Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

“ஒபாமாவின் நட்சத்திரங்கள்” - காணொளி

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

p106a.jpg

`50 ஷேட்ஸ் ஆஃப் க்ரே' - சினிமா ரசிகர்களைக் கிளுகிளுப்பில் ஆழ்த்திய படம். அதன் அடுத்த பாகம் `50 ஷேட்ஸ் டார்க்கர்' என்ற டைட்டிலில் பிப்ரவரி மாதம் ரிலீஸ்!  படத்தைப் பார்த்த சென்ஸார் அதிகாரிகள் முதல் பாகத்திற்குக் கொஞ்சமும் குறையாமல் கவர்ச்சி நிரம்பி வழிவதாக ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார்கள். அதிலும் ஹீரோயின் டகோட்டா ஜான்சன் வேற லெவலாம். இதனால் படத்திற்கு ஆர் ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள். #இனிமே அப்படித்தான்!

p106b.jpg

ஹாலிவுட் நடிகைகளுக்கு எப்போதுமே வயதாகிவிட்டால் ஓரங்கட்டப்படுவோமோ என்ற பயம் இருக்கும். ஆனால், தனக்கு அந்த பயம் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் சார்லீஸ் தெரோன். `வயதாவது இயற்கைதானே. இதில் பயப்பட என்ன இருக்கிறது. எனக்கு 41 வயது. முன்பைவிட இப்போதுதான் அதிக பிஸியாக இருக்கிறேன். இனியும் இருப்பேன். டோன்ட் ஒர்ரி மக்களே' என அவர் கருத்துச் சொல்ல, இதுவும் நியாயம்தானே எனக் கை கொடுக்கிறார்கள் அவரின் கொலீக்குகள். #வயசானாலும் அழகுதான்!

p106c.jpg

பாப் பாடகி மிலி சைரஸ் ஹிலாரி க்ளின்டனின் தீவிர ஆதரவாளர். அவருக்காகப் பிரசாரம் எல்லாம் செய்தார். ஆனால் ரிசல்ட் ட்ரம்பிற்கு சாதகமாக வர, அம்மணி மிகவும் அப்செட். `ஹிலாரிதான் அதிபர் பதவிக்குத் தகுதியானவர். எல்லோரும் என்னைப் போலவே யோசிப்பார்கள் என நினைத்தேன். ஆனால் மக்களின் முடிவு வேறு மாதிரியாக இருக்கிறது. வேறு வழியில்லை. ட்ரம்ப்பை அதிபராக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்' எனக் கண்ணீர் கலந்து அவர் ஸ்டேட்மென்ட் விட, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் குவிகின்றன. #எப்படியானாலும் ட்ரெண்டில்!

p106d.jpg

மொத்த மீடியா உலகமும் இப்போது உச்சரிக்கும் பெயர் மேகன் மார்க்கிள். அமெரிக்க டி.வி நடிகையான மேகன் மார்க்கிளும் இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் காதலிப்பதாகச் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது தங்களின் ப்ரைவஸியைப் பாதிப்பதாக இந்த ஜோடி நினைக்க, இப்போது அதிகாரபூர்வமாக, `அவர்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள்தான். அதற்காக அவர்கள் ப்ரைவஸியில் தலையிடுவது சரியில்லை' என அரண்மனை வட்டாரம் அறிவித்திருக்கிறது. `ரைட்டு விடுங்க' என ஒதுங்குகின்றன ஹாலிவுட் மீடியாக்கள். #ப்ரைவஸி முக்கியம் மக்களே!

vikatan

  • தொடங்கியவர்
மரம் வளர்ப்போம்
 
 

article_1479959496-Trees-%282%29.jpgநூறுவருடங்கள் வாழ்ந்த பெரும் மரத்தை நூறு கிராம் கொண்ட பாதரசத்தைக் கலந்த இரசாயன நச்சுப் பொருளை இட்டு, இரவோடிரவாக அழித்த செய்தி அதிர்ச்சியை ஊட்டின. 

அந்த ஒரு மரத்தை அழிக்க கிராம மக்ககள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் வஞ்சக எண்ணம் கொண்ட சிலர், இரவோடு இரவாக இந்த நாசச் செய்கையைக் கூசாமல் செய்தனராம். 

இந்தச் செயல் ஒரு கொலைக் குற்றத்தை விடக் கொடூரமானது. உலக நாடுகள் பூராவுமே மரத்தை வெட்டுவதற்கு ஒரு கொலைக்குரிய தண்டனையை வழங்கினால் என்ன என்று உங்களுக்குத் தோன்ற வில்லையா? 

வீட்டைச் சுற்றி பெரிய மரங்களை வளர்க்க இடம் இல்லாது விடினும் இயன்ற அளவாக மரங்களை வளர்க்க வேண்டும். பெரு வெளிகளில் பெருவிருட்சங்களை விருத்தி செய்க! 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கடைசியா யாருக்கு எப்போ நன்றி சொன்னீங்க? #ThanksGivingDay

156_09480.jpg

டைசியா யாருக்கு எப்போ நன்றி சொன்னீங்கனு உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அன்றாட வாழ்வில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ பலருடைய உதவியும், வழிநடத்தலும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் அதை நாம் கவனித்து அவர்களுக்கு நன்றி சொல்லி விடுகிறோம். ஆனால், பிறந்ததில் இருந்து கடைசி வரை, நம்முடன் வரும் உறவுகளுக்கு நன்றி சொல்லியிருப்போமா என்று கேட்டால், அதற்கு பலரின் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். இதுவரை சொல்லாமல் இருந்தாலும் இன்று ஒரு நிமிடம் மன நிறைவோடு உங்கள் நன்றியை தெரிவியுங்கள். இன்னைக்கு மட்டும் ஏன் நன்றி சொல்லணும்னு கேட்கிறீங்களா? ஏன்னா இன்னைக்கு ‘சர்வதேச நன்றி தெரிவிக்கும் தினம்’.  

நாம் பிறந்தது முதல் நமக்கு பிடிச்ச விஷயங்களை மட்டும் செய்யும் இருவர் உண்டு. அவர்கள்தான் அம்மா, அப்பா. ஒரு சிலர் '7ஜி ரெயின்போ காலனி' படத்துல வர்ற அப்பா மாதிரி கோபப்பட்டுகிட்டே இருந்தாலும் சரி, 'வாரணம் ஆயிரம்' படத்துல வர்ற அப்பா மாதிரி லவ் பண்ற பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பேசுனு சொல்ற அப்பாவா இருந்தாலும் சரி, நம்மளோட வெற்றிக்கு முதல்ல சந்தோஷப்படுறவங்க நம்மள பெத்தவங்களாதான் இருக்க முடியும். நம்மளோட கோபம், பாசம், வெறுப்புனு எல்லாத்தையும் அவங்ககிட்ட காட்டுவோம். ஆனா, அவங்க நமக்காக பல விஷயங்களை செய்யுறாங்கனு தெரிஞ்சும் அதை பெரிசா பொருட்படுத்த மாட்டோம். நன்றியை எதிர்ப்பார்த்து அவர்கள் அதைச் செய்யாவிட்டாலும், ஒருமுறை பாசத்தோடு அவர்களை கட்டியணைத்து நன்றி கூறிப் பாருங்கள், அவர்களுக்கு ஏற்படும் ஆனந்தத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ட்ரை பண்ணித்தான் பாருங்களேன் !

