Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளக பொறி முறையை ஏற்றுக் கொள்ள முடியாது - சமஷ்டி தீர்வினை சர்வதேச ஆதரவுடன் பெற்றுக் கொள்வோம் .- சுரேஷ் பிரேமசந்திரன்

Featured Replies

இனத்துவேச அரசியல் செய்பவர்களை கண்டிக்க வேண்டும் சுரேஷ் பிரேமசந்திரன்:-

உள்ளக பொறி முறையை ஏற்றுக் கொள்ள முடியாது - சமஷ்டி தீர்வினை சர்வதேச ஆதரவுடன் பெற்றுக் கொள்வோம் :-

 

இலங்கை அரசு உள்ளக பொறிமுறையின் ஊடாக யுத்த குற்ற விசாரணைகளை மேற்கொண்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

 
யாழில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில்,
 

ஐநா அறிக்கையில் உள்ள சில விடயங்கள் கசிந்துள்ளதாக சனல் 4 ஊடகங்கள் ஊடாக சில செய்திகள் வெளிவந்துள்ளது. அந்த செய்திகளின் பிரகாரம் பார்கின்ற போது முக்கியமாக இது ஒரு உள்ளக பொறிமுறையை உருவாக்குவதற்காக சில ஆலோசனைகள் சொல்லப்பட்டு இருப்பதாகவும், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இவ்வாறான சில விடயங்கள் உட்புகுதப்பட்டு இருக்கலாம் என்ற கருத்துக்கள் வெளிவந்துள்ளது அவற்றின் உண்மை தன்மைகளை அறியவில்லை.

 
ஆனா பல ஊடகங்களில் ஊடாக வந்த கருத்துக்களின் படி பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கும்மா என்ற சந்தேக எழுந்துள்ளது.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த வரை ஐநா மனித உரிமை ஆணையகத்தின் விசாரணை சரியான முறையில் நடைபெற்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அந்த அறிக்கை பாரப்படுத்த பட வேண்டும்.
 
ஆனாலும் கூட இலங்கை அரசாங்கம் ரோம் நியாதிக்க சட்டத்தில் கையெழுத்து வைக்க வில்லை என்ற அடிப்படையில் இந்த விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியாது என்ற கருத்தும் கூறப்பட்டது.
 
இதற்கு முன்னர் யுத்த குற்றம் இடம்பெற்ற நாடுகளில் அது தொடர்பான ஆணை குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு இந்த விடயங்கள் விசாரிக்கப்பட்டு இருக்கின்றது.
 
ஆகவே இலங்கையில் ஏற்பட்ட யுத்த குற்றங்கள் தொடர்பாகவும் சில ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒரு நிலைமை இன்று தோன்றியுள்ளது.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த வரையில் சர்வதேச விசாரணையின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் இலங்கையின் உள்ளக விசாரணை இந்த பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வர முடியாது.
 
ஏனெனில் இலங்கையில் இதற்கு முன்னர் நடைபெற்ற உள்ளக விசாரணைகளான திருமலை மாணவர்கள் , படுகொலை மூதூர் தொண்டு நிறுவன பணியாளர்களின் படுகொலை போன்றவற்றின் விசாரணைகள் மிக மோசமாக நடைபெற்றது.
 
அந்த விசாரணைகளின் போது அதற்கு கண்காணிப்பாளர்களாக இருந்த பலர் அதில் இருந்து விலத்தி சென்று இருந்தமை எல்லோரும் அறிந்ததே.
எனவே உள்ளக விசாரணை என்பது மிக மோசடி தனமானதாக இருக்கும்.
 
குற்றவாளிகளே தம்மை விசாரிக்க சொல்லி நாங்கள் கோருவது சரியாக இருக்கா மாட்டாது நிச்சயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அது ஒரு தீர்வை கொண்டு வர மாட்டாது.
 
இலங்கை அரசு உள்ளக பொறிமுறையின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதன் தீர்வுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
 
சமஷ்டி தீர்வினை இந்தியா அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் பெற்றுக் கொள்வோம் :-



இனப்பிரச்சனைக்கு தீர்வாக நாம் முன் வைத்துள்ள சமஷ்டி தீர்வினை இந்தியா அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் பெற்றுக்கொள்வோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதே தவிர இனங்களுக்கு இடையிலான முரண்பாடு முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்வுக்கான வழிமுறைகளாக சில அடிப்படை விடயங்களை சொல்லி இருக்கின்றது.

வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பது அரசியல் அமைப்பு முறையின் கீழ் அதிகார பகிர்வு வேண்டும் அந்த அதிகார பகிர்வின் ஊடாக சுயாட்சி அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என்று அந்த கருத்துக்கள் சொல்லப்பட்டு இருந்தன 

இவற்றை உடனடியாக தென்னிலங்கை சிங்கள கட்சிகள் மறுதலித்து உள்ளது.ஐக்கிய தேசிய கட்சி ஒற்றையாட்சியின் கீழ் தான் தீர்வு என்றகிறது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சொல்கின்றது 13ம் திருத்தத்தின் ஊடாக தீர்க்கலாம் என்கிறார்கள் ஜே.வி.பி போன்ற கட்சிகள் சமஸ்டி ஆட்சி ஏற்றதல்ல என்கிறார்கள்.

இவர்களின் முக்கிய நோக்கம் சிங்கள மக்கள் மத்தியில் வாக்கு பெற்றுக்கொள்ள வேண்டும் ஆயின் தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுக்க மாட்டோம் அல்லது உள்ளார்ந்த வாரியாகவே தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுக்க கூடாது என்ற அவர்களின் அடிப்படை மனோபாவம். ஆகும் 

எமது கோரிக்கை என்பது ஒன்றுபட்ட நாட்டுக்குள் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பதை மையமாக கொண்டதே  எமது கோரிக்கை மிக மிக குறைந்த பட்ச கோரிக்கை ஆகும்.

13ம் திருத்தத்திற்குள் தான் தீர்வு என்பது வெறும் பித்தலாட்டம் கபட நாடகம் ஆகும் 13ம் திருத்தத்திற்கு மேலதிகமாக சென்று இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என இந்தியாவுக்கு கூறியவர்களே இன்று 13க்குள் தீர்வு என்கிறார்கள்.

நாங்கள் முன் வைத்துள்ள சமஸ்டி தீர்வுக்கு ஆதரவாக இந்தியா அமெரிக்கா போன்ற உலக ஆதரவை திரட்டி எமது இந்த கோரிக்கையை வெல்வதற்கான சர்வதேச நியாங்களை திருப்பி அதனூடாக இந்த கோரிக்கையில் வெற்றி பெறுவோம்.என தெரிவித்தார்.
 

இனத்துவேச அரசியல் செய்பவர்களை கண்டிக்க வேண்டும்

நாட்டை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டுமாயின் இனத்துவேச அரசியல் செய்பவர்களை சகல தரப்பினரும் கண்டிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

 
யாழில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில்,
 

இனவாத கருத்துகளை முன் வைத்து சிலர் வாக்கு கேட்கிறார்கள் இது எதனை காட்டுகின்றது இலங்கையில் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு இவர்கள் எவரும் ஆர்வம் காட்டவில்லை என்பதனை காட்டுகின்றது.

 
இந்த வங்குரோத்து அரசியல் மூலம் வாக்கு பெறுவதற்கும் தேர்தலில் வெல்வதற்காக இனவாத கருத்துகளை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்பவர்களை தமிழ் தேசிய கூட்ட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.
 
இந்த இனத்துவச அரசியல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி , அபிவிருத்தி , முதலீடுகள் என்பற்றை பாதிக்கின்றது  இலங்கையில் உள்ள சிங்கள அரசியல் வாதிகள் தம்மை திருத்திக்கொண்டு இனவாத மற்ற தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க கூடிய நிலைக்கு சிங்கள முற்போக்கு கட்சிகள் சிங்கள ஜனநாயக கட்சிகள் என்பவை முன்வர வேண்டும் 
 
 
வெறும் இனவாத சிந்தனைகளுடன் இவர்கள் வாக்கு கேட்டு செல்வது என்பது மிக மிக பாரிய பின்விளைவுகளை , அமைதியின்மையை வன்முறை கலாச்சாரம் என்பவற்றை ஏற்படுத்தும் இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டிக்கின்றது.
 
இந்த நாட்டை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் இவர்களின் இந்த செயலை ஏனையவர்களும் கண்டிக்க வேண்டும் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கை ஆகும்.என தெரிவித்தார்.
 
 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.