Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
 
 
 
Bild zeigt 1 Person , Nahaufnahme
 

இந்திய விடுதலைக்கு துணை நின்ற அன்னிபெசண்ட் அம்மையாரின் பிறந்த தின சிறப்பு பகிர்வு..

வெளிநாட்டில் பிறந்து தமிழ் நாட்டில் குடியேறி இந்தியாவின் விடுதலைக்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர் அன்னி பெசன்ட் அம்மையார்.நம் நாட்டிற்காக அர்ப்பணிப்போடு உழைத்த தேசிய தலைவர்களில் முக்கியமானவர்.

1893-ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் கலந்து கொண்ட சுவாமி விவேகானந்தர், "சகோதர சகோதரிகளே' என்று தன் பேச்சைத் துவங்கிய விவேகானந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார்.

மனிதப் பிறவியின் நோக்கம், பிரபஞ்சத்தின் விந்தைகள், மதங்களின் நெறிகள் இவற்றுக்கானத் தேடலின் முடிவு இந்தியாவில் கிடைக்கும் என்ற உணர்வு உண்டாக, தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி துறைமுகத்தில் வந்தரங்கினார்.

இளம்பருவத்தில் அன்னி பெசன்ட்டுக்கு ஏற்பட்டது போன்ற கஷ்டங்கள் வேறொருவருக்கு ஏற்பட்டிருந்தால் அவர் விரக்தியின் எல்லைக்கே சென்றிருப்பார்.
ஐந்து வயதில் தந்தை இறப்பு, சில வருடங்களில் சகோதரன் இறப்பு, அவருடைய தாயார் இரு குழந்தைகளை இன்னல்களைப் பொருள்படுத்தாமல் வளர்த்தது என்று அன்னியின் இளம் பருவம் கஷ்டத்தில் கழிந்தது.

வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்ற தேடலில் இருந்தவருக்கு, தான் சார்ந்திருந்த மதத்தின் இறுக்கமான கோட்பாடுகள் உறுத்தின. உண்மையைத் தேடும் உள்மனதிற்கு ஏற்புடையதாக இல்லை.

மனிதப் பிறவி, மதம், அரசியல், சமுதாய ஏற்றத்தாழ்வு போன்ற உண்மைகள் அவரை மிகவும் பாதித்தன. மனிதப் பண்பு உயர பாடுபட வேண்டும், மனித நேயம் நிலைபெற உழைக்க வேண்டும் என்ற முடிவோடு பிரம்ம ஞான சபையில் தன்னை இணைத்துக் காெண்டார்.

பெண் கல்வியின் அவலநிலை கண்டு, பெண் கல்விக்காகப் பல முயற்சிகளை எடுத்தார்.

அன்னி பெசன்ட் முற்றிலும் தன்னைச் சமுதாயப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். உண்மையாகவும், தைரியமாகவும் தனது கருத்துகளை எடுத்துக்கூறி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

பனிமலையை போர்வையால் பாதுகாக்க முடியுமா?
-----------------------------------------------------------------------------

ஆல்ப்ஸ் மலைத்தொடரில் வேகமாக உருகிவரும் உறைபனியை பாதுகாக்க வெள்ளை போர்வைகள் போர்த்தி மேற்கொள்ளப்படும் ஒரு வித்தியாசமான முயற்சி.

  • தொடங்கியவர்

காலனால் வெல்ல முடியாத ஆளுமை: சிவாஜி கணேசன்

 

 
sivaji1_3028864f.jpg
 

அக்டோபர் :1- சிவாஜி கணேசன் 88

சின்னையா - ராஜாமணி தம்பதிக்கு 1928-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாளில் பிறந்த குழந்தைதான் கணேசன். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தந்தை சிறை சென்றிருந்தால் பிறக்கும்போதே தந்தையின் முகம் காணவில்லை. தந்தை விடுதலையானபோது அவரது வேலை பறிக்கப்பட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் குடியேறினர்.

படிப்பின் மீது ஆர்வமில்லாத கணேச மூர்த்திக்குத் தெருக்களில் நடந்த கூத்துக்கள், நாடகங்கள் மீது ஆர்வம் அதிகம். நண்பர் காக்கா ராதாகிருஷ்ணன் மூலம் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் குழுவில் சேர்ந்துவிட்டார். கணேசனின் கலைப் பயணத்துக்கு அங்கு வித்திடப்பட்டது. பல முக்கியமான வேடங்களில், பெண் வேடம் உட்பட அனைத்து வேடங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார்.

பெரியாரின் பாராட்டு

அறிஞர் அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ என்ற நாடகத்தின் அரங்கேற்றத்தில் திடீர் என்று ஏற்பட்ட மாறுதலால் முதல் நாள் அளிக்கப்பட்ட 90 பக்க வசனங்களை ஒரே இரவில் படித்து நாடகத்தில் சிவாஜியாகவே மாறினார் கணேசன்.

திரைப்படம், நாடகம் ஆகியவற்றைப் பெரிதும் விரும்பாத பெரியார் ஈ.வெ.ரா., அண்ணாவின் நாடகத்துக்குத் தலைமை தாங்கினார். கணேசனின் நடிப்பும் வசன உச்சரிப்பும் அவரை வெகுவாக ஈர்க்க, நாடகத்தை ரசித்துப் பார்க்க ஆரம்பித்தார். முடிவில் கணேசனைப் பாராட்டிய அவர், ‘நீ சிவாஜியாகவே மாறிவிட்டாய் இன்று முதல் உன் பெயருடன் சிவாஜியும் சேர்ந்து சிவாஜி கணேசன் ஆகிறாய்’ என்று மனதாரப் பாராட்டினார்.

விமான டிக்கெட்டுடன் வந்த வாய்ப்பு

பாவலர் பாலசுந்தரம் எழுதிய ‘பராசக்தி’ என்ற நாடகத்தில் சிவாஜி கணேசன் முக்கியப் பாத்திரத்தில் நடித்துவந்தார். அந்நாடகத்தைப் பார்த்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனர் பி .ஏ. பெருமாள் முதலியாரும் ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரும் இணைந்து இந்நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்தனர். இப்படத்தின் கதாநாயகன் குணசேகரனாக கே. ஆர். ராமசாமியை நடிக்கவைக்க ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் முடிவெடுத்தார். ஆனால் பி.ஏ. பெருமாள் ஒரு புதுமுக நடிகரை வைத்து படமெடுக்க வேண்டும் என்ற முடிவுடன் ‘நூர்ஜகான்’ நாடகத்தில் பெண் வேடத்தில் நடித்த கணேசனைக் கதாநாயனாக நடிக்க வைக்க விரும்பினார்.

திருச்சியில் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்த சிவாஜி கணேசனுக்கு விமான டிக்கட்டுடன் சென்னையிலிருந்து சினிமாவில் கதாநாயனாக நடிக்க அழைப்பு வந்தது. 1951-ம் ஆண்டு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் சக்ஸஸ் சக்ஸஸ் என்ற முதல் வசனத்துடன் தன் கலையுலக வாழ்வை ஆரம்பித்து, சினிமாவில் வெற்றி நாயகனாக அரை நூற்றாண்டுக் காலம் திகழ்ந்தார்.

அழியாத பிம்பங்கள்

‘பராசக்தி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள், புராண, சரித்திர நாயகர்களின் கதாபாத்திரங்கள், வரலாற்று நாயகர்கள், எதிர்மறையான கதாபாத்திரங்கள் ஆகியவற்றில் தன்னுடைய நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும், நடை, உடை பாவனையாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு சிறந்த நடிகனாக உருமாறினார். சிவன், கர்ணன், வ.உ.சி., கட்டபொம்மன் போன்றோரை நினைக்கும்போது நம் நினைவில் சிவாஜியின் முகமே நிழலாடும். தந்தை, மகன், அண்ணன், கணவன் எனப் பல்வேறு உறவு முறைகளை அழியாத திரைப் பிம்பங்களாக மாற்றினார்.

கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து...

sivaji_3028865a.jpg

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என்று 305 திரைப்படங்களில் நடித்துள்ள சிவாஜி கணேசன், சிறந்த நடிகருக்கான ஆசிய - ஆப்பிரிக்கத் திரைப்பட விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, மத்திய அரசின் பத்ம, பத்மபூஷன் விருது, திரைத்துறை வித்தகருக்கான தாதாசாகேப் பால்கே விருது, தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது, பிரெஞ்சு அரசாங்கத்தின் செவாலியே விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், தன்னுடைய அன்னை இல்லத்தின் மேல் ஒரு சிறுவன் புத்தகம் படிப்பது போன்ற ஒரு சிறிய சிற்பத்தை வைத்திருந்தார். அவர் வாழ்ந்த சென்னை, தியாகராயநகர், தெற்கு போக் சாலை செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்று தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி உலகமே அவரைக் கவுர வித்தது. 1962-ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மாகாணத்திலுள்ள நயாகரா நகரின் ஒரு நாள் கவுரவ மேயர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். 2001-ல் அவர் மறைந்த பிறகு மத்திய அரசு அவருக்குத் தபால் தலை வெளியிட்டுப் பெருமை சேர்த்தது. 2006-ம் ஆண்டு புதுச்சேரி அரசின் சார்பில் புதுச்சேரியிலும், தமிழக அரசு சார்பில் சென்னை கடற்கரை காமராஜர் சாலையிலும் முழு உருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டன.