3_20472.jpg

அப்பா, அம்மாகிட்ட சொல்ல முடியாத ரகசியங்களைக் கூட, நண்பர்கள் கிட்ட தைரியமா சொல்ல முடியும். யாரிடமாவது பல்ப் வாங்கினதாக இருந்தாலும் சரி, மிகப்பெரிய பாராட்டு பெற்றதாக இருந்தாலும் சரி, அவங்ககிட்ட சொல்லாம இருக்கவே முடியாது. நம்ம போடுற மொக்கை எல்லாத்தையும் தாங்கிகிட்டு, நம்மளோடவே இருக்கும் பாவப்பட்ட ஜென்மங்கள் நம்முடைய நண்பர்கள் மட்டும்தான். அந்த நண்பர்கள், ஒரே பாலினமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.‘ஸ்ரீதர்’,‘பிரியமான தோழி’ போன்று எதிர் பாலின நண்பர்களாகவும் இருக்கக்கூடும். நாம செய்யுற தப்புகளுக்கு நம்ம நண்பர்களைத் தான் முதலில் திட்டுவார்கள் நம்மளப் பெத்தவங்க. அந்த திட்டுகள எல்லாம் வாங்கிக் கொண்டும், நம்ம கூடவே இருக்குற நண்பர்களுக்கு என்னைக்காவது நன்றி சொல்லி இருப்போமா? அந்த நன்றி ஃபார்மலாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தலையில தட்டியோ, கன்னத்தில் அறைந்தோ, உங்களுடைய பாசத்தையும், அன்பையும் எப்படி வெளிப்படுத்த நினைக்கிறீர்களோ அப்படி தெரிவித்தாலே அவர்கள் காலம் முழுக்க உங்களோட இம்சைகளைத் தாங்கும் வலிமையைப் பெற்று விடுவார்கள்.

பெற்றோர், நண்பர்களைத் தாண்டி, அடுத்தபடியாக நம் வாழ்க்கையை அழகாக்கவும், நம்முடைய பொறுப்புகளை அதிகரிக்கவும், இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள வரும் உறவு, வாழ்க்கைத் துணை. இந்த உறவில் அதிகப்படியான புரிதல் கட்டாயம் தேவைப்படும். வேகமாகப் போய்க் கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில், வாழ்க்கைத் துணையுடன் உட்கார்ந்து பேசும் வாய்ப்புகள் கூட மிகவும் குறைவாகி விட்டது. இருவரும் ப்ளான் பண்ணி நேரம் செலவிட முடிவெடுத்தாலும், ஏதோ ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு, போட்ட திட்டங்கள் அனைத்தும் சிலநேரங்களில் வீணாகி விடுவதும் உண்டு. பேச நேரம் கிடைக்கவில்லை என இத்தனை நாள் கவலைப்பட்டிருந்தாலும், இன்று இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு, அவர்களுக்குப் பிடித்த இடத்துக்கு அழைத்துச் சென்று, உங்களின் காதலை வெளிப்படுத்துங்கள். வாழ்க்கையில் எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் உங்களுடன் கடைசிவரை வரப் போகும் உறவு என்பதை உணருங்கள். நன்றி என வார்த்தைகளில் சொல்லாவிட்டாலும், அதை அவர்கள் உணரும்படி செய்யுங்கள். இதன்பிறகு எத்தனை முறை நீங்கள் சொதப்பினாலும் அவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள்.

2_20007.jpg

மேலே சொன்ன அத்தனை பேரும் நம்முடன் ஏதோ ஒரு பிணைப்பு இருப்பதால், நமக்காக நாம் செய்யும் தவறுகளையும், நாம் காணும் வெற்றிகளையும் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நமக்காக நன்மை செய்வதில் அக்கறை கொண்டு இருப்பவர்கள். இந்த சமூகத்தில் நம்மைச் சுற்றி உள்ள மக்களுக்குக்கு நாம எதுவும் செய்யாவிட்டாலும், இந்த சமூகம் நமக்காக பல விஷயங்களை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், அதன் கடமையைச் செய்து கொண்டுதான் இருக்கிறது. இருசக்கர வண்டியில் 'சைடு ஸ்டாண்ட்' எடுக்காமல் போகும்போது, அதை நமக்கு தெரியப்படுத்தும் நபருக்கு நாம் எந்த விதத்திலும் சொந்தமில்லை. ராணுவத்தில் எல்லைகளில் பணியாற்றும் வீரர்கள் யாரும் தன்னுடைய தனிப்பட்ட குடும்பத்துக்காக போராடி உயிரை இழக்கவில்லை.

நமக்கும் அவர்களுக்கு உறவு எதுவும் இல்லையென்றாலும், அவர்கள் நமக்காகவும், நம்முடைய சொந்தங்களுக்காவும்தான் நாட்டுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாம் எந்தவிதக் கவலையும் இன்றி பாட்டு கேட்டுக் கொண்டோ, படம் பார்த்துக் கொண்டோ வருகிறோம், ஆனால் நம்மைப் பாதுகாப்பாக பயணம் செய்ய உதவுகிறார்கள் பேருந்து நடத்துநர்களும், ஓட்டுநர்களும். முக்கியமான ஒரு இடத்துக்கு சீக்கிரமே போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது நாம அதிகம் தேர்ந்தெடுக்கும் வாகனம் ஆட்டோதான். ஏறின அடுத்த நிமிடம் நினைத்த இடத்துக்கு போயாக வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நாம் கொடுக்கும் அவஸ்தைக்கு ஆயிரம் முறைகூட நன்றி சொல்லலாம். மிக முக்கியமாக தலைவலி இருக்கோ இல்லையோ, வேலை பார்க்கிறோமோ இல்லையோ ஆனால் தவறாமல் வேலைக்குச் செல்லும் அனைவரும் விரும்பிச் செல்லும் இடம், அலுவலகத்தில் அல்லது பக்கத்தில் இருக்கும் டீ கடைதான். டீயா, காப்பியா என கண்டுபிடிக்கக் கடினமாக இருந்தாலும், அங்கு சென்றால் இருக்கும் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விட்டது போல உணர்கிறோம். இவர்களுக்கு எல்லாம் எப்போதாவது நாம் நன்றி சொல்லியிருப்போமா? இதுவரை சொல்லாவிட்டாலும் இன்று நன்றி சொல்லுங்கள்! நேரடியாக நம்முடைய நன்றியைத் தெரிவிக்க முடியாவிட்டாலும், அவர்களுக்காகவும், குடும்பத்துகாகவும் தினமும் பிரார்த்தனை செய்யலாமே. 

