Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

14222079_1127320137316679_69248785348901

முண்டாசுக் கவிஞன் பாரதியின் நினைவு தினம் இன்று!

தமிழ்க் கவிதையால் தேசபக்தி கனலை கொழுந்துவிட்டு எரியச் செய்த அற்புத கவிஞனின் நினைவு நாள் இன்று. அரசியல் ,ஆன்மீகம், காவியம், தத்துவம், சமூகம், முற்போக்கு சிந்தனை, நகைச்சுவை என அவன் தொட்ட இடங்கள் துலங்க தவறியத்தில்லை. ஆங்கிலம், வடமொழி, பிரெஞ்சு, என்று பல மொழிகளில் தேர்ச்சி பெற்று தன் ஞானத்தால் தமிழ் வளர்த்த பெருங்கவிஞன்....

தமிழை தன் உயிர் போல் நேசித்த மகாகவியின் தினத்தில் மகான்களைப்போற்றி நாமும் மகத்தான தமிழ் வளர்ப்போம்

 

 

 

செப்.11: கவிதையுலகின் சூரியன் பாரதி நினைவு நாள் சிறப்பு பகிர்வு

சுப்பையா என்று இளம் வயதில் அழைக்கப்பட்ட தமிழ் கவிதையுலகின் சூரியன் பாரதி நினைவு நாள்

தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்!. இளம் வயதில் அம்மாவின் பாசம் என்னவென்று தெரியாமல் அப்பாவின் வளர்ப்பில் வளர்ந்த அவருக்கு அப்பொழுது கணக்கு என்றால் பிணக்கு. இது வெகு காலத்துக்கு கல்விமுறையின் மீது வெறுப்பாகவே மாறியது. ஒரு சிறுவன் இளமையில் கல் என்று ஓயாமல் மனனம் செய்து சொல்லிக்கொண்டு இருந்த பொழுது ‘முதுமையில் மண்’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் இவர்.

தமிழ் எழுத்துலகில் கார்ட்டூன் என்பதை அறிமுகப்படுத்தியது பாரதியாரே. அதை முழுதாக சித்திர பாரதி என்கிற நூலில் பார்க்கலாம். இளம் வயதில் பாரதிக்கு ஒரு காதல் இருந்தது. அந்த பெண்ணை சாகுந்தலை என்று அடையாளமிட்டு குறிக்கிறார். தன் மகளுக்கு அதே பெயரை வைத்தார் அவர்.

மதுரை தமிழ் சங்கம் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது அவரின் கவிதை. அந்தக்கவிதை தான் ,’செந்தமிழ் நாடெனும் போதினிலே’. பண்டிதர்கள் கடத்திக்கொண்டு போன பைந்தமிழ் குழந்தையை கண்டுபிடித்துக்கொடுத்த காவல் நிலையமான பாரதியின் எளிய நடை அக்காலத்தில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதை பண்டிதர்கள் எதிர்த்தார்கள். பாரதி ,”கவியரசன் தமிழுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது !” என்று மட்டும் சொன்னார்.

எக்கச்சக்க வறுமையிலும் குருவிக்கு தானியங்களை கொடுத்துவிட்டு சிரித்த நேசிப்பாளன். வாட்டிய பசியிலும் ,”எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா !” என்று பாடிய பெருங்கவிஞன் அவன். எல்லா உயிரிலும் இறைவன் இருக்கிறான் என்று நம்பிய அவர் புதுச்சேரியில் புயலில் பறவைகள் இறந்த பொழுது கனிவோடு அவற்றை அடக்கம் செய்தார்.

நாட்டை தட்டி எழுப்ப கவிதை எழுதிய அந்த சிந்துக்கு தந்தை எப்பொழுதும் தாலாட்டு மட்டும் பாடியதே இல்லை. நாடு உறங்க இது தருணமன்று என்கிற எண்ணமே காரணம். பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்ற வைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு துன்புறுகிறார்கள் என்பதை உணர்ந்து `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்று bharathi_new1.jpgதான் எழுதினார் பாரதி. கழுதை குட்டியை தூக்கி போட்டுகொண்டு மனைவியோடு கம்பீரமாக நடந்த பாரதியை ,”பைத்தியங்கள் உலவப்போகின்றன !” என்று ஊரார் சொன்ன பொழுது எழுப்பியது தான் ‘நிமிர்ந்த நன்னடை’ பாடல்


. 'என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்' என்று சொன்னவர்!என்று கடிதம் எழுதவேண்டும். அதைக்கேட்டு நான் பூரிக்க வேண்டும் ‘ என்று பாரதி எழுதினார்.

‘கடமை அறியோம் தொழில் அறியோம் !” என்று பறவையின் மனப்பான்மையிலும்,’தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்றும் பாரதியால் தான் பாட முடியும்
வறுமையில் வாடிப்போன அவர் “பராசக்தி! இந்த உலகின் ஆன்மா நீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா?
கடன்காரன் தொல்லை தாங்க முடியவில்லையே. குழந்தைக்கு ஜுரம் வந்தது… வைத்தியனுக்குக் கொடுக்கப் பணம் இல்லை. குழப்பம், குழப்பம்; தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்! தாயே! என்னைக் கடன்காரர் ஓயாமல் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால், உன்னை எப்படிப் பாடுவேன்?” என்று புலம்பினார்
 
பாரதி காந்திக்கு கடிதம் வரைகிற பொழுது அவர் சென்னையில் ஆங்கிலத்தில் பேசியதை விடுத்து ஏதேனும் இந்திய மொழியில் பேசி இருக்கலாமே என்று கேட்ட பொழுது அவர் அவ்வாறே செய்கிறேன் என்றார். ஆனால்,கடிதத்தை ஏன் ஆங்கிலத்தில் எழுதினீர்கள் என்று கேட்ட பொழுது ,’பிறரை புண்படுத்தும் பொழுது அன்னை மொழியை பயன்படுத்தி பழக்கமில்லை.’ என்று தெறித்து வந்தது பதில் சென்னை கிருஷ்ணாம்பேட்டையில் பாரதி உறங்கிக்கொண்டு இருக்கிறான். அவனின் கீதங்கள் அக்கினி குஞ்சுகளை ஈந்துக்கொண்டே இருக்கின்றன. வேடிக்கை மனிதரைப்போல வீழாத அந்த என்றும் இளைஞன் இறக்கிற பொழுதும் வெள்ளையனை தலை முடியில் கூட அண்ட விடமால் நல்லதொரு வீணையாக நாட்டை மீட்டி மறைந்தான். அவனின் இறுதி அஞ்சலிக்கு வந்தது இருபதுக்கும் குறைவானோர்.

vikatan

  • தொடங்கியவர்

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்: இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தி (PHOTOS)

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்: இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தி (PHOTOS)

அமெரிக்காவை பழி வாங்கும் நோக்கத்துடன் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவில் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

பொஸ்டன் நெவர்க், நியூஜெர்சி, வொஷிங்டன் ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்ட விமானங்களை 19 அல்கொய்தா தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் கடத்தி சென்றனர்.

இதில் 2 விமானங்களை நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் மீது மோத விட்டனர்.

ஒரு விமானம் விர்ஜினியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் கட்டிடத்தில் மோத விட்டனர்.

மற்றொரு விமானத்தை அமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகை மீது மோதுவதற்காக கொண்டு சென்றனர்.

ஆனால் பயணிகள் தீவிரவாதிகளை மடக்கி பிடிக்க முயன்றதால் விமானத்தை தரையில் மோதி வெடிக்க செய்தனர்.

விமானங்கள் மோதிய இரட்டை கோபுரம் முழுவதும் தீப்பற்றி சற்று நேரத்தில் இடிந்து வீழ்ந்தது

அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தாக்குதலுக்கு திட்டமிட்டு கொடுத்த அல்கொய்தா தலைவர் பின்லேடனை பிடிப்பதற்காக அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது கடைசியில் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடன் கொல்லப்பட்டான்.

அமெரிக்கா மீது தாக்குதல் நடந்தப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இன்று இதன் நினைவு தினமாகும், அன்று நடந்த சோகம் இன்றுவரை அமெரிக்காவுக்கு தீராத வலியை கொடுத்து வருகிறது.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளதுள்ளமை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி அனுதாபம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்கர்கள் ஒவ்வொருவரும் இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து நினைவு கூறுமாறு வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் நாட்டை பாதுகாக்க அல்கொய்தா மற்றும் ஐ.எஸ் போன்ற தீவிர வாதிகளை அழிக்க வேண்டியது அவசியம் என இதன் போது கருத்து வெளி/யிட்டுள்ளார்.

விமான கடத்தல்காரர்களினால் உலக வர்த்தக மையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3000 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

03sept11gallery.ngsversion.1441980018262.adapt_.590.1.jpg

04sept11gallery.ngsversion.1441980010098.adapt_.1190.1.jpg

  07sept11gallery.ngsversion.1441980011295.adapt_.470.1.jpg

08sept11gallery.ngsversion.1441980005239.adapt_.1190.1.jpg

09septgallery.ngsversion.1441980008533.adapt_.536.1.jpg

10sept11gallery.ngsversion.1441980014717.adapt_.1190.1.jpg

12sept11gallery.ngsversion.1441980004374.adapt_.1190.1.jpg

13sept11gallery.ngsversion.1441980012416.adapt_.536.1.jpg

14sept11gallery.ngsversion.1441980003701.adapt_.945.1.jpg

16sept11gallery.ngsversion.1441980002037.adapt_.1190.1.jpg

17sept11gallery.ngsversion.1441980007620.adapt_.1190.1.jpg

19sept11gallery.ngsversion.1441980019012.adapt_.1190.1.jpg

23sept11gallery.ngsversion.1441980013260.adapt_.885.1.jpg

26sept11gallery.ngsversion.1441980013886.adapt_.536.1.jpg

http://newsfirst.lk/tamil

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p116d.jpg

twitter.com/David_EXIM: அப்பா - அம்மா இடையே சண்டைன்னா புள்ளைங்க குஷியாகிடுதுங்க # `அப்பா, `தோசைக்கு என்ன வேணும்?’னு அம்மா கேட்டாங்க!’

twitter.com/nithya_shre: சிறுவாணி குறுக்கே அணை கட்டத் தொடங்கியது கேரளா - இது பழசு. அந்த அணை கட்ட கல், ஜல்லி, மணல் போன்றவை தமிழ்நாட்டில் இருந்தே செல்கின்றன - இது புதுசு!

twitter.com/chevazhagan1: `என்ன வரம் வேண்டும்?’ என்றார் கடவுள். `கொஞ்ச நேரம் செருப்பைப் பார்த்துக்கொள்’ என்றேன் நான்!

twitter.com/teakkadai: அஞ்சு ஃப்ளெக்ஸ் பார்த்தா அதுல ரெண்டு... `அடுத்த மாப்ள நாங்க... பொண்ணு இருந்தா தாங்க’வாகத்தான் இருக்கு!

twitter.com/iindran: இந்த வண்டிச் சாவியைத் தேடித் தர்றதுக்குனே தனியா ஒரு ஆள் போடணும்போல... ஸ்ஸப்பா!

