Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

p22a.jpg

வின்டேஜ் நகரமான ரோம் மாநகரின் மேயராகியுள்ளார், 37 வயதான விர்ஜினியா ரேகி. 3,000 ஆண்டுகால ரோம்  வரலாற்றில் மேயராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவது முதல் முறை. சுயேட்சை வேட்பாளரான விர்ஜினியா, கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் 60 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். `போப் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வாடிகன், ரோம் மாநகராட்சிக்கு 2,368 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்திருக்கிறது. இதை உடனடியாக வசூலித்து, ரோம் நகரின் வளர்ச்சிக்கு செலவிடுவேன்' என முதல் அசைன்மென்ட் டிலேயே அதிரவைத்திருக்கிறார் விர்ஜினியா!


p22b.jpg

யக்குநர் ஏஞ்சலீனா ஜோலி இயக்கிவரும் ஐந்தாவது படமான `தே கில்டு மை ஃபாதர்' இந்த ஆண்டு ரிலீஸ். `லாங் உங்' என்கிற கம்போடிய எழுத்தாளரின் புத்தகத்தைத்தான் படமாக மாற்றுகிறார் ஜோலி. கம்போடியாவில் நடைபெற்ற கேமர் ரூஜ் சர்வாதிகார ஆட்சியில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்களைப் பற்றி பேசும் படத்தில், தன் முதல் மகன் மடோக்ஸை நடிகனாக அறிமுகப்படுத்துகிறார். வளர்ப்பு மகனான மடோக்ஸை, கம்போடியா நாட்டில் இருந்துதான் ஏஞ்சலீனா தத்தெடுத்தார்!


p22c.jpg

` `நீங்கள் எக்ஸுடன் நடிப்பீர்களா... அவருடன் நடிப்பீர்களா?' என, என்னிடம் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். எனக்கு  எக்ஸ், ஒய், இஸட் என்ற எந்தக் கதாநாயகனுடனும் இணைந்து நடிக்க விருப்பம்தான். ஆனால், அந்தக் கதைக்கு அவர் பொருத்தமான ஜோடியாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். ஷாரூக் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் கபூர்... என எல்லோருமே என் படத்துக்கான நடிகர்கள். முன்னர் போல எமோஷனல் பெண்ணாக நான் இல்லை' என ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் தீபிகா படுகோன்!


p22d.jpg

`உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கள் வீரர்களுக்கு சரியான முடிவுகள் கிடைக்கவில்லை என்றால், குறிப்பிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதற்கு சர்வதேச பாக்ஸிங் அமைப்பும் தோள்கொடுக்கும். ஆனால்  இந்தியாவை, சர்வதேச அமைப்புகள் பாரபட்சமாகத்தான் நடத்துகின்றன. அதைத்தான் இந்த முடிவும் காட்டுகிறது. இருப்பினும், தொடர்ந்து போராடுவேன். பாக்ஸராக நான் சாதிக்கவேண்டியவை நிறைய இருக்கின்றன. ஓய்வுபெறும் எண்ணம் இல்லை' - எனச் சொல்லியிருக்கிறார் மேரி கோம். ஐந்து முறை உலக சாம்பியனான மேரி கோமுக்கு, வைல்டு கார்டு மூலம் ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெறும் வாய்ப்பு இருந்தும், அதை வழங்க மறுத்திருக்கிறது சர்வதேசக் குத்துச்சண்டை அமைப்பு.


p22e.jpg

`இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தை அடுத்து, இயக்குநர் கெளரி ஷிண்டே இயக்கும் படத்தின் பெயர் `டியர் ஸிந்தகி'. `ஆட்டோகிராஃப்' ஸ்டைலில் ஒரு பெண், தன் வாழ்க்கையில் கடந்துவரும் மூன்று ஆண்களைப் பற்றிய படம். அலியா பட் நடித்திருக்கும் இந்தப் படத்தில், ஷாரூக் கான் மிக முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். படம் நவம்பர் ரிலீஸ்!


p22f.jpg

னைவி ஐஸ்வர்யாவை  இயக்குநராக அறிமுகப்படுத்திய தனுஷ், அடுத்ததாக அவரின் தங்கை செளந்தர்யாவின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது `யாரடி நீ மோகினி' ஸ்டைலில் ரொமான்டிக் காமெடிப் படமாக இருக்குமாம்!

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

 

p94.jpg

ஜெய் ஹோ இஸ்ரோ

ஜூன் 22-ம் தேதி, இஸ்ரோ விஞ்ஞானிகள் அதீத மகிழ்ச்சியில் இருந்தனர். ஒரே ராக்கெட்டில் 20 செயற்கைக்கோள்கள் அனுப்பி இந்திய விஞ்ஞானிகள் புதிய சாதனையைப் படைத்து இருக்கிறார்கள். 2008-ம் ஆண்டு, ஒரே ராக்கெட்டில் 10 கோள்களை அனுப்பி, சாதனை செய்து இருந்தது இந்தியா. ரஷ்யா 37, அமெரிக்கா 34 செயற்கைக்கோள்களை அனுப்பி சாதனை செய்து இருந்தன. இந்தியா அனுப்பிய 20 செயற்கைக்கோள்களில் இருக்கும் சிறப்பே அதில் 17 கோள்கள் அமெரிக்க, ஜெர்மனி போன்ற வெளிநாட்டு செயற்கைக்கோள்கள்தான். அந்த நாள் முழுக்க #isro ட்ரெண்டிலேயே இருந்தது. ராக்கெட் ராக்ஸ்!

இதெல்லாம் வேற லெவல் ஆதரவு

p94a.jpg

டொனால்ட் ட்ரம்ப், ஹிலாரி க்ளிண்டன் இருவரும் போட்டியிடும் அமெரிக்க அதிபர் தேர்தலை, உலகமே உற்று நோக்கிக் கவனித்து வருகிறது. இஸ்லாமியர்கள், பெண்கள் எனத் தொடர்ந்து சர்ச்சைப் பேட்டிகளை டொனால்ட் ட்ரம்ப் கொடுத்து வந்தாலும், அவருக்கும் ஆதரவு அதிகரித்தவண்ணம்தான் இருக்கிறது. டொனால்டு ட்ரம்பை ஆதரிக்கும் பெண்கள் அவருக்கு ஆதரவாக ட்விட்டுகள் இட்டனர். #TrumpGirlsBreakTheInternet என அந்த ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் அடிக்கக் காரணம், எல்லா ஆதரவு ட்விட்டுகளிலும் இருந்த ஹாட் படங்கள். ஆம், ஆதரவு தெரிவித்த பெண்கள், ஹாட் போஸில் அவர்களது படங்களையும் வெளியிட்டு இருந்தார்கள். ப்பிளான் பண்ணிப் பண்ணியிருப்பாங்களோ!

உண்மை ஒருநாள் வெல்லும்

p94b.jpg

கடந்த ஒரு மாதமாகவே கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெயராஜனுக்கும், தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜுக்கும் இடையே லடாய் முற்றிக்கொண்டு வந்தது. கேரள அமைச்சர் தொடர்ந்து தன் மீது பழி போடுகிறார் என கருத்து தெரிவித்து வந்தார் அஞ்சு. ஒரு கட்டத்திற்கு மேல் ‘போங்கய்யா நீங்களும் உங்க வேலையும்’ என்கிற ரீதியில், அவர் குழுவில் இருந்த 13 பேர், அவரது தம்பி என அனைவரும் தங்கள் வேலையை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டார்கள். அட, இந்தப் பொண்ணு #anju பயங்கர கெத்துப்பா என பாராட்டித் தள்ளினர் நெட்டிசன்ஸ்.  கண்ணுல கெத்து!

வெல்கம் ஜம்போ

p94c.jpg

ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா ஒருநாள் தொடர், டி20 தொடர் என விளையாடிக்கொண்டு இருந்தது. ஆனால், அதில்கூட அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை ரசிகள். இந்திய அணியின் பயிற்சியாளர் யார் என்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். ‘உங்களில் யார் அடுத்த பயிற்சியாளர்?’ என நிகழ்ச்சி நடத்தாத குறைதான்,  57 நபர்கள் விண்ணப்பித்து, 21 நபர்களை அதிலிருந்து ஷார்ட் லிஸ்ட் செய்து கடைசி நிமிடம் வரை விறுவிறுப்பு காட்டினார்கள். இறுதியாக முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளேவைத் தேர்ந்தெடுத்தார்கள். #kumble தேசிய அளவில் ட்ரெண்ட் அடித்தார். கலக்குங்க ப்ரோ!

தீபிகா படுகோனர்கள்

p94d.jpg

நடிகர்களுக்கு மட்டுமே ட்விட்டரில் ட்ரெண்ட் அடித்து சண்டை போட்டுக்கொண்டு இருந்த நெட்டிசன்ஸ், சில காலமாக நடிகைகளுக்கும் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். பாலிவுட் சினிமா, ஹாலிவுட் சினிமா என உலகம் முழுக்க ரசிகர்களை அதிகமாக்கிக்கொண்டே வருகிறார் தீபிகா படுகோன். ட்விட்டரில் 15 மில்லியன் ரசிகர்களைக் கடந்த தீபிகாவிற்கு #15MillionDeepikaCrazens என்ற டேக்கை பரிசாக்கினர் நெட்டிசன்ஸ். தமிழுக்கு மறுபடியும் வா தாயி!

மறுபடியும் யுவன் சிம்பு

p94e.jpg

இந்த ஆண்டு யுவன் ஒப்பந்தமாகியுள்ள படங்கள் மட்டும் பத்தைத் தாண்டிவிட்டடன. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படப்புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து இயக்கவுள்ள ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ படத்திற்கும் யுவன்தான் இசையமைப்பாளர் என அறிவித்து இருக்கிறார். படத்தில் சிம்புவின் லுக்கையும், 9 பாடல்களில் ஒரு பாடலும் முடித்துவிட்டோம் போன்ற செய்திகளையும் அவர் ட்விட்ட, சிம்பு ரசிகர்கள் வெறிகொண்டு அதை தேசிய அளவில் #TrendsettingAAAalbumOnTheWay என்று ட்ரெண்ட் செய்தனர். விரைவில் வெளிவர வாழ்த்துகள் ஃபிரெண்ட்!

மிஸ் யூ மெஸ்ஸி

 p94f.jpg

கால்பந்து உலகில் ஜாம்பவானாக வலம் வந்துகொண்டிருப்பவர் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த லயோனல் மெஸ்ஸி. தற்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த வாரம் நடந்த #CopaAmerica ஃபைனலில் சிலி அணிக்கு எதிராக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் மெஸ்ஸி. போட்டியில் சிலி, கோப்பையைக் கைப்பற்றியது. சிலிக்கு எதிரான ஆட்டத்தில் சொதப்பலான ஆட்டத்தை மெஸ்ஸி வெளிப்படுத்தியிருந்தார். அவர் ஓய்வு அறிவித்து இருப்பது, அவரது ரசிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதுக்கெல்லாமா ஓய்வு, ஓவர் மெஸ்ஸி!

இந்திவாலாக்கள் ராக்ஸ்

p94g.jpg

உலக அளவில் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. இந்தி சீரியல்களும் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுக்க வெளியாகிறது. பெரிய பட்ஜெட், கலர் கலர் செட்டிங், கிளாமர் என இந்தி சீரியல்களும் கலக்கலாகவே சென்றுகொண்டு இருக்கின்றன. #ifGOTwasinHindi என்ற டேக்கில், ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ இந்தியில் நடந்தால் எப்படி இருக்கும் என நக்கல் அடித்து வைத்தனர் பாவ்பாஜி நெட்டிசன்ஸ். தமிழ் சீரியலா இருந்தா, எப்படி இருக்கும்னு யோசிங்களேன்!

