Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
23.2 கிலோகிராம் எடையுள்ள உலகின் மிகப் பெரிய கோவா
 

23.2 கிலோ­கிராம் (51 இறாத்தல்) எடை­யுள்ள பாரிய கோவா ஒன்று பிரிட்­டனில் அறு­வடை செய்­யப்­பட்­டுள்­ளது. இங்­கி­லாந்தின் தென்­மேற்குப் பிராந்­தி­ய­மான கோர்ன்­வெல்லைச் சேர்ந்த டேவிட் தோமஸ் என்­பவர் இந்த கோவாவை அறு­வடை செய்­துள்ளார்.


19565gabbage.jpg

 

வோர்­செஸ்­ட­ஷயர் பிராந்­தி­யத்தில் கடந்த வாரம் நடை­பெற்ற பிரித்­தா­னிய தேசிய பாரிய மரக்­கறி போட்­டி­களில் இந்த கோவா காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

உலகின் மிகப் பெரிய கோவா எனும் 90 வரு­ட­கால சாத­னையை இந்த கோவா முறி­ய­டித்­துள்­ளது. இதற்குமுன் 1925 ஆம் ஆண்டு அறு­வடை செய்­யப்­பட்ட 19.05 கிலோ எடை­யுள்ள கோவாவே இதுவரை சாதனைக்குரியதாக இருந்தது.

 

.metronews.lk

Edited by நவீனன்

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

14469587_1140687639313262_23370947562244

சீன பகுத்தறிவாளர், தத்துவஞானி கன்பூசியஸ் பிறந்தநாள்
அவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித மற்றும் அரசாங்க நன்னெறி, சமூக ஒழுக்கம், நடுநிலை மற்றும் குறிக்கோள்களைப் பற்றியதாக இருந்தன.

கன்பூசியஸ்க்குப் பன்முகங்களிருக்கின்றன, அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி, சிறந்த நிர்வாகி, போர்வீரன், இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர், சீனமரபினை வளர்த்து எடுத்தவர், அரிய தத்துவ ஞானி, இப்படி அவரது ஆளுமை பன்முகப்பட்டது, வாழ்வியல் அனுபவங்களில் இருந்து உருவான ஞானத்தைக் கொண்டே அவர் தனது அறக்கருத்துகளை உருவாக்கியிருக்கிறார், கன்பூசியஸின் சிந்தனைகளை மாபெரும் கற்றல் என்று கூறுகிறார்கள்,

  • தொடங்கியவர்

லப்டப் சொல்லும் சேதி!

 

 
heart_3025996f.jpg
 

தேர்வு எழுதிய களைப்பில் காலாண்டு விடுமுறையை ஓய்வாகக் கழித்து வருகிறீர்களா? உழைப்புக்கு இடையே அவ்வப்போது ஓய்வு எடுப்பது ரொம்ப அவசியம். அதேநேரம் நமக்காக நமது உடல் உள்ளுறுப்புகள் வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைப்பது உங்களுக்குத் தெரியுமா? ‘லப்டப்..லப்டப்’ என எப்போதும் துடித்துக்கொண்டிருக்கும் நமது இதயம், உடல் உள்ளுறுப்புகள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. இதயம் குறித்த சுவாரசியங்களைப் பார்ப்போமா?

# இதயத்தில் கை வைத்துப் பார்த்தால் ‘லப்டப்..லப்டப்’ எனத் துடிப்பதை உணர்கிறோம் அல்லவா? இதயத்தில் உள்ள 4 அறைகளின் வால்வுகள் திறந்து மூடும் ஒலிதான் அது.

# இதயம் என்பது தசையால் ஆன ஓர் உறுப்பு. நமது உடலில் வேறெந்த தசையைவிடவும் அதிகம் உழைப்பது இதயத் தசைகளே.

# மனிதனின் இதயம் நிமிடத்துக்கு சராசரியாக 72 முறை துடிக்கும். ஒவ்வொரு நாளும் சுமார் 1 லட்சம் முறை துடிக்கும். மனிதனின் வாழ்நாளில் அதிகபட்சமாக 350 கோடி முறை இதயம் துடிக்கிறது.

# இதயம் ஒரு மணி நேரத்தில் 378 லிட்டர் ரத்தத்தை ‘பம்ப்’ செய்கிறது. மணிக்கு 1.6 கி.மீ. வேகத்தில் ரத்தக் குழாய்களுக்கு ரத்தத்தை இதயம் அனுப்புகிறது.

# இதயத் துடிப்பை அறிய டாக்டர்கள் பயன்படுத்தும் ‘ஸ்டெதாஸ்கோப்’ கருவி 1816-ல் உருவாக்கப்பட்டது.

# அம்மா வயிற்றில் 5 வாரக் கருவாக இருக்கும்போது தொடங்கும் இதயத் துடிப்பு, இறக்கும்வரை தொடர்கிறது.

# ஒரு நிமிடத்தில் ஆணைவிடப் பெண்ணின் இதயம் சராசரியாக 8 முறை அதிகம் துடிக்கிறது.

# தான் துடிப்பதற்கான மின்சாரத்தைத் தானே உற்பத்தி செய்துகொள்வதால், உடலில் இருந்து அகற்றப்பட்ட பின்னரும் குறிப்பிட்ட நேரம்வரை இதயம் துடித்துக்கொண்டிருக்கும்.

 

இதயங்களில் எத்தனை அறை?

கடல் வாழ் உயிரியான நீலத் திமிங்கலத்தின் இதயத்தின் எடை சுமார் 680 கிலோ. ரீங்காரச் சிட்டின் இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 1,260 முறை. பறவைகள் மற்றும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் இதயம் நான்கு அறைகளால் ஆனது. விதிவிலக்காகத் தவளை, பல்லி போன்றவற்றின் இதயத்தில் 3 அறைகள் மட்டுமே உள்ளன. கடலின் ஆழத்தில் வாழும் உயிரினங்கள் சிலவற்றுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இதயங்கள் உண்டு. உதாரணமாக, ஆக்டோபஸுக்கு 3 இதயங்கள்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

14484725_1240810112644443_81802426721715

செப் 28: பின்னனி பாடகி 'பாரத ரத்னா' விருது பெற்ற லதா மங்கேஸ்கர் பிறந்த தினம் இன்று

லதா மங்கேஷ்கர்

 

 
05_lata_jpg_198481_3025954f.jpg
 

பிரபல இந்திபின்னணிப் பாடகர்

இந்திய இசைக்குயில் எனப் போற்றப்படுபவரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான லதா மங்கேஷ்கர் (Lata Mangeshkar) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் பிறந்தார் (1929). தந்தை, இந்துஸ்தானி சங்கீத மேதை; நாடக நடிகர். லதாவின் பள்ளிக்கல்வி பாதியிலேயே நின்றது.

*தந்தையின் மேடை நாடகங்களில் நடித்தார். இனிய குரலில் பாடி அனைவரையும் அசத்தினார். அமனந்தன்கான் சாகேப்பிடம் லதா, முறையாக சங்கீதம் கற்றார்.

*பதிமூன்றாவது வயதில் தந்தை இறந்து விட்டார். வருமானம் ஈட்டுவதற்காக திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நடிப்பதோடு பாடவும் செய்தார்.

*1942-ல் ‘கிதி ஹசால்’ என்ற மராத்திப் பாடலை முதன்முதலாகப் பாடினார். 1948-ல் இவர் பாடிய ‘மஜ்பூர்’ திரைப்படம்தான் இவருக்குத் தொடர்ந்து ‘பர்சாத்’, ‘அந்தாஸ்’, ‘துலாரி’, ‘மகால்’ உள்ளிட்ட படங்களில் பாட வாய்ப்புகளைத் தந்தது. ‘ஆயகா ஆயகா ஆனேவாலா’ பாடல் இவருக்குப் பின்னணி உலகின் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது.

*எந்த மொழியில் பாடினாலும் அம்மொழி உச்சரிப்பில் மிகவும் கவனமாக இருப்பார். அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷண், நவ்ஷாத், எஸ்.டி.பர்மன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என ஏறக்குறைய அனைத்து முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியுள்ளார்.

