Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

14650489_1150106061704753_85790614456399

பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கமெரொனின் பிறந்தநாள்.
ஈழத்துத் தமிழர் மத்தியிலும், பிரித்தானியாவில் வாழும் சிறுபான்மையினர் மத்தியிலும் அபிமானம் பெற்று விளங்கும் தலைவர் இவர்.
மிககனவான் தன்மையுடன் பதவியிலிருந்து விலகிய கமெரோன் அரசியலில் இருந்தும் விலகுகிறார்.

Happy Birthday David Cameron

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அக்டோபர் 9: சே குவேரா நினைவு தினம் இன்று (1967)

''கோழைகளே... என்னைச் சுடுங்கள்.. உங்களால் ஒரு மனிதனைத் தான் கொல்ல முடியும். ஒரு புரட்சிக்காரனை அல்ல...!'' என்று கூறிய சே குவேரா நினைவு தினம் இன்று..

14606320_1250470688345052_33615690110075

 

‘சே’ என்னும் மந்திரச் சொல்!

che1.jpg

‘‘சாவைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும், அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும்’’ என்று முழங்கியவர் சேகுவேரா. அவருடைய நினைவுத் தினம் இன்று.

அப்போது ‘சே’வுக்கு 27 வயதுதான். கியூபா தனது சொந்த நாடு என்ற காரணத்தினால் ஃபிடல் காஸ்ட்ரோ போராடிய வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால், ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு தேசத்தில் அந்த நாட்டு மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம்வைத்து ஆயுதம் எடுப்பது என்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. இந்தக் காரணத்தால்தான் சேகுவேரா மனிதருள் மாணிக்கமாகப் போற்றப்படுகிறார்.

1958-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புரட்சிப் படை ஹவானாவுக்குள் ஊடுருவியபோது, கியூபா முழுவதும் காஸ்ட்ரோவிடம் வந்துசேர்ந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றி உலக நாடுகள் அனைத்தையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அப்போது, ‘டைம்’ பத்திரிகையானது இவ்வாறு ஒரு தலையங்கம் எழுதியது. ‘புரட்சிகளின் மூளை சே’ என்று.

கியூபா விடுதலையடைந்து காஸ்ட்ரோ அதிபர் ஆனபிறகு, ‘சே’ விவசாயத் துறையின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின், கியூபா தேசிய வங்கியில் தலைவராக நியமனம் செய்யப்பட்டு ரூபாய் நோட்டுகளில் ‘சே’ எனக் கையெழுத்திடும் அளவுக்கு உயர்ந்தார். பின், தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவ்வளவு பதவிகள் வகித்தபோதும் எப்போதும் தன்னை ஒரு சராசரி குடிமகனாகவே நினைத்து விவசாயம் செய்துவந்தார். சேகுவேராவுக்கும் ஃபிடலுக்கும் இடையே யுத்தத்துக்கு முன்னும், பின்னும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் நட்பை உயிரினும் மேலாகப் போற்றி வந்தனர்.

‘‘அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை, ஒரு மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதியாக தன்னால் வேரறுக்க முடியும்’’ என்று ஒருமித்த மனதோடு நம்பினார். கியூபாவுக்கு ஆயுதங்கள் தருவதாக ரஷ்யா சொன்னபோது, ‘‘ரஷ்யாவின் ஆயுதங்கள் கியூபாவில் இறங்கினால், அவைகள் அமெரிக்காவின் பெருநகரங்களைக் குறிவைக்கும்’’ என்று தைரியமாகச் சொன்னார் ‘சே’. இதற்குக் காரணம், கியூபா மீது அமெரிக்கா போட்ட பொருளாதாரத் தடையே ஆகும். அமெரிக்க தனியார் தொலைக்காட்சி ஒன்று, நேர்காணலுக்காக ‘சே’வை அழைத்தது. அதில், ‘‘அமெரிக்கா ஒரு ‘கழுதைப்புலி.’ அதன், ஏகாதிபத்தியத்தை நான் அடியோடு கருவறுப்பேன்’’ என்று அமெரிக்க மண்ணிலேயே கம்பீரமாக கர்ஜித்தார்.

‘சே’வின் கடைசி நிமிடங்கள்!

1967 அக்டோபர் 8-ம் தேதி காலைவேளையில்... யூரோ கணவாயை கெரில்லா வீரகளுடன் கடந்துசென்றார் சே. அங்கு ஆடு மேய்க்கும் பெண்ணின் மீது பரிதாபப்பட்டு 50 பெஸோக்களைப் பரிசளித்தார். நண்பகல் வேளையில் அந்தப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்தார். ‘சே’வைச் சுற்றி வளைத்த ராணுவம் சரமாரியாகச் சுட்டுத்தள்ளியது. பதிலுக்கு, கெரில்லா வீரர்களும் தாக்குதல் நடத்தினர். ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ‘சே’வின் காலில் குண்டடிப்பட்டது. அப்போது, ‘சே’ சொன்னார்... ‘‘நான் இறப்பதைக் காட்டிலும் உயிரோடு இருப்பதுதான் உங்களுக்குப் பயன் தரும்’’ என்று.

குண்டடிப்பட்ட ‘சே’வை, வீரர்கள் கைத்தாங்கலாக அழைத்துச்சென்று பள்ளிக்கூடம் ஒன்றில் தங்கவைத்தனர். ‘சே’, கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், அவருக்கு அந்தப் பள்ளிக்கூடத்தில் உணவுகொடுத்துப் பேசிக்கொண்டிருந்த ஆசிரியை ஜூலியஸ் கோர்ட்டஸ் என்னும் 19 வயது பெண்மணியிடம், பள்ளிக்கூடச் சூழலைப் பார்த்துவிட்டு இவ்வாறாகச் சொன்னார். ‘‘இதுபோன்றச் சூழலில் எப்படிக் குழந்தைகள் இங்கு படிப்பார்கள்? ஒருவேளை நான் பிழைத்தால், உங்களுக்கு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருவேன்.’’ ‘சே’ எப்போதும் ஒரு புரட்சியாளர்தான். ஆம், மக்களுக்கான புரட்சியாளர் அவர்.

‘‘ ‘சே’வைச் சுட்டுக்கொல்ல வேண்டும். யார் அந்தக் காரியத்தை செய்கிறீர்கள்’’ என்று கேட்டபோது, ‘மரியோ ஜேமி’ என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அந்தக் கொடும்செயலைச் செய்வதற்கு ஒப்புக்கொள்கிறான். கைகள் கட்டப்பட்ட நிலையில் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ‘சே’, ‘‘மண்டியிட்டு உயிர்வாழ்வதைவிட நின்றுகொண்டு சாவது எவ்வளவோ மேல்’’ என்றார். ஆனால், அந்த ராணுவ வீரனோ, ‘சே’ வை ஒரு கோழைபோல் கொல்வதற்குத் தயாரானான்.

‘‘கடைசி நிமிடத்தில்கூட என்னை நிற்கவைத்துச் சுடுங்கள்’’ என்றார் ‘சே’. ஆனால், அந்தக் கோழையோ ‘சே’வின் பார்வையைக்கூட நம்மால் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ள முடியாது என்ற காரணத்தினாலோ என்னவோ, அந்த மாவீரர் சொன்னதை அலட்சியப்படுத்தினான் ராணுவ வீரன்.

“கோழையே... நீ சுடுவது ஒரு ‘சே’வை அல்ல. ஒரு சாதாரண மனிதனைத்தான்” என்று இதயம் கிழிக்க, கண்கள் மின்ன தன்னுடைய கடைசி வார்த்தைகளை உமிழ்ந்தார் ‘சே.

che2.jpg

எந்தத் தேசம் அவரை அழிப்பதில் தீவிர முனைப்புக் காட்டியதோ, எந்தத் தேசம் அவர் வரலாற்றை முழுவதும் அழிக்க வேண்டும் என்று எண்ணியதோ, அந்தத் தேசத்தில்தான் இன்று ‘சே’வின் முகம் பதிக்கப்பட்ட பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன. எந்தத் தேசம் அவர் பெயரைக் காற்றில் கரைந்துபோக நினைத்ததோ, அந்தப் பெயர்தான் உலகம் முழுவதும் காற்றில் கலந்து கோடிக்கணக்கான இளைஞர்களின் தாரக மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது.

கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலையில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா? ‘‘ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்களாக இருந்தனர். நாங்கள் ‘சே’வைப்போல இருப்போம்!”

“விளைவுகளை ஏற்படுத்தாத எந்த ஒரு சொல்லும் வீணானது’’ என்பதே அவர் அடிக்கடி சொல்லும் முழக்கம். ஆம்... அவர் அழிக்கப்படவில்லை. ‘சே’ எனும் சொல்லாக வாழ்ந்துகொண்டிருக்கிறார், மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்த!

vikatan

  • தொடங்கியவர்

பெண்ணைப் போல என்றால் என்ன?

 

 
pen_004_3038787f.jpg
 

‘பொம்பளை பொம்பளையா இருக்கணும்’, ‘பொம்பளை மாதிரியா நடந்துக்குற?’, ‘பொம்பளைன்னா என்னனு தெரியுமா உனக்கு?’ - இப்படிப் பெண் என்கிற சொல்லே ஒரு குறியீடாகப் பிரயோகிக்கப்படுகிறது. எப்போதெல்லாம் ஒரு பெண் ‘பெண்’ணாக நடந்துகொள்ளும்படி நிர்பந்திக்கப்படுகிறார்? நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, யார்க்கும் அஞ்சாத நெறிகளைப் பெண்கள் வென்றெடுக்கும்போதெல்லாம் அது அவர்களுக்கான பண்புகள் அல்ல எனச் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், ஆண்களிடம் இத்தகைய பண்புகள் காணப்படும்போதெல்லாம் அவர்கள் போற்றிப் புகழப்படுகிறார்கள்.

எப்படிச் செய்துகாட்டுவது?

