Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒழுகு... (சர்வதேச சிறுவர் தினம்)

Featured Replies

ஒழுகு... (சர்வதேச சிறுவர் தினம்)
 
 
 

article_1443680509-LEAD.jpg

 

குழல் இனிது யாழ் இனிது என்பர் 
குழந்தைகளின் மழலை மொழி கேளாதார்...

சிறுவர்கள் உலகில் சஞ்சரிப்பது என்பது மிகவும் மகத்தானதொரு செயல். இந்தச் சிறுவர்களுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சர்வதேச சிறுவர் தினம், 1954ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கையில் இன்றைய தினமான ஒக்டோபர், 1ஆம் திகதி சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது. (முதியோர் தினமும் இன்றைய நாளிலேயே கொண்டாடப்படுகின்றது) எனினும், இச்சிறுவர்கள் தினமானது ஒவ்வொரு நாடுகளிலும் வௌ;வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் இந்நாளில் நினைவுகூறப்படுகின்றமை விசேட அம்சமாகும். 

வளர்ந்த பெரியவர்கள் அனேகர் 'நான் இன்னும் சிறு வயதுடையவராகவே இருந்திருக்கலாம்' என வாய்விட்டுக்கூறுகின்றனர். காரணம், சிறு வயதில் தாம் விட்ட தவறுகளை சரிப்படுத்த எண்ணுகின்றனர். காலம் திரும்பாது அல்லவா? எனவே, தற்போதுள்ள சிறுவர்களாகிய நீங்கள் உங்கள் சிறு வயதுக் காலத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். 

'ஒப்புரவு ஒழுகு' 
என்கின்றது ஒளவையாரின் ஆத்திசூடி. இதன் பொருள் யாதெனில், உலகத்தின் போக்கு எப்படி என்று அறிந்து; அதற்கு ஏற்றபடி நடந்துகொள்ள வேண்டும் என்பதாகும். உலகம் என்பது உங்களைச் சுற்றியிருக்கும் சமூகம். இச்சமூகம் நன்மையானதாகவும் இருக்கும். தீமையானதாகவும் இருக்கும். நன்மையாக இருக்கும் சந்தர்ப்பத்தில் நல்லவற்றை உள்வாங்கி அதற்கு ஏற்றால்போல் ஒழுகுதல் வேண்டும். தீமையாக இருக்கும் போது, அதைவிட்டு விலகிச் செயற்படுதல் வேண்டும். இதுவே எதிர்கால சமூகத்தின் விழுதுகள் ஆகிய சிறார்களின் பொறுப்பாகும். 

சமூகமானது பல விதிமுறைகளை விதித்திருக்கின்றது. அவ்விதிமுறைகளை ஒழுகாததன் காரணமாக அதாவது கடைப்பிடிக்காமையினால் பல சிக்கல்கள் தோன்றுகின்றன. சாதாரணமாக ஒரு சின்ன விடயமாக இருந்தாலும் அதற்கென்று இருக்கும் விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடித்தல் வேண்டும். சிறுபராயம் முதலே இவ்வாறான விதிமுறைகளை மிகச் சரியான முறையில் கடைப்பிடித்தால் எதிர்காலத்தில் பிரச்சினைகளே வராது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்று சொல்வார்களே.

சிறுபராயமானது அநாவசியமான எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாத வயது. ஆகவே, இவ்வயதில் நல்லவற்றை விதைப்போம். இந்த விதை ஆலமரமாகும் போது சமூகத்துக்கு நிழல் எனும் சுகத்தை உண்டாக்கும்.

சமூகத்தின் விதிமுறை எனும் போது, தொழிலை சரியான முறையில் மேற்கொள்ளுதல், அன்பு, பண்பு, தீயதை தீண்டாது இருந்தல், சட்டங்களை மதித்தல் மற்றும் விதிகளை மீறாது இருத்தல் எனப் பலவற்றைக் குறிப்பிடலாம். 

article_1443680533-children-reading-book

சிறுவர்களது தொழில் கல்வி கற்பது. இக்கல்வியை சிறுவயது முதற்கொண்டு சரியான முறையில் உள்வாங்கிக் கற்க வேண்டும். கற்றது மாத்திரமல்லாது கற்ற கல்வியின் படி நடத்தல் வேண்டும். 