*‘மெலடி குயின்’ எனப் போற்றப்பட்டார். திரைப்பட உலகில் நீண்டகாலம் முடிசூடா ராணியாக வலம் வந்தார். மராத்தி, குஜராத்தி, வங்காளி, பஞ்சாபி, அசாமி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார்.

* உலகளவில் அதிகமான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். ‘ஆஜா ரே பரதேசி’, ‘கஹி தீப் ஜலே கஹி தீல்’, ‘ப்யார் கியா தோ’, ‘தியா ஜலே, குச் நா கஹோ’ உள்ளிட்ட ஏராளமான காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியுள்ளார். 1989-ல் தாதாசாகேப் பால்கே விருது, சிறந்த பாடகிக்கான தேசிய விருதுகள், பலமுறை ஃபிலிம் ஃபேர் விருதுகள், வாழ்நாள் சாதனையாளருக்கான விருதுகள், ராஜீவ் காந்தி விருது, பத்ம விபூஷண், சிறந்த பாடகிக்கான மில்லேனியம் விருது, நூர்ஜஹான் விருது, மகாராஷ்டிரா ரத்னா விருதுகளைப் பெற்றார்.

*2001-ல் ‘பாரத் ரத்னா’ விருது வழங்கப்பட்டது. மீரா பஜன்கள், பகவத் கீதை ஸ்லோகங்கள், கபீரின் தோஹாக்கள், சூர்தாசின் கவிதைகள், சூஃபி பாடல்களையும், ‘வந்தே மாதரம்’, ‘சாரே ஜாஹான் சே அச்சா’, ‘யே மேரே வதன் கே லோகோ’ உள்ளிட்ட ஏராளமான தேசபக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். சிவாஜி கணேசனை இவர் தனது ‘ராக்கி சகோதரர்’ என்று குறிப்பிடுவார்.

*980-க்கும் அதிகமான இந்தித் திரைப்படங்களில் பாடி சாதனை படைத்துள்ளார். சமூக அக்கறை கொண்ட இவர், ‘லதா ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பை நிறுவி, பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். ‘இந்தியாவின் இசைக்குயில்’ என்று போற்றப்படுபவர்.

*அமெரிக்கப் பல்கலைக்கழகம் உட்பட ஆறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன. 1999-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று 87 வயதை நிறைவு செய்தாலும், குரலுக்கு வயதாகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இப்போதும் தேன்மதுர இசையைப் பொழிந்து கொண்டிருக்கிறார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

 

 
போர்க்களத்தில் ஒரு பூனைக்காவலன்
---------------------------------------------------------

உள்நாட்டுப்போரில் மோசமாக பாதிக்கப்பட்ட சிரியாவின் அலெப்போ நகரில் நூற்றுக்கணக்கான பூனைகளை பராமரிக்கிறார் மொஹம்மட் அலா ஜலீல்.

போரில் கொல்லப்பட்டவர்கள் அல்லது வெளிநாட்டுக்கு அகதிகளாக சென்றவர்களின் பூனைகள் மட்டுமல்லாமல், தெருவில் திரிந்த நூற்றுக்கணக்கன பூனைகள் இவரிடம் அடைக்கலமாகியுள்ளன.

BBC

  • தொடங்கியவர்

14480581_1140695145979178_60677204924284

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் கிளார்க்கின் பிறந்தநாள்
Happy Birthday Stuart Clark

 
  • தொடங்கியவர்

பகத்சிங் : வளரும் தலைமுறைக்கு அடையாளம் காட்டுவோம்!

 

basing.jpg

பகத்சிங்…..இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர். நமக்கெல்லாம் தெரிந்த நம் நாட்டோட நிஜமான ஆக்ஷன் கிங். மாபெரும் புரட்சியாளர். அவரது புரட்சிக்காகவே இவர் ஷாஹீத் பகத்சிங் என்று அழைக்கப்பட்டார். இந்தியாவின் முதல் மார்க்கிஸ்ட் பகத்சிங்கிற்கு இன்று பிறந்த நாள்.

பகத்சிங் என்ற புரட்சியாளன்:

பகத்சிங் ஒரு விடுதலை போராட்டத்தில் பங்குக்கொண்ட குடும்பத்தில் தான் பிறந்தார். அதன் தாக்கமோ என்னவோ தனது இளம் வயதிலேயே புரட்சிகள் பல செய்து, பொதுவுடைமை பிரியர் ஆகிவிட்டார். சிறைவாசம் பகத்சிங்கின் வாழ்க்கையில் ரொம்பவே சாதாரணமான விஷயம் தான். உண்ணாநோன்பு இருந்ததில் தொடங்கி அவர் நிகழ்த்திய அனைத்து போராட்டங்களும் பல இளைஞர்களை அவர் பக்கம் ஈர்த்தது. பாரம்பர்யமான சீக்கிய குடும்பத்தை சேர்ந்த இவரின் குடும்பத்தினர் சிலர் அன்றைய ரஞ்சித் சிங் மன்னரின் இராணுவத்தில் பணியாற்றியவர்கள். தனது 12 வயதில் கண்முன் கண்ட  ஜாலியன்வா பாக் படுகொலைக்குப் பிறகு ஆயுதமற்ற மக்கள் கொல்லப்படுவதை எதிர்க்க,  போராட்டங்களை வரவேற்கத்  தொடங்கினார். அந்த இளைஞர் புரட்சி இயக்கம் அகிம்சைக்கு முற்றிலும் எதிராக செயல்பட்டது. பகத்சிங்கின் இந்த நடவடிக்கை பல வன்முறைகளில் ஆங்கிலேயர்களால் கைதி என கைகாட்ட ஏதுவாக அமைந்தது.

வெடிகுண்டின் தத்துவம்’ தெரியுமா?

 பகத்சிங் ஒரு துணிச்சல் மிக்க இளைஞர் என்ற அடிப்படியில் நிறுத்தி விட முடியாது. அவரது தெளிந்த சிந்தனைகளைப் வேறு எவரிடமும் பார்க்க முடியாது. காந்தி ‘வெடிகுண்டின் பாதை’ என்ற புத்தகம் எழுதினார். பகத்சிங் என்ன செய்தார் தெரியுமா? ‘வெடிகுண்டின் தத்துவம்’ என்ற புத்தகத்தை எழுதினார்.

துப்பாக்கி மேல் காதல்:

பகத்சிங் என்ற பெயரை கேட்டவுடன் வன்முறைகளை கையால்பவர் என்று தான் பலருக்கும் தோன்றும். பகத்சிங் அமைதியைக் காட்டிலும் போராட்டத்தில் அதிக நம்பிக்கைக் கொண்டிருந்தவர் என்பது தான் நிதர்சனம். வீட்டிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து தோட்டத்தில் முக்கால்வாசி புதைத்து சுற்றி நீர் ஊற்றி அந்த துப்பாகிகள் மரமாகி கிளைகளில் நிறைய துப்பாகிகளாக காய்க்கும், அவற்றைக் கொண்டு ஆங்கிலேயர்களை விரட்டுவேன் என்று தந்தையிடம் கூறியவர். நேரு ஒருமுறை பகத்சிங் பற்றி கூறும்போது, “பகத்சிங் அவரது வன்முறை எனப்படும் பயங்கரவாதத்தால் பிரபலம் அடையவில்லை.” என்றார்.

வளரும் தலைமுறைக்கு அடையாளம் காட்டுவோம்:

தூக்குமேடைக்கு ஏற்றப்பட்ட பகத்சிங் தனது கடைசி ஆசையாக கேட்டது என்ன தெரியுமா? துப்பாக்கியால் சுடப்பட்டு தனது மரணம் நிகழ வேண்டுமென்றார். பிரிட்டிஷ் அரசு அக்கோரிக்கையை ஏற்கவில்லை. அதைக் கேட்ட பகத்சிங் தூக்கிலிடப்படும்போது என் இந்தியாவை பார்த்துக் கொண்டே  நான் சாகவேண்டும். அதனால் முகம் மூடாமல் எனக்கூறி தூக்குமேடையில் உயிர் நீத்த வீரர் இவர். அன்று பகத்சிங்கின் உடல் மட்டுமே அழிந்தது. விதையாக மண்ணில் புதைந்து ஆயிரமாயிரம் வீரர்களை உருவாக்கியுள்ளார்.

