Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக மசாலா

Featured Replies

  • தொடங்கியவர்

உலக மசாலா - தத்ரூப சிலைகள்

 

 
abraham

உலக ஜப்பானிய கலைஞர் கஸுஹிரோ சுஜியின் சிற்பங்கள் நிஜ மனிதர்களை அப்படியே ஒத்திருக்கின்றன. இதுவரை இவர் அளவுக்கு தத்ரூபமான சிற்பங்களை உருவாக்கியவர்கள் யாருமில்லை என்கிறார்கள். கியோடோவில் பிறந்த சுஜி ஓவியங்கள், புகைப்படங்கள், தொழில்நுட்பம் போன்றவற்றில் அதிக ஆர்வத்தைச் செலுத்தி வந்தார்.

விதவிதமான பொருள்களைக் கொண்டு, விதவிதமான நுட்பங்களைப் பயன்படுத்தி மனித உருவங்களைச் செய்து பார்த்துக்கொண்டே இருந்தார். சிற்பக் கலையையும் மேக்அப் கலையையும் இணைத்துப் புதுமையான 3டி சிற்பங்களை உருவாக்கினார். 1976-ம் ஆண்டு வெளியான ஒரு தொலைக்காட்சி தொடரைப் பார்த்தவருக்கு ஆபிரகாம் லிங்கன் மீது ஆர்வம் வந்துவிட்டது. அவரைப் போல ஒரு 3டி சிற்பம் உருவாக்க முயன்றார்.

அப்பொழுது திரைப்படங்களில் ஸ்பெஷல் மேக் அப் ஆர்டிஸ்டாக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து கிடைத்த வருமானத்தைக்கொண்டு, பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, 3டி சிற்பத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இறுதியில் அவர் எதிர்பார்த்த, யாருமே எதிர்பார்க்காத அற்புதமான சிற்பம் உருவாகிவிட்டது!

அடடா! லிங்கனை நேரில் பார்ப்பது போலவே இருக்கே!

டாமியன் ப்ரெஸ்டன் பூத் தான் உலகிலேயே மிகவும் புத்திசாலியான, பணக்காரரான பிச்சைக்காரர். 37 வயதான பூத் ஒவ்வொரு வாரமும் லண்டனின் சில பகுதிகளுக்குச் சென்று பிச்சை எடுக்கிறார். அவர் பிச்சை கேட்பது சாதாரண மக்களிடம் இல்லை. வசதியான சுற்றுலாப் பயணிகளிடம் சென்று, சாதுரியமாகப் பேசி நிதி கேட்கிறார்.

பணம் இல்லை என்று சொன்னால், உடனே கிரெடிட் கார்ட் பயன்படுத்திக்கொள்ள, கையிலேயே மெஷின் வைத்திருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்து வரும் பூத், தான் பெறும் நிதிக்கு ரசீதும் கொடுத்துவிடுகிறார். மாத வாடகையில் வசதியான குடியிருப்பில் வாழ்கிறார். ஆண்டுக்கு நான்கு, ஐந்து முறை வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்கிறார்.

பணக்காரர்கள் கூடும் இடங்களுக்குச் சென்று, கேமராக்களுக்கு முன்பு நிதி கேட்பதால், தவிர்க்க இயலாமல் எல்லோரும் பணம் கொடுத்துவிடுகிறார்கள். பல்வேறு மொழிகளைக் கொஞ்சம் கற்று வைத்திருப்பதால், யாரிடமும் எளிதில் பேசிவிடுகிறார் பூத். பிரிட்டனில் பிச்சை எடுப்பது சட்டப்படிக் குற்றம் என்பதால், நல்ல வேலைக்காகக் காத்திருப்பதாகவும் அதுவரை சின்னச் சின்ன வேலைகள் செய்து வருவதாகவும் சொல்லி, சமாளிக்கிறார். முன்னாள் நண்பர்கள் மூலம்தான் பூத் பற்றிய செய்தி வெளியே பரவியிருக்கிறது.

ஏமாத்துறவங்க ஒருநாள் சிக்கத்தான் செய்வாங்க…

ஜஸ்டின் ஜெட்லிகா உலகிலேயே அதிக முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட மனிதர் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இதுவரை 190 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு, நூறு சதவிகித பிளாஸ்டிக் மனிதராக மாறியிருக்கிறார் ஜஸ்டின்.

மிகவும் ஆபத்து நிறைந்தது தன்னுடைய பிளாஸ்டிக் சர்ஜரி முயற்சி என்று சொல்லும் ஜஸ்டின், இதுவரை 1 கோடியே 35 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார். பிளாஸ்டிக் சர்ஜரி மீது இருக்கும் ஆர்வம் இன்னும் கூட குறையவில்லை என்கிறார் அவர்.

ம்… பிளாஸ்டிக் சர்ஜரி அடிமை போலிருக்கு…

ட்ரெக் நாஷ் தான்யா வால்ஷ் தம்பதி பிரிட்டனில் வசிக்கிறார்கள். அவர்களுடைய ஐந்து வயது மகன் அலெக்ஸ், பள்ளியில் இருந்து வந்தபோது ஒரு கடிதத்தைக் கையில் வைத்திருந்தான். அது அலெக்ஸ் நண்பனின் அம்மா ஜுலியா லாரன்ஸ் எழுதிய கடிதம். தன்னுடைய மகனின் பிறந்தநாள் விழாவுக்கு அலெக்ஸ் வராததால், அவனுக்காக ஏற்பாடு செய்திருந்த விஷயங்கள் வீணாகிவிட்டதாகவும் நஷ்ட ஈடாக 1500 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

ட்ரெக்கும் தான்யாவும் அதிர்ந்து போனார்கள். முறையாக அழைப்பு கூட பெறப்படாத ஒரு விழாவுக்குச் செல்லவில்லை என்பதற்காக நஷ்ட ஈடு வழங்க இயலாது என்று அலெக்ஸின் பெற்றோர் கூறுகின்றனர். இணையதளங்களில் இரு தரப்பும் மாறி, மாறி குற்றம்சாட்டி வருகின்றன.

இப்படியெல்லாம் கூட நடக்குமா?

http://tamil.thehindu.com

  • Replies 1k
  • Views 150.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலக மசாலா: இந்த நாயின் அன்பை என்னவென்று சொல்வது!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
17chkanloyal-dog
 
 

அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று, தன்னை வளர்த்தவருக்காக 10 வருடங்களாகக் காத்துக்கொண்டிருக்கிறது. நாயை வளர்த்த மிகைல் குஸ்மன், 2006-ம் ஆண்டு இறந்து போனார். அப்போது நாய் வீட்டை விட்டு ஓடிவிட்டது. சில மாதங்களுக்குப் பிறகு குஸ்மனின் மனைவியும் மகனும் கல்லறைக்குச் சென்றனர். அங்கே நாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். பலமுறை கல்லறையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றபோதும் மீண்டும் கல்லறைக்கே திரும்பிவிட்டது. சில மாதங்களில் நாய் திரும்பிவிடும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் நாய் கல்லறையை விட்டு வரவில்லை. குஸ்மன் மீது நாய் வைத்திருக்கும் அன்பைக் கண்டு ஆச்சரியப்பட்ட கல்லறை ஊழியர்கள், நாயை அன்புடன் கவனித்துக் கொள்கின்றனர். உணவு, மருந்துகளை வழங்கி வருகின்றனர். 2012-ம் ஆண்டு ‘5 ஆண்டுகளாக வளர்த்தவருக்காகக் கல்லறையில் காத்திருக்கும் நாய்’ என்ற தலைப்பில் சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளிவந்தது. தற்போது 10 ஆண்டுகளாகிவிட்டன. இன்றும் தன்னை வளர்த்தவருக்காக பகல் முழுவதும் கல்லறையிலேயே காத்திருக்கிறது இந்த நாய். 15 வயதாகிவிட்டதால் பார்வை சரியாகத் தெரியவில்லை. நடக்க முடியவில்லை. ஆனாலும் பராமரிப்பு இல்லத்துக்கோ, குஸ்மன் வீட்டுக்கோ நாய் செல்ல மறுக்கிறது. “குஸ்மன் இறுதிச் சடங்கின்போது நாய் இந்த ஊரிலேயே இல்லை. பிறகு எப்படி சரியாக அவரது கல்லறையைக் கண்டுபிடித்தது என்று புரியாத புதிராகவே இருக்கிறது. இறந்தவர் மீண்டும் வருவதில்லை என்ற விவரம் புரியாமல், என்றாவது ஒருநாள் பார்த்துவிட மாட்டோமா என்று ஒரு நாயால் எப்படிக் காத்திருக்க முடிகிறது என்பது ஆச்சரியமாகவும் மர்மமாகவும் இருக்கிறது” என்கிறார் நாய் பயிற்சியாளர் அல்டோ சிச்சி.

இந்த நாயின் அன்பை என்னவென்று சொல்வது!

சீனாவிலுள்ள குவாங்ஸோவ் கால்பந்து மைதானம் கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பிறகு, நீல நிறத்துக்கு மாற்றப்பட்டது. அதுவரை சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த சீன கால்பந்து அணிகள், மோசமான நிலைக்குச் சென்றன. பல போட்டிகளில் விளையாடி, ஒரே ஒரு முறைதான் வெற்றியைப் பெற்றனர். பொதுமக்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். விளையாட்டு வீரர்களை இது கடுமையாகப் பாதித்தது. தோல்விக்கான காரணங்கள் அலசப்பட்டன. இறுதியில் ஏற்கெனவே இருந்த மஞ்சள் நிறத்தை, நீல நிறமாக மாற்றியதுதான் காரணமாக இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் நினைக்க ஆரம்பித்தனர். இது முட்டாள்தனமான கருத்து என்று சிலர் சொன்னதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஃபெங் ஷூய் முறைப்படி மீண்டும் மைதானம் மஞ்சள் நிறத்துக்கு மாறியது. இப்போது மீண்டும் சீன கால்பந்து அணிகள் வெற்றி மேல் வெற்றியைக் குவித்து வருகின்றன. “ஃபெங் ஷூய் மீது நம்பிக்கை இருக்கு, இல்லை என்பது முக்கியமில்லை. இப்போது எங்கள் அணிகள் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதோடு, அதிக புள்ளிகளும் எடுத்து வருகின்றன. எல்லோருக்கும் மகிழ்ச்சி. இனிமேல் நாங்கள் வேறு வண்ணம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை” என்கிறார் கால்பந்து அணியின் பயிற்சியாளர் டிராகன் ஸ்டோஜ்கோவிக்.

இன்னுமா இதையெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்!

http://tamil.thehindu.com/world/article19507504.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக மசாலா: லிசாவுக்கு நேர்ந்த துயரத்தை நினைத்தால் திகிலாக இருக்கிறது!

 

 
18chskolisa

மூன்று வாரங்களுக்கு முன்பு காணாமல் போன 25 வயது ரேடியோலஜி மாணவி லிசா தெரிஸ், அமெரிக்காவின் அலபாமா காட்டில் கண்டுபிடிக்கப்பட்டார். “நான் அந்த வழியாக கார் ஓட்டிக்கொண்டு வந்தேன். அப்போது புதர்களுக்குப் பின்னால் ஏதோ விலங்கு அசைவதுபோல் தோன்றியது. மானாக இருக்கும் என்று நினைத்து, ஆர்வமாகத் தேடிச் சென்றேன். அங்கே ஒரு பெண் அழுக்காகவும் ஆடையின்றியும் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் ஓட ஆரம்பித்தார். அவரைத் துரத்திச் சென்று பிடித்தேன். மெலிந்த உடல் முழுவதும் பூச்சிக்கடிகள். சிக்குப் பிடித்த தலைமுடி. நகங்களில் அழுக்கு. மிரட்சியான பார்வை. நீண்ட காலம் காட்டில் வசித்தவராகத் தெரிந்தார். அவர் யார், ஏன் இங்கு வசிக்கிறார் என்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை. பெர்ரிகளையும் அழுக்குத் தண்ணீரையும் குடித்து வாழ்ந்து வருவதாகச் சொன்னவர், தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குடிப்பதற்கு நல்ல தண்ணீர் தருவதாகச் சொல்லி கார் அருகே அழைத்துவந்தேன். சாலையில் ஒரு பெண்ணைக் கண்டுபிடித்திருக்கிறேன் என்று காவல் துறைக்கும் தகவல் கொடுத்தேன். காவலர்கள் வந்தவுடன் அவரை ஒப்படைத்துவிட்டேன். அந்தப் பெண் எதையும் கூற மறுத்துவிட்டார். 3 வாரங்களுக்கு முன்பு காணாமல் போனவர் குறித்துப் புகார் வந்திருந்ததால், காவல் துறையினர் உடனே அவர் பெயரையும் முகவரியையும் கண்டுபிடித்துவிட்டனர்” என்கிறார் ஜூடி கார்னர். “நாங்கள் ஏற்கெனவே லிசா காணாமல் போனது குறித்து, சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்திருந்தோம். அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் கொள்ளையடித்துவிட்டு வரும் வழியில் லிசா அந்த வண்டியில் லிஃப்ட் கேட்டு ஏறிக்கொண்டார். கொள்ளையடித்த பொருட்களைப் பார்த்தவுடன் அவருக்குச் சந்தேகம் வந்துவிட்டது. உடனே வண்டியை நிறுத்தச் சொன்னார். நாங்கள் நிறுத்தவில்லை. திடீரென்று கார் கதவைத் திறந்துகொண்டு குதித்து, காட்டுக்குள் ஓடிவிட்டார். நாங்கள் துரத்திச் சென்றபோதும் எங்களால் அவரைப் பிடிக்க முடியவில்லை என்கிறார்கள் அந்தக் கொள்ளையர்கள். லிசாவுக்கு அந்தக் காட்டுப் பகுதி பரிச்சயமில்லாததால், இருவர் துரத்தும்போது வழி தவறி காட்டுக்குள் சென்றுவிட்டார். அதனால் அவரால் உடனே வெளிவர முடியவில்லை என்று நினைக்கிறோம். லிசா பேசினால்தான் உண்மை தெரியும். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துவிட்டோம். அவரது குடும்பத்துக்கும் தகவல் கொடுத்துவிட்டோம். நான் 15 ஆண்டுகளாக இந்தப் பகுதியில்தான் வசிக்கிறேன். இதுபோன்ற ஒரு சம்பவத்தைப் பார்த்ததில்லை. லிசா இத்தனை நாட்கள் இந்தக் காட்டில் எப்படித் தாக்குப் பிடித்தார் என்பதும் அதிசயமாக இருக்கிறது” என்கிறார் காவல்துறை அதிகாரி. “லிசாவுக்கு மோசமான பாதிப்பு ஏதும் இல்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். உடல் முழுவதும் பூச்சிக்கடிகள். 22 கிலோ எடை குறைந்திருக்கிறார். மனதாலும் உடலாலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார். அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார், தைரியமானவர், எப்போதும் ஜோக் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பார். லிசா மீண்டு வருவதற்குச் சில வாரங்கள் ஆகும்” என்கிறார் அக்கா எலிசபெத்.

