Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
புதைகுழி தோண்டும் போட்டி
 

மயா­னங்­களில் புதைகுழி தோண்டும் போட்­டி­யொன்று ஹங்­கே­ரியில் அண்­மையில் நடை­பெற்­றது. ஹங்­கே­ரியின் கிழக்குப் பிராந்­திய நக­ரான டெப்­ரீனில் நடை­பெற்ற இப்­ போட்­டியில் தலா இரு­வரைக் கொண்ட 18 அணிகள் பங்­கு­பற்­றின.


17210d2.jpg

 

புதை­கு­ழி­களை வேக­மாக தோண்­டு­வ­தற்கு மாத்­தி­ர­மல்­லாமல், புதை­கு­ழியின் தோற்­றத்­துக்கும் புள்­ளிகள் வழங்­கப்­பட்­டன.


ஹங்­கேரி கல்­லறைப் பரா­ம­ரிப்­பா­ளர்கள் சங்­கத்­தினால் இப்­போட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

 

புதை­குழி தோண்டும் தொழி­லுக்கு மதிப்­ப­ளிப்­ப­தையும் இத்­ தொ­ழி­லுக்கு அதி­க­மா­ன­வர்­களை ஈர்ப்­ப­தையும் நோக்­க­மாகக் கொண்டு இப்­போட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்­ட­தாக ஏற்­பாட்டுக் குழு பிர­தி­நிதி ஐரென் கெரி தெரி­வித்தார்.  


17210d3.jpg

 

ஒவ்­வொரு புதை குழியும்  2 மீற்றர் (6அடி 6 அங்­குலம்) நீளத்­தையும் 1 மீற்றர் அக­லத்­தையும் 0.8 மீற்றர் ஆழத்­தையும் கொண்­டி­ருக்க வேண் டும் என அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

 

எனினும், போட்­டி­யா­ளர்கள் அனை­வரும் ஒரே முறை­மையைப் பயன்­ப­டுத்­த­வில்லை. அவர்கள் பல்­வேறு உபா­யங்­களைப் பயன்­ப­டுத்தி புதை­கு­ழி­களைத் தோண்­டினர்.


17210d1.jpg

 

இப்­ போட்­டியல் முத­லிடம் பெற்ற லெஸ்லோ டோத் மற்றும் ஜனோஸ் ரெக்ஸ் ஆகியோர், இவ் ­வ­ருட இறு­தியில் ஸ்லோவாக்­கியா நாட்டில் நடை­பெ­ற­வுள்ள பிராந்திய நாடுகளின் பிரநிதிகளுக் கிடையிலான புதைகுழி தோண்டும் போட்டி யில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஜூன் 9: இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, புதுவை ஆளுநர் கிரண் பேடி பிறந்த தின பகிர்வு

13344696_1153186434740145_30422633774218

 

கிரண் பேடி என்கிற பெயரை சொல்கிற பொழுதே ஒரு கம்பீரம் நமக்குள்ளும் தொற்றிக்கொள்ளும். இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஆன அவரின் வாழ்க்கை அத்தனை சுவாரசியமானது. பெண்ணால் எதுவும் முடியும் என்று காண்பிக்கும் வாழ்க்கை அவருடையது.

நான்கு பெண் பிள்ளைகளில் ஒருவராக பிறந்த கிரண் பேடியை பெற்றோர் நம்பிக்கை மற்றும் தைரியம் மிகுந்தவராகவே வளர்த்தார்கள். கல்வி மற்றும் டென்னிஸ் இரண்டிலும் அளவில்லாத ஆர்வம் கொண்டவராக திகழ்ந்த இவர் ஆசிய சாம்பியன் ஆகியும் சாதித்துக்காண்பித்தார். போலீஸ் துறைக்குள் பெண்கள் நுழைய உள்துறை அமைச்சகம் விடாது என்கிற மாயையை தான் தனித்து நிற்பேன் என்கிற குறிக்கோளின் மூலம் உடைத்து போலீஸ் அதிகாரி ஆனார்.

ஒற்றை ஆளாக கலவரம் செய்ய வந்த கும்பலை அவர் விரட்டி அடித்தது ஜனாதிபதி விருதை பெற்றுத்தந்தது. ஆசிய விளையாட்டுப்போட்டிகளின் பொழுது டெல்லி போக்குவரத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த இவர் அதை கச்சிதமாக செய்தார். பிரதமரின் கார் விதிமுறைகளை மீறிய பொழுது அதையும் நிறுத்தி கையகப்படுத்தி கிரேன் பேடி என்று பெயர் பெற்றார்.

பயங்கரமான ஆட்கள் நிறைந்த இடமாக கருதப்படும் திஹார் சிறையின் தலைமைப்பொறுப்பு இவர் வசம் வந்த பொழுது முடிந்தார் இவர் என்றே அனைவரும் எண்ணினார்கள். குற்றவாளிகளை மனிதர்களாக பார்த்தார் இவர். அங்கே பத்து சதவிகிதம் பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருந்தவர்கள் என்பதையும் கவனித்தார். அவர்களுக்கு என்று ஜனநாயக பிரிவுகளை உருவாக்கினார். யோகா,போதை பழக்கத்தில் இருந்து விடுதலை,விளையாட,கல்வி கற்க ,உற்சாகமாக செயலாற்ற உதவிகள் எல்லாமும் செய்தார். சிறைக்குளே வங்கியும் துவங்கி கைதிகளை ஊக்குவித்தார். டெல்லியின் மாவட்டங்களில் பொறுப்பில் இருந்த பொழுது நீல மற்றும் வெள்ளை அறைகளை அமைத்து மக்களின் குறைகளை கேட்டு தீர்க்கும் நடவடிக்கைகளையும் எடுத்தார் அவர். தற்போது புதுவை ஆளுநரகாவும் செயல்பட்டு வருகிறார்.

அவர் அரசியலில் சேர்ந்ததை தாண்டி 'நான் துணிந்தவள்' என்று தலைப்பிடப்பட்ட அவரின் சுயசரிதை எல்லாரும் வாசிக்க வேண்டிய ஒன்று. துணிந்து, நிமிர்ந்து நின்று வானைத்தொட முயலும் எல்லா பெண்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் கிரண் பேடி ஒரு முன்மாதிரியே.

  • தொடங்கியவர்

உங்கள் குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் திறனை வெளிக் கொணர்வது எப்படி?

KKarthikeyan35.JPG


வ்வொரு குழந்தையிடமும் நிச்சயம் ஏதோ ஒரு திறமை ஒளிந்து கிடக்கும். அதனைக் கண்டறிந்து வளர்த்தெடுத்தால் மட்டுமே, அந்தத் திறமை மேம்பட்டு வளர்ச்சியடையும். குழந்தைகளின் திறன்களை எப்படி கண்டறிந்து,  அதனை வளர்த்தெடுப்பது என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல வல்லுநர் சித்ரா அரவிந்திடம் பேசினோம்.

"இதில் பெற்றோர்களின் பங்கே அதிகம். குழந்தைகளை உன்னிப்பாக கவனியுங்கள். எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக் கொள்வது,  முதல் மார்க் எடுப்பது, நடனம் ஆடுவது என வெளியில் தெரிவது மட்டும் குழந்தையின் திறமை அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒரு வகுப்பறையில் 60 குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால் விளையாட்டில், படிப்பில், இசையில் திறன் மிகுந்தவர்கள்  வெறும் 10 குழந்தைகளாகத்தான் இருப்பார்கள். 'அப்போ மத்த குழந்தைங்க திறன் இல்லாதவங்களா...?' என்று நீங்களாக அனுமானம் செய்து கொள்ள வேண்டாம்.

மீதம் இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள்,  தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் செய்வதை 'அப்படி செய்யாத, சத்தம் போடத, அமைதியா வெளையாடு" என்று அடக்குவதை விட்டு ,அவர்கள் போக்கில் சென்று கவனியுங்கள். குழந்தைகளுடன் பேசும்போது அவர்களின் ஆர்வம் எதைப் பற்றியதாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சில குழந்தைகள் பெற்றோரிடம் பேசுவதை விட, அவர்களுடைய‌ நண்பர்களிடம்தான் அதிகம் பேசுவார்கள். அப்போது அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்பதையும் கவனியுங்கள். " என்றவர்,  அந்த திறன்களை எப்படி வளார்த்தெடுப்பது என்பதைப் பற்றியும் சொன்னார்.

"உங்கள் குழந்தையின் குரல் பேசும் போது நன்றாக இருந்தால் உங்கள் மொபைலில் ரெக்கார்ட் செய்யுங்கள். அப்போதும் நன்றாக இருந்தால் 'உன்னை பாட்டு கிளாஸ்ல சேர்த்து விடவா செல்லம்? உன் வாய்ஸ் நல்லா இருக்கு... பாட்டு கத்துக்கிடுறியா? என்று கேளுங்கள். அவர்கள் சம்மதத்துடன் குழந்தையை பாட்டு கிளாஸில் சேர்த்து விடுங்கள்.


