Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பயணம்: இந்திய டெஸ்ட் அணி வியாழக்கிழமை தேர்வு

Featured Replies

இலங்கை பயணம்: இந்திய டெஸ்ட் அணி வியாழக்கிழமை தேர்வு

 
அணித் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீலுடன் பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர். | கோப்புப் படம்: ஆர்.வி.மூர்த்தி.
அணித் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீலுடன் பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர். | கோப்புப் படம்: ஆர்.வி.மூர்த்தி.

ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நாளை (வியாழன்) தேர்வு செய்யப்படுகிறது.

சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக்குழு இதற்காக நாளை கூடுகிறது. 3-வது ஸ்பின்னர் யார் என்பதை மையமாகக் கொண்டு தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது.

3-வது ஸ்பின்னர் யார் என்பதுடன் 15 வீரர்கள் கொண்ட அணியா அல்லது 16-வீரர்கள் கொண்ட அணியா என்பதும் ஆர்வமூட்டும் விஷயமாக உள்ளது.

பேட்ஸ்மென்களைப் பொறுத்தவரை தேர்வுக்குழுவுக்கு கடினம் இல்லை. முரளி விஜய், ஷிகர் தவண், விராட் கோலி, அஜிங்கிய ரஹானே, ரோஹித் சர்மா, ஏ அணித் தலைவர் புஜாரா, ஆகியோருடன் டெங்கு காய்ச்சலால் வங்கதேசத் தொடரை இழந்த கர்நாடக தொடக்க வீரர் கே.எல்.ராகுலும் 7-வது பேட்ஸ்மெனாகச் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சில் உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா, புவனேஷ் குமார் நிச்சயம் அணியில் இடம்பெறுவார்கள். வருண் ஆரோன் காய்ச்சலிலிருந்து குணமடைந்தால் அவரும் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.

விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா இடம் வலுவாக உள்ளது. 2-வது விக்கெட் கீப்பராக நமன் ஓஜா அல்லது சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

அதேபோல் சுழற்பந்து வீச்சுக்காக ஹர்பஜன், அஸ்வின் இருவரும் இடம்பெறுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 3-வது ஸ்பின்னர் வாய்ப்பு ஏற்பட்டால் அக்சர் படேல் அல்லது அமித் மிஸ்ரா தேர்வு செய்யப்படலாம். கரண் சர்மா காயமடைந்திருப்பதால் அமித் மிஸ்ராவுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அமித் மிஸ்ரா 13 டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், கடைசியாக 2011 இங்கிலாந்து தொடரில் ஓவலில் விளையாடினார். இந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் 43 மற்றும் 84 ரன்களை எடுத்த அமித் மிஸ்ரா பந்துவீச்சாளராக சோபிக்க முடியவில்லை, 38 ஓவர்களில் 170 ரன்களை கொடுத்து விக்கெட் இல்லாமல் முடிந்தார்.

இலங்கையில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.

http://tamil.thehindu.com/sports/இலங்கை-பயணம்-இந்திய-டெஸ்ட்-அணி-வியாழக்கிழமை-தேர்வு/article7452077.ece

  • தொடங்கியவர்

அமித் மிஷ்ரா ரிட்டர்ன்; தோனி இடத்தில் விருத்திமான் சஹா!

 

லங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஷ்ரா 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

ami.jpg

விராட் கோலி (கேப்டன் ) ஷிகர் தவான், முரளிவிஜய், கே.எல். ராகுல், சேட்டேஷ்வர புஜரா, ரஹானே, ரோகித் சர்மா, விருத்திமான்  சஹா, ஹர்பஜன் சிங், அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், அமித் மிஸ்ரா, வருண் ஆரோன் ஆகிய வீரர்கள் அணியில் இடம் பெறுகின்றனர்.

