Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகளுக்கு முள்ளந்தண்டு வடம் பாதிப்பு

Featured Replies

article_1429797240-LTTE.jpg
 
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள், படுக்கையில் தங்கள் வாழ்நாளைக் கழித்து படுக்கைப் புண்ணால் இளம் வயதிலேயே உயிரிழந்து வருகின்றனர் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
 
வடமாகாண சபையால் ஆரம்பிக்கப்பட்ட முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, வவுனியா - பம்பைமடுவிலுள்ள வைகறை நிறுவன கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'முன்னாள் போராளிகளில் பலர் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இதனால் அவர்கள் தொடர்ந்து படுக்கையில் இருக்கின்றனர். தொடர்ந்து படுக்கையில் இருந்தால் படுக்கைப் புண் ஏற்பட்டு அவர்கள் உயிரிழக்கின்றனர். இளம் வயதில் அவர்களின் வாழ்க்கை முடிவுக்கு வருகின்றது' என்றார்.
 
'1991ஆம் ஆண்டு பூநகரியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 21 வயதில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட யாழ். நாவாந்துறையை சேர்ந்த பாண்டியன் என்பவர் 24 வருடங்களாக படுக்கையில் இருந்து அண்மையில் உயிரிழந்துள்ளார்.
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் சுகாதார, உடல் நலன்களை காக்கவேண்டிய பெரிய தேவை எமக்குள்ளது. அதற்காக முதலில் இந்த மாதாந்த கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
இலங்கையில் 9 மாகாண சபைகள் இருக்கின்றபோதும், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை எமது வடமாகாண சபையே மேற்கொண்டது' என்றார்.
 
 
  • தொடங்கியவர்

article_1429850887-DSC03109.JPG

 

வடக்கில் யுத்தம் காரணமாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு இயங்கமுடியத நிலையில் உள்ள 40 பேருக்கு முதற்கட்டமாக  வடமாகாண சுகாதார புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக நேற்று வியாழக்கிழமை  (23.4) நிதியதவி வழங்கப்பட்டன. 

 

இடுப்புக்கு கீழ் இயங்க முடியாதவர்களுக்கு 1,500 ரூபாய்யும் ழுத்துக்கு கீழ் இயங்க முடியாதவர்களுக்கு மூவாயிரம் ரூபாய்யும்  மாதாந்தம் வழங்கப்படவுள்ளது. வவுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு நிலையமான வைகறையில் நடைபெற்ற நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம், வடமாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூகசேவைகள், புனர்வாழ்வளித்தல், சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான அன்ரனி ஜெகநாதன், எம்.பி.நடராஜா, ம.தியாகராஜா, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி இன்பராஜ், பிராந்திய வைத்திய அதிகாரி மகேந்திரன், பிரதேச செயலாளர் கா.உதயராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

article_1429850901-DSC03120.JPG

 

 

http://www.tamilmirror.lk/144601#sthash.b2FQ4jXL.dpuf

  • தொடங்கியவர்

150423135212_srilankawarspinalcordinjury

போரில் முதுகுத் தண்டு வடம் பாதித்தோருக்கு நிதி உதவித் திட்டம்

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/04/150423_srilankawarinjured

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக் கட்டப் போரில், பல ஆயிரக்கணக்கான பணத்தை சேகரித்தவர்கள்...
செய்ய... வேண்டிய, வேலை.
 

சொந்த வேலை செய்யமால், அவர்கள் ஆடும் ஆட்டத்தை கண்கூடாக  காண்கின்றோம்.
 

இவர்களைப் பார்ப்பதால்...  உதவி செய்யும் மனம் வரவில்லை.

Edited by தமிழ் சிறி

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விண்ணப்பப்படிவம் விநியோகம்

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/157911-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.