Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
சீனாவில் சேற்றுத் தடாக விளையாட்டுப் போட்டிகள்
 

சீனாவின் ஜியாங்ஸி மாநிலத்தில் கடந்த வார இறுதியில் சேற்றுத் தடாக விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

 

19236135679829_14735830764011n.jpg

 

19236_135679829_14735830764471nfull.jpg

 

மட்பாண்டங்களை தயாரிக்கப்பதற்குப் பயன்படுத்தப்படும் களிமண்ணின் மூலம் சேற்றுத் தடாகமொன்று உருவாக்கப்பட்டு, கால்பந்தாட்டம், கயிறிழுத்தல் உட்பட பல போட்டிகள் நடத்தப்பட்டன.

 

19236135679829_14735830764951n.jpg

 

metronews.lk

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பக்ரீத் பிறந்த கதை!

Eid-22222.jpg

ஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாகப் போற்றப்படுகிறது, பக்ரீத் பண்டிகை. ஒவ்வோர் ஆண்டும் (அரபி மாதம்) துல்ஹஜ் 10-ம் நாள், ‘ஹஜ் பெருநாள் எனப்படும் பக்ரீத்’ போற்றிக் கொண்டாடப்படுகிறது. பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை பலி கொடுக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இந்தப் பண்டிகை தியாகப் பெருநாள் எனப் பொருள்படும் அரபிய பதமான, ‘ஈத் அல்-அதா’ என்றே  அழைக்கப்படுகிறது.

‘ஹஜ்’ செய்வது அடிப்படை கடமை!

தமிழ்நாட்டில் ஆட்டைப் பலியிடுவதை அடிப்படையாகக் கொண்டு பக்ரீத் (பக்ரு-ஆடு + ஈத்-பெருநாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகிறது. பொருளாதாரம் சிறப்பாய் இருக்கும் இஸ்லாமியர்கள், ‘ஹஜ்’ செய்வது என்பது அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதே. புனிதப் பயணக் கிரியைகள், கடமைகளில் கடைசியானது இறைவனுக்காகப் பலியிடுதல் ஆகும். சிறப்புத் தொழுகைகள் நடத்தப்படுவது தியாகத் திருநாளான பக்ரீத் நாளின் முக்கிய அம்சம். உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இந்நாளில் புத்தாடை அணிந்து தொழுகைகளில் கலந்துகொள்கின்றனர். பலியிடல் தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும்.

‘‘மனம் திறந்து குர்பானி கொடுங்கள்!’’

பக்ரீத் நாளில்தான், ‘இயன்றதை இல்லாதோர்க்கு கொடுத்து உதவுக’ என்ற கோட்பாடு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடு, மாடு, ஒட்டகம் என இஸ்லாமியர்கள் தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு இவைகளைப் பலியிட்டு (குர்பானி) அவற்றை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கின்றனர். குர்பானி கொடுப்பது ஓர் உன்னதமான வணக்க வழிபாடு என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது. ‘‘குர்பானிக்காக பிராணியை பலி கொடுக்க அறுக்கும்போது, அதன் ரத்தச் சொட்டு பூமியில் விழுவதற்கு முன்னதாக அல்லாஹ் இடத்தில் ஒப்புக்கொள்ளப் பட்டதாகிறது. எனவே, மனம் திறந்து குர்பானி கொடுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்.

%E0%AE%8E%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D11.j

பக்ரீத் தோன்றியது இப்படித்தான்!

நபி இப்ராஹிம் தனது காலத்தில் நடந்த கொடுமையான ஆட்சியின்போது, அச்சமின்றி இறைக்கொள்கையை முழங்கியவர். உலகளாவிய பல நாடுகளுக்குப் பயணம் சென்று அன்பின் மார்க்கத்தை எடுத்துரைத்தார். ‘இறைவனே எல்லாம்... அவனுக்கு இணையாக எதுவும் இல்லை’ எனும் இறைப்பற்றோடு வாழ்ந்த அவருக்கு, இரண்டு மனைவிகள்... குழந்தைகள் இல்லை. இதனால், மனம் வருந்திய நபி இப்ராஹிம், புத்திரப் பாசம் கிடைக்காமல் ஏங்கினார். அப்போதுதான் மிகப் பெரும் அருட்கொடையாக இப்ராஹிமின் இரண்டாவது மனைவியான ஹாஜாரா அம்மையார் மூலம் நபி இஸ்மாயில் பிறந்தார். இதன்பின் நபி இப்ராஹிம், வாழ்க்கைப் பயணம் இன்பமயமாக தொடர்ந்தது. அதேவேளையில், இறைவன் மீதுள்ள பற்றானது நாளுக்குநாள் பெருகியவண்ணம் இருந்தது.

ஒருநாள் நள்ளிரவு நேரம். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இப்ராஹிமுக்கு ஒரு கனவு வந்தது. தன்னுடைய மகனை, தானே இறைவனுக்கு பலி கொடுப்பது போன்ற கனவை நபி கண்டார். அதன்பின், கவலையில் ஆழ்ந்தார். தாம் கண்ட கனவை இப்ராஹிம் நபி, தம்முடைய அன்பு மகனிடம் கூறினார். இறைப்பற்றில் அளப்பரிய நம்பிக்கையைக் கொண்டிருந்த இப்ராஹிம் நபிக்கு பிறந்த பிள்ளை, தந்தையவர் கருத்துக்கு மாறாகச் செயல்பட வாய்ப்பே இல்லையே. ‘‘கனவில் வந்த இறைக் கட்டளையை உடனே நிறைவேற்றுக... எம் தந்தையே!’’ என்று தன்னுடைய தந்தையிடம் நபி இஸ்மாயில் பணிந்தார், பணித்தார்.

‘சிஃப்ரயீல்’ எனப்படும் வானவர்!

‘கொண்ட பாசத்தினால் தந்தையின் மனம் மாறிவிடக் கூடாதே?’ என்ற எண்ணம், மகனார் நபி இஸ்மாயில் நெஞ்சில் நெருடலைத் தந்தது. அதற்கென ஒரு வழியைக் கையாண்டார். தந்தையின் கண்களைத் துணிகளால் கட்டி, கையிலே கட்டாரியையும் அவரே கொண்டுவந்து கொடுத்தார்… இப்போது தந்தையவர் கைகளிலே வெட்டும் கோடாரி, கோடாரியின் கூர்முனையில் மைந்தர் நபி இஸ்மாயில் கழுத்து... அந்தச் சமயம்தான், எங்கிருந்தோ வந்த ஒரு குரல் அல்லது ஓர் அழுத்தம் அல்லாஹ்வின் எண்ணமாக எழுந்து நின்றது.  ‘சிஃப்ரயீல்’ எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அல்லாஹ் அந்த ‘பலி’யைத் தடுத்தார். மேலும், அங்கே ஓர் ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு இபுராஹிமுக்குக் கட்டளையிட்டார். மைந்தன் நபி இஸ்மாயில் உயிரையே பலி கொடுக்க துணிந்த அந்தத் தந்தையின் தியாகத்தைப் புகழ்ந்து, அந்த நரபலியைத் தடுத்து, நிறுத்தியது இறைவன் அல்லாஹ்வின் அன்பு.

eeee3333.jpg

அந்த நாளின், சம்பவத்தின் நினைவாக (பதிலாக) ஓர் ஆட்டினைப் பலியிட்டு, அதை அனைவருக்கும் பகிர்ந்தளித்து புசிக்குமாறு ‘இறை’ குரல் கூறியது. காலங்காலமாய்க் காத்துக் கிடந்து பெற்றதோ ஒரு பிள்ளை... அந்தப் பிள்ளையையும் இறைவனுக்குப் பலியிடத் துணிந்த தியாகத்தின் திருவுருவமாக, நபி இப்ராஹிமின் தியாகம் போற்றப்படுகிறது. தந்தையின் தியாகத்தை உணர்ந்து, தந்தையே பாசத்தால் மறுதலித்துவிடுவாரோ என்ற எண்ணத்தில், அதற்கான மாற்றுவழியையும் கண்டெடுத்த அருமை மகனார் நபி இஸ்மாயில் தியாகமும் போற்றப்படுகிற நாளாக ஹஜ் பெருநாள் எனப்படும், ‘பக்ரீத்’ போற்றப்படுகிறது. பலியிடல், தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும். இந்த பக்ரீத் நாளில் இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பலியிட்ட விலங்கின் இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரித்து... ஒரு பங்கை, அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு... மூன்றாவது பங்கை, அவர்கள் பயன்படுத்துகின்றனர். முக்கிய விஷயமாகப் பலியிடப்படும் விலங்கு ஊனம் இல்லாமலும், குறைந்தபட்சம் ஒரு வயது பூர்த்தியானதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது.

இறை தூதர் எனப் போற்றப்படும் இப்ராஹிமின் அர்ப்பணிப்பும், புனிதத்துவமும் நிறைந்த வாழ்வை எண்ணி, அவர்தம் தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நினைவு நாளாக இந்த ‘பக்ரீத்’ கொண்டாடப்படுகிறது.