லிசாவுக்கு நேர்ந்த துயரத்தை நினைத்தால் திகிலாக இருக்கிறது!

http://tamil.thehindu.com/world/article19515483.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: அசத்துகிறார்கள் ஜப்பானியர்கள்!

 

 
19chskorobot

ப்பானியர்களுக்கு ரோ போட் தொழில்நுட்பம் மீது ஆர்வம் அதிகம். சமீபத்தில் ஒரு சோளக் கொல்லை பொம்மை ரோபோட்டை ஓநாய் வடிவத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். சிவப்புக் கண்களும் கோரைப் பற்களுமாகக் காட்சி தரும் இந்த ஓநாய் கத்தினால், பறவைகள் மட்டுமின்றி, மனிதர்களே அலறி ஓடிவிடுவார்கள். “நான் சின்ன வயதில் வயல்களில் சோளக் கொல்லை பொம்மைகளைப் பார்த்திருக்கிறேன். பறவைகள், காட்டு விலங்குகளை விரட்டி, பயிர்களைக் காப்பாற்றுவதற்காக வைத்திருப்பார்கள். சிலர் அவற்றில் விளக்கு, மணிகள்கூட இணைத்திருப்பார்கள். இவையெல்லாம் ஓரளவு பறவைகளையும் விலங்குகளையும் விரட்டுவதற்கு உதவின. ஆனால் இன்று பல துறைகளிலும் தொழில்நுட்பங்களின் உதவியால் முன்னேற்றம் வந்துவிட்டது. சோளக் கொல்லை பொம்மையை மட்டும் ஏன் இன்னும் அப்படியே பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்று யோசித்தேன். அதன் விளைவாக சூப்பர் ரோபோட் ஓநாய் உருவாக்கிவிட்டோம். பறவைகள், மான்களிலிருந்து கரடிகள் வரை அனைத்தும் ரோபோட் ஓநாயைக் கண்டு ஓட்டமெடுக்கின்றன” என்கிறார் ஹொக்கைடோ ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர். சமீபத்தில் இந்த ஓநாய் ரோபோட்டை விவசாயக் கூட்டுறவு சங்கம் ஒன்று வாங்கி, பரிசோதனை செய்துபார்த்தது. நினைத்ததைவிட இது சிறப்பாக வேலை செய்வதாகச் சொல்லியிருக்கிறது. தூரத்தில் வரும் பறவைகள், விலங்குகளைக் கூட கண்டுபிடிக்கும் அளவுக்கு மிகச் சிறந்த தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஏதாவது உருவங்கள் அருகே வந்தால் கண்களில் சிவப்பு விளக்குகள் எரிகின்றன. தலை வலப் பக்கமும் இடப் பக்கமும் நகர்கிறது. 40 வகையான ஒலிகளை எழுப்புகிறது. இதில் பல்வேறு விலங்குகளின் குரல்களிலிருந்து மனிதனின் குரல் வரை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் சப்போரோ தாவரவியல் பூங்காவில் ஓர் ஓநாய் ரோபோட் வைக்கப்பட்டது. காட்டு விலங்குகள் உணவு தேடி, பூங்காவுக்கு வரும்போது செடிகளையும் மரங்களையும் பாழ்படுத்திக் கொண்டிருந்தன. ஆனால் இப்போது 90% பிரச்சினைகள் குறைந்துவிட்டன. விவசாயிகள் பெரிய அளவில் ரோபோட் ஓநாய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 1,15,000 ரூபாய்க்கு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வருகிறது.

அசத்துகிறார்கள் ஜப்பானியர்கள்!

தெ

ன்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கெவின் ரிச்சர்ட்சன், சுற்றுச்சூழல் ஆர்வலர். விலங்குகள் நிபுணர். தாயால் கைவிடப்பட்ட 2 சிங்கக் குட்டிகளை எடுத்து, வளர்த்துவருகிறார். மெக், ஆமி என்ற இந்த இரண்டு சிங்கங்களும் பெரிதாக வளர்ந்துவிட்டன. தற்போது கெவின் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். தண்ணீருக்குள் நிற்கும் கெவின், சிங்கத்தைப் பார்த்து என்னைப் பிடிக்க முடியுமா என்று கேட்கிறார். சிங்கம் அவரையே உற்றுப் பார்க்கிறது. பிறகு ஓர் இரையைப் பிடிப்பதுபோல் இரண்டு கால்களையும் தூக்கிக்கொண்டு கெவின் மீது பாய்கிறது. பார்ப்பவர்கள் பயத்தில் உறைந்துவிடுகிறார்கள். ஆனால் சிங்கம் கெவின் தோள்களைப் பற்றி, அணைத்துக்கொள்கிறது. ”இந்தச் சிங்கங்களைக் காட்டுக்குள் மற்ற விலங்குகளுடன் விட்டுவிட்டால், இப்போதிருப்பதை விட சிறந்த வாழ்க்கை கிடைக்கும். ஆனால் சிங்கங்கள் வேட்டை தீவிரமாக நடப்பதால் என்னால் இவற்றைக் காடுகளில் விட மனமில்லை. இவ்வளவு அன்பான சிங்கங்களை வாழ அனுமதிப்போம்” என்று வேண்டுகோள் விடுக்கிறார் கெவின் ரிச்சர்ட்சன்.

சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?

http://tamil.thehindu.com/world/article19522838.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: கேரட் அணிந்த வைர மோதிரம்!

 

 
20chkanRing-on-carrot3

கனடாவில் வசிக்கும் மேரி க்ராம்ஸ், தன்னுடைய தோட்டத்தில் திருமண வைர மோதிரத்தை தொலைத்துவிட்டார். எவ்வளவோ தேடிப் பார்த்தார். மோதிரம் கிடைக்கவில்லை. 13 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மோதிரம் கிடைத்திருக்கிறது. மேரியின் மருமகள் தோட்டத்திலிருந்து கேரட்டைப் பறித்தபோது, ஒரு கேரட் மீது மோதிரம் இருந்தது. “மோதிரம் மாட்டப்பட்ட விரல் போலவே தெரிந்தது. ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது. இந்தத் தோட்டத்தில் பாட்டியும் என் மாமியாரும்தான் இருந்திருக்கிறார்கள். இவர்களுடைய மோதிரமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். என் கணவரிடம் காட்டியபோது, என் மாமியாருடைய மோதிரம் என்று அறிந்துகொண்டேன். 84 வயது மாமியார் மோதிரத்தைக் கண்டதும் பரவசப்பட்டார்” என்கிறார் கோலீன் டேலி. “நீண்ட காலம் என் விரலில் இருந்த இந்த மோதிரம், ஒருநாள் தோட்ட வேலை செய்துகொண்டிருந்தபோது விழுந்துவிட்டது. நாள் முழுவதும் தேடிப் பார்த்தேன். கிடைக்கவே இல்லை. திருமண மோதிரம் என்பதால், என் கணவர் என்ன சொல்வாரோ என்று பயமாக இருந்தது. அதனால் அதேபோன்று ஒரு மோதிரத்தை வாங்கி அணிந்துகொண்டேன். இறுதிவரை அவருக்கு மோதிரம் தொலைந்த விஷயம் தெரியாது. ஒருகட்டத்தில் அந்தப் பண்ணை வீட்டை விட்டு, வேறு வீட்டுக்கு குடிபுகுந்துவிட்டோம். ஆனாலும் பண்ணையில் பயிர்களை விளைவித்துக்கொண்டிருக்கிறோம். கேரட்டுக்கே செய்த மோதிரம்போல் அத்தனை அழகாகப் பொருந்தியிருந்தது. இப்போதும் மோதிரம் எனக்குச் சரியாக இருக்கிறது. கணவரிடம் தொலைத்த விஷயத்தைச் சொல்லாமல் விட்டோமே என்று அடிக்கடி தோன்றும். இனிமேல் குற்ற உணர்வின்றி, சந்தோஷமாக இந்த மோதிரத்தை அணிந்துகொள்ளலாம்” என்கிறார் மேரி க்ராம்ஸ்.

கேரட் அணிந்த வைர மோதிரம்!

ஒருநாள் தூக்கம் இல்லாவிட்டாலே கஷ்டமாக இருக்கும். ஆனால் சிலருக்கு தினமும் தூக்கம் வருவதில்லை. மூன்றில் ஒருவருக்கு தூக்கமின்மை பிரச்சினை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்காகவே இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, ‘sleepy’ க்ரீமை உருவாக்கியிருக்கிறது. இந்த க்ரீமை முகத்திலும் உடலிலும் தடவிக்கொண்டால், ஒரு குழந்தையைப்போல் தூங்க வைத்துவிடும். இது மருந்தல்ல, அழகு சாதனப் பொருளாகவே பயன்படுத்திக்கொள்ளலாம். சிலர் தூக்கமின்மைக்காக ஆண்டுக் கணக்கில் மருந்துகளை எடுத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த க்ரீமைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், மருந்துகளின் தேவை இருக்காது. தினமும் நிம்மதியான உறக்கம் சாத்தியமாகிவிடும். இதில் கோகோ வெண்ணெய், ஓட்ஸ், நறுமண எண்ணெய்கள் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஒரு டப்பாவின் விலை 640 ரூபாய். “நான் நீண்ட காலமாகவே மன அழுத்தத்தால் தூக்கமின்றி தவித்துவந்தேன். மாத்திரைகளால் கூட என் தூக்கத்தைக் கொண்டுவர முடியவில்லை. ஆனால் ஸ்லீபி க்ரீமை பயன்படுத்திய பிறகு நான் நிம்மதியாக தூங்க ஆரம்பித்திருக்கிறேன்” என்கிறார் அமெலியா. “நான் 11 ஆண்டுகளாக தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டிருந்தேன். தற்போது இந்த க்ரீமின் மணத்தை நுகரும்போதே தூக்கத்துக்குத் தயாராகிவிடுகிறேன். என்னை மருந்துகளில் இருந்து விடுதலை செய்த இந்த க்ரீமை நான் மிகவும் விரும்புகிறேன். இதில் ஏதோ அற்புதம் இருக்கிறது” என்கிறார் ஜெஸிகா.

தூக்கம் வரவழைக்கும் மேஜிக் க்ரீம்!

http://tamil.thehindu.com/world/article19528860.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: 8 வயது சிறுவனின் 6 கோடி சம்பாத்தியம்

 

 
 

இஸ்ரேலைச் சேர்ந்த எலீ தஹரி ஃபேஷன் டிசைனர். அமெரிக்காவில் வசிக்கிறார். ஆப்பிள் ஐபோன் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்தவருக்கு, டெக்னாலஜியையும் ஃபேஷனையும் இணைக்க வேண்டும் என்ற யோசனை தோன்றியது. கறுப்பு வண்ண உடையில் 50 ஐபோன்களைத் தைத்து, புதுவிதமான ஆடையை உருவாக்கி விட்டார்! அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒரு விழாவில், மாடல் இந்த ஆடையை அணிந்தபடி வலம் வருவார். எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் ஐபோன் தெரியும். ஸ்டீவ் ஜாப்ஸ் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கும் எலீ, அவருக்குச் செய்யும் மரியாதையாக இதைக் கருதுகிறார்!

ம்ம்… இவர் சொல்லிட்டாரு ஈஸியா… மாடலுக்குத்தானே ஐபோன் டிரஸ் கஷ்டம் தெரியும்!

சீனாவின் சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கிறார் ஜாவோ. மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்யும் ஜாவோ, புத்தகத்தைப் பார்க்காமல் ஒரு சில நிமிடங்களில் உலக வரைபடத்தை அச்சு அசலாக வரைந்துவிடுகிறார்! ஆசிரியராக இருந்து காலம் எல்லாம் உலக வரைபடம் வரைந்து பழகியிருந்தாலும், பார்க்காமல் சில நிமிடங்களில் வரைந்து முடிப்பது அதிசயம் என்று கொண்டாடுகிறார்கள் சீனர்கள்.

ஜாவோ, உங்க நினைவாற்றலை நினைச்சா உண்மையிலேயே கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கு!

8 வயது சிறுவன் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறான் என்றால் நம்ப முடிகிறதா? இவான் கேமராவுக்கு முன்னால் பொம்மைகளை வைத்து விளையாடுகிறான், வீடியோ கேம்ஸ் விளையாடுகிறான், விமர்சனம் செய்கிறான். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவானின் விளையாட்டுகளைப் படம் பிடித்து இணையத்தில் ஏற்றினார் அவனின் அப்பா ஜேர்ட். இவானின் யுடியூப் வீடியோக்களைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தொட்டு, மலைக்க வைத்தது. விரைவிலேயே இவானின் வீடியோக்களை வைத்து, பிரமாதமான பிஸினஸை ஆரம்பித்துவிட்டார் ஜேர்ட். இன்று பல கோடி பேர் இவானின் வீடியோக்களைப் பார்க்கிறார்கள். விளம்பரங்களும் குவிகின்றன. ஆண்டுக்கு சுமார் 6 கோடி ரூபாய் சம்பாதிக்கிறான் இவான். 6 வயது தங்கை ஜில்லியனும் இவானுடன் இப்போது பங்கேற்கிறாள்.

ஆஹா! ஒரு வித்தியாசமான முயற்சி, இன்னிக்கு எவ்வளவு பெரிய பிஸினஸாக வளர்ந்திருக்கு!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

உலக மசாலா: செல்பிக்கு எதிரான போராளி!

 

22chskomasala%202
TAMILTHTemplateLibrarynation21clIMG2
22chskomasala%202

மனித வாழ்க்கையில் இன்று செல்பி முக்கியப் பங்கு வகிக்கிறது. எங்கேயும் எப்போதும் செல்பி எடுப்பதையே மிக முக்கியமான பொழுதுபோக்காகப் பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள். சிலர் அளவுக்கு அதிகமான ஆர்வத்தால் ஆபத்துகளைக் கூடப் பொருட்படுத்தாமல் செல்பி எடுத்து, உயிரை விட்டிருக்கிறார்கள். செல்பி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஸ்டெஃபானி லே ரோஸ் என்பவர், ‘ஸ்டெஃப்டைஸ்’ என்ற அமைப்பை ஆரம்பித்திருக்கிறார். “செல்பிக்கு எதிரான நடவடிக்கைதான் என்னுடைய அமைப்பின் நோக்கம். இதற்காக நான் பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்குச் செல்கிறேன். தரையில் இறந்ததுபோல் விழுந்து கிடக்கிறேன். இதை என் நண்பர்கள் படம் பிடிக்கிறார்கள். இவற்றை இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறேன். இதைப் பார்க்கும் பலரும் செல்பி மோகத்திலிருந்து விடுபடுவார்கள் என்று நம்புகிறேன். இதுவரை ஈபிள் டவர், பாரிஸ் அருங்காட்சியகம், சான்பிரான்சிஸ்கோ கோல்டன் கேட் பிரிட்ஜ், இத்தாலியில் உள்ள கொலோசியம் போன்ற உலகப் புகழ்பெற்ற இடங்களில் படங்கள் எடுத்து வெளியிட்டிருக்கிறேன். இவை தவிர, பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை, மலைப் பிரதேசம், பேருந்து நிறுத்தம், ரயில் நிலையங்கள், கழிவறை, சாலை என்று பல இடங்களிலும் படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறேன். இந்தப் படங்களுக்காக சிறப்புத் தொழில்நுட்பம் எதையும் பயன்படுத்துவதில்லை. எனக்கு படங்களின் நேர்த்தி முக்கியமில்லை, என்னுடைய நோக்கம் செல்பிக்கு எதிராக விழிப்புணர்வு ஊட்டுவதுதான். இப்படிக் கண்ட இடங்களிலும் கீழே விழுந்து படம் எடுத்துக்கொள்வது எளிதான காரியம் இல்லை. சுத்தத்தை நினைத்தால் ஒரு படம் கூட எடுத்திருக்க முடியாது. என்னால் சிலர் செல்பி ஆர்வத்திலிருந்து விடுபட்டாலே போதும்” என்கிறார் ஸ்டெஃபானி.