திரைக்கு அப்பால்

திரைப்படங்களைத் தாண்டியும் அவரது பங்களிப்பு நீண்டது. சினிமாவில் தீவிரமாக நடித்துக்கொண்டிருந்தபோதே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று நடிகர் சங்கத்துக்காகக் கலை அரங்கத்தைக் கட்டினார். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் கட்டபொம்மனுக்குச் சிலை அமைத்து அந்த இடத்தை நினைவுச் சின்னமாகச் சொந்தச் செலவில் பராமரித்தார். மும்பையில் வீ ரசிவாஜி சிலை அமைக்கப் பொருளுதவி வழங்கினார். சென்னை மெரினா கடற்கரையில் திருவள்ளுவருக்குச் சிலை அமைத்துக் கொடுத்தார். தன் மனைவி கமலா அம்மாள் போட்டிருந்த நகைகளை யுத்த நிதிக்காகத் தந்ததுடன், ரூ.17 லட்சம் தொகை வசூலித்துக் கொடுத்தார். மதிய உணவுத் திட்டத்துக்காகப் பிரதமர் நேருவிடம் ரூ. 1 லட்சம் வழங்கினார். பெங்களுர் மக்கள் நலனுக்காக ‘கட்டபொம்மன்’ நாடகத்தின் மூலம் ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கினார். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான காமராஜர் சிலைகள் அவரால் நிறுவப்பட்டவை.

கலையுலகை வென்ற கலைஞனை 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் நாள் காலன் வென்றுவிட்டான். அவர் தன் நடிப்பால் மக்கள் மனதில் பெற்ற இடம் மகத்தானது, நிரந்தரமானது. காலன் உள்பட யாராலும் வெல்ல முடியாதது.

சிவாஜி கணேசன்

 
நடிகர் சிவாஜி கணேசன்
நடிகர் சிவாஜி கணேசன்

தமிழ் சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம் எனவும், நடிகர் திலகம் எனவும் போற்றப்பட்ட சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*விழுப்புரத்தில் பிறந்தவர் (1927). விழுப்புரம் சின்னய்யா கணேசன் என்பது இவரது இயற்பெயர். தந்தை, விழுப்புரம் ரயில்வே தொழிற் சாலையில் பணியாற்றியவர்.

*சிறுவன் கணேசனுக்கு, படிப்பில் ஈடுபாடு வரவில்லை. நாடகம், பஜனைக் கோஷ்டியில் பாடு வதில்தான் ஈடுபாடு. 1935-ல் நாட கங்களில் நடிக்கத் தொடங்கினார். முதலில் பெண் வேடங்களில் நடித்தார். பின்னர் ‘ராஜபார்ட் நடிகர்’ ஆனார். பொன்னுசாமி பிள்ளை நாடகக் கம்பெனி, எம்.ஆர்.ராதா கம்பெனி, என்.எஸ்.கே. சபா உள்ளிட்ட பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து நடித்தார்.

*1945-ல் ஒரு நாடகத்தில் சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்தார். அதில் இவரது நடிப்பினால் கவரப்பட்ட தந்தை பெரியார், இவரை ‘சிவாஜி கணேசன்’ என்று குறிப்பிட்டார். அன்றுமுதல் வி.சி.கணேசன், ‘சிவாஜி கணேசன்’ என அழைக்கப்பட்டார். 1952-ல் ‘பராசக்தி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

*மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜ ராஜ சோழன், கப்பலோட்டியத் தமிழன் உள்ளிட்டத் திரைப்படங்களில் இவர் பேசிய வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அபார நடிப்புத் திறன் ஆகியவை இவரது தனிச்சிறப்புகள்.

*காதல், வெற்றி, தோல்வி, வீரம், கோபம், சாந்தம், நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பு, பணக்காரன், ஏழை, நல்லவன், கெட்டவன், கிராமவாசி, நகரவாசி என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. பாசமலர், வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன், சிவந்த மண், தில்லானா மோகனாம்பாள், நவராத்திரி, வியட்நாம் வீடு, திருவருட்செல்வர், திருவிளையாடல், கர்ணன் உள்ளிட்ட வெற்றித் திரைக்காவியங்கள் இவருக்கு அழியாப் புகழ் பெற்றுத் தந்தன.

*அந்நாட்களில் நடிக்க வருபவர்கள் பேசிக் காட்டுவது பராசக்தி, திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்மன், மனோகரா உள்ளிட்ட திரைப்பட வசனங்களைத்தான். டி.எம். சவுந்தரராஜன் இவருக்காகப் பாடிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தன. திரையுலகில் நேரம் தவறாமைக்கு உதாரணமாக கூறப்படுபவர். தமிழில் ஏறக்குறைய 300 திரைப்படங்கள், தெலுங்கில் 9 , மலையாளத்தில் ஒன்று, இந்தியில் 2 திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

*கவுரவ வேடங்களில் ஐந்து மொழிகளில் 19 திரைப்படங்களிலும் நடித்தவர். இவரது திரைப்படங்களில் பெரும்பாலானவை கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. சிவாஜி நாடக மன்றம் தொடங்கி பலருக்கு வாய்ப்பளித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக 8 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

*ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது, கலைமாமணி விருது, பத்ம,, பத்மபூஷண், 1995-ல் செவாலியே விருது (இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய நடிகர் இவர்தான்), 1996-ல் தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது நடிக்கும் பாணியை மைய மாக வைத்தே மற்ற நடிக, நடிகையரின் நடிப்பு, ஒலி, ஒளி, பாடல், இசை, பின்னணி, இயக்கம் உள்ளிட்டவை அமைந்தன.

*இந்தியாவில் 50 ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலைசிறந்தவர், நடிப்புச் சக்ரவர்த்தி, சிம்மக்குரலோன், தனக்குப் பின் வந்த அத்தனை நடிகர்களிடமும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றெல்லாம் போற்றப்பட்டவர். அரசியலில் ஈடுபாடும் காமராஜரிடம் பற்றும் கொண்டவர்.

*1982-ல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் நயாகரா சிட்டியின் ஒருநாள் மேயராகும் கவுரவம் இவருக்குக் கிடைத்தது. தமிழ்த் திரையுலகின் ஒரு சகாப்தமாக தடம் பதித்த சிவாஜி கணேசன், 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமானார்.

சிவாஜி 25!

 

சிவாஜி 25

சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...

*  சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!


*  நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

*  1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

*  சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

*  கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்!
 
* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

sivaji4.jpg



* தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!

* திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!

* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

* சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!

* தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!

* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

* ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!

* விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!

* சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!
 

sivaji5.jpg


* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!

* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

* விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!

* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

sivaji10.jpg



* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

* பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!

* கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!

14517657_1262638710442605_57118753001836

 
 
இடம் இருந்து வலமாக சிவாஜி , ஜெ.... ,ஜெ..இன் அம்மா சந்தியா
  • தொடங்கியவர்

ஏலியன்ஸ் ஏன் பச்சையா இருக்காங்க?

 

a.jpg

 பிறந்த குழந்தைகளைப் பெரும்பாலும், ‘பச்சைக் குழந்தைங்க!’னு சொல்றோம். இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நிஜமாவே ‘பச்சை நிறக் குழந்தைகள்’ பற்றி சில கதைகள் இருக்கு. வதந்தியா, உண்மையா..? நிச்சயம் தெரியாது. ஆனால், கதை படு சுவாரஸ்யம்!

12-ம் நூற்றாண்டு. அதாவது 800 ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்தில் ஊல்பிட் என்ற ஊருக்கு அருகில் ஒரு சிறுவனும், ஒரு சிறுமியும் அழுதுகொண்டே நடந்து சென்றிருக்கிறார்கள். குழந்தைகளைக் கவனித்துப் பார்த்த மக்களுக்கு ஷாக்கிங்! ஏனெனில், மனிதர்களுடைய முகமாக இருந்தாலும், அந்த இரண்டு குழந்தைகளின் தோலும் பச்சை நிறத்தில் இருந்திருக்கிறது. அவர்கள் அணிந்திருந்த உடை, புது டிசைனில் இருந்திருக்கிறது. யார் இவர்கள் எனத் தெரிந்துகொள்ள மக்கள் முயல, அவர்கள் பேசும் மொழியும் புரியாத புதிராக இருந்திருக்கிறது. உணவுக்காக அழுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட மக்கள், அவர்களுக்கு விதவிதமான உணவுப்பொருட்களை எடுத்துவந்து நீட்டினார்களாம். அனைத்தையும் வெறித்துப் பார்த்த அந்தச் சிறுவனும் சிறுமியும் பீன்ஸை மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டார்கள் என்கிறார்கள். ‘வதந்தி’, ‘கதை’, ‘உண்மைச் சம்பவம்’ என்றெல்லாம் சொல்லப்படும் இந்தக் கதையில் வரும் சிறுவன், சிலநாட்களிலேயே இறந்துவிட்டானாம். அந்தச் சிறுமி மட்டும் பீன்ஸை உணவாக உட்கொண்டு, சில வருடங்கள் பூமியில் வாழ்ந்ததாகவும், பிறகு அவளுடைய தோலின் நிறம் வெண்மையானது என்றும், ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டாள் எனவும் சொல்கிறார்கள். யார் இவர்கள்?