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

இக்குறளின் பொருள் யாதெனில், கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்கவேண்டும். அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தக்க நெறியில் நிற்கவேண்டும். கல்வி மூலமாக சிறந்த ஒழுக்கம், பண்பு, இரக்கம், தீயன விலக்கி நடத்தல் மற்றும் அன்பு என பல நல்ல விடயங்களையும் சேர்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்.  

ஒரு நன்நெறிக் கதை உண்டு. 

பெரியவர் ஒருவர் மலைப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தார். மேடும் பள்ளமுமாக இருந்த அந்தப் பாதையில் நடக்க அவர் துன்பப்பட்டார். 

களைப்பு அடைந்த அவர், ஓரிடத்தில் ஓய்வு எடுத்தார். அப்பொழுது ஏழு வயது சிறுமி ஒருத்தி, இரண்டு வயதுடைய பையன் ஒருவனை இடுப்பில் வைத்துக்கொண்டு அந்த மலைப்பாதையில் ஏறி வந்துகொண்டிருந்தாள். 

அவளைப் பார்த்த அவர், 'பையனைத் தூக்கிக்கொண்டு இந்தக் கடினமான மலைப்பாதையில் ஏறி வருகின்றாயே. இவன் உனக்குப் பாரமாகத் தெரியவில்லையா?' என்று கேட்டார். 

'ஐயா! இவன் எனது தம்பி. இவன் எப்படி எனக்குப் பாரமாகத் தெரிவான்?' என்று பதில் கேள்வி கேட்டாள் அவள். 

'நீ சொல்வது சரிதான். அன்பு இருந்தால் எதுவும் நமக்குத் துன்பமாகத் தெரியாது' என்றார் அவர். 

இக்கதையிலிருந்து இச்சிறுமி அன்பு எனும் உணர்வைக் கடைப்பிடித்திருக்கின்றாள். சிறு வயது முதல் அனைவரிடமும் அன்பாகப் பழகும்போது எம்மீதான மற்றவர்களின் மரியாதையும் அதிகரிக்கும் என்பதை சிறார்கள் ஆகிய நீங்கள் மனதில் நிறுத்துங்கள். அன்பு செலுத்துவது மாத்திரமல்ல விதிமுறைகளையும் சரியாகக் கடைப்பிடிக்கப் பழகிக்கொள்ளுங்கள். 

பெரியோர்களைவிட சிறார்களாகி நீங்கள் அவதானித்திருப்பீர்கள் இன்றளவில் விபத்துக்கள் எவ்வளவு அதிகரித்துள்ளன? நொடிக்குப் பல விபத்துக்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறு விபத்துக்கள் ஏன் அதிகரித்துள்ளன என உங்கள் சின்னஞ்சிறு சிந்தனைகளைப் பரப்பிப்பாருங்கள். மிகச் சிறிய விடயம்தான். அதற்கென்று இருக்கும் விதியை சரியான முறையில் கடைப்பிடிக்கவில்லை. அதாவது, வீதி ஒழுங்கைப் பேணவில்லை. 

சிறுவயது முதல் இந்த வீதி ஒழுங்குகளை நீங்கள் சரியாக கடைப்பிடியுங்கள். உங்கள் மூலமாக பெரியவர்களைத் திருத்துங்கள், தவறில்லை. (மேற்குறிப்பிட்டிருந்த நன்னெறிக் கதையில் மலைப்பாதையில் ஏற சிரமப்பட்ட பெரியவரை, சிறுமி திருத்தியது போன்று) சட்டங்களை மதித்து நடந்துகொள்ளுங்கள். பாதசாரிக் கடவையில்தான் வீதியைக் கடக்க வேண்டும் என்பது அதற்கென வகுக்கப்பட்ட விதிமுறை. அப்படியிருக்கும் போது பாதசாரிக் கடவையில் மட்டும் வீதியைக் கடவுங்கள். இது சின்ன விடயம் தானே என ஒதுக்கி விடாதீர்கள். 

கடுகு சிறிதானாலும் காரம் பெரிது 

எனவே, சின்னச் சின்ன விடயமாக இருந்தாலும் எதிலும் பிழைவிடாதீர்கள். இவ்வாறான சின்னச் சின்ன விடயங்களில் விடும் பிழைகள் தான் சமூகத்தில் தற்போது தலைதூக்க முடியாத பல்வேறு குற்றச்செயல்களுக்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்திருக்கின்றன. 

