Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 07
 

article_1438922029-ggg.jpgகி.மு 322: மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் "கிரான்னன்" என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

1461: மிங் வம்ச சீன தளபதி காவோ சின் செங்டொங் பேரரசருக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டான்.

1819: கொலம்பியாவின் "பொயாக்கா" என்ற இடத்தில் ஸ்பானியர்களுக்கு எதிரான போரில் சிமோன் பொலிவார் பெரு வெற்றி பெற்றான்.

1832: இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

1898: யாழ்ப்பாணம் மானிப்பாயில் டாக்டர் ஸ்கொட் தலைமையில் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1906: கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.

1927: ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.

1933: ஈராக்கில் சுமைல் கிராமத்தில் 3,000 ஆசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.

1942: இரண்டாம் உலகப் போர் - குவாடல்கனால் போர் ஆரம்பம். அமெரிக்க கடற்படையினர் சொலமன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.

1944: திட்டப்படுத்தப்பட்ட முதலாவது கணிப்பானை (ஹார்வார்ட் மார்க் ஈ) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.

1945: இரண்டாம் உலகப் போர் - ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.

1955 - சொனி நிறுவனம் தனது முதலாவது திரிதடைய வானொலியை ஜப்பானில் விற்க ஆரம்பித்தது.

1960: ஐவரி கோஸ்ட் சுதந்திரம் பெற்றது.

1972: ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் 90 நாட்களுக்குள் உகண்டாவிலிருந்து  வெளியேற வேண்டுமென அந்நாட்டு அதிபர் இடி அமீன் உத்தரவிட்டார்.

1998: கென்யாவிலும் தான்ஸானியாவிலும் அமெரிக்கத் தூதரகங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 212 பேர் பலியாகினர்.

1999: இரண்டாவது செச்னிய யுத்தம் ஆரம்பமாகியது.

2006: இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.

2008: தெற்கு ஒசெஷியாவுக்கு எதிராக ஜோர்ஜியா இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது

tamilmirror.lk

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

'என் ஃப்ரெண்டை போல யாரு மச்சான்..?'

f3.jpg

காலையில் இருந்து முஸ்தபா முஸ்தபாவும், காட்டுக்குயிலு மனசுக்குள்ளவும், காது சவ்வு கிழிய கிழிய கேட்டு சிலிர்த்திருப்பீர்கள். காதுக்கு வேலை கொடுத்தது சரி, கொஞ்சம் சிறுமூளைக்கும் வேலை கொடுப்போம். கீழே இருக்கும் கேரக்டர்கள் எல்லாம் கட்டாயம் எல்லா க்ரூப்களிலும் இருக்கும். அந்தந்த கேரக்டர்களுக்கு உங்கள் நட்பு வட்டத்தில் யார் பொருந்துவார்கள் என கருப்பு ரீல் சுற்றி பிளாஷ்பேக் ஓட்டிக் கொள்ளுங்கள். ''இன்னிக்கும் அவங்களை பத்திதான் நினைக்கணுமா பாஸ்'' என்பவர்களுக்கு... ''அட இவனுகளை பத்தி நினைக்க கால நேரம் எல்லாம் பாக்கணுமாக்கும்?''

படிப்பு புல்டோசர்...

இந்தக் கேரக்டர் நம்கூடவேதான் திரியும். சரி, நம்மகூட சுத்துறது நம்மள மாதிரிதானே இருக்கும் என நினைத்தால் பரீட்சை நேரத்தில் மட்டும் ஆள் அட்ரஸே இல்லாமல் போவார்கள். கூகுள், யாகூ வைத்து தேடினாலும் பயனில்லை. அப்புறமென்ன, நம்மை பார்த்து காறித்துப்பும் மார்க்‌ஷீட் அவர்கள் மேல் பாசத்தை பொழியும். ஆனால் ஒரு விஷயத்தில் தெளிவானவர்கள் இவர்கள். புரிகிறதோ இல்லையோ, கான்செப்டை நமக்கு சொல்லித்தந்து அரியர் ஆபத்திலிருந்து காப்பாற்றுவார்கள்.

ஸ்பான்சர் பகவான்...

க்ரூப்பிலேயே பெரிய கை இவன்தான். கேண்டீன், தியேட்டர், அவுட்டிங் என சுற்றும் இடங்களில் மற்றவர்களின் பாக்கெட் பாழடைந்த பங்களா போல் வெறிச்சோடிக் கிடந்தாலும், அனைவருக்கும் ஸ்பான்சர் செய்யும் வாட்ஸ் அப் யுகத்து கர்ணன் இவன். அவர்களுக்கும் மாசக்கடைசியா? சரி, கை முறுக்கு வாங்கியாவது ஷேர் பண்ணிப்போம் என அன்பைப் பொழிவார்கள். அவசரத்துக்கு வாங்கும் கைமாத்தை திருப்பிக் கேட்கும் பழக்கமே இவர்களிடம் இருக்காது.

f1.jpg

கல்ச்சுரல் கிங்...

படிப்பு ரொம்ப சுமாராகத்தான் வரும். ஆனால் ஸ்போர்ட்ஸ் அல்லது கல்ச்சுரலில், ஏரியாவின் எங்க வீட்டுப் பிள்ளை இவன்தான். அதற்கேற்றார் போல தோரணையும் ஒரு டீஸ்பூன் எக்ஸ்ட்ரா இருக்கும். ஆனால் இந்த பிட்னஸ் ப்ரீக் உதவியால்தான் நாம் உடற்பயிற்சியோ ஜும்பா டான்ஸோ கற்றுக் கொண்டிருப்போம். மற்றவர்களை காட்டிலும் பெண் விசிறிகளும் இவர்களு அதிகமாக இருப்பார்கள்.

சாது சேது...

இந்த கேரக்டர் எப்படி நம் க்ரூப்பில் குப்பை கொட்டுகிறது என யாருக்குமே தெரியாது. ''அவுட்டிங்கா? அம்மா திட்டுவாங்க, சினிமாவா? சித்தி திட்டுவாங்க'' என அநியாயத்திற்கு வீட்டுப்பாடம் படிப்பார்கள். இவன் டிசைன் தப்பாச்சே, இவனை வச்சுக்கிட்டு என்ன பண்ண என சலித்துக்கொண்டாலும் ஓரங்கட்டவும் மனசு வராது. செல்ஃபிக்களில் நானும் இந்த கேங்தான் என பெருமையாக போஸ் மட்டும் தருவான்.

ஸ்டன்ட் மாஸ்டர்...

சப்ஜெக்டைவிட சண்டைகளில்தான் இந்த கேரக்டருக்கு இன்ட்ரஸ்ட் அதிகம். 'இறுதிச்சுற்று' மாதவன் போல விறைப்பாகவே திரிவார்கள். ஏதாவது பஞ்சாயத்து என்றால் நம் தரப்பில் இருந்து விழும் முதல் அடி அவனுடையதுதான். விழுப்புண்கள் எல்லாம் இவர்களுக்கு விஜய் அவார்ட்ஸ் போல. அதென்னவோ, இந்த கேரக்டர்கள் ரொமான்ஸ் ஏரியாவில் மட்டும் பயங்கரமாக சொதப்புவார்கள். ''பொண்ணு நம்மள தேடி வரணும்டா'' என சமாளிப்பு சட்னி வேறு அரைப்பார்கள்.

கலாய் மன்னன்...

நம் கேங்கின் கவுண்டமணி இந்த கேரக்டர்தான். வாய் சும்மாவே இருக்காது. வரும், போகும் எல்லாரையும் சகட்டுமேனிக்கு கமென்ட் அடித்து, கவுன்ட்டர் கொடுத்து அலற விடுவார்கள். இவர்கள் இருக்கும் இடம் எப்போதுமே ஆதித்யா சேனல் போல கலகலவென இருக்கும். ஒரு காமெடி டயலாக் விடாமல் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து வைத்திருப்பார்கள். அமைதியாய் இருக்கும் இடத்தில் திடீரென குபீர் கிளம்பினால் அன்னாரின் சேட்டையாகத்தான் இருக்கும். இவர்களால் ஏதாவது பஞ்சாயத்து வந்தால் இருக்கவே இருக்கிறான் நம் ஸ்டன்ட் மாஸ்டர்.

f4.jpg

லவ் குரு...

கேங்கில் எவனுக்கு லவ்வில் பிரச்னை என்றாலும் சரணடைவது இவனிடம்தான். தனியாக அழைத்துப்போய் இவன் பொழியும் அட்வைஸ் மழையில் மரக்கட்டைக்குகூட ஏன்டா சிங்கிளா இருக்கோம் என குற்றவுணர்ச்சி வந்துவிடும். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இவர்கள் சொல்லித்தரும் உபாயங்கள் பாகவதர் காலத்தை சேர்ந்தவையா, பாஸ்ட் புட் காலத்தை சேர்ந்தவையா என்பதெல்லாம் அவரவர்களின் லக்கை பொறுத்தது.

சுள்ளான்...

பார்க்க ரொம்ப சாதாரணமாய் சுள்ளான் போல இருப்பார்கள். ஆனால் ஏதாவது ரிஸ்க்கான காரியம் என்றால் யோசிக்காமல் 'பண்ணலாம் மச்சி' என முதல் ஓட்டு போடுவது இவர்கள்தான். அதனால் ஏதாவது பிரச்னை வந்தாலும் தெறித்து ஓடாமல் பின்னால் நிற்பார்கள். செம சப்போர்ட் அளிக்கும் பாசக்கார பயல்கள் இவர்கள். மாட்டும்போது பார்ப்பவர்களின் முதல் ரியாக்ஷன் ''இவனா இதைப் பண்ணது? நம்பவே முடியல'' என்பதாகத்தான் இருக்கும்.

சரக்கு பேபி...

தம், தண்ணி இது இரண்டும் இவர்களின் இரண்டு கண்கள் போல. புகையும் வாயுமாய், ஆல்கஹாலும் கல்லீரலுமாய் திரிவார்கள். பார்ட்டிகளில் அதிகம் சலம்பும் ஆட்களும் இவர்கள்தான். சிரிப்பது, அழுவது, மிரள்வது என இவர்கள் தரும் நவரச ஆக்டிங்கில் நடிகர் திலகமே தோற்றுப்போவார். ஆனால் மறுநாள் காலையில் இது எதுவுமே ஞாபகம் இருக்காது அவர்களுக்கு. ''அப்படியா மச்சான் பண்ணேன்?'' என குழந்தை போல கேட்பார்கள்.

f2.jpg

 

'பீப்' பாய்...

வாயைத் தெரிந்தாலே செந்தமிழ் பெல்லி டான்ஸ் ஆடும். **** சூப்பர்டா நீ! என பாராட்டுவதில் தொடங்கி, **** அவன் சாவட்டும்டா! என கொலைவெறிக் குத்துப் போடுவது வரை சகல எமோஷன்களையும் கெட்ட வார்த்தைகளை சேர்த்தேதான் உரையாற்றுவார்கள். நமக்கு புதிது புதிதாய் கெட்ட வார்த்தைகள் சொல்லிகொடுக்கும் குருநாதர்கள் இவர்கள்தான். இவர்களோடு பழகிய பாவத்தில் வீட்டிலும் ஒரு ப்ளோவில் கெட்ட வார்த்தை பேசி வாங்கிக் கட்டுவோம்.