p116b.jpg

twitter.com/Alllahdin: ஒரு ஏ.டி.எம் மெஷினுக்கு மூணு ஏ.சி இருக்கு. இதுல, `சுற்றுச்சூழலைக் காப்பாத்த ரசீது பிரின்ட் பண்ணாதே’னு சொல்லுது!

twitter.com/ManiPmp: கால்கள் இரண்டையும் தரையில் தேய்த்து, உதடு மடித்து, அனுமார்போல் வைத்திருந்தால், பெண்கள் பைக்கை நிறுத்தப்போகிறார்கள் என அர்த்தம்!

twitter.com/Kozhiyaar: 50 வயதுக்கு மேல் உணவு உண்பதே, அதற்குப் பின்னர் மருந்துகள் உண்ண வேண்டும் என்பதற்காகத்தான் போலும்!

twitter.com/jairamguttuvan: ஆயிரம் குழந்தைகள் வெளிவரும் பள்ளியில் இருந்து, தன் குழந்தையின் முகம் தனித்துத் தெரிவது, பெற்றோரின் கண்களுக்கு இயற்கை கொடுத்த ஸ்பெஷல் ஃபோக்கல் பாயின்ட்!

twitter.com/teakkadai: பள்ளிப் படிப்பில் இருப்பதிலேயே எளிதான செயல், `நான் கவர்னரானால்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுவதுதான்!

twitter.com/joe_selva1: ஆடு வளர்க்கிறது அழகு பார்க்க இல்லை... கோழி வளர்க்கிறது கொஞ்சுறதுக்கு இல்லை... அதே மாதிரி ஜியோ சிம், மூணு மாசம் இலவச நெட் தர்றதுக்கு, அம்பானி ஒண்ணும் லூஸு இல்லை!

p116a.jpg

twitter.com/altappu: `மோடி எப்படி ரிலையன்ஸ் மாடலாக வரலாமாம்?’ # அட லூஸுகளா... உங்க பிரதமர், ரிலையன்ஸ் மாடல் ஆகலை. ரிலையன்ஸ் மாடலைத்தான் நீங்க பிரதமர் ஆக்கியிருக்கீங்க!

twitter.com/AzamMohammed90: நம்பிக்கைனா எப்படி இருக்கணும் தெரியுமா? யானை காலுக்கு அடியில் தூங்கும் பாகனைப்போல!

twitter.com/ManiPmp: கூட்டமான கடையில் பைக்கை நிறுத்திட்டுப் போவோம். திரும்பி வந்து பார்த்தால், `மெளனராகம்’ கார்த்தி பைக் மாதிரி நம்ம பைக் நடுரோட்டுல நிற்கும்!

twitter.com/Kannan_Twitz: பழைய ஃப்ரெண்ட்ஸைப் பார்த்தா `மச்சான் வாட்ஸ்அப்ல இருக்கியா... ட்விட்டர்ல இருக்கியா?’னுதான் கேக்குறானுங்க. ஒரு பயலும் `நல்லா இருக்கியா?’னு கேக்க மாட்றானுங்க!


facebook.com/tmaniji : புறநகர் மின்சார ரயிலில், இருவர் மட்டுமே அமரும் இருக்கை முன்னர் இருந்தது. `கொஞ்சம் தள்ளி உக்காருங்க’ எனக் கேட்டுக்கொண்டால் மட்டுமே, தாய் உள்ளத்தோடு இடம்தருவார்கள். மம்மி முன்பு பம்மி அமரும் மந்திரியைப்போல, நுனியில் உட்கார வேண்டும். அந்த இருக்கைக்கு `தேர்டு பெர்சன் சிங்குலர்’ எனப் பெயர்வைத்திருந்தேன்!


facebook.com/iMuthuram: Jio சிம் வாங்காதவனை எல்லாம் `தேசத்துரோகி’னு சொல்லுவாய்ங்களேனு நெனச்சாதான் துக்கம் தொண்டையை அடைக்குது!


facebook.com/VignaAchuthan: மாமனார் - ஒரு நிமிஷம்கூட ஃபேன் ஓடாம, இருக்கமுடியலையே உன்னால... ஃபேன் இல்லாத காலத்துல நீ பிறந்திருந்தா என்ன பண்ணிருப்ப?

மகள் - நான் கண்டுபிடிச்சிருப்பேன், தாத்தா!


p116c.jpg

facebook.com/saravanan.chandran.77: சரணாலயம் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. ஒருமுறை சாம்ராஜ் நகர் வழியாக அடர் காட்டில் பயணம் செய்தபோது, புலி நடமாட்டம் இருப்பதாகச் சொன்னார்கள். மேற்கொண்டு மேலே செல்ல வேண்டாம் என்றார்கள். அதையும் மீறிப் போனபோது, சாலைக்குப் பக்கத்திலேயே புலி படுத்துக்கிடந்தது. இது மாதிரியான ஒரு தரிசனத்துக்காகத்தான் வனப் புகைப்படக்காரர்கள் நேரத்தையும் பணத்தையும் செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள். டைகர் ஸ்பாட்டிங் என்பது, லட்ச ரூபாய்க்குச் சமம். சாலையோரத்தில் படுத்துக் கிடந்த அதன் கண்களில் வேட்டைக்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. ஏனெனில், பசி இல்லாதபோது அவை வேட்டையாடுவது இல்லை. பசி இல்லாத போதும் வேட்டையாடும் மனிதர்கள்தான் அது குறித்த கற்பிதங்களை உருவாக்கியபடியே இருக்கிறார்கள். உண்மையில், இருப்பதிலேயே கூச்ச சுபாவியான விலங்கு புலி. அதிகப்படியான கட்டுக்கதைகளைக் கேட்டுக் கேட்டு, அவற்றைக் கொடூரமாகச் சித்தரித்துக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு புலிக்கும் சுமார் 45 சதுர கி.மீ டெரிட்டரி உண்டு. தன்னுடைய டெரிட்டரிக்குள் அத்துமீறுபவர்களைத்தான் அது தாக்கத் தொடங்குகிறது. மற்றபடி அது எப்போதும் ஒதுங்கி வாழும் இயல்பைக்கொண்டது. நம்மில் ஒருசிலரும் அப்படி இருக்கத்தானே செய்கிறார்கள்!

Photo: Tanay panpalia.


facebook.com/araathu.officialpage :

மோடி - பிராண்ட் பெர்சனாலிட்டி. ரிலையன்ஸ் ஜியோ விளம்பரத்தில் மோடி தோன்றியது, அவருக்குத் தெரியாமல் நடந்திருக்கவோ, அவரின் அனுமதியின்றி நடந்திருக்கவோ வாய்ப்பு இல்லை. ஏதேனும் நிறுவன விழாவுக்கு, தலைவர்கள் வருகையில் அவர்களின் படங்களைப் போட்டு மார்க்கெட்டிங் செய்து கொள்வது நிறுவனங்களின் வாடிக்கையாக இருந்துவந்தது. பல முறை தவறாகப் பயன்படுத்திக்கொள்ளப் பட்டவர் திரு. அப்துல் கலாம் .

`டிஜிட்டல் இந்தியா’, `மேக் இன் இந்தியா’, `உங்களின் கனவு’, `இந்தியாவின் பெருநிகழ்வு’ என்றெல்லாம் சொல்லி, ஐஸ்வைத்து, ரிலையன்ஸ் மோடியிடம் அனுமதி வாங்கியிருக்கக்கூடும்.
மோடியோ, பிரதமர் அலுவலகமோ அனுமதி அளித்தது புத்திசாலித்தனமான காரியம் அல்ல... சிறுபிள்ளைத்தனமானது. இதையே சாக்காகவைத்து, `க்ளீன் இந்தியா’, `ஸ்வச் பாரத்’ என்றெல்லாம் போங்கு காட்டி, `ஹார்பிக்’ மற்றும் இன்ன பிற பினாயில் கம்பெனிகள் மோடி படத்தைப் பயன்படுத்தக்கூடும்!

அப்பாஸ் வகையறாக்கள் பாவம் :-). அவர்கள் வயிற்றில் மோடி அடிக்கக் கூடாது!

vikatan

  • தொடங்கியவர்

ஓனர் யாருங்கோ?

 

சோஷியல் மீடியாக்களில், சில பொன்மொழிகளுக்கு ஒரிஜினல் சொந்தக்காரர் யாருன்னு யாருக்கும் தெரியாது. ஒரே பொன்மொழியைப் பல பேர்ல எழுதி நம்மைக் குழப்பிவிட்ருப்பாங்க. அப்படி என்னல்லாம் குழப்பியிருக்காங்கனு பார்ப்போமா...

p28.jpg

red-dot3.jpg ‘நேரம் ஒருபோதும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை’. போன மாசம் இதே பொன்மொழி ஐன்ஸ்டீன் பேர்ல வந்துச்சு. இந்த மாசம் நியூட்டன் பேரைப்போட்டு பரப்பிவிட்டுருக்காங்க. இல்லை தெரியாமதான் கேட்கிறேன்... நியூட்டன் விதி தவிர பொன்மொழி புக்கெல்லாமா போட்டாரு அவரு!

red-dot3.jpg ‘உலகம் உன்னைத் திரும்பிப் பார்க்கணும்னா, நீ யாரையும் திரும்பிப் பார்க்காதே’ - ஹிட்லர் மட்டும் திரும்ப வந்தா நான் எப்படா இதைச் சொன்னேன் அப்ரசன்டிகளானு பூமியை அழிச்சிட்டுப் போய்டுவாரு. படுத்துறாய்ங்களே!

red-dot3.jpg ‘வெற்றி என்பது விடாமுயற்சி உடையவனையே சென்றடையும்’. இதைச் சொன்னது மகாவீரராம். அன்பையும், நல்லறத்தையும் போதிச்ச மனுஷன் பேர்ல தன்னம்பிக்கை புத்தகங்கள்ல உள்ள வரியெல்லாம் எழுதுறீங்களே... பாவம் அவரு!

red-dot3.jpg ‘முடியாது என்பது மூடநம்பிக்கை. முடியும் என்பது தன்னம்பிக்கை’. இந்த வரிக்கு உண்மையான சொந்தக்காரர் யாருனு ஒரு குரூப் விவாதமே பண்ணிட்டுருக்கு. ஏன்னா 20 அறிஞர்கள் இதைச் சொன்னதா பரப்பி வெச்சிருக்காங்க நம்ம பசங்க. யார்தான் சொன்னா?

red-dot3.jpg ‘மகிழ்ச்சியாக இருப்பதொன்றே மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரே வழி’ - கவலைப்படாதீங்க. இதை எழுதியவருக்கே இதுக்கு என்ன அர்த்தம்னு தெரியாது. இதை ஆசையே துன்பத்திற்குக் காரணம்னு சொன்ன புத்தர் பேர்ல எழுதிருக்காங்க. பாவத்த!

