Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலத்தடி நீர்ப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நோர்வே நடவடிக்கை

Featured Replies

article_1425636884-AI01.jpg

 

சுன்னாகம் பிரதேசத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்த பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நோர்வே கூடிய கவனம் செலுத்தியுள்ளதுடன் அது தொடர்பான சகல பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் கிறீற்டா லோசன் தெரிவித்ததாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

 

நோர்வே உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கும் இடையிலான சந்திப்பு, வெள்ளிக்கிழமை (06) அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

 

இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

 

'தரையை ஊடுருவி நிலத்தில் என்ன இருக்கின்றது என்பதைக் கண்டறியும் ரேடர் தேசிய கட்டட ஆராய்ச்சி மையத்தில் உள்ளது. இலங்கைக்கு நோர்வேயால் வழங்கப்பட்ட ரேடர் தற்போது மாத்தளை மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனைத் தரும்படி நோர்வேயிடம் கோரியிருந்தோம். அதற்கு நோர்வே உடன்பட்டுள்ளது' என்றார்.

 

'சில நாட்களுக்கு முன்னர் நோர்வேயில் இருந்து வருகை தந்திருந்த இரண்டு பிரதிநிதிகளுக்கும் தேசிய கட்டட ஆராய்ச்சி மையத்தில் இருந்து வருகை தந்திருந்த 2 விஞ்ஞானிகளுடனும் சந்தித்து இந்த நிலத்தடி நீர் மாசு தொடர்பாக கலந்துரையாடினோம். அவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். நோர்வே பிரதிநிதிகள் அங்கு சென்று எமது பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடியதன் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை எங்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.

 

அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆரம்பகட்ட அறிக்கை ஒன்று தேசிய கட்டிட ஆராய்ச்சி மையத்தினரால் எமக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளவதாக அவர் உறுதியளித்துள்ளார். அடுத்துவரும் வாரங்களில் இந்த நடவடிக்கைகளை செயற்படுத்தவுள்ளோம்' என அமைச்சர் மேலும் கூறினார்.

 

article_1425636894-AI02.jpg

 

http://www.tamilmirror.lk/141136#sthash.oYlQpIwi.dpuf

  • தொடங்கியவர்
 
 

-

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.