‘`நாங்க பூமிக்கு அடியில இருந்து வந்தோம். அங்கெல்லாம் சூரிய வெளிச்சமே படாது! ஏதோ ஒரு b.jpgவெளிச்சத்தைப் பார்த்ததும், அதைப் பின்தொடர்ந்து வந்தோம்!’’ என்று அந்தச் சிறுமியே தெரிவித்ததாக, அந்தச் சிறுமியை நேரில் பார்த்ததாகச் சொல்லும் வில்லியம் நியூபர்க் மற்றும் ரால்ஃப் கோக்கஷால் என்ற இரு ஆய்வாளர்கள் தங்களது குறிப்புகளில் எழுதியிருக்கிறார்கள். இந்தப் ‘பச்சைக் குழந்தைகள்’ நினைவாக, இன்றும் ஊல்பிட்டின் வரவேற்புத்தூணில் இரண்டு குழந்தைகளின் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து? ஸ்பெயின் நாட்டின் கதைக்கு வருவோம்!

முதல் சம்பவத்தோடு ஒப்பிடும்போது, இது சமீபத்தில் நடந்த சம்பவம். 1887ல் பஞ்ஜோஸ் என்ற இடத்திற்கு அருகே இருக்கும் குகையில் இருந்து இரண்டு குழந்தைகள் வந்தார்களாம் (இந்தக் கதையிலும் ஒரு சிறுவன், ஒரு சிறுமி!). ‘மணல் இல்லாத இடத்தில் நாங்கள் இருந்தோம்!’, ‘புயல் ஒன்றால் தாக்கப்பட்டு, இந்தக் குகையில் விழுந்துவிட்டோம்!’ என்ற லொக்கேஷன் வித்தியாசங்களைத் தவிர, மேலே சொன்ன கதையின் திரைக்கதை! இந்தக் கதையிலும் சிறுவன் சில நாட்களிலேயே இறந்துவிட, சிறுமி சில ஆண்டுகள் வாழ்ந்து ஸ்பானிஷ்மொழி கற்றுக்கொண்டு, கதையைச் சொல்லியிருக்கிறாராம்! சரி, இந்தக் கதையின் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய நீதி என்னன்னா... ஏலியன்கள் என்றாலே, ‘பச்சை நிறத்தில் இருப்பார்கள்!’ என்ற கற்பனை, இந்தக் கதைக்குப் பிறகுதான் வந்திருக்கும்!       

அடங்கொக்கமக்கா... எவ்ளோ பச்சையா பொய் சொல்லியிருக்கீங்க?

vikatan

  • தொடங்கியவர்

 

“என்னை தனிமையில் விடு”
நாம் தனிமையை விரும்புவது தான் உண்மை என்பது உங்களுக்கு தெரியுமா?

  • தொடங்கியவர்

 

1_3013718f.jpg
‘மஸ்டாங்ஸ்’, அமெரிக்கா
 
2_3013719f.jpg
‘பீப்பிள் ஆஃப் த ரிவர்’, சிங்கப்பூர்
 
3_3013722f.jpg
‘மேன் அட் ஒர்க்’, ஸ்லோவாகியா
 
4_3013721f.jpg
‘கேட்டில் டிரைவ்’, அமெரிக்கா
5_3013720f.jpg
‘த அன்னோன் அஃபிசியல்’, ஐஸ்லாந்து
6_3013717f.jpg
‘எ டே அவுட்’, ஆஸ்திரேலியா
 
7_3013723f.jpg
‘த வார்த்காபோயின்’, பெல்ஜியம்

கட்டிடங்களை விநோதமாகக் கட்டுவதைக் குறித்து முன்பே நாம் பார்த்திருக்கிறோம். அது ஒரு காலகட்டத்தில் பாணியாக இருந்தது. அதுபோல கட்டிடங்களுக்கு முன்பு விநோதமான சிற்பங்களை உருவாக்குவதும் ஒரு பாணியாகப் பின்னால் வளர்ந்தது. மட்டுமல்லாமல் பூங்காக்கள், சாலை ஓரங்கள் என மக்கள் கூடும் இடங்களிலும் விநோதமான, கருப்பொருள் கொண்ட சிற்பங்களை உருவாக்குவதும் உண்டு. அந்த வகையில் உலக அளவிலான சிறந்த சிற்பங்களைக் குறித்த படத் தொகுப்பு இது. அமெரிக்கா, ஐஸ்லாந்து, சிங்கப்பூர், ஸ்லோவாகியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சிற்பங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

tamil.thehindu

  • தொடங்கியவர்

14469606_1143693789012647_21460281547631

 
 
திறமையான நிகழ்ச்சிப் படைப்பாளர், இனிமையான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பிறந்தநாள்
  • தொடங்கியவர்

அரசியல் அப்பாடக்கர் 2.0

 

p17b1.jpg

மெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பைப் பார்க்குறப் போலாம் வெண்ணிற ஆடை மூர்த்தி கண்ணு முன்னாடி வந்து போறாரா இல்லையா..? ஒருவேளை இவர் ஜெயிச்சு வந்தா இவர் வாயை சுழற்றுற சுழட்டுக்கு என்னெல்லாம் நடக்குமோ? ஆனா, எனக்கென்னவோ ஆளோட குசும்புகளைப் பார்த்தா பாப்பிரெட்டி பவனுக்குத்தான் இவரை அன் அப்போஸ்டா அனுப் பணும்னு தோணுது மக்கழே!

p17a.jpg

‘ஃபிலிபைன்ஸில் மேடை விவேகமில்லாத  கட்டப்பஞ்சாயத்துக் காரரைத்தான்  President ஆக்கியிருக் கின்றனர். அடுத்து USA... தமிழகமும் உலகோடொத்துபோய்விடுமோ?’- இது கமல்ஹாசன் இந்தவாரம் தன் ட்வீட்டர் கணக்கில் போட்ட முத்தான ட்வீட்.  எப்பவுமே குழப்பமா பேசுவார். இப்போ தெளிவா குழப்பி இருக்கார்ல?

p17c.jpg

டவுட்டு: போலீஸ் மந்திரியே முதல்வரம்மா தான். அம்மாவே அப்போலோவில் அட்மிட் ஆகி இருக்கும் போது சோகம் துளிகூட இல்லாமல் கருமமே கண்ணாக ஹெல்மெட் அணியாதவர்களை முக்குக்கு முக்கு வளைத்து வளைத்துப் பிடிப்பது எந்த ஊர் நியாயம் ஆபிசர்ஸ்?

p17d1.jpg

ரி தாக்குதலுக்கு நம் ராணுவம் இப்போது  பதிலடி கொடுத்து இருக்கிறது. டெக்னாலஜி யுகத்தில் மீம்ஸ் மூலம் எதிர்வினையாற்றுவதில் வேற லெவலுக்கே போய் விட்டார்கள் இணைய வாசிகள். ஹெச்.ராஜா- தமிழைசையின் கண்டனப் பேரணியை வைத்து கோவைக் கலவரத்துக்கு வந்த எதிர்வினை தான்  ‘பிரியாணி மீம்’! இது செம வைரல். இதே எக்குத் தப்பான நேரத்தில் தான் ‘பாகிஸ்தான் கலைஞர்கள் நாட்டைவிட்டே 48 மணி நேரத்தில் வெளியேறணும்!’னு சொல்லி இருக்காங்க நம்ம  பால் தாக்கரேவின் மனைவி ஷாலினி தாக்கரே. இதுக்கும் எதிர்வினை ஆற்றி இருக்கிறார் நாம் யூகிக்க முடியாத பிரபலம்.  வாஷிங்டனில் கலை நிகழ்ச்சியில் ஷாலினி தாக்கரே வின் கருத்துக்கு கருத்து கேட்டபோது, நம்ம இசைஞானி இளையராஜாகூட ,  ‘இசைக்கு தேசம் மொழி என்ற பேதமில்லை! இசை என்றால் இசை மட்டும் தான்!’ . தட் அறிவு இருக்குங்கிற அறிவு இருக்கா மொமன்ட்!

- ஆ

  • தொடங்கியவர்

எதிர்வினையைக் காலம் காட்டிவிடும்
 

article_1475043445-uiriti.jpgதனி ஒரு மனிதனைச் சமூகம் ஒதுக்கி வைப்பதென்பது, ஒரு பொல்லாத தண்டனைதான். சாதியின் பெயரால் அல்லது பணவசதியில்லை என்ற காரணத்தால், அவர்களை உதாசீனம் செய்வது, தெய்வத்துக்கே அடுக்காது.  

ஆனால், பயங்கரமான கொடுமைக்கார மகா பாவியை ஒரு சமூகம் ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி வைப்பது நியாயமான செயல். ஆனால், இத்தகைய மனிதர்களைச் சட்டம் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதே மிகவும் பாரதூரமான செயலாகும்.  

