Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிமைப்படுத்தப்பட்ட இலங்கையை சர்வதேசத்தின் முன் தலைநிமிர வைத்தவர் மைத்திரி

Featured Replies

"சர்வதேசத்தால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கையை முழு உலகமும் மதிக்கும் நிலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுவந்துள்ளார்'' - என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன புகழாரம் சூட்டியுள்ளார். தற்போது இந்த நாட்டில் மன்னன் இல்லை. மக்களை மதிக்கும் மக்கள் தலைவரே இருக்கின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை அரச தாதியர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
"அரச தாதியர் சங்கம் பலமானதொரு தொழிற்சங்கமாகத் திகழ்கின்றது. ஊழல், மோசடி மிக்க ஆட்சியை விரட்டியடிக்கும் போராட்டத்திலும் அது பங்கேற்றது. அதற்கான பலன் இன்று கிடைத்துள்ளது. இந்த நிகழ்வை அலரி மாளிகையில் நடத்துவதற்குக் கிடைத்ததே நல்லாட்சியின் ஓரங்கமாகும்.
 
10 ஆயிரம் சம்பளம் உயர்வுக்கு மேலாக உங்களுக்கு 3 ஆயிரம் ரூபாவும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அப்படியானால், 13 ஆயிரம் ரூபா சம்பள உயர்வை தாதியர்கள் பெற்றுள்ளனர். சிகரெட் பக்கெட்டுகளில் 80 சதவீதம் எச்சரிக்கைப் புகைப்படங்களைப் பொறிக்கவேண்டும் என்ற யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்று சுகாதார அமைச்சராக இருக்கும்போது கொண்டுவந்தபோது கடுமையாகத் திட்டப்பட்டார். புகையிலை நிறுவனங்களின் உறுப்பினர்களின் முன்னிலையில அவரை முன்னாள் ஜனாதிபதி கடுமையாகத் திட்டினார். சிகரெட்டை தடைசெய்தால் எவ்வாறு வெள்ளையர்கள் வருவார்கள் என அவர் கேட்டார்.
 
இது தடையில்லை எச்சரிக்கைப் புகைப்படம் மாத்திரமே என்று நானும் சம்பிக்கவும் சுட்டிக்காட்டினோம். எனினும், நீதிமன்றம் சென்று அதை 60 வீதமாக்கிக் கொண்டனர். ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல் வேலையாக 80 சதவீதம் எச்சரிக்கைப் புகைப்படங்களை சிகரெட் பக்கட்டுகளில் பொறிக்கவேண்டும் என்ற சட்டத்தை நாம் நிறைவேற்றினோம். இழுபறியில் இருந்த மருத்துவச் சட்டமூலத்தையும் நிறைவேற்றினோம். அத்துடன், எமது ஜனாதிபதி பல மாற்றங்களைச் செய்துள்ளார்.
 
தனக்குள்ள அதிகாரங்களையும் அவர் குறைத்துள்ளார். பாப்பரசர் கூட எமது ஜனாதிபதியை எளிமையானவர் என வர்ணித்துள்ளார். எமது ஜனாதிபதியை நாம் பாதுகாக்கவேண்டும் என்பது எம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதற்குச் சமனாகும். இவரை இரண்டாவது பண்டாரநாயக்க என்றுகூட சொல்லலாம். குறிப்பாக, நல்லாட்சியை ஏற்படுத்தி தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கையை முழு உலகமும் மதிக்கும் இடத்துக்கு அவர் கொண்டு வந்துள்ளார்'' - என்றார்.
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.