Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாக். – பங்களாதேஷ் மோதும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

Featured Replies

பாக். – பங்களாதேஷ் மோதும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்
 

a436zr.jpg

பங்­க­ளா­தே­ஷிற்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் பங்­க­ளாதேஷ் அணிக்­கு­மி­டை­யி­லான முத­லா­வது ஒரு நாள் போட்டி இன்று டாக்­காவில் நடக்­கி­றது.

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்­க­ளா­தேஷில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு ஒரு நாள், இரு­பது ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டி தொடரில் விளை­யா­ட­வுள்­ளது.

 

இந்தச் சுற்றுப் பய­ணத்­திற்கு பாகிஸ்தான் அரசு அனு­மதி அளித்­தி­ருந்­தது. ஆனால், பாது­காப்பு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பங்­க­ளா­தேஷில் உள்ள தங்­க­ளது தூத­ரகம் மூலம் நட­வ­டிக்கை மேற்­கொள்ளும் எனவும் தெரி­வித்­தி­ருந்­தது.

 

இதனால் போட்டி நடக்கும் இடங்கள் அறி­விக்­கப்­ப­டாமல் இருந்­தன. அதன்பின் 3 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று டாக்­காவில் நடக்­கி­றது. 2-ஆவது போட்டி 19ஆம் திக­தியும்இ 3-ஆவது போட்டி 22ஆம் திக­தியும் நடை­பெ­று­கி­ன்றன.

 

 

இந்த மூன்று போட்­டி­களும் மிர்பூர் மைதா­னத்­தில்தான் நடக்­கின்­றன. ஒரே ஒரு 20 ஓவர் போட்டி 24ஆம் திகதி மிர்­பூரில் நடக்­கி­றது. இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஏப்ரல் 28ஆம் திகதி ஆரம்­ப­மா­கின்­றது. அன்று தொடங் கும் முதல் போட்டி குல்­னா­விலும், மே 6ஆம் திகதி தொடங்கும் 2-ஆவது டெஸ்ட் போட்டி மிர்­பூ­ரிலும் நடக்கின்றன. பங்­க­ளாதேஷ் அணி உலகக் கிண்­ணத்தில் திறம்­பட செயல்­பட்ட ஒரு அணி­யா­க காணப்படும்இ அதேநேரம் பாகிஸ் தானும் முழு வீச்சுடன் தான் காணப்படுகிறது.
 

http://www.virakesari.lk/articles/2015/04/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

Bangladesh 329/6 (50.0 ov)
Pakistan 250 (45.2 ov)
Bangladesh won by 79 runs

  • தொடங்கியவர்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்

 

டாக்காவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியை வங்கதேசம் 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக 2-வது வெற்றியைச் சாதித்துள்ளது வங்கதேசம்.

 

முதலில் பேட் செய்த வங்கதேசம், தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோரின் அபார சதங்களுடனும், பாகிஸ்தான் விட்ட கேட்ச் உபயங்களினாலும் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் என்ற தங்களது அதிகபட்ச ஒருநாள் போட்டி ரன் எண்ணிக்கையை எட்டியது. [பாகிஸ்தான் பந்துவீச்சை புரட்டி எடுத்த தமிம் இக்பால், முஷ்பிகுர் சதங்கள்]

 

சயீத் அஜ்மல் தனது பந்துவீச்சை திருத்திக் கொண்ட பிறகு விளையாடிய முதல் போட்டியில் 74 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதிக பட்ச ரன்களை அஜ்மல் விட்டுக் கொடுப்பது இதுவே முதல் முறை. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 45.2 ஓவர்களில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.

 

330 ரன்கள் இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய பாகிஸ்தான் கேப்டன் அசார் அலியின் அபாரமான 73 பந்து 72 ரன்களுடன் சுமாரான தொடக்கம் கண்டது.

ஆனால் சர்பராஸ் அகமட் (24), மொகமது ஹபீஸ் (4) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆக 13-வது ஓவரில் 59/2 என்று ஆனது. ஹபீஸ் சிங்கிள் எடுக்க தாமதமாக கிரீஸை விட்டுக் கிளம்பியதாலும் சவுமியா சர்க்காரின் அபாரமான த்ரோவினாலும் ரன் அவுட் ஆனார்.

 

அதன் பிறகு அசார் அலியும், ஹாரிஸ் சோஹைலும் இணைந்து 89 ரன்களை 93 பந்துகளில் 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். அப்போது அசார் அலி, டஸ்கின் அகமதுவிடம் அவுட் ஆனார். ஹாரிஸ் சோஹைல் 64 பந்துகளில் 4 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 51 எடுத்து ஓரளவு நம்பிக்கை அளித்த நிலையில் டஸ்கின் அகமதுவிடம் அவுட் ஆகி வெளியேறினார். டஸ்கின் அகமது மிக முக்கிய விக்கெட்டுகளை தனது 2 ஸ்பெல்களில் எடுத்தார்.

 

32-வது ஓவரில் 175/4 என்ற நிலையில் ஃபவாத் ஆலம், மொகமது ரிஸ்வான் இணைந்தனர். இருவரும் இணைந்து 40-வது ஓவர் நடு வரையில் தாக்குப் பிடித்து ஸ்கோரை 217 ரன்களுக்கு உயர்த்தினர். ஆனால் ஒரே ஓவரில் பவாத் ஆலம் (14), அறிமுக வீரர் சாத் நசீம் (0) ஆகியோரை வங்கதேச இடது கை சுழற்பந்து வீச்சாளர் அரபாத் சன்னி வீழ்த்தினார்.

அறிமுக வீரர் மொகமது ரிஸ்வான் அற்புதமாக விளையாடினார். அவர் 58 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் ஆக்ரோஷம் காட்டினார். கடைசியில் ரூபல் ஹுசைன் பந்தை ஒரு விளாசு விளாச அது லாங் ஆனில் கேட்ச் ஆனது.

 

175/3 என்று இருந்த பாகிஸ்தான் அடுத்த 7 விக்கெட்டுகளை அடுத்த 75 ரன்களில் இழந்து 45.2 ஓவரில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வங்கதேச அணியில் டஸ்கின் அகமது, அராபத் சன்னி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷாகிப், ரூபல் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக முஷ்பிகுர் ரஹிம் தேர்வு செய்யப்பட்டார்.

 

உலகக்கோப்பை கிரிக்கெட்டிற்குப் பிறகே வங்கதேசம் ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மாறாக பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி பகுதி நேர வீச்சாளர்களை முக்கியக் கட்டத்தில் பயன்படுத்தி 10 ஓவர்களை வீசி 79 ரன்களை விட்டுக் கொடுத்து தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோரை நிலைகொள்ளச் செய்தார். கேட்ச்களும் கோட்டை விடப்பட்டது.
 

