Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் இருபது 20 அணிக்கு அவ்றிடி தலைவர்

Featured Replies

பாகிஸ்தான் இருபது 20 அணிக்கு அவ்றிடி தலைவர்
 

11237afridi.jpgபாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட சரவ்தேச இருபது 20 கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் தலைவராக ஷஹித் அவ்றிடி தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.

பாகிஸ்தான் இருபது 20 கிரிக்கெட் குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது.

 

இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியில் விளையாடிவரும் மொஹமத் ஹவீஸ், மொஹமத் இர்ஃபான், ஷொயெப் மாலிக் ஆகியோர் இருபது 20 கிரிக்கெட் குழாமிலும் இடம்பெறுகின்றனர்.

 

பாகிஸ்தான் இருபது 20 கிரிக்கெட் குழாம்: ஷஹித் அவ்ரிடி (அணித் தலைவர்), சர்வ்ராஸ் அஹ்மத் (உதவி அணித் தலைவர்), அஹ்மத் ஷேஹ்ஸாத், அன்வர் அலி, இமாத் வசிம், மொஹமத் ஹவீஸ், மொஹமத் இர்வான், மொஹமத் ரிஸ்வான், முக்தார் அஹ்மத், நௌமான் அன்வர், ஷொயெப் மாலிக், சொஹெய்ல் தன்விர், உமர் அக்மால், வஹாப் ரியாஸ், யசிர் ஷா, ஸியா உல் ஹக்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11237#sthash.rHYC7SUg.dpuf
  • தொடங்கியவர்

பாகிஸ்தானுக்கு எதிரான 20 க்கு இருபது இலங்கை குழாம் அறிவிப்பு

 
 

பாகிஸ்தான் அணிக்கெதிராக இரு இருபதுக்கு 20  போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

sl_7.jpg

லசித் மலிங்க தலைமையிலான இந்த குழாமில் 5 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திரிமான்னே மற்றும் சந்திமால் ஆகியோரின் பெயர்கள் இக் குழாமில் இடம்பெறவில்லை.

சாமர ஹப்புகெதரவுக்கு மூன்று வருடங்களின் பின்னர் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,

லசித் மலிங்க ( அணித் தலைவர்), திலகரட்ண டில்ஷான், குஷல் பெரேரா, கித்ருவன் விதானகே, தனஞ்சய டி சில்வா, அஞ்சலோ மெத்தியுஸ், டசுன் சானக்க, சாமர ஹப்புகெதர, ஷிஹான் ஜயசூரிய, திஸர பெரேரா, ஜெப்ரி வென்டர்சே, நுவான் குலசேகர, பின்னுர பெர்னாண்டோ, சத்துரங்க டி சில்வா, மலிந்த சிறிவர்தன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, பாகிஸ்தான் அணிக்கெதிரான இரு இருபதுக்கு 20 போடடிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைத்தானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/articles/2015/07/23/பாகிஸ்தானுக்கு-எதிரான-20-க்கு-இருபது-இலங்கை-குழாம்-அறிவிப்பு

  • தொடங்கியவர்
இலங்கை இருபது 20 அணியில் ஐந்து புதுமுகங்கள்
2015-07-24 10:37:49

11256binura.jpgடெஸ்ட் மற்றும் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்­கு­களில் சிரேஷ்ட வீரர்­களின் ஓய்­வை­ய­டுத்து "மறு­ரூ­ப­மா­வ­தற்­கான" முயற்­சியில் இறங்­கி­யுள்ள இலங்கை தற்­போது பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொட­ருக்கும் புது­மு­கங்­களை இணைத்­துக்­கொண்­டுள்­ளது.

 

லசித் மலிங்க தலை­மை­யி­லான சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் குழாமில் ஐந்து புது­முக வீரர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

 

பாகிஸ்­தா­னு­டனான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொட­ருக்கு 6 அடி உயரமான இட­து கை வேகப்­பந்­து­வீச்­சாளர் பினுர பெர்­னாண்­டோவைப் போன்­றோரை குழாமில் சேர்த்­தி­ருக்­க­லாம் என மெட்ரோ நியூஸ் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது.

 

இப்­போது அவர் இரு­பது 20 குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார்.

 

கடந்த வருடம் நடை­பெற்ற 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களில் இவர் சிறப்­பாக செயற்­பட்­டி­ருந்தார்.

 

லஹிரு திரி­மான்ன, தினேஷ் சந்­திமால் ஆகியோர் தெரி­வா­ளர்­க­ளினால் பொருட்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

 

எனினும் பாகிஸ்­தா­னு­ட­னான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொட­ரின்­போது புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருந்த வேகப்­பந்­து­வீச்­சாளர் நுவன் குல­சே­கர குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார்.