நன்கு அறியப்பட்ட அறிஞர்களின் பெயர்களைப் போட்டால் அதிகம் ஷேர் ஆகின்றன என்று சோஷியல் மீடியாக்களில் இவர்கள் செய்யும் அலப்பரைகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. செத்துப்போன தலைவர்கள் எல்லாறைம் எழுந்திரிச்சு வந்து, ‘இதெல்லாம் நான் சொன்னதில்லை'னு சொல்ற வரைக்கும் இப்படித்தான் ஏதாவது அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டுருப்பாங்க!

vikatan

  • தொடங்கியவர்

நடை உடை: மணமகளே மணமகளே வா வா

 

 
pridal_3005431f.jpg
 

திருமணத்தின் முக்கிய நிகழ்வு மணமக்கள் அலங்காரம். மணமக்களின் திருமண ஆடைகளுக்கென்றே பிரத்யேகமாக, ‘மெட்ராஸ் பிரைடல் ஃபேஷன் ஷோ’ கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. பல்வேறு கலாச்சாரங்களை ஒன்றிணைத்து வேற்றுமைகளின் சங்கமத்தைப் பறைசாற்றிய இந்த ஃபேஷன் அணிவகுப்பை டிரான்ஸ் கார்ஸ் மற்றும் சிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்தின. இந்தியாவின் சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களான அஞ்சலி, அர்ஜுன் கபூர், ரெஹானா பஷீர், ஷ்ரவன் குமார், நௌஷிஜா, சுமோனா, ரிங்கு சோப்டி, சிட்னி சிலேடன் ஆகியோரின் வடிவமைப்பில் உருவான ஆடைகளைத் திரைப்பட நடிகைகள் அணிந்து வலம்வந்தனர்.

pridal1_3005434a.jpg

pridal2_3005433a.jpg

http://tamil.thehindu.com/

  • தொடங்கியவர்

நாட்டுக்கொரு பாட்டு 23: கொடியைக் கொண்டாடும் பாட்டு!

 

 
 
song_3000891f.jpg
 

அமெரிக்காவை என்னத்தான் ‘ஆதிக்கச் சக்தி’, ‘பெரியண்ணன்’ என்று வார்த்தைகளால் திட்டினாலும், எல்லாத் துறைகளிலும் வளர்ந்த வல்லரசு நாடு அது. வெளிநாடுகளில் கை நிறைய சம்பாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு அமெரிக்காதான் புகலிடம். ஜனநாயக நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகிற நாடும்கூட. தன் நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி, தனது மண்ணில் உள்ள எல்லோருக்கும் முழு சுதந்திரம் கிடைப்பதை உறுதி செய்கிற, வலுவான ஜனநாயகக் குடியரசு நாடு.

அமெரிக்காவின் கொடியைப் பார்த்திருக்கிறீர்களா? நட்சத்திரங்களும் கோடுகளும் கொண்டதாகக் கொடி இருக்கும். தேசியக் கொடியைப் புகழ்ந்து பாடுவதால், அமெரிக்கத் தேசிய கீதம் ‘நட்சத்திர, கோடுகள் பதாகை' (the Star-Spangled Banner) என்றே அழைக்கப்படுகிறது.

கோட்டையில் கொடி

1812-ம் ஆண்டு அது. 'மெக்ஹென்ரி கோட்டை'யைப் பிரிட்டிஷ் கப்பற்படை தாக்கியதைப் பார்த்தார் ஓர் இளம் வழக்கறிஞர். போரின் முடிவில் வெற்றி பெற்று, கோட்டையின் மீது அமெரிக்காவின் மிகப் பெரிய தேசியக் கொடி பறப்பதைப் பார்த்துப் பரவசப்பட்டார். ஓரிரு ஆண்டுகள் கழித்துக் கொடியைப் புகழ்ந்து கவிதை எழுதினார்.

1814-ம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று 'பிரான்சிஸ் ஸ்காட் கீ' என்ற அந்த இளம் வழக்கறிஞர் இயற்றிய 'மெக்ஹென்ரி கோட்டை பாதுகாவல்' என்கிற கவிதையின் ஒரு பகுதிதான் 'நட்சத்திர, கோடுகள் பதாகை' பாடல்.

ஆங்கில இசை

பிரான்சிஸ் இப்பாடலை இயற்றச் சுமார் 40 அண்டுகளுக்கு முன்பே, ஜான் ஸ்டஃபர்ட் ஸ்மித் என்ற ஆங்கிலேயர், ஒரு பாடலுக்கு இசை அமைத்திருந்தார். அந்தப் பாடல் மிகவும் விரும்பி கேட்கப்படும் பாடலாகப் பிரபலமானது. அப்பாடலின் இசை அப்படியே, பிரான்சிஸ் பாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆக, பிரான்சிஸ் - ஸ்மித் கூட்டணியில் உதயமானதுதான் அமெரிக்காவின் தேசிய கீதம்.

அங்கீகாரம்

1889-ம் ஆண்டு, அமெரிக்கக் கடற்படை இதனைப் பயன்படுத்தியது. 1916-ம் ஆண்டு அப்போதைய அதிபர் வுட்ரோ வில்சன், இதற்கு அங்கீகாரம் தந்தார். (அப்படிப் பார்த்தால், 2016 - இப்பாடலின் நூற்றாண்டு). 1931 மார்ச் 3 அன்று அதிகாரபூர்வமாக இப்பாடல் அமெரிக்காவின் தேசிய கீதம் ஆனது.

மிக நீளம்

உலகின் மிக நீளமான தேசிய கீதம் இதுவாகத்தான் இருக்கும். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் கீதங்கள், சுமார் ஒரு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். ஆனால், அமெரிக்காவின் பாடலை முழுவதும் பாடி முடிக்க ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. ஆங்கில மொழியில் இப்பாடல், நமக்கு நன்கு பழக்கப்பட்ட பல சொற்களைக் கொண்டுள்ளது. உச்சரிப்பிலும் பெரிய வேறுபாடு இல்லை. ஆகவே, இப்பாடல் எவ்வாறு ‘ஒலிக்கும்' என்பதற்கான அவசியம் எழவில்லை. என்னதான் சொல்கிறது இப்பாடல்?

song1_3000889a.jpg

அமெரிக்கக் கீதத்தின் உத்தேசத் தமிழாக்கம்

ஓ..

விடியலின் முதல் வெளிச்சத்தில்

மாலையின் மங்கிய ஒளிக் கீற்றில்

எதனை நாம் பெருமையுடன் புகழ்கிறோமோ

(அதனை) உன்னால் காண முடிகிறதா?

தீவிரச் சண்டையின் ஊடே

கோட்டைக் கொத்தளத்தின் உச்சியில்

அகன்ற கோடுகள், ஒளிரும் நட்சத்திரங்கள்

தீரத்துடன் படபடப்பதைப் பார்த்தோமே

'ராக்கெட்'கள் உமிழ்ந்த சிவப்பு வண்ணம்

வானில் வெடித்த குண்டுகளின் வெளிச்சம்

நமது கொடி அதோ அங்கே இன்னமும் பறப்பதற்கு

இரவிலும் சாட்சியம் அளித்தபடி இருக்கின்றன

சுதந்திரமான பூமியின் மீது

தீரமிக்க நிலத்தின் மீது

அந்த நட்சத்திரக் கோடுகள்

கொடி பறக்கிறதா? சொல்.

ஆழ்ந்த பனித் துளிகளின் ஊடே

கடற்கரை ஓரம் மங்கலாய்த் தெரியும்

எதிரிகளின் ஆணவமிக்க ஏவலாட்கள்

அச்சமூட்டும் நிசப்தத்தில் கரைந்து போகிறார்கள்.

உயர எழும் அலைகளின் மீது

பிறந்து வரும் மென் காற்று

பாதி அறிவித்து, பாதியை ஒளிக்கிறதே

அது என்ன?

காலை முதல் கதிர் கீற்றின்

மங்கல் ஒளியை அது பீடிக்கிறது.

முழு மகிமையைப் பிரதிபலித்து

ஓடைகளில் அது பிரகாசிக்கிறது.

சுதந்திரத்தின் புன்னகையுடன்

நமது நாடு ஒளி வீசுகிற போது

நம்முள் இருக்கும் எதிரி

நமது மகிமையைத் தாக்கினால்

நமது நட்சத்திரக் கொடியை

இறக்கத் துணியும்

சரித்திரத்துப் பக்கங்களை மாற்ற முற்படும்

துரோகிகள் வீழ்க! வீழ்க!

தங்களின் பிறப்புரிமையாக

லட்சக்கணக்கானோர் (பெற்ற) விடுதலையை

களங்கப்படாமல், அதன் பிரகாசத்துடன்

நாம் பராமரிப்போம்.

நட்சத்திரக் கோடுகள் பதாகை

வெற்றியில் பறக்கும்.

தீரம் மிக்கவர்களின் தேசம் -

சுதந்திரமானவர்களின் நாடு,

இது இப்படியேதான் எப்போதும் இருக்கும் -

நேசமிக்க தமது குடும்பத்துக்கும்

கோரப் போரின் தனிமைக்கும் இடையே

சுதந்திரமானவர்கள் உறுதியாய் நிற்பார்கள்.

வெற்றியும் சமாதானமும் ஆசிர்வதிக்கப்பட்ட

சொர்க்கத்தின் மீட்சியான பூமி

(ஒரே) தேசமாகத் தக்க வைக்கப்பட்டுள்ளமைக்கு

இதனை உருவாக்கிய சக்தியைப் போற்றுகிறோம்.

நம்முடைய நோக்கம் நியாமாக இருக்கும் போது,

நாம் (கட்டாயம்) வென்றே தீர வேண்டும்.

இதுவே நமது கோட்பாடு.

இறைவனே நமது விசுவாசம்.

நட்சத்திரக் கோடுகள் பதாகை

வெற்றியில் பறக்கும்.

தீரம் மிக்கவர்களின் தேசம் -

சுதந்திரமானவர்களின் நாடு.

tamil.thehindu

  • தொடங்கியவர்

 

அன்னாசிப்பழம் எப்படி வெட்டுவது..:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நவீனன் said:

 

அன்னாசிப்பழம் எப்படி வெட்டுவது..:)

பார்க்க வடிவாய்த்தானிருக்கு......ஆனால் வெட்டுற வெட்டிலை அருமந்த அரைவாசி  அன்னாசிப்பழம் தோலோடையெல்லே போட்டுது...:(

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 12
 

article_1473654962-Hong1.jpgகி.மு 490: கிரேக்கம், மரதன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்தது. பிடிப்பிடஸ் என்ற கிரேக்க வீரன் இவ்வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க நெடுந்தூரம் ஓடினான். மரதன் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது.

1609: ஹட்சன் ஆற்றை, ஹென்றி ஹட்சன் கண்டுபிடித்தார்.

1683: ஒட்டோமான் பேரரசைத் தோற்கடிக்கும் முயற்சியில் பல ஐரோப்பிய நாடுகள் வியெட்னாவில் இடம்பெற்ற போரில் ஒன்றிணைந்தன.

1759: பிரித்தானியப் படையினர், கியூபெக் நகரைக் கைப்பற்றினர்.

1848: கூட்டமைப்பு ஆட்சியை, சுவிட்சர்லாந்து நடைமுறைப்படுத்தியது.

1857: வட கரொலைனாவில் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 426பேர் கொல்லப்பட்டனர். இக்கப்பலில் 13 - 15 தொன் தங்கம் கொண்டு செல்லப்பட்டது.

