Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒரு மாதிரி கலைச்சுப்பிடிச்சு 129 வது ஆரம்பம் மட்டும் வாசிச்சு முடிச்சாச்சு.(இதை எழுதும் போது 129 ம் பக்கம் நிரம்பி விட்டது.)நவீனன் எனது தாழ்மையான கருத்து சில விடையங்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட தடவை பதியப்பட்டுள்ளது.உதாரனம் ஒரு நிமிடக் கதைகள் தோற்றவர்களின் கதைகள் போன்றனவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்தவும்.மற்றது உலகக்கோப்பை கிறிக்கற் தேதிளிலும் சில இடங்களில் குழப்பம் உள்ளது இனி வரும் காலங்களில் கவனிக்கவும்.ஏதோ உரிமையில் சொல்லிவிட்டேன்.தவறு என்றால் மன்னிக்கவும்.நன்றி.:)

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
16 minutes ago, சுவைப்பிரியன் said:

அப்பாடா ஒரு மாதிரி கலைச்சுப்பிடிச்சு 129 வது ஆரம்பம் மட்டும் வாசிச்சு முடிச்சாச்சு.(இதை எழுதும் போது 129 ம் பக்கம் நிரம்பி விட்டது.)நவீனன் எனது தாழ்மையான கருத்து சில விடையங்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட தடவை பதியப்பட்டுள்ளது.உதாரனம் ஒரு நிமிடக் கதைகள் தோற்றவர்களின் கதைகள் போன்றனவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்தவும்.மற்றது உலகக்கோப்பை கிறிக்கற் தேதிளிலும் சில இடங்களில் குழப்பம் உள்ளது இனி வரும் காலங்களில் கவனிக்கவும்.ஏதோ உரிமையில் சொல்லிவிட்டேன்.தவறு என்றால் மன்னிக்கவும்.நன்றி.:)

நீங்கள் தவறு என்று நினைப்பதை சுட்டி காட்டுவதில் எந்த பிரச்சினையும் இல்லை.  இதுக்கு எல்லாம் ஏன் மன்னிப்பு என்ற வார்த்தைகள்..

நீங்கள் ஒரு நிமிட கதைகள் என்று குறிப்பிடுவது 10 செக்கன் கதைகளை என்று நம்புகிறேன்.. இருக்கலாம் அதில் சில தவறுகள் நடந்து இருக்கலாம்.

தோற்றவர்களின் கதைகள் அண்மையில்தான் பதிய தொடங்கினேன்... வாரத்தில் இரண்டுதரம். அது ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பதியபட சந்தர்ப்பம் இல்லை.

உலககோப்பை கிரிக்கெட் செய்திகள் தொடர்பாக நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் என விளங்கவில்லை.. அத்தோடு இந்த திரி தொடங்கி இன்னும் 2 மாதத்தில் ஒரு வருடம் ஆக போகிறது. எல்லாம் என் நினைவில் இருக்கும் என்றும் சொல்ல முடியாது.

நிச்சயம் உங்கள் கருத்தை கவனத்தில் எடுக்கிறேன்.. தொடந்து இணைந்து இருங்கள்.. உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்..நன்றி.:)

  • தொடங்கியவர்
 

தோற்றவர்களின் கதை - 21

 
 

சுசி திருஞானம்தொடர்

 

p32a.jpg

வ.உ.சிதம்பரனார்

வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்டக்களத்தில் மகத்தான பங்களிப்பைச் செய்த மாவீரர். பிரிட்டிஷ் கப்பல்களுக்குப் போட்டியாக இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, வெள்ளையர்களை நடுநடுங்கச் செய்தவர். “இந்திய மக்கள் எல்லோரும் நம்மைப் பார்த்து பயந்து கும்பிடும் நிலையில், நமது வியாபாரத்தையே  முடக்கும் அளவுக்குப்   போட்டி கப்பல் கம்பெனி தொடங்கியுள்ள சிதம்பரம்பிள்ளைதான், இந்திய சுதந்திரப் போராட்டக்காரர்களிலேயே மிகவும் ஆபத்தானவர்” என்று பிரிட்டிஷ் ராணிக்கு ஆங்கிலேய அதிகாரிகள் குறிப்பு எழுதினர் என்றால், வ.உ.சி-யின் அறிவும் துணிவும் புரியும்.

பிரிட்டிஷ் அரசால் தேசத்துரோகியாகக் குற்றம்சாட்டப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார். அவருக்கு விலங்குபூட்டி செக்கிழுக்கவைத்து கொடுமைப்படுத்தினர். விடுதலைக்குப் பின்னர், வ.உ.சி-யைத் தலையில் வைத்துக் கொண்டாடியிருக்க வேண்டிய அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் பலர், புறக்கணிப்பையும் அவமரியாதையையும்தான் அவருக்குப் பரிசாகத் தந்தனர்.  

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1872-ல் வ.உ.சி பிறந்தார். தந்தை உலகநாதன் பிள்ளை, அவரது காலத்தில் மிகவும் பிரபலமான வழக்கறிஞர். ஒட்டப்பிடாரத்திலும், அருகிலுள்ள திருநெல்வேலியிலும் பள்ளிப்படிப்பை முடித்த வ.உ.சி சட்டப் படிப்பை நிறைவு செய்து வழக்கறிஞரானார். ஏழை மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் வழக்குகளில் ஆஜரானதால், ‘மக்கள் வழக்கறிஞர்’ என்ற பெயரைப் பெற்றார்.

சுதேசி இயக்கத்தில் லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் போன்ற தலைவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான விடுதலை வேட்கையை விதைத்தனர். அதில் ஈர்க்கப்பட்ட வ.உ.சி, 1905-ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். பாரதியாரை சென்னையில் சந்தித்து உரையாடினார். கடல் வழியாக வந்து நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரை விரட்ட, நம்மவர்களுக்குக் கடல் ஆதிக்கம் வேண்டும் என்று வ.உ.சி நம்பினார். இதற்காகவே 1906-ல், சுதேசி கப்பல் கம்பெனியை நிறுவினார். வ.உ.சி-யின் திட்டத்துக்காக நிதி தந்து உதவுமாறு ‘இந்தியா’ பத்திரிகையில் தலையங்கம் எழுதினார் பாரதி. வெறும் 200 ருபாய் மட்டுமே நிதி கிடைத்தது. சேலத்தில் விஜயராகவாச்சாரியார் நிதி திரட்டினார். தான் சேமித்து வைத்திருந்த 1,000 ரூபாயைக் கொடுத்து உதவினார் ராஜாஜி. பல இடையூறுகளுக்குப் பின்னர், ‘எஸ்.எஸ். காலியா’, ‘எஸ்.எஸ். லாவோ’ எனும் இரண்டு கப்பல்கள் மூலம் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு பயணிகள் போக்குவரத்து சேவைகளைத் தொடங்கப்பட்டன. “எனது சுதேசிக் கப்பல் கம்பெனி, வெறும் வியாபாரக் கம்பெனி அல்ல; நம் தாய்த்திரு நாட்டை விட்டு வெள்ளையர்களை மூட்டை முடிச்சுகளுடன் வெளியேற்றுவதுதான் இந்தக்கப்பல்கள் இயக்கப்படுவதன் நோக்கம்” என்று வ.உ.சி முழங்கினார். இதனால் ஆங்கிலேயக் கப்பல் நிறுவனத்துக்கு மாதம் 40,000 ருபாய் நஷ்டம் ஏற்பட்டது. பயணிகளுக்கு  இலவசக் குடைகள் வழங்குவது, பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்வது போன்ற உத்திகளை ஆங்கிலேயர்கள் கையாண்டனர். இதனால், வ.உ.சி-யின் சுதேசி கம்பெனி திவாலாகும் நிலைமைக்குச் சென்றது.

p32b.jpg

பிரிட்டிஷ் அதிகாரிகள், வ.உ.சி மீது தேச துரோகக் குற்றம்சாட்டி, அவரைக் கைதுசெய்ய  உத்தரவிட்டனர். வழக்கின் முடிவில் சுப்பிரமணிய சிவாவுக்கு சிறை தண்டனையும், வ.உ.சி-க்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கொடுத்தார்கள். கைது செய்யப்பட்ட வ.உ.சி., பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். பாளையங் கோட்டை சிறையில் பாரதியார் வந்து வ.உ.சி-யைச் சந்தித்தார். கலெக்டர் விஞ்ச் துரைக்கும் வ.உ.சி-க்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதத்தைக் கவிதை வடிவில் ‘இந்தியா’ வார இதழில் பாரதி வெளியிட்டார். பின்னர், கோயம்புத்தூர் சிறையில் இரண்டரை ஆண்டுகளும் கள்ளிக்கோட்டை சிறையில் இரண்டு ஆண்டுகளும் அடைக்கப்பட்ட வ.உ.சி-யை வெள்ளையர்கள், சங்கிலியால் பிணைத்தும், கல் உடைக்கவைத்தும், செக்கிழுக்கவைத்தும் கொடுமைப்படுத்தினார்கள். இதற்கிடையே திருநெல்வேலி கலெக்டரான ஆஷை  மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் சுட்டுக்கொண்டு வீர மரணம் அடைந்தார். இந்த வழக்கில் வ.உ.சி., பாரதி ஆகியோர் மீதும் ஆங்கிலேயே போலீஸார் சந்தேகப்பட்டனர். சிறையிலிருந்த வ.உ.சி-யை கொடுமைப்படுத்தினார்கள்.

மேல்முறையீடு செய்து, தண்டனை குறைப்புக்குப்பின், 1912-ம் ஆண்டு வ.உ.சி விடுதலையானார். அதற்குள் காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த மாற்றங்களால் வ.உ.சி-க்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. அவர் சிறை செல்லும்போது ஆயிரக்கணக்கானவர்கள் முழக்கமிட்டு வழியனுப்பி வைத்த நிலைமை, தலைகீழாக மாறியிருந்தது.  வெளியே வரும்போது அவரை வரவேற்க, சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட ஒரு சிலரே வந்திருந்தனர். பின்னர் வ.உ.சி சென்னை சென்றார்.