 

பினுர பெர்­னாண்­டோவை விட தசன் ஷன்க, ஜெவ்றி வெண்­டர்சே, ஷெஹான் ஜய­சூ­ரிய, தனஞ்­செய டி சில்வா ஆகி­யோரும் புது­மு­கங்­க­ளாக குழாமில் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

 

அத்­துடன் மூன்று வருட இடை­வெ­ளியின் பின்னர் 28 வய­து­டைய சாமர கப்புகெ­தர இரு­பது 20 கிரிக்கெட் குழாமில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார்.

 

டெஸ்ட் மற்றும் சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­க­ளுக்­கான இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ், தில­க­ரட்ன டில்ஷான், குசல் ஜனித் பெரேரா, கித்­ருவன் வித்­தா­னகே, திசர பெரேரா, சத்­து­ரங்க டி சில்வா, மிலிந்த சிறி­வர்­தன ஆகி­யோரும் குழாமில் இடம்­பெ­று­கின்­றனர்.

 

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு சர்வதேச இருபது 20  கிரிக்கெட் தொடர் போட்டிகள் கெத்தாராம ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் ஜூலை 30ஆம் திகதியும் ஆகஸ்ட் முதலாம் திகதியும் நடைபெறவுள்ளன.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11256#sthash.TOYsk1KN.dpuf
  • தொடங்கியவர்

20 ஓவர் தொடரை கைப்பற்றுமா இலங்கை

 
 

இலங்கை - பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான 2 போட்­டி­கள்­கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரை இலங்கை அணி வெல்­லுமா என்­ப­துதான் இப்­போது அனைத்து கிரிக்கெட் ரசி­கர்­க­ளி­னதும் எதிர்­பார்ப்பாக இருக்கிறது.

pak_2.jpg
பாகிஸ்தான் அணி இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளை­யா­டி­யது. ஒருநாள் தொடரின் கடை­சிப்­போட்டி நேற்­று­முன்­தினம் ஹம்­பாந்­தோட்டை மைதா­னத்தில் நடை­பெற்­றது. இந்­தப்­போட்­டியில் இலங்கை அணி 165 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் பாகிஸ்­தானை வீழ்த்தி வெற்­றி­பெற்­றது.

இதில் அதி­ர­டியை வெளிப்­ப­டுத்­திய குஷல் பெரேரா 116 ஓட்­டங்­களை விளா­சினார். மறு­மு­னையில் தில்ஷான் 62 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்டார். அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் இறு­தி­வரை ஆட்­ட­மி­ழக்­காமல் 70 ஓட்­டங்­களைப் பெற்றார். இறு­தியில் இலங்கை அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 ஓவர்­களில் 368 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.

பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் 37.2 ஓவர்­களில் சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 203 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்றும் 165 ஓட்­டங்­களால் தோல்­வி­ய­டைந்­தது. ஆனாலும் பாகிஸ்தான் 3–2என்ற அடிப்­ப­டையில் தொட ரைக் கைப்­பற்­றி­யது.

இந்­நி­லையில் இரு அணி­க­ளுக்­கு­மி­டையில் எதிர்­வரும் 30ஆம் திகதி ஆரம்­ப­மா­கின்­றது 20 ஓவர் கிரிக்கெட் தொடர். இதன் இரண்­டா­வது போட்டி செப்­டெம்பர் 1ஆம் திகதி நடக்­கி­றது. இவ்­விரு போட்­டி­களும் கொழும்பு ஆர். பிரே­ம­தாஸ மைதா­னத்­தில்தான் நடக்­கி­றன.

இந்தப் போட்­டி­க­ளுக்­காக இலங்கை அணியில் 5 புது­முக வீரர்­கள் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர். இந்த அணியில் பினுர பெர்­னாண்டோ (வேகப்­பந்து வீச்­சாளர்), தசுன் ஷானக (சக­ல­துறை ஆட்­டக்­காரர்), ஜெப்ரே வந்­தேர்சாய் (சுழற்­பந்து வீச்­சாளர்), ஷேகன் ஜய­சூர்ய மற்றும் தனஞ்­ஜய டி சில்வா (துடுப்­பாட்ட வீரர்கள்) ஆகியோர் புது­முக வீரர்­க­ளாக அறி­மு­க­மா­கின்­றனர்.

