Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோபா அமெரிக்கா கால்பந்து நாளை தொடக்கம் ;முதல் ஆட்டத்தில் சிலி- ஈகுவடார் மோதல்!

Featured Replies

கோபா அமெரிக்கா கால்பந்து நாளை தொடக்கம் ;முதல் ஆட்டத்தில் சிலி- ஈகுவடார் மோதல்!

 

 

தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கிடையேயாக கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி நாளை சிலியில் தொடங்குகிறது. போட்டியை நடத்தும் சிலி அணி முதல் ஆட்டத்தில் ஈகுவடார் அணியை எதிர்கொள்கிறது.

10cu6iu.jpg

44வது  கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. 3 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரிவுக்கு 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. 'ஏ' பிரிவில் சிலி,மெக்சிகோ, ஈகுவடார், பொலிவியா அணிகளும் 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் உருகுவே, அர்ஜென்டினா,பாரகுவே, ஜமைக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசூலா அணிகள் 'சி' பிரிவில் உள்ளன.

 

இதில் மெக்சிகோவும் ஜமைக்காவும் வட மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கூட்டமைப்பை சேர்ந்தவை. வட மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கூட்டமைப்பை சேர்ந்த  அணிகள் கவுரவ அழைப்பாக கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பங்கேற்பது வழக்கமானது. ஜுன் 21ஆம் தேதி வரை லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. பின்னர் 24 முதல் 27 வரை காலிறுதி ஆட்டங்களும் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் அரையிறுதி ஆட்டங்களும் ஜுலை 3ஆம் தேதி மூன்றாவது இடத்துக்கான போட்டியும் ஜுலை 4ஆம் தேதி இறுதி ஆட்டமும் நடைபெறவுள்ளன.

 

நாளை அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சான்டியாகோ நகரில் போட்டியை நடத்தும் சிலி அணி ஈகுவடார் அணியை எதிர்கொள்கிறது. அனைத்து போட்டிகளையும் சோனி சிக்ஸ் மற்றும் சோனி சிக்ஸ் நேரடியாக ஒளிபரப்புகின்றன.

 

http://www.vikatan.com/news/article.php?aid=47768

  • தொடங்கியவர்

கோல் கம்பத்துக்கு பின் பகுதியில் இருந்து நெய்மர் அடித்த மந்திர கோல்

 

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி சிலியில் நாளை அதிகாலை தொடங்குகிறது. இந்த போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ள பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் கம்பத்துக்கு பின் பகுதியில் இருந்து பந்தை கோல் வளைக்குள் செலுத்திய காட்சி.

 

தற்போது 23 வயதே நிரம்பிய இந்த பார்சிலோனா வீரர் நடப்பு சீசனில் சாம்பியன்ஸ் லீக், கோபா டெல்ரே, ஸ்பானிஷ் லீக் போட்டிகளில் கோப்பையை வென்றார்.

 

http://www.vikatan.com/news/article.php?aid=47801

  • தொடங்கியவர்

கோபா அமெரிக்கா கால்பந்து : விடால், சான்ச்செஸ் அபாரம் ; வெற்றியுடன் தொடங்கியது சிலி !

 

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இன்று காலை 5 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் போட்டியை நடத்தும் சிலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணியை வீழ்த்தியது.

m9x75y.jpg

44வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றிருந்த இந்த இரு அணிகளும் சான்டியாகோ நகரில் சந்தித்தன. ஆட்டம் தொடங்கிய 4 நிமிடத்துக்குள் சிலியின் நட்சத்திர வீரர் விடாலுக்கு இரண்டு கோல் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அதனை அவர் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

 

2hzkgtj.jpg

பிற்பாதி ஆட்டத்தில் 67வது நிமிடத்தில் ஈகுவடார் கோல் பகுதிக்குள் பந்தை கடத்தி வந்த சிலி வீரர் விடாலை விதிகளுக்கு மாறாக மில்லர் பெலானோஸ் தடுத்து கீழே தள்ளினார். இதையடுத்து சிலி அணிக்கு சாதகமாக பெனால்டி வழங்கப்பட்டது. இதனை விடால் எளிதாக கோலாக மாற்றினார். அடுத்த சில நிமிடங்களுக்கு பின் ஈகுவடார் வீரர் வாலென்சியா தலையால் முட்டிய பந்து, கோல் கம்பத்தின் மேல் பட்டு வெளியேறியது. ‘

2e1ya7b.jpg

 

பின்னர் 84வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய சிலி வீரர் எடுவாரா வர்காஸ் சிலி அணிக்கான 2வது கோலை அடித்தார். அலெச்சிஸ் சான்ச்செஸ் அளித்த பாஸ் எடுவாரா கோல் அடிக்க உதவியாக அமைந்தது. இறுதியில் சிலி அணி 2-0என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் மெக்சிகோ அணி பொலிவியா அணியை எதிர்கொள்கிறது.

 

 

 

http://www.vikatan.com/news/article.php?aid=47854

  • தொடங்கியவர்

கோப்பா அமெரிக்கா கால்பந்து: பொலிவியாவை வீழ்த்த முடியாத மெக்சிகோ
 

 

சிலியில் நடைபெறும் தென் அமெரிக்க நாடுகளுக்கிடையேயான கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியின் குரூப் ஏ ஆட்டத்தில் மெக்சிகோ அணியுடன் பொலிவிய அணி கோல் இல்லாமல் டிரா செய்தது.

 

மெக்சிகோ அணியில் முன்னணி வீரர்கள் இடம்பெறாததால் மெக்சிகோ பி அணி என்றே இது அழைக்கப்பட்டது. ஆனாலும் பொலிவியாவை வீழ்த்தும் திறமை உடையதாகவே கணிக்கப்பட்டது. இந்நிலையில் பொலிவியா 0-0 என்று டிரா செய்தது மெக்சிகோ ரசிகர்களிடையே கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இது 2-வது ஆட்டமாகும். முதல் ஆட்டத்தில் சிலி அணி, ஈக்வடார் அணியை வீழ்த்தியது.

 

பொலிவிய அணி 1997ஆம் ஆண்டுக்குப் பிறகு கோப்பா அமெரிக்காவில் ஒரு போட்டியை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னிலை மெக்சிகோ வீரர்களான கார்லோஸ் வீலா, மற்றும் ஜேவியர் ஹெர்னாண்டஸ் ஆகியோர் விளையாடவில்லை. இதனால் 2-ம் தர அணி அனுப்பப் பட்டதாக கருத்து நிலவுகிறது.

 

ஆட்டத்தின் முதல் பாதியில் பொல்விய அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. இரண்டாவது பாதியில்தான் மெக்சிகோவுக்கு கோல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பதிலி வீரர் ராவ்ல் ஜிமினேஸ் தலையால் கோலுக்கு வெளியே அடித்தார்.

 

மெக்சிகோ அணியின் ஒரே அனுபவ தடுப்பாட்ட வீரர் ரஃபேல் மார்க்வேஸ் என்பவரும் இடைவேளைக்குப் பிறகு காயம் காரணமாக வெளியேறினார்.

 

பொலிவியாவுக்கு கிடைத்த 3 வாய்ப்புகள்:

ரிக்கார்டோ பெட்ரியல் 15-வது நிமிடத்தில் போஸ்ட்டில் அடித்தார். 42-வது நிமிடத்தில் மெக்சிகோ கோல் கீப்பர் ஜீசஸ் கரோனா பாய்ந்து ஒரு கோல் வாய்ப்பைத் தடுத்தார். இதற்கு சில நிமிடங்களில் ரொனால்ட் ரால்டேஸ் ஒரு பந்தை கோலுக்கு வெளியே அடித்தார்.

 

இடைவேளைக்குப் பிறகு மெக்சிகோ அதிகம் பந்தை வைத்திருந்தாலும், பொல்விய தடுப்பு பலமாக இருந்தது, எதிர்த்தாக்குதலும் சிறப்பாக நடைபெற்றது.