எதிர்பார்த்தது போல் காயம் காரணமாக முகமது ஷமி இந்திய அணியில் இடம் பெறவில்லை. அமித் மிஷ்ரா 4ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். 32 வயதாகும் அமித் மிஷ்ரா, கடந்த 2011ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் இந்திய அணிக்காக கடைசியாக விளையாடினார்.

viru.jpg

தோனியின் இடத்தை அதாவது விக்கெட் கீப்பராக விருத்திமான்  சஹா பிடித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான தொடரின் போது உடல் நலக்குறைவால் அணியில் இடம் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்ட லோகேஷ் ராகுல் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

சந்தீப் பட்டில் தலைமையிலான இந்திய அணியின் தேர்வுக்குழு, கேப்டன் விராட் கோலியின் ஆலோசனைக்கு பிறகு 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=49950

  • தொடங்கியவர்

தோனியின் கருத்து பற்றி நான் பேசவில்லை: சந்தீப் பாட்டீல்

 
 
செய்தியாளர்கள் கூட்டத்தில் அனுராக் தாக்கூர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல். | படம்: ஷிவ்குமார் புஷ்பகர்.
செய்தியாளர்கள் கூட்டத்தில் அனுராக் தாக்கூர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல். | படம்: ஷிவ்குமார் புஷ்பகர்.

4 வேகப்பந்து வீச்சாளர்களை ஆடச்செய்வதைப் பற்றிய முந்தைய டெஸ்ட் கேப்டன் தோனியின் விமர்சனம் குறித்து அணித்தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் கருத்து தெரிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் தேர்வுக் கொள்கைகள் குறித்து தோனியின் கருத்து பற்றி சந்தீப் பாட்டீலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அமைதியாக ஆனால் அதே வேளையில் நாசுக்காக பதில் அளித்தார் சந்தீப் பாட்டீல்.

முந்தைய பிசிசிஐ தலைமையில் அணித் தேர்வுக்குழு தலைவர் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது 2 மாதங்களில் 3-வது முறையாக சந்தீப் பாட்டீல் செய்தியாள்ர்களிடம் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, “மகேந்திர சிங் தோனி என்ன கூறினார் என்பது பற்றி நான் பேசவில்லை. அணியில் ஒரு சமச்சீரான தன்மை வேண்டும் என்பதையே நாங்கள் சிறிது காலமாக முயற்சி செய்து வருகிறோம். இலங்கை பிட்ச் நிலவரங்களுக்கு இதுவே சிறந்த பந்துவீச்சுச் சேர்க்கையாகும். எனவே அனைத்து தேர்வுக்குழு உறுப்பினர்களும் அவ்வாறு உணர்ந்தோம், அதன் படி தேர்வு செய்துள்ளோம்” என்றார்.

வேகப்பந்து வீச்சுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி தோனியின் விமர்சனம் காயப்படுத்தியதா என்ற கேள்விக்கு பதில் அளித்த பாட்டீல், “ஒரு கேப்டன் கருத்து கூற எங்கள் தரப்பிலிருந்து எந்த வித ஆட்சேபணையும் இல்லை, பிசிசிஐ-தான் அதற்கு எதிர்வினையாற்ற வேண்டும்.

நாம் பார்த்ததிலேயே தோனி ஒரு சிறந்த தலைவர் என்பதை நாம் அறிவோம். அதனால் பவுலர்கள் குறித்து கருத்து கூற அவருக்கு அனைத்து உரிமைகளும் உண்டு” என்றார்.

அடுத்ததாக, தோனியின் நம்பிக்கைக்குரிய சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கோலியின் அணியில் இடம்பெறவில்லையே என்று செய்தியாளர்கள் மேலும் திருக, “அணித்தலைவர் மாறும் போது அணிச்சேர்க்கையிலும் மாற்றங்கள் இருக்கவே செய்யும். ஒவ்வொரு கேப்டனுக்கும் அவர்கள் அணியை வழிநடத்தும் போது பலதரப்பட்ட பார்வைகள் இருக்கும். ஒருவர் ஆக்ரோஷ கேப்டனாக இருக்கலாம், ஒருவர் தற்காப்புணர்வு கேப்டனாக இருக்கலாம், ஆம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் கேப்டனின் அணுகுமுறையும் அணித்தேர்வை விளக்குவதாக அமையும்.