இன்று கண் எதிரே கொலை, கொள்ளை என்ற கொடும்பாவங்களைச் செய்பவர்களை, கதாநாயர்களாக ஏற்கும் மனோபாவம், மக்களில் பலருக்கும் வந்துவிட்டது போல் காரியங்கள் நடக்கின்றன. இதன் எதிர்வினையைக் காலம் காட்டிவிடும்.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஏன் காமராஜர் வழியை பின்பற்ற வேண்டும்...?' காமராஜர் நினைவு தினம் சிறப்பு பகிர்வு

er.jpg

‘‘சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்’’ என்றவர் பெருந்தலைவர் காமராஜர். அதற்குத் தகுந்தாற்போல் வாழ்ந்துகாட்டியவர் அவர். அவருடைய நினைவு தினம் இன்று. இந்திய நாட்டில் பெரும் தேசியத் தலைவர்களாகத் திகழ்ந்தவர்களில் பெரும்பான்மையினர், பட்டம் பெற்றவர்களாவும் வழக்குரைஞர்களாகவும் இருந்து அரசியலில் குதித்தவர்கள். ஆனால், காமராஜர் மட்டும்தான் சாதாரண கல்வியறிவு பெற்றிருந்தும் பாரதத்தின் பெருந்தலைவர்களில் ஒருவராக உயர்ந்து மக்களுக்கு வழிகாட்டியவர். 


எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் !

‘‘அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்போது அது மக்களுக்குக் கோழிச்சண்டையைப் பார்ப்பதுபோல் வேடிக்கையளிப்பதாக உள்ளது. ஆகவே, வீண் சண்டைகளை, சர்ச்சைகளை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும்’’ என்றார் காமராஜர். ஆனால், எந்த அரசியல்வாதிகள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்? அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் அவர். 1953-54-ம் ஆண்டில் தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட இருந்த நேரத்தில் முதல்வர் பதவிக்கு சி.சுப்பிரமணியமும் போட்டியிட்டார். முதல்வர் பதவிக்கு சுப்பிரமணியம் பெயரை பக்தவத்சலமே முன்மொழிந்தார். தேர்தலில் காமராஜர் வெற்றிபெற்றார். இதனால் சுப்பிரமணியமும், பக்தவத்சலமும் திகைத்துப்போனார்கள். தனது செயலுக்காக காமராஜரிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டார் பக்தவத்சலம். இந்த நிலையில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுப்பிரமணியத்தையும், அவரை ஆதரித்த பக்தவத்சலத்தையும் மந்திரி சபையில் சேர்த்துக்கொண்டார். இதுபற்றி சிலர் காமராஜரிடம் கேட்டபோது, ‘‘என்னை எதிர்த்தவர்கள் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஏற்கெனவே மந்திரிகளாய் பதவி வகித்து அனுபவம் பெற்றிருக்கும் அவர்கள் சேவை, நாட்டுக்குப் பயன்பட வேண்டாமா’’ என்று பதிலளித்தார்.


அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறு !

காமராஜர் பயின்ற பள்ளியில் ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். பிரசாதம் விநியோகிக்கப்படும்போது மாணவர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்று, ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் பிரசாதத்தைக் கைநிறையப் பெற்றுக்கொள்வார்கள். பிரசாதத்துக்காக அந்த மாதிரி முண்டியடித்துக்கொண்டு செல்வது காமராஜருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, ஒரு மூலையில் ஒதுங்கி நின்றார். கடைசியாக மிச்சமிருந்த பிரசாதத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார். ‘‘எல்லோரும் நிறைய பிரசாதம் வாங்கிக்கொண்டு செல்லும்போது, நீ மட்டும் குறைவாக வாங்கிவந்தது ஏன்’’ என வீட்டில் உள்ளவர்கள் கேட்டனர். ‘‘மற்ற மாணவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சென்று பிரசாதம் வாங்க எனக்கு விருப்பமில்லை. பள்ளியில் எல்லா மாணவர்களிடமும் ஐந்து காசு வசூலித்தவர்கள், ஒரே மாதிரியாகப் பிரசாதம் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறு’’ என்றார் காமராஜர். அரசியல் தவிர அனைத்து சிக்கலான பிரச்னைகளையும் எளிதாகச் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர் காமராஜர். 

kamaraj-periyar.jpg


எந்த அவசியமும் இல்லை!

காமராஜர் சிறையில் இருந்த காலத்தில் விருதுநகர் நகராட்சியின் தலைவராக அவரையே உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர். காமராஜர், விடுதலை பெற்றபின் அவரிடம் இதுபற்றிச் சொல்லி நகராட்சி அலுவலகத்துக்கு அழைத்துவந்தார்கள். அங்கு வந்த அவர், நடந்திருக்கும் வேலைகள் பற்றிச் சம்பந்தப்பட்டவரிடமும், கோப்புகள் மூலமும் அறிந்துகொண்டார். பின்னர் அவர், ‘‘இங்கே நான் தலைவராக இல்லாமலேயே எல்லாப் பணிகளும் ஒழுங்காக நடந்திருக்கின்றன. எனவே, நான் இங்கே இருந்து பணியாற்ற எந்த அவசியமும் இல்லை’’ என்று சொல்லிவிட்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விடைபெற்றார் காமராஜர்.

ஒருமுறை தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது காமராஜர் மேடையில் அமர்ந்திருந்தார். அப்போது பேச்சாளர் ஒருவர், ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால், உழுபவனுக்கு நிலம் சொந்தமாகும்’’ என்றார். அடுத்துப் பேசிய காமராஜர், ‘‘நடக்கிறதைச் சொல்லணும்... நம்புகிறதைச் சொல்லணும். உழுபவனுக்கு நிலம் சொந்தமாகணுமின்னு சொல்றீங்க. சரி… காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அப்படியே தந்துவிடுவதா வச்சுக்குவோம். அப்புறம் நெல் அறுக்கிறவன், அறுக்கிறவங்களுக்கே நெல் சொந்தம் என்பான். அதை அரைக்கிறவன், அரைக்கிறவனுக்கே அரிசி சொந்தமின்னு சொல்வான்’’ என்று காமராஜர் சொன்னதும், அந்தப் பேச்சாளர் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் அசந்துபோனார்கள்.

தான் கற்ற கல்வியுடன் 6 ஆண்டுகள் முதல்வராக இருந்து தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர். தமிழ் மொழிக்கு அங்கீகாரம் அளித்தவர்; கல்விக்கூடங்களைத் திறந்துவைத்து மதிய உணவு அளித்தவர்; தொழிற்சாலைகளைப் பெருக்கியவர்; அதனால்தான் இந்திய காங்கிரஸையே வழிநடத்தும் வலிமைமிக்க மனிதராக உயர்ந்தார். 

kamaraj-campaign.jpg



வாழ்வதற்குப் பாதை தேடுகிறேன் !

ஒரு சமயம் காமராஜர் முதல்வராக இருந்தபோது சுற்றுப்பயணம் செய்தார். அப்போது, ‘‘இந்தக் கிராமத்திலே ஏன் பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை’’ என்றார் காமராஜர். அதற்கு முதலமைச்சரின் உதவியாளர், ‘‘இந்தக் கட்சிக்காரர்கள் நம் கட்சிக்கு ஓட்டு போடவில்லை. அதனால்தான் பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை’’ என்றார். ‘‘இது ஜனநாயக நாடு. மக்கள், தங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம். அது, அவர்களின் ஜனநாயக உரிமை. அதனால் அரசாங்கம் எல்லோருக்கும் பொதுவானது. உடனே இந்தக் கிராமத்தில் பள்ளிக்கூடம் திறக்கச் செய்யுங்கள்” என்றார் காமராஜர். அதேபோல், மற்றொரு கிராமத்துக்குச் சென்ற காமராஜரிடம்.. அந்த ஊர்த் தலைவர்கள், ‘‘ஐயா! எங்களுக்குச் சுடுகாட்டுக்குச் செல்வதற்குப் பாதை அமைத்துத் தந்திட வேண்டும்’’ என்றார்கள். காமராஜர் இதைக்கேட்டுச் சிரித்துக்கொண்டே, ‘‘நான் நன்றாக வாழ்வதற்குப் பாதை தேடுகிறேன். நீங்கள் செத்தவனுக்குப் பாதை கேட்கிறீர்கள்” என்றார்.

மக்கள் ஏற்கவில்லை என்பதுதான் உண்மை!

1971-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் இந்திரா காங்கிஸ் அமோக வெற்றி பெற்றது. காமராஜர் சார்ந்திருந்த பழைய காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருந்தது. தொண்டர்கள் காமராஜரிடம் சென்று, ‘‘ஐயா! அவர்கள் வெற்றிக்குக் காரணம் ‘ரஷ்ய மை’ வைத்து ஏமாற்றிவிட்டார்கள். வாக்குச்சீட்டில் ரஷ்ய மையைத் தடவிவிட்டார்கள்’’ என்று கூறினார்கள். அதற்கு காமராஜர், ‘‘ஜனநாயகத்திலே நம்பிக்கை உள்ளவர்களின் பேச்சா இது? நாம் தேர்தலிலே தோற்றதற்குக் காரணம் ‘மை’ என்கிறீர்களே! அதுவா உண்மை? இல்லை. நம்மை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை’’ என்று பதில் சொன்னதோடு தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைக் கொண்டிருந்தவர் காமராஜர்.

kamaraj-annadurai.jpg

அமெரிக்கா அதிபர் நிக்ஸனைச் சந்திக்கவில்லை !

