Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலும் தெற்கிலும் மோசமான இனவாதம்; நல்லாட்சிக்கு முட்டுக்கட்டை; உடனடியாக கடும் நடவடிக்கை; ரணில் எச்சரிக்கை

Featured Replies

7964_content_ranil_heading.jpg

 

 

இனவாதத்தை தூண்டி நாட்டில் மீண்டும் இரத்த ஆறு பெருக்கெடுக்கச் செய்யும் விதத்தில் சில சிங்கள ஊடகங்கள் செயற்பட்டு வருவதாக தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த ஊடகங்கள் இதனை கைவிடத் தவறினால் அவற்றுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை என எச்சரித்துள்ளார்.

 

இந்த ஊடகங்கள் கடந்த 10 வருடங்களாக தன்னை அரசியலிலிருந்து விரட்டுவதற்கு முனைப்புடன் செயற்பட்டுத் தோல்விகண்டுவிட்ட நிலையில் இப்போது எமது அரசுக்கு எதிராக நாட்டு மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி நாட்டில் இரத்த ஆறு ஓடச் செய்யும் ஒரு மோசமான ஊடகக் கலாசாரத்தில் இறங்கியிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

குருநாகல் மாவட்ட கொபே கனவில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

இங்கு தொடர்ந்து பேசிய பிரதமர் கூறியதாவது;

 

நாட்டில் நல்லாட்சியை உத்தரவாதப்படுத்தும் பொருட்டு சகல தரப்பினரதும் ஒத்துழைப்புடன் இனவாதத்தை ஒழித்து மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டு ஆட்சியை அமைத்துள்ளோம். எமது இந்தப் பயணத்துக்கு இரண்டு குழுக்கள் முட்டுக்கட்டை போடத் தொடங்கியிருக்கின்றன.

 

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட இனவாதக் கருத்துகளுடன் தொடர்புபட்ட ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தக் கருத்துக்கு சர்வதேசம் சரியான பதிலடியை கொடுத்துவிட்டது. அதேபோன்று எமது இந்தப் பயணத்தை தடுக்கும் பொருட்டு நாட்டில் இனவாதத்தை மீண்டும் தூண்டிவிடும் முயற்சியில் சில அச்சு ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றன.

 

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதாகவும் நாடு இரண்டாகப் பிளவு படப்போவதாகவும் இந்த ஊடகங்கள் இனவாதத்தைத் தூண்டிவிடத் தொடங்கியுள்ளன.

 

அன்று  மகிந்த ராஜபக்ஷவின் பின்னால் ஓடியவர்களே இந்த இனவாத ஊடகங்கள். இந்த பத்திரிகைகளின் ஆசிரியர்களும் ஊடகவியலாளர்களும் வெட்கமின்றி ஊடகங்களில் பணிபுரிந்துகொண்டே அரசிலும் பதவிகளை வகித்து வருகின்றனர்.

 

அன்று ராஜபக்ஷ அரசு ஊடகவியலாளர்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்தபோது அதற்கு எதிராக குரல்கொடுக்காமல் மௌனிகளாக இருந்து மகிந்தவின் சர்வாதிகாரப் போக்குக்கு பக்கபலமாகச் செயற்பட்டனர். ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட கடத்தப்பட்டபோது கைகொட்டிச் சிரித்த ஊடகவியலாளர்களும் இருக்கவே செய்கின்றனர்.

 

இந்த பத்திரிகை ஆசிரியர்களும் ஊடகவியலாளர்களும் நாட்டு மக்களை தவறான பாதையில் வழி நடத்தும் விதத்தில் நாட்டுக்கு எதிராக மேற்குலகச் சதி இடம் பெறுவதாக காட்ட முனைகின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் புறக்கணித்த மக்கள் தூரநோக்குடன் சிந்தித்து சரியான முடிவை எடுத்து மகிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து விட்டனர்.

 

என்னை அரசியல் ரீதியாக அழித்து, விரட்டுவதற்கு இக்கோஷ்டியினர் பத்து வருடங்களாக முயற்சித்தனர். அந்த முயற்சிகளில் அவர்களால் வெற்றிபெற முடியாமல் போனது. மகிந்த ராஜபக்ஷவை 2015 இல் மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கு பகீரதப் பிரயத்தனங்களை இந்த சிங்கள ஊடகங்கள் மேற்கொண்டன. அதிலும் அவர்கள் தோல்வி கண்டனர். இப்போது அவர்கள் மகிந்தவை பிரதமராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

.

