Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

மீனாட்சி அம்மன் கோயிலில் மேத்யூ ஹேடன்!

ஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

math.jpg

ஐபிஎல் போட்டியைப்போன்றே, தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்கப்படவுள்ளது. சென்னை, மதுரை உள்ளிட்ட 8 நகரங்களை மையமாகக் கொண்டு இந்த புதிய தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரை பிரபலப்படுத்தும் வகையில், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன் இன்று மதுரை சென்றார். மதுரை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் இளம் கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடிய அவர், மதியம்.12.30 மணியளவில், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார்.

math1.jpg

 

கோயிலுக்கு வந்த அவருக்கு அர்ச்சகர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்பளித்தனர். பின்னர் கோயிலுக்கு உள்ளே அழைத்து செல்லப்பட்ட ஹேடனுக்காக, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து கோயில் முழுவதையும் ஹேடன் சுற்றிப் பார்த்தார். பொற்தாமரைக் குளத்தின் அருகே நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அர்ச்சகர்கள், ஹேடனுக்கு மீனாட்சி அம்மன் கோயிலின் பெருமைகளை விளக்கிக் கூறினர்.

தொடர்ந்து மதுரை வேலம்மாள் கல்லூரி மற்றும் தியாகராஜர் கல்லூரிக்கு மேத்யூ ஹேடன் சென்றார்.

vikatan

13920579_1283632888321770_46643236456982

13921141_1283632884988437_87525679939035

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒலிம்பிக் மைதானத்தில் காதலை தெரிவித்தவருக்கு அபார வெற்றி !

ரபரப்பான ஒலிம்பிக் மைதானத்திலேயே பிரேசில் ரக்பி வீராங்கனையிடம் காதலை தெரிவித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் இளைஞர் ஒருவர்.

olys.jpg

ரியோ ஒலிம்பிக்கில் ரக்பியும் இடம் பெற்றுள்ளது.  மகளிர் ரக்பி செவன்ஸ் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டி சென்றது. இந்த போட்டி நடந்த ரியோடி ஜெனிரோவின் தியோடரா மைதானத்தில் மரிஜோடி என்யா என்பவர் மேலாளராக பணி புரிந்தார்.

ரக்பி தொடரில் பிரேசில் அணியும் பங்கேற்றது. பிரேசில் அணியில் இடம் பெற்றிருந்த இஸ்தரா கெஸ்ரோலா என்ற வீராங்கனை, என்யாவை மிகவும் கவர்ந்தார். இந்த நிலையில், இதே மைதானத்தில் கடைசிப் போட்டியில் அதாவது 9வது மற்றும் 10வது இடத்துக்கான மோதலில் பிரேசில் அணி, ஜப்பான் அணியுடன் மோதியது. இநத மைதானத்தில் பிரேசில் பங்கேற்கும் கடைசிப் போட்டி இது.

rugby.jpg

 

அதற்கு பிறகு இஸ்தராவை பார்க்க முடியாது. அதனால் இந்த போட்டி முடிந்ததுமே இஸ்தராவிடம் காதலை தெரிவித்துவிடும் முடிவில் என்யா இருந்தார். ஜப்பானை வெற்றிக் கண்ட பிரேசில் 9வது இடத்தை பிடித்தது. வெற்றிக் கொண்டாட்டத்தின் போது உள்ளே புகுந்த என்யா, இஸ்தராவிடம் காதலை தெரிவித்து, இருவரும் திருமணம் செய்து கொள்வோமா எனக் கேட்டார்.  அது என்னவோ என்ன மாயமோ தெரியவில்லை...மரிஜோடியின் காதலை இஸ்தரா உடனடியாக ஏற்றுக் கொண்டார். மைதானத்திலேயே இருவரும் முத்தமிட்டு அன்பை பரிமாறிக் கொண்டனர்.

சாபாலோ நகரில் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவிருக்கிறது. இப்போது ரியோவில் இதுதான் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

vikatan

  • தொடங்கியவர்

13913721_1098070833574943_85868884566635

தமிழின் முன்னணி கதாநாயகி, துறுதுறு கொழுமொழு நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாள்
Happy Birthday Hansika Motwani

  • தொடங்கியவர்

உலக ஆதிவாசிகள் தினம் இன்றாகும் : இலங்கை ஆதிவாசிகள் குறித்த சிறப்புப் பார்வை

 

 

  • தொடங்கியவர்
மிஸ் குளோபல் இன்டர்நெஷனல் மலேஷியா 2016
 

மிஸ் குளோபல் இன்டர்நெஷனல் மலேஷியா (Miss Global Intercontinental Malaysia 2016) அழகுராணியாக ஒலிவியா கொன்ஸ்டஸ் நிக்கலஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

18466_7.jpg

 

18466_4.jpg

 

மிஸ் குளோபல் இன்டர்நெஷல் மலேஷியா அழகு 24 வயதான ஒலிவியா சட்ட பட்டதாரியாவார்.

 

18466_1.jpg

 

இவ் வருடம் ஜப்பானில் நடைபெறவுள்ள மிஸ் இன்டர்நெஷனல் போட்டிகளில் மலேஷியாவின் சார்பாக அவர் பங்குபற்றவுள்ளார்.

 

18466_2.jpg

 

2014 மிஸ் மலேஷியா ஏர்த் - வோட்டர் அழகுராணியாகவும் ஒலிவியா தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

18466_3.jpg

 

இப் போட்டியில் இரண்டாமிடத்தை 26 வயதான ஜூலிலென் லியூ லிங் தெரிவானார்.

 

18466_5.jpg

 

இவர் போலந்தில் நடைபெறவுள்ள மிஸ் சுப்பர்நெஷனல் போட்டி யில் மலேஷியாவின் சார்பில் பங்குபற்றவுள்ளார்.

 

18466_6.jpg

 

18466_8.jpg

 

3 ஆம் இடத்தை கசேன்ட்ரா டேவி ஜெரேமியா தெரிவானார். சீனா வில் நடைபெறவுள்ள மிஸ் டுவரிஸிம் குயின் அழகுராணி போட்டி யில் ஜெரேமியா பங்குபற்றவுள்ளார்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சீனத் தொழிலதிபர் லி லியாங், போயிங் 737 ரக விமானத்தை ரெஸ்டாரன்ட்டாகா மாற்றி, வாடிக்கையாளர்களைக் கவர்ந்துவருகிறார்.

2015-ல் இந்தோனேஷியாவில் உள்ள படாவியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானத்தை 35 கோடிக்கு வாங்கினார். அதைத் தனித்தனியாகப் பிரித்து, 70 கன்டெய்னர்களில் சீனாவுக்குக் கொண்டுவந்து,.
வூவான் நகரில் ரெஸ்டாரன்ட்டாக அமைத்தார். இதில் விருந்து சாப்பிடவேண்டும் என்றால், 2000 முதல் 3000 வரை செலவாகும். கூடவே, விமானம் ஓட்டிப்பார்க்க விரும்புபவர்கள் அந்த அனுபவத்தையும்
பெறலாம். அதற்கு 4,000 ரூபாய்தான் கட்டணம். இந்த விமான ரெஸ்டாரன்ட்டுக்கு 'லில்லி ஏர்வேஸ்' என்று பெயர் சூட்டியுள்ளார் லி லியாங்.

13923490_759678364134708_373125042159103

13920285_759678414134703_510520589777864

13913963_759678420801369_420206782477030

  • தொடங்கியவர்

13920220_1098069283575098_72220620197650

 
தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரம் மகேஷ் பாபுவின் பிறந்தநாள்.
தமிழிலும் ஹிந்தியிலும் கூட இவரது வெற்றிப் படங்கள் வெளிவந்துள்ளன. மொழி மாற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக விஜய்யின் பல திரைப்படங்கள் மகேஷ் பாபு தெலுங்கில் நடித்தவையே.

அடுத்து தமிழில் வருகிறது மகேஷ் பாபு நடித்த 'செல்வந்தன்'

மொழி கடந்து பலர் மனம் வென்ற மகேஷ்பாபுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday Mahesh Babu

’பிரின்ஸ்’ மகேஷ்பாபுவை சூப்பர் ஸ்டாராக மாற்றிய 15 விஷயங்கள்!

