Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக மசாலா

Featured Replies

  • தொடங்கியவர்

உலக மசாலா: மாடலிங் உலகைக் கலக்கும் பேராசிரியர்!

 

 
 
 
lady_3163301f.jpg
 
 
 

அமெரிக்காவில் வசிக்கும் லின் ஸ்லேட்டர், பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர். சில ஆண்டு களுக்கு முன்பு நியூயார்க் பேஷன் ஷோவில் ஒரு நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். உணவு இடைவேளை நேரம் என்பதால் அவரை வெளியில் காத்திருக்கச் சொன்னார்கள். அப்போது இரண்டு ஜப்பானிய பத்திரிகையாளர்கள் வந்து, சில கேள்விகளைக் கேட்டனர். புகைப்படங்கள் எடுத்தனர். லின்னின் நளினமான உடை, கைப்பை, அலங்காரம் போன்றவற்றைப் பார்த்து மாடல் என்று தவறாக நினைத்துவிட்டனர். “ஜப்பானியர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே என்னைச் சுற்றிப் பெருங்கூட்டம் கூடிவிட்டது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. பேஷன் உலகில் நான் மிக முக்கியமான நபர் என்று நினைத்திருக்கிறார்கள். எனக்கு விஷயம் புரிவதற்குள் பல்வேறு கேமராக்களில் படங்களை எடுத்துத் தள்ளிவிட்டனர். இப்படித்தான் பேஷன் துறைக்குள் எதிர்பாராமல் நுழைந்தேன். ஜனவரியில் எலைட் லண்டன் நிறுவனம் என்னுடைய ஸ்டைலை பார்த்து மாடலிங் வாய்ப்பு வழங்கியது. அதற்குப் பிறகு பல சர்வதேச நிறுவனங்களிடம் மாடலாக பணியாற்றிவிட்டேன். வயதானவள் என்பதால் இதை அணியாதே, அதைச் செய்யாதே என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டேன். எனக்கு எது வசதியாகத் தோன்றுகிறதோ, நான் எதை அழகாக நினைக்கிறேனோ அப்படித்தான் ஆடைகளை அணிவேன், அலங்காரம் செய்துகொள்வேன். வயது ஒரு நாளும் என் முடிவுகளுக்கு தடையாக இருக்க முடியாது. புதிய ஆடைகளை உருவாக்கி அணியும் ஒவ்வொரு முறையும் மிக இளமையாக உணர்கிறேன்” என்கிறார் லின் ஸ்லேட்டர். இதற்கு முன்பு குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, குடும்ப வன்முறை ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார். தற்போது ‘ஆக்சிடெண்ட்டல் ஐகான்’ என்ற பெயரில் ஒரு பிளாகை நடத்தி, எல்லா வயதினரும் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று எழுதி வருகிறார்.

63 வயதில் மாடலிங் உலகைக் கலக்கும் பேராசிரியர்!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 53 வயது பஸ்கல் பிச் புகழ்பெற்ற விளையாட்டு வீரர். பல்வேறு சாதனைகளைக் கையில் வைத்திருக்கிறார். ஓரிடத்தில் இருந்தபடி பாரிஸ் முதல் மாஸ்கோ வரையிலான தூரத்தை ஸ்டேஷனரி (ஓரிடத்தில் இருக்கும்) சைக்கிள் மூலம் கடந்திருக்கிறார். மிக நீண்ட தூரத்தை மிகக் குறைவான நேரத்தில் கடந்திருக்கிறார். “ஓரிடத்தில் இருந்தபடி சைக்கிள் ஓட்டி 3 ஆயிரம் கி.மீ. தூரத்தை 6 நாட்களில் கடந்திருக்கிறேன். இது பாரிஸுக்கும் மாஸ்கோவுக்கும் இடையிலான தூரத்துக்கு சமம் ஆகும். ஒரு நாளைக்கு 600 கி.மீ. தூரம். இடையில் 3 மணி நேரம் தூங்குவேன். கடந்த ஆண்டு 2,878 கி.மீ. தூரத்தை 6 நாட்களில் கடந்து சாதனை செய்தேன். அந்த சாதனையை முறியடிப்பதற்காகவே இப்போது இறங்கினேன். சாதாரண சைக்கிளை இயக்குவதற்கும் இந்த சைக்கிளை இயக்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வெப்பம், காற்று, மோசமான பாதை உள்ளிட்ட பிரச்சினை இல்லாததால் இயக்குவதற்கு எளிதாக இருக்கும். ஆனால் ஓரிடத்திலிருந்தபடியே ஓட்ட வேண்டும் என்பதால் மனதுக்குக் கஷ்டமாக இருக்கும். 15 வயதில் விளையாட ஆரம்பித்தேன். டிரையத்லான் போட்டிகளில் சாதனைகளை நிகழ்த்தினேன். அதற்குப் பிறகு இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்” என்கிறார் பஸ்கல்.

ஓரிடத்திலிருந்தபடி பாரிஸிலிருந்து மாஸ்கோ சென்ற வீரர்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மாடலிங்-உலகைக்-கலக்கும்-பேராசிரியர்/article9691928.ece?homepage=true&relartwiz=true

  • Replies 1k
  • Views 150k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலக மசாலா: சமாதியில் தூங்கும் மருத்துவர்!

 

 
los_angelaes_3163691f.jpg
 
 
 

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் வசிக்கும் 92 வயது லியாங் ஃபுஷெங், தன் மரணத்தை எதிர்பார்த்து சமாதியில் காத்திருக்கிறார்! ஒரு காலத்தில் இந்த மருத்துவருக்கு அழகான குடும்பம் இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ நோயால் மனைவியையும் மூன்று குழந்தைகளையும் இழந்துவிட்டார். இவருக்கு யாருமில்லை. கிராமத்தினருக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து, அருகில் இருந்த மலையில் 1990-ம் ஆண்டு ஒரு வீட்டைக் கட்ட ஆரம்பித்தார். செங்குத்தான மரங்கள் சூழ்ந்த மலை என்பதால், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம். அதனால் வீட்டைக் கட்டி முடிக்க 14 ஆண்டுகள் ஆனது. 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த வீட்டில் ஒரு சமாதியும் இருக்கிறது. தூக்கம் வரும்போதெல்லாம் சமாதிக்குள் தான் உறங்குகிறார். தான் இறந்து போனால், தன் உடலை யார், எப்படிப் புதைப்பது என்ற கவலையை யாருக்கும் தர விரும்பாததால் இந்த முடிவை மேற்கொண்டு வருகிறார். இந்தச் சமாதிக்கு 5 பூட்டுகள் இருக்கின்றன. சமாதியைச் சுற்றி மின்சாரம் செலுத்தப்பட்டிருக்கிறது. இவர் அனுமதியின்றி யாரும் எளிதில் நுழைந்துவிட முடியாத அளவுக்குப் பல விஷயங்களைச் செய்து வைத்திருக்கிறார். ஏற்கெனவே கிராம மக்களுக்குத் தன்னுடைய இறுதி விருந்தை வழங்கிய லியாங், இன்றுவரை தன்னைத் தேடி உதவி கேட்டு வரும் மக்களுக்கு மருத்துவம் பார்க்கிறார்.

மரணத்தை எதிர்பார்த்து சமாதியில் தூங்கும் மருத்துவர்!

டாட்டூகள் பார்வைக்கு சுவாரசியம் அளிக்கக்கூடியவை. கலையையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி டாட்டூவிலிருந்து குரல், பாடல் போன்றவற்றை வரவழைத்திருக்கிறார் லாஸ்ஏஞ்சல்ஸைச் சேர்ந்த டாட்டூ கலைஞர் நட்டே சிக்கார்ட்! உங்களுக்கு விருப்பமான பாடல், பொன்மொழி, உத்வேகம் அளிக்கக்கூடிய பேச்சுகள், செல்லப் பிராணிகளின் குரல்கள் போன்றவற்றை எங்கும் எப்பொழுதும் கேட்டு மகிழலாம். இவரது தோழி ஒரு நடனப் பெண்ணை டாட்டூவாக வரைந்துகொண்டு, அப்படியே பாடலும் கேட்டால் எப்படியிருக்கும் என்றார். அதிலிருந்துதான் இந்த யோசனை உதித்தது என்கிறார் நட்டே. கம்ப்யூட்டர் மூலம் ஒலி அலைகளை உற்பத்திச் செய்து டாட்டூ மீது செலுத்தி, பரிசோதனை செய்து பார்த்தார். அற்புதமான முடிவு கிடைத்தது. அதை பேஸ்புக்கில் வெளியிட்டபோது பலரும் ஆர்வமானார்கள். ‘ஸ்கின் மோஷன்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். “டாட்டூ உடலில் போட்ட 24 மணி நேரத்தில் உங்களது ஸ்மார்ட் போன் கேமரா மூலம் டாட்டூவைப் படமெடுத்து, நீங்கள் விரும்பிய குரலை, ஒலியை அப்ளிகேஷனுக்குள் நுழைத்துவிடுவோம். பிறகு எப்பொழுது வேண்டுமானாலும் ஸ்மார்ட்போனை டாட்டூ அருகில் கொண்டு சென்றால் அந்த ஒலியைக் கேட்கலாம். ஜூன் மாதம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்க இருக்கிறோம்” என்கிறார் நட்டே.

குரல் கொடுக்கும் டாட்டூ!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சமாதியில்-தூங்கும்-மருத்துவர்/article9694093.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: புனித யாத்திரைக்கு பிராக்ஸி!

 

 
dinosaur_3164235f.jpg
 
 
 

கனடாவின் அல்பர்டா பகுதியில் 2011-ம் ஆண்டு ஒரு டைனோசர் புதைப் படிமம் கண்டுபிடிக்கப்பட்டது. 6 ஆண்டுகள் அந்த டைனோசரை வைத்து தொல்லுயிரியலாளர்கள் ஆராய்ச்சி செய்த பிறகு, தற்போது அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் புதைப் படிமங்களிலேயே ஓரளவு முழுமையானது இதுதான். ஒரு சிலை போல அப்படியே முழு உருவமும் படிமமாகியிருக்கிறது. தோல், முதுகில் உள்ள முட்கள்கூட அப்படியே இருக்கின்றன. 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாவர உண்ணி டைனோசர் இது. மில்லினியம் சுரங்கத்தைத் தோண்டும்போது ஷான் ஃபன்க் என்பவரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த டைனோசரைப் போல இடுப்பு வரை தோலும் முட்களும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட டைனோசர் எதுவும் இல்லை. நோடோசர் என்ற வகையைச் சேர்ந்த இது, க்ரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்திருக்கிறது. 18 அடி நீளமும் 1,300 கிலோ எடையும் கொண்டது. முதுகில் 20 அங்குல நீளத்துக்குக் கூர்மையான முட்கள் இருக்கின்றன. இதன் மூலம் டைனோசர் பற்றிய இன்னும் பல விஷயங்களை அறிந்துகொள்ள முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கற்சிலை போன்ற டைனோசர் படிமம்!

டல் நலமில்லாதவர்களுக்கும் நேரமில்லாதவர்களுக்கும் புனித யாத்திரை செல்ல விருப்பம் இருக்கலாம். அவர்களுக்காக யாத்திரைகளை மேற்கொண்டு வருகிறார் போர்ச்சுகலைச் சேர்ந்த 52 வயது கார்லோஸ் கில். 100 மைல் பாத யாத்திரைக்குக் கட்டணமாக 1.75 லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொள்கிறார். பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு இந்த யோசனை உதித்தது. அன்று முதல் இன்று வரை இந்த வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறார். ஓராண்டுக்கு 2 அல்லது 3 யாத்திரைகளை மேற்கொள்கிறார். ஒரு நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே யாத்திரை செய்கிறார். 6 நாட்களில் நடந்து, பாத்திமா ஆலயத்தை அடைகிறார். மீண்டும் 6 நாட்கள் நடந்து திரும்பி வந்துவிடுகிறார். “நான் சம்பாதிப்பதற்காக இந்தப் பணியை மேற்கொள்ளவில்லை. என் செலவுகளுக்குத் தேவையான பணத்தை மட்டுமே கட்டணமாகப் பெறுகிறேன். மெழுகுவர்த்திகள் ஏற்ற வேண்டும், வேறு வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டுமென்றால் தனிக் கட்டணம். ஆலயத்துக்குச் செல்லும் 400 மீட்டர் தவழ்ந்து செல்ல வேண்டும் என்றால் தனிக் கட்டணம். நான் யாத்திரை மேற்கொண்டதை உறுதி செய்வதற்காகப் பல்வேறு தபால் தலைகள், காணிக்கை செலுத்தப்பட்ட ரசீதுகள் போன்றவற்றை உரியவர்களுக்கு அனுப்பி வைத்துவிடுவேன். என்னைப் போல பக்தர்களுக்குப் பதிலாகப் பாத யாத்திரை செய்பவர்கள் உலகில் சிலரே இருக்கின்றனர். என்னுடைய இந்தச் சேவையை எல்லோரும் ஏற்றுக்கொள்வதில்லை. என்னை மோசடிக்காரன், ஏமாற்றுக்காரன் என்கிறார்கள். அதை நான் கண்டுகொள்வதில்லை. என் உதவி தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே நான் யாத்திரை மேற்கொள்கிறேன். இதில் எனக்கு ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது. சமூக வலைத்தளங்களிலும் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறேன்” என்கிறார் கார்லோஸ்.

புனித யாத்திரைக்கு பிராக்ஸி!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-புனித-யாத்திரைக்கு-பிராக்ஸி/article9697578.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: என்றும் 15!

