்ணன்in செய்திகள்

srilanka-navy-300x198.jpgகொழும்பில் கப்பம் கோரிக் கடத்திய 28 தமிழ் இளைஞர்களைப் படுகொலை செய்த, மூன்று உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 9 சிறிலங்கா கடற்படையினர் கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேவி சம்பத் இந்த படுகொலைகளின் முக்கிய சந்தேக நபர் என்று கூறப்படுகிறது.

கடத்தப்பட்ட பல தமிழ் இளைஞர்களிடம் இருந்து கப்பம் பெறப்பட்ட பின்னர், அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கடத்தல்கள் 2008ம் ஆண்டுக்கும், 2011ம் ஆண்டுக்கும் இடையில் கொழும்பின் கொட்டாஞ்சேனை, புளூமென்டல் வீதி, கல்கிசை, வெள்ளவத்த, பம்பலப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

இவர்களில், கல்கிசையில் கடத்தப்பட்ட ஐந்து இளைஞர்களும், கொட்டாஞ்சேனையில் கடத்தப்பட்ட தந்தையும் மகனும் உள்ளடங்கியுள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் திருகோணமலை மற்றும் கொழும்பில் உள்ள சைத்திய வீதி கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தப் படுகொலைகளுடன் தொடர்புடைய கடற்படை அதிகாரி ஒருவரின். அறை சோதனைக்குள்ளாக்கப்பட்ட போது, அங்கிருந்து கடத்தப்பட்டு கொல்லப்பட்ட ஐந்து இளைஞர்களின் அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தப் படுகொலைகளுடன் சம்பந்தப்பட்ட ஒரு அதிகாரி, மேலதிக பயிற்சிக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் என்றும், அவரை கொழும்புக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 28 பேரில் 11 பேர் பற்றிய விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அதேவேளை, சிறிலங்கா கடற்படையில் உள்ள உயர் அதிகாரிகளும், சட்டத்துறையில் உள்ளவர்களும் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது

http://www.puthinappalakai.net/2015/02/20/news/3840

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.