இது, கொண்டாடப்படுகிறது என்று சொல்வதைவிட இஸ்லாமியர்களின் இதயத்தில்வைத்து போற்றப்படுகிறது என்பதே சிறந்த சொல்லாடலாய் இருக்க முடியும்.

vikatan

  • தொடங்கியவர்

உலக அளவில் முதலிடம் வகிக்கும் கலை அருங்காட்சியகம் 'லூவ்ர்' (Louvre)

 

பிரான்ஸ் நாட்டின் மையமான பாரிஸின் மையத்தில் அமைந்துள்ள 'லூவ்ர்' அருங்காட்சியகம் உலக அளவில் முதலிடம் வகிக்கும் ஒரு மகத்தான, தனிப்பட்ட கலை அருங்காட்சியகமாகும்.

DSC_0881_copy.jpg

2014 இல் மட்டும் 9.26 மில்லியன் மக்கள் வருகைதந்துள்ளனர். அன்றிலிருந்து இன்றுவரை வருகைதரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

DSC_0905_copy.jpg

கி.மு. 8000 காலம் தொடக்கம் 1848 ஆம் ஆண்டு வரையான 35 000 க்கும் அதிகமான அரும்பொருட்கள் 60 600 சதுர மீற்றர் நிலஅளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  

DSC_0874_copy.jpg

இந்த அரும்பொருட்கள் இங்கே மேலும் மேம்படுத்தப்பட்டு மனித மற்றும் அதன் படைப்பாற்றல் கதைகளை சொல்வனவாகவும் விளங்குகின்றது. 

காட்சியகம் கிழக்கத்தேய, எகிப்திய, கிரேக்க தொல்பொருட்கள், ஈட்ரூஸ்கேன் மற்றும் ரோமன் கலைப்பொருட்கள், இஸ்லாமிய கலைப்படைப்புக்கள், ஓவியங்கள் மற்றும் வரைபடக்கலை வடிவங்கள் என எட்டுப்பிரிவுகளாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. லியனாடோ டாவின்சியின் மோனாலிசா ஓவியமும் இதில் அடங்கும்.

DSC_0729_copy.jpg

தற்போதைய அருங்காட்சியகம் 1190 இல் பிலிப் ஓகஸ்ட் மன்னனால் தலைநகரை பாதுகாப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட அரச கோட்டையாகும். 

தொடர்ந்து பல மன்னர்களின் பாதுகாப்பு மையமாகவும் அரச வதிவிடமாகவும் திகழ்ந்துள்ளது. 1678 இல் பதினான்காம் லூயி மன்னன் வெர்சய் (Versailles) அரண்மனையை அரச வதிவிடமாகத் தெரிவு செய்து இடம்பெயர்ந்து செல்ல, அரச மாளிகை பூட்டப்பட்டு வெறும் அரச கலைப்பொருட்களின் காப்பகமாக 100 வருடங்களுக்கு மேலாக இருந்தது.

DSC_0733_copy.jpg

1793 ஐப்பசி 10 ஆம் திகதி Museum Central des Arts எனப்பெயர் சூட்டப்பட்டு தற்காலிக அருங்காட்சியமாக தோற்றம் பெற்றது. லூவ்ர் அருங்காட்சியகம் என்ற பெயர்ப்பதம் 1848 ஆம் ஆண்டே சூட்டப்பட்டது.

 

1848 ஆம் ஆண்டு லூவ்ர் அருங்காட்சியகம் பிறந்தாலும் தற்போது நாம் அறியும் பிரபலமான உலகப்பிரசித்தி பெற்ற லூவ்ர் 1981ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் பிரான்சுவா மித்திரனின் கடும் உழைப்பினாலேயே தோற்றம் கண்டது. அரச செலவில் மீளுருவாக்கம் செய்யப்பட்டு பிரிவுகளாக வகுக்கப்பட்டு, ஒழுங்கு படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அனைத்து கலைப்பொருட்களையும் பார்வைக்குட்படுத்தி பிரபலமாக்கப்பட்டது.

DSC_0729_copy.jpg

லூவ்ர் அருங்காட்சியகத்திற்கு புதுப்பொலிவை பெற்றுக்கொடுப்பதற்காகவும் ஒரு புதிய நுழைவாயிலை ஏற்படுத்தவும் கண்ணாடிகளிலான பிரம்மாண்டமான பிரமிட்டும் அதன் நிலத்தடி லூபியும் 1988 ஐப்பசி 15 ஆம் திகதி ஆரம்பித்து 1989 ஆம் ஆண்டு செய்து முடிக்கப்பட்டது. 

கிராண்ட் லூவ்ர் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக தலைகீழ் பிரமிடு (பிரமிடு இன்வர்சி) 1993 ஆம் ஆண்டு தொடங்கி 2002 ஆம் ஆண்டு வரையில் முடிக்கப்பட்டது. இதன் நிறைவிலிருந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

DSC_0485_copy.jpg

தற்போது லூவ்ர் அருங்காட்சியகம் கல்லுகளால் அமைக்கப்பட்ட வெறும் கட்டடமல்ல. அசைவற்ற அழியாத அரும்பொருட்களைக் கொண்ட பிரமாண்ட இடம். ஒவ்வொரு அரும்பொருளும் ஒவ்வொரு கதை சொல்லும்.

 

மோனலிசா ஓவியம் போல் இன்று தன்னுள் பல ரகசியங்களையும் வரலாறுகளையும் சுமந்து, உலகையே திரும்பிப் பார்க்கும் வண்ணம்  'லூவ்ர் அருங்காட்சியகம்' தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்றால் மிகையாகாது.

 

மேலதிக படங்களுக்கு  http://www.virakesari.lk/collections/104

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

14358996_1129014623813897_18946780015265

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக விளங்கிய ரொபின் ஸ்மித்தின் பிறந்தநாள்.
Happy Birthday Robin Smith

  • தொடங்கியவர்
மிஸ் இன்டர்கொன்டினென்டல் 2016 அழகுராணி போட்டி இலங்கையில்...
 

சர்வதேச ரீதியான மிஸ் இன்டர்கொன்டினென்டல் 2016 அழகுராணிப் போட்டி அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது.

 

19240_Miss-Intercontinental-2.jpg

 

70 நாடுகளின் அழகுராணிகள் இப்போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர் என கொழும்பில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

 

இலங்கையின் சார்பில் மிஸ் இன்டர்கொன்டினென்டல் ஸ்ரீலங்கா 2016 அழகுராணியான ட்ரேஸி ஆன் டி ஸில்வா பங்குபற்றவுள்ளார்.

 

19240_Untitled-1.jpg

கொழும்பில் வெலண்டினா ரசுலோவா, ட்ரேஸி ஆன் டி ஸில்வா


 

இலங்கையில் திமிங்கிலங்களைப் பார்வையிடல், யானை சவாரி போன்றவற்றிலும் இப் போட்டியாளர்கள் ஈடுபடுவர் என  மிஸ் இன்டர் கொன்டினென்டல் அமைப்பின் தலைவர் மனோஜ் சாட்லானி தெரிவித்தார்.

 

5 நட்சத்திர ஹோட்டலான சினமன்ட் லேக்சைட் இந் நிகழ்வுக்கு உத்தியோகபூர்வ ஹோட்டல் அனுசரணையாளராக விளங்குகிறது.

 

19240_russia.jpg

வெலண்டினா ரசுலோவா

இறுதிப் போட்டிகள் ஒக்டோபர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
45 ஆவது தடவையாக மிஸ் இன்டர்கொன்டினென்டல் 2016 போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

இப் போட்டி இலங்கையில் நடைபெறுவது இதுவே முதல் தடவை யாகும். மிஸ் இன்டர்கொன்டினென்டல் 2016 போட்டிகளை இலங்கை யில் நடத்துவதற்கு தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளை யும் மேற்கொள்ளவுள்ளதாக மிஸ் இன்டர்கொன்டினென்டல் அமைப் பின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டெட்லெவ் டேர்சிஸ் கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது இவ்வமைப் பின் இலங்கைப் பிரிவின் தலைவரான ரொஷான் பெரேராவிடம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

19240_miss-sri-lanka-intercontinetal.jpg

டெட்லேவ் டேர்சிஸ்


 

கடந்த வருடம் ஜேர்மனியில் நடைபெற்ற மிஸ் இன்டர்கொன்டி னென்டல் 2015 போட்டிகளில் ரஷ்யாவின் வெலன்டினா ரசுலோவா முதலிடம் பெற்றார்.

 

19240_picture1.jpg

ரொஷான் பெரேரா, டெட்லேவ் டேர்சிஸ்


 

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டார்.

 

19240_miss-intercontinental.jpg

வெலண்டினா ரசுலோவா


அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள போட்டியில் முதலிடம் பெறும் யுவதிக்கான 360,000 டொலர்களுக்கும் அதிக பெறுமதியான கிரீடத்தை வெலன்டினா ரசுலோவா அணிவிப்பார்.

 

19240_old.jpg

metronews.lk

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இப்படியும் சில புகைப்படங்கள்!