Mahes%20babu.png

தெலுங்கின் சூப்பர்ஸ்டார், ரசிகர்களின் ஃபேவரைட் நாயகன், பிரின்ஸ் மகேஷ்பாபுவின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றி தெரிந்ததும்..  தெரியாததும் என விஷயங்கள் 15 இதோ!                                          

12346687927341723968995124530907n1.jpg மகேஷ் பாபு நடித்த 22 படங்களில் 7 படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. 3 படங்கள் தமிழில் ( ஒக்கடு - கில்லி, நானி - நியூ, போக்கிரி - போக்கிரி) ரீமேக் ஆகியிருக்கிறது. ஆனால், மகேஷ் ஒரு ரீமேக் படத்திலும் நடித்ததில்லை.

123485679273417206356622117315662n.jpg முதல் படம் ராஜகுமாருடு (இளவரசன்). அதனால் இன்றும் ரசிகர்களால்  பிரின்ஸ் என்றழைக்கப்படும் இவர், பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில் தான். செயின்ட் பீட் பள்ளியில் கார்த்தி இவரின் ஸ்கூல்மேட். கல்லூரிப் படிப்பாக காமர்ஸ் படித்தது சென்னை லயோலா கல்லூரியில்.

12355199927341727302328449361892n.jpgதெலுங்கில் ரகளையாக வசனம் பேசி தெறிக்கவிடும் மகேஷுக்கு தெலுங்கு எழுதப் படிக்கத் தெரியாது. வசனங்களை படிக்க முடியாததால் மனப்பாடம் செய்து கொண்டு தான் பேசுவார். சென்னையிலேயே இருந்து தெலுங்கு உச்சரிப்பு மறந்து போய்விட, அதற்கு தனியாக பயிற்சி எடுத்த பின்பே நடிக்க சென்றார். அதே சமயம் தமிழில் சரளமாக பேச, எழுத, படிக்க என புகுந்து விளையாடுவார்.

123669069273417306356611462359923n.jpgதன்னுடன் 'வம்சி' படத்தில் நடித்த நம்ரதாவை நான்கு வருட காதலுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார். நம்ரதாவுக்கு மகேஷ் பாபுவை விட மூன்று வயது அதிகம்.mahes%201.png

12346687927341723968995124530907n1.jpg நடிப்பு எந்த விதத்திலும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை தடுக்காமல் பார்த்துக் கொள்வதில் மகேஷ் கில்லி. படப்பிடிப்புக்கு இடையிலோ, முடிந்த பின்போ ஒரு பெரிய ப்ரேக் எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் பிக்னிக் போவது வழக்கம். குறைந்த பட்சம் மகன் கௌதம், மகள் சித்ராவுக்குப் பிடித்த ரெஸ்டரென்ட்டுக்கு அழைத்துச் சென்று நேரம் செலவிடுவார்.

123485679273417206356622117315662n.jpgதந்தை கிருஷ்ணாவுடன் இவர் நடித்திருக்கிறார். அதே போல, 'நேனொக்கடினே' படத்தில் மகன் கௌதமுடன் நடித்திருந்தார் மகேஷ்.

12355199927341727302328449361892n.jpgமகேஷ் நடித்த முராரி படம் மூலம் ஸ்டன்ட் மாஸ்டராக அறிமுகமானவர் தான் பீட்டர் ஹெய்ன்.

123669069273417306356611462359923n.jpgஒரே மாதிரி கதைகளிலேயே நடித்துக் கொண்டிருப்பதாக மகேஷுக்குத் தோன்ற ஒரு மூன்று வருடம் நடிப்புக்கு ப்ரேக் விட்டார். அதன் பின் நடித்தது தான் 'கலீஜா'

12346687927341723968995124530907n1.jpg மகேஷுக்கு ஒரு ட்ரீம் ரோல் கௌபாய் கெட்டப்பில் நடிக்க வேண்டும் என்பதாக இருந்தது. அதனாலேயே அவர் ஆசை ஆசையாய் நடித்த படம் தான் 'டக்கரி தொங்கா'.

123485679273417206356622117315662n.jpgமகேஷ் ஒரு செயின் ஸ்மோக்கர். ஆனால், தனது பாட்டியின் மறைவுக்குப் பிறகு சிகரெட் பழக்கத்தை அடியோடு விட்டுவிட்டார்.

12355199927341727302328449361892n.jpg தெலுங்கு சினிமாவில் மகேஷுக்கு மிகவும் க்ளோஸான இயக்குநர்கள் த்ரிவிக்ரம், பூரி, ஸ்ரீனு வைட்டலா

123669069273417306356611462359923n.jpgமகேஷின் ஃபேவரைட் நடிகர்கள் அனில் கபூர் மற்றும் கமல் ஹாசன். ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் என்ன ரோல் என்றாலும் நடிப்பேன் என்பது மகேஷின் லேட்டஸ்ட் டாக்.


mahes%202.png

123485679273417206356622117315662n.jpg இதுவரை மகேஷ் 7 முறை நந்தி விருது பெற்றிருக்கிறார்.

12355199927341727302328449361892n.jpg மகேஷ் பாபு தீவிரமான கேம் ஆஃப் த்ரோன்ஸின் ஃபேன். அதில் காலீஸ் (khalesse) கதாப்பாத்திரம் மிகவும் பிடிக்குமாம்.

123669069273417306356611462359923n.jpg தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் - தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகும் - பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மகேஷ்.

ஹேப்பி பர்த்டே பிரின்ஸ்!

vikatan

  • தொடங்கியவர்

p26.jpg

ஸ்கர் நாயகி அலிசியா விகாண்டர், லாஸ் வேகாஸில் ‘ஜேசன் போர்ன்’ படத்திற்காக நடித்துக்கொண்டு இருக்கிறார். அவர் லாஸ் வேகாஸ் வந்து இறங்கியதும், அங்கு இருந்த டாக்ஸி டிரைவர் ஒருவர் இவரை சுற்றுலாப் பயணி என நினைத்துவிட்டாராம். இவரிடம் ‘இங்கு ‘ஜேசன் போர்ன்’ படத்தின் ஷூட்டிங் நடக்கிறது, செம ஆக்‌ஷன் படம்’ எனச் சொல்லியிருக்கிறார். மேக் அப் போடலியோ?

p26a.jpg

ம் பிரச்னைகளை, எங்கு வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், சமூக வலைதளங்களில் அல்ல என்பதற்கு உதாரணமாகி இருக்கிறார் நடிகை லிண்ட்சே லோகன்.  தன் வருங்காலக் கணவர் தன்னை ஏமாற்றுகிறார், கொலை செய்யப் பார்க்கிறார் எனத் தொடர்ச்சியாக ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவுகள் இட்டார் லோகன். பலரும் பதறி அடித்துக்கொண்டு விசாரிக்க ஆரம்பித்தால், அடுத்த நாளே அவற்றை அழித்துவிட்டார். ‘பயமாக இருந்ததால், செய்துவிட்டேன். 30 வயதுதானே ஆச்சு... கூல்’ என்கிறார் லோகன். நல்லா கிளப்புறாய்ங்க பீதியை!

p26b.jpg

டிகை ஜெனிஃபெர் அனிஸ்டன்,  இத்தாலியத் திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர், “செல்ஃபி, அழகு எல்லாவற்றையும் கடந்து பெண்கள் வர வேண்டும். மொபைலுக்குள் தங்களைப் புதைத்துக்கொள்ளாமல் வெளியே வர வேண்டும்’’ எனப் பேசி இருக்கிறார். கரெக்ட்!

p26c.jpg

2013-ம் ஆண்டு வெளிவந்த ‘தி வூல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ படத்தில், டி காப்ரியோவை, முத்தமிட்டு இருப்பார் ப்ரிட்டன் நடிகை  ஜோன்னா லும்லி. தனியார் தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில், டிகாப்ரியோவை லிப் கிஸ் செய்தது எப்படி இருந்தது என நிகழ்ச்சியாளர் கேட்க, ‘மிருதுவான உதடுகள் அவருக்கு, அட்டகாசமாக இருந்தது’ என்றிருக்கிறார் ஜோன்னா. அதற்கு இப்போது என்ன என்கிறீர்களா? ஜோன்னாவின் வயது 70. போல்டான பாட்டி!

