Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்ணகழ்வில் மூழ்குமா மூதூர் இறால்குழிகிராமம்? – ஒரு பார்வை

Featured Replies

 

orupaarvai31.jpg?resize=620%2C315“எமது கிராமம் நான்கு பக்கமும் நீர்நிலைகளால் சூழப்பட்ட தீவாகும். கிழக்கிலும் மேற்கிலும் மகாவலி கங்கை கிளைகள் பாய்கின்றன. வடக்கில் கடல் உள்ளன. தெற்கில் நன்னி ஆறுகள் களப்புகள் உள்ளன. கடந்த வருடம் இடம் பெற்ற மழை வெள்ளம் காரணமாக நாம் முற்றாக கிராமத்தை விட்டு இடம்பெயர நேர்ந்தது. இதனால் பல பொருளாதார இழப்புக்களும் ஏற்பட்டன எனவே மேலும் இழப்புக்களை எமது பரம்பரைக்கே ஏற்படுத்த வல்ல இந்த மண்ணகழ்வை உடன் நிறுத்துங்கள்“

இது திருகோணமலை மாவட்டம் மூதுார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இரால்குழி மற்றும் நாவலடி கிராமங்களின் மக்களினால் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த புதனன்று மேற்படி கிராமத்தை ஊடறுத்து செல்லும் மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான பாதையான ஏ15 வீதியை இடைமறித்து வாகனங்களை தடை செய்து கடுமையான போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டன. இரால்குழி கிராமத்தின் வரலாற்றில் இவ்வாறான போராட்டம் நடாத்தப்பட்டது. இதுவே முதல்முறையாகும். மேற்படி இரு கிராமங்களின் அனைத்து மக்களும் ஆண் பெண்கள் என வீதியில் குமிந்து கொட்டும் வெயிலையும் பொருட்படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் பிற்பகல் 2.00 மணிவரை தொடர்ந்தது. ”எமது கிராமத்தை அத்திபட்டியாக்காதே”, ”உடனடியாக மண்ணகழ்வை நிறுத்தி எமது எதிர்காலத்தை உறுதி செய்”, இதற்கு ”துணைநிற்கும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் நாம் கண்டிக்கின்றோம்” போன்ற வாசகங்களை ஏந்தியிருந்தனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட கிராமவாசி குறிப்பிடுகையில், கடந்த ஆட்சியில் எமது கிராமத்தின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள கங்கையில் மண்ணகழ மூவருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மூதூர் நகரத்தைச் சார்ந்தவர்களாகும். அவர்கள் குறித்த கங்கையில் மண்ணை படகுகள் மூலம் அள்ளிக் கொண்டு வந்து பிரதான வீதியோரத்தில் பறித்து விற்பனை செய்கின்றனர்.

அவர்களது படகு எமது நன்னி ஆற்றின் ஊடாக நாளொன்றுக்கு, நூற்றுக்கணக்கான முறை பயணிக்கின்றன. ஒருவருக்கு 15 படகு என மூவருக்கும் 45 படகுகள் இந்த ஆற்றில் பலமுறை பயணிக்கின்றன. இதனால் இந்த ஆற்றின் மூலம் கிடைக்கும் ஜீவனோபாயமான மீன்பிடி மற்றும் மீன்வளம் பாதிக்கின்றன. இதனால் நாம் எதிர்ப்பை வெளியிட்டு வந்தோம். எமது தொடர் எதிர்ப்பால் இந்த படகு எண்ணிக்கை கடந்த வாரத்தில் இருந்து 15 ஆக மாற்றப்பட்டுள்ளன. ஆனால் மண்ணகழ்வு நிறுத்தப்படவில்லை.

மகாவலிகங்கையின் வெள்ளத்தாக்கமுள்ள பகுதி

மகாவலி கங்கைகள் சிவனொளிபாதமலையில் இருந்து ஆரம்பித்து எமது கிராமத்தின் இருமருங்கிலும் ஊடறுத்தே கடலைச் சங்கமிக்கின்றன. ஏலவே மகாவலி கங்கையின் பொலநறுவை, அல்லைப்பகுதி என பல பகுதிகளிலும் பாரியளவில் மண்ணகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதனால் நீரின் ஓட்டம் கங்கையில் மாறுபடுகின்றன.

ralkuli44.jpg?resize=620%2C372மலையகத்தில் மழை பெய்தாலும் பொலநறுவை போன்ற மாவட்டங்களில் மழை பெய்தாலும் ஏற்படும் வெள்ள நீரை எதிர் கொள்ளும் இறுதி கிராமம் எமது கிராமமாகும். இந்நிலமைகளால் ஒரு கிலோமீற்றர் இடைவெளியில் எமது இருகிராமத்திலும் பாயும் கங்கைகிளையின் அகலம் வருடா வருடம் மண்ணரிப்பால் அதிகரித்தே வருகின்றன.

