Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீதான தடையுறுத்தரவு நீக்கப்பட்டது!

Featured Replies

bbdcd49acc4ef5c8faebe21d3a8c9d84_L.jpg
 
சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட காணி சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதித்திருந்த இடைக்கால தடையுறத்தரவை உயர் நீதிமன்றம் இன்று நீக்கியது.
 
சம்பூரிலுள்ள குறித்த காணிகள் தொடர்பில் ஏற்கன வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து, அங்கு முகாம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாத முற்பகுதியில் இணக்கம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
 
இந்த நிலையில் குறித்த காணியில் முதலீடு செய்யதற்கு எதிர்பார்த்திருக்கும் முதலீட்டு ஊக்குவிப்புச் சபை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுறுத்தரவைப் பிறப்பித்தது.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த தடையுறத்தரவு நீக்கப்பட்டது.
 
முன்னாள் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல்
 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் 2012.05.17ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி சம்பூர் பிரதேசத்திலுள்ள 818 ஏக்கர் காணி கைத்தொழில் ஊக்குவிப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அந்த காணிகள் முதலீட்டு ஊக்குவிப்பு சபையிடம் கையளிக்கப்படுகின்றது என 2012.07.19 என்று திகதியிடப்பட்ட மற்றுமோர் வர்த்தமானி பிரகடனத்தில் தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த நிலையில், இம்மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மகிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டிருந்த குறித்த காணி சுவீகரிப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் தொடர்பான இரு வர்த்தமானி பிரகடனங்களும் ரத்து செய்யப்பட்டன.
 
தடையுத்தரவு நீக்கப்பட்டாலும் மாற்றம் செய்ய முடியாது!
 
இந்த மனு பிரதம நீதியரசர் முன்னிலையில் இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்ய பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு நீதிமன்றம் நீக்கியது.
 
குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி ஒத்திவைத்த பிரதம நீதியரசர், தடையுத்தரவு நீக்கப்பட்டாலும் குறித்த காணிகளில் தற்போதுள்ள நிலைமையில் எவ்வித மாற்றமும் செய்யப்படக்கூடாது என அறிவித்தார்.
 
அத்துடன், குறித்த காணிகள் சம்பந்தமாக 2012ஆம் ஆண்டு பிரதேச மக்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும், முதலீட்டு ஊக்குவிப்பு சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் ஒரே தினத்தில் விசாரணைக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
 
இன்றைய வழக்கு விசாரணைகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இந்த வழக்கு விசாரணையில் முன்னிலையாகியிருந்தார். கூட்டமைப்பின் இரா.சம்பந்தனும் நீதிமன்றம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.