கண்டிப்பா இந்த கேரக்டர் எல்லாம் உங்க கேங்லயும் இருக்கும். அவங்க பேரை டேக் பண்ணி, ஷேர் பண்ணி பொன்மாலை பொழுதுகளை கொண்டாடுங்க மக்கா!

ஆங்... அப்புறம்... நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!

vikatan

  • தொடங்கியவர்

13680426_1096012103780816_13922712543644

நெதர்லான்டின் உதைபந்தாட்ட வீரரும்
மான்செஸ்டர் யுனைடெட் கழகத்துக்கு விளையாடி வருபவருமான Robin van Persie
இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

  • தொடங்கியவர்
உலகின் மிக நீளமான கால்களைக் கொண்ட பெண்
 

உலகின் மிக நீளமான கால்களைக் கொண்ட பெண்ணாக ஸ்வெட்லானா பன்க்ரடோவா விளங்குகிறார்.

 

18419Untitled-3.jpg

 

இவரின் கால்களின் நீளம் தலா 132 சென்ரிமீற்றர் (4 அடிஇ 3. அங்குலம்) ஆகும்.  

 

ரஷ்யாவில் 1971 ஏப்ரல் 29 ஆம் திகதி பிறந்தவர் ஸ்வெட்லானா பன்க்ரடோவா.

 

அவர் உலகின் மிக நீளமான கால்களைக் கொண்ட பெண் என 2003 ஜூலை மாதம் கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்கள் உறுதிப்படுத்தினர்.  

 

இப்போதும் அவரே உலகின் மிக நீளமான கால்களைக் கொண்ட பெண்ணாக விளங்குகிறார். 

 

18419fd.jpg

 

எவ்வாறெனினும், 45 வயதான ஸ்வெட்லானா உலகின் மிக உயரமான பெண் அல்லர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இடுப்புக்கு மேல் அவரின் உடற்பகுதி சாதாரண அளவிலேயே உள்ளது. இதனால், அவர் 195 சென்ரிமீற்றர், அதாவது 6 அடி 5 அங்குல உயரமானவராகவே உள்ளார். 

 

உலகின் மிக நீளமான பெண்ணாக கின்னஸ் சாதனை நூலில் பதிவுசெய்யப்பட்டவர் சீனாவில் வசித்த யாவோ டெஃபென் ஆவார். இவர் 8 அடி 7 அங்குல உயரமானவர். 2012 ஆம் ஆண்டு தனது 40 ஆவது வயதில் அவர் இறந்தார்.

metronews.lk

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண்ணின் கால்களை அளப்பதற்குப் பதிலாக இவர் இவர் தனது உயரத்தை அளந்து போட்டிருக்கலாம் , ஒன்னும் பெரிய வித்தியாசமில்லை . tw_blush:

  • தொடங்கியவர்
 
 
 
Bild zeigt 1 Person , Nahaufnahme
 

ஆகஸ்ட் 7: விக்கிபீடியாவைத் தொடங்கிய ஜிம்மி வேல்ஸ் பிறந்த தினம் இன்று.

நாம் பல தகவல்களைப் பெற உதவி வரும் ஜிம்மி வேல்ஸ்க்கு நம் வாழ்த்துகளை பகிர்வோம்.

  • தொடங்கியவர்

ஆகஸ்ட் 7: பிராணம் குருதேவ்- தாகூர் எனும் தலைமகன் நினைவு தின சிறப்பு பகிர்வு !

கவியரசர் தாகூரின் நினைவு இன்று .வங்கம் ஈன்றெடுத்த இணையற்ற புதல்வர் அவர் ;இளம் வயதில் எண்ணற்ற கலாசாரங்களின் சங்கமம் நிகழ்ந்த வீட்டில் பிறந்து வளர்ந்ததால் அவரின் சிந்தனை எண்ணற்ற தளங்களை தொட்டது ;இங்கிலாந்திற்கு சட்டம் படிக்க போய் அதன் மீது மனம் ஒட்டாமல் திரும்பினார் .

ஏகத்துக்கும் பயணம் செய்வதில் விருப்பம் கொண்ட இவர் ஒரு நாள் நதியின் மீது படகினில் போய்க்கொண்டிருந்தார் ;அப்பொழுது விளக்குகள் வீசிய காற்றில் அணைந்துபோயின .நதியின் சலனமற்ற தன்மையை பார்த்துக்கொண்டே ஸ்தம்பித்து நின்றார் ;அங்கே தான் தாகூர் மஹாகவி தாகூர் ஆனார் .வீட்டின் நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொண்ட தாகூர் கல்விமுறை குழந்தைகளின் மீது வன்முறையை கையாள்வதாக உணர்ந்தார் ;இயற்கையான சூழலில் பிள்ளைகள் கற்கவேண்டும் என விரும்பினார் .

ravindranathtagore1news.jpg

அமைதியின் உறைவிடம் என பொருள் தரும் சாந்தி நிகேதனை உருவாக்கினார் ;அதில் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார் .ஆங்கிலேய அரசிடம் எந்த சூழலிலும் கையேந்த மாட்டேன் என சொல்லி இந்தியர்களின் நிதியுதவியிலேயே அப்பள்ளியை நடத்தினார் .அற்புதமான பல கவிதைகள் எழுதினார் ;அவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டதால் மேற்கின் கவனம் பதிந்து கீதாஞ்சலி நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது ;ஆசியாவின் முதல் நோபல் பரிசு இவருக்கே கிடைத்தது .

ஆங்கிலேய அரசின் ஜாலியான்வாலா பாக் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தன்னுடைய சர் பட்டத்தை துறந்தார் .இவர் இயற்றிய பாடல்களுக்கு இசையும் அமைத்திருந்தார் இவர் ,அவை ரவீந்திர சங்கீதம் எனும் பெயரில் இன்றும் பாடப்படுகின்றன ;நல்ல ஓவியர், நாவலாசிரியர், சிறுகதை வல்லுநர், நாடக ஆசிரியர் என எண்ணற்ற முகங்கள் இவருக்கு . காந்தியை மகாத்மா என அழைத்தது இவர் தான் .அவர் .இந்தியாவின் ஜன கண மண மற்றும் வங்காள தேசத்தின் அமர் சோனார் பங்களா எனும் இரண்டு தேசிய கீதங்களுக்கு ஆசிரியர் இவர் ஒருவரே .என் ஆடைகள்,ஆபரணங்களை களைந்து விடு அன்னையே ‘;அவை மணல்வெளியில் ஆனந்தித்து விளையாட
பெருந்தடையாக உள்ளன என பாட மட்டுமல்ல அப்படியே வாழவும் செய்தார் தாகூர் .ப்ரணாம் குருதேவ் !

அவரின் HEAVEN OF FREEDOM மற்றும் WALK ALONE எனும் கவிதைகள் உங்களுக்காக

உள்ளம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலைநிமிர்ந்து நிற்கிறதோ,
சிறைவாசங்களின்றி
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பரிபூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய கட்டுப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு
துண்டுகளாய்ப்
போய்விடவில்லையோ,
வாய்ச்சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சியின்றி
முழுமையை நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடியாதாரத்தை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரிகவும்,
ஆக்கப் பணி புரிகவும்
உள்ளத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சொர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழட்டும்
என் தேசம் !

****************
யாரும் உன் குரலுக்கு செவிமடுக்கவில்லையா ?
நீண்ட சுவடுகளை பதித்து தனித்து நட
எல்லாரும் அகக்கதவுகளை மூடி மவுனித்திருந்தால்
உன் மனதை திறந்து,தனித்து பேசு !

தனித்து நட,தனித்து நட,தனித்து நட

சுடும்பாதை தடைகளால் அழுத்தும்
முகங்களை திருப்பிக்கொண்டு கைவிட்டு போவார்
முற்களை நசுக்கு !
உதிரக்காயங்கள் தோய்ந்து ரத்தம் சொட்டும் பாதையில்
கம்பீரமாக பயணிப்பாய்

தனித்து நட,தனித்து நட,தனித்து நட

யாரும் விளக்கை ஏந்த மறுக்கும்
இருள் கசியும் பொழுதை பெரும் புயல் தாக்கி
பிணிநெருப்பை இடிபோல தந்திடுமாயின்
உன் உள்ளத்தை உருக்கி நீயே ஒளியாகு

தனித்து நட,தனித்து நட தனித்து நட..

vikatan

அவனீந்திரநாத் தாகூர்

 

 
tagore_2962639f.jpg
 

இந்திய நவீன ஓவியங்களின் தந்தை எனப் போற்றப்படும் வங்காள ஓவியர் அவனீந்திரநாத் தாகூர் (Abanindranath Tagore) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கல்கத்தாவில் (1871) பிறந்தவர். இவர் ரவீந்திரநாத் தாகூரின் சகோதரி மகன். படைப்பாளிகள், கலைஞர்கள், ஓவியர்களைக் கொண்ட கலைக் குடும்பம் என்பதால், இவருக்கும் இயல்பாகவே ஓவியக் கலை, எழுத்தில் ஆர்வம் பிறந்தது.

* கல்கத்தாவில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் சமஸ்கிருத கல்லூரியில் பயின்றார். பவானிபூரில் இருந்த சக மாணவரான சிறந்த ஓவியக் கலைஞர் அனுகூல் சட்டர்ஜியிடம் ஓவியம் கற்றார். கல்கத்தா அரசு கலைக் கல்லூரியின் துணைத் தலைவரான பிரபல இத்தாலியக் கலைஞர் கில்ஹார்டியிடம் பெயின்டிங் நுணுக்கங்களைக் கற்றார்.

* சார்லஸ் பால்மர் என்ற ஆங்கில பெயின்டரின் ஸ்டுடியோவில் சில ஆண்டுகள் பயின்று, ஆயில் பெயின்டிங், உருவப்படம் வரைவதில் நிபுணத்துவம் பெற்றார். பிறகு, கல்கத்தா கவின்கலைக் கல்லூரியில் பயின்றார். 25 வயதில் அஜந்தாவுக்குச் சென்றது இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

* மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக முழு வளர்ச்சியடைந்த மகத்தான ஓவிய மரபு நமக்கும் உண்டு என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டார். முகலாய, ராஜபுத்திர ஓவிய பாணிகளையும் கற்றார். சுவாமி விவேகானந்தரால் பெரிதும் கவரப்பட்டார். ஜப்பானில் இருந்து விவேகானந்தருடன் இந்தியா வந்த ஒகாகுரா என்ற ஓவியரிடம் ஜப்பானிய ஓவியக் கலைகளைக் கற்றார்.