”பாக்கு வெட்டியில் மாட்டிய பாக்கு போன்று எமது கிராமம் உள்ளன”.

கடந்த 30 வருடமாக இடம்பெற்ற யுத்த நிலமையால் நாம் முடக்கப்பட்டு கிடந்த தமிழ் கிராமத்தவர்கள் என்ற வகையில் நீண்ட துன்பத்தில் இருந்தோம். இது கட்டுப்பாடற்ற பகுதியாக முன்னர் கருதப்பட்டன. இந்நிலையில் இருந்த நாம் இப்போ பெருமூச்சு விடும் நிலையில், கிராமத்தின் வளங்கள் அழிப்பும், மண்ணகழ்வும் சில வருடங்களில் தீவான எமது கிராமத்தை அடையாளமில்லாமல் அளிக்கப்போகின்றன. இவற்றிக்காக நாம் மீண்டும் போராடும் நிலமைக்ககுள்ளாகியுள்ளது. வேதனையான விடயமாகவுள்ளது என விபரித்தார்.

இதைபற்றி பல முறை பலருக்கும் தெரியப்படுத்தியும் பல அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் மண்ணகழ அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் வழங்கி அனுமதிக்கும் அதிகமாக ஆட்களையும் படகுகளையும் ஈடுபடுத்தி மூன்று பிரிவாக மண்ணை அகழ்ந்து வருகின்றனர்

கிராமத்தின் தென் எல்லையில் இவ்வாறு அகளும் போது எற்படும் பாரிய குழி மற்றும் வெற்றிடம் காரணமாக வரும் வெள்ள நீர் கிராமத்தையே பூண்டோடு பிடுங்கிச் செல்லவும் வாய்ப்புள்ளன. ஏனெனில் அவ்வாறான பாரிய வெள்ளம் இங்கு ஏற்படுவது வழமை. நாட்டின் பெரும் பகுதி நீர் கடக்கும் பாதை இதுவாகவுள்ளன. கடலை சேருமிடமாகவுள்ளன. கடந்த வருட வெள்ளம் காரணமாக இக்கிராமத்தை பரவி பாய்ந்த வெள்ளம் காரணமாக பிரதான ஏ15 கிழக்கு வீதிப்போக்குவரத்தே தடைப்பட்டன.

பொலிசாரே போக்குவரத்திற்கு அனுமதி மறுத்த நிலமையும் ஏற்பட்டன. இந்நிகழ்வு இடம்பெற்று சிலமாதங்களே சென்றுள்ளன. எனவே தான் இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. மண்ணகழ்வு செய்பவர்கள் காசுக்காக சிந்திப்பார்களே தவிர எமது கிராமம், மக்கள் தொழில், பற்றி சிந்திக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இக்கிராமத்தைச் சார்ந்தவர்கள் அல்ல மட்டுமன்றி மண்ணை இங்கு மட்டுமன்றி பல வெளியிடங்களுக்கும் அனுப்புகின்றனர். இது இரவு பகலாக நடக்கின்றன. மண்ணகழ்வு செய்பவர்களுடன் தனிப்பட்ட தகராறு எமக்கில்லை. எமது கிராமம் மக்கள் தொழில்களான விவசாயம் மீன் பிடி என்பன பதிக்கப்பட்ட வண்ணமுள்ளன. எதிர்காலத்தில் பெரும் சூழல் பாதிப்பு மேலும் கூடப்போகின்றன.

ஏலவே சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளன

கிணறுகளில் உப்பு நீர் வந்த வண்ணமுள்ளன. நாலாபக்கமும் மண்ணரிப்பு ஏற்பட்ட வண்ணமுள்ளன. தொடர்ந்தால் இவை மேலும் தொடரவுள்ளன. இதுவே எமது கவலையாகும். இதனை நேரில் வந்து பார்ப்பவர்கள் உடன் விளங்கி கொள்வார்கள் எனவும் விபரிக்கின்றனர்.

மண்ணகழ்வில் ஈடுபடும் வியாபாரி குறிப்பிடுகையில் முறையாக நாம் அனுமதியை பெற்றே இந்த மண்ணகழ்வை மேற்கொள்கின்றோம். எனக்கு மாதமொன்றிற்கு 100 கியுயூப் மண்ணகழ அனுமதியுள்ளது. 5 படகுகள் மூலம் மண்ணை அகழ்ந்து இங்கு கரைக்கு கொண்டு வந்தே விற்கின்றோம். என்னிடம் 25 பேர் தொழில் செய்கின்றனர். இவ்வாறே மேலும் இருவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் பொறாமையில் இவ்வாறு எதிர்கின்றனர். ஒரு வருடமாக இத்தொழிலை நாம் செய்து வருகின்றோம்.அருகில் இருந்த இஸ்லாமிய நண்பரொருவரிடம் நாங்கள் முஸ்லீம்கள் என்பதனால்தான் இவர்கள் எதிர்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