செல்பிக்கு எதிரான போராளி!

ஜப்பானைச் சேர்ந்த பெப்பர் ரோபோட் நிறுவனம், புத்த துறவி ரோபோட்களை வைத்து இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு வருகிறது. “இறுதிச் சடங்குகளை நிகழ்த்தக்கூடிய மனிதர்கள் எளிதில் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் செலவு அதிகமாகிறது. அதற்காகத்தான் இந்த ரோபோட்டை உருவாக்கியிருக்கிறோம். ஜப்பானிய பாரம்பரிய உடையை அணிந்துகொண்டு மனிதர்களைப் போலவே இறுதிச் சடங்குகளை நிகழ்த்திவிடுகிறது. அடுத்த வாரம் டோக்கியோவில் சர்வதேச இறுதிச் சடங்கு மற்றும் கல்லறை கண்காட்சி நடைபெற இருக்கிறது. அதில் இந்தப் புத்த துறவி ரோபோட் பங்கேற்கிறது. ஒரு ரோபோட்டின் விலை 30 ஆயிரம் ரூபாய்” என்கிறார் பெப்பர் ரோபோட் நிறுவனர்.

இறுதிச் சடங்கு செய்யும் ரோபோட்!

தாய்லாந்தில் வசிக்கும் தனாபூம் லேகியென் அதிகாலை எழுந்து, தன் மகன் அறைக்குள் வந்தார். அங்கே அவர்கள் வளர்த்த பூனை கடுமையான காயங்களுடன் இறந்து கிடந்தது. பயந்து போனவர், மகனின் படுக்கையைப் பார்த்தார். அங்கே ஏதோ விலங்கின் செதில்கள் கிடந்தன. “பயத்தில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒவ்வொரு இடமாகப் பார்த்தேன். 10 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பு கிடந்தது கண்டு அதிர்ந்து போனேன். நண்பர்களின் உதவியுடன் அந்தப் பாம்பை வீட்டிலிருந்து அகற்றினோம். ரொம்ப ஆக்ரோஷமாகப் பாம்பு சீறியது. என் 13 வயது மகன் எப்போதும் அவன் அறையில்தான் தூங்குவான். நல்ல வேளையாக நேற்று என் அறையில் தூங்கினான். நினைத்துப் பார்க்கும்போதே பயமாக இருக்கிறது” என்கிறார் தனாபூம்.

படுக்கையில் பாம்பு!

http://tamil.thehindu.com/world/article19538505.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: மனிதர்களையே அச்சுறுத்தும் பலே கழுகுகள்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
23chskoeagle
 
 
 

அமெரிக்காவின் தேசியப் பறவை வெண்தலை கழுகு (Bald Eagle). ஆனால் பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்தக் கழுகை நேரில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அலாஸ்காவிலுள்ள அனலாஸ்கா தீவைச் சேர்ந்தவர்கள் மட்டும் தங்கள் குடியிருப்புகளிலேயே, புறாக்களைப்போல வெண்தலை கழுகுகளைத் தினமும் தரிசித்துவருகிறார்கள். இங்கே 4,700 மக்களும் அழகான 600 வெண்தலை கழுகுகளும் வசித்துவருகின்றன. இங்குள்ள மக்கள் கழுகுகளை மற்றவர்களைப்போல அழகாகவும் ஆச்சரியமாகவும் கண்டுகளிப்பதில்லை. ஏனென்றால் எந்த நேரமும் கழுகுகளால் மனிதர்கள் தாக்கப்படலாம். அமெரிக்காவிலேயே கழுகுகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்தத் தீவுவாசிகள்தான். மனிதர்கள் வசிப்பிடங்களிலேயே கழுகுகளும் கூடுகளை அமைத்துக்கொள்கின்றன. சாதாரணமாக வெளியே வந்தாலும் கூடுகளுக்கு ஆபத்து என்று நினைத்துக்கொண்டு, ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கிவிடுகின்றன. வெண்தலை கழுகுகள் பெரும்பாலும் உயரமான மரங்களில்தான் கூடுகளைக் கட்டக்கூடியவை. ஆனால் அனலாஸ்கா தீவில் மரங்கள் அதிகம் இல்லை. அதனால் மனிதர்களின் கட்டிடங்கள், கப்பல்கள், இயந்திரங்கள் போன்றவற்றில் கூடுகளை அமைத்துக்கொள்கின்றன. இவை மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என்பதால் பிரச்சினைகள் உருவாகின்றன. தீவு முழுவதும் கழுகுகள் இருக்கின்றன என்ற எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் தெரியாமல் சில இடங்களில் நுழைந்துவிட்டால், அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகிவிடுகிறது. கழுகுகளால் தாக்கப்படும் 10 மனிதர்களில் 6 பேருக்குத் தீவிரமான சிகிச்சை தேவைப்படுகிறது. “ஆண்டு முழுவதுமே கழுகுகளால் எங்களுக்குப் பிரச்சினைகள் இருந்தாலும் அடை காக்கும் காலமான கோடையில்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறோம். அனலாஸ்கா தீவு 80 மைல் நீளம் கொண்டது. இதில் மனிதர்கள் வசிக்கக்கூடிய குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கழுகுகள் வசிக்கின்றன. இந்தப் பகுதியில் ஆண்டு முழுவதும் மீன்கள் அதிக அளவில் கிடைப்பதால், கழுகுகளுக்கு உணவுப் பிரச்சினை ஏற்படுவதில்லை. படகுகள் மீன்களைப் பிடித்துக்கொண்டு கரைக்கு வந்து சேர்ந்ததும் கழுகுகள் தங்களுக்குத் தேவையான இரையை எடுத்துக்கொள்கின்றன. பெரும்பாலான அனலாஸ்கா மக்கள் கழுகுகளை நேசிக்கவே செய்கிறார்கள். சிலர் புறாக்களைப்போல் கழுகுகளுக்கு உணவளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். புறா மனிதர்களைக் கண்டதும் பறந்துவிடும், ஆனால் இந்தக் கழுகுகள் சிறிதும் மனிதர்களுக்குப் பயப்படுவதில்லை. அதிலும் இங்கிருக்கும் தபால் நிலையத்தில்தான் அதிக அளவில் கழுகுகள் கூடுகளைக் கட்டியிருக்கின்றன. தலைக்கவசம், தோல் ஆடைகள் இன்றி தபால் நிலையத்துக்குள் செல்பவர்களை, நிச்சயம் மருத்துவமனையில்தான் சேர்க்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்குக் கழுகுகளின் தாக்குதல் ஆக்ரோஷமாக இருக்கும். இந்தப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தந்திக் கம்பங்கள், வீடுகளின் கூரைகள், வாகனங்களில் அமர்ந்திருக்கும் கழுகுகளைக் கண்டு ஆச்சரியமடைகிறார்கள். ஆனால் ஏதாவது ஒரு கழுகால் தாக்கப்படும்போதுதான் இந்த மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்கிறார்கள்” என்கிறார் காவல்துறை அதிகாரி ஜெனிஃபர் ஷாக்லே.

மனிதர்களையே அச்சுறுத்தும் பலே கழுகுகள்!

http://tamil.thehindu.com/world/article19544264.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக மசாலா: நோயாளிகளுக்காக வேஷம் போடும் மருத்துவர்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
24chkanBai-Shufang-doctor3

சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள தோல் மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிகிறார் பாய் ஷுஃபாங். தினமும் சீனப் பாரம்பரியப்படி ஒப்பனை செய்துகொண்டு, மருத்துவமனைக்கு வருகிறார். “ஒரு மருத்துவரிடம் தங்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்வதைவிட, இந்த ஒப்பனையில் நோயாளிகள் இன்னும் நெருங்கிவந்து பகிர்ந்துகொள்கிறார்கள். சீனாவின் புகழ்பெற்ற மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று. இங்கே தோல் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் மருத்துவம் பார்க்கிறோம். பெரும்பாலான மக்கள் தங்கள் பிரச்சினைகளை வெளியே சொல்வதில் தயக்கம் காட்டுகிறார்கள். அதிலும் வெண்புள்ளி உள்ளவர்கள் எளிதில் சொல்லிவிட மாட்டார்கள். ஒரு மருத்துவரிடம் பகிர்ந்துகொள்வதில் அவர்களுக்கு இருக்கும் மனத்தடைகளை நான் புரிந்துகொண்டேன். இதை எப்படி சரி செய்வது என்று யோசித்தபோதுதான் இந்த அலங்காரம் பற்றிய எண்ணம் வந்தது. கடந்த மூன்று வாரங்களாக தினமும் காலை ஒரு மணி நேரம் ஒப்பனைக்காக செலவு செய்கிறேன். மருத்துவமனையில் நோயாளிகள் எந்தத் தயக்கமும் இன்றி என்னுடன் பேச விரும்புகிறார்கள். அவர்களது பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். மாலையில் ஒப்பனையைக் கலைக்க ஒரு மணி நேரம் ஆகிறது. ஒரு மருத்துவருக்கு தினமும் இரண்டு மணி நேரம் எவ்வளவு முக்கியமானது என்று தெரியும். என்னுடைய வேலைக்காகத்தான் இந்த அலங்காரத்தையே செய்துகொள்கிறேன் என்பதால் எனக்கு இதில் குற்றவுணர்வு எதுவும் இல்லை” என்கிறார் பாய் ஷுஃபாங். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வெகு வேகமாகப் பரவி பாராட்டுகளையும் எதிர்ப்புகளையும் பெற்றுவருகிறது. “வழக்கத்துக்கு மாறான ஆடை, அலங்காரம் எல்லாம் மக்களின் கவனத்தை திசை திருப்பும். இந்த ஒப்பனை செய்யும் நேரத்தில் 10 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிடலாம்” என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ, “நோயாளிகளின் நலன் கருதி ஒரு மருத்துவர் இந்த முடிவை எடுத்திருப்பதை வரவேற்க வேண்டும். வெண்புள்ளி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் வெளியே சொல்ல மாட்டார்கள். அவர்கள் கூட இப்போது தைரியமாகச் சொல்கிறார்கள் என்றால் இது நல்ல விஷயம்தானே! தொழில் மீதும் மக்கள் மீதும் அக்கறை, அன்பு உள்ளவர்களால் மட்டுமே இப்படிச் செய்யமுடியும்” என்கிறார்கள்.

நோயாளிகளுக்காக வேஷம் போடும் மருத்துவர்!

புற்றுநோயாளிகள் கீமோ தெரபியின்போது ஏற்படும் விளைவுகளால் தங்கள் முடியை இழக்கிறார்கள். இது பலருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திவிடுகிறது. ஸ்பெயினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய்க்கான 3 புதிய மருந்துகளை உருவாக்கி, பரிசோதனை செய்துவருகிறார்கள். இந்த மருந்துகளின் விளைவால் நரைத்த முடி கறுப்பாக மாறிவிடுகிறது. இதுவரை 52 மனிதர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 14 பேரின் முடி கறுப்பாக மாறிவிட்டது கண்டு, நோயாளிகள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். “மருந்துகளை அளிக்கும் முன்பு அவர்களைப் புகைப்படங்கள் எடுத்தோம். மருந்துகளை எடுத்துக்கொண்ட பிறகு மீண்டும் புகைப்படங்கள் எடுத்தோம். இந்த 14 பேருக்கும் இருந்த வெள்ளை, பழுப்பு, சாம்பல் வண்ண முடிகள் கறுப்பாக மாறிவிட்டன. இந்த நிற மாற்றம் மருந்து வேலை செய்வதை உறுதி செய்துள்ளது. இதில் மிகக் குறைந்த அளவிலேயே பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இந்தப் புதிய மருந்துகள் மருத்துவ உலகில் ஒரு முன்னேற்றமாக எதிர்காலத்தில் இருக்கும்” என்கிறார் மருத்துவர் ரிவேரா.

மகிழ்ச்சியளிக்கும் செய்தி!

http://tamil.thehindu.com/world/article19551141.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: வாழைப்பழ அரக்கன்!

 

 
masala

டச்சு கலைஞர் ஸ்டீபன் ப்ருஸ்ச் சாதாரண வாழைப் பழத்தில் அட்டகாசமாக உருவங்களைச் செதுக்கி விடுகிறார். 37 வயது ஸ்டீபன் கிராபிக் டிசைனர். வாழைப் பழத்தின் தோலிலும் சதைப் பகுதியிலும் யானை, ஒட்டகச்சிவிங்கி, மீன், மர்லின் மன்றோ போன்ற விதவிதமான ஓவியங்களை வடிக்கிறார்.

’சில ஆண்டுகளுக்கு முன்பு பால்பாயிண்ட் பேனாவால் வாழைப் பழத்தில் வரைய ஆரம்பித்தேன். அதைப் பார்த்தவர்கள் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். அப்படியே உருவங்களைச் செதுக்கி, புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டேன். வரவேற்பு பிரமிப்பை ஏற்படுத்திவிட்டது!’ என்கிறார் ஸ்டீபன். முதல் 50 வாழைப்பழ உருவங்களைப் புத்தகமாகவும் கொண்டு வந்திருக்கிறார் ஸ்டீபன்.

சிம்பிளா இருந்தாலும் அழகா இருக்கு!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மிகச் சிறிய கடை உள்நாட்டினரையும் வெளிநாட்டினரையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது. அந்தக் கடைக்குச் சென்று அழைப்பு மணியை அழுத்தினால், உள்ளிருந்து ஷிபா என்ற நாய் எட்டிப் பார்க்கிறது.

