Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: ஐஃபோனும் விலையில்லா கைபேசியும்

 

 
apple2_3002312f.jpg
 

ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களோடு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான ஐஃபோன் 7 மற்றும் ஐஃபோன் 7 ப்ளஸ். 32 ஜிபி ஸ்பேஸ், தண்ணீர் புகாத வடிவமைப்பு, 2 லென்ஸ் கேமரா என பல சிறப்பம்சங்கள் இதில் இருக்கின்றன. | கூடுதல் தகவலுக்கு > 'ஐஃபோன் 7', 'ஐஃபோன் 7 ப்ளஸ்' அறிமுகம்: அறிக 7 அம்சங்கள்

அதன் சிறப்புகள், சுமார் 50 ஆயிரம் ரூபாய் விலைகொண்ட ஐபோனை வாங்க வேண்டுமா உள்ளிட்ட விஷயங்கள் நெட்டிசன்களின் இன்றைய விவாதப் பொருளாகி இருக்கின்றன. அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

Vijay R

பத்தாயிரம் ரூவா போன் வாங்கறதுக்குள்ளயே ஏழரையாகி நாக்கு தள்ளுது, நமக்கு எதுக்கு சென்ராயன் ஆப்பிள்-7 எல்லாம்?

Harisudhan Sivasubramanian

ஆப்பிள் புது ஐபோன் 7 ரிலீஸ் ஆயிடுச்சு. நம்ம ஆன்ட்ராய்டு தான் பெஸ்ட். ஆமாம் சொல்லிட்டேன். (மனசுக்குள்ள) காசு இல்லமா... நீங்க வேற ஐபோன் 7-னு காண்டு ஆக்கிட்டு...

Ramesh Kumar

ஆப்பிள் 7 வந்தா என்ன 8 வந்தா என்ன? நீ சோத்தப் போடு.

Bhuvaneshwaran Ramamoorthi

ஆப்பிள் ஐ போன் 7 பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி கம்மியாகும் ஆய்வில் தகவல். கொழுத்தி போடுவோம்; நல்லா இருக்குல!

apple5_3002307a.jpg

கதிர் கதிரேசன்

ஆப்பிள் விலை

.

.

.

.

.

.

கிலோ 100/- மட்டுமே

#எங்க லெவல் அவ்வளவுதான்...!

வாசுதேவன் சுந்தர்

ஆப்பிள் போன் வந்ததுல இருந்தே ஒரே ஆப்பரேடிங் சிஸ்டம்ல எக்ஸ்டரா நாலு ஆப்சன் சேர்த்து விட்டுட்டு இருக்காங்க. Basic OS Performance -ல் எந்த மாற்றமும் இல்லை. மற்ற மொபைல் OS எல்லாம் kernelல் இருந்து எல்லாமே மாறிட்டு வருது இவங்க..?

பறக்கும்படை செல்வா

ஐ போன் 7 மாடலை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம். #செய்தி. ஜியோ சிம் சப்போர்ட் ஆகுமா ஆபிசர்ஸ்

apple_3002311a.jpg

ரா புவன்

இந்திய ரூபாயின் குறியீடான ₹ இப்பொழுது டாலருக்கு மிக அருகில் - ஆப்பிள் IOS7 அப்டேட்டில் இருக்கிறது. முதன்முதலில் கீபோர்டில் நம் இந்திய ரூபாய்க்குறியீட்டிற்கு தனி இடம் கொடுத்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

****

Wireless EarPods, dual back camera with 56mm lens இப்படி எல்லாமே கும்முன்னு வந்திருக்கு. மார்க்கெட் ரேட் என்னன்னு சொல்லிட்டாங்கன்னா, இன்னும் 6,7 ஒட்டகத்தை சேர்த்து மேய்ச்சு காசைச்சேர்த்தி வாங்கிப்புடலாம்.

நிவந்திகா தேவி

எல்லோருக்கும் ஆப்பிள் போனை விலையில்லா கைபேசியா என்னிக்கு தராங்களோ அன்னிக்குத்தான் தமிழ்நாடு வல்லரசாகும் என்று சொல்லிக்கொண்டு...

apple4_3002308a.jpg

✴ ✴யவனோ ஒருவன் ✴ ✴

ஆப்பிள் வேண்டும் என்ற மகனுக்கு, இது சீசனில்லை; அன்னாசிப்பழம் வேணும்னா வாங்கித்தரேன் சாப்ட்டுக்கோ என்று கூறி நகர்ந்தார் பழ வியாபாரி.

அஸ்வத்தாமன் சேரன்

பொருள் வாங்கும்போது நம்தேவைக்கா அல்லது நம்ஆசைக்கா என ஒருநிமிடம் யோசித்தால் சிக்கனம் தானாக வருமாம்- ஆப்பிள் ஐபோன் வைத்திருப்பவரின் பதிவு.

apple3_3002309a.jpg

நிவந்திகா தேவி ‏

ஆண்ட்ராய்ட் ங்குறாங்க, ஆப்பிள்ங்குறாங்க... நாம ஆயிரத்து இருநூறு ரூவா சாம்சங்கையே யூஸ் பண்ணுவோம். #ச்சீசீ இந்த ஆப்பிள் புளிக்கும்.

tamil.thehindu.

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

* ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கும் இடையேயான போட்டாபோட்டி, அடுத்த தலைமுறையைத் தொட்டிருக்கிறது. சந்திரசேகர் ராவின் மகனும், தெலங்கானா மாநிலத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.டி.ராமா ராவ்தான் தெலங்கானா ஆட்சியிலும் கட்சியிலும் ஆல் இன் ஆல். அதேபோல சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச்செயலாளருமான நரலோகேஷ்தான் ஆந்திராவில் எல்லாமும். ஆந்திராவில் நர லோகேஷ் ஒரு புராஜெக்ட்டுக்கு பிளான் போடுகிறார் என்றால், அதற்கு முன்பாகவே ராமா ராவ் அந்தத் திட்டத்தைத் தொடங்குவது, ராமா ராவின் திட்டங்களை லோகேஷ் காலிசெய்வது... என அப்பாக்களைவிட ஆக்ரோஷமாகப் போட்டிபோடுகிறது நெக்ஸ்ட் ஜென். நீங்க நடத்துங்க!


p46a.jpg

சினிமாவுக்கு பிரேக் போட்டுவிட்டு, ரோட் ட்ரிப் கிளம்பிவிட்டார் கல்கி கோச்சலின். அப்பாவும் பிரபல ட்ராவல் போட்டோகிராஃபருமான ஜோயல் கோச்சலினுடன், வடகிழக்கு மாநிலங்களில் 4,000 கிலோ மீட்டர் தூரம் பைக்கிலேயே பயணம்செய்திருக்கிறார் கல்கி. `பைக்கில் பயணம் செய்வதைத்தான் நான் உண்மையான ட்ராவல் என்பேன். காரில் ஏசி போட்டுவிட்டு, கண்ணாடிகளை ஏற்றிக்கொண்டு பயணிக்கும்போது, அந்த ஊரின் அழகும் மண்வாசனையும் வெறும் காட்சிகளாகத்தான் மனதில் பதிவாகும். ஆனால், பைக் பயணத்தில்தான் அது உடலோடு கலந்த உணர்வுகளாகப் பதிவாகும். அடுத்தது இந்தியா முழுக்க பைக்கில் ட்ரிப் போவதுதான் என் பிளான்’ என ஃபீலிங்ஸ் கொட்டியிருக்கிறார் கல்கி. பைக் கேர்ள்!


p46b.jpg

பொருளாதார முறைகேடு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த பிரேசில் ஜனாதிபதி தில்மா ரூசெஃப்பின் பதவி முழுவதுமாகப் பறிக்கப்பட்டிருக்கிறது. `என் ஆட்சிக் காலம் 2018-ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், என்னைப் பதவிநீக்கம் செய்தது செல்லாது. ஒரு தேர்தலில்கூட தோல்வியடையாத என்னை, அரசியல் சதியால் பதவிநீக்கம் செய்திருக்கிறார்கள். நான் வீழ்ந்துவிட்டதாக நினைத்தால் ஏமாற்றம் அவர்களுக்குத்தான். நான் குட்பை சொல்ல இங்கே வரவில்லை. மீண்டும் சந்திப்போம்...’ என நாடாளுமன்ற வாசலில் நின்று அதிரடிப் பேட்டி தட்டியிருக்கிறார் தில்மா. தில் லேடி!


p46c.jpg

* ஆஸ்கர் நாயகன் ஆகியிருக்கிறார் ஜாக்கி சான். 62 வயதான ஜாக்கி சான், புரூஸ் லீயின் `ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’, `என்டர் தி டிராகன்’ படங்கள் மூலம் ஸ்டன்ட் கலைஞராக ஹாலிவுட்டுக்குள் அறிமுகமானவர். பின்னர் ஹீரோவாக, குங்ஃபூ கிங்காக ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். `போலீஸ் ஸ்டோரி', `ரஷ் ஹவர்', `ஹூ அம் ஐ' என உலகம் முழுவதும் பல ஆயிரம் கோடிகளைக் குவித்த பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்கள் இவருடையவை. ஆனால், ஆஸ்கர் விருதுக்கு இவரது ஒரு படம்கூடத் தேர்வாகவில்லை. இந்தக் குறையைப் போக்கும் வகையில் ஜாக்கி சானுக்கு, வாழ்நாள் சாதனைகளுக்கான கெளரவ ஆஸ்கர் விருதை அறிவித்திருக்கிறது ஆஸ்கர் கமிட்டி. வரும் நவம்பர் மாதம் லாஸ் ஏஞ்சலஸில் இந்த விருதைப் பெறுகிறார் ஜாக்கி. சல்யூட் ஜாக்கி!


p46d.jpg

ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் கலக்கிய திபா கர்மாகர் இப்போது பரீட்சையில் பிஸி. அகர்தலாவில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.ஏ பொலிடிக்கல் சயின்ஸ் படித்துவரும் திபாவுக்கு, இப்போது செமஸ்டர் ஆரம்பித்துவிட்டது. `ஒலிம்பிக் ட்ரெய்னிங்கில் இருக்கும்போதே என் குடும்பத்தினரிடம் புத்தகங்கள், நோட்ஸ் கொண்டுவரச்சொல்லி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் படிப்பேன். அதனால் பரீட்சையைக் கண்டு பயம் இல்லை. நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறுவேன். நான் படிப்பிலும் நம்பர் ஒன்' என்கிறார் திபா கர்மாகர்.  ஆல் தி பெஸ்ட் திபா!

vikatan

  • தொடங்கியவர்
 
 
 
Bild zeigt 1 Person , Brille und Nahaufnahme
 

செப்.9: #கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி எனும் தமிழ் எழுத்துலகின் பெருமனிதர் பிறந்த தினம் இன்று!

சரித்திர நாவல்கள் மற்றும் சமூக நாவல்கள் என்று இரண்டு துறையிலும் இயங்கிய அவரின் நூல்கள் இன்றைக்கும் பெருமளவில் வாசிக்கப்படுகின்றன.

புத்தமங்கலத்தில் பிறந்த அவர் எஸ் எஸ் எல் சி படிக்கும் பொழுது காந்தியின் அழைப்பை ஏற்று ஒத்துழையாமை போரில் பங்குபெற தன்னுடைய படிப்பை துறந்து சிறை சென்றார்.

கல்கி முதலில் திரு விகவின் நவசக்தி இதழில் பணிபுரிந்தார். பின் ராஜாஜி அவர்களின் விமோசனம் பத்திரிக்கையை எடிட் செய்யும் பணியில் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் இருந்து ஈடுபட்டார். பின்னர் ஆனந்த விகடன் இதழில் இணைந்தார்.

அவரின் மனைவி கல்யாணி மற்றும் தன் பெயரை இணைத்து விஷ்ணுவின் அவதாரமான கல்கி என்பதை தன் புனைப்பெயராக சூடினார் அவர். கல்கியின் கையெழுத்து ஒரு காலத்துக்கு பிறகு எக்கச்சக்கமாக எழுதி எழுதி புரியாமல் போகிற நிலைக்கு போனது. அதனால் நகைச்சுவையாக ,”என் கையெழுத்து போகப்போக கம்போசிடருக்கும்,கடவுளுக்கும் மட்டும் புரியும் படி ஆகி விட்டது !” என்பார்

எக்கச்சக்க முடிச்சுகள்,ஆழ்வார்க்கடியான்,நந்தினி,சேந்தன் அமுதன் என்று கற்பனை கதாபாத்திரங்கள் இவற்றையெல்லாம் சேர்த்து அவர் தீட்டிய பொன்னியின் செல்வன் நாவல் இன்றைக்கும் புகழ் பெற்றதாக திகழ்கிறது. சமீபத்தில் நாடகமாக ஆக்கப்பட்ட பொழுது அதை பல்லாயிரம் ரசிகர்கள் கண்டு களித்தார்கள்.

சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு ஆகிய இரண்டு நாவல்களும் டி.கே.சி அவர்களுடன் மாமல்லபுரம் போன பொழுது மன ஓட்டத்தில் எழுந்த தாக்கத்தில் கல்கி வரைந்தார். உண்மையில் சிவகாமியின் சபதம் வானொலிக்கு நாடகமாக எழுதப்பட்டு பின்னர் நாவலானது. பார்த்திபன் கனவில் வரும் சோழ நாட்டு வீரர்களை இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை மனதில் கொண்டே கல்கி தீட்டினார். அவரின் பார்த்திபன் கனவே வரலாற்று நாவல்களில் அவர் எடுத்த முதல் படி.பாரதிக்கு மணிமண்டபம் எழுப்ப அவர் எடுத்த முயற்சிகள் இன்றும் மறக்க முடியாதவை.

