Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில்- விக்கி பனிப்போர் முடிவுக்கு வர வேண்டும்: மனோ

Featured Replies

Mano_Ganesan_2_3.jpg?resize=300%2C234

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடமாகாண முதல்வர் சீ. வி. விக்னேஸ்வரன் ஆகிய இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் முடிவுக்கு வர வேண்டும். இந்நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற ஆயுத போரை மனதில் கொண்டு இந்த பனிப்போர் நின்றிட வேண்டும். தேசிய நலன் கருதி இந்த கோரிக்கையை நான் இந்த இருவரையும் நோக்கி பகிரங்கமாக விடுக்கின்றேன் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

 

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

 

இந்த இருவரிடையேயும் மத்தியஸ்தம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை, யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் இருக்கின்ற சமூக நலன் விரும்பிகள் பலர் கடந்த சில நாட்களாக என்னிடம் விடுத்து வருகின்றார்கள். என்னால் மத்தியஸ்தம் செய்திட முடியாது. இத்தகைய விவகாரங்களில் மத்தியஸ்தம் செய்ய கிளம்பும் மத்தியஸ்தர் கடைசியில் கஷ்டத்தில் விழுவது இந்நாட்டு வரலாறு.

 

இரவில் கிணற்றில் தவறி விழுவது சகஜம். ஆனால், நன்கு கண் தெரியும் நண்பகலில் கிணற்றில் விழ முடியுமா? எனவே கனவான்களாகிய இருவரையும் நோக்கி பகிரங்கமாக சிங்கள, தமிழ் மொழிகளில் இந்த கோரிக்கையை, எங்களது இந்த அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுவோம் மேடையிலிருந்து விடுக்கின்றேன். நான் செய்யக்கூடியது இதுதான் என நம்புகிறேன்.

 

இந்த முரண்பாட்டின் ஆரம்பம் எனக்கு நன்கு தெரியும். அதுபற்றி இங்கே நான் பகிரங்கமாக கருத்து கூற விரும்பவில்லை. எதிர்காலத்தில் அவசியம் ஏற்படுமானால், அவ்வேளையில் அதுபற்றி நான் பேசுவேன். இன்று அதுபற்றி கூறினால் இந்த முரண்பாடு இன்னமும் முற்றி விடும். அது நாட்டுக்கு நல்லது அல்ல. நாட்டு நலனையும், எங்கள் இனத்து நலனையும் மனதில் கொண்டு செயற்படும் பொறுப்புள்ள கட்சியின் தலைவன் என்ற முறையில் நான் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளேன்.

 

பிரதமரின் சமீபத்தைய யாழ் விஜயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம், முதல்வர் அலுவலகத்துக்கு அறிவித்தல் தந்திருந்ததா என்று எனக்கு தெரியாது. அந்த அறிவித்தலை முதல்வர் அலுவலகம் ஏற்றுக்கொள்ளவில்லையா என்றும் எனக்கு தெரியாது. எனினும் நாட்டின் பிரதமர், வடமாகாணத்திற்கு சென்றபோது அங்கே பிரதமரும், முதல்வரும் சந்தித்து மக்களை நலன் தொடர்பில் உரையாட முடியமல் போனது தூரதிஸ்டவசமானது.

 

இந்நாட்டின் தமிழ், முஸ்லிம், சிங்கள தேசிய ஐக்கியத்துக்கும், தமிழ், சிங்கள உறவுகளுக்கும் பிரதமர் விக்ரமசிங்க, முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோர் இடையே புரிந்துணர்வு அவசியம். வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையில் நல்ல உறவு வேண்டும். நான் எப்போதும் இந்த இரண்டு முனைகளுக்கும் இடையில் பாலமாக இருந்து வந்துள்ளேன். அதனாலேயே இதை நான் கூறுகிறேன்.

 

விக்னேஸ்வரன், முதல்வர் பதவியை தேடி பெறவில்லை. பதவிதான் அவரை தேடி வந்தது. சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற அவரது நீதித்துறை பணி ஓய்வு நிகழ்வினை அடுத்து, இனிமேல் அரசியல் பொறுப்பை ஏற்றிடுங்கள் என, அவர் ஓய்வு பெற்ற அதே தினமே முதன் முதலாக பகிரங்கமாக நான் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். அவ்வேளையில் வடமாகாணசபை தேர்தல் அறிவிப்பு வெளியாகி இருக்கவில்லை.

