Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று பகவான் சத்ய சாயி பாபாவின் ஜனனதினம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவதாரத்தின் தத்துவத்தை விளங்கிக் கொண்டால் உண்மையான ஆனந்தத்தை அடைவீர்கள்

[23 - November - 2006] [Font Size - A - A - A]

* இன்று பகவான் சத்ய சாயி பாபாவின் ஜனனதினம்

-வைத்திய கலாநிதி ச.சிறீதேவா-

இந்தியாவில், ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ள புட்டபர்த்தி எனும் கிராமமொன்றில் 1926, நவம்பர் 23 ஆம் திகதி சுவாமி சத்யசாயி பாபா அவதரித்தார்.

கடவுள் அவதாரமெடுப்பதற்கான காரணம், மாயையிலிருந்து தம்மை விடுவித்த நல்வழியினைக் காட்டுமாறு கோடிக் கணக்கானவர்கள் இறைவனைக் கேட்கும் போது இத்தகைய மானிடக் குரல்களின் அதிர்வு பூரண அவதாரமொன்றினை உருவாக்குகின்றது. உலகில் நீதி அழிந்த அநீதி தலைதூக்கும் வேளைகளிலெல்லாம் தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக நான் மனித உடலெடுத்துத் தோன்றுகின்றேன் என பகவான் கிருஷ்ணர் கூறுகின்றார்.

சுவாமியின் அவதாரத்திற்கு முன்னராக மகாவிஷ்ணு மத்சமாகவும், வராகமாகவும், வாமனனாகவும், நரசிம்மனாகவும், பரசுராமனாகவும், இராமராகவும், கிருஷ்ணராகவும், புத்தராகவும் அவதாரங்களை எடுத்துள்ளார்.

1940 ஒக்டோபர் 20 ஆம் திகதியன்று இளம்பிராய சத்ய நாராயணனாக சுவாமி இவ்வாறு தமது மூத்த சகோதரன் சேஷாமாவிற்கும் வெளிப்படுத்தினார். "நான் உங்கள் குடும்பத்திற்கு உரியவனல்ல, நான் இவ்வுலகில் பூர்த்தி செய்ய வேண்டிய பணிகள் பலவுள்ளன. இப்போது நான் "சாயிபாபா" சாயிபாபா என்பதன் பொருள் தெய்வீகத்தந்தை, தெய்வீக அன்னையென்பதாகும்.

சத்யசாயி மேற்கொள்ள வேண்டிய ஆறு பணிகளுள்ளன. உலகில் தார்மீக வாழ்வு வாழ்வதற்காக வழிகாட்டல்களை அமைத்தல்; முரண்பாடுகளையும் வெறுப்புகளையும் தணித்தல்; தீயவர்களால் ஒடுக்கப்படும் நல்லவர்களை பாதுகாத்தல்; பல்வேறு உரையாசிரியர்களினால் இருளாக்கப்பட்ட வேதங்களின் உண்மைச் செய்திகளை வெளிப்படுத்தல்; இப்பூமியிலிருந்து தீயவர்களின் சுமையினை நீக்குதல்; இரட்சகராகத் தோன்றுவேன் எனக் கடந்த காலங்களில் நான் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுதல் என்பனவாகும்.

சுவாமியின் நிறைவேற்றுதல்களை எடுத்துப் பார்க்கும் போது அவர் தமது தெய்வீக உரைகள், எழுத்துகள் மூலமாக ஆன்மீக, சமய மற்றும் ஏனைய விழுமியங்கள் அடங்கிய சகல அம்சங்கள் தொடர்பான அறிவுக் கடலையும், வழிப்படுத்தலையும் வழங்கியுள்ளார்.