நம் முந்தைய தலைமுறையில் வாழ்ந்த இந்த வீரனின் வீரத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்ல இன்று ஏனோ நாம் தவறிவிட்டோம். வளரும் தலைமுறைக்கு இன்றைய சினிமாக்களையும், கார்ட்டூன்ஸ் மட்டுமில்லாமல் நாம் இன்று சுதந்திரமான நாடாக இருப்பதற்காக அரும்பாடுபட்ட இந்த வீரர்களையும் சொல்லிக் கொடுப்போமாக!!!!

vikatan

  • தொடங்கியவர்
பயணிகள் விமானத்தின் தலைமை விமானியாக பணியாற்றும் 26 வயதான யுவதி
 

பிரிட்டனைச் சேர்ந்த கேட் மெக்வில்லியம்ஸ் எனும் 26 வயதான யுவதி, பயணிகள் விமானத்தில் தலைமை விமானியாகப் பணியாற்றுகிறார்.  

 

19568kate-mcwilliams2.jpg

கேட் மெக்வில்லியம்ஸ்


 

பிரிட்டனின் ஈஷி ஜெட் விமான சேவை நிறுவனத்தில் கேட் மெக் வில்லியம்ஸ் பணியாற்றுகிறார். வர்த்தக பயணிகள் விமான மொன்றின் தலைமை விமானி யாகப் பணியாற்றும் உலகின் மிக இளமையான நபர் இவர் எனக் கருதப்படு வதாக ஈஷி ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு மற்றும் ரோயல் விமானப் படையின் அனு சரணையுடன் நடத்தப்படும் இளையோருக்கான எயார் கடெற் சேவையில் 13 வயதில் இணைந்து விமானங்களில் பறக்க ஆரம்பித்த கேட் மெக்வில்லியம்ஸ், தனது 19 ஆவது பிறந்த தினத்தில், இங்கிலாந்தின் சி.ரி.சி. ஏவியேஷன் (CTC Aviation) எனும் விமானி பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிக்காக இணைந்தார்.


19568kate-mcwilliams225.jpg2011 ஆம் ஆண்டு ஈஷி ஜெட் நிறுவனத்தில் துணை விமானியாக (பெர்ஸ்ட் ஒபிஷர்) அவர் பணியாற்ற ஆரம்பித்திருந்தார்.

 

தற்போது அவர் தலைமை விமானியாக (கெப்டன்) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

 

ஈஷி ஜெட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு களின்படி, வர்த்தக விமான சேவை யொன்றில் தலைமை விமானியாகப் பணியாற்றும் மிக இளமையான நபர் கேட் மெக்வில்லியம் எனக் கருதப் படுவதாக அந் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித் துள்ளார்.

 

இது தொடர்பாக கேட் மெக்வில்லியம்ஸ் கூறுகையில், 'தனிப்பட்ட ரீதியில் வயது விடயங்கள் பற்றி நான் யோசிப்பதில்லை. ஏனைய அனைத்து தலைமை விமானிகளைப் போலவே சகல வகையான பயிற்சிகளிலும் ஈடுபட்டு சித்தி களையும் பெற்றேன்.

 

எனவே எனது வயது எப்படியிருப்பினும் என்னை நான் நிரூபித்துள் ளேன். தலைமை விமானியாக வேண்டுமென்ற எனது இலட்சியம் நிறைவேறியுள்ளது. இப்போது எனக்கு எத்தனை வயது என்ற கேள்வியை ஏறத்தாழ தினமும் நான் எதிர்கொள்கிறேன்.

 

நான் துணை விமானியாக இருந்தபோது இவ்வாறான நிலை இருக்க வில்லை. பெரும்பாலும் விமான ஊழியர்கள்தான் இக் கேள்வியை கேட்பார்கள். சில வேளைகளில் பயணிகளும் இக் கேள்வியை கேட்கிறார்கள்.

 

19568kate-mcwilliams--luje.jpg

கேட் மெக்வில்லியம்ஸ் - லூகே எல்ஸ்வேர்த்


 

நான் 26 வயதானவள் என பதிலளிக்கும்போது பெரும்பாலானவர்கள் வியப் படைவதுடன் இவ்வளவு இளம் வயதில் இந்த நிலையை அடைந்ததை பாராட்டுகின்றனர்' எனத் தெரிவித்துள்ளார்.

 

எயார் பஸ் ஏ319 மற்றும் ஏ320 ரக விமானங்களை பல நாடுகளிலுள்ள நூற்றுக்கும் அதிகமான நகரங்களுக்கு செலுத்திச் செல்கிறார் கேட் மெக்வில்லியம்சன். உலகிலுள்ள சுமார் 130,000 எயார்லைன் விமானி களில் 450 பேர் மாத்திரமே பெண்கள் என பெண் விமானிகள் அமைப் பொன்று தெரிவித்துள்ளது.

 

19568kate-mcwilliams.jpg

 

ஈஷி ஜெட் நிறுவனத்தில் துணை விமானியாக பணியாற்றும் 19 வயதான லூகே எல்ஸ்வேர்த் பிரிட்டனின் மிக இளமையான வர்த்தக விமான துணை விமானியாக விளங்குகிறார்.

 

இவரும் தலைமை விமானி கேட் மெக்வில்லியம்ஸும் ஒரே விமானத்திலும் இணைந்து பணியாற்றுவதும் உண்டு. அண்மையில் லண்டனிலிருந்து மோல்ட்டா நாட்டுக்கு இவர்கள் விமானமொன்றை செலுத்திச் சென்றனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14495334_1140694452645914_74401237392591

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், நிர்வாகியுமான மஜீத் கானின் பிறந்தநாள்

 
  • தொடங்கியவர்

14525056_1140694075979285_22817365387135

கலக்கல் ஹிந்தி கதாநாயகன், தற்போதைய கன்னியர் மனம் வென்ற கட்டிளம் ஹீரோ ரன்பீர் கபூரின் பிறந்த நாள்
Happy Birthday Ranbir Kapoor

  • தொடங்கியவர்

ட்ராலிலோ ஜிம்கானா!

 

p88.jpg

`பெட்ரோல் விலை உயருது'னு நம் ஆட்கள் குய்யோமுறையோவெனக் கத்திக்கொண்டிருக்க லண்டனில், சூப்பர் மார்க்கெட்களில் வைத்திருக்கும் ஷாப்பிங் ட்ராலிகளில் ஜெட் இன்ஜினை இணைத்து நவீன பைக் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் 55 வயது கொண்ட மாட் மெக்கியான் என்பவர். தனது வீட்டுக்கு அருகில் சாலையோரம் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த பழைய ஷாப்பிங் ட்ராலியைச் சரிசெய்து அதில் ஒரு குட்டி ஜெட் விமானத்தின் இன்ஜினைப் பொருத்தினார்.

p88a.jpg

அந்த நகரத்தில் எங்கு செல்வதானாலும் தற்போது தானே தயாரித்த ஜெட் ட்ராலியில் சர்சர்ரெனப் பறந்து மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறாராம். காரணம், ஜெட் விமான இன்ஜினைப் பயன்படுத்தியிருப்பதால் அவர் வண்டியைக் கிளப்பியதுமே சத்தம் ஊரைக் கூட்டுகிறதாம். `பயன்படாமல் கிடந்த பொருளை இப்படி அழகாகவும் வித்தியாசமாகவும் மாற்றி எல்லோரையும் வியக்கவைப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது' என மகிழ்ச்சியாகக் கூறுகிறார் மாட் மெக்கியான்.