நம் சமூகச் சூழலில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் இதே நிலைமைதான் என்பதை நிரூபித்திருக்கிறது ஓர் அமெரிக்க விளம்பரப் படம். பிரபல அமெரிக்க நிறுவனமான பி அண்டு ஜி (P&G) தங்களுடைய தயாரிப்பான ‘ஆல்வேஸ்’ (always) சானிட்டரி நாப்கின்னை விளம்பரப்படுத்த ஆவணப்பட பாணியில் குறும்படம் ஒன்றைத் தயாரித்திருக்கிறது. ‘டூ திங்க்ஸ் லைக் எ கேர்ள்’ (Do Things ‘Like A Girl’) என்கிற இந்தப் படத்தில் சில விளம்பர மாடலிங் பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள், ஆண்கள் அழைக்கப்படுகிறார்கள். எல்லோரிடமும் “பெண்ணைப் போலச் செய்துகாட்டு எனச் சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்?” என்கிற கேள்வியை அடிப்படையாக வைத்துப் பெண்ணைப் போல ஓடு, பெண்ணைப் போலச் சண்டையிடு, பெண்ணைப் போல ஒரு பொருளைத் தூக்கி எறி எனச் சொல்லப்படுகிறது.

திணிக்கப்படும் ‘பெண்மை’

இந்தச் செயல்களை இளம் பெண்கள் வலுவில்லா மல், நளினமாக, சொல்லப்போனால் பலவீனமாகச் செய்துகாட்டுகிறார்கள். படப்பிடிப்பில் பங்குபெறும் ஓர் ஆணும் சிறுவனும்கூட முகத்தில் கேலியும் கிண்டலுமாகப் பெண்களைப் போல இந்தக் காரியங்களை நடித்துக்காட்டுகிறார்கள். ஆனால், பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமிகளிடம் “பெண்ணைப் போல ஆடு- ஓடு- சண்டையிடு” எனச் சொன்னதும் தங்களுக்குள் இருக்கும் அத்தனை ஆற்றலையும் திரட்டி, குழந்தைகளுக்கே உரிய சுறுசுறுப்போடு அச்சமின்றி கம்பீரமாகச் செய்து காட்டுகிறார்கள்.

இதில் கவனிக்க வேண்டியது இந்த விளம்பரப் படத்தில் நடிக்க வந்த சிறுவனோடும் சிறுமிகளோடும் படத்தின் பெண் இயக்குநர் நடத்தும் உரையாடல். “பெண்ணைப் போல ஓடு எனச் சொன்னதும் நீ என்ன நினைத்தாய்?” எனக் கேட்டதும், “உன்னால் முடிந்தவரை வேகமாக ஓடு என்கிறீர்கள் என நினைத்தேன்” என்கிறார் ஒரு சிறுமி.

“இப்போது நடித்துக் காட்டும்போது உன்னுடைய அக்காவை அவமதித்தாய் அல்லவா?” என பெண்ணைப் போல நடித்துக்காட்டிய சிறுவனிடம் கேட்டதும், “ஆமாம் சிறுமிகளை அவமதித்தேன்…ஆனால் என் அக்காவை அல்ல” என பதிலளிக்கிறான். ஆக, வளரிளம் பருவம்வரை பெண் குழந்தைகள் இயல்பாக நினைத்ததைத் தனித்துவத்தோடு செய்கிறார்கள். ஆனால், பருவமடையும்போது பெண்ணின் தன்னம்பிக்கை, உடல் பலம், மன பலம் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.

அதைத் தொடர்ந்து பெண்மை என்பது மென்மை, பலவீனம், பயம், நாணம் என அடுக்கடுக்காகப் பல விஷயங்கள் செயற்கையாகத் திணிக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில் தாழ்வுமனப்பான்மை உண்டாக்கப்படுகிறது. இத்தகைய கற்பிதங்களைத் தகர்த்தெறிந்து, ‘பெண்ணைப் போல’ என்றதும் ‘நானாக நான் இருப்பேன்’ என உரக்கச் சொல்லுங்கள் என்கிறது இந்த விளம்பரப்படம்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

வீடியோ பதிவை தொந்தரவு செய்த பட்டாம்பூச்சியுடன் நட்பான கோலா!

  • தொடங்கியவர்

14641892_1150104488371577_16614842601595

உலகின் மிகச் சிறந்த டெஸ்ட் விக்கெட் காப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படும் இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜெயவர்த்தனவின் பிறந்தநாள்.
Happy Birthday Prasanna Jayawardene
அண்மைய நாட்களில் இளைய வீரர்களின் வருகை இவரை டெஸ்ட் அணியிலிருந்து வெளியேற்றி வைத்துள்ளது.

  • தொடங்கியவர்
 
 
 
Bild zeigt 1 Person
 

உலக தபால் தினம்! சாமானியனின் வாகனம்-தபால் #WorldPostDay

இன்றைய தொழில்நுட்பயுகத்தில் ஒருவரை தொடர்பு கொள்ள இ-மெயில்,வாட்ஸ் அப்,ஃபேஸ்புக் என பல சமூக வலைதளங்கள் உதவுகின்றன. இவை ஓர் தகவலை மின்னல் வேகத்தில் பலரிடம் கொண்டு போய் சேர்க்கும் வல்லமை படைத்தது.ஆனால் 100 வருடங்களுக்கு முன்பு நிலைமை தலைகீழ்.அனைவரும் அறிந்த ஒரே போக்குவரத்து கடிதவழி போக்குவரத்து.இதில் சிலர் கடிதம் எழுதுவதில் கவிகளாக விளங்கினர்.கிராம மக்களில் பலர் கடிதம் வந்தால் ஏதோ தவறான செய்தி என்று அஞ்சினர்.இந்த கடிதவழி போக்குவரத்துக்கு முக்கியமான நாடு அன்றைய பிரிட்டன் ஆகும்.1653-ல் Longueville மாகாண Minister Fouget என்ற தபால் அதிபரின் யோசனைபடி தபால் பெட்டி உருவாக்கப்பட்டது."சார்லஸ் ரீவிஸ் என்பவர் தபால் பெட்டிக்கான மாதிரி வடிவத்தை அமைத்தார்.சாதாரணமாக தபால்பெட்டிகள் அதிகபட்சம் 5 1/4 அடி உயரத்தையும், குறைந்தபட்சம் 4 அடி உயரத்தையும் கொண்டவையாக வடிவமைக்கபட்டன.

முத்திரை:-

தபால் கவரின் மீது தேதி பொறிக்கப்பட்டு அடிக்கப்படுமப்ஒட்டும் தன்மையுள்ள முத்திரைகளும் ஒரே அளவைக் கொண்ட தபால் கட்டணமும் "ஜேம்ஸ் சாமேர்ஸ்"(James Chalmers) என்பவரால் 1834-ல் முன்வைக்கப்பட்டது.

தபால்தலை:-

ஒரு குறிப்பிட்ட தொலைவு கடித பயணத்துக்கு அனைத்து தபால்நிலையங்களிலும் ஒரே சீரான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் எனும் சாமேர்ஸ் கருத்து 1839 நாடாளுமன்றத்தால்ஏற்றுக்கொள்ளப்பட்டது.முதன்முதலில் 1840-ம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்ட முன்கட்டணத் தபால் தலை வெளியிடப்பட்டது.முதலாவது தபால் தலை வெளியிட்ட காரணத்தினால் அனைத்து உலக நாடுகளும் பயன்படுத்தும் வகையில் தபால் தலை வெளியிடும் நாட்டின் பெயர் ரோமன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும்,ஆனால் பிரிட்டன் இதற்கு விதிவிலக்கு.இன்று வரை முத்திரையில் நாட்டின் பெயரை குறிப்பிடாமல் அச்சிடும் ஒரே நாடு பிரிட்டன் மட்டுமே.

1874 அக்டோபர் 9 தேதி சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில்"சர்வதேச தபால் ஒன்றியம்" (Universal Postal Union) என்ற அமைப்பினை பல நாடுகள் சேர்ந்து ஏற்படுத்தின. இதை நினைவு கூறும் விதமாக 1969 ஆண்டு கூடிய நாடுகள் அக்டோபர் 9 தேதியினை "உலக தபால் தினம்" என அறிவித்தன.இந்தியாவில் அக்டோபர் 9-15 தேதி வரை தபால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.

தபால் குறியீட்டு எண்:

முதன்முதலில் தபால் குறியீட்டு எண்களை அறிமுகப்படுத்திய நாடு ஜெர்மனியே ஆகும். நம் நாட்டில் தபால் குறியீட்டு எண்ணாக ஆறு இலக்கம் கொண்ட எண்கள் பயன்படுத்தப்படுகின்றன.நம் அண்டை நாடான இலங்கையில் ஐந்து இலக்க எண்ணே பயன்படுத்தபடுகின்றன. இந்த எண்களின் மூலம் ஒர் நாட்டில் தபால் நிலையம் எங்கிறுந்தாலும் எளிமையாக கண்டுபிடிக்க மடியும்.

இந்தியாவும்-தபாலூம்:-

இந்தியாவில் தற்போது 1.54 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில் கிராமத்தில் மட்டும் 1.39 லட்சம் தபால் நிலையங்கள் கிராமத்து காற்றை சுவாசித்து இயங்குகின்றன. இந்திய தபால் நிலையங்கள் மொத்தம் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து லட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றன. தற்போது புதிதாக உருவாக்கப்படும் 650 பேமென்ட் வங்கி கிளைகள் கிராமப்புற வங்கிகளுடன் இணைக்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஜீலை மாதம் தெரிவித்திருந்தார்.

நம் நாட்டில் தபால்நிலையங்களில் ரிஷிகேஷ் கங்கை நீர் 200ml ₹15 எனவும், 500 ml ₹ 22 எனவும் வசூலிக்கப்படும் அதே சமயத்தில் கங்கோத்ரி நீரினை 200 ml ₹ 25-க்கும், 500m ₹35க்கும் விற்கும் விற்பனையாளர்களாகவும் தபால் நிலையங்கள் செயல்படுகின்றன.கங்கை நீரினை பிரித்து அனுப்பும் பணி உத்தரகாண்ட் மாநில தபால் துறை ஊழியர்கள் உடையது.

இந்தநாளில் காதோடு கவி பேசும் கடிதாசி சேவையை போற்றுவோம்..!!

vikatan

இன்று உலக தபால் தினம்!

 

 

றிவியலின் வளர்ச்சியால் உலகில் நாள்தோறும் எண்ணற்ற மாற்றங்கள். இன்டர்நெட், இமெயில், ஃபேக்ஸ், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்று பலவகையான நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இன்றைய அறிவியல் உலகம் சுருங்கிவிட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும் நேரடியாகவே அனைத்துச் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும், ஆடியோக்களும் பரிமாறப்படுகின்றன. ஆனால், பழங்காலத்தில் இத்தகைய வசதி எதுவும் இல்லை. முதலில் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள ஓலை பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு, காகிதத்தின் வரவால் தபால் உபயோகப்படுத்தப்பட்டது. அத்தகைய தபால் தினம் இன்று.

