Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

உலகைக் கவர்ந்த உருளைக் கிழங்கு!

 
  • potato_2912929g.jpg
     
  • potato1_2912928g.jpg
     

உருளைக் கிழங்கைப் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? சுவையில் உலக மக்கள் அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டது இந்த உருளைக் கிழங்கு மட்டுமே! உருளைக் கிழங்கைப் பற்றித் தெரிந்துகொள்வோமா?

உலகம் முழுவதும் அரிசி, கோதுமை, சோளத்துக்கு அடுத்தபடியாகப் பயிர் செய்யக்கூடிய தாவரம் உருளைக் கிழங்கு. சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருளைக் கிழங்கைப் பயிர் செய்ய ஆரம்பித்துவிட்டனர். உருளைக் கிழங்கின் தாயகம் பெரு. 16-ம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவுக்கு அறிமுகமானது. ஐரோப்பியப் பயணிகள் மூலம் கடல் கடந்து, ஆசிய நாடுகளுக்கும் வந்து சேர்ந்தது.

உலகின் மிக நீளமான மலைத்தொடரான ஆண்டிஸ் மலைப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை உருளைக் கிழங்குகள் பயிரிடப்படுகின்றன. சிவப்பு, வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு, நீலம் போன்ற வண்ணங்களிலும் பலவித அளவுகளிலும் உருளைக் கிழங்குகள் விளைகின்றன. அரிசி, ரொட்டியில் இருப்பதைப் போல உருளைக் கிழங்கில் ஏராளமான கார்போஹைட்ரேட் சத்து உள்ளது. நார்ச்சத்து, புரோட்டீன், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம், வைட்டமின் ‘சி’ ஏராளமாக உள்ளன.

130 ஆண்டுகளுக்கு முன்பு அலாஸ்காவில் தங்க வேட்டை நடந்தபோது, தங்கத்தைக் கொடுத்துவிட்டு உருளைக் கிழங்கை அந்த எடைக்கு வாங்கிக்கொண்டார்கள்! நிறைய சத்துகள் அதிகம் இருப்பதால், தங்கத்தைப் போல உருளைக் கிழங்கை அலாஸ்கா மக்கள் கருதினார்கள்.

பிரெஞ்சு மன்னர் லூயி பிலிப் ஒருநாள் இரவு உணவுக்குத் தாமதமாக வந்தார். ஏற்கெனவே பொறிக்கப்பட்ட உருளைக் கிழங்குகளை எடுத்து மீண்டும் சூடான எண்ணெயில் பொரித்துப் பரிமாறினார் சமையல்காரர். உருளைக் கிழங்குத் துண்டுகள் உப்பி, பலூன்களைப் போல இருந்தன. அந்தச் சுவை மன்னருக்கு மிகவும் பிடித்துப் போனது. அதிலிருந்து ஃபிரெஞ்ச் ஃப்ரை என்ற புதிய உணவு அறிமுகமானது.

அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான கார்னெலிஸ் வாண்டர்பில்ட், 1853-ல் உருளைக் கிழங்கு மிகவும் குண்டாக நறுக்கப்பட்டிருப்பதாகக் கூறிச் சமையலறைக்குத் திருப்பி அனுப்பினார். சமையல் கலைஞர் காகிதத்தைப் போல மிக மெல்லியதாக உருளைக் கிழங்குகளை நறுக்கி, எண்ணெயில் பொரித்து, உப்பு தூவிக் கொடுத்தார். சாப்பிட்ட அனைவரும் சுவையில் மயங்கிப் போனார்கள். இப்படித்தான் சிப்ஸ் உருவானது. இன்று ஃபிரெஞ்ச் ஃப்ரைஸும் சிப்ஸும் உலகம் முழுக்கப் பரவிவிட்டன.

1995-ம் ஆண்டு விண்வெளியில் வளர்ப்பதற்காக நாசா மூலம் உருளைக் கிழங்குச் செடி அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட காலம் விண்வெளியில் தங்குபவர்களுக்காகவும் எதிர்காலத்தில் விண்வெளிக்குச் செல்பவர்களுக்காகவும் இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்ற முதல் காய் உருளைக் கிழங்கு என்ற சிறப்பையும் பெற்றது.

உலகில் 155 நாடுகளில் உருளைக் கிழங்கு பயிரிடப்படுகிறது. சராசரியாக ஓர் அமெரிக்கர் ஓராண்டில் 56 கிலோ உருளைக் கிழங்கைச் சாப்பிடுகிறார்! ஜெர்மானியர்கள் இதைவிட அதிகமாகச் சாப்பிடுகிறார்கள்.

பெரு நாட்டில் வசித்த இன்கா மக்கள் உருளைக் கிழங்கைப் பல விதங்களிலும் பயன்படுத்தி வந்தனர். உடைந்த எலும்புகள் மீது உருளைக் கிழங்கை நறுக்கிக் கட்டிவைத்தனர். உருளைக் கிழங்கைச் சாறு எடுத்து முகப் பொலிவுக்குப் பூசினர். தொண்டை வலிக்கு உருளைக் கிழங்கைச் சூடுபடுத்தி ஒத்தடம் கொடுத்தனர்.

வேக வைத்த உருளைக் கிழங்கு என்றால் சீக்கிரத்தில் ஜீரணம் ஆகும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட உருளைக் கிழங்குகளை அதிகம் எடுத்துக்கொள்வது உடல் நலத்துக்குத் தீங்கானது.

tamil.thehindu

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கபாலிடா......   தரையிலும் கபாலி ஆகாயத்திலும் கபாலி

13465950_10154238241753433_2750337088176

Air-Asia-3.jpg

13512244_10154238241478433_6117157928172

  • தொடங்கியவர்
12 hours ago, suvy said:

நீங்க பாடுறதுதான் பாட்டுனு வாய்ஸ் ரெக்கார்டரைத் தேய்ச்சு எடுத்திருப்பீங்க. இனி அந்த மாதிரி அசம்பாவிதங்கள்ல ஈடுபடாம, இந்த அப்ளிகேஷனை வெச்சுப் பாடுங்க. இசையோடு சேர்ந்து பாடும்போது உங்களோட குரல் அந்தப் பாட்டுல ஒட்டுதா இல்லையானு நீங்களே நேரடியா தெரிஞ்சுக்கலாம். ஒரு நல்ல பாடலை எப்படிக் குதறியெடுக்கிறோம்னு புரியவைக்கும். எப்படிப் பாடணும்னு தெரியவைக்கும். சுருக்கமா சொன்னா, இதுவரை நீங்க பாடிய பாட்டுக்கு மத்தவங்க காரித் துப்பினதும், கழுவி ஊத்துனதும் கண்ணு முன்னாடி வந்துட்டுப் போகும்.

ஐ லைக் இட்.....!