1890: ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டாது.

1933: அணுக்கரு தொடர்வினை குறித்த கருத்தை முதன் முதலாக லியோ சிலார்ட் அறிவித்தார்.

1940: நியூ ஜேர்சியில், தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 51 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமுற்றனர்.

1942: இரண்டாம் உலகப் போர் - நட்பு நாடுகளின் போர்வீரர்கள், இத்தாலியப் போர்க்கைதிகள் மற்றும் பொதுமக்களை ஏற்றிச்சென்ற லக்கோனியா என்ற கப்பல் மேற்கு ஆபிரிக்காவில் ஜெர்மனியர்களால் தாக்கப்பட்டு மூழ்கியது.

1943: இரண்டாம் உலகப் போர் - இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி வீட்டுக்காவலிலிருந்து ஜெர்மனிய படைத்தளபதி "ஒட்டோ ஸ்கோர்செனி என்பவனால் விடுவிக்கப்பட்டார்.

1948: முகமது அலி ஜின்னா மறைந்த அடுத்த நாள், இந்திய இராணுவம், பாகிஸ்தானின் ஐதராபாத் மாநிலத்தினுள் நுழைந்தது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

1953: நிக்கிட்டா குருசேவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1959: லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1974: எதியோப்பியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில், மன்னர் ஹைலி செலாசி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1977: தென்னாபிரிக்காவின் நிறக் கொள்கைக்கெதிராக போராடிய ஸ்டீவ் பைக்கோ, காவற்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டார்.

1980: துருக்கியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1992: நாசாவின் எண்டெவர் விண்ணோடம் கறுப்பு - அமெரிக்கப் பெண்ணான மேய் சரோல் ஜமிசன் என்பவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.

2001: அவுஸ்திரேலியாவின் மாநிலங்களுக்கு இடையேயான முதலாவது பயணிகள் போக்குவரத்து விமான சேவையான ஆன்செட் ஆஸ்திரேலியா மூடப்பட்டது. 10,000 பேர் வேலையிழந்தனர்.

2005: காசாப் பகுதியில் இருந்து, இஸ்ரேல் தனது படைகளை முற்றாக விலக்கியது.

2005: ஹொங்கொங்கில், ஹொங்கொங் டிஸ்னிலாண்ட் திறக்கப்பட்டது.

2006: திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர், ஜேர்மனியில் நிகழ்த்திய உரையின் போது "தீங்கு விளைவிக்கிற மற்றும் மனிதத் தன்மையற்ற விடயங்களையே நபிகள் நாயகம் இவ்வுலகுக்கு அளித்தார்" என்று தெரிவித்தார். இதற்கு இஸ்லாம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து திருத்தந்தை மன்னிப்புக் கேட்டார்.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
காரை மறைத்து கடதாசிகளை ஒட்டும் சைக்கிளோட்டிகள்
 

ஜேர்மனியின் ஹெல்டில்பேர்க் நகரில் சைக்கிள் பாதையொன்றில் சட்டவிரோதமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை முழுதாக மறைக்கும் வகையில் சிலர் பசைகொண்ட குறிப்புக் கடதாசிகளை ஒட்டுவதை படங்களில் காணலாம்.

 

19209car-2.jpg

 

19209car-1.jpg

 

துவிச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கவனத்தை ஈர்க்கும் வகையில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14333024_1128088470573179_32775922120820

1980,1990களில் முன்னணிக் கதாநாயகியாகத் திகழ்ந்த ஆர்ப்பாட்டமில்லாத, அழகிய நடிப்புக்களால் மனம் வென்ற அமலா (நாகார்ஜுனா)வுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

கொழுந்து கொய்து மகிழ்ந்த  ஜப்பானிய பெண்கள் (படங்கள் இணைப்பு)

 

ஜப்பான் நாட்டின் Fukuoka பல்கலைகழக மகளிர் பிரிவின் 5 பேர் இன்று (12) கெலிவத்தை தோட்டத்தில்  கொழுந்து கொய்யும் பாடநெறிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

IMG_0700.jpg

இலங்கைக்கான சர்வோதய அமைப்பின் ஊடாக இவர்கள் இப்பாட நெறிகளை ஆராய்ச்சியின் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது மலையக தோட்ட தொழிலாளர்கள் இன்றைய நிலையில் கொழுந்து கொய்யும் தொழிலில் எவ்வாறு ஈடுப்படுகின்றனர் என்பதோடு, அவர்களின் வாழ்க்கை நிலையையும் ஆராய்ந்துள்ளனர்.

குறித்த ஜப்பானிய மகளிர் கொழுந்து கொய்வதை பார்வையிட்ட தோட்டத்தொழிலாளர்கள் அவர்களை வரவேற்றுள்ளனர்.

ஜப்பான் நாட்டின் உல்லாச பிரயாணிகள் இலங்கைக்கு அதிகமாக வருகை தருவதாக சுற்றுலா அமைச்சு அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

vlcsnap-2016-09-12-11h57m22s161.jpgvlcsnap-2016-09-12-11h57m06s254.jpgIMG_0704.jpgvlcsnap-2016-09-12-11h56m40s246.jpgIMG_0657.jpgvlcsnap-2016-09-12-11h56m56s153.jpgIMG_0672.jpgIMG_0685.jpgIMG_0690.jpg

.virakesari.lk

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
டொனால்ட் ட்ரம்பின் சாயல் கொண்ட கேக்கை சுற்றி நடனம்
 

சுவிட்­ஸர்­லாந்தின் சூரிச் நகரில் நேற்­று­ முன்­தினம் நடை­பெற்ற நிகழ்­வொன்றில், அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் குடி­ய­ர­சுக்­கட்சி வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிடும் டொனால்ட் ட்ரம்பின் சாயல் கொண்ட கேக் ஒன்றின் அருகில் நட­ன­மங்­கைகள் நட­ன­மா­டு­வதை படத்தில் காணலாம்.

 

19211trump.jpg

 

பிரான்ஸை சேர்ந்த புகைப்­படக் கலைஞர் பிராங்க் பெரி­னினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந் ­நி­கழ்வில், 30 கிலோ எடை­யுள்ள மேற்­படி கேக், பார்­வை­யா­ளர்­
க­ளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
 
 
 
Bild zeigt 1 Person
 

செயற்கை கதிரியக்கம் தந்த ஐர்ன் கியூரி பிறந்த தினம் இன்று!

இந்தியாவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவத்தின் வளர்ச்சியால் புற்றுநோயைக் கட்டுப்படுத்த நல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் பூரணமாகக் குணப்படுத்தி விடலாம். கதிரியக்கத்தின் மூலம் புற்று நோய் செல்களின் மையக் கருவை அழித்து அதன் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகின்றன. அதற்கு செயற்கையான கதிரியக்கம் மிகவும் அவசியமாகிறது. அச்செயற்கை கதிரியக்கயத்தை கண்டறிந்தது யார் தெரியுமா? ஐரின் கியூரி………. அந்த ஐரின் கியூரியின் பிறந்த தினம் செப்டம்பர் 12, அதாவது இன்று……

ஐரின் கியூரியின் செயற்கை கதிரியக்கம்:

சில விஞ்ஞானிகள் சோதனைகளைத் திறம்படச் செய்யும் திறமைசாலிகள்! சில விஞ்ஞானிகள் மேம்பட இயக்கும் நிர்வாகிகள்! ஐரீன் ஜோலியட் கியூரி மேற்கூறிய அனைத்து திறமும் படைத்தவர்! கதிரியக்கத்தை விளக்கி, நவீன விஞ்ஞானத்திற்கு பாதை வகுத்த மேரி கியூரியின் கால் தடத்தைப் பின்பற்றிச், செயற்கைக் கதிரியக்கத்திற்கு வழி வகுத்துப், புதிய கதிரியக்க மூலகங்களை [Radioactive Elements] உண்டாக்க தொடங்கினர். இந்த கதிரியக்க ஏகமூலங்களில் [Radioactive Isotopes] மனித இனத்துக்குப் பயன்படாத துறையே இல்லை! உலகெங்கும் மருத்துவம், தொழிற்துறை, பொறியியல், வேளாண்மை, விஞ்ஞானம் மற்றும் பல ஆராய்ச்சிகள் செய்ய நூற்றுக் கணக்கான கதிர் மூலகங்கள் உபயோகம் ஆகின்றன!

கியூரி:

கதிரியக்கம் கண்டு பிடித்து, உலகப் பெயர் பெற்ற மேரி கியூரி, பியரிக் கியூரி ஆகிய விஞ்ஞானத் தம்பதிகளுக்குப் பிறந்த மூத்த புதல்வி ஐரீன் கியூரி! இதுவரை யாரும் அடையாத இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்று, நவீன விஞ்ஞானத்துக்கு அடிகோலிட்ட மேரி கியூரியின் அருமைப் புதல்வியான ஐரீன் கியூரி, ‘தாயைப் போல பிள்ளை’ என்ற முதுமொழியை மெய்ப்பித்து, முதன் முதல் செயற்கைக் கதிரியக்கத்தைச் [Artificial Radioactivity] செய்து காட்டி தாயைப் போல் தானும் தன் கணவருடன் 1935 இல் நோபல் பரிசு பெற்றவர். பிரென்ச் அணுசக்திப் பேரவையில் ஓர் உறுப்பினர். அத்துடன் பாரிஸ் பல்கலைக் கழகத்தின் ரசாயனத் துறைப் பேராசிரியர்! ஆய்வுக் கூடத்தில் ஐரீன் ஓர் யதேட்சை அதிகாரி! எதுவும் துப்புரவாகத், தூய்மையாகத், துல்லியதாக [Meticulous] இருக்க வேண்டுமென அவரது பதவி அதிகாரத்தைக் காட்டுவார்! 1918 இல் 21 வயதாகும் போது, ஐரீன் பாரிஸ் பல்கலைக் கழகத்தின் கியூரி ரேடிய ஆய்வுக் கூடத்தில் [Curie Radium Institute], தாயின் துணையாளி ஆகப் பணிபுரியச் சென்றாள். அங்கே நடக்கும் ஆராய்ச்சியில் பங்கெடுத்து ‘போலோனியத்தின் ஆல்ஃபாக் கதிர்கள் ‘ [Alpha Rays of Polonium] என்னும் விஞ்ஞானக் கோட்பாடை எழுதி, 1925 இல் டாக்டர் [Doctor of Science] பட்டத்தைப் பெற்றார்.

நோபல் பரிசு:

மேரி மற்றும் பியரி கியூரி தம்பதிகள் முதலில் “கதிரியக்கம்” [Radioactivity] குறித்து கண்டுபிடித்தனர். அந்த மகத்தான கண்டுபிடிப்புக்கு, அவர்கள் 1903 இல் நோபல் பரிசும் பெற்றார்கள்! 1934 இல் செயற்கைக் கதிர் ஏகமூலங்களை [Artificial Radioisotopes] உண்டாக்கி, அவர்களது புதல்வி ஐரீன் கியூரி, ரேடியம் மற்றும் போலோனியம் ஆகியவையும் தேய்ந்து கதிர் வீசுவதைக் கண்டு பிடித்தார்…. அதற்குப் பிறகு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் 1932 ஆம் ஆண்டு அணுக்கருவினுள் இருக்கும் நியூட்ரான் பரமாணுவைக் கண்டு பிடித்து மற்றும் ஓர் புரட்சியை உண்டாக்கினார்! ஐரீன் கியூரியும், ஜேம்ஸ் சாட்விக்கும் அவர்களது அரிய சாதனைகளுக்கான நோபல் பரிசு அளிக்கப் பட்டது.