சமூக நாவல்களிலும் தனி முத்திரை பதித்தவர் அவர். அவரின் தியாக பூமி கதை திரைப்படமாக வந்த பொழுது எக்கச்சக்க எதிர்ப்பை சந்தித்தது. படத்தில் இடம் பெற்றிருந்த தேச பக்திப் பாடல்கள், சுதந்திரப் போராட்ட காட்சிகள் காரணமாக, இந்தப் படத்துக்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது. தடை உத்தரவு வரப்போகிறது என்பது முந்தின நாள் தெரிந்து விட்டதால், படத்தை விடிய விடிய மக்களுக்கு இலவசமாகக் காண்பிக்க, டைரக்டர் சுப்பிரமணியமும், எஸ்.எஸ்.வாசனும் ஏற்பாடு செய்தனர். தியேட்டர் முழுவதும் கூட்டம் நிறைந்து வழிய, படம் இடைவிடாமல் காட்டப்பட்டது.

கல்கி கர்நாடகம் என்கிற பெயரில் எழுதிய இசை விமர்சனங்கள் புகழ்பெற்றவை. கல்கி ஆனந்த விகடன் இதழை விட்டு விலகி விடுதலைப்போரில் ஈடுபட்டு சிறை சென்றார். பின் கல்கி பத்திரிக்கையை துவங்க முடிவு செய்த பொழுது சதாசிவம் அவர்களின் மனைவி எம்.எஸ். அவர்கள் நடித்ததே மீரா திரைப்படம். அப்படத்தில் கல்கி எழுதிய பாடல் தான் காற்றினிலே வரும் கீதம் . கல்கி இதழில் அவர் தீட்டிய சரித்திர நாவல்கள் கல்கி இதழின் விற்பனையை இந்தியாவிலேயே சாதனை அளவாக எழுபதாயிரம் பிரதிகள் வரை அன்றைக்கு கொண்டு சேர்த்தது.

மது விலக்கு,சாதி ஒழிப்பு,காந்திய கொள்கைகள் என்று தன்னுடைய நாவலில் பிரசாரத்தை சேர்த்தே செய்த அவரை இன்றைக்கு இலக்கியவாதியே இல்லை என்று சொல்வோரும் உண்டு. ஆனாலும்,தமிழ் நாட்டில் எல்லாரின் வாசிப்பு பட்டியலில் பொன்னியின் செல்வன் கண்டிப்பாக இல்லாமல் போகவே போகாது. எழுதப்பட்டு அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்னமும் அதன் வசீகரம் அப்படியே இருப்பதே கல்கியின் வெற்றி தான். இன்னமும் அதை படமாக்கும் முயற்சியும் சாத்தியமாகவில்லை என்பதே அவரின் கதை சொல்லும் பாணிக்கு சான்று. கல்கி இறந்த பின் அவரின் அலையோசை நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

vikatan

  • தொடங்கியவர்

ரிஸ்க் Selfie

 

p58a.jpg

ருட்டில் தனியாக நடந்து போகவே பயப்படுறவங்க, ஃப்ரெண்ட்ஸ் கூட்டமா சேர்ந்துட்டா ‘ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி’னு காலரைத் தூக்கிவிட்டுப்பாங்க. அப்படி ரிஸ்க் எடுக்கி றதையே பார்ட் டைமா பண்றாங்க இந்த ரஷ்ய நண்பர்கள்.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரைச் சேர்ந்த ஏஞ்சலா நிக்கோலோ மற்றும் கிரில் ஒரெஷ்கின் ஆகிய இருவரும் நண்பர்கள். கீழே பார்த்தாலே தலைசுற்றும் அளவில் உள்ள மிகப்பெரிய கட்டடங்களின் உச்சிக்குச் சென்று, அபாயகரமான செல்ஃபி எடுத்து சோஷியல் மீடியாக்களில் பதிவேற்றுவதுதான் இவர்களது வேலையே! ஃபேஸ்புக், இன்ஸ்டா கிராம் என இணையம் முழுக்க இவர்களது புகைப்படங்கள் வைரல். கட்டடத்தின் உச்சியில் ஒற்றைக்காலில் நின்று யோகா செய்வது, கம்பியில் படுத்துக்கொண்டு கை ஆட்டுவது... என இவர்களது சேட்டைகள் எக்கச்சக்கம்! முடிந்தால் செல்ஃபி, முடியாவிட்டால் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றிப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.

p58b.jpg

செல்ஃபி முயற்சியில் உயிரிழப்புகள் பெருகிவருவதால், சுதாரித்துக் கொண்ட ரஷ்ய அரசு செல்ஃபிகளுக்கு எதிராகப் பல்வேறு விளம்பரங்களை அச்சிட்டு வருகிறது. எனவே இவர்களது குசும்புகளுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் சீனா, துபாய் எனப் பல நாடுகளுக்கு ட்ரிப் அடித்து செல்ஃபிகளை சுட்டுத் தள்ளிக்கொண்டிருக்கின்றனர்.

த்ரிஷா இல்லைனா நயன்தாரா!

vikatan

  • தொடங்கியவர்
 
கடலுக்கு அடியில் வாழும் மர்ம ஜந்து

கடலுக்கு அடியில் வாழும் மர்ம ஜந்து

 

கியூபா நாட்டுக்கு அருகில் பஹமாஸ் எனும் நாடு உள்ளது. சிறியதும் பெரியதுமாக சுமார் 3,000 தீவுகளை உள்ளடக்கிய இந்த பஹமாஸ் தீவுகளின் கடலில் சில விஞ்ஞானிகள் ஆராட்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கமரா பொருத்தப்பட்ட இயந்திரம் ஒன்றை கடலுக்கு அடியில் செலுத்தி ஆராட்சிகளை மேற்கொண்டனர்.

கடல் மேல் மட்டத்தில் இருந்து சுமார் 8,500 அடி ஆழ்ப்பத்தில் இப்பரிசோதனைகள் நடைபெற்றது. திடீரென ஒரு நாள் கடலுக்கு அடியில் இருந்த இயந்திரத்தில் இருந்து காட்சிகள் கிடைக்கப்பெறவில்லை. இதனை அடுத்து இந்த இயந்திரத்தை வெளியே எடுத்துப் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். காரணம் கமராவின் வயர்கள் கடிக்கப்பட்டு துண்டாடப்பட்டிருந்தன.

அக்கடலில் அவ்வளவு ஆளத்தில் சுறா மீன்கள் வசிக்க முடியாது இவ்வாறு இருக்கையில் எந்த வகையான மீன்கள் இவற்றைக் கடிக்கும் தன்மை கொண்டவை என்று அவர்கள் குழம்பிப்போனார்கள். இறுதியில் இயந்திரத்தைச் சரிசெய்து திரும்பவும் அதே இடத்தில் இறக்கினார்கள்.

ஆனால் இம் முறை, அந்த மர்ம ஜந்து மாட்டிக்கொண்டது. காரணம் அது மீண்டும் இந்த இயந்திரத்தை கடிக்க வந்தபோது, அதன் உருவம் கமராவில் பதிவாகியது. அது மட்டுமல்லாது சுமார் ஒன்றரை அடி நீளமான இந்தப் புதுவகையான ஜந்துவையும் அவர்கள் சாமர்த்தியமாகப் பிடித்துவிட்டார்கள். அதன் கால்களும் மற்றும் வாய்ப் பகுதிகளிலும் காணப்படும் கூரிய நகங்கள், வாள் போன்ற அமைப்பினைக் கொண்டவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

7 கால்களைக் கொண்ட இந்த ஜந்து இதுவரை பூமியில் கண்டுபிடிக்கப்படாத ஒரு இனம் ஆகும். பாத்திநோமஸ் ஜயன்டியஸ் என்று அழைக்கப்படும் இனத்தில் இதனை இணைத்துள்ளார்கள் விஞ்ஞானிகள். கடலுக்கு அடியில் சுமார் 8,500 அடி ஆழத்தில் வாழும் இந்த உயிரினம், தனது குடியிருப்புக்கு அருகாமையில் வித்தியாசமான ஒரு பொருள் இருப்பதை உணர்ந்து அதனை தாக்கியுள்ளது. இது வசிக்கும் பிரதேசத்தில் எப்போதும் வெளிச்சம் இருப்பதே இல்லை. காலம் முழுவதும் இருட்டில் வாழும் இனங்களில் இதுவும் ஒன்று ஆகும்.

onlineuthayan

8 minutes ago, நவீனன் said:

கடலுக்கு அடியில் வாழும் மர்ம ஜந்து

கடலுக்கு அடியில் வாழும் மர்ம ஜந்து

இந்த மூஞ்சிய எங்கோ பாத்தா மாதிரி இருக்கே என்று யோசித்தால் - Predator படம்தான் ஞாபகத்துக்கு வருகுது.

 

  • தொடங்கியவர்
இலங்கையின் கலாசாரப் பெருமைகளை உலகறிய வைத்த கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
இன்று நினைவு தினம்
showImageInStory?imageid=295824:tn
 

இந்­நாட்டு அறிஞர் பெரு மக்­களின் தனக்­கென ஒரு தனி­யி­டத்தை ஒதுக்கிக் கொண்ட கலா­யோகி ஆனந்த குமாரசுவாமி இலங்­கையின் தேசிய அறி­ஞ­ராக போற்­றப்­ப­டு­கின்றார். பிரிட்­டி­ஷாரின் ஆதிக்­கத்­துக்­குட்­பட்­டி­ருந்த 1903 ஆம் ஆண்டு இலங்­கையின் பூகோள தன்­மை­களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்­காக ஆங்­கி­லேய அரசு லண்டன் பல்­க­லைக்­க­ழக பூகோ­ள­வியல் பட்­ட­தா­ரி­யா­கிய இளைஞர் ஆனந்தகுமார சுவா­மியை இலங்­கைக்கு அழைத்­தது.

தனது மனைவி எத்தல் மேரி பர்ட்ரிஜ் சகிதம் இங்கு வந்து புவி­யியல் திணைக்­கள பணிப்­பா­ள­ராக பத­வி­யேற்று தனது உதவிப் பணிப்­பாளர் பார்­யன்­சுடன் இணைந்து நாட்டின் மூலை முடுக்­கு­க­ளி­லெல்லாம் சென்று பூமி பற்­றிய ஆராய்ச்­சியை மேற்­கொண்டார் ஆனந்தகுமார சுவாமி. போக்­கு­வ­ரத்து வச­தி­க­ளற்ற அக்­கால கட்­டத்தில் மாட்டு வண்­டி­யி­லேயே இவர்கள் நாட்டைச் சுற்றி வந்­தனர். வண்டி போக இய­லாத இடங்­களில் கால் நடை­யாக சென்று ஆய்வு மேற்­கொண்டார்.

'பூமி' பற்றி ஆய்வு செய்ய நாடு சுற்­றிய அவர் இந்­நாட்டு மக்­களின் பாரம்­ப­ரிய கலைகள், தொன்மை, தற்­போ­தைய வாழ்க்கை அமைப்பு என பல­த­ரப்­பட்ட தேடல்­க­ளையும் மேற்­கொண்டார். தாம் அறிந்து கொண்ட இலங்­கை­யர்­களின் கலா­சார சிறப்­பு­க­ளையும் தேசிய கலை பாரம்­ப­ரி­யங்­க­ளையும் உலகோர் அறியும் வண்ணம் படைப்­பு­களை உல­குக்கு அளித்தார். இதன் மூலம் இலங்­கை­யர்­களின் பெளத்தம், இந்து மதங்கள் பற்­றியும் மொழிகள் பற்­றியும் உலகம் தெரிந்து கொண்­டது.

கொழும்பு கொள்­ளுப்­பிட்­டியில் ரெய்­லாரிட்ஸ் என்னும் இல்­லத்தில் 1877 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி பிறந்த ஆனந்தகுமார சுவா­மியின் தந்­தையார் சேர். முத்துக்குமார சுவாமி அவர்­க­ளாவார். எலி­சபெத் மகா­ராணி விக்­டோ­ரி­யாவின் முடி­யாட்­சிக்­குட்­பட்ட அக்­கா­லத்தின் முதன் முதல் பாரிஸ்டர் பட்டம் பெற்ற இலங்­கையர் என்னும் சிறப்பு முத்­துக்­கு­மார சுவா­மிக்கு உண்டு.