சிகரெட், சாக்லெட் என்று கேட்கும் பொருள்களை எடுத்துத் தருகிறது. பணத்தைப் பெற்றுக்கொண்ட பின் கடைக்குள் சென்று அமர்ந்துவிடுகிறது. நாயைப் பார்ப்பதற்காகவே இந்தக் கடைக்கு ஏராளமானவர்கள் வந்து, பொருள்களை வாங்கிச் செல்கிறார்கள்.

அடடா! புத்திசாலி ஷிபா!

சீன இணையதளத்தில் வெளியான ஒரு வீடியோ எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 17 மாதக் குழந்தையை ட்ரெட்மில்லில் நடக்க வைத்திருக்கிறார்கள் பெற்றோர். கைகளைப் பின் பக்கம் கட்டியபடியே நடக்க ஆரம்பிக்கிறது குழந்தை. அவனது அப்பா, இன்னும் வேகம்… இன்னும் வேகம் என்று கத்திக்கொண்டே இருக்கிறார். அவனது அம்மா, அதிக வேகம் வேண்டாம் என்று கத்துகிறார்.

இருவர் சொல்வதையும் கேட்டு வேகமாகவோ, வேகத்தைக் குறைத்தோ குழந்தை கன்வேயர் பெல்ட் மீது நடந்துகொண்டே இருக்கிறது. குழந்தை நடப்பதைப் பார்த்து பெருமிதத்தில் பெற்றோர் சிரிக்கிறார்கள். குழந்தைகளை ட்ரெட்மில்லில் நடக்கவே வைக்கக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். 2013-ம் ஆண்டில் ட்ரெட்மில்லில் ஏற்பட்ட விபத்துகளில், 95 சதவீதம் குழந்தைகளுக்கு ஏற்பட்டதுதான் என்று எச்சரிக்கிறார்கள்.

குழந்தையை இப்படி கொடுமைப்படுத்தலாமா?

பிரிட்டனில் வசிக்கும் ஹன்னாவின் குடும்பத்தில் கடந்த 5 தலைமுறைகளாக பெண் குழந்தைகளே பிறக்கவில்லை. 1809-ம் ஆண்டு மைலா லாரி என்ற பெண் குழந்தை பிறந்தது. அதற்குப் பிறகு 200 ஆண்டுகள் வரை அவர்கள் குடும்பத்தில் பெண் குழந்தைகள் பிறக்கவில்லை. ஹன்னாவும் அவரது கணவர் மார்க்கும் பெண் குழந்தை பிறக்கவேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

எதிர்பார்த்தது போலவே பெண் குழந்தை பிறந்தது. மைலா லாரி என்று பெயர் சூட்டினர். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியபோது, வீட்டில் எந்தப் பக்கம் திரும்பினாலும் பிங்க் வண்ண பலூன்கள், ரிப்பன்கள் தொங்கிக்கொண்டிருந்தன. உறவினர்களும் நண்பர்களும் பெண் குழந்தையின் வருகையைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். மூன்று அண்ணன்களுடன் ஓர் இளவரசி போல வலம் வருகிறாள் மைலா.

வராது வந்த மாமணி!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

உலக மசாலா: சுற்றுச்சூழலுக்கு ஏற்ற டூ இன் ஒன் குடை ரெயின்கோட்!

TAMILTHTemplateLibrarynation21clIMG2

26chskoraincoat
 
 

மழையில் இருந்து தற்காத்துக்கொள்வதற்குக் குடைகளும் ரெயின் கோட்டுகளும் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கின்றன. சமீபத்தில் சீனர்கள் குடையையும் ரெயின் கோட்டையும் இணைத்து, ‘umbrella raincoat’ ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். “குடையிலும் ரெயின் கோட்டிலும் இருக்கும் அசவுகரியத்தைப் போக்கவேண்டும் என்பதற்காகவே இது உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். குழந்தைகளும் இளைஞர்களும் இந்தப் புதிய பொருளை ஆர்வத்துடன் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் விற்பனையில் இன்னும் குடைகளும் ரெயின்கோட்டுகளுமே முன்னணியில் இருக்கின்றன. இந்த ரெயின்கோட் குடையில் உடலின் மேல் பாகம் மட்டுமே மழையிலிருந்து காக்கிறது. இடுப்புக்குக் கீழே மழையில் நனையவேண்டியிருக்கிறது என்பது சாதகமான விஷயமாக இல்லை. ஆனால் இந்த ரெயின் கோட் குடையில் கைகளுக்கு வேலை இல்லை. ஜாலியாக மழையை ரசித்துக்கொண்டே நடந்து செல்லலாம். இது எடை குறைந்தது. மடக்கி வைத்துக்கொள்ளவும் முடியும். எவ்வளவு காற்று அடித்தாலும் குடையைப்போல் பறந்து செல்லாது. மட்கக்கூடியப் பொருளால் செய்யப்பட்டிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பயன்படுத்தும் விதத்தில் பல்வேறு அளவுகளிலும் வண்ணங்களிலும் கிடைக்கின்றன. எதிர்காலத்தில் குடையையும் ரெயின்கோட்டையும் தள்ளிவிட்டு, இது முதலிடத்தைப் பிடித்துவிடும்” என்கிறார் ஷான் வாங் என்ற வியாபாரி.

 

 

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற டூ இன் ஒன் குடை ரெயின்கோட்!

 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கும் 43 வயது சில்வியா ஹெஸ்ஸெட்ரெனியோவாவுக்கு 57 குழந்தைகள் இருக்கிறதாகச் சொல்கிறார்! இவற்றில் 2 குழந்தைகள் இவர் பெற்றவை. மற்றவை எல்லாம் இவர் உருவாக்கிய பொம்மைகள். நிஜக் குழந்தைகளைப் போலவே பொம்மைகளை உருவாக்குவதில் சில்வியா நிபுணராக இருக்கிறார். 40-வது பிறந்தநாளின்போதுதான் பொம்மைகளை உருவாக்க முடிவெடுத்தார். 3 ஆண்டுகளில் 55 பொம்மைகள் சேர்ந்துவிட்டன. கூடம், படுக்கையறை, படிப்பறை, சமையலறை, மாடி என்று வீடு முழுவதும் பொம்மைகள் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு பொம்மைக்கும் பல்வேறு நாட்டு ஆடைகளை அணிவித்து அழகு பார்க்கிறார். சில பொம்மைகளை அழைத்துக்கொண்டு கடைகளுக்குச் செல்கிறார். சில பொம்மைகளை பிக்னிக் அழைத்துச் செல்கிறார். சில பொம்மைகளுடன் பேசுகிறார். இன்னும் சில பொம்மைகளுடன் உறங்குகிறார். சில பொம்மைகளுக்கு பியானோ வகுப்பும் எடுக்கிறார். “என் பொம்மைகளைப் பார்ப்பவர்கள் அவற்றின் நேர்த்தியிலும் அழகிலும் மயங்கிப் பாராட்டுவார்கள். பிறகு, இப்படி ஒரு அசாதாரணமான பொழுதுபோக்கு தேவையா என்றும் கேட்பார்கள். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஒவ்வொரு பொம்மையும் பிரத்யேகமானது. ஒன்றைப்போல இன்னொன்று கிடையாது. பொம்மைகளைச் செய்ய ஆரம்பித்த பிறகு என் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக மாறிவிட்டது. எல்லோரும் சந்தோஷமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதானே போராடுகிறோம்? எனக்கு அது எளிதாகக் கிடைத்துவிட்டது. என்னைப் பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என்று நான் யோசிப்பது இல்லை. என் மகள்களும் என்னைப் புரிந்துகொண்டு, பொம்மைகள் செய்வதில் உதவுகிறார்கள்” என்கிறார் சில்வியா.

பொம்மைகளைக் குழந்தைகளாக நினைக்கும் தாயுள்ளம்!

http://tamil.thehindu.com/world/article19564348.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: புதுமையான விளம்பரம்!

 

 
27chskohouse

ஸ்பெயின் நாட்டில் வாலென்சியா நகரில் வசிக்கும் ஃபெர்னான்டோ அபெலெனாஸ் குழாய் சீர் செய்பவராக இருந்தார். தற்போது அறைகலன்கள் செய்யக்கூடியவராக மாறிவிட்டார். தன்னுடைய தொழிலை விளம்பரப்படுத்துவதற்குப் புதுமையான உத்தியைக் கடைபிடித்திருக்கிறார். நகரின் பரபரப்பான ஒரு பாலத்துக்கு அடியில், தூணின் மீது தன்னுடைய அலுவலகத்தை யாருக்கும் தெரியாமல் அமைத்திருக்கிறார். இந்த அறையில் ஒருவர் தங்கிக்கொள்ளலாம். மேஜை, நாற்காலியை விரித்து அலுவலக வேலைகளைச் செய்யலாம். மேஜையைப் படுக்கையாக மாற்றிக்கொள்ளலாம். விளக்கு வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. “இந்த வீட்டில் ஒரே குறை பாலத்தில் செல்லும் வாகனங்களின் இரைச்சல். அதற்கு காதுகளில் பஞ்சு வைத்துவிட்டால் போதும். சிறிய இடத்தில் கூட வீடு, அலுவலகங்களை கட்டலாம் என்பதற்காக இதை உருவாக்கினேன். இந்த வீட்டை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் எடுத்துவிட்டேன். அதை வைத்து விளம்பரம் செய்துகொள்வேன். அரசாங்க அதிகாரிகள் விரைவில் இந்த இடத்தைக் கண்டுபிடித்து, எல்லாவற்றையும் அகற்றிவிடுவார்கள்” என்கிறார் ஃபெர்னான்டோ.

புதுமையான விளம்பரம்!

இங்கிலாந்திலுள்ள நாட்டிங்ஹாம்ஷையரில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பார்வையாளர்கள் உணவுப் பொருட்களையும் பானங்களையும் அரங்கத்துக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் மதுபானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் பரிசோதனை செய்யப்பட்டே உள்ளே அனுப்பப்பட்டனர். திடீரென்று ஓர் இயந்திரம் அலற ஆரம்பித்தது. அங்கே இருந்த பெண்ணின் முகம் மாற்றம் அடைந்தது. காவலர்கள் அந்தப் பெண்ணைப் பரிசோதனை செய்தனர். அவரது உணவுப் பொட்டலத்தைப் பிரித்தனர். நீளமான பன் நடுவே ஒரு வோட்கா பாட்டில் இருந்தது . பெண் காவலர்கள் அவரது ஆடையைப் பரிசோதித்தபோது, இரண்டு கால்களிலும் மது பாட்டில்களை வைத்து, ஒரு டேப் மூலம் விழாதவாறு ஒட்டியிருந்தார். “இதுவரை இப்படி யாரும் மதுவைக் கடத்தி நாங்கள் பார்த்ததில்லை. விளையாட்டு முடிந்த பிறகு பாட்டில்களைப் பெற்றுக்கொள்ளச் சொன்னோம். ஆனால் அவர் வரவேயில்லை” என்கிறார் ஒரு காவலர்.

விநோதமான கடத்தல்…

வெங்காயம், பூண்டு, மீன் போன்றவை சமைத்த பிறகு சுவை பிரமாதமாக இருக்கும். ஆனால் சமைப்பதற்கு முன்பு துர்நாற்றம் அடிக்கும். எவ்வளவுதான் கைகளைச் சுத்தம் செய்தாலும் துர்நாற்றம் வந்துகொண்டே இருக்கும். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பார் வந்திருக்கிறது. அம்கோ என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் ‘ரப்-அ-வே’ பார் துர்நாற்றத்தைப் போக்குகிறது. சாதாரண சோப்புகளைப் போலவே இதையும் கைகளில் நன்றாகத் தேய்த்து, தண்ணீரால் கழுவ வேண்டும். ஒரு சாதாரண சோப் செய்வதைவிட பல மடங்கு இது வேலை செய்கிறது. ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பார் விலை 512 ரூபாய்.

நாற்றத்தைப் போக்கும் பார்!

http://tamil.thehindu.com/world/article19569984.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா : இடது கால் ஹூ!

 

 
hu

ஹு ஹுயுவான் சீனாவில் வசிக்கிறார். பத்து மாதக் குழந்தையாக இருந்தபோது மூளை வாதத்தால் பாதிக்கப்பட்டார். தலை, இடது காலைத் தவிர உடலின் பிற பாகங்கள் அசைவற்றுப் போய்விட்டன. ஹுவின் அம்மா, மிகுந்த பொறுமையோடும் அக்கறையோடும் கவனித்துக்கொண்டார்.

மருந்துகளும் அவரது பயிற்சியும் ஹுவை ஓரளவு முன்னேற்றின. தலையையும் இடது காலையும் வைத்துக்கொண்டு எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டார் ஹு. பிறகு பேசவும் படிக்கவும் இடது காலால் எழுதவும் பழகினார். ஒவ்வொரு வார்த்தையும் ஆயிரம் முறை சொல்லிக் கொடுப்பார் அவரது அம்மா.

வளர்ந்த பிறகு தன்னுடைய கற்பனைகளை எழுத்தில் கொண்டு வர நினைத்தார் ஹு. கம்ப்யூட்டரில் இடது காலால் டைப் செய்து, ஒரு நாவலை எழுதி வருகிறார். ஒரு நிமிடத்துக்கு 20 முதல் 30 வார்த்தைகள் வரை வேகமாக காலால் அடித்துவிடுகிறார். 60 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட ஆறு அத்தியாயங்கள் தயாராக இருக்கின்றன. இன்னும் 2 அத்தியாயங்கள் எழுதி, நாவலாசிரியர் என்ற சாதனையைப் படைக்க இருக்கிறார் 21 வயது ஹு.

வாழ்த்துகள் ஹு!

அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் பூமிக்கு அடியில் மிகப் பெரிய பைக் பார்க் அமைக்கப்பட்டிருக்கிறது. பைக் ஓடும் பாதைகளும் 45 சிறு குன்றுகளும் இங்கே இருக்கின்றன. பூமிக்கு அடியில் 100 அடி ஆழத்தில் இந்தப் பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஒரே நேரத்தில் 500 பைக்குகளை இங்கே ஓட்டிச் செல்ல முடியும். ஒரே அளவிலான வெப்பநிலை நிலவுவதால் ஆண்டு முழுவதும் இங்கே பந்தயங்களை நடத்த முடியும். 42 ஆண்டுகள் சுரங்கங்களை வெட்டி, 17 மைல்கள் தூரத்துக்கு இந்த மெகா பைக் பார்க் அமைக்கப்பட்டிருக்கிறது. பைக் பந்தயங்கள் தவிர, இன்னும் சில விளையாட்டுகளும் நிகழ்ச்சிகளும் இங்கே நடைபெற்றுவருகின்றன.

