Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
மதுபோதையால் மகனின் விளையாட்டுக் கார் மூலம் வீடு திரும்பிய தந்தை (வீடியோ இணைப்பு)
 

அதிக மது­போ­தை­யுடன் இருந்த நபர் ஒருவர் சிறு­வ­னான தனது மகனின் விளை­யாட்டுக் காரின் உத­வி­யுடன் மது­பான விடு­தி­யி­லி­ருந்து வீடு திரும்­பி­யுள்ளார். 

 

17397boy.jpg

 

இங்­கி­லாந்தின் சசெக்ஸ் பிராந்­தி­யத்­தி­லுள்ள போக்னர் ரெஜிஸ் நக­ரி­லுள்ள வீதி­யொன்றில் இவர்கள் செல்லும் காட்­சியை அங்­கி­ருந்­த­வர்கள் படம்­பி­டித்­துள்­ளனர்.

 

17397_toy%20car.jpg

 

'தனது மகனின் இலத்திரனியல் விளை­யாட்டுக் காருடன் இணைக்­கப்­பட்ட இழு­வைப்­பெட்டி ஒன்றில் அந்­நபர் அமர்ந்­தி­ருந்தார். அக்­காட்சி மிகவும் வேடிக்­கை­யாக இருந்தது என ஒருவர் தெரிவித்துள்ளார். 

 

வீடியோ :

 

metronews.lk

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நம்பிக்கை நாயகி ஆங் சாங் சூ கி பிறந்த தின சிறப்பு பகிர்வு...

ஆங் சாங் சூ கி, 1945-ஆம் ஆண்டு, ஜூன் 19-ஆம் தேதி ரங்கூனில் பிறந்தார். அப்பா, பர்மாவின் நவீன ராணுவத்தை உருவாக்கிய பெருமைக்கு உரியவர். ஆங்கிலேயரிடம் இருந்து பர்மா விடுதலை பெற, முக்கியக் காரணமாக இருந்தவர். விடுதலை பெற்ற ஆண்டே எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது சோகத்தின் உச்சம். சூ கி-க்கு அப்போது இரண்டு வயது.

உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள்.இவரின் அன்னை இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டதால், பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு இந்தியாவில் கழிந்தது. அதனால், ‘இந்தியாவையும் என் அன்னை மண் போலவே உணர்கிறேன்’ எனச் சிலாகித்துக் குறிப்பிட்டு உள்ளார். லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் அரசியலில் பட்டம் பெற்று, ஆக்ஸ்ஃபோர்டு நகரில் தொடர்ந்து படித்தார். அதற்குப் பின், ஐ.நா சபையில் வேலை பார்த்தார். கல்லூரிக் காலத்தில் பழக்கமான மைக்கேல் ஆரிஸை மணந்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.

 

suki_19_2.jpg

தாய்க்கு உடல்நிலை சரியில்லை என அறிந்து அவரைப் பார்க்கச் சொந்த நாட்டுக்கு வந்தார். பர்மா மக்களை வறுமையும் துன்பமும் வாட்டி எடுப்பதையும், அதைப் பற்றிக் கவலைப்படமால் ராணுவ அரசாங்கம் செயல்படுவதையும் கண்டு வருந்தினார். தாய் நாட்டிலேயே தங்கி இருந்து போராடுவது என அன்னையின் மரணத்தின்போது முடிவு எடுத்தார்.

‘மக்களுக்கு முதலில் ஜனநாயகம் தேவை’ என்று நினைத்தவர், தைரியமாக ஜனநாயக லீக் கட்சியைத் தொடங்கினார். அதனை மக்கள் அன்போடு வரவேற்றனர். ராணுவ அரசாங்கம் இவருக்கு உண்டான ஆதரவைப் பார்த்துக் கொதித்தது. இவரை வீட்டுச் சிறையில் வைத்தது.

அதுவரை ஆயுதம் ஏந்தியும் வன்முறையில் நம்பிக்கைகொண்டும் இருந்த மக்களை அமைதி வழிக்குத் திருப்பினார். அரசாங்கம், தேசம் ஆகியவற்றையும் தாண்டி அற்புதங்களைச் செய்யக்கூடியது அமைதி மட்டும்தான் என மக்களுக்கு அறிவுறுத்தினார். தான் இந்தப் போராட்ட முறையைக் கைக்கொள்வதற்குக் காரணமாக அமைந்தது மகாத்மா காந்தியின் வாழ்க்கை எனப் பெருமையோடு குறிப்பிடுவார்.

 

யாரையும் பார்க்கக் கூடாது, தொலைபேசி வசதியும் கிடையாது, சேதம் அடைந்த, பழமையான வீட்டில் பல சமயம் மின்சாரம் இருக்காது. பெரும்பாலும் மெழுகுவத்தி வெளிச்சம்தான். வயதான இரண்டு பெண்கள்தான் உதவிக்கு என்ற நிலையில் 20 ஆண்டுகள் அந்தத் தனிமைச் சிறையில் வாடினார்.

1990-ல் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், 485 இடங்களில் போட்டியிட்டு, 392 இடங்களில் ஜெயித்துக் காட்டினார். ஆனால், இந்தத் தேர்தல் செல்லாது என்று அறிவித்த ராணுவ ஆட்சியாளர்கள், ஆங் சாங் சூ கியின் கட்சிக்குத் தடை விதித்தனர். எனினும், மக்கள் தொடர்ந்து தங்களின் நம்பிக்கை நாயகிக்கு ஆதரவு தந்தனர். அகிம்சை வழியில் போராடியதற்காக, 1992-ஆம் வருடம் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1995-ஆண்டில் தன் கணவர் உயிர் பிரியும் நிலையில் இருந்ததால், லண்டனில் உள்ள கணவரைப் பார்க்க அரசாங்கத்திடம் அனுமதி கேட்டார். ”போகலாம். ஆனால், திரும்பி வரக் கூடாது’ என உறுதிமொழி கேட்டது அரசு. தீர்க்கமாக மறுத்து, கணவரின் மரணத்திற்குக்கூடப் போகாமல் வீட்டுச் சிறையிலேயே கம்பீரமாக இருந்தார்.

உலக நாடுகளின் பார்வையில் விழுந்த ஆங் சாங் சூ கியை விடுதலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான ராணுவ அரசு, கடந்த 2010-ல் அவரை விடுதலை செய்தது. சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் மொத்தம் இருந்த 45 தொகுதிகளில் 42-ல் இவரின் கட்சி வென்றது.

”வாழ்க்கை முழுக்கப் போராட்டத்தில் கழிந்ததில் வருத்தம் இல்லை. என் மக்களின் வாழ்க்கை என்றைக்காவது ஒரு நாள் மாறும் என்கிற நம்பிக்கையில் தொடர்கின்றன என் செயல்கள்” என்கிறார் ஆங் சாங் சூ கி.

vikatan

  • தொடங்கியவர்

13495640_1065669766815050_15285297147098

வில்லன் கதாபாத்திரத்திலும்
குணச்சித்திர வேடத்திலும் நடித்து அசத்தும் ஆஷிஷ் வித்யார்த்திக்கு இன்று பிறந்தநாள்

விதம் விதமான வில்லத்தனங்களை தனது நடிப்பில் வெளிப்படுத்தும்
ஆஷிஷ் வித்யார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

தோற்றவர்களின் கதை - 3

சுசி திருஞானம்தொடர்

 

p30b.jpg

பல தொழில் முயற்சிகளில் தோல்விமேல் தோல்வி கண்டு, விரக்தியின் விளிம்புக்குப் பலமுறை சென்றவர் அவர். தொடர் தோல்விகளில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் எழுந்துவந்த கதை இது...

ஐ போன், ஐ பேட், ஐ புக், ஐ மாக் கம்ப்யூட்டர் போன்ற ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் இன்று உலகெங்கும் அதிகம் விரும்பி வாங்கப்படும் உயர்தர எலெக்ட்ரானிக் பொருட்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவற்றைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தை வெற்றியின் உச்சிக்குக்கொண்டு சென்றவர் அதன் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ். 2011-ம் ஆண்டில், புற்றுநோய் காரணமாக தனது 56 வயதிலேயே அவர் மறைந்தபோது அவரது சொத்து மதிப்பு 2,12,000 கோடி ரூபாய். இவை எல்லாம் வெளியில் தெரிந்த வெற்றிச் சித்திரங்கள். அதிகம் பேசப்படாத மற்றொரு பக்கம் இருக்கிறது.

வறுமை காரணமாக கல்லூரிப் படிப்பைப் பாதியில் கைவிட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். தான் கனவுகண்டு, தனது நண்பனுடன் உழைத்து உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்திலிருந்து அவமானகரமான முறையில் வெளியில் துரத்தப்பட்டவர் அவர். பல தொழில் முயற்சிகளில் தோல்விமேல் தோல்வி கண்டு, விரக்தியின் விளிம்புக்குப் பலமுறை சென்றவர் அவர். தொடர் தோல்விகளில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் எழுந்துவந்த கதை இது...  

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் 1955-ம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்தவுடன், பால் தம்பதியருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார். முழுமையான அன்புடன் வளர்க்கப்பட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். எனினும், தான் தத்துக் கொடுக்கப் பட்டவன் என்ற மன உளைச்சல் அவருக்குள் தொடர்ந்து இருந்து வந்தது உண்மை.

பள்ளிப் படிப்பின்போதே எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின்மீதும், வரைகலையின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். ரீட் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்த சில மாதங்களில், ஸ்டீவ் ஜாப்ஸுக்கு கல்லூரிப் படிப்பு கசந்தது. சுதந்திரச் சிந்தனையை விரும்பிய அவருக்குக் கட்டுப்பாடான கல்வி முறைக்குள் இருக்க முடியவில்லை. கட்டணம் செலுத்தத் தனது பெற்றோர் படும் சிரமத்தை உணர்ந்த அவர், கல்லூரிப் படிப்பைவிட்டு வெளியேறினார்.

வீட்டுக்கும் செல்ல இயலாமல், விடுதியும் பிடிக்காமல், பல நாட்கள் தனது நண்பர்களின் அறைகளில் மாறி மாறித் தங்கினார். உணவுக்குக் காசில்லாதபோதெல்லாம், 10 கிலோ மீட்டர் நடந்துசென்று ஹரே கிருஷ்ணா கோயிலில் வழங்கப்பட்ட இலவச உணவை வாங்கிச் சாப்பிட்டதாக அவரே பின்னாட்களில் தெரிவித்திருக்கிறார்.

கல்லூரியைவிட்டு வெளியேறிய இந்த நாட்களில்தான் ஓவிய எழுத்துப் பயிற்சி வகுப்பில் தன்னால் சேர முடிந்தது என்றும், அந்தப் பயிற்சியால்தான் பிற்காலத்தில் மாக் கம்ப்யூட்டருக்கான அழகான எழுத்துருக்களைத் தன்னால் சேர்க்க முடிந்தது என்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் குறிப்பிட்டார்.