சும்மா பறக்கும்ல!

vikatan

  • தொடங்கியவர்

14449849_1240809572644497_22970066339344

செப்: 28 'டனால்' தங்கவேலு நினைவு தினம் இன்று

  • தொடங்கியவர்

மெரிக்க சூப்பர்மாடலான ஹிகி ஹாடிட், தன் ஒருநாள் மெனு என்ன என அறிவித்ததுதான் இந்த வார பரபர. `மாடலாச்சே, கடுமையான டயட்டா இருப்பாங்க' என ரசிகர்கள் நினைத்ததற்கு நேர்மாறாய், `பேகான், டோஸ்ட், முட்டைப் பொடிமாஸ், காபி, ஐஸ்க்ரீம், பர்கர், கேக், சுஷீ, கொஞ்சம் ஆல்கஹால் இதெல்லாம்தான் என் டெய்லி மெனு' என கூலாய் சொல்லியிருக்கிறார் அம்மணி. `திங்கிறதுக்கும் ஆளுக்கும் சம்பந்தமே இல்லையே' என மண்டை காய்கிறார்கள் ரசிகர்கள். வஞ்சனையில்லாத மனசு!

p106a.jpg

`அமெரிக்கன் பை' சீரிஸில் ரசிகர்களைக் கிறங்கடித்த டாரா ரெய்ட், சமீபத்தில் தன் படத்தை சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்தார். முகம் முழுக்க ரத்தக்காயங்களோடு இருந்த அந்தப் படத்தைப் பார்த்த அனைவரும் பதறிப்போனார்கள். `வன்முறையின் முகம் இப்படித்தான் இருக்கும். எல்லோரும் எல்லோர் மீதும் அன்பு செலுத்துவோம்' எனப் பின்னர் அவர் மெசேஜ் சொல்ல, சாந்தியடைந்தது பொதுஜனம். டைமிங் மெசேஜ்ல!

p106aa.jpg

பெல்லா ஹாடிட் -ஃபேஷன் உலகையே கவர்ந்திழுக்கும் 19 வயது பியூட்டி. சமீபத்தில் நியூயார்க் ஃபேஷன் ஷோவில் ரேம்ப் வாக் போகும்போது தடுமாறிக் கீழே விழுந்ததில் முகத்தில் காயம்பட்டது. ஆனாலும் அசராமல் மீண்டும் எழுந்து நடந்ததோடு இல்லாமல், `எப்படி பிரேக் டான்ஸ் ஆடினேன் பார்த்தீங்களா?' என தன்னைத்தானே கலாய்த்து ட்வீட்டும் செய்தார். `சங்கடத்தைக்கூட எப்படி சப்பையா டீல் பண்ண முடியுது இந்தத் தங்கத்தால?, என மாய்ந்து மாய்ந்து `ஆர் யூ ஓகே பேபி?' என விசாரிக்கிறார்கள் ரசிகர்கள். அது டான்ஸ் இல்லையா?

 

p106.jpg

50 வயது ஆனாலும் ஹாலே பெர்ரிக்கு இன்னும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். `நான் முதன்முதலில் நடிக்க ஆசைப்பட்டபோது அதெல்லாம் உனக்கு சரிப்படாது. மாடலிங் மட்டும் பண்ணு' எனச் சொல்லியவர்கள்தான் அதிகம். அந்த எண்ணத்தை உடைக்கவே வெரைட்டி வெரைட்டியான ரோல்களில் நடித்தேன். ரசிகர்கள் என்னைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டார்கள்' என்று நெகிழ்ச்சி ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் இந்த பாண்ட் பியூட்டி. வயசானாலும்...

vikatan

  • தொடங்கியவர்
எதிர்வினையைக் காலம் காட்டிவிடும்
 

article_1475043445-uiriti.jpgதனி ஒரு மனிதனைச் சமூகம் ஒதுக்கி வைப்பதென்பது, ஒரு பொல்லாத தண்டனைதான். சாதியின் பெயரால் அல்லது பணவசதியில்லை என்ற காரணத்தால், அவர்களை உதாசீனம் செய்வது, தெய்வத்துக்கே அடுக்காது.  

ஆனால், பயங்கரமான கொடுமைக்கார மகா பாவியை ஒரு சமூகம் ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி வைப்பது நியாயமான செயல். ஆனால், இத்தகைய மனிதர்களைச் சட்டம் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதே மிகவும் பாரதூரமான செயலாகும்.  

இன்று கண் எதிரே கொலை, கொள்ளை என்ற கொடும்பாவங்களைச் செய்பவர்களை, கதாநாயர்களாக ஏற்கும் மனோபாவம், மக்களில் பலருக்கும் வந்துவிட்டது போல் காரியங்கள் நடக்கின்றன. இதன் எதிர்வினையைக் காலம் காட்டிவிடும்.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உங்கள் காலையை இந்தப் பாடல்களோடு இனிமையாக்கலாமே! #MorningMotivation

நம்மில் பெரும்பாலானோருக்கு காலை எழுந்ததும் இதமான தேநீருடன் நல்ல பாடல்கள் கேட்கும் பழக்கம் இருக்கும். அப்படி பாடல்களுடன் அன்றைய நாளை துவங்குவது நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். உங்களை நீங்களே மோட்டிவேட் செய்து கொள்ள உதவும் சின்ன டிராக் லிஸ்ட் இங்கே.., 

1) புத்தம் புது காலை - அலைகள் ஓய்வதில்லை 

 

 

 

 

2) எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே  -அழகிய தமிழ்மகன் 

 

 

 

 

3) பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது - உயிரோடு உயிராக

 

 

 

4) உன்னால் முடியும் தம்பி தம்பி - உன்னால் முடியும் தம்பி

 

 

 

 

5) வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் - அண்ணாமலை 

 

 

 

vikatan

  • தொடங்கியவர்

14523210_1141509435897749_60129615185133

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் இளைய அசத்தல் நட்சத்திரம் மொமினுல் ஹக்கின் பிறந்தநாள்
Happy Birthday Mominul Haque

 
  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 29
 

article_1475129476-lionairnew.jpgகி.மு 480: தெமிஸ்டோகில்ஸ் தலைமையிலான கிரேக்கக் கடற்படை, பேர்சியப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது.

1227: புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக், சிலுவைப் போரில் பங்குபற்றாமல் போனதை அடுத்து திருத்தந்தை ஒன்பதாம் கிரகரி அவனை மதவிலக்கம் செய்தார்.

1567: பிரான்சில். இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது.

1833: மூன்று வயதுள்ள இரண்டாம் இசபெல்லா ஸ்பெயின் அரசியாக முடிசூடினாள்.

1848: ஹங்கேரியப் படையினர், குரொவேசியர்களை பாகொஸ்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற ஹங்கேரிப் புரட்சிப் போரில் தோற்கடித்தனர்.

1850: இங்கிலாந்திலும் வேல்சிலும் ரோமன் கத்தோலிக்க உயர்சபையை, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் மீண்டும் அமைத்தார்.

1885: உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி, இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது.

1911: இத்தாலி, ஒட்டோமான் பேராட்சிக்கெதிராகப் போர் தொடுத்தது.

1916: ஜோன் ரொக்பெல்லர், உலகின் முதலாவது கோடீசுவரர் ஆனார்.

1918: முதலாம் உலகப் போர் - பல்கேரியா, கூட்டுப் படைகளுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.

1938: செக்கோசிலவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை ஜேர்மனிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகியன கைச்சாத்திட்டன.

1941: உக்ரேனின் கீவ் நகரில் குறைந்தது 33,771 யூதர்கள், நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர்.

1962: கானடாவின் முதலாவது செய்மதி அலூட் 1 ஏவப்பட்டது.

1969: இலங்கையில் இலவசக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்திய சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர, உயிரிழந்தார்.

1971: அரபுக் கூட்டமைப்பில், ஓமான் இணைந்து கொண்டது.

1972: ஜப்பான் மக்கள் சீனக் குடியரசுடனான தூதரக உறவை மீள அமைத்து, சீனக் குடியரசுடனான உறவை முறித்துக் கொண்டது.

1991: எயிட்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1993: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.

1998: இலங்கை, பலாலி விமான நிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் காணாமல் போனது.

