Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ள கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்

Featured Replies

TNA-456ser

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமானது அதன் எதிர்காலப் பயணத்தின் ஆபத்தைக் முன்னரே கட்டியம் கூறுவதாகவுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தை மேலோட்டமாக பார்க்குமிடத்து அது சுயநிர்ணயம், சமஷ்டி, பகிரப்பட்ட இறையாண்மை போன்ற சொற்தொடர்களை பாவித்து ஏதோ வடகிழக்கு தமிழ் மக்களுக்காக தயாரிக்கப்பட்டது போன்ற தோற்றப்பாட்டை காட்டுகிறது. ஆனால் உண்மையில் அது எவ்வாறு சிங்கள மக்களை இயன்றவரை திருப்திப்படுத்த முடியும் என்ற வகையிலும் தனித்து தமிழரசுக்கட்சியென்ற ஒரு கட்சியை முதன்மைப்படுத்தும் வகையிலுமே தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் சுதந்திரத்துக்கு பின்னரான காலத்திலிருந்து அரசியல் உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் ஒடுக்குமுறைக்குள்ளானவர்களாகம் மிகக் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைக் கோர்வைகளினூடாக சித்தரிக்கப்பட்டுள்ளனரே தவிர தவறியேனும் இனவழிப்பிற்குட்பட்ட ஒரு இனமாகக் குறிப்பிடப்படவில்லை. இதன் மூலம் வடமாகாண மக்களும், அம்மக்களால் பெருவாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமது சொந்தக் கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் அலட்சியப்படுத்தப்பட்டு அவர்களது கடும் முயற்சியினால் கொண்டுவரப்பட்ட இன அழிப்பு தீர்மானம் குப்பைக் கூடைக்குள் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் சிங்களத் தலைவர்களையும் ஒரு சில நாடுகளையும் திருப்திப்படுத்துவதினூடாக தமது தனிப்பட்ட அரசியல் விருப்பங்களையும் சித்தாந்தங்களையும் நிறைவேற்றிக்கொள்ள இந்த விஞ்ஞாபனத்தை தயாரித்தவர்கள் முயன்றுள்ளனர். இல்லையென்றால், வட மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்டு அதன் முக்கியத்துவத்தையும் நியாயத்தன்மையையும் துணிச்சலுடன் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிங்கள சகோதரர்களுக்கும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கும் எடுத்தியம்பி வரும் நிலையில் ,கூட்டமைப்பு இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘இனப்படுகொலை’ பற்றி குறிப்பிடுவதில் எந்த கஷ்டமோ மறதியோ இருந்திருக்க முடியாது.

அத்துடன், தமிழர் வரலாற்றை மறைத்து சுதந்திரத்துக்குப் பின்னரான தமிழர் போராட்டத்துக்கு தமிழரசுக்கட்சி என்ற ஒரு கட்சியே போராடியது போன்ற ஒரு தோற்றப்பாட்டை இத்தேர்தல் விஞ்ஞாபனத்தினூடாக ஏற்படுத்தியுள்ளனர். 50:50 கேட்டு போராடிய அகில இலங்கை தமிழ் காங்கிரசையோ, இலங்கையின் வடக்கு, கிழக்கு, தெற்கு என ஒட்டுமொத்த தமிழரையும் ஒன்றாகத் திரட்டி 1976ம் ஆண்டு தனிநாட்டுக்கான ஆணை கோரி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை கொண்டு வந்து பின்னர் தமிழரசுக்கட்சிக்கு பிரதியீடாக ஆயுதப்போராட்டம் வீறுகொண்டெழும்வரை தமிழர்களுக்காக குரல் கொடுத்த தமிழர்விடுதலைக் கூட்டணியையோ, ஆயுதப்போராட்ட அமைப்புக்களும் சாத்வீகக் கட்சிகளும் இணைந்து முதன்முதலாக சர்வதேச அனுசரணையுடன் கொண்டுவந்த திம்புக் கோட்பாடுகள் பற்றியோ அல்லது அதன்பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதப்போராட்டத்தின் மூலம் சுமார் 25 வருடங்களுக்கு மேலான ஸ்தாபித்திருந்த நிழல் தனியரசு பற்றியோ அவர்களால் எதுவும் குறிப்பிட முடியவில்லை.