வ.உ.சி தொடங்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி 1911-ல் மூடப்பட்டுவிட்டது. அவரிடமிருந்த ‘பாரிஸ்டர் பட்டம்’ வெள்ளை அரசால் பறிக்கப்பட்டதால், அவரால் வழக்கறிஞர் தொழிலும் செய்யமுடியவில்லை. குடும்பத்தைக் காப்பாற்ற மளிகைக்கடை நடத்தினார். மண்ணெண்ணை விற்றார். எதுவும் சரிப்பட்டு வரவில்லை. வறுமையுடன் போராடினார். இக்கட்டான சூழலில் வ.உ.சி-க்கு வழக்கறிஞர் உரிமையை ஆங்கிலேய நீதிபதி வாலஸ் மீட்டுத் தந்தார். இதற்கு நன்றியாகத்தான், தனது மகனுக்கு ‘வாலேசுவரன்’ என்று வ.உ.சி பெயரிட்டார்.

p32c.jpg

திரு.வி.க., சிங்காரவேலர், சக்கரைச் செட்டியார், வரதராஜுலு நாயுடு போன்ற தலைவர்களுடன் சேர்ந்து தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபடுபட்டார். பல தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்றார்.  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்தில் அக்கறை காட்டியபோதும், சாதிய அடிப்படையில் அரசியல் கட்சிகள் தோன்றுவதை வ.உ.சி ஏற்கவில்லை. வ.உ.சிதம்பரம் பிள்ளை 1936 நவம்பர் 18-ம் தேதி காலமானார். இறக்கும் தருவாயில் மகாகவியின் “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” எனும் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டார். திட்டமிட்ட புறக்கணிப்புகளுக்குப் பின்னரும், இந்திய வரலாற்றில் கப்பலோட்டிய தமிழராக கம்பீரமாக நிலைத்திருக்கிறார் வ.உ.சி!

ஜேம்ஸ் ஆலனின் ‘வலிமைக்கு மார்க்கம்’ என்ற நூலின் கருத்துக்களை, தமிழில் இப்படி குறிப்பிடுகிறார் வ.உ.சி, “உலகம் முழுவதிலும் துன்பத்தால் துடிக்காத மனமே இல்லை. கவலையால் கலங்காத உயிரே இல்லை. துன்பத்தை வெறுப்பதாலோ, அல்லது அதனை கவனியாது இருப்பதாலோ துன்பத்திலிருந்து தப்பிக்க முடியாது. ஒரு துன்பம் எதனால் வந்தது என்பதை அறிவதும், அதிலிருந்து என்ன பாடம் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதை அறிவதும்தான் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான வழி.” 

(இன்னும் வெல்வோம்)

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
கொலம்பிய புவி அழகுராணி போட்டிகளில்...
 

கொலம்­பிய புவி அழ­கு­ராணி (Miss Earth Colombia 2016) போட்­டிகள் தற்­போது நடை­பெ­று­கின்­றன.

 

155Untitled-2.jpg

 

தற்­போ­தைய மிஸ் ஏர்த் அழ­கு­ரா­ணி­யான பிலிப்­பைன்ஸின் ஏஞ்­ச­லினோ ஒங், மிஸ் ஏர்த் வோட்டர் அழ­கு­ரா­ணி­யான அமெ­ரிக்­காவின் பிரிட்­டனி ஆன் பெய்ன் ஆகியோர் இப்­ போட்­டி­களில் அதி­தி­க­ளாக பங்­கு­பற்­று­கின்­றனர்.

 

155Untitled-1.jpg

 

கொலம்­பி­யாவில் சமூக சுற்­றாடல் நிகழ்­வு­கள் பல­வற்­றிலும் இவர்கள் பங்­கு­பற்­றினர்.

 

155Untitled-3.jpg

 

155_Untitled-4.jpg

 

155_13902568_1106555146095876_1508237752

 

ஏஞ்­ச­லினோ ஒங், பிரிட்­டனி ஆன் பெய்ன் ஆகி­யோ­ருடன் மிஸ் ஏர்த் இப்­போட்­டி­களில் பங்குபற்றும் யுவதிகளில் சிலரையும் படங்களில் காணலாம்.

.metronews

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
தெரியாததைக் கேட்டு அறிக...
 
 

article_1471925215-FRIENDS.jpgஎதனைக் கேட்டாலும் தெரியாது, தெரியாது எனச் சொல்பவர்களைப் பார்த்தால் எரிச்சல்தான் வரும்.

இப்படிச் சொல்பவர்களில் பலர் பல விதத்தில் இருப்பார்கள். எவராவது எதனைப் பற்றியாவது கேட்டுவிட்டால், அவர்கள் தங்களிடம் ஏதாவது உதவிகேட்டு விடுவார்களா எனும் எண்ணத்தில், இது பற்றியே தெரியாது என்பவர்கள் ஒருரகம். இவர்கள் உதவி செய்யாத சுயநல வாதிகள். ஆனால், உண்மையிலேயே எதனையும் புரியாமலேயே அறியாமையுடன் புரண்டுவரும் பிரகிருதிகள் இன்றும் ஒரு ரகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.  

ஆனால், எல்லாமே தெரியும் என நடிப்பதும் தங்களுக்கே எல்லாமே தெரியும் என்ற நினைப்புடன் இருக்கும் மனிதர்களும் ஏராளமாக எங்கள் மத்தியில் உளர். இத்தகையோரிடம் சென்று ஆலோசனை கேட்பதே ஆபத்துத்தான்‚ எங்கள் நலனில் அக்கறையுள்ள நல்லோரிடம் ஆலோசனைகளை, ஒத்துழைப்பினைக் கோருவதே உகந்ததாகும்.

தெரியாததைக் கேட்டு அறிக; மமதை வேண்டாம்.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'மின்னல், கேமராவில் சிக்கியது இப்படித்தான்!' - வைரல் ரகசியம் சொல்லும் போட்டோகிராபர்!

                                  usain.JPG

சேன் போல்ட், ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற செய்தியை விடவும், இணையத்தில் வைரலாகப் போனது ஒரு போட்டோ.

ஒலிம்பிக் 100 மீ ஓட்டத்தில், உசேன் உட்பட எல்லா வீரர்களும் எல்லைக் கோட்டைப் பார்த்து சீறிப்பாய்ந்து ஓடிக்கொண்டிருக்க, போல்ட் ஒரு விநாடிக்கும் குறைவான நொடியில், பின்னால் திரும்பி தனது போட்டியாளர்களைப் பார்த்து, வெற்றியை உணர்ந்து உதிர்த்த அந்தப் புன்னகை, இந்த ஒலிம்பிக்கின் அதிசிறந்த தருணங்களில் ஒன்றானது. இன்று வரை மீம்ஸ் மேல் மீம்ஸாக சமூக வலைதளங்களில் அந்த புகைப்படம் பரவிக் கொண்டே இருக்கிறது. அந்த மின்னல் தருணத்தை படம் பிடித்தவர், கெட்டி இமேஜஸ் நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் கேமரூன் ஸ்பென்சர்.

அந்த ஆச்சர்ய நொடிகளை தனது வார்த்தைகளில் விவரிக்கும் கேமரூன், "எனது தலைமை கேமராமேன், அந்த மைதானத்தில் மட்டும் சுமார் 600 புகைப்படக் கலைஞர்கள் இருப்பதாகச் சொன்னார். அத்தனை பேரின் லென்சும் உசேன் போல்ட்டை நோக்கித்தான் இருந்தது. எனது நிறுவனம் சார்பில் மட்டுமே மொத்தம் 11 கலைஞர்கள் அங்கு இருந்தனர். போட்டித் துவங்குவதற்கு முன்னரே சரியாக 70-வது மீட்டரில் நின்று கொண்டு, அவர் அந்த இடத்திற்கு வருவதற்காக காத்திருந்தேன். ஆனால் அவர் அங்கு வந்து ஒரு நொடி, திரும்பி, மெதுவாக சிரிப்பார் என யாருமே நினைக்கவில்லை. அதை என்னால் நம்பவே முடியவில்லை. போட்டியில் அவர் ஓடுவதை வைத்து சிறந்த புகைப்படம் ஒன்று எடுக்க வேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன். ஆனால் அவரை போட்டோ எடுத்துவிட்டு எனது கேமராவைத் திரும்பி பார்க்கும் வரை அவர் என்னைப் பார்த்து சிரித்ததை கவனிக்கவே இல்லை. கேமராவைப் பார்க்கும் போதுதான் அதனை உணர்ந்தேன். நிஜமாகவே நான் அதிர்ஷ்டசாலி!

                                       cameron%20spencer.jpg


அவர் தனது போட்டியாளர்களைப் பார்த்துதான் சிரித்ததாக நினைக்கிறேன். ஆனால் என்ன? அவர் என் பக்கம் பார்த்து சிரித்துவிட்டார். போல்ட்  அந்தப் புகைப்படத்தை பார்த்து விட்டதையும், அவருக்கு அது பிடித்திருந்ததையும் அறிந்தேன். மகிழ்ச்சி! நிஜமாகவே போல்ட் ஒரு ராக் ஸ்டார்தான். அவரை எப்போது போட்டோ எடுத்தாலும், அது அழகாகத்தான் இருக்கும். அவர் ஒரு நல்ல என்டர்டெயினர். மைதானத்தில் இருக்கும் ரசிகர்களை எப்போதும், என்டர்டெய்ன் செய்யவே விரும்புவார்" என்கிறார்.

ஸ்பென்சர், இதற்கு முன்னர் எடுத்த எத்தனையோ புகைப்படங்கள் வைரல் ஆகியிருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று. போல்ட்டின் 2008 மற்றும் 2012 ஒலிம்பிக்கிலும் ஸ்பென்சர் கலந்து கொண்டு போட்டோ எடுத்திருக்கிறார். ஸ்பென்சருக்கு இது 5-வது ஒலிம்பிக். போல்ட் ஓடுவதைப் படம் பிடிப்பதற்காக, Canon 1D X Mark II கேமரா, 70-200mm லென்ஸ், 135mm ஃபோகஸ், ஷட்டர் ஸ்பீட் 1/40th of a second என பக்காவாக ரெடியாகி, நின்றிருக்கிறார் ஸ்பென்சர்.