ஒரு டவுட்...., நிஜமாவே அக் கட்டுரையில் இருந்ததா, அல்லது புராணங்களில் செய்யிற இடைச் செருகல்கள் மாதிரி கம்பனியைக் குறிவைத்து உதைச் செருகினதா....!  tw_blush:

 

அப்படி எந்த இடை செருகலும் இல்லை.. :rolleyes:

மீண்டும் உங்களுக்கு ஆக... அந்த apps இன் விபரம்

நீங்க பாடுறதுதான் பாட்டுனு வாய்ஸ் ரெக்கார்டரைத் தேய்ச்சு எடுத்திருப்பீங்க. இனி அந்த மாதிரி அசம்பாவிதங்கள்ல ஈடுபடாம, இந்த அப்ளிகேஷனை வெச்சுப் பாடுங்க. இசையோடு சேர்ந்து பாடும்போது உங்களோட குரல் அந்தப் பாட்டுல ஒட்டுதா இல்லையானு நீங்களே நேரடியா தெரிஞ்சுக்கலாம். ஒரு நல்ல பாடலை எப்படிக் குதறியெடுக்கிறோம்னு புரியவைக்கும். எப்படிப் பாடணும்னு தெரியவைக்கும். சுருக்கமா சொன்னா, இதுவரை நீங்க பாடிய பாட்டுக்கு மத்தவங்க காரித் துப்பினதும், கழுவி ஊத்துனதும் கண்ணு முன்னாடி வந்துட்டுப் போகும்.

டவுன்லோடு லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.famousbluemedia.yokee

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

 

p301.jpg

நம்பு ராஜா!

பெயரியல் நிபுணர் தம்பியண்ணா சொன்னார்... ``பேர் மாத்தினா பிரச்னை எல்லாம் தீர்ந்துடும். உங்க பேர் சொல்லுங்க.”

``தம்பியண்ணா’’ என்றான் அவன்.

- நந்த குமார்


p302.jpg

உதவிக்கு வந்தவர்கள்

போலீஸைக் கண்டதும் ஆசுவாசமானான், பொதுமக்களிடம் மாட்டிய திருடன்!

 - பெ.பாண்டியன்


p303.jpg

விருதுக்கு மரியாதை!

சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது பெற்றவரோடு செல்ஃபி எடுத்துக்கொண்டான் மகேஷ்.

- ஜோஷனா


p304.jpg

சோதனை

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஏட்டை அழைத்த இன்ஸ்பெக்டர், ``எங்கே ஊதிக் காட்டு’’ என்றார். 

- அ.ரியாஸ் 


p305.jpg

கூலி

கள்ளக்காதலியின் கணவனைத் தீர்த்துக்கட்ட அனுப்பிவைத்த போட்டோவைப் பார்த்ததும் அதிர்ந்தான் கூலிப்படைத் தலைவன்.

- சி.சாமிநாதன்


p306.jpg

பரிமாற்றம்

விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கு வந்த ராகேஷும் நவீனும் தங்களுடைய கேம் சி.டி-யைப் பரிமாறிக்கொண்டார்கள்.

- ஜோஷனா


p307.jpg

6 செகண்ட் கதை

`பத்து செகண்ட் கதைக்கு’, கதை எழுதிவிட்டுப் படித்துப் பார்த்தான்... இன்னும் நாலு செகண்ட் மீதம் இருந்தது.

- ராஜ்குமார்


p308.jpg

நீதி எனப்படுவது...

பிட் அடித்த மாணவனுக்கு மதிப்பெண்ணைக் குறைத்தார், `Answer key’ உதவியுடன் திருத்திய ஆசிரியர்.

- கை.அக்ஷதா


p3010.jpg

உயிர்... உடல்... குடி!

குடியால் செத்தவன் குடும்பத்திடம் குவார்ட்டருக்கு காசு கேட்கிறான்... போஸ்ட்மார்ட்டம் செய்தவன்!

- பெ.பாண்டியன்


p309.jpg

 அப்லோடு

``ஃபேஸ்புக்ல எல்லாம் எதுக்கு போட்டோ போடுறே?’’ என்று மகளை கண்டமேனிக்குத் திட்டிவிட்டு, அனைத்து மேட்ரிமோனிகளிலும் மகளின் புகைப்படத்தைப் பதிவேற்றினார் தந்தை.

- ரூபிணி

vikatan

  • தொடங்கியவர்

13502729_1072142486167778_61684313149125

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கமர் ரோச்சின் பிறந்தநாள் இன்று
Happy Birthday Kemar Roach

  • தொடங்கியவர்

சுட்ட படம்

 

p64a.jpg

ந்த வார ‘சுட்ட படம்’ கொஞ்சம் பழசுதான். 1974-ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்- வாணிஸ்ரீ - லதா நடிப்பில் வெளியான ‘சிவகாமியின் செல்வன்’ படம். பழம்பெரும் ஹிட் டைரக்டர் ஸ்ரீ தரின் சகோதரர் சி.வி.ராஜேந்திரன் இயக்கிய இந்தப் படம் இந்தியில் ராஜேஷ் கன்னா-ஷர்மிளா தாகூரின் ஹிட் படமான ‘ஆராதனா’ படத்தின் ரீமேக் என்று சொல்வார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் ‘ஆராதனா’, ‘சிவகாமியின் செல்வன்’ இரண்டு படங்களுமே ‘To Each His Own’ என்ற படத்தின் காப்பியோ காப்பிதான். டைட்டிலில் குறிப்பிடப்படாமல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் வாணிஸ்ரீ  கிளாமராகவும் சென்டிமென்ட் ரோலிலும் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் நடித்திருந்தார். ஒரிஜினல் படமான டு ‘ஈச் ஹிஸ் ஓன்’ படத்தின் கதை என்னவென்று பார்ப்போமா..?

p64b.jpg

p64c.jpg

p64d.jpg

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நடந்த தன் வாழ்க்கையை விவரிக்கிறார் நாயகியான வயதான தோற்றத்தில் இருக்கும் ஜோடி நோரிஸ். அமெரிக்க ராணுவ விமானப்படை விமானியாக இருக்கும் கேப்டன் பார்ட்டுடன் ஜோடிக்குக் காதலாகிறது. ஓர் இரவில் இருவரும் நெருக்கமாகிறார்கள். அதனால் ஜோடி கர்ப்பமாகிறார். கருவைக் கலைக்க நினைக்கும்போது விமான விபத்தில் இறந்துவிடுகிறான் கேப்டன் பார்ட். அதனால் மனதை மாற்றிக்கொள்ளும் ஜோடி, அவள் வயிற்றில் வளரும் குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடிவெடுக்கிறாள். ஆனால் அவளது தந்தை இறந்து விடுவதால், குழந்தையை குழந்தைப்பேறு இல்லாத தம்பதியிடம் கொடுக்கும்படி பணிக்கப்படுகிறாள். ஆனால், தன் குழந்தையை எந்த விதத்திலும் பிரிந்துவிடக் கூடாது என நினைக்கும் ஜோடி, தான் பெற்ற குழந்தைக்கே ஆயாவாக (‘நானி’) அந்த வீட்டில் இருக்கிறாள். செய்யாத குற்றத்துக்காக தன் மகனின் நன்மைக்காக சிறை செல்லும் சூழலில் சந்தோஷமாக சிறைக்கும் செல்கிறாள். வயதாகி விடுதலையாகி வரும்போது சிறை அதிகாரி தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். சிறை அதிகாரியின் மகளின் காதலன்தான் தன் மகன் என்பதைப் பார்த்தவுடன் உணர்கிறாள். கேப்டன் பார்ட்டின் இளமைக்காலத் தோற்றத்தில் இருக்கும் மகனிடம் தான் யார் என்பதைச் சொல்லாமல் மறைத்து விடுகிறாள். ஆனால், அவன், ‘உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்’ என்று மட்டும் அடிக்கடி சொல்கிறான். மகனும் தன் கணவரைப் போலவே விமானியாக இருப்பதை எண்ணி சந்தோஷப்படுகிறாள். அப்பாவைப் போலவே விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் பிழைக்கிறான் மகன். தாய் - மகன் உறவு வெளியே தெரிந்ததா? மகனுக்காக அவள் செய்த தியாகத்தை மகன் உணர்ந்து ஏற்றுக் கொண்டானா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.