விராட் கோலி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் எதிர்காலத்தை கணிக்க முடியாது. சச்சின், கங்குலி, திராவிட், லஷ்மண் ஓய்வு பெற்றவுடன் இவர்களுக்கு மாற்று வீரர்கள் உடனடியாகக் கிடைப்பார்களா என்று நினைத்தோம், ஆனால் இப்போது உள்ளவர்கள் மாற்று வீரர்களாக திகழ்கின்றனர்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/தோனியின்-கருத்து-பற்றி-நான்-பேசவில்லை-சந்தீப்-பாட்டீல்/article7456741.ece

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மனைவி, தோழிக்கு ‘நோ’: இந்திய வீரர்களுக்கு கட்டுப்பாடு

kohli, india

புதுடில்லி: இலங்கை தொடரில் இந்திய வீரர்கள் தங்களுடன் மனைவி, தோழிகளை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செல்லும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஆக., 12ல் காலேயில் துவங்குகிறது. 

இதற்கு முன் ஆக., 6 முதல் 8ம் தேதி வரை  கொழும்புவில் நடக்கும் பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது. இத்தொடருக்கு செல்லும் இந்திய வீரர்களுடன் மனைவி, தோழிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோஹ்லியுடன் அவரது காதலியான ‘பாலிவுட்’ நடிகை அனுஷ்கா செல்ல முடியாது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நிர்வாகி ஒருவர் கூறியது:

இலங்கை செல்லும் இந்திய வீரர்களில் பெரும்பாலனவர்கள் கடந்த ஒரு மாதமாக ஓய்வில் உள்ளனர். வங்கதேச தொடர் முடிந்த பின் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

இதனால் இலங்கை தொடரின் போது வீரர்களின் மனைவிகள், தோழிகளை உடன் அழைத்துச் செல்ல தடை விதிப்பது என முடிவு செய்துள்ளோம்.

இந்திய அணியின் ‘இயக்குனர்’ ரவி சாஸ்திரி, இத்தொடரின் பயிற்சி போட்டி முடிந்த பின் தான் இலங்கை செல்வார். முதல் டெஸ்ட் துவங்கும் முன் அணியுடன் இணைந்து கொள்வார்.

ஏனெனில், தற்போது நடக்கும் ஆஷஸ் தொடரில் ‘ஸ்கை ஸ்போர்ட்ஸ்’ ‘டிவி’ சேனலில் வர்ணனை பணிக்கு செல்வதாக முன்னதாகவே பி.சி.சி.ஐ.,க்கு தெரிவித்தார்.

பின் தான் இலங்கைத் தொடரின் அட்டவணையை நாங்கள் முடிவு செய்தோம். இதனால் ஒப்பந்தப்படி ரவி சாஸ்திரி இங்கிலாந்து சென்றுள்ளார்.

இவ்வாறு  நிர்வாகி கூறினார்.

http://sports.dinamalar.com/2015/07/1438362381/kohliindia.html

  • தொடங்கியவர்

இலங்கை மண்ணில் இந்தியா வென்றதில்லை

 

கிரிக்­கெட்டில் பல்­வேறு சாத­னைகள் படைத்­துள்ள இந்­திய அணி, இலங்கை மண்ணில் கடந்த 22 ஆண்­டு­க­ளாக டெஸ்ட் தொடரை வென்­ற­தில்லை என்ற கவலையை நீடித்­துக்­கொண்டே இருக்­கி­றது.

indian-test-cricket.jpg

தலை­சி­றந்த சுழற்­பந்து வீச்­சாளர் கும்ப்ளே, ஹர்­பஜன் சிங் உட்­பட பல்­வேறு சிறந்த பந்து வீச்­சா­ளர்­களை கொண்ட இந்­திய அணி தரவரிசையில் முத­லி­டத்தை எட்­டிப்­பி­டித்­துள்­ளது. வெளி­நா­டு­களில் தங்­க­ளு­டைய சுழற்­பந்து மற்றும் வேகப்­பந்து வீச்சால் அசத்­தி­யுள்ள இந்­திய அணி இலங்­கையில் மட்டும் ஜொலித்­த­தில்லை.

சுழற்­பந்து வீச்­சுக்கு சாத­க­மான இலங்­கையில் இந்­திய அணி 6 முறை சுற்­றுப்­ப­யணம் செய்­துள்­ளது. இதில் கடந்த 1993ஆ-ம் ஆண்டு மட்­டுமே டெஸ்ட் தொடரை வென்­றுள்­ளது. அதற்­குப்பின் டெஸ்ட் தொடரை வென்­ற­தில்லை.