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

ஓகஸ்ட் - 10

 

1519 : போர்த்­து­கேய கட­லோடி ஆய்­வாளர் மக­லனின் ஐந்து கப்­பல்கள் உலகைச் சுற்­றி­வர ஸ்பெய்னின் செவில் நகரில் இருந்து புறப்­பட்­டன.

 

1675 : ரோயல் கிறீன்விச் விண்­வெளி கண்­கா­ணிப்­ப­தற்­கான அடிக்கல் லண்­டனில் நடப்­பட்­டது.

 

1680 : அமெ­ரிக்­காவின் நியு மெக்­ஸி­கோவில் ஸ்பானிய குடி­யே­றி­க­ளுக்கு எதி­ராக புவெப்­லோக்­களின் கிளர்ச்சி ஆரம்­ப­மா­னது.

 

1776 : அமெ­ரிக்­காவின் சுதந்­திரப் பிர­க­டன செய்தி லண்­டனை சென்­ற­டைந்­தது.

 

787varalru.jpg1792 : பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸில் தீவி­ர­வா­திகள் ரிலெரீஸ் அரண்­ம­னையை முற்­று­கை­யிட்டு பதி­னாறாம் லூயி மன்­னனைக் கைது செய்­தனர்.

 

1809 : குவிட்டோ (தற்­போ­தய ஈக்­கு­வா­டோரின் தலை­நகர்) பிரான்­ஸிடம் இருந்து சுதந்­திரம் பெறு­வ­தாக பிர­க­டனம் செய்­தது.

 

1821 : மிசுரி ஐக்­கிய அமெ­ரிக்­காவின் 24வது மாநி­ல­மாக ஏற்றுக் கொள்­ளப்­பட்­டது.

 

1904 : ரஷ்யப் படை­க­ளுக்கும் ஜப்­பா­னி­யர்­க­ளுக்கும் இடையில் மஞ்சள் கடலில் கடற்போர் இடம்­பெற்­றது.

 

1913 :  பல்­கே­ரியா, ருமே­னியா, செர்­பியா, மொன்­டெ­னே­குரோ, கிறீஸ் ஆகிய நாடுகள் புக்­காரெஸ்ட் நகரில் சமா­தான உடன்­பாட்­டுக்கு இணங்­கின.

 

1944 : இரண்டாம் உலகப் போரில் அமெ­ரிக்கப் படைகள் குவாமில் நிலை கொண்­டி­ருந்த கடைசி ஜப்­பா­னியப் படை­களைத் தோற்­க­டித்­தனர்.

 

1990 : மகெலன் விண்­கலம் வெள்ளி கிர­கத்தை  அடைந்­தது.

 

2000 : உலக மக்கள் தொகை 600 கோடியை கடந்­தது.

 

2001 : அங்­கோ­லாவில் பய­ணிகள் ரயில் ஒன்றின் மீதான தாக்­கு­தலில் 252 பேர் உயி­ரி­ழந்­தனர். 

 

2003 : ரஷ்ய விண்­வெளி வீரர் யுரி மலென்­சென்கோ விண்­வெ­ளியில் திரு­மணம் புரிந்த முத­லா­வது மனி­த­ரானார். சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­தி­லி­ருந்த மலென்­சேன்­கோ­வுக்கும் அமெ­ரிக்­காவில் இருந்த திமித்­ரி­வா­வுக்கும் இடையில் திரு­மணம் நடை­பெற்­றது.

 

2012 : தென் ஆபி­ரிக்­காவின் பேர் நக­ருக்கு அருகில் சுரங்கத் தொழி­லா­ளர்­களின் பாரிய வேலைநிறுத்தம் ஆரம்பமாகியது.

 

2014 : ஈரானின் தெஹ்ரான் நகரில் விமானமொன்று விபத்துக் குள்ளானதால், அதிலிருந்த 48 பேரில் 39 பேர் உயிரிழந்தனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ஆடிய கால்களும் ஓடிய கால்களும் இணைந்தபோது... - சம்பா நடனக் கலைஞர்களுடன் ஒலிம்பிக் சம்பியன் யூசெய்ன் போல்ட் நடனம்
 

100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டப் போட்­டி­களில் உலக சாத­னை­யா­ளரும் இப்­போட்­டி­களில் நடப்பு ஒலிம்பிக் சம்­பி­யனு­ மான ஜெமெய்க்கா வீரர் யூசெய்ன் போல்ட் பிரே­ஸிலில் நேற்று முன்­தினம் சம்பா நடனக் குழு­வி­ன­ருடன் இணைந்து நட­ன­மா­டினார்.

 

18488e2cb890698-01-02_09082016_P50_CMY.j

 

ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­காக பிரே­ஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ நக­ருக்குச் சென்­றுள்ள யூசெய்ன் போல்ட் அடங்­க­லான ஜெமெய்க்கா குழு­வி­னரின் முத­லா­வது செய்­தி­யாளர் மாநாடு நேற்­று ­முன்­தினம் நடை­பெற்­றது.

 

பிரே­ஸிலின் பிர­சித்தி பெற்ற சம்பா நட­னமும் இந்­நி­கழ் வில் இடம்­பெற்­றது. இதன்­போது சம்பா நடனக் குழு­வி­ன­ரு டன் யூசெய்ன் போல்ட்டும் இணைந்து நட­ன­மா­டினார்.

 

18488c6c9890772-01-02_09082016_P50_CMY.j

 

தான் மக்­களை களிப்­பூட்ட விரும்­பு­வ­தாக அவர் தெரி­வித் தார். அவர் நட­ன­மா­டும்­போது அங்­கி­ருந்­த­வர்கள் கர­கோஷம் செய்­தனர். அப்­போது மேலும் அதிக சத்­த­மாக கர­கோஷம் செய்­யு­மாறு போல்ட் கூறினார்.

 

2008, 2012 ஆம் ஆண்­டு­களில் நடை­பெற்ற ஒலிம்பிக் போட்­டி­களில், 100 மீற்றர், 200 மீற்றர் போட்­டி­களில் தங்கப் பதக்­கங்­களை வென்­றவர் யூசெய்ன் போல்ட் இம் முறையும் இப்­போட்­டி­களில் தங்கப் பதக்­கங்­களை அவர் இலக்கு வைத்­துள்ளார்.

 

18488_12ef2016-08-08T224739Z_1973308560_

 

அதே­வேளை 19 விநா­டி­க­ளுக்குள் (செக்­கன்கள்) 200 மீற்­றரை ஓடி முடித்த முதல் வீரர் எனும் சாத­னையை படைப்­ப­தற்கும் தான் விரும்­பு­வ­தாக அவர் தெரி­வித்தார்.

 

18488_2016-08-08T221834Z_655824398_RIOEC

 

எனினும் ரியோ ஒலிம்பிக் போட்டியே தனது கடைசி ஒலிம் பிக் போட்டியாக இருக்கும் என 29 வயதான யூசெய்ன் போல்ட் கூறினார்.

18488_MED260716-PG04-R1.jpg

 
metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆகஸ்ட் 10 சாவி 100-வது பிறந்த நாள்: என்றும் இளமையுடன் இருந்தவர்!

 

சாவி
சாவி

தன் முன் அமர்ந்திருந்த இளைஞனைக் கூர்ந்து பார்த்தார் கல்கி. அவர் முன்னால் பத்திரிகையில் வந்திருந்த விளம்பரம் இருந்தது. “உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே!”

“பார்த்திருக்கிறீர்கள். இதே ‘ஆனந்த விகடன்’ ஆபீஸில்தான். சில நாட்களுக்கு முன் என் கதைகளைக் கொடுத்துவிட்டு, வேலை கேட்டேன். வேலை கொடுக்க மறுத்துவிட்டீர்கள். அதனால், நானே பத்திரிகை நடத்தலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.”