2003: சூறாவளி ஜுவான் கனடாவின் ஹாலிபாக்ஸ் துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக இதய நாள்

செப்டம்பர் 29, 2016 உங்கள் வாழ்வுக்குச் சக்தி கொடுங்கள்!

p8a.jpg

நமது உடலை இயக்கச் சக்தி தரும் இதயத்துக்கு சக்தி தருவதன் மூலம் நம் வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதை உணர்த்தும் வகையில் ‘உங்கள் வாழ்வுக்குச் சக்தி கொடுங்கள்’ (Power your life) என்பதை, இந்த ஆண்டுக்கான உலக இதய நாளின்  மைய நோக்கமாக வைத்திருக்கிறார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் இதய நோய்களாலும், வாதம் உள்ளிட்ட நரம்புப் பிரச்னைகளாலும் மட்டுமே 17.3 மில்லியன் பேர் மரணத்தைத் தழுவுகிறார்கள். புகையிலை, முறையற்ற உணவுப்பழக்கம், உடல் உழைப்புஇன்மை, மதுப்பழக்கம் ஆகியவை இந்தப் பிரச்னைகளுக்கு மிக முக்கியமான காரணம். எனவே, ஆரோக்கியமான உணவை உண்பது, புகைபிடிப்பதை, மதுவைத் தவிர்ப்பது என்பன போன்ற எளிய நடவடிக்கைகள் மூலம் இதயத்தைக் காப்பாற்ற முடியும். நம் இதயம் எனும் இயற்கையான பேட்டரிக்கு இந்த அழகான எண்ணங்களைச் செயலாக்குவதன் மூலம் சார்ஜ் ஏற்றுவோம். இதயம் காப்போம்... உயிர் காப்போம்!

இதயநோய்கள் TOP 10 தவறுகள்!

 

p4a.jpg

ங்கள் இதயத்தின் ஆரோக்கியம் பற்றி எந்த அளவுக்குத் தெரியும்? இன்றைக்கு நவீன தொழில்நுட்பம் பெருகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், ஏந்த ஒரு பொய்யையும் கூட மிக எளிதாக நம்ப வைக்க முடியும். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களில் பல்வேறு தவறான தகவல் பரவிக்கொண்டு இருக்கிறது. அப்படித்தான் இதயம் பற்றியும் பல தவறான கருத்துக்கள் பரவிக்கொண்டே இருக்கிறது. வயதானவர்களுக்கு, அதிக கொழுப்புள்ள உணவு மற்றும் ஜங்க் ஃபுட் சாப்பிடுபவர்களுக்குத்தான் இதய நோய்கள் வரும் என்று பல்வேறு விஷயங்கள் இணையத்தில் உலாவிக்கொண்டே இருக்கிறது. இந்த சூழலில், எது உண்மை, எது பொய் என்று தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகிறது. இதயநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்... அது மிகவும் ஆரோக்கியமான உணவை உட்கொள்பவராக இருந்தாலும் சரி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இப்படி ஏராளமான தவறான நம்பிக்கைகள் இதய நோய்கள் தொடர்பாக இருக்கின்றன. இவற்றில் எவை எல்லாம் உண்மை என, வாங்க பார்க்கலாம்!

1. இளம் வயதுதான் ஆகிறது. இதயநோய் பற்றி இப்போது கவலைப்படத் தேவையில்லை.

உண்மை: இப்போது எப்படி வாழ்கின்றோமோ, அதுதான் எதிர்காலத்தில் இதயநோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும். குழந்தைப் பருவத்தில் இருந்தே அல்லது இளமைப் பருவத்தில் இருந்தே ரத்தக் குழாயில் கொழுப்பு படிய ஆரம்பித்துவிடுகிறது. எதிர்காலத்தில் இந்த படிதல் அளவு அதிகரிக்கும்போது ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும். மாரடைப்பு என்று மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்ல... இளம் மற்றும் நடுத்தர வயதினர் கூட இதய நோய் பாதிப்பு காரணமாக வருகின்றனர். உடல்பருமன், டைப் 2 சர்க்கரை நோய் போன்ற காரணிகள் இளம் வயதினர் மத்தியில் இதய நோய் வருவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது.

2 மாரடைப்பு வந்தால் நெஞ்சில் ஏற்படும் வலியைக் கொண்டே கண்டறிந்துவிடலாம்.

உண்மை: வலி வரும் என்று இல்லை. பொதுவாக மாரடைப்பு வருகிறது என்றால், நெஞ்சு வலி அல்லது அசௌகரியம் போன்ற சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதாவது, சுவாசித்தலில் சிரமம், வாந்தி, தலைபாரம் மற்றும் வலி, ஒரு கை அல்லது இரண்டு கைகளிலும் அசௌகரியம், கழுத்து, தாடை, முதுகு வலி போன்றவை ஏற்படலாம். சர்க்கரை நோய் இருந்தால் இந்த அறிகுறிகள் தென்படாமல்கூட போகலாம். (முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு சர்க்கரை நோய் காரணமாக மாரடைப்பு அறிகுறிகள் வெளிப்படவில்லை.) ஆனால், இவர்களுக்குத்தான் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாக இருக்கிறது. எனவே, லேசாக இந்த அறிகுறிகள் தென்பட்டாலே அருகில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு விரைவது அல்லது 108ஐ அழைத்து தெரிவிப்பது நல்லது.

3. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் மருந்தை எடுப்பதால், எதை வேண்டுமானலும் சாப்பிடலாம்.

உண்மை: நம் உடலில் கொலஸ்ட்ரால் இரண்டு வழிகளில் உருகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்தும் கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. அதைத் தவிர, நம் உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலில் ஒரு பகுதியை நம் கல்லீரலால் தயாரிக்கப்படுகிறது.  ஸ்டாடின்ஸ் (Statins) எனப்படும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள், கல்லீரலில் உற்பத்தியாகும் கொலஸ்ட்ராலை மட்டுமே கட்டுப்படுத்தும். கொழுப்பைக் குறைக்கும் மருந்தை எடுத்துக்கொண்டு உணவின் மூலமாகவும் கொலஸ்ட்ராலைச் சேர்த்துக்கொண்டே போவதால் எந்த பயனும் இல்லை. எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி கொலஸ்ட்ரால் குறைவான உணவுப்பொருட்களை உண்பதே நல்லது.

p6a.jpg

4. வயதாவதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது இயல்புதான். இதனால் பிரச்னை இல்லை.

உண்மை: நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ரப்பர் டியூப்புடன் ஒப்பிடலாம். நாளாக நாளாக அந்த டியூப் எப்படி தன் உறுதித்தன்மையையையும் நெகிழ்வுத்தன்மையையும் இழக்கிறதோ அதுபோலத்தான் நம் ரத்த நாளங்களும் உள்ளன. வயதாவதால் ரத்த நாளங்கள் தளர்வடைகின்றன. அதனால், ரத்தத்தை வேகமாகப் பாய்ச்சுவதற்காக இதயம் கடினமாக உழைக்கிறது. ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிப்பதால், நாளங்கள் மேலும் பலவீனமடைகின்றன. இதனால் இதயம் மேலும் மேலும் கடினமாக உழைப்பதால், ஒருகட்டத்தில் இதயத் தசைகளும் தளர்வுறுகின்றன. ரத்த நாளங்களில் கொழுப்புப் படிவதால், இதயப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, வயதானவர்கள் ரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரத்த அழுத்தம் 140/90-க்கு மேல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, தேவையான சிகிச்சை பெற வேண்டும்.

5. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்தாலேபோதும், இதய நோய் வராது.

உண்மை: சர்க்கரை நோய்க்கான சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது, சிறிய ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், நுண் ரத்த நாளப் பிரச்னைகளான (Micorvascular complications) சிறுநீரகப் பாதிப்புகள், பார்வை இழப்பு, நரம்புப் பிரச்னைகள் போன்றவை ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் மிகவும் அவசியம். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், ரத்த அழுத்தம், புகைப்பழக்கம் போன்ற இதர காரணங்களாலும், ரத்த நாளங்கள் வீக்கமுறுவதாலும் (Inflamation) மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம். எனவே, டயாபடீஸை கட்டுக்குள் வைப்பதுடன், கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்டவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியம்.

6. வைட்டமின்கள் அதிகம் எடுத்துக்கொள்வதால் இதய நோய்கள் வராது.