 

p64a.jpg

புகைப்படங்களில் நாம் காணும் உருவங்கள் திடீரென உயிர்பெற்றால் என்னவாகும் என்ற யோசனைக்கு வடிவம் கொடுத்துள்ளார் கொரியத் தலைநகர் சியோலைச் சேர்ந்த ஜோங்க்ஹா சாய். இவர் வடிவமைத்துள்ள பரிமாணத்தை மாற்றிக்கொள்ளக்கூடிய சேர், டேபிள்களை சுவரில் போட்டோ போலத் தொங்கவிடலாம். அதே நேரத்தில் தேவைப்படும் சமயத்தில் அவற்றை அலேக்காக எடுத்து விரித்து வழக்கம்போல பயன்படுத்திக்கொள்ள முடியும். இட நெருக்கடியை சமாளிக்கும் விதமாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

p64b.jpg

p64c.jpg

சிற்பக்கலையில் முதுகலை முடித்துள்ள இவர், நாற்காலியில் அமர்ந்தபடி அனைத்துப் பொருட்களையும் இயக்குவது, படியில் நடக்கும்போதே கதவைத் திறக்கும் இயந்திரம் போன்ற பலவற்றை வடிவமைத்திருந்தாலும், இந்த 3-டைமன்ஷனல் பொருட்களுக்காக உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளார். `இந்த நவீன யுகத்தில் படங்களின் பயன்பாடு அளப்பரியது. படங்கள் ஏன் எப்போதும் தட்டையாகவே இருக்க வேண்டும்... அவற்றை எப்படி 3டி வடிவமாக மாற்றலாம் என யோசித்தபோதுதான் இந்த ஐடியா வந்தது' எனத் தன்னடக்கம் காட்டி தன்னுடைய படைப்பைப் பற்றித் தெரிவிக்கிறார் ஜோங்க்ஹா சாய்.

vikatan

  • தொடங்கியவர்

 


Jaffna Boy
  • தொடங்கியவர்

14333589_1129006657148027_24858410846816

நியூ சீலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும், தற்போதைய துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளருமான க்ரெய்க் மக்மில்லனின் பிறந்தநாள்
Happy Birthday Craig McMillan

  • தொடங்கியவர்

 

ஒட்டகச்சிவிங்கிகள் : புதிய ஆய்வில் ஆச்சரியமான முடிவு

ஆப்ரிக்காவின் புல்வெளிகளில் அலைந்து திரியும் ஒட்டகச்சிவிங்கிகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவை அல்ல, அவை நான்கு இனங்களைச் சேர்ந்தவை என புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • தொடங்கியவர்

அட...தூக்கம் இவ்வளவு அவசியமா..! #SleepDeep

Living-a-Stress-Free-Life.jpg

 

மகிழ்ச்சியான ஒரு மனநிலையில்சாலையில் நடந்து செல்லும் பெயர் அறியா மனிதர்கள் மீதும் பிரியம் ததும்புகிறதுதிடிரென நம் வண்டியின் குறுக்கே யாரேனும் ஓடிவந்தாலும் “இது சகஜம்தானே” எனப் புன்முறுவலுடன் கடந்து செல்ல முடிகிறது.நண்பர்களின் அழகு ரசனையை ரசிக்கவும்உணவின் சுவையை ருசிக்கவும் முடிகிறது.அன்றைய தினம் மகிழ்ச்சியால் நிரம்புவதற்கான தொடக்கப்புள்ளியாக ஏதோ ஒன்று இருக்க வேண்டும்அது நம்மை அடுத்தடுத்த நல்விளைவுகளை நோக்கித் தள்ளிச் செல்கிறதுஇப்படி நம் மனதையும் உடலையும் நல்லனவற்றை நோக்கி செலுத்துவது ஏதோ ஒரு மாயசக்தி அல்லஅது ஒரு பயிற்சி

தீப்பெட்டியில் தூக்குச்சியை உரசிப் பற்றவைப்பதற்கே நேர்த்தியான பயிற்சி தேவைப்படுமெனில்மனதில் மகிழ்ச்சியைப் பற்ற வைக்கவும் பயிற்சி தேவைதானே!

நம் உடலையும் மனதையும் தூய்மையாகவும்ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள அடிப்படையான சில வாழ்முறை மாற்றங்கள் அவசியம்நாம் ஆரோக்கியமாக இருந்தால் பார்க்கும் எல்லோமும் ஆரோக்கியமாக தெரியும்எப்போதும் வேலை,டென்ஷன்பரப்பரப்பு என அலைந்துக்கொண்டே இருந்தால்,அந்த அலுப்பும் சலிப்புமே நம் இயல்பிலும் பிரதிபலிக்கும்ஆரோக்கியம் என்பது மனிதனுக்கு இயல்பான ஒன்று.அந்த இயல்பை மீட்டெடுப்பது அத்தனை சிரமம் அல்லசற்றே மெனக்கெட்டால் சாத்தியமே!

உணவு ,தூக்கம்உடற்பயிற்சிமன அழுத்தம்..இந்த நான்கையும் திறம்பட நிர்வகிப்பதுதான் “லைஃப்ஸ்டைல் மேனேஜ்மெண்ட்” என்கிற வாழ்க்கைமுறை திட்டமிடல்தினமும் நேரம் ஒதுக்கிஅக்கறையுடன் இதை முறையாகச் செய்தாலே ஆரோக்கியம் மிளிரும்.

முன்பெல்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல் உழைப்பு என்பது பிரதானமாக இருந்ததுஆனால்இப்போது அனைத்து வேலைகளையும் இயந்திரமயமாக்கி,எல்லாமே ஒரு “டச்”சில் வந்து நிற்கின்றனஆனால் மனித உடலோ இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக உழைத்து உழைத்து உழைப்புக்குப் பழக்கப்பட்டிருக்கிறது.உழைத்துக்கொண்டே இருந்தால்அதன் இயங்குதன்மை சீரான ஒழுங்குடன் இருக்கிறதுஅதுவே உடலுக்கு வேலையே கொடுக்காமல் இருந்தால்அதில் சிக்கல் உண்டாகிறதுகொழுப்புதசைஎலும்பு எல்லாமே சேர்ந்ததுதான் மனித உடல்.வெளியேற்றுவதற்கான வேலையே கொடுக்காத போது உடம்பில் கொழுப்பு சேர்ந்துக்கொண்டே இருக்கிறதுஇயக்கமே இல்லாமல் தசைகள் தளர்ச்சி அடைகின்றனவெயிலில் கூட செல்லாமல் ஏசியிலும்அலுவலகத்தின் உள்ளேயும் அமர்ந்திருப்பதால் எலும்புகளின் அடர்த்தி குறைகிறது.

இளம் பருவத்தில் ஆரோக்கியமான ஓர் இளைஞனுக்குஉடலில் 20 சதவிகிதம் கொழுப்பு இருக்க வேண்டும்அதுவே ஒரு பெண்ணுக்குஅது 25-30 சதவிகிதமாக இருக்க வேண்டும்ஆனால்இப்போது ஆண் உடலில் 40 சதவிகிதம் கொழுப்பும்பெண் உடலில் 50 சதவிகிதம் கொழுப்பும் இருக்கிறதுமனித உடலுக்கு கொழுப்பு அத்தியாவசியம்தான்ஆனாலும்அதன் பணி மிகவும் வரம்புக்கு உட்பட்டதுஅது,குளிரில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்உடலின் வைட்டமின்களை பாதுகாக்கும்.முக்கியமாக உடம்பில் ஏதேனும் நச்சுப்பொருட்கள் இருந்தால்அது வேறு உறுப்புகளை பாதிக்காதவாறுகொழுப்பு தன்னுடன் சேர்த்துக்கொள்ளும்ஆகஉடம்பில் ஏராளமான கொழுப்பு இருந்தால்அது அந்தளவுக்கு நச்சுப்பொருட்களை உடலுக்குள் அடைத்து வைத்திருக்கிறது எனப் பொருள்.

நவீன நகர வாழ்வில் மண்நீர்காற்று..என சுற்றுப்புறம் முழுவதையும் நச்சாக்கி வைத்திருக்கிறோம்பாக்கெட் உணவுகள்வினோத சுவையூட்டிகள்பிராய்லர் சிக்கன்,அழகுச் சாதன பொருட்கள்..என உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் வேதிப் பொருட்களை சேர்த்துக்கொண்டே இருக்கிறோம்இவைதான் நச்சாக மாறிஉடலின் கொழுப்புடன் சேர்ந்துக் கொள்கின்றனபிறகு அவை ஒவ்வொரு நோயாக உருவாக்கி நம் வாழ்க்கையை நரகம் ஆக்குக்கின்றனபதற வேண்டாம்..! வாழ்க்கை முறையில் எளிய மாற்றங்கள் சிலவற்றை செய்வதன் மூலம் இந்த சூழலை எளிதாக கடந்து வர முடியும்!