- ட்ரெண்டிங் பாண்டி

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

p126b.jpg

மூன்று ‘வுட்’களின் லேட்டஸ்ட் அழகிகள் - ஸ்வீட் பயோ-டேட்டா!

சாண்டல்வுட் ராகினி த்வேதி:

p126a.jpg

ஞ்சாப் பைங்கிளி. ‘அழகிகளின் அப்பாக்கள் ஆர்மி மேனாக இருக்கக் கடவது’ என்ற பொதுவிதிப்படி இவரது அப்பாவும் இந்திய ராணுவத்தில் ஜெனரலாக இருந்தவர். ‘லக்மே ஃபேஷன் வீக்’கில் 2008-ல் மாடலாக அறிமுகமானவர் ஃபெமினா அழகிப்போட்டியில் முதல் ரன்னர்-அப்பாகத் தேர்வானார். 2009-ல் ‘சிறுத்தை’ படத்தின் (தெலுங்கு ஒரிஜினல் ‘விக்ரமார்குடு’) கன்னட ரீமேக் ‘வீர மடகரி’ படத்தில் கிச்சா சுதீப்புக்கு ஜோடியாக அறிமுகமானார். படம் ஹிட்டடிக்க ‘கோகுலா’, ‘கான்டேதே’, ‘ஹோலி’, ‘நாயகா’, ‘கெம்பேகௌடா’, ‘ஆரக்‌ஷகா’, ‘வில்லன்’, ‘சிவா’ என ஹிட் படங்களில் பட்டையைக் கிளப்பினார். 2014-ல் ‘ராகினி ஐபிஎஸ்’ கன்னட சினிமாவின் முதல் பெண் ஹீரோயின் லீடிங் கேரக்டரில் நடித்த படமாகக் கொண்டாடப்பட்டது. ஜெய் ராகினிடா!

டோலிவுட் மெஹ்ரீன் பிர்ஜாடா:

p126c.jpg

p126d.jpg

வரும் பஞ்சாபிக் குடும்பம்தான். மாடலிங் வருவதற்கு முன் என்சிசியில் கலக்கி எடுத்தவர். துப்பாக்கிச் சுடுவதிலும் மலை ஏற்றத்திலும் பரிசுகளை வாரிக்குவித்த மெஹ்ரீனுக்கு ‘ஏர் பிஸ்டல்’ துப்பாக்கிச் சுடும் பிரிவில் நல்ல எதிர்காலம் இருந்தது. ஆயகலைகளைக் கரைத்துக் குடித்த மெஹ்ரீனை லண்டன் ‘யங் குளோபல் லீடர்’ கருத்தரங்கத்துக்கு இந்தியாவின் சார்பாக அரசு அனுப்பி வைத்திருந்தது. பொண்ணுக்கு நடிப்பு ஆசையே இல்லை. ஆனாலும் கனடாவின் அழகிப் போட்டியில் ‘மிஸ் பெர்சனாலிட்டி’யாக தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்து தம்ஸ்-அப் விளம்பரத்தில் விஷாலோடு நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, அப்படியே நானியோடு, ‘கிருஷ்ண காடி வீர பிரேம காதா’ பட வாய்ப்பும் கிடைத்தது. பாலிவுட்டிலும் அழைப்பாம். அதிர்ஷ்ட அழகி!

மல்லுவுட் ரெபா மோனிகா ஜான்:

p126e.jpg

p126f.jpg

கொச்சியில் வேதியியல் படிக்கும் அழகுக் குட்டிச் செல்லம். ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜு’வில் நடித்த அனு இமானுவேலுவின் கசின். தாத்ரி ஹேர் ஆயில் விளம்பரத்தில் நம் மனதை அள்ளிய பூங்கொத்து. ‘மழவில் மனோரமா’ சேனல் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தவர். வினீத் னிவாசன் ‘ஜேக்கப்பின்டே ஸ்வர்க்க ராஜ்ஜியம்’ படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக்கி அழகு பார்க்க, பொண்ணுக்கு டஜன் கணக்கில் ஆஃபர். ஆனால் மாஸ்டர் டிகிரி முடித்ததும்தான் அடுத்த படம் கமிட்டாம் இந்தப் பச்சக்கிளிக்கு. சீக்கிரமே கிளிக்கு றெக்கை முளைச்சு இங்கே வந்துடும், வந்துடணும்!

vikatan

  • தொடங்கியவர்
பாரமின்றி வாழ பொய்யுரையாதீர்...
 

article_1467084464-lies-and-truth.jpgவாழ்க்கையில், நான் ஓரிரு பொய்கள் தான் சொல்லியிருப்பேன். அது என்ன பெரிய தப்பாகும் எனச் சிலர் சொல்வதுண்டு.

என்றுமே உண்மை பேசுபவர்கள் கூட, தெரியாத் தனமாகச் சொன்ன பொய்யொன்றினால், அவஸ்தைப்பட்டதுண்டு.

சந்தர்ப்ப வசத்தால், பொய்பேச நிர்ப்பந்திக்கப்பட்டால், அதன் எதிர்விளைவுகளைச் சிந்திக்கவும். சொல்லப்படும் பொய்யினால், அதனால் உங்களுக்கோ அன்றி சமூகத்துக்கோ, தனிமனிதனுக்கோ நல்லதுதானா, என்பதை ஒருதடைவைக்கு நூறு தடவை சிந்தியுங்கள்.

தற்காலிக நன்மைக்காக நிரந்தரமான சந்தோஷங்களைச் சொல்லும் பொய்யினால், இழப்பது மஹாதவறு.

மனதில் பாரமின்றி வாழ இலகுவான வழி, பொய்யுரையாமையாகும். பொய் மனிதனை மெய்வருந்தச் செய்யும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தோற்றவர்களின் கதை - 7

சுசி திருஞானம்தொடர்

 

p12a.jpg

சார்லி சாப்ளின்!

லகிலேயே மிக அதிகமான மக்களை வயிறு குலுங்கச் சிரிக்கவைத்த மாபெரும் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். 100 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவரது நகைச்சுவைப் படங்களைப் பார்த்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் குதூகலிக்கிறார்கள். சிரிப்போடு கூடவே,  மனிதநேயச் சிந்தனையையும் பரிசளிப்பதே சார்லி சாப்ளினின் தனித்துவம்.  

மற்றவர்களைச் சிரிக்கவைப்பதற்காக, தான் கடந்துவந்த வேதனைமிக்க பாதை பற்றி சார்லி சாப்ளின் சொன்ன வலி மிகுந்த வார்த்தைகள்: ‘‘நான் மழையில் நடந்துசெல்வதை விரும்புகிறேன். ஏனென்றால், மழைநீரில் நான் நடக்கும் போது, எனது கண்ணீரை மற்றவர்கள் பார்க்க முடியாது.’’

லண்டனில் 1889 ஏப்ரல் 16-ல் பிறந்தார் சார்லி சாப்ளின். தாயும் தந்தையும் நாடக நடிகர்கள். தந்தை குடிக்கு அடிமையாகி இறந்துவிட்டார். சாப்ளின், அவரது தாய் ஹன்னா, சகோதரர் சிட்னி மூவரும் குடியிருந்த வீடுகளிலிருந்து அடிக்கடி துரத்தப்பட்டனர். பல நாட்கள்
நடைபாதைகளிலும், பூங்காக்களிலும் தூங்கி எழுந்திருக்கும் கடினமான வாழ்க்கை.

வறுமையின் பிடியில் இருந்தபோதும், தாய் ஹன்னா சாப்ளினை மிகுந்த பாசத்துடன் வளர்த்தார். ‘‘எதிர்காலத்தில் நீ உலகிலேயே அதிக புகழ்பெற்ற மனிதனாக இருப்பாய்’’ என்ற தன்னம்பிக்கை சிந்தனையை டன் கணக்கில் சார்லியின் தலையில் ஏற்றிவைத்தார்.

சிறுவன் சார்லிக்கு 5 வயதாக இருந்தபோது, ஒருநாள் அவனது தாய் ஹன்னா தனது மேடைப் பாடல் நிகழ்ச்சிக்கு சார்லியையும் கூட்டிச் சென்றிருந்தார். பார்வையாளர் கூட்டத்தின் முன் பாடிக்கொண்டிருந்த ஹன்னாவுக்கு திடீர் என தொண்டை கட்டிக்கொண்டது. வார்த்தைகள் வரவில்லை. கூட்டத்தினர் கூச்சலிட்டனர்.

p12b.jpg

குட்டிப் பையன் சார்லிக்கு கொஞ்சம் நடிக்கத் தெரியும் என்பதை அறிந்திருந்த நிகழ்ச்சி நிர்வாகி, சார்லியை கூட்டத்தின் முன் நிறுத்தி, ‘‘எப்படியாவது கூட்டத்தைச் சமாளி... என் மானத்தைக் காப்பாற்று’’ என்று கெஞ்சினார். எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் இருந்த சிறுவன் சார்லி, சமயோசிதமாக தனது தாய்க்குத் தொண்டை கட்டி அவர் பாடச் சிரமப்பட்ட சம்பவத்தையே நடித்துக் காட்டினான். ஒரே பாராட்டு... ஆரவாரம். கூட்டத்தினர் அவனை நோக்கிக் காசுகளை வீசி உற்சாகப்படுத்தினர். ‘‘கொஞ்சம் அமைதி’’ என்று கையைக் காட்டியவாறே, மேடையில் விழுந்திருந்த காசுகளைப் பொறுமையாகப் பொறுக்கி எடுத்துக்கொண்ட சார்லி, பின் சில பாடல்களைப் பாடியும் நகைச்சுவையாக நடனமாடியும் கூட்டத்தைக் கலகலப்பாக்கினான்.

வறுமையான சூழலில் இருந்து மீள்வதற்குள், சாப்ளினின் தாய்க்கு உடல்நிலை பாதிப்படையவே, அவர் மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டார்.  ஹான்வெல் என்னும் ஆதரவற்றச் சிறுவர்களுக்கான இல்லத்தில் சாப்ளின் சேர்க்கப்பட்டார். விடுதிக் காப்பாளரிடம் அடிவாங்கி, நோயில் விழுந்து அவதியுற்ற சார்லிக்கு ஆறுதல் கூறுவதற்குக்கூட யாருமே இல்லை. ‘‘அந்தச் சூழலிலும்கூட, நான் உலகத்திலேயே சிறந்த நடிகர் ஆகப்போகிறேன் என்ற கற்பனை பிம்பம்தான் எனக்கு அசாத்தியமான தைரியத்தைக் கொடுத்தது’’ என்று பின்னாட்களில் சார்லி தன் மகனிடம் கூறியுள்ளார்.

சார்லி தனது 19-வது வயதில், ப்ரெட் கார்னோ கம்பெனியில் துணை நடிகராக வேலைக்குச் சேர்ந்தார். சார்லியின் ஒல்லியான உருவத்தைப் பார்த்த கம்பெனிக்காரர்கள் அவருக்கு பிச்சைக்காரன், குடிகாரன் போன்ற பாத்திரங்களையே கொடுத்தனர். எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக நடிக்கிற பையன் என்ற பெயர் எடுத்தார். அமெரிக்காவுக்கு நாடகக் குழு ஒன்றை அனுப்ப வேண்டியிருந்தபோது, அந்தக் குழுவில் ஒருவராக சார்லி சாப்ளின் அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டார். 