 "ஒரு புகைப்படக் கலைஞராக நீங்கள், வித்தியாசமான முயற்சிகளை செய்யுங்கள். அந்தப் படத்தை பார்ப்பவர்களில், போட்டோகிராபி தெரிந்தவர்களுக்கு மட்டுமே, அந்தப் புகைப்படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் எனத் தெரியும். ஆனால் உசேன் போல்ட்டைத் தெரிந்தவர்களுக்கு, அவரின் அழகான எக்ஸ்ப்ரஷன் மட்டுமே தெரியும்" என சிரிக்கிறார்.

vikatan

  • தொடங்கியவர்

'முதன்முதலா சென்னைக்கு வந்தப்போ...' - போட்டோ ஃப்ளாஷ்பேக்!

chennai1.jpg

chennai2.jpg

chennai3.jpg

chennai4.jpg

chennai5.jpg

chennai6.jpg

chennai7.jpg

chennai8.jpg

chennai9.jpg

chennai10.jpg

chennai11.jpg

chennai12.jpg

vikatan

  • தொடங்கியவர்

14063969_1111031038945589_12278616255358

நிலவில் முதலில் கால் வைத்த பெருமைக்குரிய அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் அவர்களின் நினைவு தினம்.

  • தொடங்கியவர்

ரஜினி, கமலுக்கிடையே விஜயகாந்த் வல்லரசானது எப்படி? #HBDCaptain

viji.jpg

விஜயகாந்திற்கு இன்று 65-வது பிறந்தநாள். சினிமா, அரசியல் என தனி மனிதனாக அவரது அசுர வளர்ச்சி எல்லோருக்கும் ஆச்சர்யமூட்டும் ஒன்று. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நாராயணனாகப் பிறந்த இவரை வீட்டில் எல்லாரும் விஜயராஜ் என்றே அழைத்துவந்தனர். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு தனது அப்பாவின் அரிசி ஆலை நிர்வாகத்தைக் கவனித்து வந்தார். 'இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் 1978-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவருக்கு, அப்படத்தின் இயக்குநர் எம்.ஏ.காஜா வைத்த பெயர்தான் விஜயகாந்த்.

1980-ல் வெளியான 'தூரத்து இடி முழக்கம்' திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் விஜயகாந்த். ஆனால் ஓர் அதிரடி நாயகனாக விஜயகாந்த் அறியப்பட்டது 1981-ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் இருந்துதான். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் படமான இது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கண்டது. இதன் இந்திப் பதிப்பில் ரஜினிகாந்தும், தெலுங்குப் பதிப்பில் சிரஞ்சீவியும் நடித்தனர். விஜயகாந்த்-எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணி இணைந்து அதே ஆண்டில் 'சாதிக்கொரு நீதி', 'நெஞ்சிலே துணிவிருந்தால்', 'நீதி பிழைத்தது' என மூன்று திரைப்படங்களை வெளியிட்டது. ரஜினிகாந்திற்கு ஒரு எஸ்.பி.முத்துராமன் என்பதுபோல், விஜயகாந்திற்கு ஒரு எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொல்லலாம். இவரது இயக்கத்தில் மட்டும் விஜயகாந்த் 17 படங்களில் நடித்திருக்கிறார். இதே போல் 'சிவப்பு மல்லி' தந்த வெற்றியால் ராம நாராயணன் இயக்கத்திலும் இவர் 17 படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் கதாநாயகனாக நடித்து 1984-ல் மொத்தம் 18 படங்களும், 1985-ல் 17 படங்களும் வெளியாகின. இன்றுவரை இது அசைக்க முடியாத சாதனையாக உள்ளது. தொடர்ந்து புரட்சிகரமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவந்ததால் 1985-ம் ஆண்டு முதல் அவருடைய ரசிகர்களால் 'புரட்சிக்கலைஞர்' என அழைக்கப்பட்டார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர் பின்நாட்களில் தமிழைத் தவிர வேறு எந்த மொழித் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இத்தனைக்கும் இவரது படங்கள் சில தெலுங்கில் டப்பாகி ஆந்திர தேசத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தன. அங்கிருந்து வாய்ப்புகள் வந்தபோதும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

ரஜினி-கமல் போட்டிக்கு நடுவே தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி வெற்றி கண்டவர் விஜயகாந்த். 'பி' மற்றும் 'சி' சென்டர்களில் விஜயகாந்த் படம் என்றாலே அது ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. இவரது சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் பெருகியதாலோ என்னவோ... அதன்பின்பு பல திரைப்படங்களிலும் சண்டைக்காட்சிகளில்தான் விஜயகாந்தின் அறிமுகமே இருக்கும். சுவரில் கால்களை ஊன்றி எம்பிக்குதித்து எதிரிகளை தனது கால்களால் பந்தாடுவது இவரது ட்ரேட் மார்க்காகவே இருந்தது. கிராமங்களின் ஊர்த் திருவிழாக்களில் ரஜினி-கமல் படங்களைத் திரையிட பெரிய சண்டையே நடக்கும். அந்த நேரத்தில் விஜயகாந்த் திரைப்படம் எதாவது ஒன்றைத் திரையிட்டு கிராமத்தின் மொத்தக் கூட்டத்தையும் சண்டையின்றி உட்கார வைப்பது ஒரு ட்ரிக்காகவே பயன்பட்டு வந்தது. கிராமப்புறங்களில் 'ஜ' உச்சரிப்பு சரியாக வராததால் இன்றளவும் பலருக்கு அவர் விசயகாந்த் தான்.

oomai%20vizhigal.jpg

புதுமுக இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி, திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநராக அறிமுகப்படுத்திய பெருமையும் விஜயகாந்தையே சேரும். ஆபாவானன் - ஆர்.அரவிந்தராஜ் கூட்டணியில் 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்' போன்ற திரைப்படங்களும், ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்' போன்ற வெற்றிப்படங்களை அளித்தவர் விஜயகாந்த். ஒருகாலத்தில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் நேராகக் கதை சொல்லும் இடமாக விஜயகாந்தின் அலுவலகம்தான் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆக்ஷன் ஹீரோ ஆக முடியாது என்பது கோலிவுட்டில் எழுதப்படாத விதி. அந்த வகையில் போலீஸ், ராணுவம் என யூனிஃபார்ம் அணிந்து நியாயத்திற்காகப் போராடும் கதாபாத்திரத்தில் அதிகம் நடித்தவர் விஜயகாந்த் தான். இன்றும் போலீஸ் வேடமென்றால் தமிழ் ரசிகர்களின் மனதில் முதலில் வந்து நிற்பது விஜயகாந்தாகத்தான் இருக்கும். தனது 100-வது படமான 'கேப்டன் பிரபாகரன்' மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் 'கேப்டன்' ஆக ப்ரோமோசன் கிடைத்தது. ரஜினியின் 100-வது படமான 'ராகவேந்திரா', கமலின் 100-வது திரைப்படமான 'ராஜபார்வை' போன்ற திரைப்படங்கள் அனைத்தும் தோல்வி கண்டிருந்த நிலையில், அந்தக் காலகட்டத்தில் நடித்த நடிகர்களில் 100-வது படம் வெற்றிப்படமாக அமைந்ததும் இவருக்குத்தான். 'ஊமை விழிகள்', 'புலன் விசாரணை', 'செந்தூரப் பூவே', 'சத்ரியன்' போன்ற படங்களில், தனது நிஜ வயதைவிட அதிகமான வயதுடைய கதாபாத்திரங்களில் நடித்தார்.

க்ளைமாக்ஸ் காட்சியில் சூப்பர் ஹீரோ சாவதையெல்லாம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றிருந்த காலகட்டத்திலேயே 'செந்தூரப் பூவே', 'வைதேகி காத்திருந்தாள்', 'ரமணா' மற்றும் பல திரைப்படங்களில் அப்படி நடித்து அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தார்.

நடிகர் சங்கத் தலைவர்:
சூப்பர்ஸ்டார், உலகநாயகன் உட்பட திரைப்படத் துறையினர் இன்றும் விஜயகாந்தை 'விஜி' என்றுதான் அழைப்பார்கள்.  1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அவர் நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார். அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அப்போது கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தது இவரின் நிர்வாகத் திறமைக்கு மிகப்பெரிய உதாரணம்.

captain.jpg

அரசியல் அவதாரம்:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்று பெயர் சூட்டியவர் விஜயகாந்த். 2000-ம் ஆண்டில் தனது ரசிகர் மன்றத்திற்கென கொடியை அறிமுகப்படுத்தி பல படங்களில் அதைப் பயன்படுத்தவும் செய்தார். அரசியலுக்கு வருவேன் என சொன்னதோடு நிக்காமல் 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். தனது ரசிகர்மன்றக் கொடியையே கட்சிக் கொடியாகவும் அறிவித்தார். அடுத்து வந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தனி ஆளாகத் தன் கட்சியின் சார்பாக சட்டமன்றம் சென்றார். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கம்பீரமாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் விஜயகாந்த்.

சினிமா, அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்ற விஜயகாந்த் தனது முன்கோபத்தாலும், உள்ளதை உள்ளபடிப் பேசிவிடுவதாலும் இழந்தவை அதிகம். இதையெல்லாம் விட இன்று 'மீம்ஸ்' விஜயகாந்தாய் சித்தரிக்கப்படுவது காலத்தின் சோகமான நீட்சி.

ஆனாலும் அழுத்தமாகச் சொல்வோம்... பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன்! 

vikatan

  • தொடங்கியவர்

நித்யஸ்ரீ மகாதேவன்

 
 
நித்யஸ்ரீ மகாதேவன்
நித்யஸ்ரீ மகாதேவன்

பிரபல கர்னாடக இசைப் பாடகி

பிரபல கர்னாடக இசைப் பாடகியும், இசைமேதை டி.கே.பட்டம்மாளின் பேத்தியுமான நித்யஸ்ரீ மகாதேவன் (Nithyashree Mahadevan) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*திருவையாற்றில் பாரம்பரியம் மிக்க இசைக் குடும்பத்தில் பிறந்தவர் (1973). டி.கே.பட்டம்மாளின் மகன் வயிற்றுப் பேத்தி. பிரபல மிருதங்க வித்வான் பாலக்காடு மணி ஐயரின் மகள் வயிற்றுப் பேத்தி. முதலில் தன் தாயாரிடமே சங்கீதம் பயின்றார். பின்னர் பாட்டி டி.கே.பட்டம்மாளிடம் கற்றார்.