Untitled.png

 

தூக்கத்தில் தொடங்குவோம்

பகலில் நாம் எப்படி உணர்கிறோம் என்பது இரவில் நம் தூக்கம் எப்படி இருந்தது என்பதை பொறுத்துதான் அமையும்போலவேதூக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வும் பகலில் நாம் என்ன செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறதுநிம்மதியான தூக்கம் மூளையை மிரட்டி ஓய்வெடுக்க சொல்லும்இதனால் மன அழுத்தம் தீரும்தூங்கும் நேரம்தூங்கும் முறைகள் ஆகியவை தூக்கத்தை அதிகம் பாதிக்கும்ஒவ்வொருவருக்கும்அவர் உடல் மற்றும் செய்யும் வேலையின் தன்மை பொறுத்து தேவையான தூங்கும் நேரம் மாறுபடும்.எந்த முறை உங்களுக்கு ஒத்து வருகிற்து என்பதை நீங்கள்தான் அனுபவத்தின் மூலம் கண்டறிய வேண்டும்உங்கள் தூக்கத்தை செறிவூட்டிபகல் நேரத்தில் நிம்மதியாக இருக்க வழிவகுக்க சில டிப்ஸ் இதோ:

  1. முறையான தூங்கும் நேரம்:

எதிலுமே ஒரு ஒழுங்கு இருந்தால் அதன் விளைவுகள் சாதகமாக இருக்குமென்பது அடிப்படைஅது போல தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழுவதுஉடலுக்கு பல வகையில் நல்லதுவார இறுதிகளில் இதை பின்பற்றுவது கடினம் என்பவர்கள் அதற்கேற்றது போல நேரத்தை சற்று மாற்றி அமைக்கலாம்.. இரவில் ஏதேனும் வேலை வந்து தூங்குவதற்கு தாமதமானால் பகலில் தூங்கி அதை சமன் செய்யலாம்.எழுந்திருக்கும் நேரத்தை மாற்றாமலிருக்கவும்அதே சமயம் போதுமான நேரம் தூங்கவும் இது உதவும்ஆனால் மற்ற நாட்களிலும் பகலில் தூங்குவதுஇரவு தூக்கத்தை பாதிக்கும் என்பதை மறக்க கூடாதுசில சமயம் இரவு உணவுக்கு பின் உடனே தூக்கம் வரலாம்அப்போது எதாவது உடற்பயிற்சிகள் செய்துநண்பர்களுக்கு ஃபோன் செய்துதூக்கத்தை விரட்டவும்சீக்கிரம் தூங்கிவிட்டால் நள்ளிரவில் முழிப்பு வந்து மொத்த சிஸ்டமும் குலைந்து போகும்.

sleep.jpg

 

  1. மெலட்டனின் ஹார்மோன்:

இயற்கை ஒளியால் உற்பத்தியாகும் இந்த ஹார்மோன் தான் நம் தூக்கத்தை முடிவு செய்கிறதுசூரியனை பார்க்காமல் அலுவலகத்திலே வேலை செய்பவர்களுக்கு பகலிலே தூக்கம் அதிகமாக வரக்காரணம் மெலட்டனின் தான்.. போலவேஇரவு நேரத்தில் டிவிகம்ப்யூட்டர் என தேவைக்கு அதிகமான வெளிச்சத்தால் தூக்கம் போவதற்கும் இந்த ஹார்மோனே காரணம்வேலை இடத்தில் வெளிச்சம் அதிகம் வருமாறு அமைப்பதுவேலை இடைவெளியில் சூரிய ஒளியில் நடப்பது போன்றவை பகலில் நம்மை உற்சாகமாக வைக்கும்.

இரவு தூங்குவதற்கு முன் டிவி பார்ப்பது தூக்கத்தை கெடுக்கும்ஐபேட்கிண்டில் போன்ற கருவிகளை இரவில் தவிர்க்கலாம்அறையில் இருக்கும் விளக்குகள் பிரகாசமான ஒளியமைப்பு கொண்டதாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.வெளியில் இருந்து விழும் நிழல்கள் தெரியாதவண்ணம் திரைச்சீலைகள் அமைத்துக்கொள்ளுங்கள்இரவு தண்ணீர் குடிக்கபாத்ரூம் செல்ல எழுந்தாலும் உடனே விளக்குகளை போடாமல் ஃப்ளாஷ் லைட் போன்றவற்றை பயன்படுத்துங்கள்மீண்டும் விரைவில் உறங்க செல்வதற்கு இது உதவும்.

  1. படுக்கையறை:

படுக்கயறையை அழகாக டெகரெட் செய்வதை விட தூங்குவதற்கு ஏற்ற இடமாக வைத்து கொள்வதுதான் முக்கியம்., அண்டை வீட்டில் இருந்து வரும் சத்தம் போன்ற இரவு நேர சத்தங்கள் அறைக்குள் கேட்காத வண்ணம் கதவுகளை அமைத்துக் கொள்ளுங்கள்மெல்லிய ஒலியில் இசை ஒலிப்பது இந்த சத்தங்களில் இருந்து நம்மை காப்பாற்றும்அதிக சத்தமெனில் இயர் ப்ளக் பயன்படுத்துங்கள்ஒலியை போலவே அறையின் வெப்பநிலையும் மிக முக்கியமானதுஅடிக்கடி ஏசியை அணைத்து பின் மீண்டும் போடுவது என்றில்லாமல் சீரான வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்மெத்தை மற்றும் தலையணை விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்யவே கூடாதுஉங்களுக்கு ஏற்றவாறு பார்த்து வாங்குங்கள்ஏதேனும் பிரச்சினை எனில் மாற்றுவதற்கு தயங்காதீர்கள்பெரும்பாலானவர்களின் நிம்மதியற்ற தூக்கத்திற்கு இவைதான் காரணமென மருத்துவர்கள் சொல்கிறார்கள்படுக்கையை தூங்குவதற்கு மட்டும் பயன்படுத்துங்கள்அங்கேயே அமர்ந்து வேலை செய்வதை தவிருங்கள்மெத்தைக்கு வந்த உடனே தூங்க வேண்டும் என உடல் தானாக தயாராகி விடும்.

sleep2.jpg

 

இந்த மூன்று விஷயங்கள் இல்லாமல் இன்னும் சில காரணிகளும் நம் தூக்கத்தை மேம்படுத்த உதவும்அளவான இரவு உணவுகாஃபியை தவிர்ப்பதுபுகையை தவிர்ப்பது.. இவையெல்லாம் நம் தூக்கத்தை நேரிடையாக பாதிக்கும் விஷயங்கள்.இரவில் அதிக திரவ உணவு எடுத்துக்கொள்வதும் தூக்கத்தை நள்ளிரவில் பாதிக்கும்.தூக்கம் வரவில்லையெனில் மூச்சை நன்றாக இழுத்து பின் விடவும்இது நம் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக உதவும்.

நல்லா தூங்குங்க பாஸ்.

vikatan

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 14
 
 

article_1473830292-gh300.jpg81: டைட்டசு என்ற தனது சகோதரன் இறந்ததை அடுத்து டொமீசியன், உரோமைப் பேரரசனாக முடி சூடினான்.

1752: கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி, புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும்.

1812: நெப்போலியப் போர்கள் - நெப்போலியனின் படைகள் மொஸ்கோவினுள் நுழைந்தனர். ரஷ்யப் படைகள் நகரை விட்டு விலகியதும் மாஸ்கோவில் தீ பரவ ஆரம்பித்தது.

1829: உதுமானியப் பேரரசு, உருசியாவுடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. உருசிய-துருக்கியப் போர் முடிவுக்கு வந்தது.

1846: யாங் பகதூர் ராணாவும் அவரது சகோதரர்களும் நேப்பாளத்தின் பிரதமர் உட்பட 40 அரச குடும்பத்தினரைப் படுகொலை செய்தனர்.

1847: மெக்சிக்கோ நகரத்தை "வின்ஃபீல்ட் ஸ்கொட்" தலைமையிலான அமெரிக்கப் படைகள் கைப்பற்றினர்.

1886: தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது.

1901: அமெரிக்க அதிபர் வில்லியம் மக்கின்லி செப் 6இல் இடம்பெற்ற கொலைமுயற்சியின் பின்னர் இறந்தார்.

1917: உருசியா அதிகாரபூர்வமாகக் குடியரசானது.

1944: இரண்டாம் உலகப் போர் - மாஸ்ட்ரிக்ட் நேச நாடுகளால் விடுவிக்கப்பட்ட முதலாவது டச்சு நகரம் ஆனது.

1954: சோவியத் ஒன்றியம் அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

1959: சோவியத்தின் லூனா 2 விண்கலம் சந்திரனில் மோதியது. சந்திரனில் இறங்கிய மனிதனால் அமைக்கப்பட்ட முதலாவது விண்கலம் இதுவே.

1960: எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஓப்பெக்) உருவாக்கப்பட்டது.

1962: கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் இராணுவத் தளபதி ஜோசப் மோபுட்டு இராணுவப் புரட்சியை மேற்கொண்டு பிரதமர் பத்திரிசு லுமும்பாவை அரசு பதவியில் இருந்து கலைத்தார்.

1979: ஹஃபிசுல்லா அமீனின் கட்டளைப் படி ஆப்கானிஸ்தான் அரசுத்தலைவர் நூர் முகம்மது தராக்கி படுகொலை செய்யப்பட்டார். ஹஃபிசுல்லா அமீன் புதிய அரசுத் தலைவர் ஆனார்.

1982: லெபனான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசீர் ஜெமாயெல், படுகொலை செய்யப்பட்டார்.

1984: ஜோ கிட்டிங்கர் வளிமக் கூண்டில் அத்திலாந்திக் பெருங்கடலைத் தாண்டிய முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.

1999: கிரிபட்டி, நௌரு, டொங்கா ஆகிய நாடுகல், ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தன.

2000: எம்.எஸ் டொஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது.

2000: விண்டோஸ் மில்லேனியம் வெளியிடப்பட்டது.

2003: சுவீடனில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பில் யூரோ நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

2003: ஐரோப்பிய ஒன்றியத்தில் எசுத்தோனியா இணைவதற்கு அந்நாட்டில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

2005: நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற புதிய அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.

2008: உருசியாவின் ஏரோபுளொட் விமானம், பேர்ம் கரை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியதில் அனைத்துப் 88 பயணிகளும் கொல்லப்பட்டனர்.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14369986_1129817427066950_19619463295558

நடிகை ப்ரியா ராமனின் பிறந்தநாள்
Happy Birthday Priya Raman

  • தொடங்கியவர்

2017 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க அழகியாக பல்கலைக்கழக மாணவி சவ்வி ஷீல்ட்ஸ் தெரிவு (Photos)

 

2017 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க அழகியாக பல்கலைக்கழக மாணவி சவ்வி ஷீல்ட்ஸ் தெரிவு (Photos)

2017 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க அழகியாக அர்கான்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி சவ்வி ஷீல்ட்ஸ் தெரிவாகியுள்ளார்.