பூமிக்குள்ளேயும் பிளாட் போட்டு விற்க ஆரம்பிச்சிடாதீங்க…

ரொட்டி மீது தடவிச் சாப்பிடக்கூடிய சாக்லெட் சுவை கொண்ட உணவுப் பொருள் நுடெல்லா. பிரான்ஸில் உள்ள ஒரு தம்பதிக்கு நுடெல்லா மீதுள்ள ஆர்வம் அதிகம். தங்கள் பெண் குழந்தைக்கு நுடெல்லா என்று பெயரிட்டுவிட்டனர். சட்டப்படி பெயரைப் பதிவு செய்வதற்காக நீதிமன்றம் சென்றனர். நுடெல்லா என்ற பெயருக்கு நீதிபதி எதிர்ப்புத் தெரிவித்தார்.

‘ஒரு உணவுப் பொருளை குழந்தையின் பெயராக வைக்கக்கூடாது. நாளை இந்தக் குழந்தைக்கு அந்தப் பொருள் பிடிக்காவிட்டால், குழந்தைக்குப் பெயர் சங்கடமாக மாறிவிடும். உங்கள் விருப்பத்தை சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். குழந்தையின் பெயர் சூட்டலில் காட்டக் கூடாது. வேண்டும் என்றால் ’எல்லா’ என்று பெயரிட்டுக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டார் நீதிபதி.

நியுஸிலாந்திலும் ஐஸ்லாந்திலும்கூட பெயர் வைப்பதற்கு நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. குழந்தைகளின் நலன் கருதி, இதுபோன்ற கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருப்பது நல்லது என்றே பலரும் சொல்கிறார்கள்.

பெயர் வைப்பது தனிப்பட்டவர் விருப்பம்தான்… அதேநேரம் கொஞ்சம் பொறுப்பாகவும் பெயர் வைக்கலாமே…

பனிப் பாலைவனமாக இருக்கும் அண்டார்டிகாவில் பாதி நாட்கள் சூரியனே இல்லாமல், இருளாக இருக்கும். அங்கே மீன்கள் போன்ற உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இல்லை என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது. கடந்த வாரம் 2,640 அடி ஆழத்துக்கு ஒரு பனிப்பாறையை உடைக்கும்போது, மீன் ஒன்றைக் கண்டறிந்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மிக மிகக் குறைவாக உணவு கிடைக்கக்கூடிய ஒரு பகுதியில் உயிர்கள் வாழ்வதற்குப் பெரும்பாலும் வாய்ப்பே இல்லை. ஆனால் இந்த மீன் எவ்வாறு அங்கே வாழ்ந்து வருகிறது என்று வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள். இனி வரும் காலங்களில்தான் விடை கிடைக்கும் என்கிறார்கள்.

மனிதனை ஆச்சரியப்படுத்திக்கிட்டே இருக்கு இயற்கை!

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

உலக மசாலா: வித்தியாசமான வாழ்க்கை!

 

 
 
TAMILTHTemplateLibrarynation21clIMG2
29chskomasala%202

49வயது க்ளாரும் 43 வயது டேவிட்டும் 16 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்துவருகிறார்கள். இருவருக்கும் முந்தைய திருமணங்களில் தோல்வி ஏற்பட்டதால், இணைந்து வாழ்வது என்ற முடிவை எடுத்தனர். 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமும் செய்துகொண்டனர். ஆனாலும் இந்த 16 ஆண்டுகளாக இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். “என் வீட்டுக்கும் என் மனைவி வீட்டுக்கும் 4 மைல் தூரம். நான் பரபரப்பாக வேலை செய்பவன் அல்ல. எனக்குப் பிடித்தபோது, பிடித்த நேரத்தில் வேலை செய்வேன். ஒரே வீட்டில் வசிக்கும்போது இதில் பிரச்சினைகள் வரும். ஆனால் தனித்தனியாக இருப்பதால் இருவரும் அவரவர் விருப்பம்போல் வாழ முடிகிறது. மனைவியும் வேலைக்குச் செல்கிறார். நேரம் கிடைக்கும்போது நாங்கள் சந்தித்துக்கொள்கிறோம். ஒன்றாக நேரம் செலவிடுகிறோம். எங்கள் மகனும் அம்மாவுடனும் அப்பாவுடனும் அவன் விருப்பப்படி தங்கிக்கொள்கிறான். குடும்பத்துக்காகவும் குழந்தைக்காகவும் இருவரும் சேர்ந்து செலவு செய்வோம். ஒருநாளும் ஒருவர் சம்பளம் பற்றி இன்னொருவர் கேட்டதில்லை. நேரம் கிடைக்கும்போது சந்தித்துக்கொள்வதால் எங்கள் சந்திப்பில் எப்போதும் ஆர்வம் இருக்கும். அதிக விவாதங்கள் இருக்காது. ஒரே வீட்டில் இருந்தால் ஒருவரை இன்னொருவர் அடிமைப்படுத்தும் முயற்சி இருக்கும். எங்களுக்குள் அந்தப் பிரச்சினை இல்லை. இணையராகவும் பெற்றோராகவும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறோம்” என்கிறார் டேவிட்.

வித்தியாசமான வாழ்க்கை!

அமெரிக்காவைச் சேர்ந்த பாட்ரிக், கிறிஸ்டின் ஓ ஹாகன் என்ற புதுமணத் தம்பதியர், 1970-ம் ஆண்டு தேனிலவுக்காக கேப் காட் கடற்கரைக்குச் சென்றனர். அங்கே கிறிஸ்டின் பரிசளித்த மோதிரம், பாட்ரிக்கின் விரலிலிருந்து நழுவி கடற்கரையில் விழுந்துவிட்டது. இருவரும் எவ்வளவோ தேடிப் பார்த்தனர். தொலைந்த மோதிரம் கிடைக்கவே இல்லை. தான் கொடுத்த மோதிரம் தொலைந்ததில் கிறிஸ்டினுக்கும் மனைவி கொடுத்த அன்புப் பரிசைத் தொலைத்ததில் பாட்ரிக்குக்கும் மிகுந்த வருத்தம் இருந்தது. கடந்த ஜூலை மாதம் ஜிம் விர்த் கேப் காட் கடற்கரையில் மெட்டல் டிடக்டருடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு பொருளைக் கண்டுபிடித்தார். சுத்தம் செய்தார். அந்த மோதிரத்தில் 69-ம் வருடம், மன்ஹாட்டன் கல்லூரி என்று பொரிக்கப்பட்டிருந்ததைக் கண்டார். உடனே கூகுளில் தேட ஆரம்பித்தார். 2005-ம் ஆண்டு கிறிஸ்டின் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார். அதில் தொலைந்த மோதிரம் பற்றிய தகவல்களும் இருந்தன. “இந்த மோதிரத்தை உரியவர்களிடம் சேர்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகரித்துவிட்டது. பல முயற்சிகளுக்குப் பிறகு தொலைபேசி எண் கிடைத்தது. தொலைந்துபோன ஒரு பொக்கிஷம் 47 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்திருப்பதை எப்படி எதிர்கொள்வார்கள் என்று ஆவலுடன் காத்திருந்தேன். முதலில் கிறிஸ்டின் அதிர்ச்சியில் பெரிதாக எதுவும் பேசவில்லை. இயல்புநிலைக்கு வந்த பிறகு, தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். கிறிஸ்டின் மட்டும் புத்தகத்தில் மோதிரம் தொலைந்த விவரத்தை எழுதவில்லை என்றால், அவர்களின் மோதிரம் என்று யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்” என்கிறார் ஜிம்.

தொலைந்த பொருள் கிடைத்த அதிசயம்!

http://tamil.thehindu.com/world/article19579480.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக மசாலா: வீண் பயம்..

TAMILTHTemplateLibrarynation21clIMG2

30chskomasala%202
 
 

பெலாரஸ் நாட்டின் தலைநகருக்கு அருகில் இருக்கிறது ரட்டோம்கா நகரம். இங்கே இருக்கும் ஒரு வீடு அந்தப் பகுதி மக்களை மிகவும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. பெரும்பாலானவர்கள் அந்த வீட்டின் வழியே பகலில் வருவதைக் கூட நிறுத்திவிட்டனர். இரவில் அந்த வீட்டைச் சேர்ந்தவர்களைத் தவிர யாரும் அந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. அந்த வீட்டின் வெளிப்பகுதி முழுவதும் விநோத உருவங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதுதான் காரணம். வீட்டின் கூரையில் கறுப்பு வண்ணத்தில் மனித மண்டை ஓடுகள் வரிசையாகப் பதிக்கப்பட்டிருக்கின்றன. சுவர்களில் எலும்புக்கூடுகளின் கைகள் பாய்ந்து பிடிப்பதைப்போல வைக்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர, கோரமான முழு உருவச் சிலைகள் ஆக்ரோஷமாக நம்மைப் பார்த்துக்கொண்டிருபதுபோல் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படங்கள் இணையதளங்களில் வெளியான பிறகு, வீடு மிகவும் பிரபலமாகிவிட்டது. அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் வீட்டைக் கண்டு அலறுகிறார்கள். “முக்கியமான சாலையில் இந்த வீடு இருக்கிறது. பலரும் இந்தச் சாலையைப் பயன்படுத்துகிறார்கள். பகலில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, அவர்கள் பயந்து அலறுகிறார்கள். இரவில் எங்களுக்கே பயம் வந்துவிடுகிறது. அந்த வீட்டைப் பார்த்தாலே, மண்டையோடுகளும் கைகளும் உருவங்களும் நம்மை வா, வா என்று அழைப்பதுபோலவே தோன்றுகிறது. நாங்கள் ஒரு புகார் கொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்கிறார் நட்டாலியா. “நான் முதல்முறை இந்த வீட்டைப் பார்த்ததும் ஆச்சரியமடைந்தேன். படங்கள் எடுத்தேன். அலுவலகத்தில் எல்லோரிடமும் காட்டிய பிறகு, எனக்கு ஏனோ பயம் வந்துவிட்டது. தூரத்தில் பார்க்கும்போது சூனியக்காரி வீடுபோல் வசீகரிக்கிறது. ஆனால் அடிக்கடி பார்த்தால் அந்த உருவங்கள் நம்மை அழைப்பதுபோலவே தோன்றுகிறது” என்கிறார் மரியா நிகோலேவ்னா. இந்த வீட்டின் உரிமையாளர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டைக் கட்டினார். 2 ஆண்டுகளுக்கு முன்புதான் இங்கே வந்து தங்கியிருக்கிறார். திருடர்கள் எளிதில் நுழைந்துவிடாமலும் மக்களுக்கு இருக்கும் பயத்தைப் போக்கவும் இந்த உருவங்களை வைத்திருப்பதாக வீட்டின் உரிமையாளர் சொல்கிறார், ஆனால் எங்களால் நிம்மதியாக குடியிருக்க முடியவில்லை என்கிறார்கள் அந்தத் தெருவில் வசிப்பவர்கள்.

வீண் பயம்..

இத்தாலியில் பணம் வழங்கும் தானியங்கி இயந்திரங்களில் கொள்ளை அடித்ததாக இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இருவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போன்று முகமூடி அணிந்துகொண்டு, இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள். “26, 30 வயதுகளில் இருக்கும் இளம் சகோதரர்கள் திரைப்படத்தைப் பார்த்து, அதன் பாதிப்பில் முகமூடி அணிந்து கொள்ளையடித்துள்ளனர். இதுவரை 12 கொள்ளைகளில் இவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம்” என்கிறார் ஒரு காவல்துறை அதிகாரி.

அமெரிக்க அதிபரால் பாதிக்கப்பட்டவர்கள் போலிருக்கு!

http://tamil.thehindu.com/world/article19585878.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: இந்த அழகான நட்பு தொடரட்டும்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
 
TAMILTHTemplateLibrarynation21clIMG2
31chskomasala%202

தாயிடமிருந்து பிரிந்து தனியாக நின்ற சிங்கக் குட்டி, துருக்கி எல்லைப் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டது. பிறகு காஸியன்டெப் வனவிலங்குகள் பூங்காவில் சேர்க்கப்பட்டது. ஒரு மாதக் குழந்தையாக ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருந்த சிங்கக் குட்டிக்கு லாக்டோஸ் இல்லாத பால் கொடுக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 8 தடவை பால் குடித்து, தேவையான வைட்டமின்கள் எடுத்துக்கொண்டவுடன் சிங்கக்குட்டி ஆரோக்கியமாக மாறிவிட்டது. கேன் குரங்குதான் சிங்கக் குட்டியின் உற்ற தோழன். மிகவும் அக்கறையாக சிங்கக் குட்டியைக் கவனித்துக்கொள்கிறது. இரண்டும் சேர்ந்து விளையாடுவதைப் பார்க்கும்போது அவ்வளவு அழகாக இருக்கிறது என்கிறார்கள் பூங்கா ஊழியர்கள்.

இந்த அழகான நட்பு தொடரட்டும்!

சீனாவின் ஹாங்ஸோவ் பகுதியைச் சேர்ந்த 55 வயது பாய் யான், காவல் துறையைச் சேர்ந்த நாய்களுக்கான பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த 7 ஆண்டுகளாகக் காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற நாய்களுக்காக ஒரு காப்பகத்தை அமைத்து, பராமரித்து வருகிறார். இதற்காக 96 லட்சம் ரூபாயை இதுவரை செலவு செய்திருக்கிறார்! “2004-ம் ஆண்டு இந்தப் பணியில் சேர்ந்து, ஒரே நேரத்தில் 30 நாய்களுக்குப் பயிற்சியளித்தேன். என் வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை நாய்களுடனே செலவிடுகிறேன். நாய்களும் எனக்குப் பல மடங்கு அன்பையும் விசுவாசத்தையும் திருப்பி அளிக்கின்றன. இப்படிப் பயிற்சி பெற்ற நாய்கள் ஓய்வு பெற்றவுடன், தத்து கொடுக்கப்படுகின்றன, காப்பகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ஆனால் அங்கு இவை மிகச் சாதாரணமாக நடத்தப்படுகின்றன. கழுத்தில் கயிற்றைக் கட்டி வைத்துவிடுகிறார்கள். இந்தக் காட்சிகளைக் கண்டபோது என் மனம் வேதனை அடைந்தது. காவல் துறையில் புத்திசாலித்தனமாக, மனிதர்களுக்கு இணையாக வேலை செய்த நாய்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதுதானே நியாயம் என்று தோன்றியது. அதனால்தான் இந்தக் காப்பகத்தை ஆரம்பித்தேன். இங்கே நாய்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறேன். விளையாடலாம். ஓய்வெடுக்கலாம். குளிக்கலாம். நல்ல உணவைச் சாப்பிடலாம். சுதந்திரமாகச் சுற்றி வரலாம். இங்கே ஒரு மருத்துவமனையும் உண்டு. புற்றுநோயிலிருந்து அனைத்து நோய்களுக்கும் இங்கே சிகிச்சையளிக்கப்படுகிறது. ஆரோக்கியமான நாய்களை விட, நோய் வந்த நாய்கள் மனிதர்களின் அரவணைப்பை அதிகம் எதிர்பார்க்கின்றன. தினமும் 3 வேளை நாய்களைச் சந்திக்கிறேன். அதிகாலை 4 மணிக்கு எழுந்து உணவைத் தயார் செய்து கொடுத்துவிட்டு, என் பணிக்குச் செல்வேன். இங்குள்ள ஒவ்வொரு நாயையும் தனித் தனியாகக் கவனித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு நாயையும் படம் எடுத்து வைத்திருக்கிறேன். நாய்கள் ஓய்வு பெற்ற பிறகு மகிழ்ச்சியாக, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இதில் எனக்கும் நிறைவாக இருக்கிறது. நான் அதிகம் செலவு செய்வதாகக் குற்றம் சுமத்துகிறார்கள். என் அருமை தோழர்களுக்காகத்தானே செலவு செய்கிறேன். இதில் எனக்கு எந்தவித வருத்தமோ, கஷ்டமோ இல்லை. இதுவரை பலரும் நன்கொடை தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எதையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. இது என் குடும்பம், நானே பார்த்துக்கொள்வேன்” என்கிறார் பாய் யான்.

