Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடியத் தமிழர்களின் தொடர்ச்சியான கனடாவையும் ஜெனிவாவையும் மையப்படுத்திய தமிழர்களுக்கான நீதி வேண்டிய பரப்புரைகள்.

Featured Replies

கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) மற்றும் கனடிய ஆர்வலர்களும் கனடாவில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தற்போதைய மனித உரிமைகள் மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக கனடிய அரசாங்கத்துடனும் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் அவர்கள் வெளிவிவகார அமைச்சர் ராப் நிக்கல்சன் (Rob Nicholson), புதிய ஜனநாயகக் கட்சியின் வெளியுறவுத் திறனாய்வாளர் Paul Dewar மற்றும் லிபரல் கட்சியின் வெளியுறவுத் திறனாய்வாளர் Marc Garneau அவர்களையும் சந்தித்திருந்தனர்.

கனடாவின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கத்திற்கும் தொடர்ச்சியாக இடம்பெறும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், குறிப்பாக ஜனவரி 8 ல் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் பின் இடம்பெறும் வன்முறைகள், பற்றிய ஆதாரங்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழிருக்கும் தமிழ் பகுதிகளில் இருந்து பெறப்பட்டு வழங்கப்பட்டது. அனைத்துத் தரப்பினரும் போர்க் குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றை அனைத்துலக விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தனர்.

ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதம் 2015 மற்றும் ஜூன் 2015 காலத்தில் முறையே இடம்பெற்ற 28 வது மற்றும் 29 வது மனித உரிமை அமர்வின் போது NCCT ன் மனித உரிமைகளுக்கு பொறுப்பான அணி ஐ.நா மனித உரிமை பேரவையின் அங்கத்துவ நாடுகளுக்கு தமிழர்களின் இன்றைய நிலமைகளை ஆதார பூர்வமாக வழங்கி இருந்தனர். அதனைத் தொடர்ந்து கனடாவில் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், செப்டம்பர் 14 ல் ஆரம்பமாகும், 30 வது அமர்வில் இலங்கை மீதான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளனர். இந்த அறிக்கையில் உள்ளடங்கும் ஆதாரங்கள் அனைத்தும் இலங்கைக்கு வெளியிலிருந்து பெறப்பட்டவையாகும். இலங்கை அரசாங்கம் ஐ.நா பிரதிநிகளை உள் நாட்டில் ஆதாரங்களை பெறுவதை அனுமதித்திருக்கவில்லை. இவ்வறிக்கையின் பரிந்துரையில் இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெறப்போகும் விசாரணைகளின் பொறிமுறைகளின் வகைகள் உள்ளடங்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் வரலாற்றைத் தெரிந்த ஒவ்வொருவருக்கும் ஒரு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையென்பது தமிழருக்கான நீதியை குழிதோண்டிப் புதைக்கும் ஒரு செயற்பாடாகவே இருக்கும் என்பது வெளிச்சம்

.With FM Robnicholson - Final

With Liberal foreign affaris critic Marc Garneau - FinalDeva With NDP Leader - FinalWith NDP Foreign Affairs Critic MP Paul Dewar - Final

With PM Steven Harper at Parliament Hill - FinalWith ND Leader Tom Mulcair - Final (1)

மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை – NCCT
தொலை பேசி: 416.830.7703 மின்னஞ்சல்: info@ncctcanada.ca | முகநூல் @ncctonline

- See more at: http://www.canadamirror.com/canada/48394.html#sthash.GAOSUSrJ.dpuf

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே மேற்கொள்ளப்பட வேண்டும் என கனேடிய புதிய ஜனநாயக கட்சியின் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபஈய்சன் வலியுறுத்தியுள்ளார்.கனேடிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அங்கு நடைபெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சர்வதேச விசாரணைகளின் ஊடாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை குறித்து தனது புதிய ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கு வலியுறுத்தி அதனூடாக சர்வதேச விசாரணையை வலியுறுத்தவுள்ளதாகவும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபஈய்சன் தெரிவித்துள்ளார்.அதே நேரம் இம்முறையும் Scarborough North.பகுதியில் மீண்டும் தேர்தலில் போட்டி இடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

- See more at: http://www.canadamirror.com/canada/48382.html#sthash.XtDQtesp.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.