பல கட்டங்களாக நடைபெற்று வந்து அமெரிக்க அழகிப் போட்டியில் 50 மாநிலங்கள் மற்றும் கொலம்பியா, பியூட்டோரிக்காவைச் சேர்ந்த 52 பேர் கலந்துகொண்டனர்.

இறுதிச் சுற்றுக்கு 7 பேர் தெரிவாகியிருந்ததுடன் அவர்களிடம் சர்ச்சைக்குரிய தலைப்புக்களைக் கொடுத்து அதற்குப் பதிலளிக்க 20 நிமிடங்கள் வழங்கப்பட்டிருந்தன.

ஜனாதிபதி வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப், ஹிலாரி ஆகியோரைப்பற்றிய கேள்விகளும் இடம்பெற்றன.

இதில் அர்கான்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி சவ்வி ஷீல்ட்ஸ் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.

சவ்வி ஷீல்ட்ஸ் தனது ஜாஸ் நடனத்தாலும், புத்திசாலித்தனமான பதிலாலும் போட்டி நடுவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

‘சிறந்ததைச் சாப்பிடுங்கள், சிறப்பாக வாழுங்கள்’ என்ற கருப்பொருளில் பங்கேற்ற அவர் ஏற்கனவே மிஸ் அர்கான்சாஸ் பட்டத்தையும் வென்றிருந்தார்.

மிஸ் சவுத் கரோலினா பட்டம் வென்றிருந்த ராகேல் வியாத், அமெரிக்க அழகி போட்டியில் 2 ஆவது இடம் பெற்றார்.

miss-america-savvy-shields

arkansas-savvy-shields-crowned-2017-america

1473666792_miss-america

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

ஜென் Z - இது ‘நௌகட்’ காலம்!

ஞா.சுதாகர்

 

p54a.jpg

ண்ட்ராய்டு பயனாளர்களுக்கு இப்போதே தீபாவளி வந்துவிட்டது. ஆண்ட்ராய்டு-மார்ஷ்மெல்லோவுக்கு அடுத்தபடியான ஆபரேட்டிங் சிஸ்டம் ‘நெளகட்’ இப்போ ரெடி.

முதல்கட்டமாக நௌகட் அப்டேட், கூகுளின் நெக்ஸஸ் ஸ்மார்ட்போன்களில் மட்டும்தான் p54b1.jpgவந்துள்ளது. விரைவில் மற்ற போன்களுக்கும் வந்துசேரும். ரிச்சான டிசைன், புதுப்புது அப்டேட்ஸ், சிம்பிளான மெக்கானிஸம்... எனப் பார்க்க ஸ்மார்ட்டாக இருக்கும் நௌகட்டின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இது எமோஜி காலம். ஆண்ட்ராய்டில் இருக்கும் 1,500 எமோஜிக்களில் கூடுதலாக, 72 எமோஜிக்களைப் புதிதாகச் சேர்த்துள்ளது கூகுள்.

ஆண்ட்ராய்டு போன்களில் இருக்கும் டென்ஷனில் ஒன்று, நோட்டிஃபிகேஷன்ஸ் (Notifications). ஒரு மணி நேரம் மொபைல் டேட்டாவை அணைத்து திரும்ப ஆன் செய்தால், மெசேஜ் கும்பல் கும்பலாக வந்துவிழும். எது எந்த ஆப்பில் இருந்து வந்தது என்பதே தெரியாது. இதற்குத் தீர்வுசொல்கிறது நெளகட். நோட்டிஃபிகேஷன்களை ஆப் வாரியாக, தனித்தனியாகப் பிரித்துக்காட்டுகிறது.

நௌகட்டின் ஹைலைட்டே ஸ்ப்ளிட் ஸ்க்ரீன்தான். ஒரே நேரத்தில் இரண்டு செயலிகளை இயக்க முடியும். ஒரே நேரத்தில் டிஸ்ப்ளேயின் ஒரு பாதியில் படம் பார்க்கவும், மறுபாதியில் மெசேஜ் அனுப்பவும்கூட முடியும்.

ஏர்பிளேன் மோடு, ப்ளூ டூத்... போன்ற ஆப்ஷன்களை எல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்தவே மாட்டோம். அது டாகிள் (toggle) ஸ்கீரினில் பளிச்சென இருக்கும். ஆனால், நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஆப்ஷன்கள் அங்கே இருக்காது. நௌகட்டில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நமக்கு ஏற்றவாறு வரிசைப்படுத்திக் கொள்ளமுடியும்.

டேட்டா சேவர் ஆப்ஷன், மொபைல் டேட்டாவை கன்ட்ரோலில் வைத்துக்கொள்ள உதவுகிறது. மொபைலில் ஃபான்ட் மட்டும் அல்ல, ஐகான்களின் சைஸைக்கூட, நமக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள முடியும். மொபைல் செட்டிங்க்ஸ் எல்லாம், ஒன்றுக்குள் ஒன்றாக இல்லாமல், கையாள எளிமையாக இருக்கின்றன.

விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்டட் ரியாலிட்டி என, கேமிங் எங்கேயோ போய்க்கொண்டிருக்க, அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், நௌகட் Vulkan API கொண்டுள்ளது.

கடைசியாக வந்த மார்ஷ்மெல்லோ வெறும் 15 சதவிகித ஆண்ட்ராய்டு போன்களில்தான் இருக்கிறது. இன்னும் கிட்காட், லாலிபாப் என முந்தைய வெர்ஷன்களே, 60 சதவிகித போன்களில் உள்ளன. நெளகட், கோஹ்்லியாக மாறி ரெக்கார்டுகளை முறியடிக்குமா? காத்திருப்போம்.

vikatan

  • தொடங்கியவர்

14292233_1129819400400086_28328082480270

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் ரொபின் சிங்கின் பிறந்தநாள்.

மேற்கிந்தியத் தீவுகளில் பிறந்து, தமிழ் நாட்டு ரஞ்சி கிண்ண அணிக்கும் தலைமை தாங்கியவர்.
மிகச் சிறந்த களத்தடுப்பு வீரரான இவர், இந்திய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராகவும் திறம்படக் கடமையாற்றியிருந்தார்.

  • தொடங்கியவர்
உலகிலேயே அவலட்சணமான பெண்ணின் வாழ்வில் ஒளி
 
 

article_1473417817-3818EF1400000578-3780

உலகின் அதிகூடிய அவலட்சணமான பெண் எனப் பழிக்கப்பட்டவர், தனது ஆவணப்படம் வெளியிடப்பட்ட வேளையில், தான் கணினி வழித் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

லிஸி வலகியுஸ் என்ற இப்பெண், 17 வயதாக இருந்த போது, அவரைப் பழிக்கும் வீடியோக்களை ஓன்லைனில் கண்டு பெரும் வேதனைப்பட்டுள்ளார்.

எனினும், அவுஸ்திரேலியப் பெண் ஊடகவியலாளர் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை, இவர் தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட்டு இவருக்கு வாழ்வின் ஒளியைக் காட்டியுள்ளார்.

article_1473417829-3818EEFD00000578-3780article_1473417839-3818EF9F00000578-3780article_1473417846-3818F71300000578-3780article_1473417853-38191B5D00000578-3780

.tamilmirror

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
NewYork Fashion Week 2016
 

நியூயோர்க் பெஷன் வீக் 2016 கண்­காட்­சிகள் அமெ­ரிக்­காவின் நியூயோர்க்கில் தற்­போது நடை­பெ­று­கின்­றன.

 

1603.jpg

 

1600.jpg

 

1601.jpg

 

கடந்த 8 ஆம் திகதி ஆரம்­ப­மான இக் ­காட்­சி­களில் பங்­கு­பற்­றிய மொடல்­களில் சிலரைப் படங்­களில் காணலாம்.

 

1605.jpg

 

1602016-09-08T203159Z_1009846589_S1AEUAE

 

இங்­கி­லாந்து கால்­பந்­தாட்ட அணியின் முன்னாள் தலைவர் டேவிட் பெக்­காமும் இக்­ கண்­காட்­சி­களில் பார்வை யாளராகப் பங்குபற்றினார்.

 

160111450-01-02.jpg

 

160110258-01-02.jpg

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

நாய்களின் குதூகல நீச்சல்: இங்கிலாந்தில் உரிமைாளர்களுடன் நாய்கள் நடத்திய உற்சாக நீச்சல்

  • தொடங்கியவர்

அண்டவெளியை அளந்து பார்க்கும் அபூர்வ முயற்சி
-----------------------------------------------------------------------------------------------

பால்வெளி எனப்படும் நமது அண்டவெளியிலுள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் சரியாக எங்குள்ளன, அவை எந்த அளவுக்கு ஒளிருகின்றன போன்ற தகவல்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
காயா எனும் வானியல் தொலைநோக்கி மூலம் மூன்று ஆண்டுகளாக இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
இந்தத் தகவல்கள் நமது அண்டம் குறித்த முதலாவது சரியான வரைபடம் உருவாக்க பயன்படுத்தப்படும்.
இது குறித்த பிபிசியின் சிறப்புக் காணொளி

 

  • தொடங்கியவர்

இயற்கை விநோதங்கள்!