 

 
ulaham_3164966h.jpg
 

சீனாவைச் சேர்ந்த லியு யெலினைப் பார்ப்பவர்கள் இருபது வயதுக்குமேல் மதிப்பிடுவதில்லை. ஆனால் இவருக்கு 22 வயதில் மகன் இருக்கிறார்! 30 ஆண்டுகள் நூலகராக வேலை செய்து, ஓய்வு பெற்றவருக்குத் தற்போது 49 வயது. சுருக்கமில்லாத பளபளப்பான தோலும் மெல்லிய உடலும் ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் உடற்பயிற்சிகளும் இவரை என்றும் இளமையாக வைத்துள்ளன. “இதுவரை என்னைப் பார்த்து ஒருவரும் சரியான வயதைச் சொன்னதில்லை. என்னிடம் வயதைக் கேட்பவர்களிடம் நான் மறைத்ததில்லை. ஆனால் உண்மையை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. என் மகனுடன் வெளியே சென்றால், புதிய காதலரா என்று கேட்கிறார்கள். நான் உணவுக் கட்டுப்பாட்டை விதித்துக்கொள்வதில்லை. ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டு, உடற்பயிற்சிகளைச் செய்துவிடுவேன். 30 ஆண்டுகளாகத் தினமும் செய்யும் நீச்சல் பயிற்சிதான் என் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. சீனாவின் யாங்சே ஆற்றையும் தென்கொரியாவின் ஹான் ஆற்றையும் நீந்திக் கடந்திருக்கிறேன். கடந்த ஆண்டு முதல் முறையாகக் மலேசியக் கடற்பகுதியில் நீச்சலை மேற்கொண்டேன். என் நாக்கு கடல் நீரில் பட்டு, வாய் முழுவதும் புண்ணாகிவிட்டது.. ஆனாலும் 12 கி.மீ. தூரம் எங்கும் நிற்காமல் 4 மணி நேரத்தில் என் இலக்கை எட்டியதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு எப்பொழுதும் 15 வயது என்றே நினைத்துக்கொள்வேன். 80 வயதிலும் இதேபோன்று அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என்னுடைய அடுத்த திட்டம் உலகப் பயணம். உடற்பயிற்சியை முறையாக மேற்கொண்டால் என்றும் இளமையாக இருக்கலாம் என்ற செய்தியைச் சொல்வதற்காகவே என் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறேன்” என்கிறார் லியு யெலின். இவரை 75 ஆயிரம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். ஏராளமான தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் நிகழ்ச்சிகளில் நடிக்க வைக்கக் காத்திருக்கின்றன.

என்றும் 15!

உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு உடலுக்கும் மூளைக்கும் ஓய்வும் அவசியம். ஆனால் பலரும் ஓய்வுக்கான நேரத்தை அளிப்பதில்லை. மிகக் குறைவான நேரமே தூங்குகிறார்கள். இதனால் மனச்சோர்வு ஏற்படுகிறது, மன அழுத்தத்துக்கும் சென்றுவிடுகிறார்கள். இவர்களுக்காகவே இங்கிலாந்தில் இயங்கிவரும் டேவிட் லாயிட் ஜிம் க்ளப்களில் உடற்பயிற்சியோடு தூக்கத்தையும் சேர்த்துவிட்டனர். “இங்கிலாந்தில் பெரும்பாலான பெற்றோர் மிகவும் சோர்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களில் 26% பேர் உறக்கம் இன்றி தவிப்பதால் உடல் நலமும் மனநலமும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் எங்கள் ஜிம்மில் தூக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். 15 நிமிடங்கள் உடற்பயிற்சி. 45 நிமிடங்கள் தூக்கம். மென்மையான மெத்தையில் கண்களைக் கட்டி, அமைதியாக உறங்க வைத்துவிடுவோம். இதன் மூலம் உடலுக்கும் பயிற்சி கிடைக்கிறது. உள்ளமும் புத்துணர்வு பெறுகிறது. இங்கே வந்தபிறகு பலப் பிரச்சினைகளில் இருந்து வெளிவந்து, புத்துணர்வுடன் இருப்பதாகச் சொல்கிறார்கள் வாடிக்கையாளர்கள். எங்கள் ஜிம் க்ளப்களில் எப்பொழுதும் கூட்டம் இருந்துகொண்டேயிருக்கிறது. இன்னும் பல கிளைகளை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருக்கிறோம்” என்கிறார் க்ளப் நிறுவனர்.

தூக்கத்தையும் பணம் கொடுத்து வாங்கணுமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-என்றும்-15/article9700470.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: தும்பை விட்டு வாலைப் பிடிப்பது...

 

 
 
ulagam_3165253f.jpg
 
 
 

கொலம்பியாவின் போகோட்டா நகரின் மத்தியில் இருக்கிறது தாவரங்களால் சூழப்பட்ட 11 மாடிக் கட்டிடம் எடிஃபிசியோ சாண்டாலியா. இதில் 33,000 சதுர அடிக்கு தாவரங்கள் வளர்க்கப் படுகின்றன. இது உலகிலேயே மிகப் பெரிய செங்குத்தான தோட்டம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது. ஸ்பெயின் நிறுவனமும் கொலம்பியாவின் க்ரான்கோல் நிறுவனமும் இணைந்து 8 மாதங்களில் இந்தத் தோட்டத்தை உருவாக்கியுள்ளன. இதில் 10 வகைகளில் 1,15,000 தாவரங்கள் இருக்கின்றன. செங்குத்தாக உள்ள இந்தத் தோட்டத்துக்கு தண்ணீர் விடுவதும் தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதும் சவாலானதாக இருந்தது. பல கட்ட ஆய்வுக்குப் பிறகு பிரத்யேகமான பாசன முறையை இந்தத் தோட்டத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். அதிகப்படியான நீர் சுவர்களில் சேமிக்கப்பட்டு, மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனிதர்கள் வெளியேற்றும் கழிவு நீரைச் சுத்திகரித்து, தாவரங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். “3,100 மனிதர்களுக்கு ஓராண்டுக்குத் தேவையான ஆக்சிஜனை இந்த தோட்டம் வழங்குகிறது. தீங்கு விளைவிக்கக்கூடிய 2 ஆயிரம் டன் வாயுக்களையும் 400 கிலோ தூசிகளையும் வடிகட்டுகிறது. 745 கார்கள் வெளியிடும் கார்பனை சுத்தம் செய்கிறது. கோடை காலத்தில் வீட்டுக்குள் செல்லும் வெப்பத்தின் அளவைக் குறைக்கின்றன. இதனால் குளிர்சாதனத்தின் பயன்பாடு குறைகிறது. இதுபோன்ற செங்குத்து தோட்டங்களை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்” என்கிறார் இந்தத் தோட்டத்தை உருவாக்கிய டிசைனர்களில் ஒருவர்.

தும்பை விட்டு வாலைப் பிடிப்பது…

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்துகொண்டிருந்த ஆடம் மார், சாலையில் ஒரு பெண் விழுந்து கிடப்பதைக் கண்டார். வேகமாக அவரைத் தூக்க முயன்றார். ஆனால் சமந்தாவோ தன்னை விட்டுவிடும்படி கேட்டார். பரபரப்பான சாலையில் விபத்து ஏற்படலாம் என்று சொல்லி, அவரைத் தூக்கி நிறுத்தினார் ஆடம். “நான் செத்தால் யாரும் கவலைப்பட மாட்டார்கள்” என்று சொல்லிவிட்டு, கோபத்துடன் ஓடினார் சமந்தா. ஆனால் 20 அடியில் சுருண்டு விழுந்தார். மீண்டும் ஆடம் தன் நண்பரின் உதவியோடு சமந்தாவை பாதுகாப்பான இடத்தில் உட்கார வைத்து, ஆறுதலாகப் பேசினார். “ஒரு பெரிய நிறுவனத்தில் நான் வேலை செய்கிறேன். எத்தனையோ பேரின் கஷ்டங்களைத் தீர்த்து, உயிரைக் காப்பாற்றி இருக்கிறேன். ஆனால் இன்று நானே தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் மாத்திரைகளை விழுங்கிவிட்டேன்” என்றார் சமந்தா. “நீங்கள் காப்பாற்றியவர்கள் எல்லாம் உங்களை எவ்வளவு உயரத்தில் வைத்திருப்பார்கள். நீங்களே இப்படிச் செய்யலாமா? நீங்கள் இருந்தால் இன்னும் எத்தனையோ பேருக்கு உதவலாம்! இந்தக் கஷ்டம் எல்லாம் நிரந்தரமானதில்லை” என்று ஆடம் பேசப் பேச சமந்தாவின் முகத்தில் புன்னகை வந்தது. காவலர்கள் வரும்வரை அவருடன் இருந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டார் ஆடம். நன்றி சொல்லிவிட்டுச் சென்றார் சமந்தா.

அறிமுகமில்லாத ஒருவரின் உயிரைக் காப்பாற்றியவர்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தும்பை-விட்டு-வாலைப்-பிடிப்பது/article9703056.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஆணவக் கொலைகாரர்கள் திருந்துவார்களா?

 

 
ulaga_masala_3165574f.jpg
 
 
 

ஜப்பானிய மன்னர் அகிஹிடோவின் பேத்தியும் இளவரசியுமான 25 வயது மகோ, தன் காதலரை மணப்பதற்கு அனுமதி அளிக்குமாறு அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளார். அரசக் குடும்பத்தைச் சேராத ஒருவரைத் திருமணம் செய்துகொண்டால், மகோ தன்னுடைய இளவரசி ஸ்தானத்தையும் அரச பதவிகள் அனைத்தையும் துறக்க வேண்டியிருக்கும். டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் மகோ. இவருடன் படித்தவர் கேய் கொமுரோ. தற்போது கடல் சுற்றுலாத் துறையில் பணிபுரிந்து வருகிறார். நீர் விளையாட்டு, வயலின், சமையல் போன்ற கலைகளில் வல்லவர். மகோவும் கொமுரோவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஓர் உணவகத்தில் சந்தித்து, வெளிநாட்டில் படிப்பது குறித்துப் பேசினார்கள். அன்று தொடர்ந்த நட்பு, பின்னாட்களில் காதலாக மாறியது. மகோ ஏற்கெனவே தன் குடும்பத்தினரிடம் பேசி, அனுமதி வாங்கிவிட்டார். தற்போது மன்னர் குடும்ப வழக்கப்படி அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை வைத்திருக்கிறார். அனைவரின் அனுமதியும் கிடைத்த பிறகு, திருமணத்தை அங்கீகரித்து, நிச்சயதார்த்தம் போன்று ஒரு விழா நடத்துவார்கள். பின்னர் திருமணத் தேதி குறிக்கப்பட்டு, மிக விமரிசையாகத் திருமணம் நடக்கும். ஆனால் திருமணத்துக்குப் பிறகு தன் கணவரைப் போல மகோவும் சாதாரண பிரஜையாகிவிடுவார்.

ஆணவக் கொலைகாரர்கள் திருந்துவார்களா?

சீனாவின் ஸியான் நகரில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் வாங் ஸுபாவோ. தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் எடை குறைத்தால் பரிசாகப் பணம் வழங்கப்படும் என அறிவித்து, உலகம் முழுவதும் செய்திகளில் இடம்பிடித்து விட்டார். ”எங்கள் நிறுவனத்தில் நான் உட்பட, அனைவரும் இடத்தை விட்டு அசையாமல் மணிக்கணக்கில் வேலைகளில் மூழ்கி விடுகிறோம். கிடைக்கும் உணவுகளைச் சாப்பிடுகிறோம். இதனால் அளவுக்கு அதிகமாக எடை கூடிவிடுகிறது. பல நோய்களுக்கு ஆளாக நேர்கிறது. எடையைக் குறையுங்கள், ஆரோக்கியமாக உண்ணுங்கள் என்று சொன்னால் யாரும் காதில் வாங்கவில்லை. அதனால் குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 10 ஆயிரம் ரூபாயைப் பரிசாக அறிவித்தோம். உடனே எல்லோருக்கும் எடை குறைப்பில் ஆர்வம் வந்துவிட்டது. உடற்பயிற்சி செய்கிறார்கள். ஜிம்முக்குச் செல்கிறார்கள். ஆரோக்கியமான உணவுகளுக்கு மாறிவிட்டார்கள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதில்லை. எந்த நேரமும் எடை குறைப்பில் கவனமாக இருக்கிறார்கள். மார்ச் மாதம் இந்தத் திட்டத்தை ஆரம்பித்தோம். மிக வெற்றிகரமாகச் சென்றுகொண்டிருக்கிறது. அவரவர் எடை குறைப்புக்கு ஏற்றார் போல பரிசுப் பணமும் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. ஒரு இளம் பெண் இரண்டே மாதங்களில் 20 கிலோ எடையைக் குறைத்து, 2 லட்சம் ரூபாயைப் பரிசாகப் பெற்றுவிட்டார். எல்லோரின் வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. ஆரோக்கியமான போட்டி உருவாகிவிட்டது. நானும் கணிசமாக எடை குறைந்துவிட்டேன். அளவுக்கு அதிகமான எடை சீனாவில் பெரும் பிரச்சினையாக மாறிவருகிறது. 2030-ம் ஆண்டுக்குள் நான்கு குழந்தைகளில் ஒருவர் எடை அதிகமாக இருப்பார்” என்கிறார் வாங்.

இந்த யோசனையை எல்லா அலுவலகங்களும் செய்யலாமே!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஆணவக்-கொலைகாரர்கள்-திருந்துவார்களா/article9706557.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது சீனா!

 

 
 
op_3166067f.jpg
 
 
 

சீனாவின் வேய்ஃபாங் நகரின் பைலாங் நதி மீதுள்ள பாலத்தில் அமைந்திருக்கிறது மிகப் பெரிய ஃபெர்ரி சக்கரம். இதில் 36 கூண்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூண்டிலும் 10 பேர் அமர முடியும். இந்த கூண்டுக்குள் தொலைக்காட்சிப் பெட்டி, வைஃபை, செல்ஃபி எடுப்பதற்கான வசதிகள் உள்ளன. 475 அடி உயரமுள்ள இந்தச் சக்கரத்தில் அமர்ந்து, ஒருமுறை சுற்றி வருவதற்கு 28 நிமிடங்களாகின்றன. சக்கரம் மெதுவாகச் சுற்றும். நான்கு புறமும் நகரின் அழகை பறவை கோணத்தில் பார்த்து ரசிக்கலாம். புகைப்படங்கள், செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம். அரை மணி நேரத்தில் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அற்புதமான அனுபவம் கிடைத்துவிடும். 4,600 டன் இரும்பைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பிரம்மாண்ட சக்கரம், விரைவில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிட இருக்கிறது. பொறியியல் வல்லுநர்களின் அபாரமான திறமைக்கு சான்றாக இது கருதப்படுகிறது.

ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது சீனா!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் ஸ்டெபானி ஹிஸ்டியின் பூனை, சாதாரண பூனைகளைவிட மூன்று மடங்கு பெரிதாக இருக்கிறது. 3.9 அடி நீளமும் 14 கிலோ எடையுமாக உலகின் மிகப்பெரிய பூனை என்ற சாதனையைப் படைக்க இருக்கிறது. “ஒமர் என்னிடம் வரும்போது, மிகச் சிறியப் பூனையாக இருந்தது. சில மாதங்களில் மிக வேகமாக வளர ஆரம்பித்தது. அதிகபட்சம் 9 கிலோ வரை செல்லும் என்று நினைத்தேன். ஆனால் மூன்று வயதுக்குள் 14 கிலோவை எட்டிவிட்டது. மற்ற பூனைகளைப் போல ஒமரை எளிதாக வெளியில் அழைத்துச் செல்ல முடியாது. பூனைக்காக வாங்கப்பட்ட மர வீட்டில் ஒமரால் நுழைய முடியவில்லை. நாய்க்கான வீட்டை வாங்கி இருக்கிறேன். பார்ப்பதற்கு பெரிதாக இருந்தாலும் ஒமர் மிகவும் அமைதி யானது. சொல்வதைச் செய்யக்கூடியது. கின்னஸ் சாதனைக்கான முயற்சியில் இறங்கி இருக்கிறோம்” என்கிறார் ஸ்டெஃபானி.

மிக நீளமான பூனை!

ஜிம்பாப்வேயைச் சேர்ந்த பால் சான்யான்கோர் என்ற மத போதகர், தன்னிடம் இறைவனின் தொலைபேசி எண் இருப்பதாகக் கூறி, எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். “இறைவனின் நேரடியான தொலைபேசி எண் என்னிடம் இருக்கிறது என்றால் பெரும்பாலும் சந்தேகப்படுகிறார்கள். நான் கடவுளிடம் தொலைபேசி எண் இருக்கும் என்று நம்பினேன். மனம் உருகப் பிரார்த்தனை செய்தேன். அந்த நம்பிக்கைக்குப் பரிசாக அவருடைய தொலைபேசி எண்ணைக் கொடுத்திருக்கிறார். தேவைப்படும்போது அவரைத் தொடர்புகொள்கிறேன். அவர் இடும் கட்டளைகளைக் கேட்டு, மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன். எங்கள் தேவாலய தொலைக்காட்சி மூலம் ‘ஹெவன் ஆன்லைன்’ நிகழ்ச்சியில் இறைவனை தொலைபேசியில் அழைப்பேன். இந்த எண்ணை மற்றவர்களுக்கு தர இறைவனின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. அதனால் என்னால் தர முடியாது. அதுவரை மக்களுக்கு தேவையான விஷயங்களைக் கேட்டு, இறைவனுக்குத் தெரிவிப்பேன். அவர் சொல்லும் தீர்வுகளைப் பெற்று மக்களிடம் அளிப்பேன்” என்கிறார் பால் சான்யான்கோர்.

என்ன சொல்வது!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஆச்சரியத்தில்-ஆழ்த்திக்கொண்டே-இருக்கிறது-சீனா/article9707544.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: பிரமிக்க வைக்கும் கலைஞர்!

 
 
latte_3166525f.jpg
 
 
 

கொரியாவைச் சேர்ந்த லீ காங் பின், காபியில் ஓவியம் தீட்டும் லாட்டே கலையில் மிகச் சிறந்த கலைஞர். ஒரு கோப்பை காபியில் சில நிமிடங்களுக்குள் ஓவியங்களைத் தீட்டி ஆச்சரியப்படுத்தி விடுகிறார். உலகம் முழுவதும் நடைபெறும் லாட்டே போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளையும் அள்ளி வருகிறார். சிறிய உலோகக் கம்பியையும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் நிறங்களையும் வைத்து, வான்காவின் இரவு வான், புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரங்கள், விலங்குகள், மனிதர்கள், பூக்கள் என்று ஓவியங்களைத் தீட்டி பிரமிக்க வைக்கிறார்.

“பாரம்பரியமிக்க லாட்டே கலையில் புதிய விஷயங்களைப் புகுத்துவதன் மூலம் என்னை நான் தனித்துவமாகக் காட்டிக்கொள்ள விரும்பினேன். காபியில் க்ரீமை வைத்து விதவிதமாக ஓவியங்களைத் தீட்டி வந்தனர். நான் வண்ணங்களைப் பயன்படுத்தி வித்தியாசத்தைக் காட்டி வருகிறேன்” என்கிறார் லீ காங் பின்.

பிரமிக்க வைக்கிறார் இந்த லாட்டே கலைஞர்!

இங்கிலாந்தில் வசிக்கும் 53 வயது மைக் ஸ்மித், கடந்த 7 ஆண்டுகளாகத் தன் தோட்டத்தில் மிளகாய், காய்கறிகள், பழங்களை விளைவித்து வருகிறார். தாவரங்களில் பரிசோதனை களையும் மேற்கொள்கிறார். காரம் அதிகமான மிளகாயை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு உலகிலேயே காரமான மிளகாய் அவரது செடியில் காய்த்துவிட்டது! ”நிச்சயமாக இவ்வளவு காரத்தை எதிர்பார்க்கவில்லை. மிளகாயை வாயில் வைத்த 10 நொடிகளில் அந்த இடம் புண்ணாகிவிடும். என்ன நடக்கிறது என்பதைக் கூட அறிய முடியாது. அதனால் ’டிராகனின் மூச்சு’ என்று பொருத்தமான பெயரைச் சூட்டியிருக்கிறேன். மிளகாயின் காரம் ஸ்கோவில் என்ற அலகால் அளக்கப்படுகிறது. சாதாரணமாகக் காரம் என்று கருதப்படும் மிளகாய்கள் 1,00,000 முதல் 3,50,000 ஸ்கோவில்கள் வரை இருக்கின்றன. ஆனால் இதற்கு முன் அதிகக் காரம் என்று அறியப்பட்ட மிலிட்டரி கிரேட் மிளகாய் 20 லட்சம் ஸ்கோவில்கள் கொண்டதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. என்னுடைய டிராகன் மூச்சு 2 லட்சத்து 48 ஆயிரம் ஸ்கோவில்கள் மதிப்பைப் பெற்றிருக்கிறது. பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தெரிந்தாலும் சற்று அதிகமாக உட்கொண்டால் உயிரைக்கூட இழக்க நேரிடலாம். இந்த மிளகாயைச் சுவைத்துப் பார்க்க வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். முதல்முறை நான் சுவைத்துப் பார்த்தபோது என் நாக்குப் புண்ணாகிவிட்டது. ஆனாலும் டிராகன் மூச்சு மிளகாயை மருத்துவத்தில் பயன்படுத்தலாம் என்கிறார்கள். மிளகாயிலிருந்து பெறப்படும் எண்ணெயை மயக்க மருந்துக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். தற்செயலாக, ஒரு விபத்து போலதான் டிராகன் மூச்சு மிளகாயை நான் உருவாக்கியிருக்கிறேன். ராயல் ஹார்டிகல்சுரல் சொசைட்டியின் ’பிளாண்ட் ஆஃப் த இயர்’ விருதை டிராகன் மூச்சு பெற்றுவிட்டது” என்கிறார் மைக் ஸ்மித்.

ஆஆஆ… கற்பனைக்கு எட்டாத காரம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பிரமிக்க-வைக்கும்-கலைஞர்/article9708426.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: மிட்டாய்த் தாள்களில் அட்டகாசமான ஆடை!

 

 
chocolate_3166745f.jpg
 
 
 

பென்சில்வேனியாவில் வசிக்கும் எமிலி சீல்ஹாமருக்கு ஸ்டார்பர்ஸ்ட் மிட்டாய்கள் என்றால் மிகுந்த விருப்பம். கடந்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் மிட்டாய்களைச் சாப்பிட்டு, தாள்களைச் சேமித்து வைத்திருக்கிறார். ”நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, என் கணவர் மலாச்சியை முதல் முறை சந்தித்தேன். எனக்கு ஒரு பெரிய மிட்டாய் பாக்கெட்டைப் பரிசளித்தார். என்னால் நம்பவே முடியவில்லை, அவரும் என்னைப் போலவே இந்த மிட்டாய்களின் விசிறி என்பதை அறிந்து ஆனந்தமடைந்தேன். எங்கள் இருவருக்குமான மிட்டாய்கள் மீதுள்ள காதலே, எங்களுக்குமான காதலாக மாற்றம் அடைந்தது. மிட்டாய்களைச் சுற்றியிருக்கும் பல வண்ணக் காகிதங்களைத் தூக்கிப் போட மனமில்லாமல் சேகரிக்க ஆரம்பித்தேன். ஐந்தாண்டுகளில் ஒரு பெரிய பை நிறைய சேர்ந்துவிட்டது. இதை வைத்து உடை தயாரிக்க முடிவு செய்தேன். என் குடும்பத்தினரும் நண்பர்களும் காகிதங்களை அழகாக மடித்துக் கொடுத்தனர். எலாஸ்டிக் நூலை வைத்து தைத்து, அழகான உடையாக மாற்றிவிட்டேன். அப்போதுதான் மலாச்சி என்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். எங்கள் திருமண வரவேற்பின் போது எங்களைச் சேர்த்து வைத்த இந்த ஆடையைத்தான் அணிந்துகொண்டேன். எல்லோருக்கும் ஆச்சரியம்!” என்கிறார் எமிலி.

மிட்டாய்த் தாள்களில் அட்டகாசமான ஆடை!

ருகுவேயைச் சேர்ந்த 83 வயது அல்சிடெஸ் ராவெல் விவசாயி. ஃபோர்ட் எஃப்-350 மாடல் டிரக்கை 1969-ம் ஆண்டு வாங்கினார். 48 ஆண்டுகள் இவருடன் இருந்த டிரக்கைச் சமீபத்தில் குழி தோண்டி புதைத்துவிட்டார். “டிரக்குக்கும் எனக்கும் உள்ள நட்பு மிக ஆழமானது. ஆரம்பத்தில் மிகச் சாதாரண விவசாயியாகத்தான் இருந்தேன். இந்த டிரக் வந்த பிறகுதான், ஒரு நிலத்தை வாங்கினேன். அந்த நிலத்தில் விவசாயம் செய்து என் குழந்தைகளை வளர்த்தேன். டிரக் என் குடும்பத்தில் ஒரு உறுப்பினர். என் வாழ்க்கையின் ஒரு பகுதி. டிரக்கை வைத்து விவசாயத்தை மேம்படுத்திக்கொண்டேன். அதனால் வருமானம் அதிகரித்தது. ஒருமுறை தனியாக 400 கி.மீ. தூரத்துக்குப் பன்னிரண்டு மணி நேரம் பயணம் செய்தேன். டிரக் மட்டுமே உற்ற துணையாக இருந்து என்னை வழிநடத்தியது. தொடர்ச்சியான பயணங்களில் நான் விடுதியில் தங்குவதில்லை. டிரக்கிலேயே படுத்து உறங்கிவிடுவேன். இத்தனை ஆண்டுகளில் பெரிய அளவில் எந்தக் கோளாறும் டிரக்குக்கு வந்ததில்லை. அளவுக்கு அதிகமாகவே உழைத்துவிட்டது. இனிமேல் டிரக்கால் உழைக்க முடியாது. பாகங்களைப் பிரித்துப் பழைய இரும்புக் கடையில் தான் போட முடியும். என்னால் அதை எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்? அதனால் எங்கள் நிலத்திலேயே மூன்று ஆட்களை வைத்துப் பெரிய குழி தோண்டி, டிரக்கைப் புதைத்துவிட்டேன். இது என் டிரக்குக்குச் செய்யும் மரியாதையாகக் கருதுகிறேன். ஆனால் டிரக்கைப் புதைப்பதைக் கூட என் மனைவியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதால் இந்த இறுதி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை” என்கிறார் அல்சிடெஸ்.

மனிதர்களையே மதிக்காத இந்த உலகில் டிரக்குக்கு மரியாதை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மிட்டாய்த்-தாள்களில்-அட்டகாசமான-ஆடை/article9709001.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: எப்படியெல்லாம் நோய்கள் வருகின்றன...