தமி­ழ­ரா­கிய சேர் முத்­துக்­கு­மார சுவாமி பௌத்த மதம் பற்­றியும் பாளி மொழி பற்­றியும் ஆழ்ந்த புலமை கொண்­டி­ருந்தார். சுத்த நிபாத்­தய அரிச்­சந்­திரா நாடகம் ஆகி­ய­வற்றை ஆங்­கி­லத்தில் மொழி பெயர்த்து வெளி­யிட்டார். தனது புதல்வன் ஆனந்த குமார சுவாமி மூன்று வயது குழந்­தை­யாக இருக்கும் போதே தந்தை சேர் முத்­துக்­கு­மார சுவாமி இயற்கை எய்­தினார். தனி­மையில் பல சிர­மங்­களை எதிர்­கொண்ட அவ­ரது மனைவி மக­னையும் அழைத்துக் கொண்டு தனது தாய் நாடா­கிய இங்­கி­லாந்து சென்றார். இங்­கி­லாந்தில் வைக்ளிப் கல்­லூ­ரியில் பயின்ற ஆனந்தகுமாரசுவாமி விளை­யாட்­டுத்­து­றை­யிலும் பத்­தி­ரி­கைக்கு ஆக்­கங்­களைப் படைப்­ப­திலும் ஈடு­பா­டு­டைய கல்­வியில் சிறந்த மாண­வ­னாக பிர­கா­சித்தார். லண்டன் பல்­க­லைக்­க­ழத்தின் கதவு இவ­ரது திற­மைக்­காக இல­கு­வாக திறந்­தது. 1900 ஆம் ஆண்டு பூகோ­ள­வி­ய­லுக்­காக B.S.C பட்­ட­தா­ரி­யா­கிய இவரை இப்­பல்­க­லைக்­க­ழகம் தனது. ஆராய்ச்சித் துறையின் உயர் பத­வியில் அமர்த்திக் கொண்­டது. அச்­சந்­தர்ப்­பத்­தி­லேயே இலங்கை அரசு இவரை இங்கு வரு­மாறு அழைப்பு விடுத்­தது.

தாம் வந்த நோக்­கத்தைச் சரி­வர பயன்­ப­டுத்தி அறிக்­கையைச் சமர்ப்­பித்­த­தோடு பல கட்­டு­ரை­களை பல்­வேறு பத்­தி­ரி­கை­களில் எழு­தினார். இல­ங்­கை­யி­லி­ருந்த ஐரோப்­பிய சமூகம் இந்­நாட்டு பெருந்­தோட்டத் தொழிற்­றுறை தொடர்­பான இங்­கி­லாந்தின் ஆட்­சி­யா­ள­ருக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட கால­மது. அவர்­களால் இங்கு பல சங்­கங்­களும் அமைப்­பு­களும் உரு­வாக்­கப்­பட்டு தமது கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டன. இது பிரிட்டிஷ் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு தலை­யி­டியாய் இருந்­தது. இலங்கை மக்­களின் வாழ்­வியல் பற்­றிய நன்கு அறிந்­த­வ­ரான ஆனந்தகுமாரசுவாமி 1905 ஆம் ஆண்டு இலங்கை புன­ர­மைப்பு சங்­க­மென்னும் ஓர் அமைப்பை உரு­வாக்­கினார்.

இலங்கை மக்­க­ளுக்கு அவர்­களின் தாய்­மொ­ழியில் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்னும் கருத்­தினை இச் சங்­கத்தின் மூல­மாக அரசின் முன் வைத்தார். பேரா­த­னையில் பல்­க­லைக்­க­ழ­க­மொன்றை அமைக்க வேண்­டு­மென்ற முதல் குரலும் ஆனந்தகுமாரசுவாமியுடை­ய­தாகும். இலங்­கையின் தேசிய கலை­யேடு என்னும் சஞ்­சி­கையை ஆரம்­பித்து இத்­த­கைய புதிய சிந்­த­னை­களை மக்கள் முன் வியா­பிக்கச் செய்தார். பிரிட்டிஷ் அரசு இவரை இலங்கைத் தீவுக்கு அனுப்பி எதிர்­பார்த்­தி­ருந்த விடயம் வேறா­கவும் அவர் இங்கு மேற்­கொண்­டு­வரும் நட­வ­டிக்­கைகள் வேறா­கவும் தென்­பட்­ட­தனால் இவரை நாடு கடத்­து­வதா? அல்­லது பத­வி­யி­லி­ருந்து நீக்கி இங்­கி­லாந்­துக்கே அனுப்­பு­வதா? என ஆலோ­சிக்கத் தொடங்­கி­யது அரசு. இவர் மீது அர­சுக்கு ஏற்­பட்ட வெறுப்பு கார­ண­மாக இவ­ரது ஆய்­வு­களின் மூலம் இந்­நாட்டின் பூமி சார்ந்த இவ­ரது கண்­டு­பி­டிப்­பு­க­ளா­கிய கனிப் பொருட்­க­ளுக்கு இவ­ரது பெயரைக் குறிப்­பி­டு­வதைத் தவிர்த்துக் கொண்­டது அரசு.

தனது வாழ்­நாளில் இலங்கை, இந்­தியா, இந்­தோ­னே­சியா பற்றி ஐநூ­றுக்கு மேற்­பட்ட நூல்­களை எழு­தி­யுள்­ள­தோடு இலங்கை பற்றி மேற்­கொண்ட ஆய்­வு­களின் பின்னர் எழு­திய மத்­திய கால சிங்­கள கலைகள் (1908) மலை­நாட்டு பிர­பு­க­ளுக்கு ஒரு பகி­ரங்க மடல்(1905) மலை­நாட்டு விவ­சாயம் (1906) ஆகிய நூல்கள் மிக முக்­கி­ய­மா­ன­வை­யாகும். அத்­தோடு போராட்­டத்தின் உள்­ளார்ந்த பொருள், பாரத ஓவியக் கலை, ராஜ்புட் சித்­தி­ரக்­கலை, புத்­தரும் புத்த மதமும், இந்து சம­யமும் புத்த தர்­மமும், வேதம் அனுஷ்­டிக்க புதிய வழிகள், கௌதம புத்த பக­வானின் உயி­ரோட்­ட­மான சிந்­தனை, புத்த மதம் பற்­றிய புதிய சிந்­தனை, இக்­கா­லமும் எக்­கா­லமும் ஆகிய நூல்கள் இன்றும் அறி­ஞர்­களால் போற்­றப்­ப­டு­கின்­றன. உலக அறி­ஞர்கள் தாம் மேற்­கொள்ளும் ஆய்­வு­க­ளுக்கு ஆனந்த குமார சுவாமியின் நூல்­களைக் கைநூல்­க­ளாகப் பாவிப்­பது சிறப்­புக்­கு­ரி­ய­தாகும்.அவரால் எழு­தப்­பட்ட அனைத்து நூல்­க­ளையும் எம்மால் காண முடி­யா­விட்­டாலும் அவற்றில் பெரும் பகுதி அமெ­ரிக்க பொஸ்டன் நூத­ன­சா­லையில் பார்­வைக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன. அவர் இறு­தி­யாக அந்த நுத­ன­சா­லையின் கீழைத்­தேய கலைகள் பற்­றிய திணைக்­கள பொறுப்­பா­ள­ராக தொழில் புரிந்­த­மையால் இது சாத்­தி­ய­மா­கி­யது. 1917ஆம் ஆண்டு பெறு­மதி வாய்ந்த படைப்­புக்­களை அமெ­ரிக்க வர்த்­த­க­ரான டெஸ்டன் வோல்­டோ­வுக்கு விற்­பனைச் செய்தார். அவ்­வர்த்­தகர் தமது இறு­தி­கா­லத்தில் அவை­ய­னைத்தும் இந்­நூ­த­னச்­சா­லைக்கு வழங்­கினார்.

எழு­ப­தாண்டு கால இலக்­கிய பணி­பு­ரிந்த கலா­யோகி ஆனந்த குமார சுவாமி 1947ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 09ஆம் திகதி அமெ­ரிக்­காவில் பொஸ்ட்டன் நகரில் இயற்கை எய்­தினார். அமெ­ரிக்க ஹார்வாட் பல்கலைக்கழக கீழைத்தேய கலை சரித்திர பேராசிரியராகிய பெஞ்சமின் டொனால்ட் ஆனந்த குமார சுவாமி பெரும்பாலும் ஓர் அவதாரமாகவே தென்படுகிறார். சில வேளைகளில் படைப்பாளிகளாகவும் சிலவேளைகளில் ஒரு பூகோள ஆய்வாளராகவும் மறுகணம் ஓர் அரசியல் சீர்த்திருத்தவாதியாகவும் சில சந்தர்ப்பங்கள் கலைகள் பற்றிய வரலாற்றாசிரியராகவும் இறுதியாக சனாதன தர்மம் பற்றிய விமர்சகராகவும் தோற்றம் பெறுகிறார் எனப் புகழ்ந்தார்.தமிழர்களாய் பிறந்தவர்கள் தமிழுக்கும் சைவத்திற்கும் தமது இனத்திற்கும் மட்டுமே பணிபுரிந்தனர். தேசிய ரீதியில் செயல்படவில்லை என்னும் அவப்பெயர் தோன்றாதிருக்க காரணமானவர்களாக சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன்.அருணாச்சலம் ஆகியோருடன் கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி மாத்திரமே விரல்விட்டு எண்ணக்கூடியதாக தோன்றி மறைந்தும் மறையாதிருக்கிறார்.

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=09/09/2016

  • தொடங்கியவர்

கொஞ்சம் காஸ்ட்லி மேட்டர்!

 

தெல்லாம் பணக்கார மேட்டர்கள்தான். நாம வேணும்னா படிச்சிப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கலாம்.

நம்ம ஊருக்கு எப்போ?

p112.jpg

பிரேசிலில் உள்ள சௌபாலோ (Sao Paolo) டிராஃபிக் ஜாமிற்குப் பெயர் போனது. உலகத்திலேயே மோசமான வாகன நெரிசல் உள்ள நகரமாக டைம்ஸ் இதழால் இது தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப் பிரச்னையால், இப்போது அங்கே வாடகை ஹெலிகாப்டர் தொழில் சூடுபிடித்துள்ளது. விருப்பப்படுபவர்கள் தங்களது இடத்திலிருந்து கிளம்பி, ஹெலிபேட் அமைந்துள்ள ஹோட்டல்களில் இறங்கிக் கொள்ளலாம். வசதி படைத்தவர்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரும் பயன்படுத்தும் வகையில் உபேர் நிறுவனம், நெரிசல் மிகுதியான குறிப்பிட்ட ஆறு கிலோமீட்டர்களைக் கடக்க அறிமுகச்சலுகையாக வெறும் 19 டாலர்களை வசூலிக்கிறது. இந்த பிஸினஸுக்கு சென்னையில் நல்ல எதிர்காலம் இருக்கு.


p112a.jpg

நாங்க காட்டையே உருவாக்குற ஆட்கள்!

30 வருடங்களுக்கு முன் நியூயார்க் நகரில், சூப்பர் மார்க்கெட் ஒன்றி வேலை பார்த்துக்கொண்டிருந்த பாப் பிராங்கா, இன்று கன்சல்ட்டிங் நிறுவனத்தின் உரிமையாளர். டிசம்பர் ஆரம்பமானால் செம பிஸியாகிவிடுகிறார். நடிகைகள் முதல் அரசியல் செலிபிரட்டிகள் வரை பெரும்பாலானோர் தங்கள் வீட்டில் வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்க பிராங்காவின் உதவியை நாடுகின்றனர். பட்ஜெட், ஸ்டைல் ஆகியவற்றை ஆலோசித்துவிட்டு விருப்பப்பட்டபடி கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்க, இவர் 80,000 அமெரிக்க டாலர்கள் வரை கட்டணமாகப் பெறுகிறார். இந்தப் பணத்துக்கு மொத்த வீட்டையே ஆல்ட்ரேஷன் பண்ணிருவோமே நாங்க!


p112c.jpg

காஸ்ட்லியான டின்னர்!

உலகத்துலயே காஸ்ட்லியான டின்னரை சிங்கப்பூரில் இருக்கும் ‘த மரினா பே சேண்ட்ஸ் ஹோட்டல்’ தான் வழங்குகிறது. முன்பதிவு செய்யும் ஜோடிக்கு ஹெலிகாப்டரில் வானிலும், சொகுசுக்கப்பலில் நீரிலும், ரோல்ஸ் ராய்ஸ் காரில் நிலத்திலும் என சிங்கப்பூர் முழுவதையும் சுற்றிக்காட்டுகிறது. 55 அடுக்குகள் கொண்ட இந்த ஹோட்டலின் உச்சியில், 10,000 ரோஜா மலர்கள் நிரப்பப்பட்ட அறையில் உலகப் புகழ்பெற்ற விசேஷ உணவுகள் பரிமாறப்படும். எட்டு மணி நேர விருந்திற்குப் பின் வைரக்கற்கள் பதித்த சாப்ஸ்டிக்ஸ் மற்றும் நாற்காலி ஒன்றை ஜோடிக்கு நினைவுப் பரிசாக ஹோட்டல் நிர்வாகம் வழங்குகிறது. இந்த விசேஷ விருந்திற்கு 20 லட்சம் அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. இந்தப் பணத்துக்கு இங்கே பத்து தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!


p112d.jpg

ரெயின் ரெயின் கோ அவே!

நம்ம ஊர்ல கல்யாணத் தன்னைக்கு மழை வந்தா, முகூர்த்த நேரம்தாண்டி மெதுவா போகலாம்னு வீட்ல உட்கார்ந்துடுவோம். ஆனால் ‘ஆலிவர்ஸ் ட்ராவல்ஸ்' என்ற நிறுவனம், வசதி படைத்தவர்களின் திருமணத்தில் மழை இடையூறு செய்யாதபடி, திறமையான வானியல் நிபுணர்களின் உதவியோடு மேகத்தில் சில்வர் அயோடைட் ரசாயனக் கலவையைத் தூவி, மழையை அருகிலுள்ள வேறு இடத்தில் பொழியச் செய்கிறார்கள். இதற்கு அவர்கள் வாங்கும் ஊதியம் ‘வெறும்’ ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் மட்டுமே. பரவாயில்லை. நாங்க குடையே பிடிச்சிக்கிறோம்!


p112e.jpg

அங்கு என்ன தெரிகிறது?