அறிவியல் தொழில்நுட்பத்தால் இன்றைய தலைமுறையினர் தபால் எழுதுவதையே முற்றிலும் குறைத்துவிட்டனர். இதனால் அவர்களிடம் சுயமாகக் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது. இருப்பினும், அவர்களுடைய தினசரி வாழ்க்கையில் தபால் துறை ஏதாவது ஒரு வழியில் முக்கியப் பங்காற்றுகிறது. தற்போது அலுவலக தொடர்பான கடிதங்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியைத் தபால் துறையே செய்துவருகிறது.

 

post2.jpgஉலக தபால் அமைப்பானது, 1874-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் இந்தியாவும் அங்கத்தினராக உள்ளது. உலக தபால் அமைப்பை நினைவுபடுத்தும் விதமாக 1969 அக்டோபர் 9-ம் தேதி உலக தபால் தினம் அறிவிக்கப்பட்டது. இந்தத் துறையின் சேவைகளைப் பாராட்டும் விதமாகவும், இதன் திட்டங்கள் பற்றியும் மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. நம் நாட்டில் 1764-ம் ஆண்டு தபால் துறை தொடங்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற காலத்தில் 23 ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது இந்தியாவில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் உள்ளன. இதில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் கணினி மையமாக்கப்பட்டு உள்ளன. உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய தபால் துறை விளங்கிவருகிறது. இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில், அக்டோபர் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தபால் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆறு இலக்க அஞ்சல் குறியீட்டு எண்களைக்கொண்டு ஒவ்வோர் ஊர்களுக்கும் தபால்கள் அனுப்பப்பட்டு உரியோரிடம் சேர்க்கப்படுகிறது. பதிவுத் தபால், விரைவுத் தபால், இ-போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ் தவிர, ஸ்டாம்ப் விற்பனை, சேமிப்புக் கணக்குகள் போன்றவற்றையும் தபால் துறை செய்துவருகிறது. தற்போது 24 மணி நேரமும் செயல்படும் தபால் நிலைய ஏ.டி.எம் மிஷின்களும் உள்ளன. தந்திப் பிரிவு செயல்பாட்டில் இருந்தபோது அது, தபால் துறையிடம் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இளையத் தலைமுறையினர், தபால் மூலமும் செய்திகளை அனுப்பலாமே?

  • தொடங்கியவர்

%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றின் போது Glenn maxwell லினால் பிடிக்கப்பட்ட மிக சிறந்த பிடிஎடுப்பு.

 

 

 

  • தொடங்கியவர்

கறுப்புத் துணிகளை வாங்கிய பக்தவத்சலம்! பிறந்த தின சிறப்புப் பகிர்வு

 

 

201604191100091827_m-bakthavatsalam-birt

“எனது தமிழாசிரியர் உ.வே.சாமிநாத ஐயர். ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர்” என்றவர் தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம். அவருடைய பிறந்த தினம் இன்று.

‘பல்கலைக்கழகப் படிப்புக்குச் சமமானவர்!’
‘‘இவரோடு பழகுவது பல்கலைக்கழகத்தில் படிப்பதற்குச் சமமானது’’ என்று கூறியுள்ளனர், இவருடைய நெருக்கமானவர்கள். சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு இலக்கணம் வகுத்தவர்; எதிர் தரப்பினரின் மனம் புண்படாமல் தனது கருத்தைப் பதிவுசெய்வதில் வல்லவர்; ராஜாஜி தன்மேல் வைத்த நம்பிக்கைக்குரியவராக வாழ்ந்தவர்; பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மை, தூய்மையைக் கடைப்பிடித்தவர். அதனால்தான், “பொதுவாழ்விலும் இருந்துகொண்டு தூய்மையாகவும் இருக்க முடியும் என்னும் உண்மையை வாழ்ந்துகாட்டுபவர் பக்தவத்சலம்” என்றார் முன்னாள் மத்திய அமைச்சரான ஓ.வி.அளகேசன்.

கறுப்புத் துணிகளை வாங்கினார்!
ராஜாஜி மந்திரி சபையில், அமைச்சராக இருந்தசமயம் அரக்கோணத்துக்குப் பேசச் சென்றார் பக்தவத்சலம்.  அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் அவருக்கு கறுப்புத் துணியை வீசி எறிந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். உடனே, அவர்களை அழைத்து அவர்களிடம் இருந்த கறுப்புத் துணிகளை வாங்கிக்கொண்டு, ‘‘உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டேன். முதலமைச்சரிடமும் கூறுகிறேன்’’ என்றார். அவர்களும் அமைதியாகக் கலைந்துசென்றனர். அப்படிப்பட்ட நன்மதிப்புக்குரியவர் பக்தவத்சலம்.

1960-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச் சென்றுவந்த பக்தவத்சலம், ‘‘இன்னும் இரு ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றிவிட்டால், நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம்’’ என்று அப்போதே நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.

‘பணம் கொடுப்பவர் பெயரில் மட்டுமே கல்லூரி ஆரம்பிக்கப்படும்’ என்று பக்தவத்சலம் காலத்தில் ஒரு திட்டம் இருந்தது. அதைப் பார்த்த பெரியார், ‘‘இது நல்ல திட்டம். ஆனால், பணத்துக்கு நான் எங்கே போவேன்? திருச்சியில் எனக்கு இருக்கும் நிலத்தைத் தருகிறேன். ஒரு கல்லூரி தொடங்குங்கள்” என்றார். அப்படிப் பிறந்த கல்லூரிதான் திருச்சி ஈ.வெ.ரா. அரசுக் கலைக் கல்லூரி.

இந்திய அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நேரத்தில், “கோயிலில் இருக்கும் தங்கக் குடங்களை நாட்டுக்குத் தரக் கூடாதா?” என்று கேட்டவர் பக்தவத்சலம்.

 

220.jpg‘விஷக் கிருமிகள் பரவிவிட்டன!’
பக்தவத்சலத்துடைய துரதிர்ஷ்டம் அவர் முதலமைச்சர் பதவி வகித்த காலத்தில் உணவு தானியங்களுக்குத் தட்டுப்பாடு வந்தது. சாஸ்திரி அரசின், ‘இரவில் உணவகங்கள் திறக்கக் கூடாது’ என்கிற ஆணையை அப்படியே நிறைவேற்றியதும் மக்களிடையே கொந்தளிப்பைக் கொண்டு வந்தது. உணவுப் பொருட்களின் விலை எகிறி நின்றது. தேர்தல் காலத்தில், ‘பக்தவத்சலம் அண்ணாச்சி... அரிசி விலை என்னாச்சி’ என்று எதிர்க் கட்சிகள் கோஷம் போட்டன. 1967 தேர்தல் தோல்விக்கு பக்தவத்சலத்தைக் குறை கூறியவர்களும் உண்டு. எனினும், தேர்தல் முடிவு குறித்து பத்திரிகையாளர்களிடம் அவர் சொன்னது, “தமிழ்நாட்டில் விஷக் கிருமிகள் பரவிவிட்டன” என்றுதான்.

சொந்த ஊரிலிருந்த தனது பூர்வீக வீட்டை ஒரு நூலகமாக மாற்ற கருணாநிதி முடிவெடுத்து, அதைத் திறந்துவைக்க அழைத்தது பக்தவத்சலத்தைத்தான். மதுரையில் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவுக்கு பக்தவத்சலத்தை (அவருடைய கடைசிக்காலத்தில்) அழைத்தார் பி.டி.ராஜன். அவருடைய உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, “இந்தத் தள்ளாத வயதில், உடல் நலமும் சரியில்லாத நிலையில், மதுரைக்குச் செல்ல வேண்டாம்” என்று கூறினர், அவருடன் உடனிருந்தோர். ஆனால், அதை எதையும் பொருட்படுத்தாத அவர், அந்த விழாவுக்குச் சென்று உரையாற்றினார்.

மிகவும் எளிமையானவராகவும் எதிர்க் கட்சியினரும் விரும்பும் தலைவராகவும் விளங்கிய பக்தவத்சலம் தன்னுடய 90-வது வயதில் மறைந்தார்.

‘‘பக்தவத்சலம், மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மனிதர்’’ என்ற முன்னாள் கேரள ஆளுநரின் புகழுரைக்கு ஏற்ப வாழ்ந்து மறைந்தவர்.

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

கிளிக் தொழில் நுட்பக் காணொளி

கூகுள் பிக்செல் ஸ்மார்ட்போன்களில் மெய்நிகர் உலக உதவியாளர் வசதி, பேஸ்புக், அறிமுகப்படுத்தியுள்ள 'மெஸ்சென்ஜ்ர்' செயலி, தைவானில் வேலைசெய்யும் பெப்பர் என்ற சிறிய ரோபோ உள்ளிட்டவை குறித்த அடங்கிய காணொளி.

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 10
 
 

article_1476075408-Sirimavo300.jpg680: முகம்மது நபியின் பேரன் ஷியா இமாம் உசேன் பின் அலி, காலிப் முதலாம் யாசிட்டின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஷியா முஸ்லிம்களினால் இந்நாள் ஆஷுராஹ் என அநுசரிக்கப்பட்டு வருகிறது.

1575: பிரான்சில், ரோமன் கத்தோலிக்கப் படைகள் புரட்டஸ்தாந்தர்களைத் தோற்கடித்தனர்.

1582: கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1631: சாக்சனி இராணுவத்தினர், பிராக் நகரைக் கைப்பற்றினர்.

1780: கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20,000௩0,000 பேர் வரை இறந்தனர்.

1868: கியூபாவின் முதலாவது விடுதலைப் பிரதேசம் "லாடெமஹாகுவா" பகுதியில் கார்லோஸ் செஸ்பெடஸ் என்பவர் தலைமையில் அறிவிக்கப்பட்டது.

1911: வூச்சாங் எழுச்சி ஆரம்பமாகியது. இது சிங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசு உருவாவதற்கு வழிவகுத்தது.

1916: வட இலங்கை அமெரிக்க மிஷன் தனது நூற்றாண்டு நிறைவை யாழ்ப்பாணம், பட்டிக்கோட்டா செமினறியில் கொண்டாடியது.