இலங்கை அணியின் முத்­தையா முர­ளி­தரன், அதன்பின் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் இந்­திய அணியை நிலை­கு­லையச் செய்­தனர். 2008-ஆம் ஆண்டு சுற்­றுப்­ப­ய­ணத்தின் போது சேவாக் இரட்டை சதம் அடித்­தாலும், மறு­மு­னையில் உள்ள வீரர்­களை அஜந்த மெண்டிஸ் ஆட்டம் காண வைத்தார்.

தற்­போது இந்­திய அணி மூன்று சுழற்­பந்து வீச்­சா­ளர்­க­ளுடன் களம் இறங்க திட்­ட­மிட்­டுள்­ளது. கோலி 34 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­டி­யி­ருந்­தாலும், இதுவரை இலங்கை மண்ணில் விளையாடியது கிடையாது. இது அவருக்கு பெரும் சவாலாக இருக்கும்.

http://www.virakesari.lk/articles/2015/08/04/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88

  • தொடங்கியவர்

'இலங்கைக்கு எதிராக 5 பந்துவீச்சாளர்கள்தான் துருப்புச்சீட்டு!' - விராட் கோலி

 

டந்த 1993ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியால் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியவில்லை. இந்த முறை எப்படியாவது டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட வேண்டுமென்ற முனைப்பில் இந்திய அணி, இலங்கை சென்று இறங்கியிருக்கிறது.

 

இலங்கைக்கு எதிரான தொடர் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், '' 5 பவுலர்களுடன் விளையாடி எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் வெற்றியை நோக்கி செல்ல உதவும்.  அஸ்வின், புவனேஷ் குமார், ஹர்பஜன் சிங் ஆகியோர் உள்ளனர். இவர்களால் பின்வரிசையில் சிறந்த பேட்டிங் பங்களிப்பையும் தர முடியும்.  டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் சராசரி 40. எனவே அவரை நமது அணியின் ஆல்ரவுண்டராக கொள்ளலாம்.

ராகுல் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது ஷிகர் தவான் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனால் ஷிகர் தவான் இடத்தில்  ராகுல்  வந்தார். பின்னர் தவானும் தவறுகளை திருத்திக் கொண்டு திறமையை காட்ட ஆரம்பித்தார்.  இப்போது விஜயும் சீரான முறையில் விளையாடுகிறார். அதனால் தொடக்க வீரராக இறங்குவதற்கு கொஞ்சம் போட்டி இருக்கத்தான் செய்கிறது.

ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலும்  அபாயகரமான வீரர்தான். எதிரணியிடம் இருந்து வெற்றியை பறிக்கும் திறன் ரோகித்துக்கு உண்டு. எனவே ரோஹித்துக்கு அதிக வாய்ப்பு வழங்குவது அவசியமாகிறது.  ரோகித் 3-ம் விக்கெட்டாக களமிறங்கினால் நடுகளம் வலுவடையும் '' என்றார்.

சென்னையில் பயிற்சி பெற்றது பற்றி குறிப்பிட்ட கோலி, ''  “சுழற்பந்து வீச்சை  கடினமான பிட்சில் ஆடி பயிற்சி பெற விரும்பினேன், அதனால்தான் சென்னையில் இந்தியா 'ஏ' அணிக்காக ஆடினேன். பந்துகளை 'ஸ்வீப்' செய்வதில் எனக்கு மேம்பாடு வேண்டும். ஆஸ்திரேலியாவில் நிறைய ஆடினேன், ஆனால் ஸ்பின்னுக்கு ஆதரவான ஆடுகளத்தில் ஸ்வீப் செய்வது ஒரு சவால். ராகுல் டிராவிட்டும்  அந்தப் போட்டியில் எனது தவறுகளைச் எடுத்து சொன்னார் '' என்றார்.

http://www.vikatan.com/news/article.php?aid=50514

  • தொடங்கியவர்
தொடர் வெற்றி தாகத்துடன் இலங்கைக்கு வந்துள்ள இந்திய அணி
2015-08-05 10:18:09

11428729228-01-02.pngஇலங்கை மண்ணில் கடந்த 22 வரு­டங்­களில் ஈட்­ட­மு­டி­யாத டெஸ்ட் தொடர் வெற்­றியை இம்­முறை என்ன விலை­கொடுத்­தேனும் வெல்ல வேண்டும் என்ற தாகத்­துடன் விராத் கோஹ்லி தலை­மை­யிலான இந்­திய அணி நேற்­று­முன்­தினம் மாலை இலங்கை வந்­த­டைந்­தது.