பிரேசில் நாட்டின் ‘ஏர்ஷிப் கியோடோ’ விமானத் தயாரிப்பு நிறுவனம், கார்களில் உள்ளதுபோல் வானத்தைப் பார்க்கும் வகையில், தனியார் விமானங்களிலும் சன்ரூப் டாப் வசதியை 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் விமானத்தில் இயற்கை ஒளியையும், இரவு நேரத்தில் நட்சத்திரங்களையும் கண்டுகளிக்க முடியும் என்கிறது இந்நிறுவனம். புதிதாக 1000E ரக விமானம் வாங்குபவர்கள் விருப்பப்பட்டால், விமானத்தில் சன்ரூப் வசதியை அமைத்துத்தரும். இந்த விமானத்தின் விலை என்ன தெரியுமா? 53 மில்லியன் டாலர்கள். வானத்துல பறந்துக்கிட்டே வானத்தைப் பார்க்கிறதா!

vikatan

  • தொடங்கியவர்

 

தெலுங்கு பாப்ரி கோஷ்

p32.jpg

ங்காள மல்கோவா. ‘கால்பேலா’ என்ற பெங்காலி மொழிப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க அடுத்து ‘க்ரோத்’, ‘பியா துமி’ என வரிசையாக வாய்ப்புகள் வந்தன. அங்கிருந்து தெலுங்கிற்குப் பறந்தார். ‘யூத்ஃபுல் லவ்’, ‘தில்லுனோடு’ என ஒரே ஆண்டில் இரண்டு தெலுங்குப் படங்கள். இந்தப் பால்கோவா பியூட்டி தமிழையும் விட்டுவைக்கவில்லை. ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் இப்போது ‘விஜய் 60’ படத்திலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். கம் கம் வெல்கம்!


p32a.jpg

மலையாளம் ரஞ்சனி ஹரிதாஸ்

சேட்டன்கள் தேசத்தின் ஸ்மைலி அழகி. ‘கீதம்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின் ஒரு பெரிய இடைவெளி. `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என 2007-ல் டி.வி தொகுப்பாளராக ரிட்டர்ன் ஆனார். பளீர் சிரிப்பு, ஜிலீர் அழகு எனப் பலரின் இதயங்களை வேட்டையாட `என்ட்ரி’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே காக்கிச்சட்டை கெட்டப். அதன்பின் ‘வாட் தி எஃப்’,  ‘ஓட்ட ஒருத்தியும் ஷரியில்லா’ போன்ற படங்களில் நடித்தார். ஆனால் யார் கண்பட்டதோ அழகு மயிலுக்கு அதன்பின் வாய்ப்புகள் நிறைய இல்லை. இப்போது மீண்டும் சின்னத்திரை வாசம். தமிழாஸ் வெயிட்டிங்!


p32b.jpg

கன்னடம் சிந்து லோக்நாத்

பெங்களூரில் பிறந்த குளுகுளு கஸாட்டா. எம்.எஸ் முடித்தபின் சினிமாதான் லட்சியம் எனக் களமிறங்கிய மயில். ‘பரிச்சயா’ என்ற கன்னடப் படத்தில் கெஸ்ட் ரோலில் தலை காட்டியவர் அடுத்தடுத்து ‘லைஃப் இஷ்தேனே’, ‘டிராமா’, ‘யாரே கூகாடலி’ என வரிசையாக கமிட் ஆனார். ஓர் ஆண்டுக்கு சராசரியாக நான்கு படங்கள் என நான்கே ஆண்டுகளில் 16 படங்கள். கன்னட சினிமா உலகில் இது விறுவிறு வேகம். அம்மணி பிஸியான மாடலும்கூட! நல்லி சில்க்ஸ், ஆரோக்யா பால் போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் இவரை நீங்கள் பார்க்கலாம். கோலிவுட் கேட் திறந்துதான் இருக்கு சிந்து!

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எண்ணங்களுக்கு ஏற்பவே பார்வைகளும் மாறுபடும்
 
 

article_1473398767-tuoitro.jpgபசுவின் பார்வையினை சற்று உற்று நோக்குங்கள்.அதில் ஒரு கனிவும் அமைதியும் தெரியும். பசு இயல்பாகவே சாதுவானது; அன்னைக்கு நிகரானது. எனவே, அதனிடத்தில் பாசம், கனிவு, அன்பு என்பவை இருப்பதில் வியப்பில்லை.

பட்சிகளைக் கவனியுங்கள்‚ அவை எப்போதுமே துறுதுறுவெனத் தமது இறகுகளை அடித்து, வான் பரப்புகளை சதா அளவிடும். அவற்றின் விழிகளும் துறுதுறுத்த படியே காணப்படும்.

நாங்களும் எவரிடத்திலும் வெறுப்பை உமிழ்ந்தால் எமது பார்வையும் வேறுபடும். அங்கே கனிவு சிறிதளவும் தென்படாது. எங்கள் எண்ணங்களுக்கு ஏற்பவே பார்வைகளும் மாறுபடும்.

மனதைத் தெளிவுடனும் அன்புணர்வுடனும் வைத்திருத்தலே சாலச்சிறந்தது. மனம் மரத்தால் பிறர் எம்மை மறுத்து ஒதுக்குவர். சந்தோசத்தைச் சதா எமக்குள் இருத்தினால் குறைந்தா போய்விடுவோம்? பார்வைகளைப் பசுமையாக வைத்திருப்போம்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வாங்க வாழ்ந்துதான் பார்ப்போம்!  #SuicidePreventionDay

flowerss.png

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், குடும்பத்தலைவிகள், உயர் அதிகாரிகள்...என்று சமூகத்தின் பலதரப்பட்டவர்களும் திடீரென தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கு மிக முக்கியமான காரணியாகக் கூறப்படுவது மன அழுத்தம் மட்டுமே.


சென்னை போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, '' எங்களிடம் வரும் தற்கொலை தொடர்பான புகார்களை பார்க்கும்போது, 28 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. அவர்கள் எந்த விஷயத்தையும் தைரியமாகவும், மனோ திடத்துடனும் அணுகுவதாக தெரிகிறது.  மேலும், சுய ஒழுக்கத்துக்காகப் பயந்து தங்களை சுற்றியுள்ளவர்களுக்காகவும் பயந்து வாழ கற்றுக்கொள்கிறார்கள். அதாவது கலாச்சாரத்தின் மீது பயம் கொண்டவர்களாக தெரிகிறார்கள். ஆனால், 15 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் தற்கொலை முடிவை அதிகம் எடுக்கிறார்கள். டெக்னாலஜிக்கு அதிக அளவு பழக்கப்பட்டவர்கள். சின்ன சின்ன கஷ்டங்களையும், தவறுகளையும் அவமானமாக பார்ப்பவர்களாக வளர்ந்து வருகின்றனர். இந்த இருவருக்கும் தற்கொலை எண்ணம் தலை தூக்குவது சாதரணமாகி வருகிறது. ஏன் உப்பு சப்பில்லாத விஷயங்களுக்குக் கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள்.


இவர்களுக்கு கவுன்சிலிங் தேவைப்படுகிறது. அது சரியான நேரத்தில் கிடைக்காதபோது, தவறான முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். கூட்டுக் குடும்பங்களில் இருப்பவர்கள் பெரும்பாலும் தற்கொலை முடிவை தேடிப்போவதில்லை. தனிமையாக இருக்கிறவர்கள்தான் அந்த முடிவை அவசரகோலத்தில் எடுத்துவிடுகிறாரகள் " என்றார். 
தற்கொலை செய்ய முயற்சித்து அதற்கு பிறகு மீண்டு வந்த சிலரிடம் பேசினோம், யாருமே தங்களுடைய முகத்தை வெளியில் காட்ட முன்வரவில்லை தங்களின் முகாந்திரத்தை மறைத்துக் கொண்டே பேசுகிறார்கள், அதில் ஒருவர் கூறியது,

ஜாஸ்மின்:

''நான் ஐடி கம்பெனியில் வேலைப் பார்க்கிறேன். பொதுவாக, வேலை செய்யும் சூழல் சரியாக அமைந்தாலே போதும் இது போன்ற எண்ணம் வராது. இன்று என்னதான் படித்து பெரிய இடத்திற்கு சிலர் வந்தாலும், எந்த இடத்தில் ஒருவரது தவறை சொல்ல வேண்டும், எந்த இடத்தில் சொல்லகூடாது என்கிற அடிப்படை நாகரீகத்தைக் கூட கடைபிடிப்பதில்லை. பல பேருக்கு மத்தியில் யோசிக்காமல் திட்டிவிடுவதால் மனமுடைந்து போகிற பல பெண்களுக்கு இது என்னடா வாழ்க்கைனு தோணும். இன்னும் சொல்லப்போனால் கிராமப்புறங்களில் இருந்து வரக்கூடிய பெண்கள் தங்களுடைய நடை, உடைகளை நகரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளும்போது பல பேருடைய கிண்டலுக்கும், கேளிக்கும் ஆளாகக்கூடும். இதனால் இவர்கள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுகின்றனர். நான் என்னுடைய வேலை பளு காரணமாகவும், என்னுடைய உயர் அதிகாரி திட்டியதாலும் மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தேன். என்னுடைய பெற்றோர்கள் காப்பாற்றி நான் இருக்கிறேன் என்ற பிறகுதான் வாழ்க்கை மீதே நம்பிக்கை வந்தது.' என்றார்.

 

doctor.jpg


இது குறித்து மனநல ஆலோசகர் மருத்துவர் அபிலாஷாவிடம் பேசினோம், 

''தற்கொலை என்பது ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்வதாகும். மன அழுத்தம், குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, பொருளாதாரச் சிக்கல்கள் போன்ற பல காரணங்கள் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம். 39 மணித்துளிக்கு abilasha.jpgஒருவர் வீதம் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகின்றது. மேலும் 10 முதல் 20 மில்லியன் பேர் தற்கொலை முயற்சியிலிருந்து ஆண்டுதோறும் தப்புவதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஓரளவுக்கு கையில் பணம் வந்தவுடன் ஆடம்பரமாக வாழ ஆசைப்படும் பலரும் அதை சரிவர சமாளிக்க முடியாமல் திணறி மற்றவர்களுடைய பேச்சுக்கும், ஏச்சுக்கும் பயந்து இறுதியில் தற்கொலை என்கிற முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள். சரி எந்தெந்த காரணிகள் பெரும்பாலும் தற்கொலைக்கு தள்ளுகிறது என்பதை பார்ப்போம், 

பொதுவாக இரண்டு விஷயங்களுக்காகத்தன தற்கொலைகள் நடிக்கிறது. ஒன்று படிப்பில் தோல்வி ஏற்படும்போது, இரண்டாவது காதலில் தோல்வியை சந்திக்கும் போது. குடும்பப் பிரச்னைகள் எல்லாம் அதற்குப் பிறகுதான். தற்போது வாழ்க்கை மீது சலிப்பு ஏற்படுவதால் தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருகிறது. காதலில் தோல்வியுரும்போது என பல சந்தர்ப்பங்களில் பலரும் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்படுகிறார்கள். 

“ஒரு மனிதன் தனிப்பட்ட பொதுநேக்கம் கருதி தானாகவே அல்லது பிறரால் தூண்டப்பட்டு தனது உயிரை மாய்த்துக் கொள்ளுதல்” இந்த செயல்பாட்டையே தற்கொலை என்கிறோம். தற்கொலை சம்பந்தமாக சமூகவியளாளரான “எமில்ட் துர்கைம்” குறிப்பிடுகையில் தற்கொலைக்கு மனவிரக்தி, காதல் தோல்வி, வறுமை, சட்ட ரீதியாக ஏற்படும் அரசியல் பொருளாதார மாற்றங்கள் போன்றவை காரணங்களாக அமைகின்றன எனவும் தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் திருமணமாகாதவர்களே எனவும் குறிப்பிடுகிறார்.  

2013 ன் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மனநல கவனிப்பு மசோதாவில் தற்கொலையை சட்டவிரோதம் என கூறும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தற்கொலைக்காக முயற்சிப்போரின் மனநலம் கருத்தில் கொள்ளப்படும். இந்த மசோதா நிலைப்படி தற்கொலை என்பது கிரிமினல் செயல்பாடு அல்ல. தற்கொலை முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்படும். தற்கொலை சட்ட விரோதமானது என கூறும் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 309 ல் தற்போதைய மசோதா விலக்குஅளிக்கும். இந்த மசோதாபடி தற்கொலை முயற்சியும் மனநல ஆரோக்கியமும் ஒன்றிணைத்து பார்க்கும் நிலையை அளிக்கும். இந்த மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சகம் கொண்டு வந்தது.

தற்கொலை முயற்சி மேற்கொள்பவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். புதிய மசோதாப்படி , மனநல நேயாளிகளுக்கு மின்சார சிகிச்சை அளிப்பது, சங்கிலியால் பிணைத்தல் மற்றும் தலையை மொ ட்டை அடித்தல் போன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.மேலும் அங்கீகாரமற்ற மன நல மையம் நடத்துபவர் களுக்கு ரூ 50ஆயிரம் அபரா தம் விதிக்கப்படுகிறது.