அவர் ஆரம்பித்து வைத்துள்ள விழுமியக் கல்வி முறையானது இந்தியாவிலும் ஏனைய பல நாடுகளிலும் படிப்படியாக பரவி வருகின்றது. வாழ்வதற்கான வழிமுறையாகவும் இலட்சியமாகவும் மனித விழுமியங்கள் அமைய வேண்டுமென சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

மாணவருக்கென சாயி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், விடுதிகளையும் இந்தியா எங்கும் அமைந்துள்ளார். புட்டபர்த்தியிலும், வெண்வயலிலும் இலவச சிகிச்சை விசேட வைத்தியசாலைகளை அமைத்துள்ளார்.

1972 இல் சத்தியசாயி மத்திய அறநிலையம் நிறுவப்பட்டது. நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு ஆந்திர பிரதேசத்தில் குடி நீரினை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். உலக சமய நூதனசாலை புட்டபர்த்தியில் அமைந்துள்ளது. சிகிச்சைக்கு பயனளிக்காத வியாதிகளை தமது அருளினால் குணப்படுத்தியுள்ளார். ஆபத்து நிலைகள், விபத்துகளிலிருந்து தமது பக்தர்களை காப்பாற்றியுள்ளார்.

பல அற்புதங்களை சுவாமி மேற்கொண்டு, பக்தர்களை தம்பால் கவர்ந்துள்ளார். இரு வழி தியான முறைகளை அதாவது உபநிடத வேதமந்திர உச்சாடன முறையினையும் ஜோதியில் தியானிக்கும் முறையினையும் விளக்கியுள்ளார்.

1965 இல் புட்டபர்த்தியில் சத்ய சாயி சமித்தி என ஆரம்பிக்கப்பட்டு 1968 இல் சத்திய சாயி சேவா அமைப்பாகி இன்று 137 நாடுகளில் இத்தகைய நிலையங்கள் உள்ளன.

உதவிகளை நாடி நிற்போருக்கு ஆதரவு வழங்குவதே இந்நிறுவனங்களின் நோக்கமாகும். கல்வி, சேவை, ஆன்மீகம் ஆகிய சேவைப் பிரிவுகளைக் கொண்ட ஒவ்வொரு அமைப்பும் நாராயண சேவை என அழைக்கப்பட்டு, இறைவனுக்கு ஆற்றும் சேவை, மனிதனுக்கு ஆற்றும் சேவையாகும் என விளக்கி இதன் மூலம் சுவாமியின் அனுக்கிரகத்தை அடையாலம் என பொருள்படுகின்றது.

சுவாமியின் போதனைகள் அன்பையும் சத்தியத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. அவர் அன்பை ஏற்று அருள்புரிபவர். ஒற்றுமையின் சக்தியை எமக்கு எடுத்துக் கூறுபவர். தமது போதனைகள் புதியவை என அவர் கூறவில்லை. இன்றைய உலக நிலைமைகளுக்கு ஏற்றவை எனக் கூறுகின்றார். இதுவே சனாதன தர்மம் எனப்படுகின்றது. நிலையான தர்மமான இது சகல மதங்கள், நன்னடத்தை விதிகள், உலக சட்டங்கள் என்பவற்றின் அடிப்படையாகவுள்ளது.

தெய்வம் மனித அவதாரம் எடுப்பதன் நோக்கம் மனிதனுக்கு அன்பு என்றால் என்ன என்பதை அறிய வைப்பதற்காகும்.

திரேதாயுகத்தில் இராமர் சத்தியம், தர்மம் எனும் பண்புகளின் உருவமாகவும், துவாபரயுகத்தில் பகவான் கிருஷ்ணர் சாந்தி, பிரேமை என்பவற்றின் பண்புருவமாகவும், தோன்றியது போன்று, இன்று சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை எனும் நான்கு பண்புகளின் பண்புருவமாக எமது அவதாரம் தோன்றியுள்ளார்.

நீங்கள் இறைவனிடத்து காட்டும் அன்பு நிறைவானதாக இருத்தல் வேண்டும். சகலரையும் நேசிக்கும் போதுதான் கடவுளை நாம் நேசிப்பதாக அமையும். யாரையேனும் வெறுக்கும் போது கடவுளையே வெறுப்பதாக அமையுமென்பதே அவதாரத்தின் செய்தியாகும்.