கப்பல், அமெரிக்காவைச் சென்று சேர்ந்தபோது சார்லியுடன் சென்ற ஸ்டான் லாரல் என்பவர் அந்தக் காட்சியை இப்படி விவரிக்கிறார். ‘‘கப்பலில் இருந்து இறங்கியவுடன், அமெரிக்க நிலப்பரப்பைப் பார்த்துக் கை அசைத்த சார்லி சாப்ளின் நாடகப் பாணியில் இப்படிச் சொன்னார்: ‘அமெரிக்காவே உன்னை வெற்றிகொள்ள நான் வந்திருக்கிறேன். இன்னும் சில நாட்களில் இங்குள்ள ஒவ்வோர் ஆணும், ஒவ்வொரு பெண்ணும், ஒவ்வொரு குழந்தையும் சார்லி சாப்ளின் என்ற எனது பெயரைச் சொல்வார்கள்.’ அவரது வார்த்தைகளில் தன்னம்பிக்கை நிரம்பியிருந்தது.” 
அவரது மேடை நாடகங்கள் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகின. 1914-ம் ஆண்டில் அவரைத் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்தது கீஸ்டோன் ஸ்டுடியோ. தனித்துவம் காட்டுவதில் நிகரற்றவரான சார்லி, நாடோடிக் கதாபாத்திரத்தை விரைவில் உருவாக்கிக் கொண்டார். தலையில் உயர்ந்த தொப்பி, கையில் வளைந்த தடி, இறுக்கமான சூட்டு, நறுக்கு மீசை, கோமாளி நடைகொண்ட நாடோடிக் கதாபாத்திரம் வெகுவிரைவில் உலகையே கவர்ந்துவிட்டது.

p12.jpg

ஒரே ஆண்டில் 35 படங்களில் நடித்தார். ஸ்டுடியோக்கள் அவரை ஒப்பந்தம் செய்ய வரிசையில் நின்றன. 28 வயதில் உலக சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் தருவதாக அவருடன் ஒப்பந்தம் போட்டது மியூச்சுவல் ஸ்டுடியோ. விரைவில் உலகிலேயே அதிகப் பணக்கார நடிகர் ஆகிவிட்டார். ஆனால், அவர் பணக்காரராக  வாழவில்லை. சிறு வயதிலேயே பசி, பட்டினியோடு வளர்ந்தவரான சார்லி சாப்ளின், அடித்தட்டு மக்களின் மீதான தனது அளவுகடந்த அன்பினை வெளிப்படுத்தும் வகையில் பல படங்களை உருவாக்கினார்.

 ‘ஒரு நாயின் வாழ்க்கை’, ‘தி கிட்’, ‘தி சர்க்கஸ்’, ‘தி சிட்டி லைட்ஸ்’, ‘தி கோல்டு ரஷ்’ போன்ற படங்கள் சமூக அவலங்களை நகைச்சுவையுடன் சித்தரித்த குறுங்காவியங்கள். மனிதர்களை இயந்திரங்களாக மாற்றும் அவலத்தைக் கேலிசெய்து ‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற படம் தயாரித்தார் சாப்ளின். சர்வாதிகாரி ஹிட்லரை அம்பலப்படுத்தும் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ (மாபெரும் சர்வாதிகாரி) என்ற படமும் தயாரித்தார். இந்தப் படங்கள் சமூக அக்கறை மிக்க மகத்தான கலைப் படைப்புகள்.

இதுபோன்ற மனிதநேயம் மிக்க படங்களை உருவாக்கியதற்காக அவர் மீது அமெரிக்க உளவுத்துறை எதிர் பிரசாரத்தைத் தூண்டியது. 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்துவந்த சார்லி மீது அமெரிக்கக் குடியுரிமை பெறவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவர் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் அவரது ‘யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்’ பட நிறுவனம் சரிந்தது. மீண்டும் தோல்விகள். ‘அயல்நாட்டானை அடித்துத் துரத்து’ என்று சார்லி சாப்ளினுக்கு எதிரான கோஷம் எழுப்பப் பட்டது. அவரைக் கம்யூனிஸ்ட் என்று தூற்றினார்கள். சாப்ளின் அஞ்சவில்லை. ‘‘நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல... ஒரு மனிதன்’’ என்று முழங்கினார்.

தனக்கு எதிரான அவதூறுப் பிரசாரம் உச்சத்தை அடைந்த நிலையில், சார்லி சாப்ளின் கடைசியில் அமெரிக்காவைவிட்டு வெளியேறினார். இங்கிலாந்து சென்றார். பின் சுவிஸ் நாட்டில் தங்கிவிட்டார். யுத்தவெறியை எதிர்த்துக் குரல்கொடுக்க அவர் எப்போதுமே தயங்கவில்லை, தவறவில்லை. சார்லி சாப்ளினை நாட்டை விட்டுத் துரத்தியது தவறு என்று 1970-களில் உணர்ந்துகொண்ட அமெரிக்கர்கள், அவரை மீண்டும் வரவழைத்து விருதுகள் வழங்கிப் போற்றிப் பாராட்டினார்கள். 

‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தின் இறுதிக் காட்சியில், ஓர் எளிய முடிதிருத்தும் தொழிலாளி கதாபாத்திரத்தின் மூலம் சாப்ளின் பேசுகிறார்: ‘‘ஒரு புதிய உலகைப் படைக்க நாம் அனைவரும் ஒன்று சேர்வோம். பேராசை, வெறுப்பு, சகிப்பின்மை இவற்றுக்கு முடிவுகட்டுவோம். அறிவார்ந்த உலகைப் படைப்போம். அறிவியலும், வளர்ச்சியும் மனிதகுல மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லட்டும். ஜனநாயகம் காக்க நாம் அனைவரும் ஒன்றுசேர்வோம்.’’

(இன்னும் வெல்வோம்)

vikatan

  • தொடங்கியவர்

எதிரிகள் இல்லாத பட்டாம்பூச்சிகள்!

 
  • pic2_2848460g.jpg
     
  • pic1_2848461g.jpg
     

பட்டாம்பூச்சி என்றாலே குழந்தைகளுக்குக் குஷிதான். பட்டாம்பூச்சியைப் பிடித்து விளையாடுவது, அதன் வண்ணங்களைப் பார்த்துப் பிரமிப்பது எனப் பட்டாம்பூச்சி மீதான குழந்தைகளின் ஈர்ப்புக்குப் பல காரணங்கள் உள்ளன. உலகம் முழுவதும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி வகைகள் உள்ளன.

பொதுவாகப் பறவைகள் எந்தப் பூச்சியைப் பார்த்தாலும் ஒரே கொத்தில் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டுவிடும். பட்டாம்பூச்சிகளைப் பார்த்தாலும், அந்த ஆசை பறவைகளுக்கு வரும். ஆனால், சாப்பிட முடியாது. ஏன் தெரியுமா?

இயற்கை அளித்திருக்கும் பாதுகாப்பு வளையம்தான் அதற்குக் காரணம். பட்டாம்பூச்சிகளின் முதல் எதிரி பறவைகள்தான். ஆனால், அதிக வண்ணங்களோடு பளிச்சென்று இருக்கும் உயிரினங்கள் ஆபத்தானது எனப் பறவைகளின் மூளையில் பதிவாகி இருக்கிறது. சாலையில் சிவப்பு சிக்னலைப் பார்த்தால் அபாயம் என நாம் நினைக்கிறோம் அல்லவா? அதுபோலப் பறவைகள் பட்டாம்பூச்சியை சீந்துவதேயில்லை.

பட்டாம்பூச்சிகள் பெரும் பாலும் விஷச்செடிகளின் இலைகளில்தான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். அந்த முட்டையிலிருந்து வெளிவரும் இளம் கம்பளிப்புழு, அந்த விஷ இலைகளைத் தின்றே வளர்கிறது. இதனால், அதன் உடலிலேயே விஷம் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்துவிடுகிறது. பட்டாம்பூச்சியாக உருவெடுத்த பிறகும் இந்த விஷத்தன்மை நீடிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது தெரியாமல் பறவைகள் பட்டாம்பூச்சியைக் கொத்தி விழுங்கினால், அவ்ளோதான். மனிதர்களுக்கு ஏற்படுவதுபோல ‘ஃபுட் அலர்ஜி’ ஆகிவிடுமாம். அதனால்தான் பட்டாம்பூச்சி பக்கமே பெரும் பாலான பறவைகள் தலை வைப்பதில்லை.

அதேசமயம் வயதான பிறகு பட்டாம்பூச்சியின் உடலில் விஷத்தன்மை குறைந்துவிடுமாம். அப்போது அதன் நிறமும் மங்கிவிடும். இதைப் புரிந்து கொள்ளும் சில புத்திசாலிப் பறவைகள், பட்டாம்பூச்சியைக் கொத்தி வீழ்த்திவிடுகின்றன.

எவ்ளோ உஷார் பார்த்தீங்களா?!

tamil.thehindu

  • தொடங்கியவர்

13524333_1168821726509949_19837589766173

ஜூலை 3: விக்கிலீக்ஸ் புகழ் ஜூலியன் அசாஞ்சு மற்றும் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் பிறந்த தினம் இன்று..

 
  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

p36a.jpg

dot1.jpg தன்னுடைய ஒவ்வொரு படத்தின்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்குப் பரிசுகள் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் நயன்தாரா. மேக்கப் மேன், ஹேர் ஸ்டைலிஸ்ட் என ஸ்பாட்டில் தன்னை வியக்கவைப்பவர்களுக்கு க்யூட் பரிசுகள் உண்டு. உடன் நடிக்கும் ஹீரோக்களுக்கும் ஷூட்டிங்கின் கடைசி நாளில் வாட்ச், ஷூக்களைப் பரிசாகக் கொடுக்கிறார் நயன். கிஃப்டிங் லயன்!


dot1.jpg  மகள் சோனம் கபூரைத் தொடர்ந்து அனில் கபூரின் மகன் ஹர்ஷவர்தன் கபூரும் பாலிவுட்டில் என்டர் ஆகிறார். `ரங் தே பசந்தி', `பாக் மில்க்கா பாக்' படங்களை இயக்கிய ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கும் `மெர்ஸியா' படத்தின் ஹீரோ ஹர்ஷவர்தன்தான். லைலா-மஜ்னு, ரோமியோ -ஜூலியட் வரிசையில் புகழ்பெற்ற மீர்ஸா-ஷாகிபா வரலாற்றுக் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த ரொமான்டிக் படம். அப்பாவைப் போலவே படத்தில் மீசையுடன் அறிமுகமாகிறார் ஹர்ஷவர்தன். ஆவோ பேட்டா!


dot1.jpg  மீண்டும் சீக்ரெட் லொக்கேஷனுக்குப் பறந்துவிட்டார் ராகுல் காந்தி. கடந்த 19-ம் தேதி `சில நாள் பயணமாக வெளிநாடு செல்கிறேன்'  என ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டவரிடம் இருந்து அதன் பிறகு எந்தத் தகவலும் இல்லை. இதற்கிடையே தற்போது ராகுல் காந்தி எந்த நாட்டில் இருக்கிறார் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களோ அல்லது பொதுமக்களோ கண்டுபிடித்து தகவல் சொன்னால், 1 லட்சம் ரூபாய் பரிசு என அறிவித்திருக்கிறது பா.ஜ.க. ராகுல் ரகசியங்கள்!