* கல்கத்தா கவின்கலைக் கல்லூரியில் நுண்கலைகளுக்கான துறையை தொடங்கிவைத்தார். தேசிய அளவில் தனது ஓவிய பாணியை அறிமுகம் செய்ய ‘பெங்கால் ஸ்கூல்’, ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் ஓரியன்டல் ஆர்ட்’ என்ற அமைப்புகளைத் தொடங்கினார்.

* முதன்முதலாக 1905-ல் பாரதமாதா உருவத்தை வரைந்தார். நான்கு கைகள் கொண்ட இந்த பாரதமாதா ஓவியம் நாடு முழுவதும் பிரபலமடைந்தது. அஜந்தா போன்ற சுவரோவிய மரபு, மொகலாய மற்றும் ராஜபுத்திரர்களின் சிற்றோவிய மரபு, வழிபாட்டுக்கான ஓவியக் கோலங்களின் மரபு என்ற 3 இந்திய ஓவிய மரபுகளை ஒன்றிணைத்து புதிய பாணியை உருவாக்கினார்.

* இந்திய ஓவியக் கலையில் சுதேசி மதிப்பீடுகளை அறிமுகம் செய் தார். இவரது ‘விநாயகர்’, ‘தி லாஸ்ட் ஜர்னி’, ‘புத்தா அண்ட் சுஜாதா’, ‘கிருஷ்ணலால்’ போன்ற ஓவியங்கள் மிகவும் பிரபலமானவை.

* இந்திய நவீன ஓவிய மரபை உருவாக்குவதுதான் இவரது வாழ்நாள் நோக்கமாக இருந்தது. மேற்கத்திய ஓவிய மரபு, பொருள்மைய நோக்கு-உடல்மைய நோக்கு கொண்டது என்றும் இந்திய ஓவிய மரபு ஆன்மிக மைய நோக்கு கொண்டது என்றும் கருதினார்.

* கல்கத்தா ஓவியக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த எர்னஸ்ட் பின்பீர்ட் ஹாவெல் இவரது ஓவிய முறையால் கவரப்பட்டு அவற்றை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். 1913-ல் லண்டன், பாரீஸிலும், 1919-ல் ஜப்பானிலும் இவரது ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டது.

* 500-க்கும் மேற்பட்ட ஓவியங்களைத் தீட்டியுள்ளார். வங்கமொழியில் குழந்தைகளுக்கான நூல்கள் உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். தலைசிறந்த ஓவியரும் எழுத்தாளருமான அவனீந்திரநாத் தாகூர் 80-வது வயதில் (1951) மறைந்தார்.

  • தொடங்கியவர்

 

p32.jpg

கேரளத்துப் பொண்ணு. கண்ணூரில் பிறந்தாலும் நல்ல தமிழ் முகம். அம்மா ‘கலாமண்டலம்’ விமலா, நாடகங்கள் வழி பிரபலம். அக்கா அகிலா விமல், டெல்லியில் நாடகக்கலையில் டாக்டரேட் படித்தவர். அதனால் சினிமாதான் வாழ்க்கை என சின்ன வயதிலேயே தீர்மானித்த தேவதை. பி.எஸ்.சி பாட்டனி முடித்த கையோடு ஜெயராமுக்கு தங்கையாக ‘பாக்யவிதாதா’ படத்தில் அறிமுகமானார். ‘அட யார்டா இந்த அழகுக்குட்டி?’ என எல்லோர் கண்ணும் பட திலீப்புக்கு ஜோடியாக கடந்த வருடம் ‘24X7’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் இந்த ஆண்டு ஹிட்டான ‘வெற்றிவேல்’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து ‘ஐ ஜூப்பரு’ என சொல்ல வைத்தார். ‘பஞ்சு மிட்டாய்’, ‘ஒன்பதுகுழி சம்பத்’, ‘கிடாரி’ என வரிசை கட்டி நிற்கும் இந்த மலையாளத்துப் பைங்கிளி ஆல்ரெடி வந்தாச்சு. கம் நிக்கி பேபி!


சாண்டல்வுட்  ஷ்ரவ்யா

p32a.jpg

கன்னட சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான ஓம் பிரகாஷ் ராவ்- ரேகா தாஸ் தம்பதியின் செல்ல மகள். டி.வி-யில் காம்பியரராக அறிமுகமானவர் 2013-ல் ‘லூசேகலு’ படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். ‘ஒலவே மந்தாரா’ என்ற படத்திலும் நடித்தார். டெலி சீரியல்களில் எக்கச்சக்க ஆண் ரசிகர்கள் கிடைக்கப் பெற்ற ஷ்ரவ்யா சாண்டல்வுட்டில் கொடிகட்டிப் பறப்பாரா அல்லது அப்பாவின் ஆசைப்படி ஃபாரீனுக்குப் போவாரா என்பது இப்போது அப்பாவின் டைரக்‌ஷனில் நடித்துக் கொண்டிருக்கும் புதுப்பட ரிசல்ட்டில்தான் தெரிய வரும்!


டோலிவுட் சாரா ஜேன் தியாஸ்

p32b.jpg

2007-ல் ‘மிஸ் இந்தியா’. மஸ்கட்டில் பிறந்த தங்க பிஸ்கெட். ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’க்காக விஷால் தமிழ் சினிமாவுக்குக் கூட்டி வந்தார். மும்பையில் அப்போது சூப்பர் மாடல் இவர்தான். பவன் கல்யாணோடு ‘பாஞ்சா’ படத்துக்குப் பிறகு பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கியவர். ‘க்யா சூப்பர் கூல் ஹெய்ன் ஹம்’, ‘ஓ தேரி’, ‘ஆங்ரி இண்டியன் காட்டஸ்’, ‘ஜுபான்’ என வரிசைக்கட்டி பாலிவுட் படங்களில் நடித்தவர் மீண்டும் இப்போது நாக சௌர்யாவோடு பெயரிடப்படாத புதுப்படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். செகண்ட் ரவுண்ட்டில் இன்னும் கிளாமராய் களம் இறங்கப்போவதாய் பேட்டி தட்டி குளிரவைக்கிறார் சாரா. ஓ போடு!

vikatan

  • தொடங்கியவர்

26..! நல்ல நம்பரா, கெட்ட நம்பரா?

 

p120.jpg

மெரிக்கா உள்ளிட்ட பல மேலை நாடுகளில் 13-ம் எண் மிகவும் துரதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது. அதிலும் 13-ம் தேதியன்று வெள்ளிக்கிழமை என்றால் வீட்டை விட்டு வெளியேறவே பயப்படுவார்கள். இதே போல இந்தியாவின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், 26-ம் தேதி மிகுந்த துரதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது.

* ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் நம்பர்களைக் கூட்டி கணக்குப்போடும் கருணாஸ் மாதிரி, எண்கணித நிபுணர்கள் ‘26 மிகவும் துரதிர்ஷ்டமான எண். ரெண்டையும் ஆறையும் கூட்டினால் 8 வருகிறது. அது அழிவின் எண்’ என உதட்டைப் பிதுக்குகிறார்கள். ஜோதிடர்களோ... ‘26 என்பது எப்போதும் கெட்டதைத் தராது. ஜோதிடக் காரணங்களின் அடிப்படையில் எப்போதாவதுதான் எண்கணிதம் வேலை செய்யும். நல்ல விஷயமான இந்தியாவின் குடியரசு தினம்கூட 26ம் தேதியில்தானே வருகிறது’ என்கின்றனர்.

p120a.jpg

* 2004-ம் ஆண்டு கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாளான டிசம்பர் 26-ம் தேதி, ஏற்பட்ட சுனாமியால் இந்தியாவில் மட்டும் சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். உலகம் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்தனர்.

* 2001-ம் ஆண்டு இந்தியாவின் குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி, குஜராத்தில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 13,000 முதல் 20,000 பேர் வரை பலியாகினர். 1,67,000 பேர் பலத்த காயமடைந்தனர். நான்கு லட்சம் வீடுகள் தரைமட்டமாகின.

*  2007-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி கெளஹாத்தியிலும், 2008-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி அஹமதாபாத்திலும் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களையும், அதே ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நாட்டையே உலுக்கிய மும்பை தீவிரவாதத் தாக்குதலும் நடைபெற்றது.

 இப்படி 26-ம் தேதியில் அதிக இயற்கைச் சீற்றங்களும், வன்முறைச் சம்பவங்களும் நடப்பது எதேச்சையானதா? இல்லை நிஜமாகவே அந்தத் தேதி இந்தியாவிற்கு துரதிர்ஷ்டவசமானதுதானா எனப் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதெல்லாம்கூட பரவாயில்லை. கடந்த வருடம் மார்ச் மாதம் 26-ம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றது. இதற்கும் 26-ம் தேதிதான் காரணமென ஒரு குரூப் சோசியல் மீடியாவில் கொடி பிடித்தது!

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 08
 
 

 

article_1470632157-Kobbakaduwa.jpg1509: இந்தியாவில் விஜய நகர பேரரசின் முதல் மன்னராக கிருஷ்ணதேவ ராயர் முடிசூடினார்.

1768: ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை பிளைமவுத்தில் இருந்து ஆரம்பித்தான்.

1848: மாத்தளை கிளர்ச்சி - இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக கிளர்ச்சி செய்த வீரபுரன் அப்பு தூக்கிலிடப்பட்டான்.

1863: அமெரிக்க உள்நாட்டுப் போர் - டென்னசியின் இராணுவ ஆளுநர் அண்ட்ரூ ஜோன்ச்ன் தனது தனிப்பட்ட அடிமைகளை விடுவித்தான். இந்நாள் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்னசியின் ஆபிரிக்க அமெரிக்கர்களினால் விடுமுறையாகக் கொண்டாடப்பட்டது.

1908: வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் "லெ மான்ஸ்" என்ற இடத்தில் மேற்கொண்டார்.

1942: இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1945: இரண்டாம் உலகப் போர் - சோவியத் ஒன்றியம் ஜப்பான் மீது போரை அறிவித்து மன்சூரியா நகரினுள் ஊடுருவியது.

1945: ஐ.நா சாசனம் ஐக்கிய அமெரிக்காவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐ.நா.வில் இணைந்த மூன்றாவது நாடு இதுவாகும்.

1947: பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.

1949: பூட்டான் சுதந்திரம் பெற்றது.

1963: பிரிட்டனில் ரயிலொன்றில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவமொன்றில் 26 லட்சம் ஸ்ரேலிங் பவுண் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

1967: ஏசியான் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1973: தென்கொரிய அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அதிபர்) கின் டாய்-ஜுங் கடத்தப்பட்டார்.

1974: வாட்டர்கேட் ஊழல் விவகாரம் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து தான்  ராஜினாமா செய்வதாக ரிச்சர்ட் நிக்ஸன் அறிவித்தார்.

1988: மியான்மாரில் மக்களாட்சியை வலியுறுத்தி 8888 எழுச்சி நிகழ்ந்தது.