மன அழுத்தம் என்பது ஒருவரை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்திவிடும். மன அழுத்தம் என்பது அனைவருக்கும் பொதுவானதே. ஆனால் குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கிடையேயான மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு.

முறையான அரவணைப்பு இல்லாதது, பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி, சமுதாயச் சூழல் போன்ற பல காரணங்களால் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள், தவறான பாதைக்கு செல்வதாக ஏற்கனவே வெளிவந்த பல ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த மன அழுத்தத்தை சிறந்த குழுத் திட்டத்தின் மூலம் தடுக்க முடியும் என தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

suicide.jpg


இரண்டு நாட்களுக்கு முன்பு என்னிடம் ஒரு பெண் வந்தார். கிராமத்தில் நன்றாக படித்து, கட்டுக் கோட்பாக வளர்க்கப்பட்டவளுக்கு எப்போதும் தான் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்கிற ஆசை. நல்ல மதிப்பெண் பெற்று அண்ணா பல்கலைகழகத்தில் சேர்ந்தார். கிராமத்தில் இருந்து வந்ததால் 
அவளின் நடை, உடைகளை வைத்து சக மாணவர்கள் கிண்டல் செய்யவும் விரக்தியில் தான் தற்கொலை செய்யப்போவதாக முடிவெடுத்தவர், என்னை பற்றி அறிந்து என்னிடம் ஆலோசனைக்காக வந்தார். நான் துப்பட்டா ஒன்றை வாங்கி வைத்திருக்கிறேன். இரவு விடுதியில் எல்லோரும் தூங்கியப்பிறகு தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்றாள். 
அதற்கு நான், 'நீ இறந்த பிறகு உன்னை எப்படி பேசுவார்கள் என்று தெரியுமா என கேட்டதற்கு., 'நானே இறந்திடுவேன் அதற்கு பிறகு என்ன நடக்குனு என பார்கவாப் போகிறேன்' என்றார். அதற்கு பிறகு அவரிடம் பேசி ஒருவழியாக அதிலிருந்து மீட்டுக் கொண்டுவந்தேன்.

இதேபோலத்தான் ஒருவர் என்னிடம் வந்து, நான் காதலித்தப் பெண்ணிற்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. அவளை கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்து கொண்டு இறக்க போகிறேன். நான் இறந்தப் பிறகு இதை மற்றவர்களுக்கு தெரிவித்துவிடுங்கள் என்றார். அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி அதிலிருந்து வெளி கொண்டுவந்தேன். இப்போது ஒரு ஐ.ஏ.எஸ் அக்காடமியை நடத்திவருகிறார். 

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு, பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இப்படி அந்த நிமிடத்தை தாண்டிப் போக முடியாதவர்கள் தான் பெரும்பாலும் உடனடியாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். தற்கொலை முயற்சியில் பெண்களை விட ஆண்களே திடமாக இருக்கிறார்கள். கையில் பிளேடால் கோடுபோடும்போது கூட, பெண்கள் அழுத்தமாகப் போடமாட்டார்கள். ஆனால், ஆண்கள் எதையும் யோசிக்காமல் அழுத்திப் மார்க் போடுவார்கள். கீபிளி வின் அறிக்கையின் படி, கஷ்டப்படும் சூழல் அல்லது மன அழுத்தத்தில் உள்ள ஒருவருக்கு முறையான ஆறுதல் மற்றும் அவருக்கான ஆலோசனைகளும், உதவியும் கிடைத்தாலே தற்கொலையில் இருந்து மீண்டு வருவார்கள் என்கிறது.

vikatan

  • தொடங்கியவர்

14203214_1312888585418579_60967060443730

  • தொடங்கியவர்

உங்களுக்கு ஸ்ட்ரீட் வியூ தெரியும்! ஷீப் வியூ தெரியுமோ?#GoogleSheepView

faroe2.jpg

ரோயே தீவுகள், டென்மார்க் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு தன்னாட்சி மாகாணம்.  இயற்கையின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் ஆண்டு முழுவதும் குளிரான இருக்கும் 18 தீவுகளைக் கொண்டது. அத்துடன் மலைகள், பறவைகள் போன்றவற்றுடன் வித்தியாசமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டது. மொத்தம் கிட்டத்தட்ட 50,000 மக்கள் வாழும் இத்தீவுகளில், ஆடுகளின் எண்ணிக்கை 70,000, அதாவது மனிதர்களை விடவும் அதிகம். எனவே இது ஆடுகளின் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நகரில் எல்லா இடங்களிலுமே, ஆடுகள் சுதந்திரமாக சுற்றித்திரியும் அளவிற்கு, இயற்கை சூழ்ந்த அழகான பிரதேசம்!

டுரிட்டா, பரோயே தீவில் பிறந்து வளர்ந்த ஒரு பெண். இவருக்கு நெடுங்காலமாகவே ஒரு கவலை இருந்ததாம். அதாவது மற்ற ஐரோப்பிய நாடுகளின் நகரங்கள், தீவுகள் எல்லாம் உலக மக்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வரும் நிலையில் பரோயேவுக்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதுதான் அது. எனவே தன் தீவை பிரபலப்படுத்தும் வகையில் தன்னாலான முயற்சிகளை எடுக்க தொடங்கினார். இங்குதான் என்ட்ரி ஆகிறது கூகுள் நிறுவனம்!

faroe.jpg

கூகுள் நிறுவனத்தின் மிக முக்கியமான சேவைகளில் ஒன்று “கூகுள் மேப்ஸ்” ஆகும். இதை பயன்படுத்தாத ஸ்மார்ட்போன் பயனாளர்களே கிடையாது என்று கூறுமளவுக்கு அத்தியாவசியமான ஒன்றாகவும் ஆகிவிட்டது. இந்நிலையில் கூகுள் மேப்ஸின் அடுத்த கட்டமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது “கூகிள் ஸ்ட்ரீட் வியூ”, அதாவது உலகின் முக்கிய நகரங்கள் மற்றும் இடங்களின் வீதிகளை 360 டிகிரியில் உட்கார்ந்த இடத்திலிருந்து காண முடியும் என்பதுதான் இதன் சிறப்பு. இதன் சிறப்பம்சங்களை அறிந்த டுரிட்டா “கூகுளின் ஸ்ட்ரீட்வியூவை” தன் தீவில் அதிகமாக இருக்கும் ஆடுகளை பயன்படுத்தி உருவாக்கலாம் என்று யோசித்ததன் பயனாக கூகுள் நிறுவனம் அவரின் யோசனையை பட்டைத் தீட்டி அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் அளித்து அவரை அந்த ப்ராஜெக்ட் மானேஜராகவும் நியமித்துள்ளது.

அதன்படி, அழகான பரோயே தீவை 360 டிகிரியில் படம் பிடிக்கும் சூரிய ஒளியில் இயங்கும் பிரத்யேகமான கேமராவை அங்குள்ள ஆடுகளின் மீது பொருத்திவிட்டனர். ஆடுகள் செல்லும் இடங்களையெல்லாம் இந்த கேமரா படம்  பிடித்து அப்டேட் செய்து கொண்டே இருக்குமாம். இதன் மூலம் உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் பரோயேவை அடையாளம் கண்டுக்கொண்டு இங்கு படையெடுப்பார்கள் என்று நம்புகிறார்கள். வெறும் ஆடுகள் மட்டும் இல்லாமல் கார்கள், பைக்குகள் மற்றும் மலையேற்றம் செய்பவர்களிடம் இந்த கேமராவை அளித்தும் படம் பிடிக்கிறது கூகிள் நிறுவனம். இந்த தீவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அங்குள்ள சுற்றுலா அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டு அவர்களும் இந்த 360 டிகிரி திட்டத்திற்கு பங்களிக்கலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்கள்!

ஷீப்வியூ வீடியோ..

 

 

 

vikatan

 

  • தொடங்கியவர்

காலை உடற்பயிற்சியின் 7 நன்மைகள்

                                            p34a.jpg

இன்றைய பரபரப்பான அன்றாட வாழ்வில் நாம் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான பல விஷயங்களைத் தவறவிடுவது சகஜமாகிவிட்டது. நேரத்துக்குச் சாப்பிடாமல், தூங்காமல் வேலை வேலை என எப்போதும் வேலையில் மூழ்கிக்கிடப்பவர்கள் தவறவிடும் முக்கியமான விஷயம் காலை உடற்பயிற்சி. சிலருக்குக் காலைத் தூக்கத்துக்கும் உடற்பயிற்சி ஆர்வத்துக்கும் நடக்கும் போரில் பெரும்பாலும் காலைத் தூக்கமே வெற்றிபெறுகிறது. இதனால், பல நாட்கள் உடற்பயிற்சிக்கு நேரமில்லாமல் மக்கள் அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றனர். காலை உடற்பயிற்சி எவ்வளவு அவசியமானது, உடலுக்கும் மனதுக்கும் அது எவ்வளவு நன்மைகளைச் செய்கிறது, அதனால் தினசரி வாழ்க்கை எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பது குறித்துப் பார்ப்போம். 

 

காலை உடற்பயிற்சி, மூளையின் செயல்திறனுக்கு உதவுகிறது. இதனால், மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறன் மேம்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நினைவுத்திறன் குறைபாட்டால் அல்சைமர் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முறையான காலை உடற்பயிற்சி மூலம் அல்சைமரின் தாக்கம் குறையும்.
 
மனஅழுத்தத்தில் இருந்து விடுபட காலை உடற்பயிற்சி சிறந்தத் தீர்வாக விளங்குகிறது. காலை உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஆகியவற்றால் மூளையில் உள்ள மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களான செரோடோனின் (Serotonin), நோர்பினேப்ரைன் ( norepinephrine) எண்டார்ஃபின் (Endorphin), டோபமைன்   (Dopamine) ஆகியவை அதிகரிக்கின்றன. இதனால், நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. முன் கோபம், படபடப்பு ஆகியவை கட்டுப்படுத்தப்படுன்கிறன.

                                         shutterstock_196140077.jpg 

உடற்பயிற்சி, வாழ்நாளை   அதிகரிப்பதோடு, உடல் முதுமையடைந்து தோல் சுருக்கம் விழுவதைத் தாமதப்படுத்துகிறது. வயதாகும்போது செல்களின் செயல்திறன் குறைந்து, அவை இரண்டாகப் பிரியத் தொடங்குகின்றன. இதன் விளைவாக, தோல் செல்களின் மையப் பகுதியான நியூக்ளியஸில் உள்ள குரோமோசோம்களின் அளவு சிறிதாகும். இதனால், தோலில் சுருக்கம் விழும். பல வருடங்கள் உடற்பயிற்சி செய்வதால், இந்த குரோமோசோம்களின் நீளம் குறையத் தாமதமாகிறது என்றும், இதனால் தோலில் சுருக்கம் விழுவதும் தள்ளிப்போடப்படுகிறது என்றும் மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்துக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது. தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அடிபட்டு ரத்தம் வெளியேறினால், விரைவில் உறைந்து, மேலும் வெளியேறவிடாமல் தடுக்கப்படுகிறது. உடல் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், மண் மற்றும் தூசு மூலம் பரவும் நோய்த்தொற்று தடுக்கப்படுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், புதிய நுண்ணிய ரத்த நாளங்கள் (blood vessel ) உருவாகும்.
 
கடுமையான உடற்பயிற்சிகள் செய்யும்போது உடற்தசைகள் அதிகச் சூட்டை வெளியேற்றுகின்றன. இந்த வெப்பம் தசைகளில் இருந்து ரத்தம் மூலம் தோலுக்கு மாற்றப்படுகிறது. தோலில் உள்ள வியர்வை வெளியேற்றும் துளைகள் மூலமாக வெப்பம் வெளியேறி, காற்றில் கலக்கிறது. இதனால் பித்தஅளவு சமமாகி, உடல் குளிர்ச்சி அடைகிறது.

முதன்முறையாக உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் கடினமான ஜிம் பயிற்சிகள் செய்யத் தேவை இல்லை. 10 நிமிட வார்ம் அப் பயிற்சி மூலமாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது. இதய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகிறது. எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தது 10- 50 நிமிடங்கள் வரை உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
 
தீவிர நோய்களுக்கு உள்ளானவர்கள், 70 வயதைத் தாண்டியவர்கள், உடற்பயிற்சி செய்யலாமா கூடாதா என்ற சந்தேகம் மருத்துவ உலகில் நீண்டநாட்களாக இருந்து வருகிறது.  கலிபோர்னியாவில் உள்ள கெய்சர் பெர்மெனென்ட் போண்டனா   மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினரால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி இதய செயலிழப்பு, டைப் 2- சர்க்கரை, பக்கவாதம்   உள்ளிட்ட தீவிரநோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள்கூட மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்; இதன் மூலமாக நோயின் தாக்கம் குறைகிறது எனத் தெரியவந்துள்ளது.

vikatan

  • தொடங்கியவர்

'300 கிலோ பத்தாது... 470 கிலோ இலக்கு!' - நிஜ இஞ்சி இடுப்பழகியின் கதை

fat%20with%20mam.jpg

அமெரிக்காவைச் சேர்ந்த, 27 வயதான Monica Riley என்பவரின் எடை 300 கிலோ ஆகும். இவர்தான் உலகிலேயே அதிக அளவு உடல் எடை கொண்டவராவார். ஆனால், இவருக்கு இந்த எடைப் போதாதாம். இன்னும் உடல் எடையை அதிகமாக்கி பெரிய்ய்ய அளவில் சாதனை செய்ய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளார். அதாவது 470 கிலோ எடையை கூட்டவிருக்கிறார்.

