Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கே இனியவனின் கஸல் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

உன்னை ....
காதலித்ததால் ....
எனக்கு விஞ்சியது ....
ஒன்றே ஒன்றுதான் ....
கவிதை ....!!!


பூக்களால் கவிதை ....
எழுதுகிறேன் ....
சோகத்துடன் வாசிக்காதே ....
பூக்கள் அழுதுவிடும் ....!!!


நீ 
எதை பேசினாலும் ....
அதில் அர்த்தமில்லை ....
அர்த்தமாக்கவே ....
கவிதை எழுதுகிறேன் ....!!!


+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 900

 

  • Replies 219
  • Views 26k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நான் சில காலம் 
முள் மெத்தையில்.....
தூங்கபோகிறேன் .... 
காதலிக்கபோகிறேன்....!!!

ஒவ்வொரு நொடியும் ...
மூச்சு விடும் போது ....
இதயம் சுடுகிறது ....
உள்ளிருப்பது -நீ ,,,,!!!

வாழ்வதற்காக காதலா ..?
சாவதற்காக காதலா ...?
நீ எதை தந்தாலும் ....
காதலோடு ஏற்பேன் ....!!! 

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 901

  • தொடங்கியவர்
நீயும் நானும் நிம்மதியாய் ....
இருக்க ஒரே ஒரு வழி ....
நீ என்னை காதலிப்பதே ....!!!

நீ 
எதற்காக தூண்டில் ...
போட்டாய் - நான் 
எதற்காக துடிக்கிறேன் ...?
ஆட்டிப்படைகிறது காதல் ....!!!

உனக்கு என் கவிதை ....
பொழுதுபோக்கு - எனக்கு ....
வாழ்கை பொழுது....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 902
  • தொடங்கியவர்

புவியீர்ப்பால் ....
பொருட்கள் கீழே வரும் ....
கண் ஈர்ப்பால் ....
காதல் உள்ளே வரும் ...!!!

என்னை கவிதை ....
எழுத வைத்தவளே ....
கண்ணீர் அஞ்சலி ....
எழுத வைத்துவிடாதே ....!!!

இதயமே ....
கவனமாய் இரு ....
என்னை பார்த்து ....
சிரிக்கபோகிறாள்....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 903

எரிந்து கொண்டிருக்கும் 
காதலை அணைத்துவிடு ...
என்னை நீ அணைத்து....!!!

நீ .....
ஒளி காத்திருக்கிறேன் ...
நீ உதிக்கும்வரை .....
நான் உன்னில் மறையும் ...
வரை காத்திருப்பேன் ...!!!

இந்த 
உலகம் அழிய வேண்டும் ....
புதிய உலகில் நாம் தான் ....
முதல் காதலர் என்ற ....
வரலாறு படைக்கவேண்டும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 904

  • தொடங்கியவர்

காதலோடு வாழ்ந்த நீ 
இறக்கிவைத்துவிட்டு ....
என்னை சுமைதாங்கி ...
ஆக்கிவிட்டாய் ....!!!

எதுவுமே நிஜமில்லை 
காதல் மட்டுமே நிஜம் ....!!!

இதுவரை ....
என் எழுத்து கருவி ....
என் துன்பத்தையே ....
எழுதிகொண்டு இருக்கிறது ....
கொஞ்சம் உன்னை பற்றி...
எழுதபோகிறேன் ...
தாங்கிகொள் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 905

  • தொடங்கியவர்

உன்னோடு 
வாழ ஆசைப்பட்டேன் ....
உன்னோடுடனா...?
வாழப்போகிறேன் ....
என்றாகிவிட்டாயே ...!!!

உன்னை காதலித்தேன் ....
காதலோடு இருக்கிறேன் ....
காதலியை காணவில்லை ....!!!

மறதியை மறந்திடலாம் ....
மறந்துகூட உன்னை ....
மறக்க முடியவில்லை ....!!! 

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 906

  • தொடங்கியவர்

என்னை கொடுத்து ...
உன்னை பெறுவது ...
காதல் .....!!!


மலர் செடியில் ....
இருக்கும் போதுஅழகு ...
நீ என்னோடு காதலில் ....
இருந்தாலே அழகு ....!!!