 

http://tamil.thehindu.com/sports/16-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/article7114117.ece

  • தொடங்கியவர்

இரண்டாவது ஒரு நாள் போட்டியில்

 

Pakistan 239/6 (50.0 ov)
Bangladesh 240/3 (38.1 ov)
Bangladesh won by 7 wickets (with 71 balls remaining)

  • தொடங்கியவர்

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது வங்கதேசம்

 

டாக்கா: பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 கைப்பற்றி வங்கதேசம் அணி சாதனை படைத்துள்ளது. இன்று நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது.

 

இதன் பின்னர் களமிறங்கிய வங்கதேசம் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேசம் அணி 79 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1233849

  • தொடங்கியவர்

வரலாறு படைத்தது வங்கதேசம்: பாக்., மீண்டும் தோல்வி

 

தாகா: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தமிம் இக்பால் சதமடித்து கைகொடுக்க, வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக முதன்முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.     

 

 

வங்கதேசம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வங்கதேசம் வென்றது. இரண்டாவது போட்டி தாகாவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.     

 

நசிம் அரைசதம்: பாகிஸ்தான் அணிக்கு சர்பராஸ் அகமது (7), முகமது ஹபீஸ் (0), பவாத் அலாம் (0) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய சாத் நசிம் (77*), வாகாப் ரியாஸ் (51*), ஹாரிஸ் சோகைல் (44), கேப்டன் அசார் அலி (36) கைகொடுத்தனர். பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 239 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் சார்பில் சாகிப் அல் ஹசன் 2 விக்கெட் வீழ்த்தினார்.     

 

தமிம் சதம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு சவுமியா சர்கார் (17), மகமதுல்லா (17) ஏமாற்றினர். பின் இணைந்த தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம் ஜோடி அபாரமாக ஆடியது. பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்த இவர்கள் பவுண்டரிகளாக விளாசினர். அசத்தலாக ஆடிய தமிம் இக்பால், மீண்டும் சதமடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த முஷ்பிகுர் (67) அரைசதத்தை பதிவு செய்தார்.     

 

வங்கதேச அணி 38.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தமிம் இக்பால் (116), சாகிப் அல் ஹசன் (7) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை தமிம் இக்பால் வென்றார்.     

 

புதிய வரலாறு: இந்த வெற்றியின்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2–0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. தவிர, பாகிஸ்தானுக்கு எதிராக முதன்முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி புதிய சாதனை படைத்தது. முன்னதாக இவ்விரு அணிகள் 5 முறை (1998–99, 2001–02, 2003, 2007–08, 2011–12) ஒருநாள் தொடரில் மோதின. இதில் அனைத்திலும் பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.

 

http://sports.dinamalar.com/2015/04/1429462224/BangladeshPakistanOneDayCricket.html

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் படுதோல்வி : சரித்திர வெற்றியில் பங்களாதேஷ்
 

 

பாகிஸ்தான் - பங்­க­ளாதேஷ் அணி­க­ளுக்­கி­டையில் நேற்று நடை­பெற்ற மூன்­றா­வதும் இறு­தி­யு­மான ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில்இ 8 விக்­கெட்­டுக்­களும் 63 பந்­து­களும் மீத­மி­ருக்க பாகிஸ்­தானை வெற்­றி­கொண்­டது பங்களாதேஷ்.

 

பங்­க­ளா­தே­ஷிற்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு விளை­யாடி வரும் பாகிஸ்தான் அணிஇ மூன்று போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-–0 என்ற அடிப்­ப­டையில் பங்­க­ளா­தே­ஷிடம் தாரை­வார்த்­தது.

 

கத்­துக்­குட்டி அணி­யான பங்­க­ளாதேஷ் 16 வரு­டங்­க­ளுக்குப் பிறகு பாகிஸ்­தானை வீழ்த்தி சாதனைப் படைத்­துள்­ளது. நேற்றைய போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் அணி 49 ஓவர்­களில் 250 ஓட்­டங்­களைப் பெற்று சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது.

 

இதில் ஆரம்பத்துடுப்­பாட்ட வீர­ரான அசார் அலி 101 ஓட்­டங்­களை விளா­சினார். மற்­றைய ஆரம்பத் துடுப்­பாட்ட வீரரான சமி அஸ்லாம் 45 ஓட்­டங்­க­ளையும், சொஹைல் 52 ஓட்­டங்­க­ளையும் அணிக்­காகப் பெற்­றுக்­கொ­டுத்­தனர். ஏனைய வீரர்கள் அனை­வரும் ஒற்றை இலக்க ஓட்­டத்­துடன் ஆட்­ட­மி­ழந்­தனர்.

 

பந்­து­வீச்சில் பங்­க­ளாதேஷ் வீரர்­க­ளான மொர்­டாசா, ருபெல், அரபாத், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்­கெட்­டுக்கள் வீதம் வீழ்த்­தினர். 251 என்ற வெற்றி இலக்­குடன் கள­மி­றங்­கிய பங்­க­ளாதேஷ் 39.3 ஓவர்­களில் 2 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து பாகிஸ்­தானை மூன்­றா­வது போட்­டியில் வீழ்த்தி ஹெட்ரிக் வெற்­றியைப் பதி­வு­செய்­தது.

 

பங்­க­ளா­தேஷின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக இக்பால் மற்றும் ஷர்கர் ஆகியோர் கள­மி­றங்­கினர். இதில் ஷர்கர் 127 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழக்­காமல் இருக்க, மறு­மு­னையில் தமீம் இக்பால் 64 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். அடுத்து வந்த மொஹ­ம­துல்லா 4 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யேற, ரஹீம் 49 ஓட்­டங்­களைச் சேர்த்தார்.

இறுதியில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்ட நாயகனாக ஷர்கரும், தொடர்நாயகனாக தமிம் இக்பாலும் தெரிவுசெய்யப்பட்ட னர்.

 

http://www.virakesari.lk/articles/2015/04/23/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் அணியின் தோல்வி கற்பனை செய்ய முடியாதது என்கிறார் இம்ரான் கான்; ஆய்வு நடத்தப்படும் என ஷஹாரியர் கான் அறிவிப்பு
 

 

பங்­க­ளா­தே­ஷிடம் 3–0 என்ற ஆட்டக் கணக்கில் பாகிஸ் தான் தோல்வி அடைந்­தமை கற்­பனை செய்ய முடி­யா­தது என அந் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலை­வரும் கிரிக்கெட் மகா­னுமான இம்ரான் கான் தெரிவித்­துள்ளார்.