நாய்களின் தோழர்!

http://tamil.thehindu.com/world/article19592433.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: விசித்திர வழக்கு!

 

 
lopng

பிரேசிலைச் சேர்ந்த கேப்ரிலா ஜார்டன் என்ற நீதிபதி, தன் வாழ்நாளில் இப்படி ஒரு வழக்கைச் சந்தித்ததில்லை என்கிறார். 18 வயது ராபர்ட்டோ என்ற இளைஞர் தனக்கு நினைவு தெரியும் முன்பே பிரிந்து சென்ற தன் அப்பாவின் அன்பைப் பெற்றுத் தரும்படி வழக்கு தொடுத்திருக்கிறார். “பொதுவாகப் பிரிந்து சென்றவர்களிடமிருந்து பொருளாதார உதவியைத்தான் நீதிமன்றம் அளிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது. பெற்றோரின் கடமையையும் கட்டாயப்படுத்தி செய்ய வைத்திருக்கிறது. ஆனால் ராபர்ட்டோ பண உதவி எதுவும் தனக்குத் தேவை இல்லை என்கிறார். தான் 18 வயதுவரை இழந்த அப்பாவின் அன்பை, ஒட்டு மொத்தமாக அளிக்கச் சொல்லிக் கேட்கிறார். அன்பை எப்படிச் சட்டத்தால் கொடுக்கச் சொல்ல முடியும்? நானும் எவ்வளவோ ராபர்ட்டோவிடம் பேசிப் பார்த்துவிட்டேன். வேண்டாம் என்று ஒதுங்கிச் செல்பவர்களை கட்டாயப்படுத்த முடியாது என்று தெளிவுபடுத்தினேன். அன்பு செலுத்த இயலாதவர்கள் ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அப்பா இருந்தும் இல்லாமல் வளர்ந்த துயரம் தன்னை மிகவும் பாதித்திருப்பதாகவும் சொல்கிறார் ராபர்ட்டோ. பொருளாதார உதவியோ, பெற்றவர் என்ற கடமையோ தனக்குத் தேவை இல்லை என்கிறார். ஆனால் அவரது அப்பாவின் கண்களில் சிறிது கூட மகன் மீது பாசமோ, கருணையோ இல்லை. ராபர்ட்டோவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்குச் சட்டத்தில் இடமில்லை. இந்த வழக்கை எப்படி முடிப்பது என்று குழப்பத்தில் இருக்கிறேன்” என்கிறார் கேப்ரிலா ஜார்டன். “சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவின் அன்பு வேண்டும் என்று வழக்கு தொடுத்தேன். அப்போது அப்பா என்னை அடிக்கடி சந்திக்க வேண்டும், பேச வேண்டும் என்றெல்லாம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அவர் ஒருமுறை கூட என்னைப் பார்க்க வரவில்லை. மிகவும் கட்டாயப்படுத்தினால் வருவதாகத் தகவல் அனுப்புவார். காத்திருந்து, காத்திருந்து ஏமாற்றமடைவேன். தொலைபேசியில் அழைத்தாலும் பேசவே மாட்டார். இப்படி இருக்கும் ஒரு மனிதரை எனக்கு வேண்டாம் என்று ஏனோ என்னால் ஒதுக்க முடியவில்லை. எனக்கு நல்ல அம்மா கிடைத்திருக்கிறார், தோழி கிடைத்திருக்கிறார். பொருளாதாரக் கஷ்டமின்றி வாழ்கிறேன். ஆனாலும் என் அப்பாவின் அன்பு கிடைக்காததுதான் எனக்குப் பெரிய இழப்பாக இருக்கிறது. பெற்றவரிடம் அன்பை எதிர்பார்ப்பது தவறா?” என்கிறார் ராபர்ட்டோ.

விசித்திர வழக்கு!

சீனாவின் குவாங்ஸொவ் பகுதியில் வசிக்கும் சியாவோ, தன் தோழியிடம் திருமணக் கோரிக்கையை வித்தியாசமாக வைக்க வேண்டும் என்று முடிவுசெய்தார். இவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் உணவகம், மாட்டிறைச்சி உணவுகளில் பெயர் பெற்றது. எனவே மாட்டிறைச்சியை வைத்து ஒரு பூங்கொத்து செய்து தரும்படிக் கேட்டார் சியாவோ. இறைச்சியை மென்மையான பூ இதழ்களாக மாற்றி, ரோஜா பூக்கள்போல் உருவாக்கினர். இந்தப் பூங்கொத்தைச் சுற்றிலும் இளம்பச்சை இலைகளை வைத்து, அழகான, வித்தியாசமான பூங்கொத்தாக மாற்றினர். அதை எடுத்துக்கொண்டு தோழியிடம் சென்றவர், சட்டென்று முழங்காலிட்டு திருமணம் செய்துகொள்வாயா என்று கேட்டார். மாமிசப் பூக்களைப் பார்த்ததும் ஆச்சரியமான அந்தப் பெண், உடனே சம்மதம் தெரிவித்தார்.

நல்லவேளை, சீனாவில் மாட்டரசியல் இல்லை!

http://tamil.thehindu.com/world/article19600312.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: கம்பளி ஓவியங்கள்!

 

 
02chskodog

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் பகுதியில் வசிக்கும் டேனி ஈவ்ஸ், ‘கம்பளி ஓவியம்’ தீட்டுவதில் சிறந்தவராக இருக்கிறார். ஊசியையும் கம்பளியையும் வைத்து, நிஜமான விலங்குகளையும் பறவைகளையும்போல் உருவாக்கிவிடுகிறார். “எனக்கு ஓவியம், கலைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். நான் வாழ்ந்த சூழலும் இயற்கை எழில் நிரம்பியது. தாவரவியல், சூழலியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றேன். ஸ்ப்ரிங்ஃபீல்ட் உயிரியல் பூங்காவில் வேலை கிடைத்தது. விலங்குகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் ஏற்பட்டது. ஆரம்பத்தில் முப்பரிமாண ஓவியங்களைத் தீட்டிக்கொண்டிருந்தேன். பிறகு கம்பளியை வைத்து ஓவியம் தீட்டுவதை நானாகவே உருவாக்கினேன். இவற்றைப் படங்களாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டேன். நல்ல வரவேற்பு இருந்தது. அதனால் வேலையை விட்டுவிட்டு, முழு நேரமாக கம்பளி ஓவியங்களில் இறங்கினேன். ஒரு ஓவியத்தின் விலை சுமார் 2 ஆயிரம் ரூபாய். ஆன்லைனில் ஓவிய வகுப்புகளும் எடுக்கிறேன்” என்கிறார் டேனி ஈவ்ஸ்.

நிஜம்போல் தோற்றமளிக்கும் கம்பளி ஓவியங்கள்!

20ஆண்டுகளுக்கு முன்பு கோஸ்டா ரிகாவிலுள்ள இரண்டு சூழலியலாளர்கள், மிகப் பெரிய ஆரஞ்சு பழச்சாறு உற்பத்தியாளரிடமிருந்து சிறிது நிலத்தை தேசியப் பூங்காவுக்காகப் போராடிப் பெற்றனர். தானம் கொடுத்த நிலத்துக்குப் பதிலாக, இந்த இடத்தில் ஏதாவது செய்து புதுமை செய்து காண்பிக்க வேண்டும் என்று ஒப்பந்தம். ஆனால் அந்த உரிமையாளர், ஆரஞ்சு கழிவுகளை எல்லாம் தானம் கொடுத்த இடத்தில் கொட்டிக்கொண்டிருந்தார். நன்கொடையாகப் பெற்ற டேனியலுக்கும் அவரது மனைவி வின்னிக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. டன் கணக்கில் குவிந்த கழிவுகளை எரிப்பதற்கோ, அப்புறப்படுத்துவதற்கோ இயலவில்லை. தானம் பெறப்பட்ட காலம் முடிந்தது. அடுத்த 15 ஆண்டுகள் ஆரஞ்சு கழிவுகள் கொட்டப்பட்ட நிலம் எப்படி இருக்கிறது என்று ஒருவரும் கவனிக்கவில்லை. பிரிஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டிமோதி ட்ரியரிடம் டேனியல் அந்த இடம் பற்றிச் சொன்னார். இருவரும் அந்த இடத்தைப் பார்க்கச் சென்றனர். அங்கே அவர்களுக்குப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நிலத்தில் இப்போது பசுமையான மரங்கள் நின்றுகொண்டிருந்தன! கொட்டப்பட்ட கழிவுகள் எல்லாம் உரமாகி, மண்ணுக்கு ஊட்டச்சத்தை வழங்கியிருக்கின்றன. ஆரஞ்சு கழிவு உரமாக மாறியிருந்த நிலத்துக்கும் சாதாரண நிலத்துக்கும் பார்க்கும்போதே பெரிய அளவில் வித்தியாசம் தெரிந்தது. உடனே பல்கலைக்கழக்த்திலிருந்து ஓர் ஆராய்ச்சிக் குழு அந்த இடத்துக்கு வந்துசேர்ந்தது. “இந்த நிலத்தைச் சுற்றிலுமுள்ள நிலங்களில் பாறைகளும் காய்ந்த புற்களும்தான் இருக்கின்றன. ஆனால் கழிவு கொட்டப்பட்ட இடத்தில் பசுமையான காடு மீண்டும் உருவாகிவிட்டது. இங்குள்ள மண்ணில் அதிக அளவில் சத்துகள் இருக்கின்றன. தாவரங்கள் செழித்து வளர்கின்றன. எதற்கும் பயன்படாத நிலத்தில் காடுகளை உருவாக்க முடியும் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இந்தக் காடு எங்களுக்குள் மிகப் பெரிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது” என்கிறார் விஞ்ஞானி ஜொனாதன் சோய்.

பாழ் நிலத்தையும் பசுமையாக்க முடியும் என்று நிரூபணமாகியிருக்கிறது!

http://tamil.thehindu.com/world/article19607836.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக மசாலா: நேற்று குற்றவாளி, இன்று மாடல்!

 

 
TAMILTHTemplateLibrarynation21clIMG2
03chskomodel

அமெரிக்காவின் வட கரோலினாவில் கடந்த ஆண்டு 20 வயது மெக்கி அலான்ட் லக்கி, வாகனத்தைத் திருடிச் சென்ற குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். குற்றவாளியாக அறியப்பட்டவர், இன்று மாடலாக வலம் வருகிறார்! கடந்த 2016-ம் ஆண்டு பல்வேறு குற்றச்சாட்டுகள் லக்கி மீது பதிவு செய்யப்பட்டன. சிறை தண்டனையும் பெற்றார். அப்போது இவரது படங்கள் செய்தித்தாள்களில் வெளியாகின. லக்கியின் தோற்றம் சற்று வித்தியாசமானது. ஒரு கண் பழுப்பாகவும் இன்னொரு கண் நீலமாகவும் இருந்தது. அதனால் ‘சிறைப் பறவை’ என்று பெயரிட்டு, அவரது படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்பட்டன. இதைக் கவனித்த அட்லாண்டா மாடலிங் நிறுவனம், லக்கியைத் தங்களின் மாடலாக இருக்கும்படி அழைப்பு விடுத்தது. சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அட்லாண்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டார் லக்கி. இவரின் எதிர்மறையான பிரபலத்தை, நேர்மறையாக மாற்றிவிட்டது மாடலிங் துறை. இதுவரை 19 படங்களே வெளியிட்டிருக்கிறார். அதற்குள் இன்ஸ்டாகிராமில் 22 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். நிறைய மாடலிங் வாய்ப்பு வருவதால், லக்கியின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டது. நிம்மதியான வாழ்க்கையைத் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிறார். விரைவில் நம்பர் ஒன் மாடலாக வருவார்.

நேற்று குற்றவாளி, இன்று மாடல்!

1980-ம் ஆண்டு கனடாவிலிருந்து ஜெருசலேமுக்குச் சென்றார் டோவா சால். இஸ்ரேல் முழுவதும் அளவுக்கு அதிகமான பூனைகள் பராமரிப்பின்றி அலைந்து கொண்டிருப்பதைக் கண்டார். தினமும் பைகளில் பூனைகளுக்கான உணவுகளுடன் கிளம்பிவிடுவார். நோய்வாய்ப்பட்ட பூனைகள், காயம்பட்ட பூனைகளைத் தன் வீட்டுக்கு அழைத்துவந்து சிகிச்சையளித்து, பராமரித்தார். பூனைகள் இனப்பெருக்கம் செய்ய ஆரம்பித்தன. ஆதரவற்ற பூனைகளின் வரவும் அதிகரித்தன. இதனால் இவரை எல்லோரும் ‘ஜெருசலேமின் பூனைப் பெண்மணி’ என்று அன்போடு அழைக்க ஆரம்பித்தனர். இஸ்ரேலில் பொதுவாக ஆண்டு முழுவதும் வெப்பம் நிலவும். குளிர் காலங்களில் மட்டும் சூழ்நிலை சிறிது மாற்றம் அடையும். அதனால் பூனைகள் வாழ்வதற்கான தகுந்த சூழல் இங்கு நிலவுகிறது. இஸ்ரேல் முழுவதும் 20 லட்சம் பூனைகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு லட்சம் பூனைகள் ஜெருசலேமில் இருக்கின்றன. 80 ஆண்டுகளுக்கு முன்பு பூனைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. எலிகளின் தொல்லைகள் அதிகரித்தபோது, அவற்றைச் சமாளிக்க பூனைகளை வளர்க்க ஆரம்பித்தனர். இப்போது டோவாவின் பராமரிப்பில் 600 பூனைகள் இருக்கின்றன. இவற்றுக்கு உணவு, மருத்துவம் அளிப்பது சாதாரணமான விஷயம் இல்லை. தவிர, தினமும் பைகளில் உணவுகளை எடுத்துக்கொண்டு செல்கிறார். சாலைகளில் திரியும் பூனைகளுக்கு உணவிடுகிறார். ” வீட்டில் இருக்கும் பூனைகள் ஆண்டுக்கு 2, 3 முறை குட்டிகளைப் போடுவதால் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தெருக்களில் பசியுடன் அலையும் பூனைகளைப் பார்த்துவிட்டு, என்னால் சும்மா இருக்க முடியாது. அதனால் என்னால் முடிந்தவரை பூனைகளைக் காப்பாற்றும் வேலையை மகிழ்ச்சியுடன் செய்துவருகிறேன்” என்கிறார் டோவா சால்.