DSCF3639-2.jpg


சில குழந்தைகள்,  பிறவியிலேயே நன்கு வளையும் உடல் அமைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களை ஜிம்னாஸ்டிக், நடனம் போன்றவற்றில் சேர்த்து விடலாம். சிறு வயதிலேயே கோர்வையாக பேசத் தெரிந்த குழந்தைகளை, பேச்சுப் போட்டியில் சேரச் சொல்லி ஊக்கப்படுத்தலாம். சிலர் டயம் சரியாக பார்ப்பது,  வாய்ப்பாட்டை சரியாக நினைவில் கொள்வது என்று கணிதத்தில் சற்று கெட்டியாக இருப்பார்கள். அவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி, சின்னச் சின்ன வாய்ப்பாட்டு கணக்கில் ஆரம்பித்து, தொடர்ந்து கணிதத்தில் ப‌யிற்சி கொடுங்கள். 

சில குழந்தைகள் லாஜிக்கலாக கோர்வையாக யோசிப்பது, வரையும் திறமை, ஒரு விஷயத்தை 3 கோணத்தில் யோசித்துப் பார்க்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் ஆர்ட்டிஸ்ட் ஆக, ஆர்கிடெக்சராக வருவார்கள்.  எளிதில் எல்லோருடனும் பழகும் குழந்தைகள்,  தலைமைப் பண்பு மிக்கவர்களாக வருவார்கள். ஒரு பேட்டரியை எடுத்து அதை பிரித்து அலசி ஆராய்ந்து ஓட வைக்கும் திறன் கொண்டவர்களுக்கு சயின்டிஸ்ட் அல்லது ஆராய்ச்சி பணிகளுக்கு சரியானவர்களாக இருப்பார்கள்.

chitra.jpg



மேலே சொன்ன அத்தனையும் நடக்க, பெற்றோர்களின் தொடர் ஊக்கம், அவை பிரஷர் தருபவையாக இல்லாமல் இருந்தால் நிச்சயம் உங்கள் குழந்தைகளின் திறமைகள் பிரகாசமாக வெளிவரும். 'என் பையனுக்கு ஆர்கிடெக்சரில் திறமை இருக்கு...' என்று, அதில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு மட்டும் கொடுங்கள். அதைவிடுத்து அதையே நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். சிறு வயது ஆசைகள் வளர்ந்த பிறகும் தொடரலாம் அல்லது  புதியதாக‌ ஒரு ஆசை தோன்றக்கூடும். அதிகமான நம்பிக்கைகள் மற்றும் ஆசைகளை பெற்றோர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

உங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்காதீர்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் போக்கில் நீங்கள் செல்ல முடியும். அவர்களையே குறிக்கோளை உருவாக்கச் சொல்லி, அதில் பயணிக்க சொல்லுங்கள். எனவே உங்கள் ஊக்கங்களையும், உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளையும் தொடர்ந்து கவனியுங்கள். நிச்சயம் உங்கள் குழந்தை ஜொலிப்பார்கள்.

vikatan

  • தொடங்கியவர்

13415380_1059463390769021_81368137117026

அவுஸ்திரேலியாவின் முன்னாள் சகலதுறை கிரிக்கெட் வீரர் அன்ட்ரூ சைமண்ட்சின் பிறந்த தினம் இன்று.
Happy Birthday Andrew Symonds

 
  • தொடங்கியவர்

சுவர்போல காட்சியளிக்கும் இந்த செல்போன்கள் எல்லாமே நிஜமானவை. ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் 10 வருடங்களாக நடத்திவரும் ஒரு செல்போன் கடையின் உரிமையாளர், வாடிக்கையாளர்களைக் கவர இப்படி ஆயிரக்கணக்கான செல்போன்களைத் தொங்கவிட்டிருக்கிறார்.

13330911_728164717286073_434388562298072

  • கருத்துக்கள உறவுகள்

Afficher l'image d'origine

100 வது பக்கத்தில் ஆறாக ஓடும் நவீனனுக்கு வாழ்த்துக்கள்....!

 

  • தொடங்கியவர்

'' 'என் ரத்தத்தின் ரத்தமே’ என்கிற புகழ்பெற்ற வரியை எம்.ஜி.ஆர். எதற்காகச் சொன்னார்?''

13428006_1153186781406777_22043576930967

 

''எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு, குண்டு அடிபட்ட எம்.ஜி.ஆர். குற்றுயிராகப் படுக்கை யில் உயிருக்காகப் போராடினார். அவர்பால் அளப்பரிய பாசம்கொண்ட ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் ரத்தம் கொடுக்கத் தங்கள் பெயரைப் பதிவுசெய்தார்கள். ஆனாலும், அவருக்குப் பொருந்திய சிலரின் ரத்தம் ஏற்கப்பட்டது. தனக்குப் புத்துயிர் தந்த தொண்டர்களை மேடைதோறும் தவறாமல் பேச்சின் துவக்கத்திலேயே அப்படி அழைப்பார். கரவொலி விண்ணைப் பிளக்கும்!''

vikatan

  • தொடங்கியவர்

13391537_1059464517435575_89065289998688

ஹொலிவூட்டின் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஜொனி டெப்பின் பிறந்தநாள்.
Happy Birthday Johnny Depp

 
  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு- 3: ஒரே தேசிய கீதமான இரு பாடல்கள்!

 

 
  • லேங்கன் ஹோவர்
    லேங்கன் ஹோவர்
  • காந்தி
    காந்தி
  • நெல்சன் மண்டேலா
    நெல்சன் மண்டேலா

‘இந்தக் காலத்துலயும் இப்படியா?''- வியப்புடன் அல்ல; வேதனையுடன் வினவியது உலகம். வரலாற்றில் சிறப்பு பெற்ற அந்த நாட்டில், அப்படி என்ன சிறப்பு?

மனிதன் - மகாத்மா!

ஒரு மனிதரை மகாத்மாவாக மாற்றி மனித குல வரலாற்றில் ஒரு இனிய புதிய அத்தியாயம் உருவாக அடித்தளம் இட்ட நாடு அது. ‘எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் என்னைச் சிறையில் போடுங்கள்; எனது போராட்டத்தின் வடிவம் மாறாது; பாதை தவறாது'. மனஉறுதியுடன் நின்று வென்று காட்டிய அதிசயத் தலைவரைக் கொண்ட நாடு. அது தென்னாப்பிரிக்கா.

தனிமை

நிற வெறி கோர தாண்டவம் ஆடியது; பிற உலக நாடுகள் தென்னாப்பிரிக்காவை வெறுத்து ஒதுக்கின; சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் எதிலும் கலந்துகொள்ள முடியாத சூழல். தனிமைப்பட்டுக் கிடந்தது அந்த தேசம். ஆனாலும், வெள்ளைக்காரர்கள் மனம் மாறுவதாக இல்லை.

‘உடல் மட்டுமே கறுப்பு; ரத்தம் என்றும் சிவப்பு'. இது மிகவும் சாதாரண உண்மை. இதைப் புரிந்துகொள்ள மறுத்தனர் வெள்ளையர்கள்.

போராட்டம்

வக்கீல் தொழிலுக்காகத் தென்னாப்பிரிக்கா சென்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, இந்தப் பிழையைத் திருத்தப் போராடினார். போராட்டம் சற்று பிசகினாலும் உணர்ச்சிகள் வெடித்து கலவரமாகும் நிலையும் இருந்தது. மிகப் பொறுமையாக, பொறுப்போடு போராட்டம் வடிவமைக்கப்பட்டது.

தலைவன்

அந்த மண்ணில் இருந்தே புறப்பட்டார் ஒரு தலைவர். அவர்தான் நெல்சன் மண்டேலா. காந்திய வழியில் சற்றும் அசராமல் அங்குலம் அங்குலமாக, தம் மக்களை இலக்கை நோக்கி கூட்டிச் சென்றார். நீண்ட நெடிய இந்தப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது. நிறப் பாகுபாட்டிலிருந்து மீண்டது தென்னாப்பிரிக்கா.

வந்தது பாட்டு

'இனி நாம் ஒருவரே' என்பதை ஊருக்குத் தெரியப்படுத்த, உலகுக்குப் பிரகடனப்படுத்த, தேசிய கீதம் வேண்டும் என்று நினைத்தார்கள்! நிறத்தால் சிதறிக் கிடந்த நாட்டில், மக்களால் பேசப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் மட்டும் பதினொன்று! இவற்றில் ஐந்து, மிகப் பரவலாகப் பேசப்பட்டவை.

ஒரே தேசிய கீதம்தான் சாத்தியம். மக்கள் பேசும் மொழிகளே குறைந்தபட்சம் ஐந்துதான். என்ன செய்ய முடியும்? இருந்தாலும் உலகுக்கு வழி காட்டியது தென் ஆப்ரிக்கா. ஐந்து மொழிகளைக் கொண்ட கீதம் உருவானது.

எல்லார்க்கும் பொது

சோசா, ஜுலு, செசோதோ, ஆப்ரிகன்ஸ், ஆங்கிலம் என ஒவ்வொரு மொழியில் இருந்தும் சில வரிகள் எடுக்கப்பட்டன. பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதத்தை உருவாக்கினால் என்ன? ஊஹூம். எழுத வேண்டிய தேவையே இல்லை. ஏறத்தாழ அப்படி ஒரு பாடல் ஏற்கெனவே இருந்தது. 1897-ல், கிறிஸ்த மத போதகர் எனாக் மன்காய் சான்டோங்கா இயற்றிய பாடல் அது. ‘ஆண்டவன் ஆப்பிரிக்காவை ஆசிர்வதிக்கட்டும்' எனத் தொடங்கும் அந்தப் பாடல், பள்ளிக்கூடப் பாடலாக இயற்றப்பட்டது. பிறகு அந்த நாட்டு தேவாலயங்களில் பிரபலம் ஆனது.