மோனிகா தொடர்ந்து யூ டியூப் சேனலில், தான் இடைவிடாமல் சாப்பிடுவதை பதிவேற்றி காண்பவர்களை வெறுப்பேற்றி வருகிறார். நாள் ஒன்றுக்கு 8000 க்கும் மேற்பட்ட கலோரிகளை உண்டு வருகிறார். ஒரு நாளுக்கு ஆறு பிஸ்கட்ஸ், ஆறு வகையான சாஸ் வெரைட்டிக்களை சேர்த்த பிரட் ரோல், ஒரு பெரிய பவுலில் கெலாக்ஸ், நான்கு சிக்கன் சான்விட்ச், நான்கு டபுள் சீஸ்பர்கர், மக்ரோனி சீஸ், ஐஸ்கிரீம் என தொடர்ந்து எதையாவது உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கிறார்.

'என்னுடைய மிகப்பெரிய லட்சியம் எதிர்காலத்தில் 450 கிலோ ஏற்றி உடலை இன்னும் பருமனாக்க வேண்டும். உடல் எடையை அதிகரிக்க அதிகரிக்க நான் என்னை ராணியாக உணர்கிறேன். என் கணவர் சிட்னி இதற்கு முழு ஒத்துழைப்பைத் தருகிறார். இப்படி இருந்த போதிலும், தாம்பத்யம் குறித்து அதிகமாகப் பேசிக்கொள்வோம். என் கணவர்  நான் எழுவதற்கும், பெட்டில் உறங்க வைப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கிறார். மேலும், நான் அசந்து தூங்கியப்பிறகு என்னை மற்றொரு பக்கம் புரட்டி விடுவார். என்னால் தனியாக திரும்பிப் படுக்க முடியாது. அதற்குப் பதிலாக அவர்தான் என்னை புரட்டிப்ப் போட்டுத் தூங்க வைப்பார். எனக்கு என்னுடைய அழகான வயிறு பிடித்திருக்கிறது. 

நான் எவ்வளவு வெயிட் போட்டாலும் சரி எனக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. தற்போதும் அந்த பிளானில்தான் இருக்கிறோம். ஆனால் என்னுடைய தாயார் என்னிடம் நிறைய முறை 'என்னை நானே கொன்று கொண்டிருப்பதாக' அறிவுரை கூறியிருக்கிறார். எனக்கு அவருடைய அன்பு புரிகிறது. ஆனால் எனக்கு எடை அதிகரிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சில சமயம் என்னுடைய சுதந்திரம் பாதிக்கப்படுவது குறித்து வருத்தமாக இருந்தாலும், என் கணவர் சிட்னி என்னை எப்போதும் கஷ்டப்பட விடமாட்டார் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. என்னுடைய வெயிட் அதிகம் ஆனப் போது  முன்பு இருந்த காதலர் எடையை சர்ஜரி செய்து குறைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். அப்படி எடையை குறைக்காவிட்டால் இருவரும் பிரிந்துவிடுவோம் என்றும் கூறினார். எனக்கு எடை குறைப்பில் சிறிதும் விருப்பம் இல்லை. எனவே, அவரை விட்டு விலகிவிட்டேன். இப்போது இருக்கும் என்னுடைய காதலர் சிட்னி எனக்கு மிகவும் ஆதரவாகவும், அக்கறையாகவும் என்னைப் பார்த்துக் கொள்கிறார். என்னுடைய படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்துவிட்டு உணவு மற்றும்  உடை என எனக்குத் தேவையான உதவிகளை பலதரப்பட்டோர் செய்து வருகிறார்கள். என்னுடைய தாயாருக்கு இதில் வருத்தம் இருக்கிறது. ஆனால், இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. இப்படியே வாழ ஆசைப்படுகிறேன்' என்கிறார் மோனிகா. 

vikatan

  • தொடங்கியவர்

மழைக்கு இந்த வீடுதான் பெஸ்ட்!

DIY-home-1.jpg

 

நாம் ஏசி, டிவி, மழை பெய்தால் ஒழுகாத கூறையுடன் வசிக்கும் நம் சிமெண்ட் வீடுகளில் இருந்து மண் வீட்டிற்குக் குடிபெயரச் சொன்னால், எத்தனை பேர் அதைச் செய்வோம்? கொடைக்கானலில் இரண்டு பெண்கள் அதைச் செய்துள்ளனர்.

பிரியாஸ்ரீ மணி மற்றும் நிஷிதா வசந்த் ஆகிய இருவரும் தங்கள் வீடுகளை விட்டு விட்டு, முழுக்க முழுக்க மண் மற்றும் மக்காத குப்பைகளால் கட்டப்பட்ட வீட்டிற்கு மாறியுள்ளனர். இந்த வீடு கொடைக்கானலில் இருந்து 6 கி.மீ தொலைவில் செண்பகனூர் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

DIY-home-3.jpg

இந்த வீடு மிகக் குறைந்த செலவில் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் சுவரை சிமெண்ட் பைகளைக் கொண்டு கட்டியுள்ளனர். காரணம், இந்த பைகள் polypropylene எனும் வகை மக்காத பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது. மேலும், குப்பைகளில் அதிகம் காணக் கிடைக்கும் பைகளும் இவைதான். இந்த பைகளில் மண்ணை நிரப்பி ஒன்றிற்கு மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டது. அவை விழுந்து விடாமல் இருக்க, முள் கம்பி கொண்டு கொறுக்கப்பட்டது. இடையில் ஜன்னலுக்கு பழுதான டயர்களை வைத்தனர். அனைத்தையும் அடுக்கிய பிறகு, களிமண் கொண்டு பூசி சுவர் வடிவத்தைக் கொடுத்தனர்.

கழிப்பறையை அலங்கரிக்க, பழைய பீர் பாட்டில்களை சுவரில் சொருகி வைத்துவிட்டனர். இதன்மூலம், இயற்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத ஒரு முழு மாடர்ன் இல்லம் கட்டப்பட்டது!

முன் காலங்களில், மாட்டுச் சாணம், சுண்ணாம்பு ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்ட வீடுகளைப் பார்த்துதான் இவர்களுக்கு இந்த ஆலோசனை வந்துள்ளது. வீட்டின் கூறை, ஓலையால் வேயப்பட்டது. ஊர்மக்களின் உதவியுடன் இவர்கள் இதைச் செய்து முடித்தனர்.

"கிரகப்பிரவேசத்திற்கு" வாசலில் அரிசி மாவு கோலம் போட்டு, வாழைமரம் கட்டி மக்களை அழைத்துள்ளனர். அனைத்துமே நம் பாரம்பரிய முறைப்படி செய்யப்பட்டது. இந்த வீட்டிற்கு முன் ஒரு சிறிய தோட்டம் போட திட்டமிட்டுள்ளனர்.

இந்த வீட்டைக் கட்ட எந்த பொறியாளரின் உதவியோ, வேலையாட்களின் உதவியோ பெறப்படவில்லை. இது குறித்து பிரியா ஸ்ரீ கூறுகையில், "நாங்கள் முழுக்க முழுக்க உடலளவில் உழைக்க வேண்டும் என்று எண்ணினோம். நம் உடலுழைப்பால் ஒன்று செய்தால் எப்படி இருக்குமென்று உணர விரும்பினோம். கடினமாக உழைப்பதன் மூலம், நம் உடல் மட்டுமல்ல, உள்ளமும் வலுப்பெறுகிறது என்று தெரிந்து கொண்டோம்".

மேலும், "இந்த வீட்டிற்கு மாறிய பிறகு, சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டோம். வெளிய டயர்களை வைத்து படிகட்டுகள், மற்றும் பழைய அலமாரிகளை வைத்துள்ளோம். எங்களுடைய நண்பன் வெளிச் சுவற்றில் ஒரு rhododendron மரத்தின் ஓவியத்தை வரைந்து தந்துள்ளார்!"

DIY-home-6.jpg

இந்த வீடு கடும் வெயிலையும், மழையையும் தாங்குகிறது. கடந்த மழைக்காலத்தில் கடும் மழையில் கூட எந்த பாதிப்பும் ஏற்படாததால், இவர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

மக்கள் அனைவரும் பெரிய பெரிய வீடுகளுக்கு மாறி வரும் நிலையில், இது போல சிலர் அக்கறையோடு செயல்படுவது கொஞ்சம் ஆறுதலாக உள்ளது. மாற்றம் ஆரம்பமாகி விட்டது. இனி அதை "வைரல்" ஆக்க வேண்டியது நம் பொறுப்பு!

vikatan

  • தொடங்கியவர்

அழகின் இலக்கணத்தை உடைத்தெறிந்த ரேஷ்மா!

Reshma1.jpg

19 வயதான ரேஷ்மா குயிரிஷி (Reshma Quereshi),நம் மனதில் அழகு என்பதற்கு வைத்துள்ள பிம்பத்தை நியூயார்க்கில் FDL Moda பேஷன் நிறுவனம் நடத்திய பேஷன் வீக்கில் உடைத்துள்ளார்.

FDL Moda நிறுவனம் மாற்றுதிறனாளிகளை மாடலாக கொண்டு பேஷனுக்கு புது பரிணாமம் கொடுக்கும் புதுமையான நிறுவனம்

இந்திய ஆடை வடிவமைப்பாளர் அர்ச்சனா கோச்சார் வடிவமைத்த எம்ராயிடரி வேலைப்பாடுகள் நிறைந்த வெள்ளை ஆடையுடன் நியூயார்க்கின் பேஷன்  மேடையில் நடந்த ரேஷ்மா கடந்து வந்த பாதை மிகவும் நீண்டது.

அலகாபாத்தை சேர்ந்த ரேஷ்மா தன் உறவினர் ஒருவனால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி முகம் சிதைக்கப்பட்டு , ஒரு கண்ணையும் இழந்த அபாக்கியவதி பல வலி நிறைந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்கொலை செய்து கொள்ளலாம் என்றெண்ணிய சமயம் "Make Love not Sacrs" அமைப்பின் அறிமுகம் கிடைத்தது, இந்த அமைப்பு பாலியல்ரீதியிலான ஒடுக்குமுறை குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கும் ஒன்று.

ரேஷ்மா இந்த குழுவின் வீடியோ காட்சிகளின் முகவராகிப் போனார்.இதுவரை 1.3 மில்லியன் மக்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர், இதுவே அவரை நியூயார்க் வரை அழைத்துச் சென்றது. ரேஷ்மாவிற்க்கு அங்கு கிடைத்த பாராட்டுகள் அளப்பரியது

Reshma2.jpg

 

"உலகில் பல நாடுகளில் ஆசிட் வீச்சு நடக்கிறது, கணக்கில் கட்டப்படுவதைவிட உண்மையான எண்ணிக்கை அதிகம்" என்கிறார் லண்டனை சேர்ந்த Acid Survivors Trust Internationalன் (ASTI) இயக்குநர் ஜாவ் ஷா (Jaf Shah).மேலும் அவர் கூறுகையில் "சட்டம் மற்றும் காவல்துறை சரியாக இல்லாத காரணத்தினாலே உலகின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட தங்குகின்றனர்.சுலபமாக கிடைக்கக்கூடிய அமில பொருட்களை தடைசெய்வது,குற்றவாளிகளை கடுமையாக தண்டிப்பதே இதற்குத் தகுந்த தீர்வு.ரேஷ்மா போன்றோர் அமில வீச்சை எதிர்ப்பது மிகவும் முக்கியம்" எஎன்றார்.

ஆப்கானிஸ்தான், ஈரான், நைஜீரியா, கொலம்பியா போன்ற நாடுகளில் பரவலாக அமில வீச்சு நடந்தாலும், அதிகமான அமில வீச்சு இந்தியாவில்தான் நடைபெறுகிறது. பெரும்பாலும் அமில வீச்சு மண வாழ்க்கை முறிந்த கணவர்கள், நிராகரிக்கப்பட்ட காதலன்களால் நடத்தப்படுகிறது என்று ASTIன் அறிக்கை.

"எனக்கு இது நடக்கிறது என நம்பவே முடியவில்லை , என் வாழ்வின் அதீத சந்தோஷமான தருணம் இது"என்று கூறிய ரேஷ்மா, இந்த பேஷன் வாக்  ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களை ஊக்கப்படுத்தவும், உலகளவில் எளிதாக கிடைக்கூடிய வகையில் உள்ள ஆசிட் பொருட்களை தடைசெய்யவும் ஒரு உந்துகோலாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். "ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவருக்கே தெரியும்  உடலாலும், மனதாலும் ஏற்படும் வலியும் வேதனையும்.இந்த நிலை இனிமேல் யாருக்கும் வரக்கூடாது என்பதே என் லட்சியம்" என்றார் ரேஷ்மா குயிரிஷி

மாற்றம் இனி(தே) ஆரம்பம் ஆகட்டும்.