ஒற்றுமை பற்றிக் கூறும் சுவாமி "ஒன்றிலிருந்து பிளவுபட்ட பன்மையே இவ்வுலகமாகும். ஒருமையை இறைவனிடத்து மாத்திரமே காணலாம் என்பதால் சகல மதங்களினதும் ஒன்றுபட்ட உருவமே கடவுளாகின்றது"

நாம் எமது புலன்களிடத்து பற்று வைத்திருத்தலே விருப்புகள் ஏற்பட்டு அவை சோகத்திற்கு வழிவகுக்கின்றன. இது சுய அறிவை மறைக்கின்றது. இறைவனிடத்து மனதை பதியவைத்தலே சிறந்த வழி. நாட்டின் எதிர்காலம் இளைஞரிடம் உள்ளது என சுவாமி கூறுகின்றார்.

சேவை சாதனை, தியாகம், ஆன்மீகம் என்பவற்றில் ஈடுபட முதுமை வரை காத்திராது இளமையிலேயே ஆரம்பித்தல் நல்லது என சுவாமி கூறுகின்றார்.

சுவாமியின் தெய்வீக உரைகளில் "மகாவாக்கியங்கள்" சில எப்போதும் இடம்பெறுகின்றன. நெடுங்கால முனிவர்களாலும், ரிஷிகளாலும் கூறப்பட்டவை இவை, "நானே கடவுள், கடவுளே நான் என்பதே இவற்றின் அடிப்படை உண்மை. வேதாகமங்கள் ஞானிகள் கண்டறிந்த உண்மைகளை விளக்குவன.

பக்தியோகத்தின் மூலம் மனிதன் தீய குணங்களைக் களைந்து அமைதியும் அன்பும் பெறுகின்றான். அவதாரத்தின் தத்துவத்தை விளங்கிக் கொண்டால் உண்மை ஆனந்தத்தை அடைவீர்கள். ஆன்மீகத்தை அடைய விரும்புவோர் தியானிக்கும் போது மாத்திரமன்றி எவ்வேளையிலும் யோகிகளாக இருத்தல் அவசியம். மகிழ்ச்சியின் போது கடவுளைப் போற்றுதலும், துன்பத்தின் போது தூற்றுதலும் தவறு. தியானத்தின் மூலமாகவே இறைவனுடன் நித்திய தொடர்பினை ஏற்படுத்தலாம்.

உங்கள் கடமையை சரிவரச் செய்வதே சிறந்த யோகநிலையாகும். எந்தவொரு சமயத்திலும் நான் எதைச் செய்கின்றேனோ அதிலேயே கவனமாக இருக்கிறேன். இவ்வுலகில் நிகழ்வன யாவும் விரைவாக பரந்துசெல்லும் முகில்கள் போன்றவை. நடக்க விருப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆகவே நடப்பவை யாவும் தெய்வச் செயல் என எண்ணுங்கள்.

உங்களைமானுட உடலாக எண்ணினால் மாத்திரமே கவலைகள் தோன்றுகின்றன. நிதானபுத்தி தன்னை ஆத்மா என உணர்பவனிடத்து மாத்திரமே காணப்படுகின்றது. உலகத்தை இயக்கி, நடத்துவது இறைவனாகும்.

பரதகலாசாரத்தில் மாத்திரமே மிருகங்கள் புனித தன்மையினமாக கருதப்படுகின்றன. தெய்வீக அன்பை மிருகங்களிடத்தில் காட்ட வேண்டும். உபநிடதங்களின் சாரத்தை சுவாமி இலகுவாக விளக்கியுள்ளார். வேதங்கள் எல்லாவற்றையும் கற்க வேண்டுமென்றில்லை. எனினும் ஆன்மீக தத்துவங்களின் அடிப்படையான வேதாந்தத்தில் சகல சமயங்களும் அடங்கியுள்ளன. ஒரே உண்மையின் பல்வேறு தோற்றங்களே பல்வேறு சமயங்கள் என பாபா கூறுகின்றார்.