1974-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஹிப்பிபோல் முடி வளர்த்து, நாடோடி போன்ற மனநிலையோடு இந்தியா வந்த அவர், ஆன்மிகத் தேடலில் இறங்கினார். லுங்கியைக் கட்டிக்கொண்டு இமயமலை அடிவாரத்துக்குப் பலமுறை பேருந்துப் பயணம் போய் வந்தார். பஞ்சை பராரிபோல் வாழ்ந்து திரிந்த இந்தக் காலகட்டத்தில் இவருக்கு வயிற்றோட்டம், தோல் வியாதி எனப் பல அவஸ்தைகள். மேலும் இமயமலையில் இருந்து திரும்பிவரும் வழியில் வரலாறு காணாத கடும் புயல் மழை. உயிர்பிழைத்தால் போதும் என்ற யதார்த்த சூழலில் ஆன்மிகத் தேடல் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். சாமியார்களிடம் அறிவைத் தேடுவதைவிட தாமஸ் ஆல்வா எடிசன் போன்ற அறிவியலாளர்களிடம் அறிவைத் தேடுவதே சரியானது என்ற படிப்பினையைத் தான் பெற்றதாக ஜாப்ஸ் தெரிவித்தார்.

p30c.jpg

எனினும், இந்தியப் பயணத்தின் மூலமாக எதையும் தாங்கும் வலிமையான மனப்பாங்கை அவர் வளர்த்துக்கொண்டார். ‘மன வலிமையைப் பெறுவதற்கு இந்தியாவுக்குப் போய்வா’ என்று பின்னாட்களில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்குக்கு அவர் அறிவுரை கொடுத்ததும், மார்க் ஜக்கர்பர்க்கும் அதேபோன்ற பயணம் மேற்கொண்டதும் பலரும் அறிந்த செய்தி.

அமெரிக்கா திரும்பிய ஸ்டீவ் ஜாப்ஸ், வீடியோ கேம் தயாரித்துவந்த அட்டாரி நிறுவனத்தில் தொழில்நுட்பப் பிரிவில் வேலையில் சேர்ந்தார். தனது நண்பர் ஸ்டீபன் வாஸ்னிக்கை சந்தித்து, நாம் இணைந்து செயல்பட்டால் வளர்ந்துவரும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் சாதனை படைக்கலாம் என்று கூறினார்.

ஆப்பிள் கம்ப்யூட்டரை உருவாக்கி விற்பனை செய்ய இருவரும் திட்டமிட்டனர். ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டின் கார் நிறுத்தும் இடத்தைத் தங்கள் தொழில்நுட்பக் கூடமாக மாற்றினர். ஸ்டீபன் வாஸ்னிக்கின் அபாரமான தொழில்நுட்ப அறிவும், ஸ்டீவ் ஜாப்ஸின் தொழில்முனைப்பும் இணைந்து ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் உருவாகக் காரணமாக இருந்தன.

இருப்பினும், அதனை அதிக எண்ணிக்கையில் தயாரிக்க இருவரிடமும் பணம் இல்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் அசரவில்லை. வீடியோ கேம் கணினிகளை விற்றுவந்த பைட் ஷாப் என்ற கடை உரிமையாளரைச் சந்தித்து, தங்களது ஆப்பிள் 1 மேசைக் கணினியின் சிறப்புகளை எடுத்துக் கூறினார். “50 கணினிகளை நீங்கள் தயாரித்துக் கொண்டுவந்தால் தலா 12,000 ரூபாய் விலையில் வாங்கிக்கொள்கிறேன்” என்று உரிமையாளர் சொன்னபோது, அதனை வணிக ஒப்பந்தமாக எழுதிக் கையெழுத்துப் போட்டு வாங்கிக்கொண்டார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இந்த ஒப்பந்தத்தை எடுத்துச்சென்று, க்ரேமர் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் பேசினார் ஜாப்ஸ். “என்னிடம் விற்பனை ஒப்பந்தம் இருக்கிறது, ஒரு மாதக் கடன் நிபந்தனையுடன் எலெக்ட்ரானிக்ஸ் மூலப்பொருட்களை கொடுங்கள்” என்று கோரிக்கை வைத்தார். க்ரேமர் எலெக்ட்ரானிக்ஸ் விற்பனை மேலாளர், ஸ்டீவ் ஜாப்ஸின் மன உறுதியைப் பார்த்து வியந்து எலெக்ட்ரானிக்ஸ் மூலப் பொருட்களைக் கொடுத்து உதவினார். ஸ்டீவ் ஜாப்ஸும், ஸ்டீபன் வாஸ்னிக்கும் இரவு பகலாக உழைத்து, ஒரே மாதத்தில் 50 மேசைக் கணினிகளை சப்ளைசெய்து முதல் லாபத்தைச் சுவைத்தனர்.

அடுத்து, கலர் மானிட்டர், ஒருங்கிணைந்த விசைப்பலகை போன்றவற்றோடு கூடிய ஆப்பிள் 2 மேசைக் கணினியை அதிக அளவில் தயாரித்து விற்க முடிவு செய்தனர். வங்கிகள் இவர்களை நம்பி கடன் தர மறுத்தன. இதுபோன்ற தொடக்க நிறுவனங்களில் முதலீடு செய்துவந்த மைக் மற்குலாவைச் சென்று சந்தித்து தங்களது கனவுத் திட்டத்தை விவரித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். மைக் மற்குலா இசைவு தெரிவித்தார். சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதி கிடைத்தது. ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீபன் வாஸ்னிக், மைக் மற்குலா மூவரையும் பங்குதாரர்களாகக் கொண்ட ஆப்பிள் இங்க் நிறுவனம் 1976-ல் பதிவு செய்யப்பட்டது.

1977-ல் வெளிவந்த ஆப்பிள் 2 மேசைக் கணினிகள் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. ஆப்பிள் நிறுவனம், 1980-ல் பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டபோது முதலீடுகள் குவிந்தன. மொத்த பங்குச் சந்தையும் ஆப்பிள் பக்கம் திரும்பியது. பெப்சிகோலா கம்பெனியில் துணைத் தலைவராக இருந்த ஜான் ஸ்கல்லியைச் சந்தித்த ஸ்டீவ் ஜாப்ஸ், அவரை ஆப்பிள் நிறுவனத்தில் இணையுமாறு கேட்டுக்கொண்டார். ஜான் ஸ்கல்லி தயங்கியபோது, “எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அந்தச் சர்க்கரை கலந்த தண்ணீரை விற்கப் போகிறாயா அல்லது எங்களுடன் சேர்ந்து உலகை மாற்றும் உன்னதப் பணிக்கு வருகிறாயா?” என்று ஸ்டீவ் ஜாப்ஸ் கிடுக்கிப்பிடி போட்டார். ஆப்பிள் நிறுவனத்தில் சி.இ.ஓ ஆக இணைந்தார் ஜான் ஸ்கல்லி.

ஆப்பிள் நிறுவனத்தில் நிதி குவிந்தபோதும் வேறுவகையான சிக்கல்கள் தலைதூக்கின. வியாபாரப் போட்டி பெரிதாகியது. ஐ.பி.எம் நிறுவனம் கம்ப்யூட்டர் தயாரிக்கத் தொடங்கி, பெர்சனல் கம்ப்யூட்டர்களைப் பிரபலமாக்கி பந்தயத்தில் முந்திச் சென்றது. பெரிய விளம்பரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் லிசா கம்ப்யூட்டர்கள் தோல்வியைத் தழுவின.

p30a.jpg

கிராஃபிக்ஸ் நுட்பத்துடன் கூடிய மாக் கம்ப்யூட்டர்கள் தயாரிப்புப் பிரிவு, ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆப்பிள் 2 கம்ப்யூட்டர்கள் பிரபலமான அளவுக்கு மாக் கம்ப்யூட்டர்கள் பிரபலமாகவில்லை. எனினும், சந்தைத் தேவைக்கும் அதிகமாக மாக் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கப் பட்டன. ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டுப்பாட்டில் மாக் கம்ப்யூட்டர் தயாரிப்புப் பிரிவு இருந்த காரணத்தால் சி.இ.ஓ ஜான் ஸ்கல்லியால் அதனைக் கேள்வி கேட்க முடியவில்லை.

தோல்விகளுக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் காரணம் என்று சுட்டிக் காட்டப்பட்டபோது அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேறுமாறு ஜான் ஸ்கல்லிக்கு சொல்லி அனுப்பினார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆனால், நிர்வாகக்குழு வேறு மாதிரி முடிவு எடுத்தது. ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேறுமாறு நிர்பந்தித்தது. தனது நண்பர்கள் அனைவரும் எதிரிகளாக மாறி, தான் உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்தில் இருந்தே தன்னை வெளியேற்றியபோது ஸ்டீவ் ஜாப்ஸ் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். 21 வயதில் தொழில் முனைவோர். 23 வயதில் கோடீஸ்வரர். 25 வயதில் மிகப் பிரபலமான மனிதர். 30 வயதில் தனது நிறுவனத்திலிருந்தே துரத்தியடிக்கப்பட்ட தோல்வியாளர். 

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உரையின்போது அந்த துயரமான நாட்களைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ்: “அப்போது அதனை நான் எதிர்பார்க்கவில்லை என்பதால், அதிர்ச்சி அடைந்தது உண்மைதான். ஆனால், அதுதான் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு என்பதை பின்னர் உணர்ந்தேன். வெற்றியாளரின் கனத்த இதயத்துக்குப் பதில், தொடங்குபவரின் மென்மையான இதயம் எனக்குக் கிடைத்தது. பரபரப்பிலேயே ஓடிக்கொண்டிருந்த நான் மிகவும் ஆக்கபூர்வமாகச் சிந்திக்கத் தொடங்கிய காலம் அதுதான்.’’

ஆப்பிளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், தொழில் வணிக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு நெக்ஸ்ட் என்ற புதிய கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கினார் ஸ்டீவ் ஜாப்ஸ். அதேபோன்று கணினி வரைகலை நிறுவனமான பிக்சர் நிறுவனத்தின் பாதிக்கும் மேற்பட்ட பங்குகளை வாங்கி அதன்  தலைவரானார். இவை இரண்டுமே அவரது வெற்றிகரமான முடிவுகளாக அமைந்தன. பிக்சர் நிறுவனத்தை பின்னாட்களில் 50,000 கோடி ரூபாய்க்கு டிஸ்னி நிறுவனம் வாங்கியது. ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேற்றத்துக்குப் பின்னர் சிறிதுகாலம் வளர்ச்சி பெற்ற ஆப்பிள் நிறுவனம், 1990-க்குப் பின்னர் பெரும் நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேறக் காரணமாகக் கருதப்பட்ட ஜான் ஸ்கல்லி 1993-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

p30.jpg

வரலாறு சுழன்றது. ஆப்பிள் நிறுவனத்தின் மாக் கம்ப்யூட்டருக்கு, நெக்ஸ்ட் நிறுவன மென்பொருளை உபயோகிப்பது என்று 1996-ல் முடிவானது. நெக்ஸ்ட் நிறுவனத்தைப் பெரும் தொகை கொடுத்து ஆப்பிள் நிறுவனம் வாங்கிக்கொண்டது. நெக்ஸ்ட் நிறுவனத் தலைவரான ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவன ஆலோசகரானார். பின்னர், ஆப்பிள் நிறுவனத்தின் முடிசூடா மன்னரானார்.