1989: ஓர் இரகசிய இராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து நாசா, கொலம்பியா விண்ணோடத்தை விண்ணுக்கு அனுப்பியது.

1990: குவைட்டை கைப்பற்றிய ஈராக், அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

1992: யாழ்ப்பாணம், அராலியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில், இலங்கை இராணுவ வட பிராந்தியத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்டார்.

2000: அமெரிக்க உள்நாட்டுப் போர் - கூட்டமைப்பினரின் எச்.எல்.ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

2006: திருகோணமலைக்கு வடக்கே வெல்வெறிப் பகுதியில் கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2007: நாசா விண்வெளி ஆய்வு மையம் என்டெவர் விண்ணோடத்தை, கிறிஸ்டினா மெக்காலீப் என்ற ஆசிரியர் உட்பட ஏழு விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆயிரம் எந்திரன்களின் ' கலக்கல்' டான்ஸ்! (வீடியோ)

சீனாவில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் நடனமாட வைக்கப்பட்டு புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.   
 

 

ஜிங்டோ நகரை சேர்ந்த எவர்வின் நிறுவனம்,  இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. மொத்தம் 1,007 பொம்மைகள் இதில் பங்கேற்றன. நடனத்தில் பங்கேற்ற பொம்மைகள் அனைத்தும் 48.3 செ.மீ உயரம் கொண்டவை. ஒரே மாதிரியான வண்ணம் கொண்டவை.

 

சுமார் ஒரு நிமிடம், இந்த பொம்மைகள் செல்போன்கள் மூலம் இயக்கப்பட்டு ஒரே மாதிரியாக நடனமாட  வைக்கப்பட்டன. சொன்ன சொல் கேட்காத சில பொம்மைகள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டன. ஆயிரம் பொம்மைகளை ஒரே இடத்தில் நடனமாட வைத்தது புதிய கின்னஸ் சாதனை ஆகும்.

vikatan

  • தொடங்கியவர்

திங்கட்கிழமை காலை இந்த 5 விஷயங்களை செய்யலாமா? #MondayMotivation

14141906x2mj.jpg

ஞாயிறு இரவு முதலே ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என அனைத்து சமூக வலைதளங்களிலும் ''நாளைக்கு திங்கட்கிழமை, அய்யோ அலுவலகம் செல்ல வேண்டுமே என்ற போஸ்ட்கள் தான் நிறைந்து காணப்படும். இவை உங்களை மேலும் சோர்வடையச் செய்யும், இந்த வாரத்தை 'தெறி'யாக துவக்க இந்த 5 விஷயங்களை செய்யலாமா?

1. எதிர்மறையாக யோசிக்காதீர்கள்!

ஞாயிறு இரவிலிருந்தே உங்களை சோர்வாக்கும் சமூக வலைதளப் பதிவு துவங்கி காலையில் நீங்கள் அலாரத்தை இன்னும் 5 நிமிடம் தாமதமாக்குவது வரை அனைத்துமே உங்களை சோர்வாக்கும் விஷயங்கள் தான். எதிர்மறையாக எதையும் யோசிக்காதீர்கள். யாருடனும் வாக்குவாதம் செய்யாதீர்கள். சிரித்த முகத்தோடு அன்றைய நாளை துவக்குங்கள்.

2.  கோபம் தவிருங்கள்!

அலுவலகத்திற்குள் காலை வந்தவுடன், வார இறுதியில் நடந்த தவறுக்காகவோ, காலையில் செய்ய வேண்டிய திட்டங்கள் ஏதாவது சற்று தாமதமானாலோ அதற்காக கோபமோ, எரிச்சலோ அடையாதீர்கள். அது அந்த வாரம் முழுவதையும் ஆக்கிரமித்துவிடும். அதனால் கூடியவரை கோபம் கொள்ளாமல் கூலாக அணுகுங்கள். பிரச்னைகளுக்கான தீர்வுகளை கண்டறிந்து அதனை செயல்படுத்துங்கள்.

job%20satisfaction.jpg

3. உற்சாகமாக இருங்கள்!

வேலையில் மிகவும் உற்சாகமாக இருங்கள். உங்கள் அருகில் உள்ளவர் உங்களைப் பார்த்து இன்ஃப்ளுயன்ஸ் ஆகுமாறு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் சோர்வாக இருந்தால் அது அவரையும் தொற்றிக்கொண்டு அவரும் அப்படியே இருந்து விடுவார். இன்றைய நாளை நீங்கள் அதிக உற்சாகத்துடன் துவக்கும்போது அனைவரும் அதே உத்வேகத்தில் வேலை செய்யத் துவங்கி விடுவார்கள்.

4. புத்தகம் படியுங்கள்!

காலை செய்தித்தாள் துவங்கி உங்களது அலுவலக ஃபைல்கள் வரை கணினி முன்பே அதிக நேரத்தை செலவிடுபவராக இருந்தால், கொஞ்சம் Ctrl + Alt + Del செய்யுங்கள். கண்களுக்கு அழுத்தம் தராமல் ரிலாக்ஸாக ஆஃப் லைனில் வேலைகளை செய்யுங்கள். குறைந்தபட்சம் 5 மணி நேரம் கணினிக்கு விடை கொடுங்கள். மனதுக்கு பிடித்த புத்தகங்களை வாசிக்கலாம். இந்த வழக்கம் உங்களது அன்றைய தினத்தை உற்சாகமாக வைத்திருக்கும்.

5. டாப் 3 டாஸ்க்:

3 கிமீ நடைப் பயணம், பார்க்கும் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் காலை வணக்கம், 20 நிமிட உடற்பயிற்சி இது மூன்றையும் கட்டாயம் செய்யத் தவறாதீர்கள். அப்புறம் என்ன, உங்கள் திங்கட் கிழமை கெத்து காட்டும் நாளாக அமையும்.

என்ன பாஸ், இந்த 5 விஷயங்களையும் கரெக்டா செஞ்சுட்டீங்க போல..அப்ப கீழே உள்ள சவாலுக்கு தயாராகுங்கள்.


483847dbdb7d408ca080050b0c5b146a.jpg         உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத ரகசியங்கள்!!

    உங்களது பழக்க வழக்கம், பண்பு, குணம் ஆகியவற்றில் இருந்து உங்கள் பலம் என்ன என்பதை   எளிதாக கண்டறியலாம். உங்களை கெத்தாக காட்டிக் கொள்ள உங்களிடம் உள்ள நல்ல குணம் எது? உங்கள் பலம் என்ன என்பதற்கான சவால் இது!

vikatan

  • தொடங்கியவர்

ஆகஸ்ட் 8: தனித்துவமான நாயகன் ரோஜர் பெடரர் பிறந்த தின சிறப்பு பகிர்வு
roger federer

சகாப்தங்கள் அடிக்கடி அமைவதில்லை. அப்படி ஒரு தனித்துவமான நாயகன் பெடரர். ரோஜர் பெடரர் என்கிற இந்த மாயப்பெயர் டென்னிஸ் உலகை கிட்டத்தட்ட பத்தாண்டுகள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பது உற்று நோக்கினால் ஒன்று நன்றாக புரியும். வெற்றியின் உச்சத்தில் இருக்கிறார் அவர் என்று எண்ணப்பட்ட காலத்தில் அவரை உலுக்கி எடுக்கிற எதிராளிகள் வந்தார்கள். கண்ணீர் மல்க தோல்விகள் அவருக்கு தரப்பட்டு இருக்கின்றன. அதைத்தாண்டி மீண்டு வந்து சாதித்தலில் தான் பெடரர் தனித்து சிரிக்கிறார்

சின்னப்பையனாக எக்கச்சக்க விளையாட்டுகள் கால்பந்து,கோல்ப்,அப்புறம் டென்னிஸ். அக்காவை ஏகத்துக்கும் சீண்டுவது,போனில் என்ன பேசுகிறார் அவர் என்று கேட்பது இவையெல்லாம் முக்கியமான பணிகள். டென்னிஸ் ஆடுகளத்துக்கு போனால் வேண்டுமென்றே தவறாக ஷாட் ஆடுவது இளவயது பொழுதுபோக்கு பெடரருக்கு. போரிஸ் பெக்கர் அவரின் ஆதர்சம். நான்கு வயதில் டிவியில் அவர் ஆடுவதை பார்த்து பிரமித்த பெடரர்,இரண்டு முறை அவர் ஸ்டேபானின் கையால் தோற்ற பொழுது தான் உறுதியாக டென்னிஸ் மட்டையை கையில் எடுத்தார். "போரிஸ் நீங்கள் தோற்று இருக்கலாம் ! நான் ஜெயிப்பேன். தோல்விகளில் இருந்து மீண்டு வந்து ஜெயிப்பேன் !" என்று முணுமுணுத்துக்கொண்டு களம் புகுந்தார்.

ஜூனியர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பட்டங்களை விம்பிள்டனில் வென்ற பொழுது யார் இது என்று கவனிக்க ஆரம்பித்தார்கள். பீட் சாம்ப்ராஸ் ரொம்பவும் பிடிக்கும் அவருடன் 2001 இல் போட்டி அடித்த அடியில் அவரை தோற்கடித்து கம்பீரமாக அவருக்கு வணக்கம் சொன்னார் பெடரர். உலகம் நிமிர்ந்து உட்கார்ந்தது.

இரண்டு வருட இடைவெளியில் விம்பிள்டன் அவர் வசமானது. அப்பொழுது தொடங்கிய ஆட்டம் தான், ஏழு விம்பிள்டன்,ஐந்து அமெரிக்க ஓபன்,நான்கு ஆஸ்திரேலியா ஓபன்,ஒரு பிரெஞ்சு ஓபன் என்று மொத்தம் பதினேழு கிராண்ட் ஸ்லாம்கள் உலக சாதனை. கூடவே முன்னூறு வாரத்துக்கு மேல் உலகின் நம்பர் ஒன் வீரராக இருந்தவர் என்பதும் உடைப்பதற்கு அரிதான சாதனை தான்.

ஆடுகளத்தில் ஃபோர்ஹான்ட் என்று வந்து விட்டால் மின்னல் போல கலக்கி எடுப்பார் மனிதர். 2008 இல் அமெரிக்க ஒபனில் மட்டும் வென்ற பொழுது நடாலின் ஆட்டத்தில் பெடரர் காணாமல் போய்விட்டார் என்று தான் எழுதினார்கள். புல் தரையின் தேவன் என்று புகழபட்ட பெடரர் அங்கேயே வீழ்த்தப்பட்டு இருந்தார். கொஞ்சம் அழுகை,எக்கச்சக்க அமைதி கிளம்பிவிட்டார் பெடரர். அடுத்த வருடம் வந்தது விம்பிள்டன்,பிரெஞ்சு ஓபன் இரண்டையும் வென்று அமைதியாக சிரித்தார்.