p64e.jpg

பாலிவுட்டின் ஹிட் கிளாஸிக் சினிமாவான ‘ஆராதனா’ படத்தின் கதையும் இதேதான். ராஜேஷ் கன்னாவுக்கு ஜோடியாக ஷர்மிளா தாகூர் பட்டையைக் கிளப்பி இருந்தார். இரட்டை வேடங்களில் ராஜேஷ் கன்னா அப்பா அருணாகவும், மகன் சூரஜாகவும் செம வித்தியாசம் காட்டி நடித்து இருந்தார். எஸ்.டி பர்மனின் இசையமைப்பில் பாடகர் கிஷோர் குமாரின் ‘ரூப் தேரா மஸ்தானா’, ‘மேரே சப்னோ கி ராணி’ என்ற இரண்டு பாடல்களும் இந்திய அளவில் அதிகம் பேரால் முணுமுணுக்கப்பட்ட பாடலாக செம ஹிட்டாகின. தமிழில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். ஹாலிவுட்டிலும், பாலிவுட்டிலும் ஹிட்டடித்த படம் தமிழில் சரியாக ஓடவில்லை. சிவாஜி கணேசன் நன்றாக நடித்திருந்தும் திரைக்கதையில் சுவாரஸ்யமில்லை... இரண்டு சிவாஜிக்கும் பெரிதாய் வித்தியாசம் தெரியவில்லை என ‘இல்லைகள்’ லிஸ்ட் நீண்டன. எஸ்.பி.பி பாடிய  ‘எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது’ என்ற ரொமான்டிக் பாடலுக்கு சிவாஜி கணேசனும் வாணிஸ்ரீயும் நெருக்கமாக நடித்து அந்நாளைய யூத்துகளை சூடேற்றினார்கள். அந்த நாலரை நிமிடப் பாடலை ஒரே டேக்கில் எடுத்ததெல்லாம் வெறித்தனம் என்றே சொல்லலாம். மற்றபடி சுமாரான செல்வன்தான் இந்த ‘சிவகாமியின் செல்வன்’!

vikatan

  • தொடங்கியவர்

விளையாட்டு வீரருக்கு கிஸ் கொடுத்த காதலி - வைரல் ஆன புகைப்படம்!

விளையாட்டு வீரருக்கு கிஸ் கொடுத்த காதலி - வைரல் ஆன புகைப்படம்!

 
இங்கிலாந்து - ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான யூரோ கிண்ண கால்பந்துப் போட்டியில் ஐஸ்லாந்து அணி அட்டகாசமாக வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு ஷாக் கொடுத்தது. இந்த அதிர்ச்சியில் இருந்த இங்கிலாந்து வீரர் டேல் அல்லிக்கு அவரது காதலி முத்தம் கொடுத்து ஆறுதல் கூறிய புகைப்படம் வைரல் ஆகியுள்ளது.

இன்டர்நெட்டில் இந்தப் படம் படு வேகமாக பிரபலமாகி விட்டது. அந்த வீரரை விட அவரது காதலி தான் படு வேகமாக பிரபலமாகியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கும், ஐஸ்லாந்து அணிக்கும் இடையிலான இப்போட்டியில் ஐஸ்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இங்கிலாந்தை போட்டித தொடரை விட்டே விரட்டியடித்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து இங்கிலாந்து வீரர்கள் மீள முடியவில்லை. அனைவரும் சோகத்துடன் பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ரூபி மே - அப்போது இங்கிலாந்து வீரர் டேல் அல்லி தனது காதலி ரூபி மே அமர்ந்திருந்த பகுதியை நோக்கிச் சென்றார். எழுந்து நின்றபடி தனது காதலரை எதிர்நோக்கியிரந்த ரூபி, அல்லி அருகே வந்ததும் அவரை அப்படியே கட்டிப்பிடித்து முத்தமிட்டார். அவருக்கு ஆறுதல் கூறினார். அவரைத் தேற்றினார்.

கட்டிப்பிடித்து முத்தம் - இருவரும் மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டனர். இந்தக் காட்சியை புகைப்படக் கண்கள் தவறாமல் புகைப்படம் எடுத்துத் தள்ளின. இதுதான் தற்போது வைரல் ஆகியுள்ளது.

உள்ளாடை மாடல் - டேல் அல்லியின் இந்தக் காதலிக்கு 21 வயதாகிறது. அல்லிக்கு வயது 20. ரூபி மே ஒரு மாடல் அழகி ஆவார். உள்ளாடை விளம்பரங்களுக்குப் போஸ் கொடுக்கும் மாடல் அழகி. பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

வளர்ந்து வரும் அல்லி - கால்பந்து உலகில் வளர்ந்து வரும் வீரர் அல்லி. அவரது காதலியால் தற்போது அல்லியும் பிரபலமாகியுள்ளார். இருவரும் ஒரே புகைப்படம் மூலமாக தற்போது உலகப் புகழையும் அடைந்துள்ளனர்.

அக்காவுக்கு அல்லி.. தங்கைக்கு பிராட் - ரூபி மேயின் சகோதரி பீலி ரோஸ் மிட்சல். இவர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராடின் காதலி என்பது கூடுதல் தகவலாகும். அக்கா கால்பந்து வீரரையும், தங்கை கிரிக்கெட் வீரரையும் காதலிப்பது இங்கிலாந்து ரசிகர்களுக்கு டபுள் "தமாகா"வாக மாறியுள்ளது.

tamil.adaderana

Dele Alli of England is comforted by his girlfriend at the end of the UEFA Euro 2016 match at Stade de Nice, Nice Picture by Paul Chesterton/Focus Images Ltd +44 7904 640267 27/06/2016

  • கருத்துக்கள உறவுகள்

NIP000199404727_2753512a.jpg

இனி எப்பிடி கால்பந்து விளையாடுவான் பையன்?! :mellow: tw_blush:

  • தொடங்கியவர்
மனம் அமைதி பெறும் போதே இரசனை தோன்றுகின்றது
 
 

article_1467256789-hfcfj.jpgசில பொழுது தனிமை தேவைப்படுகின்றது. இதுவே எமக்குக் கடும் அவஸ்தையாகிவிடுவதுண்டு.

இந்த நிலவும், அதனைச் சுற்றிப் பரந்த நட்சத்திரக் கூட்டங்கள், நவீன மின்குமிழ்களுக்கு மேலாகத் தங்கள் அழகினைப் பொழிகின்றன.

இவை எல்லாமே, மனது சற்று அமைதியாக இருக்கும் போது மட்டுமே இரசிக்கக் கூடியதாக இருக்கின்றன. எல்லாமே வெறுத்துச் சூனியமான நிலை வரும் போது, நாங்களே தனித்தது போல ஓர் உணர்வு. இதனை உடைப்பது எப்படி?  நெஞ்சினில் நிறைவு ஏற்பட்டால், எல்லாமே அழகுதான். இதனை நிரந்தரமான நிலைக்கு நாம் வைத்திருக்க வேண்டும். உயிர்ப் பொருட்களை இரசிப்பது போல், சடப்பொருட்களையும் எமக்கானது என எண்ணுங்கள்.

அன்புடன் நோக்கும் போது, எல்லாமே எமக்கானது எனும் பூரணத்துவம் இயல்பாகவே ஏற்பட்டுவிடுகின்றது.