சவால்களை எதிர்கொண்டு ஆப்பிள் நிறுவனத்துக்குப் புதுரத்தம் பாய்ச்சும் புதிய பொறுப்பு அவருக்குத் தரப்பட்டது. ஐ போன்,     ஐ பாட், ஐ புக்  என விதவிதமான, வெற்றிகரமான தயாரிப்புகளை ஊக்குவித்து வெளியிடச் செய்த ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை உன்னத இடத்துக்கு இட்டுச் சென்றார். ஆப்பிள் நிறுவனத்தை 30 லட்சம் கோடி ரூபாய் பெருமானம் உள்ள ராட்சச நிறுவனமாக மாற்றிக் காட்டினார்.

தனது தொழில் துறை சவால்களுக்கு இடையே ஸ்டீவ் ஜாப்ஸ், மற்றொரு போராட்டமும் நடத்திக்கொண்டிருந்தார். 2003-ம் ஆண்டிலேயே அவருக்கு கேன்சர் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மரணத்துடன் அவர் நடத்திய நீண்ட போராட்டம், 2011-ம் ஆண்டு அவரது 56-வது வயதில் முடிவுக்கு வந்தது. 

தனது வாழ்நாளில் பிறப்பு முதல் இறப்புவரை, தோல்விகளைத் தாங்கிக்கொண்டு, மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கப் பழகிய ஸ்டீவ் ஜாப்ஸ், இளைஞர்களுக்குச் சொல்லிய முக்கிய அறிவுரை: “வாழ்க்கை சில வேளைகளில் உங்கள் தலையில் செங்கல்லைக் கொண்டு தாக்கும். மனம் தளராதீர்கள். நம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழக்க வேண்டாம்.”

(இன்னும் வெல்வோம்)

vikatan

  • தொடங்கியவர்

13445796_1065692143479479_79236489545560

உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவல் ஆசிரியர் சல்மான் ருஷ்டியின் பிறந்தநாள் இன்று.

இந்தியாவில் பிறந்து இங்கிலாந்து குடியுரிமை பெற்ற எழுத்தாளர்.
இந்தியச் சூழலில் தனது படைப்புகளை உருவாக்குபவர். கிழக்கு மேற்கு நாடுகளிடையே உள்ள தொடர்புகள், பரஸ்பர தாக்கங்கள், குடிபெயர்வுகள் மற்றும் அதுசார்ந்த பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதுபவர். 1988-ல் வெளிவந்த இவரது ‘தி சாட்டனிக் வெர்சஸ்’, என்ற நாவல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவரது சில படைப்புகள் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சி தொடராகவும் வெளிவந்தன. 69 வயதாகும் சல்மான் ருஷ்டி தற்போதும் எழுதிவருகிறார்.

  • தொடங்கியவர்

ட்ரெண்டெல்லாம் மதிக்கிற ஆளா நீ?

p126a.jpg

#vaanampaarthen, #kabaliswa, #ulagamoruvanukka, #magizhchi, #thalaivaradhiradi, #kabaliaudiofestival, #kabaliaudiolaunch... இத்தனையா என ஷாக் ஆகாதீங்க பாஸ். கடந்த வாரம் வெளியான ‘கபாலி’ பாடல்கள் ஏற்படுத்திய விளைவுதான் இவை. ‘நெருப்புடா’ பாடலில் வரும் ரஜினி குரலுக்காகவே தனியாக ஒருமுறை ட்ரெண்ட் அடிக்கலாம். சொன்ன தேதிக்கு முன்னரே, ஆன்லைனில் வழக்கம்போல் பாடல்கள் லீக் ஆகி இருந்தாலும், இணையம் முழுக்க #kabali தான் ஆக்கிரமித்து இருந்தார். நெருப்புடா!

சல்லு இன் கேம் மோட்

p126b.jpg

வெளிவரும் படத்திற்காக, மொபைல் கேம்கள் வெளியிடுவதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்ட். விரைவில் வெளிவர இருக்கும் சல்மான்கானின்  ‘சுல்தான்’ படத்திற்காக சுல்தான்: தி கேம் என்ற பெயரில் ஆண்ட்ராய்டு தளத்தில் ஒரு விளையாட்டை வெளியிட்டார்கள். எல்லாவற்றையும் ட்ரெண்ட் செய்யும் சல்மான் ரசிகர்கள், இதையும் @sultanthegame என்று தேசிய அளவில் ட்ரெண்ட் செய்தார்கள். நல்லா பண்றீங்க மேன்!

ட்ரபிள் தி ட்ரபிள

p126c.jpg

இணையத்தில் அதிகம் நக்கல் அடிக்கப்படும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாதான். அவரின் பன்ச் வசனங்கள், நடனம், சண்டைக்காட்சிகள் என எல்லாமே இணையத்தில் நக்கல்தான் செய்யப்படுகின்றன. கடந்த வாரம், அவரது பிறந்தநாளையொட்டி, அவரின் நூறாவது படத்துக்கான #gauthamiputrasatakarni, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அல்லு கிளப்பினார். #HappyBirthdayBalayya என்ற டேகில், அவரது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர். சாம்பிள் : உனக்கு B.P வந்தா உன் P.A பதறுவான். எனக்கு B.P வந்தா A.P (ஆந்திர பிரதேசம்) யே பதறும்டா!

தடை... அதை உடை

p126d.jpg

டென்னிஸ் நட்சத்திர வீரர் மரியா ஷரபோவாவிற்காக டென்னிஸ் பார்த்த கூட்டம் அதிகம். பலமுறை பட்டம் வென்ற ஷரபோவா, உட்கொண்ட மருந்தில் போதைப் பொருள் இருந்ததென உறுதி செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் டென்னிஸ் விளையாடத் தடை செய்திருக்கிறார்கள். 2018-ம் ஆண்டு, மீண்டும் ஷரபோவா விளையாட வரும்போது, அவருக்கு 30 வயது ஆகிவிடும். இதெல்லாம் ரொம்பத் தப்பு எனக் கொதித்த இணையவாசிகள் #MariaSharapovaவிற்கு ஆதரவாக ட்விட்டுகள் இட்டனர். ஷரபோவா இல்லையேல் டென்னிஸ் இல்லை!

நீங்களும் ஆகலாம் வெட்டு ராஜா

p126e.jpg

அரசியல் அமைப்புகள், சாதி மத சங்கங்களைவிட, சினிமாக் கலைஞர்கள் தற்போது அதிகம் பயப்படுவது சென்சார் போர்டுக்குதான். அதுவும், இந்த மாதத்தில் வெளியாக வேண்டிய ‘உத்தா பஞ்சாப்’ என்ற பாலிவுட் படத்திற்கு, சென்சார் போர்டு வில்லனாக செயல்பட்டது. 89 இடங்களில் வெட்டு, டைட்டிலில் இருக்கும் பஞ்சாப் பெயரை நீக்குங்கள் என அதிரடியாய் அறிவித்தது. தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தின் படியேற, சென்சார் போர்டை #udtapunjab என இணையம் முழுக்க நக்கல் அடித்தனர். இப்படி வெட்டி வைத்தால், நான் எப்படிப் படம் பார்ப்பேன்?

முகுந்தா முகுந்தா!

p126f.jpg

‘சபாஷ் நாயுடு’ எனப் படத்தின் பெயரை வைத்ததற்கு போராட்டம் என்று தமிழ்நாட்டில் கமலுக்கு எதிராக ஒரு குரூப் கிளம்பினாலும் பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை வைத்து, சபாஷ் நாயுடு பட ஷூட்டிங் போய்க்கொண்டுதான் இருக்கிறது. இப்படியிருக்க, ‘தசாவதாரம்’ படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் ஆனதையொட்டி, கமல் ரசிகர்கள் ட்விட்டரில் #8yearsofDasavatharam என்ற டேக்கை ட்ரெண்ட் ஆக்கினார்கள். நல்லா இல்லைனு சொல்லலை, நல்லா இருந்தா நல்லா இருக்கும். அவ்ளோதான்!

எது வேணும்னாலும்

p126g.jpg

ட்விட்டரில் கடந்த வாரம் ஜாலியாக ட்ரெண்ட் ஆன டேக் ‘ #ஏதாவது_மூன்று_வார்த்தை’. இப்படியுமா ட்ரெண்ட் ஆகும்னு ஜெர்க் ஆகாதீங்க. அதிலும், வெறிகொண்டு, ‘காசு, பணம், துட்டு’ ‘இது நம்ம ஆளு’ என ட்விட்டுகள் தட்ட தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது. இதெல்லாம் ஒரு பொழப்பு!

 

vikatan

  • தொடங்கியவர்

13502979_1065667916815235_85321328997288

அழகு நடிகை காஜல் அகர்வாலின்
பிறந்தநாள் இன்று

  • தொடங்கியவர்

கடல் மணல் உருவாவது எப்படி?

 
 
beach_2895213f.jpg
 

பீச்சுக்குப் போனால் மணலில் உட்கார்ந்து மணல் வீடு செய்வோம், மணலில் குழி பறித்து விளையாடுவோம் இல்லையா? இப்படி விளையாடும்போது கடற்கரையில் இவ்வளவு மணல் எப்படி வந்தது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

கடற்கரையில் மணல் நிரம்பிக் கிடக்க அலைகளே காரணம். அலைகள் எப்போதும் கரையை ஓங்கி அறைந்தபடி கரையில் உள்ள கற்களையெல்லம் அரித்துக்கொண்டே இருக்கின்றன.

சிறுசிறு கற்களை ஒன்றோடு ஒன்று அலைகள் மோத வைக்கின்றன. இப்படிக் கற்கள் மோதிக்கொள்ளும்போது மாவரைக்கும் இயந்திரத்தில் அரைபடுவது போலக் கற்கள் அரைபட்டு கடல் மணல் உருவாகிறது.

கடலில் அலைகள் ஏற்பட என்ன காரணம் தெரியுமா? நிலாவும் சூரியனும்தான். இவை இரண்டும் மாறிமாறி செலுத்தும் ஈர்ப்பு விசைதான் அலைகளுக்குக் காரணம். இதனால் கடலில் உயர்வான அலையும் தாழ்வான அலையும் எப்போதும் மாறிமாறி ஏற்படுகின்றன. பூமியின் சுழற்சியாலும் காற்றின் வேகத்தாலும் தொடர்ந்து அலைகள் அதிகரிக்கின்றன.

பல நீரோட்டங்கள் ஆழ்கடலுக்குள் மாவு அரைக்கும் கன்வேயர் பெல்ட்டுகள் போலப் பிரம்மாண்டமாகச் சுழல்கின்றன. இப்படி ஏற்படும் விசைகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கடலுக்குள் பாறைகள் நொறுங்குகின்றன. பாறைகள் நொறுங்குவதால் ஏற்படுவதுதான் கடல் மணல்.