*குடும்பம் முழுவதும் இசையால் நிரம்பியிருந்த சூழலில் வளர்ந்த சிறுமியும் இயல்பிலேயே நன்றாகப் பாடினார். ‘என் பாட்டி பட்டம்மாள் எங்களோடு விளையாடுவார், பாடுவார், கற்றுக்கொடுப்பார். எங்கள் அனைவரிடமும் ஒழுக்கத்தையும் பணிவையும் விதைத்தார். சாதகம் என்று வரும்போது கடுமையாக இல்லாமல், ஆனால் அதே சமயத்தில் கண்டிப்புடன் நடந்துகொள்வார்’ என்று நித்ய குறிப்பிட்டிருக்கிறார்.

*சங்கீதக் கச்சேரிகள், சாதகங்களோடு பள்ளிப் படிப்பையும் முடித்தார். பின்னர் சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தனது 16-வது வயதில் செம்மொழி இசை இளைஞர் சங்கத்துக்காகப் பாடினார். அதுவே இவரது முதல் தனி மேடைக் கச்சேரி.

*1991-ல் கபாலி ஃபைன் ஆர்ட்சில் நடைபெற்ற இவரது கச்சேரி நல்ல வரவேற்பு பெற்று இவரைப் பிரபலப்படுத்தியது. தனது பாட்டியைப் போலவே பாபநாசம் சிவன் மற்றும் கோபாலகிருஷ்ண பாரதி ஆகியோரின் பாடல் தொகுப்புகளைப் பாடினார்.

‘அப்பா அவ்வளவு சீக்கிரத்தில் பாராட்டிவிட மாட்டார். எனது முதல் விமர்சகரே அவர்தான், அவரிடம் பாராட்டு பெறுவது மிகப் பெரிய விஷயம்’ என்று தந்தையைப் பற்றிக் கூறியுள்ளார். 100-க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

* உள்ள முக்கிய சபாக்கள் அனைத்திலும் பாடியுள்ளார். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் கச்சேரிகளை நடத்தியுள்ளார். பம்பாயிலும், ஹைதராபாத்திலும் நடைபெற்ற சர்வதேச இசை விழாக் களிலும், சங்கீத நாடக அகாடமி விருது நிகழ்ச்சியிலும் பாடியுள்ளார்.

* பக்திப் பாடல்கள், தேசப்பக்திப் படல்களையும் பாடியுள்ளார். தனித்துவம் வாய்ந்த தன் குரலால் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றுள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த 50 ஆண்டுகள் நிறைவடைந்த கொண்டாட்டங்களில் பல கச்சேரிகளில் தேசபக்திப் பாடல்களைப் பாடினார்.

*1990-ல் ‘ஜீன்ஸ்’ படத்தில் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடல் மூலம் திரையுலகில் கால் பதித்தார். இந்தப் பாடலின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் பாடினார். ‘மின்சாரக் கண்ணா’, ‘சவுக்கியமா கண்ணே சவுக்கியமா’, ‘மன்மத மாசம்’, ‘கும்பகோணம் சந்தையிலே’, ‘தாய் தின்ற மண்ணே’ உள்ளிட்ட இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே வெற்றிபெற்றன. தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் பாடினார்.

*‘யுவகலா பாரதி’, ‘இன்னிசை மாமணி’, ‘இன்னிசை ஞான வாரிதி’, ‘நவரச கான நாயகி’, ‘கலைமாமணி’, ‘சிவன் இசைச் செல்வி’, ‘சங்கீத சிகாமணி’, ‘இசைப் பேரொளி’ உள்ளிட்ட பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார். சத்யபாமா பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

*கர்னாடக இசை ஜாம்பவான்களும், சங்கீத வல்லுநர்களும் நிறைந்த குடும்பத்தில் பிறந்து, இசையையே சுவாசித்து வளர்ந்த நித்ய மகாதேவன், இன்று 43வது வயதை நிறைவு செய்கிறார். சுறுசுறுப்பாக இசை உலகில் வலம் வருகிறார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்
Miss Jamaica World - 2016
 

158miss-jamica.jpgமிஸ் ஜெமெய்க்கா 2016 அழ­கு­ரா­ணி­யாக அஷ்லி பாரெட் தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

 

மிஸ் ஜெமெய்க்கா வேர்ல்ட் – 2016 (Miss Jamaica World – 2016 ) அழ­கு­ராணி
போட்­டி­களின் இறுதிச் சுற்று கடந்த வார இறு­தியில் நடை­பெற்­றது.

 

இதில் 20 வய­தான அஷ்லி பாரெட் முத­லிடம் பெற்று மிஸ் ஜெமெய்க்கா வேர்ல்ட் 2016 அழ­கு ­ரா­ணி­யாக முடி­சூட்­டப்­பட்டார்.

 

வைட்னி லெவி இரண்­டா­மி­டத்­தை யும் மிலிண்டா ஸ்மித் 3 ஆம் இடத்­தை யும் பெற்­றனர்.

 

எதிர்­வரும் டிசெம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள உலக அழ­கு ­ராணி போட்­டி­களில் ஜெமெய்க்­காவின் சார்பில் அஷ்லி பாரெட் பங்குபற்றவுள்ளார்.

 

158_s.jpg

 

158_13645092_1279070488784526_6204285084

 

158_13781929_1276845792340329_8523029680

 

158_1er.jpg

 

158_13631525_1278626802162228_8553029765

 

158_13872834_1290240547667520_7576307282

 

 

metronews.lk

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14068316_1111024668946226_43686854745464

 

"அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் போற்றப்பட்ட ஆன்மீகவாதி, பிரசங்கி, சமயம், இலக்கியம், பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்ற திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்தநாள் இன்று.

 

கிருபானந்த வாரியார் பிறந்த தின பகிர்வு!

பாமரனின் உள்ளத்தில் பரமனை விதைத்தவர். சிந்தனைக்குரிய வார்த்தைகளைச் சிரிக்கும்படி சொன்னவர். 64-வது நாயன்மாராக வலம் வந்த அருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வாழ்க்கையில் இருந்து சில துளிகள்...

வேலூர் அருகே, காங்கேயநல்லூரில் 1906-ம் ஆண்டு, மல்லைய தாஸ பாகவதர் - கனகவல்லி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரோடு பிறந்தவர்கள் 11 பேர். இவர் நான்காவது குழந்தை!

வாரியாருக்கு அறிவு ஞானம் அனைத்தையும் வழங்கியவர் அவரது அப்பா. வீட்டிலேயே இலக்கியம், இலக்கணம், இசை எல்லாம் கற்றுக்கொடுத்தார். பிரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சாரியாரிடம் வீணை கற்றார். எட்டு வயதில் வெண்பா பாடும் ஆற்றல் வந்தது. 12 வயதில் 10,000 பாடல்களை மனப்பாடம் செய்தார். மறையும் வரை எந்தப் பாட்டும் மறக்கவில்லை!

kiruba_vc1.jpg



அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் கொடுத்தது. தஞ்சைப் பல்கலைக்கழகம் 'இலக்கிய முது முனைவர்' என்றது. காஞ்சி மகா பெரியவர் 'சரஸ்வதி கடாக்ஷமிர்தம்' என்று பாராட்டினார். அனைவருமே 'அருள் மொழி அரசு' என்று வணங்கினர். வாரியார் வாங்கிய பட்டங்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை. ஆனால், வாரியார் பள்ளிக்கூடம் சென்று படித்ததே இல்லை!

சிறுவயதில், பாலாறுக்குத் தினமும் குளிக்கச் செல்வார். அப்போது தனது அம்மாவிடம் அரிசி வாங்கி, போகும் வழியில் எறும்புப் புற்று இருக்கும் இடங்களைத் தேடிச் சென்று அதில் அரிசியைப் போட்டுக்கொண்டே போவாராம்!

மகன் ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்ற ஊர் ஊராகப் போய் வருவது ஆரம்ப காலத்தில் அவரது அப்பாவுக்குத் தெரியாது. காங்கேயநல்லூர் முருகன் ஆலய ராஜ கோபுரம் கட்டியதில் தந்தைக்கு ஏற்பட்டிருந்த ரூ.5,000 கடனைத் தனது சொற்பொழிவு வருமானத்தில் அடைத்தார் வாரியார். அதன் பிறகுதான் அதை அறிந்து பாராட்டினார் தந்தை!

வீர சைவ மரபினைச் சேர்ந்த சுவாமிகள் தம் ஐந்தாவது வயதில் கழுத்தில் சிவலிங்கம் அணிந்தார். 1936 முதல் தினமும் முருகனுக்கு பூஜை செய்த பின்பே உணவு உட்கொள்வது வழக்கம்.

வாரியார் தனது 19-வது வயதில் தாய் மாமன் மகள் அமிர்த லட்சுமியைத் திருமணம் செய்துகொண்டார். பிரம்மச்சர்யத்தைக் கடைப்பிடித்ததால், குழந்தைகள் இல்லை!

தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடித்து ஒரு வருடத்துக்கு மேல் ஓடிப் புகழ் பெற்ற 'சிவகவி' திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் வாரியாரே!

வெளியூர் சென்றாலும் கூடவே பூஜைப் பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். தொடர்ந்து 57 வருடங்கள் ஒரு நாள்கூட இடைவெளி இன்றி பூஜை செய்தவர்!

எம்.ஜி.ஆருக்கு எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும், 'பொன் மனச் செம்மல்' என்பது அனைவராலும் சொல்லப்படுவது. அப்பட்டத்தை வழங்கியவர் இவரே!

வேலூரில் உரை நிகழ்த்த வாரியார் வந்துஇருந்தார். அப்போது திராவிடர் கழகத்தினர் 'கிருபானந்த 'லாரி' வருகிறது' என்று கிண்டல் அடித்துத் தட்டிவைப்பார்கள். தற்செயலாக வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தந்தை பெரியார், அவர் தங்கியிருந்த வீட்டு ஜன்னல் வழியே வாரியாரின் விரிவுரையைக் கேட்க நேர்ந்தது. 'வாரியாரும் நம்மைப்போல தமிழ் வளர்க்கும் முயற்சியிலும், சமுதாயத்தை மேம்படுத்தவுமே பாடுபடுகிறார். அவரைக் கேலி செய்வதா? உடனே, தட்டியெல்லாம் அகற்றுங்கள்!' என்று தன் தொண்டர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் பெரியார்!