1942: சோவியத் ஒன்றியம் ஆஸ்திரேலியாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது.

1943: இரண்டாம் உலகப் போர் - ஜப்பானியரின் பிடியில் இருந்த சிங்கப்பூரில் சிங்கப்பூர் துறைமுகம் மீதான தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக 57 அப்பாவிகள் ஜப்பானியர்களினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்.

1944: இரண்டாம் உலகப் போர் - 800 ஜிப்சி சிறுவர்கள் அவுஸ்விச் வதைமுகாமில் படுகொலை செய்யப்பட்டனர்.

1945: போருக்குப் பின்னரான சீனா குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் குவோமின்டாங்கும் உடன்பாட்டிற்கு வந்தனர். இது இரட்டை பத்து உடன்பாடு என அழைக்கப்படுகிறது.

1949: விடுதலை பெற்ற இலங்கையின் புதிய இராணுவம் உருவாக்கப்பட்டது.

1957: ஐக்கிய இராச்சியம், கம்ப்றியா என்ற இடத்தில் உலகின் முதலாவது அணுக்கரு உலை விபத்து நிகழ்ந்தது.

1967: விண்வெளி தொடர்பாக அறுபதுக்கும் அதிகமான நாடுகள் ஜனவரி 27ஆம் நாள் கையெழுத்திட்ட உடன்பாடு அமுல் படுத்தப்பட்டது.

1970: பீஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1970: மொண்ட்றியால் நகரில் கியூபெக்கின் உதவிப் பிரதமரும், தொழிலமைச்சரும் கியூபெக் விடுதலை முன்னணி தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டனர்.

1971: விற்பனை செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டுபோகப்பட்ட லண்டன் பாலம் அரிசோனாவின் லேக் ஹவாசு நகரில் மீள அமைக்கப்பட்டது.

1986: 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் எல் சல்வடோரின் சான் சல்வடோர் நகரைத் தாக்கியதில் 1,500 பேர் இறந்தனர்.

1987: விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.

1991: தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

2000: இலங்கையின் 6ஆவது பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா உயிரிழந்தார்.

2015: தென்னிந்திய திரைப்பட நடிகை மனோரமா (ஆச்சி), உயிரிழந்தார்.

http://www.tamilmirror.lk

  • தொடங்கியவர்

14502921_1251402241585230_14148523484575

 
 
#சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்!
  • தொடங்கியவர்

14523002_1151278111587548_33733226097706

தமிழ்த் திரைப்படங்களின் கலக்கல் நகைச்சுவை மன்னன்..
சிறு குழந்தைகள் முதல் அனைத்து வயதாரும் ரசிக்கும்
வைகைப்புயல் வடிவேலுவின் பிறந்தநாள்.

எங்கள் நாளாந்த வாழ்க்கையில் பயன்படுத்தும் பல சொற்கள், பாவனைகள், சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தும் சொற்றொடர்கள் என்று பல வடிவேலுவின் தாக்கத்திலேயே உலா வருகின்றன என்பது மறுக்க முடியாத விஷயம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு.

 

இவர் ஒரு கருப்பு சிவாஜி - ஹேப்பி பர்த்டே வடிவேலு ! #hbdvadivelu

vadivelu.jpg

வடிவேலு என்ற பெயரைக் கேட்டாலே தமிழர்களுக்கு உற்சாகம் கொப்பளிக்கும். சினிமாவில் அவருக்கு நீண்ட இடைவெளி விழுந்துவிட்டாலும் இன்னமும் நகைச்சுவை சேனல்களின் நாயகன் வடிவேலுதான். பலரின் இரவு, வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியைப் பார்த்து ரசித்து சிரிப்பதிலேயே முடிகிறது. தொடக்கத்தில் ‘கறுப்பு நாகேஷ்’ என்ற அடையாளத்துடன் கிராமத்து அப்பாவி இளைஞன் கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த வடிவேலு, குறுகிய காலத்திலேயே சுதாரித்துக்கொண்டு தனக்கான தனித்துவமான பாணியையும் பாத்திரங்களையும் வடிவமைத்துக்கொண்டார். 

maruthamalai.jpg

வடிவேலுவை ஒருவகையில் சிவாஜிகணேசனோடு ஒப்பிடலாம். விதவிதமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் விதவிதமான கெட்டப்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டியவர் சிவாஜி. அதேபோல் ஒரு பாத்திரத்துக்கும் இன்னொரு பாத்திரத்துக்குமான வித்தியாசமான உடல்மொழியையும் முகபாவனைகளையும் வேறுபடுத்திக் காட்டுவதிலும் மெனக்கெட்டவர்.  ‘நவராத்திரி’ படமே அதற்குச் சாட்சி. வடிவேலுதான் நகைச்சுவை நடிகர்களில் ஏராளமான விதவிதமான கெட்டப்களில் நடித்தவர். மேலும் அவர் எந்த கெட்டப் போட்டாலும் அது அச்சு அசல் அவருக்குப் பொருந்துகிறது. போலீஸ் வேடங்களிலேயே சில படங்களில் நடித்திருந்தாலும் ’டெலக்ஸ் பாண்டியன்’ போலீஸ் நடிப்புக்கும் ‘மருதமலை’ சிரிப்பு போலீஸ் நடிப்புக்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கும். உதார் ரெளடி கேரக்டர்கள் என்றாலும் ’கட்டதுரை’க்கும் ‘நாய்சேகரு’க்கும் வித்தியாசமிருக்கும். ’பாட்டாளி’ படத்தில் பெண்வேடமிட்டு அதகளப்படுத்தியிருப்பார்.

மேலும், சிவாஜியோடு வடிவேலுவை ஒப்பிட முக்கியமான காரணம், தமிழ் சினிமாவில் சிவாஜியின் உடல்மொழியை உள்வாங்கிக்கொண்டதில் வடிவேலுவுக்கு இணையாக ஒரு நடிகரைச் சொல்ல முடியாது. ‘டெலக்ஸ் பாண்டியன்’,  மும்தாஜுடன் போலீஸ் வேடத்தில் நடித்த படம் ஆகியவற்றில் அப்படியே சிவாஜியை இமிடேட் செய்திருப்பார். ஆனால் வேறு பல படங்களிலும் சிவாஜியின் உடல்மொழியையும் முகபாவனையும் உள்வாங்கிப் பிரதிபலித்திருப்பார். சிவாஜி சீரியஸாக வெளிப்படுத்திய உடல்மொழியை காமெடியாக்கியிருப்பார். ஒருவகையில் சிவாஜியைத் தலைகீழாக்கம் செய்தவர் வடிவேலு என்று சொல்லலாம்.

deluxe%20pandi.jpg

தமிழ் சினிமாவில் எப்போதுமே நாயகர்களுக்கு இணையான மக்கள் செல்வாக்கும் வரவேற்பும் நகைச்சுவை நடிகர்களுக்கும் உண்டு. என்.எஸ்.எஸ்.கிருஷ்ணன் காலத்திலிருந்து வடிவேலுவின் காலம் வரை அது தொடர்கிறது என்றாலும் தன் முன்னோடி நகைச்சுவை நடிகர்களில் இருந்து வடிவேலு வேறுபட்டு, நிகழ்த்திக் காட்டிய சாதனைகள் ஏராளம்.

தமிழ் சினிமா நகைச்சுவையின் இருண்டகாலம் என்றால் அது பிந்துகோஷ், ஓமக்குச்சி நரசிம்மன், உசிலை மணி, குண்டு கல்யாணம் போன்றவர்கள் தங்கள் உடலமைப்பைக் கொச்சைப்படுத்தி நடித்த காலகட்டம்தான். அதேபோல் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த காலகட்டத்தையும் தமிழ் சினிமா நகைச்சுவையின் இருண்ட காலகட்டம் என்று சொல்லலாம். ரஜினியின் உறவினர் என்ற ஒரே காரணத்துக்காகவே பல படங்களில் தோன்றி தமிழர்களைப் படாதபாடு படுத்தியவர் ஒய்.ஜி.மகேந்திரன். இத்தகைய கொடூரமான நகைச்சுவைகளில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றியவர் கவுண்டமணி. சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் கலாய்ப்பது, கூர்மையான சமூக விமர்சனம் என்று ஒருவகையில் கவுண்டமணியை எம்.ஆர்.ராதாவின் வாரிசு என்று சொல்லலாம். ஆனால் கவுண்டமணி காமெடியின் பிரச்னையே அவர் சகட்டுமேனிக்கு எல்லோரையும் இழிவுபடுத்தியதுதான். குறிப்பாக கருப்பானவர்களையும் வழுக்கை உடையவர்களையும் கொச்சைப்படுத்துவதே கவுண்டமணி காமெடியின் மையமாக இருந்தது. (இத்தனைக்கும் கவுண்டமணியும் கறுப்புதான். அவருக்கும் வழுக்கைத்தலைதான்)

ஆனால் வடிவேலுவின் காமெடியோ முற்றிலுமாக கவுண்டமணியிடம் இருந்து வேறுபட்டது. அது தன்னைத்தானே கிண்டல் செய்துகொண்டது. சுய விமர்சனம் - சுய பகடி என்ற அடிப்படையான நல்ல அம்சத்தைத் தமிழர்களிடம் அறிமுகப்படுத்தியது. ஊருக்குள் உதார்விட்டுத் திரியும் மனிதர்களைத் திரையில் பிரதிபலித்து காமெடி செய்தார் வடிவேலு. ஹீரோக்களின் பன்ச் டயலாக்குகள், அரசியல் தலைவர்களின் மிகையான வாக்குறுதிகள், போலி ஆவேசமும் வாய்ச்சவடால்களும் நிறைந்த மேடைப் பேச்சுகள் ஆகியவற்றைக் காலம் காலமாகப் பார்த்துப் பழகிய தமிழர்கள், உதார் மனிதர்களை காமெடி செய்து அம்பலப்படுத்திய வடிவேலுவை ஆரவாரமாகக் கொண்டாடினார்கள்.