ஒரு கடற்கரையில் குவிந்து கிடக்கும் கடல் மணல், அந்த இடத்தில் உள்ள பாறைகளிலிருந்து வந்தது என்று மட்டும் கூறிவிட முடியாது. உதாரணமாக, கர்நாடக மாநிலத்தின் ஹர்வாடா கடற்கரையில் உள்ள மணல், வடக்கே மகாராஷ்டிரத்திலிருந்து வந்தது.

இப்படி அலையின் போக்கில் மணல் பயணிக்கவும் செய்கிறது. அது சரி, கடற்கரையில் உள்ள மணல் எந்தப் பகுதியைச் சேர்ந்தது என்று எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்?

குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார் போன்றவை கடல் மணலில் நிறைய உள்ளன. இவற்றையும், கடல் மணலில் உள்ள வேதித்தன்மை, அதிலுள்ள கனிமங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து, அந்தந்த இடத்தின் பூர்வீக ரகசியங்களைக் கண்டுபிடிக்கிறார்கள் புவியியல் ஆய்வாளர்கள்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

பீட்ஸாவின் பிளாஷ்பேக்!

 
piz_2889245f.jpg
 

நவநாகரிக இளைஞர்கள், யுவதிகளின் விருப்ப உணவு என்ற அடையாளம் பெற்றுவிட்டது பீட்ஸா. லேட்டஸ்ட் உணவுகளின் பட்டியலில் இடம்பிடித்துவிட்ட இந்த உணவு குழந்தைகள், பெரியவர்களையும்கூட விட்டுவைக்கவில்லை. பீட்ஸா, பிசா, பிட்சா, பிச்சா என விதவிதமான பெயர்களில் அழைக்கப்படும் இது, உலகில் மிகவும் அரதப் பழசான உணவு வகைகளில் ஒன்று!

பீட்ஸா என்பது இத்தாலிய நாட்டு உணவு. ‘பின்சா’ என்ற லத்தீன் மொழியிலிருந்து பீட்ஸா வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கி.மு. 3-ம் நூற்றாண்டிலேயே இந்த உணவை கிரேக்கர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சுடுமண் அடுப்பில் மிகவும் கெட்டியாகத் தட்டையான ரொட்டியைச் செய்து கிரேக்கர்கள் சாப்பிட்டதுதான் இன்றைய நவீன பீட்ஸாவுக்கு முன்னோடி. கி.மு.வில் தொடங்கி கி.பி. வரை இந்த பீட்ஸா காலம்காலமாகச் சாப்பிடப்பட்டு வந்தாலும், திடீரென்று உலகப் புகழ்பெற்றது கி.பி. 1800-களில்தான். ‘ஏழைகளின் உணவு’ என்று இத்தாலியில் இதை அழைத்திருக்கிறார்கள். இன்றோ அது வசதி படைத்தவர்களின் உணவாகிவிட்டது.

pizz_2889247a.jpg

சரி, இந்த உணவு உலகப் புகழ் பெற்றது எப்படி? அதற்கு ஒரு சுவையான ஃபிளாஷ்பேக் இருக்கிறது.

இத்தாலியின் ராணியாக இருந்தவர் மெர்கரிட்டா. இவர் தன் கணவர் ராக் உம்பர்டோவுடன் நேப்பிள் நகருக்கு ஒருமுறை வந்தார். அரண்மனைக்கு வந்ததும், வழக்கமான உணவாக இல்லாமல் வித்தியாசமான உணவைச் செய்துதரும்படி அரண்மனையின் தலைமை சமையல் கலைஞர் ரஃபேலுக்கு உத்தரவிட்டார்.

இத்தாலியிலேயே நேப்பிள் நகரில்தான் பீட்ஸா ரொட்டி மிகவும் பிரபலமாக இருந்தது. உழைக்கும் மக்கள் இதை விரும்பிச் சாப்பிட்டு வந்தார்கள்.

வித்தியாசமான உணவு என்றதும் சமையல் கலைஞருக்கு பீட்ஸா ரொட்டிதான் ஞாபகத்துக்கு வந்தது. ஏழைகள் சாப்பிடும் உணவு போல இல்லாமல், கொஞ்சம் மாற்றிச் செய்ய முடிவு செய்தார்.

தட்டையான ரொட்டியைச் செய்து அதில் இறைச்சி, பாலாடைக்கட்டி, தக்காளி, இலைதழைகள் ஆகியவற்றை ரொட்டியின் மீது பரப்பித் தயார் செய்தார். தக்காளி, பாலாடைக்கட்டி, இலைகள் ஆகியவற்றை இத்தாலியின் தேசியக் கொடி வடிவத்தில் அடுக்கினார். இந்த உணவை ராணியிடம் கொடுத்தார். அதன் ருசி ராணிக்குப் பிடித்துப்போனது. ஒரு பிடி பிடித்தார்.

ராணி விரும்பிச் சாப்பிட்ட அந்த உணவு இத்தாலியில் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமானது. போதாக்குறைக்கு அதற்கு ‘மெர்கரிட்டா பீட்ஸா’ என ராணியின் பெயரை வைத்து அழைக்கவும் தொடங்கினார்கள்.

இப்படி இத்தாலியின் பிரபலமான பீட்ஸா, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகைச் சுற்ற ஆரம்பித்தது. இத்தாலிக்குள் நுழைந்த அமெரிக்க, ஐரோப்பியப் படை வீரர்கள் மூலம் பீட்ஸா அந்த நாடுகளுக்கும் சென்றது. இப்படி உலகம் முழுவதும் பிரபலமானது பீட்ஸா.

1991-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த பொருளாதாரச் சீர்திருத்தம், உலகமயமாக்கல் காரணமாக இங்கேயும் பீட்ஸா காலடி எடுத்து வைத்தது.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றாற்போல பீட்ஸாவில் வைக்கப்படும் உணவு வகைகள் மாறுகின்றன. இந்தியாவில் பெரும்பாலும் தந்தூரி சிக்கன், பன்னீர் ஆகியவற்றை வைத்தும் காரமாகவும் பீட்ஸாவைத் தருகிறார்கள். இன்று இந்திய நகரங்களில் பீட்ஸா கார்னர்கள் இல்லாத இடமே இல்லை.

இந்தியாவில் பாரம்பரிய உணவை எல்லோரும் மறந்துவரும் நிலையில், உலகின் மிகவும் பழைய உணவுகளில் ஒன்றான பீட்ஸாவுக்குக் கொடிபிடிப்பது ‘செம காமெடி’ இல்லையா?

tamil.thehindu

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று..

ஜுன் - 

 

1605 : ரஷ்­யாவில் 3 மாதங்கள் மாத்­திரம் ஆட்­சி­யி­லி­ருந்த சார் மன்­ன­ரான 16 வய­தான 2 ஆம் பியோடர் படு­கொலை செய்­யப்­பட்டார்.

 

751varalaru.jpg1819 : எஸ்.எஸ். சவன்னா எனும் நீராவிக் கப்பல் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து புறப்­பட்டு இங்­கி­லாந்தை அடைந்­தது. அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தைக் கடந்த முத­லா­வது நீராவிக் கப்பல் இது­வாகும்.

 

1837 : பிரிட்­டனில் விக்­டோ­ரியா ராணியார் ஆட்­சிக்கு வந்தார்.

 

1877 : உலகின் முத­லா­வது வர்த்­தக தொலை­பேசி சேவை கன­டாவின் ஹமில்டன் நகில் அலெக்­ஸாண்டர் கிரஹம் பெல் ஆரம்­பித்தார்.

 

1877 : இந்­தி­யாவின் மிக பர­ப­ரப்­பான ரயில் நிலை­ய­மான விக்­டோ­ரியா ரயில் நிலையம் மும்­பையில் திறக்­கப்­பட்­டது.

 

1895 : உலகின் மிக பர­ப­ரப்­பான செயற்கை நீர்­வழி பாதை­யான கீல் கால்வாய் ஜேர்­ம­னியில் உத்­தி­யோ­கபூர்வமாக திறக்­கப்­பட்­டது.

 

1919 : பியூர்ட்டோ ரிக்­கோவில் ஏற்­பட்ட தீவி­பத்தில் 150 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1940 : பிரான்ஸ் மீது இத்­தாலி படை­யெ­டுத்­தது. இப்­ப­டை­யெ­டுப்பு தோல்­வியில் முடிந்­தது.

 

1944 : பின்­லாந்து நிபந்­த­னை­யற்ற வகையில் சர­ண­டைய வேண்­டு­மென சோவியத் யூனியன் வலி­யு­றுத்­தி­யது.

 

1945 : ஹிட்­லரின் ஆட்­சிக்­கா­லத்தில் ஜேர்­ம­னியின் ரொக்கெட் நிர்­மா­ணத்­துக்கு முக்­கிய பங்­காற்­றிய விஞ்­ஞா­னி­யான வார்ன்ஹர் வொன் பிரவுண் மற்றும் அவரின் குழு­வி­னரை அமெ­ரிக்­கா­வுக்கு இடம்­மாற்­று­வ­தற்கு அமெ­ரிக்க ராஜாங்க செயலர் அங்­கீ­காரம் வழங்­கினார். பின்னர் அமெ­ரிக்க ரொக்கெட் தொழில்­நுட்ப அபி­விருதிக்கு இவர்கள் பெரும் பங்­காற்­றினர்.

 

1959 : கன­டாவில் ஏற்­பட்ட சூறா­வ­ளி­யினால் 59 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1959 : பிரான்­ஸி­ட­மி­ருந்து மாலி கூட்­ட­மைப்பு சுதந்­திரம் பெற்­றது.

 

1963 : கியூப ஏவு­கணை விவ­கார சர்ச்­சை­யையை அடுத்து, அமெ­ரிக்க, சோவியத் யூனியன் தலை­வர்­க­ளுக்கு இடை­யி­லான அவ­சர உரை­யா­ட­லுக்­காக “சிவப்பு தொலை­பேசி” எனும் விசேட தொலை­பேசி இணைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1982 : பிரிட்­ட­னு­ட­னான போக்­லாந்து யுத்­தத்தில் ஆர்­ஜென்­டீ­னாவின் கடைசி இரா­ணுவத் தளம் சர­ண­டைந்­தது.

 

1991 : கிழக்கு மேற்கு ஜேர்மனிகள் மீள இணைக்கப்பட்டதையடுத்து,  ஜேர்மனியின் தலைநகரை பொன் நகரிலிருந்து மீண்டும் பேர்லினுக்கு மாற்றுவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகாரமளித்தது.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜூன் 20: உலக அகதி தினம் இன்று..
world refugee day 2016

13495248_1160311474027641_51700128559343

 

***அகதியின் கடிதம்****

நாங்கள் அகதிகள்,
முகவரி மறந்த துறவிகள்!!

எங்கள் ஊரில் பிறந்தோம்,
உங்கள் ஊரில் வளர்ந்தோம்
பிறந்த ஊர் எப்படி இருக்கும்,
அதை என்றோ மறந்தோம்!!