வாழ்க்கை என்பது நாம் எதிர்ப்பார்த்தபடி எல்லா நேரங்களிலும் அமையாது, அப்படி அமையும்போது, கட்டாயமாக நம்மையும் தாண்டி, வேறு சிலருடைய உழைப்பும், அவர்களின் அர்ப்பணிப்பும் கட்டாயம் இருக்கும். முடிந்தவரை நம்முடைய 'ஈகோ-வை' விட்டுவிட்டு, அந்தந்த நேரத்தில் நம்முடன் இருப்பவர்களுடன் அன்பு பாராட்டி, வாழ்க்கையை அழகானதாக மாற்றிக் கொள்ள முயற்சியுங்கள்! கிடைத்த வாழ்க்கையை வரமாக்குவதும், சாபமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது. இதனைப் படித்ததற்கு மிகவும் நன்றி!!

vikatan

  • தொடங்கியவர்

 

களத்திற்காக காத்திருக்கும் சண்டை சேவல்கள்

ஜல்லிக்கட்டை போல தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை! சண்டை சேவலை எப்பிடி தயார் செய்வது, வளர்க்கும் முறை மற்றும் பல விசியங்களை பேட்டைக்காரர்கள்(சேவல் வளர்ப்பவர்கள்) நம்மிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.

  • தொடங்கியவர்

 

“உயிர்த்தெழுந்த டாக்டர் ஹூ“ - காணொளி
  • தொடங்கியவர்

துபாயில் பல லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்ட‌ உலகின் மிகபெரிய மாதிரி மலர் விமானம்

Daily_News_7315899133683.jpg

துபாய் : துபாயில் பாலைவன சோலையாக திகழும்  மிராக்கிள் கார்டன் எனப்படும் லட்சக்கணக்கான பூக்களோடு கூடிய‌ மலர் பூங்கா அமைந்துள்ளது. இவ்வருட சீசனில் இப்பூங்காவில் பார்வையாளர்களை கவரும் வகையில் 500 ஆயிரம் மலர்களால் எமிரேட்ஸ் 380 மாதிரி விமானம் வடிவமைக்கபட்டுள்ளது. இப்பூங்காவில் மலர்களால் ஆன வாகனங்கள் ஆண்டுதோறும் இடம்பெற்றாலும் எமிரேட்ஸ் ஏ 380 ஜம்போ ஜெட் போன்ற வடிவமைப்பில் மலர்களால் பிரம்மாண்ட  மாதிரி விமானம் உருவாக்கியுள்ளது இதுவே முதல் முறையாகும்.

எமிரேட்ஸ் விமான நிறுவனத்திடமிருந்து  ஏ 380 விமானத்தின் மாதிரி வரைபடம் பெறப்பட்டு அதனை அடிப்படையாக வைத்து 200 பணியாளர்களை கொண்டு இரும்பு கம்பிகள் மூலம் வெளிப்புற தோற்றம் உருவாக்கப்பட்டது. பின்னர் அதில் செடி கொடிகள் வளர்வதற்கு ஏற்ற சூழல் ஏற்படுத்தப்பட்டு இதில் இறக்கை பகுதிகள்  போன்று ஏற்படுத்தப்பட்டு இன்ஜின் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.பின்னர் மேல் பகுதியில் கொடி வகையிலான தாவரங்கள் அதில் வளர்க்கப்பட்டது.

பின்னர் விமானம் முழுவது 5 லட்சம் மலர்களால்  விமான அலங்கரிக்கப்பட்டு மலர் விமானமாக கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்கிறது. நிஜ விமானத்தின் எடை 500 டன்களாகும் இந்த மலர் விமானம் 100 டன் எடையுள்ளதாக உள்ளது.வரும் 27ந்தேதி மிராக்கிள் கார்டன் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது

http://www.dinakaran.com

emiratesmiracle3_2016_base.jpg

emiratesmiracle2_2016_base.jpg

emiratesmiracle_2016_base.jpg

emiratesmiracle1_2016_base.jpg

 

  • தொடங்கியவர்

"என்னுடைய இயல்பே, இயல்பிலிருந்து நழுவிக் கொண்டே இருப்பதுதான்!"- அருந்ததி ராய் பிறந்த நாள் பகிர்வு

 

அருந்ததி ராய்

ணு உலை எதிர்ப்பு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கான போராட்டங்கள், பழங்குடியினரை காடுகளிலிருந்து வெளியேற்றிவிட்டு இயற்கை வளங்களை கொள்ளையடிக்கத் துடிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்கள் என  சமூகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராக தன் எழுத்தை பயன்படுத்தி வருபவர் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்.

1961-ம் ஆண்டு, மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் பிறந்தார் அருந்ததி ராய். தந்தை ரஜீத் ராய் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். தாய் மேரி ராய் கேரளத்தை சேர்ந்தவர், பெண்கள் அமைப்பு ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அருந்ததி ராய்க்கு இரண்டு வயது இருக்கும்பொழுது பெற்றோர்கள் பிரிய நேர்ந்ததால் தனது தாயுடன் கேரளா திரும்பி தனது பள்ளிப்படிப்பை கோட்டயத்திலும், தமிழகத்தின் நீலகிரியிலும் நிறைவு செய்தார். பின்னர் டெல்லியில் கட்டடக் கலை பிரிவில் உயர்படிப்பை படித்தார் அருந்ததி ராய். 

நாவல்கள், கட்டுரைகள் எனத் தனது எழுத்துப்பணியையும் தாண்டி தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். அரசுகளுக்கு எதிராக வெளிப்படுத்திய விமர்சனங்களால் பல்வேறு முறை இவரது வீடு தாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எந்த இடத்திலும் தனது கருத்துகளை சொல்லத் தயங்கியதே இல்லை. மகாத்மா காந்தியை விமர்சித்து இவர் சொன்ன கருத்துகள் பல்வேறு தளங்களில் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது.   