1925-ல் இது, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் அதிகாரபூர்வ பாடலாக மாறியது. நிற வெறிக்கு எதிராகக் குரல் கொடுத்த மக்கள் இந்தப் பாடலைத்தான் ஒரே குரலில் பாடிக்கொண்டு இருந்தார்கள். மக்கள் பேசும் நான்கு பிரதான உள்ளூர் மொழிகளில் உருவாக்கப்பட்டிருந்தது இந்தப் பாடல். (மொழி மாற்றப்பட்ட இப்பாடல் இன்று தான்சானியா, ஜாம்பியா நாடுகளின் தேசிய கீதமாகவும் இருக்கிறது)

இணைந்த கீதம்

இதேபோல ‘தென்னாப்பிரிக்காவின் குரல்' என்ற ஆங்கிலப் பாடலும் பிரபலமானது. தென்னாப்ரிக்காவின் தலைசிறந்த இலக்கியவாதியான லேங்கன்ஹோவர் 1918-ல் இயற்றிய பாடல் இது. 1921-ல் மார்ட்டின் லினியஸ் டி வில்லியர்ஸ் இசை அமைத்தார்.

நிறவெறியிலிருந்து மீண்டு புத்துணர்ச்சியுடன் வந்த நாட்டுக்கான தேசிய கீதம் எப்படி இருந்தால் பொருத்தமாக இருக்குமோ, அதற்கு முற்றிலும் பொருந்தி வந்தது. இரண்டு கீதங்களையும் இணைத்து தேசிய கீதம் உருவாக்கப்பட்டது. என்ன சொல்கிறது தென் ஆப்ரிக்காவின் தேசிய கீதம்?

இப்படி ஒலிக்கும்

(1. சோசா; 2. ஜூலு 3. செசோதொ 4. ஆஃப்ரிகன்ஸ் 5. ஆங்கிலம்.)

1. கோஸி சிக லேல் ஈ ஆஃப்ரிகா...

மலுஃபகனி ஸ்வூ ஹொன்டுல் வா...யோ..

2. இஸ்வா இமி தன்டா ஸோ.. யது...

கோஸி சிக லேலா தினா லூஸாஃபோல் வா...யோ...

3. மொரானா புலூகா சட்ஜபா ஸா.. ஹேஸு....

ஓ ஃபெடிஸே டின்ட்வாலே மாட்ஸ்வன்யா ஹே...

ஓஸே புலூகே ஓசா புலூகே ஸெட்ஜ் ஹாபாஸா ஹே... .

..ஸி

ஜாபாஸா ஸௌத் ஆஃப்ரிகா... ஸௌத் ஆஃப்ரிகா...

4. வூ தை ப்ளோ.. ஃபான் ஒன்ஸே ஹே... மல்

வூ தை டைப்தே ஃபான் ஊன்... ஸே...

ஊருன் ஸேவிஜே ஜேபர்ட்கஸ்

வாரி தை க்ரான்ஸே ஆன்ட்வூட் ஜே...

5. ஸௌண்ட்ஸ் தி கால் டு கம் டுகதர்

அண்ட் யுனைடட் வி ஷெல் ஸ்டேண்ட்

லெட் அஸ் லிவ் அண்ட் ஸ்ட்ரைவ் ஃபார் ஃப்ரீ.....டம்

இன் ஸௌத் ஆஃப்ரிகா.. அவர் லேண்ட்.

தமிழாக்கம்

1. ஆண்டவன் ஆப்ரிக்காவை ஆசிர்வதிக்கட்டும்.

அதன் பெருமை உயரட்டும்.

2. எமது பிரார்த்தனையைக் கேட்கட்டும்.

இதன் (ஆப்ரிக்காவின்) குடும்பம் நாங்கள்;

இறைவா எங்களை ஆசிர்வதியுங்கள்.

3. இறைவா எங்கள் தேசத்தை ஆசிர்வதியுங்கள்;

யுத்தங்களையும் வேதனைகளையும் நிறுத்துங்கள்;

இதனைக் காக்கவும்; எங்கள் தேசத்தைக் காக்கவும்.

இந்த தேசம் - தென் ஆப்ரிக்கா.. தென் ஆப்ரிக்கா.

4. எங்கள் நீல வானில் இருந்து

எங்கள் கடலின் ஆழத்தில் இருந்து

என்றும் நிற்கும் மலைகளின் மீதிருந்து

உயர்ந்த பாறைகளில் மோதி எதிரொலிக்கும்

5. ஒன்றாய்ச் சேர்ந்து வர (வாழ) அழைப்பு ஒலிக்கிறது.

(ஆம்) கூடி வாழ்ந்து (நிலையாய்) நிற்போம்.

சுதந்திரத்துக்காக போராடுவோம்; (சுதந்திரமாய்) வாழ்வோம்.

நமது பூமி - தென்னாப்பிரிக்காவில்.

இசைக் கோவையில் இந்த கீதத்தைக் கேட்டுப் பார்த்தல் அவ்வளவு இனிமையாக இருக்கும்.

(கீதங்கள் ஒலிக்கும்)

tamil.thehindu

  • தொடங்கியவர்

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

 

p38b.jpg

ல் துலக்குவது எங்களுக்குத் தெரியாதா? பிரஷ்ல பேஸ்ட்டை எடுத்துவெச்சு விறுவிறுனு தேய்க்கணும். இல்லை, மேலும் கீழும் தேய்க்கணும். அப்படி இல்லீங்க, வேகமா தேய்ப்பது தவறானது, ரொம்ப மெதுவாதான் பல்லைத் தேய்க்கணும். ‘பல் துலக்குதல்’னு பாடம் எடுக்கிறவங்க இப்படி ஆளுக்கொரு ஐடியாவைச் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ஆனா, மருத்துவ முறைப்படி ‘பல் தேய்ப்பது இப்படித்தான்’ என்பதைச் சொல்லிக் கொடுக்கவே இருக்கிறது, ‘டீத் பிரஷ்ஷிங்’ என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன். அப்புறமென்ன, பிரஷ்ஷை எடுத்து பேஸ்ட்டை வைங்க!

p38a.jpg

அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்தால் போதும். எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும், எப்படிப் பல் துலக்க வேண்டும், மேல், கீழ், இடது, வலது... என அத்தனைப் பகுதிகளுக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை ‘லைவ்’ பாடமாகவே நடத்தும். அப்ளிகேஷனைப் பார்த்துக்கொண்டே பல் துலக்க வேண்டியது மட்டும்தான் நம்முடைய வேலை. பாத்திரம் துலக்குவதுபோல பல்லில் பிரஷ்ஷை வைத்து ஒரே நேரத்தில் நான்கு பக்கமும் கம்பு சுத்தாமல், ஒவ்வொரு பகுதிக்கும் இவ்வளவு நேரம் ஒதுக்கணும், ஒரு பகுதியில் இருந்து அடுத்த பகுதிக்கு பிரஷ்ஷை மாற்ற வேண்டிய நேரம், அந்தப் பகுதியில் எவ்வளவு நேரம் தேய்க்க வேண்டும் என்கிற கணக்குகள் எல்லாம் அப்ளிகேஷனில் ஓடிக்கொண்டே இருக்கும். செய்முறை விளக்கம் வீடியோ வழியாக மட்டுமல்ல. குரல், எழுத்துகள் வழியாகவும் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும். 

p38c.jpg

இன்னும் ஏராளமான பயன்பாடுகள் இதில் உண்டு. குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அவர்களுக்கென தனித்தனி புரொஃபைல்களை உருவாக்கிக்கொள்ளலாம். தினமும் சரியாகப் பல் துலக்கினோமா என்பதைத் தெரிந்துகொள்ள ‘ஸ்கோர்’ வசதி உண்டு. ஏன்? பயன்படுத்திக்கொண்டிருக்கும் டூத்-பிரஷ்ஷை மாற்ற வேண்டிய நாள், பல் மருத்துவரைப் பார்க்க வேண்டிய காலம் எனப் பல்வேறு வசதிகளை நமக்குக் கொடுக்கிறது இந்த ‘டீத் பிரஷ்ஷிங்’. சுருக்கமா சொன்னா, பயன்படுத்துகிற டூத்பேஸ்ட்டுல உப்பு, எலுமிச்சை இருக்கானு பார்க்கிறது முக்கியமில்லை. ஒழுங்கா பல் துலக்கணும்!

 

https://play.google.com/store/apps/details?id=pack.ToothBrushingCoach

vikatan

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் மூன்று ரெஸ்டாரன்ட்டுகள்...