பிறக்க ஒரு ஊர்,
பிழைக்க ஒரு ஊர்
உழைக்க மட்டும் எங்கள் உடல்,
வறுமையின் வரிகளில் இந்த மடல்!!

அன்னையின் அரவணைப்பு இல்லை,
தந்தையின் வழிகாட்டல் இல்லை
பிறந்த போதே அடிமைகளானோம்,
எவரின் பிழையோ இன்று அகதிகளானோம்!!

அரசனின் பிள்ளைகள் அரசர்களாக,
கலைஞனின் பிள்ளைகள் கலைஞர்களாக,
எங்கள் பிள்ளைகளும் அகதிகளாக,
உலக நியதி இதில் மட்டும் ஒத்து போகிறது!!

விழுந்த போதிலும் எழுந்து நிற்கிறோம்!!
சரிந்த போதிலும் புரிந்து கொள்கிறோம்!!
கண்ணீர் விட்டு அழுகிறோம்,
கரை சேர துடிக்கிறோம்!!

தோல்வியின் சகோதரர்கள் நேற்று,
வரலாற்றின் எழுத்துபிழைகள் இன்று,
முன்னேற்றத்தின் முதுகெலும்பாய் நாளை
மீண்டும் வருகிறோம்,
தாய் மண்ணில் தளிர் விட்டு வளர்கிறோம்,
அன்பு கரம் நீட்டுங்கள்,
அதரவு காட்டுங்கள்!!

  • தொடங்கியவர்

13497527_1066151203433573_41555037338232

நடிகை நீது சந்திரா பிறந்தநாள்
Happy Birthday Neetu Chandraa

 
  • தொடங்கியவர்
வெனிஸ் நகரம் வெள்ளத்தில் மிதந்த போது...
 

இத்­தா­லியின் வட­ப­கு­தி­யி­லுள்ள வெனிஸ் நகரம் மிதக்கும் நகரம் என வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது. 117 தீவு­களை இணைத்து ஸ்தாபிக்­கப்­பட்ட இந்­ந­கரின் கால்­வாய்­களும் பெரும் பிரச்­சித்தி பெற்­றவை. அண்­மையில் ஏற்­பட்ட கடும் மழை கார­ண­மாக வெனிஸ் நகரின் வீதி­க­ளிலும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டது.

 

17424venice2.jpg

 

ஆனால், அங்கு வசிக்கும் மக்­களோ சுற்­றுலா பய­ணி­களோ இது குறித்து அதிகம் அலட்­டிக்­கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

 

17424venice1.jpg

 

வெள்ள நீருக்கு மத்­தியில் கதி­ரை­களில் அமர்ந்­த­வாறே அவர்கள் அவர்கள் வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

 

17424venice2455.jpg

17424venice234.jpg

 
 
metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13495581_1066153526766674_29190792774511

இங்கிலாந்தின் முன்னாள் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக விளங்கிய, தென் ஆபிரிக்காவில் பிறந்த அலன் லாம்பின் பிறந்தநாள் இன்று.
Happy Birthday Allan Lamb

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p106a.jpg

facebook.com/karthekarna: ‘ மீ டூ’ என்பதற்குப் பதில் `நானுந்தேன்’ என்று சொல்லிப்பாருங்கள். வார்த்தையில் இன்னும் கொஞ்சம் தேன் கலக்கும்!

facebook.com/araathu.officialpage: சினிமாக்காரர்கள், ஒரு புதுவகையான மார்க்கெட்டிங் உத்தியைக் கண்டுபிடித்துள்ளனர். அதற்குப் பெயர்... லீக் மார்க்கெட்டிங்!

facebook.com/bnwruler: என் வாழ்வில் சந்திக்கும் நபர்களில் 99 சதவிகிதம் பேர், என்னைச் சந்தித்த உடன் டயட்டீஷியன் ஆகிவிடுகிறார்கள்!

twitter.com/pshiva475:  காதலிக்கிறப்ப மொபைல் நெட்வொர்க்கின் அத்தனை டாரிஃப்களையும், மேரேஜுக்கு அப்புறம் கால் கிலோ வெண்டக்காய், சுண்டக்காயின் ரேட்டையும் தெரிஞ்சுக் கிட்டேன். # சாதனை!

twitter.com/paidkiller: என்னை நானே கதறக் கதற அடிச்சி, மிதிச்சி, தரதரனு இழுத்துட்டுப் போறேன் ஆபீஸுக்கு!

twitter.com/sundartsp:  பட ஆடியோ ரிலீஸ் ஆன ரெண்டு மணி நேரத்தில் பாடல் கேட்க முடியுது... ஆனா, ஸ்கூல் ஆரம்பிச்சு பத்து நாட்கள் கழிச்சும் புக் வரலை... பாடம் படிக்க முடியலை!

twitter.com/BoopatyMurugesh:  இங்கிலீஷ் கத்துக்க ஐடியா குடுடான்னா, தினம் இங்கிலீஷ் பேப்பர் படிக்கவாம். அது புரிஞ்சா, நான் ஏன் உன்கிட்ட ஐடியா கேக்குறேன்?

twitter.com/urs_priya: ஓர் அலைபேசி அழைப்பு தவறவிடும் நேரம்... ஒரு பொய் உருவாவதற்கான நேரம்!

p106b.jpg

twitter.com/indirajithguru: எனது அன்றைய ராசிபலன், மொபைலின் வலது பக்க உச்சியில் சதவிகிதக் கணக்கில் இருக்கிறது!

twitter.com/teakkadai:  பேஷன்டைப் பார்க்கிறதைவிட பேஷன்டைப் பார்க்க வர்ற சொந்தக்காரங்களைக் கவனிச்சு அனுப்புறதுதான் அதிக வேலை வாங்குது!

twitter.com/Eakalaivan: பேரு தெரிஞ்ச ஒரு சாப்பாட்டைச் செஞ்சா... அவரு பேரு Cook. சாப்பாட்டை மொதல்ல செஞ்சு அதுக்கு அப்புறமா ஒரு பேர் வெச்சா... அவரு Chef!

p106c.jpg

twitter.com/King_Deera: ஒரு தீப்பெட்டியின் முதல் மற்றும் கடைசிக் குச்சியைக் கையாள்வதில் வெளிப்படுகிறது நம் வாழ்க்கைமுறை!

twitter.com/GunaSeaker:  இப்பெல்லாம் ஆறு வயசுல ஒரு பையன் Girl பத்தி பேசுறான். அந்த வயசுல நான் எல்லாம் பென்சிலைச் சீவி சுடுதண்ணியில போட்டா, ரப்பர் ஆகும்னு பார்த்திட்டிருந்தேன்!

facebook.com/altappu.vinoth: `வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா... உன்னுடைய கூந்தலில் புது பூச்சூடவா’ இந்தப் பாடல் உங்களுக்குப் பரிச்சயமானது என்றால், உங்கள் பள்ளி வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டது.ஐபாட்களோ, ஸ்மார்ட்போன்களோ இல்லாத காலத்தில், எங்களுக்கு நல்ல திரையிசையை அறிமுகப்படுத்தியது டவுன்பஸ் டிரைவர்கள். பஸ் முழுக்க இளையராஜாவும் தேவாவும் எஸ்.ஏ. ராஜ்குமாருமே ஆக்கிரமித்திருந்தனர்.

ஆடியோ கேசட்டின் இரண்டு பக்கங்களிலும் சேர்த்து 12 பாடல்கள்தான் என்ற நிலையில், டிரைவர்களின் இசைத் தேர்வு மிகவும் கண்டிப்பானதாக இருந்தது.

`சுந்தரண்ணா... கேசட்டை மாத்துங்ணோவ்...’ என டிரைவர் ஸீட் வரை மெனக்கெட்டுச் சென்று சொல்லும் ஊர்க்காரர்களது உரிமை, அவர்களின் பொறுப்பை இன்னுமும் அதிகமாக்கியிருந்தது. பாடல் கேட்பதற்காகவே, `இன்னும் கால் மணி நேரத்துல சரவணா வந்துரும். அதுல போலாம்...’ என பஸ் பாஸ் இருந்தும், அரசு பஸ்ஸை அனுப்பிவிட்டு டவுன்பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் அளவு அன்று பொறுமையும் நேரமும் இருந்தன. என்ன காரணமோ கேசட்டை மாற்றும் உரிமையை மட்டும் டிரைவரே வைத்திருந்தார்... கண்டக்டருக்கு எட்டாத இடத்தில்.

p106d.jpg

கேசட்டில் பாடல் ஏற்றித் தர பல கடைகள் இருந்தன. அந்தக் கடைகளின் கண்ணாடி முகப்பு முழுவதும் கேசட்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்.பெரும்பாலும் இளையராஜா அல்லது மோகனின் படம் தாங்கிய அட்டைகள். கேசட் வாங்க முடியாத எங்களுக்கு என பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் சாணித்தாளில் அச்சடித்த பாட்டுப் புத்தகம் விற்பார்கள். ஒன்றாவது வாங்காமல் வந்தது இல்லை. எஸ்.டி.டி பூத் வைத்திருந்தவர்களும் பாட்டுப் புத்தகம் விற்றவர்களும்... எந்தப் புள்ளியில் மறைந்தார்கள் என்பது வியப்பாகவே இருக்கிறது.

ஆடியோ கேசட், mp3 சிடி என மாறியபோதே நம் இசை ரசனை நீர்த்துவிட்டது. பாடல் வரிகள் முழுக்க ஞாபகம் இருக்கும் பாடல்கள் அனைத்தும் பள்ளிப் பருவத்தில் கேட்டவையாகவே இருக்கின்றன.இப்போது எந்தப் பாடலையும் மாற்றாமல் முழுதாகக் கேட்கும் அளவுக்குப் பொறுமை இல்லை. 4,000 பாடல்கள் இருக்கும் ஸ்மார்ட்போன், இறங்குவதற்குள் வெறும் நான்கே பாடல்கள் கேட்க முடிந்த டவுன்பஸ் அனுபவத்தைத் தருவது இல்லை.

சென்ற வாரம் இருந்த எல்லா பாடல்களையும் அழித்துவிட்டு, சற்று கவனமாக காப்பிசெய்த பாடல்களில் ஒன்றுதான் `கண்ணன் வருவான்' படத்தில் வரும் இந்தப் பாடல். இன்று யதேச்சையாக காரில் ஒலித்தபோது அதை வழக்கமாகக் கேட்ட பஸ் நம்பர், முகம் மங்கலான ஏதோ ஒரு தாவணிப் பெண் வரை ஞாபகங்களைக் கிளறிவிட்டது. இசையைத் தாண்டிய அற்புதம், இந்த உலகில் இல்லைதானே. டவுன்பஸ்ஸில் ஏறவேண்டிய அவசியமே இல்லாமல் வளரும் இந்தக் கால குழந்தைகளுக்குக் கேட்ட உடனே ஐபாட் கிடைக்கும். இந்த அனுபவங்கள் கிடைக்குமா என்பதுதான் கேள்வி!

vikatan

  • தொடங்கியவர்

13442217_10154696368724578_4965400734188

  • தொடங்கியவர்

அதிர்ஷ்டக்கார ஆமை!

 
turtle_2876958f.jpg
 

தாய்லாந்தில் சில மாதங்களுக்கு முன் தெருவில் ஆமை ஒன்று மெதுவாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று அதன்மீது ஏறிவிட்டது. அந்த ஆமை நிச்சயம் இறந்து விட்டது என்றே எல்லோரும் முடிவெடுத்தார்கள். ஆனால், அங்கிருந்த விலங்குநலக் கூட்டமைப்பு உடனடியாகச் செயல்பட்டு அந்த ஆமையின் உயிரைக் காப்பாற்றிவிட்டது.