dot1.jpg  திரைப்படங்களில் ஹிட் அடிப்பதைப்போல தொடர்ந்து குறும்படங்களிலும் நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார் ராதிகா ஆப்தே. சமீபத்தில் இவர் நடித்த `க்ரித்தி' குறும்படம் வெளியான முதல் நாளிலேயே பத்து லட்சம் வியூஸ் குவித்திருக்கிறது. தன் தோழியும் மனநல மருத்துவருமான ராதிகா ஆப்தேவிடம், தன் காதலியைப் பற்றி சொல்கிறார் மனோஜ் பாஜ்பாய். கற்பனையான ஒரு பெண்ணை நிஜம் என நினைத்து அதில் இருந்து மீண்டு சிகிச்சை பெற்றுவந்த மனோஜிடம், இதுவும் கற்பனைதான் எனச் சொல்கிறார் ராதிகா. ஆனால், யார் சொல்வது உண்மை... யார் கற்பனை? என்ற ட்விஸ்ட்டோடு முடிகிறது இந்த 18 நிமிட த்ரில்லர். ஷாக்கிங் ஷார்ட் ஃபிலிம்!


dot1.jpg  57 பேர் விண்ணப்பித்து, அதில் இருந்து 21 பேரை ஷார்ட் லிஸ்ட் செய்து, ஒரு ரியாலிட்டி ஷோவுக்கான களேபரங்களுடன் நடைபெற்று முடிந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தேர்வு. மும்பையைச் சேர்ந்தவர்தான் பயிற்சியாளராக வருவார் என எல்லோரும் எதிர்பார்க்க, கும்ப்ளேவை டிக் அடித்தது கங்குலி, சச்சின் அடங்கிய தேர்வுக் குழு. `முதலில் டிராவிட்டைத்தான் பயிற்சியாளராக நியமிக்க விருப்பம் தெரிவித்தோம். ஆனால், அவர் `சீனியர் அணிக்குப் பயிற்சியாளர் ஆகும் விருப்பம் இல்லை. ஜூனியர் அணிக்கே தொடர்ந்து பயிற்சி அளிக்கிறேன்' எனச் சொல்லிவிட்டார்' என க்ளைமாக்ஸ் ரகசியத்தை உடைத்திருக்கிறார் பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர். இனி கும்ப்ளே காலம்!


p36b.jpg

dot1.jpg  அமெரிக்க நடிகையும் பாடகியுமான செலினா கோமஸ், பதிவிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோதான் கடந்த வார வைரல் வீடியோ.  `ஆட்ரினா நெதரி' என்ற ஏழு வயது சிறுமி, அனீமியா நோயால் பாதிக்கப்பட்டவர். இவர் பாடகி செலினா கோமஸின் ரசிகை. செலினாவின் பாடல் ஒன்றுக்கு ஆட்ரினா செம ஆட்டம்போட, அதை ஆன்லைனில் பார்த்த செலீனா, ஆட்ரினாவை நேரில் அழைத்து அவரோடு ஒரு பாடலுக்கு நடனமாட, உலகம் முழுவதும் வைரலானர் ஆட்ரினா. ரசிகைக்கு மரியாதை!


dot1.jpg  ஜூன் 22, 2016 இஸ்ரோவுக்கு மகிழ்ச்சியான நாள். அன்று காலை ஹரிகோட்டாவில் இருந்து, ஒரே ராக்கெட்டில், 20 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை புரிந்திருக்கிறது இஸ்ரோ. 2008-ம் ஆண்டு, ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைகோள்களை அனுப்பியதே இந்தியாவின் முந்தைய சாதனை. இந்த முறை இந்தியா அனுப்பிய 20 செயற்கைகோள்களில், 17 செயற்கைகோள்கள் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து பெறப்பட்டவை. `ஒரே ராக்கெட்டில் 37 செயற்கைகோள்களை அனுப்பியிருக்கும் ரஷ்யாவின் சாதனையை, விரைவில் முறியடிப்போம்' என்கிறது இஸ்ரோ. இஸ்ரோவின் 20/20!


dot1.jpg  கேரளாவில் எலெக்‌ஷன் ஃபீவர் முடிந்ததில் இருந்து ட்ரெண்டில் இருப்பது, கேரளா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெயராஜனுக்கும் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜுக்கும் இடையேயான சண்டைதான். கேரளா மாநில விளையாட்டுத் துறையின் தலைவராகப் பணியாற்றிவந்தார் அஞ்சு ஜார்ஜ். தேர்தல் முடிந்து கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் ஜெயராஜன் அஞ்சு பாபி ஜார்ஜ் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்த, விளையாட்டுக் குழுவில் இருந்த அனைவருமே ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். `உங்களால் விளையாட்டை அழிக்க முடியும். ஆனால், விளையாட்டு வீரர்களை வீழ்த்த முடியாது' என அஞ்சு சொல்ல, `நான் அவர்களை ராஜினாமா செய்யச் சொல்லவில்லை. ஆனால், அவர்களாக ராஜினாமா செய்ததில் மகிழ்ச்சி' என கூலாக பேட்டி கொடுத்திருக்கிறார் அமைச்சர். அட்ராசிட்டி அமைச்சர்!


p36c.jpg

dot1.jpg  அரசியல் தலைவரின் வாரிசாக இருந்தாலும், மக்கள் மனதில் இடம்பெற வேண்டுமானால் சினிமா நடிகராக வேண்டும் என்கிற லாஜிக்படி நடிகராகிறார் நர லோகேஷ். ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசக் கட்சியின் இளைஞர் அணித் தலைவருமான 33 வயதான லோகேஷ்தான் ஆந்திராவின் அடுத்த ஸ்டார். ஆக்‌ஷன், எமோஷன், சென்டிமென்ட் கலந்த மாஸ் ஹீரோ கதைக்கான தேடலில் இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் குடும்பம். தாத்தா போட்ட ரூட்டு!

vikatan

  • தொடங்கியவர்

KAIDI KITCHEN

சென்னை மயிலாப்பூரில் ஒரு உணவகம்.

அங்குபணிபுரியும்  உணவு பரிமாறுபவர்கள் கைதிகளின் சீருடையும், முகாமையாளர்கள் போலீஸ் சீருடையுடனும் பணிபுரிவார்கள்.

உணவு அருந்த வருபவர்கள் சிறையில் உள்ள அறைகள் மாதிரியான அறைகளில் இருந்து சாப்பிடலாம்..

13603288_1801298273434564_67301356218175

https://st1.dineout-cdn.co.in/images/uploads/restaurant/1/e/a/p15391-14345139995580f24fbbc26-700x700-ido536ab6414c4df.jpg?w=700

http://i1.dainikbhaskar.in/thumbnail/655x588/web2images/www.dailybhaskar.com/2015/02/04/02_tripadvisorin_14230251.jpg

https://pbs.twimg.com/media/CMOfvo5UcAA6gvW.jpg

  • தொடங்கியவர்

ஃபுட்பால் காய்ச்சல்!

 

p80a1.jpg

கோபா அமெரிக்கா மற்றும் யூரோ கால்பந்துத் தொடர்களால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் தற்போது கால்பந்து ஜூரம் பிடித்துள்ளது. காலம் காலமாக கால்பந்து பார்த்துவரும் ரசிகர்கள் கூட ட்விட்டர், ஃபேஸ்புக்கில் அம்பியாய் வலம் வருவார்கள். ஆனால் இதையெல்லாம் பார்த்து ‘ஓ ஃபுட்பால்ங்கிறது ஸ்போர்ட்ஸா’ எனக் களத்தில் குதித்துள்ள ‘திடீர்’ ரசிகர்கள் செய்யும் அடாவடிகளால் சோஷியல் மீடியாவே ரணகளமாகிப் போயுள்ளது. இத்தனை நாளா அதை வெளிப்படுத்தலைனு இவங்க பண்ற அலப்பரைகள் கொஞ்ச நஞ்சமல்ல!

red-dot4.jpg முதல் கோல் விழும்வரைக்கும் எந்த டீம், எந்த கலர் ஜெர்சியில் விளையாடுதுனே தெரியாமல் குழப்பத்திலேயே மேட்சைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். விபரம் தெரியாமல் ஆரம்பத்தில் எதிரணிக்கு சப்போர்ட் செய்துவிட்டு, கோல் போட்டபின்புதான் ‘இவ்வளவு நேரம் திருட்டுப்பயகூடவா சகவாசம் வெச்சுருந்தோம்’ எனத் தெளிவடைவார்கள். சரி இந்த கலர்தான் இந்த டீம்னு மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணி வெச்சா, அடுத்த கேம்ல அதே டீம் வேற கலர் ஜெர்சியில் வந்து குழப்பும். ‘அவே கலர்’ டீசர்ட் இருக்கிற விஷயமே அப்புறமா விசாரிச்ச பிறகுதான் தெரியும்.

red-dot4.jpg திடீர் ரசிகர்களுக்கு வரும் இன்னொரு மிகப்பெரிய குழப்பம், ஃபுட்பாலுக்கு எதுக்கு டாஸ்? அதாவது காருக்கு எதுக்கு அச்சாணி? கிரிக்கெட்ல டாஸ் போடுறது பேட்டிங், பெளலிங் தேர்ந்தெடுக்க... ஆனா ஃபுட்பாலைப் பொறுத்தவரை மாற்றி மாற்றி ரெண்டு பக்கமும் ஒடப்போறாங்க. இதுக்கெதுக்கு டாஸ்? நியாயமான கேள்விதானே!

red-dot4.jpg ஃபுட்பால் ரசிகரா ஃபார்ம் ஆகிறவங்க செய்யும் அலப்பரையில் பொறுத்துக்கவே முடியாதது என்னன்னா... எங்கேயாவது விமர்சனம் படிச்சுட்டு, ‘இந்த மேட்ச்ல இந்த டீம் ஜெயிக்கத்தான் அதிக வாய்ப்பு. ஜக்கம்மா சொல்றா’ ரேஞ்சுக்கு ஜோசியம் பார்க்கக் கிளம்பிடுவாங்க. அதிலும் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், நான் சொன்னது நடக்கலைனா, இனி சோஷியல் மீடியா பக்கமே வரலைனு சீன் போடுவாங்க. பெரிய கலெக்டர் வேலை. ரிசைன் பண்ணிட்டுப் போறாருனு நமக்கு கவுண்டர் வாய்ஸ் மனதில் ஓடும்!

red-dot4.jpg ரெண்டு சீனியர் ரசிகருங்க பேசுறதைக் கேட்டுட்டு, அடுத்த ஃபுட்பால் மேட்ச்ல அது எல்லாத்தையும் ‘அன்பே சிவம்’ சந்தானபாரதி மாடர்ன் ஆர்ட் ஓவியத்தை நாசருக்கு விளக்கிட்டு ‘நானே உத்து உத்துப் பார்த்துக் கண்டுபிடிச்சேன்’னு சொல்றது மாதிரி, தன்னோட சொந்தக்கருத்தா நைஸா எடுத்துவிடுவாங்க!

