Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளைவான்களில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் கடலுக்கு இரையாக்கப்பட்டனர் – பிரசாந்த ஜயகொடி:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள் கடல் மீன்களுக்கு இரையாக்கப்பட்டதாக முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.


கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிளவடைந்த போராளிகளையும் கடந்த அரசாங்கம் இந்த கொலைகளுக்காக பயன்படுத்திக் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.


கடந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோர் சட்டத்தை கையில் எடுத்து எதேச்சாதிகார போக்கில் செயற்பட்டனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


இந்தக் குற்றச் செயல்களை நியாயப்படுத்துமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய காலத்தில் தமக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதனை எதிர்த்த காரணத்தினால் மட்டக்களப்பிற்கு இடமாற்றம் செய்து அங்கு ஓர் ஆயுதக் குழுவினைக் கொண்டு என்னைக் கொலை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதன் காரணமாகவே தாம் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.


கடந்த காலங்களில் மக்களின் ஆயுட் காலத்தை மஹிந்தவும், கோதபாயவுமே தீர்மானித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


வெள்ளைவான் கடத்தல் கும்பல் நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கொலன்னாவ நகரசபைத் தலைவரை கடத்த இந்தக் குழுவினரே கடந்த காலத்தில் சென்றிருந்தனர் எனவும் அவர்களை மக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த போது, அப்போது மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க அவர்களை விடுதலை செய்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122650/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.