Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு தேசம் ஒரு நாடு: விவாதம் தந்த சில கேள்விகள் சாந்தி சச்சிதானந்தம்

Featured Replies

sumanthiran%20&%20gajenthiran_CI.jpg

கடந்த மேமாதம் 15ம் திகதி யாழில் ஓர் சுவாரசியமான கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் ததேகூ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் இடையேயான விவாதமே அதுவாகும். ஈழமக்கள் ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் தவராஜா உள்ளிட்ட யாழில் இயங்கும் பல அரசியல் பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.

எதிர்பார்த்தது போலவே அவ் விவாதமும் “இரு தேசம் ஒரு நாடு” என ததேமமு இன் நிலைப்பாடு ஒரு பக்கமாகவும “அதிகாரப்பகிர்வு”; என ததேகூ இன் நிpலைப்பாடு மறுபுறமாகவும் இந்த சித்தாந்தங்களை (அப்படி இவற்றை அழைக்கலாமோ?) மையமாக வைத்து நடத்தப்பட்டது. தாமும் இரு தேசம் ஒரு நாடு கொள்கையின் அடிப்படையில்தான் செயற்படுகின்றார்கள் எனினும் அணுகுமுறைதான் வேறு என சுமந்திரன் விளக்கினார். இரு தேசம் என்பதனால்தான் எங்கள் தேசத்துக்கு அதிகாரப்பகிர்வினைக் கோருகின்றோம் என்பது அவரது வாதமாக இருந்தது. கஜேந்திரகுமார் அவர்களின் வாதமோ, என்ன பேரம் பேசுதலும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உதிமையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் அதனை வைத்துக்கொண்டே சர்வதேச சமூகத்துடன் நாம் கலந்துரையாடவேண்டும் என்றுமாக இருந்தது.

இதற்குள் பார்வையாளர்களிடமிருந்து ஒரு ஆதங்கம் வெளிக்கிளம்பியது. “முன்னோக்கிய பாதை எது” என்பதே கூட்டத்தின் தலைப்பு. ஆனால் இரு பேச்சாளர்களும் நடந்து போன வரலாற்றையே பேசிக்கொண்டிருக்கின்றனரே என்பதுதான் அந்த ஆதங்கமாக இருந்தது. அதற்கு கஜேந்திரகுமார் பதிலிறுக்கையில், இன்று தென்னாசியப் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்த நினைக்கும் நாடு ஒவ்வொன்றும் தமிழர் பிரச்சினையை மையமாக வைத்தே ஸ்ரீலங்கா அரசின் கையை முறுக்குகின்றன எனவே இந்த கோள அரசியலை புரிந்து கொண்டு இரு தேசம் ஒரு நாடு என்கின்ற சித்தாந்தினை வலியுறுத்தித் தீர்வைப் பெற வேண்டும் என்பதே தனது முன்னோக்கிய பாதை என்றார். சுமந்திரனேனா, ஆட்சி மாற்றம் நடைபெற்றிருக்கின்றது, நாம் உணர்ச்சிவசப்படாமல் ஒரு அணுகுமுறையைக் கைக்கொண்டிருக்கின்றோம், பாருங்கள் இன்னும் சில வருடங்களில் எமது முறைதான் வெற்றறியடையப் பார்ப்பீர்கள் என்றார். மொத்தத்தில் முன்னோக்கிய பாதை பற்றி இருவருக்கும் தெளிவிருப்பதாக எமக்குத் தெரியவில்லை.