நாளிதழில் இது ஒரு முக்கியச் செய்தியாக இடம்பிடித்தது. அந்த ஆமையைக் காண மருத்துவமனைக்கு பலரும் வந்தார்கள். ‘ஜிக்கோ’ என்று அந்த ஆமைக்குப் பெயரிடப்பட்டது. ‘பாங்காக் போஸ்ட்’ என்ற நாளிதழ் தினமும் தனது பெட்டிச் செய்தியில் ஜிக்கோவின் உடல்நல முன்னேற்றம் பற்றித் தகவல் வெளியிட்டது.

என்னதான் உறுதியான மேல் ஒடு என்றாலும், லாரி ஏறினால் தாங்குமா? ஜிக்கோவின் மேல் ஓடு உடைந்துவிட்டது. அதற்கு ஃபைபர் கிளாஸில் ஒரு ஓடு செய்து மருத்துவர்கள் பொருத்தி யிருக்கிறார்கள். உலகிலேயே ஃபைபர் கிளாஸ் ஓடு கொண்ட ஆமை ஜிக்கோ மட்டும்தான்.

மருத்துவர் நான்தரிகா என்பவரின் பங்கு இதில் முக்கியமானது. “இருபது வயதான ஜிக்கோவின் உடல் உறுப்புகளில் பலவும் சிதைந்திருந்தன. சிகிச்சையின்போது அது தொடர்ந்து அழுதது. இப்போது அது என் குரலை கண்டுகொள்கிறது. எங்கிருந்து கூப்பிட்டாலும் என்னைத் திரும்பிப் பார்க்கும்” என்கிறார்.

இப்போது ஆமை குணமாகிவிட்டது. இனி, அந்தச் செயற்கை ஓடுதான் அதற்கு நிரந்தரமா? இல்லை மீண்டும் இயற்கையான ஓடு அதன்மீது கொஞ்சம் கொஞ்சமாக வளரும். அப்போது ஃபைபர் கிளாஸ் ஓடு தானாகவே உடைந்துவிடும்.

t3_2876959a.jpg

ஆமைகள் பல கோடி வருடங்களுக்கு முன்பே தோன்றியவை. சொல்லப் போனால் டைனசார்களுக்கு முன்பே வாழ்ந்தவை. இதன் மேல் ஓடு தொடர் எலும்புத் தகடுகளால் ஆனது. அதற்கும் மேல் கொம்புகளாலான ஒரு படலமும் உண்டு. இதன் ஓடு மிகவும் வலிமையானது என்று சொல்லப்பட்டாலும், அது மிகவும் நுட்பமானதும்கூட. அந்த ஓட்டை லேசாக தொட்டால்கூட ஆமையால் அதை உணர்ந்து கொள்ள முடியும். காரணம், அந்த ஓட்டின் இடையே நிறைய நரம்புகள் உள்ளன.

ஆமை போன்ற விலங்குகள் தங்கள் ஓடுகளை கழற்றி வைத்துவிட்டு இயங்க முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். அதெல்லாம் நடக்காத காரியம். ஏனென்றால் ஆமையின் பல எலும்புகள் அந்த ஓட்டின் உட்பகுதியோடு அழுத்தமாக இணைக்கப்பட்டுள்ளன.

ஆமை தொடர்பான இன்னொரு செய்தி. இது நடந்து ஐந்து வருடங்களாகிவிட்டது. கனடாவில் உள்ள டொரான்டோ விலங்கியல் மையத்திலிருநது மருத்துவர்களுக்கு ஓர் அவசரச் செய்தி வந்தது. “வடேர் என்று பெயரிடப்பட்ட ஓர் ஆமையின் வாலிலும், கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு கண்ணைக் காணோம். இன்னொரு கண் காடராக்ட் காரணமாகப் பார்வை தெரியாமல் இருக்கிறது. உதவுங்கள்”.

ஆமைக்கு யாரும் காடராக்ட் அறுவை சிகிச்சை செய்ததில்லை. என்றாலும் டாக்டர் ஜோசப் வோல்ஃபர் என்பவர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.

t_2_2876960a.jpg

tamil.thehindu

  • தொடங்கியவர்

p112a.jpg

தென்னிந்திய சினிமாவின் அட்ராக்‌ஷன் அழகிகள் இவர்கள்...

டோலிவுட் நித்யா ஷெட்டி

ஹைதராபாத் பேபி. படிச்சதெல்லாம் மும்பை. தெலுங்கு சினிமாவில் 20 படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஹிட் அடித்தவர் பிரேக்குக்குப் பின் ‘டாகுடு மோதா தண்டோகர்’ படத்தில் அறிமுகமாகிறார். ‘20 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும் ஒரு படத்தின் ஷூட்டிங்கும் இப்போது நினைவில் இல்லை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் என் ரோல் செம ஷாக்கிங்கானது!’’ என ட்ரெய்லர் ஓட்டும் நித்யா எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் பட்டதாரி. ‘அந்தக் காலத்து நடிகை சாவித்ரி போல பேர் எடுக்க அவ்ளோ ஆசை’ எனச் சொல்லும் நித்யா பேபிக்குத் தமிழ் சினிமா மீதும் சாவித்ரி போலவே ஒரு கண். அப்போ இக்கட ரா மா!

மல்லுவுட் அஞ்சலி அனீஷ் உபாசனா

p112b.jpg

ர்ணாகுளத்து தேவதை. ஸ்கூல், கல்லூரி காலத்திலேயே மாடலிங்கில் புகுந்து கேரளத்தின் டெக்ஸ்டைல்ஸ் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சினிமாவுக்காக பாக்யாஞ்சலி எனப் பெயர் மாற்றிக்கொண்டு கொச்சினில் சேனல் தேவதையாய் வாழ்க்கையை ஆரம்பித்தவருக்கு ‘லா கொச்சின்’ மியூஸிக் ஆல்பத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஐந்து ஆல்பங்களில் பாடி நடித்தவருக்கு ‘வெனிசிலே வியாபாரி’, ‘சீன் 1 நம்முடே வீடு’, ‘ஏபிசிடி’, ‘5 சுந்தரிகள்’ என ஹிட் படங்களில் துக்கடா ரோல்கள் அழைத்தன. ‘பட்டம் போலே’, ‘100 டிகிரி செல்சியஸ்’ ஆகிய இரண்டு படங்களும் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்க லேட்டஸ்டாய் துல்ஹரின் அம்மாவாக ‘கம்மட்டிப்பாடம்’ வாய்ப்பில் ஜொலித்தார். சினிமா போட்டோகிராஃபர் அனீஷ் உபாசனாவின் மனைவி என்பது உப தகவல். அஞ்சலிக்கு கல்யாணம் ஆகிடுச்சா என்ட பிதாவே!

சாண்டல்வுட் யக்னா ஷெட்டி

p112c.jpg

ன்னடத்துப் பைங்கிளி படிச்சது எம்.பி.ஏ. ‘ஒன்டு ப்ரீத்திய கதே’ படத்தில் சங்கர் ஆர்யனுக்கு ஜோடியாக ஹீரோவாக அறிமுகமானவருக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற பாராட்டுகள் கிடைத்தது. ‘எடெலு மஞ்சுநாதா’, ‘லவ் குரு’ படங்களில் பட்டையைக் கிளப்பிய நடிப்பால் ஃபிலிம்ஃபேர் விருது அள்ளினார். சிவராஜ்குமாருக்கு ஜோடியாக ‘சுக்ரீவா’, முன்னாவுக்கு ஜோடியாக ‘உலிதவறு கன்டந்தே’ என நடித்த படங்கள் எல்லாமே நடிப்பைப் பேசின. ராம் கோபால் வர்மாவின் ‘கில்லிங் வீரப்பன்’ படத்தில் இவர்தான் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியாக நடித்திருந்தார். அம்பேத்கரின் மனைவி ரமாபாயின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரமாபாயாக நடித்துக் கொண்டிருக்கிறார். முத்துலட்சுமி கேரக்டர் செம!

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

ஜுன் - 21

 

1529 : இத்­தா­லியின் வட பகு­தி­யி­லி­ருந்து பிரெஞ்சுப் படை­களை ஸ்பானிய படைகள் வெளி­யேற்­றின.

 

752varalaru---space-ship-one.jpg1791 : பிரெஞ்சுப் புரட்­சி­யின்­போது, மன்னன் 16 ஆம் லூயியும் அவரின் குடும்­பத்­தி­னரும் பாரிஸ் நக­ரி­லி­ருந்து தப்பிச் செல்ல ஆரம்­பித்­தனர்.

 

1898 : குவாம் தீவை ஸ்பெய்­னி­ட­மி­ருந்து அமெ­ரிக்கா கைப்­பற்­றி­யது.

 

1900 : அமெ­ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடு­க­ளுக்கு எதி­ராக சீனா உத்­தி­யோ­கபூர்வமாக போர்ப் பிர­க­டனம் செய்­தது.

 

1930 : பிரான்ஸில் இரா­ணு­வத்­துக்­கான ஒரு வருட கட்­டாய ஆட்­சேர்ப்பு அமுல்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1942 : அமெ­ரிக்­காவின் ஓரிகன் மாநில கரை­யோ­ரத்­துக்கு அருகில் தோன்­றிய ஜப்­பா­னிய நீர்­மூழ்­கிகள் 17 ஷெல்­களை ஏவின. அமெ­ரிக்க பிர­தான நிலப் ­ப­ரப்பில் ஜப்­பா­னிய படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு சில தாக்­கு­தல்­களில் இதுவும் ஒன்­றாகும்.

 

1948 : நீண்­ட­நேரம் இயங்­கக்­கூ­டிய ஒலிப்­ப­திவுத் தட்­டுக்­களை கொலம்­பியா ரெக்கோர்ட்ஸ் நிறு­வனம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

 

1970 : அமெ­ரிக்­காவின் ரயில் பாதை நிர்­மான நிறு­வ­ன­மான “பென் சென்ட்ரல்” நிறு­வனம் வங்­கு­ரோத்­தா­ன­தாக அறி­விக்­கப்­பட்­டது. அமெ­ரிக்க வர­லாற்றில் வங்­கு­ரோத்­தான மிகப்­பெ­ரிய நிறு­வனம் இது­வாகும்.

 

1957 : கன­டாவின் முதல் பெண் அமைச்­ச­ரவை அமைச்­ச­ராக எலன் பெயர்­குளோவ் பத­வி­யேற்றார்.