giri.jpg

வடிவேலு எந்த ஹீரோவோடு சேர்ந்து நடித்தாலும் அதற்கேற்ப நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கிக்கொண்டார். ரஜினிகாந்த், சத்யராஜ், பார்த்திபன், அர்ஜூன், பிரசாந்த் தொடங்கி விஜய், சூர்யா வரை எல்லா நாயகர்களுடனும் நடித்து அவர்களை மிஞ்சும் வகையில் நகைச்சுவை நடிப்பைப் பிரதிபலித்துக் காட்டினார். அர்ஜூன், பிரசாந்த் போன்றவர்கள் நடித்த ‘வின்னர்’, ‘மருதமலை’, ‘கிரி’ போன்ற படங்கள் வடிவேலுவின் நகைச்சுவைக்காகவே நினைவுகூறப்படுகின்றன. வடிவேலுவை எடுத்துவிட்டுப் பார்த்தால், அந்தப் படங்களில் எதுவுமே இல்லை.

winner.jpg

வடிவேலு நிகழ்த்திய முக்கியமான சாதனை, மொழியமைப்பையே தன் வசப்படுத்திக்கொண்டது. சொலவடைகளும் பழமொழிகளுமே நமது தமிழர்களால் அதிகம் உச்சரிக்கப்பட்டது. ஆனால் 2003ல் ‘வின்னர்’ படம் வெளியானதில் இருந்தே வடிவேலுவின் நகைச்சுவை வசனங்கள் பழமொழி, சொலவடைகளின் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டன. நாட்டில் நடக்கும் எந்த ஒரு சம்பவத்தையும் வடிவேலுவின் டயலாக்குகளுடன் பொருத்திப் பார்க்கப் பழகிவிட்டனர் தமிழர்கள். அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தையும் வடிவேலுவின் வசனங்கள் வழியாக விளக்கி, கலாய்க்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். சென்ற ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வடிவேலு சினிமாவில் நடிக்காமல் தொய்வு ஏற்பட்டாலும் சமூக ஊடகங்களான ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ், ட்வீட்கள், வாட்ஸ்-அப் செய்திகள், மீம்ஸ் என எல்லாவற்றிலும் தவறாமல் வடிவேலுவும் அவரது வசனங்களும் இடம்பெற்றன. இத்தனைக்கும் சமயங்களில் ‘ஏன்?’, ‘வேணாம் வேணாம்’ என்பது போன்ற சாதாரண வார்த்தைகளையே தனது தனித்துவமான உச்சரிப்பின் மூலம் சிறப்பான வார்த்தைகளாக மாற்றிக்காட்டியவர் வடிவேலு. வடிவேலு அளவுக்கு எந்த நகைச்சுவை நடிகர்களின் வசனங்களும் இந்த அளவுக்கு அன்றாட வாழ்க்கையில் புழங்கியது கிடையாது. இன்னும் சொல்லப்போனால், ஹீரோக்களின் பன்ச் டயலாக்குகளைவிட அதிக செல்வாக்கு கொண்டவை வடிவேலுவின் வசனங்கள்.

porkaalam.jpg

இறுதியாக மீண்டும் ஒருமுறை சிவாஜிகணேசனைப் பற்றி ஒரு விஷயம். சிவாஜி அவரது மிகை நடிப்புக்காக கிண்டலடிக்கப்பட்டாலும், உண்மையில் அவர் ஒரு நல்ல இயல்பான நடிகர். குறிப்பாக ‘பலே பாண்டியா’, ’சபாஷ் மீனா’ போன்ற நகைச்சுவைப் படங்களில் இயல்பான, அட்டகாசமான நடிகர் சிவாஜியைக் காண முடியும். ஒரு நடிகனால் மக்களை நெகிழ்ந்து அழவும் வைக்க முடியும், வெடித்துச் சிரிக்கவும் வைக்க முடியும் என்றால் அவரே மகத்தான கலைஞன். அந்த வகையில் சிவாஜிகணேசனைப் போலவே வடிவேலுவும் மகத்தான கலைஞன். அவரால் நகைச்சுவைக் காட்சிகளில் மட்டுமல்லாது, குணச்சித்திர நடிப்பிலும் வெளுத்துக்கட்ட முடியும். கவுண்டமணி, சந்தானம் போன்றவர்களிடம் இருந்து வடிவேலு வித்தியாசப்படும் முக்கியமான இடம் இது. வடிவேலுவின் குணச்சித்திர நடிப்பு ஆச்சி மனோரமா, நாகேஷ் போன்றவர்களுடன் ஒப்பிடத்தக்கது. தேவர் மகனில் கையை இழந்தபிறகு பேசும் காட்சி, ‘’ஊரெல்லாம் உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை தேடினியே; நான் கறுப்பா இருக்கேன்னுதானே என்கிட்ட கேட்கலை?” என்று ‘பொற்காலம்’ படத்தில் முரளியிடம் கேட்கும் காட்சி என்று பல உதாரணங்களைச் சொல்லலாம்.

imsai.jpg

நகைச்சுவைக் காட்சிகளே இல்லாமல் முழுக்க குணச்சித்திரப் பாத்திரத்திலேயே ஒரு படத்தில் வடிவேலுவால் சிறப்பாக நடிக்கமுடியும். ‘இம்சை அரசன்’ அதற்கு ஒரு சிறந்த உதாரணம். 23-ம் புலிகேசியாகக் கோணங்கித்தனம் செய்யும் அரசனாக நடிக்கும் அதேவேளையில் புரட்சிக் குழுவைச் சேர்ந்த போராளியாகவும் நடித்திருப்பார். புலிகேசியைப் பார்த்து பார்த்து விழுந்து விழுந்து சிரித்த பார்வையாளர்களான நாம், போராளி வடிவேலு பாத்திரத்தை சீரியஸாகவே பார்த்தோம் என்றால் அதுதான் வடிவேலுவின் வெற்றி.

நூற்றாண்டைக் கடந்த தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன் வடிவேலு.

vikatan

  • தொடங்கியவர்

தஞ்சாவூர் தட்டு எப்படி தயாராகிறது தெரியுமா?

unnamed.jpg

தலையாட்டிப் பொம்மை, வீணை வரிசையில் தஞ்சாவூரின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று கலைத்தட்டு. கௌரவம், உபசரிப்பு, மரியாதையின் வெளிப்பாடாக கருதப்படும் இந்த கலைத்தட்டில் தஞ்சைக்கே உரித்தான நுண்கலையும், கைத்திறனும், கற்பனையும், தெய்வீக அம்சமும் நிறைந்திருக்கிறது. சுவரை அலங்கரிக்கும் தனித் தட்டாகவும், பூஜையறைகளில் வைத்து வணங்கப்படும் இறை உருவாகவும், கேடங்களாகவும், நினைவுப்பரிசுகளாகவும், சின்னங்களாகவும் உருவாக்கப்படுகிற இந்தக் கலைத்தட்டுக்கு புவிசார் காப்பீட்டு உரிமையையும் கிடைத்துள்ளது. 

ராஜராஜ சோழன் காலத்தில் போர் வெற்றிச் செய்திகளையும், மெய்க்கீர்த்திகளையும் தாமிரப் பட்டயங்களில் எழுதும் வழக்கம் இருந்தது. அதன் தொடர்ச்சி தான் இந்தக்கலை.

கோவில்களில் வழிபாட்டுக்குப் பயன்படுத்தும் தட்டுக்கள், குடங்களில் சோழ மரபு சார்ந்த சிற்பங்களை புடைப்பு வடிவத்தில் செய்து. பொருத்துவது வழக்கம். அந்தக் கலையில் மயங்கிய ராஜராஜ சோழன், தட்டுக்களில் தங்களின் சின்னத்தையும், செய்திகளையும் பொதிக்கச் செய்து, சீனாவுக்கும் பிற நாட்டு தோழமை மன்னர்களுக்கும் நினைவுப்பரிசுகளாக அனுப்பினான். ராஜராஜனுக்குப் பிறகு அவருடைய மகன் ராஜேந்திரனும் இந்தக் கலையை உற்சாகப்படுத்தி வளர்த்தான். சோழர்களுக்குப் பிறகு வந்த விஜய நகரத்து மன்னர்களும், மராட்டியர்களும் கூட தஞ்சாவூர் தட்டு உற்பத்தியை தங்கள் பெருமிதமாகக் கருதி வளர்த்தார்கள். அதன்பிறகு இக்கலை பெரும் நசிவைச் சந்தித்தது. தஞ்சாவூர் தட்டு தயாரிக்கும் தொழில் செய்த பலர் அக்கலையை விட்டு விலகி வேறு தொழிலுக்கு சென்று விட்டார்கள்.  

கைவினைப் பொருட்களுக்காகவே உருவாக்கப்பட்ட பூம்புகார் நிறுவனம், கலைத்தொட்டு தொழிலின் கொஞ்ச நஞ்ச உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அந்நிறுவனத்தில் 10க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலைத்தட்டு செய்கிறார்கள். தெற்கு வீதி, கம்மாளர் தெரு, சீனிவாச நகர் போன்ற பகுதிகளில் சிலர் தனித்தனியாக இத்தட்டுக்களை உருவாக்கி விற்பனை செய்கிறார்கள். கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் வழங்கும் நினைவுப்பரிசுக்கான ஆர்டர்களே இப்போது அதிகம் கிடைக்கிறது.  

கலைத்தட்டு என்பது அழகு செய்யப்பட்ட ஒரு பித்தளைத் தட்டு. நடுவில், தூய வெள்ளியில் செய்யப்பட்ட வட்டமான ஒரு தெய்வ உருவம். சுற்றிலும் வெள்ளியும் செம்பும் கலந்த உலோகத்தில் வார்க்கப்பட்ட அலங்கார வளைவுகள். மொத்தமாக அலுமினியத் தகடுகளை வாங்கி, தேவையான சைஸ்க்கு வட்டம் இழுத்து வெட்டி சமப்படுத்திக் கொள்கிறார்கள். பிறகு, டிசைனிங் ஒர்க். பொதுவாக தஞ்சாவூர் தட்டு என்றால் மயில், நடராஜர் உருவம் தான் இருக்கும். இப்போது லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார் என எல்லா சாமிகளையும் வைக்கிறார்கள். ஏன்? தலைவர்கள், நடிகர்கள் படங்கள் கூட வைப்பதுண்டு. எல்லாவற்றுக்கும் அச்சுகள் உண்டு. 