உயிர்கள் எல்லாமே தனிமைப்பட முடியாது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒலிம்பிக்கில் பதக்க சாதனையும், குறுந்தூர ஓட்டங்களில் பல சாதனைகளும் படைத்த அமெரிக்க ஓட்டப்பந்தய மற்றும் மெய்வல்லுன வீரர் (நீளம் பாய்தலிலும் பங்குபற்றியுள்ளார்) கார்ல் லூயிஸின் பிறந்தநாள்.

13510838_1072755569439803_70375356553885

இவர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்பது தங்கப் பதக்கங்கள் பெற்றவர்.
Happy Birthday Carl Lewis

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

p96a.jpg

மசால் தோசை போலத்தான்... 

நான்கைந்து மேசைகள் கொண்ட

ரெஸ்ட்டாரன்ட் அல்லது மெஸ் எனப்படுகிற அது

ஹோட்டல் எனவும் மொழியப்படுகிறது.

முதலாளி வருகையறிந்து மூன்றாம் எண் மேசையைக் கவனிக்கச்சொல்லி மெலிந்த உருவுடன்

நாசூக்காக கல்லா நீங்கும் இளைஞன்

விசுவாசத்தின் ஐந்தரையடி குறியீடு.

எதிர்ப்படுகிற எல்லாருக்கும் வணக்கம்வைத்து

அலைபேசியின் மெல்லிய ராகத்தில்

'ஹர ஹர சிவனே அருணாச்சலனே

அண்ணாமலையே போற்றி’யுடன் இருக்கையில்

அமரும் அண்ணாச்சி,

வலப்புற ஒலிப்பெருக்கியில்

'சரக்கு வெச்சுருக்கேன் எறக்கி வெச்சுருக்கேன்’

பாடலைத் தவழவிடுவது

முற்றிலும் வியாபாரத் தந்திரமென்பதில்

சிறிதளவும் ஐயமில்லை.

இடத்திலும் வலத்திலும் மாறி மாறிப் பரவசம்தரும்

மென்கானத்துக்கும் அதிர்கானத்துக்கும் இடையே

மசால் தோசை எனத் துவண்டுகிடக்கும் என்னை

விண்டு விண்டு விழுங்குகிறதே

அதன் பெயர்தான் வாழ்வு. 

 - தர்மராஜ் பெரியசாமி 

குறிப்புதவிப் பிரிவு              

கருத்த மர நாற்காலியில் நூலகர் கண்ணயர்ந்திருக்கிறார்.

தலைநரைத்த ஆராய்ச்சி மாணவர்  

தலையணை அளவு புத்தகம் விரித்து  

குறிப்பெடுத்துக்கொண்டிருக்கிறார்.  

தூசி படிந்த மின்விசிறி  

தன் பாடுகளைப் பாடியபடியே

சுழன்றுகொண்டிருக்கிறது.  

லெகின்ஸ் யுவதியின் கொலுசொலி

வயோதிக வாசகரையும் சிலிர்க்கச்செய்கிறது.

ஒட்டடை படர்ந்த அலமாரியில்

கல்லாய்ச் சமைந்துகிடக்கின்றன புத்தக அகலிகைகள்.  

சாளரம் வழி நுழைந்த அணில்கள் இரண்டு  

அவசர அவசரமாய் வாசிக்கின்றன

முத்தப் புத்தகத்தை.                

 - ஸ்ரீதர்பாரதி   

வெயிலொன்று மழையான கதை

நிழலின் முந்தியைப் பிடித்துக்கொண்டு

பின்தொடரும் வெயில்

அவள் மேனியில் படர்ந்து

கொஞ்சம் கொஞ்சமாகப் போதையேறி

கிறுக்குக்கொள்கிறது.

மூக்குத்தியில் சிணுங்கி கழுத்தில் சறுக்கி

பச்சை நரம்புகளில் முறுக்கேறி மிதந்துசெல்கிறது.

அவள் களைத்து ஒதுங்கி

குணங்குடிதாசன் சர்பத் ஒன்றை

ஆர்டர்செய்து பருகத் தொடங்குகிறாள்.

வெயில் அவள் காலடியில் வால்குழைத்து

அண்ணாந்து பார்த்துக் கிடக்கிறது.

அவள் அதரங்களிலிருந்து

நன்னாரி வாசத்தோடு நழுவுகிறது

ஒரு சொட்டு எச்சில் சர்பத்.

அதைச் சரியாக ஏந்தி

பெருந்தாகம் தணித்துக்கொண்டது வெயில்.

சட்டென

நீலவான் ஓரத்தில் மேகமொன்று

கருக்கத் தொடங்குகிறது.

 - எம்.ஸ்டாலின் சரவணன்

vikatan

  • தொடங்கியவர்
தொடர்ச்சியாக 6 நாட்கள் ஒன்லைன் கேம் விளையாடிய சீன இளைஞன் பாதம் அழுகிய நிலையில் மயங்கி வீழ்ந்தான்
 

17723game.jpgசீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்ச்­சி­யாக 6 நாட்கள் ஒன்லைன் கேம் விளை­யாட்டில் ஈடு­பட்­டி­ருந்­ததால் அவரின் பாதம் அழுக ஆரம்­பித்­த­துடன் மயங்­கியும் வீழ்ந்­துள்ளார்.


சீனாவின் ஹாங்ஸோ நகரில் வசிக்கும் 19 வய­தான இந்த இளை ஞர் இணையம் மூல­மான கேம்­கள் விளை­யா­டு­வதில் தீவிர ஆர்வம் கொண்­டவர், அண்­மையில் இவர் தொடர்ச்­சி­யாக 6 நாட்கள் ஒன்லைன் கேம் விளை­யா­டிக் ­கொண்­டி­ருந்­தாராம். ஹாங்ஸோ நகர ரயில் நிலை­ய­மொன்­றுக்கு அருகில் மயங்கிக் கிடந்த நிலையில் இவர் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்டார்.


அவரின் பாதங்­களில் தொற்­றுக்கள் ஏற்­பட்டு அழுக ஆரம்­பித்­தி­ருந்­ததாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவரின் உடலில் துர்­நாற்றம் வீசிக்­கொண்­டி­ருந்­தது. உணர்வு திரும்­பி­யபின் தண்ணீர் தரு­மாறு கோரினார்.

 

பின்னர் அவ­ரிடம் பொலிஸார் விசா­ரணை நடத்­தி­ய­போது, தான் 6 நாட்­க­ளாக இன்­டர்நெட் கபே ஒன்றில் கேம் விளை­யாடிக் கொண்­டி­ருந்­த­தா­கவும் தன்­னி­ட­மி­ருந்த பணத்­தை­யெல்லாம் ஒன்லைன் கேம் விளை­யாட செல­விட்­ட­தா­கவும் தெரி­வித்தார்.

 

பல நாட்கள் உணவு உட்­கொள்­ளவோ குளிக்­கவோ இல்லை என அவர் தெரி­வித்­துள்ளார். இந்த இளைஞன் ஒன் லைன் கேம் விளை­யா­டு­வ­தற்­காக வீட்­டி­லி­ருந்து வெளி­யே­றி­ய­தா­கவும் அவரை தான் திரும்ப அழைக்­க­விரும்பவில்லை எனவும் அவரின் தந்தை கூறினார்.