 

பாகிஸ்தான் கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை வழங்கி வரும் தனிப்­பட்ட சலுகை­களே இந்தத் தோல்­விக்குக் காரணம் என இம் ரான் கான் குற்­றஞ்­சாட்­டினார்.

பங்­க­ளா­தேுட­னான தோல்­வியை அடுத்து சர்­வ­தேச ஒரு நாள் கிரிக்கெட் தரப்ப­டுத்­தலில் பாகிஸ்தான் எட்டாம் இடத்­திற்கு  பின்தள்  ளப்பட்டுள்ளது.

‘‘தகு­தி­யில்­லா­த­வர்­களை சலுகை அடிப்­ப­டையில் பாகிஸ் தான் கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபையில் இருக்­கும்­வரை பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னேற்றம் அடை­யாது.

சபையில் பதவி வகிப்­ப­வர்­க­ளுக்கு கிரிக் கெட் துறை சார்ந்த அறிவு இல்லாதமை கவ­லைக்­கு­ரி­யது’’ என இம்ரான் கான் தெரி­வித்­துள்ளார்.

 

இதே­வேளை, பாகிஸ்­தானின் தோல்வி குறித்து ஆய்வு ஒன்று நடத்­தப்­படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் கட் டுப்பாட்டுச் சபைத் தலைவர் ஷஹாரியர் கான் தெரிவித் துள்ளார்.

 

பாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்த பங்களாதேஷ்

பங்­க­ளா­தேஷின் மிர்பூர் ஷியரே பங்ளாதேஷ் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான மூன்று போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொட ரில் 3–0 என்ற ஆட்டக்கணக்கில் பங்­க­ளாதேஷ் அணி முழு­மை­யான வெற்­றியைப் பெற்­றது.

 

இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான 17 வருட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் வர­லாற்றில் பாகிஸ்­தானை தொடர் ஒன்றில் பங்­க­ளாதேஷ் வெற்­றி­கொண்­டுள்­ளது இதுவே முதல் தடவை என்­ப­துடன் அந்த வெற்றி பங்­க­ளா­தேுக்கு சாத­னை­மிகு வெள்­ளை­ய­டிப்பு வெற்­றி­யா­கவும் பதி­வா­னது.

 

1998முதல் இரண்டு நாடு­களும் இரு­த­ரப்பு தொடர்கள் உட்­பட உலகக் கிண்ணம், மும்­முனைத் தொடர், ஆசிய கிண்ணம் என 35 போட்­டி­களில் விளை­யா­டி ­வந்­துள்­ளன.

இங்­கி­லாந்தில் 1999 இல் நடை­பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளி­லேயே முதல் தட­வை­யாக பாகிஸ்­தானை பங்களாதேஷ் வெற்­றி­கொண்டிருந்­தது.

அதன் பின்னர் 16 வரு­டங்கள் கழித்தே இந்தத் தொடரில் பாகிஸ்­தானை பங்களாதேஷ் வெற்­றி­கொண்­டது.

 

கடை­சி­யாக நடை­பெற்ற சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்­டியில் கன்னிச் சதம் குவித்த சௌம்யா சர்க்­கார, ஆரம்ப விக்கெட்டில் தமிம் இக்­பா­லு டன் 145 ஓட்­டங்­களைப் பகிர்ந்­ததன் மூலம் 10 ஓவர்­க­ளுக் கும் மேல் மீத­மி­ருக்க 8 விக்­கெட்­களால் இல­கு­வாக வெற்­றி ­யீட்­டிய பங்­க­ளாதேஷ் தொடரை முழு­மை­யாக கைப்­பற்­றி­யது.

 

முதலில் துடுப்­பெ­டுத்­தாடி திற­மையை வெளிப்­ப­டுத்­திய பாகிஸ்தான் சடுதியாக சரிவு கண்­ட­தா­லேயே பங்­க­ளாதேஷ் இவ்­வ­ளவு இல­கு­வாக வெற்றி­ பெற்­றது.

 

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ் தான் அணித் தலைவர் அஸ்ஹர் அலியின் சதம், மற்றும் சமி அஸ்லாம், ஹரிஸ் சொஹெய்ல் ஆகி­யோ­ருடன் அவர் முறையே பகிர்ந்த 91 மற்றும் 98 ஓட்­டங்­களைக் கொண்ட இணைப்­பாட்­டங்­களின் உத­வி­யுடன் 39ஆவது ஓவரில் 2 விக்­கெட்­களை இழந்து 203 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

 

இதன் கார­ண­மாக பாகிஸ்தான் 300 ஓட்­டங்­களைக் கடந்து பங்­க­ளா­தேுக்கு பலத்த சவாலை விடுக்கும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

 

ஆனால் 62 பந்­து­களில் பாகிஸ்­தானின் கடைசி 8 விக்­கெட்கள் 47 ஓட்டங்களுக்கு சரிய 49 ஓவர்­களில் அதன் மொத்த எண்­ணிக்கை 250 ஓட்­டங்­க­ளாக அமைந்­தது.

 

சுமார் ஐந்து வரு­டங்­களின் பின்னர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பாகிஸ்தான் அணித் தலைவர் ஒருவர் சதம் குவித்­தது இதுவே முதல் தட­வை­யாகும்.

 

தனது முத­லா­வது சர்­வ­தேச ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்த அஸ்ஹர் அலி 101 ஓட்­டங்­க­ளையும் ஹரிஸ் சொஹெய்ல் 52 ஓட்­டங்­க­ளையும் சமி அஸ்லாம் 45 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர்.

 

பந்­து­வீச்சில் மஷ்­ராஃவே மோர்ட்­டாஸா, ரூபெல் ஹொசெய்ன், அரஃபாத் சனி, ஷக்கிப் அல் ஹசன் ஆகி யோர் தலா 2 விக்­கெட்­க­ளையும் கைப்­பற்­றினர்.

 

251 ஒட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய பங்­க­ளாதேஷ் 39.3 ஓவர்­களில் 2 விக்கெட்­களை மாத்­திரம் இழந்து 251 ஓட்­டங்­களைப் பெற்று அபார வெற்­றி­யீட்­டி­யது.

 

அதி­ர­டியில் இறங்­கிய சௌம்யா சர்க்கார் 110 பந்­து­களை எதிர்­கொண்டு 6 சிக்­ஸர்கள், 13 பவுண்ட்­றிகள் அடங்­கலாக ஆட்­ட­மி­ழக்­காமல் 127 ஓட்­டங்­களைக் குவித்தார்.