காதல் கண்ணோடு....
விளையாடி ...
காற்றோடு கலந்து 
மூச்சோடு முடிகிறது ...!!!


+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 907

  • தொடங்கியவர்

தென்றல் காற்று ....
தோளில் படும்போது ....
உன் நினைவுகள் .....
மெல்ல சுடுகிறது ...!!!

மூச்சால் அடைத்து ...
காதலை பாதுகாத்தேன் ...
முள் கம்பியால் ....
பாதுகாக்க ஏன்...?
வழிவகுத்தாய்....?

தவமிருந்து 
வரம் பெற்றேன் .....
காதலி நீ கிடைத்தாய் ...
என்ன சாபமோ ...?
நிலைக்கவில்லை ...!!!


+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 908

இறைவனை தரிசித்து ....
நாட்களாகிவிட்டது ....
உன் தரிசனம் ....
கிடைத்ததிலிருந்து ....!!!

பகலெல்லாம் இரவாகி ...
உன்னையே கனவாக்கி ....
வாழ்ந்த எனக்கேன் ....
கண்ணெல்லாம் ....
கண்நீராக்கினாய்...?

நீ எனக்காக ...
பிறந்த தேவதை ....
காதலையும் தருகிறாய் ....
கவலையும் தருகிறாய் ....
கவிதையும் தருகிறாய் ....
வாழ்கை எப்போது தருவாய் ...?

உன்னை மறந்து வாழ ....
மறந்துபோய் உன் வீட்டுக்கு ...
வந்துவிட்டேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 909

உன் 
கனவு வலைக்குள் ...
சிக்கி தவிக்கிறேன் ...
என்னை மீட்டுவிடு ....!!!

பார்க்கும் இடமெல்லாம் ....
பாவையாக இருந்தாய் ....
எப்படி இப்போ ...?
பாவியாக  மாறினாய் ...?

என் இதயம் இருண்டு  ....
பலகாலம் என்றாலும் ....
இதய நரம்பில் உன் கீதம் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 910

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நான் 
பின்னும் வலை ..
கண் மீனுக்காக ..
இல்லை .
கண்ணீருக்காக....!!!

நீ 
விட்டுவிட்டு போனால்
தோல்வியை உனக்கு
முன்பே விரும்பிவிட்டேன்
நான் வென்றும் விட்டேன்....!!!

இரவு நட்சத்திரம் போல்
உன் நினைவுகளும்
மின்னுகின்றன.....
விடிந்தபின் எல்லாம் மாயம் ....!!!

+
கே இனியவன் - கஸல் 106

  • தொடங்கியவர்
நீ 
தரும் வேதனைகள்...
நீ தருவதில்லை .....
நீ தரும் இன்பம் ...
நீ தருவதில்லை ....
எல்லாம் காதல் தரும் ....!!!

என்னோடு நீ
இருக்கும் போது
நான் இருப்பதில்லை

என் இதயத்தில்
கண் உள்ளது
நீ வந்ததும்
கண்ணீர் விடுகிறது...!!!

+
கே இனியவன் - கஸல் 107
  • தொடங்கியவர்

காற்றில் ஆடும் 
தீபம் போல் ஆனேன் ....
நீ 
சொல்லும் சொல்லால் ...!!!

நினைக்கவும் ...
மறக்கவும் ....
பழகிய இதயத்துக்கு ....
நன்றி ....!!!

தனிமையில் அழுதேன்,,
உறவுகள் இல்லாமல் அல்ல....
காதல் இல்லாமல் ...!!!

+
கே இனியவன் - கஸல் 109

பூவைப்போல் காதலும் ....
போராடி பூக்கும் ...
ஒரு நொடியில் கசங்கும் .....!!!

உன்னைப்பற்றி ...
கவிதை எழுதுவதென்றால் ...
கண்ணீர் மையாகவும் ....
வலிகள் எழுத்து கருவியாகவும் ....
இருக்கும் ....!!!

பூத்திருந்த காதல் ....
உத்திர தொடங்கிவிட்டது ....
உதிர்ந்திருந்த கனவு ...
தளிர் விடுகிறது ....!!!