 

எனினும் பின்னர் அத்­தந்­தையை சமா­தா­னப்­ப­டுத்­திய அதி­கா­ரிகள், அவ்­வி­ரு­வ­ரையும் மீள இணைத்து வைத்­தனர். இந்த இளை­ஞனின் பாதங்­களில் ஏற்­பட்ட தொற்­றுகள் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டிருக்காவிட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.metronews

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

புன்னகை இளவரசி டயானாவின் 55 ஆவது பிறந்தநாள் இன்று

 


 

புன்னகை இளவரசி டயானாவின் 55 ஆவது பிறந்தநாள் இன்று

இறப்பின் பின்னரும் மக்களின் மனங்களில் வாழ்வோர் வெகு சிலரே. அத்தகையோரில் ஒருவரான இங்கிலாந்து இளவரசி டயானாவின் 55 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.

1961 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி பிறந்த டயானாவின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர் என்பதாகும்.

டயானா தனது 19 ஆவது அகவையில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸை மணந்து உலகப் பிரபலமானார்.

சார்லஸ் – டயானா தம்பதிக்கு வில்லியம், ஹரி என இரண்டு மகன்மார் உள்ளனர்.

இங்கிலாந்து அரண்மனையின் மருமகளான போதும் டயானா தனது சேவைகளால் அடித்தட்டு மக்களின் இதயங்களிலும் இடம்பிடித்தார்.

தொழு நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் டயானாவின் சிநேகிதர்கள் ஆனார்கள்.

எய்ட்ஸ் நோயாளிகளைத் தொட்டுப் பேசுவதால் எவ்வித பாதிப்பும் நேராது என்பதை தனது நடவடிக்கையால் உலகுக்கு உணர்த்தியவர் டயானா.

தனது கணவர் சார்லஸுக்கு கமீலாவுடன் தொடர்பு இருப்பதை அறிந்த டயானா, மனதளவில் உடைந்து போனார். தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளை மறக்க, பல சமூக நலத் திட்டங்களில் அதிகமாக ஈடுபட ஆரம்பித்திருந்தார்.

கணவருடனான விவாகரத்திற்குப் பின்னர் பல ஆண்களுடன் டயானா இணைத்துப் பேசப்பட்டார்.

டயானா வாழ்ந்த காலத்தில் எப்போதும் அவரது பெயர், ஏதாவது காரணங்களால் இங்கிலாந்து பத்திரிக்கைகளில் தவறாது இடம் பெற்று வந்தது.

ஒரு கட்டத்தில் ஊடகங்களின் துரத்தலே டயானாவின் உயிருக்கு ஆபத்தைக் கொணர்ந்தது.

அரபு நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடியுடன், டயானாவுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட நெருக்கம் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இவர்கள் இருவரும் செல்லுமிடமெல்லாம் பத்திரிகைக்காரர்கள் அவர்களைத் துரத்தினார்கள்.

அவ்வாறே 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி பாரிசில் காரில் சென்ற டயானா, டோடியை பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் துரத்தினார்கள்.

அப்போது அவர்களிடமிருந்து தப்பியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வேகமாகச் சென்ற டயானாவின் கார் விபத்தில் சிக்கியது. இதில், டயானா, டோடி இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.

டயானா என்ற புன்னகை அரசியின் மரணச் செய்தியை கேள்விப்பட்ட உலகமே வேதனையில் உருகி கண்ணீர் விட்டது.

இளவரசி டயானாவின் இறுதி ஊர்வலத்தை, சுமார் 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் பார்த்தனர்.

இன்றளவும் டயானாவின் கல்லறைக்கு தினமும் குவியும் பல்லாயிரக்கணக்கான மலர்களே, மக்கள் அவர் மீது கொண்டிருந்த அளவில்லா அன்பிற்கு சாட்சி.

princess-diana-2-435

c9d1837c9232742194fb8aa77f82bda6

  • தொடங்கியவர்

மனைவியை வித்தியாசமான முறையில் ஆச்சரியப்படுத்திய கணவர் (வீடியோ இணைப்பு)

 

அமெரிக்காவில்  கணவரொருவர் தனது மனைவியின் கடைசி நாள் புற்று நோய் சிகிச்சையினை வித்தியாசமாக கொண்டாடி தனது அன்பை மனைவிக்கு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஓக்லாந்து நகரைச் சேர்ந்தவர் பிராட் போஸ்கட் அவரது மனைவி அலிசனின் மார்பகப் புற்று நோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளார். 

இதனால் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் பிராட் கூடவே இருந்து மனைவியை பரிவுடன், கனிவுடன் கவனித்துக் கொண்டார்.

இந்த நிலையில் கடைசி நாள் சிகிச்சையும் வந்தது. கடைசி நாளில் மனைவியை மகிழ்ச்சிப்படுத்த முடிவு செய்தார் பிராட். 500 ரோஜாக்களை அவர் வாங்கி வந்ததோடு மட்டுமல்லாமல் புற்றுநோய் சிகிச்சை ஆய்வகத்திற்கு நன்கொடையாக அளிக்க 4500 டொலர் நிதியையும் அவர் வசூலித்தார். 

கடைசி நாள் சிகிச்சை முடிந்ததும் அந்த ரோஜாக்களை மொத்தமாக மனைவியிடம் கொடுத்து அவரை ஆச்சரியப்படுத்தி விட்டார்.

என் மனைவி மீதான அளவு கடந்த அன்பைக் காட்ட எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தான் அவருக்குப் பிடித்த ரோஜாக்களை வரவழைத்துக் கொடுத்தேன் என்றார் பிராட். 

 

 

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

13566940_656843081132700_408020641525489

அவர் இவர் தான் :-)

  • தொடங்கியவர்

13582051_740336056068939_473651516671133

ஜூலை 1: விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பிறந்ததினம் இன்று.

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: தண்ணீர் போய் சார்ஜர் வந்த கதை!

37_2916014a_2916035f.jpg

31_2916005a.jpg

32_2916007a.jpg

33_2916008a.jpg

34_2916010a.jpg

35_2916011a.jpg

36_2916012a.jpg

38_2916015a.jpg

tamil.thehindu

  • தொடங்கியவர்

 

நாம் நடக்கும் பொழுது ஏன் கைகளை வீசுகின்றோம்?

  • தொடங்கியவர்
துணிச்சலின்றி வாழும் வாழ்க்கை உயிர்வாழ்க்கை அல்ல
 

article_1467172700-tduy.jpgஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்த ரயில் வண்டியில் உள்ளிருந்தவாறே அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திக் கொள்ளையடித்த செய்தியொன்றினை நான் எப்போதோ படித்த ஞாபகம்.

இந்தச் செய்தியானது, மனிதரின் கோழைத்தனத்தைக் காட்டும் வெட்கம் கெட்ட செயலல்லவா?

பக்கத்து வீட்டில் உள்ள கால் காசுக்குப் பெறுமதியில்லா அற்ப விடயத்துக்காக கத்தியைத் தூக்குபவர்கள், உயிர்போகும் தருணத்தில் போராடாமல், முடங்கி ஒளிப்பது போல் உள்ளது இச்சம்பவம்.

வெறும் கத்தி, வாள் கொண்டு தாக்க வந்த சிறு கூட்டத்தைத் தகர்க்க முடியாத ஆயிரக்கணக்கான பயணிகள். படுகாயப்பட்டு கொள்ளையரிடம் பவ்வியமாகப் பொருட்களைக் கொடுத்த இவர்கள், ஒன்றிணைந்து அவர்களை ஏன் தாக்கவில்லை?