300 ரூபாயில் இருந்து 30 ஆயிரம் வரைக்கும் தஞ்சாவூர் கலைத்தட்டு கிடைக்கிறது. வெளிமார்க்கெட்டில் விலை அதிகமிருந்தாலும், தயாரிக்கும் கலைஞர்களுக்குக் கிடைக்கும் கூலி என்னவோ குறைவு தான். ஒரு தட்டுக்கு 30 ரூபாய் கூலி. ஒரு நாளைக்கு 5 தட்டுக்கள் செய்ய முடியும். ஒரு அற்புதமான கலையை கட்டிக்காப்பாற்றும் கலைஞனுக்குக் கிடைக்கும் அதிகப்பட்ச கூலி 150 ரூபாய்.

கலையை மேம்படுத்தவும், பொருளுக்கு விற்பனை வாய்ப்புகளை உருவாக்கித் தரவும், உற்பத்திக்கு தகுந்த விலை பெற்றுத்தரவும் கோருகிறார்கள் கலைத்தட்டு கலைஞர்கள். பெரும்பாலானவர்கள் பொன் வேலைக்குப் போய்விட்டார்கள். சிலர் தொழிலை விட்டே அகன்று தொடர்பில்லாத வேலையைச் செய்கிறார்கள்.

அரசர்கள் பொன்னும் பொருளும் அள்ளிக்கொடுத்து காப்பாற்றிய கலை, காப்பார் இன்றி நசிந்து கொண்டே வருகிறது. கைவினைத் தொழில்களுக்காகவும், கலைக்காகவும் இயங்கும் அமைப்புகளும், நிறுவனங்களும் இக்கலைஞர்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும்!

vikatan

  • தொடங்கியவர்

 

ரகசியம் ஒளிந்திருக்கும் வீடு
ரகசியம் ஒளிந்திருக்கும் வீடு - இது இங்கிலாந்தில்

BBC

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p112a.jpg

twitter.com/Pethusamy:

தீபிகா: அம்மா... பாசம் வேணும்.

நான்: அம்மா, உன் மேல பாசமாத்தான் இருக்காங்க.

மனைவி: அவ பாயசம் வேணும்னு கேட்குறாங்க.

#மழலை #மகள் அதிகாரம்.

twitter.com/mokkasaami: எல்லைக்கும் ஒரு பொறுமை உண்டு.

twitter.com/im_dalden:  வாழ்க்கை, மனிதனுக்கு அடிக்கடி சொல்லித்தர்ற பாடம், `சந்தோஷமா இருக்கும்போது கிரீஸ் டப்பாவை எட்டி உதைக்காதே!' என்பதுதான்.

twitter.com/manipmp:  ஆன்லைன் ஆஃபரைக் கண்டாலே வருத்தமும் பீதியும் அடைவது டெலிவரி பாய்களே!

twitter.com/kaviintamizh:  காமராஜர் எளிமையாக வாழ்ந்ததைவிட, `அப்புறம் தம்பி... எப்ப கல்யாணம்?'னு கேட்கிற சொந்தக்காரங்களை எப்படிச் சமாளித்தார் என்பதே மிகப்பெரிய ஆச்சர்யம்.

twitter.com/Nelson Xavier feeling crazy:  டி.வி-யில் டெலி மார்க்கெட்டிங் விளம்பரம் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு மொபைலை தார் சாலையில் வைத்து, லாரியை ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். பிறகு, பத்துப் பதினைந்து பேர் அதன் மீது வரிசையாக நடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். `இவ்வளவு உறுதியான மொபைல் விலை வெறும் 2,999 ரூபாய் மட்டுமே!' என்கிறார்கள்.

மொபைலை வாங்கி, நாங்க ஏன்டா லாரி டயர்ல வைக்கப்போறோம்?

p112b.jpg

twitter.com/Paranirajan Sathyamoorthi:அடேய்... ஏதாச்சும் பழைய தமிழ்ப்படத்தோட டீடெயில் பார்க்கலாம்னு கூகுள்ல தேடினா, அந்தப் பேர்ல பூரா சீரியல் எடுத்துவெச்சு வரலாற்றையே மாத்துறீங்களேடா! :(

twitter.com/stalinsk50: ஒருவனைக் கடுப்பேத்தி, வெறுப்பேத்தி, வெறியனாக்கி, தவறுகள் பல செய்யவைத்து, `இதுதான் அவன் சுயரூபம்' எனச் சொல்லும் சமூகம் இது!

twitter.com/i_Soruba: தனியாக அழுதுகொள்வதன் பெயர் `தைரியம்'!

p112c.jpg

twitter.com/meenammakayal: `அப்புறம்' என்றால், `இன்னும் ஏதாவது பேசு' என அர்த்தம். `அப்புறம் பேசலாம்' என்றால், `பேச இன்னும் என்ன இருக்கிறது?' என்று அர்த்தம்.

twitter.com/karuthu_ganesan: டிஸ்கவுன்ட் சேல்னாலும் தேவைன்னா மட்டும் வாங்குங்க. வாங்கலைனா, நமக்கு 100 சதவிகிதம் டிஸ்கவுன்ட்.

twitter.com/mekalapugazh: ஏழை வீட்டிலும் ஆணுக்கு சில பணக்கார வசதிகள் உண்டு.

twitter.com/redsuresh1985: உலகத்துலயே சிரமமான வேலையில ஒண்ணு, சைனாக்காரன் மூஞ்சியை ஞாபகத்துல வெச்சுக்கிறது.

p112d.jpg

twitter.com/Im_sme: சாட்டிங் முடியப்போவதாகத் தோன்றுகையில் `சாப்பிட்டியா'னு போட்டு வளர்த்துவிடுவது ஒரு நுட்பம்.

twitter.com/thoatta: ஆரம்பிக்கிறப்போ பட்டாசு கிளப்பிட்டு, போகப் போகக் கொட்டாவிவிடுறது விராட் கோஹ்லியும் ஜியோ 4G ஸ்பீடும்!

vikatan

  • தொடங்கியவர்

14615793_1251429724915815_77220135303309

மனோரமா... தமிழ் சினிமாவின் தவப்புதல்வி!

manorama10_vc1.jpg

மனோரமா... மூன்று தலைமுறைகளாக தமிழ் திரையுலகில் மகராசியாக இருந்த நடிகை. கதாநாயகி, நகைச்சுவை நடிகை, குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் என்று நடிப்பின் அத்தனை பரிமாணங்களிலும் மிளிர்ந்தவர். சுமார் 5,000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்த ஆச்சி, 1,200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, கின்னஸ் சாதனை புரிந்தவர். தன் திரைச் சித்திரங்களால் நம்மை ரசித்துச் சிரிக்க வைக்கும் இவர் வாழ்க்கையின் ஆரம்பப்புள்ளி, துயரமானது.

 மனோரமாவின் இயற்பெயர், கோபிசாந்தா.  தஞ்சாவூர் மாவட்டம் ராஜமன்னார்குடியில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை காசி கிளாக்குடையார், தன் தாய் ராமாமிர்தத்தின் தங்கையை இரண்டாம் தாரமாகத் திருமணம் புரிந்துகொண்டு, அவரை விட்டுப் பிரிந்தார். ராமாமிர்தம், அப்போது 10 மாதக் குழந்தையான கோபிசாந்தாவைத் தூக்கிக்கொண்டு  காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூருக்குக் குடிபெயர்ந்தார். வீட்டுவேலை செய்து  கோபிசாந்தாவைப்  படிக்கவைத்தார் அவர் அம்மா. ஒரு கட்டத்தில் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போக, கோபிசாந்தாவின் படிப்பு நின்றுபோனது.

vadivelusds_vc1.jpg

 

தனது 12வது வயதில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார் கோபிசாந்தா. நாடக இயக்குநர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு 'மனோரமா' என்று பெயர் சூட்டினர். மனோரமா நன்றாகப் பாடக்கூடியவர். செட்டிநாடு பகுதிகளில் நாடகம் போடும்போது,  ஆண்கள்தான் பெண் வேஷம் கட்டி நடிப்பார்கள். அதைப் பார்ப்பதற்கென்றே  பலர் வருவார்கள்.  மேடைக்குப் பின்னால் இருந்து குரல் கொடுக்கவும் பாடவும் மட்டும்தான் அப்போது பெண்களைப் பயன்படுத்தினார்கள்.

'அந்தமான் கைதி’ என்ற  நாடகத்தில்  மேடைக்குப் பின்னால்  இருந்து மனோரமா  பாடினார். 'நல்லா பாடுதே இந்தப் பொண்ணு!’ என்று  பலரும் பாராட்ட, நிறைய வாய்ப்புகள் வந்தன அவருக்கு.  அப்படியே மேடை ஏறி நடிக்கும் வாய்ப்பும் வந்தது. 'யார் மகன்?’ என்கிற  நாடகத்தில்  மனோரமா  கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்த நாடகத்துக்குத் தலைமையேற்றவர், இயக்குநர் வீணை எஸ்.பாலசந்தர். நாடகத்தில் மனோரமாவுடன் நடித்த ஒரு நடிகைக்கு, எஸ்.பாலசந்தர் கையால் பரிசு கொடுக்கச் சொன்னார் ஒருவர். அப்போது அவர், 'நான் இந்தப் பரிசைக் கொடுப்பதாக இருந்தால், இதில் ஹீரோயினாக நடித்த பெண்ணுக்குத்தான் கொடுப்பேன்’ என்று சொல்லி மனோரமாவை வெளிப்படையாகப் பாராட்டினார். அந்த முதல் பாராட்டுதான், ஆச்சியின் சினிமா பயணத்துக்கான ஆரம்பம்.

ஆரம்பத்தில், ஒரு நாடகத்துக்கு 10 ரூபாய்தான் சம்பளம். அது 40 ரூபாயாக உயர்ந்த நேரத்தில், புதுக்கோட்டையில் பி.ஏ.குமார் என்பவர் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க முன்வந்தார். அவர்தான்...  இயக்குநர். எஸ்.எஸ்.ராஜேந்திரன். அந்தப் படத்தில் நடிப்பதற்காக,  சில கலைஞர்கள் அவர் வீட்டிலேயே தங்கியிருந்து ரிகர்சல் பார்த்தனர். அப்போது,  15 வயதுப் பெண்ணான மனோரமாவுக்கு மேக்கப் போட்டு எஸ்.எஸ். ராஜேந்திரன் எடுத்த புகைப்படம்தான், இவரது முதல் புகைப்படம்.

manorama10_vc4.jpg

 

 திடீரென எஸ்.எஸ். ஆர் வீட்டு மாடியில் இருந்த குடிசை தீப்பிடிக்க, அதை அவர் அபசகுனமாக நினைத்து, 'நான் சினிமாவே எடுக்கலை. நீங்க எல்லாம் கிளம்புங்க’ என்று அனுப்பி வைத்துவிட்டார். சில  வருடங்கள் கழித்து  மனோரமாவை சென்னைக்கு வரவழைத்து, கலைஞர் எழுதிய 'மணிமகுடம்’ நாடகத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தார் எஸ்.எஸ். ஆர்.