'தாமரைக் கண்ணால் பெண்கள் நோக்கினர்' என்று கம்பர் கூறுகிறார். 'தாமரையோ செவ்வண்ணம் உடையது. மது அருந்தியவருக் கும், அளவுக்கு அதிக சினம்கொண்டாருக்கும் அல்லவா சிவந்த கண்கள் இருக்கும். அது எவ்வாறு பெண்களுக்குப் பொருந்தும்?' என்று கண்ணதாசன் கேட்க, 'அதை 'தாம் அரைக் கண்ணால்' என்று பிரித்துப் பொருள்கொள்ளலாம் அல்லவா?' என்று விளக்கம் கூறிக் கவியரசரை அசத்தினார்!

'பெற்றெடுத்த தாயின் பெயரை இனிஷியலாகப் போடலாமே!' என்று பெண்களைப் போற்றும் ஒரு கருத்தை அக்காலத்திலேயே கூறியவர்!

திருப்புகழ் உரை நடை, மகாபாரதம், கம்பராமாயணம், கந்த புராணம், பெரிய புராணம் என்று இவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 200 இருக்கும். அவை அனைத்தையும் படிக்கும்போது வாரியாரின் பேச்சைக் கேட்பதுபோலவே இருக்கும்!

'எனக்கு அஜீரணம் என்பது என்னவென்றே இதுவரை தெரியாது. பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசி அடங்குவதற்கு முன் கையை வாயைவிட்டு எடுத்துக்கொள்பவனும் நோய்வாய்ப்பட மாட்டான்!' என்று ஒரு முஸ்லிம் அன்பர் கூறியதை நினைவில் வைத்திருக்கிறேன்!' என்பார்!
kiruba_vc2.jpg
27 லட்ச ரூபாய் நன்கொடை வசூலித்து, திருப்பராய்த்துறையில் 'ராமகிருஷ்ண குடில்' அமைத்தார். ஆதரவற்ற சிறுவர்களின் புகலிடமாக அது விளங்கி வருகிறது!

தான் பிறந்த காங்கேய நல்லூரில் ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றை நிறுவினார். பள்ளிக்கு என உதவி கேட்டால் உடனே செய்வார்!

'ஏழைகள், மாணவர்கள், விதவைகள், மருத்துவ உதவி வேண்டுவோர் எனப் பல தரப்பினருக்கும் நிதி உதவி செய்திட, 'திருமுருக கிருபானந்த வாரியார் பொதுநல நிதி அறக்கட்டளை' ஒன்றைத் தன் சொந்தப் பணத்தில் அமைத்தார்!

ஆன்மிகச் சொற்பொழிவுகளின் இடையே சிறுவர்களிடம் கேள்விகள் கேட்டு, சரியாகப் பதில் சொல்பவர்களை மேடைக்கு அழைத்து, புத்தகங்கள் பரிசளித்து ஊக்குவிப்பது வாரியார் வழக்கம்!

தமிழின் பெருமைபற்றி வாரியார் கூறியது இது... 'பாரிஸ் நகர நூல் நிலையத்தில் மடக்கிவைத்துள்ள பீரோக்களை நீட்டிவைத்தால், ஆறு மைல் நீளம் வரும். மிகப் பெரிய நூலகம். அதில் எண் ஒன்று போட்டு பைபிள் உள்ளது. எண் இரண்டு போட்டு திருக்குறளை வைத்திருக்கிறார்கள்!' மானம் என்ற சொல் தமிழில் தவிர வேறு எந்த மொழிகளிலும் இல்லை!

பழநி ஈசான சிவாச்சாரியார், 'டால்ஸ்டாய் எழுதிய 'நாம் செய்வது என்ன' என்ற புத்தகத்தை நீ ஒரு முறை படி. நான் படித்தால் அழுகை வருகிறது' என்றார். அந்நூலைப் படித்து முடித்ததும் பொன், பொருள், உலகம் ஆகிய பற்றுகள் அகன்றுவிட்டன வாரியாருக்கு. அன்று முதல், தான் அணிந்திருந்த தங்க ருத்திராட்ச மாலை, மோதிரங்கள் உட்பட அத்தனை அணிகலன்களையும் கழற்றி காங்கேய நல்லூர் முருகனுக்கு அர்ப்பணித்துவிட்டார் வாரியார்!

தன் விரிவுரைகளுக்குக் கிடைத்த வருவாயில் காங்கேய நல்லூரில் நாலு ஏக்கர் நிலத்தை வாங்கினார் வாரியார். அதில் இருந்து கிடைக்கும் வருவாயைவைத்து தினமும் தயிர் சாதம் தானமாக வழங்க உத்தரவிட்டார். 54 ஆண்டுகளாக இது தடை இல்லாமல் நடக்கிறது!

'எம்பெருமான் திருவருளாலே...' என்ற வார்த்தைகள் இல்லாமல் அவர் பேசியதே இல்லை!

20 வயதுக்கு மேல், மேல் சட்டை அணிந்தது இல்லை. ஆட்டோகிராஃப் கேட்பவர்களுக்கு 'இரை தேடுவதோடு இறையையும் தேடு' என்ற வார்த்தைகளையே பெரும்பாலும் எழுதிக் கையெழுத்து இடுவார்!

vikatan

 

  • தொடங்கியவர்

14021724_1111019315613428_44485971264905

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் முகாமையாளருமான டுலிப் மென்டிசின் பிறந்தநாள்.
மென்டிசின் தலைமையிலேயே இலங்கை அணி தனது முதலாவது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக்கொண்டது.
Happy Birthday Duleep Mendis

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒலிம்பிக் பதக்கங்களை விற்றவர்கள்!

 

 
oli_2984092f.jpg
 

உலகின் மதிப்புமிக்க விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக். இந்தப் போட்டிகளில் கலந்துகொள்வதும் பதக்கங்களை அள்ளுவதும் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமின்றி, நாட்டுக்கே பெருமை தேடித் தருவதாக இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் ஒவ்வொரு வீரரும் பதக்கக் கனவுகளோடுதான் செல்கிறார்கள். போட்டியிலும் பங்கேற்கிறார்கள்; போராடுகிறார்கள். இறுதியில் சிலர் பதக்கங்களை ஜெயிக்கிறார்கள். இப்படி ஆண்டுக்கணக்காக உழைத்து, பயிற்சி செய்து, போராடி வென்ற தங்கப் பதக்கங்களைச் சிலர் விற்பனை செய்திருக்கிறார்கள் தெரியுமா? ஏன், எதற்காகப் பதக்கங்களை விற்றார்கள் என்று பார்ப்போமா!

போலந்து நாட்டைச் சேர்ந்த ஒடிலியா, நீச்சல் வீராங்கனை. 1994-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளத் தகுதி பெற்றார். “நான் எத்தனைத் தங்கப் பதக்கங்கள் வென்றாலும் அவற்றை அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கிவிடுவேன்” என்று அறிவித்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு, 2004-ம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்றார். போலந்து நாட்டின் முதல் தங்கம் வென்ற நீச்சல் வீரர் இவர். ஆனால், தங்கப் பதக்கத்தை ஏலத்தில் விற்றார். அதில் கிடைத்த பணத்தை, ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவச் செலவுக்காக வழங்கிவிட்டார். “பதக்கத்தை வைத்து என் சாதனையை நினைவுகூர வேண்டிய அவசியம் இல்லை. நான் ஒலிம்பிக் சாம்பியன் என்ற பட்டமே என் மனதில் நிறைந்திருக்கிறது!’’ என்கிறார் ஒடிலியா.

அந்தோனி இர்வின்

oli1_2984093a.jpg

அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர். 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். தான் கலந்துகொண்ட முதல் போட்டியிலேயே 19 வயதில் தங்கத்தைப் பெற்று சாதனை படைத்தார். 2004-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி அந்தோனியைப் பாதித்தது. தங்கப் பதக்கத்தை ஏலத்தில் விற்று, அந்தப் பணத்தை இந்தோனேஷியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்துவிட்டார்.

விளாடிமிர் க்லிட்ஸ்கோ

oli2_2984094a.jpg

உக்ரைன் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1996-ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டது. விளாடிமிர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று, முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். அந்தப் பதக்கத்தை உடனடியாக ஏலம் விட்டார். கிடைத்த பணத்தை உக்ரைன் நாட்டுக் குழந்தைகள் விளையாட்டுகளில் பயிற்சி எடுத்துக்கொள்ள கொடுத்துவிட்டார். “என்னுடைய பதக்கத்தைவிட, எங்கள் நாட்டுக் குழந்தைகள் விளையாட்டுகளில் பங்கேற்பது மிக முக்கியம். இந்தப் பதக்கத்தால் கிடைத்த பணத்தின் மூலம் எதிர்காலத்தில் இன்னும் பல பதக்கங்களை உக்ரைன் நாடு பெறும்” என்றார் விளாடிமிர்.

மார்க் வெல்ஸ்

oli3_2984096a.jpg

அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் வெல்ஸ், ஐஸ் ஹாக்கி வீரர். 1980-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அவரது அணி தங்கப் பதக்கம் வென்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றியை மிகவும் உயர்வாகக் கருதினார் மார்க். மரபணுக் குறைபாட்டின் காரணமாக மார்க்கின் முதுகுத் தண்டு சேதமடைந்தது. மருத்துவத்துக்கு ஏராளமாகச் செலவானது. மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், 20 ஆண்டுகளாகப் பொக்கிஷமாகப் பாதுகாத்த தங்கப் பதக்கத்தை ஏலத்தில் விற்றார். அந்தப் பணத்தைக் கொண்டு தன்னுடைய மருத்துவத்தைச் செய்து வருகிறார்.

தங்களின் உழைப்பில் கிடைத்த, தாங்கள் உயர்வாக மதிக்கும் தங்கப் பதக்கங்களை நல்ல காரியங்களுக்காக விற்பனை செய்த, இந்த வீரர்கள் வரலாற்றில் கூடுதல் மதிப்பைப் பெற்றிருப்பார்கள் இல்லையா?

tamil.thehindu.

  • தொடங்கியவர்
 
 

வரலாற்றில் இன்று...

ஓகஸ்ட் - 26

 

1768 : இங்கிலாந்து கப்டன் ஜேம்ஸ் குக் தனது நாடுகாண் கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தார்.

