Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பிரதமர் ரணிலுக்கு அமைச்சர் சுஷ்மா பதிலடி: மீனவர் பிரச்னையை குழப்புவதற்கு கண்டனம்

Featured Replies

இலங்கை பிரதமர் ரணிலுக்கு அமைச்சர் சுஷ்மா பதிலடி: மீனவர் பிரச்னையை குழப்புவதற்கு கண்டனம்

 

Tamil_News_large_1200585.jpg

 

 

கொழும்பு: 'இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் ஊடுருவினால், அவர்களை சுடுவோம்' என, கூறிய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பதிலடி கொடுத்துள்ளார். 'மீனவர்கள் பிரச்னையை மனிதநேயத்துடன் அணுக வேண்டும். இத்தாலி கடற்படை வீரர் பிரச்னையுடன் இதை ஒப்பிடக் கூடாது' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த வாரம், இலங்கையில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் செய்கிறார். அப்போது, மீனவர்கள் பிரச்னை, இரு தரப்பு உறவு, வர்த்தகம் உட்பட, பல பிரச்னைகள் குறித்து பேசுகிறார். பிரதமரின் பயணத்துக்கு முன், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கையில் தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 
 
சர்ச்சை:
 
இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அளித்துள்ள பேட்டி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
அதில், அவர் கூறியிருந்ததாவது:இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் ஏன் வருகின்றனர். இந்திய மீனவர்கள், இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கட்டும். ஒருவர் என் வீட்டில் கொள்ளை அடிக்க முயன்றால், நான் அவரை சுடலாம்; சட்டம் அதை அனுமதிக்கிறது. நாங்கள் உங்கள் மீனவர்கள் மீது பெருந்தன்மை காட்ட வேண்டும் என்றால், நீங்கள் அதே பெருந்தன்மையை இத்தாலியைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் மீது காட்டியிருக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியிருந்தார்.
 
கடந்த, 2012ல், கேரள கடற்பகுயில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது, இத்தாலி கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில், இரண்டு மீனவர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக, இத்தாலி கடற்படையினர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக, கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இத்தாலி வீரர்களுக்கு எதிராக, மத்திய அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கையைத் தான், மீனவர் பிரச்னையுடன் ரணில் விக்கிரமசிங்கே ஒப்பிட்டிருந்தார். அவரின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நேற்று, ரணில் விக்கிரமசிங்கேயை சந்தித்து, மீனவர் விவகாரம் குறித்து பேசினார். அப்போது, ரணில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு அவரிடம் அதிருப்தி தெரிவித்தார். 
 
இதுகுறித்து, இந்திய வெளியுறவு செயலர் அக்பருதீன் கூறியதாவது:இலங்கை பிரதமரிடம், இந்திய மீனவர் பிரச்னையை மனித நேயத்துடன் அணுக வேண்டும் என்றும், இது, அவர்களின் வாழ்வாதார பிரச்னை என்றும் அமைச்சர் சுஷ்மா கூறினார். 
 
வேறு விதம்:
 
மேலும், இத்தாலி கடற்படை வீரர் பிரச்னையுடன், இந்திய மீனவர் பிரச்னையை ஒப்பிடக் கூடாது என்றும், இந்த இரண்டு பிரச்னைகளும் வெவ்வேறு விதமானவை என்றும், அவரிடம் விளக்கினார். மீனவர் பிரச்னையில் உள்ள சிக்கல்களையும், கருத்து வேறுபாடுகளையும் பேச்சுவார்த்தை மூலமே சுமுகமாக தீர்க்க முடியும் என்றும், அவர் வலியுறுத்தினார். இவ்வாறு, அக்பருதீன் கூறினார். 
 
இதன்பின், இலங்கை வெளியுறவு அமைச்சர் சமரவீராவையும் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். இந்த பேச்சில், மீனவர் பிரச்னை குறித்த விஷயங்கள் இடம் பெறவில்லை. சுஷ்மா சுவராஜை, இலங்கை தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பிரச்னைகள் குறித்தும், அதற்கு தீர்வு காண வேண்டிய அவசியம் குறித்தும், சுஷ்மாவிடம் அவர்கள் விளக்கினர்.
 
மோடி வருகையால் பெரும் எதிர்பார்ப்பு:
 
பிரதமர் நரேந்திர மோடி, வரும், 13 மற்றும் 14ம் தேதிகளில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். மோடியின் இந்த சுற்றுப் பயணம், இலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இதுகுறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கூறியதாவது: இலங்கை அதிபர் சிறிசேன சமீபத்தில் இந்தியாவுக்கு சென்று, இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இந்திய பிரதமர் மோடி, இலங்கை வரவுள்ளார். அவரின் வருகை, எங்களைப் போன்ற கட்சிகளிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் பிரச்னை குறித்து, அவரிடம் சில கோரிக்கைகளை முன்வைக்க உள்ளோம். அது, எந்த மாதிரியான கோரிக்கை என்பதை தற்போது தெரிவிக்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார். 
 
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது. அதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இறுதிக்கட்ட போரின்போது, இந்தியா, எங்களுக்கு தார்மீக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஆதரவு அளித்தது. தமிழகத்தில் அரசியல் ரீதியாக சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால், இந்திய அரசுக்கு சிக்கல் இருந்தது என்பது எங்களுக்கு தெரியும். 
சரத் பொன்சேகா
இலங்கை ராணுவ முன்னாள் தளபதி
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.