“சரி. அது ஏன் ‘கத்திரி விகடன்’ என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்?”

“ஆனந்த விகடன், ஹனுமான் போன்ற பத்திரிகைகளில் வரும் செய்திகளைக் கத்தரித்து, அதாவது ஊளைச் சதை நீக்கி, நாங்கள் கொடுக்கப் போகிறோம்.”

கல்கி யோசனையில் ஆழ்ந்தார். அவருக்கு ‘விகடன்’ என்ற பெயரில் இன்னொரு பத்திரிகை வருவதில் சம்மதம் இல்லை. இந்த இளை ஞனை வெளியே விட்டுவைக்கக் கூடாது.

“எங்கள் பத்திரிகையில் சேர்ந்து விடுங்கள். 40 ரூபா சம்பளம். என்ன சொல்கிறீர்கள்?”என்றார் கல்கி.

‘அட, இதை எதிர்பார்த்துத்தானே இந்த விளம்பரமே போட்டேன்’ என்று இளைஞனின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.

“கொஞ்சம் அவகாசம் கொடுங் கள். நான் யோசித்து சொல்கிறேன்.”

“என்ன யோசனை? நீங்கள் கைக் காசை இழக்க வேண்டியது இல்லை. அதே நேரம் எழுதவும் செய்யலாம்.”

“என்னை நம்பி பணம் போடு கிறேன் என்று சொன்னவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டாமா?”

“இதுவரை எவ்வளவு செலவழித் திருப்பார்கள்?”

“160 ரூபாய்!”

கல்கி ஒரு காகிதத்தை எடுத்தார். ‘ப்ளீஸ் பே ருபீஸ் 160 டு எம்.எஸ். விஸ்வநாதன்’ என்று ஒரு குறிப்பு எழுதி, “இதை அக்கவுண்ட்ஸில் கொடுத்து பணம் வாங்கிக் கொள்ளுங்கள். நாளை இங்கு வேலைக்குச் சேர்ந்துவிடுங்கள்...” என்றார் கல்கி.

அந்த எம்.எஸ்.விஸ்வநாதன், மாம்பாக்கம் சாமா சுப்ரமணியன் விஸ்வநாதன்தான் எழுத்தாளர் சாவி. அவர் ஆனந்த விகடனுக்குள் முதன்முதலில் அடியெடுத்து வைத் தது இப்படித்தான். இந்த சம்பவம் நடந்தது 1937-ல். அப்போது சாவிக்கு 21 வயது.

சாவி, அந்த இளைஞனைக் கூர்ந்து பார்த்தார். இளைஞனுக்கு வயது 30. முந்தைய நாள் நடந்த ஆசிரியர்க் குழு கூட்டத்தில் அவன் ஒரு யோசனை சொல்லியிருந்தான். அது யோசனை அல்ல. கடுமையான விமர்சனம். அதைக் குறித்துப் பேச அவனை அழைத்திருந்தார்.

“நீங்கள் சொன்னதை யோசித் தேன். நமது பத்திரிகையில் இளை ஞர்கள் எழுத அதிகம் வாய்ப்பு கொடுப்பதில்லை என்று சொல் கிறீர்கள். என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?”

“நம் பத்திரிகையில் மாறி மாறி தொடர்கதை எழுதும் எழுத்தாளர் களுக்கெல்லாம் என்ன வயது?”

“தொடர்கதை என்பது சர்குலே ஷனுடன் தொடர்புடைய விஷயம். பிரபலமானவர்களை அதற்குப் பயன்படுத்திக் கொள்வதைத் தவறு என்று சொல்லிவிட முடியுமா?”

“அரைத்த மாவையே அரைக்க நாம் எதற்கு? புதிதாக ஏதாவது செய்தால்தானே வாசகர்களின் கவனத்தை நம் பக்கம் திருப்ப முடியும்?”

“மசால் தோசை வேண்டுமானால் மாவு அரைத்துத்தான் ஆக வேண்டும். அரைக்காமல் என்ன செய்வது?”

“இட்லி, தோசை, இடியாப்பமே வேண்டாம். உப்புமா கிண்டுவோம். சப்பாத்தி இடுவோம். பூரி பொரிப்போம். பரோட்டா போடு வோம்..!”

‘‘யோசிக்கிறேன்...”

யோசிக்கிறேன் என்று சொன்ன சாவிக்கு அப்போது வயது 64. அந்த சீனியர் யோசித்ததன் விளைவு ‘திசைகள்’.

“நீங்கள் சொல்வது சரிதான். இளைஞர்களுக்கு என்று தனி யாகவே ஒரு பத்திரிகை ஆரம்பித்து விடலாம் என்று தீர்மானித்திருக் கிறேன். அதன் ஆசிரியரையும் முடிவு செய்துவிட்டேன்” என்றார்.

“யார்?” என்றேன்.

‘‘நீங்கள்தான்!” என்றார் புன்னகை தவழ.

‘திசைகள்’ தொடங்கியபோது ‘ஆசிரியர் மாலன் வழங்கும் திசை கள்’ என்ற ஒரு வரி மட்டும்கொண்ட போஸ்டர் அடித்து தமிழ்நாடு முழுக்க ஒட்டச் செய்தார். ஒரு இடத்தில்கூட அவரது பெயர் கிடையாது. வாணி மகாலில் விழா வைத்து என்னையும் என் குழுவினரையும் அறிமுகப்படுத்தினார். அவையெல் லாம் அவரது பெருந்தன்மைக்குச் சான்று!

எழுதும் ஆர்வமும் யோசனை களும் உள்ளே ஊற்றெடுத்துக் கொண்டிருந்த இளம்வயதில் போதுமான வாய்ப்பு கிடைக்கா மல் தத்தளித்துத் தவித்தவர் சாவி. அதனால் ஆற்றல் உள்ள இளைஞர்கள் மீது அவருக்கு எப்போதும் பரிவு சுரந்து கொண்டே இருந்தது.

வாரா வாரம் வரம்

‘வாஷிங்டனில் திருமணம்’ சாவிக்கு மிகப் பெரும் புகழைத் தேடித் தந்தது. ஆனால், அது மிகச்சிறிய தொடர். 11 வாரங்கள் மட்டுமே வந்த தொடர். அது வெளிவந்தபோது அதில் வாரா வாரம் அவரது பெயர் இடம் பெறவில்லை. கடைசி அத்தியாயம் பிரசுரமானபோதுதான் ‘சாவி’ என்ற பெயர் இடம்பெற்றது.

வாஷிங்டனில் திருமணத்துக்குப் பிறகு ‘விசிறி வாழை’ எழுதினார். இரு முதியவர்களுக்கு இடையே ஏற்படுகிற காதல் பற்றிய உருக்க மான கதை அது. அப்படியொரு ‘தீம்’மை முன்மொழிந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன், ‘ஜெயகாந்தனைக் கொண்டு அதை எழுதச் செய்யலாம்’ என்றுதான் நினைத்திருந்தார். ஆனால், சாவி யிடம் அதை எழுதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவரது ‘நவகாளி யாத்திரை’, ‘இங்கே போயிருக்கிறீர்களா..? ’ இரண்டும் வெவ்வேறு வகையான பயண அனுபவங்கள்.

இப்படிப் பலவிதமாக எழுத அடிப்படையாக அமைந்தது அவரது இலக்கிய வாசிப்பு. ஹனுமான், ஹிந்துஸ்தான், சந்திரோதயம், சக்தி போன்ற இலக்கிய ஏடுகளில் பணியாற்றிவிட்டுத்தான் ஆனந்த விகடனுக்கும் கல்கி இதழுக்கும் வந்தார். இலக்கிய வாசிப்பு என்பது அடி உரம். ஆனால் உரத்தின் நெடி வெகுஜன எழுத்து என்ற கனியில் தெரியக்கூடாது என்பதில் உறுதியாகஇருந்தார்.