+
கே இனியவன் - கஸல் 110

  • தொடங்கியவர்

காதலில் ....
அவளில் நனைவதற்காக ....
பனித்துளியில் நனைந்து .....
பார்கிறேன் ....!!!

ஒவ்வொரு உயிரினமும் ....
தன்னை பெருக்க ....
என்னைபோல் காதலுக்கு ....
ஏங்குகின்றன ....!!!

ஒவ்வொரு குழந்தையும் 
காதலின் அழகை காட்டும் ...
கண்ணாடிகள் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 911

  • தொடங்கியவர்

கவிதை ....
உனக்கு வரிகள் ...
எனக்கு நீ தந்த ....
காயங்கள் .....!!!

அரைகுறையாய் ....
இருக்கும் காதல் இதயத்தை ....
காதல் இதயமாக்குவோம் ...
வருகிறாயா ...?

உன் 
மின்காந்த கண்ணில்....
தப்புவதற்காக -உன் 
கண்ணுக்குள் நீராய் ....
இருக்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 912

நீ 
பார்த்த போதுதான் ...
ஆணழகனானேன் ....!!!

எல்லோரும் 
ஒருவகையில் ....
பிச்சைகாரர்தான் ....
நான் காதலில் - நீ 
அழகில் .....!!!

உன் ....
பேச்சு வல்லினம் ...
எனக்கு மெல்லினம் ...
காதலுக்கு இடையினம் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 913

  • தொடங்கியவர்
காதலுக்காக ...
பூக்கப்பாடதமலர் -நீ 
வாடிவிழுந்த மலர் -நான் ...!!!

உன் புருவம் ....
உனக்கு வில் ...
எனக்கு அம்பு ....!!!

உன்னையும் ....
மரணத்தையும் ...
ஒன்றாக காதலிக்கிறேன் ....
நிச்சயம் முடிவு உண்டு ...!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 914
  • தொடங்கியவர்

காதலில் 
ஏற்ற இறக்கம் ....
நீ அமர் முடுகளில் ....
நான் ஆர்முடுகளில் ....!!!

என் .....
தலையெழுத்தை ....
நீ காதல் ரேகையால் ...
வரைந்து விட்டாய் ....!!!

எப்போது 
கண்ணீர் விட்டேன் ....?
காதலுக்கு தண்ணீர் ...
தெளித்தல்லவா விட்டேன் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 915

  • தொடங்கியவர்

உன்னை 
காதலித்து பஞ்சு மெத்தையில் ...
உறங்காமல் முள் மெத்தையில் ....
உறங்குகிறேன் ....!!!

நினைவுகள் ...
நீர்குமிழியை இருக்கலாம் 
குங்கும சிமிழாய் இருக்கலாம் 

சோகத்தின் பாதையில் ....
வருகிறேன் நீயும் நிச்சயம் 
வருவாய் என்ற நம்பிக்கையுடன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 916

  • தொடங்கியவர்
பட்டாம் பூச்சியாய் ...
பறந்த என்னை ...
விட்டில் பூச்சியாய் ...
கருக்கி விட்டாய் ....!!!

கண்ணீர் கடலைவிட ....
சோகமானது ....
உவர்ப்பதில் இரண்டும் ...
ஒன்றுதான் ...!!!

நான் 
மூச்சுவிடுவதால் ....
நீ வாழுகிறாய் .....
போதும் அது காதல் ...
இல்லாவிட்டாலும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 917
  • தொடங்கியவர்
ஜென்ம பாவத்துக்கு ....
பரிகாரமாய் நீ 
காதலாய் வந்தாய் ....!!!

ஏன் 
முகம் திருப்புகிறாய்...
தவறு மனதை உறுத்துதா ..?

உனக்கு அனுப்பிய ...
காதல் கடிதங்கள் ....
திரும்பி எனக்கே வருகிறது ....
முகவரியை மாற்றி விட்டாயா ...?

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 918
  • தொடங்கியவர்

என்று 
ஆதாம் ஏவாள் ...
தோன்றினார்களோ ...
அன்றே காதலும் ....
ஏவல் ஆகிவிட்டது ...!!!