red-dot4.jpg இன்னும் சிலர் ஃபுட்பால் முடியறவரைக்கும் ஆன்லைன்ல உள்ள பசங்ககிட்ட தப்பித்தவறியும் பேசிடக் கூடாதுங்கிற கொள்கையோட இருப்பாங்க. ‘ஹே நைஸ் கோல்யா’ என்று சீன் போடும் ஃபிகருங்க ப்ரொஃபைலில் குத்தவெச்சு உட்கார்ந்து கமென்ட் போடும் பசங்களைப் பார்க்கும்போது ‘இந்த வீட்ல மீச வெச்ச ஆம்பளைங்க 28 பேரு இருக்கோம். ஆனா எப்போ பாரு பொண்ணுங்க கூடத்தான் நீ பேசிட்ருக்க’னு சந்தானம் மாதிரி திட்டத் தோணும். ஆனா எங்கே ஃபிகர் கோச்சுக்குமோனு பயந்து இதை கமென்ட்டா போட மாட்டோம்!

red-dot4.jpg கோலுக்குப் போற பந்தை கோல்கீப்பர் தடுத்துட்டா, உடனே ‘வெல் கீப்பிங்’ என ட்வீட் பறக்கும். சீனியர் ரசிகர்கள் அதுக்குப் பேர் ‘சேவ்’ எனத் தலையில் அடித்துக்கொள்வார்கள். சில நேரம் வெளியே போகிற வேலை வந்துட்டா, டைம்லைன் பார்த்தே ‘திடீர் ரசிகர்கள்’ சீன் போடுவார்கள். சமயத்தில் நெட்வொர்க் காலை வாரிவிட, கவுண்டமணி தியேட்டர்ல தனியா கை தட்டுற மாதிரி ஆகிடும்!

p80b.jpg

red-dot4.jpg புதுசா பார்க்கிறவங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் மெஸ்சிடா, ரொனால்டோடா, முல்லர்டா தான். மத்தவங்க பேரெல்லாம் சமோசாவுக்குள்ள ரொட்டியாங்கிற மாதிரிதான் அனுமானமா புரிஞ்சுக்க வேண்டிவரும். அதனாலயே இவங்கல்லாம் இருக்கிற டீமுக்கு சப்போர்ட் பண்ண வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். சில நேரம் யூரோ சீரிஸ்ல எந்த டீமுக்கு சப்போர்ட்டுனு கேட்டா, தெரிஞ்ச டீம்களான பிரேசில், அர்ஜெண்டினா பெயர்களைச் சொல்லி அசடு வழிவார்கள். இன்னும் சிலர் பார்சிலோனா, ரியல் மேட்ரிட் எனப் பெருமை பொங்கச் சொல்லிச் செல்வார்கள். கிளப் டீமுக்கும், தேசிய அணிக்குமேவா வித்தியாசம் தெரியாம இருப்பாங்க!

red-dot4.jpg தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் ஃபுட்பால்ல உள்ள ஆஃப்சைட் என்னன்னு இவங்களால கண்டுபிடிக்கவே முடியாது. வெட்கத்தை விட்டு யாரிடமாவது சந்தேகத்தைக் கேட்டாலும், முகத்தை இரண்டு நிமிஷம் உற்றுப்பார்த்துவிட்டு, நீ அந்த விஷயத்துக்கு சரிப்பட்டு வர மாட்டேன்னு கிளம்பிப் போய்டுவாங்க!

red-dot4.jpg இவர்கள் செய்யும் அலப்பரைகள் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கும் சீனியர் ரசிகர்கள் சும்மாவா இருப்பார்கள். ‘எத்தனி வருசமா கூழ் ஊத்தினிருக்க?’ என இவர்களது ப்ரொஃபைலில் கலாய்க்கும் மீம்களைக் குவித்துவிடுவார்கள். சிலரோ ‘சிவாஜி’ படத்தில் ரஜினியைக் கட்டிப்போட்டு பாஸ்வேர்ட் சொல்லச்சொல்லி மிரட்டும் போலீஸ்காரர்களைப் போல ‘இதுக்கு முன்னாடி கிளப் மேட்ச்லாம் பார்த்திருக்கியா? கோபான்னா என்னன்னு தெரியுமா? டேரக்ட் ஃப்ரீ கிக், அட்வான்டேஜ் அப்படின்னாலாவது என்னன்னு தெரியுமா?’ என வரிசையாகக் கேள்வி கேட்டுட்டா, சைலன்டா ஆஃப்லைன் போக மட்டும் யார்தான் இவங்களுக்கு சொல்லிக்கொடுத்ததோ?

இன்னும் ஒருமாசம் இந்த அக்கப்போரெல்லாம் சகிச்சுதான் ஆகனுமான்னு யோசிச்சா, நீயும் என் நண்பனே!

vikatan

  • தொடங்கியவர்

பழைய பங்களா... புது கஃபே !

 
 
  • crave_yard_2916045g.jpg
     
  • crave_yard1_2916044g.jpg
     

ஒரு பாழடைந்த பங்களாவைப் பார்த்தால் நமக்குப் பொதுவாக என்ன தோன்றும்? பயமாக இருக்கும். ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி அங்கே இருப்பதாக நினைத்து, அந்த பங்களா பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டோம்.

ஆனால் அதே போன்ற ஒரு பங்களாவை, அற்புதமான இத்தாலியபாணி கஃபேயாக மாற்றினால், உடனே அங்கு போய் ஒரு பீட்ஸாவை ஆர்டர் செய்துவிட மாட்டோமா? இப்படி வித்தியாசமான, ருசிக்குப் பஞ்சமே இல்லாத கஃபே அடையார் காந்தி நகரில் இருக்கிறது. அதன் பெயர் கிரேவ் யார்ட் (Crave yard)கஃபே!

ஒரு பாழடைந்த பங்களாவைப் பார்த்தால் நமக்குப் பொதுவாக என்ன தோன்றும்? பயமாக இருக்கும். ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி அங்கே இருப்பதாக நினைத்து, அந்த பங்களா பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டோம்.

ஆனால் அதே போன்ற ஒரு பங்களாவை, அற்புதமான இத்தாலியபாணி கஃபேயாக மாற்றினால், உடனே அங்கு போய் ஒரு பீட்ஸாவை ஆர்டர் செய்துவிட மாட்டோமா? இப்படி வித்தியாசமான, ருசிக்குப் பஞ்சமே இல்லாத கஃபே அடையார் காந்தி நகரில் இருக்கிறது. அதன் பெயர் கிரேவ் யார்ட் (Crave yard)கஃபே!

உங்கள் வீட்டில் ஜிம்மி, டாமி, லூசி போன்ற செல்லப் பிராணிகள் ஏதாவது இருந்தாலும் அதையும் உங்களுடன் கூட்டிக்கொண்டு போகலாம். அங்கு வேலை பார்ப்பவர்களே அதை வாக்கிங் அழைத்துச் செல்வார்கள். அவை ஃப்ரீயாக கஃபே உள்ளே சுற்றலாம். ஆனால் கிச்சன் உள்ளே மட்டும் ‘நோ என்ட்ரி’ என்கிறார் கிரேவ் யார்ட் கஃபேயின் உரிமையாளர் ஹரிஷ்.

ஸ்பைஸ் ஜெட் விமான வேலை பிடிக்காத இவருக்கு கஃபேயைப் பராமரிப்பது மிகவும் பிடித்திருக்கிறது. 30 அல்லது 40 வயதில் கஃபே திறக்க வேண்டும் என்று நினைத்திருந்த இவர் 20களிலேயே அதைச் சாதித்துவிட்டார்.

“இரண்டு வருஷத்துக்கு முன்னால ரஜினி பிறந்த நாளன்று இந்த கஃபேயைத் திறந்தேன். முதலில் ஏதோ ‘பார்ட்டி கிளப்’னு நெனச்சு இங்க குடியிருக்கவங்க எதிர்ப்பு தெரிவிச்சாங்க. ஆனால் இப்போது அனைத்து அப்பார்ட்மெண்ட்டுகளிலிருந்தும் இங்க சாப்பிட வாராங்க” என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார் அவர்.

“இரண்டு வருஷத்துக்கு முன்னால ரஜினி பிறந்த நாளன்று இந்த கஃபேயைத் திறந்தேன். முதலில் ஏதோ ‘பார்ட்டி கிளப்’னு நெனச்சு இங்க குடியிருக்கவங்க எதிர்ப்பு தெரிவிச்சாங்க. ஆனால் இப்போது அனைத்து அப்பார்ட்மெண்ட்டுகளிலிருந்தும் இங்க சாப்பிட வாராங்க” என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார் அவர்.

கஃபேயில் எப்போதும் இளைஞர் கூட்டம்தான். அடையாரைச் சுற்றி இருக்கும் ஐ.ஐ.டி. பால வித்யா மந்திர் பள்ளி, ஏ.சி.ஜே. போன்ற கல்லூரிகளிலிருந்து கூட்டம் கூட்டமாக மாணவர்கள் வந்து குவிகிறார்கள். அமைதியான சூழல், முற்றிலும் வித்தியாசமான இயற்கை எழிலான இடம், நியாயமான விலையில் சாப்பாடு இதைவிட வேறென்ன வேண்டும் எங்களுக்கு என்று உற்சாகமாக அங்கு வந்திருந்த இளைஞர்கள் சொல்கிறார்கள்.

இங்கே இருக்கும் ஒவ்வொரு அறையிலும் புதுமையான ரசனை காணப்படும். பழைய மரக் கதவுகள் அழகான மேசைகளாகியுள்ளன. வானத்திலிருந்து வைரங்கள் கொட்டுவதைப் போன்ற சுவரோவியங்கள், புத்தக விரும்பிகளுக்கு நாவல்கள், இசை விரும்பிகளுக்கு கிட்டார், மேலும் ‘போர்ட் கேம்ஸ்’ எனக் கலக்குகிறார்கள்.

“இந்த இடத்தைக் கலைநயத்தோடு மாற்றியதற்கு என் நண்பன் ஜாய்ஸிடினுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். கிராபிக் டிசைனரான அவர், அரிசியைக்கூடக் கலைப்பொருளாக மாற்றும் திறமை கொண்டவர்” என்று பெருமையோடு சொல்கிறார் அவர்.

கஃபேயின் ஸ்பெஷலான இடம் மொட்டைமாடிதான்! சுற்றிலும் மரம் செடி கொடியென இயற்கை பூத்துக் குலுங்குகிறது. மரங்களின் நிழலில் ஒய்யாரமாக உட்கார்ந்துகொண்டு காபியை ருசிக்கலாம். கிராமம் போன்ற சூழலாக மொட்டைமாடியை மாற்ற வேண்டும் என்ற யோசனை ஹரிஷுக்கு இருக்கிறது.

சினிமா பிரபலங்களும் இங்கு வந்துசெல்கிறார்கள். அமலா பால், ரேஷ்மி மேனன், விஷ்ணு, விஷால், நிக்கி கல்ராணி, ‘நண்டு’ ஜகன் போன்ற பல ஸ்டார்கள் இங்கு வருவது வழக்கமாம். சினிமா ஷூட்டிங்கும் நடந்திருக்கிறது! ‘அகம்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் வழியே படிக்கும் மாணவர்களுக்கான பாட வகுப்புகளும் அவ்வப்போது இங்கு நடைபெறுகின்றன. சினிமாவுக்கு மட்டுமின்றி கல்விக்காகவும் தன் கிரேவ் யார்ட் கஃபேயைத் திறந்துவைத்துள்ளார் ஹரிஷ்.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

13439191_1169492176442904_43846350648780

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: ஜூலை 04
 
 

article_1435982648-IsrelComdos.jpg1810: நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரை பிரான்ஸ் கைப்பற்றியது.

