Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்த மண்ணில் மீள்குடியேறிய தொழில் செய்ய இடமளியுங்கள் - இரணைதீவு மக்கள் கோரிக்கை

Featured Replies

iranaimadu_CI.jpg

கிளிநொச்சி இரணைதீவு பகுதியை சேர்ந்த மக்கள் இரணைமாதா நகரில் வசித்து வருகின்றனர். இவர்கள் தமது சொந்த நிலமான இரணைதீவுப் பகுதியில் தம்மை மீள்குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த விடயம் தொடர்பில் அண்மையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடமும் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர். 

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் இணைதீவு கிராமத்தில் சுமார் 183 குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 

1992ஆம் ஆண்டில் அந்தப் பகுதியில் ஏற்பட்ட யுத்த நடவடிக்கை காரணமாக இரணைதீவு கிராம மக்கள் தமது சொந்த ஊரைவிட்டு இடம்பெயர்ந்தனர்.

தமது மீன்பிடி உபகரணங்களான வலைகள், படகுகள் முதல் கால்நடைகள் வரை அனைத்தையும் இழந்து இந்த மக்கள் அன்று அகதிகளாக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் முழங்காவில் இரணைமாதா நகரில் தஞ்சமடைந்த நிலையில் கடந்த 23 வருடங்களாக தமது சொந்த நிலத்திற்குத் திரும்பாத நிலையில் வாழ்கின்றனர்.

தற்போது 314 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இரணைமாதா நகரில் சில குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டபோதும் அவர்கள் தமது வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளனர். 

இரணைதீவு மக்களின் வாழ்வாதாரத் தெழிலான மீன்பிடித் தொழிலை முன்னெடுக்க தம்மை மீள்குடியேற்ற வேண்டும்  என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது சொந்த ஊருக்கு என்றாவது ஒருநாள் திரும்புவோம் என்ற நம்பிக்கையிலேயே இரணைமாதா நகரில் வாழ்ந்து வந்ததாக இரணைதீவு மக்கள் குறிப்பிடுகின்றனர்.

தமது கோரிக்கைகளை அண்மையில் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் தெரியப்படுத்தியதாக இரணைதீவு மக்கள் குறிப்பிடுகின்றனர்.

தற்போது தமது கிராமத்தை இராணுவே பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கும் இரணைதீவு மக்கள் தாம் அங்கு காலம் காலமாக வாழ்ந்து வந்தமைக்கான ஆதாரங்கள் தம்மிடமும் இரணைதீவிலும் உள்ளதெனவும் கூறுகின்றனர்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118804/language/ta-IN/article.aspx

  • 1 year later...

இரணைதீவு பிரச்சினைக்கு முடிவு கிடைக்குமா?

கிளிநொச்சி - இரணைதீவு பகுதியில் தொடரும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கென இணைத்தலைவர்கள் அடங்கிய குழுவொன்று அங்கு விஜயம் செய்யவுள்ளது.

இரணைதீவில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், மக்கள் மீளக் குடியமர்வதற்கோ அல்லது மீன்பிடியில் ஈடுபடுவதற்கோ அனுமதிப்பதில்லை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த விடயம் குறித்து கடந்த வாரம் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆராயப்பட்டிருந்தது.

இதன்போது, இணைத்தலைவர்கள், கிளிநொச்சி மாவட்ட செயலாளர், வடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் இரணைதீவு கடற்றொழிலாளர்கள் அடங்கிய குழுவினர் எதிர்வரும் 26ஆம் திகதி இரணைதீவிற்கு படகுகளில் செல்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு போர் ஏற்பட்ட பின்னர் பூநகரி - இரணைதீவிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து முழங்கால் இரணைமாதா நகரில் குடியமர்ந்துள்ளனர்.

எனினும் யுத்தத்தின் பின்னர் தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யுமாறு இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ள போதும் இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே உண்மை நிலையை அறிவதற்கென எதிர்வரும் 26ஆம் திகதி இரணைதீவிற்கான பயணம் இடம்பெறவுள்ளது.

http://www.tamilwin.com/statements/01/107497

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.