Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிஷா பிஸ்வாலுடன் பேசியதனையே பிரேரணையாக கொண்டு வந்தேன்- வடக்கு முதல்வர்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:

Featured Replies

நிஷா பிஸ்வாலுடன் பேசியதனையே பிரேரணையாக கொண்டு வந்தேன்- வடக்கு முதல்வர்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:

01 செப்டம்பர் 2015
 
 

 

நிஷா பிஸ்வாலுடன் பேசியதனையே பிரேரணையாக கொண்டு வந்தேன்- வடக்கு முதல்வர்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:

சர்வதேச நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல் இருக்கும் அதனை நாம் கவனத்தில் கொள்ள தேவையில்லை. எமது மக்களுக்கு என்ன பிரச்சனையோ ஏது தேவையோ அதனை நாம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை அமர்வில் முதலமைசரால் சர்வதேச பொறிமுறை ஊடாகவே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரேரணை ஒன்றினை முன் மொழிந்து இருந்தார்.

அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் கருத்து 
குறித்த பிரேரணை குறுகிய காலத்திற்குள் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டது தொடர்பில் பல உறுப்பினர்கள் மத்தியில் குழப்பம் இருக்கலாம் அதனை நான் தெளிவு படுத்த வேண்டும்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான, அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் அவர்களை நாம் கொழும்பிலே கடந்த வாரம் சந்தித்து பேச்சுகளை நடாத்தினோம் 

அதன் போது அவரிடம் விசாரணையின் போது சர்வதேச உள்ளீடு தேவை என வலியுறுத்தி இருந்தோம். ஆனால் அவர் எம்மிடம்  பேசியதில் இருந்து சில விடயங்களை எம்மால் புரிந்து கொள்ள முடிந்தது 

அதனாலேயே இவ்வாறான ஒரு பிரேரணையை நாம் அவசர அவசரமாக கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டது.  இதில் சரி பிழை கதைக்க எதுவும் இல்லை.

முழுமையான உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டால் என்ன நடக்கும் எனபது அனைவருக்கும் தெரிந்த விடயம் அதனால் தான் அவ்வாறன பொறிமுறை வேண்டாம் என கேட்டுக்கொண்டோம்.

ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு நிகழ்சி நிரல் இருக்கும் அதற்காக நாம் அதற்கு ஏற்றது போல் செயற்பட முடியாது எமது மக்களுக்கு என்ன பிரச்சனையோ என்ன தேவையோ அதனை நாம் வெளிப்படுத்த வேண்டும். என தெரிவித்தார்.

அவ்வேளை கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மீது துப்பாக்கியால் தாக்குதல் நடாத்திய நபருக்கே பொது மன்னிப்பு வழங்கியவர்களிடம் போர்க்குற்ற விசாரணையை நடாத்தினால் என்ன நடக்கும் என்பதை சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123523/language/ta-IN/------.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.