பூனைகளின் காவலர்!

http://tamil.thehindu.com/world/article19614685.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: கலைநயமிக்க கழிவறை

 

 
masala2

பிலிப்பைன்ஸில் உள்ள ஷெல் பெட்ரோல் பங்க் கழிப்பறையைப் பற்றித்தான் உலகமே பேசிக்கொண்டிருக்கிறது. யு டியூப்பில் வெளியிடப்பட்ட கழிவறை வீடியோவை 40 லட்சம் பேர் பார்வையிட்டிருக்கிறார்கள். டாக்பிலரன் நகரில் இருக்கும் இந்தக் கழிவறை முழுவதும் மரத்தால் செய்யப்பட்டிருக்கிறது. சுவர்களை எழில் மிக்க ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. ஓர் அலமாரியில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே சின்னச் சின்ன அலங்காரப் பொருள்கள் உள்ளன. அட்டகாசமான விளக்குகள் ஒளியை உமிழ்ந்துகொண்டிருகின்றன. ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன.

இனிய நறுமணம் வீசிக்கொண்டிருக்கிறது. சுற்றுலாப்பயணிகளைக் கவர்வதற்காக இந்தக் கழிவறையைக் கட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள். இது பொதுக்கழிவறை. அந்த வழியே செல்லும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இவர்களே தங்கும் விடுதிகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பொதுக் கழிவறையே இவ்வளவு நன்றாக இருந்தால், தங்கும் விடுதி எப்படி இருக்கும் என்று பயணிகள் ஆர்வத்தோடு குவிகிறார்கள். பிலிப்பைன்ஸில் பல இடங்களிலும் இதுபோன்ற கழிவறைகளைக் கட்டுவதற்கு நிறையப் பேர் ஆர்வமாக இருக்கிறார்கள்.

நல்ல வியாபார உத்தி!

‘டோக்கியோ காட்டன் வில்லேஜ்’ என்பது ஜப்பானில் இயங்கும் ஒரு பார். இங்கே குடிக்க வருகிறவர்கள், நூல் நூற்கவேண்டும். ஜப்பானில் பாரம்பரியமாகக் கைகளால் நூல் நூற்பது அழிந்து வருகிறது. அதைக் காப்பாற்றும் விதத்தில் நூல் நூற்கும் கலையை வைத்திருக்கிறோம் என்கிறார் உரிமையாளர். பாருக்கு வருகிறவர்கள் ஆளுக்குக் கொஞ்சம் பஞ்சு, சிறிய ராட்டையுடன் அமர்ந்து மணிக்கணக்கில் நூல் நூற்கின்றனர். ஒரு பஞ்சு நூலாக மாறும் அதிசயத்தை நாமே செய்யும்போது மனம் சந்தோஷமடைகிறது. புத்துணர்ச்சி கிடைக்கிறது. இதற்காகவே வாரத்துக்கு இரு முறையாவது பாருக்கு வருகிறோம் என்கிறார்கள் வாடிக்கையாளர்கள். இந்த காட்டன் வில்லேஜைப் பார்த்து ஜப்பானில் நிறைய காபி ஷாப்களிலும் பார்களிலும் ராட்டையை வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

பழசுக்கு என்னிக்குமே மதிப்புதான்…

உலகிலேயே மிக அதிகமான உப்புத் தன்மை கொண்ட நீர்நிலை சாக்கடல். மற்ற கடல்களை விட 9.6 மடங்கு உப்பு இந்தச் சாக்கடலில் இருக்கிறது. அதனால் இங்கே மீன் போன்ற எந்த உயிரினங்களும் வாழ முடிவதில்லை. தண்ணீரின் அடர்த்தி அதிகம் என்பதால் மனிதர்கள் மிதந்துகொண்டே படிக்கலாம். மருத்துவக்குணம் மிக்கதாக நம்பப்படுவதால் இங்கே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகம். ஆண்டுதோறும் இந்தச் சாக்கடலில் ஒரு மீட்டர் உயரத்துக்குத் தண்ணீர் குறைந்து வருகிறது. 1950ம் ஆண்டிலிருந்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 40 மீட்டர் அளவுக்குத் தண்ணீர் குறைந்துவிட்டது. ஜோர்டான் ஆற்றில் இருந்து வரும் தண்ணீரின் அளவு குறைவதாலேயே சாக்கடலின் தண்ணீர் அளவு குறைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். சாக்கடலை ஒட்டிய பூங்காக்கள், நீர் விளையாட்டுகள் போன்றவை தண்ணீர் தொலைவுக்குச் சென்றுவிட்டதால் மூடப்பட்டிருக்கின்றன.

அதிசயமாக இருந்த சாக்கடல், கவலை தரும் விஷயமாக மாறிருச்சே…

டவுன்டன் அபே என்ற பிரிட்டன் தொலைக்காட்சி தொடரின் புதிய சீசனுக்கான ப்ரீமியர் நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் நடைபெற்றன. இதில் டேம் மேகி ஸ்மித் என்ற புகழ்பெற்ற நடிகையைப் போல, ஒரு கேக்கைத் தயார் செய்திருந்தார்கள். கரென் போர்டலியோ என்ற உணவுக்கலை நிபுணர் மேகியின் புகைப்படத்தைப் பார்த்து, 18 மணி நேரங்களில் இந்த கேக்கை உருவாக்கியிருக்கிறார். மேகி உட்பட பார்த்தவர்கள் அனைவரும் பிரமித்துப் போனார்கள். விஷயம் மீடியாக்களில் வர, நினைத்தது போலவே தொலைக்காட்சி தொடருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது.

விளம்பரம் இல்லாமல் உலகத்தில் எதுவும் செய்ய முடியாது போல…

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

உலக மசாலா: மிளகாய் ராணி!

TAMILTHTemplateLibrarynation21clIMG2

05chskochilly
 
 

க்ளிப்ஃடன் மிளகாய் சாப்பிடும் க்ளப் இங்கிலாந்தில் மிகப் பிரபலமானது. இங்கே நடைபெறும் மிளகாய் சாப்பிடும் போட்டியில் ஒவ்வொரு சுற்றுக்கும், மிளகாயின் காரம் அதிகரிக்கப்படும். போட்டியில் கலந்துகொள்வது எவ்வளவு பெருமையானதோ, அதேபோல் கடினமானதும்கூட. நடுத்தர வயதில் உள்ள சிட் பார்பர் என்ற பெண், 2014-ம் ஆண்டிலிருந்து இந்தப் போட்டியில் தன் ஆதிக்கத்தைத் தொடர்ச்சியாகச் செலுத்தி வருகிறார். ‘தோற்கடிக்க முடியாத சிட்’ என்று இவரை எல்லோரும் அன்புடன் அழைக்கிறார்கள். காரத்தை விரும்புகிறவர்கள் எல்லாம் இந்தப் போட்டியில் எளிதாக வென்றுவிட முடியும் என்று சொல்லிவிட இயலாது. ரெட் ஃப்ரெஷ்னோ, ஜலபெனோ போன்ற மிளகாய்களைச் சாப்பிட்டால் பின்விளைவுகளைச் சந்திக்காமல் இருக்க முடியாது. போட்டியின் ஒவ்வொரு சுற்றுக்கும் காரத்தின் தன்மை அதிகரிக்கப்படும். காரத்தைத் தாக்குப் பிடிக்க இயலாமல் பலரும் வெளியேறிவிட, இறுதிச் சுற்றில் சிலர் மட்டுமே கலந்துகொள்வார்கள். அவர்களுக்கு உலகிலேயே மிகக் காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்கள் வழங்கப்படும். இதையும் சாப்பிட்டு முடிப்பவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் போட்டியில் கலந்துகொண்டு, தொடர்ச்சியாக வெற்றிவாகை சூடிவருகிறார் சிட் பார்பர். “இது மிகக் கடினமான போட்டி. மிளகாய் சாப்பிடும்போது காரத்தைத் தாங்க முடியாமல் தண்ணீர் குடித்துவிட்டால், போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். பலரும் காரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டுக்கொண்டே போட்டியில் பங்கேற்பார்கள். காரத்தைத் தணிக்க பாலைக் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் வேகமாக மிளகாய்களைச் சாப்பிட்டுவிடுவேன். இந்தப் போட்டி பணத்துக்காகக் கலந்துகொள்ளும் போட்டி இல்லை. 4,500 ரூபாய்தான் பரிசுப் பணம். காரத்தின் பின்விளைவுகளைச் சரி செய்வதற்கே இந்தப் பணம் போதாது. சவால்களை விரும்புகிறவர்களும் வலியைத் தாங்கிக்கொள்ள முடிகிறவர்களும் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும் ” என்கிறார் சிட் பார்பர்.

மிளகாய் ராணி!

ஒருகாலத்தில் ஜப்பானில் போஸோஜோகு என்ற குழுவினர் இரு சக்கர வாகனங்களை வைத்துக் கொண்டு பலவிதமான காரியங்களில் ஈடுபட்டு வந்தனர். நகரின் வீதிகளில் அளவுக்கு அதிகமான வேகத்தில் செல்வது, டிராபிக் சிக்னலை மீறுவது, வாகனத்தின் ஒலி அளவை அதிகரிப்பது போன்ற சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அவர்கள் குறித்து எதிர்மறையான கருத்துகளே மக்களிடம் நிலவிவந்தது. 2000-வது ஆண்டுக்குப் பிறகு அந்தக் குழு தன்னை மாற்றிக்கொண்டது. சட்டத்தை மீறி எதுவும் செய்வதில்லை. சமீபத்தில் இந்தக் குழுவில் இருப்பவர்கள் இருசக்கர வாகனங்களின் க்ளட்சை வெவ்வேறு விதங்களில் இயக்கி, இசையை உருவாக்கிவருகிறார்கள். இந்த வாகன இசையைக் கேட்பதற்காக தெருக்களில் ஏராளமான மக்கள் கூடுகிறார்கள். 4, 5 பேர் வாகனங்களுடன் வருகிறார்கள். ஓர் இடத்தில் இருந்தபடியே ஒவ்வொருவரும் விதவிதமான இசையை உருவாக்கிக் காட்டுகிறார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு இசைத்துக்கொண்டே அந்த இடத்தைவிட்டுச் சென்று விடுகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் இசை!

http://tamil.thehindu.com/world/article19623927.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: எது நாகரிகம்!

TAMILTHTemplateLibrarynation21clIMG2

06chskocouple
 
 

இங்கிலாந்தைச் சேர்ந்த 21 வயது லாரென் அட்டெர்லியும் 22 வயது மிட்செல் லாயிடும் முன்னாள் காதலர்கள். 2014-ம் ஆண்டு ஆரம்பித்த இவர்களது காதல், இரண்டே மாதங்களில் முடிவுக்கு வந்துவிட்டது. இந்தப் பிரிவை லாரெனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஏமாற்றம் பொறாமையாக மாறியது. தன்னைக் காதலிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, வேறு எந்தப் பெண்ணையும் காதலிக்கக்கூடாது என்றார். அதற்கு லாயிட் ஒப்புக்கொள்ளவில்லை. பொறாமை பழிவாங்கும் எண்ணமாக மாறியது. சில நாட்களில் லாயிட் இமெயிலுக்கு, காவல்துறையிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ‘உங்கள் மீது மோசடிப் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றால் லாரென் சொல்வதுபோல் நடந்துகொள்ளுங்கள். உங்கள் நடவடிக்கைகளை நாங்கள் கண்காணித்துக்கொண்டே இருப்போம். இதை அலட்சியப்படுத்தும் பட்சத்தில் விளைவுகள் மோசமாக இருக்கும்’ என்று எழுதப்பட்டிருந்தது. லாரென் குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் காவல்துறையில் உயர் அதிகாரியாக இருப்பதைத் தெரிந்துகொண்ட லாயிட், பயந்துவிட்டார். அன்று முதல் லாரென் சொல்வதை எல்லாம் கேட்க ஆரம்பித்தார். தன் அலுவலகத் தோழிகளுடன் கிறிஸ்துமஸ் விருந்தில் கலந்துகொண்ட அன்று, ‘நீ சொன்னதை மீறி விட்டாய். எந்தப் பெண்ணுடனும் பேசவோ, பழகவோ கூடாது என்பதுதான் உனக்கு விதிக்கப்பட்ட தண்டனை. இனி ஒருமுறை இப்படி நடந்தால் லட்சக்கணக்கில் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இதுபற்றி யாரிடமாவது பேசினால் விளைவுகள் இன்னும் மோசமாகிவிடும்’ என்று எச்சரித்து மெயில் வந்திருந்தது. லாயிட் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார். பெண்களிடம் பேசக்கூடாது, பழகக்கூடாது என்ற நிபந்தனைகளைத் தொடர்ந்து, கேளிக்கை விடுதிகளுக்குச் செல்லக்கூடாது, நண்பர்களைப் பார்க்கக்கூடாது என்றெல்லாம் சொல்லச் சொல்ல, லாயிட் மனம் உடைந்துபோனார். ஃபேஸ்புக் மூலம் நண்பர்களிடம் பேசினாலாவது ஆறுதல் கிடைக்கும் என்று முயற்சி செய்தார். அதற்கும் தடை என்று மெயில் வந்தது. சமீபத்தில் தன் அம்மா, தங்கையுடன் உணவு விடுதிக்குச் சென்றார். அன்றும் இந்தச் செயலைக் கண்டித்து மெயில் வந்தது. ’இந்தக் குற்றத்துக்கு 3 லட்சம் ரூபாய்தான் அபராதம். ஆனால் மீண்டும் மீண்டும் செய்த தவறையே செய்துகொண்டிருப்பதால் 12 லட்சம் ரூபாயை அபராதமாகச் செலுத்த வேண்டும்’ என்று இருந்ததைப் பார்த்து லாயிட் பொறுமையிழந்தார். இரண்டு ஆண்டுகள் தான் அனுபவித்துக்கொண்டிருக்கும் கொடுமைகளுக்கு முடிவு கட்டிவிட எண்ணினார். நண்பர்களிடம் விஷத்தைச் சொன்னார். அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுவரை நேரிலோ, தொலைபேசியிலோ பேசாத ஒருவரை எப்படிக் காவல் துறை அதிகாரி என்று நம்பியிருக்கிறாய் என்று கடிந்துகொண்டனர். உடனே காவல் துறைக்குச் சென்று விஷயத்தைக் கூறினர். குற்றம் சுமத்தப்பட்டவரை மெயில் அனுப்பி காவல்துறை எச்சரித்துக்கொண்டிருக்காது, இவை எல்லாம் போலி மெயில்கள் என்று விளக்கினார் காவல் துறை அதிகாரி. லாரென் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ‘பிடிக்கவில்லை’ என்றால் அதை ஏற்றுக்கொள்வதுதானே நாகரிகம்!