 

தமிம் இக்பால் 64 ஓட்­டங்­க­ளையும் முஷ்­விக்குர் ரஹிம் ஆட்­ட­மி­ழக்­காமல் 49 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர்.

 

சர்க்­காரும் ரஹிமும் வீழ்த்­தப்­ப­டாத 3 ஆவது விக்கெட்டில் 97 ஓட்­டங்­களைப் பகிர்ந்தனர்.

 

ஆட்டநாயகன் விருதை சௌம்யா சர்க்கார் வென்றெடுத் ததுடன் தொடரில் 2 சதங்கள், ஒரு அரைச் சதம் உட்பட 312 ஓட்டங்களைக் குவித்த தமிம் இக்பால் தொடர் நாயகனானார்.

 

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒரே ஒரு சர்வ தேச இருபது 20 கிரிக்கெட் போட்டி டாக்காவில் இன்று நடைபெறவுள்ளது

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=9787#sthash.aLF6vzo9.dpuf

  • தொடங்கியவர்

வங்கதேசத்திடம் வீழ்ந்தது பாக்.,: சாகிப் அரை சதம்

 

மிர்புர்: ‘டுவென்டி–20’ போட்டியில் வங்கதேச அணி, பாகிஸ்தானை முதல் முறையாக வீழ்த்தியது.

வங்கதேசம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஒரே ஒரு ‘டுவென்டி–20’ போட்டியில் பங்கேற்றது. மிர்புரில் நடந்த இப்போட்டியில் ‘டாஸ்‘ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் அப்ரிதி ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

அப்ரிதி ஏமாற்றம்:

பாகிஸ்தான் அணிக்கு முக்தர் அக்மத் (37) நல்ல துவக்கம் தந்தார். ஷேசாத் (17), அப்ரிதி (12) நிலைக்கவில்லை. முகமது ஹபீஸ் 26 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. ஹாரிஸ் சோகைல் (30) அவுட்டாகாமல் இருந்தார்.

 

சாகிப் அரை சதம்:

எளிய இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (14), சவுமியா சர்கார் (0) அதிர்ச்சி தந்தனர். முஷ்பிகுர் ரஹிம், 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் சாகிப் அல் ஹசன், சபிர் ரஹ்மான் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடிக்க, வங்கதேச அணி 16.2 ஓவரில் 143 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாகிப் (57), சபிர் (51) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சபிர் ரஹ்மான் வென்றார்.

 

ஏற்கனவே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 0–3 என இழந்த பாகிஸ்தான் அணி, நேற்று ‘டுவென்டி–20’ போட்டியிலும் வீழ்ந்தது.

 

http://sports.dinamalar.com/2015/04/1429895866/Bangladeshteamcricket.html

  • தொடங்கியவர்

டி20 போட்டியிலும் தோல்வி: வங்கதேசத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் அஃப்ரீடி
 

 

மிர்பூரில் நடைபெற்ற டி20 சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணியை வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஒரேயொரு டி20 போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம். இதன் மூலம் வங்கதேசத் தொடரில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அனைத்தையும் இழந்த பாகிஸ்தான், டெஸ்ட் போட்டிகளிலாவது இழந்ததை மீட்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

டாஸ் வென்ற பாக். கேப்டன் ஷாகித் அஃப்ரீடி யோசிக்காமல் பேட் செய்ய முடிவெடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்களை மட்டும் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

142 ரன்கள் இலக்கைத் துரத்திய வங்கதேசம் சவுமியா சர்க்கார் (0), தமிம் இக்பால் (14), முஷ்பிகுர் ரஹிம் (19) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து 6-வது ஓவரில் 38/3 என்று தட்டுத்தடுமாறியது. ஆனால் அந்த அணிக்குத் தேவை ஒரே பார்ட்னர்ட்ஷிப் அவ்வளவே அதனை ஷாகிப் அல் ஹசன் மற்றும் ஷபீர் ரஹமான் நிறைவேற்றினர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருவரும் அரைசதம் கண்டு வெற்றியை ஈட்டினர்.

 

உமர் குல் 2 ஓவர்களில் 23 ரன்களுக்கு சாத்துமுறை நடந்தது. வஹாப் ரியாஸின் 4 ஓவர்களில் 7 பவுண்டரிகள் விளாசப்பட்டது. ஷாகிப் 41 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தும் ஷபீர் ரஹ்மான் 32 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர்.

சயீத் அஜ்மல் 3.2 ஓவர்களில் 25 ரன்கள் விளாசப்பட்டார். சிக்கன விகிதம் ஓவருக்கு 7.50. வஹாப் ரியாஸ் ஓவருக்கு 10 ரன்கள் வீதம் கொடுத்தார். சொஹைல் தன்வீர் மட்டுமே 3 ஓவர்களில் 16 ரன்கள் என்று சிக்கனம் காட்டினார்.

ஷாகித் அஃப்ரீடி, "வங்கதேச அணி நல்லதொரு இயங்குவிசையில் உள்ளது. வங்கதேச வீரர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.” என்றார் பாகிஸ்தான் கேப்டன் அஃப்ரிடி.

 

இவர் இவ்வாறு கூறுவதற்குக் காரணம் உண்டு. காரணம் பாகிஸ்தான் பேட்டிங் மோசமாக இருந்தது. அகமது ஷெசாத் 10 பந்துகள் ரன் எடுக்காமல் ஆடினார். 31 பந்துகளில் அவர் 17 ரன்கள் என்று வேதனையுடன் ஆடினார். அவர் ஒழுங்காக ஆடிய ஷாட்டில் அவுட் ஆனதுதான் அவரது பேட்டிங்கின் முரண். முக்தர் அகமது என்ற புதுமுக தொடக்க வீரர் மாறாக 30 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்தார்.

 

3ம் நிலையில் களமிறங்கிய அப்ரீடி 1 சிக்சருடன் 12 ரன்கள் எடுத்திருந்த போது தவறாக கேட்ச் தீர்ப்பளிக்கப்பட்டு காலியானார். அவர் தெரியானல் ரிவியூ கேட்டார். ஆனால் இந்தப் போட்டியில் ரிவியூ இல்லை என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஹாரிஸ் சோஹைல் 30 ரன்களை 24 பந்துகளிலும் ஹபீஸ் 18 பந்துகளில் 26 ரன்களை எடுத்தாலும் 120 பந்துகளில் மொத்தம் 52 ‘டாட்’ பந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வங்கதேசத்தின் அறிமுக வீரர் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் (வயது 19) என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கு நல்ல எதிர்காலம் இருப்பது தெரிகிறது. இவர்தான் ஷெசாத்தை படுத்தி எடுத்தார். இவர் 4 ஓவர்களில் 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக சபீர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF/article7141133.ece

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் - பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம் மற்றொரு வரலாற்று ரீதியான வெற்றியை குறிவைக்கிறது பங்களாதேஷ்
 

பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ் அணி­க­ளுக்­கி­டை­யி­லான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பங்­க­ளா­தேஷின் குல்னா நகரில் இன்று  ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

 

இப்­போட்­டிக்­கான பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் குழா மில் புது­முக வீரர் மொஹமத் ஷஹித் இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்ளார்.