நாகர்கோவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக காமராஜர் இருந்த சமயம், தி.மு.க ஆட்சி தமிழகத்தில் நடந்துகொண்டு இருந்தது. அப்போது, அமெரிக்க அதிபர் நிக்ஸன் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்திருந்தார். அவர் பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க விரும்பினார். புதுடெல்லியிலிருந்து தேதி மற்றும் நேரம் கேட்டுத் தகவல் வந்திருந்தது. இதைக் காமராஜரிடம் கூறினார்கள். ‘‘பார்க்க முடியாது’’ என்று மறுத்துவிட்டார் காமராஜர். ஏன் இப்படிச் சொல்கிறார்? வந்து பார்க்க விரும்புவதோ அமெரிக்க அதிபர். குழப்பமடைந்தார்கள் கூடியிருந்தவர்கள். அவர்களைப் பார்த்துக் காமராஜர் சொன்னார். ‘‘அண்ணாதுரை அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, அவர் அமெரிக்கா அதிபர் நிக்ஸனைச் சந்திக்க விரும்பினார். பார்க்க மறுத்துவிட்டாராம் நிக்ஸன். அப்படிப்பட்டவரை நான் ஏன் பார்க்க வேண்டும்’’ என்றார் காமராஜர். அண்ணாதுரை, மாற்றுக் கட்சிக்காரர் என்றபோதும் அவருக்கு அமெரிக்க அதிபர் சந்திக்கச் சந்தர்ப்பம் கொடுக்காததற்கு இதன்மூலம் தன் ஆதங்கத்தையும், தமிழன் என்ற தன்மானத்தையும் காத்து பெருமை சேர்த்தவர் காமராஜர்.

ஒருசமயம் காமராஜரும் நேருவும் தென்மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொள்ள காரில் விருதுநகர் வழியாகச் சென்றுகொண்டு இருந்தனர். அப்போது, ஒரு மூதாட்டி சாலை ஓரமாகப் பொதுமக்களோடு நின்று அவர்கள் செல்வதைக் கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது நேரு... தன் அருகே இருந்த காமராஜரிடம், ‘‘அங்கே சாலை ஓரமாக நிற்கும் மூதாட்டியைப் பற்றித் தெரியுமா’’ என்று கேட்டார். உடனே காமராஜர், ‘‘அது, என் தாய்தான்’’ என்றார். உடனே நேரு, காரை ரிவர்ஸில் எடுக்கச்சொன்னதுடன், காரில் இருந்து இறங்கி காமராஜரின் தாயாரின் கையைப் பிடித்து, ‘‘அந்த அற்புத மனிதரைப் பெற்ற தாயார் நீங்கள்தானா’’ என்று பாசத்துடன் கேட்டார். இதை அங்கு கூடியிருந்தவர்கள் கண்டு பரவசம் அடைந்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
 

kamaraj-sivaji-nedumaaran.jpg


எனக்கு அந்தப் படிப்பு தேவையில்லை !

காமராஜர் சுருக்கமாகப் பேசினாலும் நறுக்கென்று பேசக் கூடியவர். ‘‘ஆகட்டும், பார்க்கலாமின்னேன்’’ என்றுதான் சொல்வார். ஆனால், அந்தச் செயலையே சாதித்துக் காட்டியிருப்பார். அவர் அதிகம் படிக்காதவர் என்று அடிக்கடி விமர்சிக்கப்பட்டது. அதற்கு காமராஜர் ஒரு கூட்டத்தில் பேசியபோது இப்படிப் பதிலளித்தார். ‘‘நான் படிக்காதவன் என்கிறார்கள். அது, உண்மைதான். ஆனாலும், நான் இன்னொரு படிப்பைப் படித்தவன். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் இங்கே நகரங்களாகவும், சிற்றூர்களாகவும், கிராமங்களாகவும் எத்தனை ஊர்கள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும். வெறும் ஊர்களை மட்டுமல்லாமல், ஒவ்வோர் ஊரிலும் எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள்; எந்தெந்த ஊர்களில் என்னென்ன தொழில்கள் நடக்கின்றன; எந்தெந்த ஊர்களில் என்னென்ன மாதிரி மக்கள் வாழ்க்கைத் தரம் இருக்கிறது என்பதெல்லாம் எனக்கு ஓரளவு தெரியும். எந்தெந்த ஊர்களுக்கு என்னென்ன தேவை என்பதைப் பற்றியும் அறிவேன். மேலும் எந்தெந்த ஊர்களில் விவசாயம் நல்லபடியாக நடக்கின்றன என்பதும் தெரியும். இன்னும் ஏரி, குளங்கள் வசதியும், சாலை வசதியும் தேவைப்படுகிற ஊர்களைப் பற்றியும் அறிவேன். அதுபோல ஒவ்வோர் ஊரிலும் கல்வி வசதியும், சுகாதார வசதியும் எப்படி உள்ளன என்பதையும் அறிவேன். இதுபோல இந்தியாவைப் பற்றியும் ஓரளவு எனக்குத் தெரியும். இந்தப் படிப்பைத் தவிர, ஒரு வரைபடத்தில் குறுக்கு, நெடுக்காகப் போடப்பட்ட கோடுகளை அறிந்துகொள்வதே பூகோளம் என்றால், அந்தப் பூகோளத்தை அறிந்துகொள்வதுதான் படிப்பு என்றால், எனக்கு அந்தப் படிப்பு எல்லாம் தேவையில்லை’’ என்றார் காமராஜர். அதனால்தான் முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், ‘‘ஆறாவதுவரை படித்தவர்தானே என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருக்கும்’’ என்று புகழ்ந்திருக்கிறார். 

‘‘ஒன்றைச் செய்ய விரும்புகிறபோது அதைச் செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்’’ என்று எண்ணிய காமராஜரின் வழியை நாமும் கடைப்பிடிப்போமே!

vikatan

 
 
 
Bild zeigt 1 Person , Text
 

அக்டோபர் 2: பெருந்தலைவர் #காமராஜர் நினைவு நாள் இன்று..:

* இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்... என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்!

* 'இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்', 'அப்படி ஏன் சொல்றேன்னேன்', 'ரொம்ப தப்புன்னேன்', 'அப்பிடித்தானேங்கிறேன்', 'அப்ப பாப்போம்', 'ஆகட்டும் பார்க்கலாம்' போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!

* நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்!

* தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!

* மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!

* இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

* மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். 'எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்' என்றார்!

* தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!

* தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!

* 'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை' - காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!

* விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். 'இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.

* கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!

* ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!

* இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, 'டாக்டர் வந்தா எழுப்பு... விளக்கை அணைச்சிட்டுப் போ' என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!

  • தொடங்கியவர்
வீதிகளில் தேங்கியுள்ள நீரில் தாய்லாந்து பெண்களின் விநோத குளியல்
 

தாய்லாந்தில் சீரற்ற நிலையிலுள்ள வீதிகள் குறித்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக பெண்கள் சிலர் வீதிகளில் ஏற்பட்டுள்ள குழிகளில் தேங்கிக் கிடக்கும் நீரில் குளியலில் ஈடுபட்டுள்ளனர். 

 

1964127.jpg

 

பேங்கொக் நகரில் வசிக்கும் 'பாம்' எனும் மொடல் தாய்லாந்தின் டாக் மாகாணத்திலுள்ள மாயி ரமாத் நகரிலுள்ள தனது உறவினர்களைப் பார்க்கச் சென்றபோது வீதிகளில் உள்ள குழிகளைக் கண்டு பெரும் அதிருப்தியடைந்தார்.

 

1964126.jpg

 

இவ் வீதிகளின் நிலை தொடர்பில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அவர் தேங்கிக்கிடக்கும் நீரில் குளியலில் ஈடுபட்டார். 

 

1964124.jpg

 

அதையடுத்து, வடகிழக்கு தாய்லாந்திலுள்ள கோன் கயென் மாகாணத் திலுள்ள வயோதிபப் பெண்கள் சிலரும் இத்தகைய குளியலில் ஈடு பட்டனர். 

 

1964125.jpg

 

இவ் வீதிகள் 30 வருட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் உள்ளன என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p110a.jpg

twitter.com/skpkaruna: ஒரு குங்குமப்பொட்டுக்காரர், டி.வி நேரலையில் `கோவை, குஜராத்தாக மாறும்' என்கிறார். இவங்கதானே, `குஜராத் ஒரு சொர்க்க பூமி'னு சொல்லிட்டு இருந்தது?

twitter.com/manipmp: வீட்டில் உள்ள எல்லோரும் நம்மைக் கவனிக்க வேண்டும் என்றால், `எவர்சில்வர் பாத்திரத்தைக் கீழே போட்டாலே போதுமானது!'

twitter.com/Dhrogi: ஒருவரின் அதீத இயல்பும் சிரிப்பும் உள்ளத்தின் தனிமையை அப்பட்டமாகக் காட்டிவிடுகின்றன.

twitter.com/deena7831: மனதை ஒரு`முகம்'படுத்துவது காதல்!

twitter.com/Aruns212: வெளியூர் போய்விட்டு வந்தவன் சொன்னான், `ஊரே மாறிடுச்சு' என்று. அவனைப் பார்த்து ஊர் சொன்னது, `ஆளே மாறிட்டான்' என்று.

twitter.com/thoatta: சைக்கிள்ள எட்டு, பைக்ல எட்டு, ஏன்... கார்லகூட எட்டு போட்டுப் பார்த்திருக்கேன். ஆனா, சிரிக்கிறப்ப வாய்ல எட்டு போடுறது கீர்த்தி சுரேஷ்தான்.

twitter.com/mekala pugazh: கூடவே அழுது விடுவதும், ஆறுதல் சொல்லும் ஒரு வழிதான்.