1989-ம் ஆண்டு வெளிவந்த  "In Which Annie Gives it Those Ones" என்ற திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதியதற்காக அருந்ததி ராய்க்கு தேசிய விருது அளிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு அந்த விருதை திருப்பி அளித்துவிட்டு, 

"மது திறமைகள் எப்போதுமே விருதுகளை வைத்து அளவிடப்படுவதில்லை. மனிதர்கள் கொல்லப்படுகின்றனர், எரிக்கப்படுகின்றனர், மிரட்டப்படுகின்றனர். நாட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் மத சகிப்புத்தன்மை என்ற வார்த்தையை எளிதாக காரணம் காட்டுகின்றனர்.  இத்தகைய வார்த்தையை பயன்படுத்துவதே முதலில் தவறு. நாட்டில் குண்டர்கள் கையிலெடுக்கும் விவகாரமாக மாட்டிறைச்சி ஆகி விட்டது. மாடு எப்படி கொல்லப்படுகிறதோ அது போலவே அவர்கள் மனிதர்களையும் கொல்கின்றனர்." என தனது கருத்தை பதிவு செய்தார். 

1989-ல் சிறந்த திரைக்கதை எழுதியதற்காக தேசிய விருது பெற்று இருந்தாலும். 'பண்டிட் குயின்' என்ற திரைப்படத்துக்கு தனது விமர்சனத்தை பதிவு செய்ததன் மூலமாக பல தரப்பிலும் கவனிக்கப்பட்டார் அருந்ததி ராய்.  
" Broken republic, Capitalism A Ghost Story, The End Of Imagination, War Talk " எனப் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார் அருந்ததி ராய்.

புனைவு இலக்கியத்துக்காக எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்படும் உலகின் உயரிய  விருதான புக்கர் பரிசினை 1997 இல் பெற்றார் அருந்ததி ராய். முதன் முதலில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர்  புக்கர் பரிசு பெற்ற பெருமையும் இவரைச் சேரும்.'சின்ன விஷயங்களின் கடவுள் (The God of Small Things)' என்ற நாவல் அருந்ததிராய்க்கு புக்கர் பரிசை பெற்றுத் தந்தது. 

"இது ஐந்து நீதிபதிகளின் தீர்ப்பு. ஒருவேளை வேறு ஐந்து பேர் நீதிபதிகளாக இருந்திருந்தால், வேறு ஒரு புத்தகம் தேர்வாகி இருக்கும். அதனால், என் புத்தகம் மட்டும் தான் சிறந்தது என நான் கருதவில்லை." புக்கர் பரிசு வென்ற பொழுது அருந்ததி ராய் சொன்ன வார்த்தைகள் இவை..!!

அருந்ததி ராய்

"குறிப்பிட்ட நாளில் சட்டிஸ்கர் மாநிலம் தான்தேவாடாவில் அமைந்துள்ள தான்தேஸ்வரியம்மா ஆலயத்துக்கு வரவேண்டும். கையில் புகைப்படக் கருவியும், நெற்றியில் பொட்டும், ஒரு தேங்காயும் வைத்திருக்க வேண்டும். உங்களைச் சந்திப்பவர் தலையில் தொப்பி அணிந்திருப்பார். கையில்   'அவுட்லுக்' இந்தி இதழும் சில வாழைப்பழங்களும் வைத்திருப்பார்.  கடவுச் சொல்: நமஸ்கார் குருஜி" மாவோயிஸ்டுகளை அவர்கள் இடத்தில் சந்திக்கச் செல்லும் முன் அருந்ததி ராய் வீட்டுக்கு வந்து சேர்ந்த கடிதத்தின் சுருக்கம் தான் இது. கடிதத்தை தொடர்ந்து மாவோயிஸ்டுகளுடன் பயணம் செய்தவர் ' தோழர்களுடன் ஒரு பயணம் (Walking with The Comrades)' என்ற பெயரில் மாவோயிஸ்டுகளுடனான தனது அனுபவங்களையும், அவர்களது கருத்துகளையும் எழுதினார்.      

படிப்பு வேறு. பின் சினிமா.. அதன்பின் போராட்டாங்கள் என மாறிவரும் தளங்கள் குறித்து ஒருமுறை அருந்ததி ராயிடம் கேட்கப்பட்டது. "என்னுடைய இயல்பே மாறிக்கொண்டிருப்பதுதான்" என்றார் ராய்.

தனது முதல் நாவலுக்கு பிறகு எழுதாமல் இருந்தவர், 2017ல் இரண்டாவது நாவலை பப்ளிஷ் செய்யவிருக்கிறார். நாவலின் பெயர் The Ministry of Utmost Happiness.

ரு நேர்காணலில் அருந்ததி ராயிடம்..,

"இது வரையிலான இந்தியப் பிரதமர்களிலேயே சிறந்தவர் என்று யாரைச் சொல்வீர்கள்?" எனக் கேட்கப்பட்டது.
"அப்படி யாரும் இல்லை. ஆனால், மன்மோகன் சிங் மோசமானவர். இந்தியாவை விற்றவர்." எனச் சொன்னார்.

சில வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் மாவோயிஸ்டுகள் குறித்து அவர் சொன்னது.., 
"மாவோயிஸ்ட்டுகள் ஆயுதம் ஏந்தி போராடுவதை நான் சரி என்று சொல்லவில்லை. ஆனால், அவர்களுடைய போராட்டத்தின் நோக்கம் நியாயமானது என்று சொல்வதில் எனக்கு எந்தத்  தயக்கமும் இல்லை." ஆம் அது தான் அருந்ததி ராய்.  தன் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு அவர் எப்போதுமே தயங்கியது இல்லை.

வாழ்த்துகள் தோழர்!!  

vikatan

  • தொடங்கியவர்

15220199_1193724477342911_52295666912144

 
 
Pocket Dynamo என்று புகழப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட் காக்கும் துடுப்பாட்ட வீரர் ரொமேஷ் களுவிதாரணவின் பிறந்தநாள்.
அதிரடி ஆரம்பங்களை வழங்கி, இலங்கையின் பல வெற்றிகளில் பங்களித்த 'களு' 1996இல் இலங்கை உலகக்கிண்ணம் வென்றபோது முக்கியமான வீரர்.

இப்போது இலங்கையின் பல்வேறு இளையவர் அணிகளுக்குப் பயிற்றுவித்து வருகிறார்.
Happy Birthday Romesh Kaluwitharana
 
  • தொடங்கியவர்
மிஸ் ஏசியா பசுபிக் இன்டர்நெஷனல் 2016 அழகுராணி போட்டியில்…
 

மிஸ் ஏசியா பசுபிக் இன்டர்நெஷனல் 2016 அழகுராணி போட்டி பிலிப்பைன்ஸில் நடைபெறுகின்றது.