- அசத்தும் சென்னைப் பெண்! பிசினஸ்

 

‘ஒரு நாளைக்கு ஏன் 24 மணி நேரம் மட்டும்..?’ - கேட்கிறார் பரபரப்பாக இயங்கும் சுஜாதா நாராயணன். மூன்று ரெஸ்டாரன்ட்டுகள், ரியல் எஸ்டேட் பிசினஸ், வீடு என்று சுஜாதா சுழன்றுகொண்டிருப்பது, அமெரிக்காவில். அமெரிக்காவின் கோலராடோ மாநிலத்தில் உள்ள டென்வெரில் வசிக்கும் இந்த தமிழ்ப் பெண்ணின் ‘ஜெய் ஹோ’, அதன் கிளை, மற்றும் ‘கசானா’ இந்திய உணவகங்கள் அங்கு பிரபலம்.

p24a.jpg

“நான் பக்கா சென்னைப் பொண்ணு. பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்கேதான். அண்ணா ஆதர்ஷில் பள்ளிப் படிப்பு முடிச்சுட்டு, எத்திராஜ்  காலேஜ்ல நியூட்ரிஷன் மற்றும் டயடிக்ஸ் படிச்சேன். அப்புறம் எம்.பி.ஏ முடிச்சுட்டு, சிட்டி பேங்கில் வேலைபார்த்தேன். திருமணத்துக்கு அப்புறம் கணவர் சத்யா கூட கனடா பயணம். அங்க அஞ்சு வருஷம் வாசம். கனடா கிட்டத்தட்ட ஒரு குட்டி இந்தியாதான். இந்தியர்களும் இந்திய உணவுகங்களும் அங்க ஏராளமா இருக்கும்.

2004-ல் அமெரிக்காவில் உள்ள டென்வருக்கு வந்தோம். இங்க இந்திய உணவகங்கள் எதுவும் பெருசா இல்லை. வடஇந்திய உணவுகளான சிக்கன் டிக்கா மற்றும் சில உணவுகள்தான் மொத்த இந்தியாவின் உணவுனு சொல்லி விற்கப்பட்டன. இந்திய உணவுக்கான தேடலும், எம்.பி.ஏ அனுபவமும் ‘ஜெய் ஹோ’ இந்தியன் ரெஸ்டாரன்ட்டை அமெரிக்காவில் தொடங்க உந்துதலா இருந்தது. ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியின் டைரக்டரா வேலைபார்க்கும் கணவரும் நானும் சேர்ந்து முதலீடு செஞ்சு, 2010-ல் ‘ஜெய் ஹோ’வை தொடங்கினோம்!’’

- சென்னையின் பள்ளி மாணவியில் இருந்து அமெரிக்காவில் பிசினஸ் உமன் ஆனது வரையிலான தன் பயணத்தை ஸ்வீட் அண்ட் ஷார்ட்டாகச் சொன்னார் சுஜாதா.

p24b.jpg

‘‘சராசரி இந்திய உணவகங்கள் போல இல்லாமல், வட இந்திய நாண், பனீர் பட்டர் மசாலாவைத் தாண்டி அருமையான இந்திய உணவுகள் எத்தனை எத்தனை இருக்கு என்பதை டென்வர் மக்களுக்கு ‘ஜெய் ஹோ’வில் அறிமுகம் செய்தோம். குறிப்பா, நம்ம ஊரு கொத்து பரோட்டா, செட்டிநாடு மீன் குழம்பு, ஆந்திரா கோங்குரா மட்டன், கேரளத்து இறால் வறுவல், தொக்குனு எங்க ரெஸ்டாரன்ட்டில் சாப்பிட்டுத் திரும்பும்போது, இந்தியாவுக்கே போய் திரும்பின மாதிரி இருக்குனு கஸ்டமர்கள்கிட்ட இருந்து ஃபீட்பேக் வாங்கினதுதான், எங்க உணவகத்தின் தனித்துவமான சிறப்பு.

டென்வரிலேயே, போல்டர் என்ற இடத்தில் ‘ஜெய் ஹோ’வின் கிளையை 2011-ல் தொடங்கினோம். அதுக்கும் அமோக வரவேற்புதான். அந்த உற்சாகத்தில் அதிகம் தாமதிக்காம 2013-ல் ‘கசானா’ என்ற மற்றொரு உணவகத்தை ஆரம்பிச்சோம்!’’ - புன்னகைக்கும் சுஜாதாவின் மூன்று உணவகங்களும், கோலராடோவில் சக்கைப்போடு போடு கின்றனவாம்.

p24c.jpg

2012, 2013 வருடத்தில் டென்வரின் சிறந்த உணவகங்கள் பட்டியலில் ‘ஜெய் ஹோ’ இடம்பெற்றது, கோலராடோவின் சிறந்த 100 உணவுகளின் பட்டியலில் இவர்கள் உணவகத்தின் ‘சில்லி கோபி’ இடம் பெற்றது என சாதனைகளை சந்தித்து வருகிறார் சுஜாதா. தன் ரியல் எஸ்டேட் முகம் பற்றி தொடர்ந்து பகிர்ந்த சுஜாதா...

‘‘உணவகங்கள் தொடங்குறதுக்கு முன்பிருந்தே ரியஸ் எஸ்டேட் துறையில் வேலை செஞ்சுட்டு வர்றேன். டென்வரில் உள்ள பிரபலமான ரியல்டர்களில் நானும் ஒருத்தி.

இந்தப் பொறுப்புகளோட பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் சஹானா, ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் சாராண்ஷ், கணவர், வீடுனு நான் ஒரு பெஸ்ட் ஹோம்மேக்கரும்கூட. வீட்டு வேலைகளுக்கு இந்தியாபோல இங்க ஆளெல்லாம் வெச்சுக்கிறது கஷ்டம். சமையலில் இருந்து வீடு பராமரிப்புவரை எல்லாம் நான்தான் பார்த்துக்கணும்.

p24d.jpg

காலையில் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, ரியல் எஸ்டேட் வேலைகளை முடிச்சுட்டு, 11 மணிக்கு ரெஸ்டாரன்ட்டுக்குப் போவேன். உணவகங்களில் 25-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தாலும்,  என்னோட நேரடி மேற்பார்வை இருக்கணும்னு நினைப்பேன். உணவகத்தில் இருந்து வந்ததும் ரியல் எஸ்டேட் க்ளையன்ட்ஸுக்கு வீடு காண்பிக்கக் கிளம்புவேன். இரவு வீடு திரும்பி, குழந்தைகள் ஹோம்வொர்க், டின்னர்னு பொழுது முடியும். சொந்த தொழில் என்பதால, நேரத்தை அட்ஜஸ்ட் செய்துக்கலாம் என்பது கொஞ்சம் வசதியா இருக்கும். இருந்தாலும், ‘ஒரு நாளைக்கு 24 மணி நேரம் மட்டும்தானா..?’னு பரபரப்பா இருக்கும்.

வீட்டு வேலை, நேரமில்லைனு ஆயிரம் சாக்குபோக்குகள் இருக்கும்தான். ஆனா, நேரத்தை கொஞ்சம் சரியா திட்டமிட்டா உலகத்தை வெல்லலாம்!’’ என்று உறுதியாகக் கூறுகிறார் சுஜாதா.

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

ஜுன் - 10

 

1786 : சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் மண்சரிவினால் அணைக்கட்டொன்று உடைந்ததால் சுமார் 100,000 பேர் உயிரிழந்தனர்.

 

7452843_001-a.jpg1829 : இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் வருடாந்த படகோட்டப் போட்டி ஆரம்பமாகியது.

 

1886 : நியூஸிலாந்தின் தரவேரா எரிமலை வெடித்ததால் 153 பேர் உயிரிழந்தனர்.

 

1898 : அமெரிக்க கடற்படையினர் கியூபாவில் தரையிறங்கினர்.

 

1916 : ஒட்டோமான் இராஜ்ஜியத்துக்கு எதிராக அரேபியர்களின் கிளர்ச்சி ஆரம்பமாகியது.

 

1935 : பொலிவியா, பரகுவே நாடுகளுக்கிடையில் 3 வருடங்க­ளாக நடைபெற்ற யுத்தம் முடிவுற்றது.

 

1940 : ஜேர்மனியிடம் நோர்வே சரணடைந்தது.

 

1940 : பிரிட்டன் மற்றும் பிரான்ஸுக்கு எதிராக இத்தாலி யுத்தப் பிரகடனம் செய்தது.

 

1944 : பிரான்ஸின் கிராமமொன்றில்  ஜேர்மன் படையினரால் 642 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

 

1967 : இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்தத்துக்கு இணங்கியதால் 6 நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.

 

1980 : ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் நெல்சன் மண்டேலா போராட்டத்துக்கான அழைப்பை சிறையிலிருந்து விடுத்துள்ளதாக தென் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அறிவித்தது.

 

1990 : ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்தது. 2 ஆவது ஈழ யுத்தம் ஆரம்பமாகியது.

 

1996 : வட அயர்லாந்தில் சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது.

 

1999 : கொசோவோவிலிருந்து சேர்பிய படைகளை வாபஸ் பெறுவதற்கு ஸ்லோபோடன் மிலோசவிக் இணங்கியதால் வான்வழி தாக்குதல்களை நேட்டோ இடைநிறுத்தியது.

 

2001 : லெபனானின் முதல் பெண் புனிதரான புனித ரப்காவை பாப்பரசர் 2 ஆம் அருளப்பர் சின்னப்பர் திருநிலைப்படுத்தினார்.