twitter.com/thirumarant: ஹாலிவுட்ல நடிக்கப் போயிக் கிட்டு இருந்தவரைக் கூப்பிட்டு, சர்ஃப் வாங்கிட்டு வரச் சொல்லி யிருக்கார் பிரபுசாலமன். #தொடரி

p110b.jpg

twitter.com/Kozhiyaar: டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிராஃபி சேனல் எல்லாம் மிருகங்களைப் பார்த்தாவது மனிதன் திருந்தட்டும் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கப் பட்டவையோ!?

twitter.com/g4gunaa: குழந்தைகளை அடிப்பதைவிட பெரிய வன்முறை, அடித்த பிறகு வீறிட்டு அழும் குழந்தைகளை ``மூச்...சத்தம் வெளிய வரப்பிடாது'' என மிரட்டுவது.

twitter.com/Modern_tamizhli: ஒரு porn star-ஐ செலி்பிரிட்டியா ஏத்துக்குற மனம்... பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணை மனுஷியாக்கூட ஏத்துக்காத உலகில் புரட்சி பற்றி பேசுவது முட்டாள்தனம்!

twitter.com/mekalapugazh:  டி.வி என்பது, வயதானவர்களின் ஊடகமாகிவிட்டது.இளைஞர் களின் ஊடகம், இணையம் மட்டுமே என்றாகிவிட்டது.

twitter.com/VG100000: நமக்கு நடக்காத வரை எந்த விஷயத்தையும் எவ்வளவு புரிய வைத்தாலும் புரியாது.

twitter.com/bellarykishore: இவ்வளவு பெரிய கம்பெனியே என் ஒருத்தனை நம்பித்தான் ஓடுற விஷயம், மேனேஜர்கிட்ட லீவு கேட்கிறப்பதான் தெரியுது.

p110c.jpg

twitter.com/manu mechster: ``காங்கிரஸுக்கு தோல் வியே இல்லை.'' #ஈ.வி.கே.ஸ் இவனுங்க ஒரு தனி உலகத்துல வாழ்ந்துட்டு இருக்கானுங்க போல!


facebook.com/Sowmya Ragavan:

எதுக்கு எல்லாம் சுருக்குனு கோபம் வந்ததோ, அதை எல்லாம் இப்ப மிகச் சுலபமா சிரிப்போடுக் கடக்கப் பழகியாச்சு. ஆனா, அது பக்குவமா... விரக்தியானுதான் தெரியலை.

facebook.com/Aruna Raj:

ஆறு மாசத்துக்கு ஒருக்கா வந்து புரொஃபைல் பிக்சர் மட்டும் மாத்திட்டுப் போறவங்க என்னத்துக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வேற குடுக்கிறீங்க? என்ன வேணும் உங்களுக்கு எல்லாம்?

vikatan

  • தொடங்கியவர்

14495428_1143696609012365_51979100915993

இந்திய கிரிக்கெட் அணியின் மிதவேகப் பந்துவீச்சாளர் பிரவீன்குமார் பிறந்தநாள்.
Happy Birthday Praveen Kumar

  • தொடங்கியவர்

 

Glass Skyway

மிரட்டுது ஸ்கை வே!

சீனாவின் தியான்மென் மலை உச்சியில் சுற்றுலா பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சுற்றுப்பாலம். இதன் தளப்பகுதி கண்ணாடி கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால் எக்ஸ்ட்ரா த்ரிலுக்கு உத்தரவாதம்!

இந்த க்ளாஸ்வே-யில் 99 அழகிய திருப்பங்களும் உண்டு. மொத்த தூரம் ஒரு மைல்!
  • தொடங்கியவர்

14494827_1143694895679203_19939778551420

பிரபல நடிகர், இயக்குனர், கலக்கல் நகைச்சுவை மன்னர் பாண்டியராஜனின் பிறந்த தினம்.

  • தொடங்கியவர்

14449879_1143694439012582_62649049014010

இந்தியாவின் தேச பிதா, அகிம்சை வழியின் மூலம் அறப்போராட்டத்தை முன்னெடுத்து அகிலமெங்கும் புது வழி காட்டிய மகாத்மா..
#Ghandhi
சத்திய சோதனை தந்த பெருமகனார் மகாத்மா காந்தியின் பிறந்த தினம்.

நூறு ரூபாய் காமிராவும்.. காந்தி புகைப்படமும்...! - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

gandhi.jpg

றைபடிந்த பற்களும், வட்டக் கண்கண்ணாடியும் மொட்டைத் தலையும் என மார்பளவு வரையிலான தனிமனித புகைப்படமாகவே பார்க்கப்பட்ட காந்தியை, தன் மனைவி கஸ்தூரிபாயின் இறந்த உடல் கிடத்தப்பட்டிருக்க அதன் அருகில் சன்னமே உருவான காந்தியாக அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை யாரும் அவ்வளவாகப் பார்த்திருக்க முடியாதுதான். அதுமட்டுமல்ல, காந்தி தேநீர் குடிப்பது, சபர்மதியில் கஸ்தூரிபாயுடன் அமர்ந்திருப்பது என அவரது வாழ்க்கையைச் சித்திரமாக ஆவணம் செய்தது, எப்போதுமே அவரது அருகாமையில் இருந்த அவரது பேரன் கனு காந்தியின் கேமரா.

சிறு வயதிலிருந்தே சபர்மதியில் பொழுதைக் கழித்த கனுவுக்கு, புகைப்படம் எடுப்பதில் ஆர்வமிருந்ததைப் பார்த்து, அவருக்கு ஊக்கமளித்தவர் வினோபா பாவேயின் சகோதரர் சிவாஜி பாவே. ஆனால், பொருளாதார வசதியில்லாததால் முதலில் அதற்கு ‘நோ’ சொன்னார் காந்தி. பின்னொரு நாளில் பெரும் செல்வந்தரான பிர்லா, இந்த விஷயம் அறிந்து கனு காந்தியைப் பார்க்க சபர்மதிக்கு 100 ரூபாய் ரோலிஃப்ளெக்ஸ் கேமராவுடன் வந்தார். அதன் பிறகும் ஒரு கட்டளை விதித்தார் காந்தி, “கனு! நீ படம் எடுக்கலாம். ஆனால், அதற்கான எந்தவித செலவுகளையும் ஆசிரமம் ஏற்காது. மேலும், எந்தப் புகைப்படத்திலும் ஃப்ளாஷ் இருக்கக் கூடாது” என்பதுதான் அது. அன்று தொடங்கி காந்தியின் இறப்பு முடிய அவரைப்பற்றிய உலகம் அறியாத பல பக்கங்களைப் பதிவுசெய்தார் கனு.

இத்தனைக்கும் கனுவுக்குத் தேர்ந்த பயிற்சி எதுவும் இருந்ததில்லை. அவர் எடுத்த பல புகைப்படங்களைப் பத்திரப்படுத்தி சபர்மதியில் காட்சிக்காக வைத்தனர். அதன்பிறகு, காந்தியைப் பற்றிய பல ஆவணங்களில் கனு எடுத்த படம் உபயோகிக்கப்பட்டாலும் அவருக்கான கிரெடிட் பெரும்பாலானவற்றில் தரப்பட்டதில்லை. இந்த நிலையில் அக்டோபர் 1, 2016 தொடங்கி முதன்முறையாக காந்தியைப் பற்றிய இந்த அரிய புகைப்படங்கள் சபர்மதி ஆசிரமம் தவிர்த்து வெளி நகரங்களில் காட்சிக்குவைக்கப்படுகிறது. அதன் முதற்கட்டமாக பெங்களூருவில் இருக்கும் புகைப்படங்களுக்கான லாப நோக்கமற்ற அமைப்பு ஒன்றில், இவை காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இதை அடுத்து கோவா, டாகா உள்ளிட்ட நகரங்களில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கின்றன.

 

‘‘சத்தியசோதனையில் கூறப்படாத காந்தியின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இந்தப் புகைப்படங்கள் இருக்கும்’’ என்கின்றனர் ஆர்வலர்கள்.

vikatan

  • தொடங்கியவர்

பொம்மை வியாபாரிக்கு உதவ திரண்டு வந்த மலேஷியர்கள்
===================================================

டேவிட் கோலா லம்பூரில் வாழ்கிறார்.இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போகிமொன் பொம்மைகளை விற்பதே இவரது தொழில். இவரிடம் ஒருவர் 250 பொம்மைளை ஆர்டர் செய்து ஆனால் நேரில் வாங்க வராததை ஒருவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததை அடுத்து இவர் பிரபலமடைந்தார்.இவருக்கு உதவ மலேஷியர்கள் திரண்டுவந்தனர்.

இந்த நபர் 250 பொம்மைகளை விற்க முடியாமல் தவிப்பதாக ஒரு நல்ல இதயம் கொண்டவர் பேஸ்புக்கில் எழுதினார்.நீங்கள் நம்ப மாட்டீர்கள், அடுத்த இரண்டு மணி நேரத்தில் 190 பொம்மைகள் விற்பனை ஆகிவிட்டன. இந்த வயதான வியாபாரியிடம் இருந்து பலரும் பொம்மை வாங்க தொடங்கிவிட்டனர்.