 

1982 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரொனால்ட் றீகனை படு­கொலை செய்ய முயன்­ற­தாக குற்றம் சுமத்­தப்­பட்ட ஜோன் ஹின்க்லே மன­நிலை பாதிப்­புக்­குள்­ளா­ன­வ­ரென்­பதால் விடு­த­லை­யானார்.

 

2004 : விண்­வெ­ளிக்குச் சென்ற முதல் தனியார், விண்­வெளி ஓடம், என்ற பெரு­மையை ஸ்பேஸ்ஷிப் வன் விண்­வெளி ஓடம் அடைந்­தது.

 

2006 : புளூட்­டோவில் புதி­தாக கண்­டு­ பி­டிக்­கப்­பட்ட சந்­தி­ரன்­க­ளுக்கு நிக்ஸ், ஹைட்ரா எனப் பெய­ரி­டப்­பட்­டது.

 

2012 :  இந்­தோ­னே­ஷி­யாவின் ஜாவா தீவுக்கும் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கும் இடையில் 200 பேருடன் பயணம் செய்து கொண்டிருந்த படகு கவிழ்ந்ததால் 17 பேர் உயிரிழந்தனர் 70 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.

 
.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜூன் 21: உலக இசை தினம் இன்று கொண்டாடப்படுகிறது

13490589_1161028807289241_59874225771456

இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்தில் இன்று உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.

இசை கேட்டால் புவி அசைந்தாடும், இசை ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது. இசையில், வரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.

 

13516648_736068679829010_338542967502920

  • தொடங்கியவர்
அமெரிக்காவில் தளபாட மழை
 

மழை காலத்தில் மீன் மழை பெய்­வது இலங்­கை­யர்­க­ளுக்கு ஆச்­ச­ரி­ய­மா­ன­தல்ல. ஆனால், அமெ­ரிக்­காவில் அண்­மையில் “தள­பாட மழை” பெய்­துள்­ளது.


17458furntrs.jpg

 

புளோ­ரிடா மாநி­லத்தின் மியாமி நகரில் அண்­மையில் கடும் காற்று வீசி­யது. இத னால், வானு­யர்ந்த அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­களில் வைக்­கப்­பட்­டி­ருந்த கதி­ரை கள், சூரிய குளி­ய­லுக்­கான “சன் லோஞ்­சர்”கள் காற்­றினால் தூக்கி எறி­யப்­பட்­டன.


இக் ­கட்­டடங்­களின் கீழே இருந்­த­வர்­க­ளுக்கு இக்­ காட்­சிகள் வானத்­தி­லி­ருந்து கதிரை மழை பெய்வதைப் போன்று இருந்தனவாம்.

metronews.lk

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

கதிரைமழையைக் கொட்டிய காற்று கரன்சி மழையையும் கொட்டி இருக்கலாம்....!  tw_blush:

  • தொடங்கியவர்
சர்வதேச யோகா தினம் இன்று
 

சர்­வ­தேச யோகா தினம் ((International Yoga Day) இன்று உல­கெங்கும் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. 

 

1744201.jpg

 

17442_international-yoga-day.jpg5000 வருட பழைமை வாய்ந்த யோகா­சனக் கலையின் பெரு­மையை உலகம் முழு­வதும் பரவச் செய்யும் வகையில் சர்­வ­தேச யோகா தின­மாக ஆண்டின் ஒரு நாளை ஐக்­கிய நாடுகள் சபை அறி­விக்க வேண்டும் என இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி ஐ.நா பொதுச்­ச­பையில் 2014 செப்­டம்பர் 27 ஆம் திகதி வலி­யு­றுத்தி உரை­யாற்­றி­யி­ருந்தார்.

 

ஜூன்  21 ஆம் திகதியை அவர் இதற்­காகப் பரிந்­து­ரைத்­தி­ருந்தார். இதை­ய­டுத்து,  ஜூன் 21 ஆம் திக­தியை, சர்­வ­தேச யோகா தின­மாக' அறி­விக்கும் தீர்­மா­னத்தை ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை 2014 டிசம்பர் 11 ஆம் திகதி தீர்­மானம் நிறை­வேற்­றி­யது.

 

முத­லா­வது சர்­வ­தேச யோகா தினம் கடந்த வருடம் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. இவ்­ வ­ருட யோகா தினம் இன்று அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் உலகின் பல நாடு­களில் ஏற்­க­னவே யோகா­சனத் தின நிகழ்­வுகள், பயிற்­சிகள், ஒத்­தி­கைகள் கடந்த சில தினங்­களில் நடத்தப் பட்டன.

 

1744202.jpg

 

17442590838-01-02.jpg

 

இந் நிகழ்வுகளின் போது பிடிக்கப்பட்ட சில படங்களை இங்கு காணலாம்.

 

1744204.jpg

 

174422016-06-19T125218Z_780913621_S1AETK

 

174422016-06-19T093325Z_36685382_S1AETKT

 

metronews.lk

நிலத்தில் மட்டுமல்ல... நீரிலும் யோகா!

YOGA1.jpg
 

யோகா செய்திட யோகம் வேண்டும் என்பார்கள். அந்த வகையில்  அம்ருதா பெரிய அதிர்ஷ்டசாலி என்றே சொல்லலாம். யோகா பயிற்சியில்  பத்து வயதில் ஆரம்பித்த ஆர்வம், இன்றைக்கு அம்ருதாவை பெரும் சாதனைகளுக்குச் சொந்தக்காரராக ஆக்கியிருக்கிறது. யோக சாஸ்திரத்தின் மூலங்களை விதைத்த பதஞ்சலி முனிவருக்கு, நடராஜப் பெருமானின் தரிசனம் கிடைத்த சிதம்பரம்தான் இவருடைய பிறந்த ஊர் என்பது கூடுதலான விசேஷம்!
 

2013-ல்,  ஏழு நிமிடங்கள் 'லகு வஜ்ராசனம்' செய்து லிம்கா ரெக்கார்ட் செய்தது, அடுத்த வருடமே 20 நிமிடங்களுக்கு அந்த ஆசனத்தைச் செய்து, தனது ரெகார்டை தானே முறியடித்தது... என நீள்கிறது இவரது சாதனைப் பட்டியல். எனினும் பேச்சிலும் பழக்கத்திலும் அப்படியொரு அடக்கம், அமைதி!
 

‘‘எல்லாம் யோகா செய்த மாயம்’’ என்று விழிகள் விரிய சிரிக்கிறார் அம்ருதா.
 

சொல்லுங்க... யோகால ஆர்வம் எப்படி...?
 

“சின்னவயசுல அம்மாக்கிட்ட கத்துக்கிட்டதுதான். கரெக்டா சொல்லணும்னா பத்து வயசுல ஆரம்பிச்சது. விளையாட்டாதான் துவங்கினேன் என்றாலும், மனசுலேயும் உடம்பு ரீதியாவும் அப்படியொரு பிட்னஸ்! விளையாட்டோ, படிப்போ எந்த விஷயமா இருந்தாலும் ரிசல்ட்டில் ஒரு துல்லியம் இருந்துச்சி. எல்லாத்துக்கும் காரணம் யோகாதான்னு உணர ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் யோகாவில் அதிகம் கவனம் செலுத்த துவங்கினேன். அதுமட்டுமில்லாம, ஆரம்பத்துல யோகா சம்பந்தமா நான் கலந்துக்கிட்ட போட்டிகள்ல அடுத்தடுத்து கிடைத்த வெற்றிகளும் உந்துதலா இருந்துச்சின்னு சொல்லலாம்!’’ என்றவர், ‘‘யோகாவில் தன் குரு நடராஜன் சார்’’ என்கிறார் பயபக்தியோடு.

 

YOGA2.jpg

அடுத்து அம்ருதாவிடம் அவரது சாதனைகள் குறித்து கேட்டோம்.
 

‘‘நிறைய போட்டிகள்... நிறைய பதக்கங்கள். 2013-ல் விளையாட்டா ஒரு விஷயம் செய்தேன். அதுவே சாதனையாயிடுச்சு’’ என்று ஒரு குழந்தையின் குதூகலத்தோடு சிரித்தவர், தொடர்ந்தார்.
 

‘‘லகு வஜ்ராசனம்னு சொல்வாங்க. அந்த ஆசனத்தை 7 நிமிடங்கள்  செய்தது, 2013-ல் லிம்கா ரெக்கார்ட் ஆனது. அடுத்த வருடம் அதே ஆசனத்தை 20 நிமிடங்களுக்குச் செய்து, முந்தைய வருட ரெகார்டை நானே பிரேக் செய்தேன்’’ என்கிறார் பெருமிதத்தோடு.
 

லகு வஜ்ராசனம் - பெயரே ஈஸியா செய்யலாம்னு சொல்லுதே. அப்புறம் எப்படி...?


நமது சந்தேகத்தைப் புரிந்தகொண்டவராக புன்னகைத்தவர், ‘‘சின்னப் பசங்க அதாவது சிறு வயதில் செய்வதற்கு ஈஸியா இருக்கும். டீன் ஏஜ்லயும், பெரியவங்களும் பண்றது கஷ்டம்’’ என்றவர், தனது அடுத் தடுத்த சாதனைகளையும் பகிர்ந்துகொண்டார்.
 

‘‘2015 மே மாதம், 2 மணி 45 நிமிடங்களில் 1008 ஆசனங்கள் செய்து, இந்தியன் புக் ஆஃப் ரெகார்ட்ஸ், தமிழ்நாடு புக் ஆஃப் ரெகார்ட்ஸ், ஏசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்ல எல்லாம் இடம்பெற்றது மறக்க முடியாதது. குறிப்பா ‘வேகன் மாரத்தான்’!’’ என்றவரை இடை மறித்தோம்.
 

அதென்ன வேகன் மாரத்தான்?
 

‘‘இயற்கை உணவின் அவசியத்தை உணர்த்தும் ஒரு முயற்சியாக, தொடர்ந்து 27 மணி நேரம் யோகாவில் ஈடுபட்டது!’’ என்று கூறி சிரித்தவர் தொடர்ந்தார்.
 

YOGA3.jpg

‘‘ஒருமுறை வேகன் டயட் குறித்த அவசியத்தைப் பற்றி விவரித்த கடலூரைச் சேர்ந்த இயற்கை உணவு ஆர்வலரான சி.கே.அசோக்குமார் சார், வேகன் டயட் மூலம் சர்க்கரை நோய், புற்று நோயையெல்லாம் பூரணமா குணமாக்க முடியும்னு சொன்னார். அதாவது நான்வெஜ் மட்டுமல்ல, பால்பொருட்கள் கூட சேர்க்காம, சமைக்காத உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்வதுதான் வேகன் டயட். அசோக் சார் சொன்னது மனசில் அழுத்தமாக பதிஞ்சு போச்சு. என்னோட அப்பாவுக்கு சுகர் பிரச்னை, கொலஸ்டரால் அளவில்  நிறைய பிரச்னைகள் இருக்க, அவர் வேகன் டயட் ட்ரை பண்ணார். ரிசல்டும் நல்லா கிடைச்சது. இதை மற்றவங்களுக்கும் கொண்டு சேர்த்தால் நல்லாருக்குமேன்னு தோணுச்சு.
 