அடித்தளத்தில் இருந்து தடை களைத் துளைத்துக் கொண்டு எழுந் தவர் சாவி. அவரிடம் இருந்து அறிந்து கொள்ள, இளைஞர்கள் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது.

வரலாற்றை வாசிக்காதவர்கள் வாழ்வில் வளர்ச்சி கண்டதே இல்லை!

சாவி

 

 
 
saavi_2966235h.jpg
 

சாவி - பிரபல எழுத்தாளர், இதழியலாளர்

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர், சிறந்த இதழியலாளரான ‘சாவி’ (சா.விஸ்வநாதன் - Sa.Viswanathan) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மாம்பாக்கத்தில் (1916) பிறந்தார். 4-ம் வகுப்பு வரைதான் படித்தார். சிறிது காலம் விளம்பரப் பலகை எழுதிவந்தார். எழுத்தாளராக வேண்டும் என்பது இவரது கனவு. அதை நிஜமாக்கிக்கொள்ள, கடுமையாக உழைத்தார்.

* தன் ஊரில் இருந்துகொண்டே ‘விடாக்கண்டர்’ என்ற பெயரில் எழுதிவந்தார். பின்னர் ‘கல்கி’ ஆசிரியர் சதாசிவம் இவரை அழைத்து, உதவி ஆசிரியராக நியமித்தார். காந்திஜியின் நவகாளி யாத்திரைக்கு நேரில் சென்று கண்டு, அதுகுறித்து எழுதினார். தந்தை சாமா சுப்ரமணியன் மற்றும் தனது பெயரின் முதல் எழுத்துகளை இணைத்து ‘சாவி’ என்று புனைப்பெயர் சூட்டிக்கொண்டார்.

* தொடர்ந்து கல்கியில் இவர் எழுதிய ‘மாறுவேஷத்தில் மந்திரி’, ‘சூயஸ் கால்வாயின் கதை’ உள்ளிட்ட நகைச்சுவைக் கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னர் ‘ஆனந்த விகடன்’ இதழ் ஆசிரியராகி, ‘வாஷிங்டனில் திருமணம்’ என்ற நகைச்சுவைத் தொடரை எழுதினார். இது இவருக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்தது.

* இவரது பல படைப்புகள் பிரபலமாயின. ‘வெள்ளிமணி’, ‘சாவி’, ‘பூவாளி, ‘திசைகள்’, ‘மோனா’ ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தினார். பெரியார், காமராஜர், ராஜாஜி, கல்கி உள்ளிட்டோருடன் நெருங்கிப் பழகினார். கட்சி வேறுபாடின்றி அனைவரின் அன்பை யும் ஆதரவையும் பெற்றிருந்த பத்திரிகையாளராகத் திகழ்ந்தார்.

* கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணிக் கதிர் ஆகிய இதழ்களில் பணியாற்றியவர். பின்னர் ‘சாவி’ என்ற பெயரில் வார இதழைத் தொடங்கிப் பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

* இளம் வயதில் போதுமான வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்தவர் என்பதால், எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களிடம் அவருக்கு இயல்பான பரிவு இருந்தது. சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், மாலன், பாலகுமாரன் என பல எழுத்தாளர்களை ஊக்குவித்து வளர்த்தவர்.

* புதுமை விரும்பி என்பதால் தன் பத்திரிகைகளில் ஏதாவது புதுமையாகப் புகுத்திக்கொண்டே இருப்பார். நல்ல ஆலோசனை களை யார் கூறினாலும், அதை உடனடியாக அமல்படுத்திவிடுவார். அவர்களை மனதாரப் பாராட்டுவார்.

* சில நண்பர்களுடன் சேர்ந்து ‘ஞானபாரதி’ என்ற அமைப்பைத் தொடங்கி, கலைத்துறையிலும் பத்திரிகைத் துறையிலும் முத்திரை பதிப்பவர்களுக்கு ‘ஞானபாரதி’ விருதும் பொற்கிழியும் அளித்து கவுரவித்து வந்தார்.

* இவரது படைப்புகளில் நகைச்சுவையுடன் கருத்துச் செறிவும் இணைந்தே காணப்படும். நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவர். பழக இனியவர். பத்திரிகை தர்மம், தனது கொள்கைகளை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதவர். கல்கியைத் தன் குருவாக மதித்துப் போற்றியவர். காஞ்சிப் பெரியவரிடம் பக்தி கொண்டவர். ‘சாவி-85’ என்ற இவரது வாழ்க்கை வரலாற்று நூலை ராணி மைந்தன் எழுதியுள்ளார்.

* 60 ஆண்டுகளுக்கு மேல் எழுதி வந்தார். இவரது எழுத்துக்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. தனது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சாதித்துக்காட்ட வேண்டும் என்ற ஆர்வம், எழுத்தாற்றலால் சிறந்த எழுத்தாளராக உயர்ந்து, தமிழ் இதழியலில் தனிமுத்திரை பதித்த ‘சாவி’ 85-வது வயதில் (2001) மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்
நீருக்கடியில் 'மஹாஜோங்' விளையாட்டு
 

தென் கிழக்கு ஆசியாவில் பிரசித்தி பெற்ற பெற்ற “மஹாஜோங்” விளை யாட்டை சீனாவின் சோங்கிங் நகரிலுள்ள நீச்சல் தடாகம் ஒன்றில் சுழியோடிகள் விளையாடுவதை படங்களில் காணலாம்.

 

18493ugi-game-2.jpg

 

18493_yugi-game.jpg

 

சுழியோடல்  கழகம் ஒன்றினால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

 

18493ugi-game-1.jpg

 

முறையான சுழியோடல் பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழ் கொண்டுள்ளவர்கள் மாத்திரமே இந் நிகழ்வில் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நீங்கள் சரியான வேலையில் தான் இருக்கிறீர்களா? இந்த மூன்று கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்! #DailyMotivation


job.jpg

னைவருமே ஏதோ ஒரு வேலையில் தங்களை நிலைநிறுத்தி, தன்னை பொருளாதார ரீதியாக ஃபிட்டாக வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அதேசமயம் நாம் செய்யும் வேலை நமக்கு ஒரு திருப்தியைத் தர வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். 

நீங்கள் சரியான வேலையில் தான் உங்களை இணைத்துக் கொண்டிருக்கிறீர்களா? என்பதை இந்த மூன்று கேள்விகள் உங்களுக்கு விளக்கும்.

நீங்கள் சவாலுக்கு தயாரா?

உங்களுக்குத் தரப்பட்டுள்ள வேலையில் 60-75 % முழுமையான ஈடுபாடுடன் இருக்கிறீர்கள் என்று வைத்து கொண்டால், உங்கள் வேலையில் இன்னும் சவாலை அதிகரிக்க நீங்கள் தயாரா என்பது தான் கேள்வி, அதுமட்டுமின்றி இந்தச் சவாலை உங்களை சிரமப்படுத்தி கொள்ளாமல் எப்படி எதிர் கொண்டு இலக்கை அதிகரிக்கிறீர்கள் என்பது தான் சவால். இந்த வேலையில் உங்களால் இதனைச் செய்ய முடியும் என்றால் சரி, இல்லை என்றால் வேறு வேலை உங்களைத் தேடுகிறது என்று அர்த்தம்.

நீங்கள் முழுமையாக உணர்கிறீர்களா?

உங்கள் வேலை உங்களை உற்சாகப்படுத்துகிறதா? நீங்களாகவே உங்கள் வேலையால் புத்துணர்ச்சியடைகிறீர்களா? இதற்கெல்லாம் இல்லை என்ற பதில் இருந்தால், ஆம் என்ற பதில் தரும் வேலையைத் தேடலாம். ஆம் என்றால் உங்களை வெற்றி மட்டுமே நெருங்கும் என்ற கூடுதல் மகிழ்ச்சியுடன் வேலையைத் தொடருங்கள்.

job1.jpg

உங்கள் சூழல் எப்படி இருக்கிறது?