இவரிடம் ஆர்டர் செய்து வாங்காமல் போனவரை பலரும் பேஸ்புக்கில் திட்டினர்.அவர் தற்போது நாளொன்றுக்கு 500 பொம்மைகளை விற்கிறார்.மனிதநேயம் மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

  • தொடங்கியவர்

14462931_1143695939012432_62233202785584

தென் ஆபிரிக்கக் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜஸ்டின் கெம்பின் பிறந்தநாள்.
Happy Birthday Justin Kemp

  • தொடங்கியவர்

பெண்!!!

14484649_1448507631832310_55704804653541

 

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்.
இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.
அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்.
சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.
“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டுமா?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை. ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.
அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள். அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்.
கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.
“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது.
“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.
அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.
“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.
ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை.
“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது.
கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்.

  • தொடங்கியவர்

14494770_1143695355679157_39688229167846

அவுஸ்திரேலியாவின் முன்னாள் சகலதுறை கிரிக்கெட் வீரரும் பின்னாளில் வெற்றிகரமான இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக விளங்கியவருமான டொம் மூடியின் பிறந்தநாள்.
இரு தடவை உலகக்கிண்ணம் வென்ற அவுஸ்திரேலிய அணியில் விளையாடிய பெருமை மூடிக்கு உண்டு.

 
  • தொடங்கியவர்

பிபிசியின் தொழில்நுட்ப காணொளி கிளிக்
=====================================

இந்தவார பிபிசியின் தொழில்நுட்ப காணொளியான கிளிக்கில்

-ஒலியைவிட வேகமாக ஓடி உலகச் சாதனையை முறியடிப்பதற்கான முயற்சி ஒன்று பிரிட்டனில் முன்னெடுக்கப்படுவது.
-ஐந்து தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் இணைந்து செயற்கை அறிவுத்திறனை உருவாக்குவதற்கு கூட்டாக செயல்பட எடுத்துள்ள முயற்சி
-ஆப்பிள் ஐ ஃபோன் 7க்குள் ஹெட்ஃபோனுக்கான துளை உள்ளது எனக்கூறி வெளியான போலி வீடியோவினால் ஏராளமானோர் ஏமாந்த கதை
-கோப்பைக்குள் பந்தைப்போட முயலும் ரோபோ, நூறு முறைக்கு பிறகு வெற்றி பெற்றுள்ளது பற்றிய தகவல்.

  • தொடங்கியவர்

 

எத்தனை பாண்டாக்கள் என்று எண்ண முடியுமா?
========================================
சீனாவின் மேற்கில் கறுப்பு வெள்ளை தோலைக் கொண்ட இருபத்து மூன்று பாண்டா குட்டிகள் முதல் தடவையாக காட்சி தந்தன.

பாண்டாக்களை வளர்க்கும் சிறப்பு நிலையம் ஒன்றில் இவை பிறந்தன.

இவற்றில் பத்து இரட்டை குட்டிகளாக இருந்தாலும் அவை ஒரே மாதிரி இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

  • தொடங்கியவர்

உடல் ஓவியமாகும் யோகாசனங்கள் - அசத்தும் பிரிட்டன் ஓவியர்! #BodyArt

Reindeer.jpg

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த எம்மா ஃபே எனும் பெண் எதையும் வித்தியாசமாக சிந்திப்பவர். வியக்கும் வைக்கும் ஓவியங்களை வரைபவர். பொதுவாக, ஓவியர்கள் ஓவியம் வரைய கேன்வாஸ் கேட்பார்கள். ஆனால், இவர் மனித உடலையே கேன்வாஸாகப் பயன்படுத்தி அசத்துகிறார்.

1987-ம் ஆண்டு பிறந்த எம்மா ஃபே, நுண்கலை (Fine art) படித்தவர். 'பாடி ஆர்ட்' கலையில் ஆர்வம் கொண்டவர். அதில் தன் திறமையைக் காட்டிவருபவர். 'இயற்கையின் அதிசயம்' என்ற தலைப்பில் வரைந்த ஓவியங்கள் மூலம், உலகளவில் சிறந்த 'பாடி ஆர்ட்டிஸ்' என்று புகழ்பெற்றார். இதற்காக வாட்டர் கலர்ஸைப் பயன்படுத்தும் எம்மா ஃபே, இதுவரை நூற்றுக்கணக்கான உடல் ஓவியங்களை வரைந்து சக ஓவியர்களையே ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

GoldenTamarind.jpg

ஓர் ஓவியம் வரைய பல மணி நேரம் உழைக்கும் எம்மா ஃபே, முதலில் மாடல்களைத் தேர்வு செய்து, எந்த நிலையில் இருந்தால் எந்த உருவம் வரையமுடியும் அதற்கு எத்தனைப் பேர் தேவைப்படுவார்கள் என துல்லியமாக திட்டமிடுகிறார். அதையே மனதிற்கு ஒரு வரைபடமாக நிறுத்திக்கொள்கிறார். அதன்படி மாடல்களை நிற்கவைத்து ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுகிறார். பிறகு அதே நிலையில் மாடல்களை வைத்து புகைப்படங்களை எடுக்கிறார். தற்போது பிரிட்டன் மக்களிடையே இவருடைய 'பாடி ஆர்ட்' புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு.

CsPm7-jW8AA3kSU.jpg

சமீபத்தில் 'Union of Yoga' என்ற தலைப்பில் எம்மா ஃபே வரைந்த ஓவியங்கள் உலகளவில் பராட்டுக்களைப் பெற்றுள்ளன. இதற்காக நீண்ட காலம் யோகா பயிற்சி மேற்கொள்ளும் மாடல்களைத் தேர்வுசெய்து, யோகா நிலையில் இருக்கும் மாடல்களின் உடலில் வரிக்குதிரை, ஜிராஃபி, குரங்கு, பாம்பு, கம்பளிப்பூச்சி, முயல் எனப் பல உருவங்களைத் தீட்டி மிரட்டியிருக்கிறார். புகைப்படங்களைப் பார்த்து 'ஆஹா... ஓஹோ...' என பாராட்டுகள் குவிவதுடன் அவரோடு செல்ஃபி எடுக்க கூட்டம் அலைமோதுகிறது.

 

 


 

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று

ஒக்டோபர் - 03

 

கி.மு. 2333 : கொஜொ­சியோன் ராஜ்­ஜியம் டங்கூன் வாஞ்­சியோம் என்­ப­வரால் உரு­வாக்­கப்­பட்­டது. இந்த ராஜ்­ஜியம் தற்­போது கொரிய தீப­கற்­பகம் என அழைக்­கப்­ப­டு­கி­றது.

 

819iraq2.jpg1739 : 3 வரு­ட­கால ரஷ்ய - துருக்கி போரின் முடிவில் ரஷ்­யா­வுக்கும் ஒட்­டோமான் பேர­ர­சுக்கும் இடையில் அமைதி ஒப்­பந்தம் ஏற்­பட்­டது.

 

1778 : பிரித்­தா­னி­யாவின் கப்டன் ஜேம்ஸ் குக் அலாஸ்­காவில் தரை­யி­றங்­கினார்.

 

1908 : பிராவ்டா செய்­திப்­பத்­தி­ரிகை லியோன் ட்ரொட்ஸ்­கி­யி­னாலும் அவ­ரது சகாக்­க­ளி­னாலும் வியென்­னாவில் வெளி­யி­டப்­பட்­டது.

 

1912 : பெஞ்­சமின் ஸெல்டென் தலை­மை­யி­லான நிக்­க­ர­குவா கிளர்ச்­சிப்­ப­டை­யி­னரை அமெ­ரிக்­கப்­ப­டைகள் தோற்­க­டித்­தன.

 

1918 : மூன்றாம் போரிஸ் பல்­கே­ரி­யாவின் மன்­ன­னாக முடி­சூ­டினார்.

 

1929 : சேர்­பியா, குரோ­ஷியா, ஸ்லோவே­னியா இணைக்­கப்­பட்டு அதற்கு யூகொஸ்­லா­விய இராச்­சியம் எனப் பெய­ரி­டப்­பட்­டது.

 

1932 :  பிரிட்­ட­னி­ட­மி­ருந்து ஈராக் சுதந்­திரம் பெற்­றது.

 

1935 : எதி­யோப்­பி­யாவை இத்­தாலி  கைப்­பற்­றி­யது.

 

1949 : அமெ­ரிக்­காவில் கறுப்­பி­னத்­த­வர்­க­ளுக்குச் சொந்­த­மான முத­லா­வது வானொலி ஜோர்­ஜியா மாநி­லத்தில் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

 

1952 : ஐக்­கிய இராச்­சியம் வெற்­றி­க­ர­மாக அணு­வா­யுதச் சோத­னையை நடத்­தி­யது.

 

1962 : சிக்மா 7 விண்­கலம் வெற்­றி­க­ர­மாக ஏவப்­பட்­டது. வொல்லி ஷீரா 6 தடவை பூமியைச் சுற்­றினார்.

 

1963 : ஹொண்­டு­ராஸில் இராணுப் புரட்சி ஆரம்­ப­மா­கி­யது.

 

1981 : வட அயர்­லாந்தின்  பெல்பாஸ்ட் நகரில் "மேஸ்" சிறைச்­சா­லையில் ஐரிஷ் குடி­ய­ரசு இரா­ணுவக் கைதி­களின் ஏழு மாத உண்­ணா­நோன்பு முடி­வுக்கு வந்­தது. இந்த உண்­ணா­வி­ர­தத்­தின்­போது 10 பேர் இறந்­தனர்.