http://tamil.thehindu.com/world/article19628636.ece

  • தொடங்கியவர்
 
 
TAMILTHTemplateLibrarynation21clIMG2
07chkanHair-tattoos

செர்பியாவைச் சேர்ந்த மரியோ ஹ்வாலா முடி திருத்தும் கலைஞராக இருக்கிறார். சமீபத்தில் சர்வதேச அளவில் இவர் பேசப்பட்டு வருகிறார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் முதல் விஞ்ஞானி நிகோலா டெஸ்லா வரை புகைப்படத்தில் இருப்பதுபோல் முடியை வெட்டி உருவத்தைக் கொண்டுவந்துவிடுகிறார். தலையில் இவ்வளவு நேர்த்தியாகவும் அழகாகவும் நிஜ உருவத்தை வரைவது அவ்வளவு சாதாரண விஷமில்லை என்பதால், மரியோவின் புகழ் உலகமெங்கும் பரவி வருகிறது. “ஆரம்பத்தில் முடி திருத்தும் பணியை மட்டும் செய்து வந்தேன். பிறகு தலையில் டாட்டூ வரைய ஆரம்பித்தேன். 4 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்லோவேனியாவில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு வாடிக்கையாளர் ஏதாவது வித்தியாசமாக செய்யும்படி கேட்டுக்கொண்டார். அப்போதுதான் முடியை வெட்டுவதன் மூலம் உருவத்தைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டேன். முதல் முயற்சி அவ்வளவு நன்றாக வராவிட்டாலும் பலரையும் ஆச்சரியப்படுத்திவிட்டது. தொடர்ந்து என் திறமையை வளர்த்துக்கொண்டேன். செர்பியா திரும்பிய பிறகு நிறைய பேர் இப்படித் தங்கள் தலையை மாற்றிக்கொள்ள ஆர்வம் காட்டினர். இப்போது யாருடைய படத்தைக் கொடுத்தாலும் அச்சு அசலாக தலையில் கொண்டுவந்துவிட முடியும். வடகொரிய அதிபரின் உருவத்தை நிறைய பேர் விரும்புகிறார்கள். அந்தப் படம்தான் என்னை அதிக அளவில் பிரபலப்படுத்திவிட்டது” என்கிறார் மரியோ ஹ்வாலா.

‘தலை’ சிறந்த ஓவியர்!

வியட்நாமைச் சேர்ந்த 81 வயது ட்ரின் தி நிஹென், 3 மீட்டர் நீளமுள்ள கனமான சிக்கலான சடையுடன் இருக்கிறார். 22 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வளர்ந்து கொண்டிருக்கிறது. “என் எடையைவிட என் சடையின் எடை அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதை நான் விருப்பப்பட்டு வளர்க்கவில்லை. எல்லோரையும்போல் சாதாரணமாகத்தான் எனக்கும் முடி இருந்தது. 1995-ம் ஆண்டு பின் தலையிலுள்ள முடிகள் அனைத்தும் திடீரென்று சிக்கலாகச் சேர்ந்துகொண்டன. சீவ முடியவில்லை. வேறு வழியின்றி முன்பக்க முடியை மட்டும் விட்டுவிட்டு, பின் பக்க முடியை வெட்டிவிட்டேன். மீண்டும் வளர்ந்தபோதும் சிக்கலான முடியாகவே மாறியது. பலமுறை முடியை வெட்டினாலும் தொடர்ந்து இப்படியே வளர்ந்துகொண்டிருந்தது. ஒருநாள் இது சாதாரணமான செயல் இல்லை என்று உணர்ந்தேன். அன்று முதல் வெட்டுவதை விட்டுவிட்டேன். 22 வருடங்களாகிவிட்டன. சிலர் டிராகன் முடி என்றும் சிலர் பாம்பு முடி என்றும் அழைக்கிறார்கள். இந்த முடியால் தெருவில் இறங்கினாலே, எல்லோரின் கவனமும் என் பக்கம் திரும்பிவிடும். ஏன் இப்படி வளர்க்கிறாய் என்று சிலர் விசாரிப்பார்கள். குழந்தைகள் சடையைப் பிடித்து விளையாடுவார்கள். அதனால் தலைப்பாகை மாதிரி சடையைச் சுற்றிக்கொள்வேன். என்னுடைய முன் தலையிலுள்ள முடி என் வயதுக்கு ஏற்ப வெள்ளையாகவும் சாம்பலாகவும் இருக்கிறது. ஆனால் இந்தச் சடை கறுப்பும் பழுப்புமாக இருக்கிறதைப் பார்த்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. தலைக்கு ஷாம்பூ போட்டுச் சுத்தம் செய்வதற்கு ஒரு மணி நேரமாகும். இந்த முடியைக் காய வைப்பதற்கு ஒருநாள் ஆகிவிடும். சடையால் நான் படும் சிரமம் கொஞ்சமல்ல. ஆனாலும் ஏதோ அற்புதம் என்று எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்கிறார் ட்ரின் தி நிஹென்.

ஐயோ… பாட்டிக்கு வந்த சோதனை!

http://tamil.thehindu.com/world/article19634760.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: 2 அடி நீள நகங்கள்

 

 
08chskonails

அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த அயன்னா வில்லியம்ஸ், உலகிலேயே மிக நீளமான நகங்களைக் கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார்! அடுத்த ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெற இருக்கிறது. இவரது ஒவ்வொரு நகமும் சுமார் 2 அடி நீளம் இருக்கிறது! “என் வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தை நகங்களை வளர்ப்பதற்கே செலவிட்டு இருக்கிறேன். 23 ஆண்டுகளுக்கு முன்பு என் தோழியைப் பார்த்துதான் நகங்களை வளர்க்கும் ஆர்வம் வந்தது. ஒருகட்டத்தில் நகங்களைப் பராமரிப்பதும் வளர்ப்பதுமே என் முழு நேர வேலையாக மாறிவிட்டது! பின்னர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.

23 ஆண்டுகளாக நகங்களை வெட்டாமல் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன். இன்று சாதனையை எட்டிவிட்டேன். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி. குடும்பத்தினரின் ஒத்துழைப்பால்தான் நகங்களை இவ்வளவு பெரிதாக வளர்க்க முடிந்தது. இவ்வளவு நீளமான நகங்களை வைத்துக்கொண்டு எந்த வேலையும் என்னால் செய்துவிட முடியாது. என் துணிகளைப் போடுவதற்கும் தலை சீவுவதற்கும் கூட என்னால் முடியாது. எல்லாவற்றுக்கும் பிறரின் உதவியை நாட வேண்டும். நகங்களுக்கு பாலிஷ் போடுவதற்கு ஒரு வாரம் ஆகும்” என்கிறார் அயன்னா வில்லியம்ஸ்.

 

ஒரு நகத்துக்கு ஒரு பாட்டில் நெயில் பாலிஷ் தேவைப்படும் போலிருக்கே!

இரண்டு ஆண்டுகளில் 8 ஆண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை, தாய்லாந்து காவல் துறையினர் தேடிவருகிறார்கள். 32 வயது ஜரியபோர்ன் பலரை ஏமாற்றித் திருமணம் செய்து, வரதட்சணை வாங்கிக்கொண்டு தலைமறைவாகி விடுகிறார் என்ற செய்தி நீண்ட காலமாகவே சமூக வலைதளங்களில் பரவிவந்தது. ஆனால் தற்போதுதான் பாதிக்கப்பட்ட பிரசர்ன் டியாமியம் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். “நான் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஜரியபோர்ன் பற்றிய எச்சரிக்கை தகவல் ஒன்றைப் பார்த்தேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு என்னைத் திருமணம் செய்து, ஏமாற்றியவர் என்பதைக் கண்டுகொண்டேன். நாங்கள் பழக ஆரம்பித்த சில மாதங்களிலேயே தான் கருவுற்று இருப்பதாகவும் உடனே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அவசரப்படுத்தினார்.

தன் குடும்பத்தினர் கடனில் கஷ்டப்படுவதால், பெண் வீட்டாருக்குச் சுமார் 4 லட்சம் ரூபாய் வரதட்சணை தரவேண்டும் என்றார். நானும் சம்மதித்தேன். திருமணம் ஆன சில தினங்களில் பணம் கொடுத்தவுடன் தலைமறைவாகிவிட்டார். நானும் எங்கெங்கோ தேடினேன். கிடைக்கவில்லை. ஏமாற்றப்பட்டேன் என்பதைப் பிறகே உணர்ந்துகொண்டேன். இப்போது வேறு திருமணம் செய்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன். ஆனால் ஏமாற்றப்பட்ட அந்த வலி இன்னும் இருக்கிறது. என்னைப்போல் இனிமேல் யாரும் ஏமாறக்கூடாது என்பதற்காகவே புகார் கொடுத்தேன்” என்கிறார் பிரசர்ன்.

“இந்தச் செய்தியை நாங்கள் வெளியிட்டவுடன் இதுவரை 7 பேர் தங்களை ஜரியபோர்ன் ஏமாற்றியதாகப் புகார் கொடுத்திருக்கிறார்கள். எல்லோரிடமும் வரதட்சணை வாங்கிய பிறகு தலைமறைவாகிவிட்டார். இதில் ஒரே வாரத்தில் 5 பேரை எப்படித் திருமணம் செய்துகொண்டார் என்பது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. இவரை விரைவில் பிடித்துவிடுவோம்” என்கிறார் தாய்லாந்து காவல்துறை அதிகாரி.

என்ன ஓர் அநியாயம்..!

http://tamil.thehindu.com/world/article19641989.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: மெமரி க்வின்!

 

TAMILTHTemplateLibrarynation21clIMG2
 
 
09chskomemory

வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் அய்கா நிறுவனத்தின் விலைப் பட்டியல் 328 பக்கங்களைக் கொண்டது. இதில் 4,818 பொருட்கள் புகைப்படங்களுடன் இருக்கின்றன. இந்தப் புத்தகத்தை ஓராண்டு படித்தாலும் நினைவில் வைத்துக்கொள்ள இயலாது. ஆனால் யான்ஜா வின்டர்சோல் என்ற 23 வயது இளம் பெண், ஒரே வாரத்தில் 328 பக்கங்களில் உள்ள அத்தனை பொருட்களையும் நினைவில் வைத்துக்கொண்டார்! இவர் இரண்டு முறை ‘உலக நினைவுத்திறன் சாம்பியன்’ பட்டத்தை வென்றவர்.

“ பயிற்சியின் மூலம் நினைவுத்திறனை அதிகரித்து வைத்திருக்கிறேன். ஒருவரைப் பார்த்தால் அவரது முகம், அவரைப் பற்றிய விஷயங்கள் என் மூளைக்குள் பதிந்துவிடும். எவ்வளவு காலம் கழித்தாலும் நினைவில் கொண்டுவந்துவிட முடியும். ஒரு பொருளின் பெயரைச் சொன்னால் அந்தப் பட்டியல் புத்தகத்தில் எந்தப் பக்கத்தில் இருக்கிறது, அந்தப் பக்கத்தில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன போன்ற அனைத்து விஷயங்களையும் சொல்லிவிடுவேன். என்னைப் பற்றிக் கேள்விப்பட்ட இந்த நிறுவனம், தன்னுடைய பட்டியல் புத்தகத்தைக் கொடுத்து, ஒரே வாரத்தில் இதை முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. எனக்குச் சவால்கள் என்றால் மிகவும் பிடிக்கும். புத்தகத்தை முதலில் ஒரு நோட்டம் விட்டேன். நினைவில் வைத்துக்கொள்வதற்குப் பல்வேறு நுட்பங்களை உருவாக்கிக்கொண்டேன். பிறகு ஒரே வாரத்தில் 328 பக்கங்களும் என் மூளையில் அமர்ந்துகொண்டன. பொருட்களின் எண்ணிக்கை, பெயர் மட்டுமின்றி, அந்தப் பக்கத்திலுள்ள சுவரில் என்ன வண்ணம் பூசப்பட்டிருக்கிறது, எத்தனை விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன போன்று அனைத்து தகவல்களையும் துல்லியமாகச் சொல்லிவிடுவேன். நான் மங்கோலியாவில் பிறந்தாலும் ஸ்வீடனில்தான் வாழ்ந்து வருகிறேன். தொழில் சார்ந்த 4 ஆண்டுகள் படிப்பை, இரண்டே ஆண்டுகளில் முடித்துவிட்டேன். எதிர்பாராதவிதமாக நினைவுத்திறனை வளர்த்துக்கொள்ளும் நுட்பங்களைச் சொல்லித்தரும் புத்தகம் ஒன்று கிடைத்தது. அதை வைத்து என் நினைவுத் திறனை மேம்படுத்திக்கொண்டேன். நான் நினைவில் வைத்துக்கொள்வதற்காகப் பல்வேறு உத்திகளைக் கையாள்கிறேன். சீனா, அமெரிக்கா, பிரேசில் என்ற 3 நாடுகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், படுக்கையில் அமர்ந்து சீன உணவைச் சாப்பிடுவதாகவும் ஜன்னலில் அமர்ந்து அமெரிக்க பர்க்கர் சாப்பிடுவதாகவும் அலமாரியில் பிரேசில் கால்பந்து இருப்பதாகவும் நினைவில் வைத்துக்கொள்வேன்” என்கிறார் யான்ஜா வின்டர்சோல்.

மெமரி க்வின்!

ஆரோக்கியத்தை இழக்காமல் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறார்கள். லண்டனைச் சேர்ந்த சாகி மருயாமா, டேனியல் கொப்பென் இருவரும் வழக்கமாகச் சாப்பிடும் அளவில் பாதி அளவு சாப்பிடுவதற்கான பாத்திரங்களை உருவாக்கியிருக்கின்றனர். கிண்ணம், தட்டு, கரண்டி, தம்ளர் போன்றவற்றில் முகம் பார்க்கும் கண்ணாடியைப் பதித்து வைத்துவிடுகின்றனர். ஒரு பர்கரை அந்தக் கண்ணாடித் தட்டில் வைத்தால் இரண்டு பர்கராக காட்டும். நம் மனம் அதிக உணவை உட்கொண்டதாக நினைத்துக்கொள்ளும். ஆனால் நாம் பாதி உணவுதான் சாப்பிட்டிருப்போம். “எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும். தற்போது சாப்பிடும் அளவில் பாதிதான் சாப்பிட முடியும். அதை இப்போதே பழகிக்கொண்டால், உடல் எடையும் அதிகரிக்காது” என்கிறார்கள் இந்த நண்பர்கள்.

உணவை டபுளாகக் காட்டும் கண்ணாடிப் பாத்திரங்கள்!

http://tamil.thehindu.com/world/article19649419.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.