செயற்கை கதிரியக்கம்- நம்மிடையே:

அமெரிக்காவின் ஓக் ரிட்ஜ் அணு உலை, நூற்றுக் கணக்கான கதிர் ஏகமூலங்களை உற்பத்தியாக்கி, உலகம் எங்கும் அனுப்புகின்றது. அவற்றில், 78% மருத்துவ ஆய்வுக்கும், புற்று நோய் குணப்பாடுக்கும் பயன்படுகின்றன. 12%விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கும், 6 % தொழில்துறை பயன்களுக்கும், 4% வேளான்மைக்கும் பயன்படுத்த படுகிறது. பல நாடுகளும் தங்களது அணு உலைகளில் இருந்து கதிர் ஏகமூலங்களை தயாரித்து வருகின்றன. ஐரீன், கணவர் பிரடெரிக்கின் பழைய ரசவாத முயற்சிகளுக்குப் புத்துயிர் அளித்து, செயற்கை விஞ்ஞான முறையில், மூலக மாற்றத்தைச் [Transmutation of Elements] செய்து காட்டினர்!

கியூரிளுக்கு ஏற்பட்ட சோகம்:

நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு…. “கத்தி எடுத்தவன் கத்தியாலேயே வீழ்வான்” என்று…. அது இந்த கியூரி பரம்பரையில் நடந்ததுதான் இயற்கையின் குரூர விதி……….. இயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபல் பரிசு பெற்ற மேரி கியூரியும், செயற்கைக் கதிரியக்கம் உண்டாக்கி நோபல் பரிசு பெற்ற அவரது புதல்வி ஐரீன் கியூரியும் தீவிரக் கதிரடி வாங்கி புற்று நோய் தூண்டிய இரத்த நோயில் [Leukemia] முதன் முதல் கதிரியக்க தீங்குக்குப் பலியானவர்கள்!!! ஒரு அழகான கதையின் சோக முடிவு………. இயற்கைக் கதிரியக்கத்திற்கு வழி வகுத்துப், புதிய கதிரியக்க மூலகங்களை [Radioactive Elements] உண்டாக்கிய ஐரீன் கியூரிக்கு அவரது தாய் மேரி கியூரியைக் காட்டிலும் புகழும் மரியாதையும் பன்மடங்கு அதிகம் கிடைத்து இருக்கிறது என்பதை என எண்ணி ஆறுதல் கொள்வோம்!

vikatan

ஐரீன் ஜோலியட்-க்யூரி

 

 
Ir_ne_Joliot-Curie_3007495f.jpg
 

நோபல் விருதுபெற்ற விஞ்ஞானி

உலகப் புகழ்பெற்ற பிரெஞ்ச் விஞ்ஞானியும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான ஐரீன் ஜோலியட்-க்யூரி (Irene Joliot-Curie) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 12). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:

*பாரீசில் பிறந்தார். (1897) மேரி க்யூரி தம்பதியின் மகளான இவர் சிறு வயதிலிருந்தே மிகவும் திறமைசாலி. கணிதத்தில் அளவுகடந்த ஆர்வமும் திறனும் கொண்டவர். உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும், சார்போன் பல்கலைக்கழகத்தில் கணிதமும் வேதியியலும் பயின்றார்.

*ஐரோப்பாவில் முதல் உலகப்போர் தொடங்கியதால் இவரது படிப்பு தடைபட்டது. தன் தாயுடன் எக்ஸ்ரே சாதன வாகனத்தில் பயணம் செய்து, போரில் காயம்பட்டவர்களுக்கு முதலுதவி செய்தார். பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய ராணுவ மருத்துவக் கூடங்களில் எக்ஸ்ரே ஆய்வுச் சாதனங்களை நிறுவ ஏற்பாடு செய்தார். இவரது சேவைகளைப் பாராட்டி ராணுவப் பதக்கம் வழங்கப்பட்டது.

*போர் முடிந்ததும் பாரீஸ் திரும்பினார். படிப்பைத் தொடர்ந்து, பட்டம் பெற் றார். பாரீசில் பெற்றோர் அமைத்திருந்த க்யூரி கதிரியக்க ஆய்வுக் கூடத் தில் 1918-ல் தனது அம்மாவின் உதவியாளராக சேர்ந்தார். பொலோனியம் ஆல்ஃபா கதிர்கள் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதி 1925-ல் டாக்டர் பட்டம் பெற்றார்.

*தன்னுடன் பணிபுரிந்த ஃபிரெடெரிக்கை மணந்தார். கணவன் மனைவி இருவரும் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். அணு உட்கரு குறித்து ஆராய்ந்தபோது, பாஸிட்ரான், நியுட்ரான்களை அடையாளம் கண்டனர். தொடர் ஆய்வுகளின் பலனாக 1934-ல் செயற்கை கதிர் வீச்சைக் கண்டறிந்தனர். மூலக மாற்றத்தைப் (transmutation of elements) புரிந்துகொண்டு ஏராளமான கதிரியக்க ஏக மூலங்களை (Radioactive Isotopes) உருவாக்கினர்.

*ஒரு மூலகத்தை (element) மற்றொரு மூலகமாக மாற்ற முடியும் என்பதைக் கண்டறிந்தனர். இதன் மூலம் புதிய கதிரியக்க மூலகங்களை (Radioactive Elements) உண்டாக்கினர். கதிரியக்க நைட்ரஜனை போரோனாகவும், அலுமினியத்திலிருந்து கதிரியக்க பாஸ்பரஸ் ஐசோ டோப்களையும், மெக்னீஷியத்திலிருந்து சிலிக்கானையும் உருவாக்க முடியும் என்பதையும் கண்டறிந்தனர். இதற்காக இவர்களுக்கு 1935-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது.

*இதன் மூலம் நோபல் பரிசை வென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 அறிவியல் மேதைகள் என்ற தனிப்பெருமை பெற்றனர். வேதியியலுக் கான நோபல் பரிசை வென்ற முதல் பெண் அறிவியல் அறிஞர் என்ற பெருமைக்குரிய இவரது தாய் மேரி க்யூரியை அடுத்து, இதே களத்தில் இதே பரிசை வென்ற இரண்டாவது பெண்மணி இவர்தான்.

*மூலகங்களின் அணி அட்டவணையை (periodic table of elements) விரிவாக்கம் செய்த இவர், விஞ்ஞான மேதை எனப் புகழ் பெற்றார். இவர்களுடைய இந்த செயற்கைக் கதிரியக்கம் நவீன அணுக்கரு விஞ்ஞானத்தை மேம்படுத்த வழிகோலியது. இது அணுவைப் பிளக்கவும் வழிவகுத்தது. பிரெஞ்ச் அணுசக்திப் பேரவை உறுப்பினராகவும் பாரீஸ் பல்கலைக்கழகத்தின் ரசாயனத் துறைப் பேராசிரியராகவும் செயல்பட்டு வந்தார்.

*1940-ல் ஹிட்லர் பிரான்சை கைப்பற்றியபோது, இந்தத் தம்பதியின் அணுப்பிளவு ஆராய்ச்சிகள் முடக்கப்பட்டன. எனவே குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்து சென்றார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரான்ஸ் விடுதலை பெற்றவுடன் நாடு திரும்பினார்.

*செயற்கை முறையில் விரைவாக, சிக்கனமாக, ஏராளமாக கதிரியக்க சாதனங்களை உருவாக்குவதற்கு, இவரது கண்டுபிடிப்பு வித்திட்டது. உலகம் முழுவதும் மருத்துவம் மட்டுமல்லாமல், தொழிற்துறை, பொறியியல், வேளாண்மை, விஞ்ஞானம் மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளிலும் இதன் பயன்பாடு விரிவடைந்தது.

*மனித குல நலன் காப்பதில் மகத்தான பங்களிப்பை வழங்கிய ஐரீன் ஜோலியட்-க்யூரி, தன் தாயைப் போலவே கதிர்வீச்சுக்கு ஆளானார். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 1956-ம் ஆண்டு மார்ச் மாதம் 59-வது வயதில் மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

திங்கள் கிழமையை எதிர்கொள்ள 10 வழிகள்... மண்டே மார்னிங் ப்ளூவை வெல்வோம்!

work%20life%20balance%201.jpg

'ஞாயிற்றுக்கிழமை தொடங்குவது சனி மாலையில்...' என்றோர் கவிதை வரி உண்டு. விடுமுறை நாள் என்றால்  அதன் உற்சாகம் முதல் நாள் மாலையே  மனதில் தொற்றிவிடுகிறது. ஞாயிற்றுக் கிழமைகள் நமக்கானவை. சினிமாவுக்கும், பூங்காவுக்கும், பீச்சுக்கும், ஷாப்பிங் மால்களுக்கும் செல்லும் பாதைகள் திறந்துகொள்கின்றன. குழந்தைகளைப் போல் குதுகலிக்கிறது மனம். மறுநாள், திங்கட் கிழமை என்ற எண்ணம் சிலருக்கு முதல் நாள் இரவே சோர்வைத் தருகிறது.  தாமதமாகத் தூங்கி, திங்கள் காலையில் சோம்பலாய் எழுந்து, கிளம்ப மனம் இன்றிக் கிளம்பி, தாமதமாக அலுவலகம் வந்து, அரைகுறையாய் வேலைகளைச் சொதப்பி, அவர்களும் டென்ஷன் ஆகி உடன் பணிபுரிபவர்களையும் டென்ஷன் ஆக்கிவிடுகிறார்கள். வேறு சிலரோ, திங்கட் கிழமையை எதிர்கொள்ளத் தயங்கி, ஏதாவது ஒரு காரணம் சொல்லி (பாட்டி செத்துட்டாங்க, உடம்பு சரியில்லை என்பதைப் போன்ற கிளிஷேவான காரணங்கள்) அன்று வேலைக்கே செல்ல மாட்டார்கள்.  இந்தப் பிரச்னையை 'மண்டே மார்னிங் ப்ளூ' என்கிறார்கள். இது ஒரு உளவியல் பிரச்னை. மனஅழுத்தம், சோர்வு, நம்பிக்கையின்மை, வேலை, பணியிடச் சூழல் குறித்த எதிர்மறை எண்ணங்கள், வேலைக்குச் செல்வதில் ஆர்வமின்மை போன்றவை 'மண்டே மார்னிங் ப்ளூ' பிரச்னை இருப்பதற்கான அறிகுறிகள். முறையாகத் திட்டமிட்டு சில பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த மண்டே மார்னிங் ப்ளூவை ஈஸியாய் வெல்லலாம். 