 

மூன்று போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், ஒற்றை சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்டி ஆகிய அனைத்­திலும் பாகிஸ்­தானை வெளுத்­துக்­கட்­டிய பங்­க­ளாதேஷ் அணி, டெஸ்ட் தொடரில் ஜமாய்ப்­ப­தற்கு குறி­வைத்­துள்ளது.

 

இந்த டெஸ்ட் தொடரில் இரு போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன.

 

இரண்­டா­வது போட்டி, மே 6 ஆம் திகதி மீர்பூர் நகரில் ஆரம்பமாகவுள்ளது.

 

வேகப்­பந்­து ­வீச்­சா­ள­ரான 26 வய­து­டைய ஷஹித், 56 முதல் தர கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ளார்.

 

இவ­ருடன் லிட்டன் தாஸ், சௌம்யா சர்க்கார் ஆகி­யோரும் டெஸ்ட் போட்டிகளில் முதல் தட­வை­யாக விளை­யா­டு­வார் கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

சர்க்கார் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யாடி வரு­வ­துடன் தாஸ், இரு­பது 20 குழாமில் இடம்­பெற்­ற­போ­திலும் இறுதி பதி­னொ­ரு­வரில் இடம்­பி­டிக்­க­வில்லை.

இதே­வேளை, பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொட­ரி­லேனும் பங்­க­ளா­தேஷை வெற்றி கொள்­வ­தற்கு சிரே ஷ்ட வீரர்­க­ளான அணித்­த­லைவர் மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான் ஆகி­யோரை நம்­பி­யி­ருக்­கி­றது.

 

இவ்­விரு வீரர்­களும் பங்­க­ளா­தே­ஷு­ட­னான மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் போட்­டி­களில் விளை­யா­ட­வில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்­களில் அதி­கூ­டிய டெஸ்ட் ஓட்­டங்­களை (8832) பெற்ற வீர­ராக ஜாவிட் மியண் டாட் விளங்­கு­கிறார். இச்­சா­த­னையை முறி­ய­டிப்­ப­தற்கு யூனிஸ்கான் இன் னும் 506 ஓட்­டங்­களைப் பெறவேண்டும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 

பங்­க­ளாதேஷ் டெஸ்ட் குழாம்:முஷ்ஃ­பிக்குர் ரஹிம் (அணித் தலைவர்), தமிம் இக்பால், இம்ருள் காயெஸ், லிட்டன் தாஸ், மொமினுள் ஹக், ஷக் கிப் அல் ஹசன், மொஹமத் மஹ்­மு­துல்லாஹ், ஷுவா­கட்டா ஹொம், சௌம்யா சர்க்கார், தய்ஜுல் இஸ்லாம், ஜுபைர் ஹொசெய்ன், ருபெல் ஹொசெய்ன், ஷஹாதத் ஹொசெய்ன், மொஹமத் ஷஹித்.

 

பாகிஸ்தான் டெஸ்ட் குழாம்:

மிஸ்பா உல் ஹக் (அணித் தலைவர்), அஸாட் ஷபிக், அஸார் அலி, பாபர் அஸாம், ஹரிஸ் சொஹைல், இம்ரான் கான், ஜூனைத் கான், மொஹமட் ஹபீஸ், சயீட் அஜ்மல், சர்ப்ராஸ் அஹமட்,வஹாப் ரியாஸ், யூனிஸ் கான், யஷிர் ஷா, ஸுல்பிகார் பாபர், சொஹைல் கான்.
 

 

http://www.metronews.lk/article.php?category=sports&news=9826

  • தொடங்கியவர்

முதல் டெஸ்ட்: முதல் நாளில் வங்கதேசம் 236/4

 

குல்னாவில் இன்று தொடங்கிய பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது.

 

பேட்டிங் சாதக ஆட்டக்களத்தில் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் டாஸில் தோற்றார். சயீத் அஜ்மல் உட்கார வைக்கப்பட்டார். ஆட்டம் தொடங்கி தேநீர் இடைவேளை வரை பாகிஸ்தான் 5 கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டது.

 

தமிம் இக்பால் 16 ரன்களில் இருந்த போது லெக் ஸ்லிப்பில் தாழ்வாக வந்த கேட்சை மொகமது ஹபீஸ் தவறவிட்டார்.

இம்ருல் கயேஸ் தூக்கி அடித்த ஷாட்டை கேட்ச் பிடிப்பதில் தவறாக கணித்து தவறவிட்டார் யாசிர் ஷா. இதே இம்ருல் கயேஸுக்கு ஷார்ட் லெக் பகுதியில் அசார் அலி ஒரு திடீர் கேட்சை தவற விட்டார்.

 

இன்று வங்கதேச வீரர் மொமினுல் ஹக் 80 ரன்கள் எடுத்து கடைசியாக இன்றைய முடிவு நேரத்தில் அவுட் ஆனார். ஆனால் அவர் 17 ரன்களில் இருந்த போது இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுல்பிகர் பாபர் தன் சொந்தப் பந்துவீச்சில் தன்னிடம் வந்த கேட்சையே தவறவிட்டார்.

 

பிறகு மஹமுதுல்லா (49) எட்ஜ் செய்த பந்தை மொகமது ஹபீஸும், யூனிஸ் கானும் வேடிக்கைப் பார்த்தனர்.

தமிம் இக்பால் 25 ரன்களில் யாசிர் ஷா பந்தில் அசார் அலியிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார். மட்டையான பிட்சில் தமிம் இக்பாலும், இம்ருல் கயேஸும் தொடக்கத்தில் பம்மினர். மிகவும் பயந்து பயந்து ஆடி ஓவருக்கு 2 ரன்களுக்கும் கீழ்தான் ரன் விகிதமே இருந்தது. முதல் 2 மணி நேரங்களில் 4 பவுண்டரிகள் அடித்திருந்தால் அதிசயம் என்றே தெரிகிறது. உணவு இடைவேளையின் போது இம்ருல் கயேஸ் 104 பந்துகளில் 35 ரன்களுடன் இருந்தார்.