 

1795 : திருகோணமலையின் பிரெடரிக் கோட்டையை ஒல்லாந்தரிடம் இருந்து ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படையினர் கைப்பற்றினர்.

 

1914 : முதலாம் உலகப் போர்: ஜேர்மனியின் குடியேற்ற நாடான டோகோலாந்து பிரெஞ்சு மற்றும் பிரித்தானியர்களினால் முற்றுகைக்குள்ளானது.

 

1914 : முதலாம் உலகப் போரின்போது, ரஷ்ய படைகளை டனென்பேர்க் சமரில் ஜேர்மனியப் படைகள் தோற்கடித்தன.

 

796varalru.jpg1920 : அமெரிக்காவில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஓகஸ்ட் 26 ஆம் திகதி பெண்கள் சமத்துவ தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

 

1933 : அமெரிக்க விமானியான வில்லி போஸ்ட், முதல் தடவையாக தனியாக விமானத்தில் உலகை சுற்றிவந்து சாதனை படைத்தார். இதற்கு 7 நாட்களும் 18.3 மணித்தியாலங்களும் தேவைப்பட்டன.

 

1942 : யுக்ரைனில் சோட்கிவ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் அதிகாலையில் யூதர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றி குழந்தைகள், நோயாளிகள் உட்பட 500 பேரை கொன்றனர். 2000 பேர் மரண முகாமுக்கு அனுப்பப்பட்டனர். 

 

1966 : நமீபிய சுதந்திரப் போர் ஆரம்பமாகியது.

 

1972 : 22ஆவது ஒலிம்பிக் போட்டிகள் ஜேர்மனியின் மியூனிக் நகரில் ஆரம்பமாகின.

 

1978 : பாப்பரசராக முதலாவது அருளப்பர் சின்னப்பர் பதவியேற்றார்.

 

1978 : முதலாவது ஜேர்மனிய விண்வெளி வீரர் சோயூஸ் விண்கலத்தில் விண்ணுக்குப் பயணமானார்.

 

1981 : பாப்பரசர் 2 ஆம் அருளப்பர் சின்னப்பரை துப்பாக்கியால் சுட்ட துருக்கியின் மெஹ்மெத்; அலி அகாவுக்கு ரோம் நீதிமன்றில் ஆயுட் கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

 

1997 : அல்ஜீரியாவில் 60 இற்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.

 

2002 : தென் ஆபிரிக்காவில் இரண்டாவது பூகோள மாநாடு ஆரம்பமாகியது.

 

2011 : போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்துக்கு அமெரிக்க விமானப் போக்குவரத்து முகவரகம், ஐரோப்பிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகவரகம் ஆகியன அங்கீகாரம் வழங்கின.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? #MorningMotivation

Untitled.png

நல்லதையே நினைப்போம்... நல்லதையே செய்வோம்...நல்லதே நடக்கும்... 

எனப் பொதுவாக பெரியவர்கள் சொல்வார்கள். ஒருவனின் எண்ணத்தை பொறுத்து தான் அவனின் வாழ்க்கை அமையும். நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் சரி, வாழ்வில் நீங்கள் உயர்ந்த இடத்துக்குச் செல்ல வேண்டுமெனில் உங்களுக்கு மிக மிக அத்தியாவசியமானது நேர்மறை எண்ணம் . எந்தவொரு   விஷயத்தையும் நேர்மறை எண்ணத்தோடும், புத்திசாலித்தனத்தோடும் அணுகிப்பாருங்கள்  உங்களை வெற்றி தேவதை தொற்றிக்கொள்ளும்.

1.பாசிட்டிவாக இருப்பவர்களோடு பழகுங்கள் 

நம்மைச்  சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள். 

ஒரு சின்ன டெஸ்ட்:

1.  ராஜனிடம் ஒரு வேலையை கொடுத்தால் அறிவார்ந்து யோசித்து அதில் பாசிட்டிவ் என்ன, நெகட்டிவ் என்ன என்பதை ஆராய்ந்து நேர்மறையோடு எண்ணத்தோடு களத்தில் இறங்குவார்.

2.  தனசேகரன் எந்த விஷயமாக இருந்தாலும் பாசிட்டிவ், நெகட்டிவ் பற்றி யோசிக்காமல்  தட்றோம்டா, தூக்குறோம்டா என களத்தில் இறங்குவார்.

3.கஜேந்திரனிடம்  எந்த வேலையைச் சொன்னாலும், அதன் நெகட்டிவ் அம்சங்களை மட்டுமே சொல்லி, கொஞ்சம் கூட முயற்சிக்காமல் தட்டிக்கழிப்பார்.

இந்த மூவரில் யாரை உங்களது நண்பராக தேர்ந்தெடுக்க போகிறீர்கள்? ராஜனை தேர்ந்தெடுத்தால் தான் நீங்கள் புத்திசாலி. உங்களுடன் எப்போதும், நீங்கள் எதைச் செய்தாலும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நண்பர்களை வைத்துக் கொள்ளாதீர்கள், அதே சமயம் நெகட்டிவ் மைண்ட்செட் இருப்பவர்களும் வேண்டாமே!

 

2) உற்சாகமாக இருங்கள் :-

சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள். இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.  

 

3. பவர்ஃபுல்லாக உணருங்கள் : -

உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும்  தாண்டி மனவலிமை மிக முக்கியம். உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள். இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை. உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ். 

 

4. லவ் பண்ணுங்க :-

உங்களை நீங்களே நேசியுங்கள். இந்த உலகத்தில்  தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது. உங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள். உங்களின் முதல் காதலியோ, காதலனோ  நீங்களாகவே இருங்கள். உங்களை நீங்களே வெறுக்காதீர்கள். உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு புரியவையுங்கள். உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

 

5.  பயணப்படுங்கள் :- 

வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது.  இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு  தாமதமாக வரும். அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.  வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும். அடுத்த ஐந்தாண்டுக்குள் நீங்கள் லட்சாதிபதியாக வேண்டுமானாலும் சரி, எவெரெஸ்ட் உயரம் செல்ல வேண்டுமென்றாலும் சரி, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும் ஆசை இருந்தாலும் சரி. எல்லாமே சாத்தியம் தான்.  இது எல்லாமே நிச்சயம் நடக்கத்தான் போகிறது. அதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்  மூன்று விஷயங்கள் தான். 

1. நேர்மறை எண்ணத்தோடு அணுகுங்கள் 

2. திட்டமிட்டு செயல்படுங்கள் 

3. முழு உழைப்பை கொட்டுங்கள்.

வாழ்த்துகள் பாஸ்.

vikatan

  • தொடங்கியவர்

14141508_1111957668852926_90993756820219

 
 
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும், இலங்கையின் அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சித் தலைவராக முதலாவது சிறுபான்மையின நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர். அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்களது பிறந்தநாள் இன்று
  • தொடங்கியவர்
 

தோற்றவர்களின் கதை - 22

 

p26a2.jpg

p26.jpg

லிலியோ, ஐசக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வரிசையில் வைத்துப் போற்றப்படும் மகத்தான இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங். பிரிட்டிஷ் இயற்பியலாளரும் எழுத்தாளருமான ஸ்டீஃபன் ஹாக்கிங், பிரபஞ்சத்தின் தோற்றம், காலப் பயணம், வேற்றுகிரகவாசிகள், பிரபஞ்சக் கருங்குழிகள் போன்றவை பற்றிய தனது சிந்தனைகளால் விஞ்ஞான உலகை உலுக்கி வருபவர். அறிவியல் கோட்பாடுகளை விளக்கும் ஒரு புத்தகத்தை ஒரு கோடி பிரதிகள் விற்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய ஜனரஞ்சக இயற்பியலாளர் அவர்...

நரம்புத் தசை நோயால் பாதிக்கப்பட்டு, உடலின் பெரும்பகுதி செயல் இழந்த நிலையில், 40 ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் முடக்கப்பட்டிருக்கிறார் அவர். வாய் பேச முடியாத நிலையில், தனது கண் புருவ அசைவுகளையே வார்த்தைகளாக மாற்றும் கணினி உதவியுடன் எழுதிக்குவித்தும் வரும் 75 வயது ஸ்டீபன் ஹாக்கிங், நம் சமகாலத்தில் வாழும் ஓர் அறிவியல் அதிசயம். உடல்பலத்தைவிட வலிமையானது மனபலம் என்ற கருத்துக்கு இவரைவிடச் சிறந்த உதாரணம் இருக்கவே முடியாது.

பிரிட்டனில் 1942-ம் ஆண்டு, ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார் ஸ்டீபன் ஹாக்கிங். தந்தை மருத்துவர். தாயார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். எனினும் பள்ளிப்படிப்பில் ஸ்டீபன் ஹாக்கிங் சுமார் ரகம். என்றபோதும், ஏன் - எதற்கு - எப்படி என்ற கேள்விகளை எழுப்பி, விடை தேடுவது அவரது இயல்பாக இருந்தது. இதனால், பள்ளியில் அவருக்கு வைக்கப்பட்ட பட்டப் பெயர் ஐன்ஸ்ட்டீன்.  தன்னைப்போல் மகனை மருத்துவராக்க விரும்பினார் தந்தை. ஆனால், ஸ்டீபனுக்கோ இயற்பியல் படிப்பதில் ஆர்வம். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியலையும் வேதியியலையும் படித்தார். மூன்றாவது வருடம் படித்துக்கொண்டு இருந்தபோது, தனக்கு ஏதோவொரு வினோத நோய் வந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். அவரது தசை மாதிரிகளை எடுத்துப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு நரம்புத் தசை நோய் வந்திருப்பதை உறுதி செய்தனர். அந்த நோய், சுயமான தசை இயக்கங்களை ஆட்சி செய்யும் நரம்புச் செல்களைச் சிதைத்துவிடும். அந்த நோய் முற்றிவிட்டதால் அவர் இரண்டு வருடங்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

ஆனால், சக்கர நாற்காலியில் இருந்தபடியே பல்கலைக்கழக ஆய்வினை முடித்து, பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்தது. மூன்று குழந்தைகளும் பிறந்தன. 1970 முதல், ஸ்டீபன் அண்டவெளிக் கருங்குழிகளைப் பற்றி ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தார். ஒளித்துகளை கருங்குழிகள் விழுங்கிவிடும் என்றும் கருங்குழியின் வெப்பத்தால் கதிர்வீச்சு எழுகிறது என்றும் அவர் கண்டறிந்த கோட்பாடுகள், இயற்பியல் உலகில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.