 

20872_2.jpg

 

20872_3.jpg

 

20872_4.jpg

 

இப் போட்டியில் பங்குபற்றும் அழகுராணிகள் தேசிய ஆடையலங்கார போட்டியில் பங்குபற்றியபோது பிடிக்கப்பட்ட படங்கள் இவை.

 

20872_5.jpg

 

20872_6.jpg

 

 

metronews.lk

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

1000 செயற்கை எரிநட்சத்திரங்கள்: ஜப்பான் விஞ்ஞானிகளின் புது முயற்சி

2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்போட்டிகளின் துவக்க விழாவில் 1000 செயற்கை எரிநட்சத்திரங்களை உருவாக்கி, அவற்றை வானிலிருந்து வண்னமயமான எரிநட்சத்திர மழையாய் பொழிந்து ஜொலிக்கவிட ஜப்பான் திட்டம்.

  • தொடங்கியவர்

அட... 2016-ன் டாப் 25 கண்டுபிடிப்புகளில் சர்க்கரைவள்ளிக் கிழங்கும் ஒன்று... ஏன் தெரியுமா?

 

சர்க்கரைவள்ளி sweet potato

ந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள்' என்று உலகளவில் 25 கண்டுபிடிப்புகளைப் பட்டியலிட்டுள்ளது, 'டைம்' பத்திரிகை. பல்வேறு தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் விளைபொருளான ஆரஞ்சு சுவையுடைய ஒரு சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரகமும் இடம்பெற்றுள்ளது. இது இடம்பெறக் காரணம்... அது, பல்லாயிரக்கணக்கான ஆப்பிரிக்க குழந்தைகளை ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இருந்து காப்பாற்றியிருப்பதுதான். 

என்ன பிரச்னை?

food_15000.jpg

ஆப்பிரிக்க பகுதிகளில் பரவி வந்த எபோலா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற பிரச்னைகளை விடவும், அவர்களை அதிகம் அச்சுறுத்தி வந்தது, ஊட்டசத்துக் குறைபாடுதான். துணை சகாரா பாலைவனப் பகுதிகளில் வாழும் 43 மில்லியன் குழந்தைகள் விட்டமின் ஏ குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 6 வயதுக்குள்ளாகவே இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகள்... பார்வை பறிபோதல், வளர்ச்சிக் குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற நோய்களுக்குள்ளாகின்றனர். 118 நாடுகளில், 140 மில்லியன் குழந்தைகள் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்படிப் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மாத்திரைகள் கொடுப்பதன் மூலம் குறைபாட்டை சரி செய்வது என்பது கடினமான காரியம். அதனால்தான், அவர்களைக் குணப்படுத்த இந்த ஆரஞ்சு சர்க்கரைவள்ளிக் கிழங்கை பயன்படுத்தியிருக்கின்றனர். பயோ ஃபோர்ட்டிஃபிகேஷன் (Biofortification) என்னும் உயிரி ஊட்டமேற்றும் முறை மூலம் புது ரக பயிரை உற்பத்தி செய்துள்ளனர், விஞ்ஞானிகள்.  

food2_15309.jpg

'ஆரஞ்சு சதையுடைய ஸ்வீட் பொட்டேடோ' என அழைக்கப்படும் இவற்றை ஏற்கனவே இருந்த விளைபொருளான சர்க்கரைவள்ளிக் கிழங்கில் விட்டமின் ஏ சத்தை உயர்த்தி உருவாக்கியுள்ளனர். 2006-ம் ஆண்டில், உலக உருளைக்கிழங்கு நிறுவனம், ஹார்வெஸ்ட் ப்ளஸ் மற்றும் பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்துதான் இந்த ஆராய்ச்சி மேற்கொண்டன. ஆப்பிரிக்க மக்களின் உணவு மற்றும் பாதுகாப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட ஷாஷா (SASHA) எனப் பெயரிடப்பட்ட இத்திட்டத்துக்கு 21 மில்லியன் டாலர்களை வழ்ங்கியுள்ளது, பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை. விவசாயிகளிடமும் இப்பயிர் குறித்து எடுத்துச்சொல்லி சாகுபடி செய்ய வைத்ததோடு, விளம்பரங்களும் அதிக அளவில் செய்யப்பட்டன.

உலகின் 6-வது முக்கியப்பயிர் இதுதான்!

food4_15192.jpg

"இந்த ஆரஞ்சு சுவையுடைய சர்க்கரைவள்ளிக் கிழங்குகளில், விட்டமின் ஏ, சி மற்றும் பி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. உலக அளவில் தற்போது அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, சோளம் மற்றும் மரவள்ளிக் கிழங்குகளுக்கு அடுத்து 6-வது முக்கியப் பயிராக இது இருக்கிறது. வளரும் நாடுகளில் இது 5-வது முக்கியப் பயிர். ஆண்டுக்கு 105 மில்லியன் டன் அளவில் உலகம் முழுவதும் உற்பத்தியாகிறது. சீனா, இந்த ஆரஞ்சு சுவைகொண்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மிகப்பெரிய சந்தையாகவும், உற்பத்தி நிலையமாகவும் உள்ளது. கால்நடைகள் மற்றும் மனிதர்களின் உணவாக சீனாவில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது அதிகளவில், ஆசியக் கண்டத்தில்தான் இவை உற்பத்தியாகின்றன" என்கிறது, சர்வதேச உருளைக்கிழங்கு நிறுவனம்.

இந்த சிறப்பு ரகத்தை உருவாக்கியதற்காக மரியா ஆண்ட்ராடே, ராபர்ட் வங்கா, ஜேன் லோ மற்றும் ஹோவர்த் போயிஸ் ஆகிய நால்வருக்கும் இந்த ஆண்டுக்கான 'உலக உணவுப் பரிசு' வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நால்வருமே பல ஆண்டுகளாக தங்கள் நாடுகளில் தனித்தனியாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தவர்கள். 2006-ம் ஆண்டு முதல் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். 

vikatan

  • தொடங்கியவர்

தன் கடிதத்தால் அமெரிக்க அதிபரையே கலங்கவைத்த சிறுவன்!

 

அமெரிக்கஅமெரிக்க அதிபர் ஒபாமாவை கலங்கவைத்த  ஆறு வயது சிறுவனின் கடிதம், வைரலாகப் பரவிவருகிறது. அந்த கடிதம் எதற்காக எழுதப்பட்டது தெரியுமா? சிரியாவில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. சிரியாவின் வடக்கு மாநிலத்தில் உள்ள அலெப்போ நகரம் கிளர்ச்சியாளர்கள் வசம் சிக்கியுள்ளது. அவர்களிடம் இருந்து அந்நகரை மீட்க அவ்வப்போது அரசின் விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அலெப்போ நகரம் எப்போதும் போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் இங்குள்ள குவாட்ரிஜ் என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது. அந்தக் கட்டடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்றபோது, இடிபாடுகளில் சிக்கியிருந்த ஐந்து வயதுச் சிறுவன் ஓம்ரான் தக்னீஷை இடிபாடுகளில் இருந்து மீட்டெடுத்தனர்.