 

 
wooi_3167262h.jpg
 

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மோனிக் ஜெஃப்ரி, வித்தியாசமான நோயால் பாதிக் கப்பட்டிருக்கிறார். “2011-ம் ஆண்டு, என் படுக்கையிலிருந்து இமெயில்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென்று என் தலை முன்னோக்கிச் சாய்ந்துவிட்டது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. மிகவும் பயந்துபோனேன். உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். சி1, சி2 கழுத்து எலும்புகள் சேத மடைந்துவிட்டதால் கழுத்து வளைந்துவிட்டது என்றும் இதுபோன்ற அசாதாரண விபத்துகள் அரிதாக நடப்பதுண்டு என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சில வாரங்கள் மருத்துவம் செய்தபிறகு, வீட்டுக்குத் திரும்பினேன். சமீபத்தில் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது எல்லோரும் ஒரு ஜோக்குக்காகச் சிரித்துக்கொண்டிருந்தோம். மீண்டும் என் தலை முன்னோக்கிச் சாய்ந்துவிட்டது. சக ஊழியர்கள் என் நிலையைப் பார்த்துப் பயந்துபோனார்கள். வலியால் துடித்தேன். பேசும் நிலையில் இல்லை என்பதால், என் கணவர் சாமுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன். ஆம்புலன்ஸுடன் வந்து, என்னை மருத்துவமனையில் சேர்த்தார் சாம். ஐந்து ஆண்டுகளில் இரண்டாவது முறை என் கழுத்து எலும்புகள் பாதிக்கப்பட்டதால் மருத்துவர்கள் கவலையடைந்தனர். சென்ற முறையைவிட இந்த முறை பாதிப்பின் அளவு அதிகமாக இருந்தது. என்னால் அந்த வலியைத் தாங்கவே முடியவில்லை. 14 வாரங்கள் பலவித சிகிச்சைகள் எடுத்துக்கொண்ட பிறகு மீண்டும் என் கழுத்து பழைய நிலைக்குத் திரும்பியது. ஒரு சிரிப்பு இவ்வளவு பெரிய பிரச்சினையில் கொண்டுவந்து விட்டுவிட்டது. இனி கழுத்து எலும்புகளுக்கு அதிகம் சிரமம் கொடுக்கக்கூடாது. மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை. எலும்புகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் எந்த நேரமும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் வரலாம். அதனால் பணத்துடன் தயாராக இருக்கச் சொல்லியிருக்கிறார்கள் மருத்துவர்கள். நாங்கள் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருவர் வேலை செய்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும். ஏற்கெனவே பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்ததால் ஏராளமாகச் செலவாகிவிட்டது. இதில் அறுவை சிகிச்சைக்கான பணத்துக்கு என்ன செய்வது?” என்று ஜெஃப்ரி கலங்குகிறார். இவருடைய தங்கை பணம் திரட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

சே, எப்படியெல்லாம் நோய்கள் வருகின்றன…

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 51 வயது தெயுனிஸ் போதாவுக்கு வேட்டையாடுவதில் அளவுக்கு அதிகமான ஆர்வம். ஜிம்பாப்வேயில் உள்ள காட்டில் நண்பர்களுடன் யானை வேட்டைக்குச் சென்றார். இது இனப்பெருக்கக் காலம். யானைகள் குட்டிகளை ஈன்று, கவனமாகப் பாதுகாத்து வந்தன. போதாவின் நண்பர்கள் யானைக் கூட்டத்தைக் கண்டதும் சுட ஆரம்பித்தனர். கோபமடைந்த யானை ஒன்று, போதாவைத் தும்பிக்கையில் தூக்கிவிட்டது. அவரைக் காப்பாற்றுவதற்காக, மற்ற நண்பர்கள் யானையைச் சுட்டனர். போதாவைக் கீழே விட்ட யானை, அவர் மீதே சரிந்து விழுந்துவிட்டது. அந்த இடத்திலேயே போதா இறந்து போனார். 5 குழந்தைகளுக்குத் தந்தையான இவர், வேட்டை நாய்களின் உதவியோடு சிறுத்தை போன்ற விலங்குகளை வேட்டையாடுவதில் வல்லவர்.

இன்னுமா வேட்டைகளை அங்கீகரிக்கிறது இந்த உலகம்?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-எப்படியெல்லாம்-நோய்கள்-வருகின்றன/article9710270.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: கரித்துண்டு காபி!

 

 
masala_3167752f.jpg
 
 
 

உலகிலேயே மிக வித்தியாசமான காபி இந்தோனேசியாவின் யோகியாகர்டா நகரில் கிடைக்கிறது. இங்கே காபியில் ஓர் எரியும் கரித்துண்டைச் சேர்த்து, ‘கோப்பி ஜோஸ்’ என்ற பெயரில் வழங்குகிறார்கள். 1960-ம் ஆண்டு காபி கடை உரிமையாளர் மான் வித்தியாசமான இந்தக் காபியை உருவாக்கினார். வயிற்றுப் பிரச்சினைகளால் துன்பப்பட்டுக்கொண்டிருந்தவர், காபியில் எரியும் கரித்துண்டைச் சேர்த்துப் பருகினார். இவருடைய வயிற்றுப் பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் குணமாயின. தான் அடைந்த பலனை, மற்றவர்களும் அடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கரித்துண்டு காபியை விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

மான் மறைந்த பிறகு, காபி கடையின் இன்றைய உரிமையாளர் அலெக்ஸ் கரித்துண்டு காபியைப் பிரபலப்படுத்த ஆரம்பித்தார். “எல்லோராலும் இந்தக் காபியை விரும்ப முடியும் என்று சொல்ல முடியாது. தைரியமானவர்களும் வயிற்றுப் பிரச்சினைகள் தீரவேண்டும் என்று நினைப்பவர்களும் எங்கள் காபியை விரும்பிக் குடிக்கிறார்கள். இன்று எங்கள் கடையின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள்தான். மான் இந்தக் காபியைப் பெரிய அளவில் கொண்டு செல்லவில்லை. நான் கரித்துண்டு காபி குடிப்பதால் ஏற்படும் மருத்துவப் பலன்களை எடுத்துச் சொல்கிறேன். அதனால் பலரும் குடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

வீக்கம், குமட்டல், நெஞ்செரிச்சல், வயிற்றுப் போக்கு போன்ற வயிறு தொடர்பான பல பிரச்சினைகளை இந்தக் காபி தீர்த்து வைக்கிறது. 4 ஸ்பூன் சர்க்கரையில் ஒரு தம்ளர் கொதிக்கும் நீரை ஊற்றி, காபித் தூளைக் கலந்து, எரியும் கரித்துண்டைச் சேர்த்தால் கோப்பி ஜோஸ் தயார். கரித்துண்டில் உள்ள நெருப்பு அணைந்த பிறகு, அதை எடுத்து வெளியில் போட்டுவிட்டு, காபியைப் பருகலாம். சாதாரண காபியை விட கரித்துண்டு காபியில் காஃபீன் அளவு குறைவாக இருக்கும். காஃபீனைக் கரித்துண்டு உறிஞ்சிக்கொள்வதால் வயிற்றுக்கு எந்தவிதத் தீங்கும் விளைவிக்காத காபியாக இது கருதப்படுகிறது. சிலர் சாதாரண காபிக்கும் கரித்துண்டு காபிக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்கிறார்கள். சிலர் கேரமல் சுவை தெரிவதாகச் சொல்கிறார்கள். ஒரு காபியின் விலை 20 ரூபாய்” என்கிறார் அலெக்ஸ்.

வயிற்றுப் பிரச்சினைகளைக் குணமாக்கும் கரித்துண்டு காபி!

மாடல் சென்யா ஜாரிட்சினாவின் கணவர் அலெக்சி ஷாபோவாலோவ், ரஷ்யத் தொழிலதிபர். திருமண வாழ்க்கையின் ஐந்தாவது ஆண்டு கொண்டாட்டத்துக்காகத் தன் மனைவிக்கு 70 காரட் வைர மோதிரம் ஒன்றைப் பரிசாக அளித்திருக்கிறார். இதன் மதிப்பு சுமார் 58.7 கோடி ரூபாய். “எனக்குப் பரிசுகள் அளிப்பதில் ஒருநாளும் கணவர் கஞ்சத்தனமாக இருந்ததில்லை. சாதாரண நகைகளோ, 30 காரட் வைரமோ எனக்குப் போதாதென்று 70 காரட் வைர மோதிரத்தைப் பரிசாக அளித்திருக்கிறார்!” என்று சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் சென்யா. இந்த ஜோடி துபாயிலும் ரஷ்யாவிலும் வசித்து வருகிறது.

ஆடம்பரமான பரிசு!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கரித்துண்டு-காபி/article9711354.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: திரைப்படங்களையும் விஞ்சிவிடும் போலிருக்கே

 
 
bommai_3168022f.jpg
 
 
 

பெரு நாட்டின் கல்வோ நகரில் வசிக்கும் நுனெஸ் வீட்டில் அமானுஷ்யமான விஷயங்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள்.

“அண்ணன் மகள் எனக்காக இந்தப் பொம்மையைப் பரிசாகக் கொடுத்தாள். சரிடா என்று பெயரும் வைத்தாள். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று இறந்து போனாள். உறவினர்கள் அவள் கொடுத்த பொம்மையை வீசி விடச் சொன்னார்கள். ஆனால் எனக்கு மனம் வரவில்லை. என் அன்பு மருமகளின் நினைவாக பொம்மையை வைத்துக்கொள்ள விரும்பினேன். அதற்குப் பிறகு சாதாரணமாக இருந்த பொம்மை, அமானுஷ்ய பொம்மையாக மாறிவிட்டது. இரவில் யாரோ நடமாடுவது போல உணர்ந்தோம். சில நேரங்களில் நிழல் கூடத் தெரியும். கிசுகிசுப்பான குரல் கேட்கும். எங்களை யாரோ இருபத்தி நான்கு மணி நேரமும் கண்காணித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றும். அலமாரியில் பொம்மையை வைத்திருப்போம். காலையில் எழுந்து பார்த்தால் மேஜையிலோ, படுக்கையிலோ கிடக்கும். சில நாட்கள் என் குழந்தைகளின் முதுகில் குச்சியால் அடித்த சிராய்ப்புகள் காணப்படும். இது சொந்த வீடு என்பதால் வீட்டை மாற்றவும் முடியவில்லை. பொம்மையைத் வீசியெறிவதற்கும் தைரியம் இல்லை. நாம் அவளுக்கோ, மற்றவர்களுக்கோ என்ன கெடுதல் செய்தோம், அவளின் ஆவி நம்மைத் தண்டிப்பதற்கு என்று கேட்கும் குழந்தைகள், இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்படிச் சொல்கிறார்கள். எனக்குப் பிடித்த மருமகளாக இருந்தாலும் ஆவியாக இந்த வீட்டில் அலைவது என்னைக் கஷ்டப்படுத்துகிறது. அதனால் வேறு வழியின்றி, ஆவி விரட்டுபவரை அழைத்து வந்தோம். இந்த வீட்டில் ஒரு பெண்ணின் ஆவி இருப்பதாகச் சொன்னவர், பல சடங்குகளை நடத்தினார். பரிகாரங்களை மேற்கொண்டார். ஆவி வீட்டை விட்டு வெளியேறிவிட்டது என்றும் இனி பிரச்சினை இல்லை என்றும் கூறியிருக்கிறார். சில நாட்களாகப் பிரச்சினை இல்லை. இனி எப்படி என்று பார்க்க வேண்டும்” என்கிறார் இவோன் நுனெஸ்.

திரைப்படங்களையும் விஞ்சிவிடும் போலிருக்கே!

சீனாவின் ஷான்டோங் மாகாணத்தில் வசிக்கும் காவோவும் அவர் மனைவியும் 5 வயது மகனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வெளியில் சென்று திரும்பினர். வீட்டில் வைத்திருந்த 4.6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கரன்சிகள் அனைத்தும் துண்டு துண்டாகக் கிழித்திருந்ததைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ஒவ்வொரு கரன்சியும் 3, 4 துண்டுகளாகக் கிழிக்கப் பட்டிருந்ததால் அதை ஒட்டக்கூட முடியவில்லை. கிழிந்த கரன்சி களை எடுத்துக்கொண்டு, வங்கிக்குச் சென்று, வேறு கரன்சிகளைத் தரும்படிக் கேட்டார். அவர்கள் கரன்சிகளை ஒட்டித் தரச் சொன்னார் கள். “நான் இரண்டு நாட்கள் ஒட்டிப் பார்த்துவிட்டு, முடியாமல்தான் வங்கிக்குச் சென்றேன். ஒரு சில கரன்சிகளை மட்டுமே ஒட்ட முடிந்தது. தொழிலதிபராக இருப்பதால், வங்கியில் கடன் வாங்கி வீட்டில் கரன்சியை வைத்திருந்தேன். என் மகன் மீது குற்றம் சுமத்த மாட்டேன். அவன் ஒன்றும் அறியாத சிறுவன். நாங்கள்தான் கவனமாக இருந்திருக்க வேண்டும்” என்கிறார் காவோ.

குழந்தை விளையாடும்படியா பணத்தை வைப்பது?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-திரைப்படங்களையும்-விஞ்சிவிடும்-போலிருக்கே/article9712124.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: பிரமிப்பூட்டும் நட்பு!

tig_3168384f.jpg
 
 
 

ஒரு சாதாரண வேலை, உலகத்தையே ஆச்சரியப்படுத்தக்கூடிய நட்பை உருவாக்கித் தந்திருக்கிறது அப்துல்லா ஷோலேவுக்கு. 35 வயதான இவருக்கு 10 வயது வங்கப் புலிதான் சிறந்த தோழி. இருவரும் 24 மணி நேரமும் ஒன்றாக இருக்கிறார்கள். ஒன்றாக விளையாடுகிறார்கள். ஒன்றாகச் சாப்பிடுகிறார்கள். சில நேரங்களில் ஒன்றாக உறங்கவும் செய்கிறார்கள். முலன் ஜமிலா என்ற அழகான பெண் புலி, இந்தோனேஷியாவிலுள்ள மலாங் இஸ்லாமியப் பள்ளிக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. 3 மாதப் புலிக் குட்டியை ஒருவர் சரியாகப் பராமரிக்காததால், அந்தப் பொறுப்பு அப்துல்லாவிடம் வழங்கப்பட்டது. “ஆரம்பத்தில் பகுதி நேர வேலையாகத்தான் ஜமிலாவைக் கவனிக்க ஆரம்பித்தேன். விரைவிலேயே என்னை அதுக்கும் அதை எனக்கும் பிடித்துப் போனது. பகுதி நேர வேலையில் முழு நேர நட்பைப் பெற்றேன். எங்கள் நட்பைப் பார்த்து முழு நேர வேலையைக் கொடுத்துவிட்டனர். நான் வீட்டுக்குச் செல்லும் நேரத்தில் ஜமிலா மிகவும் வருத்தப் படுவாள். அதற்காகவே என் தங்குமிடத்தை இங்கேயே மாற்றிக் கொண்டேன். நாள் முழுவதும் நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம். எங்கள் இருவருக்கும் எங்களைத் தவிர வேறு உலகம் இல்லை. என்னிடம் புலியாக அல்லாமல் பூனையாக நடந்துகொண்டாலும் நான் கண்மூடித்தனமான அன்பை அதன் மீது வைக்கவில்லை. 181 கிலோ எடை கொண்ட உலகின் மிக முக்கியமான வேட்டையாடியுடன் நட்பாக இருக்கிறேன் என்ற உணர்வு எனக்கு எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும். எந்த நேரமும் எனக்கு ஆபத்து நேரலாம் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறேன். ஜாக்கிரதையாகத்தான் ஒவ்வொரு விஷயத்தையும் கையாள்வேன். நமக்குதான் இந்தப் புரிதல் வேண்டும். புலிக்கு அதெல்லாம் தெரியாது. என்னுடன் விளையாடும்போது நகங்களும் பற்களும் முகம், கை, கால்களில் பட்டு, காயத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. என் தோளில் தலை வைத்துக் கொண்டுதான் அதிகம் விளையாடும். கழுத்தில் காயம் ஏற்படக்கூடாது என்று தடிமனான துணியால் கழுத்தைச் சுற்றிக்கொள்வேன். ஒரு புலியின் அத்தனை குணங்களும் எனக்கு நன்றாகத் தெரியும். ஒருநாளைக்கு 6 கிலோ கோழி இறைச்சி அல்லது ஆட்டு இறைச்சியைச் சாப்பிடுகிறாள்” என்கிறார் அப்துல்லா.