 

2002 : இரு மனிதர்களுக்கிடையிலான முதலாவது நேரடி இலத்திரனியல் பரிமாற்ற சோதனை பிரிட்டனில் கெவின் வோர்விக் என்பவரால் நடத்தப்பட்டது.

 

2003 : செவ்வாய்க் கிரகத்தை ஆராய்வதற்கான நாசாவின் ஸ்பிரிட் விண்கலம் ஏவப்பட்டது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முத்தையா முரளிதரனுக்கு முன்னதாக இலங்கையின் முன்னணி புகழ்பெற்ற சுழல்பந்துவீச்சாளராக விளங்கிய சோமச்சந்திர டீ சில்வா அவர்கள் பிறந்த தினம்.

உலகம் முழுவதும் மரியாதை கொடுத்த ஒரு மூத்த வீரராக விளங்கிய
D.S.De Silva, பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திலும் அங்கம் வகித்தார்.

13432207_1060125067369520_66510615179712

  • தொடங்கியவர்
Vikatan EMagazines Foto.
 

மாவீரன் அலெக்ஸ்சாண்டர் நினைவு தின சிறப்பு பகிர்வு...

மாவீரன் அலெக்சாண்டர் தன்னம்பிக்கைக்கான அடையாளம். மிகச்ச்சிறிய பிரதேசத்தில் இருந்து கிளம்பி அவர் காலத்தில் அறியப்பட்ட நிலப்பரப்பில்
பெரும்பகுதியை தன் வீரத்தால் வென்றவர் அவர். இளம் வயதில் யாரும் அடக்க யோசித்த முரட்டு குதிரையை அது நிழலை பார்த்து அஞ்சுகிறது என்று கண்டறிந்து எதிர் திசையில் திருப்பி அடக்கி தன்னுடைய சொத்தாக அவர் ஆக்கிக்கொண்டார்.

தந்தையின் விருப்பத்தின் பேரில் அரிஸ்டாட்டில் அவர்களிடம் கல்வி கற்றார் அவர். ஹோமரின் இலியட் ஒடிசி நூல்களை படித்து முடித்ததும் அவரின் உலகை நோக்கி பயணம் போகவேண்டும் என்கிற ஆர்வம் பொங்கியது. கூடவே வாச்னைப்போருளை அதிகம் ஒருமுறை வகுப்பில் பயன்படுத்திய பொழுது ,"இந்தியாவில் இருந்து வரும் அரிய பொருளது ! பார்த்து சிக்கனமாக பயன்படுத்து !" என்று ஆசிரியர் கடிந்தது இந்தியாவை நோக்கி அவரின் கனவுகளை செலுத்தியது. அப்பா பிலிப் ஓரு போரில் கொல்லப்பட இருபது வயதில் மன்னரானார் அலெக்சாண்டர்.

சின்ன சின்ன கனவுகள் காணத்தெரியாத அவர் உலகமே தன்னுடைய எல்லை என்று எண்ணிக்கொண்டார். 'பல்வேறு நாடுகள் மீது படையெடுத்தார். பாரசீகம் துவங்கி இந்தியா வரை அவரின் வெற்றிகள் நீண்டன. இந்தியாவிற்குள் நுழைய வந்த பொழுது ஆரம்பத்தில் சில மன்னர்கள் போர் செய்யாமல் அடிபணியவே இந்தியர்கள் இப்படிதான் என்று எண்ணிக்கொண்டு இருந்தார் அவர்.போரஸ் என்கிற மன்னன் அதீத வீரம் காட்டிய பொழுது யானைப்படையை படாத பாடுபட்டு சமாளித்த அலெக்சாண்டர் அவரை கைது செய்ததும் , "என்ன வேண்டும் உனக்கு ?" என்று கேட்டதும் போரஸ் கம்பீரமாக ,"மன்னனைப்போல நடத்து என்னை !" என்றார்.

இந்தியாவின் வெப்ப பருவநிலை,போரஸ் உடன் புரிந்த அதிரவைக்கும் போர்,வீட்டு ஞாபகம் ஆகியன கிரேக்க வீரர்களை மேலும் முன்னேற விடாமல் செய்தன. மீண்டும் தாயகம் திரும்பினார் அலெக்சாண்டர். போகிற வழியில் பாபிலோனியாவில் தங்கினார். அங்கே பெரிய மது விருந்துக்கு பிறகு உடல்நலம் குன்றி அவர் இறந்து போனார். அப்பொழுது அவருக்கு வயது முப்பத்தி மூன்று. கால் பட்ட பகுதிகளில் எல்லாம் வெற்றிகளை குவித்த அலெக்சாண்டர் இறக்கிற பொழுது இப்படி சொன்னார் ,"என் கல்லறையில் என் கரங்களை வெளியே தெரியும்படி வைத்திடுங்கள். உலகையே வென்ற அலெக்சாண்டர் போகிற பொழுது வெறுங்கையோடு தான் போனான் என்று உலகம் அறியட்டும் !" தன்னை வெல்லுதல் மிகப்பெரிய
வெற்றி என்று சொல்லாமல் சொன்ன தன் எதிரிகளை கண்ணியமாக நடத்திய மாவீரனை நினைவு கூர்வோம்

vikatan

  • தொடங்கியவர்

13339663_10154684814654578_8444897250439

  • தொடங்கியவர்

13415595_1060123440703016_43514695002580

தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட நட்சத்திரம் டேவிட் மில்லரின் பிறந்தநாள்.
Happy Birthday David Miller

  • தொடங்கியவர்
 
 
 
Vikatan EMagazines Foto.
 

ஜூன் 10: ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்... சிறப்பு பகிர்வு

இவரின் பெயராலேயே மின்சாரத்துக்கான எஸ் ஐ அலகு வழங்கப்படுகிறது..

ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர். பிரெஞ்சு தேசம் அறிவு வெளிச்சத்தில் மூழ்கிக்கொண்டு இருந்த காலத்தில் இவர் பிறந்தார். இவரின் அப்பா ரூசோவின் சிந்தனைகளால் கவரப்பட்டார். பிள்ளைகள் அடைந்துக்கிடக்கும் கட்டடங்களில் கல்வி கற்க கூடாது; இயற்கையை கவனித்து இயல்பாக ஆனந்தமாக கல்வி கற்க வேண்டும் என்பதை அவரின் தந்தை அப்படியே ஏற்றுக்கொண்டார். இவரை சுற்றி இருக்கும் விஷயங்களை உற்றுநோக்க விட்டார். நூலகத்தினுள்ளே கொண்டு போய்விட்டார். அற்புதமான புத்தகங்களை படிக்க வாங்கிக்கொடுத்தார்.

இலத்தீனை முதலில் வெறுத்தாலும் பின் அதை கற்று அற்புதமான அறிவியல் நூல்களை கற்று தேர்ந்தார். கணக்கில் எல்லையற்ற ஆர்வம் உண்டானது ஆம்பியருக்கு. புரட்சி ஏற்பட்ட பின் நடந்த குழப்பம் நிறைந்த அரசியல் சூழலில் அப்பா கொல்லப்பட்டார். மகன் வேலை தேடி போனார்; கணித ஆசிரியராக இணைந்து வேலை செய்தார்; அதே சமயம் வரலாறு, கவிதை, இயற்கை அறிவியல், தத்துவம் ஆகியவற்றையும் காதலோடு கற்றுதேர்ந்தார்.

நெப்போலியனின் ஆட்சிகாலத்தில் அறிவியலுக்கு முன்னுரிமை தரப்படவே இவர் பேராசிரியர் ஆனார். அப்பொழுது தான் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஓயர்ஸ்டட் என்கிற டானிஷ் நாட்டு அறிவியல் அறிஞர் மின்சாரம் பாய்கிற பாதையின் அருகே வைக்கப்படுகிற காந்த ஊசி விலகலுக்கு உள்ளாகிறது என சொன்னார். இதை கேள்விப்பட்டு மின்னியல் மற்றும் காந்தவியல் இரண்டுக்கும் இடையே தொடர்பிருப்பதை ஆம்பியர் உணர்ந்தார்.

மேலும் அதை விரிவுபடுத்தி இரண்டு கம்பிகள் இடையே மின்சாரம் பாயும் பொழுது அவை நேர் திசையில் செல்கின்றனவா அல்லது எதிர் திசையில் செல்கின்றனவா என்பதை பொருத்து விலகுதல் அல்லது ஈர்த்தல் நிகழும் என்றார்.