பின்னர் தேர்தல் அறிவிப்பு வெளியான பின், நானும், தமிழ் ஊடகத்துறை மற்றும் சமூகத்துறை நண்பர்கள் பலரும், கூடி பேசி திட்டமிட்டு, கொழும்பில் பணி ஓய்வில் இருந்த அவரை வலியுறுத்தி சம்மதிக்க வைத்து, யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களும் இதையே விரும்பி இருந்தார்கள்.

 

எனவே அவர் தனது முதல்வர் பணியை சிறப்பாக செய்திடும் சூழலை உறுதி செய்திடுவது நமது கடமை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முதிர்ச்சியுள்ள ஒரு சிரேஷ்ட அரசியல்வாதி. வட மாகாணத்து மக்களின் ஆணையை பெற்றுள்ள முதல்வர் விக்னேஸ்வரன், வட இலங்கையில் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர். இந்நோக்கில் இருவருக்கும் இடையில் நல்லுறவு இருந்திட வேண்டுமென நான் விரும்புகிறேன்.

 

http://tamilleader.com/?p=48004

Edited by கலையழகன்

சி.விக்கும் ரணிலுக்கும் இடையில் என்ன பிரச்சினை: ஜேர்மன் தூதுவர் கேள்வி 

 

article_1427870586-cv.jpg

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யாழ். வருகை, வடமாகாண சபைக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நல்லதொரு இணக்கத்தை கொண்டு வருவதாக அமைந்திருக்கும். ஆனால் பிரதமர் - வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்;கிடையேயான நெருக்கம் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கான காரணம் என்ன என்று ஜேர்மன் குடியரசின் தூதுவர் ஜோர்யின் மோர்ஹாட் தன்னிடம் வினாவியதாக யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார்.  

 

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜேர்மன் தூதுவர், யாழ். ஆயரை ஆயர் இல்லத்தில் புதன்கிழமை(01) சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்புக் குறித்து யாழ். ஆயர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், பிரதமரின் யாழ்ப்பாண விஜயம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதா? என்று அவர் என்னிடம் வினாவினார், அதற்கு நான் ஆம் என்று கூற, பிரதமர் - முதலமைச்சர் இடையில் நெருக்கம் இல்லாமைக்கான காரணம் என்ன என என்னிடம் வினாவினார்.  இருவருக்கும் இடையில் விரிசல் காணப்படுவது உண்மை. அது கொள்கை ரீதியான முரண்பாடாக இருக்கலாம் என்று கூறினேன்.

 

மக்கள் தற்போது எதை விரும்புகின்றார்கள்?, எதை எதிர்பார்க்கின்றார்கள் என்று அவர் என்னிடம் வினாவினார். ஆட்சி மாற்றத்துக்கு தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும் பங்காற்றியுள்ளனர். மக்கள் தொடர்ந்தும் மாற்றத்தில் இணைந்து கொள்ள விரும்புகின்றார்கள்

 

 பிரதமர் தனது விஜயத்தில் சில நல்ல காரியங்களை செய்துள்ளார்.  குறிப்பாக மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட 1,000 ஏக்கர் காணிகளை மீளக் கையளிப்பதாக உறுதியளித்து, அதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார். இது மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவுள்ளது. மீளக்கையளிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர உதவுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். வளலாய் பகுதியில் குடியமர்ந்த கத்தோலிக்கர்கள் தமக்கு வழிபாட்டுத்தலம் தேவை என்று கோரினர் என்றும் அவருக்கு பதிலளித்தேன்.

 

 மீள்குடியமர அனுமதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் வழிபாடுகளை மேற்கொள்ளத் தேவையான வழிபாட்டுத் தலங்களை அமைத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் தான் கூறியதாக தூதுவர் தெரிவித்தார்.  தற்போதய இளைஞர்கள் தங்கள் வாழ்வை இங்கு தொடர விரும்புகிறார்களா? அல்லது வெளிநாடு செல்ல விரும்புகிறார்களா? என்று என்னிடம் தூதுவர் கேட்டார்.

 

பெரும்பாலானோர் வெளிநாடு செல்லவே விரும்புகின்றனர். ஏன் என்றால் இங்கு வேலைவாய்ப்புக்களும் அதற்கான சந்தர்ப்பங்களும் குறைவாக இருப்பதால் வெளிநாடு செல்ல விரும்புகின்றனர் என்று தூதுவருக்குக் கூறினேன். ஜேர்மன் அரசும் இங்கு இளைஞர்களுக்காக வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக தூதுவர் தெரிவித்தாக ஆயர் கூறினார்.  

 

 

http://www.tamilmirror.lk/143130#sthash.sVTeNCWH.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.