சென்னைக்கு மனோரமா நடிக்கக் கிளம்பியபோது, அவரை கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாக காலம் நிறுத்தியிருந்தது. கைக்குழந்தையாக இருந்த அவர் மகன் பூபதியைத் தூக்கிக்கொண்டுதான் மதராசப்பட்டினம் வந்து சேர்ந்தார். அப்போது, கூடப் பிறந்த அண்ணனைப்போல இருந்து உதவி பல நாடகங்களிலும் நடிக்கவைத்தவர், எஸ்.எஸ்.ஆர்தான். நாடக வாய்ப்புகள் தேடி வந்தன.

பேரறிஞர் அண்ணாவுக்கு ஜோடியாகவும், 'உதயசூரியன்’ நாடகத்தில் கலைஞருக்கு ஜோடியாகவும் நடித்தார் ஆச்சி.  'மணிமகுடம்’ நாடகத்தில் இவரது  நடிப்பைப் பார்த்த கவியரசர்  கண்ணதாசன், 'மாலையிட்டமங்கை’ படத்தில் நடிக்கச் சொன்னார். ஆனால், அது ஹீரோயின் பாத்திரம் இல்லை, காமெடி ரோல். 'எனக்கு நகைச்சுவையா நடிக்கத் தெரியாது. நான் இதுவரை நாடகத்தில் ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன்’ என்று மனோரமா சொன்னதற்கு,  'நீ சினிமாவுல ஹீரோயினா நடிச்சா ரெண்டு, மூணு வருஷம்தான் ஃபீல்டில் இருக்க முடியும். ஆனா, காமெடி நடிகையா நடிச்சா, ஆயுசுக்கும் நடிச்சுட்டே இருக்கலாம்’ என்றார். இதைப் பல சந்தர்ப்பங்களில் நினைத்துப்பார்த்து கண்ணதாசனின் கணிப்பை வியந்து  நெகிழ்ந்திருக்கிறார் ஆச்சி. அதேபோல, தன் அம்மா இறந்தபோது அண்ணனாக இருந்து உதவிய நடிகர் திலகத்தின் மீதும் அளவில்லாத அன்பும் மரியாதையும் கொண்டவர் ஆச்சி.

manorama10_vc2.jpg

 

ஆண்களின் அதிகாரமான தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிக்கைக்கான தனித்த இடத்தை உருவாக்கி, கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளாக அந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவர் மனோரமா. 'கம்முனு கெட' என்று பொரிந்த 'கண்ணம்மா'வையும், 'பாட்டி சொல்லைத் தட்டாதே' என்று பாடி ஆடிய துள்ளலையும், 'நடிகன்' திரைப்படத்தில் சத்யராஜ், குஷ்பூவைவிட ஸ்கோர் செய்த கலகல காமெடியையும், 'சின்னக் கவுண்டரி'ல் சிரித்துப் பயமுறுத்திய ஆத்தாவையும் மறக்க முடியுமா?! மனோரமா... தமிழ் சினிமாவின் பாக்கியம்.

 பத்ம ஸ்ரீ(2002), தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை(புதிய பாதை - 1988), தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, வாழ்நாள் சாதனையார் விருது(2015) உட்பட பல விருதுகள் பெற்ற மனோரமா,  வாழ்க்கையில் எல்லா இன்ப துன்பங்களையும் அனுபவித்தவர். தன் வேதனைகளை தன்னுள் புதைத்து, தன் கதாபாத்திரங்களில் நகைச்சுவை தழும்பத் தந்த கலைஞர். தமிழ் திரையுலகிலும் ரசிகர் மனங்களிலும் அவருக்கான இடம்... நிரந்தரம்!

vikatan

  • தொடங்கியவர்
 
 
 
Bild zeigt Himmel, eine oder mehrere Personen und im Freien
 

அப்பாவும், பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்பா கேட்டார், “கண்ணா!.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”

பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் “நூல்தாம்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு”.

அப்பா சொன்னார், “இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு”

பையன் சிரித்தான். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.

“ஒழுக்கம் இப்படியானதுதான் மகனே!. அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே” என்றார்.

(Whatsapp)

  • தொடங்கியவர்

மு.வ-வின் பேராவல்! நினைவு தினச் சிறப்புப் பகிர்வு

 

 

download%20%281%29.jpg
‘‘நல்ல தன்மை மட்டும் உடையவர்கள் எத்தனையோ பேர் கலங்கிக் கண்ணீர் வடித்து மாய்ந்திருக்கிறார்கள்; மாய்ந்துவருகிறார்கள். வல்லமை மட்டும் பெற்றவர்களும் எதிர்பாராதவகையில் நசுக்குண்டு அழிகிறார்கள். குடும்பங்கள் முதல் நாடுகள் வரையில் இதற்குச் சான்றுகள் காணலாம்’’ என்று தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டவர் தமிழறிஞர் மு.வரதராசனார். அவருடைய நினைவுத் தினம் இன்று. 

‘‘தமிழர்க்கு நல்ல பண்புகள் பல உண்டு. ஆயினும், பொதுவாகத் தமிழன் வாழ்வு நலிந்துள்ளது எனக் கூறலாம். காரணம் என்ன? தமிழரிடையே சில குறைகளும் இருத்தல்கூடும் அன்றோ?’’ அதற்காகத்தான் ‘தம்பிக்கு’ எனத் தலைப்பிட்டுக் கடிதங்களை எழுத ஆரம்பித்தார் மு.வரதராசனார். 

‘‘உரமாகவும் தூய்மையாகவும் காப்பதே கடமை!’’
‘தம்பிக்கு’ எனத் தலைப்பிட்ட கடிதத்தில், ‘‘தம்பி! இயற்கையிலிருந்து நாம் ஒரு பெரிய பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கைப் பகுதியில் ஒன்றை மட்டும் போற்றுகிறவன் உருப்படியாவதில்லை. உடலை மட்டும் பொற்றி (பொத்தி) உரமாக வைத்திருப்பவனும் அழிகிறான். அவனுடைய உள்ளம் அவனுக்குப் பகையாகி அவனைத் தீயவழியில் செலுத்திக் கெடுத்து அழிக்கிறது. உள்ளத்தை மட்டும் தூய்மையாகப் போற்றிக் காப்பாற்றுகிறவனும் இடை நடுவே அல்லல்படுகிறான்; அவனுடைய உடல், பல நோய்க்கிருமிகளுக்கு இடம்கொடுத்து அவனுடைய உள்ளத்தில் அமைதியைக் கெடுத்து அல்லல்படுகிறது. உடலும் வேண்டும், உள்ளமும் வேண்டும் என்று இரண்டையும் உரமாகவும் தூய்மையாகவும் காப்பதே கடமையாகும். மரம், வானளாவ உயர வேண்டியதாக இருக்கலாம்; ஆனால், தான் வேரூன்றிய மண்ணை மறந்து வாழ முடியாது; வானைப் புறக்கணித்துக் கிளைகளை உயர்த்தாமல் வாழவும் முடியாது’’ என்று உடலையும், உள்ளத்தையும் காப்பது பற்றி மிகவும் அழகாக எழுதியிருப்பார் மு.வ.

‘‘மொழியின் செல்வாக்கு மாறுவதில்லை!'’
அவருடைய மற்றொரு கடிதத்தில், ‘‘மொழி, மனிதனுடைய உடலில் ஊறாததாக இருக்கலாம்; ஆனால், அவனுடைய மூளையை உருவாக்கியது அதுவே. அவன் எண்ணும் எண்ணம், பேசும் பேச்சு, எழுதும் எழுத்து மூன்றிலும் மொழி உள்ளது; அதன் செல்வாக்கு உள்ளது. மொழி - வேறுபாடு குழந்தையின் தொட்டிலிலேயே தொடங்குவது; மரணப்படுக்கை வரையில் தொடர்ந்து வருவது. இடையில் மனிதன் கற்ற எத்தனையோ பழக்கவழக்கங்கள் மாறிவிடுகின்றன; ஆனால், மொழியின் செல்வாக்கு மாறுவதில்லை. பரம்பரையாக ஆசிரியர் தொழிலில் இருந்தவன் துப்பாக்கி ஏந்தும் தொழிலுக்குச் செல்கிறான்; செருப்புத் தொழில் செய்தவன் நாட்டை ஆள்கிறான்; பரம்பரையாகத் தராசு பிடித்தவன் விமானம் ஓட்டுகிறான்; பரம்பரையாக ஏர் ஓட்டியவன் நூல் எழுதுகிறான்; ஆனால் மொழி மாறுவதில்லை’’ என்று மொழிக்கு விளக்கம் அளித்தவர் மு.வ.

அன்பை மட்டுமே முதன்மையாகவைத்து அவருடைய படைப்புகள் இருக்கும். அன்புதான் குடும்ப வாழ்க்கையின் அடித்தளம் என்பதை பலமுறை வலியுறுத்தியிருக்கிறார். உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் தூய்மையாக இருப்பதுவும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையானதுவும் அன்பு என்பது அவருடைய ஆணித்தரமான கருத்தாகும். தம் நாவல்கள் மூலம் வாழ்க்கையின் விழுமங்களை எடுத்துச் சொல்லி மக்கள் மனதில் விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினார். அதை நிறைவேற்ற பொருத்தமான கதைமாந்தர்களை அவர் படைப்புகளுக்குள் கையாண்டார். தன்னுடய நாவல்களில், கதாபாத்திரங்கள் சுதந்திரமாக வலம்வந்து தங்கள் இயல்புகளை வெளிப்படுத்துவதற்குத் தகுந்தாற்போல் கதைப் பின்னல்களை அமைத்தார். 

‘‘ ‘இளமையில் நெஞ்சில் ஒரு முள்’ என்ற கதை படித்தேன். நெஞ்சம் தெரிந்தது; முள் தெரியவில்லை. 40 வயதில் படித்தபோது நெஞ்சமும் தெரிந்தது; முள்ளும் தெரிந்தது’’ என்று மு.வ-வின் படைப்பு குறித்துச் சொன்னவர் எழுத்தாளர் மு.தங்கராசன்.