இதுவே மின்னியக்க விசையியல் துறைக்கு அடித்தளம் அமைத்தது. மேலும் ஆம்பியர் விதியை உருவாக்கினார்; அதன் மூலம் மின்சாரம் பாயும் இரண்டு கம்பிகளுக்கு இடையே ஏற்படும் மாற்றத்தை விளக்கினார். தன் விதியை கொண்டு கூலும்பின் காந்த விதியோடு ஒத்துப்போவதை அற்புதமாக நிரூபித்தார். அவர் எழுதிய Memoir on the Mathematical Theory of Electrodynamic Phenomena, Uniquely Deduced from Experience எனும் அற்புத நூலிலே தான் முதன் முதலில் மின்னியக்கவிசையியல் எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

இறக்கிற பொழுது "இறுதியாக மகிழ்வோடு சாகிறேன் நான் "எனக்குறித்து வைத்துவிட்டு இறந்துபோனார். இந்த மாபெரும் அறிஞர் அவரின் பெயராலேயே மின்சாரத்துக்கான எஸ் ஐ அலகு வழங்கப்படுகிறது .அவரின் நினைவு தினம் இன்று..

vikatan

  • தொடங்கியவர்

13403921_1060123104036383_15021020615511

தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் அல்பி மோர்க்களின் பிறந்த தினம்.
Happy Birthday Albie Morkel

  • தொடங்கியவர்

5 கோடி பேரை கவர்ந்த வீடியோ: கோழிமுட்டையை வைத்து சாதனை படைத்த மாணவர்கள்

 

கோழி குஞ்சுகள் உருவாகுவதற்கு முட்டை ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.   முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலகாலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை, ஜப்பானைச் சேர்ந்த மாணவர்கள் பொய்மையாக்கியுள்ளனர்.160608-grow-chicken-without-egg-feature.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிபா அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் உயிரியல் பிரிவு மாணவர்கள் அந்த நம்பிக்கையை பொய்யாக்கியுள்ளனர்.

ஒரு சாதாரண பிளாஸ்டிக் உறையை எடுக்கும் ஒரு மாணவி அதை ஒரு கூம்பு வடிவிலான பொருளின்மீது வைத்து உறையின் அடர்த்தியை குறைக்கும் வகையில் அதை இழுத்து பெரிதாக்குகிறார். அந்த உறையை ஒரு பிளாஸ்டிக் டம்ளரின்மீது போர்த்தி, முட்டையை உடைத்து டம்ளருக்குள் ஊற்றுகிறார்.

பின்னர், திறந்த நிலையில் அந்த டம்ளரை பொரிப்பானில் (இன்குபேட்டர்) வைத்த பின்னர் முட்டையின் மஞ்சள் கருவின் சிறு துணுக்காக தோன்றும் உயிரணு மூன்றே நாட்களில் இதயமாகவும், அடுத்த 21 நாட்களில் முழு உடல் வளர்ச்சியுடன் முடி, இறக்கை போன்றவையும் வளரப்பெற்ற கோழிக்குஞ்சாக நடைபோடுகிறது.

இதன்மூலம், முட்டையின் ஓட்டுக்குள்தான் குஞ்சுகள் பொரிக்கும் என்னும் பழைய சித்தாந்தம் தவிடுப்பொடியாகி உள்ளது. 

இந்த காட்சிகள் வீடியோவாக வெளிவந்த சில நாட்களில் ஐந்து கோடிக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

அந்த வீடியோ, உங்கள் பார்வைக்கும்...

virakesari.lk

  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு- 4: உலகின் குட்டி தேசிய கீதம்!

 

 
5_2839429f.jpg
 

உழைப்புக்கு இலக்கணமாகச் சொல்லப்படும் நாடு அது. இரண்டாம் உலகப் போரில் மிகப் பெரிய அழிவைச் சந்தித்த நாடு. ஹிரோஷிமா, நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சில் பல்லாயிரக் கணக்கானோர் இறந்துபோனார்கள். இது நடந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டன.

அணுகுண்டு வீச்சின் பின்விளைவுகள் இன்னும் மறையவில்லை. ஆனால், அத்தனை அழிவுகளையும் பின்னுக்குத் தள்ளி, சக்திமிக்க நாடாக தலை நிமிர்ந்து நிற்கிறது அந்த நாடு. அதுதான் ஜப்பான்.

கடின உழைப்புக்குப் பெயர்போன நாடு. உலகில் இசைக்கப்படும் தேசிய கீதங்களில் மிகப் பழமையானது ஜப்பானுடையது. மிகச் சிறிய தேசிய கீதமும் இதுதான். ஐந்தே வரிகள்; 31 எழுத்துக்கள். அவ்வளவுதான்.

கீதம் நிறைவடைந்தது

கி.பி 794 - கி.பி. 1185-ம் ஆண்டுகளில் ஜப்பானை ஆண்ட ‘ஹீயன்' வம்சத்தின் காலத்தில் இயற்றப்பட்டது ஒரு பாடல். அதன் பெயர் ‘வாக்கா'. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட பாடல் என்பதால், அதிலுள்ள பல சொற்கள் இன்று ஜப்பானிலேகூடப் புழக்கத்தில் இல்லை.

அது என்ன வாக்கா?

தமிழில் பல செய்யுள் வகைகள் இருக்கின்றன அல்லவா? அதில் திருக்குறளும் ஒன்றுதானே? திருக்குறளில் எத்தனை சீர்கள்? முதல் வரியில் நான்கு; இரண்டாவது வரியில் மூன்று. இதே போல, ஜப்பானின் செய்யுள் வடிவம்தான் ‘வாக்கா'. மொத்தமே ஐந்து வரிகள்.

ஜப்பானின் பண்டைய இலக்கியங்கள், பழஞ்சீன மொழியிலேயே இயற்றப்பட்டன. இவை ‘கன்ஷி' எனப்பட்டன. ஆனால், ஜப்பானிய மொழியில் உருவானவை - ‘வாக்கா' பாடல்கள்.

பண்டிதர்களின் மொழியாக சீன மொழி கொண்டாடப்பட்டது. ஜப்பானிய மொழியோ இரண்டாம்பட்சமாகப் பார்க்கப்பட்டது. இந்த அவலத்தை நீக்கப் புறப்பட்டது ‘வாக்கா'. வெற்றியும் பெற்றது. இதில் சோகம் என்னவெனில், தமக்குப் புரியாத மொழியில் இருப்பதாக ஜப்பானின் இன்றைய தலைமுறையினர் ‘வாக்கா'வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்!!

சரி, நாம் விஷயத்துக்கு வருவோம். ஜப்பானில் 1880-ம் ஆண்டின்போதே தேசிய கீதமாக இப்பாடல் தேர்வு செய்யப்பட்டு நடைமுறைக்கும் வந்துவிட்டது. 1945-ல், உலகப் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு, ஜப்பானின் மன்னர் ஹிரோஹிடோ சரணடைந்தார். ஆனாலும் மன்னர் பதவியிலிருந்து, நீக்கப்படவில்லை. மறு ஏற்பாடு செய்யும் வரை அவரே மன்னராக நீடித்தார்.

முன்பு இருந்த தேசிய கீதமே தொடரட்டும் என்று மன்னர் தீர்மானிக்கிறார். ஆக, 1945-க்குப் பிறகும் அதுவேதான் இசைக்கப்பட்டது. மன்னராட்சியிலிருந்து, ஜப்பான் மக்களாட்சி ஜனநாயகத்துக்கு மாறியது. இது நடந்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், 1999-ம் ஆண்டில்தான், முறைப்படி சட்டம் இயற்றப்பட்டு, ஜப்பானின் தேசிய கீதம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றது.

இப்பாடலின் முதல் வரியான ‘கீமிகாயோ' என்ற பெயரிலேயே இது பரவலாக அழைக்கப்படுகிறது.

பின்னணி இசையெல்லாம் சேர்த்து, இந்த கீதம் பாடி முடிக்க ஆகும் நேரம் - 58 வினாடிகள்.

இப்பாடல் இப்படி ‘ஒலிக்கும்' :

“கீ.. மீ.. காஓ... வா..

சீயா... னீ.. யா..சீயா.. னீ....

சாஸா..ரே... ..ஷீ.. னோ..

இ..வாஓ.. தோ.. நாரிதே..

கோ கே னோ.. மூஸு மாதே.”

எவ்வளவு குட்டி தேசிய கீதம்?

சரி, என்னதான் சொல்கிறது உலகின் பழமையான தேசிய கீதம்? இப்பாடலின் கடைசியில் வரும் ‘ஆட்சி' என்ற சொல், அரசாட்சியைக் குறிப்பிடுவது அல்ல; நாட்டின் ஒட்டுமொத்த ஆளுமையைக் குறிக்கிறது. இதனை நினைவில் நிறுத்தி, பாடலின் பொருளைப் பார்ப்போம்.

தமிழாக்கம்:

“(இன்னும்) ஆயிரம், எண்ணாயிரம் தலைமுறைகளுக்கு,

(இன்றைய) சிறிய கூழாங்கற்கள்,

பச்சைத் தாவரங்கள் நிரம்பிய

குன்றுகளாக உயர்கிற (காலம்) வரை

நினது ஆட்சி தொடரட்டும்!”