இன்று, சிறுவர் துஷ்பிரயோகம் சமூகத்தில் தலைவிரித்தாடுகின்றது. சிறார்களாகிய உங்களை அடித்தல், தீயால் சுடுதல், நஞ்சூட்டல், மூச்சுத்திணறலை ஏற்படுத்தல், புறக்கணித்தல், உணர்ச்சியை மதிக்காமை, சமூக தொடர்பைத் துண்டித்தல், அச்சுறுத்தல், பாலியல் உறவுக்கான தூண்டுதல் மற்றும் வற்புறுத்தல் என்பன சிறுவர் துஷ்பிரயோகங்கள் ஆகும். இந்த தீமைகளிலிருந்தும் உங்களை நீங்கள் பாதுகாக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாது உங்கள் வயது சிறார்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். 

ஏனேனில், எதிர்காலத்தை மாற்றியமைக்கப்போவது நீங்களே. ஆகவே, மனதாலும் உடலாலும் வலுவானவர்களாகத் திகழுங்கள். மனதால் வலுவானவர்களாகத் திகழ சூரியன் உதிப்பதற்கு முன்னரே நீங்கள் எழுந்திருங்கள். தியானம், மூச்சுப்பயிற்சி மற்றும் யோகாசனத்தால் மனதை ஒருநிலைப்படுத்துவது போன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைளை முன்னெடுங்கள். 

சரியான ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களைக் கடைப்பித்து உங்கள் சின்னஞ்சிறு உடலைப் பாதுகாத்துக்கொள்வதுடன் வலிமையானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் தற்போதுள்ள கொடிய சமூகத்திடமிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம். 

எனவே, இன்று முதலே சிறுவர்களாகிய நீங்கள் நல்லவற்றை இனங்கண்டு அவற்றை உள்வாங்கி, ஒரு நல்ல பிரஜையாக வாழுங்கள். இவ்வாறு இருக்கும் போது பெரியவர்களுக்கு முன்மாதிரியாக மட்டுமல்லாது எதிர்கால சமூகத்துக்கும் பாதுகாப்பு நிறைந்த வலுவான அத்திபாரமாகுங்கள்.

 

- See more at: http://www.tamilmirror.lk/155470/ஒழ-க-சர-வத-ச-ச-ற-வர-த-னம-#sthash.PxQmq9qL.dpuf
  • தொடங்கியவர்
சிறுவர்களையும், முதியவர்களையும் மதிக்கப் பழகிக் கொள்வோம்
சிறுவர்களையும், முதியவர்களையும் மதிக்கப் பழகிக் கொள்வோம்

உலகம் முழுவதிலும் ஒவ்வொருஆண்டும் வருகின்ற ஒக்ரோபர் முதலாம் நாள்  உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இன்றைய சிறுவர்களே நாளைய எதிர்காலச் சிற்பிகளாவர். அவர்களின் கைகளிலேயே உலகத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் தங்கியுள்ளது. இன்றைய சிறுவர்களே நாளைய உலகின் தலைவர்களாக மாறி இந்த உலகத்தின் இயக்கத்தை நிலை நிறுத்த வேண்டும்.

சிறுவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான கெளரவம் வழங்கப்பட வேண்டும். முதியோர்களும் கெளரவிக்கப்பட வேண்டும். முதியவர்களும் நன் மதிப்போடு பேணப்படல் வேண்டும். ஆனால் இன்றைய மனித சமுதாயமானது நாகரிகத்தின் விளிம்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் அதேவேளை, சிறுவர்களுக்கெதிராக மேற்கொள்ளுகின்ற வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும், முதி யோர்களை மதிக்காத சம்பவங் களும் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல் கின்றன.

மூன்றாம் உலக நாடுகளில் விபச்சாரம், சுரண்டல், உழைப்பு என்பன தனித்துவமான பிரச்சினைகளாக மாறிவிட்டன. இன்றைய நிலையில் வறுமை, பஞ்சம், பசி, பட்டினி போன்றவற்றுக்கு எதிராகப் பல மில்லியன் சிறுவர்கள் உலகடங்கலாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக மானது நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.  போர் முடிந்த பின்னர் சிறுவர்கள் மீதான அடக்கு முறைகள் தீவிரமாகியுள்ளன. இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகளவில் வடக்கு  கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இடம் பெறுவது மட்டுமன்றி, நாடளாவிய ரீதியில் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுள்ளது.