முதலில் திரு கஜேந்திரகுமாரின் விளக்கங்களை நாம் எடுத்துக்கொள்வோம். அந்தக் காலத்தில் எனது தகப்பனார் சமசமாஜ ஆதரவாளராக இருந்ததனால் தமிழரசுக் கட்சியின் அரசியலை எந்நேரமும் கேலி செய்வதுதான் அவருடைய வேலை. அக்கட்சியின் அரசியலை நடிகை வைஜயந்திமாலாவைத் திருமணம் செய்ய விரும்புகின்ற ஒருவனுடைய பேச்சுடன் ஒப்பிடுவார். “நான் வைஜயந்திமாலாவை திருமணம் செய்வது ஐம்பது வீதம் உறுதியாகி விட்டது. எப்படி? எனக்கு விருப்பம், இனி அவ தன்னுடைய விருப்பத்தைச் சொன்னால் சரி”. தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகளும் அப்படித்தான் என்பார் அப்பா. அதே போலத்தான் இந்த இரு தேசம் ஒரு நாடு என்கின்ற கோசமும். நாம் சொல்லியாயிற்று. இனி அதனை சிங்கள தேசமும் சர்வதேசமும் அங்கீகரிக்க வேண்டுமே. கோள அரசியலில் இதுவரைகாலமும் வல்லரசுகளுக்கு சாதகமான நிலைமை ஒன்றிற்கு மட்டுமே அவை தேசியங்களின் சுயநிர்ணய உரிமையினை ஆதரித்திருக்கின்றன என்னும் யதார்த்தத்தினையே நாம் கண்டிருக்கின்றோம். துரதிர்ஸ்டவசமாக இலங்கை அவ்வகையான நலன்களுக்குள் அடங்கவில்லை. ஸ்ரீலங்கா அரசின் கையை முறுக்க வேண்டுமாயின், போர்க்குற்ற விசாரணை, நல்லிணக்கம், தற்போதிருக்கும் அரசியல் கட்டமைப்பிற்குள் பொருந்தக்கூடிய அதிகாரப்பகிர்வு இவற்றைத்தான் சர்வதேச சமூகம் தூக்கியிருக்கின்றது. மேற்குலகத் தலைவர்கள் திரும்பத் திரும்ப மனித உரிமைகள் என்பதைப்பற்றி வலியுறுத்துவதும் அதனாலேயே. அரசியல் சுயநிர்ணயம் என அவர்கள்  பேசுவதில்லையே. அத்துடன் இந்தியா இருக்கும்வரை, கா~;மீர் பிரச்சினை இருக்கும் வரை இந்தக் கதையை எடுப்பதே பிரச்சினைக்குரிய விடயமாகும். கோள அரசியலின் காரணிகளைப் பயன்படுத்தி எவ்வாறு இரு தேசம் ஒரு நாடு என்கின்ற கொள்கைப் பிரகடனத்தை முன்னோக்கித் தள்ளலாம் என்கின்ற ஒரு மூலோபாயமும் த.தே.ம.மு இடமிருந்து வரவில்லை.

அடுத்ததாக, இரு தேசம் என்று நாம் கூறும்போது ஒன்று சிங்கள தேசம், மற்றையது தமிழ் பேசும் தேசமாகிய வட கிழக்கு மாகாணம் என்றுதான் நாம் எடுத்துக்கொள்கின்றோம். இதுதான் எங்கள் தேசம் என்றால் இங்கு கிழக்கில் தமிழ் மக்களினை விட அதிக மக்கள் தொகையைக்கொண்டு காணப்படும் முஸ்லிம் மக்களிடம் அவர்களும் இந்த இரு தேசம் ஒரு நாடு என்கின்ற கொள்ளையை ஆதரிக்கின்றனரா எனக் கேட்க வேண்டுமல்லவா? அப்படி அவர்களின் அரசியல் தலைமைகளுடனும் சமூகத் தலைவர்களுடனும் கலந்துரையாடப்பட்டதா? ஏனெனில் அவர்களின் அங்கீகாரமின்றி நாம் அவர்கள் சார்பில் பேச முடியாதே. இதற்கு த.தே.மமுயின் பதில் இல்லை என்றால், அவர்கள் கூறும் ஒரு தேசம் வடமாகாணமாக மட்டும்தான் இருக்க முடியும். அப்படியானால் கிழக்கு வாழ் தமி;ழ் மக்களின் நிலைமை என்ன? இதற்கான தீர்வுகளைத் தராது வெறுமனே இரு தேசம் ஒரு நாடு என மெல்லுகிறது த.தே.ம.மு.