ஏற்கெனவே எங்க அம்மா, அவங்களோட கிளாசஸ்ல இதுபற்றி தொடர்ந்து சொல்லிக்கிட்டுதான் இருகாங்க. ஆனாலும், இதுகுறித்து  ஏதேனும் ஒருவகையில் சட்டுன்னு ஒரு கவன ஈர்ப்பு கொடுக்கலாமேன்னு    தோணுச்சி. அப்போதான் ஒரு விழிப்பு உணர்ச்சி நிகழ்வா ‘27 மணி நேரம் யோகா’ ஆக் ஷனை கையில் எடுத்தேன். அம்மாக்கு முதல்ல தயக்கம் இருந்தது. பிறகு அனுமதிச்சாங்க. அசோக்குமார் சாரும் உதவி பண்ணினார். அந்த ஆக் ஷன் சக்ஸஸ் ஆகி, நிறையபேரை கவனிக்க வெச்சதில் ரொம்ப சந்தோஷம்’’ என்று  சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் அம்ருதா.

அதற்குமுன்னதாக தானும் ஒரு ‘ரா வேகன்’ (raw vegan) ஆக,  ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டாராம்.
 

இப்போது இணையதளம் மூலம், எல்லோருமே  தினமும் 30 நிமிடம் யோகா செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி வரும் அம்ருதா, 20 நாடுகளில் உள்ள, யோகாவில் ஆர்வம் மிக்க இளைஞர்கள் சிலருமாகச் சேர்ந்து யூடியூப் சேனலில், தங்களின் ரெகார்டுகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இதன் மூலம் ஜூரிகளின் கவனத்தைப் பெற்று, இந்தத் துறையில் மென்மேலும் வளரமுடியும் என்கிறார் அம்ருதா.


எதிர்கால பிளான் என்ன என்று கேட்டால், ‘‘ஆக்வா யோகா’’ என்று பளிச்சென பதில் வருகிறது அம்ருதாவிடம் இருந்து.
 

‘அக்வா யோகா என்றால்..?
 

YOGA4.jpg

நீரில் யோகாசனம்... இதற்கான பயிற்சியில் இருக்கிறார் அம்ருதா. பூமியில் யோகா செய்யும்போது உடலின் சில பாகங்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு வலியுண்டாகும். ஆனால் நீரில் செய்யும்போது உடல் இலகு வாகிவிடுவதால் பயிற்சியும் எளிதாகும்’’ என்கிறார் அம்ருதா.

இதற்கு, வெளிநாட்டில் உள்ள தோழி ஒருவர் உதவி செய்வதையும் நன்றியோடு பகிர்ந்துகொண்டவர், கின்னஸிலும் ரெக்கார்ட் பண்ணவேண்டும் என்ற தனது எதிர்கால கனவையும் கூறினார்.
 

" நிச்சயம் சாதிப்பீங்க..." என வாழ்த்தி விடைபெற்றோம்!

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாலைவனத்தில் மழை பெய்யுமா?

 
 
8_2867589f.jpg
 

கொஞ்ச நாள் மழை பெய்யாவிட்டாலே, நாம் வசிக்கும் பகுதி பாலைவனம் ஆகிவிடுமோ என்று பலரும் பயப்படுவார்கள். எப்போதும் மணலால் நிரம்பிக்கிடக்கும் பாலைவனத்தில் மழை பெய்யுமா என்ற சந்தேகம் நமக்கு நிச்சயம் எழும்.

பாலைவனத்தில் எப்போதுமே அதிக அளவில் வெப்பம் நிலவும். இருந்தாலும் பாலைவனப் பகுதிகளிலும்கூட, எப்போதாவது மழை பெய்யும். உலகிலேயே மிகப் பெரிய பாலைவனமான சஹாராவில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்வதாகக் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5 முதல் 10 அங்குலம் அளவுக்கு மழை பெய்கிறதாம். ஆனால், சஹாரா பாலைவனம் முழுவதும் இப்படி மழை பெய்வதில்லை. குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில்தான் மழை பெய்கிறது. பாலைவனத்தின் இன்னொரு பகுதியில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள்கூட, ஒரு துளி மழைகூடப் பெய்யாமலும் இருக்குமாம்.

உண்மையில், உலகிலேயே மிகவும் உலர்வான பகுதி சஹாரா அல்ல. தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டின் அடகாமா பாலைவனம் அமைந்துள்ள அரிகா நகரமே மிகவும் உலர்வான பகுதி. அங்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக குறைவாகவே மழை பெய்கிறது. 1931-ம் ஆண்டு முதல் 1960-ம் ஆண்டு வரை, தொடர்ந்து 29 ஆண்டுகள் அரிகாவில் மழை துளிகூட விழவில்லையாம்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: யோகா தினம்- கும்பகர்ணயாமா தெரியுமா?

 

 
yog_2903136f.jpg
 

பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையின்பேரில், ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு ஐ.நா. அறிவித்தது.

அதைத்தொடர்ந்து முதலாவது யோகா தினம் 2015-ல் கொண்டாடப்பட்டது. 2-வது யோகா தினம் உலகம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. யோகா தினத்தையொட்டி நெட்டிசன்கள் பகிர்ந்த கருத்துக்களின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Manochandra

ஜூன்-21, சர்வதேச யோகா தினம்.

ஐ.நா. சபையில் 174 நாடுகள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஏற்றுக்கொண்ட இந்தியக் கலை. பெருமிதம் கொள்வோம்.

ஆல்பர்ட் தமிழன் ‏

@PuliArason தமிழ் சித்தர்கள் சொல்லிக்கொடுத்த "தவக் கலை" தான் ஓகா- யோகா என மருவியுள்ளது. தவக் கலை எனச்சொல்வோம். #யோகா வேண்டாம்.

குட்டி பையன்

நாங்களும் யோகா பண்ணுவோம்ல #YogaDay

yoga_2903146a.jpg

M.V.Kubendran ‏

யோகா மதம் சார்ந்த கலை அன்று. இது ஒரு வாழ்வியல் முறை.

ப. செல்வகுமார்

"ஏன் சார் , நம்ம காலேஜ்லயெல்லாம் யோகா கிடையாதா?"

'நீ இவ்ளோ நேரம் க்ளாஸ்ல உட்கார்ந்துருக்கிறதே யோகா தான்...'

அறந்தாங்கியான் ‏

100% நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்தும் மக்கள் இருக்கும் ஜென்நிலை தான் #யோகா தினம் எனப்படுகிறது

Panneer veeraraj

யோகா செய்யாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை.

தி.புகழேந்தி ‏@kt_pugaz

#YogaDay #சர்வதேச_யோகா_தினம்

yoga111_2903142a.jpg

சுந்தரதமிழன்2 ‏

தினமும் ஷேர் ஆட்டோல போறவனும் யோகா செய்யனுமா? #டவுட்டு

திரு டா

விஜயகாந்த் யோகா ஷ்பெஷல் இருக்கா??? #YogaDay

கண்ணம்மா ‏

யோகா ஆசனத்துலயே கண்ண மூடி, கைய கால நீட்டி செய்யற ஆசனம் தான் உடம்புக்கு ரொம்ப நல்லது. நான் தினமும் அத 10 மணிநேரம் செய்வேன். இவங்க என்னடான்னா...

சங்கர்சீமான் ஈரோடை ‏

தியானம், ஓகம்(யோகா) தவிர்த்தே பள்ளிக்கூடத்தில் விளையாட்டு வகுப்பு பழக்கப்படுத்தப்பட்டது.

PGPRAKASHtz ‏

இன்னைக்கு மட்டும் யோகா பன்னிட்டு வருஷம் பூரா இழுத்து போத்திட்டு தூங்கறதுக்கு பேர்தான் சர்வதேச யோகா தினம்..

EIPI கோகுல்

என்ன யோகா டே? எங்க ஆபீஸ்ல பல பேர் தினமும் யோக நிலைலதான்! பேரு கும்பகர்ணயாமா.

Alex Pandian

காலையிலயே மொபைலை நோண்டி ஃபேஸ்புக், ட்விட்டர் என 30 நிமிடத்துக்கு மேல் செலவுசெய்கின்றனர், அதற்குப் பதில் யோகா செய்தால் உடல்நலமாவது உருப்படும் #YogaDay

Muruganantham.T

தர்மபூமியான இந்தியா என்ற பூந்தோட்டத்தில் விளைந்த ஒரு மலர் யோகா.

yoga1111_2903135a.jpg

வினோ ‏

யோகா தின வாழ்த்து சொல்ற முக்கால்வாசி பயலுக யாருன்ற?

காலை 8 மணிக்கு எந்திரிச்சு ஆபிசுக்கு ஓடி ராத்திரி 11 மணிக்கு வந்து தூங்குற பயலுகதேன்.

кαятнιк ‏@karthiykj

நான் யோகா செய்து கொண்டு இருக்கும் போது எடுத்த புகைப்படம். #யோகா

yoga1_2903143a.jpg

மிகாவேல்

இன்னைக்கு யோகா தினம்.

சரி நாமளும் யோகா கத்துக்க முயற்சி பண்ணுவோம். எட்றா அந்த பாக்யராஜ், உதயநிதி ஸ்டாலின் பாட்டு வீடியோவ!

காட்டுப்பயல் ‏

கேப்டன் யோகா படங்கள் வராதது வருத்தத்தை அளிக்கிறது :(

Jokin Jeyapaul ‏

யோகா நல்லது தான், மாற்று கருத்து இல்லை. ஆனா இவ்ளோ பெரிய பில்டப், விளம்பரம் தேவையா?

Mr.Happy! ‏

யோகா உடம்புக்கும் மனசுக்கும் நல்ல விஷயம் தான்! ஆனா யோகாவ தெரிஞ்சிட்டு ஏமாத்து வேலையும், காசும் பாக்குறாங்க சில பேர்.

| D•r•e•a•m•z | ‏

நம் அன்றாட வாழ்க்கைக்கான செயல்பாடுகளை ஸ்லோமோஷனில் செய்வதுதான் யோகா...

Ramar...உசிலம்பட்டி

எதாச்சும் புக் வீடியோ பாத்துட்டு யோகா பண்றேன்னு ஆர்வக்கோளாறில் இடுப்பை ஒடித்து கொள்ள வேண்டாம் #YogaDay

yoga11_2903150a.jpg

RohiniRajan

எங்க பாத்தாலும் ஒரே யோகா ட்வீட்டா இருக்கு, விடிஞ்சு பாத்தா நாளைக்கு காலைல இந்தியாவே ஆரோக்கியமானதாய்டும் போலயே

சக்திவேல்

நெஜமாலுமே யோகா செய்வாங்களா இல்ல போட்டோ சூட் முடிஞ்சதும் கிளம்பிருவாங்களா? #டவுட்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.