இலங்கையில் நடந்து முடிந்த போர்க் காலப்பகுதியில் மூவினத்தைச் சேர்ந்த சிறுவர்களும் பல்லாயிரக் கணக்கில் உயிரிழந்துள்ளனர். அவயவங்களை இழந்துள்ளனர்.

பெற்றோர்களை, உறவுகளை இழந்துள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்கள் வடக்கு  கிழக்குப் பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் இன்றும் உள்ளனர். வடக்கு - கிழக்கு மாகாணங்களில் சமூகத்தைச் சிந்திக்க விடாமல் சிந்தனைத் திறன்கள், எண்ணங்கள் என்பனவற்றை மழுங்கடித்து சிறுவர்களைச் சீரழிக்கின்ற சமூக விரோதக் கும்பல்கள் தோன்றியிருப்பதால் சிறுவர்களின் சுதந்திர நடமாட்டம் பாதிக்கப்பட்டு வருகின்றது.

1990ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு  அவ்வாண்டு முதல் தொடர்ந்து அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 2002 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச ரீதியில் முதியோர்களுக்கான செயற்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகின்றது.

21ஆம் நூற்றாண்டில் வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் மற்றும் வாய்ப்புக்களைக் கருத்தில் கொண்டும், அனைத்து வயதினரையும் முன்னிலைப்படுத்துகின்ற நோக்கிலும் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதொன்றாகும்.

முதியவர் என்பவர் யார்? முதியோர் என்பவர்கள் தாமாகப் பூமியில் தோன்றியவர்கள் இல்லை.  ஒரு தாயின் வயிற்றின் கருவிலே உருவாகி பச்சிளம் குழந்தையாகத் தவழ்ந்து, வளர்ந்து, பெரியவர்களாகி திருமணம் புரிந்து குழந்தைகளைப் பெற்று அவர்களை ஆளாக்கி உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்து முதுமையிலும் இன்ப, துன்பங்களை எண்ணி மகிழ்ச்சியும் கவலையும் அடைபவர்களே முதியவர்கள் ஆவர். சுக துக்கங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு தமது பிள்ளைகளுக்காகவே வாழ்பவர்கள் இவர்கள்.

இப்படிப்பட்ட முதியவர்களுக்கு கெளரவமும் மரியாதையும் வழங்குவது நமது கடமையாகும். முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் என்பன உலக முதியோர் தினத்தின் முக்கிய கொள்கைகளாகும்.

சிறுகுழந்தைப் பராயம் முதல் முதியோர் என்ற பெயர் கிடைக்கும் வரை மனிதனின் வாழ்வு நீண்டு அமைகின்றது. இன்றைய காலப்பகுதியில் முதியோர்களை மதிப்பது குறைந்து செல்கின்றது. முதியோர்கள் என்றால் வேண்டா வெறுப்பாகவே கணிக்கப்படுகின்றனர். இவர்களைப் பராமரிப்பதே பெரும் சுமை எனப் பிள்ளைகள் கருதுகின்றனர். தங்களது சுதந்திரமான வாழ்வுக்கு இவர்கள் ஏதோ ஒரு விதத்தில் தடைபோடுவதாக எண்ணுகின்றனர்.

இதனால் அவர்களைப் புறக்கணித்து நடத்துகின்றனர். இறக்கும் தறுவாயில்கூட பிள்ளைகள் அவர்களின் மனதைக் காயப்படுத்துகின்றனர்.இதன் காரணமாகவோ என்னவோ முதியோர் இல்லங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. சில குடும்பங்களில் முதியோர்கள் தனித்து விடப்பட்டு, அநாதையாக்கப்படுகின்றனர். இந்த நிலை மாறவேண்டும்.

முதியோர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களை ஒதுக்கி வைக்கின்ற மனப்பாங்கு மாறவேண்டும். நாமும் சில ஆண்டுகள் செல்ல முதியவராக மாறுவோம் என்ற உணர்வு எம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

நாட்டில், சில கிராமங்களில் தொண்ணூறு வயதில் இருந்து நூறு வயதைத் தாண்டிய முதியோர்கள் இன்றும் தேகாரோக்கியத்தோடு வாழ்கின்றனர். உறவினர்களால் மதிக்கப்படுகின்றனர். இது ஒரு சில குடும்பங்களிலேதான் காணப்படுகின்றது.
சமூகத்தில் முதியவர்களை மதித்து நடக்க வேண்டும் .  அவர்களைப் போற்றி நடப்போம்.

http://onlineuthayan.com/article/44

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.