பிரமிப்பூட்டும் நட்பு!

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷயர் பகுதியிலுள்ள சாலைகள் மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளன. ஒவ்வோர் ஆண்டும் பராமரிப்புக்காகப் பெருமளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தச் சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகம். சாலைகளின் தரத்தை அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்தவும் வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவும் நீர் நிறைந்த பள்ளங்களில் மஞ்சள் பிளாஸ்டிக் வாத்து பொம்மைகளை மிதக்க விட்டிருக்கின்றனர். இந்தக் கவன ஈர்ப்பு பெரும்பாலானவர்களைக் கவர்ந்திருக்கிறது. இங்கிலாந்தில் 6 சாலைகளில் ஒன்று மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது, போக்குவரத்து நெரிசலும் அதிகமாகிவிடுகிறது. இதை அரசாங்கம் மிக முக்கியப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நம்ம ஊர் சாலைகளுக்கு எவ்வளவு பொம்மைகள் தேவைப்படும்?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பிரமிப்பூட்டும்-நட்பு/article9713088.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: தனியாளாகச் சாலை போட்ட ஜாங்குக்கு வணக்கம்!

 

 
 
Untitledyu_3168822f.jpg
 
 
 

சீனாவின் சோன்க்விங் பகுதியில் உள்ள மலைக் கிராமத்தில் வசிக்கிறார் 76 வயது ஜாங் ஜிவென். கேட்கும் சக்தியை இழந்துவிட்ட நிலையிலும் கடந்த 5 ஆண்டுகளாகச் சாலை போடும் பணியைத் தனியாளாக மேற்கொண்டு வந்தார். இவரது கிராமத்தைத் தவிர மற்ற கிராமங்களுக்குச் சாலை வசதி இருக்கிறது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சாலை வசதி இல்லாமல் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகி வந்தனர். ஓய்வு பெற்றவுடன் சாலை போடும் பணியை ஆரம்பித்துவிட்டார் ஜாங். ஊர் மக்களும் இவரது மனைவியும் தனி நபரால் செய்யக்கூடிய காரியம் இல்லை என்று சொல்லிப் பார்த்தார்கள். எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. தானே பாதையில் இருக்கும் மரங்களையும் புதர்களையும் அப்புறப்படுத்தினார். சாலையைச் செப்பனிட்டார். பாழடைந்த வீடுகளில் இருந்து கற்களையும் மரங்களையும் எடுத்து, சாலைக்குப் பயன்படுத்திக்கொண்டார். தன் சேமிப்பு முழுவதையும் செலவிட்டார். செங்குத்தான பகுதிகளில் பாறைகளைப் படிகளாக மாற்றினார். சிறிய ஓடைகளைக் கடக்க, மரப்பாலங்களை அமைத்தார். வயதானவர்கள் நடந்து செல்லும்போது இளைப்பாறுவதற்குப் பாறைகளால் இருக்கைகளைச் செய்து வைத்தார். மழைக் காலங்களில் ஒதுங்குவதற்கு குடில்களை உருவாக்கினார். ஐந்தாண்டு கடின உழைப்பின் பலனாக இன்று கிராம மக்களுக்கு நல்ல சாலை வசதி கிடைத்துவிட்டது. “பள்ளி செல்லும் குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை சாலை வசதி இல்லாமல் எவ்வளவு தவிக்கிறார்கள், நம் வாழ்நாளுக்குள் அடுத்தவர்களுக்கு உதவுகிற மாதிரி ஏதாவது செய்யணும் என்று அவர் சொன்ன பிறகு சம்மதித்தேன். என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். சாலை வசதி வந்தவுடன் எங்கள் கிராமத்துக்குப் பக்கத்திலேயே பேருந்து வர ஆரம்பித்துவிட்டது. எல்லோரும் நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இவருக்குத்தான் எதுவும் காதில் விழுவதில்லை. இந்த வேலை முடிந்தும் இவர் ஓய்வெடுக்கவில்லை. கிராமத்துக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்” என்கிறார் மனைவி வாங் லேனிங்.

தனியாளாகச் சாலை போட்ட ஜாங்குக்கு வணக்கம்!

தாய்லாந்தில் தேங்காய் க்ரீம் புட்டிங் மிகவும் பிரபலமான இனிப்புப் பண்டம். பாங்காக்கில் உள்ள பதுன் தானி என்ற கடையில், நாய்க்குட்டி உருவத்தில் தேங்காய் புட்டிங் விற்பனை செய்யப்படுகிறது. நிஜ நாய்க்குட்டிகள் போலவே அவ்வளவு தத்ரூபமாக இருக்கும் புட்டிங், ஒரே நேரத்தில் ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்று வருகிறது. ஆர்வத்துடன் புட்டிங்கை வாங்கி, புகைப்படங்கள் எடுத்த பிறகே சாப்பிடுகிறார்கள். ஆனால் சிலர் புட்டிங்கைப் பார்த்தவுடனே சாப்பிடும் எண்ணத்தைக் கைவிட்டுவிடுகிறார்கள். “என்ன தான் புட்டிங்காக இருந்தாலும் இதை வெட்டிச் சாப்பிட மனம் வரவில்லை” என்கிறார் போ. ஆனால் கடையின் உரிமையாளர் வீலைவான் மீ, “இந்த எதிர்ப்புதான் எங்களை மிகவும் பிரபலப்படுத்தியிருக்கிறது. ஆர்டர்கள் குவிகின்றன” என்கிறார். ஒரு சிறிய துண்டு நாய்க்குட்டி புட்டிங் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்ச்சைகளில் பிரபலமாவது ஃபேஷன் போலிருக்கு…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தனியாளாகச்-சாலை-போட்ட-ஜாங்குக்கு-வணக்கம்/article9713898.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: மஞ்சள் அன்னாசி vs இளஞ்சிவப்பு அன்னாசி

 

 
 
 
 
pineapple_3169031f.jpg
 
 
 

லகின் மிகப் பெரிய பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியாளர்கள் டெல் மான்ட்டே நிறுவனத்தினர். காய்கறி, பழங்களிலிருந்து பானங்கள், நொறுக்குத் தீனிகள், இனிப்புகள் போன்றவற்றைச் செய்து உலகம் முழுவதும் அனுப்புகிறார்கள். கடந்த பத்து வருடங்களாக மரபணு மாற்றத்தின் மூலம் இளஞ்சிவப்பு அன்னாசிப் பழத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, கடந்த ஆண்டு வெற்றியும் பெற்றுவிட்டனர். நிறம் மாற்றப்பட்ட அன்னாசிப் பழத்தைச் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா என்று சர்ச்சைகள் எழுந்தன. உணவு மற்றும் மருந்து நிறுவனம், அமெரிக்கா முழுவதும் இளஞ்சிவப்பு அன்னாசி விற்பனைக்குக் கடந்த டிசம்பர் மாதம் அனுமதி வழங்கிவிட்டது. பழங்களில் மஞ்சள் வண்ணத்தைக் கொடுப்பது பீட்டா கரோட்டின். சிவப்பு நிறத்தைக் கொடுப்பது லைகோபீன். ’தக்காளி, தர்பூசணி போன்றவற்றில் இருக்கும் லைகோபீன் சிவப்பு நிறமிதான் இளஞ்சிவப்பு அன்னாசிப் பழத்திலும் இருக்கிறது. அதனால் சாப்பிடுவதில் பிரச்சினை இல்லை, பாதுகாப்பானது’ என்றும் கூறிவிட்டது. ஆனாலும் மக்கள் மனதில் இருந்த ஐயத்தைப் போக்கும் விதத்தில் கடந்த 6 மாதங்களாக இளஞ்சிவப்பு அன்னாசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விதவிதமாகப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. மக்கள் எப்பொழுது விற்பனைக்கு வரும் என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர். வழக்கமான அன்னாசிப் பழத்தைவிட இளஞ்சிவப்பு அன்னாசிப் பழத்தில் இனிப்பும் சாறும் அதிகமாக இருக்கின்றன. தற்போது அமெரிக்கா முழுவதும் விற்பனைக்கு வந்துவிட்டன.

மஞ்சள் அன்னாசி vs இளஞ்சிவப்பு அன்னாசி

திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் உலகம் முழுவதும் பரவிவிட்டது. இவர்களுக்காகவே ஸ்பெயின் நிறுவனம் ஒன்று, கண்ணாடித் துண்டுகள் மீது வெறும் கால்களில் நடக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறது. திருமணச் சடங்குகளில் ஒன்றாக ஸ்பெயினின் சில பகுதிகளில் கண்ணாடித் துண்டுகள் மீது நடக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுவது உண்டு. அதை இந்த நிறுவனம் தொழிலாக மாற்றிவிட்டது. “கிறிஸ்டல் ஆஃப் லவ் என்று இந்த நிகழ்ச்சியை அழைக்கிறோம். மணமகளும் மணமகனும் அலங்காரம் செய்துகொண்டு, ஒருவரை ஒருவர் பார்த்தபடி கண்ணாடித் துண்டுகள் மீது நடந்து வரவேண்டும். கண்ணாடி பாதத்தைப் பதம் பார்க்காமல் கவனமாக நடப்பதற்கு அருகில் ஒருவர் கையைப் பிடித்துக்கொள்வார். வாழ்க்கை என்பது கரடுமுரடானது. இருவரும் சேர்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் அறிவுபூர்வமாகக் கையாண்டு, ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு வாழ்ந்தால் எந்தத் துன்பமும் வராது. கவனமில்லாமல் சென்றால் கண்ணாடித் துண்டுகள் காலைப் பதம் பார்ப்பது போல வாழ்க்கையும் பதம் பார்த்துவிடும் என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி எடுத்துரைக்கிறது. இன்றைய இளம் ஜோடிகள் துணிச்சலோடும் ஆர்வத்தோடும் இந்தச் சடங்கை மேற்கொள்கின்றனர். தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த நிகழ்ச்சி மறக்காது என்றும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் அதிகரிக்கிறது என்றும் கூறுகிறார்கள்” என்கிறார் நிறுவனத்தின் உரிமையாளர்.

திருமணத்தன்றே ரிஸ்க் எடுக்கிறார்களே இந்த ஜோடிகள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மஞ்சள்-அன்னாசி-vs-இளஞ்சிவப்பு-அன்னாசி/article9714345.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: மனித உடலுக்குள் மைக்ரோசிப் வரமா, சாபமா?

 

 
 
uo_3169596f.jpg
 
 
 

ஸ்வீடனைச் சேர்ந்த எபிசென்டர் என்ற தொழில்நுட்ப நிறுவனம், தன் ஊழியர்களின் கைகளில் மைக்ரோசிப்பை பொருத்தி வருகிறது. 3000 பேர் வேலை செய்யும் நிறுவனத்தில் இதுவரை, 150 பேருக்கு மைக்ரோசிப்பைப் பொருத்திவிட்டது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்தாலும் தாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்கிறார்கள் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட ஊழியர்கள். “சிறிய அரிசி அளவுள்ள சிப்பை எங்கள் கைகளில் பொருத்தியிருக்கிறார்கள். சில நாடுகளில் செல்லப் பிராணிகளின் உடலில் இதுபோன்ற மைக்ரோசிப்பை பொருத்துவார்கள். அது எங்கே போகிறது, வருகிறது என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். அதேபோல தான் நாங்கள் வேலை செய்கிறோமோ, கேண்டீனில் இருக்கிறோமோ, இந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே சென்றுவிட்டோமா என்றெல்லாம் இந்த மைக்ரோசிப் மூலம் கண்டுபிடித்துவிட முடியும். கண்காணிப்பு கேமராவை விட இது இன்னும் துல்லியமாக ஊழியர்களைக் கண்காணிக்கிறது” என்கிறார் ஓர் ஊழியர். “நம் வாழ்க்கையை எளிதாக்குவதற்குதான் தொழில்நுட்பம். மைக்ரோசிப் பொருத்தப்பட்டவர்கள் தனியாக அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு வரவேண்டியதில்லை. கேண்டீனில் கூப்பன் வாங்க வேண்டிய அவசியமில்லை. அலுவலகக் கதவு தானாகவே திறந்துகொள்ளும். இப்படி வேலை செய்யும் இடத்தில் எல்லாவற்றையும் எளிதாக்கி விடுகிறது இந்த மைக்ரோசிப். அரிசி அளவில் இருக்கும் மைக்ரோசிப்பை எளிதாக உடலுக்குள் வலியின்றி, ரத்தமின்றி நுழைத்துவிட முடியும். எதிர்காலத்தில் கடன் அட்டை, சாவிகளுக்குப் பதிலாக மைரக்ரோசிப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும். இதைக் கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை. காலப்போக்கில் உடலுக்குள் வைக்கக்கூடிய மைக்ரோசிப் தவிர்க்க இயலாததாக மாறிவிடும்” என்கிறார் எபிசென்டர் நிறுவனர்களில் ஒருவரான பாட்ரிக் மெஸ்டர்டன்.