 

இலங்­கை­யுடன் மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை­யா­டு­வ­தற்­கா­கவே இந்­திய அணி இலங்­கைக்கு வருகை தந்துள்­ளது.

 

1982 செப்­டெம்பர் 17 முதல் 22 வரை சென்­னையில் நடை­பெற்ற ஒற்றை டெஸ்ட் போட்­டி­யுடன் இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான டெஸ்ட் உற­வுகள் ஆரம்­ப­மா­கி­யது.

 

அதன் பின்னர் இலங்­கைக்கு 6 தட­வைகள் கிரிக்கெட் விஜயம் செய்த இந்­திய அணி, 1993இல் அஸா­ருதீன் தலை­மையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 க்கு 0 என கைப்­பற்­றி­யது.

 

அதன் பின்னர் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றில் இந்தியா வெற்­றி­பெற்­றதே இல்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

 

114283951915.png

இந்திய அணி வீரர்கள் கொழும்பு என்.சி.சி. கழக மைதானத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபடுவதற்காக செல்கின்றனர்.

.............................................................................................................................

 

 

இந்­நி­லையில், "இம்­முறை டெஸ்ட் தொடரை கைப்­பற்றும் நோக்கில் ஐந்து பந்­து­வீச்­சா­ளர்­க­ளுடன் இந்­திய அணி களம் இறங்கும்" என அணித்தலைவர் விராத் கோஹ்லி தெரி­வித்­துள்ளார்.

 

பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ரான ஒற்றை டெஸ்ட் போட்­டி­யிலும் ஐந்து பந்­து­வீச்­சா­ளர்­களை இந்­தியா பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

 

டெஸ்ட் போட்டி ஒன்றில் 20 விக்­கெட்­களை கைப்­பற்­று­வதே மிக முக்­கியம் எனவும் விராத் கோஹ்லி குறிப்­பிட்டார்.

 

இலங்கை வருகை தந்­துள்ள இந்­திய அணி நாளை ஆரம்­ப­மாகும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத்தலைவர் அணிக்கு எதி­ரான பயிற்சிப்போட்­டியில் விளை­யா­ட­வுள்­ளது.

 

இப்போட்டி கொ ழும்பு ஆர். பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெ­ற­வுள்­ளது.

 

இந்­திய கிரிக்கெட் குழாம்

 

விராத் கோஹ்லி (அணித் தலைவர்), வருண் ஆரொன், ரவிச்­சந்­திரன் அஷ்வின், ஷிக்கர் தவான், ஹர்­பஜன் சிங், புவ­ணேஷ்வர் குமார், அமித் மிஷ்ரா, சேத்­தேஷ்வர் புஜாரா, அஜின்­கியா ரஹானே, லோக்கேஷ் ராகுல், ரிதிமான் சஹா, இஷாந்த் ஷர்மா, ரோஹித் ஷர்மா, முரளி விஜய், உமேஷ் யாதவ்.

 

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் குழாம்

 

லஹிரு திரி­மான்ன (அணித் தலைவர்), தனஞ்­செய டி சில்வா, கௌஷால் சில்வா, உப்புல் தரங்க, மிலிந்த சிறி­வர்­தன, குசல் ஜனித் பெரேரா (விக்கெட் காப்­பாளர்), ஷெஹான் ஜயசூரிய, நிசல தாரக்க, கசுன் ரஜித்த, விஷ்வா பெர்னாண்டோ, ஜெவ்றி வெண்டர்சே, லஹிரு கமகே, தனுஷ்க குணதிலக்க, சச்சித் பத்திரன, நிரோஷன் டிக் வெல்ல.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11429#sthash.jaLfKyGk.dpuf
  • தொடங்கியவர்

இலங்கையில் விராட் கோலிக்கு தொடக்கமே சரியில்லை... பினிஷிங் எப்படியோ?