உண்மை: ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த வைட்டமின்களான இ, சி மற்றும் பீட்டாகரோட்டின் போன்றவை இதய நோய்களுக்கான வாய்ப்பைக் குறைக்கும். ஆனால், வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் கார்டியோவாஸ்குலர் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் மருத்துவரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, உணவின் மூலமாக வைட்டமின்கள் எடுத்துக்கொள்வதே சிறந்த வழி. இதற்கான காரணங்களை முழுமையாக அறியமுடியவில்லை என்றாலும், இதயத்தைப் பலப்படுத்தும் வைட்டமின்களான இ, சி மற்றும் பீட்டாகரோட்டின் நிறைந்த கேரட், பீட்ரூட் போன்றவற்றைத் தொடர்ந்து உணவில் சேர்த்துகொள்வது நல்லது. வானவில் நிறங்களில் உள்ள ஏழு வகை காய்கறிகள், பழங்களைத் தொடர்ந்து உணவில் சேர்ப்பதால் இயற்கையான முறையில் அனைத்து வைட்டமின்களும் தாதுஉப்புக்களும் கிடைத்துவிடும்.

7. பல ஆண்டுளாக உள்ள சிகரெட் பழக்கத்தை திடீரென்று நிறுத்துவதால் இதயநோய்க்கான வாய்ப்பைத் தவிர்க்க முடியாது.

உண்மை: புகைபிடிப்பதை நிறுத்திய விநாடியில் இருந்தே அதன் பலன்கள் உடலுக்குக் கிடைக்கத் தொடங்குகின்றன. எத்தனை வருடங்கள், எத்தனை நாட்கள் புகைபிடித்தீர்கள் என்பது முக்கியம் இல்லை. ஒரு வருடம் புகைபிடிக்காமல் இருப்பதால், இதய நோய்களுக்கான வாய்ப்பு 50 சதவிகிதம் குறைகிறது என்கிறார்கள். இதுவே, 10 ஆண்டுகளாகப் புகைபிடிக்காமல் இருப்பவர்களுக்கு புகைப்பழக்கம் இல்லாதவர்களின் இதயம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்குமோ அவ்வளவு ஆரோக்கியத்துடன் இருக்கும். எனவே, இப்போதே இந்தக் கணமே புகைபிடிப்பதை நிறுத்துவது நல்லது.

p7a.jpg

8. இதய நோய்கள் ஆண்களுக்குத்தான் வரும்; பெண்களுக்கு ஏற்படாது.

உண்மை: 1984 வரை உலகில் பெண்களே இதய நோய்களால் அதிகமாக இறந்துகொண்டிருந்தார்கள் என்றால், நம்பமுடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு ஆண்களைவிட அதிகம். 55 வயதுக்கு மேல், 70 சதவிகித ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதய ரத்தநாள பிரச்னைகள், இதய செயல் இழப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. 80 வயதில் 83 சதவிகித ஆண்களுக்கும் 87 சதவிகிதப் பெண்களுக்கும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மெனோபாஸ் வரையிலான காலக்கட்டத்தில் ஹார்மோன் மாற்றங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. மெனோபாஸஸுக்குப் பிறகு, அந்த பாதுகாப்பு அவர்களைவிட்டு போய்விடுகிறது. எனவே, நீங்கள் ஆணோ பெண்ணோ, 50 வயதைக் கடந்தவர் என்றால், குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தப் பரிசோதனையும், இதயப் பரிசோதனையும், கொலஸ்ட்ரால் பரிசோதனையும் செய்துவருவது நல்லது.

9. இதய நோய் இருந்தால் கொழுப்பையே சாப்பிடக் கூடாது.

உண்மை: இதய நோய் இருப்பவர்கள் நிறைவுற்ற கொழுப்பையும், ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட கொழுப்பையும், டிரான்ஸ் ஃபேட்டையும் குறைவாகச் சாப்பிட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், நிறைவுறா கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களும் எண்ணெய்களும் போதுமான அளவு சாப்பிடலாம். ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த எண்ணெய் மீன்கள், ஃபிளாக்ஸ் விதை போன்றவற்றை வாரம் இருமுறை எடுத்துக்கொள்ளலாம். குறைந்த கொழுப்பு உள்ள பால் பொருட்கள், மீன்கள், நட்ஸ், ஆலிவ் ஆயில் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.

10. சிறிய மாரடைப்பு என்பது பெரிய ஆபத்து அல்ல.

உண்மை: அப்படி உறுதியாகச் சொல்லிவிட முடியாது. உங்கள் இதயம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதே முக்கியம். முதல் அட்டாக் வரும்போது சிலருக்கு மாரடைப்பு வந்ததைக்கூட உணர முடியாது. ஆனால், ஒருமுறை அட்டாக் ஏற்படுவது என்பது, உங்களுக்கான எச்சரிக்கை மணி! அடுத்த அட்டாக் உயிரைப் பறிக்கும் எமனாக மாறவும் வாய்ப்பு உள்ளது. எனவே, சரியான எடையைப் பராமரிப்பது, அளவான கொழுப்பைப் பராமரிப்பது, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது, புகைபிடிப்பதைத் தவிர்ப்பது என இதய நோய்களைத் தவிர்ப்பதற்கான ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். மைல்டு அட்டாக்தானே என்று அசட்டையாக இருப்பது, மரணத்தை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும் செயல். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

vikatan

  • தொடங்கியவர்

14444738_1141503575898335_18754351951914

குஷ்புவுக்கு இன்று பிறந்தநாள்.
தமிழின் முன்னணி கதாநாயகியாக ஒரு தசாப்தம்..
கோவில் கட்டும் அளவுக்கு ரசிகர்களின் அபிமானம்..
சர்ச்சைகளின் நாயகி..
ஆனால் ஹிந்தியிலிருந்து வந்து தமிழில் கற்றுத் தேர்ந்து கலக்கும் சாமர்த்தியம்..
இன்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை, தயாரிப்பாளர்.
இப்போது ஒரு அரசியல்வாதியும் கூட..

இனிய வாழ்த்துக்கள்.
Happy Birthday Kushboo Sundar

  • தொடங்கியவர்
மிஸ் குளோபல் 2016 அழகுராணி போட்டி
 

மிஸ் குளோபல் 2016 அழ­கு­ரா­ணி­யாக ஈக்­கு­வடோர் நாட்டைச் சேர்ந்த ஏஞ்­சலா பொனிலா தெரி­வு­ செய்­யப்­பட்­டுள்ளார்.

 

19566_14463209_10155448644125620_7025821

 

19566_14449806_10155448644245620_5685611

 

பிலிப்பைன்ஸ் தலை­நகர் மணி­லாவில் மிஸ் குளோபல் 2016 போட்டி நடை­பெற்­றது. இலங்­கையின் சார்பில் இஷானி ஜய­பால பங்­கு­பற்­றினார்.

 

19566_1.jpg

 

19566_2.jpg

 

இப்­ போட்­டியில் ஈக்­கு­வ­டோரைச் சேர்ந்த 24 வய­தான ஏஞ்­ச­லினா பொனிலா முத­லிடம் பெற்றார். பிலிப்­பைன்ஸின் கமிலா ஹிரோ 2 ஆம் இடத்­தையும் அவுஸ்­தி­ரே­லி­யாவின் கெய்ட்லின் ஹென்ரி  3 ஆம் இடத்­தையும் பெற்­றனர்.

 

19566_14344213_1097866623634703_19557717

 

19566_Pageant.jpg

 

செக் குடி­ய­ரசின் நிகோலா பெசி­னோவா 4 ஆம ;இடத்­தையும் நோர்­வேயின் பிரிட் ரெக்­கெட்டெல் 5 ஆம் இடத்­தையும் பெற்­றனர்.