ஓம்ரான் தன் தலையில் ரத்தக் காயங்களுடனும், உடல் முழுக்கத் தூசியாலும் போர்த்தப்பட்ட புகைப்படம், இணையத்தில் வைரலாகப் பரவி உலகத்தையே மிரளவைத்தது. சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அமரவைக்கப்பட்டபோது,  தனக்கு என்ன நேர்ந்தது என்று அறியாமல் தன் தலையில் இருந்து வழியும் ரத்தத்தை அவன் கையால் துடைக்கும் வீடியோ காட்சியும் உலக மக்களின் நெஞ்சை உலுக்கியது.

இந்தக் காட்சிகள் பெரியவர்களை மட்டும் அல்ல, ஆறு வயது அமெரிக்கச் சிறுவனான அலெக்ஸையும் கதிகலங்கவைத்தது, மற்றவர்களைப்போல 'அய்யோ பாவம்' என்று சில நொடிகள் வருத்தப்பட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்காமல், அலெக்‌ஸ் உடனடியாக ஒபாமாவுக்கு ஒரு கடிதம் எழுதினான். சிரியா போரில் பாதிக்கப்பட்ட சிறுவனான ஓம்ரானை அமெரிக்காவுக்கு அழைத்துவர அனுமதிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டான்.

obama%20letter-1_14267.jpg

'நீங்கள் அனுமதித்தால் சிரியாவில் இருந்து ஓம்ரானை அழைத்துவந்து எங்கள் குடும்பத்தில் ஒருவனாகச் சேர்த்துகொள்வோம். என் சகோதரனாக எங்கள் வீட்டிலேயே அவன் வளரட்டும். என் தங்கை அவனுக்காக மின்மினிப் பூச்சி மற்றும் பட்டாம்பூச்சி பிடித்துத்தருவாள். நான் படிக்கும் பள்ளியிலேயே அவனையும் சேர்ப்பேன். அங்கு படிக்கும் மற்றொரு சிரியாவைச் சேர்ந்த சிறுவனுக்கு இவனை அறிமுகம் செய்து வைப்பேன். நாங்கள் ஒன்றாக விளையாடுவோம், பிறந்தநாள் விழாக்களை கொண்டாடி மகிழ்வோம். ஓம்ரான் தன் மொழியை எங்களுக்குக் கற்பிப்பான். நாங்கள் எங்கள் பள்ளியில் படிக்கும் ஜப்பான் சிறுவனுக்கு ஆங்கிலம் கற்பித்ததுபோல ஓம்ரானுக்கும் கற்பிப்போம்!'

இப்படியாக, தன் கிறுக்கல் கையெழுத்தில் அலெக்ஸ் எழுதியிருந்த நீண்ட கடிதத்தை கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதி ஐக்கியநாடுகள் அகதிகளுக்கான உச்சி மாநாட்டில் ஒபாமா படித்துக்காட்டினார். அலெக்ஸ் எழுதிய கடிதத்தின் வரிகள் சபையினரை மட்டும் அல்லாமல் ஒபாமாவையும் கண்கலங்கவைத்தது. கடிதத்தை வாசித்து முடித்தபோது அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.

'இந்தச் சிறுவயதிலேயே அலெக்ஸ் கொண்டுள்ள மனிதநேயத்தைப் பார்த்து மற்றவர்களும் கற்றுக்கொள்ளவேண்டும். மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று இந்தக் கடிதம் எனக்குப் பாடம் கற்பித்துள்ளது' என்று தன் பேச்சை முடித்தார் ஒபாமா. தன் மனதை உருகச்செய்த அலெக்ஸை நவம்பர் 10-ம் தேதி வெள்ளை மாளிகைக்கு வரவழைத்தார். அப்போது அலெக்ஸின் கரங்களைப் பிடித்து அன்புடன் வரவேற்ற ஒபாமா, 'நீ மிகவும் தயாளகுணம் படைத்தவன், மற்ற உயிர்கள் மீது அன்பு செலுத்துபவன், உனது மனிதநேயத்தைக் கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்' என்று பாராட்டி வாழ்த்தினார்.

vikatan

  • தொடங்கியவர்

15109584_1193747127340646_65276012512661

தென் ஆபிரிக்கக் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் நீள் மக்கென்சியின் பிறந்தநாள்
Happy Birthday Neil McKenzie

  • தொடங்கியவர்

தடைகளை தகர்த்து சாதனை படைத்த மகளிர் (புகைப்படத் தொகுப்பு)

 

தங்களின் உழைப்பு, விடாமுயற்சி, சாதனைகள் மற்றும் போராட்டங்களால் உலகெங்கும் உள்ள பலருக்கும் ஆதர்ச வழிகாட்டியாக திகழ்ந்த சில பெண்கள் அடங்கிய புகைப்பட தொகுப்பு இது.

இந்திரா காந்தி

இந்தியாவின் இரும்புப் பெண்மணியாகக் கருதப்படும் இந்திரா காந்தி, நாட்டின் பிரதமராக இருந்த போதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதும் எண்ணற்ற முடிவுகளை துணிச்சலாக எடுத்தவர்.

மாரி கியூரி

 

உலகின் மிகப் பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசை ஒரு முறை வெல்வதே அரிது. முதன்முறையாக நோபல் பரிசை இரண்டு முறை வென்றது, மாரி கியூரி தான். புற்று நோய்க்கு சிகிச்சைக்கு மாரியின் கண்டுபிடிப்புகள் தான் ஆரம்பம். தன் வாழ்வை அறிவியலுக்காகவே அர்ப்பணித்த மாரி கியூரி, வரலாறு காணாத விஞ்ஞானி என்று போற்றப்படுகிறார்.

ஜே. கே. ரவுலிங்.

ஹாரி பாட்டர் நாவலையோ அல்லது அதனை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தையோ கேள்விப்படாதோர் இருக்க மாட்டார்கள். இதனை படைத்தவர் ஜே. கே. ரவுலிங். வறுமையின் சூழலில் சிக்கி தவித்து, எழுதுவதற்கு ஒழுங்கான இடம் கூட கிடைக்காமல் சிரமப்பட்ட ஜே. கே. ரவுலிங், எண்ணற்ற நிராகரிப்புகளை தாண்டியே வெற்றிக் கொடியை நாட்டியுள்ளார்.