 

ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகு தன்னம்பிக்கையுடன் ஆடி 51 ரன்கள் எடுத்து ஹபீஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

மஹமுதுல்லா, மொமினுல் ஹக் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தனர். மஹமுதுல்லா கொஞ்சம் லாவகமாக ஆடினார், அவர் 49 ரன்கள் எடுத்து வஹாப் ரியாஸிடம் வீழ்ந்தார்.

 

மொமினுல் ஹக் 162 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்த நிலையில் 90-வது ஓவரின் 5-வது பந்தில் சுல்பிகர் பாபர் பந்தில் எல்.பி.ஆனார்.

ஆட்ட முடிவில் ஷாகிப் அல் ஹசன் 19 ரன்களுடன் களத்தில் இருந்தார். நாளை கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், சவுமியா சர்க்கார், ஆகியோர் களமிறங்குவர்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-2364/article7150828.ece

  • தொடங்கியவர்

மொகமது ஹபீஸ் அதிரடி 137 நாட் அவுட்; பாகிஸ்தான் பதிலடி
 

 

குல்னாவில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

 

முன்னதாக 236/4 என்று தொடங்கிய வங்கதேசம் தன் முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

ஒருநாள் தொடரில் ஃபார்முக்காக போராடிய மொகமது ஹபீஸ் இன்று 123 பந்துகளில் அனாயாச அதிரடி சதம் கண்டார். ஆனால் அதன் பிறகு நிதானம் கடைபிடித்து 179 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 137 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். இவருடன் அசார் அலி 65 ரன்களுடன் ஆடி வருகிறார்.

இருவரும் இணைந்து இதுவரை 2-வது விக்கெட்டுக்காக 177 ரன்களை சேர்த்துள்ளனர். ஆனால், வங்கதேசத்தின் பக்கம் தவறுகள் இல்லாமலில்லை. கேப்டன்/விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 2 கேட்ச்களை அசார் அலிக்கு தவற விட்டார். பேட்டிங்கில் மிஸ்பா, யூனிஸ் கான் இன்னமும் களமிறங்க வேண்டிய நிலையில் நிச்சயம் வங்கதேசத்தின் ரன் எண்ணிக்கையைத் தாண்டி பல அடிகள் பாகிஸ்தான் முன்னேறும் என்று எதிர்பார்க்கலாம்.

 

 

இன்று காலை 236/4 என்று தொடங்கிய வங்கதேசம் 25 ரன்களில் ஷாகிப் அல் ஹசன் விக்கெட்டைப் பறிகொடுத்தது, சுல்பிகர் பாபர் விக்கெட்டை வீழ்த்தினார். சவுமியா சர்க்கார் மிகவும் லாவகமாக பந்துவீச்சைக் கையாண்டார். அவர் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து மொகமது ஹபீஸிடம் ஆட்டமிழக்க அடுத்த 27 ரன்களில் வங்கதேச விக்கெட்டுகள் மடமடவென சரிந்தது, சவுமியாவின் விக்கெட்டையும் சேர்த்து கடைசி 5 விக்கெட்டுகளை 27 ரன்களில் இழந்தது வங்கதேசம். முஷ்பிகுர் ரஹிம் தனது 32 ரன்களுக்கு நன்றாகவே விளையாடினார். ஆனால் அவர் யாசிர் ஷாவிடம் வீழ்ந்தார்.

 

வஹாப் ரியாஸ், யாசிர் ஷா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, ஹபீஸ், பாபர் ஆகியோர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் பேட்டிங்கின் போது ஹபீஸுக்கு வங்கதேசம் சுலபமான பந்துகளை வழங்கியது, பல பந்துகள் கால்திசையில் வீசப்பட்டது. ஸ்பின்னர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளை அவருக்கு வழங்கினர். ஹபீஸின் 2 சிக்சர்களும் இத்தகைய ஷார்ட் பிட்ச் பந்துகளில் அடிக்கப்பட்டது. ஸ்பின்னர்கள் வீசும் போது ஸ்வீப்பர் கவர் இல்லாமல் வங்கதேசம் வீசியது வினோதம்!!

 

மற்றொரு தொடக்க வீரர் சமி அஸ்லம் 20 ரன்களில் தய்ஜுல் இஸ்லாமிடம் அவுட் ஆனார். வங்கதேசம் இதுவரை வீசிய 58 ஓவர்களுக்கு 8 பவுலர்களை பயன்படுத்தியதும் மற்றொரு வினோதமே.

 

வியாழக்கிழமை ஆட்டத்தின் 3-வது நாள்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-137-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF/article7154624.ece

  • தொடங்கியவர்

மொகமது ஹபீஸ் இரட்டைச் சதம்: பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 537 ரன்கள் குவிப்பு

 

குல்னாவில் நடைபெறும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் மொகமது ஹபீஸ் 224 ரன்கள் விளாச, பாகிஸ்தான் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 537 ரன்கள் எடுத்துள்ளது.

 

வங்கதேசத்தைக் காட்டிலும் 205 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள பாகிஸ்தான் அணியில் 3-ம் நாள் ஆட்ட முடிவில் சர்பராஸ் அகமட் 51 ரன்களுடனும், ஆசாத் ஷபிக் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

 

227/1 என்று தொடங்கிய பாகிஸ்தான் இன்று மட்டும் 310 ரன்களை எடுத்துள்ளது. இதற்கு முன்னர் இருமுறை இரட்டை சதத்துக்கு அருகே வந்து ஆட்டமிழந்துள்ளார் ஹபீஸ். அவர் 332 பந்துகளைச் சந்தித்து 23 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 224 ரன்கள் எடுத்து ஷுவகதா ஹோம் பந்தில் அவுட் ஆகும் போதே பாகிஸ்தான் 80 ரன்கள் முன்னிலை பெற்றுவிட்டது. அதன் பிறகு மிஸ்பா, ஆசாத் ஷபிக் மற்றும் சர்பராஸ் அகமது ஆகியோரின் அரைசதங்கள் மூலம் முன்னிலையை 200 ரன்களுக்கும் மேல் கொண்டு சென்றது பாகிஸ்தான்.

 

வங்கதேச பந்துவீச்சு இந்த மந்தமான பிட்சில் வேலைக்கு ஆகவில்லை. பவுண்டரி பந்துகள் அதிகமாக வீசப்பட்டன. குறிப்பாக ஷாகிப் அல் ஹசன் 122 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்றவில்லை. பந்துகள் திரும்பாமல் அடம்பிடித்தன.