கடைசியில் 10 நிமிடங்கள் மெக்சிகோ எவ்வளவோ முயன்றும் கோல் விழவில்லை. ஆட்டம் 0-0 என்று டிரா ஆனது.

 

இன்று அதாவது சனிக்கிழமை நள்ளிரவு பிரிவு பி-யில் உருகுவே-ஜமைக்கா அணிகளும், மற்றொரு பிரிவு பி ஆட்டத்தில் அர்ஜெண்டினா-பராகுவே அணிகளும் மோதுகின்றன.

சோனி சிக்ஸில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இப்போட்டிகளில் உருகுவே-ஜமைக்கா போட்டி இந்திய நேரம் நள்ளிரவு 12.30 மணிக்கும், அர்ஜெண்டினா-பராகுவே அணியின் ஆட்டம் அதிகாலை 3.00 மணிக்கும் நடைபெறும்.

 

அதே போல் ஜூன் 14 இரவு 12.30 மணி ஆட்டத்தில் கொலம்பியா-வெனிசூலா அணிகளும், 3 மணி ஆட்டத்தில் பிரேசில்-பெரு அணிகளும் மோதுகின்றன.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B/article7312796.ece

  • தொடங்கியவர்

கோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜெண்டீனாவுக்கு பாடம் கற்பித்த 'கத்துக்குட்டி' பராகுவே
 

 

சிலியில் நடைபெறும் கோபா அமெரிக்கா கால்பந்து பி-பிரிவு ஆட்டத்தில் 2 கோல்கள் பின் தங்கியிருந்த பராகுவே, இடைவேளைக்குப் பிறகு 2 கோல்களைத் திருப்பி அர்ஜெண்டீனா அணிக்கு எதிரான ஆட்டத்தை அபாரமாக டிரா செய்தது.

 

அர்ஜெண்டீன அணி மிகவும் வலுவான அணி. அதனால் முதல் பாதியிலேயே அதன் சிறந்த வீரர்களான செர்ஜியோ அக்யூரோ மற்றும் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி ஆகியோர் 2 கோல்களை அடித்து விட்டனர்.

 

ஆனால் இடைவேளைக்கு பிறகு ஆச்சரியகரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பராகுவே அணியில் நெல்சன் ஹேடோ வால்டேஸ், லூகாஸ் பேரியஸ் ஆகியோர் 2 கோல்களை திருப்பினர். இதனால் ஆட்டம் 2-2 என்று டிரா ஆனது.

 

அர்ஜெண்டீனா மிகவும் பிரகாசமாக ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க பரிமாற்றங்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

அரைமணி நேரம் கோல் அடிக்கும் முயற்சி பலிக்கவில்லை. அப்போதுதான் அர்ஜெண்டீன ஸ்ட்ரைக்கர் அக்யூரோ, சாதுரியமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பராகுவே வீரர் மிகுவெல் சமூதியோ, தங்களது கோல் கீப்பர் ஆந்தனி சில்வாவுக்கு பந்தை மென்மையாக ஒரு பாஸைச் செய்ய அதனை அர்ஜெண்டீனா வீரர் அக்யூரோ அபாரமாக ஊடுருவிச் சென்று பந்தை கோலுக்குள் திணித்தார். இதனால் பராகுவே அதிர்ச்சியடைந்தது. சமூதியோ பந்தை ஏன் கோல்கீப்பரிடம் திருப்பி அடிக்க முயற்சி செய்தார், அதுவும் அர்ஜெண்டீனா வீரர்கள் அருகில் இருக்கும் போதே, இத்தகைய எதிர்மறை அணுகுமுறை கோலில் போய் முடிந்தது.

 

5 நிமிடங்கள் சென்ற பிறகு அர்ஜெண்டீனாவின் ஆக்ரோஷ தாக்குதல் ஆட்டம் ஒன்றில் பந்து பராகுவே கோல் எல்லைக்குள் வர ஆஞ்செல் டி மரியா கோலுக்குள் செல்லும் போது மீண்டும் சமூதியோதான் குற்றவாளி ஆனார், அவர் டி மரியாவின் காலை இடறி விட பெனால்டி பகுதியாகையால் பெனால்டி அளிக்கப்பட லயோனல் மெஸ்ஸி 2-வது கோலை அடித்தார்.

 

பெனால்டி ஷாட்டை மெஸ்ஸி அனாயசமாக கோல் மூலைக்குள் திணித்தார். இதன் மூலம் அர்ஜெண்டீனாவுக்காக 98 ஆட்டங்களில் 46-வது கோலை அடித்தார். ஆனால் பெனால்டி கொடுத்தது தவறு, சமூதியா நியாயமாகவே தடுத்தார் என்று பராகுவே வீரர்கள் நடுவரிடம் புகார் எழுப்பினர்.

 

இடைவேளைக்குப் பிறகு பெனால்டி கோபத்தில் பராகுவே ஆட்டத்தில் உத்வேகம் புகுந்தது, ஆக்ரோஷமாக ஆடினர். இதனால் ஒரு அபாரமான மூவில் பந்து பராகுவே வீரர் வால்டேஸிடம் வர கோல் பாக்ஸுக்கு வெளியேயிருந்து அபாரமான கோலாக மாறியது.

 

70-வது நிமிடத்துக்குப் பிறகு மேலும் பராகுவே ஆக்ரோஷம் கூட வால்டேஸ் 2-வது கோலை அடித்திருப்பார், ஆனால் பந்து வெளியே சென்றது. 76-வது நிமிடத்தில் சமுதீயோவின் ஷாட்டை ரொமேரோ தடுத்தார்.

 

91-வது நிமிடத்தில் திட்டமிட்ட ஒரு பாஸ் மூவில் அர்ஜெண்டீனா வீரர்களைக் கடந்து கோல் அருகே வந்தனர் பராகுவே வீரர்கள். அப்போது பாவ்லோ டா சில்வா தலையால் பந்தை முட்ட, பேரியோஸ் கோலாக மாற்றினார். அர்ஜெண்டீனா அதிர்ச்சியடைந்தது. ஆட்டம் 2-2 என்று டிரா ஆனது.

 

அடுத்ததாக உருகுவே அணியை செவ்வாயன்று சந்திக்கிறது அர்ஜெண்டீனா. பராகுவே அணியை ஜமைக்கா சந்திக்கிறது. நேற்றைய மற்றொரு பி-பிரிவு ஆட்டத்தில் உருகுவே அணி ஜமைக்காவை 1-0 என்று வீழ்த்தியது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87/article7315065.ece

  • தொடங்கியவர்

பிரேசில் அணி வெற்றி

 

டெமுகோ: பெரு அணிக்கு எதிரான கோபா அமெரிக்க கால்பந்து லீக் போட்டியில் நெய்மர் ஒரு கோல் அடித்து கைகொடுக்க பிரேசில் அணி வெற்றி பெற்றது.

தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் 44வது கோபா அமெரிக்க கால்பந்து தொடர் சிலியில் நடக்கிறது. இதில் பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, கொலம்பியா உள்ளிட்ட 12 அணிகள் மூன்று பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

 

டெமுகோ நகரில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் பிரேசில், பெரு அணிகள் மோதின. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் பெரு அணியின் கிறிஸ்டியன் முதல் கோல் அடித்தார். இதற்கு 4வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மர் ஒரு கோல் அடித்து பதிலடி தந்தார். முதல் பாதி முடிவு 1–1 என சமநிலை வகித்தது.

 

இரண்டாவது பாதியில் போராடிய இரு அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இந்நிலையில் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90 + 1வது நிமிடம்) பிரேசிலி்ன் காஸ்டா ஒரு கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

 

ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

 

கொலம்பியா அதிர்ச்சி: மற்றொரு ‘சி’ பிரிவு போட்டியில் கொலம்பியா, வெனிசுலா அணிகள் மோதின. ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் வெனிசுலாவின் ரான்டன் ஒரு கோல் அடித்தார். இதற்கு கொலம்பிய வீரர்களால் பதிலடி தர முடியவில்லை. ஆட்டநேர முடிவில் கொலம்பிய அணி 0–1 என தோல்வி அடைந்தது.