 

கொழும்புவில் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். எனினும் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், ராகுல் கைகொடுத்ததால் இந்திய அணி கவுரவமான ரன்களை எட்டியது.

viru.jpg

கொழும்பு பிரமதேச மைதானத்தில், டாஸ் வென்ற  இலங்கை கிரிக்கெட் வாரிய அணி கேப்டன் திரிமண்ணே, இந்திய அணியை முதலில் பேட் செய்ய கேட்டுக்கொண்டார். தொடக்க வீரர்களாக கே.எல்.  ராகுல், ஷிகர் தவான் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும்  108 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 43 ரன்களில் கமகே பந்தில், குணதிலகவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

rohith%281%29.jpg

அடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா, வெறும் 7 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் விராட் கோலி, 8 ரன்கள் எடுத்து வெளியேற, இந்திய அணி திணறத் தொடங்கியது. அடுத்து ஜோடி சேர்ந்த ரஹானே, புஜாரா ஜோடி இலங்கை வீரர்களின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு, ரன்களை சேகரிக்கத் தொடங்கியது.

ரஹானே சதமடித்து விளையாடி வருகிறார். புஜாரா 42 ரன்களுக்கு அவுட் ஆனார். இந்திய அணி தற்போது 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=50633

  • தொடங்கியவர்
குமார் சங்கக்காரவுக்கு வெற்றிவாகையுடன் விடையளிக்க காத்திருக்கின்றோம்- ஏஞ்சலோ மெத்தியூஸ்
2015-08-07 10:29:07

இலங்­கையின் அதி­சி­றந்த கிரிக்கெட் வீரர்­களில் ஒரு­வ­ரான குமார் சங்­கக்­கா­ர­வுக்கு இந்­தி­யா­வு­ட­னான டெஸ்ட் கிரிக்கெட் தொட­ரின்­போது வெற்­றி­வா­கை­யுடன் விடை­ய­ளிக்க இலங்கை அணி வீரர்கள் காத்­தி­ருப்­ப­தாக அணித் தலைவர் தெரி­விக்­கின்றார்.

 

11465DSC_0087.jpg600.jpg

 

‘‘எம்மைப் பொறுத்தமட்டில் இந்­தி­யா­வு­ட­னான டெஸ்ட் தொடர் (மூன்று போட்­டிகள்) மிகவும் கடி­ன­மா­னது. நேர்­மை­யாக கூறு­வ­தென்றால் இலங்கை அணி மறு­ரூபம் அடை­வ­தற்­கான முயற்­சியில் இறங்­கி­யுள்­ளது.

 

எனவே இங்­கி­ருந்து முன்­னேற்­றத்தை நோக்கி நகர்­வதே எம் முன்னே உள்ள சவா­லாகும். அதனை வெகு­வி­ரைவில் நிறை­வேற்­றுவோம்.

 

அதற்­கான நம்­பிக்கை எமக்கு நிறைய இருக்­கின்­றது’’ என தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் நேற்­று­முன்­தினம் இரவு நடை­பெற்ற செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது ஏஞ்­சலோ மெத்தியூஸ் கூறினார்.

 

வேகப்­பந்­து­வீச்­சா­ளர்­க­ளான துஷ்­மந்த சமீ­ரவைத் தொடர்ந்து தற்­போது சுரங்க லக்­மாலும் உபா­தைக்­குள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் தானும் பூரண ஆரோக்­கியம் பெற­வில்லை எனவும் ஏஞ்­சலோ மெத்யூஸ் கூறினார்.

 

டெஸ்ட் போட்­டிக்கு முன்னர் பூரண தேகா­ரோக்­கியம் பெற்றால் விளை­யா­டுவேன் எனவும் மெத்தியூஸ் தெரி­வித்தார்.

 

மறு­ரூ­ப­மா­வ­தற்­கான (ட்ரான்ஸ்­போர்மிங்) முயற்­சியில் இறங்­கி­யுள்ள இலங்கை அணியில் மாற்­றங்கள் ஏற்­ப­டுமா? எனக் கேட்­ட­போது,

 

‘‘பெரிய மாற்­றங்கள் இருக்­காது. பாகிஸ்­தா­னு­ட­னான டெஸ்ட் போட்­டியில் அனை­வரும் சிறப்­பாக விளை­யா­டி­யி­ருந்தோம்.