துணிச்சலின்றி வாழும் வாழ்க்கை உயிர்வாழ்க்கை அல்ல.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தன்னுடைய பிரசவத்தை தானே படம் எடுத்த பெண்! - நெகிழ வைக்கும் படங்கள்

lesa01.jpg

லிபோர்னியாவைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர், தனக்கு குழந்தை பிறக்க ஆரம்பிப்பதில் இருந்து, குழந்தை வெளிவருவது வரை அனைத்தையும் புகைப்படங்களாக எடுத்து, அதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார்.

lesa02.jpg

கலிபோர்னியாவில் வெடிங் ஃபோட்டோகிராஃபராக பணியாற்றி வருபவர் லிசா ராபின்சன் வார்ட். தன்னுடைய பிரசவத்தை படம் பிடிக்கவேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் கனவு, ஆசை. இதற்காக, வீட்டில் பிரசவ வலி ஆரம்பித்த உடனேயே,  வலியை பொருட்படுத்தாமல் தனக்குத் தானே படம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். கணவர் காரை ஓட்டிச் செல்ல காருக்குள் ஏறுவது முதல், வலியால் துடிப்பது வரை அவரே படம் எடுத்தார். ஒரு கட்டத்துக்கு மேல் தன்னால் முடியாமல் போகவே, தன்னுடைய கணவரிடம் அந்த பணியை ஒப்படைக்கிறார்.

lesa04.jpg

பிரசவ அறைக்குள் சென்றதும் கேமரா இவரை பின் தொடருகிறது. மருத்துவர்கள் அவசர அவசரமாக தங்களது பணியினை செய்ய ஆரம்பிக்கிறார்கள். மிகப்பெரும் போராட்டத்திற்கு பிறகு அனோரா எனும் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார். குழந்தை அசுத்தங்களோடு, ரத்தத்தையும் உடலில் பூசியபடி வெளியே வருகிறது. பிறகு தொப்புள் கொடியை 'கட்' செய்கிறார்கள். குழந்தையை சுத்தம் செய்கிறார்கள். பிறகு, லிசா தன் மார்போடு குழந்தையை அணைத்துக் கொள்கிறார். பின்பு, பால் தருகிறார். இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் அப்படியே படம் பிடிக்கிறார் அவரது கணவர்.

''நான் சிறிதும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு நான் வலி தாங்கியாக இருந்திருக்கிறேன். கிட்டத்தட்ட 14 மணி நேரம் பிரசவ வலியைப் பொறுத்திருக்கிறேன். கேமரா என்னை பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிற என்னுடைய கவனம் பிரசவ வலியை குறைத்திருக்கிறது. 'பிரசவ அறைக்குள் படம் எடுக்கலாமா....?' என்று மருத்துவரிடம் கேட்டபோது, எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள்.

lesa06.jpg

பனிக்குடம் உடைந்து வெளியேறும்போது செயலற்றுப் போயிருக்கிறேன். அதிலிருந்து மீண்டும் மீண்டும் என்னுடைய வலியைப் பொறுத்திருக்கிறேன். என் மகள் மிகவும் அழகானவள், மென்மையானவள். மிகவும் எளிதாக வெளியே வந்துவிட்டாள். எங்கள் மகள் வெளியே வந்ததும், முதல் முறையாக பார்த்த என் கணவர் அழுதுவிட்டார். நானும்தான். என்னுடைய தோளோடு தோள் ஒட்டி என் மகள் என் மார்பில் பால் கொடுக்கும்போது ஆகாயத்தில் பறந்தது போல உணர்ந்தேன்.

lesa05.jpg

 

இந்த படத்தை எப்போது எடுத்து பார்த்தாலும், ஒரு பரவச நிலையை உணர்கிறேன். இந்த உலகில் நான் அதிர்ஷ்டம் செய்தவளாக உணர்கிறேன்'' என அவருடைய பிரசவப் படங்களை எல்லாம் தொட்டு பரவசப்படுகிறார் லிசா ராபின்சன் வார்டு.

vikatan

  • தொடங்கியவர்

பிரெஞ்சு தீர்க்கதரிசி நோஸ்ராடாமஸ் அவர்களின் நினைவு தினம்.
Nostradamus
உலகில் நடைபெற்ற, நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் பல சம்பவங்களில் முக்கியமானவற்றை அன்றைய இவர் வாழ்ந்த 15ம் நூற்றாண்டு காலகட்டங்களிலேயே எழுதியவராக அனைவராலும் அறியப்படுகின்றார். ஆனாலும் நோஸ்ராடாமஸ் அவரின் இறப்பிற்குப் பின்னரே உலக மக்களால் அறியப்பட்டார்.

இன்றும் உலகில் இயற்கை அழிவு, இதர முக்கிய விஷயங்கள் இடம்பெற்றால் இதையும் நோஸ்ராடாமஸ் அப்போதே சொல்லிவைத்தார் என்று சுயவிளக்கம் கொடுப்போரும் நம்மில் உள்ளனர்.

13533074_1072757309439629_80401335725787

  • தொடங்கியவர்

அதிசய உணவுகள்

 

 
தாய்வான் தலைநகர் டைபியில் உள்ள ‘ஷிலின்’ இரவு உணவுச் சந்தை
தாய்வான் தலைநகர் டைபியில் உள்ள ‘ஷிலின்’ இரவு உணவுச் சந்தை

இந்த உலகத்தில் வாழ்கிற ஒவ்வோர் உயிருக்கும் உண்ணுவதும் இனவிருத்தி செய்வதுமே முக்கியத் தொழில். வயிறே பிரதானம் என்றும் நம் முன்னோர் சொல்லியுள்ளனர்.

‘ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்/ இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்/என்நோ(வு) அறியாய் இடும்பை கூர் என் வயிறே/ உன்னோடு வாழ்தல் அரிது’

- இது வயிற்றுப் பசியின் கொடுமையைப் பற்றி ஒளவையார் சொன்னது. வயிற்றுப் பசிக்கு உணவு கிடைத்துவிட்டால் போதுமா? நாக்கு ருசிக்கு மனிதர்கள் அடிமையாகி கிடக்கிறார்கள்தானே!

ஒரு வேடிக்கையான சம்பவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். என் கணவரின் கிளினிக்கிற்கு, ஒரு நோயாளியைத் தூக் கிக்கொண்டு வந்தனர். உலகின் சோகம் அத்தனையையும் முகத்தில் தாங்கி, ஒளி மங்கிய கண்களுடன் அவர் பரிசோதனை மேஜையின் மீது படுத்திருந்தார். அவரை நன்றாக பரிசோதித்த என் கணவர் சொன்னார்: ‘‘உங்களுக்கு பயப்படும்படி ஒன்றுமில்லை. சில மாத்திரைகளை எழுதித் தருகிறேன். தினம் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள்’’.

அதை கேட்ட நோயாளி ‘‘டாக்டர், எனக்கு வாழவே பிடிக்கவில்லை. மூன்று மாதங்களாக உப்பில்லா உணவை சாப்பிடுகிறேன்’’ என்றார்.

‘‘அப்படியா, இந்த தெரு முனையில் ஒரு பிரபல உணவகம் உள்ளது. அங்கே சென்று அரை பிளேட் பிரியாணி சாப்பிட்டுவிட்டு ஊருக்குப் புறப்படுங்கள்’’ என்று என் கணவர் சொல்லி முடித்த மறுவினாடி, அந்த நோயாளி, ஸ்பிரிங் பொம்மையைப் போல துள்ளிக் குதித்து எழுந்தார். முகத்தில் ஆயிரம் வாட்ஸ் மின் விளக்குப் பிரகாசத்துடன் ‘‘என்னது! பிரியாணி சாப்பிடலாமா?’’ ஓங்கி குரல் எடுத்து கேட்டார்.