ஸ்டெஃபி கிராஃப்

'நன்றி ஸ்டெஃபி! - அழகான, அற்புதமான டென்னிஸ் நாட்களை வழங்கியதற்கு நன்றி' - இது தான் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் ஒய்வு பெற்ற போது, உலகெங்கும் உள்ள பல பத்திரிக்கைகளின் தலையங்கமும். 22 கிராண்ட் ஸ்லாம்கள், ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கம், பல கிராண்ட் பிரீ பட்டங்கள் என்று எண்ணற்ற சாதனைகளை படைத்த ஸ்டெஃபி, ஒய்வு பெற்ற பின் போர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.

ஹெலன் கெல்லர்

கண்பார்வையற்ற மற்றும் கேட்கவும், பேசவும் இயலாத ஒரு மாற்றுத் திறனாளியான ஹெலன் கெல்லர், புகழ்பெற்ற எழுத்தாளராக, பேச்சாளராராக பின்னாட்களில் மாறியதன் காரணம் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஆகிய பண்புகளை கொண்டிருந்தது தான். பெண்களுக்கு மட்டுமல்ல, இந்த உலகில் சாதிக்க விரும்பும் ஓவ்வொருவருக்கும் ஹெலனின் வாழ்க்கை வரலாற்றை படிப்பது புத்துணர்வைத் தரும்.

ஆங் சான் சூ சி

 

மியான்மரின் நடைமுறைத் தலைவரான ஆங் சான் சூ சி, தனது பொது வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்களுக்கு அளவே இல்லை. மிகவும் கடும்போக்குடன் செயல்பட்ட மியான்மர் ராணுவ அரசை எதிர்த்த ஆங் சான் சூ சி, எண்ணற்ற ஆண்டுகள் வீட்டுச்சிறையில் கழிக்க நேரிட்டது. இரும்புப் பெண்மணியான சூ சி, தனது கொள்கையால் சற்றும் பின்வாங்காமல் சாதித்து காட்டினார்.

அகதா கிறிஸ்டி

மர்ம நாவல் எழுத்தாளார்கள் பலர் இருந்தாலும், அகதா கிறிஸ்டிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. அகதாவின் மேடை நாடகமான 'தி மௌஸ் டிராப்' (The Mousetrap ) பல ஆண்டுகளாக அரங்கேற்றப்பட்டு சாதனை புரிந்து வருகிறது.

செரீனா வில்லியம்ஸ்

ஸ்டெஃபி கிராஃபின் கிராண்ட் ஸ்லாம் உலக சாதனையை யாரும் எட்ட முடியாது என்ற எண்ணத்தை உடைத்து செரீனா வில்லியம்ஸ் சமன் செய்துள்ளார். 22 கிராண்ட் ஸ்லாம்கள் மற்றும் 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்றுள்ள செரீனா , ஆக்ரோஷத்தில் மகளிர் டென்னிஸ் ஆட்டம், ஆடவர் டென்னிஸ் போட்டிகளுக்கு சற்றும் குறைந்ததல்ல என்று நிரூபித்தவர்.

சிறிமாவோ பண்டாரநாயக்க

உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர் இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்க

அன்னை தெரஸா

கருணையின் மறு உருவம் என்று பலராலும் அழைக்கப்படுபவர் அன்னை தெரஸா. அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா ஆகியவற்றை பெற்றவர். சமீபத்தில் ரோமன் கதோலிக்கத் திருச்சபையால் புனிதராக்கப்பட்டவர்.

மார்லின் மன்றோ

ஹாலிவுட் திரைப்பட நடிகைகளில் மறக்க முடியாதவர் மார்லின் மன்றோ. என்றும் ரசிகர்களின் கனவுக்கு கன்னியாக விளங்கும் மார்லின் மன்றோ தனது துயரங்களையும், ஏமாற்றங்களையும் புறந்தள்ளி ரசிகர்களை தனது நடிப்பு மற்றும் பாடல்களால் பரவசப்படுத்தினார். அவரது வாழ்க்கையை போலவே புதிராக அமைந்தது அவரது மரணமும்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி

ஐ.நா. மன்றத்தில் இசை கச்சேரி நடத்திய முதல் இந்தியரான எம்.எஸ்.சுப்புலட்சுமி, இன்றளவும் பலராலும் பெரிதும் விரும்பப்படும் சுப்ரபாதத்தை பாடியவர் ஆவார். எண்ணற்ற பக்தி பாடல்கள், திரைப் பாடல்களை பாடியுள்ள எம்.எஸ்.சுப்புலட்சுமி, இசைத்துறையில் உலகப் புகழ் பெற்ற இந்தியர் ஆவார்.

ஃபிளாரன்ஸ் ஜாய்னர்

மூன்று ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள், இரண்டு உலக சாம்பியன்ஷிப் தங்கப்பதக்கங்கள் என பல பதக்கங்களை குவித்துள்ள ஃபிளாரன்ஸ் ஜாய்னர், 'தடகள ராணி' என்று புகழப்பட்டவர். தனக்கென்று தனி பாணி அமைத்துக் கொண்ட ஃபிளாரன்ஸ், 38 வயதிலேயே காலமாகி விளையாட்டு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியவர்.

BBC

 

  • தொடங்கியவர்

திருமண வரவேற்பில் ஸ்வைப் மெஷினுடன் அமர்ந்திருந்த மணமக்கள்: வைரல் புகைப்படம்

 

திருமண வரவேற்பில் ஸ்வைப் மெஷினுடன் புதுமணத் தம்பதியர் அமர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
திருமண வரவேற்பில் ஸ்வைப் மெஷினுடன் அமர்ந்திருந்த மணமக்கள்: வைரல் புகைப்படம்
 
கடந்த 8-ம் தேதி இரவு இன்று முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் மிகப்பெரிய தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், தங்களது அன்றாட செலவுகளுக்கே மக்கள் வங்கி மற்றும் ஏடிஎம்-கள் முன்பு காத்திருந்து பணம் எடுக்கும் சூழ்நிலையில் உள்ளனர்.

திருமண வீட்டாருக்கு வங்கிகளில் இருந்து பணம் எடுக்க சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தாலும். இந்த அறிவிப்பால் திருமணம் செய்வோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

தடைகளை மீறி திருமணம் நடந்தாலும் விழாவிற்கு வரும் உறவினர்கள், நண்பர்களால் பரிசுப்பொருளை பணமாக வழங்க முடியவில்லை. ஒருசில திருமண விழாக்களில், ஸ்வைப் மெஷின் மூலம் மொய்ப்பணம் வசூலித்துள்ளனர்.