1985-ம் வருடம், அவர் அணுத்துகள் ஆராய்ச்சிக்காக ஜெனீவா சென்றிருந்தபோது, நரம்பு நோய் முற்றியதால், அவரது உடல் இயக்கங்கள் பெருமளவில் செயலிழந்துவிட்டன. அவர் இன்னும் சில மணி நேரம்தான் உயிருடன் இருப்பார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். உடனடியாக அவரைக் கேம்பிரிட்ஜ் மருத்துவக் கூடத்துக்கு விமானத்தில் கொண்டு சென்றனர். அங்கு நடந்த தொண்டைக்குழி அறுவை சிகிச்சையால் அவர் உயிர் பிழைத்தார். ஆனால், அவரது குரல் முற்றிலும் அறுந்து போய்விட்டது. தனது உடல் தசைகள் தன் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும், மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன் இருக்குமாறு, அவர் தனது சிந்தனைப்போக்கை அமைத்துக்கொண்டார். ஸ்டீபனின் கண் புருவ அசைவுகளைப் படம்பிடித்து, அவற்றையே வார்த்தைகளாக மாற்றும் கணிப்பொறி மென்பொருளை உருவாக்கிய அவரது மாணவர்கள், அதற்கான கருவிகளை அவரது சக்கர நாற்காலியில் பொருத்தித் தந்துள்ளனர். இதனால், தனது குறைபாட்டைப் பற்றி கவலைப்படாமல், அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன். மாணவர்களுக்கு அதிக உற்சாகத்துடன் பாடம் நடத்தினார்.

‘A Brief History of Time’ என்கிற புத்தகம் ஒன்றை எழுதினார். அந்தப் புத்தகம் ஸ்டீபன் ஹாக்கிங்கை புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ள அந்தப் புத்தகம், சண்டே டைம்ஸ் இதழில் 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது. பிரபஞ்சம் உருவானதற்குக் காரணமான பெருவெடிப்பு குறித்த கருத்தையும், அதற்கு முந்தைய காலகட்டத்தையும் இதில் அவர் விளக்கியுள்ளார். ‘காலம் எப்போது தொடங்கியது? எப்போது முடியும்? காலத்தைப் பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா?’ என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதில் சொல்லி மலைக்கவைத்தார் ஸ்டீபன் ஹாக்கிங்.

p26c.jpg

2010-ம் ஆண்டு வெளியிடப்பட்ட  ஸ்டீபன் ஹாக்கிங்கின் The Grand Design என்று நூல் உலகளாவிய சர்ச்சைகளை உருவாக்கியது. இந்த நூலில், இந்தப் பிரபஞ்சம் உண்டானதில் கடவுளின் பங்கு இருக்கலாம் என்ற நியூட்டனின் கோட்பாட்டை விமர்சனம் செய்துள்ளார் அவர். பிரபஞ்சம், சுயம்புவாக உருவானது என்று நிறுவியுள்ள ஸ்டீபன் ஹாக்கிங், உலகம் கடவுளால் வடிவமைக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று நிறுவுகிறார்.

“புவி ஈர்ப்பு விசை போன்ற இயற்பியல் விதிகள் உண்மையானவை என்பதால், இந்தப் பிரபஞ்சம், இயற்பியல் விதிகளின்படி தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டிருக்க முடியும் என்பதும் உண்மை. பிரபஞ்சத்தின் தோற்றம், உயிரினங்களின் தோற்றம், மனித இனத்தின் தோற்றம் அனைத்துமே அறிவியல் விதிகளின்படி இயல்பாக நடந்திருக்க முடியும். கடவுள் என்ற ஒருவர், திடீரென ஒரு நாள் பட்டனை அழுத்தி பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று சொல்லி, எதற்காக இங்கே கடவுளை உள்ளே கொண்டுவர வேண்டும்?” என்று அவர் எழுப்பிய கேள்வி அறிவியல் பார்வையுடன் அனைத்தையும் பார்க்க வலியுறுத்தியது.

புனைகதைகளின் சுவாரஸ்யத்துடன் காலப் பயணம் குறித்து அறிவியல் ரீதியில் விளக்கியவர் ஸ்டீபன் ஹாக்கிங் மட்டுமே. “இறந்த காலத்துக்கான காலப் பயணம் சாத்தியமில்லை என்பது சோகமான உண்மை. டைனோசர் வேட்டைக்காரர்களுக்கு இது ஏமாற்றம் தரலாம். வரலாற்று ஆசிரியர்களுக்கு நிம்மதி தரலாம்” என்று அறுதியிட்டுக் கூறும் ஸ்டீபன் ஹாக்கிங், எதிர்காலத்துக்குள் காலப் பயணம் மேற்கொள்வது கோட்பாட்டு ரீதியில் சாத்தியமே என்கிறார். “ஒளியின் வேகத்தில் பயணிக்கும் கப்பலை நம்மால் உருவாக்க முடிந்தால், அதில் நாம் புறப்பட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு, கப்பல் தளத்தின் ஒருநாள், பூமியின் ஒரு முழு ஆண்டுக்கு நிகராகும். நமது கப்பல் உண்மையாகவே எதிர்காலத்தில் பறந்துகொண்டிருக்கும். மனிதன் தன் வாழ்நாளுக்குள்ளேயே, அசாத்தியமான தொலைவைக் கடந்து பயணிக்க முடியும். பிரபஞ்சம் எவ்வளவு விநோதமாக உள்ளது என்பதை நாம் அறிய முடியும்” என்று சுவைபட விளக்குகிறார் அவர்.

அண்டப் பெருவெளியில் பூமியைப் போன்ற கிரகங்கள் இருக்கக் கூடும் என்றும், அத்தகைய வேற்று கிரகவாசிகள் நம்மைவிட முன்னேறியவர்களாக இருக்கக் கூடும் என்றும் ஸ்டீபன் ஹாக்கிங் கருதுகிறார். அத்தகைய வேற்று கிரகவாசிகளை நாமாக தேடவேண்டாம் என்றும் அவர் வலியுறுத்துகிறார். “கொலம்பஸ் வந்ததால் உள்ளூர் அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டதுபோல், வேற்று கிரகவாசிகள் இங்கு வந்தால், மனிதகுலம் பாதிக்கப்படலாம்” என்பது அவரது கருத்து.

p26b.jpg

உடலின் பல பாகங்கள் பெருமளவு செயல் இழந்த நிலையில், 2005-ம் ஆண்டு, பி.பி.சி தொலைக்காட்சி நிலையத்துக்கு சக்கர நாற்காலியில் அழைத்துவரப்பட்டார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங்.  ‘‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்பைவிட மிகவும் சுவாரஸ்யமாகவும், சவால்கள் நிறைந்ததாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது’’ என்றார். இந்த உடல்நிலையுடன் உங்களால் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்க முடிகிறதா என்று அடுத்த கேள்வி தயக்கத்தோடு கேட்கப்பட்டது. ‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன ஆற்றல் உங்களிடம் மீதம் இருக்கிறது என்பதே வாழ்க்கையில் முக்கியம்’’ என்றார் ஸ்டீபன் ஹாக்கிங்.

தோல்விகள் மூலமாக துவண்டுவிடாமல் பாடம் கற்றுக்கொண்டு வெற்றிபெற்றவர்களை இதுவரை உங்களுக்கு அடையாளம் காட்டினேன்.இதில் இருந்து நாமும் பாடம் கற்றுக் கொள்வோம்!

(நிறைவு)

vikatan

  • தொடங்கியவர்

14068333_1111950935520266_27995608787226

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் டினோ பெஸ்ட்டின் பிறந்தநாள் இன்று
Happy Birthday Tino Best

  • தொடங்கியவர்

14103009_1111950188853674_74962666885546

மானிட சேவைக்கான உண்மை அர்த்தமாகத் தனது வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்த நடமாடிய தியாக தீபம் அன்னை தெரேசா பிறந்தநாள் இது.

"நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால் நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?" - அன்னை தெரேசா

அன்னை என்ற வார்த்தை சிலரின் வாழ்க்கைக்கு அடைமொழியாய் நிற்கும்போது அதற்கு அழகு கூடுகிறது. மெசடோனியா நாட்டில் எங்கோ ஒரு மூலையில் அல்பேனிய இனத்தில் பிறந்த ஆக்னஸ், பின்னாளில் தெரேசாவாக உருவெடுத்தபோது அவருக்கு இந்த அன்னை என்ற அடைமொழி அழகாய் பொருந்தி நின்றது. அன்னை தெரேசா என்று உச்சரிக்கும்போதே சாந்தமே உருவான ஒரு கருணை பொங்கிய முகம் நம் மனக்கண் முன்னால் ஒரு நொடி நிழலாடிச் செல்வது உண்டல்லவா?

 

அன்னை தெரசா

 
mother-teresa-16_2987106f.jpg
 

நோபல் பரிசு பெற்ற சமூக சேவகர்

*உலகம் முழுவதும் அன்பு, கருணையை வாரி வழங்கிய முன்னுதாரண சமூக சேவகரும் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான அன்னை தெரசா (Mother Teresa) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*யூகோஸ்லேவியாவில், ஸ்கோப்ஜே என்ற நகரில் பிறந்தவர் (1910). ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்பது இவரது இயற்பெயர். 8 வயதில் தந்தையை இழந்தார்.

*இவரது அம்மா மிகவும் தர்ம சிந்தனை கொண்டவர். இவர்கள் வீட்டில் எப்போதுமே குடும்ப உறுப்பினர்களைத் தவிர நிறைய பேர் சேர்ந்து உண்பார்கள். ‘மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் ஒரு வாய் உணவைக்கூட உண்ணக்கூடாது’ என்பது அம்மா சொல்லிக்கொடுத்த பாலபாடம்.

*12 வயதில் முதன்முதலாக ஆன்மிக அழைப்பை உணர்ந்தார். 18 வயதில் கன்னிகா ஸ்திரீயாக மாறுவது என முடிவு செய்தார். வீட்டைவிட்டு வெளியேறி, அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார். ‘சகோதரி தெரசா’ என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். 1923-ல் ‘சோடாலிட்டி ஆஃப் சில்ரன் ஆஃப் மேரி’ என்ற சமூக சேவை அமைப்பில் இணைந்தார்.