‘‘ஆமாம்’’ என்று என் கணவர் தலையாட்டி புன்ன கைக்க, நான்கு நபர்கள் தூக்கிக் கொண்டுவந்த அந்த நோயாளி துள்ளல் நடைப் போட்டு விடைபெற்றார்.

அப்போது ருசிக்காக நீளும் மனித நாவின் சக்தி எனக்குப் புரிந்தது. உலகின் பல நகரங்களுக்கும் நான் பயணித்திருக்கிறேன். அங்கே எல்லாம் பலவகையான உணவுகளை உண்டு மகிழ்ந்திருக்கிறேன். கண்டு மிரண் டும் இருந்திருக்கிறேன். அந்தந்த நாட்டில் உள்ளவர் களுக்கு அவரவர் உணவு வகைகள் பிடித்தமானதாக இருக்கும். முதலில் இதை நாம் புரிந்துகொண் டால் உலகெங்கிலும் கடை விரிக்கப்பட் டிருக்கும் உணவு வகைகளை ருசித்து மகிழலாம் அல்லது பார்த்து மகிழலாம்.

இப்படி பல உலக நாடுகளின் உணவகங் களில், இரவு உணவுச் சந்தைகளில், அங்கே வசிக்கும் மக்களின் வீடுகளில், நண்பர்களின் இல்லங் களில், இந்தியாவின் பல நகரங்களில் உண்டு மகிழ்ந்த உணவு வகைகளைப் பற்றியும், பல வேடிக்கையான அனு பவங்களை பற்றியும் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

தாய்வான்...

உலக வரைப்படத்தில் நம் கையில் உள்ள கட்டை விரல் அளவுக்கான சிறிய இடத்தை ஆக்கிரமித்திருக்கும் சிறு தீவு. கிழக்கு சீனாவில் இருந்து 180 கி.மீ தொலைவில் உள்ள இங்கே, பாரம்பரியம் மிக்க நகரங்கள், கொதிக்கும் நீரூற்றுகள், அழகிய மலைத் தொடர்கள் என்று சிந்தையைக் கவரும் இடங்கள் பல இங்கே உண்டு. தாய்வானின் தலைநகரம் ‘டைபி’. இந்நகரத்தின் பொருளாதாரமே சுற்றுலாத் துறையைச் சார்ந்துதான் இருக்கிறது. 2013-ம் ஆண்டில் மட்டும் 6.3 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கே வலம் வந்துள்ளனர். இப்படி வருபவர்களை முக்கியமாக கவரும் இரண்டு அம்சங்களில் ஒன்று, ‘டைபி 101'. மற்றொன்று, இங்கே இருக்கும் இரவு மார்க்கெட்டுகளும், அங்கே விற்கப்படும் பலவிதமான உணவு வகைகளும்தான். 2004-ல் கட்டிமுடிக்கப்பட்ட ‘டைபி 101' என்ற இந்தக் கட்டிடம் உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடமாக, துபாயில் உள்ள ‘புர்ஜ் கலிஃபா’ கட்டப்படும் வரை திகழ்ந்தது.

டைபியின் இரவு உணவுச் சந்தைகளைப் பற்றி கேள்விபட்டிருந்ததால், அங்கே போக வேண்டுமென்று விரும்பினேன். இந்த நகரத்தின் பல எழில்மிக்க, சரித்திர புகழ்மிக்க இடங்களைப் பார்த்துவிட்டு, நாங்கள் தங்கி யிருந்த ஹோட்டலுக்கு வந்துச் சேரும்போதே இரவு நேரம் மணி 7. உணவுச் சந்தைகள் நள்ளிரவையும் தாண்டி இயங்கும் என்பதால், உற்சாகத்துடன் கிளம்பினோம்.

‘‘சாந்தி... நாம் தங்கியிருக்கும் ஹோட்டலிலேயே ஏதாவது ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு செல்லலாமா?’’ என்றார் என் கணவர்.

‘‘அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், வாங்க. இரவு உணவுச் சந்தையிலேயே சாப்பிடுவோம்’’ என்றேன்.

நான் கடல் உணவை விரும்பிச் சாப்பிடுவேன். தாய்வான் ஒரு தீவாக இருப்பதால் அங்கே ஏராளமான கடல் உணவுகள் கிடைக்கும். இதைத் தவிர தாய்வான், சைனாவின் ஒரு பகுதியாக கருதப்படுவதால் அல்லது சைனாவின் அருகே இருப்பதால் அங்கே சைனீஸ் உணவு வகைகளும் கிடைக்கும் என்று எண்ணினேன்.

எங்கள் ஹோட்டலில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இருந்த ‘ஷிலின்’ இரவு உணவு மார்கெட்டுக்குள் நுழைந்தோம். தெருவின் இருபுறமும் வரிசையாக சின்னச் சின்ன ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும், போதாத குறைக்கு தள்ளுவண்டிகளில் செல்லப் பிராணிகளான நாய்களும் வலம் வந்து கொண்டிருந்தன.

என் மூக்கை பலவிதமான வாசனைகள் ஒரே சமயத்தில் படையெடுத்து வந்து தாக்கின. சோயா சாஸின் வாசனை, வறுக்கப்படும் மாமிச உணவுகளில் இருந்து எழும் புகை, தங்கள் உணவை வந்து ருசிக்கும்படி கூவி அழைக்கும் வியாபாரிகளின் கூக்குரல், கைகளில் தட்டை ஏந்தி தங்கள் முறைக்காகக் காத்து நிற்கும் வாடிக்கையாளர்களின் தரிசனம்… என்று அந்த இரவு உணவு மார்க்கெட் பல காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டியது.

அந்தக் கூட்டத்தில் புகுந்து நானும் என் கணவரும் முதலில் வலது பக்க உணவுக் கடைகளை நோட்டம்விட்ட படி நடந்தோம். ‘இங்கே (Frog Eggs Drink) தவளை முட்டைகளின் பானம் கிடைக்கும்’ என்ற அறிவிப்பு இருந்த இடத்தில் நின்று, பச்சை கலரில் இருந்த அந்த பானத்தை ஆச்சரியம் கொண்டு பார்த்தேன்.

- பயணிப்போம்...

சாந்தகுமாரி சிவகடாட்சம் - சுற்றும் உலகைச் சுற்றி பயண இலக்கியம் படைப்பவர். இவர் போகாத நாடுகளை விரல்விடாமல் எண்ணிவிடலாம். உலகம் முழுதும் பறந்து, தான் ரசித்து மகிழ்ந்த விஷயங்களை கண்முன் குவியும் காட்சியாக எழுத்தில் பதிவு செய்பவர். இவருடைய ‘சுற்றும் உலகில் சுற்றிய இடங்கள்’, ‘உலகம் சுற்றலாம் வாங்க’ என்கிற இரு பயண நூல்கள் இருமுறை தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளன. இது தவிர தாகம், கலங்கரை வெளிச்சம், கங்கையில் ஒரு சங்கமம், கருப்புச் சிலந்தி, சூரியன் ஆகிய நூல்களையும் எழுதியுள் ளார். இவரது கணவர் டாக்டர் சிவகடாட்சம், புகழ்பெற்ற இதய சிகிச்சை நிபுணராவார்

santha_2917340a.jpg

சாந்தகுமாரி சிவகடாட்சம்

tamil.thehindu

  • தொடங்கியவர்

சுவாதி கொலை வழக்கில் சந்தேக நபரின் சற்றே தெளிவான புகைப்படம் | படம்: சிறப்பு ஏற்பாடு.13524373_1153136544728110_26944837778625

  • தொடங்கியவர்

தண்ணீருக்கு நடுவே...