கடவுளை பல்வேறு நாம ரூபங்களில் வழிபட்டாலும் கடவுள் ஒருவனேயாகும். கடவுளை மனதால் உருவகிக்க முடியாமை காரணமாகவே உருவ வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. கடவுளை உணர்ந்ததின் பின் உருவ வழிபாடு தேவையில்லாது போகின்றது. "இந்த அவதாரத்தினை நான் மேற்கொண்டதன் ஒரு நோக்கம் நாமஸ்மரணத்தில் நம்பிக்கை வைக்கச் செய்வதாகும்"

கருமம், பக்தி, ஞானம் யாவும் இணைந்ததே யோகம் எனப்படுகின்றது. வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலையைப் பேணுதல் வேண்டும். எல்லா சந்தர்ப்பங்களிலும் கலங்காது சமநிலையை பேணுதல் வேண்டும். இந்த நிலையே `சத் சித் ஆனந்தம்' என சுவாமி குறிப்பிடுகின்றார்.

கர்ம யோகம் நாம் வாழ்வதற்கான செயல்முறையாகும். இந்தக் கர்மமே பிறப்பிற்குக் காரணமாகின்றது. தனிமனிதனின் துன்பங்களை போக்குவதற்காக இறைவன் அவதாரம் எடுப்பதில்லை. ஆனந்தத்தை தருவதற்கே அவதரிக்கின்றார். எமது கடந்த கால கர்மவினையே இன்ப துன்பமாகின்றது. சூரியனும் ஒளியும் போன்றதே கன்மமும் ஜிவாத்மாக்களுமாகும். ஞானயோகம் இறைவனுக்கு நிகரான ஒளியாகும். மனித உருவில் அறிவு எனும் தெய்வ ஒளியைக் குறிக்கின்றது. எமது பகுத்தறிவு தூய்மையடைகையில் உள்ளொளி அதிக பிரகாசத்துடன் பிரகாசித்து மெய்யுணர்விற்கு வழிகாட்டுகின்றது.

இன்பமும், துன்பமும் மாறி மாறி வருபவையாகும். இந்த அடிப்படை நம்பிக்கையுடன் உலகியல் வாழ்க்கையை வாழ வேண்டும். எமது கடந்த கால கர்மவினையே இன்பதுன்பமாக இவ்வாழ்வில் நிகழ்கின்றன. தெய்வத்திடம் காட்டும் பக்தியிலேயே நிலையான இன்பம் ஏற்படுகின்றது. "மனித இனம் இன்பமுறவே நான் அவதரித்துள்ளேன். உங்களிடையே வாழும் போது மானிடனாக தோன்றுகின்றேன். தனிமையில் இருக்கும் போது இறைவனாகின்றேன்."

"உங்கள் அன்பையே எனக்குத் தாருங்கள். அப்போது நீங்கள் என்னை வந்தடைவீர்கள். உங்களுக்கு என்ன நேர்ந்தாலும் நான் கைவிடமாட்டேன். நீங்கள் எங்கிருந்தாலும் என் அருகிலேயே இருக்கிறீர்கள். உங்களிடமிருந்து தூய அன்பு வெளிப்பட்டு சகலரையும் சென்றடையட்டும். தெய்வத்தன்மையை அடைந்து உலக வாழ்வில் ஈடுபடுங்கள். மனதில் சஞ்சலங்கள் நீங்கிவிடும். நான் மனித உருவம் தாங்கி வந்ததன் அர்த்தம் மனித வாழ்வு பயன்படுந்தன்மையுள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதற்கே."