(தேசிய கீதங்கள் ஒலிக்கும்)

tamil.thehindu

  • தொடங்கியவர்

 

p16a.jpg

தட் ‘ரணகளத்திலும் கிளுகிளுப்பு’ மொமென்ட்

 பழைய கமல் படப்பாடல்களைப் பார்க்கும்போது எனக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு. ஒருமாதிரி கிளுகிளுப்பான பாடல் காட்சிகளில் ஹீரோயின்களை கிளாமராக் காட்டுறது வழக்கம்தான். ஆனா, கமலையும் ஏன் சட்டையோடும் தொடை தெரியற மாதிரி டிரெஸ்ஸோடும் கிளாமரா காட்டியிருக்காங்க? சந்தேகமிருந்தா ‘பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்’, ‘காதல் மகாராணி’, ‘மீண்டும் மீண்டும் வா’ பாட்டெல்லாம் பாருங்க!


p16b.jpg

தட் ‘ஆரம்பிச்சிட்டாங்கல்ல’ மொமென்ட்

‘அரசு செய்திப்படங்கள் முறையாகக் காண்பிக்கப்படுகிறதா’ என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வுனு பேப்பர்ல செய்தி வந்தப்பவே மெர்சல் ஆனேன். இப்போ பாருங்க, மறுபடியும் தியேட்டர்களில் இடைவேளையில் ‘அம்மா’ அரசு விளம்பரம் போட்டுக் கொலையாக் கொல்றாய்ங்க. சரி, அந்த விளம்பரமாவது ரசிக்கிற மாதிரி இருக்கா? அதே ‘அரைச்ச மாவை அரைப்போமா’தான். பாப்கார்ன் பதறுது, ஐஸ்கிரீம் அலறுது!


p16c.jpg

தட் ‘தனியே தன்னந்தனியே’ மொமென்ட்

சமத்துவ மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் ஆர்.ஜெயபிரகாஷ், வழக்கம்போல் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் வழக்கம்போல் பா.ஜ.க-வில் சேர்ந்திருக்கார். இப்படியே ஒவ்வொருத்தராக் கழண்டுபோய்க் கட்சி மாறிக்கிட்டே இருந்தா, சரத்குமாரும்தான் என்ன பண்ணுவார்? பேசாம, கட்சியோட பெயரை ‘தனி ஒருவன் கட்சி’னு மாத்தி வெச்சுக்கலாம் சரத்குமார்!


p16d.jpg

தட் ‘அது மட்டும் என்னவாம்?’ மொமென்ட்

வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் காட்டுமன்னார் கோயிலில் தோற்றுப்போனார் திருமாவளவன். அதனால் ‘எல்லாக் கோட்டையும் அழிங்க. மறுபடி எண்ண ஆரம்பிங்க’னு கொடி பிடிச்சு கோர்ட்டுக்குப் போயிருக்கார் திருமாவளவன். ஆனால் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவோ, ‘திருமாவளவன் நீதிமன்றத்துக்குப் போவதால் எந்தப் பயனும் இல்லை’னு கட்டையைப் போட்டிருக்கார். ‘மக்கள் நலக் கூட்டணியில் இருக்கிறதால்கூடத்தான் எந்தப் பயனும் இல்லை’னு திருமா மைண்ட் வாய்ஸ் உங்களுக்குக் கேட்குதா?


p16e.jpg

தட் ‘அழுவாச்சி வருது’ மொமென்ட்:  விஜய்யோட ‘ரசிகன்’, ‘விஷ்ணு’, ‘கோயம்புத்தூர் மாப்ளே’னு கிளுகிளு ஜோடி போட்ட சங்கவி, அஜித்துடன் ‘அமராவதி’ படத்தில் ஜோடி போட்ட சங்கவி, இப்போ ‘கொளஞ்சி’ங்கிற படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாம். ரத்தக்கண்ணீர் வருதுங்கோ!


p16f.jpg

தட் ‘நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்’ மொமென்ட்

நானும் புதுசா ஒரு கண்டுபிடிப்பை உருவாக்கியிருக்கேன்னு நம்ம டைம்பாஸ் வாசகர் ஆர்.வினோத் ஒரு போட்டோவை அனுப்பியிருக்கார். இதுக்குப் பேர் கீசெயின் சீப்பாம். யாராவது பாரத ரத்னா பார்சல் பண்ணுங்கப்பா!

vikatan

 

  • தொடங்கியவர்
சார்ந்து வாழ்வதே உறவைப் பெருக்கும்
 

article_1465531300-nature-flowers-butterபட்டாம் பூச்சி, பூக்களை முத்தமிடுவது, தனது வாழ்க்கைக்கான முயற்சிதான். இதுவும் சுயநலம் சார்ந்ததுதான். அவை பூக்கள் மேல் காதல் கொண்டு முத்தமிடுவதில்லை. அதனூடு, மதுவை மலர்களிடத்திலிருந்து உறிஞ்சி எடுக்கின்றது.

அதேபோல், பூக்கள் அழகாககத் தம்மைக்காட்டி, வண்டினத்தைக் கவர்வதும் தங்கள் நலன்சார்ந்ததுதான். பூவின் மகரந்தங்களைப் பரப்பி, தங்கள் இனத்தைப் பெருக்க வண்டுகளின் துணை தேவைப்படுகின்றது.

ஒன்றினையொன்று சார்ந்து தமக்கான தேவைகளைப் பகிர்வது இயற்கையான அற்புதங்கள்தான். ஆனால், மனிதர்களில் பலர், பிறரிடமிருந்து உறிஞ்சி எதையாவது கவர்ந்து எடுக்கவே பிரியப்படுகின்றனர். பரஸ்பரம் ஒருவரிடமிருந்து ஒருவர் பகிர்ந்து, நன்மைகளைப் பெற எத்தனை நபர்கள் தயாராக இருக்கின்றார்கள்.

மனிதன் தனித்து இயங்க முடியாது. சார்ந்து இயங்கி வாழ்வதே உறவைப்  பெருக்கும். வழங்குபவர்களுக்கே பெறுகின்ற தார்மிக உரிமையுண்டு. ஆனால், பரோபகாரி கைகளை நீட்டுவதுமில்லை.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜூன் 11: தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் நினைவு நாள் இன்று.

20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்டு வாழ்வின் இறுதிவரை போராட்டக் களத்தில் பங்கேற்ற இவரது செயல்பாடுகள் தமிழர்களால் போற்றபடுகிறது.

13413776_731356010300277_541005426548561

  • தொடங்கியவர்

இரும்புக்கை மாயாவி!

அதிஷா

 

p52a.jpg

1971 மார்ச் 8. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முகமது அலி மீண்டும் பாக்ஸிங் ரிங்குக்குத் திரும்புகிறார். உலகமே அந்த ‘நூற்றாண்டின் சண்டை’க்காகக் காத்திருந்தது. உலக சாம்பியன் ஃப்ரேஸியரை நாக்அவுட் செய்து, முகமது அலி சாம்பியனாகிவிடுவார் என 99 சதவிகிதம் பேர் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஃப்ரேஸியர், சாதாரண சோப்ளாங்கி பாக்ஸர் கிடையாது. 26 போட்டிகளில் விளையாடி ஒன்றில்கூட தோற்காத தொடர் வெற்றிவீரர். அதில் 23 முறை நாக்அவுட்டில் வெற்றி பெற்றவர். நியூயார்க்கில் நடந்த போட்டியை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது.

‘நாலே ரவுண்டில் ஃப்ரேஸியர் மண்ணைக் கவ்விவிடுவார்’ என புக்கிகள் பெட்டிங்கில் பிஸியாக இருந்தனர். போட்டி தொடங்கியது. முதல் மூன்று ரவுண்டுகளில் முகமது அலி ஃப்ரேஸியரை விரட்டி விரட்டி குத்தினார். அவருடைய ட்ரேட்மார்க் இடது கை குத்துக்கள் சரமாரியாக விழுந்தன. நான்காவது சுற்றில் போட்டி முடிந்துவிடும் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஆட்டம் திசைமாறியது. ஃப்ரேஸியர், முகமது அலியின் தாடையில் ஒரு குத்துவிட்டார். முகமது அலி நிலைகுலைந்து விழுந்தார். அதற்குப் பிறகு அவரால் சுதாரிக்கவே முடியவில்லை. ஃப்ரேஸியர், முகமது அலியை அடுத்தடுத்த சுற்றுகளில் புரட்டி எடுத்துவிட்டார். முகமது அலியின் இடது கை தாக்குதல்களை எல்லாம் தடுத்து, உள்வாங்கி, அடித்து நொறுக்கினார். 15-வது ரவுண்டில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முகமது அலி தோற்றுவிட்டார்! தொழில்முறை பாக்ஸிங்கில் 31 போட்டிகளில் தோல்வியே இல்லாமல் வீரநடை போட்ட காலம் முடிந்தது. முதன்முறையாக பாக்ஸிங் ரிங்கில் ஒரு தோல்வியைச் சந்தித்தார் முகமது அலி.

தன் வாழ்க்கை முழுக்க இப்படிப்பட்ட மிகப் பெரிய தோல்விகளை, சறுக்கல்களைச் சந்தித்தவர்தான் முகமது அலி. ஆனால், இது எல்லா தோல்விகளைவிட மிகப் பெரியது. `முகமது அலியின் காலம் முடிந்துவிட்டது’ எனப் பத்திரிகைகள் எழுதித் தீர்த்தன. தன்னுடைய முற்போக்குக் கருத்துக்களுக்காக பெயர்போன முகமது அலியை ‘இனியாவது வாயை மூடுங்க’ எனக் கேலி செய்தன ஊடகங்கள். முகமது அலி காத்திருந்தார். தன்னுடைய ஆட்டத்தின் முறைகளை மாற்றிக்கொண்டார். பயிற்சியை இன்னும் தீவிரப்படுத்தினார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1974-ம் ஆண்டு, ஜனவரி 28-ம் தேதி அதே நியூயார்க்கில், அதே மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ஃப்ரேஸியரை மீண்டும் எதிர்கொண்டார். இந்த முறை
12 சுற்றுகளில் முகமது அலி வெற்றிபெற்றார். இந்த மூன்று ஆண்டுகளில் அவர் ‘ரோப் ஏ டூப்’ என்ற புதிய முறையைப் பின்பற்ற ஆரம்பித்திருந்தார். அந்த பாணி, அதே ஆண்டில் நடந்த சாம்பியன்ஷிப்பில் கைகொடுக்க, முகமது அலி மீண்டும் உலக சாம்பியனாக உயர்ந்தார். சவால்களால் சறுக்கி விழாமல் அதை நேருக்குநேராக எதிர்கொள்வது, காத்திருந்து அதை வெல்வது... பாக்ஸிங் ரிங்கிலும் அதற்கு வெளியிலும் இதுதான் முகமது அலியின் குணம்.