 

p26a.jpg

ம் ஊரில் பெரிய மால்களுக்கு நடுவே நீச்சல்குளம் இருக்கும். ஆனால், கத்தாரின் தலைநகரான தோஹாவிற்கு மேற்கில் ஒரு கால்வாய்க்கு நடுவில்தான் மாலே இருக்கிறது. ‘வில்லாகியோ மால்’ எனும் பெயர் கொண்ட இந்த அதிசய மால் ஒரு பெரிய கால்வாய்க்கு நடுவே இருக்கிறது. இந்தக் கால்வாயில் ‘கொண்டோலா ரைட்’ எனும் பெயரில் படகுப்போக்குவரத்தும் நடைபெறுகிறது. இன்னொரு சிறப்பம்சமும் வில்லாகியோ மாலில் உண்டு. அது, மால் அமைந்துள்ள கட்டடத்தின் மேலே உண்மையான வானம் போலவே செயற்கையாக உருவாக்கப்பட்ட முகடு அமைக்கப்பட்டிருக்கிறது.

p26b.jpg

p26c.jpg

ஒரு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாலில் மற்றவற்றில் இருப்பதைப் போலவே தியேட்டர்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஐஸ் ஹாக்கி தளங்கள் என எல்லாமே உள்ளன. இந்த மாலில் 2012-ம் ஆண்டு ஒரு தீ விபத்து நிகழ்ந்து 13 சிறுவர்கள் உட்பட 19 நபர்கள் உயிரிழந்தனர். அபாய அலாரம் முன்பே ஒலி எழுப்பியிருந்தாலும் அதைப் பணியாளர்கள் அலட்சியப்படுத்திவிட்டதுதான் உயிரிழப்பிற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், எளிதில் தீப்பற்றக்கூடிய பெயின்ட்டுகளை அதிக அளவில் உபயோகித்ததும் விபத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. எனினும், சர்ச்சைகளிலிருந்து மீண்டு எழுந்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது ‘வில்லாகியோ’. இங்கு சராசரியாக தினமும் 50,000-த்திற்கும் மேற்பட்டோர் வருகை தருகிறார்களாம்.

மால் மூழ்கிடாமப் பார்த்துக்கோங்க!

vikatan

  • தொடங்கியவர்

விஸ்லாவா சிம்பார்ஸ்கா 10

 
 
10_2917356h.jpg
 

நோபல் பரிசு பெற்ற போலந்து கவிஞர்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற போலந்து கவிஞர் விஸ்லாவா சிம்பார்ஸ்கா (Wislawa Szymborska) பிறந்த தினம் இன்று (ஜூலை 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l போலந்தின் ப்ரோவென்ட் நகரில் (1923) பிறந்தார். தந்தை அரசு ஊழியர். படிக்கும் காலத்தில் 2-ம் உலகப்போர் தொடங்கியதால், முறையாக பள்ளிக்கு செல்ல முடியவில்லை. ரகசியமாக நடத்தப்படும் தலைமறைவு வகுப்புகளில் கல்வி கற்றார்.

l ரயில்வே தொழிலாளராக சிறிது காலம் பணியாற்றினார். இதனால் கட்டாய கூலித்தொழிலாளியாக ஜெர்மனிக்கு அனுப்பப்படுவதில் இருந்து தப்பித்தார். நல்ல ஓவியத்திறன் இருந்ததால், பாடப் புத்தகங்களுக்கு ஓவியங்கள் வரைந்து கொடுத்தார். கதை, கவிதைகளும் எழுதிவந்தார்.

l உலகப்போர் முடிந்த பிறகு, பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, மொழி, இலக்கியம், சமூகவியல் பயின்றார். அப்போது இவரது முதல் கவிதையான ‘ஸுகம் ஸ்லோவா’, ஒரு நாளிதழில் வெளியானது. தொடர்ந்து பல இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்தன. வறுமை காரணமாக, கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மாதம் இருமுறை வரும் பத்திரிகையில் பணியாற்றினார்.

l முதல் கவிதைத் தொகுப்பு 1952-ல் வெளிவந்தது. ஆரம்பகால கவிதைகள் போர் மற்றும் தீவிரவாதத்தை மையக் கருத்தாகக் கொண்டிருந்தன. மனித வாழ்வு மற்றும் இயற்கையை இவரது கவிதைகள் இயல்பாக சித்தரித்தன. சமுதாய அக்கறையுடன் கிண்டல், நகைச்சுவைக்கும் அதில் பஞ்சமிருக்காது.

l இலக்கியத் திறனாய்வுப் பத்திரிகையில் 1953 முதல் 1981 வரை பணியாற்றியபோது, இவர் எழுதிய இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள் பின்னர் புத்தகமாக வெளியிடப்பட்டன. போலந்தில் இவரது கவிதை நூல்கள் மற்ற உரைநடை நூல்களைவிட அதிகம் விற்பனையாகின.

l நீண்டகால இலக்கியப் பயணத்தில், இவர் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை குறைவுதான். 350 கவிதைகள் மட்டுமே எழுதியுள்ளார். ஆனால் அவற்றின் தீவிரத்தன்மை, மொழி, கரு இவற்றால் புகழ்பெற்ற கவிஞராகப் பரிணமித்தார். ‘கவிதை உலகின் மொஸார்ட்’ என்று வர்ணிக்கப்பட்டார்.

l மிகவும் எதார்த்தமான பாணியில் கவிதை எழுதக்கூடியவர். இவரது பல கவிதைகள் இசையமைக்கப்பட்டு பாடல்களாக வெளிவந்தன. ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ கவிதை ‘டர்ன் லெஃப்ட், டர்ன் ரைட்’ படத்தில் இடம்பெற்றது. ‘த்ரீ கலர்ஸ்’ திரைப்படம் இக்கவிதையை தழுவி தயாரிக்கப்பட்டது.

l போலந்து, ஜெர்மன், பிரெஞ்ச், ஆங்கிலம் உட்பட பல மொழிகளை அறிந்திருந்தார். சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட. பிரபல பிரெஞ்ச் இலக்கியங்களை போலந்தில் மொழிபெயர்த்தார். ‘அவுட்லவுடு’ என்ற மாதாந்திர இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இவரது கவிதைத் தொகுப்பு 2006-ன் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

l இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1996-ல் பெற்றார். போலந்து கலாச்சார அமைச்சக விருது, ‘கதே’ (Goethe) பரிசு, ஹெர்டர் பரிசு, போலந்து பென் கிளப் பரிசு, ஆர்டர் ஆஃப் ஒயிட் ஈகிள் உட்பட பல பரிசுகளை வென்றுள்ளார். இவரது படைப்புகள் தமிழ் உட்பட உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

l இறுதிமூச்சு வரை கவிதையை சுவாசித்துவந்த விஸ்லாவா சிம்பார்ஸ்கா 88-வது வயதில் (2012) மறைந்தார். இறப்பதற்கு முந்தைய நாள் இரவுகூட ஒரு கவிதை எழுதினார். அது இவரது மறைவுக்குப் பிறகு வெளியிடப்பட்டது.

tamil.thehindu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.