 

 
maram_3009616f.jpg
 

# இத்தாலியில் உள்ள ஆர்மினியா என்ற அருவியில் குளிர் காலத்தில் வெந்நீரும் வெயில் காலத்தில் குளிர்ந்த நீரும், பிற காலங்களில் இயல்பாகவும் நீர் விழுகிறது.

# விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குப் பயணம் செய்யும்போது 24 மணி நேரத்தில் 16 முறை சூரியனின் உதயத்தையும், 16 முறை சூரிய அஸ்தமனமாவதையும் பார்ப்பார்கள்.

# ஆந்திர மாநிலம் அனந்த பூரிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது திம்மம்மா மாரிமானு என்று பெயரிடப்பட்ட ஆலமரம். இது சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஆலமரங்களில் இதுவும் ஒன்று.

# உலகிலேயே மிக உயரமான செடி மாக்ராஸைடிக்ஸ் பைரீஃபெரா என்ற செடியே. இது கடற்பாசி இனத்தைச் சார்ந்தது. இதன் உயரம் 183 மீட்டர். இது தென் அமெரிக்காவில் கடல் பகுதியில் காணப்படுகிறது.

# உலகிலேயே மிக உயரமான மரம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. செக்கோயா மரம் என்றழைக்கப்படும் இதன் உயரம் 23.8 மீட்டர்.

# அங்கோலா நாட்டில் உற்பத்தியாகும் குயிங்கோ என்ற ஆறு 6,590 கிலோ மீட்டர் தூரம் ஓடி, கலஹா என்ற பாலைவனத்தில் பாய்ந்து ஆவியாகிறது.

# ஜெய்பூரில் உள்ள காம்பார் ஏரியில் உள்ள தண்ணீரில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை ஏரியில் உள்ள நீர் உப்பாகவும், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இனிப்பாகவும் இருக்கும்.

# உலகில் உள்ள எல்லா நதிகளும் நிலநடுக்கோடை நோக்கிப் பாயும்போது, நைல் நதி மட்டும் நிலநடுக் கோட்டுக்கு எதிர்த் திசையில் பாய்கிறது.

# வட துருவத்தில் குளிர் காலத்தின்போது சூரியன் உதிக்காது. அதனால் தொடர்ந்து 106 நாட்கள் இருண்டு கிடக்கும்.

# ஹானலூனாவில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியின் தண்ணீர் மேலிருந்து கீழே விழாமல், கீழிலிருந்து மேல் நோக்கிப் பாய்கிறது.

# உலகில் மிகப் பெரிய கரையான் புற்றுகள் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் உள்ள ஒருசில கரையான் புற்றுகள் 30 அடி உயரம் அளவுக்கு இருக்கின்றன.

tamil.thehindu

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 15
 

article_1473913918-Thileepan-2.jpg1789: அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது. (இது ஆரம்பத்தில் வெளிவிவகார திணைக்களம் என்ற பெயரில் அறியப்பட்டது)

1812: நெப்போலியன் தலைமையிலான பிரெஞ்சு இராணுவம்  மொஸ்கோவின் கிரெம்ளின் நகருக்குள் புகுந்தது.

1821: கௌதமாலா, எல் சல்வடோர், ஹொண்டுராஸ், நிகரகுவா, கொஸ்டா ரிக்கா ஆகியன ஸ்பெய்னிடமிருந்து பிரிவதாக கூட்டாக சுதந்திர பிரகடனம் செய்தன.

1935: நியூரம்பர்க் சட்டங்களினால் ஜேர்மனியில் யூதர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.

1940: ஹிட்லர் தலைமையிலான ஜேர்மனி சுவஸ்திகாவை தனது புதிய தேசிய கொடியாக அங்கீகரித்தது.

1945: அமெரிக்காவில் சூறாவளியினால் 366 பேர் பலி.

1947: ஜப்பானில் சூறாவளியினால் 1077 பேர் பலி.

1959: அமெரிக்காவுக்கு விஜயம் செய்த முதலாவது சோவியத் தலைவரானார் நிகிட்டா குருசேவ்.

1968: சோவியத்தின் ஸோண்ட் 5 எனும் விண்கலம் சந்திரனை சுற்றி வந்து பூமிக்குத் திரும்பிய முதலாவது விண்கலமானது.

1974: வியட்நாம் விமானமொன்று கடத்தப்பட்டு பின்னர் விபத்துக்குள்ளானதால் 75 பேர் பலி.

1981: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

1987: இந்திய அமைதிப் படைக்கெதிராக, திலீபன் நீராகாரம் இன்றி உண்ணா நோன்பைத் தொடங்கினார்.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14330106_1130589840323042_70365711378022

நியூ சீலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நேதன் அஸ்ட்டிலின் பிறந்தநாள்.
Happy Birthday Nathan Astle

  • தொடங்கியவர்

அண்ணா 25

செப்டம்பர் 15 - பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்.  இதையொட்டிய பகிர்வு...

அப்பாவியாகத் தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன்!

anna_vc2.jpg* சி.என்.ஏ. என்ற மூன்றெழுத்தால் அறிமுகமான அண்ணாதான், தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் 'தளபதி'. பெரியாரின் சீடராக வலம் வந்தபோது அப்படித்தான் அழைக்கப்பட்டார். அதன் பிறகு எல்லோருக்கும் அவர் 'அண்ணா'தான்!

* பள்ளியில் படிக்கும்போது பொடி போட்டுப் படித்தார். கல்லூரிக் காலத்தில் வெற்றிலை, பாக்கு பயின்றார். வெளியில் எச்சில் துப்ப, வகுப்பில் ஜன்னல் ஓரத்து இருக்கையில் இருப்பார். இந்தத் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை இருந்தது!

* ''என் வாழ்க்கையில் நான் கண்டதும்கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்'' என்று அறிவித்திருந்தார். அவரைவிட்டுப் பிரிந்து, தனிக் கட்சி கண்டபோதும் தலைமை நாற்காலியை பெரியாருக்காகக் காலியாகவே வைத்திருந்தார். அண்ணா காலமானது வரை தி.மு.க-வுக்குத் தலைவர் அறிவிக்கப்படவே இல்லை!

* இரண்டு மயில்கள், இரண்டு மான்கள், புறாக்கள், நாய் ஆகியவற்றைக் கடைசி வரை விரும்பி வளர்த்தார். அவர் இறந்த ஒரு வாரம் கழித்து அவரது படுக்கையைச் சுற்றி வந்து அந்த நாய் இறந்தது. பிற விலங்குகளைப் பராமரிக்கக் கொடுத்துவிட்டார்கள்!

* அண்ணா - ராணி தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, தனது அக்கா மகள் சௌந்தரியின் மகன்களான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந்திரன் ஆகிய நால்வரையும் தத்து எடுத்து வளர்த்தார்!

* தினமும் துவைத்துச் சுத்தப்படுத்திய வேட்டி - சட்டை அணிய வேண்டும் என்று நினைக்க மாட்டார். ஒரே சட்டையை இரண்டு மூன்று நாட்கள் போடுவார். முதலமைச்சரான பிறகுதான் 'வெள்ளையான சட்டை' அணிந்தார்!

* தலை சீவ மாட்டார். கண்ணாடி பார்க்க மாட்டார். மோதிரம் அணிந்தது இல்லை. கைக்கடிகாரம் அணிய மாட்டார். ''என்னை காலண்டர் பார்க்கவைத்து, கடிகாரம் பார்க்கவைத்து சூழ்நிலைக் கைதியாக்கிவிட்டதே இந்த முதலமைச்சர் பதவி'' என்று சொல்லிக்கொண்டார்!

anna_vc3.jpg



* காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் ஒரு ஏக்கர் நிலம், காஞ்சிபுரத்தில் ஒரு வீடு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு - மூன்றும்தான் அண்ணா வைத்துவிட்டுப் போன சொத்துக்கள்!

* முதலமைச்சராக இருந்து அவர் இறந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய், மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் அவரது கணக்கில் இருந்தன!

* நெசவு மற்றும் தையல் தொழில் நன்றாகத் தெரியும். ''என்னுடைய அளவுக்கு மீறிய பொறுமைக்கு இதுதான் காரணம். நூல் அறுந்துவிடக் கூடாது என்பதற்காக நெசவாளியானவன் எப்போதும் இப்படித்தான் கவனமாகவும் பொறுமையாகவும் இருப்பான்'' என்பார்!

* புற்றுநோய் பாதிப்பில் இருந்தபோது, சென்னை மருத்துவமனையில் இருந்து வேலூர் சி.எம்.சி-க்கு அவரைக் கொண்டுசெல்லும்போது தடுத்தார். ''நாமே அரசாங்க மருத்துவமனையை மதிக்காததுபோல ஆகிவிடும்'' என்றார்!

anna_vc1.jpg



* அண்ணா பல மணி நேரங்கள் பேசிய கூட்டத்துக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. ஒரு கூட்டத்தில் ஐந்து நொடிகள்தான் பேசினார். ''காலமோ சித்திரை... நேரமோ பத்தரை... உங்களுக்கோ நித்திரை... போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை'' என்பதே அந்தப் பேச்சு!

* நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது, சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழித் திட்டத்தை சட்டமாக்கியது... இவை மூன்றும் அண்ணாவின் சாதனைகள்!

* தி.மு.க ஆட்சியைப் பிடித்தால் தான் தான் முதலைமைச்சர் என்ற யோசனைகூட இல்லாமல், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குப் போடியிட்டவர் அண்ணா!