1. பிரச்னையைக் கண்டறியுங்கள்: உங்கள் பணியில் உங்களுக்கு என்ன பிரச்னை என்பதை முதலில் கண்டறியுங்கள். தொடர்ந்து திங்கட்கிழமைகளில் பணிக்குச் செல்வதற்கு உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றால், நிச்சயம் அது இயல்பான விஷயம் இல்லை. நீங்கள் பணியிடத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்பதன் அறிகுறி இது. வேலையில் உங்களை ஆர்வம் இழக்கச் செய்யும் விஷயங்கள் என்னென்ன என்று ஒரு பட்டியல் இடுங்கள். அதற்கான குறுகிய கால, நீண்ட காலத் தீர்வுகள் என்னென்ன என்று கண்டறியுங்கள். நடைமுறை சாத்தியப்படி அதற்கான தீர்வுகளைச் செயல்படுத்துங்கள்.

p39a.jpg

   
2.திங்கட் கிழமையை முதல் நாளே எதிர்கொள்ளுங்கள்: பொதுவாக, திங்கள் கிழமை பணியின் முதல் நாள் என்பதால், கடுமையான வேலைப்பளு இருக்கக்கூடும். திங்கள் காலையில் அவசர அவசரமாக வந்து, 'என்ன செய்வது?' எனக் கையைப் பிசைந்துகொண்டு இருக்காமல், சனிக்கிழமை வேலையை முடித்துவிட்டு செல்லும்போதே, திங்கட் கிழமைப் பணிகளுக்கான முன் தயாரிப்பைச் செய்துவிடுங்கள் அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலையில் அமர்ந்து, மறு நாளையும்  அந்த வாரத்தையும் எப்படிச் சமாளிப்பது எனப் பணிகளைத் திட்டமிட்டு வகுத்துக்கொள்ளுங்கள். 

 

p14b.jpg
3.உற்சாகமாகப் பணிகளைத் தொடங்குங்கள்: திங்கட் கிழமை தாமதமாக எழுந்து அரக்கப்பறக்க அலுவலகம் வராமல், நேரமே எழுந்து உடற்பயிற்சி, தியானப் பயிற்சி செய்து, குறித்த நேரத்தில் பணியிடத்துக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். சரியான நேரத்தில் வேலையைத் தொடங்குவதே அதைப் பாதி வெற்றியாக முடித்தது போலத்தான். எனவே, திட்டமிட்டு பணிகளைத் தொடங்குங்கள். கடினமானப் பணிகளைக் காலையில் வந்ததும் செய்துவிடுங்கள். குறிப்பாக, உங்களுக்கு, நீங்கள் பணிசெய்யும் நிறுவனத்துக்கு உடனடியாகப் பணத்தை, நற்பெயரை ஈட்டித்தரும் வேலைகளைத் தாமதிக்காமல் செய்துவிடுங்கள். காலை நேரத்தில் மனம் மிகவும் சுறுசுறுப்பாக, விழிப்பாக இருக்கும் என்பதால், சிக்கலான வேலைகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. அந்த வாரம் முழுதும் செய்ய வேண்டிய பணிகளைத் தொகுத்துக்கொண்டு, அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்று முதன்மைப்படுத்தித் திட்டமிடுங்கள்.


4.மகிழ்ச்சியூட்டும் பணிகளைத் திட்டமிடுங்கள்: பொதுவாக, நமது வேலையை எண்ணும்போது அதில் உள்ள கடினமான விஷயங்களை மட்டுமே பெரும்பாலானவர்கள் கருதுவார்கள். ஞாயிறு மாலை அமர்ந்து, இந்த வாரம் செய்ய வேண்டிய பணிகளில் சுவாரஸ்யம் சேர்க்கும்படியாக என்ன செய்யலாம் என யோசியுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயம் ஒன்றை அந்த வாரத்துக்கான வேலைத் திட்டத்தில் சேருங்கள். அது, உடன் பணிபுரிபவர்களை ஒன்று சேர்க்கும் ஒரு கெட்டூகெதராக இருக்கலாம். ஒரு எளிய கொண்டாட்டமாக இருக்கலாம். புதிய அசைன்மென்ட்டாக இருக்கலாம். சுவரஸ்யமான, உற்சாகம் தரும் விஷயம் ஒன்றை வாரம் ஒருமுறை செய்தாலே போதும். வேலை மீதான ஆர்வம் பெருகும். 

family.jpg


5.வார இறுதியைக் குடும்பத்துக்குக் கொடுங்கள்: வேலைக்கும் குடும்பத்துக்குமான  எல்லைகளைக் கறாராகப் பின்பற்றுங்கள். வார இறுதி விடுமுறை என்றால் அது உங்களுக்கானது; உங்கள் குடும்பத்துக்கானது. எனவே, வேலை நேரத்தை வேலைக்குக் கொடுங்கள். ஓய்வு நாளைக் குடும்பத்துக்குக் கொடுங்கள். வீட்டில் அமர்ந்துகொண்டு அலுவலக மெயிலைச் செக்செய்வது, அலுவலகப் பணிகள் செய்வது போன்றவற்றை அவசரம் அல்லது அவசியம் என்றால் அன்றி செய்யாதீர்கள். அது உங்கள் விடுமுறையைப் பாதித்து உங்கள் மனதைச் சோர்வடையச் செய்யும். ஞாயிறு மாலை சிறிது நேரம் அமர்ந்து மறுநாள் பற்றி கொஞ்ச நேரம் சிந்தித்து, வரும் வாரப் பணிகளைத் திட்டமிடலாம் தவறு இல்லை. ஆனால், விடுமுறை என்பதே இல்லை என்று நினைக்கத்தோன்றும் அளவுக்குப் பணியில் மூழ்கிவிடாதீர்கள். அது உங்களுக்கும் நல்லது அல்ல; குடும்பத்துக்கும் நல்லது அல்ல.


6.உடைகள் தரும் உற்சாகம்: திங்கட் கிழமைகளில் உங்களுக்குப் பிடித்த, உற்சாகம்கொள்ள வைக்கும் உடைகளை அணியலாம். இது, தன்னம்பிக்கையை அதிகரிக்கும். நம்மைப் பற்றிய பெருமிதமான உணர்வை உண்டாக்கும். நம்மை மற்றவர்கள் மதித்திடச் செய்யும். 'இது போன்ற எளிய விஷயங்கள் நிஜமாகவே நன்றாக வொர்க்அவுட் ஆகும்' என ஆய்வுகள் சொல்கின்றன.
7.நேர்மறை எண்ணங்கள் தேவை: உங்கள் வேலையைப் பற்றி, உங்களைப் பற்றி, உங்கள் நிறுவனைத்தைப் பற்றி, உடன் பணிபுரிபவர்கள் பற்றி நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். அது உங்கள் வேலை மீதான ஆர்வத்தை அதிகரிக்கும். அது நமக்கு மட்டும் அல்ல நாம் பணி செய்யும் சூழலுக்கே மிகச் சிறந்த உற்சாகத்தை வழங்கும். 

p15a.jpg


8.உறவுகளைப் பேணுங்கள்: பணிபுரியும் சூழலில் பலவிதமான மனிதர்கள் இருப்பார்கள். சிலரை நமக்குப் பிடிக்கும். சிலருக்கு நம்மைப் பிடிக்கும். இதை எல்லாம் கடந்து மனித உறவுகள் மிகவும் முக்கியம். எனவே, அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள். அனைவரிடமும் உற்சாகமாய் பழகுங்கள். விட்டுக்கொடுத்து டீம் ஸ்ப்ரிட் உடன் பணியாற்றுங்கள். தவறுகளுக்கு, தோல்விகளுக்கு நேர்மையாகப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். வெற்றிகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். உடன் பணிபுரிபவர்களை மனம் திறந்து பாராட்டுங்கள். இதனால், உறவுகள் மேம்படும். நம் பணிச்சூழல் மீதான உணர்வுப்பூர்வமான பிடிப்பு உருவாகும்.


9.சிறிய, பெரிய இலக்குகளை உருவாக்குங்கள்: உங்கள் பணியில் சிறிய, பெரிய இலக்குகளை உருவாக்குங்கள். இந்த வாரத்துக்குள் இந்த வேலையைச் செய்ய வேண்டும். இந்த மாதத்துக்குள் இவ்வளவு விஷயங்கள் செய்திருக்க வேண்டும். இந்த வருடத்துக்குள் இப்படியான நிலைக்குச் சென்றிருக்க வேண்டும் என்று இலக்குகளை நிர்மாணித்துக்கொள்ளுங்கள். இது, எந்தச் சூழலிலும் நம்மை உற்சாகம் குன்றாமல் வைத்திருக்கும். சிறு சிறு வெற்றிகளைச் சுவைப்பது ஒரு உற்சாக டானிக். 


10.இலக்கை நோக்கி முன்னேறுங்கள்: ஒவ்வொரு நாளும் வாரமும் திட்டமிட்ட வேலைகளைத் திட்டமிட்டபடி முடிக்கப் பழகுங்கள். சில வேலைகளுக்கு அதிகம் மெனக்கெட வேண்டி இருக்கும். மனம் தளராமல், உற்சாகம் குன்றாமல் உழைப்பைச் செலுத்துங்கள். உங்கள் இலக்கை நோக்கி நேர்மையான வழியில் நாள்தோறும்  முன்னேறுங்கள். 


இப்படி, திட்டமிட்டு சில பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் மண்டே மார்னிங் ப்ளூ என்ற பிரச்னையை ஈஸியாக வெல்வதோடு, நமது கரியரையும் சிறப்பாக மாற்றிக்கொள்ள முடியும்.  என்ன ரெடியா? வாங்க ஒரு கை பார்க்கலாம். ஆல் த பெஸ்ட்!    

- இளங்கோ கிருஷ்ணன்

vikatan

  • தொடங்கியவர்

14355166_1128075317241161_81782951046943

ஹொலிவூட்டின் முன்னணி நாயகர்களில் ஒருவராக விளங்கிய சாகச நடிகர், Fast & Furious படங்கள் மூலம் அதிக புகழ்பெற்ற நடிகர் - தாம் புகழ்பெற்ற அதே கார் மூலமாகவே விபத்தில் காலமான போல் வோக்கரின் பிறந்தநாள்.
Happy Birthday Paul Walker

  • தொடங்கியவர்

தாடி,மீசை வளர்ந்தமைக்காக கின்னஸில் இடம்பிடித்த இளம்பெண் (PHOTOS)

 

தாடி,மீசை வளர்ந்தமைக்காக கின்னஸில் இடம்பிடித்த இளம்பெண் (PHOTOS)

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் கின்னஸில் இடம் பிடித்துள்ளார்.

ஹர்னாம் கவுர் என்ற அந்த பெண் பாலிசிஸ்டிக் ஓவர் சின்ட்டோம் நோயால் பாதிக்ப்பட்டவர்.

இதனால் 24 வயதான இவருக்கு முகம், உடல் என ஆண்களைப் போலவே முடி முளைத்துள்ளது. 11 வயதிலிருந்தே முடி வளரத்தொடங்கியிருக்கிறது.

ஆரம்பத்தில் ஷேவிங் செய்து வந்த இவர் 16 வயதில் அதை நிறுத்திவிட்டு வளர்க்க தொடங்கிவிட்டார்.