இங்கு தான் இவர்களின் உள்நோக்கம் வெளிப்படுகின்றது. அதாவது மறைமுகமாக தமிழரசுக்கட்சியில் உள்ளவர்களுக்காக வாக்குக் கேட்க முயல்வதுடன் கூட்டமைப்பில் தமிழர் தேசியத்தில் உறுதியுடன் இருக்கின்ற விடுதலைக்காக ஆயுத ரீதியில் போராடிய ஏனைய குழுக்களை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க விருப்பமின்றி இருக்கின்றமை தெளிவாகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யாமல் இன்று வரை இழுத்தடிப்பு செய்து வருவதன் உள்நோக்கம் இங்கு வெளிப்படுகிறது.

வரிக்கு வரி ஒன்றுபட்ட இலங்கையென்று குறிப்பிடுவதன் மூலம் ‘ஐக்கிய இலங்கையையா’ அல்லது ‘ ‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட இலங்கையையா’ கூட்டமைப்பு விரும்புகிறது என்பதைக் கூட தெளிவாக கூறுவதற்கு கூட்டமைப்பு இங்கே தயங்கி இருக்கிறது. அல்லது திட்டமிட்டு சிங்களவர்களை திருப்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இறுதித் தீர்வானது திம்புக்கோட்பாடு அடிப்படையிலா, ஒஸ்லோ உடன்படிக்கை அடிப்படையிலா அல்லது இந்திய – இலங்கை ஒப்பந்த அடிப்படையிலான ஒரு சமஸ்டி முறையிலானதா என்று ஆணித்தரமாக கூறாமல் கோட்பாட்டு ரீதியான எந்த பின்னணியையும் கூறாமல் சமஸ்டி முறையிலான தீர்வு என்று குறிப்பிட்டுள்ளார்கள். குறிப்பிட வேண்டும் என்பதற்காக ‘ஒஸ்லோ உடன்படிக்கை’ எந்தவித சம்பந்தமும் இல்லாமல் தனியாக மேற்கோள்காட்டப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் மறைக்கப்பட்டுள்ளது, திம்புக் கோட்பாடு மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒஸ்லோ உடன்படிக்கை மட்டும் இவ்வாறு தனியாக சம்பந்தம் இல்லாமல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தீர்வு விடயத்தில் இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு அழமான எந்த கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. விடுதலைப்புலிகளின் கொள்கையை முன்னெடுப்பதாகக் காட்டிக் கொள்ளும் ஒரு தந்திரம் இது என்றே கொள்ள வேண்டி இருக்கிறது.

இலங்கை தொடர்பான ஐ.நாவின் யுத்தக் குற்றவிசாரணை அறிக்கை வெளிவரவுள்ளது என்று முழு உலகுமே மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய ஆட்சியைக் காரணம் காட்டி வெளிவரவிருந்த அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் பிற்போட வைத்தமை தொடர்பாகவோ அல்லது ஜூலை மாதத்துக்கு முன் உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்றை ஏற்படுத்தப்படும் என்று ஐ.நா.மனிதவுரிமை சபை ஆணையாளருக்கு வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியது தொடர்பாகவோ அல்லது சிறிலங்காவினால் அமைக்கப்பட்ட எந்தவொரு ஆணைக்குழுவும் தனது விசாரணை அறிக்கைகளை வெளியிட்ட வரலாறு இல்லை என்பது பற்றியோ குறிப்பிட்டு எமக்கு சிறிலங்காவின் உள்ளக விசாரணை பொறிமுறையில் நம்பிக்கையில்லை, சர்வதேச சுயாதீன விசாரணையே வேண்டும் என்று வெளிப்படையாக திட்டவட்டமாக வலியுறுத்தி தமிழ் மக்களின் ஆணையை பெற்றுக்கொள்ள முயன்றிருக்க வேண்டுமல்லவா?

இறுதியாக ஒரு கேள்வி, சில மாதங்களுக்கு முன்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனான பகிரங்க விவாதத்தில் மைத்ரி அரசுடன் ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்தை கூட்டமைப்பு செய்திருப்பதாகவும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அதனை கட்டாயம் மக்களுக்கு தெரியப்படுத்துவதாகவும் சுமந்திரன் கூறியிருந்தார். இதனை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்தி தமது அரசியல் நாணயத்தை வெளிப்படுத்துவார்களா?

-லோ. விஜயநாதன்

நன்றி : சமகளம்.கொம்

http://tamilleader.com/?p=50284

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.