 

http://sports.dinamalar.com/2015/06/1434351550/CopaAmericaFootballBrazilPeru.html

  • தொடங்கியவர்

பந்து தாக்கிய சிறுவனுக்கு கால்பந்து கொடுத்து சமாதானப்படுத்திய நெய்மர்! (வீடியோ)

 

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி சிலியில் நடைபெற்று வருகிறது. பெரு அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திற்கு புறப்படுவதற்காக பிரேசில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் முன்பு டீம் பஸ் வந்து நின்றது.பிரேசில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள்திரண்டிருந்தனர்.

அப்போது பஸ் ஏற வந்த வந்த பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர், ஒரு பந்தை கூட்டத்தினுடே அடித்தார். நெய்மர் அடித்த பந்து கூட்டத்தில் நின்ற சிறுவனை தாக்கியது. வலியால் சிறுவன் அழ, இதனை பார்த்த பிரேசில் அணியின் பயிற்சியாளர் துங்கா அந்த சிறுவனை பேருந்துக்குள் அழைத்து சென்றார்.

 

பின்னர் சிறுவனுக்கு நெய்மர் தனது கையொப்பமிட்ட கால்பந்து ஒன்றை பரிசளித்து அவனை  சமாதானம் செய்தார். சிறுவன் மகிழ்ச்சியுடன் வெளியே வந்த காட்சி (வீடியோ)

 

பந்து தாக்கிய சிறுவனுக்கு கால்பந்து கொடுத்து சமாதானப்படுத்திய நெய்மர்! (வீடியோ)

 

http://www.vikatan.com/news/article.php?aid=47978

 

  • தொடங்கியவர்

'ஜமைக்கா எங்கயிருக்க? தூத்துக்குடி பக்கம்... திருநெல்வேலி பக்கம் இருக்கும்..!'

 

சிலி நாட்டில் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்று முன்தினம் உருகுவே அணி ஜமைக்கா அணியுடன் மோதியது.

தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த நாடுகளுக்கிடையே நடைபெறும் போட்டிதான் கோபா அமெரிக்கா. எனினும் வட மத்திய மற்றும் கரீபியன் கூட்டமைப்பை சேர்ந்த 2 அணிகள், ஒவ்வொரு கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியிலும் சிறப்பு பங்கெடுப்பாளர்களாக கலந்து கொள்வது வழக்கமானது. அந்த வகையில் இந்த முறை மெக்சிகோ மற்றும் ஜமைக்கா அணிகள் கலந்து கொண்டுள்ளன.

2aalwgo.jpg

ஜமைக்கா அணி  'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள உருகுவே அணியுடன் முதல் ஆட்டத்தில் மோதியது. இந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய உருகுவே அணியின் நட்சத்திர வீரர் எடிசன் கவானி, '' எல்லா ஆப்ரிக்க அணிகளையும் போலவே ஜமைக்கா அணியும் பலம் பொருந்தியதாகத்தான் இருக்கும். கடுமையான போட்டியை அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்' என்று கூறிவிட்டார். ஆனால் ஜமைக்காவே ஆப்ரிக்க நாடு கிடையாது. கரீபியன் நாடு ஆகும்.

 

எடிசன் கவானி செய்த தவறு குறித்து அவரது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தனது ட்விட்டர் தளத்தில் தனது தவறு குறித்து மன்னிப்பு கேட்டுள்ள எடிசன் கவானி, '' முதலில் ஜமைக்கா மக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். ஆப்ரிக்க அணிகளுக்கும் ஜமைக்கா வீரர்களுக்கும் உள்ள உருவ ஒற்றுமை என்னை அவ்வாறு எண்ண வைத்து விட்டது. இதனை ஒரு ஜோக்காக கருதி மறந்து விடுங்கள். இதனை ஒரு குற்றமாக கருதாதீர்கள்'' என தெரிவித்துள்ளார்.

29wa2s7.jpg

உருகுவே - ஜமைக்கா அணிகளுக்கிடையேயான போட்டியில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் உருகுவே அணி வீரர்களுடன் எடிசன் கவானி, புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 

ஜமைக்கா எங்காவது இருந்துட்டு போகட்டும் நமக்கென்னனு போயிருந்தா... இந்த பிரச்னை வந்திருக்குமா கவானி...?

 

http://www.vikatan.com/news/article.php?aid=47981

  • தொடங்கியவர்

கோபா அமெரிக்கா: விடால் அபார ஆட்டம்; மெக்சிகோவை சமன் செய்தது சிலி

 

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இன்று நடந்த சிலி- மெக்சிகோ ஆட்டம் சமனில் முடிந்தது. இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்ததால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது.

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில்' ஏ ' பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் போட்டியை நடத்தும் சிலி அணி மெக்சிகோ அணியை சான்டியாகோ நகரில் எதிர்கொண்டது. 21வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் மேதியாஸ் வூசோ முதல் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்தில் சிலி அணி பதில் கோல் திருப்பியது. இந்த கோலை விடால் தலையால் முட்டிஅடித்தார்.

 

தொடர்ந்து 29 வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ரால் ஜிம்னெசும் தலையால் முட்டி ஒரு கோல் அடிக்க மெக்சிகோ முன்னிலை பெற்றது- .42வது நிமிடத்தில் சிலி வீரர் வர்காஸ் அடித்த கோலால் ஆட்டம் மீண்டும் சமனடைந்தது.பிற்பாதியில் 55வது நிமிடத்தில் சிலி வீரர் அலெக்சிஸ் சான்செஸ் கொடுத்த பாசை மெக்சிகோ பெனால்டி ஏரியாவுக்குள் கைப்பற்ற முயன்ற மற்றொரு சிலி வீரர் விடாலை மெக்சிகோ வீரர் ஜெரோர்டோ புளேரஸ் காலை இடறி கீழே விழ வைத்தார். இதனைத் தொடர்ந்து சிலி அணிக்கு சாதகமாக வழங்கப்பட்ட பெனால்டியை விடால் கோலாக்கினார்.

 

சிலி முன்னிலை பெற்றாலும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 66வது நிமிடத்தில் ஆட்ரியன் அல்டெர்ட் கொடுத்த பாசை வூசோ மிக நேர்த்தியாக கோலுக்குள் அடித்தார். இறுதியில் இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

 

புள்ளிகள் பட்டியலில் 'ஏ ' பிரிவில் சிலி அணி  4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.பொலிவியாவும் 4 புள்ளிகளை ஈட்டியுள்ளது. எனினும் கோல் வித்தியாசத்தில் சிலி அணி முதலிடத்தில் உள்ளது. மெக்சிகோ 2 புள்ளிகளையும் ஈகுவடார் புள்ளிகள் எதையும் பெறவில்லை. வரும் சனிக்கிழமை கடைசி லீக் ஆட்டத்தில் சிலி அணி பொலிவியா அணியையும் மெக்சிகோ ஈகுவடார் அணியையும் எதிர்கொள்கின்றன.

 

http://www.vikatan.com/news/article.php?aid=48043

  • தொடங்கியவர்

கால்பந்து: பொலிவியா அணி வெற்றி

 

வால்பராசோ: கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் லீக் போட்டியில் பொலிவியா அணி 3–2 என ஈகுவடார் அணியை வீழ்த்தியது.