சீக்கிய பெண்ணான இவர் அவர்கள் முறைப்படி தலைப்பாகை அணிந்து தாடி வளர்த்து ஆண்களைப் போலவே மாறிவிட்டார்.

தற்போது இவருக்கு இளம்வயதில் தாடி மீசை வளர்த்ததற்காக கின்னஸில் இடம்பிடித்துள்ளார்.

மேலும் இதற்காக கின்னஸில் இடம்பிடித்தது சிறுமையாக இருக்கிறது என்று ஹர்னாம் கவுர் கூறியுள்ளார்.

harnaam-story_647_090816105839.jpg

HARNAAM-KAUR-3-e1473415778975.jpg

HARNAAM-KAUR-1-e1473415894741.jpg

Harnaam-Kaur.jpg

harnaamkaur.jpg

91065866_harnaamkaur-youngestfemalewithafullbeard-0402160228.jpg

http://newsfirst.lk

  • தொடங்கியவர்
 
 
 
Bild zeigt 1 Person
 

எண்ணற்ற தமிழ் நூல்களை பதிப்பித்தவர் என்கிற சிறப்புக்குரிய சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் பிறந்தநாள் இன்று.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் உ.வே.சா எண்ணற்ற நூல்களை பதிப்பித்தார் என்றால் அதற்கு முந்தைய நூற்றாண்டில் வீரசோழியம் (1881), தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள் (1883), தொல்காப்பியப் பொருளதிகாரம் (1885), கலித்தொகை (1887), இலக்கண விளக்கம், சூளாமணி (1889), தொல்காப்பிய எழுத்ததிகாரம் (1891), தொல்காப்பிய சொல்லதிகாரம் (1892) என்று எண்ணற்ற நூல்களை பதிப்பித்தவர் இவரே.

யாழ்ப்பாணத்தின் சிறுப்பிட்டி ஊரில் பிறந்த இவர் இருபது வயதில் நீதிநெறி விளக்கம் நூலை பதிப்பித்தார். நெடுங்காலத்துக்கு முன்னரே தொலைந்து விட்டதாக கருதப்பட்ட தேடி தேடி அலைந்து,எண்ணற்ற சுவடிகளை கண்கள் இடுக்கி படித்து,செல்லரித்தவற்றை செப்பனிட்டு அவர் சொல்லதிகாரத்தை வெளியிட்டார். . அதை ஆறுமுக நாவலர் தொகுத்து பிழை திருத்திய பின்னேர் வெளிவந்தது. அதே போல எழுத்து மற்றும் சொல் அதிகாரங்களையும் பதிப்பித்தார்.

உ.வே.சா சீவகசிந்தாமணியை இரண்டு முறை பிழை சரிபார்த்து வைத்திருந்த பொழுதும் அதை பதிப்பிக்க யோசித்துக்கொண்டு இருந்தார். அவரை அந்நூலை பதிப்பிக்கும் படி ஊக்குவித்தது இவரே. அதனாலே அந்நூல் தமிழருக்கு கிடைத்தது. இதை தமிழ்தாத்தாவே அந்நூலின் முன்னுரையில் குறிக்கிறார்.

சென்னை பல்கலையின் முதல் பட்டதாரி என்கிற சிறப்புக்கும் உரியவர் இவரே. தமிழ் இலக்கணம் படிக்கிற பொழுதெல்லாம் இவரை நினைவில் நிறுத்துவோம்.

vikatan

  • தொடங்கியவர்

‘குட்டி மோனே’

இவர் தான் கிய்ரோன் வில்லியம்சன். அவர் வர்ணத் தூரிகையை கொண்டு வரைவதில் நல்ல திறன் படைத்தவர். ஆறு வயதில், தன்னுடைய இரண்டாவது ஓவிய கண்காட்சியை நடத்தினார். 14 நிமிடங்களில், 16 ஓவியங்கள் விற்பனை ஆயின. அவருடைய ஓவியங்கள் 55,000 பவுண்ட்கள் வரை விற்பனை ஆக கூடியவை. பிகாசோ மற்றும் மோனே

  • தொடங்கியவர்
விசித்திரத் தோற்றம் கொண்ட மான்

விசித்திரத் தோற்றம் கொண்ட மான்

 

மான்களில் சில வகை கொம்பு மான்களும், புள்ளியில்லாத மான்களைக்கூட நாம் அறிந்திருப்போம். ஆனால் இந்த வகையான மான்கள் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டது. யானை மூக்கு போல் மான்கள் இருந்தால் எப்படி இருக்கும் ?…

இருந்தால் என்ன இதோ இருக்கிறது பாருங்கள்…

16 saiga antelope

ஆண்ட்டிலோப் என்பது மாடு, காட்டெருமை ஆகியவற்றில் சேர்த்தியில்லாத, ஆடு வகைகளிலும் சேர்த்தியில்லாத ஒருவகை விலங்கினம்… இதன் தோற்றத்தைக்கொண்டு இந்த விலங்கு மான் என்றே அழைக்கப்படுகிறது.

ஆண்ட்டிலோப் விலங்கினத்தில் பலவகை இருந்தாலும் யானையின் தும்பிக்கை போன்ற மூக்கை உடைய இந்த ஆண்ட்டிலோப்பின் பெயர் சாய்கா.

14 Saiga

இந்த சாய்கோ ஆண்ட்டிலோப் ஒரு காலத்தில் மங்கோலியாவிலும், வட அமெரிக்காவிலும் வாழ்ந்திருந்தாலும் இப்போது இந்த இனம் இருப்பது ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் மங்கோலியாவின் சில பகுதிகளில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாய்கா ஆண்ட்டிலோப் 2,50,000 வருடங்களுக்கு முன்பே, சேபர் டூத் புலி மற்றும் மம்மூத் யானைகளுடன் வாழ்ந்த மிகப் பழமையான உயிரினம் என்றும் ஒரு அறிவியல் கூற்று நிலவுகிறது.

தோள் வரையிலான உயரம் 2அடி முதல் 3அடி வரை வளரக்கூடியதும், 36 முதல் 63கிலோ எடை வரையில் வளரக்கூடியதும், 6முதல் 10ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியதுமான இந்த வகை ஆண்ட்டிலோப்கள் இப்போது மிக வேகமாக அழிந்து வரும் இனத்தில் பட்டியலிடப்பட்டிருப்பது காலத்தின் சோகம்தான்…!

http://onlineuthayan.com

  • தொடங்கியவர்

 

p108.jpg

பாப் பார்பியான செலீனாவின் ரசிகர்கள் சோகத் தில் மூழ்கியிருக் கிறார்கள். கடந்த ஆண்டே தான், லூப்பஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக அறிவித்திருந்தார் செலீனா. அந்தச் சிகிச்சை எதிர்பாராத பக்கவிளைவுகளை அளித்திருப்பதால், தான் பங்கேற்றிருந்த வேர்ல்ட்டு டூரில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் அவர். ‘எனக்கு ஓய்வு அவசியம். கொஞ்ச நாளைக்கு டிஸ்டர்ப் செய்யாதீர்கள்’ என்பது பேபிம்மாவின் வேண்டுகோள். நீங்க உங்க வேலையைப் பாருங்க!


p108a.jpg

ங்கிலாந்து இசைப்புயலான எல்லி கோல்டிங்கிற்கு இந்த வாரம் ‘காசு பணம் துட்டு மணி மணி’தான். ஏற்கெனவே அம்மணியின் சிங்கிள் ட்ராக் உலக அளவில் தெறி ஹிட். அந்த நம்பிக்கையில் அதே ரொமான்டிக் டோனில் சிங்கிள் ட்ராக்கை அவர் சமீபத்தில், வெளியிட மானாவாரியாக லைக்ஸ் தட்டுகிறார்கள் ஆன்லைன் கண்மணிகள். மகிழ்ச்சி!


p108b.jpg

கிம் கர்தாஷியன் பற்றி தினமும் ஏதாவது கிசுகிசு எழுதினால்தான் ஹாலிவுட் மீடியாக்களுக்கு தூக்கம் வரும் போல. லேட்டஸ்ட்டாய் கிம் தன் பின்புற அழகை மெருக் கேற்றுவதென்றே ஸ்பெஷல் ஊசி போட்டுக் கொள்கிறார் என்ற தகவல் பரவ, ‘இதுக்கெல்லாமா ஊசி’ என வாய் பிளந்தது பொது ஜனம். ‘ஊசி போடுவது உண்மைதான். ஆனால் அது மருத்துவக் காரணங்களுக்காக. புற அழகிற்காக அல்ல’ என அதற்கு விளக்கமளித் திருக்கிறார் கிம். கொடுத்துவைத்த ஊசி!


p108c.jpg

ஜெனரேஷன் மாடலான ஹைலி பால்ட்வின்னுக்கு எக்கச்சக்க ரசிகர்கள். ஹைலி கடைக்கண் நம் மீது விழாதா என ரசிகர்கள் ஏங்கிக்கிடக்க, அம்மணியோ சீரியஸாக ஒருவரைப் பார்த்து ஜொள்ளு வடித்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்கப் பாடகரான ஜான் மேயர்தான் ஹைலியின் ஆல்டைம் க்ரஷ். ‘என்னா ஆளுப்பா அவர், சான்ஸே இல்லை’ என சதா ஜான் புராணம் பாடுகிறது இந்த பொம்முக்குட்டி. சிறப்பு!

vikatan

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 13
 
 

article_1473743181-Un_office_1.jpg1503: மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற டேவிட் என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார்.

1609: ஹென்றி ஹட்சன், பின்னர் ஹட்சன் ஆறு எனப் பெயரிடப்பட்ட ஆற்றை அடைந்தார்.

1759: கனடாவின் கியூபெக் நகருக்கருகாமையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.

1788: நியூயோர்க் நகரம் ஐக்கிய அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்பட்டது.

1791: பதினாறாம் லூயி மன்னன் பிரான்சின் புதிய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டான்.

1814: பிரித்தானியர் மேரிலாந்தின் பால்ட்டிமோர் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.

1847: மெக்சிக்கோ - அமெரிக்கப் போர் - அமெரிக்கப் படையினர், மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றினர்.

1898: ஹனிபல் குட்வின் செலுலோயிட் புகைப்படச் சுருளைக் கண்டுபிடித்தார்.

1914: முதலாம் உலகப் போர் - தென்னாபிரிக்கப் படையினர் ஜெர்மனியின் நமீபியா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.

1923: ஸ்பெயினில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றினான்.

1939: கனடா இரண்டாம் உலகப்போரில் குதித்தது.

1940: இரண்டாம் உலகப் போர் - இத்தாலி எகிப்தினுள் நுழைந்தது.

1940: இரண்டாம் உலகப் போர் - ஜெர்மனியின் குண்டுகள் பக்கிங்ஹாம் அரண்மனையைச் சேதப்படுத்தியது.

1943: சியாங் காய் ஷேக் சீனக் குடியரசின் அதிபரானார்.

1948: இந்தியப் படைகள், ஐதராபாத்தை இந்திய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தன.

1949: இலங்கை, இத்தாலி, பின்லாந்து, ஐஸ்லாந்து, ஜோர்தான் ஆகிய 6 நாடுகள் ஐ.நா.வில் அங்கத்துவம் பெற சோவியத் ஒன்றியம் தடை செய்தது.