நீங்கள் செய்யும் வேலைக்கு உங்களது சூழல் சரியான ஒத்துழைப்பை தருகிறதா? நீங்கள் செய்யும் வேலைகள் அங்கீகரிக்கப்பட்டு, நீங்கள் பட்டியலில் முந்துகிறீர்களா? நீங்கள் செய்யும் வேலைகளால் உங்கள் பணி பாதுகாப்பு உறுதியாக இருக்கிறது என்று நம்பினால் நீங்கள் கில்லி பாஸ்.

இந்த மூன்று கேள்விகளின் பதிலுக்கும் உங்கள் பதில் ஆம் என்றால் உங்கள் வேலையில் நீங்கள் செம கெத்தாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லை என்றால் உங்கள் வேலை இதுவல்ல, உங்களை ஆம் என்று கூற வைக்கும் வேலை உங்களுக்காக வெயிட்டிங் பாஸ்.

vikatan

  • தொடங்கியவர்

தமிழ் கலாசாரத்தில் தமிழரை மிஞ்சிய ஹெய்டன் (வீடியோ இணைப்பு)

 

 

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர்  மெத்தியு ஹெய்டன் மதுரையை வேட்டிச் சட்டையுடன் கலக்கி வருகிறார்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரை விளம்பரப்படுத்துவதற்காக மதுரைக்கு வந்துள்ள ஹெய்டன் தமிழ் மக்களின் கலாசாரத்திற்கு முழுமையாக மாறியுள்ளார்.

 மதுரை மீனாட்சி அம்மன்  கோவிலுக்கு சென்ற ஹெய்டன் வேட்டிச் சட்டையுடன் அம்மனை தரிசித்துள்ளதோடு, அல்வா சமைத்து சாப்பிட்டுள்ளார்.

13924851_641553802672104_374786003585295

அதுமாத்திரமின்றி அவரை வரவேற்ற நிகழ்வொன்றில், தமிழ் கலாச்சாரத்திற்குறிய ஆட்டத்தில் தமிழரையும் மிஞ்சி அசத்தியுள்ளார் ஹெய்டன்.

13882121_1743557639226372_58960655258640

இந்நிலையில் தனது வேட்டிச் சட்டையுடன் டுவிட்டர் தளத்தில் வீடியோ பதிவொன்றை இட்டு, அதில் அடிக்கும் வெயிலில் வேட்டிச்சட்டையுடன் கூலாக இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

 

 

13912893_641554119338739_722706287174771

13907057_641553969338754_186984785698616

13901529_641554029338748_734670476975869

13901438_641554189338732_102911848317459

13925211_1321559214551056_83670615792099

13886912_1321559207884390_10251833436576

13892020_1322236584483319_8109763816212413879285_1322236787816632_6276924568390513906682_1743557565893046_2808860313528713887131_1743557582559711_7471724869394513934721_1743557602559709_2700362085710313882121_1743557639226372_5896065525864013895293_1743552655893537_2855163857631013925319_1743552719226864_6614889939786113882672_1743552725893530_2624965008035613901426_1743552805893522_52512735339451HAYDEN_2965294b.jpgCpaItr1WEAERv3g.jpg

 

http://www.virakesari.lk/article/10029

  • தொடங்கியவர்

ஜடேஜாவின் செல்பிக்கு வந்த சோதனை (படங்கள் இணைப்பு)

 

குஜராத் மாநிலத்தில் உள்ள கிர்  சரணாலயத்தில் சிங்கங்களுடன் செல்பி எடுத்த விவகாரம் தொடர்பில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

_90009172_cricketerlion.jpg

குறித்த அபராதத்தை ஜடேஜாவின் சார்பாக ஜடேஜாவின் மாமனாரான ஹர்தேவ் சிங் சோலங்கி, ஜுனாகத் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் செலத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜடேஜா மே. இந்நிய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருவதால் குறித்த அபராதத்தை  ஹர்தேவ் சிங் சோலங்கி செலுத்தியுள்ளார்.

_90009170_cricketerlionselfie2.jpg

கடந்த ஜூன் 14 ஆம் திகதி தனது மனைவியுடன் கிர் சரணாலயத்துக்கு  சுற்றுலா சென்ற ரவீந்திர ஜடேஜா, பாதுகாப்பு வாகனத்தில் இருந்து வெளியேறி சிங்கங்களுடன்  செல்பி எடுத்துக்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

_90009851_clfcuzqukae0viq.jpg

virakesari.lk

  • தொடங்கியவர்

இது இத்தாலி போலீஸ்!

த்தாலியில் தனிமையில் வாடிய முதிய தம்பதியருக்கு போலீசார் சமையல் செய்து உணவு பரிமாறிய புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகின்றன.

poilicee.jpg

ரோம் நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில்,  94 வயதான மைக்கேல் தனது 89 வயது மனைவி ஜோலேவுடன் வசித்து வருகிறார். கடந்த 70 வருடங்களாக இந்த தம்பதியினர் இணை பிரியாமல் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு  ஆதரவாக தற்போது  யாரும் இல்லை. இரு நாட்களுக்கு முன், இவர்கள் வசிக்கும் வீட்டிலிருந்து அழுகை சத்தம் தொடர்ந்து கேட்டுள்ளது. 

அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். போலீசார் வீட்டின் அழைப்பு மணியை அடித்தும் பயனில்லை. கதவு திறக்கப்படவில்லை. வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்து முதியவர்களை அச்சுறுத்துகிறார்களோ என எண்ணிய போலீசார் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

வீட்டினுள் தம்பதிகள் அழுத கண்களோடு இருந்தனர்.  தனிமையில்  வாடிய அந்த தம்பதி, போலீசாரை பார்த்து வேதனை தாங்காமல் மேலும் கதறியுள்ளனர். முதியவர்களைத் தேற்றிய போலீசார் ஆறுதல் வார்த்தைகள் கூறினார். வீட்டிலும் சமைக்க எந்த உணவுப் பொருளும் இல்லாததையும் கண்டு போலீசார் அதிர்ச்சியுற்றனர். அதைத்தொடர்ந்து இத்தாலியின் பிரபலமான 'பாஸ்தா 'உணவை போலீசாரே சமைத்து முதிய தம்பதிக்குப் பரிமாறினர்.

முதிய தம்பதி  உணவருந்தும் புகைப்படங்களை  இத்தாலி போலீசார் , ஃபேஸ்புக்கில் பதிவேற்றினர். நெகிழ வைத்த இந்த பதிவு, பல லட்சம் லைக்குகளையும் ஆயிரக்கணக்கான ஷேர்களையும் பெற்றுள்ளது. 

vikatan

  • தொடங்கியவர்

11231262_10153964107529578_7321868154623

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
 
தந்தையின் இதயத்துடிப்பு

பத்தாண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட தன் தந்தையின் இதய துடிப்பை தன் மணநாளில் கேட்டு மகழிந்த மகள்

Posted by BBC Tamil on Mittwoch, 10. August 2016
தந்தையின் இதயத்துடிப்பு
பத்தாண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட தன் தந்தையின் இதய துடிப்பை தன் மணநாளில் கேட்டு மகிழ்ந்த மகள்
 
 
தந்தையின் இதயத்துடிப்பு

பத்தாண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட தன் தந்தையின் இதய துடிப்பை தன் மணநாளில் கேட்டு மகழிந்த மகள்

Posted by BBC Tamil on Mittwoch, 10. August 2016

 

-PAXP-deijE.gif-PAXP-deijE.gif

  • தொடங்கியவர்

பிரிட்டனில் கடலில் மூழ்கிக்கிடக்கும் மலைகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நவீனன் said:

பிரிட்டனில் கடலில் மூழ்கிக்கிடக்கும் மலைகள்

கடலுக்கடியிலை இருக்கிறதை எதிர்காலத்திலை பாதுகாக்கோணும் எண்டு யோசிக்கிறதை விட்டுட்டு தரையிலை இருக்கிற மனித ஜீவராசிகளுக்கு ஒரு நேர சாப்பாடு தண்ணி குடுத்து பாதுகாக்க வழியை பாருங்கோ :(

  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு - 18:போட்டிப் பாட்டு!