 

download.jpgநாவல்கள் களம்!
முறையற்ற வேகம் வாழ்க்கையைக் கெடுத்துவிடும் என்கிற பதத்தைத் ‘வாடாமலரி’லும், இல்லறத்தைத் தொடங்கும் தம்பதியர்... பிறர் என்ன நினைப்பார்களோ என்று எண்ணாமல், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்பதை, ‘கள்ளோ காவியமோ’ நாவலிலும், உணர்ச்சிக்கு முதன்மை தராமல் அறிவுவழி வாழ்ந்தால் வாழ்க்கை நன்கு அமையும் என்கிற கருத்தை, ‘அகல் விளக்கி’லும், ஒருவனோடு வாழ்கிறபோது அவனுக்கு நேர்மையாக நடந்துகொள்வதே கற்பு என்பதை, ‘கரித்துண்டி’லும் சுவைபடச் சொல்லியிருப்பார் மு.வ. அவர், வாழ்கையின் விழுமங்களை வெளிப்படுத்தவே கதைக் களத்தைப் பயன்படுத்திக் கொண்டார் என்றால் மிகையாகாது.

மனித சிந்தனையின் பிரதிநிகள்!
மு.வ-வின் முன்னாள் மாணவரும், தமிழறிஞருமான இரா.தண்டாயுதம், ‘‘டாக்டர் மு.வ-வின் நாவல்களையும் சமுதாயத்தையும் தனித்தனியே பிரித்துப் பார்க்கவே முடியாது. மிக மேலான சிந்தனையில் நிற்கும் சான்றோர் ஆயினும், சமுதாயத்தை எவ்வளவு கூர்த்த விழிகளோடு இவர் நோக்குகிறார் என்பதை இவருடைய நாவல்களே தெளிவாகக் காட்டும்’’ என்றார். 

பேராசிரியர் கைலாசபதியோ, ‘‘வரதராசனாரின் நாவல்களில் வரும் பாத்திரங்கள் எலும்பும் தசையும் கொண்டு ஆக்கப்படுவன அல்ல. மனித சிந்தனையின் பிரதிநிகளாக உள்ளனர்’’ என்றார். இப்படி, தமிழர்களுடைய அறியாமையைப் போக்கும் விதமாகவும், தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புகளை நினைவுகூறும் விதமாகவும் சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தும் விதமாகவும் மு.வ-வின் நாவல்கள் வெளிவந்தன. அவருடைய நாவல்கள் அனைத்தும் மாற்றத்துக்கான விதை என்பதை இதன்மூலம் நாம் அறியலாம்.

மு.வ-வின் பேராவல்!
‘‘பெரியோர், சான்றோர்களோடு இளைஞர்கள் பழகி நன்னெறிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். அது, இயலாதபோது அவர்கள் எழுதிய நூல்களையாவது கற்று வாழ்வில் நெறியோடு வாழவேண்டும்’’ என்று இளைய சமுதாயத்துக்கு அறைகூவல் விடுத்த அவரின் பேராவல், ‘‘அறிவியல் முன்னேற்றத்தை அறிந்து ஒழுகவேண்டும். நல்லது, கெட்டது அறிந்து இளைய சமுதாயம் வாழ்க்கை நடத்த வேண்டும். பாலியல் தொடர்பு வாழ்வில் அளவோடு இருக்க வேண்டும். மக்கள் வாழ்வின் விழுமியங்களை வழுவாது பின்பற்ற வேண்டும்’’ என்பவைதான்.

‘‘தமிழ்நாடு உயர வேண்டும் என்றால், இங்குள்ள மலையும் காடும் நிலமும் நீரும் உயர்தல் அல்ல; இங்கு வாழும் மக்கள் யாவரும் உயர்தல் என்று கருது’’ என்ற மு.வ-வின் முதுமொழிக்கு ஏற்ப அவருடைய வழியை நாமும் பின்பற்றுவோம்.

vikatan

  • தொடங்கியவர்
மனைவியை சுமந்து ஓடும் போட்டி
 

மனைவி, காத­லியை சுமந்து கொண்டு ஓடும் போட்­டி­யொன்று அமெ­ரிக்­காவின் மேய்ன் மாநிலத்தின் நிவ்ரி நகரில் நேற்று முன்­தினம் நடை­பெற்­றது.

 

19835e79e1f1b281146bcb97871d9e4758074.jp

 

1983587e40bdcfdbf40d6898dc3e7aaaa10a3.jp

 

போட்­டி­யா­ளர்கள், தத்­த­மது மனைவி, காத­லியை சுமந்­து­கொண்டு மணல், நீர்க்­குட்­டைகள் முத­லான தடை­களைக் கடந்து ஓடினர். எலியொட் ஸ்டோரி, ஜியானா ஸ்டோரி ஜோடி இப்­ போட்­டியில் முத­லிடம் பெற்­றது.

 

19835winner.jpg

 

1983575a6b93b684540ccad040be18a12ff40.jp

 

இவர்கள் 254 மீற்றர் தூரத்தை 59.18 விநா­டி­களில் கடந்­தனர். இத் ­தம்­ப­தி­யினர் அடுத்த வருடம் பின்­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள மனை­வியை சுமந்து ஓடும் உலக சம்­பி­யன்ஷிப் போட்­டியில் பங்குபற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

 

metronews

  • தொடங்கியவர்

14543711_1251420418250079_45796079557105

கொடுமுடி தந்த கொடை' கே.பி.சுந்தராம்பாள் பிறந்த தினம்

  • தொடங்கியவர்

 

Dont't miss the fun filled moments with the maestro :)

  • தொடங்கியவர்

 

காணக்கிடைக்காத வீடியோ காட்சி...

எம்ஜி சக்ரபாணி இல்ல திருமணம்.

அனைத்து முதல்வர்களும் ஒரே இடத்தில்!

அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆகியோரும்

சிவாஜி, சரோஜா தேவி மற்றும் எம்ஜிஆர் குடும்பமும்.

  • தொடங்கியவர்

'ஆர் யூ ஓக்கே?'. இன்று உலக மனநோய் தினம்

 

 

screen.png

னம் அலை பாயப்படுவதாலேயே அது குரங்கு என அழைக்கப்படுவது உண்டு. அந்த மனதைக்கூட நாம் ஒழுங்காய் வைத்துக்கொள்ளாவிட்டால், மனநோய்க்கு ஆளாகிவிடுவோம். ‘சிந்தனைக்கும் மனநோய்க்கும் தொடர்பு உண்டு’ என்கின்றனர் அறிஞர்கள். அந்த நோய்க்கு மனதை ஆட்படுத்திவிடாமல் இருப்பது நம்முடைய கடமை. கல்விக்குப் பெரும் தடையாக இருப்பது மனநோயே ஆகும். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10-ம் தேதி மனநல தினம் கொண்டாடப்படுகிறது. 

எதிலும் நாட்டமின்மை, தூக்கமின்மை, தாழ்வு மனப்பான்மை, தற்கொலை எண்ணங்கள், கட்டுப்படுத்த முடியாமல் திரும்ப திரும்ப ஏற்படும் எண்ணங்கள் அல்லது செயல்கள், செக்ஸ் பிரச்னைகள், தானாகப் பேசுதல் அல்லது சிரித்தல், ஆக்ரோஷம் போன்ற காரணம் கண்டுபிடிக்க முடியாத நோய்களாலும், மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களாலும் மனநோய் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் தானாகவோ, வாழ்க்கைச் சூழ்நிலைகளினாலோ அல்லது பல்வேறு நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களினாலோ உண்டாகலாம். இருந்தும் மனநோயை மருந்துகளால் குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். உலகில் காணப்படும் பலவகையான நோய்களுள் மனநோயும் ஒன்று. இதை தீவிர மனநோய், மனச்சிதைவு நோய் (சிசோபெர்னியா) என்பர்.   

2005-ம் ஆண்டின் இறுதியில், கிட்டத்தட்ட 1 கோடி முதல் 2 கோடி வரையிலான இந்தியர்கள், மனச்சிதைவு மற்றும் இருமுனைக் கோளாறு போன்ற மனநோய்களால் பாதிக்கப்படுவதாகவும், 5 கோடி இந்தியர்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற பொதுவான மனநிலை பிரச்னைகளால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ‘மனநோயின் தாக்கத்தால் மக்கள் தற்கொலை செய்துகொண்டு உள்ளனர்’ என மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. 2010-ல், 7 சதவிகிதமாக இருந்த மனநோயால் ஏற்படும் தற்கொலைகள், 2014-ல் 5.4 சதவிகிதமாக இருக்கிறது என்றாலும், 7,000-க்கும் அதிகமான மக்கள், மனநோய்களின் விளைவாக தற்கொலை செய்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

உலக சுகாதார அமைப்பு புள்ளிவிவரங்களின்படி, 18,100,000 பேருக்கு 5.6 உளவியல் நிபுணர்களே உள்ளனர். இது, பொதுநல வாரிய வரம்பைவிடக் குறைவாக உள்ளது. அதாவது, 10,00000 மக்களுக்கு 3 உளவியல் நிபுணர்கள் மட்டுமே உள்ளனர். இந்த மதிப்பீடு மூலம், இந்தியாவில் 66,200 உளவியல் நிபுணர்கள் குறைவாக உள்ளனர். இந்தியாவில், மனநல நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய, சிறப்பான 15 மனநல சுகாதார மையங்கள் மற்றும் மனநல சுகாதாரத்தில் உள்ள 35 முதுகலை படிப்புகளுக்கான பயிற்சித் துறைகளுக்காக நாடு தழுவிய நிதியுதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

மனநலத்தைப் பேணுவோம்... மனநோயாளிகளை அரவணைப்போம்!

vikatan

5 minutes ago, நவீனன் said:

'ஆர் யூ ஓக்கே?'. இன்று உலக மனநோய் தினம்


அனைவருக்கும் வாழ்த்துக்கள் :grin::grin::grin:

  • தொடங்கியவர்
12 hours ago, ஜீவன் சிவா said:


அனைவருக்கும் வாழ்த்துக்கள் :grin::grin::grin:

அடபாவி...:grin:

ஆமை முயல் கதை ஞாபகம் வரும்!

:grin::grin::grin:

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.