 

எனவே மாற்­றங்கள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும்’’ என்றார்.

 

சங்­கக்­கா­ரவின் இடத்தை நிரப்­பு­வது யார்?

 

குமார் சங்­கக்­கா­ரவின் இடத்தை யார் நிரப்­பு­வார்கள் என அணி பயிற்­றுநர் மார்வன் அத்­தப்­பத்­து­விடம் பிரத்­தி­யே­க­மாக கேட்­ட­போது,

 

’’நிச்­ச­ய­மாக லஹிரு திரி­மான்ன. அவர் குமார் சங்­கக்­கா­ரவின் மூன்றாம் இலக்­கத்தை நிரப்­புவார்’’ என பதி­ல­ளித்தார்.

 

துடுப்­பாட்ட வரி­சையில் அல்ல, குமார் சங்­கக்­கா­ரவின் இடை­வெ­ளியை யார் நிரப்­பு­வார்கள் என மீண்டும் கேட்­ட­போது, ‘‘உப்புல் தரங்­கதான் அவ­ருக்குப் பதில் பொருத்­த­மா­னவர்.

 

அவர் தனது மீள்­வ­ரு­மை­கயில் பாகிஸ்­தா­னு­ட­னான தொடரில் அழுத்­தத்­திற்கு மத்­தியில் திற­மையை வெளிப்­ப­டுத்­தினார்.

 

நான் எனது முதல் ஐந்து இன்­னிங்ஸ்­களில் ஓட்டம் பெற­வே­யில்லை. ஆனால் அதன் பின்னர் இரட்டைச் சதங்­களை விளா­சி­யி­ருந்தேன்.

 

எனவே உப்புல் தரங்­க­வுக்கும் இன்னும் சில வாய்ப்­பு­களை வழங்கி அவ­ருக்கு உற்­சா­கத்­தையும் நம்­பிக்­கை­யையும் ஊட்­ட­வேண்டும்’’ என்றார்.

 

விராட் கோஹ்லி கருத்து

 

இலங்­கையும் இந்­தி­யாவும் தத்­த­மது அணி­களை மீளக் கட்டி எழுப்பும் நிலையில் இருக்­கின்­றன.

 

பல இளம் வீரர்கள் அணியில் இடம்­பெ­று­கின்­றனர். 

 

இது ஒரு சிறந்த நகர்­வாகும். எவ்­வா­றா­யினும் இந்தத் தொடர் இரண்டு அணி­க­ளுக்கும் சம­வாய்ப்பு இருப்­பதால் கடும் போட்டித் தன்மை நிலவும் என விராட் கோஹ்லி தெரி­வித்தார்.

 

‘‘2008 - 2009 கிரிக்கெட் பரு­வ­கா­லத்தில் நான் முதல் தட­வை­யாக இலங்கை வருகை தந்­த­போது இங்கு எமது வீரர்கள் உப­ச­ரிக்­கப்­பட்ட விதம் எங்­களை மனங்­கு­ளிர வைத்­தது.

 

இலங்­கையில் வீடு­களை வாங்கி மூன்று மாதத்­திற்கு ஒரு­முறை இங்கு வந்­து­போ­க­வேண்டும் என்ற உணர்வை அந்த சுற்­றுப்­ப­யணம் ஏற்­ப­டுத்­தி­யது’’  என்றார் விராட் கோஹ்லி.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11465#sthash.0VZVsfit.dpuf
  • தொடங்கியவர்

இலங்கையில் ஒரு பிராட் : 4 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை அள்ளினார் இஷாந்த் சர்மா!

 

ந்திய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் அணி 10 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்த 5  விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா அள்ளினார்.