1953: நிக்கிட்டா குருஷேவ் நாட்டின் உயர் பதவியான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.

1968: அல்பேனியா வார்சா ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

1971: நியூயோர்க்கில் சிறைக் கைதிகளின் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த காவற்துறையினர் எடுத்த நடவடிக்கையில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

1989: தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கெதிரான மாபெரும் போராட்டம் டெஸ்மண்ட் டூட்டு தலைமையில் இடம்பெற்றது.

1993: நோர்வேயில் இடம்பெற்ற இரகசியத் தொடர்ப் பேச்சுவார்த்தைகளை அடுத்து பாலஸ்தீனத் தலைவர் யாசர் அரபாத்துக்கும் இஸ்ரேலியப் பிரதமர் இட்சாக் ரபீனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.

1994: யுலிசெஸ் விண்கலம் சூரியனின் தென் முனையைக் கடந்தது.

1999: மாஸ்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 119 பேர் கொல்லப்பட்டனர்.

tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வெற்றி வேண்டுமா? இந்த 5 மந்திரங்களை மறக்கவேண்டாம்! #MorningMotivation

 

  தன்னம்பிக்கை, சுய முயற்சி, முறையான பயிற்சி,  பணியில் ஒழுக்கம் இந்த நான்கும் இருந்தால் நிச்சயம் எந்தவொரு விஷயமும் சாத்தியமானதே. நம் வாழ்க்கைக்கான ரோல் மாடல்களை இணையத்தில் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை, நம் ஊரில், நம் அருகில் எவ்வளவோ  பேர் உதாரண புருஷனாக வாழ்ந்துகாட்டியிருக்கிறார்கள். ஆனால் நாம் மட்டும் தான் சின்ன சின்ன தோல்விகளை கூட சந்திக்க திராணியில்லாமல் முடங்கிப்போய்  விடுகிறோம்.  சோர்வை விட்டொழித்து மீண்டும் மீண்டும் முயற்சி செய்து,  நீங்கள் விரும்பிய விஷயத்தை அடைய ஐந்து  மந்திரங்களை மனதில்  பதிய வையுங்கள். 

 

 

1. இடர்பாடுகள் தான் வாய்ப்புகள்  : -

எதைச் செய்தால் வெற்றி கிடைக்கும் என கண்டுபிடிப்பதை விட, எதைச் செய்தால் வெற்றி கிடைக்காது என அறிவது புத்திசாலித்தனம். மின்சாரம் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த எடிசன் கிட்டத்தட்ட பத்தாயிரம் முறை தோல்விகளை சந்தித்தாராம். அவரது நண்பர் ஒரு நாள் அவரைச் சந்தித்தார். ஏனப்பா ? இவ்வளவு முயற்சி எதற்கு? எல்லாமே வீண் தானே, அதற்கு உருப்படியாக வேறு எதாவது செய்யலாமே என அட்வைஸ் செய்ய, " என்ன செய்தால் மின்சாரம் வரும் என்பதை மட்டும் தான் இன்னும் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் இந்த பத்தாயிரம் மாதிரிகளில் நிச்சயம் மின்சாரம் வராது என கண்டுபிடித்திருக்கிறேன். ஆக நான் பத்தாயிரம் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறேன்" என்றாராம் எடிசன். அது தான் ஆட்டிடியூட். தோல்வி என்பதன் அர்த்தத்தை  வெற்றிக்கு தவறான வழியை கண்டறிந்துள்ளோம் என புரிந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான்.

 

2.  என் இலக்கை நானே தீர்மானிப்பேன் :- 

உங்கள்  வாழ்க்கையில் எவ்வளவு உயரத்தை  எட்ட வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வெற்றியோ, தோல்வியோ எல்லாத்துக்கும் நீங்கள் தான் பொறுப்பு. சாக்கு போக்கு சொல்வதை விட்டுவிட்டு உங்கள் இலக்கை தீர்மானித்து அதற்கான கதை, திரைக்கதை எல்லாம் பக்காவாக தயார் செய்து உங்களை நேர்மையாக  இயக்குங்கள்; உங்கள் வாழ்க்கை  நிச்சயம் வெற்றி அடையும். 

 

3.  நல்ல எண்ணங்களே நனவாகும் ; -

எண்ணம் போல்தான் வாழ்வு என்பதை முன்னோர்களை பல விதங்களில் சொல்லியிருக்கிறார்கள். அது நிஜம்.  பாசிட்டிவ் மைண்ட்செட்  தான்  'ஸ்பீடு'  ஊக்க மருந்து. பல  சமயங்களில் பாசிட்டிவ் மைண்ட்செட்டில் எக்கச்சக்க சாதனைகளை பலர் புரிந்திருக்கிறார்கள். எனவே உங்களை தயவு செய்து நம்புங்கள். நீங்கள் வெற்றி தேவதையின் கைகளில் தவழத் தகுதியானவர் என்பதை நினைவில் வையுங்கள். 

 

4.  நேரமே வரம் : -

'நன்றே செய் அதை இன்றே செய்' இதையும் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்றது தான்.  நல்ல விஷயங்களை செய்ய எப்போதும் நேரம், காலம் பார்க்காதீர்கள். எந்தவொரு முடிவையும் விரைவாக எடுத்துச் செயல்படுங்கள். ஒரு விஷயத்தை புதிதாக முயற்சித்து தோல்வியடைந்தால் கூட பரவாயில்லை, முயற்சிக்காமல் வெறுமனே தரையை  தேய்க்க வேண்டாம். இந்த உலகத்தில் எதையும் யார் வேண்டுமானாலும் வாங்கி விட முடியம், ஆனால் நேரம் மட்டும் தான் சாதி, மதம், பணக்காரன், ஏழை என பாகுபாடு இல்லாமல் எல்லாருக்கும் சமமாக இருக்கிறது.நேரத்தை சரியாக பயன்படுத்துபவனே வெற்றியாளன் ஆகிறான்.

 

5. எதையும் கவனமாக தேர்ந்தெடுங்கள் :- 

எந்தவொரு விஷயத்தையும் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் தேவை. நம்மால் தான் எதுவும் சாத்தியமே என நடுக்கடலில் குதிப்பதோ, பத்தாவது பெயிலாகி விட்டு மருத்துவ கல்லூரி வாசலில் நிற்பது போன்ற அபத்தங்களை செய்துவிடக் கூடாது. நீங்கள் எதுவாக விரும்பினாலும், அதன் பின் உள்ள சாதக பாதக அம்சங்களை ஆராய வேண்டும்.  வெற்றிக்கான வழியை பக்காவாக ஸ்க்ரிப்ட் செய்ய  வேண்டும். அதன் பின் தான்  களத்தில் இறங்க வேண்டும்.  இப்போது, இந்த ஐந்து  விஷயங்களை ஒன்ஸ்மோர் படியுங்கள். 

மகிழ்ச்சி. 

vikatan

  • தொடங்கியவர்

14333008_1128993210482705_15930018028383

Happy Birthday Shane Warne

உலகின் தலைசிறந்த சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரும் Leg Spin பந்துவீச்சுக்குப் புத்துயிர் கொடுத்தவரும் முன்னாள் உலக சாதனையாளருமான ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திரம் + தற்போதைய விமர்சகர் & நேர்முக வர்ணனையாளர் ஷேன் வோர்னின் பிறந்தநாள் இன்று.

செப்.13: wow வார்னே - பிறந்த தின பகிர்வு!

14237548_1227598450632276_90103234259587

 

லெக் ஸ்பின்னர்களில் இன்னமும் நிச்சயமாக ஒரு சகாப்தம் இவர். அடிப்படையில் கால்பந்தின் மீது தான் இளவயதில் காதல் இருந்தது இவருக்கு. அவர் விளையாடிக்கொண்டு இருந்த அணியில் இருந்து இவரை விலக்கியதும்,ஆப் மற்றும் லெக் ஸ்பின் கலந்து பந்து வீசிக்கொண்டு இருந்த இவருக்கு, கொஞ்சம் பாட்டிங்கும் வந்ததால் கிரிக்கெட் பக்கம் கவனத்தை திருப்பினார்.

ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுபயணத்தில்தான் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது;சக்கை அடி வாங்கிக்கொண்டுதான் இந்தியாவை விட்டு போனார்; ஐந்தாறு டெஸ்ட்கள் வரை அடிகள் பலமாகவே விழுந்துகொண்டு இருந்தன .பின் இங்கிலாந்துடன் ஆஷஸ் தொடர் வந்தது -அதில் வார்னே வீசிய முதல் பந்து “நூற்றாண்டின் பந்தானது !”.

பலகாலம் ஆடிய இவர் 1999 வருட உலககோப்பையின் அரை இறுதியில் நான்கு விக்கெட் எடுத்து டை ஆன போட்டியில் அணி இறுதிப்போட்டிக்கு போட்டிக்கு போக உதவினார். ;இறுதிப்போட்டியில் அதிக விக்கெட் எடுத்ததும் இவரே. இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் இவரே. முரளிதரனுக்கு அடுத்தபடியாக அதிக டெஸ்ட் விக்கெட்களை கைப்பற்றிய வார்னேவுக்கு இன்னுமொரு சாதனையும் உண்டு ;சதமே அடிக்காமல் டெஸ்ட் போட்டிகளில் மூவாயிரம் ரன்களுக்கு மேல் அடித்தவர் என்கிற சாதனையே அது.

ஊக்கமருந்து உபயோகப்படுத்தி கிரிக்கெட்டை விட்டு சில காலம் விலகி இருந்த இவர், ஆஷஸ் தொடரை முழுமையாக ஆஸ்திரேலியா வெல்ல வழிவகுத்த பின், அணியை விட்டு விலகினார்.ஐ.பி,எல் முதல் கோப்பையை இவர் அணி வெல்ல வழிவகுத்தார் (லலித் மோடியின் துணையும் உண்டு என்போரும் உண்டு ).. ஐ பி எல்லில் பல இளம் வீரர்களை கண்டெடுத்த அற்புதத்தை இவர் செய்தார். ரவீந்திர ஜடேஜாவை முதல் ஐ பி எல்லின்பொழுது ஹர்ஷாவிடம் காண்பித்து ,”இந்த இளைஞன் பெரிய அளவில் மின்னுவான் பாருங்கள் !” என்றார் அவர்.

இவருக்கும் சச்சினுக்கும் நீண்ட நெடிய நட்பு உண்டு. வார்னேவை சச்சின் அடித்து துவைத்த கதைகள் செம சுவாரஸ்யமானவை.”அவர் சிக்ஸர் அடித்தால் நான் சிரிப்பேன் ;நான் டாட் பால் வீசினால் அவர் சிரிப்பார் -நல்ல நண்பர்கள் நாங்கள் !”என்பார் இவர்.

எனினும் மைதானத்துக்கு வெளியே ஒழுக்கம் இல்லாததால் இவர் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பொறுப்புகளுக்கு போகமுடியாமல் போயிற்று.இருப்பினும் சுழலின் தவிர்க்க முடியாத சூப்பர் ஹீரோ இவர்!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.