1837 உலகின் நீண்ட தூர ரயில்சேவை பிரிட்டனின் பேர்மிங்ஹாம் , லிவர்பூல்நகரங்களுக்கிடையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1903: ட்ரோதி லெவிட் என்பவர் மோட்டார் பந்தயப் போட்டியில் பங்குபற்றிய முதல் பெண்ணானார்.

1918: ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலஸ் சார் மன்னரும் அவரின் குடும்பத்தினரும் போல்ஸ்விக் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டனர்.

1941: உக்ரேனில் கைது செய்யப்பட்ட போலந்து விஞ்ஞானிகளும் எழுத்தாளர்களும் ஜேர்மனியின் நாஸி படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1946:  381 வருடங்கள் பல நாடுகளின் காலனி நாடாக இருந்த பிலிப்பைன்ஸ் அமெரிக்காவிடமிருந்து முழுiயான சுதந்திரம் பெற்றது.

1947: இந்தியா, பாகிஸ்தான் எனும் இரு சுதந்திர நாடுகளை உருவாக்குவதற்கான பிரேரணை இந்திய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

1966: அமெரிக்காவில் தகவல் சுதந்திர சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன் கையெழுத்திட்டார்.

1976: கடத்தப்பட்டு உகண்டாவின் எண்டபே விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த எயார் பிரான்ஸ் விமானத்தையும் 248  பயணிகளையும்12 ஊழியர்களையும்மீட்கும்  அதிரடி நடவடிக்கையை இஸ்ரேலிய கமோண்டோக்கள் வெற்றிகரமாக மேற்கொண்டனர். 260 பணயக்கைதிகளில் நால்வரும் கொமாண்டோக்களில்ஒருவம் பலியாகினர். கடத்தல்காரர்கள் 7 பேரும் உகண்டா படையினர் படையினர் 45 பேரும் பலி.

1988: வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் முதல் தமிழ் மாநாடு, பென்சில்வேனியாவில் இடம்பெற்றது.

1997: செவ்வாய் கிரகத்தில் நாஸாவின் பாத் பைண்டர் விண்கலம் தரையிறங்கியது.

1998: ஜப்பான் நொசோமி விண்கலம், செவ்வாய்க் கோளை நோக்கி அனுப்பப்பட்டது.

2006: டிஸ்கவரி விண்ணோடம் 18:37:55 UTC மணிக்கு விண்ணுக்கு ஏவப்பட்டது.

2012: இக்சு போசானை ஒத்த துணிக்கைகள் பெரிய ஆட்ரான் மோதுவியில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜூலை 4: சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இன்று..

விவேகானந்தரின் சாராம்சம் இதுதான்... 'முதலில் உங்களிடமே நம்பிக்கைகொள்ளுங்கள். அதன்பின் ஆண்டவனை நம்புங்கள். உணர்வதற்கு இதயமும், எண்ணுவதற்கு அறிவும், உழைப்பதற்கு உறுதியான உடலும் நமக்கு வேண்டும். இதயத்துக்கும் அறிவுக்கும் போராட்டம் மூளுமானால் இதயத்தைப் பின்பற்றி நடங்கள்'!

Swami Vivekananda

13537623_1169762073082581_52999698843632

ஜூலை.4; விவேகானந்தர் தரும் பத்து பாடங்கள்- நினைவு தின சிறப்பு பகிர்வு

வீரத்துறவி விவேகானந்தர், தன்னம்பிக்கையின் தனித்த அடையாளம். அவரின் வாழ்க்கைத் தரும் உன்னதமான பாடங்களில் சில…

vivk.jpg

கேள்வி கேள்:

இளம் வயதில் அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார் நரேந்திரன். ‘கரடி மோதிரம் போட்டால், செல்வந்தர் ஆகலாம்’ என்று பிறர் சொன்னதை அம்மாவிடம் கேட்டபோது, ‘அதை விற்கிறவன் ஏன் வறியவனாக இருக்கிறான்?’ என்று கேட்டார் அம்மா. ‘எதையும் பகுத்தறிந்து ஏற்க வேண்டும்’ என்று புரிந்துகொண்டார் விவேகானந்தர்.

உன்னை நம்பு:

ஒருநாள் குரங்குக் கூட்டம் துரத்தி வந்தது. எல்லாரும் பயந்து ஓடினார்கள். திரும்பி நின்று எதிர்த்தார் நரேந்திரன். பின்வாங்கின குரங்குகள். ‘தன்னை நம்ப வேண்டும்’ என்று உணர்ந்தார். ‘கடவுளை நம்பாதவனை நாத்திகன் என்றது பழைய மதம். தன்னை நம்பாதவனை நாத்திகன் என்பது புதிய மதம்’ என்று முழங்கினார்.

பயணம் செய்:

வாழ்நாள் முழுக்கப் பயணம் செய்வதில் பேரின்பம் கண்டார் விவேகானந்தர். மைசூர் அரசர், ”என்ன உதவி வேண்டும்?” என்று கேட்டபோது… ”திருச்சூருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தால் போதும்” என்றார். அவர் சென்னையில் தங்கிய இடம், தற்போது விவேகானந்தர் இல்லம் எனவும், குமரியில் தவம் செய்த இடம், விவேகானந்தர் பாறை எனவும் அழைக்கப்படுகிறது.

அன்பு செய்:

‘சக மனிதர்களை நேசிக்கவும் உதவவும் வேண்டும்’ என்று வலியுறுத்துவார். அதற்காக, ‘ராமகிருஷ்ண மடம்’ என்ற அமைப்பை நிறுவினார். ‘உதவி வேண்டுபவர்களுக்கு உங்கள் கரங்களை நீட்டி உதவுங்கள். அப்படி முடியாவிட்டால், உதவுபவர்களை ஆசீர்வதித்து அனுப்புங்கள்’ என்பார்.

வாசிப்பை நேசி: Swami-Vivekananda-%2829%29.jpg

வேதங்கள், உலக இலக்கியங்கள், பைபிள் என்று ஓயாமல் வாசிப்பார். பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தை ஒரே நாளில் படித்துவிட்டார். அதில் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லி அசத்தினார் விவேகானந்தர்.

தேசம் காத்தல் செய்:

தேசத்தின் பெருமைக்கும் அதன் உச்சத்துக்கும் உழைக்க, இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார். ‘எழுமின்! விழிமின்! குறிசாரும் வரை நில்லாது செல்மின்!’ என்கிற தாரக மந்திரத்தைத் தந்தார். ‘ஆங்கிலேயர்கள் என்னைக் கைதுசெய்து சுடட்டும். தேசத்தின் பெருமைக்காக, எந்த வகையான தியாகமும் செய்யலாம்’ என்று முழங்கினார்.

உடலினை உறுதி செய்:

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் கவனமாக இருந்தார் விவேகானந்தர். நீச்சல், மல்யுத்தம், சிலம்பம், உடற்பயிற்சிகளைப் பழகினார். ‘இளைஞர்கள், உடல் மற்றும் உள்ளத்தின் வலிமையில் கவனம் செலுத்த வேண்டும்’ என்பது அவரின் முக்கியமான அறிவுரை. இலக்கே முக்கியம்: கலிஃபோர்னியாவில் முட்டை சுடும் போட்டி நடைபெற்றது. யாராலும் சரியாகச் சுட முடியவில்லை. சுவாமி துப்பாக்கியை வாங்கி, ஆறு முட்டைகளையும் குறி தவறாமல் சுட்டார். ‘இதுதான் எனக்கு முதல் அனுபவம். நீங்கள் வெல்லப்போகும் பரிசில் கவனம் செலுத்தினீர்கள். நான் இலக்கில் மட்டும் கவனம் செலுத்தினேன்’ என்றார்.

அன்பால் வெல்க:

அமெரிக்காவின் சிகாகோ நகரில் அன்பு பொங்க, ”சகோதர சகோதரிகளே!’ என்றதும் அவையே எழுந்து நின்று கைதட்டியது. ‘உங்களை மாதிரி அறிவாளியும் என்னை மாதிரி அழகியும் திருமணம் செய்துகொண்டால், அற்புதமான மகன் பிறப்பான்’ என்று பெண் ஒருவர் சொன்னபோது, ‘என்னையே தங்களின் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள் அன்னையே!’ என்றார் விவேகானந்தர்.

எளியோர் நலம் போற்று:

ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், விதவைகள் என்று எல்லாருக்காகவும் குரல்கொடுத்தார். ‘தீண்டாமையை நீக்காவிட்டால், இந்து மதம் காணாமல் போய்விடும்’ என்றார். ‘ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடமோ, மதத்தின் மீதோ எனக்கு நம்பிக்கை கிடையாது’ என்று தைரியமாகச் சொன்னார்.

vikatan

  • தொடங்கியவர்

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சுதந்திர தினம்.

பல்வேறு மாநிலங்களை ஒன்று திரட்டி பலம் வாய்ந்த பிரித்தானியாவிடமிருந்து 1776இல் சுதந்திரம் பெற்ற அமெரிக்கா, ஒற்றுமை & உழைப்பினால் இன்று உலகின் ஏனைய நாடுகளை எல்லா விதங்களிலும் விஞ்சி ஏற்றம் பெற்று நிற்கிறது.

13537654_1074713559244004_10510099725595

 

  • தொடங்கியவர்

குட்டிக் காடு, அழகிய வீடு, நோயில்லா வாழ்வு... கேரளாவில் ஒரு சபாஷ் தம்பதி! #WhereIsMyGreenWorld

kannurhouse6002.jpg

ரி - ஆஷாவின் திருமணத்தின்போது, வாழ்த்த வந்த விருந்தினர்களுக்கு ஒரு பழமும், கேரளாவின் பாரம்பர்ய பாயாசமும் மட்டுமே வழங்கப்பட்டது. திருமணம், என்ற ஒன்றைத் தாண்டி அந்த நிகழ்வு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஒரு கூட்டமாகவே நிகழ்ந்தது. காரணம், இருவரும் சுற்றுச்சூழல் மேல் மாறாக் காதல் கொண்டவர்கள்!

கேரள மாநிலம், கண்ணூரைச் சேர்ந்த ஹரி- ஆஷா தம்பதி, சுற்றுச்சூழலின் மீதான தங்கள் காதலை வெறும் வார்த்தைகளில் வெளிப்படுத்துபவர்கள் அல்ல; வாழ்க்கையிலும் அதை பிரதிபலித்துக் காட்டியிருக்கிறார்கள். அதன் ஒரு அங்கமாகத்தான் தங்களின் வீடு, சுற்றுச்சுழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு வீடாக அமையவேண்டும் என இருவரும் முடிவெடுத்தனர்.  அவர்கள் விரும்பியபடியே மிக விரைவில், அப்படியொரு வீடு  அவர்களது முயற்சியில் உருவானது. 34 சென்ட் நிலப்பரப்பில், 960 சதுர அடி கொண்ட அந்த  வீடு மிகவும் வித்தியாசமானது.