ரேஷ்மியின் பேஷன் வாக்கை காண :

 

 

vikatan

  • தொடங்கியவர்

தமிழகத்தின் அயர்ன்மேன்!

சிபி, படம்: மீ.நிவேதன்

 

p59a.jpg

தோல்வி... தோல்வி... எனத் தோல்விகளால் மட்டுமே துரத்தி அடிக்கப்பட்டவரின் முதல் வெற்றியே... கின்னஸ் சாதனை!

டேனியல் சூர்யா. கடந்த வாரம் சென்னை ஸ்பென்சர் பிளாஸாவில் தொடர்ந்து, 100 மணி நேரத்துக்கு மேல் நின்றுகொண்டே 7,000 துணிகளுக்கும் அதிகமாக `அயர்ன்’ மாரத்தான் செய்து இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

``ஒண்ணுமே இல்லாத பய நான். தோத்தாங்குளினு சொல்வாங்கல... அப்படி.  வெறும் உடம்பைp54b.jpg மட்டும் சுமந்துட்டு உலகத்துக்கு பாரமாத்தான் இருக்கேன்னு நினைப்பேன். சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டார். ரொம்ப ஏழ்மையான குடும்பம். பத்தாவது முடிச்சதும், வேலைக்குப் போகவேண்டிய சூழல். மேஸ்திரி வேலை, துணி விற்கிறதுனு சில வேலைகள் செஞ்சேன்.

அப்பதான் துணிகளை அயர்ன் பண்ணும் சிலரைச் சந்திச்சேன். அயர்ன் தொழிலில், ஒரு நாளைக்குக் குறைந்தது 1,000 ரூபாய் வரை சம்பாதிக் கலாம்னு சொன்னாங்க. வழிப்போக்கனுக்கு எங்க ஒதுங்க இடம் கிடைச்சாலும், ஒதுங்குற மாதிரி... நானும் இனி இதுதான் நம்ம வேலைனு ஒரு லாண்டரி கம்பெனியில வேலைக்குச் சேர்ந்துட்டேன். 50 துணிகளைக் கொடுத்தாலும், சும்மா சட்டு சட்டுனு பக்காவா அயர்ன் செஞ்சுடுவேன். கம்பெனியில் `குட் பாய்’னு பேர் வாங்கினேன்.

வேலைக்காக சென்னையில இருந்து பெங்களூரு போனேன். அங்கதான் ஷாலினியைச் சந்திச்சேன். ரொம்ப அழகா இருப்பாங்க. எங்க ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு லவ். 2001-ல திருமணம் செஞ்சுக்கிட்டோம். கின்னஸ் சாதனை மாதிரி ஏதாவது பெரிய சாதனை செய்யணும்னு அவங்ககிட்ட சொல்லிட்டே இருப்பேன். `அதை அயர்னிங்லயே பண்ணு'னு ஷாலினி உற்சாகப்படுத்தினாங்க. ஆனால், எங்கிருந்து ஆரம்பிக்கணும்னு தெரியலை.

பத்துக்கும் மேற்பட்ட கின்னஸ் சாதனைகள் செஞ்ச சுரேஷ் ஜோச்சினைப் போய்ப் பார்த்தேன். `சூப்பர்... நீங்க நிச்சயம் அயர்ன்ல சாதனை செய்யலாம். ஏதாவது பெரிய ஷாப்பிங் மாலில் முயற்சி பண்ணுங்க. இதுக்கு முன்னாடி அயர்ன்ல சாதனை பண்ணவங்க எல்லாரும் ஏதாவது ஒரு மாலில்தான் பண்ணியிருக்காங்க. எனக்கு ஸ்பென்சர் பிளாசால லிங்க் இருக்கு. நான் உங்களுக்கு சீக்கிரம் சொல்றேன்’னு சொல்லிட்டு, ஃபாரினுக்குப் பறந்துட்டார். `ஏதாவது ஒரு நல்லது நடக்காதா?’னு ஏக்கமா இருந்தது. அந்தச் சமயத்துல என் வாழ்க்கையில இன்னோர் இடி இறங்கியது. என் குழந்தை மஞ்சள் காமாலையில் இறந்துபோய்டுச்சு.

குழந்தை இறந்ததுக்கு அப்புறம் என் காதல் மனைவிக்கும் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது. 28 வயசுலேயே ரொம்ப முடியாமப் போய்ட்டாங்க. திடீர் திடீர்னு ஜுரம் வரும். ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம். நல்லா பேசிட்டுத்தான் இருந்தாங்க. என்ன ஆச்சுன்னே தெரியலை. மூணு நாளில் இறந்துட்டாங்க. யாருமே இல்லாத உலகத்துல தனி ஆளா இருப்பதுபோல உணர்ந்தேன்.

`செத்துடலாமா?’னுகூட யோசிச்சேன். ஆனால் ஒருநாள் ஏதோ ஞானோதயம் கிடைச்ச மாதிரி எனக்குத்தான் யாரும் இல்லை. யாருக்காகவாவது நான் உபயோகமா இருக்கலாம்னு தோணிச்சு.

நான் தினமும் லோக்கல் ட்ரெயின்லதான் வேலைக்குப் போவேன். அங்கே கண் தெரியாதவங்க நிறையப் பேர் பிச்சை எடுப்பாங்க. அங்க ஒரு பொண்ணுகூடப் பேசினேன்; பழகினேன். புது உறவு கிடைச்ச மாதிரி இருந்தது. அவங்களுக்குப் பார்வை கிடைக்கணும்னு நினைச்சேன். ஆனால், என்னால் என்ன பண்ண முடியும்? எனக்குத் தெரிஞ்சது அயர்ன். அதுல ஏதாவது ஒரு சாதனை செய்தால் எல்லோரும் திரும்பிப்பார்ப்பாங்க. அதன் மூலமாக கண்தானம் பற்றி சொல்லலாம்னு, பழைய ஐடியாவைக் கையில் எடுத்தேன். அயர்ன் செய்த சாதனையாளர்கள் லிஸ்ட் தேடினேன். அப்ப இன்னோர் அடி விழுந்தது.

கின்னஸ் சாதனை செய்ய நான் யார்கிட்ட ஹெல்ப் கேட்டேனோ... அந்த சுரேஷ் என்னோட அயர்ன் ஐடியாவில் கின்னஸ் சாதனை பண்ணி யிருந்தார். மனசு உடைஞ்சுபோய்ட்டேன். 2002-ல அவரைப் பார்த்து இந்த ஐடியாவைச் சொல்றேன். 2005-ல அவர் அதில் கின்னஸ் சாதனை செஞ்சிருக்கார். இது எனக்கு 2012-லதான் தெரியும். அந்தச் சாதனையை நாமும் செய்யணும்னு உறுதி எடுத்தேன்.

p59b.jpg

ஒருநாள் எக்மோர் கவர்மென்ட் மருத்துவமனைக்குப் போனேன். அங்க `கண் தானம் செய்ய...'னு ஒரு லயன்ஸ் கிளப் உறுப்பினரோட போன் நம்பர் எழுதியிருந்தது. போன் பண்ணினேன். முரளினு ஒருத்தர் நேர்ல வரச் சொன்னார். `சார், கண் தானம் விழிப்புஉணர்வு செய்ய கின்னஸ் சாதனை செய்யணும், எனக்கு ஹெல்ப் பண்ணுங்க’னு சொல்லி, இதுக்கு முன்னாடி, இது சம்பந்தமான சாதனையாளர்கள் லிஸ்ட் கொடுத்தேன். முதன்முதல்ல, 1999-ல் சுவிட்சர்லாந்துக்காரர் 40 மணி நேரம் தொடர்ந்து அயர்ன் பண்ணினார். நான் சொன்ன ஐடியாவை வெச்சு சுரேஷ் 2005-ல் 55 மணி நேரம் 5 நிமிஷத்துல 369  அயர்ன் செஞ்சிருக்கார். அப்புறம், 2012-ல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Janette Hastings என்பவர் 80 மணி நேரம் அயர்ன் செய்து, 1,157 துணிகளை அயர்ன் பண்ணினார். இதை பீட் பண்ணற மாதிரி போன வருஷம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Gareth Sanders என்பவர் தொடர்ந்து 100 மணி நேரம் அயர்ன் செய்து, 2,000 துணிகளை அயர்ன் பண்ணினார். `அப்போ நீங்க 100 மணி நேரத்துல 2,000 துணிகளைத் தாண்டி அயர்ன் பண்ணணும்’னு முரளி சார் சொன்னார். `ரொம்ப ஈஸியா பண்ணிடுவேன் சார்'னு சொன்னேன். அவர் சில டெஸ்ட்கள் வெச்சார்.

``நான் வேலை செய்யும் இடத்துலயே கேமரா வெச்சு ஒரு மணி நேரம் அயர்ன் பண்ணச் சொன்னார். ஒரு மணி நேரத்துல விறுவிறுனு 43 துணிகளைப் பக்கவா அயர்ன் செஞ்சேன். அடுத்து தூங்காமல் இருக்கணும். மூணு நாள் ஒரே இடத்துல உட்காரவெச்சு தூங்காம இருக்கேனானு, கேமரா வெச்சு டெஸ்ட் பண்ணினாங்க. மனசு முழுக்க கின்னஸ் வெறி இருக்கும்போது தூக்கம் எப்படி எட்டிப்பார்க்கும்? அசரலை. முரளி சார் மூலமாக லயன்ஸ் கிளப் மெம்பர்ஸ் நிறைய பேர் உதவி பண்ணினாங்க. ஸ்பென்சர் பிளாசாவும் இடம்கொடுத்து ஸ்பான்சர் பண்ணினாங்க. ரொம்ப நேரம் அயர்ன் பண்ணணும்னா அயர்ன் பாக்ஸ் தாங்கணும். பிலிப்ஸ் அயர்ன் பாக்ஸ் ஸ்பான்சர் பண்ணினாங்க. கனவு நினைவாகும் தருணம். எல்லாம் கைகூடி வந்தது.

அயர்ன் பாக்ஸைத் தொட்டு ஸ்டார்ட் பண்ணப்ப...  `கடவுளே... இவ்வளவு வருஷமா என்னைச் சோதிச்சுட்ட, நான் இந்தச் சாதனை பண்ணுவேன்னு எல்லோரும் நம்புறாங்க. என்னை எப்படியாவது கரைசேர்த்துடு'னு நினைச்சுக்கிட்டேன். 26 மணி நேரம் 30 நிமிஷத்துலயே 2,000 துணிகளை அயர்ன் பண்ணி, முதல் சாதனை பண்ணிட்டேன். தொடர்ந்து மூன்று நாட்கள் என்னை உற்சாகம்செய்யும் விதமா பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 50 மணி நேரத்துக்கும் மேல நின்னுட்டே இருந்ததால், கால் நரம்புகள் இழுக்க ஆரம்பிச்சுடுச்சு. அசரலை. 90 மணி நேரமும் நெருங்கிட்டேன். எங்கே இருக்கேன்கிற உணர்வே இல்லை. அடுத்த 10 மணி நேரமும் கையில அயர்ன் பாக்ஸ் இருந்தது. ஆனா, ஒரு ரோபோ மாதிரி அயர்ன் பண்ணிட்டே இருந்தேன்.

p59c.jpg

என் மனைவி கூட இருக்கிற மாதிரி, ரயிலில் கண் தெரியாத அந்தப் பொண்ணுகூட பேசுற மாதிரி வேற உலகத்துல இருந்தேன். இந்த 10 மணி நேரம் யார் என்கிட்ட பேசினாங்கனு ஒண்ணுமே தெரியல. முன்னாடி செஞ்ச சாதனையை முறியடிக்கும் விதமா 100 மணி நேரத்தைத் தாண்டிட்டேன். ஆனாலும், கூடுதலாக 2 மணி நேரம் அயர்ன் பண்ணச் சொன்னாங்க. கடைசி 26 நிமிஷம் சுத்தமா முடியலை. பசங்க என் மேல தண்ணியை ஊத்தினாங்க. எப்படியோ நினைவுவந்து சரியாக 102 மணி நேரம் 30 நிமிடம், 7,104 துணிகளை அயர்ன் பண்ணி கின்னஸ் சாதனை பண்ணிட்டேன். வேகமாக அயர்ன் செய்தது, அதிக நேரம் அயர்ன் செய்தது என இரண்டு சாதனைகள். ஒரு தோத்தாங்குளிக்கு முதன்முதலில் வெற்றிப் பட்டம் கிடைச்சது. அங்க இருந்தவங்க என்னைத் தூக்கிக் கொண்டாடினாங்க.

நிற்கக்கூட முடியாம, கீழே விழும்போதுதான் தோணுச்சு. வாழ்க்கை ரொம்ப விசித்திரமானது’’ - கண் கலங்கிய படியே கைகுலுக்குகிறார் டேனியல். 

மகிழ்ச்சி!

vikatan

  • தொடங்கியவர்

14242224_1224859834239471_81884031986258

 
 
செப்.10: நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாள்
  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: மாரியப்பன்- தங்க மகன்!

 

 
160910014033_rio_p_3005580f.jpg
AFP

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு நெட்டிசன்கள் தங்கள் வாழ்த்துகளைப் பரிமாறி வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

Karthikraja

ரியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம். அதுவும் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமை. #மாரியப்பன் தங்கவேலு

Krish S Krish

பெயரிலும் தங்கம், செயலிலும் தங்கம். வாழ்த்துகள் மாரியப்பன் தங்கவேலு.