 

தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் 44வது கோபா அமெரிக்க கால்பந்து தொடர் சிலியில் நடக்கிறது. இதில் பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, கொலம்பியா உள்ளிட்ட 12 அணிகள் மூன்று பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

 

வால்பராசோவில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் பொலிவியா, ஈகுவடார் அணிகள் மோதின. பொலிவியா அணியின் ரால்டெஸ் (5வது நிமிடம்), டாலன்ஸ் (18) தலா ஒரு கோல் அடித்தனர். மோரினோ (43) ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் பொலிவியா 3–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் ஈகுவடார் அணிக்கு வாலன்சியா (48), பொலன்ஸ் (81) தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில், பொலிவியா 3–2 என வெற்றி பெற்றது.

 

மெக்சிகோ, சிலி அணிகள் மோதிய ‘ஏ’ பிரிவு லீக் போட்டி 3–3 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

 

http://sports.dinamalar.com/2015/06/1434450813/Boliviasoccer.html

  • தொடங்கியவர்

கோபா அமெரிக்கா: மரடோனா மருமகன் அடித்த கோலால் அர்ஜென்டினாவுக்கு வெற்றி

 

 

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி உருகுவே அணியை வீழ்த்தியது. மரடோனா மருமகன் செர்ஜியோ அகுரா அர்ஜென்டினாவின் வெற்றி கோலை அடித்தார்.

 

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் 'பி 'பிரிவில் இன்று காலை நடந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி உருகுவே அணியை எதிர்கொண்டது. லா சொரா நகரில் நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் அடிக்க போராடின. முதல் பாதியில் பலன் கிட்டவில்லை. ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரருக்கு நடுவர் மஞ்சள் அட்டைகாட்டியதால்  நடுவர் சான்ட்ரோவிடம் பயிற்சியாளர் ஜெரார்டோ மார்ட்டினோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

 

பிற்பாதியில் 56வது நிமிடத்தில் அர்ஜென்டினா முதல் கோல் அடித்தது. அந்த அணியின் முன்கள வீரர் செர்ஜியோ அகுரா தலையால் முட்டி இந்த கோல் அடித்தார். சபலாட்டா கிராஸ் செய்த பந்து அகுரா கோல் அடிக்க உதவியாக இருந்தது. செர்ஜியோ அகுரா மரடோனாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இரு அணிகளாலும் கோல் அடிக்க இயலவில்லை. இறுதியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

 

பாரகுவே -ஜமைக்கா அணிகளுக்கிடையேயா ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பாரகுவே வெற்றி பெற்றது. பாரகுவே வீரர் பெனிட்ஸ் வெற்றி கோலை அடித்தார்.புள்ளிகள் பட்டியலில் அர்ஜென்டினா, பாரகுவே அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன. கோல் அடிப்படையில் அர்ஜென்டினா முதல் இடத்தில் உள்ளது. உருகுவே 3 புள்ளிகளை ஈட்டியுள்ளது. ஜமைக்காவுக்கு ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை.

 

 

http://www.vikatan.com/news/article.php?aid=48098

  • தொடங்கியவர்

கோபா அமெரிக்கா கால்பந்து: ஈகுவடாருக்கு அதிர்ச்சியளித்தது பொலிவியா- 18 ஆண்டுகளில் முதல் வெற்றி

 

   

தென் அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற கால்பந்து போட்டியான கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் சர்வதேச தரவரிசையில் 89-வது இடத்தில் இருக்கும் பொலிவியா அணி 3-2 என்ற கோல் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 31-வது இடத்தில் இருக்கும் ஈகுவடார் அணிக்கு அதிர்ச்சி தோல்வியளித்தது.

 

கடந்த 18 ஆண்டுகளில் கோபா அமெரிக்கா போட்டியில் பொலிவியா அணி பதிவு செய்த முதல் வெற்றி இதுதான். சொந்த மண்ணில் பொலிவியா மிகச்சிறப்பாக விளையாடி வந்திருக்கிறது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் அந்நிய மண்ணில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் அந்த அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும்.

 

சிலியின் வால்பரைசோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி ஆட்ட நேரம் முழுவதும் பொலிவியாவின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. ஈகுவடார் அணியினர் செய்த சில தவறுகள் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அதே நேரத்தில் அசத்தலாக ஆடிய பொலிவியா அணி, ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அசத்தியது.

 

கார்னரில் இருந்து பொலிவியா மிட்பீல்டர் மார்ட்டின் ஸ்மெட்பெர்க் மிகத் துல்லியமாக கோல் கம்பத்தை நோக்கி பந்தை உதைக்க, அந்த அணியின் மூத்த வீரரான ரொனால்ட் ரால்டேஸ் தலையால் முட்டி கோலாக்கினார். இதன்பிறகு 18-வது நிமிடத்தில் ஸ்மெட்பெர்க் கோலடிக்க, பொலிவியா 2-0 என முன்னிலை பெற்றது.

 

இதன்பிறகு 38-வது நிமிடத்தில் ஈகுவடார் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் இன்னர் வேலன்சியா பந்தை கோல் கம்பத்தை நோக்கி உதைக்கும் முன்னதாகவே அதே அணியைச் மில்லர் பொலானோஸ் கோல் ஏரியாவுக்குள் வந்தார்.

 

இதையடுத்து முதல் வாய்ப்பை ரத்து செய்த நடுவர், மீண்டும் பெனால்டி கிக் பகுதியில் இருந்து பந்தை உதைக்குமாறு வேலன்சியாவிடம் கூறினார். 2-வது வாய்ப்பில் வேலன்சியா உதைத்த பந்தை பொலிவியா கோல் கீப்பர் ரொமெல் குயினோனென்ஸ் முறியடிக்க, ஈகுவடாரின் கோல் வாய்ப்பு தகர்ந்தது.

 

தொடர்ந்து சிறப்பாக ஆடிய பொலிவியா அணிக்கு 43-வது நிமிடத்தில் பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. இதில் மார்செலோ மார்ட்டின் கோலடிக்க, பொலிவியா 3-0 என முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஈகுவடாரின் வேலன்சியாவும், 81-வது நிமிடத்தில் மில்லர் பொலானோஸும் கோலடித்தனர்.

 

எனினும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இறுதியில் பொலி வியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது பொலிவியா.

 

மற்றொரு ஆட்டம்

சான்டியாகோவில் நடைபெற்ற மெக்ஸிகோ-சிலி அணிகள் இடை யிலான மற்றொரு லீக் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மெக்ஸிகோ தரப்பில் மத்தியாஸ் ஊசோ இரு கோல்களை யும் (21 மற்றும் 66-வது நிமிடங் களில்), ரால் ஜிமென்ஸ் ஒரு கோலும் (29) அடித்தனர். சிலி தரப்பில் ஆர்டுரோ விடால் இரு கோல்களை யும் (22 மற்றும் 55-வது நிமிடங் களில்), எட்வர்ட் வர்காஸ் ஒரு கோலும் (42) அடித்தனர்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-18-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article7325069.ece

 

  • தொடங்கியவர்

நெய்மரை அடக்கியாண்ட சான்சேஸ்: பிரேசிலை வென்றது கொலம்பியா

 

சிலியில் நடைபெறும் கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் நட்சத்திர வீரர் நெய்மர் திணற, பிரேசிலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கொலம்பியா.

கொலம்பிய அணியின் ஜெய்சன் முரில்லோ 36-வது நிமிடத்தில் அடித்த கோல் வெற்றி கோலாக மாறியது. பிரேசிலும் தனக்கு கிடைத்த அரிதான கோல் வாய்ப்புகள் இரண்டை கோட்டை விட்டது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் பெரு அணிக்கு எதிரான ஆட்டத்திலேயே மஞ்சள் அட்டை வாங்கிய நெய்மர், இந்தப் போட்டியில் கோல்போஸ்டிலிருந்து திரும்பிய பந்தை கையால் தொட்டதற்காக மீண்டும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டார். ஆனால் இது போதாதென்று இறுதி விசில் அடிக்கப்பட்ட பிறகு கொலம்பிய வீரர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்ததோடு, முரில்லோவை தலையால் முட்டியதாகவும் நெய்மருக்கு சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

 

அடுத்த போட்டியில் நெய்மர் விளையாட முடியாமல் போவதற்கு ஏற்கெனவே வாங்கிய மஞ்சள் அட்டைகளே போதுமானது. இதில் கூடுதலாக சிகப்பு அட்டை வேறு அவருக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எத்தனை போட்டிகளுக்கு அவர் தடை செய்யப்படுவார் என்பது தெரியவில்லை.