 

அது குறித்து நான் அச்சம்கொள்ளவில்லை. முடிந்தால் அதனைச் செய்து காட்டுமாறு அவர்களுக்கு சவால் விடுகின்றேன்.  எனினும் இனவாதத்தைக் தூண்டி நாட்டையும் மக்களையும் அழிப்பதற்கு இந்தத் தீய சக்திகளுக்கு இடமளிக்க முடியாது. இந்த பத்திரிகை ஆசிரியர்களும் ஊடகவியலாளர்களும் ராஜபக்ஷ அரசிடமிருந்து பணம் பெற்றுக்கொண்ட முறை குறித்தும் ஒன்றாக இருந்துபோட்ட கூத்துகளையும் நான் நன்கறிவேன்.

 

இத்தகைய ஆட்டங்கள் நல்லாட்சிக்கு ஒத்துவரமாட்டாது. அவர்கள் உடனடியாக தமது தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டும். அதைச்செய்யாமல் தொடர்ந்தும் தவறிழைக்க முற்பட்டால், இனவாதத்தைத் தூண்டினால் அவற்றுக்கு எப்படி பதிலடி கொடுக்கவேண்டும் என்பது எனக்குத் தெரியும். சில சிங்கள ஊடகங்களின் இந்தச் செயற்பாடுகளுக்கு உடன் முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும். அந்த நிறுவன உரிமையாளர்களை பங்குச் சந்தையிலிருந்து நீக்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

 

 தகவலறியும் உரிமையை உத்தரவாதப்படுத்துவது, இனவாதத்தைத் தூண்டி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்துவதற்காக அல்ல. அதற்கு ஒருபோதும் வாய்ப்பளிக்கப்படமாட்டாது.நான் இந்தப் பத்திரிகை ஆசிரியர்கள், நிருவனர்கள், ஊடகவியலாளர்களிடம் மண்டியிட்டுக் கேட்டுக்கொள்வது நீங்கள் எனக்காக வேலை செய்யாதீர்கள். மகிந்த ராஜபக்ஷவுக்கே சேவகம் புரியுங்கள். ஆனால் இனவாதத்தைத் தூண்டுவதில் ஈடுபடாதீர்கள்.

 

அன்று முஸ்லிம்கள் தாக்கப்பட்டபோது, அசாத் சாலி குரல் எழுப்பியபோது மகிந்த அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால் இந்த வாரத்தில் சில சிங்கள பத்திரிகைகள் வெளியிட்ட தகவல்களைப் பார்த்தால் அவற்றை எழுதிய, வெளியிட்டவர்களை கைது செய்து சிறையிலடைக்க முடியும்.   நான் அவர்களை கடைசியாக எச்சரிக்கின்றேன். 

 

இந்த விளையாட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். கேவலமான வகையில் ஊடகத்துறையை, நேர்மையான ஊடகவியலாளர்களை காட்டிக்கொடுக்காதீர்கள். ஊடகத்தின் கௌரவத்தை சீரழிக்காதீர்கள். இந்த தவறிழைத்த ஊடக நிறுவனங்களையும் ஆசிரியர்களையும் அடுத்த சில தினங்களில் சந்தித்துப்பேசவிருக்கின்றேன். சுதந்திர ஊடகவியலாளர் அமைப்புகளையும் இந்தச் சந்திப்புக்கு அழைக்கவிருக்கிறேன்.

 

அனைத்தையும் திறந்தமனதுடன் பேசவே இந்த அழைப்பை விடுக்கிறேன். இச்சந்திப்பை எந்த ஊடகவியலாளராவது, ஆசிரியராவது நிராகரித்தால் அவர்கள் விடயத்தில் என்ன செய்வதென நான் பார்த்துக்கொள்வேன். இது எனது கடைசி எச்சரிக்கையாகும். என்னைத் தொடர்ந்து சீண்டுவதற்கு இனிமேலும் நான் இடமளிக்கப்போவதில்லை எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் தொனியில் எச்சரித்தார்.

 

 http://thinakkural.lk/article.php?local/ahde6axdyg14034edaa105d510770thwocf53590338791951e38c3adbvnew#sthash.531tozlA.dpuf

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.