Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் முக்கிய அறிவித்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் முக்கிய அறிவித்தல்!

nagalingam.pngநிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு,

முக்கிய அறிவித்தல்

தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர் திரு.இரா.நாகலிங்கம் ஜயா அவர்கள் இயற்கை மரணமடைந்துள்ளார்.

யேர்மனியில் தமிழ் மொழி கற்பித்தலுக்கு வித்திட்ட முதல்வர். தமிழாலயங்களின் கல்விப் பணியின் பொறுப்பாளராக உழைத்த உத்தமன். தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளராக வழிகாட்டிய உலகப் பெரும் தமிழன். ஐயாவின் இழப்பால் தமிழ்க் கல்விக் கழகக் குடும்பம் துயரில் ஆழ்ந்துள்ளது.

அவரின் இறுதி வணக்க நிகழ்வு பற்றிய விபரங்கள் இணையத்தளங்களில் உள்ளது. அந்நிகழ்வில் உங்கள் தமிழாலயத்தின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றார்கள், மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து ஜயாவுக்கு இறுதி வணக்கம் செலுத்த வருமாறு இரங்கலுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொள்ளும் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், அனைவரும் சீருடையில் வாருங்கள். மலர்வளையம் எடுத்து வரலாம். அதே போன்று உங்கள் தமிழலாயம் சார்பாக இரங்கல் செய்தியையும் போதியளவு அச்சிட்டு எடுத்து வந்து, அனைவருக்கும் வழங்கலாம்.

ஐயாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்கு 023313778963 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

இரங்கலுடன்

செ.லோகன்

16.03.2015

பொறுப்பாளர்

nagalingam_master_kalvikalakam_1.png

nagalingam_master_kalvikalakam_2.png

nagalingam.png

 

http://www.pathivu.com/news/38530/57//d,article_full.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தேசியத் தலைவரால் மதிப்பளிக்கப்பட்ட நாகலிங்கம் ஆசிரியர் காலமானார்!!

nagalingam_16032015.pngயேர்மனியின் தமிழ் கல்விக் கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர் திரு.இரா.நாகலிங்கம் ஆசிரியர் அவர்கள் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

யேர்மனியில் தமிழை வளர்ப்பதற்கு யேர்மனி நாட்டில் 130 மேற்பட்ட தமிழாலயங்களை உருவாக்கி புலம்பெயர் தேசத்தில் தமிழ் மொழி, கலை, பண்பாட்டை வளர்த்தமைக்காக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் தாயகத்திற்க வரவழைக்கப்பட்டு அவரின் பணிக்காக மதிப்பளிக்கப்பட்டிருந்தார் என்பது நினைவூட்டத்தக்கது.

திரு. நாகலிங்கம் அவர்கள் தன் சொந்த முயற்சியால் யேர்மனியில் உள்ள ஹேகன் நகரில் 1986ல் தமிழ் பாடசாலைகளை ஒன்றை நிறுவினார்.

ஆரம்பத்தில் அதில் 10 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். பிறகு மூன்றே வருடத்தில் தன் அயராத உழைப்பினால் யேர்மனியில் 1989ஆம் வருடத்தில் 13 பாடசாலைகளை நிறுவியிருந்தார். இவர் தான் முதல் முதலில் தமிழ் பாடசாலைகளுக்கு பொது தேர்வினை யேர்மனியில் 1989ல் செயல்படுத்தினார். திரு.நாகலிங்கம் அவர்களை யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரிவின் பொறுப்பாளராக இக்காலக்கட்டத்தில் அறிவித்தது. 1990களில் இருந்து திரு. நாகலிங்கம் அவர்கள் தமிழ் மற்றும் கலாச்சார பாடசாலைகளை ஒன்றிணைத்து "தமிழாலையம்" பள்ளிகளாக உருவாக்கினார். 

அதன் பிறகு திரு. நாகலிங்கம் அவர்கள் யேர்மனி மற்றும் ஐரோப்பா கண்டம் முழுவதும் வாழும் புலம்பெயர் தமிழர்களிடையே தமிழ் மொழி கல்வியை கொண்டு சேர்க்க உழைத்தார். இப்பொழுது யேர்மனியில் 130 மேற்பட்ட தமிழாலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன அதில் 6500 மாணவர்கள் பயிலுகின்றனர். இப்பள்ளிகளை நிர்வகிக்க 350 அலுவலர்களும், 650 ஆசிரியர்களும் உள்ளனர். திரு. நாகலிங்கம் அவர்கள் வாசவிலான், வலிகாமம், யாழ்ப்பானத்தில் பிறந்து வளர்ந்தவர். தனது ஆசிரியர் பயிற்சியை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பாயின்றவர். 1979ல் யேர்மனிக்கு புலம்பெயர்வதர்க்கு முன்னால் மாட்லெய், பெரதேனியா, ஹட்டன், உரும்பிராய் ஆகிய இடங்களில் ஆசிரியர் சேவையை செய்தார். 

திரு. நாகலிங்கம் அவர்கள் ஒரு நாடக கலைஞர், இலங்கை தீவில் நிறைய மேடைகளில் தனது நாடக கலைகளை அரங்கேற்றியுள்ளார். திரு. நாகலிங்கம் அவர்கள் "தமிழாலையத்தின் தந்தை" என்றும் "தமிழ் மொழியின் பாதுகாவலர்", ''தமிழேந்தல்'' என்றும் யேர்மனி மற்றும் ஐரோப்பா கண்டத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் இவரை கெளரவிக்கின்றனர்.

17.12.2011 அன்று யேர்மனியில் உள்ள போகும் என்னும் நகரத்தில் யேர்மனி தமிழ்கல்விக் கழகப் பொறுப்பாளர் திரு.இரா.நாகலிங்கம் ஐயா அவர்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக்கிளையினரால் அவரின் 25 ஆண்டு காலத் தமிழ்கல்விச் சேவைதனைப் பாராட்டி சிறப்பு மதிப்பளிப்பு நிகழ்வு நடத்தப்பட்டிருந்தது.

உலகத்தமிழர் பேரமைப்பினால் அதன் தலைவர் திரு.பழ.நெடுமாறன் அவர்கள் யேர்மனியில் தமிழ்கல்விப்பணியில் வெள்ளிவிழாக்கண்டிருக்கும் திரு இரா.நாகலிங்கம் ஐயா அவர்களின் பணியினைப் பாராட்டி உலகப்பெருந்தமிழன் என்னும் விருதினை அனுப்பிவைத்திருந்தார். அதனை அவர் சார்பாக காலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் ஐயாவுக்கு வழங்கி மதிப்பளித்திருந்தார்.

அத்துடன் யேர்மனியில் வாழும் தமிழ்மக்கள் சார்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனிக்கிளை அவரின் பணியினைப் பாராட்டி ஈழப்பெருந்தமிழன் என்னும் விருதினை வழங்கி மதிப்பளித்திருந்தனர்.

மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.

nagalingam_01.png

nagalingam_02.png

nagalingam_03.png

nagalingam_16032015.png

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.