2014 உலகக்கோப்பை காலிறுதியில் அடைந்த தோல்விக்கு பிரேசிலை பழிதீர்த்தது கொலம்பியா.

 

மோதும் உணர்ச்சிகளின் பின்னணி:

கடந்த உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் கொலம்பிய வீரர் ஸுனைகா, பின்னாலிலிருந்து வன்முறையாகத் தடுக்க நினைக்க, படுகாயமடைந்த நெய்மரின் உலகக் கோப்பை கனவு அன்று முடிவுக்கு வந்தது. இதோடு மட்டுமல்லாமல் நெய்மரின் கால்பந்து ஆட்டமே முடிவுக்கு வரும் வகையில் அவருக்கு முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தினால் இரு அணிகளுக்கும் கடும் பகைமை நிலவி வந்தது. இந்நிலையில் கொலம்பிய நட்சத்திர வீரர் ரோட்ரிக்ஸை அச்சமூட்டும் வகையில் பிரேசில் வீரர் பெர்டினாண்டினோ மற்றும் தடுப்பு வீரர்கள் தங்கள் ஆட்டத்தை விளையாடினர்.

 

இதனால் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அதிகரிக்க நெய்மர்-முரில்லோ மோதல் ஏற்பட்டது. இது நெய்மரின் சிகப்பு அட்டை அபராதத்தில் போய் முடிந்துள்ளது. இதனால் அவர் அடுத்த போட்டியில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. மீண்டும் கொலம்பியா மனோவியல் ரீதியாக பிரேசிலை பதம் பார்த்துள்ளது.

 

 

நெய்மரை அடக்கியாண்டால் பிரேசிலை வீழ்த்தலாம் என்ற கொலம்பியாவின் ஆட்டம்:

இந்த போட்டி நெய்மருக்கும் ரோட்ரிக்ஸுக்குமானது என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் நடந்தது நெய்மருக்கும், கார்லோஸ் சான்சேஸுக்குமான போட்டியாக இருந்தது.

கடந்த கோப்பா அமெரிக்கா போட்டித் தொடரில் லயனோல் மெஸ்ஸியை சிறப்பாக அடக்கினார் சான்சேஸ். ஆனால் அர்ஜெண்டினாவுக்கு மெஸ்ஸியை விட பிரேசிலுக்கு நெய்மார் முக்கியம். எனவே நெய்மரை மந்தமாக்கி விட்டால் ஆட்டத்தையே வென்றதற்கு சமம்.

 

இந்த எதிர்பார்ப்பை தடுப்பாட்ட வீரராக சான்சேஸ் சிறப்பாகச் செய்தார். நெய்மரின் பாய்ச்சலை அதன் தொடக்க இடத்திலேயே அடக்கினார். ஒவ்வொருமுறையும் நெய்மர் எழுச்சியுற்ற போதும், சான்சேஸ் அவரை காலி செய்தார்.

 

ஏற்கெனவே வெனிசுலா அணியிடம் தோற்ற கொலம்பியா அணி இம்முறை பிரேசிலை வீழ்த்தும் முனைப்பில் நெய்மரை அடக்கி ஆண்டது.

பிரேசிலின் வெறுப்பு பயங்கரமாக அதிகரித்ததன் விளைவு நிறைய தப்பாட்டங்களை ஆடி ஃபவுல் செய்தனர். இத்தகைய தப்பிதத்தில்தான் 36-வது நிமிடத்தில் குவாட்ராடோவின் அற்புதமான ஃப்ரீ கிக்கை ஜெய்சன் முரில்லோ கோலாக மாற்றினார்.

 

பிரேசில் அணி நொந்து நூலான போது 2-வது வாய்ப்பு ஏற்பட்டது, அதனை கொலம்பிய வீரர் ஃபால்கோ சுயநலமாக தானே கோல் அடிக்க முயன்று தோல்வியடைந்தார். யாரிடம் வேண்டுமானாலும் பாஸ் செய்திருக்கலாம் அது கோலாக மாறியிருக்கும்.

 

இடது களத்தில் ஃபிரெட்டுக்கு பதிலாக பிலிப் கூட்டின்ஹோவை இறக்கினார் பிரேசில் பயிற்சியாளர் துங்கா. கொலம்பிய வீரர் சான்சேஸிடமிருந்து நெய்மாரைப் பிரித்து வேறிடம் மாற்றப்பட்டது.

 

இப்போது ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. முரில்லோ பந்தை பேக்பாஸ் செய்ய, கோல் கீப்பர் டேவிட் ஆஸ்பினா சோடை போக, பிரேசில் வீரர் ஃபர்மினோவுக்கு அருமையான கோல் வாய்ப்பு. ஆனால் மேலே அடித்து சொதப்பினார். திறந்த கோல் அது, இதை கோட்டைவிட்டார். இது நடந்தது 60-வது நிமிடம் பக்கம் என்றால் அதன் பிறகும் நெய்மாரை சிறப்பாக தடுத்து, பிரேசிலை முடக்கியது கொலம்பியா.

 

கோப்பா அமெரிக்கா கால்பந்தில் பிரேசில் அணியை கொலம்பியா 1991-ம் ஆண்டு தொடருக்குப் பிறகு வீழ்த்தியது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article7329298.ece

  • தொடங்கியவர்

நெய்மருக்கு சிவப்பு அட்டை: அடிதடியில் முடிந்த பிரேசில் - கொலம்பியா ஆட்டம் (வீடியோ)

 

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில், கொலம்பிய அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி தோல்வியடைந்தது. 28 முறை நடந்துள்ள இந்த இரு அணிகளுக்கிடையேயான மோதலில், கொலம்பிய அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்..

ruwc94.jpg

சான்டியாகோ நகரில் நடந்த இந்த 'சி' பிரிவு ஆட்டத்தில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இதனால் பவுல் ஆட்டமே அதிகமாக இருந்தது. 36வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் முரிலோ முதல் கோல் அடித்தார். பிரேசில் அணியின் பெனால்டி ஏரியாவுக்குள் சுற்றிக் கொண்டிருந்த பந்து முரிலோவுக்கு கிடைத்தது. பெனால்டி ஏரியாவுக்குள் இருந்த குழப்பத்தை பயன்படுத்தி, பந்தை முரிலோ கோலுக்குள் அடித்தார்.

2moxu0m.jpg

பிரேசில் அணிக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தன. நெய்மர் மற்றும் ஃபிர்மினோவால் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்ற முடியவில்லை. இதில் ஃபிர்மினோவுக்கு ஒரு முறை ஓபன் நெட் வாய்ப்பு கிடைத்தும், அதையும் கோல் கம்பத்துக்கு மேல் அடித்து பிரேசில் ரசிகர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டார். இறுதியில் கொலம்பிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

8z48rp.jpg

புள்ளிகள் பட்டியலில் வெனிசூலா, பிரேசில், கொலம்பியா ஆகிய 3 அணிகளுமே தலா 3 புள்ளிகளை ஈட்டியுள்ளன. கடந்த உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தை போலவே இந்த போட்டியிலும் பவுலுக்கு பஞ்சமில்லை.90 நிமிட நேரத்தில் மொத்தம் 39 முறை இரு அணி வீரர்களும் பவுல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். இறுதி விசில் ஊதப்பட்டதும் மைதானத்தில் இரு அணி வீரர்களும் கைகலப்பில் ஈடுபட கோதாவில் இறங்கினார்.