 

அசார் அலியுடன் (83) இணைந்து, ஹபீஸ் 227 ரன்களைச் சேர்த்தார். அதன் பிறகு இரண்டு அரைசதக் கூட்டணி, ஒன்று யூனிஸ் கானுடன், மற்றொன்று மிஸ்பாவுடன். அசார் அலியும் சதம் எடுத்திருக்க வேண்டும், ஆனால் அவர் ஷுவகதா ஹோமின் ஆஃப் ஸ்பின் பந்து ஒன்று வேகமாக வர மிடில் ஸ்டம்ப் தொந்தரவு ஆனது.

 

யூனிஸ் கான் தொடக்கத்தில் ரூபல் ஹுசைனின் அவுட் ஸ்விங்கருக்கு சற்றே ஆட்டம் கண்டார். ஆனால் அதன் பிறகு அவர் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து தைஜுல் இஸ்லாம் பந்தில் பவுல்டு ஆனார். இந்த பந்து திரும்பியது. பிறகு ஹபீஸ் 224 ரன்களில் ஷுவகதா ஹோம் பந்தில் அவுட் ஆனார். மிஸ்பா உல் ஹக் இறங்கியவுடனேயே சிக்ஸ் அடித்து ஆக்ரோஷம் காட்டினார். புல் ஷாட்கள், ரிவர்ஸ் ஸ்வீப் என்று ஆதிக்கம் செலுத்தி 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்து ஆடிவந்த போது தைஜுல் இஸ்லாம் பந்தை ஸ்வீப் செய்ய டாப் எட்ஜ் எடுத்து நேராக ரூபலிடம் கேட்ச் ஆனது.

 

மிஸ்பா அவுட் ஆகும் போது ஸ்கோர் 468/4 என்று இருந்தது, அதன் பிறகு சர்பராஸ் அகமட் 54 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 51 ரன்கள் விளாசினார். ஆசாத் ஷபிக்கும் 51 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-537-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7158586.ece

  • தொடங்கியவர்

இரட்டை சதம் அடித்தார் தமிம் இக்பால்: டிராவை நோக்கி முதல் டெஸ்ட்

 

குல்னாவில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 5-ம் நாளான இன்று தமிம் இக்பால் இரட்டைச் சதம் அடித்தார். வங்கதேசத்துக்காக டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த 2-வது வீரர் ஆவார் இவர்.

 

முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்காக முஷ்பிகுர் ரஹிம் இரட்டைச் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிம் இக்பால் 264 பந்துகளைச் சந்தித்து 17 பவுண்டரிகள் 7 சிச்கர்களுடன் 200 ரன்களை எட்டினார். அதுவும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் பந்தை மேலேறி வந்து நேராக சிக்ஸ் அடித்து இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

 

தமிம் இக்பால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு விளையாடி வந்த போது சற்று முன் 206 ரன்களில் ஹபீஸ் பந்தில் ஸ்டம்ப்டு ஆனார்.

இவருடன் மஹமுதுல்லா 14 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றார். முதல் இன்னிங்சில் 296 ரன்கள் பின் தங்கியிருந்த வங்கதேசம் தற்போது 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

 

கடைசி தினமான இன்று இன்னமும் 52 ஓவர்களே மீதமுள்ள நிலையில் ஆட்டம் நிச்சயம் டிராவை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

 

பாகிஸ்தானில் ஜுனைத்கான், வஹாப் ரியாஸ் என்று அனைவரது பந்துவீச்சும் பதம் பார்க்கப்பட்டது.

 

முன்னதாக இம்ருல் கயேஸ் 150 ரன்களுக்கும், மொமினுல் ஹக் 21 ரன்களில் ஜுனைத் கான் பந்தில் அவுட் ஆனார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/article7164521.ece
 

  • தொடங்கியவர்

2-வது டெஸ்ட்: தடுமாறும் வங்கதேசம்; வலுவான நிலையில் பாகிஸ்தான்

 

 

மிர்பூரில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று 557 ரன்களுக்கு டிக்ளேர் செய்த பாகிஸ்தான் பிறகு வங்கதேசத்தை 107/5 என்று ஃபாலோ ஆன் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

 

பாகிஸ்தானின் அசார் அலி 127 நாட் அவுட் என்று தொடங்கி இரட்டைச் சதம் கண்டு 428 பந்துகளில் 20 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 226 ரன்கள் எடுத்து 5-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்த போது பாகிஸ்தான் ஸ்கோர் 530 ரன்களாக இருந்தது. மற்றொரு வீரர் ஆசாத் ஷபிக் 107 ரன்கள் எடுத்து சுவாகத ஹோம் பந்தில் 6-வது விக்கெட்டாக வெளியேறினார்.

 

இவர்கள் இருவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 207 ரன்களைச் சேர்த்தனர். தேநீர் இடைவேளைக்கு முன்பாக பாகிஸ்தான் 27 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது. கடைசியாக 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 557 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் என்று அறிவித்தது.

 

வங்கதேச தரப்பில் 9 பவுலர்கள் பயன்படுத்தப்பட்டனர். இதில் ஷாகித், தைஜுல், சுவாகத ஹோம் ஆகியோரே விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

தொடர்ந்து ஆடிய வங்கதேசத்துக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது, கடந்த டெஸ்ட் போட்டியில் புரட்டி எடுத்த தமிம் இக்பால், ஜுனைத் கானிடம் அவுட் ஆனார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இருந்து பந்து கூர்மையாக உட்புறமாக ஸ்விங் ஆக கால்காப்பில் வாங்கினார் தமிம். நடுவர் கைய உயர்த்த ‘ரிவியூ’ கேட்டார் தமிம், பயனில்லை. 4 ரன்களில் அவர் அவுட்.

 

அடுத்ததாக மொமினுல் ஹக் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஜுனைத் கானின் பந்தை துரத்தி எட்ஜ் செய்து கீப்பர் சர்பராஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மற்றொரு தொடக்க வீரர் இம்ருல் கயேஸ் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டினார், ஜுனைத் கானின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி 46 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து விளையாடி வந்த போது, யாசிர் ஷா தனது முதல் ஓவரை வீச வந்தார், 3-வது பந்து நன்றாக லெக் ஸ்பின்னாக பீட் ஆன கயேஸ் பேடில் பட்டு பந்து லெக்ஸ்டம்பை தொந்தரவு செய்தது.

 

வங்கதேசத்தின் உலகக் கோப்பை நாயகன் மஹமுதுல்லா 32 பந்துகளில் 28 ரன்களுக்கு சிறப்பாகவே ஆடினார். ஆனால் வஹாப் ரியாஸின் ஆக்ரோஷ பவுன்சர் இவரை விழுங்கியது, தட்டுத்தடுமாறி ஆட மட்டையின் கைப்பிடியில் பட்டு ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனது.