ஆகவே, சாயி பக்தர்களே எமது பாபா எமது நண்பர். வழிகாட்டி, ஆலோசகர் என எல்லாமாக உள்ளவர். சுவாமியின் விழிகள் அன்பை எம்மிடத்து சொரிகின்றன. சுவாமியின் போதனைகளை பின்பற்றி பயன்மிக்க வாழ்வினை வாழவேண்டும்.

http://www.thinakkural.com/news

------------------------------------------------------------------------------------------------------------------------------

மேல்தட்டு மக்களின் குரங்காட்டி! (ஒளிவடிவில்):

அடித் தட்டு மக்களின் குரங்காட்டியை உங்களுக்கு தெரிந்திருக்கும். குரங்காட்டியும் ஏழையாக இருப்பார். அவர் செய்கின்ற வித்தைகளை கண்டு களிப்பவர்களும் பெரும்பாலும் ஏழைகளாகத்தான் இருப்பார்கள். அந்த ஏழைகள் போடுகின்ற கொஞ்சக் காசில்தான் குரங்காட்டியும் தன்னுடைய பிழைப்பை ஓட்டுவார்.

ஆனால் மேல்தட்டு மக்களுக்கு குரங்காட்டி போன்று வித்தை காட்டுகிற ஒருவரும் இருக்கிறார். அவருடைய வித்தைகளை கண்டு களிப்பவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்களாக, பணக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் போட்ட பெரும்பணத்தில் அந்த வித்தைக்காரரும் பெரும் கோடீஸ்வரராக ஆகி விட்டார். அத்துடன் வித்தை காட்டுவதையும் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் வித்தை செய்யும் காட்சிகளை தொடர்ந்து எமது வாசர்களுக்காக தர இருக்கிறோம்

http://www.youtube.com/watch?v=3hbKaip5xA8

http://www.webeelam.com/

Edited by naina2000

அப்போ பகவானுக்கு பக்கத்தில 4 பக்தைகள் தங்கள் ஆருயிரை கொடுப்பார்கள்

பகவானை ஆனந்தப்படுத்த :P :P :P

Edited by வினித்

பகவான்ர பெருமைய அடிக்கடி BBC ல பேசுவினம்... ஆளப்பாக்க தெரியுது அம்புறோசுக் கள்ளனெண்டு

ஓம்..ஓம்....இவருடைய சொத்துகளின் கணக்குகள் கடந்த சில வருடங்களிற்கு முன்னர்

நெதர்லாந் பத்திரிகை பட்டியல் போட்டு காட்டினது...அதை பார்த்து பயந்தே போனேன்...

இவருக்கேன் இத்தனை கார்....14...மிக சொகுசு...அதே வேளை விலை உயர்ந்த

முன்னனி இரகங்கள்

அத்தோடு இவருக்கு வேலை ஆட்கள்..

அடடா...டா..என்னமா வாழுறான் பாவி...

உவரை சாமியென்று ஒரு கூட்டம் வணங்குது...நினைச்சா சிரிப்பா கிடக்கு..

இந்த அறிவியல் உலகத்தில் இப்படியும் ஒரு மூடதனத்தில் எங்கட மக்கள் இருக்கினம் என்றால் யோசிச்சு பாருங்கோ..எப்படி யென்று...கோவிந்த...கோவிந்தா....

Edited by vanni mainthan

  • 2 weeks later...

இவரை பற்றி எனாப்பு நைனா தமிழர்/தமிழ் பகுதியில் போட்டனீங்கல் உவரை பற்றிய பல வீடியோக்களை பாத்தனான்

  • 3 weeks later...

அடுத்த முறை யாராவது இந்த 'பகவானை' பாக்கப்போனால் எனக்காக ஒரு உதவி செய்ய வேணும்.

எங்கட நாட்டில இவ்வளவு சனம் கஷ்டப்படூதுகள், இந்தத் தமிழீழம் எப்ப கிடைக்குமெண்டொருக்காக் கேளுங்கோ.

எங்கட வெளிநாட்டிலேருக்கிற சனம் பவுண் பவுணாக் கொண்டுபோயல்லே குடுக்குதுகள். எல்லாம் அறிஞ்ச பகவான் இந்த உதவியை செய்யமாட்டாரெண்டே நினைக்கிறியள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.