Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணிகளை விடுவிப்பதாகக் கூறும் அரசு இதுவரை சொற்ப அளவைக்கூட விடுவிக்கவில்லை! சுஷ்மாவிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு -

Featured Replies

Sushma%20Swaraj%20meet%20TNA%20g8544.jpg

 

 

தமிழ் மக்களின் காணிகளை விடுவித்து அவர்களது மீள்குடியமர்வுக்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசு இதுவரை ஒரு துண்டுக் காணியைக் கூட விடுவிக்கவில்லை. இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ்மக்கள் மீளத்திரும்பி வாழ்வதற்கு முழுமையான மீள்குடியேற்றம் நடைபெறவேண்டும். இவ்வாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்சுவராஜுடம் எடுத்துக்கூறியுள்ளது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.
 
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது.
 
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந்தியத் தரப்பிலிருந்து இந்திய வெளிவிவகார அமைச்சருடன், வெளிவிவகார செயலாளர் ஜெயசங்கர், இலங்கைக்கான இந்தியத்தூதுவர், இந்தியதுணைத்தூதுவர், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
 
இந்தச் சந்திப்பில் கலங்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
 
மீள்குடியேற்றம் என்பது முழுமையாக நடைபெறவேண்டும். சொற்ப காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் அறிவித்தபோதும் இதுவரை ஒரு துண்டு காணி கூட விடுவிக்கப்படவில்லை. இந்தியாவில் உள்ள தமிழ்மக்கள் மீளத்திரும்பி வாழ்வதற்கு முழுமையான மீள்குடியேற்றம் நடைபெறவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.
 
ஜே.வி.பி யினருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதைப் போன்று அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கவேண்டும். காணாமற்போனோர் தொடர்பில் தொடரும் அவலங்களுக்கு உறுதியான முடிவுகள் எட்டப்படவேண்டும்.
 
முன்னைய இலங்கை அரசின் ஆட்சியில் இந்திய மீனவர்கள் பலர் தாக்கப்பட்டிருந்தனர், சுடப்பட்டிருந்தனர், கைதுகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் தற்போது அவ்வாறான சூழ்நிலைகள் இல்லை. ஆனால், இந்திய மீனவர்கள் அத்து மீறி வடபகுதி எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடுவதும், எமது மீனவர்களுடைய வலைகளை அறுத்துச் செல்வதும் நடைபெறுகின்றன. இதனால் எமது மீனவர்கள் தொழிலில் ஈடுபடமுடியாத நிலையில் உள்ளாகின்றனர்.
 
இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத்துணைத்தூதருக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றோம்.அத்தோடு இந்தியப்பிரதமர் இங்கு வருகின்ற போது அவருடன் மீனவர்கள் சந்திக்க விரும்புவதையும் தெரியப்படுத்தியிருக்கின்றோம். இந்திய வெளிவிவகார அமைச்சர் அதனை ஏற்றுக்கொண்டார். இது தொடர்பில் இருதரப்புக்குமிடையான கலந்துரையாடல்களை மேற்கொண்டு தீர்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.-என்றுள்ளது.
 
http://www.malarum.com/article/tam/2015/03/07/8972/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-.html#sthash.DceNobSG.dpuf
 
 
  • தொடங்கியவர்
கூட்டமைப்புக்கு சுஷ்மா அறிவுரை
 
 
Sushma%20Swaraj%20meet%20TNA%20g8545.jpg
 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஐக்கியம் பேணப்பட வேண்டும். சம்பந்தன் மூத்த அரசியல்வாதியாக இருக்கிறார். எனவே கூட்டமைப்புக்குள் ஜக்கியத்தை நிலைநிறுத்தும் பெரும் பங்கு அவருக்கு இருக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்சுவராஜ். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் இன்று கொழும்பில் கூட்டமைப்பு பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே இந்த அறிவுரையை சுஷ்மா வழங்கியுள்ளார். ஜக்கியத்தை பேணிப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும். அந்த ஜக்கியம் மூலமாகவே தமிழ்மக்களுக்கான விடுதலையை வலியுறுத்தமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். -
 
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.