 

 
song_2966250f.jpg
 

கல்வி, பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடு ஜெர்மனி. கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என்று இரண்டாகப் பிரிந்து கிடந்த இந்த நாடு, 1990-ல் மீண்டும் ஒரே நாடானது.

ஒற்றுமை, நீதி, சுதந்திரத்தைத் தீவிரமாக வலியுறுத்தும் வகையில் அந்த நாட்டின் தேசிய கீதமும் அமைந்திருக்கிறது. 1797-ம் ஆண்டில் ரோமானியப் பேரரசர் இரண்டாம் பிரான்சிஸ் பிறந்த நாளன்று, ஆஸ்திரிய இசையமைப்பாளர் ஜோசஃப் ஹைடன் இப்பாடலை உருவாக்கினார். பிரிட்டனின் மிகப் பிரபலமான, ‘இறைவன், மன்னனைக் காக்கவும்' என்ற பாடலுக்குப் போட்டியாக இது இசைக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

song1_2966252a.jpg - ஆகஸ்ட் ஹீன்ரிச் ஹாட்மேன்

மாறி... மாறி...!

1806-ல் ரோமன் பேரரசு கலைக்கப்பட்ட பிறகு இது ஆஸ்திரியப் பேரரசின் கீதமானது. பின்னர் 1918-ம் ஆண்டு வரை, ஆஸ்திரிய - ஹங்கேரிப் பேரரசின் கீதமாகவும் இருந்தது. ஒவ்வொரு முறையும் பேரரசு மாறும்போது, பாடலின் முதல் வரி மாறிவிடும்.

தடை

11 ஆகஸ்ட் 1922 அன்று ஜெர்மனி அதிபர் ஃப்ரீட்ரிக் ஈபர்ட் இந்தப் பாடலை ஜெர்மனியின் தேசிய கீதமாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். 1936-ம் ஆண்டு பெர்லின் கோடைக்கால ஒலிம்பிக்கின்போது, ஹிட்லர் விளையாட்டு மைதானத்துக்குள் நுழைந்தபோது, ஆயிரக் கணக்கானோர் இப்பாடலைப் பாடினார்களாம். 2-ம் உலகப் போருக்குப் பிறகு 1945-ல் இப்பாடல் தடை செய்யப்பட்டது. 1949-ல் மேற்கு ஜெர்மனி தோன்றியபோது தேசிய கீதம் எதுவுமில்லை. 1952-ல் இது தேசிய கீதமாகத் தேர்வானது. கிழக்கு ஜெர்மனி வேறு பாடல் வைத்துக்கொண்டது.

புரட்சி

அந்தக் காலத்தில் மிகவும் புரட்சிகரமான ஒன்றாகக் கருதப்பட்டது இப்பாடல். இதை 1841-ல் ஜெர்மானிய கவிஞர் ஆகஸ்ட் ஹீன்ரிச் ஹாட்மேன் வோன் ஃபாலர்செபன் எழுதினார்.

இப்பாடலை எழுதியதற்காக அவர் பார்த்து வந்த வேலை பறிபோனது. மூன்று பத்திகள் கொண்ட இப்பாடலின் இரண்டாவது பத்தி ஜெர்மனியின் பெண்கள், மது பற்றி சிறப்பித்துக் கூறுகிறது. எனவே இந்தப் பத்திக்கு நீதிமன்றம் 1990-ல் தடை விதித்தது. இப்போது அந்த வரிகள் பாடப்படுவதில்லை. மூன்றாவது பத்தி மட்டுமே பாடப்படுகிறது.

இப்பாடல் இப்படி ஒலிக்கும்:

ஐன்கிட் உண்ட் ரெச்ட் உண்ட் ஃப்ரீஹிட்

ஃபர் தஸ் டாய்ஸ்ச வாடர்லேண்ட்

டானச் லாஸ்ட் உன்ஸ் அல்லே ஸ்ட்ரபன்

ப்ரூடர் லிஸ்ச்மித் ஹெர்ஸ் உண்ட் ஹாண்ட்

ஈனிகிட் உண்ட் ரெச்ட் உண்ட் ஃப்ரீஹிட்

சிந்த் தஸ் க்லகஸ் உண்டர்ப்ஃபெண்ட்

ப்ளூஹிம் க்ளான்ஸ் டீஸஸ் க்ளூகஸ்

ப்லூஹே டாய்ஸ்சஸ் வாடர்லண்ட்.

பாடலின் தமிழாக்கம்

ஒற்றுமை, நீதி மற்றும் சுதந்திரம்

தந்தையர் நாடு ஜெர்மனிக்கு.

இந்த நோக்கத்துகாக நாம் அனைவரும் பாடுபடுவோம்.

இதயத்தில் இருகரத்தில் சகோதர பாசம்

ஒற்றுமை நீதி மறு சுதந்திரம்

மகிழ்ச்சியின் உறுதிமொழிகள்.

இந்த மகிழ்ச்சியில் தழைக்கட்டும்.

தந்தையர் நாடு ஜெர்மனி தழைக்கட்டும்.

(தேசிய கீதம் ஒலிக்கும்)

song2_2966251a.jpg

 

tamil.thehindu

  • தொடங்கியவர்

இரு பலசாலிகளின் தினங்கள்!

 

lion_2966214f.jpg
 

காட்டு விலங்குகளிலேயே சிங்கமும், யானையும் மிகவும் பலசாலிகள். ஆனால், இவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இவற்றைப் பாதுகாக்கவும், அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி உலக சிங்கம் தினம் கொண்டாடப்படுகிறது. இதேபோல ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விலங்குகளின் சில சுவாரசிய தகவல்களைப் பார்ப்போமா?

சிங்கம்

# சிங்கம் பகலில் பெரும்பாலும் தூங்கும். வெப்பநிலை குறைவாக இருக்கும் என்பதால் இரவில் வேட்டையாடவே விரும்பும். அதற்கேற்ப சிங்கத்தின் பார்வைத் திறன் கூர்மையாக இருக்கும்.

# காட்டின் ராஜா சிங்கம் என்று கதைகளில் கேட்டிருப்போம். உண்மையில் அடர்ந்த காடுகளைவிட புல்வெளி மற்றும் சமவெளி பகுதிகளிலேயே சிங்கம் வாழும்.

# பூனைகள் இனத்தைச் சேர்ந்தது சிங்கம். அந்த இனத்தின் 2-வது மிகப்பெரிய விலங்கு சிங்கம். (முதலிடத்தில் இருப்பது புலி)

# ஆப்பிரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய கண்டங்களில் முன்பு சிங்கங்கள் அதிகமாக இருந்தன. ஆனால், தற்போது ஆப்பிரிக்காவில் மட்டுமே குறிப்பிடுமளவுக்கு உள்ளன.

# குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் சிங்கங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

# சிங்கத்தின் தனிச்சிறப்பே அதன் கர்ஜனை. சில சமயம் பல மைல்கள் தாண்டியும் சிங்கத்தின் கர்ஜனை சத்தம் கேட்கும்.

# சிங்கம் சிங்கிளாக வரும் என்று சொல்வதெல்லாம் தவறு. அது கூட்டத்துடனே வரும்.

# ஆணைவிட பெண் சிங்கங்களே அதிகம் இரை தேடிச் செல்லும்.

# பெல்ஜியம், பல்கேரியா, இங்கிலாந்து, எத்தியோப்பியா, லக்ஸம்பர்க், நெதர்லாந்து மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் தேசிய விலங்கு சிங்கம்.

யானை

# நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு யானை. டைனோசர் காலத்திலிருந்தே வாழும் பழமையான விலங்கு.

# யானைக்கு பார்வைத்திறன் சுமார்தான். ஆனால், நுகரும் திறனும் கேட்கும் திறனும் அதிகம்.

# யானையின் மேல் உதடு, நீளமான மூக்கும் சேர்ந்ததே அதன் தும்பிக்கை. சுமார் 50 ஆயிரம் தசைகள் இணைந்தது தும்பிக்கை. தும்பிக்கையால் நீரைப் பீச்சியடிக்கவும், பாரம் தூக்கவும் முடியும்.