 

19566_3.jpg

 

பிலிப்­பைன்ஸின் பிர­பல குத்­துச்­சண்டை வீரர் மானி பக்­கி­யாவோ, வியட்­நாமின் பிர­பல மொடல் ஹா அன்ஹ் ஆகியோரும் நடுவர் களாகப் பங்குபற்றினர்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இங்கிலீஷ் கால்வாயைக் கடந்த முதல் இந்தியப் பெண் #OnThisDay

Arathi-1.jpg

 

இந்திய விடுதலைக்குப் பிறகு, துறைதோறும் பெண்கள் செய்துவரும் சாதனைகள் மிகப் பெரியது. அப்படி சாதித்தவர்களின் முதல் தொடக்கமாக விளங்குபவர், ஆரத்தி சாஹா. இவர்,மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா நகரில் 1940 செப்டம்பர் 24ல் பிறந்தார். சிறுவயது முதல் நீச்சல் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஆறு, குளத்தைக் கண்டால் அதில் இறங்கிக் குளிக்க வேண்டும் என பலருக்கும் ஆசை வருவதுபோல, அப்படிப் பார்க்கும் தண்ணீரில் குதித்து நீச்சல் அடிக்கணும் என்கிற ஆசை ஆரத்தி சாஹாவுக்கு வரும். அப்பா, ராணுவ வீரர். சிறு வயதிலேயே அம்மாவை இழந்துவிட்டார். நான்கு வயதில், தன் மாமாவுடன் 'சம்பதாளா கேட்' என்ற இடத்தில் குளிக்கப் போனபோது நீச்சல் கற்றுக்கொண்டார். அன்று தொடங்கிய நீச்சல் பயிற்சிதான், 1959 செப்டம்பர் 29ல் உலக சாதனையானது.

Indian%20Beti%20Arati%20Saha.jpg

இங்கிலீஷ் கால்வாய் என்றால், தெற்கு இங்கிலாந்துக்கும் வடக்கு ஃப்ரான்ஸுக்கும் இடையில் அட்லாண்டிக் கடலோடு இணையும் குட்டிக் கடல். இது, 560 கி.மீ. நீளமும், 240 கி.மீ. அகலமும் கொண்டது. கடுங் குளிரும் சுறா மீன்களும் ஜெல்லி மீன்களும் அலையும் அபாயகரமான நீர்ப்பரப்பு. இதில், மிகவும் தைரியமாக நீந்தி ' Mount Everest of Swimming' என்ற  சொல்லும் அளவுக்கு இவரது சாதனை பேசப்படுகிறது. அப்போது இவருக்கு வயது 18. சச்சின் நாக் என்பவரிடம் பயிற்சிபெற்ற ஆரத்தி, 1945-க்கும் 1951-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 22 மாநிலப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார்.

100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், 200 மீட்டர் ப்ரீஸ்ட் ஸ்ட்ரோக், 200 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் போட்டிகளில் வென்று தேசிய சாதனை புரிந்தார். அடுத்து 1952-ல் நடைபெற்ற சம்மர் ஒலிம்பிக்கில்  200 மீட்டர் பிரீஸ்ட் ஸ்டோக்கில் போட்டிக்குத் தேர்வானார்.

ஃப்ரான்ஸின் கேப் க்ரிஸ் நெஸ்ஸிலிருந்து சேண்ட்கேட் வரை நீந்தி, 16 மணி 20 நிமிடங்களில் 42 மைல் (67 கிலோமீட்டர்) தூரத்தைக் கடந்தார். சேண்ட்கேட்டில் நமது இந்திய தேசியக் கொடியைப் பறக்கவிட்டு, தன் வெற்றிக் களிப்பை வெளிப்படுத்தினார். ஆரத்தியின் இந்தச் சாதனைக்காக 1960ல் இந்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இந்திய தபால்துறை  இவருக்கு சிறப்புத் தபால்தலை வெளியிட்டு மகிழ்ந்தது.

இது, இந்திய மற்றும் ஆசிய இளம் நீச்சல் வீரர் வீராங்கனைகளுக்கு உத்வேகம் அளித்தது. தனக்கு முன்பு சாதனை நிகழ்த்திய ஆண் நீச்சல் வீரர் 'மிஹிர் சென்' னையே தனது ரோல்மாடலாகக்கொண்டு சாதை புரிந்தார், ஆரத்தி. 1994 ஆகஸ்ட் 23ல் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார். 

இதுவரை 1,341 வீரர், வீராங்கனைகள் இந்தக் கால்வாயைக் கடந்திருந்தபோதும், முதன் முதல் என்ற பெருமையைத் தேடித் தந்த இந்தியப் பெண் ஆரத்தி சாஹாவுக்கு இன்று சல்யூட் அடித்து பெருமை கொள்வோம்.

vikatan

  • தொடங்கியவர்

14502978_1141507585897934_51444267533014

300 டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது சுழல் பந்துவீச்சாளரான முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளரான லான்ஸ் கிப்ஸ் பிறந்த நாள்.
Happy Birthday Lance Gibbs

 
  • தொடங்கியவர்

 

 
டாம் ஹாங்க்ஸுடன் திருமண நாள் செல்ஃபீ
=======================================
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் ஒரு திருமண தம்பதியுடன் எதிர்பாராத விதமாக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் ஹேங்க்ஸ் புகைப்படம் எடுத்துக்கொண்டார். எலிசபெத்தும் ரயனும் தமது திருமண தின புகைப்படங்களை நியூ யார்க் செண்ட்ரல் பார்க் பூங்காவில் எடுத்துக்கொண்டிருந்தப்போது அங்கே ஜாக்கிங் வந்த டாம் ஹேங்கஸ்
இவர்களுடன் செல்ஃபீ எடுத்தார்.அந்த தம்பதிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாம்.
  • தொடங்கியவர்

பிளாஸ்டிக் கப்களால் பிரமிடு உருவாக்கி கின்னஸில் இடம் பிடித்த கல்லூரி மாணவன்! #GuinnessRecords

paper.jpg

உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகள் எகிப்து நாட்டில் அமைந்திருக்கின்றன. சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த பிரமிடுகளை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். நம்மூரிலும் ஒரு மாணவன் பிரமிட் உருவாக்கி சாதனைப் படைத்திருக்கிறார். ஆச்சர்யமாக உள்ளதா? இவர் உருவாக்கியது பிளாஸ்டிக் கப்ஸ் பிரமிட். டெல்லியைச் சேர்ந்த குஷ்கர தயாள் (Kushagra Tayal), தலைநகரில் கல்லூரி மாணவர். சிறுவயதில் இருந்தே கின்னஸ் சாதனைகளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம்கொண்டவர். லைப்ரரியிலும், நெட்டிலும் இதைப் பற்றித் தெரிந்துகொள்வதோடு தானும் ரெக்கார்டு படைக்கவேண்டும் என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பார்.

சாதனைப் படைப்பதற்காக, அதிகநாள் தொடர்ச்சியாக டிரம்ஸ் வாசிக்கலாம் என்று முயற்சித்தார் ஆனால் முடியவில்லை. அடிப்படையில் குஷ்கர தயாள் பேட்மின்டன் வீரர் அதனால், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பேட்மின்டன் விளையாடி சாதனைப் படைக்க நினைத்தார், அதிலும் தோல்விதான் பரிசாய் கிடைத்தது. ஆனாலும் சோர்ந்து விடவில்லை. மூன்றாம் முயற்சியாய், பிளாஸ்டிக் கப்புகளைக் கொண்டு பிரமாண்டமான பிரமிட் எழுப்பி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கத் திட்டமிட்டார் குஷ்கர தயாள். சக மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு 25 அடி உயரத்தில் 57,000 பிளாஸ்டிக் கப்புகளைக் கொண்டு மூன்றுநாடகளில், பிளாஸ்டிக் கப்ஸ் பிரமிட்டை உருவாக்கினார்.

paper1.jpg

இந்த வித்தியாசமான ஐடியா குஷ்கர தயாளுக்கு தோன்றியதே ஒரு வேடிக்கையானது. ஒருநாள் கல்லூரியில் உள்ள கேன்டீனில் காஃபி குடித்துவிட்டு அந்த கப்பை விட்டெறிந்து விளையாடிக்கொண்டிருந்தபோது உருவானதே இந்த ஐடியா. வீட்டுக்குச் சென்று பிளாஸ்டிக் கப்பைக் கொண்டு யாராவது சாதனை செய்திருக்கிறார்களா என்று தேடினார். மெக்ஸிகோவில் 43,000 பிளாஸ்டிக் கப்புகளைக் கொண்டு பிரமிட் உருவாக்கியிருந்ததுதான் சாதனையாக இருந்தது. அதை முறியடிப்பது எப்படி என யோசித்தார். அதற்கு உதவியாக, முதலில இரண்டு நண்பர்களை தன்னுடன் சேர்த்துகொண்டார். ஆனால் பிரமாண்டமான பிரமிட் உருவாக்க இரண்டு பேர் போதாது என்று நினைத்த தயாள், தன்னுடன் படிக்கும் சில மாணவர்களை தன் குழுவில் இணைத்துகொண்டார். மொத்தம் 24 பேர் குழுவாக சேர்ந்து இந்தப் பணியில் ஈடுபட்டனர். இந்தக் குழு, இம்மாதம் 17-ம் தேதி இந்தச் சாதனையை முறியடித்துள்ளது.