அடுத்த மூன்று வருடத்தில் எக்கச்சக்க போட்டிகள்,தோல்விகள். பேக்கப் பெடரர் என்று சொல்ல வாயைத்திறந்த பொழுது ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம்,மீண்டும் விம்பிள்டனில் வெற்றி என்று நான் இன்னம் இருக்கிறேன் என்று உலகுக்கு சொன்னார் மனிதர். அவருக்கும்,நடாலுக்கும் இருந்த போட்டி மிக பிரம்மாண்டமானது. எட்டு முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிகளில் சந்தித்து இருக்கிறார்கள் இவர்கள். அதில் ஆறு முறை வெற்றி நடாலுக்கே. ஆனால்,தான் சிறந்தவர் என்பதை நடால் ஏற்றுக்கொண்டது இல்லை. "நான் தான் அதி சிறந்தவன் என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால் அது உண்மையில்லை. நீங்கள் பெடரர் ஆடுவதை பார்க்கவில்லை என்றே நான் கருத வேண்டி இருக்கும் !" என்றார் நடால்

பெடரர் போட்டிகளில் வென்றால் பெரிதாக ஆர்ப்பரிக்க மாட்டார். முதல் போட்டியில் வென்ற பொழுது காட்டும் அதே அமைதியான,மெல்லிய குரலில் தான் பேட்டி இருக்கும். தோற்றால் வென்றவரை மனதார பாராட்டும் உயர்ந்த மனதுக்காரர் அவர்.

பெடரர் ஆடிக்கலக்கியதை வெறும் கோப்பைகளின் மூலம் மட்டும் நீங்கள் கணக்கிட்டு விடக்கூடாது. பல இறுதிப்போட்டிகளுக்கு போவதற்கும் எல்லையற்ற உழைப்பும்,சற்றும் குறையாத தாகமும் தேவை. பெடரரிடம் இருந்து வெற்றியை பறிக்க அப்படி ஒரு பெரும்போராட்டம் நிகழும் பல தருணங்களில்.

பெடரர் எனும் டென்னிஸ் நாயகனைத்தாண்டி அவர் ஒரு இணையிலா மனிதர். பியட்ரிஸ் டிநோகோ என்றொரு பதினேழு வயது பெண். கேன்சரால் இறந்து கொண்டிருந்தாள். பெடரரை சந்திக்க வேண்டும் என்பது என் ஆசை என எழுதிப்போட பிறந்தநாள் அன்று பெடரர் அவளை சந்தித்தார். ஒரு ஹாய் சொல்லிவிட்டு போனால் போதும் என்று சொல்லி இருந்தார்கள், பெடரர் வந்தார்,உள்ளுக்குள் கண்ணீர் முட்டுகிறது. சிரித்துக்கொண்டே அந்த தேவதையிடம் முழுதாக பதினைந்து நிமிடம் பேசுகிறார். ஒரு அணைப்பு,நெற்றியில் ஒரு முத்தம்.\\

பின்னர் அவர் ஆடும் போட்டியை காண கூட்டிப்போகிறார். மதிய உணவுக்கு கூட போகாமல் அவளுக்கு,அவளின் தோழிகளுக்கு கையெழுத்து போட்டு தந்து கொண்டே இருக்கிறார். நான்கு ஸ்நாப்கள்,எக்கச்சக்க சந்தோசம் என்று அந்த பெண்ணை மகிழ்வித்து விட்டு தான் களத்துக்கு போகிறார்.

கத்ரினா புயலா ? ஹைதியில் நிலநடுக்கமா ? தமிழ் நாட்டில் சுனாமியா ? எய்ட்ஸ் நிதி திரட்டலா ? நாங்கள் இருக்கிறோம் என்று சக வீரர்களை ஒருங்கிணைத்து கோடிகளை கொண்டு வந்து கொட்டும் நல்ல மனிதர் அவர். விளையாட்டு வீரன் என்பதை தாண்டி சக மனிதர்களை நேசித்தபடி அவர்களின் கனவுகளை நம்பிக்கைகளை தாங்கி ,மாபெரும் வலிகளில் இருந்து மாறாத புன்னகையோடு வென்று விட்டு எளிமையாக கை உயர்த்தி பெடரர் சிரிக்கிற பொழுது பலபேர் உத்வேகம் பெறுவதை நீங்கள் உன்னிப்பாக கவனியுங்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பெடரர்

 

 
Bild zeigt 6 Personen

vikatan

ரோஜர் பெடரர்

 

 
31TH_FED__2717352f_2963883f.jpg
 

ரோஜர் பெடரர் - சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (Roger Federer) பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் (1981) பிறந்தார். இவரது தாய் தென்ஆப்பிரிக்காவில் பிறந்தவர். குழந்தைப் பருவம் முதலே டென்னி ஸில் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிப் பருவத்தில் தீவிர டென்னிஸ் பயிற்சி மேற்கொண்டார்.

* தொழில்முறை ஆட்டக்காரராக 1998-ல் களம் இறங்கியவர், அடுத்த ஆண்டில் உலகத் தரவரிசையில் 100-வது இடம் பிடித்தார். மிலன் உள்விளையாட்டு அரங்கப் போட்டிகளில் முதல்முறையாக தனிநபர் கோப்பையை வென்றார். 2003-ல் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை விம்பிள்டனில் வென்றார்.

* ஒரே ஆண்டில் (2004) மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். 2006, 2007-ம் ஆண்டுகளிலும் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதை 302 வாரங்கள் தக்கவைத்துக்கொண்டார் 2008 ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார்.

* ஒற்றையர் ஆண்கள் பிரிவில் இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் ஏற்கெனவே 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பீட் சாம்ப்ராஸின் சாதனையை முறியடித்துள்ளார். ஆஸ்திரேலியா, பிரெஞ்ச், விம்பிள்டன், அமெரிக்கா ஆகிய 4 இடங்களிலும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 7 ஆண் வீரர்களில் ஒருவர் இவர்.

* ஆண்கள் ஒற்றையர் கிராண்ட்ஸ்லாமில் 27 முறை இறுதிப்போட்டி வரை முன்னேறியது இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனை. தொடர்ந்து 23 முறை அரையிறுதிக்கு முன்னேறினார்.

* தொடர்ந்து 65 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்றது, காலிறுதிக்கு 48 முறை முன்னேறியது, பெரும்பாலான போட்டிகளில் வென்றது (307), தொழில்முறையில் 88 டென்னிஸ் டைட்டில்கள் போன்ற சாதனைகள் இவரை டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாக உயர்த்தின.

* டென்னிஸ் உலகத் தரவரிசையில் தற்போது 3-வது இடத்தில் இருக்கிறார். ரசிகர்களால் ‘பெட் எக்ஸ்பிரஸ்’, ‘சுவிஸ் மேஸ்ட்ரோ’ என்று புகழப்படுகிறார். பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். தன் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, பின்தங்கிய மக்களின் கல்வி, விளையாட்டுக்கு உதவுகிறார். சுவிட்சர்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையும் பெற்றவர்.

* ‘தாய்’ நாடான தென் ஆப்பிரிக்காவில் குழந்தைகள் சிறந்த கல்வி, விளையாட்டு, சுகாதாரம் பெற ஆப்பிரிக்கா - சுவிஸ் சாரிட்டி என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்க ஓபன் போட்டியில் தான் பயன்படுத்திய டென்னிஸ் ராக்கெட்களை ஏலம்விட்டு, அதில் கிடைத்த தொகையை, கத்ரினா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கினார்.

* சுனாமி பேரழிவின்போது தமிழகம் வந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, பல உதவிகளைச் செய்தார். யுனிசெஃப் நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார். எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கூட்டங்களில் பங்கேற்றார். பிரபல வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற போட்டியை நடத்தி, ஹைதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார்.

* முழங்கால் வலி காரணமாக, தற்போது நடந்துவரும் ரியோ ஒலிம்பிக் மற்றும் இதர போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். இன்று 35-வது வயதில் அடியெடுத்து வைக்கும் இந்த சாதனையாளர், நல்ல உடற்தகுதியுடன் அடுத்த ஆண்டில் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவேன் எனக் கூறியுள்ளார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

விரல் சொல்லும் கதை!

 

p110b.jpg

‘அனுமன் பயன்படுத்திய கதாயுதம்’ என்ற பெயரில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிலான ‘கதாயுதம்’ படத்தை வாட்ஸ்-அப்பில் பரப்பினார்கள் சிலர். சாதாரண மனிதர்களைவிடப் பல மடங்கு உயரம் உள்ள மனிதர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக புகைப்படங்கள் அவ்வப்போது பரப்பப்படுகின்றன. இதிகாசங்கள் பலவற்றிலும் ‘ராட்சத மனிதர்கள்’ வாழ்ந்ததாகக் கதைகள் உலவுகின்றன. நம் இமயமலைப் பகுதிகளிலேயே ‘பனி மனிதர்கள்’ என்ற இனம் இருப்பதாகவும், மனிதர்களைவிட பெரிய உருவம் கொண்டவர்கள் அவர்கள் எனவும் சிலர் பேட்டி தட்டுகிறார்கள். இதெல்லாம் வதந்திகள், கட்டுக்கதைகள் என்றாலும், மேலே சொன்ன அத்தனை விஷயங்களுக்கும் இணைப்பு கொடுக்கும் விஷயமாக இருக்கிறது ஒரு விரல்!

p110a.jpg

‘கியண்ட் பீப்பிள்ஸ்’ எனப்படும் ராட்சத மனிதர்களைப் பற்றியும், எகிப்து பிரமிடுகளைப் பற்றியும் தகவல்களைக் குடைந்து தேடிக்கொண்டிருப்பவர், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கிரிகோர் ஸ்போரி. 2012-ல் பத்திரிகை ஒன்றிற்கு இவர் கொடுத்த பேட்டி, ‘ராட்சத மனிதர்’களைப் பற்றிய அடுத்தகட்ட ஆய்வுகளுக்கு அஸ்திவாரம் போட்டது. தனது ஆய்வுகளுக்காக, கல்லறைகளைத் திருடும் கும்பலைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்த கிரிகோருக்கு, நீள்வட்ட வடிவமான பெட்டி ஒன்றை எடுத்துக்காட்டி இருக்கிறார். அதில் இருந்த மனித விரலைப் பார்த்த கிரிகோருக்கு அதிர்ச்சி. ஏனெனில், பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த அந்த விரலின் நீளம் 38 செ.மீ அளவுக்கு இருந்திருக்கிறது. விரல்களுடைய எக்ஸ்ரே படங்களும் அவரிடம் இருக்கவே, கல்லறைத் திருடரான அவரிடம் அந்த வினோதமான விரலை விலைக்குக் கேட்டிருக்கிறார் கிரிகோர். ‘இது முக்கியமான நபருடையது’ என்பதை மட்டும் தெரிவித்த அவர், விரலை விற்க மறுக்கவே, 300 டாலர்கள் பணம் கொடுத்துவிட்டு விரலைப் புகைப்படங்களாக எடுத்திருக்கிறார். அந்த விரல் 1988-ல் கண்டுபிடிக்கப்பட்டதாம். பிறகு, இதை ஊடகங்களுக்குச் சொல்லாமல், விரலுக்குச் சொந்தமான உடல் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறியும் நோக்கத்தோடு, ‘ராட்சத மனிதர்’களைப் பற்றிய ஆராய்ச்சியில் இன்னும் ஆர்வம் காட்டியிருக்கிறார் கிரிகோர். ஒரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் மீண்டும் அந்த கல்லறைத் திருடரைத் தேடிச்சென்றிருக்கிறார். எவ்வளவு முயற்சித்தும் அவரையும், அந்த விரல் என்ன ஆனது? என்பதையும் கிரிகோரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், இது உண்மையான விரலின் புகைப்படங்கள்தான் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ‘ராட்சத மனிதர்கள்’ பூமியில் இருந்தார்கள் என்பதை உறுதியாகவும் நம்புகிறாராம் கிரிகோர் ஸ்போரி.