ralkuli11.jpg?resize=620%2C413இவ்விடயம் பற்றி இரால்குழி கிராம உறுப்பினர் ஒருவரிடம் கேட்டவேளை நாங்கள் முஸ்லீம்கள் என்பதற்காக எதிர்ப்பதாக இருந்தால் எமது தோட்ட உற்பத்திகளில் இருந்து மீன் விற்பனையிலிருந்து சகலதும் மூதுார் சந்தையையே நம்பிதான் உள்ளது. ஊருக்குள் நடமாடும் வியாபரத்தில் கிண்ணியா, மூதுார் நகரத்தைச்சார்ந்த இஸ்லாமிய நண்பர்கள் நுாற்றுக்கணக்கில் வந்து செல்கின்றனர். இந்த விடயத்தில் மட்டும் எப்படி முஸ்லீம்கள் தமிழர்கள் என நாம் பார்க்க முடியும் இதுவெல்லாம் சுயநலமான சிந்தனை என கவலையுடன் குறிப்பிட்ட அவர் ”தலையிடியும் காய்ச்சலும் அவரவர்களுக்கு வந்தால் தான் புரியும்”. நாங்களும் முஸ்லீம் மக்களும் தொழில் தொடர்பு ரீதியாக பிரிக்க முடியாதவர்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

மண்ணகழ்விற்கு பொருத்தமற்ற இடம்

இவ்விடயம் பற்றி முன்னாள் கிழக்குமாகாண காணி ஆணையாளரும் காணி பற்றிய சட்ட அறிஞருமான க.குருநாதனிடம் கேட்டவேளை, இரால்குழி பிரதேசம் எனக்கு நன்கு அறிந்த இடம். இது மண்ணகழ்விற்கு எந்த வகையிலும் பொருத்தமான இடமில்லை. விவசாயம் மீன்பிடி தொழிலைக் கொண்ட இந்த மக்களில் தொழில் பாதிக்கும். பாரிய மண்ணரிப்பு எற்படும்.

இவ்வாறே கடந்த ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் பாரிய வளங்களை வடக்கு கிழக்கில் சட்டம் மற்றும் சூழல்பற்றிய சிந்தனைகளை புறம்தள்ளி மோசடியாக விற்பனை செயது வந்தனர். வடக்கின் வளங்கள் தெற்கின் வசந்தங்களாக” மாற்றப்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ்ப்பாணம் காங்கேசன்துறைப்பகுதியில் சுண்ணக்கல்லை அகழ்ந்து கப்பல்கள்மூலம் தென்பகுதிக்கு கொண்டு சென்றனர். எந்த சட்ட ஒழுங்கும் பின்பற்றவில்லை. இது மாபெரும் ஊழல் நடவடிக்கை. மட்டுமன்றி மன்னாரில் மடு முள்ளிக்குளம் மற்றும் கல்லாறு போன்ற இடங்களில் கடந்த ஆட்சிக்காலத்தில் அரசியல்வாதிகள் தமது ஆதரவாளர்களை வைத்து பாரிய மண்ணகழ்வை செய்துள்ளனர். சில இடங்களில் இந்த ஆட்சியிலும் தொடருகின்றன.

கடந்த வாரம் மூல்லைதீவிலும் மக்கள் போரட்டங்கள் மூலம் மண்ணகழ்வின் பாதிப்பை வெளிப்படுத்தி நின்றனர்.

அந்த அடிப்படையில் இரால்குழி மண்ணகழ்வும் சில அரசியல் சக்திகளின் ஆதரவுடன் சுயநல நோக்காக அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளனவா? என்பது பற்றி . ஆழமாக ஆராயப்பட வேண்டும் இவை கூட இவ்வாட்சியிலும் தொடரலாம்?..

புவிசரிதவியல் சட்டதிருத்தம் இலக்கம் 660/1999 இன்படி மண்ணகழ்விற்கான இடங்கள் எவை என அரசாங்கத்தினால் வரையறை செய்யப்பட்டுள்ளன. நாட்டில் எங்கெங்கு மண் எடுக்கலாம் என்பது பற்றிய விவரணம் உள்ளன.

மண்ணகழ்விற்கு அனுமதி வழங்கும்போது அரச அதிபரின் தலமையில்உள்ள மாவட்ட புவிசரிதவியல் சூழுல் பாதுகாப்புக்குழு, காணிவள மாவட்டக்குழு போன்ற பல குழுக்களினது ஆராய்வு சிபார்சின் அடிப்படையிலேய மண்ணகழ அனுமதி வழங்க முடியும். அந்தக்குழுக்கள் அரசியல்வாதிகளின் கைபொம்மையாக இருந்தால் இவ்வாறு வளங்கள் அழிவுக்கு சந்தர்ப்பம் ஏற்படலாம். புதிய ஆட்சியில் இவை மீளமைக்கப்பட வேண்டும்.