மனித உடலுக்குள் மைக்ரோசிப் வரமா, சாபமா?

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 20 வயது மாடல் ராசின் ப்ரெகுன்டா, கடந்த மாதம் புற்றுநோயால் இறந்து போனார். தான் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக, தன் தங்கை ரோசிலினிடம், “இந்தப் புற்றுநோய் என் உடலை மோசமாகப் பாதித்துவிட்டது. இனி உயிர் பிழைக்க மாட்டேன். நான் இதுவரை எப்படி அழகாகப் பார்க்கப்பட்டேனோ, அதேபோல அழகாகவே மரணத்தைச் சந்திக்க விரும்புகிறேன். என் மரணத்துக்குப் பிறகு என் பெயரைச் சொல்லும்போது அழகான உருவம் தான் மனதில் வரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். “என் அக்கா மிகவும் துணிச்சலாகப் புற்றுநோயை எதிர்கொண்டார். அவரது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தேன். அதேபோல ராசின் இறந்தவுடன், அவரது பிரத்யேக ஒப்பனைக் கலைஞரை வரவழைத்து ஒப்பனை செய்தோம். இறுதி நேரத்தில் வலியை அனுபவித்தாலும் ராசினின் முகம் மெல்லிய புன்னகையுடன் இருந்ததைக் கண்டு பலரும் ஆச்சரியமடைந்தனர். இறுதிச் சடங்குகள் அவரின் விருப்பப்படி நடத்தப்பட்டது. அத்தனை விஷயங்களையும் புகைப்படங்கள் எடுத்து, ராசினின் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளேன். பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்” என்கிறார் ரோசிலின்.

அழகான இறுதி மரியாதை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மனித-உடலுக்குள்-மைக்ரோசிப்-வரமா-சாபமா/article9715695.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: மரங்களுக்கான நூலகம்!

 

 
 
 
masala_3169943f.jpg
 
 
 

மரங்களுக்காக மரங்களால் செய்யப்பட்ட நூலகத்தை xylotheques என்று அழைக்கிறார்கள். Xylos என்றால் மரம் theque என்றால் களஞ்சியம். புத்தக வடிவில் மரத்தால் ஆன பெட்டிகளைச் செய் கிறார்கள். இந்தப் பெட் டிக்குள் மரங்களிலிருந்து பெறப்பட்ட இலை, பூ, காய், கனி, விதை, மரப்பட்டை, வேர் போன்ற மாதிரிகளைச் சேகரித்து வைக்கிறார்கள். தாவரவியல் பெயர்கள், மரம் பற்றிய குறிப்புகள், ஏதாவது நோய் தாக்கியிருக்கிறதா போன்ற தகவல்களையும் எழுதி வைத்துவிடுகிறார்கள். வழக்கமான நூலகத்தைப் போலவே மர அலமாரிகளில் இந்த மரப்புத்தகங்களும் அழகாக அடுக்கி, தலைப்புகள் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன. யேல் பல்கலைக்கழகத்திலுள்ள சாமுவேல் ஜேம்ஸ் மரநூலகத்தில் 60 ஆயிரம் மரங்கள் குறித்த தகவல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பெல்ஜியத்தில் 57 ஆயிரம் மாதிரிகளுடனும் ஜெர்மனியில் 37 ஆயிரம் மாதிரிகளுடனும் மர நூலகங்கள் இயங்கிவருகின்றன.

மரங்களுக்கான நூலகம்!

 

கென்யாவைச் சேர்ந்த 27 வயது இப்ராஹிம் முகுங்கா வசிரா அரை மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்று, எஸ்டோனியா நாட்டைப் பரபரப்புக்குள்ளாக்கிவிட்டார். 23 கி.மீ. தூரத்தையும் ஷுக்கள் அணியாமல் காலுறைகளை மட்டும் அணிந்து ஓடியிருக்கிறார்! போட்டியில் வெற்றி பெற்றதோடு, ஓட்டத்தில் புதிய சாதனையும் படைத்திருக்கிறார். ஷுக்கள் அணியாமல் இந்தச் சாதனை செய்திருப்பது நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது என்கிறார்கள். இப்ராஹிம் திட்டமிட்டு, இப்படிச் செய்யவில்லை. போட்டிக்கு ஷூக்களை அணிந்துகொண்டு வந்தார். பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒருவரிடம் ஷூக்களை ஒப்படைத்தார். போட்டி ஆரம்பிக்கும்போது அந்த மனிதரைக் காணவில்லை. பொது மக்களிடம் தனக்கு ஷூக்களை இரவல் தந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். பலன் இல்லை. தன்னுடைய நிலையைப் போட்டியாளர்களிடம் தெரிவித்தார். அவர்கள் போட்டியிலிருந்து விலகிவிடு, அல்லது காலுறைகளுடன் ஓடு என்ற இரண்டு வாய்ப்புகளை அளித்தனர். வேறுவழியின்றி, காலுறைகளுடன் போட்டியில் பங்கேற்றார். “என்னுடைய உழைப்பு ஷூக்களால் வீணாகிவிடக்கூடாது என்று முடிவு செய்தேன். காலுறைகளுடன் ஓட ஆரம்பித்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது.

சிறிது நேரத்தில் என்னிடம் ஷூக்கள் இல்லை என்பதை மறந்து, ஓடுவதிலேயே கவனத்தைச் செலுத்தினேன். பதினோராவது கிலோ மீட்டரில் மற்றவர்களை முந்திவிட்டேன். இறுதியில் எல்லைக் கோட்டைத் தொட்டபோது அதுவரை இருந்த சாதனையை முறியடித்திருக்கிறேன் என்று அறிவித்தனர். இரண்டாவது இடத்தைப் பெற்றவர் 4 நிமிடங்களுக்குப் பிறகு வந்து சேர்ந்தார். காலுறைகளுடன் ஓடிய இந்தப் போட்டி, இன்று என்னை ஒரு பிரபலமாக மாற்றிவிட்டது. எஸ்டோனியாவைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரரும் நண்பருமான டிட்ரெக் நர்ம்க்குதான் நன்றி சொல்ல வேண்டும். கென்யாவின் ஒரு மலைக்கிராமத்தில் தேயிலைப் பறித்துக்கொண்டிருந்தேன்.

என் திறமையைக் கண்டுபிடித்து, எஸ்டோனியாவுக்கு வரவழைத்து, பயிற்சி கொடுத்து, போட்டிகளில் பங்கேற்கச் செய்தவர் அவர்தான். கென்யாவுக்கும் எஸ்டோனியாவுக்கும் பறந்துகொண்டிருக்கிறேன். ஐரோப்பா முழுவதும் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். என் குடும்பத்தின் பொருளாதார நிலையும் முன்னேறியிருக்கிறது” என்கிறார் இப்ராஹிம்.

சாக்ஸுடன் ஓடி மாரத்தானை வென்ற இப்ராஹிமுக்கு பூங்கொத்து!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மரங்களுக்கான-நூலகம்/article9716602.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஸ்மார்ட்போனில் காபி

cofee_3170248f.jpg
 
 
 

இத்தாலியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் Mokase என்ற ஸ்மார்ட்போன் உறைகளைத் தயாரித்திருக்கிறது. இதை ஸ்மார்ட்போனில் மாட்டிக்கொண்டால், தேவையானபோது சூடான காபியைப் பருகிக்கொள்ளலாம். மக்கள் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கிறார்கள். சிறிதளவு காபிக்கு எவ்வளவு பெரிய பதற்றத்தையும் குறைத்துவிடும் சக்தி இருக்கிறது. ஆனால் காபி கடையைத் தேடிச் செல்லவோ, காபி இயந்திரத்தை நாடவோ அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அதனால்தான் ஸ்மார்ட்போன் உறையிலேயே காபியை உருவாக்கிவிட்டோம் என்கிறார்கள். இந்த உறையை வாங்கி ஸ்மார்ட்போனில் மாட்டி, அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்து, இவர்கள் அளிக்கும் காபி காப்சூல்களை உறைக்குள் போட வேண்டும். இந்த காப்சூலுக்குள் தண்ணீரும் காபித்தூளும் கலந்திருக்கும். ஒரு பட்டனை அழுத்தினால் 50-60 டிகிரி செல்சியஸில் சூடான காபி தயாராகிவிடும். இன்னொரு பட்டனை அழுத்தி வெளியே வரும் காபியைப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஒரு காப்சூலுக்கு 25 மி.லி. காபி கிடைக்கும். புத்துணர்வூட்ட இது போதுமானது. சூடான காபி தயாரிக்கும் உறையால் ஸ்மார்ட்போனுக்கு எந்த ஆபத்தும் வராது. உறையின் விலை 3,600 ரூபாய். 15, 30, 50 என்ற எண்ணிக்கைகளில் காப்சூல்களையும் வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த உறையை ஆப்பிள், சாம்சங், எல்ஜி போன்ற பிரபல மாடல்களில் பயன்படுத்த முடியும்.

ஸ்மார்ட்போனில் காபி; தொழில்நுட்பத்தின் உச்சம்!

பிரிட்டனின் மான்செஸ்டர் குண்டுவெடிப்பின் போது துணிச்சலுடன் இறங்கி, சிலரைக் காப்பாற்றியிருக்கிறார் 33 வயது கிறிஸ் பார்கர். இரண்டு கால்களையும் இழந்த இளம் பெண்ணையும் மோசமாகக் காயமடைந்த 60 வயது பெண்மணியையும் காப்பாற்றிய செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. சில நாட்களுக்குப் பிறகு தன்னைக் காப்பாற்றிய கிறிஸ் பார்க்கரைத் தேடி வந்தார் மரிஸ்ஸா லோவ். “குண்டு வெடிப்பு நிகழ்ந்த அதே இடத்தில் மீண்டும் கிறிஸை சந்தித்தேன். நன்றியுடன் அவரைக் கட்டி அணைத்துக் கொண்டேன். அன்று பார்த்தது போலவே அழுக்கு உடையில் காணப்பட்டார். தங்குவதற்கு வீடின்றி, தெருக்களில் வாழ்ந்து வருவதாக தொலைக்காட்சி மூலம் அறிந்திருந்தேன். இதுவரை அவருக்கு யாராவது உதவியிருக்கக்கூடும் என்று நினைத்தேன். ஆனால் இன்னும் தெருவில் வாழ்ந்து கொண்டிருப்பது வருத்தத்தை அளித்தது. கையிலிருந்த பணத்தைக் கொடுத்தேன். அவருக்கு சுமார் 41 லட்சம் ரூபாயைத் திரட்டிக் கொடுக்க இருக்கிறோம். தன் உயிரைப் பொருட்படுத்தாமல் பலரின் உயிரைக் காப்பாற்றியவருக்கு எங்களால் முடிந்த உதவி” என்கிறார் மரிஸ்ஸா. 5 ஆண்டுகளாக தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் கிறிஸ்ஸை, தொலைக்காட்சிகள் மூலம் அறிந்துகொண்ட அவரது அம்மா ஜெஸிகா பார்கர் மகனைத் தேடி வந்துவிட்டார். தன்னை ஒரு ஹீரோவாக எல்லோரும் கொண்டாடுவதை கிறிஸ் விரும்பவில்லை. “யாராக இருந்தாலும் இதுபோன்ற சூழ்நிலையில் உயிர்களைக் காப்பாற்றியிருப்பார்கள். சராசரி மனித இயல்பைக் கொண்டாடாதீர்கள்” என்கிறார் இவர்!

தன்னலம் கருதாத நல்ல மனிதருக்கு இனி குறை ஒன்றும் இல்லை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஸ்மார்ட்போனில்-காபி/article9717325.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: உலகின் பசுமையான கால்பந்து மைதானம்!

 

 
 
footbaal_3170719f.jpg
 
 
 

மலேசியாவின் சபா மலையின் காட்டுக்குள் இருக்கிறது கண்களைக் கவரக்கூடிய இந்தக் கால்பந்து மைதானம். நான்கு பக்கங்களிலும் இருக்கும் வேலிகளைச் சுற்றி அடர்த்தியான செடிகளும் கொடிகளும் ஆக்கிரமித்துள்ளன. கதைகளில் வரும் அற்புத உலகங்களில் இருக்கும் மைதானம் போன்ற தோற்றத்தை அளிக்கிறது! லாங்கோன்கோன் பள்ளியின் ஆசிரியர், இந்த மைதானத்தைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார். “இப்படி ஓர் இடத்தை யாரும் நேரில் பார்த்திருக்க முடியாது. இயற்கையின் எழிலைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. வெயில் காலத்தில் கூட இந்த மைதானம் குளுகுளுவென்று இருப்பதற்கு இந்தத் தாவரங்களே காரணம். தூய்மையான காற்றும் இதமான குளிரும் விளையாடுபவர்களுக்குப் புத்துணர்வை அளிக்கின்றன. எங்கள் மாணவர்கள் 15 நிமிடங்களில் மலையேறி, மைதானத்தை அடைந்துவிடுவார்கள். வாகனங்களில் சென்றால் 3 மணி நேரமாகும்” என்கிறார் ஆசிரியர்.