 

819varal1.jpg1985 : அட்­லாண்டிஸ் விண்­வெளி ஓடம் தனது முத­லா­வது விண்­வெளிப் பய­ணத்தை ஆரம்­பித்­தது.

 

1990 : இரண்டாம் உலக யுத்­தத்தின் பின் பிரிந்த கிழக்கு, மேற்கு ஜேர்­ம­னிகள் மீண்டும் ஒன்­றாக இணைந்­தன. 

 

1995 : அமெ­ரிக்க கால்­பந்­தாட்ட வீரர் ஓ.ஜே. சிம்ஸன் தனது முன்னாள் மனை­வி­யையும் அவரின் காத­ல­ரையும் கொலை செய்­தமை தொடர்­பான சர்ச்­சைக்­கு­ரிய வழக்கில் நிர­ப­ரா­தி­யாக காணப்­பட்டார்.

 

1993 : சோமா­லி­யாவில்  ஆயுதக் குழு­வொன்றை முறி­ய­டிப்­ப­தற்­கான முற்­சியில் 18 அமெ­ரிக்கப் போர்­வீ­ரர்­களும் 1,000 சோமா­லி­யர்­களும் கொல்­லப்­பட்­டனர்.

 

1995 : அமெ­ரிக்க கால்­பந்­தாட்ட வீரர் ஓ.ஜே.சிம்ஸன், தனது முன்னாள் மனைவி உட்­பட இரு­வரை கொலை செய்த வழக்கில் நிர­ப­ரா­தி­யென தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டார்.

 

2001 : பங்­க­ளா­தேஷின் நாடா­ளு­மன்றத் தேர்­தலில் பேகம் காலிதா ஷியாவின் பங்­க­ளாதேஷ் தேசியக் கட்சி வெற்றி பெற்­றது.

 

2009 : அஸர்­பைஜான், கஸ­கஸ்தான், கிரி­கிஸ்தான், துருக்கி ஆகியன இணைந்து துர்கிக் கவுன்ஸிலை ஸ்தாபிப்பதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

 

2013 : இத்தாலிக்கு அருகில் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகொன்று கவிழ்ந்ததால் 134 பேர் உயிரிழந்தனர். 

 

2013 : பொதுநலவாய அமைப்பிலிருந்து காம்பியா விலகியது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

”தோனி ஆட்டோகிராஃப் போட்டால் என்ன எழுதுவார் தெரியுமா?!” #MorningMotivation

இன்ஸ்பிரேஷன்... எங்க இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். சரியான நேரத்துக்கு வரும் நம்ம பக்கத்து டேபிள் நண்பரிடம் இருந்தோ, தெள்ளத் தெளிவாக பேசும் மாணவரிடம் இருந்தோ, ஸ்மார்ட் வொர்க் செய்யும் நம்ம பாஸிடம் இருந்தோ...  எப்போதும் வேண்டுமானாலும் நமக்கான மோடிவேஷன் இருக்கலாம். அதை நாம புரிஞ்சு எடுத்துகிட்டா  நமக்கு சக்சஸ் தான் பாஸ்.

collage.jpg

 

இங்க ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்ற நபர்களிடம் சக்சஸ் வார்த்தையை கவனமா நோட் பண்ணிக்கோங்க. உங்களுக்கான இன்ஸ்பிரேஷன் வார்த்தைகள் இவர்களிடம் கூட இருக்கலாம். 

 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் : 

ரஹ்மான் எல்லா வகை இசையையும் விரும்புவார். ஒரே ஒருவருக்குப் பிடித்திருந்தாலும் அது நல்ல இசைதான் என நம்புபவர். பிற இசையமைப்பாளர்களைக் கண்டால் அவரது இசையில் தன்னைக் கவர்ந்த பாடலின் இசைக்கோர்ப்பைத் தயக்கம் இல்லாமல் பாராட்டுவார்! ஈகோ இல்லாதவர் ரகுமான். "ஓபன் மைண்டா இருங்க. உங்களை சுத்தி நடக்கறத கவனமா பாருங்க. எடுத்ததுமே எதுலயும் முழுமையா கத்துக்க முடியாது. உங்க டிராவலில் இருந்துதான் எல்லாத்தையும் கத்துக்கவே முடியும். கத்துகிட்டே இருங்க" என்கிறார் ரகுமான். 

 

எழுத்தாளர் அருந்ததி ராய் : 

அருந்ததி ராய் புக்கர் பரிசு வென்றதும், 'இது ஐந்து நீதிபதிகளின் தீர்ப்பு. ஒருவேளை வேறு ஐந்து பேர் நீதிபதிகளாக இருந்திருந்தால், வேறு ஒரு புத்தகம் தேர்வாகி இருக்கும். அதனால், என் புத்தகம் மட்டும்தான் சிறந்தது என்று நான் கருதவில்லை!' என்பது அருந்ததியின் பதில் மரியாதை!

"மற்றொரு மாற்று உலகம் சாத்தியமானது மட்டுமல்ல, நான் அதை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருக்கிறேன். ஓர் அமைதியான நாள் ஒன்றில், என் பயணத் தின் மூச்சுக் காற்றை நான் உணர்கிறேன்' என நம்பிக்கை வார்த்தைகள் விதைக்கிறார் ராய்.

 

நடிகர் ஷாரூக் கான் : 

இந்திப் பாடத்தில் அடிக்கடி ஃபெயில் ஆகும் மக்கு மாணவன். 'இந்தியில் முதல் மதிப்பெண் எடுத்தால்தான் படம் பார்க்க அழைத்துச் செல்வேன்’ என்ற அம்மாவின் தூண்டுதலில், இந்திப் பாடங்களில் பாஸ் பண்ணியவர் தான் இந்தி நடிகர் ஷாரூக் கான். "உங்ககிட்ட இருக்கும் பவரை கண்டுபிடிங்க. அந்த பவரை சார்ஜ் பண்ண வொர்க் பண்ணுங்க. தோல்வி அடைஞ்சு அடிப்பட்டு பயப்படாமா இருந்தீங்கன்னா தான் அந்த பவர் இன்னமும் அதிக சார்ஜ் ஆகும். நான் என் பவரை கண்டிபிடிச்சதால் ஒரு ஸ்டார் ஆனேன். நீங்க?" என்கிறார் ஷாரூக். 

 

இயக்குநர் ராஜமௌலி : 

பல வெற்றி படங்களை கொடுத்தும் ராஜமௌலி, தன் தலைக்கு மேல் ஒளிவட்டத்தை ஏற்றிக்கொள்ளவில்லை. 'எந்த சினிமா ஜெயிக்கும், எது ஜெயிக்காதுன்னு இங்கே யாருக்குமே தெரியாது; எனக்கும் தெரியாது. என்னை நம்பி தயாரிப்பாளர் பணம் போடுறார். படம் ஜெயிக்கணும்னு என்னோட உச்சபட்ச உழைப்பைக் கொடுக்கிறேன். அவ்வளவுதான் விஷயம். வேறு எந்த சக்சஸ் ஃபார்முலாவும் என்கிட்ட இல்லை!’ என்கிறார் ராஜமௌலி சிம்பிளாக!

 

செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் : 

ஆனந்தின் ரோல் மாடல், மகாத்மா காந்தி. அவரைப்போல, ஆனந்துக்கும் அன்புதான் ஆயுதம். இதுவரை எந்த செஸ் வீரரையும் விமர்சித்தோ, திட்டியோ பேட்டி கொடுத்ததே இல்லை. எப்போதும் பாஸிட்டிவ் பதில்தான். "விளையாட்டோ, வேலையோ எதையும் என்ஜாய் செய்து செய்தால் அதுவே நமக்கான வெற்றியின் வேட் வே." என்கிறார் ஆனந்த்.

 

நடிகை தீபிகா படுகோன் :

'சினிமாவுக்கு உன் முகம் செட்டாகாது' என சொல்லப்பட்டவர் தான் தீபிகா படுகோன்! "என் போட்டோவை பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்கிட்ட கொடுத்து நடிக்க வாய்ப்பு கேட்டேன். `இந்த முகத்துக்கெல்லாம் சினிமாவா..?’ என அவ மானப்படுத்தி கிண்டல் செய்தார்கள். ஆனாலும் விடாது முயற்சித்து வாய்ப்பு தேடி படிப்படியாகத்தான் முன்னேறினேன். நான் அவமானத்தை மட்டும் நினைச்சுட்டு இருந்தேன்னா.. உங்கமுன்னாடி நின்னுட்டு இருக்க மாட்டேன்." என்கிறார் இந்தியாவின் நம்பர் ஒன் நடிகை. 

 

கிரிக்கெட் பிளேயர் தோனி : 

செல்ஃபி சீஸனுக்கு முன் ஆட்டோகிராஃப் கேட்டால் 'Never Give Up' என எழுதிக் கையெழுத்திடுவார். தோனியை பற்றி விமர்சனம் வரும்போது எல்லாம் 'நான் வீட்டில் மூன்று நாய்களை வளர்க்கிறேன். நான் போட்டியில் தோற்றாலும் சரி, ஜெயித்தாலும் சரி, அவை என்னிடம் ஒரே மாதிரிதான் நடந்துகொள்கின்றன!’ என்பார். வெற்றியோ, தோல்வியோ எப்போதும் ஒரே மாதிரி இருங்க. இதுதான் இந்த ஸ்டெட்மென்ட் அர்த்தம். 

 

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.