காதலிலும் ...
பாகபிரிவினை ...
உடல் என்னிடம் ...
உயிர் உன்னிடம் .....!!!

பூக்களின் காதல் 
தோல்வி பனித்துளி ,,,,
மேகத்தில் காதல் 
தோல்வி மழைதுளி ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 919
 

  • தொடங்கியவர்

வானவில்லைபோல் ....
காதல் அழகாயிருந்தது ,,,,
எப்படி வில் உடைந்தது ,,,?

உன் 
முக அழகை விட ....
உன் காதல் அழகு ....
பிறப்பின் புனிதத்தை ...
பெற்று விட்டாய் ...!!!

சோதிடமும் காதலும் ....
ஒன்று தான் புரிந்துகொள் ....
ஒருவனை 
கொஞ்சம் கொஞ்சமாய் ....
கொல்லும்....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 920

  • தொடங்கியவர்
இதய தீபத்தை ....
அணைத்து விட்டாய் ...
மீதி எண்ணையில் ....
கசியும் வரிகள் தான் ...
என் கவிதைகள் ....!!!

இதுவரை 
பூக்களின் மேல் ....
நடந்து வந்தவன் ....
முற்களின் மேல் .....
நடக்கப்போகிறேன் ....!!!

நீ 
என்னை விட்டு .....
போகப்போகிறாய் .....
என்பதை அறிந்து ....
இதயம் அழத்தொடங்கி....
விட்டது .....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 921
  • தொடங்கியவர்

வா 
நிம்பதியை தொலைத்து ...
காதல் வழியே போவோம் ...!!!

பாவம் காதல் ....!!!
காதல் இல்லாத இரண்டு ....
இதயத்துக்கு நடுவில் ...
தத்தளிக்கிறது ....!!!

கண்ணீரை ....
என் கண்ண்கூட ....
விரும்ப்பவில்லை ....
வழிந்தோடுகிறது ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 922

  • தொடங்கியவர்

இணையாத ....
நம் காதல் ....
எங்கிருந்து ,,,,,
அழுதுகொண்டிருக்கும் .....?

இறைவனையும் ....
காதலையும் ....
அழுதுதான் பெறவேண்டும் ....
வேறு வழியில்லை ....!!!

தன் வலிமையை ....
பார்க்கமுடியாத ...
குதிரையின் கடிவாளம் ....
போல் நீயும் காதலை ....
பார்க்கவில்லை ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 923

காதல் விடி வெள்ளி ....
அருகில் மின்மினிகளை ...
இணைத்து பிரகாசமாய் ....
இருக்கிறது ....!!!

உன் இதய சாவியை ...
தந்துவிடு -இனியும் ...
என்னால் தாங்க முடியாது ....!!!

நீ காதல் ஜுரம் ....
தொற்றிக்கொண்டே ...
இருக்கிறாய் ...
தொல்லை கொடுத்து ...
கொண்டே இருக்கிறாய்....!!! 

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 924

  • தொடங்கியவர்
நினைத்துக்கொண்டே ....
இருக்க இனிக்கும் காதல் ...
உன்னை நினைத்ததும் ....
கண்ணீரும் இனிக்கிறது ....!!!

நிலாவில் பேசுவது ....
காதலுக்கு அழகு ...
எதற்காக நண்பகலில் ....
பேச ஆசைப்படுகிறாய் ....?

வானமும் பூமியும் ....
என்று இணைகிறதோ ...
அன்று நீயும் நானும் ...
நிச்சயம் சேர்வோம் ....!!!

^ 

கவி நாட்டியரசர் 
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம் 
தொடர் பதிவு கஸல் - 925
  • தொடங்கியவர்

நீ 
எனக்காகவே பிறந்தவள் ....
நான் 
உனக்காக இறக்கிறேன் ....!!!

உலகம் ஒரு வட்டம் ....
நீ பிரிந்து சென்றாலும் ...
என்னிடம் வருவாய் ....!!!

எத்தனை காலம் 
கடிகாரம் முள் போல் ...
சுழண்டு கொண்டே...
இருப்பது ....!!!

கவி நாட்டியரசர் 
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம் 
தொடர் பதிவு கஸல் - 926

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.