*1929-ல் கல்கத்தா வந்தார். அங்கு ஒரு பள்ளியில் சுமார் 17 ஆண்டு கள் பணிபுரிந்தார். 1946-ல் இவர் உணர்ந்த மற்றுமொரு ஆன்மிக அழைப்பை ஏற்றார், ஏழைகளுக்கு உதவுவதற்காக, கற்பித்தல் பணியிலிருந்து விலகினார். கல்கத்தாவின் மிக ஏழ்மையான குடியிருப்புகளுக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்தார். அவர்களுக்கு

*சேவை செய்வதற்காக செவிலியர் பணிக்கான மருத் துவப் பயிற்சி பெற்றார். இவருடன் இணைந்து சேவையாற்றும் 10 பேர் கொண்ட முதல் குழு உருவானது. 1950-ல் ‘ஆர்டர் ஆஃப் தி மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ என்ற அமைப்பை உருவாக்கினார். தனது அமைப்புகளுக்கு தெருத்தெருவாகச் சென்று நிதி உதவி திரட்டினார்.

*1952-ல் ‘நிர்மல் ஹ்ருதய்’ என்ற இல்லத்தைத் தொடங்கினார். கல்கத்தா தெருக்களில் ஆதரவற்றுக் கிடந்த ஏராளமான தொழுநோயாளிகளை இங்கு கொண்டு வந்து பராமரித்தார். அவர்களின் காயங்களுக்கு மருந்திட்டார்.

*எய்ட்ஸ், தொழுநோய், காசநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கான நலவாழ்வு மையங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்துக் கான ஆலோசனை அமைப்புகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றவர்கள் ஆகியோருக்கான மையங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றையும் ஆரம்பித்தார்.

*‘சிறந்த சமூக சேவகர்’, ‘ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் பாதுகாவலர்’ என உலகமே இவரைப் பாரட்டியது. உலகில் எங்கெல்லாம் மக்கள் துன்புறுகிறார்களோ அங்கெல்லாம் ஓடோடிச் சென்று உதவினார். ‘சம்திங் ப்யூட்டிஃபுல் ஃபார் காட்’ என்ற இவர் வாழ்க்கை குறித்த ஆவணப்படம் வெளிவந்துள்ளது.

*இவரது மனிதநேயப் பணிகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு 1979-ல் வழங்கப்பட்டது. பத்ம விருது, ஜவஹர்லால் நேரு விருது, பாரத ரத்னா விருது, அமெரிக்க ஜனாதிபதி பதக்கம், பிலிப்பைன்சின் ரமன் மகசேசே விருது, ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா, மற்றும் இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளின் ஆர்டர் ஆஃப் மெரிட் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விருதுகளையும் கவுரவங்களையும் பெற்றார். இந்தியாவிலும்

*மேற்கத்திய நாடுகளிலும் பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கின. அரை நூற்றாண் டுக்கும் மேலாக மானுட சேவையில் இறைதரிசனம் பெற்ற அன்னை தெரசா 1997-ம் ஆண்டு 87-வது வயதில் மறைந்தார். அப்போது 123 நாடுகளில் இவரது 610 தொண்டு அமைப்புகள் இயங்கி வந்தன.

tamil.thehindu

  • தொடங்கியவர்

6 அடி மணலில் இறங்கி ஏறிய கார்! - சன்னி லியோனின் புதிய கார் காதல்

land%20cruiser.jpg

திருப்பதி போய்விட்டு லட்டு வாங்காமல் வருவதும், குற்றாலம் போய்விட்டு குளிக்காமல் வருவதும் எப்படி முட்டாள்தனமோ, அதுபோல்தான் துபாய் போய்விட்டு மணல் சஃபாரியை அனுபவிக்காமல் வருவதும். துபாயில் இதை செமையாக அனுபவித்து வந்துவிட்டார் பாலிவுட் நடிகை சன்னிலியோன். 

அண்மையில் துபாயில் ஒரு ஃபேஷன் நிகழ்ச்சிக்காக சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளச் சென்ற சன்னி லியோன், தனது கணவர் டேனியல் வெப்பரிடம், ‘‘டெஸர்ட் சஃபாரி போலாமா டார்லிங்?’’ என்று வேண்டுகோள் வைக்க, எந்த மறுப்பும் சொல்லாமல் ஓகே சொல்லிவிட்டார் டேனியல். சஃபாரிக்குச் செல்லும் முன்பு தன் சக நடிகர் நடிகைகளிடம் மணல் சஃபாரி அனுபவம் பற்றி போனில் கேட்டுத் தெரிந்து கொண்டுதான் கிளம்பினாராம் சன்னிலியோன். 

sunny%20at%20dubai.jpg

டெஸர்ட் சஃபாரி செல்வது, முதன் முதலில் கப்பலில் பயணம் செய்வதைப் போன்றது. அதாவது, முதல் முறை பயணம் செய்பவர்களுக்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டு வாந்தி வருவது சகஜம். சன்னியும் முதன் முதலில் டெஸர்ட் சஃபாரி செய்தபோது, வாந்தியே எடுத்துவிட்டாராம். 

டெஸர்ட் சஃபாரியில் சாதாரண கார்களில் எல்லாம் பயணிக்க முடியாது. 4 வீல் டிரைவ் எஸ்யுவி-கள் மட்டும்தான் இந்த மணல்களில் ஏறி, இறங்கிச் செல்லும் லாவகம் கொண்டவை. நிஸான் பேட்ரோல், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் போன்ற 4 வீல் டிரைவ் கார்களைத்தான் இதற்கு பெரும்பான்மையாகப் பயன்படுத்துகிறார்கள். எத்தனை அடி உயரமாக இருந்தாலும் ஏறி இறங்கும் வகையில் இந்த லேண்ட்க்ரூஸர்கள் ‘4 வீல் டிரைவ் லோ’ கியரில் இயங்கக் கூடியவை. மல்டி டெரைன் மோடு, ABS, ஹில் ஹோல்டு அசிஸ்ட் என்று எக்கச்சக்க வசதிகளுடன் லேண்ட்க்ரூஸர் 6 அடி கொண்ட மணற்புதர்களில், சாதாரண சாலைகளில் செல்வதைப்போல் லாவகமாக இறங்கி ஏறியதைக்  கண்டு வியந்துவிட்டாராம் சன்னி லியோன். 

land%20cruiser%20sunny.jpg

இந்த வகை கார்கள் பாதுகாப்புக்காக, ரேல் கேஜ் செய்யப்பட்டிருக்கும். அதாவது மணல் புயல்களிலோ, பாலைவனப் பாதாளத்திலோ கார்கள் உருண்டு புரண்டாலும் உள்ளே இருப்பவர்களுக்கு எதுவும் ஆகாதவண்ணம் இது நம்மைப் பாதுகாக்கும். 
எத்தனை அடி மணலில் கன்னாபின்னாவென சிக்கிக் கொண்டாலும், சட்டென சீறிக் கிளம்பக் கூடிய வகையில் இரண்டு டர்போ சார்ஜர்களும் இந்த காரில் உண்டு. 

ஆடி A5, மஸராட்டி, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் என்று ஸ்போர்ட்ஸ் கார்களை மட்டுமே தன் கலெக்ஷனில் வைத்துள்ள சன்னி லியோனுக்கு, இந்த சஃபாரிக்குப் பிறகு எஸ்யுவி கார்களின் மீது தனிப் பிரியம் வந்து விட்டதாம். எனவே, பிரம்மாண்டமான லேண்ட்க்ரூஸர் வாங்கவும் திட்டமிட்டு விட்டாராம் சன்னி லியோன். இதன் விலை கிட்டத்தட்ட 1.75 கோடி!

vikatan

  • தொடங்கியவர்

Angela Nikolau : செல்ஃபி புள்ள

self---facebook-and-storysize_647_082216

இதை யாரும் முயற்சி செய்ய வேண்டாம். ஆரம்பத்திலேயே அபாய அறிவிப்பானு நினைக்காதீங்க, விஷயம் அந்த மாதிரி. ரஷ்யாவில் ஒரு செல்ஃபிபுள்ள அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார் ஏஞ்சலா நிக்கோலு. இவர் எடுக்கும் செல்ஃபிகளும், போட்டோக்களும் உதட்டைக் குவித்து எடுப்பதோ, இரண்டு விரலை காட்டிக் கொண்டு எடுப்பதோ இல்லை. உயரமான இடங்களுக்குச் சென்று விளிம்புகளில் நின்று கொண்டு எடுப்பது தான் ஏஞ்சலா ஸ்டைலே. இன்ஸ்டாகிராமில் இவர் போட்டோக்கள் அனைத்துக்கும் ஹார்டீன்கள் குவிகிறது. ஒரு போட்டோவுக்கு அக்கப்போறா...

vikatan

  • தொடங்கியவர்

 

நிர்வாண ஓவியங்களின் மாயக்கோலங்கள் - காணொளி

கேளிக்கை விரும்பிகளை மகிழ்ச்சிப்படுத்த மாயத்தோற்றத்தை காண்பிக்கும் கலைகளை வடிப்பது பலகாலமாக இருக்கும் ஒன்றுதான். ஆனால், இந்த ஆக்கங்களோ நிகரற்ற வண்ணக்கோலங்கள்.

  • தொடங்கியவர்
 
குரங்கை தத்தெடுத்த பூனை
========================
ரஷ்யாவில் தாயால் கைவிடப்பட்ட அணில் முக குரங்கு குட்டியை இந்த பூனை வளர்த்து வருகிறது.சில நாட்களுக்கு பிறகு இந்த குட்டி தனது மிருகக்காட்சி சாலைக்கே திரும்பிவிடுமாம்.
  • தொடங்கியவர்

14046128_1111031935612166_44055303949079

ஈழத்தின் மிகப் புகழ்பெற்ற தவில்இசைக் கலைஞராக விளங்கிய வி. தெட்சணாமூர்த்தி அவர்கள் பிறந்த தினம்.
உலகப்புகழ் பெற்ற தவில் மேதை 44 ஆண்டுகளே வாழ்ந்திருந்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.