சாதனைப் படைக்க வேண்டும் குஷ்கர தயாளின் கனவு நிறைவேறிய வருடமாக 2016 அமைந்துவிட்டது. இன்னும் இன்னும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துவோம்.

2017-ம் ஆண்டிற்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள ரெக்கார்டுகள்:

 

mango
அமெரிக்க பர்கர் பிரியர் ஹாரி, 3,724 விதமான பர்கர் சம்பந்தமான பொருட்களை சேர்த்துவைத்திருக்கிறார்.
 
banana
 
உலகிலேயே உயரமான பெண் நாய். உயரம், சுமார் 3 அடி.
 
currant
ஒரே கோனில் 121 ஐஸ் க்ரீம் ஸ்கூப்ஸ்! இத்தாலி Dimitri Panciera சாதனை.

strawberries

இங்கிலாந்துப் பெண் Kelsey Gill வளர்க்கும் 3 அடி 10 இன்ச் நீள பூனை.

strawberries

30 அடி நீளம், 2 அடி அகலத்தில் உலகிலேயே மிகவும் பெரிய நாற்காலி.

 

 

 
 

vikatan

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம் 02: கடலில் எரியும் மாய விளக்கு!

 

 
 
  • lights_3026009g.jpg
     
  • lights_2_3026010g.jpg
     

இரவு நேரங்களில் கரைகளில் நின்று கடலை ரசித்திருக்கிறீர்களா? ஒளி விளக்குகளின் பிரதிபலிப்பால் இன்று சொர்க்கமாய் மின்னுகிறது கடல். மிக வேகமாக வளர்ந்துவரும் கடற்கரையோர ஓட்டல்களும், சாலையோர உயர்கோபுர விளக்குகளும் கடலை ஒளி வெள்ளத்தால் அழகாக்குகின்றன. இந்தக் காட்சிகளையெல்லாம் நீங்கள் பார்த்து ரசித்திருப்பீர்கள்.

ஆனால், நகரத்தை விட்டு வெகு தூரத்தில் உள்ள கடற்பகுதிகளில் இது போன்று ஒளி வெள்ளக் காட்சிகளைப் பார்க்க முடியுமா? நிச்சயம் முடியும். இது செயற்கை ஒளி அல்ல. இயற்கையாகவே ஒளி அலைகள் கடல் நடுவில் தோன்றி மறைகின்றன. இதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, இது இயற்கையின் மாயா சக்தி என்றுகூடச் சிலர் சொல்வதுண்டு.

ஒளிரும் கடல்

கடலில் ஆங்காங்கே ஒளி அலைகள் எழுவதைப் படகோட்டிகளும் மாலுமிகளும் முதலில் பார்த்து அதிசயித்துப்போனார்கள். நெருப்பு இல்லாமல், மின்சாரமும் இல்லாமல் கடலில் எப்படித் திருவிழா சீரியல் பல்புகள் போல வெளிச்சம் பாய்கிறது எனக் குழம்பிப் போனார்கள். இது ஏதோ மர்ம தேசத்தின் மகத்தான சக்தி என்று சொல்லி மறந்தும்விட்டார்கள்.

ஓர் உண்மையைக் கண்டுபிடிப்பதற்குள் ஓராயிரம் கற்பனைகள் கொடி கட்டிப் பறக்கும் அல்லவா? கடலில் தோன்றும் ஒளி அலையைப் பற்றியும் அப்படித்தான் நடந்தது. பின்னர் ஒரு வழியாகக் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள், இது கடலில் மிதக்கும் பாசியின் தன்மை என்று கண்டுபிடித்தார்கள்.

ஒளிக்குக் காரணம்

உயிரினங்கள் இப்படி ஒளியை உமிழ்வதற்குப் பயோலூமினேசென்ஸ் (BIOLUMINESCENCE) என்று பெயர். இந்த வகைப் பாசிகளும், உயிரினங்களும் உலகமெங்கும் உள்ளன. இந்த ஒளிப்பாசிகள் பல சமயங்களில் அலைகளோடு சேர்ந்து மேலெழும்பி ஒளிக்கோபுரமாக உயரும். இதைக் கடல் ஒளி அலைகள் என்று சொல்வார்கள்.

இந்த ஒளி அலைகளின் ஒளி சாதாரணமாக இருக்காது. கண்ணைப் பறித்துச் செல்லும் அளவுக்குத் தண்ணீர் வைரமாய் மின்னும். வானத்து நட்சத்திரங்கள் உதிர்ந்து கடலில் விழுந்து, அலைகளில் மிதக்கின்றனவோ என்ற சந்தேகம்கூட இதைப் பார்ப்பவர்களுக்கு வந்துவிடும். அந்த அளவுக்கு ஒளி வீசக்கூடியவை.

நாம் வீட்டருகே பார்த்து ரசிக்கும் மின்மினிப் பூச்சிகள் மாதிரி இவை மின்மினிப் பாசிகள். இவை எல்லா நேரங்களிலும் ஒளியை உமிழ்வதில்லை. மனிதர்கள் இந்தப் பாசிகளைக் கலைக்கும்போதோ, படகோட்டிகள் துடுப்புகளால் இந்தப் பாசிக்குத் தொந்தரவு செய்யும்போதோதான் இவை ஒளிர்கின்றன. மேலும் அலைகளிலும், நீர்ச்சுழல்களிலும் இவை ஒளிரும்.

ஏன்?

இவ்வகைப் பாசிகள் ஏன் ஒளியை உமிழ்கின்றன? பாசிகள் தங்கள் பாதுகாப்புக்காகவே ஒளியை உமிழ்கின்றன. மனிதர்களாலும் பிற நீர்வாழ் விலங்குகளாலும் ஆபத்து நெருங்கிவரும்போது இவ்வகைப் பாசிகள் ஒளியை உமிழ்ந்து மற்ற பாசிகளை எச்சரிக்கும். துடுப்புகளால் தாக்கப்படும்போதும், ஒன்றன் மீது ஒன்றாக மோதி ஒளியை உமிழ்கின்றன.

எப்படி?

சரி, எப்படி ஒளியை உமிழ்கின்றன? பொருள் ஒன்று எரிவதற்குத் துணை நிற்கும் வாயுவான ஆக்சிஜன்தான் உயிரினங்கள் ஒளியை உருவாக்கவும், உருவாக்கிய ஒளியை உமிழ்வதற்கும் காரணம். தேவைக்கு அதிகமான ஆக்சிஜன் கிடைக்கும்போது, இந்தக் கடல்வாழ் பாசிகள் தங்களது சிறப்பு உறுப்புகள் மூலம் ஆக்சிஜனைச் சேமித்து வைத்துக்கொள்கின்றன. தேவை ஏற்படும் போது ஒளியை உமிழ்கின்றன.

உணவின்றிப் பசியோடு இருக்கும்போது இவை ஒளியை உமிழ்வதில்லை. இந்தப் பாசிகளைத் தவிர ஒளிவிளக்கு மீன், சில வகைக் காளான்கள், ஜெல்லி மீன்கள் போன்றவையும் ஒளியை உமிழ்வதற்கான சிறப்பு உறுப்புகளைப் பெற்றுள்ளன.

ஒளி விளக்கு மீன்கள் (Lantern Fish) தங்கள் ஒளி வீசும் தன்மையை இரை தேடப் பயன்படுத்திக்கொள்கின்றன.

நமக்கும் இப்படி ஒளிவீசும் உறுப்பு இருந்தால் எப்படி இருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்? நமக்கு இருக்கும் மூளையைவிடவா வேறொரு ஒளி வீசும் உறுப்பு வேண்டுமா என்ன ?

(காரணங்களை அலசுவோம்)

tamil.thehindu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.