# யானைக்குத் தொடு திறனும் அதிகம். அதன் தோல் உணர்வுமிக்கதாக இருக்கும். யானையால் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது. அதனால்தான் மண்ணை வாரி உடல் மீது வீசி சமாளித்துக்கொள்கிறது.

# யானையால் குதிக்க முடியாது; ஆனால், குண்டு உடலை வைத்துக்கொண்டு அழகாக நீந்தும். நீந்தும்போது நீருக்கு மேலே தும்பிக்கையை நீட்டிக்கொண்டு சுவாசிக்கும்.

ele_2966215a.jpg

# உலகின் வாழும் யானைகளில் பெரும்பாலானவை ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் காடுகளிலேயே வாழ்கின்றன.

# ஒரு வளர்ந்த யானை ஒரு நாளில் 210 லிட்டர் தண்ணீர் குடிக்கும். சுமார் 225 கிலோ உணவைச் சாப்பிடும். இதற்காக நீரையும், உணவையும் தேடி காட்டுக்குள் கூட்டம் கூட்டமாகப் போகும். இந்த வகையில்தான் காடுகளில் இயற்கையான பாதைகள் யானைகளால் அமைகின்றன.

tamil.thehindu

  • தொடங்கியவர்

 

எதனால் உங்கள் உயிருக்கே ஆபத்து இருக்கிறது?

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 11
 
 

article_1439271129-A9.JPG1786: கப்டன் பிரான்சிஸ் லைட், மலேஷியாவில் முதலாவது பிரித்தானிய கொலனியை ஆரம்பித்தார்.

1804: ஆஸ்திரியாவில் இரண்டாம் பிரான்சிஸ் மன்னரானார்.

1952: ஜோர்டான் மன்னராக பின் தலால் பதவியேற்றார்.

1960: சாட் நாடு சுதந்திரம் பெற்றது.

1965: கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

1968: பிரித்தானியாவின் நீராவி ரயில், தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது.

1972: வியட்நாம் போர் - கடைசி அமெரிக்க தாக்குதல் படையினர் தென் வியட்நாமைவிட்டுப் புறப்பட்டனர்.

1975: போர்த்துக்கீசத் தீமோரில் உள்நாட்டுக் கலவரம் ஆரம்பித்ததில் அதன் ஆளுநர் "மாரியோ லெமொஸ் பிரெஸ்" தலைநகர் டிலியைவிட்டுத் தப்பினார்.

1984: வானொலி ஒன்றுக்காக தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றேகன் கூறியது: "எனது சக அமெரிக்கர்களே, ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்".

1999: ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.

2003: ஆப்கானிஸ்தானில் நடவடிக்கையில் ஈடுபடும் படைகளின் தலைமைப் பொறுப்பை நேட்டோ ஏற்றது.

2003: ஜெமா இஸ்லாமியா இயக்கத் தலைவர் ரிதுவான் இசாமுதீன் (ஹம்பாலி) பாங்கொக் நகரில் கைது செய்யப்பட்டார்.

2006: யாழ். குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ-9 நெடுஞ்சாலை, காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர்.

.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கிறிஸ்டியன் ஐக்மான்

 

 
christiaan-eijkman_2967540f.jpg
 

கிறிஸ்டியன் ஐக்மான் - நோபல் பரிசு பெற்ற நெதர்லாந்து மருத்துவர்

 

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவரும் பேராசிரியரும், மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான கிறிஸ்டியன் ஐக்மான் (Christiaan Eijkman) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* நெதர்லாந்தில் நிஜ்கெர்க் என்ற இடத்தில் பிறந்தார் (1858). ஜாந்தாம் நகரில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளி யில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் 1875-ல் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.

* மருத்துவ அதிகாரியாக பயிற்சி பெற்ற இவர் அனைத்துத் தேர்வு களிலும் தேர்ச்சி பெற்றார். 1879-ல் உடலியல் பேராசிரியர் டி.பிளேசிடம் உதவியாளராகச் சேர்ந்தார். ‘ஆன் போலரைசேஷன் ஆஃப் தி நெர்வ்ஸ்’ என்ற நரம்புகளின் முனைவாக்கம் குறித்த ஆய்வுக் கட்டுரை எழுதி 1883-ல் முனைவர் பட்டம் பெற்றார்.

* ஜாவா, சுமத்ரா தீவுகளில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றினார். மலேரியா காய்ச்சல் கண்டதால் ஐரோப்பா திரும்பினார். உடல்நலம் தேறிய பிறகு ஆம்ஸ்டர்டாமில் புகழ்பெற்ற இ-ஃபோர்ஸ்டெர்ஸ் ஆய்வுக்கூடம் மற்றும் பெர்லினில் உள்ள ராபர்ட் கோச்சின் நுண்ணுயிரியியல் ஆய்வுக்கூடங்களில் பணிபுரியும் வாய்ப்பு பெற்றார்.

* அந்த சந்தர்ப்பத்தில் பெரும் பீதியைக் கிளப்பி வந்த ‘பெரிபெரி’ நோய் குறித்து ஆய்வு செய்யவிருந்த அணியில் இவரும் சேர்க்கப் பட்டார். டச்சு கிழக்கிந்திய தீவான படாவியாவில் (இன்றைய ஜகார்த்தா) இருந்த ராணுவ மருத்துவமனையின் முதல் இயக்குநராகவும் பின்னாளில் ஜாவானீஸ் மெடிக்கல் ஸ்கூல் கல்லூரியின் இயக்குநராகவும் பதவியேற்றார்.

* மருத்துவ ஆய்வகத்தின் இயக்குநராக இருந்த சமயத்தில் வெப்ப மண்டலப் பிரதேசங்களில் வாழும் மக்களின் உடலியல் குறித்து முதலில் ஆராய்ந்தார். ‘பெரிபெரி’ நோய் குறித்து ஆராய்ந்தபோது பாலீஷ் செய்யப்பட்ட அரிசியில் போதுமான ஊட்டம் இல்லை என்பதைக் கண்டறிந்தார்.

* ஒரு வகையான ஊட்டச்சத்து குறைபாடால்தான் இந்த நோய் வருகிறது என்றார். இந்தக் குறையும் ஊட்டச் சேர்மம்தான் விட்டமின் பி1, தயாமின் என்றும் கண்டறியப்பட்டது. தன் கண்டுபிடிப்பை ‘ஆன்டி-பெரிபெரி-ஃபாக்டர்’ என்று குறிப்பிட்டார்.

* ‘பெரிபெரி’ நோய் இதுவரைக் கண்டறியப்படாத ஒரு பாக்டீரியாவால் உருவாகிறது என்றும் கூறினார். இவரது ஆன்டிநியுட்ரிக் வைட்ட மின்கள் கண்டுபிடிப்புக்காக 1929-ம் ஆண்டு சர் ஃபிரெட்ரிக் ஹாப்கின்சுடன் இணைந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றார்.

* 1898-ல் யுட்ரெக்ட் கல்லூரியில் சுகாதாரம் மற்றும் தடயவியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். புகழ்பெற்ற நொதித்தல் சோதனைகளை மேற்கொண்டார். ஆசிரியர், ஆராய்ச்சியாளர் மட்டுமல்லாமல் சுகாதார கவுன்சில், சுகாதார ஆணையம் ஆகியவற்றின் உறுப்பினர் என்ற முறையில் தண்ணீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முனைப்புகளில் ஈடுபட்டார்.

* குடிப்பழக்கம் மற்றும் காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற் றார். 1907-ல் ராயல் நெதர்லாண்ட்ஸ் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அன்ட் சயின்சஸ் அமைப்பின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

* அறிவியல் ஆராய்ச்சியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன்கொண்ட கிறிஸ்டியன் ஐக்மான் 1930-ம் ஆண்டு 72-வது வயதில் மறைந்தார். இவரது மறைவுக்குப் பின் ஐக்மான் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. பல அறிவியல் கல்வி அமைப்புகளுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டன.

tamil.thehindu.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.