Shanth Nava

தமிழன் சாதிக்கப் பிறந்தவன் என்பதற்கு நம்ம மாரியப்பன் ஓர் எடுத்துக்காட்டு.

பென்சில் திருடன் ‏

ஊனம் ஒரு தடையல்ல.. நிரூபித்த மாரியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Vijhai Shekar

தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு #Paralympics உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை. வாழ்த்துவோம் தமிழகத்தின் தங்கமகனை..!

Ahd Anu

மிஸ்டர்.மாரி, மானம் காத்த தங்க மகன்

Vikram Ppr

மாரிரிரி,,,,,,சிரிச்சா தங்கம் மாரி,,,,,,மொறச்சா சிங்கம் மாரிரிரி,,,,,,,

Shan Karuppusamy

மாரியப்பன் தங்கவேலு. ஒற்றைக் காலின் வலிமையில் அனாயாசமாக அந்த உயரத்தைத் தாண்டுவதைப் பார்த்ததும் சிலிர்த்துவிட்டது. இதுதானே நிஜமான தங்கம். அதே போட்டியில் வெண்கலம் வென்ற வருணுக்கும் வாழ்த்துகள். சல்யூட்.

கவி தா ‏

இந்திய மாரியப்பன்... தமிழ்நாட்டின் தங்கம்... சேலத்தின் சிங்கம்... தெருப்பேருக்காக வெயிட்டிங்.

ℳя.அலெக்ஸ்

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ....?- மாரியப்பன்.

Newton

வெல் தங்கம் என்று தன்னையே சொல்லிக்கொண்டு தங்கம் வென்ற (மாரியப்பன்) தங்கவேல்.

suresh

ஜெயிக்க உடல் உறுப்பை விட மன உறுதிதான் வேணும்னு நிரூபிச்ச தமிழன்.

கபார் அறந்தாங்கியான் ‏

மாற்றும் திறனாளிகள்...

தங்க மகன்கள் மாரியப்பன் மற்றும் வருண்

S.K.Soundhararajan

மாரியப்பன் தங்கவேல் என்ன சாதி என்று தேட வேண்டாம். அவர் தமிழன்.

பூனை குட்டி ‏

குடிகார டிரைவரால் விபத்தில் காலை இழந்தவர் "தங்க மகன்" மாரியப்பன் தங்கவேலு..! மதுவைத் தவிர்ப்போம்.

Mahalingam Ponnusamy

#மாரியப்பன் தாண்டியது வெறும் உயரக்கோல் மட்டுமல்ல; கிண்டல், வறுமை, பயிற்சி கிடைக்காமை என தாண்டிய உயரம் விண்ணளவு.

S.Raja

மாரி மண்ணை குளிர்விக்கிறது; மாரியப்பன் தமிழர் நெஞ்சை குளிர்வித்திருக்கிறார்!

♂மருதாணி♂ ‏

சேலம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி குக்கிராமத்தைச் சேர்ந்த தமிழன் மாரியப்பன் தங்கவேலு, இந்தியன் என்று உலகிற்கு அறிமுகமாகிறார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

p74a.jpg

 

p74b.jpg

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
பூனையிடம் வழி கேட்ட நாராயணசாமி

பூனையிடம் வழி கேட்ட நாராயணசாமி

 

நாராயணசாமியின் மனைவி ஒரு பூனை வளர்த்து வந்தாள்.

அது நாராயணசாமிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தார்.

ஒரு நாள் மனைவிக்குத் தெரியாமல் அந்த பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி விட்டுவிட்டு வந்தார். வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.

அடுத்தநாள் அப் பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தார். அன்றும் பூனை அவருக்கு முன்னால் வந்து மாடியில் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது.

வெறுப்படைந்த அவர் அடுத்த நாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தார்.

சிறிது நேரம் கழித்து நாராயணசாமி தன் மனைவிக்கு போன் செய்து கேட்டார், “உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?” “ஆம்” என்று மனைவி சொல்ல

நாராயணசாமி சொன்னார், “போனை பூனையிடம் கொடு…எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை”.”

Online.uthayan

  • தொடங்கியவர்
பிறரின் முயற்சிகளையும் கஸ்டங்களையும் உணருவதேயில்லை
 
 

article_1473308767-Good-Bad-Emotions.jpgதங்களுக்கு மட்டும் பிறர் நம்பிக்கையாக இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள், பிறருக்குத் தாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றார்களா எனச் சிந்திக்கின்றார்களா?

தங்கள் நலன்களை மட்டுமே மையப்படுத்தி, ஏனையவர்களைச் சிறுமைப்படுத்துதல் சிறுமதியாளர் குணம்.

இத்தகைய பேர்வழிகள் தங்கள் செயலுக்காக வெட்கத்தையும் சுயகௌரவத்தையும் விட்டொழித்தவராவர்.

கூசாமல் முறைகேடாக உதவிகேட்பதும், உதவி புரிய இயலாதவர்களைக் கேலி செய்து, திட்டித்தீர்க்கும் பிரகிருதிகளை என்ன செய்வது?

சமூகம் தனக்காக எல்லாவற்றையுமே இலவசமாக வழங்க வேண்டும் எனச் சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் பிறரின் முயற்சிகளையும் கஸ்டங்களையும் உணருவதேயில்லை. மற்றவர்கள் வலிகளை உணர்ந்தவன், பரிவுடன் எவருக்கும் உதவுபவன் ஆகின்றான்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஃபிரான்ஸ் எர்ன்ஸ்ட் நியூமேன்

 

 
francis_3006379f.jpg
 

ஜெர்மனியை சேர்ந்த பிரபல கணிதவியலாளரும், இயற்பியலாளருமான ஃபிரான்ஸ் எர்ன்ஸ்ட் நியூமேன் (Franz Ernst Neumann) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜெர்மனியில் பெர்லின் அருகே உள்ள ஜோவகிம்ஸ்தல் நகரில் (1798) பிறந்தார். தந்தை விவசாயி. நியூமேனின் சிறு வயதிலேயே அம்மா பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு, தாத்தா வீட்டில் வளர்ந்தார். கணிதத்தில் சிறந்து விளங்கினார். அடிக்கடி போர் நடந்ததால் கல்வி தடைபட்டது.

* படிப்பை 16 வயதில் நிறுத்திவிட்டு, ராணுவத்தில் சேர்ந்தார். போரில் காயம் அடைந்ததால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில், ஒரு தீ விபத்தில் குடும்ப சொத்துகள் நாசமானதால், பண நெருக்கடியும் ஏற்பட்டது. அதை பொருட்படுத்தாமல் பெர்லின் பல்கலைக்கழகத்தில் மீண்டும் சேர்ந்து, படிப்பைத் தொடர்ந்தார்.

* தந்தையின் விருப்பப்படி இறையியல் படிப்பில் சேர்ந்தார். ஆனாலும், கணிதம், அறிவியல் மீதான ஆர்வம் குறையவில்லை. பின்னர், ஜெனா பல்கலைக்கழகத்தில் கனிமவியல், படிகவியல் பயின்றார். படிகவியல் குறித்து ஆராய்ந்தார். கோனிக்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தார்.

* தந்தையின் மறைவால் ஓராண்டு காலம் படிப்பு தடைபட்டது. பிறகு, படிகவியலில் ஆராய்ச்சி செய்து கண்டறிந்த விஷயங்களை கட்டுரையாக எழுதி வெளியிட்டார். மீண்டும் பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முனைவர் பட்டம் பெற்றார். இவரது ஆராய்ச்சிகளும், கட்டுரைகளும் இவருக்கு கோனிக்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணியைப் பெற்றுத் தந்தது.

* கனிமவியல், இயற்பியல் துறைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பின்னர் மருத்துவ ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார். அங்கு மாணவர்களுக்கு ஆராய்ச்சி முறைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் பிரபல விஞ்ஞானி ஜேகோபியுடன் இணைந்து கணித -இயற்பியல் பயிலரங்குகள் நடத்தினார்.

* மனைவி வழியில் கிடைத்த சொத்துமூலம், தன் வீடு அருகே ஒரு இயற்பியல் ஆய்வுக்கூடம் அமைத்துக்கொண்டார். பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆய்வுக்கூடம் இல்லாததால், இவரது ஆய்வுக்கூடத்தையே மாணவர்களும் பயன்படுத்திக் கொண்டனர்.

* படிகவியல் குறித்த இவரது ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் ‘நியூமேன்ஸ் கோட்பாடு’ என குறிப்பிடப்படுகிறது. உலோகக் கலவைகளின் வெப்பநிலைகள், ஒளி அலைக் கோட்பாடு, இரட்டை விலகல் விதிகள் மற்றும் ஒளியியல், கணித ஆய்வுகளில் ஈடுபட்டார். மூலக்கூறு வெப்ப விதிகளை உருவாக்கினார்.

* இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் செயல்பாட்டில் மின் தூண்டலின் கணித கோட்பாட்டை முதன்முதலாக வரையறுத்தவர் இவர்தான். மின்னோட்டத்தின் தூண்டலுக்கான கணித விதிகள், ஒளியியல் பண்புகளைக் கண்டறிந்தார்.

* பல விஷயங்கள் குறித்து ஆராய்ந்தார். தனது ஆராய்ச்சிகள் பற்றி பெரும்பாலும் விரிவுரைகளாகவே வழங்கினார். அவற்றை விளக்கி கட்டுரைகளாக எழுதியது வெகு குறைவு. வெப்ப இயந்திர கோட்பாட்டைத் தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர் என இவரது மகனும் விஞ்ஞானியுமான கார்ல் நியூமேன் குறிப்பிட்டுள்ளார்.

* கணிதம், ஒளியியல், மின்னியல், படிகவியல் உள்ளிட்ட பல்வேறு களங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காக டுபிங்கென், ஜெனிவா பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கின. இயற்பியல், கணிதத் துறையை தனது மகத்தான ஆராய்ச்சிகள் மூலம் வளப்படுத்திய நியூமேன் 97-வது வயதில் (1895) மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

முத்தத்தால் பிரபலமான நரஸ் மரணம்

முத்தத்தால் பிரபலமான நர்ஸ் மரணம்

 
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரண் அடைந்ததாக அறிவிப்பு வெளியானபோது அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் இராணுவ வீரரால் முத்தமிடப்படும் புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த கிரேட்டா ஜிம்மர் என்ற நர்ஸ், தனது 92 வயதில் காலமானார்.

போலந்து நாட்டை கைப்பற்ற ஜேர்மனியால் தொடுக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியை எதிர்த்து பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நேசநாடுகள் போரில் குதித்தன. ஜேர்மனிக்கு ஆதரவாக இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் இந்தப் போரை எதிர்கொண்டன.

ஆறாண்டுகள் நீடித்த இந்தப் போரின் முடிவாக 14-8-1945 அன்று அமெரிக்காவிடம் ஜப்பான் சரண் அடைந்தது. அமெரிக்காவின் வெற்றியையும், இரண்டாம் உலகப்போரின் முடிவையும் கொண்டாட அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டனர்.

அந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தின்போது அவ்வழியாக வந்த ஒரு இராணுவ வீரர் அங்கு நர்ஸ் சீருடையுடன் நின்றிருந்த இளம்பெண்ணை மகிழ்ச்சி பெருக்கில் திடீரென கட்டியணைத்து முத்தமிட்டார். இந்த உற்சாகக் காட்சியை ஆல்பிரட் எய்சென்ஸ்டாட் என்பவர் தனது கேமராவுக்குள் சிறைபிடித்தார்.

அமெரிக்காவின் பிரபல வார இதழில் ‘வெற்றிக் கொண்டாட்டம்’ என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில் இடம்பெற்றிருந்த அந்த புகைப்படம், உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பின்னாளில், ‘தி கிஸ்’ என்ற பெயரில் வெகுவாக பேசப்பட்ட இந்த புகைப்படத்தில் இருப்பது நாங்கள்தான் என 11 ஆண்களும், 3 பெண்களும் ’போலியாக’ உரிமை கோரினர்.

1980-ம் ஆண்டுவாக்கில் அந்த வரலாற்று சிறப்புக்குரிய முத்தக் காட்சியில் இடம்பெற்றிருந்த ஜோடி யார்? என அடையாளம் தெரிந்தது.

இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற இராணுவ வீரரான ஜார்ஜ் மெண்டோன்சா என்பவர் அதேபோரில் தனது பெற்றோரை இழந்துவிட்டு ஆஸ்திரியா நாட்டில் இருந்து அமெரிக்காவில் வந்து குடியேறி, அங்கு நர்சாக பணியாற்றிவந்த கிரேட்டா ஜிம்மர் என்ற 21 வயது நர்சை முத்தமிட்ட சம்பவம் உரிய ஆதாரங்களுடன் நிரூபணமானது.

இருவரும் அதற்கு முன்னர் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் இல்லை. அந்த முத்த சம்பவத்துக்கு பின்னர் இருவரும் வெவ்வேறு நபரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், மேற்கண்ட புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த கிரேட்டா ஜிம்மர் அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் தனது 92-வது வயதில் மரணம் அடைந்தார். அர்லிங்டன் நகரில் உள்ள கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்பதை அவரது மகன் நேற்று அறிவித்துள்ளார்.

http://tamil.adaderana.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.