* உலகம் பழையதும் புதியதும், நிலையும் நினைப்பும், நாடும் ஏடும், நல்ல தீர்ப்பு, ஆற்றங்கரையோரம் என்று தலைப்பு கொடுத்து அதிகம் பேசியது இவர்தான். மைக் முன்னால் நின்றதும் தலைப்பு கொடுப்பார்கள். அப்படியும் பேசியிருக்கிறார். இரண்டு அணா டிக்கெட் வசூலும் இவரது பேச்சைக் கேட்க வசூலித்திருக்கிறார்கள்!

anna_vc5.jpg



* 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்', 'கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு', 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்', 'கடமை-கண்ணியம் -கட்டுப்பாடு', 'எங்கிருந்தாலும் வாழ்க', 'மறப்போம் மன்னிப்போம்', 'வாழ்க வசவாளர்கள்', 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு', 'சட்டம் ஒரு இருட்டறை', 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' ஆகிய பிரபலமான வாசகங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை!

* தனக்குக் கீழ் இருந்தவர்களை நாவலர், கலைஞர், பேராசிரியர், சொல்லின் செல்வர், சிந்தனைச் சிற்பி, தத்துவ மேதை என்ற பட்டம் சொல்லி அழைத்து வளர்த்துவிடுவார்!

* மூர்மார்க்கெட் யுனிவர்ஸல் புக்ஷாப், சென்னை ஹிக்கின்பாதம்ஸ் ஆகிய இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கிலப் புத்தகங்களையும் வாங்கிவிடுவார். ஹிக்கின்பாதம்ஸ் எடுத்த கணக்கெடுப்பின்படி மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ் உடையாரும், அண்ணாவும்தான் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்களாம் அந்தக் காலத்தில்!

* பூட்டிய அறைக்குள் தனியாகப் படுக்கப் பயப்படுவார். யாராவது துணைக்கு இருக்க வேண்டும். தூங்கும்போதும் விளக்கு எரிய வேண்டும். காஞ்சிபுரத்தில் குரங்குகள் அதிகமாக இருந்ததால், தன்னைக் குரங்கு கடித்துவிடுமோ என்ற பயம் எப்போதும் இருந்திருக்கிறது!

anna_vc4.jpg



* முதலமைச்சர் ஆனதும், அதுவரை தன்னை எதிர்த்து வந்த பெரியார், காமராஜ், பக்தவத்சலம் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனைகள் பெற்றார்!

* தான் வகித்த தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியைச் சுற்று முறையில் பலருக்கும் போக வேண்டும் என்று நினைத்தார். ''தலைமையிடம் அதிகாரம் குவியக் கூடாது. எந்தத் தனி நபரின் செல்வாக்கிலும் இயக்கம் இருக்கக் கூடாது'' என்றார்!

'* ஓர் இரவு' திரைப்படத்தின் மொத்த வசனத்தையும் (அதாவது 360 பக்கங்கள்) ஒரே நாள் இரவிலேயே எழுதி முடித்தார்!

* எப்போதும் தான் பேச இருக்கும் கூட்டத்துக்குத் தாமதமாகத்தான் வருவார். ''முன்னால் வந்தால் அடுத்தவரைப் பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள். அதனால், ஊருக்கு வெளியில் நின்று, அனைவர் பேச்சையும் கேட்டுவிட்டுக் கடைசியில் வருகிறேன்'' என்பார்!

* அண்ணா மறைவின்போது திரண்ட கூட்டம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம். 1806 பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன், 1907 எகிப்து குடியரசுத் தலைவர் கமால் அப்துல் நாசர் ஆகியோருக்குக் கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது கின்னஸ்!

anna_vc6.jpg



* போப்பாண்டவரைச் சந்தித்த அண்ணா, கோவா விடுதலைக்குப் போராடி போர்ச்சுக்கல் சிறையில் இருக்கும் மோகன் ரானடேவை விடுதலை செய்யக் கேட்டார். விடுதலையான ரானடே, அண்ணாவுக்கு நன்றி சொல்ல சென்னை வந்தார். ஆனால், அண்ணா இறந்துபோயிருந்தார். இப்படி அண்ணாவின் வாழ்க்கை, தூரத்தில் இருப்பவர்களுக்காகப் பிரதிபலன் பார்க்காததாகவே இருந்தது!

vikatan

14364670_1130589653656394_81596838224368

 
 
திரைத்துறை, கலைத்துறை, அரசியல் என எல்லாவற்றிலும் முத்திரை பதித்த முன்னாள் தமிழக முதலமைச்சரும் தலைசிறந்த பேச்சாளருமான அறிஞர் அண்ணா (C.N.அண்ணாத்துரை) பிறந்தநாள்.
  • தொடங்கியவர்

14364665_1130589046989788_11185750687494

ரம்யா என்றால் கெத்து, ரம்யா என்றால் என்றும் யூத்து.

இரு தசாப்தங்களாக கதாநாயகியாகவே கலக்கிய இளமை தோய்ந்த நடிகை, பின்னர் நீலாம்பரியாகவும் மகியாகவும் கலக்கி அசத்தி இன்னமும் பரபரப்போடு வலம்வரும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் பிறந்தநாள்.

Happy Birthday Ramya Krishnan

  • தொடங்கியவர்

'தமிழுக்காக மகளிடம் உரையாடிய தந்தை!' - மறைமலை அடிகள் நினைவு தினச் சிறப்புப் பகிர்வு

Tamil.png

 

‘‘என் புத்தகங்களை மொத்தமாகப் படித்தால்... ஒருவர் தமிழின் சுவையை அறியலாம்’’ என்று துணிச்சலாய்ச் சொன்னவர் மறைமலை அடிகள். ஒருவர், எதன்மீது காதல்கொள்கிறாரோ... அவர், அதன் முக்கியத்துவத்தை உணர முடியும். அதனால்தான் என்னவோ தெரியவில்லை, தமிழ் மொழியின்மீது தீராத காதல்கொண்டு, தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்து தமிழ்மொழிக்கு தன்னிகரில்லாத் தொண்டாற்றியவர் மறைமலையடிகள். அதன் பயனாகத்தான் இன்று நமது தமிழ், செம்மொழி தகுதியைப் பெற்றிருக்கிறது.

‘மும்மணிக் கோவை’ பாடினார்!

‘‘அடிகளே தென்னாடு... தென்னாடே அடிகள்’’ என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க-வால் புகழப்பட்ட மறைமலை அடிகள், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்றவர். 4 ஆயிரம் நூல்களுடன் தன் வீட்டிலேயே நூலகம் ஒன்றை அமைத்தவர்; தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகக் கொண்டவர்... இப்படித் தமிழுக்காக வாழ்ந்த மறைமலை அடிகள், நாகை மாவட்டம் காடம்பாடி எனும் சிற்றூரில் 1876-ம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் சொக்கநாத பிள்ளை - சின்னம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் சாமி வேதாச்சலம். தன்னுடன் சிறுவயது முதல் பழகிய செளந்திர வள்ளியம்மை என்ற பெண்ணை, மிகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 7 குழந்தைகள் பிறந்தன. தன்னுடைய 22-வது வயதில் கடும்சூலை நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது, திருவொற்றியூர் முருகன் மீது பக்திகொண்டு, ‘மும்மணிக் கோவை’ பாடினார். அதன் பயனாக, முருகப் பெருமான் அவர் நோயைக் குணமாக்கினார். ‘மும்மணிக் கோவை’யில் உள்ள புலவராற்றுப் படை என்னும் பாடல் நீண்ட ஆசிரியப்பாவால் ஆனது.

Maraimalaiadigal.png

 

மகளிடம் நடத்திய உரையாடல்!

‘‘பெற்றதாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப் பெற்றதாய் மறந்தாலும்;
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரைமேவிய உடல் மறந்தாலும்;
கற்ற நெஞ்சம் கலைமறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்;
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே!’’''
- என்கிற பாடலை மகள் நீலாம்பிகை பாட... தந்தை சாமி வேதாச்சலம் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பாடல் அவரை நெருடியதால், ‘‘நீலா... இனிமையான இந்தத் தமிழ்ப் பாட்டில் ஒரே ஒரு சமஸ்கிருதச் சொல் இருக்கிறது. ‘உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்’ என்ற இடத்தில் ‘தேகம்’ என்பதை நீக்கிவிட்டு, ‘உடம்பாகிய யாக்கை’ என்று போட்டால் ஓசை இன்பம் அழகாக இருக்கும். பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குன்றுகிறது’’ என்றார் சாமி வேதாச்சலம்.

‘‘அப்படியானால் நாம் பிறமொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும்’’ என்று 13 வயதே ஆன மகள் நீலாம்பிகை சொல்ல... அன்றுமுதல் தனித்தமிழ் இயக்கத்துக்கான விதையை மண்ணில் விதைத்தார் சாமி வேதாச்சலம். தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் தினந்தோறும் நாட்குறிப்பாக எழுதிவைத்தவர் மறைமலை அடிகள். இவை, ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளன. ‘‘என் நினைவு, பேச்சு, எழுத்து யாவும் தமிழாக உள்ளன. ஆங்கிலத்தில் எனக்குள்ள பயிற்சிக்குத் தொடர்பு வேண்டுமல்லவா, அதற்காக ஆங்கிலத்தில் எழுதுகிறேன்’’ என்று விளக்கம் அளிக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு படைத்தவர். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் மீதான வெறுப்பால், அறியாமையால் தோன்றியது அல்ல... அவருடைய தனித்தமிழ் இயக்கம். தமிழ் மீதான தணியாத காதலால் மலர்ந்தது.

