Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இளைஞர்கள் கடத்தலுடன் கடற்படையினருக்குத் தொடர்பு – நீதிமன்றத்தில் சிஐடி அறிக்கை

Featured Replies

தமிழ் இளைஞர்கள் கடத்தலுடன் கடற்படையினருக்குத் தொடர்பு – நீதிமன்றத்தில் சிஐடி அறிக்கை JUN 04, 2015 | 0:57by புதினப்பணிமனைin செய்திகள்

srilanka-navy-300x198.jpgகொழும்பில் 2008ம் ஆண்டு, ஐந்து தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் சிலர் தொடர்புபட்டுள்ளதாக, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

கடத்தப்பட்டு காணாமல்போன இளைஞர்கள் தொடர்பான வழக்கின் விசாரணை நேற்று நடந்தபோது சாட்சியமளித்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொறுப்பதிகாரி ரஞ்சித் முனசிங்க, சம்பந்தப்பட்ட இளைஞர்களின் கடத்தல்களுடன் சுமித் ரணசிங்க மற்றும் சந்தன குமார ஆகிய கற்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக தான் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்ததாகக் கூறினார்.

இதுதொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால் அவர்களைக் கைது செய்யவில்லை என்று கூறிய ரஞ்சித் முனசிங்க,  அவர்களின் வெளிநாட்டு பயணங்களைத் தடைசெய்யும் உத்தரவொன்றை நீதிமன்றத்திடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இவர்கள் இருவர் தவிர சம்பத் முனசிங்க எனும் மேலும் ஒரு கடற்படை அதிகாரியும் இந்த கடத்தல்களில் சம்பந்தப்பட்டுள்ளதை தான் மேற்கொண்ட விசாரணைகளின்போது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொறுப்பதிகாரி ரஞ்சித் முனசிங்க கூறினார்.

மேலும் மூன்றாவது சந்தேகநபருக்கு கடந்த காலத்தில் கொட்டாஞ்சேனை பகுதியில் நிகழ்ந்த கடத்தல் சம்பவங்களுடனும் தொடர்பிருப்பதாக தமது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும் ரஞ்சித் முனசிங்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் 23ஆம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2015/06/04/news/6742

 

150113103816_srilankapopemissing_624x351

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டம் (ஆவணப்படம்)
 
கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஐந்து தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்துடன் இலங்கைக் கடற்படை அதிகாரிகள் சிலர் சம்பந்தப்பட்டுள்ளதாக இலங்கைக் காவல்துறையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 
காணாமல்போனோர் தொடர்பான வழக்கின் விசாரணை புதனன்று நடந்தபோது சாட்சியமளித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ரஞ்சித் முனசிங்க, சம்பந்தப்பட்ட இளைஞர்களின் கடத்தல்களுடன் சுமித் ரணசிங்க மற்றும் சந்தன குமார ஆகிய இலங்கை கற்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக தான் மேற்கொண்ட விசாரணைகளின்போது தெரியவந்ததாகக் கூறினார்.
 
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்கொண்டு செல்லப்படுகின்ற காரணத்தினால் அவர்களைக் கைது செய்யவில்லை என்று கூறிய பொறுப்பதிகாரி, ஆனால் அவர்களின் வெளிநாட்டு பயணங்களைத் தடைசெய்யும் உத்தரவொன்றை நீதிமன்றத்திடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
இவர்கள் இருவர் தவிர சம்பத் முனசிங்க எனும் மேலும் ஒரு கடற்படை அதிகாரியும் இந்த கடத்தல்களில் சம்பந்தப்பட்டுள்ளதை தான் மேற்கொண்ட விசாரணைகளின்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டதாகவும் பொறுப்பதிகாரி ரஞ்சித் முனசிங்க கூறினார்.
 
மேலும் இந்த மூன்றாவது சந்தேக நபருக்கு கடந்த காலத்தில் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நிகழ்ந்த கடத்தல் சம்பவங்களுடனும் தொடர்பிருப்பதாக தமது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும் ரஞ்சித் மூனசிங்க நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
இந்த வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் 23 தேதி வரை ஒத்திவைக்கப் பட்டது.
 
  • கருத்துக்கள உறவுகள்

யாரையாவது கைகாட்டிவிட்டு அரசைக் காப்பதில் சிங்களம் தீவிரம். திட்டமிட்ட இனஅழிப்புக் கொலைகளைத் திசைதிருப்ப விசாரணைகள் நடாத்தும் புதிய அரசும் அதற்கு 'நல்ல அரசு' எனச் சான்றிதழ் வழங்கும் கையாலாகாத தமிழர் தலைமைகளும்,மனித உரிமைவேடமிடும் மேற்குலகும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.