வீட்டின் சுவர் மண்ணால் கட்டப்பட்டது. இக்காலத்தில் இது மிகவும் அபூர்வமானது. ஆனால், மண்ணால் கட்டியதால் பல பயன்களை இவர்கள் அடைந்துள்ளனர். இந்த சுவர் மூச்சு விடுகிறதாம்! ஆம், பகலில், சூரியனின் வெப்பம் இந்த சுவரின் வழியே வீட்டினுள் ஊடுறுவும். வீடு கதகதப்பாக மாறும்போது மணி மாலை 6. இந்த கதகதப்பிலேயே வீடு இரவு 11 மணி வரை இருக்கும். பிறகு, குளிர்ச்சி வீட்டினுள் வரும். இரவு முழுவதும் குளிர் காற்றால் வீடு நிரம்பும். மீண்டும், அடுத்த நாள் இதே நிலை தொடரும்.

kannurhouse6003.jpg

இதனால், இவர்களுக்கு மின்விசிறி தேவைப்படுவதில்லை. வீட்டிற்கு மிகவும் குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படுகிறது. இயற்கை வெளிச்சம் வீட்டினுள் வரும்வகையில் வீடு கட்டப்பட்டுள்ளது. குளிர்சாதன பெட்டிக்குப் பதிலாக, வீட்டில் ஒரு குழி தோண்டி அதில் ஒரு மண்பானையை வைத்து சுற்றி ஈரமண்ணை நிரப்பி வைத்திருக்கிறார்கள். இதன்மூலம், பல நாட்களுக்கு அதில் வைக்கப்படும் பொருள் கெடாமல் உள்ளது.

மேலும் வீட்டிற்குத் தேவையான மின்சாரத்தை சோலார் மற்றும் பயோகாஸ் மூலமாகப் பெறுகின்றனர். வீட்டிலுள்ள குப்பைகளையே பயோகாஸ் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்துகின்றனர். சராசரியாக மற்ற வீடுகளில் 50 யூனிட் மின்சாரம் உபயோகிக்கப்படும் நிலையில், இவர்கள் வீட்டில் வெறும் 4 யூனிட் மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. 

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வீட்டை கட்டியுள்ள ஹரி- ஆஷா தம்பதியரின் முயற்சியை பலரும் பாராட்டுகின்றனர்.

kannurhouse600.jpg

" நாங்கள் ஆதிவாசி வாழ்க்கையை வாழவில்லை. இயற்கையோட இயைந்த வாழ்க்கையை வாழ்கிறோம். எங்கள் வீட்டில் டிவி, ஃப்ரிட்ஜ் என சாதாரணமாக ஒரு வீட்டில் இருக்கும் அனைத்துப் பொருட்களும் இருக்கின்றன. ஆனால், மின்சாரப் பயன்பாட்டை நாங்கள் பார்த்து பார்த்து செய்கிறோம்" என்கின்ற ஹரி- ஆஷா தம்பதியின் வீடு, இவர்களாலேயே உருவாக்கப்பட்ட ஒரு குட்டிக் காட்டின் நடுவே உள்ளது.

மிருகங்கள், பறவைகள், பட்டாம்பூச்சிகள் என அழகிய சுற்றுப்புறங்களினால் விளங்குகிறது அந்த காடு. இங்கு பல காய்கறிகளும் பழங்களும் விளைகின்றன. இந்த நிலம் உழப்படுவதே இல்லை. அனைத்தும் இயற்கையாகவே விளைவது ஆச்சர்யமளிக்கும் விஷயம். இவர்கள் உபயோகிக்கும் ஒரே ஆயுதம், மம்மட்டி மட்டுமே. அதுவும் செடிகளை நடும்போது மட்டுமே உபயோகிப்பார்கள்.

kannurhouse6004.jpg

 

"நாம் விளைவிக்கும் பழங்கள், காய்களை விட காட்டில் வளர்பவை ருசியாக இருக்கும். அதற்கு காரணம், ஒரு பொருள் எப்படி வளரவேண்டும் என்பது இயற்கைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்" என்கிறார் ஆஷா, முகத்தில் பெருமிதம் படர.

இவர்களுடைய இந்த வாழ்க்கை முறை நல்ல பலனளித்திருக்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக ஹரி- ஆஷா தம்பதியை எந்த நோய்களும் நெருங்கியதில்லை. இவர்களைப் போல நாமும் குட்டிக் காட்டை உருவாக்கி வாழ முடியவில்லை என்றாலும், இயற்கையோடு ஒத்து எவ்வாறு வாழ வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளலாமே!
 

vikatan

  • தொடங்கியவர்

சர்க்கரைத் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து பாட்டு!

 
bday_2919695f.jpg
 

கேண்டிலை ஊதி அணைத்து, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது மேற்கத்திய கலாச்சாரம்தான். ஆனால் இன்று தமிழ் மண்ணோடும் பிறந்தநாள் கொண்டாட்ட கலாச்சாரம் கலந்துவிட்டது. நம்முள் ஆழ்ந்துவிட்டது இந்த பண்பாட்டை தமிழ் மனத்தோடு கொண்டாட தற்போது ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஆம், பிறந்தநாள் வாழ்த்துப் பாடலையாவது இனி தமிழில் பாடுவோம்.

தமிழில்தான் பிறந்தநாள் பாடல் இருக்கிறதே என்று உங்கள் மனம் நினைவுகளை அசை போட்டால் அது சிலோன் ரேடியோவில் ஒலிபரப்பப்பட்ட "பிறந்தநாள் இன்று பிறந்தநாள், பிள்ளைகள் போலே நாம் தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.. " என்ற பாடலுக்கு இட்டுச் செல்லும். உண்மைதான் அதுவும் அழகான பாடலே. ஆனால், தற்போதையை தலைமுறைக்கு ஏற்ற இசையமைப்புடன் தமிழில் ஒரு பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் வெளியாகியுள்ளது.

 

  • தொடங்கியவர்

ஜூலை 4: இயற்பியல்,வேதியலுக்கான நோபல் பரிசு பெற்ற மேரி க்யூரி நினைவு தினம் இன்று...

13495195_742180982551113_727552013469619

  • தொடங்கியவர்

இவங்க இப்படித்தான்!

 

p28a.jpg

எம்.ஜி.ஆர்னா மூணு தடவை அடி வாங்கிட்டு நாலாவது தடவைதான் திருப்பி அடிப்பார். கருப்பு எம்ஜிஆர் னா, அடிக்க ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிசத்துல லெப்ட் காலை சுவத்துல வெச்சு ரைட் கால்ல கிக் விட ஆரம்பிச்சுருவாருனு சினிமாவில் மட்டும்தான் இந்த மாதிரி சிம்ப்டம்ஸ் மேனரிசம்கள் இருக்கா? கிரிக்கெட்லேயும் இருக்குது பாஸ். கண்டுபிடிக்கலாமா?

red-dot.jpg ஒன் டே மேட்சில் எல்லாம் கங்குலி ஓப்பனிங் இறங்கி ஆடுகிறார்னா, கரெக்டா 13.3-வது ஓவரிலோ 13.4-வது ஓவரிலோ ஸ்பின் பால்ல ரெண்டு ஸ்டெப் முன்னாடி வந்து கரெக்டா ஸ்ட்ரெயிட்ல சிக்ஸர் அடிப்பார். ஹ்ம்ம்ம். அப்போவெல்லாம் சிக்ஸரை கண்ணுல பார்க்கிறதே அபூர்வம் பாஸ்...

red-dot.jpg சச்சின் 85 ரன் அடிச்சுட்டார்னா, கண்டிப்பா விக்கெட் கீப்பருக்குப் பின்னாடி ஒரு ஸ்வீப் ஷாட் ஆடுவார். அதிகபட்சம் எப்போதுமே அது பெளண்டரியாதான் இருக்கும். 75 ரன்னைத் தாண்டிய பிறகு யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் ஓர் அட்டகாசமான ஷாட் லாங்-ஆனிலோ, முட்டிப்போட்டு எக்ஸ்ட்ரா கவரிலோ, கட் ஷாட்டாக ஸ்கொயர் லெக்கிலோ ஆடுவார். தமிழ்ல சொல்லணும்னா அப்படியே வாரிவிட்டு அடிப்பார்னு சொல்லலாம்.

red-dot.jpg உலக கிரிக்கெட்டோ உள்ளூர்ல நடக்கிற சாதாரண பீச் கிரிக்கெட்டோ ஷேவாக் மட்டும் ஒரே அடிதான். அதுவும் அந்தச் சாவடிதான். ஒரு ஓவர்ல நாலாவது பால்ல ஃபோர் அடிக்கிறார்னா, அடுத்த பால் எந்த டைரக்‌ஷனில் போட்டாலும் அதையும் முன்னாடி அடிச்ச அதே பிளேஸ்ல அதே மாதிரி ஃபோர் ரன்னாக அடிப்பார்.  பெளலிங் பக்காவாக செட் பண்ணி பில்டப்போட யாராச்சும் பந்து போட வந்தாங்கனா,  அவங்களோட கதி அதோ கதிதான்... வேறென்ன? மொத பாலே தெறி பேபிதான்.

p28b.jpg

red-dot.jpg பெளலர்கள் மட்டும் என்ன சும்மாவா... எல்லா ஃபீல்டர்களையும் சரியா நிற்க வெச்சுட்டு பக்காவா பிளான் பண்ணிட்டு கேப்டன் ‘ஓகே கய்ஸ்’னு சொல்லி ரொம்ப நேரம் கழிச்சு எதிர்பார்ப்போட அஜித் அகர்கர் ஓடி வந்து பந்து போட்டார்னா, கண்டிப்பா அது வைடு பாலாகத்தான் இருக்கும். இதுக்கே அப்படியானு கேட்டா எப்படி? அடுத்த பாலும் மேக்சிமம் வைடாகத்தான் போடுவார்.

red-dot.jpg ராகுல் டிராவிட் ஒருநாள்  போட்டிகள்ல 100 ரன்னோ, டெஸ்ட் போட்டிகள்ல 40 ரன்னோ அடிக்கிறார்னா, கட்டாயம் ஊறவெச்ச வாளிக்குள்ள இருந்து அப்படியே எடுத்துப் போட்ட சட்டை மாதிரி எல்லாமே நனைஞ்சிருக்கும். அப்போ மற்ற ஆட்களைப் பாத்தா, மறுவீட்டுக்குப் போற மாப்பிள்ளை மாதிரி அவ்வளவு ஃப்ரெஷ்ஷா மடிப்புக் கலையாம விளையாடிக்கிட்டு இருப்பாங்க.

red-dot.jpg 90 ரன்னுக்கு மேல ஒன் டே மேட்சை டெஸ்ட் போட்டி மாதிரி கங்குலி விளையாடுவார். ஜாகீர்கான் சிக்ஸ் அடிச்சா ஸ்ட்ரைட்டாதான் அடிப்பார். டெயில் என்டராக நெஹ்ரா இறங்கினார்னா, ஒண்ணு ஸ்ட்ரைக்கே கிடைக்காமல் இந்தப் பக்கமா நிற்பார். இல்லைனா அடிச்சி ஓடி ரன் அவுட் ஆகிடுவாருனு இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய மேட்டர் இருக்கு பாஸ்!

vikatan

  • தொடங்கியவர்

மனிதநேய சங்கம்!

 

 
  • 3_2839422g.jpg
     
  • 4_2839421g.jpg
     

மே 8 - சர்வதேச செஞ்சிலுவை நாள்

விபத்தில் காயம் அடைந்தவரைப் பார்த்தால் என்ன தோன்றும்? முதலில் அவர் மீது இரக்கம் ஏற்படும். முடிந்தால் அவருக்கு முதலுதவி அளிக்க நினைப்போம் அல்லவா? அடிபட்டுத் துடிக்கும் தனி ஒருவரைப் பார்த்தாலே மனம் பதறுகிறதே. போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடுவதைப் பார்த்தால் எப்படித் துடித்துப் போவோம்? 1859-ல் இத்தாலி நாட்டில் உள்ள சால்ஃபரீனோ என்ற இடத்தில் நடந்த போரைப் பார்த்தபோது அப்படித்தான் துடித்தார் ஜான் ஹென்றி டுனண்ட்.