மூன்றாவதாக, இதன் நடைமுறைச்சாத்தியம் பற்றிச் சிந்திக்க வேண்டியதாக இரக்கின்றது. சர்வதேச சமூகம் இரு தேசம் ஒரு நாட்டை அங்கீகரித்து அதற்காக ஸ்ரீலங்கா அரசுடன் பொருதுகிறது என கற்பனையில் வைத்துக்கொள்வோம். அதனை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளாமலிருந்தால் அது அங்கு என்னதான் செய்யமுடியும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோவின் படைகள் கொண்டே அங்கு நாடுகள் பிரிக்கப்பட்டன. அவ்வகையான இராணுவ அழுத்தச் சக்தியினை இந்தியா இருக்கத் தக்கதாக எந்த நாடும் இங்கு கொண்டு வர முடியுமா? இந்த அரசியலைப் பற்றியோ அல்லது அதற்கான வாய்ப்புக்களைப் பற்றியோ எங்குமே பேச்சில்லை. எங்கு சுற்றி ஓடினாலும் கடைசியில் தென்னிலங்கையின் ஒத்துழைப்புடன்தான் அரசியல் தீர்வினை நாம் பெறலாம். அந்த ஒத்துழைப்பினைப் பெறுவதற்கு என்ன மூலோபாயம் தம் வசம் இருக்கின்றுது என எங்கும் கூறப்படவில்லை. அவ்வாறு சிங்கள மக்கள் ஒத்துழைக்க மாட்டார்கள் என நாம் நம்பினால் பேரம் பேசுதலில் அவர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கக்கூடிய அவர்களுக்கு நட்டம் ஏற்படுத்தக்கூடிய என்ன துருப்புச் சீட்டு இவர்கள் வசம் இருக்கின்றது? Unless they are forced to pay a price they will never concede முன்பு ஆயுதம் இருந்தது? இப்பொழுது? தமிழ் மக்கள் வசமிருக்கின்ற துருப்புச் சீட்டு எது என்பதனையும் கூறவில்லை. இந்த இரு நாடு ஒரு தேசம் என்னும் கோ~ம் ஏதோ பெரிய உரிமைவாதம் போல மக்களை திசை திருப்பும் செயலாகத்தான் இப்பொழுது முடிகிறது.   

இந்த யதார்த்தங்களைப் புரிந்து கொண்டுதானோ என்னவோ ததேகூ மென்மையான அணுகுமுறையைக் கையாண்டு இந்த அரசாங்கத்தடன் தொடர்புநிலையில் இருக்கின்றது என நினைக்கின்றேன்.  முரண்பாடுகள் உருவாவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒவ்வொரு நிலைப்பாட்டில் நிற்பதுதான் காரணம் எனக் கருதப்படுகின்றது. ஆனால் அந்த ஒவ்வொரு நிலைப்பாட்டின் பின்னணியிலும் தொக்கி நிற்கும் நலன்கனைப் பற்றிப் பேசினால் முரண்பாடுகளைத் தீர்க்கும் வழி பிறக்கும் எனக் கூறுகின்றனர். உதாரணமாக இரு தேசம் ஒரு நாடு என்பது ஒரு நிலைப்பாடு மட்டுமே. அது ஒரு கோ~மாகும். அதைச் சொல்ல நாங்கள் வாயைத் திறந்தவுடனேயே சிங்கள தீவிரவாதம் கண் விழித்தக்கொள்ளும். அதற்குப் பிறகு அங்கு அறிவு பேசாது உணர்ச்சி வேகங்கள்தான் பேசும். மாறாக, அதனையே அக்கோரிக்கைக்குப் பின்னாலிருக்கும் நலன்களைக் குறித்து, தமிழ் மக்கள் தமது நிலம், வளங்கள் மற்றும் அவற்றைக்கட்டுப்படுத்துவதற்கான அரசியல் கட்டமைப்புக்கள் அனைத்தையும் தமது மேலாண்மையில் வைத்தால்தானே அந்த மக்களின் அபிவிருத்திக்கான உரிமையை நாம் செயற்படுத்தலாம் எனக் கேள்வியைத் திருப்பிப் போட்டோமென்றால், அதைச் செய்ய விடமாட்டோம் என எவரும் கூறுவது கடினம். அதற்குப் பின்பு எந்த வளம், எந்த அரசியல் கட்டமைப்பு என பேச்சுவார்த்தைகளை நீட்டலாம். இந்த விடயத்தைத்தான்  திரு சுமந்திரன் அவர்கள் தாம் அதே கொள்கையின் கிழ் அதிகாரப்பகிர்வினைக் கோருகின்றோம் எனக் கூறினார் போலும்.