p110.jpg

அதாவது, 16 அடிக்கும் அதிக உயரமுள்ள மனிதர்கள் பூமியில் வாழ்ந்தார்கள் அல்லது வந்துபோனார்கள் என்கிறார் இவர். இதையெல்லாம் நம்பலாமா. வேணாமா?
 

vikatan

  • தொடங்கியவர்

http://www.orangenews9.com/wp-content/uploads/2015/11/Kane-Williamson.jpg

 

நியூ சிலாந்து அணியின் இளம் அதிரடி வீரர், ஓட்டக் குவிப்பில் முன்னணி இடத்தில் இருக்கும் கேன் வில்லியம்சன் பிறந்தநாள்
Happy Birthday Kane Williamson

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

 

தொழில்நுட்பம்

``நான் இயக்கிய படத்தின் டீஸரை, நெட்டில் இத்தனை லட்சம்  பேர் பார்த்திருங்காங்களேன்னு நினைச்சா சந்தோஷமாகத்தான் இருக்கு. ஆனா, இதே மாதிரி முழுப் படத்தையும் நெட்லயே பார்த்துட்டாங்கன்னா?'' - வருத்தப்பட்டார் இயக்குநர்.

- சதிஷ்

கொலைத் திட்டம்

``ஜனங்க நடமாட்டம் அதிகமா இருக்கிற ஸ்பாட்டில் வெச்சுப் போட்டுத்தள்ளுங்க. அப்பத்தான் யாரும் கண்டுக்க மாட்டாங்க'' என்று அடியாட்களுக்கு, அறிவுரை வழங்கினான் கூலிப்படைத் தலைவன்.

- ரவி குமார்

ரியல் ஃபைட்

``என்னைய்யா சண்டபோடுறான்... கொஞ்சம்கூட ரியலாவே இல்லை!” - டூப் நடிகரைத் திட்டினார் ஒரிஜினல் நடிகர்.

- அபிசேக் மியாவ்

வருத்தம்

ஃபேன்சி எண் வாங்கியதற்காக வருந்தினான், ஆக்ஸிடன்ட் செய்துவிட்டுத் தப்பியபோது.

- வீ.விஷ்ணுகுமார்

டிஜிட்டல் அம்மா

வாட்ஸ்அப் வீடியோக்களைக் காண்பித்து, குழந்தைக்கு சாதம் ஊட்டுகிறாள் அம்மா!

- கட்டுமாவடி கவி கண்மணி

நட்பு

``நீ எனக்கு ஃப்ரெண்ட்... இந்தா வாழைப்பழம். பிச்சையெடுக்கக்    கூடாது சரியா?'' - குழந்தை சொன்னதும் தலையாட்டியது யானை.

- திருமாளம் எஸ்.பழனிவேல்

p28a.jpg

 

ஜாமீன்

சாமியார் ஆசீர்வாதம் வழங்கினார், தன்னை ஜாமீனில் எடுக்க வந்தவர்களை!

- சி.சாமிநாதன்

டைட்டில்

``படத்தோட டைட்டில் `குமாரும் இந்துவும் சேர்ந்து சுத்தினவங்க' '' என்ற அசிஸ்டென்ட் டைரக்டர் மகேஷ், ``சுருக்குனா KISS-னு வரும் சார்'' என்றான். 

- ராஜி ராம்

p28b.jpg

சமாதான செல்ஃபி

``உனக்கும் உன் மாமியாருக்கும் சண்டையாமே?'' என்று கேட்டவர்களின் வாயை அடைக்க, மாமியாருடன் செல்ஃபி எடுத்து அப்லோட் செய்தாள் அமுதா.

- ராம் ஆதிநாராயணன்

ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்

முதல் நாள் வகுப்பில் பேராசிரியை உள்ளே நுழைந்ததும்  ``அவங்க என் ஃபேஸ்புக் ஃப்ரெண்டுடா!'' என்றான் வருண், நண்பனிடம்.

- கல்லிடை வெங்கட்

vikatan

  • தொடங்கியவர்

p94a.jpg

போட்டுத்தாக்கு

கட்டிப் புடிக்கிறதிலிருந்து காலை வாரி விடுறதுவரைக்கும் டெய்லி ஏதாவது ஒன்றைக் கொண்டாடுறது வழக்கமாப் போச்சு. அமெரிக்காவில் #NationalDanceDay கொண்டாடினா, அப்போ நாங்க யாருனு நம்ம ஆளுங்களும் களமிறங்கி அதிரி புதிரி ஆக்கினார்கள். நம் ஊரில் வடிவேலு டான்ஸ் ஆடும் ஸ்டில்கள் முதல் பாடைக்கு முன்னால் ஆடும் குத்தாட்டம் வரை அத்தனையையும் இந்த டேக்கில் இறக்கி முழி பிதுங்கச் செய்தனர். சிங் இன் த ரெய்ன்...

ரெயின் ரெயின் கோ அவே

அதிக அளவில் பதிவான பருவமழையால் பெங்களூருவின் பல பகுதிகளில் மழைவெள்ளம் புகுந்தது. ஆரம்பத்தில் குஷியான பெங்களூருவாசிகள் தெருவில் மீன் பிடித்து சோஷியல் மீடியாவில் போட்டோக்களை நிரப்பி ரகளை செய்தனர். போகப்போக நிலைமை மோசமானதும் துணை ராணுவத்தினர் மற்றும் கர்நாடகக் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பெங்களூருவின் இதரப் பகுதிகளில் வசிப்பவர்களும், இந்தியாவின் பிற மாநிலத்தவர்களும் #BengaluruRains டேக்கில் தங்களது சோகத்தைப் பதிவுசெய்ததோடு உதவிப் பொருட்களையும் அனுப்பி வைத்தனர். மீண்டு வா பெங்களூரு!

p94.jpg

இது சும்மா ட்ரெயிலர்தான்மா

சல்மான் எதைச் செய்தாலும் ட்விட்டரில் அவரின் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். வழக்கிலிருந்து விடுதலை ஆனாலும், சைக்கிள் ஓட்டினாலும் அந்த செய்திக்கு நேஷனல் ட்ரெண்டில் இடம் நிச்சயம். இந்த முறை அவர் நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தின் ட்ரெய்லர் 30 மில்லியன் பார்வைகளைக் கடந்ததை #SultanTrailer என்ற டேக்கில் பட்டாசு வெடிக்காதக் குறையாகக் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள். ஆனாலும் படம் ரிலீஸ் ஆகி ஒரு மாசம் கழிச்சும் ட்ரெய்லரைக் கொண்டாடுறதெல்லாம்... என்னவோ போங்க பாஸ்!

p94b.jpg

வாழ்த்துகள்

முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிக்கிறார் மகேஷ் பாபு. இது மகேஷ் பாபுவுக்கு 23-வது திரைப்படம். இவர் நடித்து தெலுங்கு தேசத்தில் ஹிட் அடிக்கும் படங்களை தமிழில் விஜய்யை வைத்து ரீமேக் செய்வது வழக்கம். இந்த நன்றி மறவாத விஜய் ரசிகர்கள் #whyweadorevijayandmahesh என்ற டேக்கில் தங்களது வாழ்த்துகளைக் குவித்து அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தனர். நம் ஆளுங்களுக்கு ஒரிஜினலும் புடிக்குது ஜெராக்ஸூம் புடிக்குது!

p94c.jpg

போராட்டம்

குஜராத்தில் உள்ள உனா நகரில் பசுவின் தோலை உரித்ததாகக் குற்றம் சாட்டி தலித் இளைஞர்கள் நான்கு பேர் கட்டிவைத்துத் தாக்கப்பட்டனர். இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் பரவியதோடு, நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. விசாரணையில் அந்த இளைஞர்கள் இறந்த பசுவின் தோலைத்தான் உரித்ததாகத் தெரியவந்துள்ளது. குஜராத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட தலித் அமைப்புகள் இந்த விவகாரத்தைக் கண்டித்து ‘இனி பசு உட்பட எந்த விலங்குகள் உயிரிழந்தாலும் நாங்கள் அப்புறப்படுத்த மாட்டோம்’ என்று அஹமதாபாத்தில் பேரணி நடத்தினர்.  நாடு முழுவதும் #DalitsNotCows என்ற டேக்கில் கண்டனங்கள் எழுந்தன. அடக்குனா அடங்குற ஆளா நீ?

உன் பேரைச் சொல்லும்போதே...