மட்டுமன்றி இது நன்னீர் களப்புமீன்பிடி விவசாயம் தொழில் சம்பந்தப்பட்ட இடங்கள் வளங்கள் உள்ள பகுதியாகையால் அவ்வப்பகுதியின் கரிசனையும் எடுக்கப்பட வேண்டும் . அவ்வாறில்லாமல் அரசியல்வாதிகள் தமது சுயலாபங்களுக்காக கடந்த ஆட்சியில் செய்த விடயங்ளே இவை . இவை சரியாக ஆராயப்பட வேண்டும் விசாரிக்கப்பட வேண்டும்

சட்டரீதியான ஒழுங்கு பின்பற்றப்பட்டனவா?

மண்ணகழ்வை பொறுத்தவரை சட்ட ரீதியாக ஒரு பிரதேச செயலாளருக்கு 35 கீயுப்கள் மாதமொன்றிக்கு ஒருபிரிவில் அனுமதி வழங்க முடியும் .அதுவும் வீட்டு உள்ளுர் தேவைக்காக மட்டுமே வழங்கலாம். ஆனால் இம்மண்ணகழ்வு மூலம் பெறப்படும் மண் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல பகுதிகளுக்கு் சட்டரீதியாகவும் முறைகேடாகவும் போலிப்பத்திரங்களைப் பபயன்படுத்தியும் விற்க்கப்படுகின்றன.

ralkuli55.jpg?resize=620%2C372இங்கு மூன்று முதலாளிகள் மாதமொன்றிற்கு 300 கீயுப் எப்படி அனுமதி பெற்றார்கள் என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகவுள்ளன? எனவும் விபரித்தார்.

அண்மைய காலமாக தென்பகுதியில் ஊழல்கள் பற்றிய வழக்குகள், செய்திகள் வாசிக்க நேரம்போதாத கதைகளாக மாறியுள்ளன. அமைச்சர்கள் அதிகாரிகள் என பலரும் சட்டப்பிடிக்குள் சென்ற வண்ணமுள்ளனர். இவ்வாறானதொரு பிரிவினரால் செய்யப்பட்ட ஆட்சியில் அடக்குமுறைக்குள் இருந்த வடகிழக்கில் எவ்வாறான நிர்வாகம் இடம் பெற்றிருக்கும்.? என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

இராணுவ ,அரசியல் அழுத்தங்கள் காரணமாக பாரிய வளங்கள், காணிகள் அபகரிப்பு என்பன தங்குதடையின்றி இடம்பெற்றமைக்கான ஆதாரங்களும் பிரச்சனைகளும் புதிய ஆட்சியில் இன்னும் சரியாக ஆராயப்படவில்லை. பெரியளவிலும் அரசியல் ரீதியானதுமான பிரச்சனைகளே முதன்முதலில் கையாளப்பட் வண்ணமுள்ளன. அவை அதிகமாகவுள்ளதால் அரசு தள்ளாடும் நிலமையும் உள்ளன. ஆனாலும் இங்கு ஆராயப்படும் ஊழகள் பற்றிய தொடர்பானவர்களின் கூட்டாளிகளாகவும் பங்குதாரர்களாவும் பலர் வடகிழக்கில் செயற்பட்டுள்ளனர்.

இன்னும் கடமையிலும் உள்ளனர். இவை தொடர்பானவை பற்றிய ஊழல்கள் விசாரிக்கப்படுமா?என்பது கேள்வியாகவே உள்ளன. ஏனெனில் ஊழல்கள் பற்றி பட்டியலில் அரசு கின்னஸ் சாதனையை எட்டிவிடும் என்ற பயமும் உள்ளது. மற்றும் வடகிழக்குபகுதி சிறுபான்மையினர் வாழும் பகுதி என்பதனால் ஊழலிலும் இரண்டாம் தரப்பாகவே ஆராயப்படுமோ? என்னவோ எனவும் சிலர் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர். எது எப்படி இருந்தாலும் தப்பிக்கிடக்கும் வளங்களையும் அழிக்க முடியாது. எமது எதிர்காலம் என்னவாவது என்றகேள்வியை பாதிப்பு பற்றி சிந்திக்கும் மக்கள் கேட்பது தவிர்க்கமுடியாதது. எனவே ஒட்டு மொத்த மக்களின் போராட்டமாக மாறியுள்ள இரால்குழி மக்களின் கோரிக்கையை தட்டிக்கழிக்க முடியாது?

தமிழ்லீடருக்காக……

பொன். சற்சிவானந்தம்

http://tamilleader.com/?p=48761

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.