ஆயினும், த.தே.கூ சொல்லுகின்ற அதிகாரப்பரவாக்கல் எது வரையில் என்பது தமிழ் மக்களுக்குத் தெளிவாக இதுவரை விளக்கப்படவில்லை. இடையிடையே 13ந்திருத்தச் சட்டத்தைப் பற்றியும் பேசுகிறார்கள். பின்பு ஒரு அதிகாரப்பகிர்வு பற்றியும் பேசுகின்றனர். நாம் தமிழ் மக்கள் விரும்பும் சம~;டி அரசுக்கான ஒரு நகலையும் இதுவரை தெளிவாக மக்கள் முன் வைத்தது கிடையாது. இவர்கள் கோருபவற்றை அரசாங்கம் தராவிடில் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்யவும் தயாராக இருப்பதாக அவர்களுடைய செயற்பாடுகள் காட்டுகின்றன. எமது அரசியல் கோரி;க்கைகளில் எதனை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கின்றோம் என்பது தீர்மானமாகி விட்டதா?  மே 18இனை பரிவினைவாதத்திற்கெதிரான நாள் என அரசாங்கம் பிரகடனம் செய்தால் அதனை தாம் ஆதரிப்பதாக திரு சம்பந்தன் அவர்கள் அறிக்கை விடுகின்றார். அவ்வாறாயின் தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத்தினை மறுத்து சிங்களத் தலைவர்களுடன் ஒட்டி உறவாடிப் பெற்றுக் கொள்ள முடிவதைப் பெற்றுக் கொள்வதா இவர்களுடைய மூலோபாயம்? அதற்காக சிங்கள மக்கள் மத்தியில் இவர்களின் வேலைத்திட்டங்கள் என்ன? அதனைத் தயவு செய்து விளக்குவார்களா?

ஒரு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் கோரிக்கைகள் வெறுமனே அம்மக்களின் தலைவர்களினால் மட்டும் கேட்டுப் பெற்றுக்கொள்கின்றதொரு விடயமல்ல. அனைத்து மக்களும் பங்களிக்கும் ஓர் திட்டமிடப்பட்ட போராட்டத்தின் மூலமாகவே எங்கும் உரிமைகள் பெறப்பட்டிருக்கின்றன. அதனை செயற்படுத்துவதற்கு மக்கள் வலுவூட்டப்படவேண்டும். எங்கள் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்டு மனமுடைந்து பொருளாதாரப் பாதிப்பினில் வாழும் மக்கள் மத்தியில் எழுச்சி உண்டாக்குவதற்கான அபிவிருத்திச் செயற்திட்டங்களை அமுல்படுத்துவதும் இந்த அரசியல் முறைவழியின் ஓரம்சமே. அநாதரவாக இருக்கும் முன்னாள் போராளிகள், குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மீன்பிடித்தொழிலாளிகள்  போன்ற சமூகக்குழுக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் என்ன வைத்திருக்கின்றனர் என்பது பற்றியும் இரு பக்கத்திடமிருந்தும் ஒரு பேச்சுமில்லை. 

அன்று நடந்த விவாதம் ஓர் ஆரோக்கியமான ஆரம்பமாகும். இவை போன்ற நிகழ்வுகள் தொடரவேண்டும். அப்போதுதான் பொது மக்களும் மெல்ல கேள்விகளை எழுப்பும் நிலைக்கு வருவர். அவர்கள் கேள்விகளை எழுப்பும்போதுதான் எமது அரசியல் தலைவர்களினதும் பார்வைகளும் பாதைகளும் தெளிவாகும். 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119977/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.