1960-களின் தொடக்கம்... தூங்கும்போதுகூட தன் ஒலிம்பிக் பதக்கத்தைக் கட்டிக்கொண்டு தூங்கிய பாக்ஸிங் இளைஞராக இருந்தார் முகமது அலி. அப்போது அவர் பெயர் காசியஸ் மார்சிலஸ் க்ளே, ஜூனியர். ரோமில் நடந்த ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்குத் தங்கப்பதக்கம் ஒன்றை பெற்றுத் திரும்பியிருந்தார். தன் நண்பர்களோடு ஹோட்டல் ஒன்றில் விருந்துக்குச் சென்ற முகமது அலிக்கு, அந்த ஹோட்டலில் அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு இருந்த மற்ற வெள்ளை அமெரிக்கர்களும் அவரை சண்டைபோட்டு விரட்ட, கோபத்தோடு கிளம்பிய முகமது அலி, அமெரிக்காவின் ஓஹியோ ஆற்றில் தன் தங்கப்பதக்கத்தை வீசி எறிந்தார். அந்தப் புறக்கணிப்பு, அவரை நிறவெறிக்கு எதிரான புரட்சியாளனாக மாற்றியது. அவர் மால்கம் எக்ஸுடன் தன்னை இணைத்துக் கொண்டார். நிறவெறிக்கு எதிரான கருத்துக்களைப் பேச ஆரம்பித்தார்.

1964-ம் ஆண்டில் உலக சாம்பியன் சன்னி லிஸ்டனை வீழ்த்திய பிறகு, அவர் தன்னை ஒரு கறுப்பின இஸ்லாமியனாக அறிவித்துக்கொண்டார். அது நிறவெறிக்கு எதிரான ஒரு நடவடிக்கை. ஆனால் அமெரிக்க ஊடகங்கள், `இது ஒரு விளம்பர ஸ்டன்ட், டிக்கெட் விலையை ஏற்றிக்கொள்ள இப்படி எல்லாம் நாடகமாடுகிறார்’ எனக் கேலி செய்தன. முகமது அலி உறுதியாக இருந்தார். ` `காஸியஸ் க்ளே' என்பது வெள்ளையர்களால் எனக்கு வைக்கப்பட்ட ஓர் அடிமைப் பெயர். நான் இப்போது சுதந்திர மனிதன். நான் யாருக்கும் அடிமை இல்லை. அவர்களுடைய பெயரை நான் திருப்பித் தருகிறேன். எனக்கான ஓர் அழகான ஆப்பிரிக்க பெயரை நானே வைத்துக்கொள்கிறேன்' என்றார். முகமது அலியாக மாறினார்.

p52b.jpg

வியட்நாம் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், முகமது அலியை போரில் கலந்துகொள்ள வற்புறுத்தியது அமெரிக்க அரசு. ‘எனக்கு வியட்நாமியர்களோடு எந்தப் பகையும் இல்லை. எந்த வியட்நாம்காரனும் என்னை `நீக்ரோ’ எனக் கீழ்த்தரமாக அழைத்தது இல்லை’ என்றார். முகமது அலியின் கோபமான எதிர்வினைக்கு, அமெரிக்க அரசு தண்டனை கொடுத்தது. 1967-ம் ஆண்டில் அவர் குத்துச் சண்டையில் கலந்துகொள்ள முடியாதபடி அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அவருடைய உலக சாம்பியன்ஷிப் பறிக்கப்பட்டது. ஆனால், அதற்கு எல்லாம் முகமது அலி வளைந்துவிடவில்லை.

அவர் அந்தச் சட்டம் செல்லுபடியாகாத ஜார்ஜியாவில் சின்னச்சின்னப் போட்டிகளில் விளையாடினார். ஆனால், போருக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார்.

70-களின் இறுதியில் முகமது அலி குத்துச் சண்டையில் தன்னுடைய பிடியைத் தவறவிட்டுக் கொண்டிருந்தார். 1978-ம் ஆண்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், 1980-ம் ஆண்டில் அவர் தன் கடன் சுமைகளைக் குறைப்பதற்காக மீண்டும் குத்துச்சண்டைப் போட்டிகளுக்குத் திரும்பினார். உலக சாம்பியன் லாரிஹோம்ஸோடு மோதுவது என எடுத்த முடிவு ஆபத்தில் முடிந்தது. மிகவும் பலவீனமாக இருந்த முகமது அலியை லாரிஹோம்ஸ் அடித்து, சிதைத்தார். 125 குத்துக்களை முகத்திலும் தலையிலும் வாங்கினார் முகமது அலி. பின்னாளில் அவர் பார்க்கின்சன் நோயில் வீழ்ந்ததற்கு இந்தப் போட்டிதான் காரணம் எனக் கருதப்படுகிறது.

முடக்குவாதத்தில் சிக்கிய முகமது அலி, கொஞ்சம் கொஞ்சமாக நிற்கவும் முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். தன் உடலிலேயே முகமது அலி சிறைவைக்கப்பட்டார். தன் தோல்விகளையும் அவமானங்களையும் எதிர்கொண்டதைப்போலவே தன் உடல் தளர்ந்துகொண்டிருந்த நிலையிலும் ஒரு போராளியாக எதிர்த்து நின்றார். தொடர்ந்து இயங்கினார். குத்துச்சண்டைப் போட்டிகளை கவனித்துக்கொண்டிருந்தார். பல்வேறு தொண்டு நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றினார். மனிதநேயராக உலகெங்கும் சுற்றி, போரினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நம்பிக்கை அளித்தார்.

முகமது அலி, தன் இளமைக் காலத்தில் கறுப்பின மக்கள் குறித்த அமெரிக்கர்களின் பார்வையை மாற்றியதில் முக்கியப் பங்காற்றியவர். கறுப்பின மக்கள், தங்களுடைய உண்மையான ஆற்றலை அறிந்துகொள்ள அவருடைய இமேஜ் மிகப் பெரிய அளவில் உதவியது. அடிமை விலங்குகளை உடைத்தெறிந்து சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை அவர்களுக்கு விதைத்தது. அவருடைய பாக்ஸிங் கைகளைவிடவும் அவரது வாழ்க்கை, வலிமையான அடையாளமாக கறுப்பின மக்களிடையே பரவியது. ஓர் இஸ்லாமியராக அவர், இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும், இஸ்லாமின் பெயரால் நடக்கும் தீவிரவாத நடவடிக்கைகளையும் தொடர்ந்து எதிர்த்துவந்தார். தன் மரணத்துக்குப் பிறகு, தான் எப்படி நினைவுகூரப்பட வேண்டும் என்பதை முகமது அலி சொல்லியிருக்கிறார்.

`நான் இறந்த பிறகு, ஒரு கறுப்பர் இன மனிதனாக, நான் வென்ற சாம்பியன் பட்டங்களாலும், எந்நேரமும் மக்களை மகிழ்வித்த ஒரு சக உயிராகவும், தன் மக்களுடைய சுதந்திரத்துக்காக, சமூக நீதிக்காக அவர்களுடைய சம உரிமைக்காகப் போராடிய மனிதனாகவும்தான் நினைவுகூரப்பட வேண்டும்.'

இனி, எப்போதும் அப்படித்தான் நம் நினைவில் இருப்பார் முகமது அலி.

vikatan

  • தொடங்கியவர்

திகைப்பான தருணம் : காட்டு யானையை கட்டுப்படுத்தும் இலங்கை சிறுமி

 

காட்டு யானை ஒன்றை சிறுமி ஒருவர் கட்டுப்படுத்தும் காணொளி ஒன்று தற்போது இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.351FACDC00000578-3635025-At_the_beginnin

குறித்த காணொளியில், பிரதான வீதியில் தன்னை நோக்கி வரும் காட்டு யானை ஒன்றை சிறுமி ஒருவர் தனது கைகளால் கட்டுப்படுத்தும் காட்சி பதிவாகியுள்ளது.

அதாவது சிறுமி கையை காட்டி முன்னோக்கி நடந்து செல்ல யானை பின்னோக்கி நகர்கின்றது. சில நிமிடங்களில் யானை காட்டுக்குள் ஓடி விடுகின்றது.

இந்த காணொளியை பார்த்த சிலர் சிறுமியை பாராட்டியுள்ள போதும் சிலர் சிறுமியின் பெற்றோருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

virakesari

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.