உலகின் பசுமையான கால்பந்து மைதானம்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் நடிகை பில்லர் ஓலேவ். 30 வயதாகும் அவர் கடந்த நான்கு ஆண்டுகளாகக் கடுமையான ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை இழந்திருக்கிறார். உணவு, தண்ணீர், துணி, மனிதர்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் என்று ஒவ்வாமை தரக்கூடிய பட்டியல் நீண்டுகொண்டே இருந்தது. இதனால் அவரால் சாப்பிட முடியவில்லை, வெளியில் செல்ல முடியவில்லை. ஓர் அறைக்குள் முடங்கிக் கிடந்தார். “திடீரென்று என்னால் வசனங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போனது. அதைத் தொடர்ந்து தலைவலி, மூக்கடைப்பு, மார்பு இறுக்கம் போன்றவை ஏற்பட்டன. என் கணவரும் ஒரு கட்டத்தில் அலர்ஜியாகிப் போனார். வேகமாக எடை குறைந்தேன். என் பார்வையும் குறைந்தது. பல்வேறு மருத்துவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு நான் ஒரு புரியாத புதிராக மாறினேன். எந்த மருத்துக்கும் நோய் கட்டுக்குள் வரவில்லை. மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் நிலைமை மோசமடைந்துவிடும். ஒரு மருத்துவர் வீட்டிலுள்ள என் அறையைப் பார்க்க வேண்டும் என்றார். அவர்தான் அறையிலிருந்த ஒரு குழாயிலிருந்து நச்சு வாயு வெளியேறிக்கொண்டிருக்கிறது என்பதையும் அதை 24 மணி நேரமும் சுவாசிப்பதால் எனக்கு இந்த அலர்ஜி வந்துவிட்டதாகவும் கண்டுபிடித்தார். கடந்த ஓராண்டு முழுவதும் மருத்துவமனையில் இருந்து, 24 மணி நேரமும் சுத்தமான காற்றை சுவாசித்து, மருந்துகளை எடுத்துக்கொண்டேன். இப்போது ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நடக்கிறேன், பேசுகிறேன். சில உணவுகளை உடல் ஏற்க ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் இன்னும் அலர்ஜி அளிக்கக்கூடிய விஷயங்கள் அதிகமாகவே இருக்கின்றன. நான் முழுவதுமாகக் குணமடைய இன்னும் பல வருடங்கள் ஆகலாம். விரைவில் சாதாரண வாழ்க்கையை மீண்டும் வாழ்வேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. ஒரு கவனக் குறைவு உயிருக்கே ஆபத்தாக அமைந்ததோடு, சமாளிக்க முடியாத அளவுக்குச் செலவையும் இழுத்து வைத்துவிட்டது” என்கிறார் பில்லர். இவருக்குச் சிகிச்சையளிக்கும் டெக்ஸாஸ் மருத்துவமனை, இதுபோன்ற ஒரு நோயாளியை முதல்முறை சந்தித்திருப்பதாகக் கூறுகிறது.

காரணத்தைக் கண்டுபிடித்த டாக்டருக்கு நன்றி!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உலகின்-பசுமையான-கால்பந்து-மைதானம்/article9718126.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: பாதசாரிகளுக்கு நம் ஊர்களில் இடமே இல்லை!

 

 
 
 
ulaga_masala_3171129f.jpg
 
 
 

தென் கொரிய தலைநகர் சியோலில் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் விதத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மிக நீண்ட பாலம் இயங்கிவந்தது. சியோல் ஸ்டேஷன் என்று அழைக்கப்பட்ட இந்தப் பாலம், தென் கொரியாவின் முக்கிய அடையாளமாகவும் பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பதாகவும் இருந்தது. 2012-ம் ஆண்டு 1,024 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலத்தைப் பரிசோதித்தபோது, இன்னும் 3 ஆண்டுகளுக்கே போக்குவரத்து நெரிசலைத் தாங்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். உடனே பாலத்தை இடித்துவிட்டு, புதிதாகக் கட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டது. 2015-ம் ஆண்டு மூடப்பட்ட பாலம், சில நாட்களுக்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த முறை சாலைகளில் வாகனங்களும் பாலத்தில் மனிதர்களும் செல்லும்படி அமைத்துவிட்டனர். சியோல்லோ 7017 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாலத்தில் தொங்கும் தோட்டத்தை அமைத்திருக்கின்றனர். மிகப் பெரிய 645 கான்க்ரீட் தொட்டிகளில் 228 வகை தாவரங்களை வைத்திருக்கிறார்கள். இவற்றில் ஆளுயர மரங்களும் உண்டு. பாலத்தில் எந்தப் பகுதியிலிருந்தும் ஏறி இறங்குவதற்கு வசதியாக 17 இடங்களில் படிக்கட்டுகள் இருக்கின்றன. “நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த பாலத்தைக் கட்டிடக் கலையின் முன்னேற்றத்தைக் காட்டும்படி அமைத்திருந்தோம். பாலத்தைச் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அமைத்திருக்கிறோம். நடந்து செல்பவர்களுக்குப் பாலம் சுவாரசியத்தை அளிக்கும். தூய்மையான காற்றும் கிடைக்கும். இரவு நேரத்தில் மரங்களை வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளோம். பகலில் ஒருவித அழகையும் இரவில் இன்னொரு வித அழகையும் ரசிக்கலாம்” என்கிறது சியோல்லோவை வடிவமைத்த நிறுவனம்.

பாதசாரிகளுக்கு நம் ஊர்களில் இடமே இல்லை!

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் இருக்கும் கோல்ட் கர்ரி உணவகத்தில் குறிப்பிட்ட நேரத்துக்குள், குறிப்பிட்ட அளவு உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கு 58 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் 9 கிலோ உணவுகளைக் காலி செய்தால்தான் இந்தப் பரிசு கிடைக்கும். சவாலை ஏற்றுக் கொண்டு சாப்பிடச் செல்பவர்களுக்கு முதலில் 2 கிலோ சாதமும் குழம்பும் வழங்கப்படுகிறது. இதை 15 நிமிடங்களுக்குள் சாப்பிட் டு முடித்தால், உணவுக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டிய தில்லை. அடுத்து 4 கிலோ உணவை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிக்க வேண்டும். பிறகு 15 நிமிடங்களில் 3 கிலோ உணவைச் சாப்பிட்டு முடித்தால், சாப்பிட்ட உணவுகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. உணவகம் 58 ஆயிரம் ரூபாய் பரிசையும் வழங்கிவிடும். ஒருவேளை போட்டியில் வெற்றி பெற முடியாமல் போனால், சாப்பிட்ட உணவுகளுக்குக் கட்டணத்தைச் செலுத்தி விட்டுச் செல்ல வேண்டும். சாதாரணமான மனிதர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு, வெற்றி பெறுவது சாத்தியமில்லை. ஆனால் உணவுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு போட்டியில் கலந்துகொண்டால் பரிசைப் பெற்றுவிடலாம். இதுவரை ஒருவர் கூட போட்டியில் வெற்றி பெறவில்லை.

இது வயிறா, பத்தாயமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பாதசாரிகளுக்கு-நம்-ஊர்களில்-இடமே-இல்லை/article9718912.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: மைதானம் நடுவில் 100 வயது மரம்

 

 
masala_3171417f.jpg
 
 
 

பெய்ஜிங்கில் உள்ள யுகாய் உயர்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம் மிகவும் கவனமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மைதானத்துக்கு நடுவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் ஒன்று நின்றுகொண்டிருக்கிறது. மைதானத்தில் உள்ள மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். “பள்ளியைச் சுற்றிலும் சரித்திரப் புகழ்பெற்ற கட்டிடங்கள் இருப்பதால், மைதானத்துக்கு இடமே கிடைக்கவில்லை. இறுதியில் இந்த இடம்தான் கிடைத்தது. மரத்தை அகற்ற முயன்றபோது, அரசாங்க அதிகாரிகள் இது 100 வயதைக் கடந்த மரம் என்பதால் வெட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். வேறு இடத்தில் பெயர்த்து வைக்கும்போது உயிர் பிழைக்கும் சாத்தியமும் குறைவு என்று தெரிந்தது. அதனால் மரத்துக்கு வேலி அமைத்துவிட்டு, சுற்றியுள்ள இடங்களைப் பயன்படுத்தி வருகிறோம். விளையாடுவதற்குத் தடையாக இருப்பதால், மரத்தை அகற்ற வேண்டும் என்கிறார்கள். நாங்கள் சம்மதிக்கவில்லை. மைதானத்துக்கு இன்னொரு இடம் கிடைத்துவிட்டது. இந்த மைதானத்தில் பயிற்சிகளையும் போட்டிகளைப் புது மைதானத்திலும் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் பள்ளி நிர்வாகி.

நூறு வயது மரத்தைக் காப்பாற்றும் நல்ல உள்ளங்கள்!

 

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் வசிக்கிறார் 57 வயது கார்மென் ஜிமெனெஸ். 28 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கண்ணில் மோசமான காயம் ஏற்பட்டது. எவ்வளவோ மருத்துவம் பார்த்தனர். ஆனாலும் அவரது பார்வை பறிபோய் விட்டது. குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள். இத்தனை ஆண்டுகளும் பார்வையற்றவராகவே வீட்டிலும் வெளியிலும் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் இவருக்குப் பார்வை தெரிகிறது என்ற விஷயத்தைக் குடும்பத்தினர் கண்டுபிடித்துவிட்டனர். “பார்வையற்றவர் போலில்லாமல் ஒப்பனையிலிருந்து பல விஷயங்களையும் மிகச் சரியாகச் செய்வார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பார். எங்களுக்குச் சந்தேகம் வந்தாலும் ஏற்கெனவே பார்வை இல்லாமல் கஷ்டப்படுபவரின் மனம் வருத்தப்படுமே என்று கேட்கவில்லை.

அவருக்குத் தெரியாமல் கண்காணித்தோம். யாரும் இல்லாத நேரத்தில் வெகு இயல்பாகப் பார்வையுள்ளவர்களைப் போல நடந்துகொண்டார். அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு வருடங்களும் பார்வையற்றவர் என்ற காரணத்துக்காக மிகவும் அக்கறையாகப் பார்த்துக்கொண்டோம். எந்தத் தொந்தரவும் கொடுத்தது இல்லை. எங்களிடம் கூட உண்மையைச் சொல்லாமல் இருந்தது ஏன் என்று புரியவில்லை” என்றார் கணவர். கார்மெனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். “எனக்குச் சமூகத்துடன் சேர்ந்து வாழப் பிடிக்கவில்லை. எதிரில் வருபவர்களுக்கு வணக்கம் சொல்வது, வீட்டுக்கு வருகிறவர்களை உபசரிப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் பிடிக்காது. இவற்றை எப்படித் தவிர்ப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் கண்ணில் காயம் ஏற்பட்டது. அதைப் பயன்படுத்திக் கொண்டேன்” என்கிறார் கார்மென். தன்னை நம்பிய குடும்பத்தினரை ஏமாற்றியதோடு, அரசாங்கத்தையும் ஏமாற்றியிருக்கிறார் இவர். பார்வையற்றவருக்கான பொருளாதார உதவிகளைப் பெற்று வந்ததால் சிக்கலில் இருக்கிறார்.

இப்படியும் ஒரு பெண்ணா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மைதானம்-நடுவில்-100-வயது-மரம்/article9719569.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்
On 1.6.2017 at 7:11 AM, நவீனன் said:

உலக மசாலா: ஸ்மார்ட்போனில் காபி

cofee_3170248f.jpg
 
 
 

இத்தாலியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் Mokase என்ற ஸ்மார்ட்போன் உறைகளைத் தயாரித்திருக்கிறது. இதை ஸ்மார்ட்போனில் மாட்டிக்கொண்டால், தேவையானபோது சூடான காபியைப் பருகிக்கொள்ளலாம். மக்கள் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கிறார்கள். சிறிதளவு காபிக்கு எவ்வளவு பெரிய பதற்றத்தையும் குறைத்துவிடும் சக்தி இருக்கிறது. ஆனால் காபி கடையைத் தேடிச் செல்லவோ, காபி இயந்திரத்தை நாடவோ அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அதனால்தான் ஸ்மார்ட்போன் உறையிலேயே காபியை உருவாக்கிவிட்டோம் என்கிறார்கள். இந்த உறையை வாங்கி ஸ்மார்ட்போனில் மாட்டி, அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்து, இவர்கள் அளிக்கும் காபி காப்சூல்களை உறைக்குள் போட வேண்டும். இந்த காப்சூலுக்குள் தண்ணீரும் காபித்தூளும் கலந்திருக்கும். ஒரு பட்டனை அழுத்தினால் 50-60 டிகிரி செல்சியஸில் சூடான காபி தயாராகிவிடும். இன்னொரு பட்டனை அழுத்தி வெளியே வரும் காபியைப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஒரு காப்சூலுக்கு 25 மி.லி. காபி கிடைக்கும். புத்துணர்வூட்ட இது போதுமானது. சூடான காபி தயாரிக்கும் உறையால் ஸ்மார்ட்போனுக்கு எந்த ஆபத்தும் வராது. உறையின் விலை 3,600 ரூபாய். 15, 30, 50 என்ற எண்ணிக்கைகளில் காப்சூல்களையும் வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த உறையை ஆப்பிள், சாம்சங், எல்ஜி போன்ற பிரபல மாடல்களில் பயன்படுத்த முடியும்.

ஸ்மார்ட்போனில் காபி; தொழில்நுட்பத்தின் உச்சம்!