வீரர்களுக்கு முதலுதவி

ஒரு நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றிய ஹென்றி டுனண்ட், வேலை காரணமாக சால்ஃபரீனோ நகருக்குச் சென்றார். அப்போதுதான் போர் நடந்து முடிந்திருந்தது. போரின் விளைவாகக் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேருக்கும் மேல் மிக மோசமான காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். காயங்களுக்கு மருந்திடவோ, உணவு தரவோ யாருமில்லாமல் அவதிப்பட்ட அந்த வீரர்களைப் பார்த்து மனம் வருந்தினார் ஹென்றி. அந்தப் பகுதியில் வசித்த மக்களைத் திரட்டி, காயம்பட்டவர்களுக்கு முதலுதவி செய்தார். மூன்று நாட்களாகச் சோர்வின்றி அவர்களுக்கு உதவினார்.

தன் சொந்த ஊரான ஜெனீவாவுக்குத் திரும்பிய பிறகும்கூட, போரும் அதற்குப் பிந்தைய மரண ஓலமும் ஹென்றியின் மனதை விட்டு நீங்கவில்லை. அதன் பாதிப்பில், சால்ஃபரீனோ நினைவுகள் என்ற புத்தகத்தை எழுதினார். ‘போரில் காயப்படுகிறவர்களுக்கு உதவுவதற்காக எந்தச் சார்பும் இல்லாத ஒரு சர்வதேச அமைப்பை உருவாக்க வேண்டும்’ என்று தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

மனிதநேயத்தின் அடையளம்

புத்தகம் வெளியாகி ஓராண்டுக்குப் பிறகு ஹென்றியின் எண்ணம் நிறைவேறியது. ஜெனீவா மக்கள் நல அமைப்பின் தலைவராக இருந்த குஸ்தவ் மாய்னீர் என்பவருக்கு ஹென்றியின் கருத்துப் பிடித்துப்போனது. போரில் காயப்படுகிறவர்களுக்கு உதவும் நோக்கில் பல்வேறு பரிந்துரைகளை அவர் முன்வைத்தார். அது 16 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி உருவானதுதான் செஞ்சிலுவைச் சங்கம். 1864-ம் ஆண்டு ஸ்விஸ் நாட்டு நாடாளுமன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற ஜெனீவா மாநாட்டில் இந்த அமைப்பை உருவாக்க அதிகாரபூர்வமாக 12 நாடுகள் ஒப்புக்கொண்டன. அடுத்தடுத்து பல்வேறு நாடுகள் இந்தச் சங்கத்தில் இணைந்தன.

அமைதி ஒன்றே ஆக்கும் சக்தி

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களின் சேவை மகத்தானது. அணு ஆயுதம் போன்ற மோசமான தாக்குதல்களில்கூட சவாலான வேலையையும் அவர்கள் செய்திருக்கிறார்கள். போர் நடக்கும் இடங்களுக்கு அருகில், பாதுகாப்பான இடங்களில் தற்காலிக மருத்துவமனைகளை அமைத்து அவர்கள் ஆற்றிய சேவைக்கு ஈடு இணையே இல்லை.

செஞ்சிலுவைச் சங்கம் மூன்று முறை அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறது. செஞ்சிலுவைச் சங்கம் உருவாகக் காரணமாக இருந்த ஜான் ஹென்றி டுனண்ட், நோபல் பரிசு வழங்கப்பட ஆரம்பித்த 1901-லேயே அமைதிக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றார். ஹென்றியின் பிறந்தநாளான மே 8, ஒவ்வொரு ஆண்டும் செஞ்சிலுவை நாளாக அனுசரிக்கப்படுகிறது.

tamil.thehindu

  • தொடங்கியவர்

'பொய்யுரை மைந்தர்களின் பழக்கங்கள் ஓய்ந்த பாடில்லை'
 
 

article_1467690296-owl2_1688535g.jpgநின் செம்மஞ்சள் தேகத்தின் மீது, பஞ்சணை மலர்களைத் தூவிடினும் உன் மேனி கன்றி நோவெடுக்கும்.

வண்ணமயில் இறகுகொண்டு, மென்யுடன் விசிறினாலோ, தங்கத்தை வார்த்த உன் கன்னம் சற்றே நிறம் மாறும். சின்னக் காற்றுக்கும் அசைகின்ற பூச்செடி போல், உன் தளிர் மேனி.

குளிர் தென்றலுடன், பன்னீர், ரோஜா கொண்டு ஸ்பரித்தே அழகைக் சங்கரித்துக் கொண்டாய்.

நந்த வனத்தின் சொந்த மகளே, உன்மீது கொண்ட பிரேமையினை நீயறிவாய். என்னைத் துன்பம் தொலைக்கும் மனிதனாக மாற்றிவிடு.

இத்தகைய காதல் மொழிகளைப் பகன்ற தலைவன், பின்னர் பரத்தையர் பின் சுற்றிய கதைகளை முன்னர் எழுதிய இலக்கியக் கதைகளில் படித்துள்ளோம்.

இந்தப் பொய்யுரை மைந்தர்களின் பழக்கங்கள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. அன்னத்தை விட்டு ஆந்தை மேல் ஆசைகொள்ளுதல், ஆண்மைக்கே இழுக்கான அவமானம்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஜுலை - 05

 

1295 : இங்­கி­லாந்­துக்கு எதி­ராக ஸ்கொட்­லாந்தும் பிரான்ஸும் கூட்­டணி அமைத்­தன.

 

1594 : கண்டி ராஜ்­ஜி­யத்தின் மீது, பெடலோ லோபஸ் டி சௌஸாவின் தலை­மையில் போர்த்துக்­கேய படைகள் படை­யெ­டுப்பை ஆரம்­பித்­தன. இப்ப­டை­யெ­டுப்பு தோல்­வி­ய­டைந்­தது.

 

761varalaru.jpg1811 : ஸ்பெய்­னி­ட­மி­ருந்து பிரி­வ­தாக வெனி­சூலா பிர­க­டனம் செய்­தது.

 

1865 : இரட்­ச­ணிய சேனை இங்­கி­லாந்தின் லண்டன் நகரில் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1884 : கெம­ரூனை ஜேர்­மனி கைப் பற்றியது.

 

1945 : ஜப்­பா­னி­ட­மி­ருந்து பிலிப்பைன்ஸ் விடு­விக்­கப்­பட்­ட­தாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1950 : கொரிய யுத்­தத்தில் அமெ­ரிக்க மற்றும் வட­கொ­ரிய படை­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது சமர் நடை­பெற்­றது.

 

1954 : பி.பி.சி. தொலைக்­காட்­சியில் முத­லா­வது செய்தி அறிக்கை ஒளி­ப­ரப்­பா­கி­யது.

 

1970 : கன­டாவின் டொரண்டோ நகரில் இடம்­பெற்ற விமான விபத்தில் 109 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1971 : அமெ­ரிக்­காவில் வாக்­கு­ரி­மைக்­கான வயது 21 இலி­ருந்து 18 ஆக குறைக்­கப்­பட்­டது.

 

1975 : அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ், விம்­பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்­றையர் போட்­டியில் சம்­பி­ய­னான முத­லா­வது கறுப்­பின வீர­ரானார்.

 

1977 : பாகிஸ்­தானில் பிர­தமர் சுல்­பிகார் அலி பூட்­டோவின் அர­சாங்கம், ஜெனரல் ஸியா உல் ஹக் தலை­மை­யி­லான இரா­ணு­வத்­தினால் கவிழ்க்­கப்­பட்­டது.

 

1987 : தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அமைப்­பினால் முத­லா­வது தற்­கொலை குண்டுத் தாக்­குதல் யாழ். நெல்­லி­ய­டியில் நடத்­தப்­பட்­டது.

 

1996 : டோலி எனும் செம்­மறி ஆடு முதல் தட­வை­யாக குளோனிங் முறையில் உரு­வாக்­கப்­பட்ட முலை­யூட்­டி­யா­கி­யது.

 

1999 : தலி­பான்­களின் ஆட்­சி­யி­லி­ருந்து ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு அமெ­ரிக்க ஜனா­தி­பதி பில் கிளின்டன் பொரு­ளா­தார, வர்த்­தக தடை­களை விதித்தார்.

 

2004 : இந்­தோ­னே­ஷி­யாவின் முத­லா­வது  ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­தப்பட்டது.

 

2009 : சீனாவின் ஸின்­ஜியாங் உய்குர் பிராந்­தி­யத்தில் பாரிய வன்­மு­றைகள் மூண்­டன.

 

2009 : விம்­பிள்டன் டென்னிஸ் போட்­டியில் சம்­பி­ய­னா­கி­யதன் மூலம் 15 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் டென்னிஸ் வீரர் எனும் சாதனைக்குரியவரானார் ரோஜர் பெடரர்.

 

2012 : ஐரோப்பாவின் மிக உயரமான கட்டிடமான ஷார்ட் லண்டனில் திறக்கப்பட்டது. இதன் உயரம் 310 மீற்றர்கள். (1020 அடி)

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ஈபிள் கோபுரத்தை ஓர் இரவு மட்டும் வீடாக பயன்படுத்திய குடும்பம்
 

பிரான்ஸின் பாரிஸ் நக­ரி­லுள்ள ஈபிள் கோபு­ரத்தை நேரில் காண வேண்­டு­மென்­பது பலரின் ஆசை.

 

17791eiffel.jpg

 

324 மீற்றர் (1063) அடி உய­ர­மான இக் ­கோ­பு­ரத்தைப் பார்­வை­யி­டு­வ­தற்­காக உலகின் பல பாகங்­களிலிருந்தும் சுற்­றுலா பய­ணிகள் பாரிஸ் நகருக்குச் செல்­கின்­றனர்.

 

ஆனால், பிரிட்­டனைச் சேர்ந்த குடும்­ப­மொன்­றுக்கு ஓர் இரவு முழு­வதும்  ஈபிள் கோபு­ரத்தில்  தங்­கி­யி­ருப்­ப­தற்­கான அதிஷ்டம் கிட்­டி­யது.


மைக்கல் ஸ்டிவன்ஸன் என்­ப­வரின் குடு­ம்­பத்­துக்கே இந்த அதிஷ்டம் கிட்­டி­யது. விடு­மு­றை ­கால வாடகை அறைகள் தொடர்­பான இணை­யத்­தளம் ஒன்று நடத்­திய போட்­டியில் வெற்றி பெற்­றதன் மூலம் இத்­ தம்­ப­திக்கு இந்த வாய்ப்பு கிடைத்­தது.

 

ஈபிள் கோபு­ரத்தின் முத­லா­வது தளத்­தி­லுள்ள ஆடம்­பர அறைத் தொகு­தியில் இக்­ கு­டும்­பத்­தினர் ஓர் இரவு தங்­கி­யி­ருந்­தனர்.


ஈபிள் கோபு­ரத்தில் தங்­கி­யி­ருந்­தமை மிக இனி­மை­யான அனு­ப­வ­மாக இருந்­தது எனவும் மீண்டும் இவ்வாறு தங்குவதற்கு தாம் விரும்புவதாகவும் ஸ்டீவன்ஸன் தெரிவித்துள்ளார்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜூலை 5: எழுத்தாளர் பாலகுமாரன் பிறந்த தினம் இன்று..

13567461_1170403773018411_47602671994275

 

  • தொடங்கியவர்

13533072_10154730762624578_3327629602436

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.