 

கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 3 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்திருந்த போது, யாசிர் ஷாவிடம் அவுட் ஆனார். தொடர்ந்து லெக் பிரேக்குகளை வீசி அவரை ஒரு மாதிரி ‘வொர்க் அவுட்’ செய்த யாசிர் ஷா, அடுத்து ஒரு கூக்ளியை வீச, தவறாகக் கணித்த முஷ்பிகுர் கட் செய்ய முயன்றார் ஆஃப் ஸ்டம்பைத் தாக்கியது பந்து. இத்துடன் 2-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

 

ஷாகிப் அல் ஹசன் 14 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். ஃபாலோ ஆனைத் தவிர்க்க வங்கதேசம் இன்னும் 251 ரன்களை எடுக்க வேண்டும்.
 

 

http://tamil.thehindu.com/sports/2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article7180958.ece

  • தொடங்கியவர்

வெற்றிப் பாதையில் பாகிஸ்தான்: தோல்வியைத் தவிர்க்க வங்கதேசம் போராட்டம்
 

 

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 152 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 557 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அசார் அலி 226 ரன்களும், யூனிஸ் கான் 148 ரன்களும், ஆசாத் ஷபிக் 107 ரன்களும் குவித்தனர்.

 

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 27.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. அல்ஹசன் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார். 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியில் அல்ஹசன் ஒருபுறம் சிறப்பாக ஆடியபோதும், மறுமுனையில் சரிவு தவிர்க்க முடியாத தானது.

 

சவும்ய சர்க்கார் 3 ரன்களிலும், ஷுவகதா ஹோம் ரன் ஏதுமின் றியும், தைஜுல் இஸ்லாம் 15 ரன்க ளிலும், முகமது ஷாஹித் 1 ரன்னி லும் ஆட்டமிழந்தனர். ஷஹாதத் ஹுசைன் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதனால் வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸ் 47.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப் புக்கு 203 ரன்களோடு முடிவுக்கு வந்தது. அல்ஹசன் 91 பந்துகளில் 2 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ், யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜுனைத் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் 354 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்ஸை விளையாடியது. அந்த அணியில் முகமது ஹபீஸ் ரன் ஏதுமின்றியும், சமி அஸ்லாம் 8 ரன்களிலும், அசார் அலி 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் 4-வது விக்கெட்டுக்கு இணைந்த யூனிஸ் கான்-கேப்டன் மிஸ்பா ஜோடி 58 ரன்கள் சேர்த்தது. யூனிஸ்கான் 39 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த ஆசாத் ஷபிக் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக விளையாடிய மிஸ்பா உல் ஹக் 72 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் டிக்ளேர் செய்தது. அப்போது அந்த அணி 41.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.

 

 

550 ரன்கள் இலக்கு

இதையடுத்து 550 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 11.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது. தமிம் இக்பால் 32, மோமினுல் ஹக் 15 ரன்களுடன் களத்தில் உள்ளனர். முன்னதாக இம்ருள் கெய்ஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

வங்கதேசம் வெற்றி பெற இன்னும் 487 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. ஏற்கெனவே ஒரு விக்கெட்டை இழந்துவிட்ட நிலையில், ஷஹாதத் ஹுசைன் காயம் காரணமாக விளையாட முடியாததால் அந்த அணியின் வசம் இன்னும் 8 விக்கெட்டுகளே உள்ளன.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7187746.ece

  • தொடங்கியவர்

வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்

 

 

மிர்பூரில் நடைபெற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 328 ரன்களில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 1-0 என்று கைப்பற்றியது.

 

ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் பாகிஸ்தானின் அசார் அலி தேர்வு செய்யப்பட்டார்.

 

550 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை எதிர்கொண்டு 4-ம் நாளான இன்று 63/1 என்று களம் கண்ட வங்கதேசம் இன்று சுமார் 42 ஓவர்களில் மீதி விக்கெட்டுகளை மடமடவென இழந்து 57-வது ஓவரில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அந்த அணியின் ஷஹாதத் ஹுசைன் முதல் நாள் ஆட்டத்திலேயே காயமடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

 

வங்கதேச அணியில் மொமினுல் ஹக் அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார்.

யாசிர் ஷா பந்துகள் திரும்பின, எழும்பின, இதனால் வங்கதேசம் திணறியது.

 

முதலில் தமிம் இக்பால், இம்ரான் கானின் வெளியே சென்ற பந்தை எட்ஜ் செய்து 42 ரன்களில் வெளியேறினார். மஹமுதுல்லா, வஹாப் ரியாஸின் பவுன்சர்களை எதிர்கொண்டார். ஆனால் இம்ரான் கான் இவரது விக்கெட்டை கைப்பற்றினார். எட்ஜை 2-வது ஸ்லிப்பில் யூனிஸ் கான் பிடித்தார்.

ஷாகிப் அல் ஹசன் தேவையில்லாமல் ஆக்ரோஷமாக ஆடுகிறேன் பேர்வழி என்று 13 ரன்களில் ஹபீஸ் பந்தை தூக்கி அடித்து மிட் ஆஃபில் முடிந்து போனார்.

முஷ்பிகுர் ரஹிம் 8 பந்துகளில் ரன் எடுக்காமல், 9-வது பந்தில் யாசிர் ஷா-வின் பந்தை ஸ்டம்பில் வாங்கி விட்டுக் கொண்டு 0-வில் வெளியேறினார்.

மொமினுல் ஹக், வஹாப் ரியாஸை சிறப்பாக ஹூக், புல் ஷாட்கள் ஆடினார். ஸ்பின்னர்களையும் விரைவாக கால்களை நகர்த்தி நன்றாக விளையாடி 68 ரன்கள் எடுத்து யாசிர் ஷாவிடம் வீழ்ந்தார்.

 

 

உணவு இடைவேளைக்குப் பிறகு சவுமியா சர்க்கார், வஹாப் ரியாஸின் லெக் திசைப் பந்தை கேட்ச் கொடுத்து 1 ரன்னில் வெளியேறினார். இதற்கு அடுத்த ஓவர்தான் மொமினுல் அவுட் ஆனார்.

 

143/7 என்ற நிலையில் சுவாகத ஹோம் 55 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். மொகமது ஷாகித் 14 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். 57-வது ஓவரில் 221 ரன்களுக்கு வங்கதேசத்தின் கதை முடிந்தது.

 

இந்தத் தொடரில் பாகிஸ்தான் பெற்ற ஒரே வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பாகிஸ்தானை, வங்கதேசம் வென்றது.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article7188343.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.