லசித் மாலிங்க அணித் தலை­வ­ராக செயற்­ப­டு­கின்றார். அதேபோல் அனு­ப­ வீரர் தில­க­ரத்ன டில்ஷான், குஷால் பெரேரா, கித்­ருவான் விதா­னகே, தனஞ்­ஜய டி சில்வா, மெத்யூஸ், தசுன் ஷானக, சாமர கபு­கெ­தர, ஷேகன் ஜய­சூரிய, திசர பெரேரா, ஜெப்ரே வந்­தேர்சாய், நுவன் குல­சே­கர, பினுர பெர்­னாண்டோ, சத்­து­ரங்க டி சில்வா, மலிந்த சிறி­வர்­தன ஆகியோர் அணியில் இடம்­பெற்­றுள்­ளனர்.

பாகிஸ்தான் அணிக்கு எதி­ரான கடை­சியும் ஐந்­தா­வ­து­மான ஒருநாள் போட்­டியில் லசித் மாலிங்க அணியில் இடம்­பெ­ற­வில்­லை­யென்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்தத் தொடரின் முத­லா­வது 20 ஓவர் போட்டி ஜூலை 30ஆம் திக­தியும்இ 2ஆ-வது போட்டி ஆகஸ்ட் மாதம் 1ஆம் திக­தியும் நடை­பெ­ற­வி­ருக்­கி­றது.

ஏற்கனவே பாகிஸ்தானிடம் டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் இழந்துள்ள இலங்கை அணி 20 ஓவர் தொடரை நிச்சயம் கைப்பற்றியாக வேண் டும் என்பதுதான் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

 

http://www.virakesari.lk/articles/2015/07/28/20-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

  • தொடங்கியவர்

முதல் டி20 போட்டி: இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

 
 
pak_2494336f.jpg
 

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான்.

இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று முன்தினம் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அஹமது ஷெஸாத் 38 பந்துகளில் 46 ரன்களும், ஷோயிப் மாலிக் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 46 ரன்களும், உமர் அக்மல் 24 பந்துகளில் 46 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. அந்த அணியில் ஸ்ரீவர்த்தனா 35 ரன்களும், டி சில்வா, கபுகேதரா ஆகியோர் தலா 31 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் சோஹைல் தன்வீர் 3 விக்கெட்டுகளையும், அன்வர் அலி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சோஹைல் தன்வீர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இநத் வெற்றியின் மூலம் இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது பாகிஸ்தான். 2-வது போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது.

அப்ரிதி நெகிழ்ச்சி

வெற்றி குறித்துப் பேசிய பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிதி, “இந்த வெற்றிக்கான பாராட்டுகள் அனைத்தும் எங்கள் வீரர்களையே சேரும். எங்கள் அணியின் கூட்டு முயற்சிக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றி இது. குறிப்பாக ஷெஸாத், ஹபீஸ், மாலிக், அக்மல் ஆகியோர் சிறப்பாக பேட் செய்தனர். பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

உலகின் தலைசிறந்த அணியாக வரவேண்டுமெனில் வலுவான வீரர்கள் தேவை. எங்கள் அணி வலுவான வீரர்களைக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களுடைய பீல்டிங் சிறப்பாக இருந்தது. இளம் வீரர்கள் பொறுப்பை உணர்ந்து தங்களின் பணியை சிறப்பாக செய்தனர். போட்டியைக் காண மைதானத்துக்கு வந்திருந்த ரசிகர்களுக்கும், எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இங்கு வந்திருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/முதல்-டி20-போட்டி-இலங்கையை-வீழ்த்தியது-பாகிஸ்தான்/article7488608.ece

 

  • தொடங்கியவர்

இலங்கை வெல்லுமா? வீழுமா? இன்று இரண்டாவது போட்டி

 
 

இலங்கை -– பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டையில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்­டியில் இலங்கை அணி தோல்வி கண்­டுள்ள நிலையில் இன்று இரண்­டா­வது போட்­டியில் இவ்­விரு அணி­களும் மோது­கின்­றன.afridi-malinga.jpg

இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு விளை­யாடி வரும் பாகிஸ்தான் அணி ஏற்­க­னவே டெஸ்ட் தொட­ரையும் ஒருநாள் தொட­ரையும் கைப்­பற்­றி­யது. அந்த வெற்றிக் களிப்பில் நேற்று முன்­தினம் 20 ஓவர்கள் தொடரில் பங்­கேற்­றது. ஏற்­க­னவே 2 தொடர்­க­ளையும் இழந்த நிலையில் இலங்கை அணி 20 ஓவர் தொடரைக் கைப்­பற்றும் என்­ப­துதான் அனை­வ­ரு­டைய எதிர்­பார்ப்­பா­கவும் இருந்­தது. ஆனால் இலங்கை அணி ஏமாற்­றி­விட்­டது.