 

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஸ்மார்ட்போனில்-காபி/article9717325.ece

 

ஸ்மார்ட்போனில் காபி

  • தொடங்கியவர்

உலக மசாலா: வின்சென்ட்டுக்கு ஜே!

 
brazil_3172018f.jpg
 
 
 

பிரேசிலில் உள்ள காடுகளை அழித்து வீடுகளைக் கட்டி வருகிறார்கள். ஆனால் ஒரு நிலத்தை வாங்கி, காட்டை உருவாக்கி யிருக்கிறார் 83 வயது அன்டோனியோ வின்சென்ட். “மரங்கள் அடர்ந்த வனப் பகுதியில்தான் என் குழந்தைப் பருவம் கழிந்தது. மரங்கள் வெட்டுவதையும் மரங்கள் வெட்டியதால் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டதையும் கண்டேன். நம்மால் தண்ணீரை உருவாக்க முடியாது. இருப்பதைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனை கூட மனிதர்களுக்கு இல்லை. பிறகு நகருக்கு வந்துவிட்டோம். ஆனாலும் வனத்தையே மனம் தேடிக்கொண்டிருந்தது. கடினமாக உழைத்து, 1973-ம் ஆண்டு 31 ஏக்கர் நிலத்தை வாங்கி, பல்வேறு விதைகளை விதைத்தேன். தண்ணீர் ஊற்றி வளர்த்தேன். அருகில் இருந்தவர்கள் இதில் ஒரு பைசா வருமானம் வராது, வெட்டி வேலை என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். நான் கண்டுகொள்ளவில்லை. சில கழுதைகளையும் மனிதர்களையும் உதவிக்கு வைத்துக்கொண்டு இந்தக் காட்டை உருவாக்கினேன். ஆரம்பத்தில் விடுமுறை நாட்களில் வந்து வேலை செய்தேன். பின்னர் இதையே என் முழு நேரத் தொழிலாக மாற்றிக்கொண்டேன். மரங்களிலிருந்து விளையும் பழங்களைச் சாப்பிடுவேன். எலிகளுடனும் நரிகளுடனும் வாழ்ந்தேன். 40 ஆண்டுகளில் இந்தக் காட்டில் 50 ஆயிரம் மரங்களை வைத்திருக்கிறேன். ஆரம்பத்தில் தண்ணீர் விடுவதுதான் பெரிய பிரச்சினையாக இருந்தது. இப்போது சிற்றருவிகளும் குளங்களுமாக 20 தண்ணீர் ஆதாரங்கள் காட்டுக்குள் இருக்கின்றன. தண்ணீர் வந்தவுடன் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், விலங்குகள் எல்லாம் காட்டுக்குள் குடிபுகுந்துவிட்டன. பார்ப்பவர்கள் அனைவரும் இதைச் சிறிய மழைக்காடு என்றே அழைக்கிறார்கள். நாற்பது ஆண்டு களில் ஒரு தனி மனிதரால் சிறிய காட்டை உருவாக்க முடியும் என்றால், அரசாங்கம் மனம் வைத்தால் இருக்கிற காடுகளையும் பாது காக்க முடியும். புதிய காடுகளையும் உருவாக்க முடியும். எல்லோரும் என் குடும்பம் பற்றி விசாரிக்கிறார்கள். என் குடும்பம் கொஞ்சம் பெரியது. நான் விதைத்து உருவாக்கிய 50 ஆயிரம் மரங்கள்தான் என் பிள்ளைகள். இந்தப் பூமிக்கு என்னால் முடிந்த நல்ல விஷயத்தை செய்த திருப்தி இருக்கிறது” என்கிறார் வின்சென்ட்.

வின்சென்ட்டுக்கு ஜே!

மனிதர்களைப் போலவே விலங்குகளும் சோகத்தைப் பிரதி பலிக்கின்றன. காங்கோவிலுள்ள விருங்கா தேசியப் பூங்காவில் ஒரு கொரில்லாவின் தாயை வேட்டைக்காரர்கள் சுட்டுக் கொன்று விட்டனர். தாயை இழந்த கொரில்லா மிகுந்த மன அழுத்தத்துக்குச் சென்றுவிட்டது. முகத்தில் தாங்க முடியாத வருத்தத்தையும் கண்ணீரையும் வெளிப்படுத்தி, அமர்ந்திருந்த காட்சி எல்லோரையும் உலுக்கிவிட்டது. வனக் காவலர் ஒருவர் கொரில்லாவின் அருகில் அமர்ந்து, ஆதரவாகத் தோளில் கை வைத்தார். உடனே தன்னுடைய முன்னங்கால்களை எடுத்து காவலரின் மடியில் வைத்துக்கொண்டு, துக்கத்தைப் பகிர்ந்துகொண்டது. “உலக கொரில்லா எண்ணிக்கை யில் நான்கில் ஒரு பகுதி இந்தப் பூங்காவில் இருக்கின்றன. வேட்டைக்காரர்களால் இளம் கொரில்லாக்கள் பெற்றோரை இழந்து மிகவும் துன்பப்படுகின்றன. மனிதர்களைப் போலவே பெற்றோருக் காக ஏங்கித் தவிக்கின்றன. ஆறுதலைத் தேடி அலைகின்றன” என்கிறார் வனக் காவலர்.

கொரில்லாவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வின்சென்ட்டுக்கு-ஜே/article9720980.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: அமைதியும் மகிழ்ச்சியும் நிலவட்டும்!

omron_3172490h.jpg
 

கடந்த ஆகஸ்ட் மாதம் போர் நடைபெற்று வந்த சிரியாவின் அலெப்போ நகரில் வீசப்பட்ட குண்டுகளில் பல குடியிருப்புகள் தரைமட்டமாகின. இடி பாடுகளுக்கு இடையே மீட்கப்பட்ட ஒரு சிறு வனின் புகைப்படத்தை போர் எதிர்ப்பாளர்கள் வெளியிட்டனர். புழுதி யோடும் ரத்தத்தோடும் ஒரு துளி கண்ணீர்கூட விடாமல் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த 5 வயது ஒம்ரான் டாக்னீஷ் படம் உலகத்தை உலுக்கியது. சிரியாவின் மோசமான சூழ்நிலையை எடுத்துக்காட்டியது. இந்தத் தாக்குதலில் ஒம்ரானின் 10 வயது அண்ணன் உயிரிழந்தான். இவனது அம்மாவும் மற்றவர்களும் மீட்கப்பட்டனர். அனைவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு, வீடு திரும்பினர். பத்து மாதங்களுக்குப் பிறகு காயங்களிலிருந்து முற்றிலும் குணமான ஒம்ரானின் புகைப்படம் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தன் அப்பாவின் மடி மீது அமர்ந்து, செய்தியாளரிடம் பேசுவதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான் ஒம்ரான்.

இனியாவது ஒம்ரானின் வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவட்டும்!

குழந்தைகளுக்கு விரல் சப்பும் பழக்கம் இருப்பது இயல்பானது. 5 வயது வரை குழந்தைகள் விரல் சப்புவதைத் தொடர்கிறார்கள். பெரியவர்களும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் பெரியவர்களில் பத்தில் ஒருவர் யாருக்கும் தெரியாமல் விரல் சப்பும் பழக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. “எவ்வளவு வயதானாலும் விரல் சப்புவதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் இந்தச் சமூகம் கிண்டல் செய்யும், குடும்பத்தினர் சங்கடமாக உணர்வார்கள் என்பதால்தான் நாங்கள் திருட்டுத்தனமாக விரல் சப்புகிறோம். தாயின் கருப்பையில் இருக்கும்போதே குழந்தை விரல் சப்ப ஆரம்பித்துவிடுகிறது. பிறந்த பிறகும் விரல் சப்புவதைத் தொடர்கிறது. தாய்ப்பால் நிறுத்திய பிறகு விரலைத்தான் அதற்கு மாற்றாக வைத்துக்கொள்கிறது. குழந்தையோ பெரியவர்களோ விரல் சப்பும்போது ஏதோ ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்கிறது. விரல் சப்புவது ஒன்றும் குற்றமான செயல் அல்ல. செலவு இல்லாதது, சட்டச் சிக்கல் இல்லாதது. யாருக்கும் கெடுதல் தராத இந்தப் பழக்கத்தைச் சமூகம் வெளிப்படையாக அங்கீகரிக்க வேண்டும்” என்கிறார் 65 வயது ஹார்வி மில்லர். விரல் சப்பக்கூடிய பெரும்பாலானவர்கள் சமூகத்தைக் கண்டே பயப்படுகிறார்கள். அதனால் காரில் இருக்கும்போது, வீட்டில் தனியாக இருக்கும்போது, படிக்கும்போது, டிவி பார்க்கும்போது, தூங்கும்போது விரல் சப்பிக்கொள்கிறார்கள். சிலர் விரலைத் துணியால் மறைத்து, சப்புவதைக் கண்டுபிடிக்க முடியாதபடி ரசனையாகச் செய்கிறார்கள். ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் விரல் சப்பும் பழக்கத்தைத் தொடர்கிறார்கள். இதில் அமெரிக்காவில் வசிக்கும் புகழ்பெற்ற பாடகி ரியான்னாவும் ஒருவர் என்கிறார் மனநல ஆலோசகர் கிறிஸ் ஹர்ட். “முப்பது வயதைத் தாண்டினாலும் என்னால் விரல் சப்புவதை நிறுத்த முடியவில்லை. என் மனைவிக்குத் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் பல முறை விட முயற்சி செய்தேன். என்னால் பழக்கத்தை விட முடியவில்லை. திருட்டுத்தனமாகச் சப்புவது கூடுதல் சுவாரசியமாக இருக்கிறது” என்கிறார் நைரோபியைச் சேர்ந்த ஹாரி ஓலோ. ஆனால் பல் மருத்துவர் ஹோ, 4 வயதுக்கு மேல் விரல் சப்புவதை நிறுத்திவிடுவதுதான் பற்களுக்கும் சமூக வாழ்க்கைக்கும் நல்லது என்கிறார்.

ஆ... இது என்ன விநோதம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அமைதியும்-மகிழ்ச்சியும்-நிலவட்டும்/article9721783.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: துணிச்சல்காரர்

 

 
malai_3172811f.jpg
 
 
 

கலிபோர்னியாவைச் சேர்ந்த 31 வயது அலெக்ஸ் ஹன்னோல்ட் மிகச் சிறந்த மலையேற்ற வீரர். உயிருக்கு உத்திரவாதமில்லாத மிக ஆபத்தான செங்குத்து மலையில், கைகளையும் கால்களையும் பயன்படுத்தி, 3 மணி 56 நிமிடங்களில் மலை உச்சியை அடைந்தார். கிரானைட் மலையில் கைகள் வழுக்காமல் இருப்பதற்காக இடுப்பில் கட்டியிருந்த பையில் உள்ள சுண்ணாம்புத் தூளைப் பயன்படுத்திக்கொண்டார். ஜூன் 4-ம் தேதி இந்த முயற்சியை மேற்கொள்வதற்கு முன்பு பலமுறை கயிற்றைக் கட்டிக்கொண்டு மலையேறியிருக்கிறார். எங்கெல்லாம் கைகளால் பிடித்துக்கொள்ள முடியும் என்பதை சாக்பீஸால் குறித்து வைத்துவிட்டார். அதனால் கொஞ்சம் எளிதாக அவரால் ஏற முடிந்தது. இந்த சாதனையைச் செய்ததன் மூலம், எந்தக் காலத்திலும் தனி நபர் செய்த சிறந்த சாதனையாக இது நிலைத்திருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். “எத்தனையோ தடவை மலையேற்றம் செய்தாலும் கயிறும் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் மலையேறியது மிகவும் கடினமான காரியமாகவே இருந்தது. சில இடங்களில் கைகளையும் கால்களையும் வைப்பதற்குக் கூட வசதியான இடம் அமையவில்லை. கொஞ்சம் பயந்தாலும் கவனம் சிதறினாலும் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும் என்பதை அறிந்தேதான் மலையேறினேன். கை, கால் கட்டை விரல்களுக்குதான் அதிக வேலை. சாதித்த பிறகு கிடைத்த சந்தோஷத்துக்கு உலகில் ஈடு எதுவும் இல்லை” என்கிறார் அலெக்ஸ். பயமில்லாத அணுகுமுறையைப் பார்த்து வியந்த விஞ்ஞானிகள், இவரது மூளையை ஆராய விரும்புகிறார்கள்.

துணிச்சல்காரர்!

நியூசிலாந்தைச் சேர்ந்த 14 வயது டேட்டனுக்கு பிறக்கும்போதே அரிய குறைபாடு இருந்தது. பால் குடிக்கும் பருவத்தைக் கடந்து, திட உணவுகளை ஊட்டும்போதுதான் குறைபாடு தெரியவந்தது. எந்தத் திட உணவைக் கொடுத்தாலும் இவனால் மெல்ல முடியாது. வாய்க்குள் போட்ட வேகத்தில் விழுங்கிவிடுவான். இது வயிற்றுப் பிரச்சினையைக் கொண்டு வந்துவிட்டது. மருத்துவர்கள் வயிற்றில் ஒரு சிறிய இயந்திரத்தைப் பொருத்தி, அதன்மூலம் உணவுகளைச் செலுத்தி வந்தனர். இவனது குறைபாட்டைச் சரி செய்யும் முயற்சியிலும் இறங்கினர். திடீரென்று இதயக் கோளாறும் ஏற்பட்டது. சூழல் சிக்கலானது. மருத்துவமனையிலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது. இவனைப் பற்றிய செய்தி வெளியில் தெரிந்தது. ஒரு மருத்துவப் பல்கலைக்கழகம் டேட்டனுக்கு உதவ முன்வந்தது. கொஞ்சம் கொஞ்சமாகக் குணமடைந்தான். பதினோராவது பிறந்த நாள் அன்று குடும்பத்தினரோடு அமர்ந்து திட உணவுகளை மென்று சாப்பிட்டான். அவனும் குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். தற்போது இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு நன்றாக தேறிவிட்டான். “பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட டேட்டன், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளை மருத்துவமனையிலேயே கழித்திருக்கிறான். வெளியில் எங்குமே சென்றதில்லை. மக்கள் அதிகம் இருக்கும் இடங்களுக்குச் சென்றால் அலர்ஜி ஏற்பட்டுவிடும். இவனும் நாங்களும் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்துவிட்டோம். இனி நிம்மதி” என்கிறார் அம்மா லூக்.

ஐயோ… பாவம்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-துணிச்சல்காரர்/article9722533.ece?homepage=true&relartwiz=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.