பிடிச்ச பொண்ணோட பேரைக் கேட்டா, பொண்ணுங்க தன்னோட பேரைச் சொல்வாங்க. மிஞ்சிப்போனா தன்னோட ஃப்ரெண்ட்ஸ், குடும்பத்துல உள்ளவங்க பேரைச் சொல்வாங்க. ஆனா பசங்களுக்கு இந்தப் பாரபட்சமே இல்லைங்க. காதலி பேரில் இருந்து பிடிச்ச நடிகை பேர் வரைக்கும் #beautifulgirlname டேக்கில் கொட்டி தேசிய அளவில் ட்ரெண்ட் கொண்டுவந்துட்டாங்க. சன்னி லியோன் பேரைத்தான் அதிகம் பேர் சொன்னாங்கனா பார்த்துக்கோங்க. என்னா ஒரு வில்லத்தனம்!

p94e.jpg

சக் தே இந்தியா

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் விதமாகத் தலைநகர் டெல்லியில் 10,000 இளைஞர்கள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. தியான் சந்த் தேசிய மைதானத்தில் இந்த மாரத்தானை மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். #RunforRio என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டம் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நிறைவு பெற்றது. மோடி தனது ‘மன் கீ பாத்’ உரையில் உங்களது வாழ்த்துகளை ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வீரர்களிடம் கொண்டு சேர்க்கும் போஸ்ட்மேனாக செயல்படுவேன் எனத் தெரிவித்தார். அடுத்து ரியோ போகவும் ப்ளான் பண்ணிட்டார் போல!

p94d.jpg

முஸ்தபா... முஸ்தபா

அம்மா, அப்பா உறவுக்கு அடுத்து ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நண்பர்கள் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கிறார்கள். வாழ்க்கையின் இறுதிவரை தோளோடு தோளாக உடன்வரும் நண்பர்களைக் கெளரவப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு, உலக நண்பர்கள் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஒரு வாரமாகவே #internationalfriendshipday டேக்கில் ஃபீலிங்க்ஸைக் கொட்டினர். தல தளபதி சண்டையில் அடித்துக்கொண்டவர்கள்கூட... என்ன இருந்தாலும் அவன் என் ஃப்ரெண்டுனு கட்டிப்புடிச்சுக் கலங்கவைத்தனர். நண்பேன்டா!

vikatan

  • தொடங்கியவர்

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

 

p44a.jpgதிடீர்னு ஒரு பிரபலத்தைப் பார்த்துட்டா, பக்கத்தில் இருக்கிற யார்கிட்டேயாவது மொபைலைக் கொடுத்து, ‘ஒரு போட்டோ எடுத்துக்கொடுங்க’னு நெளிஞ்சுக்கிட்டு நிற்போம். இதில் என்ன பாஸ் இருக்கு? மொபைல்ல படம் எடுக்கணும்னா இப்படித்தானேன்னு கேட்காதீங்க. காலம் காலமாக விரலை வைத்து ‘க்ளிக்’ செய்தே படம் பிடிக்கப் பழகிவிட்ட நமக்குக் கொஞ்சம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கவே ‘அல்கோம்ரா’ என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் உலவுகிறது. ‘பாஸ்போர்ட்’ போட்டோ எடுத்தாலும், வித்தியாசமாக எடுக்க வேண்டும் என நினைக்கும் வித்தியாச விரும்பிகளுக்கு இந்த அப்ளிகேஷன் எக்ஸ்ட்ரா எனர்ஜி கொடுக்கும்! அப்படி என்ன இருக்கு?

அப்ளிகேஷனை டவுன்லோடு செய்யுங்கள். அப்ளிகேஷனின் செட்டிங் பகுதியில்தான் நீங்க இறக்கவேண்டிய அத்தனை வித்தைகளும் இருக்கும். ஒரு புகைப்படம் எடுக்க எவ்வளவு நொடிகள் அல்லது எவ்வளவு நிமிடம் தாமதிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக்கொண்டால், எந்த இடத்திலும் உங்களை நீங்களே படம் எடுத்துக்கொண்டு சுயம்புவாகச் சுற்றித் திரியலாம். 125 மீட்டருக்கு அந்தப் பக்கம் மொபைலை வெச்சுட்டு நான் எப்படி ‘க்ளிக்’ பண்ணுவேன்னு கன்ஃபியூஸ் ஆகாதீங்க. அப்ளிகேஷனில் இருக்கும் ‘வாய்ஸ்’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்துகொண்டால், ‘ஸ்மைல் ப்ளீஸ்’, ‘ஓகே சீஸ்’ என்று பேசினாலே போதும். அதைக் கட்டளையாக எடுத்துக்கொண்டு, தானாகவே க்ளிக்கிவிடும். ‘அட’னு ஆச்சரியம் ஆகிடாதீங்க. விசில் அடித்தாலே ‘க்ளிக்’ செய்யும் ஆப்ஷனும் இதில் அடக்கம். ஆக, செல்ஃபி எடுக்கும்போது ‘க்ளிக்’ பட்டன் எங்கே இருக்குனு திணறாமல், ஒரே ஒரு விசில் அடித்தால் போதும். செல்ஃபி ரெடி! இதுமட்டுமா?

p44.jpg

எடுக்கப்படும் புகைப்படம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்று நாமே தீர்மானித்துக்கொள்ளலாம். ‘ஓகே சீஸ்’, ‘ஸ்மைல் ப்ளீஸ்’ வார்த்தைகளைச் சொல்லிப் படம் எடுத்தே போர் அடித்துவிட்டது என்றால், ‘ஓகே போட்டோ’, ‘ஓகே ஸ்டார்ட்’, ‘ஓகே டூ இட்’ எனப் பிற வார்த்தைகளையும் பயன்படுத்தலாம். ஆனால், மேலே சொன்ன இரண்டு வார்த்தைகளுக்கு மட்டுமே இலவச அனுமதி. மற்ற வார்த்தைகளைப் பயன்படுத்த சிறிய தொகையைக் கட்டணமாகக் கொடுக்க வேண்டும். காசு கொடுத்துப் பேசணும்னு நமக்கென்ன தலையெழுத்து? நம்ம செஃல்பிக்குப் பெரிய்ய்ய்ய விசில் அடிங்க!

டவுன்லோடு லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.tafayor.alcomra

vikatan

  • தொடங்கியவர்

13934594_10154857884174578_7374823477940

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 09
 

article_1439104005-Atomic.jpeg1173: இத்தாலிய பைஸா கோபுர நிர்மாணம் ஆரம்பிக்கப்பட்டது.

1942: இந்தியாவில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்த மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டார்.

1945: ஜப்பானின் நாகசாசி நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. 74,000 பேர் பலியாகினர்.

1965: மலேஷியாவிலிருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டது.

1974: அமெரிக்காவில் வாட்டர்கேட் ஊழல் காரணமாக ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் ராஜினாமா செய்தார். ஜெரால்ட் போர்ட் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

1991: யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஜூலை 10இல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும் 2000Mம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.

2006: திருகோணமலைப் பகுதியில் தமிழ் மக்கள் வெருகல் ஊடாக இடம் பெயர்ந்தபோது விமானத் தாக்குதலுக்குள்ளாகியும் எறிகணைத் தாக்குதலாலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உங்கள் பாஸ் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்? #DailyMotivation

boss.jpg
பாஸ் மற்றும் பணியாளர் உறவு என்பது சரியாக தயாரிக்கப்பட்ட காபியை போன்றது. சரியான கலவையில் இருந்தால்தான் அதன் சுவை மேம்படும்; புத்துணர்ச்சி கிடைக்கும். நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை தன் பணியாளர்களிடம் பகிர்ந்து அதற்கான திறனை முழுமையாக வெளிக்கொணர வைக்கும் பாஸ்தான் சரியான தலைவனாக பார்க்கப்படுகிறார். அப்படி நிறுவனத்தின் தலைவர் ஒருவர்,  தன் பணியாளரிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் இவைதான்...

இலக்குகளை புரிந்து கொள்ளுங்கள்!

இலக்குகள் என்பது நிர்வாகம் பாஸுக்கு நிர்ணயிப்பது. அதனை ஏன் பணியாளர்கள் மீது திணிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம். அவருக்கு நிர்ணயிக்கப்படும் இலக்குகள் அனைத்தும் அவருக்கு மட்டும் நிர்ணயிக்கப்படுவது அல்ல; பணியாளர்களின் கூட்டு செயல்திறனுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுபவையே. முதலில் உங்கள் அணியின் இலக்குகளை புரிந்து கொள்ளுங்கள். அதனை அடைய வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்கள் வேலையை தாண்டி உங்கள் பாஸ் உங்களிடம் எதிர்பார்க்கும் மிக முக்கியமான விஷயம் இதுதான். இதனை புரிந்து கொண்டால் உங்கள் இலக்குகளை எளிதில் அடைந்துவிட முடியும்.

ஃபேஸ்புக் அலுவலகத்தில் மார்க் ஸக்கர்பெர்க் துவங்கி ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் இலக்குகள் என்ன என்பது அவர்களது அலுவலக அமைப்பில் தெளிவாக இருக்குமாம். பணியாளர்கள் அனைவரும் தங்களது தனிப்பட்ட இலக்குகளை அதிகரிப்பதன் மூலம் ஃபேஸ்புக்கின் வருடாந்திர இலக்குகள் அதிகரிப்பது அவர்களது ப்ளஸ்.

தவறுகளை மறைக்காதீர்கள்!

வேலையின் செயல்முறையில் ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்தால் முதலில் அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்.  அதற்கான தீர்வோடு பாஸை அணுகுங்கள். அதேசமயம் தவறான புரிதலில் ஒருவர் தவறு செய்ததாக கூறப்பட்டால் அதற்கான விளக்கத்தோடு அணுகுங்கள். அதோடு இனிமேல் அந்த தவறான புரிதல் கூட இடம்பெறாத அளவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். உங்களை நிரூபிக்கவேண்டும் என்று வேலை பார்ப்பதை பாஸ்கள் விரும்புவதில்லை. ஒரு அணியாக நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதை தான் உங்கள் பாஸ் உங்களிடம் எதிர்பார்க்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி இதற்கு மிகப்பெரிய உதாரணம், செய்யும் தவறுகளை ஓப்பனாக பிரஸ்மீட்டில்  ஏற்றுக் கொண்டு அதனை திரும்ப செய்யாமல் செயல்பட்டதில் தோனி பாராட்டத்தக்கவர். ஷார்ட் பிட்ச் பந்துகளைக் கண்டு திணறிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் ஷார்ட் பிட்ச் பந்துகளை விளாசித் தள்ளியது ஒரு எடுத்துக்காட்டு.

 

boss12.jpg


திட்டம் எப்படி இருக்கிறது?

அணியில் ஒரு சிலர் மிகவும் சிற‌ப்பான திட்டத்தை வகுக்கக் கூடியவராக இருப்பர். அவர்கள் சொல்வது கேட்க சரியாக இருப்பது போன்றே தோன்றும், ஆனால் பாஸ் எதிர்பார்ப்பது, சிறப்பான திட்டம் என்பதை தாண்டி, செயல்பாட்டுக்கு எளிதில் வந்து இலக்குகளை அடைய உதவும் திட்டத்தைத்தான். வெறும் பேச்சளவிலான திட்டங்கள் 73% தோல்வியில் முடிவடைகின்றன. திட்டத்தின் முதல் 30 நாட்கள் இப்படித் தான் இருக்கும் என்று தயாரிக்கப்பட்ட திட்டங்களின் வெற்றி விகிதம் 64%. அதனால் சிறப்பான திட்டங்களுக்கான முழு செயல்முறையோடு அணி இருக்க வேண்டும் என்பதை தான் உங்கள் பாஸும், நிர்வாகமும் எதிர்பார்க்கிறது.

இந்த மூன்று விஷயங்களும் சரியாக அமைந்தாலே உங்களுக்கு பாஸுக்குமான அலுவலக உறவு சரியாக அமையும், இதைத் தாண்டி வீக் எண்ட் பார்ட்டி, பர்த்டே ட்ரீட் என அனைத்து விஷயங்களிலும் உங்களுடன் ஃப்ரெண்ட்லியாக உங்கள் பாஸை அணுகுங்கள். அது அணியின் செயல்திறனை அதிகப்படுத்தும்.

vikatan

  • தொடங்கியவர்

13914154_1098100680238625_60040068846423

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்பத் வீரருமான ஹமில்டன் மசகட்சாவின் பிறந்தநாள்
Happy Birthday Hamilton Masakadza

  • தொடங்கியவர்

ஜிம்னாஸ்டிக்கில் இறுதுச்சுற்றை உறுதி செய்த தீபா கர்மகர் பிறந்த தினம்!