‘‘எல்லா உறுப்புகளும் அமைந்த அழகான ஓர் உடம்பில் அந்த உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டு, மண்ணாலும், மரத்தாலும் செயற்கையாக அந்த உறுப்புகளைப்போல் செய்து அவற்றை அதற்கண் ஒட்டவைத்துப் பார்ப்பதற்கு ஒப்பாய் இருக்கிறது... தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பது’’ என்று தமிழுக்கு விளக்கம் கொடுத்தார் மறைமலை அடிகள்.

பரிதிமாற்கலைஞர் கேட்ட கேள்வி!

மறைமலை அடிகள், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றுவதற்்காக அந்தக் கல்லூரியில் பணிபுரிந்த பரிதிமாற்கலைஞரைச் சந்திக்கச் சென்றார். அப்போது அவர், ‘‘குற்றியலுகரத்துக்கு எடுத்துக்காட்டு சொல்லுங்கள்’’ என்று கேள்வி கேட்டார். ‘‘அஃது எனக்குத் தெரியாது’’ என்றார் மறைமலை அடிகள். ‘‘நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள்’’ என்றார் பரிதிமாற்கலைஞர். ‘‘தெரியாது’’ என்று சொல்பவரை, ‘‘எப்படித் தேர்வு செய்யலாம்’’ என்று மற்ற உறுப்பினர்கள் கேட்டபோது, ‘‘ ‘அஃது’ என்பது, ஆயுதத் தொடர் குற்றியலுகரம். ‘எனக்கு’ என்பது, வன்தொடர்க் குற்றியலுகரம். ‘தெரியாது’ என்பது, உயிர்த்தொடர் குற்றியலுகரம்’’ என்று பதிலளித்தார் பரிதிமாற்கலைஞர். வேலை கிடைத்துவிட்டபோதிலும் பரிதிமாற்கலைஞரையே கேள்வி கேட்டு வியக்கவைத்தவர் மறைமலை அடிகள்.

மாநாட்டில் கலந்துகொள்ள மறுப்பு!

Maraimalai_Adigal_Tamil_Writer.jpg1933-ல் சென்னைப் புத்தகாலயப் பிரசார சங்கத்தார் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். அதில், கலந்துகொள்ளுமாறு மறைமலை அடிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு மறுப்புத் தெரிவித்துக் கடிதம் எழுதினார் அடிகள். அதில், ‘‘தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கு எமது மனம் இடம் தரவில்லை. பண்பட்ட பழைய மொழிகள் எல்லாவற்றிலும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்னும் தன் பண்டைய நலம்சார்ந்த புகழோடு வாழ்கிறது. பிறமொழிக் கலப்பு அதன் தூய தன்மையினைக் கெடுக்கும் என்றும், அதன் வளர்ச்சியினை குன்றச் செய்யும் என்றும் யாம் உறுதியாக நம்புகிறோம். ஆதலால், எமது தனித்தமிழ்க் கொள்கையினைக் கடைப்பிடிக்காத உங்களுடைய மாநாட்டிலே கலந்துகொள்ள முடியாமையினைப் பொறுத்துக்கொள்வீர்களாக’’ என்று எழுதியிருந்தார். இதன்மூலம் அவர் தமிழ் வளர்ச்சிக்கு எங்ஙனம் விளங்கினார் என்பதைக் காணமுடிகிறது.

16-9-1943 அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது... ஒருவர், ‘‘திராவிட நாடு பற்றி தங்கள் கருத்து யாது’’ எனக் கேள்வி கேட்டார். அதற்கு அடிகள், ‘‘இந்தியா முழுவதுமே திராவிட நாடுதான்’’ என்றார்.

தனித்தமிழ் இயக்கம்!

‘ஆங்கிலமும், சமஸ்கிருதமும் கட்டாயம் படிக்க வேண்டும். தாய்மொழிப் பாடத்தை விருப்பப்பாடமாக கற்றால் போதும்’ என்று சென்னைப் பல்கலைக்கழகம் தீர்மானம் போட்டபோது, 11 ஆண்டு காலம் பணியில் இருந்த மறைமலை அடிகளார், அதை எதிர்த்துத் தன்னுடைய பணியில் இருந்து விலகினார். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள், அதிலிருந்து தமிழை மீட்க முடிவெடுத்தார். வெறும் பேச்சால் மட்டுமே கொள்கைகளைப் பரப்பிவிட முடியாது என்ற தெளிவும் அவரிடம் இருந்ததால்தான் அதற்கு ஒரு முன்னுதாரணமாகச் செயல்படவும் தொடங்கினார். 1916-ல் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார். தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக் காலகட்டத்தில் வழக்கத்திலிருந்த பல வடமொழிச் சொற்கள் வழக்கொழிந்துபோயின. இந்தச் சமயத்தில்தான் தன் பெயரை, ‘மறைமலை அடிகள்’ (வேதம் - மறை, அசலம் - மலை, சுவாமி - அடிகள்) என்று மாற்றிக்கொண்டார். அவரைப் பின்பற்றிப் பல தமிழர்கள் தங்களுக்குத் தூய தமிழில் பெயர் சூட்டிக்கொண்டனர்.

காஞ்சி மடாதிபதியின் அறிவிப்பு!

முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை போன்ற நூல்களுக்கு எளிய முறையில் தமிழில் உரை எழுதினார். வடமொழியில் காளிதாசன் படைத்த, ‘சாகுந்தலம்’ எனும் காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். இதைப் படித்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகர ஸ்வாமிகள், ‘‘இதுபற்றி சிறந்த கட்டுரை எழுதும் மாணவர்களுக்கு ரூ.100 பரிசு தரப்படும்’’ என்று 1957-ல் அறிவித்தார். மகா பெரியவரையே மயக்கிய நூல் அது.

‘இந்தி பொது மொழியா?’

மொழிக்கலப்பு தமிழ் மொழிக்குப் பாதிப்பாக அமையும் என்று நம்பிய அவர், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு இந்தி மொழி தடையாக இருக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்தினார். 1937-ல், இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டபோது, சென்னை சைதாப்பேட்டையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்கு மறைமலை அடிகளே தலைமை தாங்கினார். ‘இந்தி பொது மொழியா?’ எனப் புத்தகம் எழுதினார். அதன் பொருட்டு நடந்த மறியலில் மகன் மறை திருநாவுக்கரசு போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவருடைய தாய் தடுத்தார். ‘‘தமிழ் காக்க நாம் அல்லவா சிறை அனுப்ப வேண்டும். வேலை போய்விட்டால் என்ன, வேறு வேலை கிடைக்காமலா போய்விடும்? சிவபெருமான் கைவிட மாட்டார்’’ என்று அனுப்பிவைத்தார். இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றார். ஆங்கில மொழி அறிவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ‘‘ஆங்கில மொழியில் உள்ள நல்ல நூல்களைப் படித்தறியவும், நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் ஆங்கில அறிவு அவசியம்’’ என்றார்.

இலக்கியம், மறைபொருளியல், மருத்துவம், சங்க இலக்கிய ஆய்வு, புதினம், பாடல், நாடகம், கடிதம், கட்டுரை, தத்துவம், வரலாறு, சமூகவியல் எனப் பலவகைகளில் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழுலகுக்கு அளித்துள்ளார். சைவச் சித்தாந்த கொள்கை நெறி குறித்து கேள்வி எழுந்தபோது, ‘‘சைவத் திருமறைகள் 12-ம், மெய்க்கண்ட நூல்கள் 14-ம் அவற்றுக்கு மாறுபடாமல் அவற்றைத் தழுவிச் செல்லும் ஏனைய பிற நூல்களுமே சைவச் சித்தாந்த அடிப்படை முதன்மை நூல்களாக விளங்குகின்றன’’ என்று மறைமலை அடிகளார் தெரிவித்துள்ளார்.

திரு.வி.க. புகழுரை!

‘‘மறைமலை ஒரு பெரும் அறிவுக்கடல். தமிழ் நிலவு, சைவவான் அவற்றை நக்கீரரும் பிற்றைச் சிவஞான முனிவரும் ஓர் உருக்கொண்டு சிற்றை மறைமலையடிகளராகத் தோன்றித் தமிழ் வளர்க்கிறார்’’ என்று திரு.வி.க., மறைமலை அடிகளாரைப் புகழ்ந்துள்ளார்.

‘‘மறைமலையடிகளும், கா.சு.பிள்ளையும் என் வலக்கையும் இடக்கையும் போன்றவர்கள்’’ என்றார் தந்தை பெரியார்.

‘தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ என்று அழைக்கப்பட்ட மறைமலை அடிகள், 1950-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார். மறைமலை அடிகள் தனித்தமிழ் கண்ட நாட்டில்தான், தமிழில் பேசுவதையே கேவலமாக நினைக்கும் காலம் உருவாகிவிட்டது.

‘‘தமிழில் பிறமொழிக் கலப்பை ஒதுக்கித் தள்ளுங்கள். தமிழின் சுவையை மாற்றாதீர்கள்... வல்லோசைகளைப் பெருக்காதீர்கள்’’ என்கிற மறைமலை அடிகளாரின் கூற்றுப்படி தமிழை வளர்ப்போம்.

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.