இந்­நி­லையில் இந்தத் தோல்­விக்கு நானே காரணம் என்று இலங்கை அணியின் 20 ஓவர் கிரிக்­கெட்­டிற்­கான அணித்­த­லைவர் லசித் மலிங்க தெரி­வித்­துள்ளார்.
ஆர்.பிரே­ம­தாஸ சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் நடை­பெற்ற இந்­தப்­போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் அணி 175 ஓட்­டங்­களைச் சேர்த்­தது. 176 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்­திய இலங்கை அணி 29 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது. இதில் இலங்கை அணித்­த­லைவர் மலிங்க ஓட்­டங்­களை அள்ளிக் கொடுத்தார். அவர் 4 ஓவர்­களில் 1 விக்கெட் மட்டும் எடுத்த நிலையில் 46 ஓட்­டங்­களை விட்டுக் கொடுத்தார்.

இது பற்றி மலிங்க கூறு­கையில், நான் சிறப்­பாக பந்து வீச­வில்லை. நான் அனு­பவ வீர­ராக இருந்­தி­ருந்தால், அதற்கு ஏற்­றதை அணிக்கு செய்­தி­ருக்க வேண்டும். ஆனால் நான் அதை செய்­ய­வில்லை. அதே சமயம் மற்ற வீரர்­க­ளையும் குறை­கூற முடி­யாது. அவர்கள் இளம் வீரர்கள். தற்­போது தான் கற்றுக் கொண்டு வரு­கி­றார்கள்.

கப்­பு­கெ­தர மற்றும் புது­முக வீரர் சிறி­வர்த்­தன ஆகி­யோர்­களின் அதி­ரடி ஆட்டம் மகிழ்ச்சி அளிக்கும் வித­மாக இருக்­கி­றது. இதில் சிறி­வர்த்­தன போட்­டியின் முடிவை தனி ஆளாக மாற்றக் கூடி­யவர்.

மேலும், அடுத்த போட்­டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் இன்னும் அதிக தாக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என்று கூறி­யுள்ளார்.

இன்று ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடை­பெறும் இரண்­டா­வது 20 ஓவர் போட்­டி­யிலா­லா­வது இலங்கை வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்
திருந்து பார்ப் போம்.

http://www.virakesari.lk/articles/2015/08/01/இலங்கை-வெல்லுமா-வீழுமா-இன்று-இரண்டாவது-போட்டி

  • தொடங்கியவர்

இரண்டாவது T20 போட்டியில் சிறிலங்கா 20 ஓவர் முடிவில் 172/7

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் 44/5    8 ஓவர்கள் முடிவில்

  • தொடங்கியவர்

Boom Boom அப்ரிடின் அதிரடியில் பாகிஸ்தான் 95/5   13 ஓவர்கள் முடிவில்

107/7  அப்ரிடி அவுட்

33 பந்தில் 63 ஓட்டங்கள் தேவை  பாகிஸ்தானுக்கு

  • தொடங்கியவர்

7 பந்தில் 7 ஓட்டங்கள் தேவை பாகிஸ்தானுக்கு

167/9 

பாகிஸ்தான் 1 விக்கெட்டால் வெற்றி

தொடரையும். 2-0 என்ற ரீதியில் பாகிஸ்தான் வென்றது

  • தொடங்கியவர்
பரபரப்பான இரண்டாவது இருபது 20 போட்டியில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்
 

இலங்கையுடனான இரண்டாவது இருபது20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினால்  வெற்றியீட்டியுள்ளது. இதன் மூலம், இரு போட்டிகள் கொண்ட இந்த இருபது20 தொடரில் 2:0 விகிதத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.

 

11361pakistan-600.jpg

 

கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் இன்று இரவு நடைபெற்ற இரண்டாவது இருபது20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களைப் பெற்றது.


சாமர கப்புகெதர 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும் ஷெஹான் ஜயசூரிய 32 பந்துகளில் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் சொஹைப் மாலிக் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19. 2 ஓவர்களில் 9  விக்கெட்களை இழந்து வெற்றிஇலக்கை அடைந்தது.

 

பாகிஸ்தானின்  9 ஆவது வரிசை வீரர் அன்வர் அலி 17 பந்துகளில் 46 ஓட்டங்களைப்பெற்றார்.   அணித்தலைவர் சஹீத் அவ்ரிடி 22 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பெற்றர்.

 

இலங்கை பந்துவீச்சாளர்களில்  பினுர பெர்னாண்டோ  33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் வீரர் அன்வர் அலி தெரிவானார். இச்சுற்றுப்போட்டியின் ஆட்டநாயகனாக சொஹைப் மாலிக் தெரிவானார்.

http://www.metronews.lk/article.php?category=sports&news=11361

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.