13876336_1196744947050960_29598445528990

 

தீபா கர்மகர் இந்தியாவில் இருந்து யாரும் செய்யாததை செய்து அசத்தி இருக்கிறார். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்குக் தகுதி பெற்று சாதனை செய்துள்ளார்.

தீபா கர்மகர் 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்தியாவில் உள்ள திரிபுரா மாநிலத்தில் பெலொனியா என்ற இடத்தில் பிறந்தார்.

இவரை பற்றிய இரண்டு செய்திகள் ஆச்சர்யமளிப்பவை, கடந்த 2014இல் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் இதே வால்ட் பிரிவில் இந்தியாவிற்காக பங்கேற்ற இவர் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். அடுத்து ஆண்டே, ஹிரோசிமாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இதே வால்ட் பிரிவில் இந்தியாவிற்காக வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார்.

ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒலிம்பிக்கில் நடந்த ஜிம்னாஸ்டிக் இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் ப்ரொடுனொவா வால்ட் பிரிவில் பங்கேற்ற தீபா 14,850 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தை பிடித்தார். இதே பிரிவில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவை செர்ந்த சைமன் பைல்ஸ் 16,050 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பெற்றார். தெங்கொரீயாவை செர்ந்த ஜொங் உன் ஹொங் 15,683 புள்ளிகளுடனும் சுவிட்சர்லாந்தை செர்ந்த கியுலியா ஸ்டெயின்ருபெர் 15,266 புள்ளிகளுடனும் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தனர். இதன் இறுதிப் போட்டி வரும் ஆகஸ்ட் 14ஆம் தெதி நடைபெறவுள்ளது. இவர் இறுதிப்போட்டியில் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து புள்ளிகள் சேர்க்கும் பட்ச்சத்தில் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் உறுதி. ஜிம்னாஸ்டிக் போட்டியில் பதக்கம் வெல்ல காத்திருக்கும் தீபா கர்மகருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்வோம்.

vikatan

  • தொடங்கியவர்

பேய் இருக்கா இல்லையா?

 

p116b.jpg

தொடர்ந்து பேய்ப்படங்களாக வந்துகொண்டிருப்பதாலோ என்னவோ, பேய் அமுக்கிடுச்சு, என்னைத் துரத்திக்கிட்டே இருக்குனு சிலர் அல்லு தெறிப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் அறிவியலிலோ இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.

வேப்பமரம் அல்லது புளியமரத்தின் கீழ் உறங்கினால் முனி பிடித்து மூச்சை அடைக்கும் என்ற மூடநம்பிக்கையை அறிவியல் தகர்த்துவிட்டது. பகலில் ஆக்ஸிஜனை வெளியில் விடும் மரங்கள் இரவில் நேர்மாறாக கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகிறது. இந்த நேரத்தில் மரத்தின் கீழ் உறங்கும்போது ஆக்ஸிஜன் குறைவால் ஏற்படும் மூச்சுத்திணறலைத்தான் முனியோடு கோத்துவிட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த அனுபவத்தை உணர்ந்திருப்பான். அதாவது, ஆழ்ந்த உறக்கத்தில் திடீரென நெஞ்சு வலிக்கும் உணர்வு எழும். ஆனால், எழுந்திருக்கவோ அல்லது உடல் பாகங்களை அசைக்கவோ முடியாது. அமுக்கினி பேய் என்னை அமுக்கிடுச்சு என்று அலறியிருப்பார்கள். ஆனால் அறிவியலோ  இதை ‘ஸ்லீப் பேரலிசிஸ்’ (தூக்க வாதம்) என்கிறது. அதாவது முறையற்ற தூக்கம், மன அழுத்தம், மெலடோனின் குறைபாடு எனப் பல காரணங்களால் ஆழ்ந்த தூக்கத்திற்கும் விழித்திருக்கும் நிலைக்கும் இடைப்பட்ட நிலையில் இந்த உணர்வு தோன்றுகிறது என்கிறது.

p116.jpg

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு செயற்கை முறையில் மின் தூண்டல் நிகழ்த்தினர். அதன்பின் அந்த நோயாளி தன்னை நிழல் உருவம் ஒன்று துரத்துவதாகவும், எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து தன்னைத் தாக்குவதாகவும் தெரிவித்தார். உண்மையில் விஞ்ஞானிகள் மின்தூண்டல் செய்த பகுதியானது தன்னையும் பிறரையும் வித்தியாசப்படுத்தி உணரவைக்கும் மூளையின் ஒரு பகுதியாகும். இந்தக் குழப்பத்தில் தனது நிழலையே வேறு மனிதனாக நோயாளி உணர்ந்தது தெரியவந்தது. பேய் மற்றும் அமானுஷ்ய விஷயமாக மனிதர்கள் பலவற்றை நம்புவதற்குப் பின்னால் மூளையின் மின்தூண்டல் ஒரு காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

p116a.jpg

உலகம் முழுவதும் பல இடங்களில் புகைப்படங்களில் பேய் உருவம் தோன்றியதாகப் பல சர்ச்சைகள் உள்ளன. ஆனால் இதற்கு விஞ்ஞானம் தெரிவிக்கும் காரணம் மிக எளிதானது. கேமராக்களில் பயன்படுத்தப்படும் ஃப்ளாஷ் ஒளி எதிரொளிப்பதாலும், லென்ஸ் பகுதியில் தூசி, இலை அல்லது சிறிய அளவிலான பூச்சி ஏதாவது இருக்கும்போது எடுக்கும் புகைப்படங்களில் அவை விசித்திரமாகப் பதிவாகின்றன. அது மட்டுமின்றி கேமராவை வேகமாக நகர்த்தும்போது பொருளைச் சுற்றிய பகுதி சிறிது மங்கலாகப் பதிவாகும். இது போன்ற பல காரணங்களால்தான் புகைப்படங்களில் அமானுஷ்ய உருவங்கள் பதிவு ஆவதாக ஆணித்தரமாக விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

இதுபோன்று பேய் சார்ந்த நம்பிக்கைகள் பலவற்றை விஞ்ஞானம் உறுதியாகத் தீர்க்காவிட்டாலும், அவற்றைத் திட்டவட்டமாக மறுக்கிறது.

நீங்க என்னத்தைச் சொன்னாலும் நாங்க காத்து, கருப்பு, பில்லி, சூனியம்....னு ராகவா லாரன்ஸ் மாதிரி டயலாக் பேசுறதை நிறுத்த மாட்டோம்னுதானே சொல்றீங்க!

vikatan

  • தொடங்கியவர்

சொல்வனம்

ஓவியங்கள்: ஸ்யாம்

 

அரபு தேசத்தில் வெறும் 50* C தான் 

ஒரு முழுக்கோழியைக் கம்பியில் செருகிப் புறம்காட்ட

நொடியில் அது தந்தூரியாகுமென

கேலிச்சித்திரம் எழுதிய புண்ணியவானைக் கண்டால்

நா தழுதழுக்க அவர் தம் கைகளைப் பற்றுவேன்.

கிரீஸை விட்டு இரண்டடி ஏறி சிக்ஸர் விளாசும்

அக்கால கங்குலி போல் ஃபார்மில் உக்கிரமாகியிருக்கிறார்

சூரியனார் இந்தப் பாலை நிலத்தில்.

தகிக்கும் நீர்மழை வழிய

பேருந்தினுள் வீற்றிருக்கும் என்னருகில் அமர்ந்தாள்  

அந்த நான்கடி பிலிப்பைன்ஸ் பதுமை என்றால் நம்பவேண்டும்.

குளிர்ச்சிலை போலிருந்தாலும் அவளுக்கும் வியர்க்கும்தானே  

ஆனால் அவள் முகத்தில் அவை அழகுத் துளிகளாயிருந்தன.

குச்சி போன்றதொரு வஸ்து

ஒரே சொடுக்கில் பாவையின் சிறு கரங்களில்

விசிறியான மாயம்தனைச் சொல்ல மறந்தால்

அது பிழையினும் பெரும்பிழை.

இப்படி அப்படி அசைந்து அதன் இயங்குவிசையில்

p46a.jpg

உதித்த திடீர் தென்றலில் சொக்கும் மனதை

தாலாட்டில் கண்ணயரும் மழலையாக்கித் தவழவிடுகிறேன்.

அடுத்த சோடி மென்வருடல்களுக்கு அப்படியே

தலைகோதும் காதலியின் கைப்பக்குவம்.

நினைவின் சாளரங்களை ஒரே சொடுக்கில் திறந்துவிட்ட

மொழி தெரியா தேவதைக்கு

ஆத்மார்த்த புன்னகையை உரித்தாக்கப்

புரிந்ததோ என்னவோ அதே புன்னகையுடன் ஆமோதிக்கிறாள்.

இனி முகம் சிவந்து அனல் மழை பொழியும்

கதிரவனைக் கைகுலுக்கி அணைத்துக்கொள்வேன்

எஞ்சியிருக்கும் இந்நெடுங்கோடை முழுமைக்கும். 

 - தர்மராஜ் பெரியசாமி 

 

 

p46c.jpg

பலூன்

ஒரு பலூன் உடையும்பொழுது

வண்ணங்களின் வடிவமெடுத்தக் காற்று

மீண்டும் உருவமிழக்கிறது.

 

புவியீர்ப்பைக் கேலிசெய்து

புன்னகைத்த இழைகளின் மிச்சம்

பூமியின் காலில் விழுகிறது.

 

கட்டிய நூலுடனும்

கந்தலான உடலுடனும்

தாலியுடன் நிற்கும்

கைம்பெண்ணை நினைவுபடுத்துகிறது.

 

சிறைபட்ட காற்று சத்தம்போட்டுச் சிரித்து

சுதந்திரம் பெற்றதை உணர்த்துகிறது

 

உன்னோடு விளையாடிக்கொண்டிருந்த

என் சுவாசம் தனியே விசும்பிக்கொண்டிருக்கிறது.

 - இளந்தென்றல் திரவியம் 

தேவை

அப்பா சாப்பிட காரம் சேர்க்க வேண்டும்

தாத்தாவுக்கு சிறுதானிய தோசை தேவை

பாட்டி சூடு குறைந்த ரசம் தொட மாட்டாள்

மாமா சாப்பிட ஏதேனுமொரு கீரை வேண்டும்

தம்பி ஆர்கானிக் மட்டுமே தொடுவேன் என்பான்

எண்ணெய் மிதக்காமல் உள்ளிறங்காது எனக்கு

நிஷாக்குட்டி பருப்பு சாதம் மட்டுமே...

அம்மா சாப்பிட

இவையெல்லாம் பழையதாக வேண்டும்.

  - ந.சிவநேசன்

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.