கொழும்புவில் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். எனினும் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், ராகுல் கைகொடுத்ததால் இந்திய அணி கவுரவமான ரன்களை எட்டியது.

viru.jpg

டாஸ் வென்ற  இலங்கை கிரிக்கெட் வாரிய அணி கேப்டன் திரிமண்ணே, இந்திய அணியை முதலில் பேட் செய்ய கேட்டுக்கொண்டார். தொடக்க வீரர்களாக கே.எல்.  ராகுல், ஷிகர் தவான் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும்  108 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 43 ரன்களில் கமகே பந்தில், குணதிலகவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

rohith%281%29.jpg

அடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா, வெறும் 7 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் விராட் கோலி, 8 ரன்கள் எடுத்து வெளியேற, இந்திய அணி திணறத் தொடங்கியது. அடுத்து ஜோடி சேர்ந்த ரஹானே, புஜாரா ஜோடி இலங்கை வீரர்களின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு, ரன்களை சேகரிக்கத் தொடங்கியது.ரஹானே 109 ரன்களும் புஜாரா 42 ரன்களும் அடித்தனர். இந்திய அணி முதன் இன்னிங்சில் 351 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

ish.jpg

இதனைத் தொடர்ந்து இலங்கை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் தனஞ்சயா டி சில்வா மற்றும் கவுசல் சில்வா ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் இஷாந்த் சர்மா விக்கெட்டை கழற்றினார். அடுத்து திரிமண்ணே 5 ரன்களில் இஷாந்தின் பந்துவீச்சில் வெளியேறினார்.

உபுல் தாரங்கா பெரைரா ஆகியோரும் டக் அவுட் ஆனார்கள். இலங்கை அணி 10 ரன்களை எட்டுவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்த 5 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மாதான் வீழ்த்தினார். இஷாந்த் சர்மா 4 ஓவர் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

http://www.vikatan.com/news/article.php?aid=50633

  • தொடங்கியவர்

இலங்கை வாரிய அணி 121 ஆல் அவுட்; கோலி, ரோஹித் சர்மா மீண்டும் ஏமாற்றம்

 
பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொதப்பல். | படம்: ஏ.எஃப்.பி.
பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொதப்பல். | படம்: ஏ.எஃப்.பி.

கொழும்புவில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை வாரியத் தலைவர் அணியை 121 ரன்களுக்குச் சுருட்டி இந்திய அணி 230 ரன்கள் முன்னிலை பெற்றது. இசாந்த் சர்மா 7 ஓவர்கள் 1 மெய்டன் 23 ரன்கள் 5 விக்கெட்டுகள் என்று அபாரமாக பந்துவீசினார்.

இதனையடுத்து தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிவரும் இந்திய அணியில், தொடக்க வீரர்களாக ’தங்கள் பார்முக்காக சற்றும் மனம் தளராது போராடி வரும்’ விராட் கோலி, ரோஹித் சர்மா களமிறங்கி ஏமாற்றமளித்தனர்..

20 பந்துகளைச் சந்தித்த ரோஹித் சர்மா 1 பவுண்டரியுடன் 8 ரன்கள் எடுத்திருந்த போது இடது கை வேகப்பந்து வீச்சாளர் விஸ்வ திலினா பெர்ணாண்டோவிடம் எல்.பி.ஆகி வெளியேறினார். முதல் இன்னிங்ஸிலும் 7 ரன்களில் ரோஹித் ஏமாற்றமளித்தது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி 34 பந்துகளைச் சந்தித்து 1 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்ஸில் அவுட் ஆன அதே ரஜிதாவிடம் ஆட்டமிழந்தார். பதிரானா என்பவரிடம் கேட்ச் கொடுத்து 2-வது இன்னிங்ஸிலும் ஏமாற்றமளித்தார் விராட் கோலி.

இடையில் விருத்திமான் சஹா 1 ரன்னில் பெர்ணாண்டோவின் பந்தில் எல்.பி.ஆனார். 28/3 என்று சொதப்பி வரும் நிலையில் புஜாரா, கே.எல்.ராகுல் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

முன்னதாக இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸில் 351 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய இலங்கை வாரியத் தலைவர் அணி தொடக்கத்தில் இசாந்த் சர்மா வேகத்துக்கு 10 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால் அதன் பிறகு சிரிவர்தனா (32), டிக்வெல்லா (41), குணதிலக (28) ஆகியோர் பங்களிப்பு செய்ய 121 ரன்கள் எடுத்தது. இசாந்த் தவிர இந்திய தரப்பில் வருண் ஆரோன், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஹர்பஜன் சிங் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

http://tamil.thehindu.com/sports/இலங்கை-வாரிய-அணி-121-ஆல்-அவுட்-கோலி-ரோஹித்-சர்மா-மீண்டும்-ஏமாற்றம்/article7512122.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.