2mdtg.jpg

 

            

அந்த சமயத்தில் நடுவர் ஓசிஸ் பிரேசில் அணியின் நெய்மருக்கும் கொலம்பிய அணியின் மாற்று ஆட்டக்காரர் கார்லெஸ் பாக்காவுக்கும் சிவப்பு அட்டை காட்டினார். இதனால் அடுத்த ஆட்டத்தில் இந்த இருவரும் விளையாட முடியாது. அடுத்த ஆட்டத்தில் வரும் 22ஆம் தேதி பிரேசில் அணி வெனிசூலா அணியையும் கொலம்பிய அணி பெரு அணியையும் எதிர்கொள்கின்றன.

கால்பந்து வரலாற்றில் பிரேசில் - கொலம்பிய அணிகள் 28 முறை மோதியுள்ளன. இதில் கொலம்பிய அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும். இதற்கு முன் கடந்த 1991ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா போட்டியில் கொலம்பியா அணி 2&0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியுள்ளது. அதற்கு பின் இப்போதுதான் பிரேசிலை கொலம்பியா தோற்கடித்துள்ளது. அதோடு உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியிடம் கண்ட தோல்விக்கும் கொலம்பியா பழிதீர்த்துள்ளது.

 

http://www.vikatan.com/news/article.php?aid=48154

 

  • தொடங்கியவர்

போலீசிடம் சிக்கிய ‘கோபா’ வீரர்

 

சாண்டியாகோ: குடித்து விட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிலி கால்பந்து வீரர் ஆர்டுரோ விடாலை போலீசார் கைது செய்தனர்.

சிலியில் கோபா அமெரிக்க கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் இதுவரை நடந்த போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் (3 கோல், 2 போட்டி) உள்ளவர் சிலி வீரர் ஆர்டுரோ விடால், 28.

 

மெக்சிகோ அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற இவர் (2 கோல்), பின் மது அருந்தி, மனைவி மரியாவுடன் தனது ரூ. 2.3 கோடி மதிப்புள்ள பெராரி காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

 

அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த கார் மீது பலமாக மோதியதில், முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

இதில் இருவருக்கும் லேசான சிராய்ப்பு ஏற்பட, மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சைக்குப் பின் மனைவி வீடு திரும்ப, குடித்து விட்டு கார் ஓட்டிய ஆர்டுரோவை போலீசார் கைது செய்தனர்.

 

கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட இவர், பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஆர்டுரோ கூறுகையில்,‘‘ இன்று கார் விபத்தில் சிக்கிக் கொண்டேன். இதில் எனது தவறு எதுவும் இல்லை. நானும் எனது குடும்பத்தினரும் நலமாக உள்ளோம்,’’ என்றார்.

 

 

http://sports.dinamalar.com/2015/06/1434559420/ArturoVidalsoccer.html

  • தொடங்கியவர்

பிரேசில் வீர்ர் நெய்மர் மீது ஒழுங்கு நடவடிக்கை: ஒரு போட்டியில் விளையாடத் தடை
 

 

கொலம்பியாவுக்கு எதிரான கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் 0-1 என்று தோற்றது. இந்தப் போட்டியில் நெய்மருக்கு மோசமான நடத்தைக்காக சிகப்பு அட்டை காண்பிக்கப் பட்டது.

 

இதனையடுத்து தென் அமெரிக கால்பந்து கூட்டமைப்பு நெய்மர் விளையாட ஒரு போட்டிக்கு தடை விதித்தது, ஆனால் மேலும் சில போட்டிகளிலும் அவர் தடை செய்யப்படலாம் என்று பிரேசில் கால்பந்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இப்போதைக்கு ஒரு போட்டி தடை விதிக்கப்பட்ட நெய்மர் மேலும் சில போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படுவது பற்றி வரும் வெள்ளிக்கிழமையன்று முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

 

பெரு அணிக்கு எதிராக ஒரு மஞ்சள் அட்டையும், நேற்று கொலம்பியா அணிக்கு எதிராக மேலும் ஒரு மஞ்சள் அட்டையும் வாங்கிய நெய்மர், கொலம்பிய தடுப்பாட்ட வீரர் ஜெய்சன் முரில்லோவிடம் மோதல் போக்கைக் கடைபிடித்தார். இதனையடுத்து சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

 

எனினும் பிரேசில் கால்பந்து கழகம் தன் தரப்பு வாதங்களை எடுத்துவைக்க உள்ளதால் இதன் பிறகே இறுதி முடிவு எட்டப்படும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/article7333086.ece

  • தொடங்கியவர்

கோபா அமெரிக்கா கால்பந்து: வெனிசுலாவை வீழ்த்தியது பெரு

 
பந்தை வசப்படுத்துவதற்காக ஆக்ரோஷமாக போராடிய வெனிசுலா வீரர் ஜேஸ் ராண்டன் (வலது), பெரு வீரர் கார்லோஸ்.
பந்தை வசப்படுத்துவதற்காக ஆக்ரோஷமாக போராடிய வெனிசுலா வீரர் ஜேஸ் ராண்டன் (வலது), பெரு வீரர் கார்லோஸ்.

சிலியில் நடைபெற்று வரும் தென் அமெரிக்காவின் புகழ்பெற்ற கால்பந்து போட்டியான கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பெரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவைத் தோற்கடித்தது.

முதல் ஆட்டத்தில் பிரேசிலிடம் தோல்வி கண்ட பெரு அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் காலிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

சிலியின் வால்பேரட்சோ நகரில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் பந்தை வசப்படுத்துவதற்காக வெனிசுலாவின் பின்கள வீரர் பெர்னாண்டோ அமோர்பீட்டாவும், பெருவின் பாவ்லோ கெர்ரோவும் போராடினர்.

அப்போது பெர்னாண்டோ, கெர்ரோவை பிடித்து இழுத்து கீழே தள்ளினார். இதையடுத்து அவருக்கு நடுவர் ரெட் கார்டு கொடுக்க, வெனிசுலா 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் பெரு மிட்பீல்டர் கிறிஸ்டியான் கியூ பெனால்டி பாக்ஸுக்கு பந்தை கடத்த, அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பெரு கேப்டன் கிளாடியோ பிஸாரோ, அதிவேகமாக கோல் கம்பத்தை நோக்கி பந்தை உதைத்தார்.

அது கோல் கம்பத்தின் மேல் பகுதி வழியாக கோல் வலைக்குள் நுழைந்து கோலானது. பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் பெரு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

சி பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில், பெரு, வெனிசுலா, கொலம்பியா ஆகிய 4 அணி களும் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. தற்போதைய நிலையில் 4 அணிகளுக்குமே காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

அடுத்த சுற்று ஆட்டங்களின் வெற்றியைப் பொறுத்தே காலிறுதி வாய்ப்பு இறுதி செய்யப்படும். வரும் ஞாயிற்றுக்கிழமை நடை பெறும் கடைசி லீக் ஆட்டத்தில் பெரு, கொலம்பியாவைச் சந்திக் கிறது. பிரேசில், வெனிசுலாவுடன் மோதுகிறது.

 

http://tamil.thehindu.com/sports/கோபா-அமெரிக்கா-கால்பந்து-வெனிசுலாவை-வீழ்த்தியது-பெரு/article7336394.ece

  • தொடங்கியவர்

கோபா அமெரிக்காவில் பிரேசில் கேப்டன் நெய்மர் இனி விளையாட முடியாது...!

கொலம்பிய அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின் ரகளையில் ஈடுபட்ட பிரேசில் கேப்டன் நெய்மருக்கு 4 போட்டிகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. இதனால் கோபா அமெரிக்கா தொடரை விட்டு அவர் வெளியேற்றப்படுகிறார்.

ny.jpg

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் 'சி' பிரிவில் நடந்த லீக் சுற்று ஆட்டத்தில் இறுதி விசில் ஊதப்பட்ட சமயத்தில் இரு அணி வீரர்களும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். பிரேசில் கேப்டன் நெய்மர் கொலம்பிய வீரர் கார்லெஸ் பாக்கா ஆகியோருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.

போட்டி முடிந்த பின் நெய்மர் அடித்த பந்து தாக்கியதில் கொலம்பிய தடுப்பாட்ட வீரர் பப்லோ அர்மீரோ கீழே விழுந்தார். இதையடுத்து ஏற்பட்ட தகராறில் மற்றொரு கொலம்பிய வீரரை நெய்மர் தலையால் முட்டித்தள்ளினார்.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று கோபா அமெரிக்கா ஒழுங்கு கமிட்டி கூடி ஆராய்ந்தது.  கூட்டத்தில், எதிரணி வீரரை தலையால் முட்டிய காரணத்துக்காக நெய்மருக்கு 4 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. மேலும் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் நெய்மருக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ny%281%29.jpg

இதனால் நாளை நடைபெறவுள்ள வெனிசூலா அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம், காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி என 4 முக்கியமான ஆட்டங்களில் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நெய்மர் தாயகம் திரும்பவுள்ளார்.


மெக்சிகோ வெளியேற்றம் காலிறுதியில் சிலி, பொலிவியா

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஏ பிரிவுக்கான கடைசி லீக் ஆட்டத்தில் மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணியிடம் தோல்வியை சந்தித்தால் அந்த அணி போட்டியை விட்டு வெளியேறியது. ஈகுவடார் அணிக்காக 26வது நிமிடத்தில் பொலானாசும் 56வது நிமிடத்தில் வாலென்சியாவும் கோல் அடித்தனர். மெக்சிகோவுக்கான ஒரே கோலை ஜிம்னெஸ் 64வது நிமிடத்தில் அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் சிலி அணி 5-0 என்ற கோல் கணக்கில் பொலிவியா அணியை வீழ்த்தியது. இதையடுத்து 'ஏ' பிரிவில் இருந்து 7 புள்ளிகள் பெற்ற சிலி மற்றும் 4 புள்ளிகள் பெற்ற பொலிவியா காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.

 

http://www.vikatan.com/news/article.php?aid=48262

  • தொடங்கியவர்

தாய்நாட்டுக்காக மெஸ்சி விளையாடிய 100வது போட்டியில் அர்ஜென்டினா வெற்றி

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் ஜமைக்கா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வீழ்த்தியது. அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயனல் மெஸ்சி அந்த அணிக்காக விளையாடிய 100வது சர்வதேச போட்டி இது. பாரகுவே அணிக்கு எதிரான ஆட்டம் சமனில் முடிந்ததால் 4 புள்ளிகளுடன் உருகுவே அணியும் காலிறுதிக்கு வாய்ப்பை பலப்படுத்தியுள்ளது.

uru3.jpg

வினா டெர் மார் நகரில் நடந்த இந்த 'பி' பிரிவு ஆட்டத்தில், முதல் பாதியில் 11வது நிமிடத்தில் அர்ஜென்டினா முன்கள வீரர் ஹீகுவென் கோல் அடித்தார். ஏஞ்சல் டி மரியா தந்த பாஸ் ஹீகுவென் கோல் அடிக்க உதவியாக இருந்தது. இந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட ஒரே கோல் இதுதான். இதையடுத்து வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி தற்போது 7 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடித்தது. காலிறுதியில் அர்ஜென்டினா அணி ஈகுவடார், பெரு அல்லது வெனிசூலா அணியை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். இதற்கு முன் கடந்த 1998ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணி ஜமைக்கா அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் இந்த அணிகள் மீண்டும் சந்தித்துள்ளன.

uru2.jpg

முன்னதாக உருகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிவப்பு அட்டை பெற்ற அர்ஜென்டினா பயிற்சியாளர் ஜெரார்டோ மார்ட்டினோ மைதானத்திற்குள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் கேலரியில் இருந்து போட்டியை பார்த்தார். அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் செர்ஜியோ அகுராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹீகுவென் களமிறக்கப்பட்டார். அதுபோல் நிகோலஸ் ஓட்டமென்டிக்கு பதிலாக மற்றொரு நடுகள ஆட்டக்காரர் மார்ட்டின் டெம்ச்சிலிஸ் நேற்றைய ஆட்டத்தில் விளையாடினார். ஆட்டம் முடியும் தருவாயில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் சபலாட்டா மஞ்சள் அட்டை பெற்றார். இந்த தொடரில் 2 மஞ்சள் அட்டைகள் பெற்றதால் அடுத்த ஆட்டத்தில் சபலாட்டா விளையாட முடியாது.

uru1.jpg

லா செரானா நகரில் நடந்த இதே பிரிவுக்கான மற்றொரு ஆட்டத்தில் உருகுவே அணி பாரகுவே அணியை சந்தித்தது. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. உருகுவே அணிக்காக கோலை 29வது நிமிடத்தில் ஜிம்னெசும் பாரகுவே அணிக்கான கோலை 44வது நிமிடத்தில் பரியாசும் அடித்தனர். இதனால் பாரகுவே அணி 5 புள்ளிகளுடனும் காலிறுதிக்குள் நுழைந்தது. கோபா அமெரிக்கா தொடரில் 3 பிரிவுகளில் இருந்து மூன்றாவது இடத்தை பெறும் சிறந்த இரு அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். அந்த வகையில் உருகுவே அணி 4 புள்ளிகளுடம் காலிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

 

http://www.vikatan.com/news/article.php?aid=48305

  • தொடங்கியவர்

காலிறுதியில் சிலி

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் சிலி மற்றும் பொலிவியா அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

சிலியின் சான்டியாகோவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சிலி 5-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவைத் தோற்கடித்தது. இதன்மூலம் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த அந்த அணி காலிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில் ஈகுவடார் 2-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை தோற்கடித்தது. இதனால் 4 புள்ளிகளைப் பெற்றிருந்த பொலிவியா ஏ பிரிவில் 2-வது இடத்தைப் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

http://tamil.thehindu.com/sports/காலிறுதியில்-சிலி/article7337233.ece

  • தொடங்கியவர்

நெய்மர் மீதான தடை: பிரேசில் மேல்முறையீடு

நெய்மர்
நெய்மர்

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் சில தினங்களுக்கு முன்பு சான்டியாகோவில் நடை பெற்ற லீக் ஆட்டத்தில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை தோற்கடித்தது. இந்தத் தோல்வியால் விரக்தியடைந்த பிரேசில் கேப்டன் நெய்மர், போட்டி முடிந்த பிறகு, கொலம்பியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜெய்சன் முரில்லோ மீது பந்தை உதைத்தார்.

அதைத் தொடர்ந்து மற்றொரு கொலம்பிய வீரரான கார்லோஸ் பக்கா, நெய்மரை பிடித்து தள்ளிவிட்டார். இதை யடுத்து நெய்மர், பக்கா இருவருக் கும் நடுவர் ரெட் கார்டு கொடுத்தார்.

அதனால் மேலும் கோப மடைந்த நெய்மர், நடுவர்களை திட்டியு ள்ளார். இதையடுத்து அவருக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதனால் கோபா அமெரிக்கா போட்டியின் எஞ்சிய ஆட்டங்களில் நெய்மர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பிரேசில், தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த அணியின் பயிற்சியாளர் துங்கா கூறுகையில், “நெய்மர் தடை விவகாரத்தில் எங்களின் சட்ட நிபுணர்கள் குழு மேல்முறையீடு செய்யவுள்ளது. கால்பந்து விளை யாட்டில் நெய்மர் மிக முக்கியமான வீரர் என்பதால் அவருக்கு தண்டனையும் அதிகமாக வழங்கப் பட்டுள்ளது” என்றார்.

http://tamil.thehindu.com/sports/நெய்மர்-மீதான-தடை-பிரேசில்-மேல்முறையீடு/article7341510.ece

  • தொடங்கியவர்

கேலரியில் நெய்மர் :வெனிசூலாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில் !

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெனிசூலாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. நெய்மருக்கு பதிலாக களமிறங்கிய ரொபின்ஹோ அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ney.jpg

கொலம்பிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் தகராறில் ஈடுபட்ட கேப்டன் நெய்மர் அணியில் இடம் பெறாத நிலையில், சான்டியாகோ நகரில் நடைபெற்ற 'சி'பிரிவு ஆட்டத்தில் பிரேசில் அணி வெனிசூலா அணியை எதிர்கொண்டது.  இந்த போட்டியை பிரேசில் கேப்டன் நெய்மர் கேலரியில் இருந்து பார்த்தார்.

ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் ரொபின்ஹோ அடித்த கார்னர் பந்தை தியாகோ சில்வா அருமையாக கோலுக்குள் திருப்பினார். பிற்பாதியில் 54வது நிமிடத்தில் வில்லியன் கிராஸ் செய்த பந்தை ஃபிர்மினோ கோலாக்கினார். பிரேசில் அணி 2 கோல்கள் முன்னிலை பெற்ற நிலையில் 84வது நிமிடத்தில் வெனிசூலா வீரர் மிகு ஒரு கோல் அடித்தார்.

bre1.jpg

இறுதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 'சி 'முதலிடத்தை பிடித்து காலிறுதிக்குள் நுழைந்தது. காலிறுதியில் பிரேசில் அணி பாரகுவே அணியை சனிக்கிழமையன்று எதிர்கொள்கிறது.

இதே பிரிவில் நடந்த பெரு- கொலம்பிய அணிகளுக்கிடையேயான ஆட்டம் கோல் விழாமல் சமனில் முடிந்தது. இதனால் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. பெரு 4 புள்ளிகளும் கொலம்பியா 4 புள்ளிகளுடம் பெற்றன. கோல் அடிப்படையில் பெரு 2வது இடத்தை பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. கொலம்பிய அணியும் சிறந்த 3வது இடத்தை பிடித்த அணியாக காலிறுதிக்கு தகுதி பெற்றது. கொலம்பிய அணி காலிறுதியில் அர்ஜென்டினா அணியை சந்திக்கிறது.

காலிறுதி மோதல்

சிலி-உருகுவே- ஜன் 24ஆம் தேதி

பொலிவியா-பெரு- ஜுன் 25ஆம் தேதி

அர்ஜென்டினா- கொலம்பியா- ஜுன் 26ஆம் தேதி

பிரேசில்- பாரகுவே- ஜுன் 27ஆம் தேதி

http://www.vikatan.com/news/article.php?aid=48329

  • தொடங்கியவர்

பின்புறத்தில் தட்டியதால் வீரருக்கு அறை :சண்டையினுடே சிலி வெற்றி 'நடப்பு சாம்பியன்' நடையை கட்டியது!

சான்டியாகோ:கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் சிலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் உருகுவே அணியை வீழ்த்தியது.

           https://youtu.be/nYwFt54x6ak

சான்டியாகோவில் நடந்த இந்த ஆட்டத்தில் 62வது நிமிடத்தில் சிலி வீரர் ஜாராவை முகத்தில் தாக்கிய உருகுவே அணியின் முன்னணி வீரர் எடிசன் கவானி மஞ்சள் அட்டை பெற்றார். இந்த ஜாரா, எடிசன் கவானியின் பின்புறத்தை தட்டி அநாகரீகமாக நடந்ததையடுத்து எடிசன் கவானி அவரை அடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து லைன்ஸ்மேனிடம் சென்று எடிசன் கவானி தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து தொடர்ச்சியாக 2 மஞ்சள் அட்டைகளை பெற்ற எடிசன் கவானி களத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

edi.jpg

அது மட்டுமல்ல பிற்பாதி ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் மற்றொரு உருகுவே தடுப்பாட்டக்காரர் ஜோர்க் பூசிலும் சிவப்பு அட்டை வாங்கியதால், உருகுவே 9 வீரர்களுடன் விளையாடியது. அலெக்சிஸ் சான்ச்செஸை விதிகளுக்கு புறம்பாக தடுத்ததற்காக ஜோர்க்கு பூசிலுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
இதனால் உருகுவேயின் தடுப்பாட்டம் மிகவும் பலவீனமடைந்தது.

edi1.jpg

இதனை பயன்படுத்தி 81வது நிமிடத்தில் சிலி அணி ஒரு கோல் அடித்ததது. அந்த அணியின் தடுப்பாட்டக்காரர் இஸ்லா பெனால்டி ஏரியாவுக்குள் இருந்து தள்ளிய பந்து உருகுவே கோல் வலைக்குள் புகுந்தது. மேற்கொண்டு இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் சிலி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. நாளை நடைபெறவுள்ள 2வது காலிறுதியில் பொலிவியா-பெரு அணிகள் மோதுகின்றன.

http://www.vikatan.com/news/article.php?aid=48505

  • தொடங்கியவர்

கோபா அமெரிக்கா அரையிறுதியில் பெரு :'ஹாட்ரிக்' கோல் சாதனை

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில், பெரு அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. பெரு வீரர் பவுலோ ஜெராரோ ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்தார்.

chil.jpg

டெமுகோ நகரில் நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் 20வது நிமிடத்தில் பவுலோ ஜெராரோ 20 மற்றும் 23வது நிமிடத்தில் கோல் அடித்தார். பிற்பாதி ஆட்டத்தில் 74வது நிமிடத்தில் மீண்டும் பவுலோ ஜெராரோ கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்த கோபா அமெரிக்கத் தொடரில் அடிக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் கோல் இதுதான்.

gr.jpg

பிற்பாதி ஆட்டத்தில் 84வது நிமிடத்தில்,பொலிவிய வீரர் மொரேனோ ஒரு கோல் அடித்ததார். இறுதியில் பெரு அணி 3&1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதி ஆட்டத்தில் பெரு அணி சிலி அணியை வரும் 27ஆம் தேதி எதிர்கொள்கிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=48569

  • தொடங்கியவர்

'சடன்டெத்'தில் அர்ஜென்டினா வெற்றி: கொலம்பியா போராடி வீழ்ந்தது!

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில், நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி, சடன் டெத்தில் கொலம்பிய அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.

tav.jpg

வினா டெல் மார் நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்டமும், கோல் எதுவும் விழாததால், கூடுதல் நேரத்துக்கு சென்றது. அதிலும் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இதனை தொடர்ந்து வெற்றி தோல்வியை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இரு அணியை சேர்ந்த 4 வீரர்களும் கோல் அடித்தனர். கொலம்பியாவின் லூயீஸ் முரியலும், அர்ஜென்டினாவின் லூகாஸ் பிக்லியாவும் பெனால்டி வாய்ப்பை வீணாக்கினர். டைபிரேக்கரும் 4-4 என்று சமனில் முடிந்ததால், ஆட்டம் சடன் டெத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

tav1.jpg

இதில் 6வது வாய்ப்பை கொலம்பிய மற்றும் அர்ஜென்டினா வீரர்கள் கோலாக்கவில்லை. சடன் டெத்தில் 2வது பெனால்டி வாய்ப்பில்தான் முடிவு கிடைத்தது. அதாவது 7வது பெனால்டியை கொலம்பிய வீரர் மார்கோஸ் ரோஜா அடித்த பந்தை, அர்ஜென்டினா கோல்கீப்பர்  ரமெய்ரா தடுத்து விட்டார். '

அதேவேளையில் அர்ஜென்டினாவின் கார்லெஸ் டாவெஸ்,  பெனால்டியை கோலாக மாற்றினார். முடிவில் அர்ஜென்டினா அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று,  அரையிறுதிக்கு முன்னேறியது.

http://www.vikatan.com/news/article.php?aid=48616

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.