இந்நிலையில் வட மாநிலமொன்றில் புதிதாக திருமணம் செய்த தம்பதியர் ஸ்வைப் மெஷினுடன் வரவேற்பில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், "விருந்தாளிகளிடம் இருந்து திருமண தம்பதிகள் எந்தவித பிரச்னையுமின்றி பணம் பெற, தம்பதிகளுக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்யும் இயந்திரத்தை பரிசாக கொடுக்கலாம்" என ஐடியா கொடுத்து இவர்களின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

maalaimalar

  • தொடங்கியவர்

சிங்கம் 3 பட பாடல் டீசர்...

 

 

 

  • தொடங்கியவர்

 

ஃபுளோரிடாவில் ஒரு பிரம்மாண்ட எரிகல்

ஃபுளோரிடாவில் வானிலிருந்து விழுந்த பிரம்மாண்ட எரிகல் ஒன்று அபூர்வமாக கேமெராவில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.

  • தொடங்கியவர்

அரை நூற்றாண்டு கழித்து ஜப்பானில் பனிப்பொழிவு!

 

japan%202_19131.jpg

டோக்கியோவில் அரை நூற்றாண்டு கழித்து, நவம்பர் மாதம் பனிப் பொழிந்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. டோக்கியோ நகரை விட சுற்றுப்புறத்தில் இருக்கும் புறநகர் பகுதியில் பனி அதிகமாக பொழிந்துள்ளது எனக் கூறப்படுகிறது. 


இந்த திடீர் பனிப்பொழிவு பற்றி,'இந்த பனிப்பொழிவு வந்துள்ளதால், குளிர்காலம் கடுமையாக இருக்கும் என்று எண்ண வேண்டாம். இது எதேச்சையாக நடந்த ஒரு சம்பவம்.' என்று கூறியுள்ளது ஜப்பான் வானிலை மையம். 


டோக்கியோவின் மத்தியப் பகுதியில் 1962 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் நவம்பர் மாதத்தில் பனிப்பொழிகிறது என்று கூறுகிறது ஜப்பானிய வானிலை மையம்.

vikatan

  • தொடங்கியவர்

 குட்டி பறவைக்கு வந்த தைரியம்!

 
  • bird_3090085g.jpg
     
  • bird_2_3090087g.jpg
     
 

கடற்கரையோர மணல் பரப்பில் தவ்வித் தவ்வி ஓடிக்கொண்டிருக்கின்றன சில அலை உள்ளான் பறவைகள் (Sanderlings). மணலுக்குள் தன் அலகைச் செருகி இரை கிடைக்குமா என்று கிளறிப் பார்க்கின்றன. அலை பக்கத்தில் வந்தால் கரைக்கு ஓடுகின்றன; உள்வாங்கினால் போன வேகத்தில் திரும்பவும் வந்து மணலைக் கிளறுகின்றன. பெரிய அலை வந்தால் விருட்டெனப் பறந்து கரைக்கே வந்துவிடுகின்றன. இதெல்லாம் செய்யத் தெரியாத ஒரு குஞ்சு ‘அலை உள்ளான்’ கடலைக் கண்டாலே நடுநடுங்கித் தன் அம்மாவிடம் பதுங்கிக்கொள்கிறது.

தன்னுடைய அம்மா, இரையை எடுத்துவந்து ஊட்டிவிடும் என நினைத்து வாயைத் திறந்து பசியோடு காத்திருக்கிறது அந்தக் குஞ்சு. ஆனால், அம்மா ஊட்டிவிடுவதாக இல்லை. இரையைக் குஞ்சே தேட வேண்டும் என்று அம்மா நினைக்கிறது. இப்படி அம்மா-குஞ்சு பறவையிடயே நடக்கும் செல்ல சேட்டைகள்தான் ‘பைப்பர்’ என்ற அனிமேஷன் குறும்படம்.

குழந்தைகள் பயத்தை விட்டு ஒவ்வொரு செயலையும் கற்றுக்கொள்வது எப்படி என்பதைச் சுவாரசியமாகக் குஞ்சுப் பறவை மூலமாக இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்கள். ஒரு காட்சியில், குட்டி நண்டைப் பின்தொடர்ந்து செல்கிறது குஞ்சு. அப்படிப் போகும்போது அலை பாய்ந்து வருகிறது. அலையைப் பார்த்ததும், மணலுக்குள் தன்னைப் புதைத்துக்கொள்கிறது குட்டி நண்டு. இதைப் பார்த்துத் தன் உடலையும் மணலில் புதைத்துக்கொள்கிறது குஞ்சுப் பறவை. ஆனால், பயத்தில் தன்னுடைய கண்களை இறுகப் பொத்திக்கொள்கிறது.

bird_4_3090086a.jpg

அப்போது அந்தப் பறவையின் அலகைத் தன்னுடைய கொடுக்கால் தட்டுகிறது நண்டு. கண்களைத் திறக்கும் பறவைக்கு நீருக்குள் இருக்கும் அழகு அற்புதக் காட்சியாகத் தெரிகிறது. அந்த நொடிப் பொழுதில் அதனிடமிருந்து பயம் விட்டு விலகிப்போகிறது. உடனே ஓடியாடி குதிக்கிறது. பெரிய அலை வந்தால்கூட தைரியமாகப் போய் இரையை எடுத்து வருகிறது குஞ்சு பறவை.

ஒரு விஷயம் தெரியாதவரைதான் பயம். அது என்னவென்று தெரிந்துகொண்டுவிட்டால் அச்சம் எல்லாம் போயே போச்சு என்பதை அழகாகப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

சுமார் 6 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தை உங்களுக்குப் பார்க்க ஆசையா?

 

பறவையைப் பின்தொடர்ந்த மனிதர்கள்

alam_3090088a.jpg

வழக்கமான அனிமேஷன் படங்களைப் போல அல்லாமல் பறவைகள் பறவைகளாகவே நடந்துகொள்வதுதான் ‘பைப்பர்’ குறும்படத்தின் தனிச் சிறப்பு! சாண்டர்லிங்க்ஸ் என்றழைக்கப்படும் ‘அலை உள்ளான்’களின் இயல்பை ஆராய இப்படத்தின் குழுவினர் வாரக் கணக்கில் கலிபோர்னியாவின் கடற்கரைகளில் அப்பறவைகளைப் பின்தொடர்ந்தார்கள். அவற்றின் இயல்பை அருகிலேயே இருந்து கவனித்து அதற்குப் பிறகுதான் அனிமேஷன் செய்திருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் ஆலம் பரிலரோ மூன்றாண்டுகள் இப்படத்துக்காக செலவழித்திருக்கிறார்.

tamil.thehindu

  • கருத்துக்கள உறவுகள்

யாழில்   த ங்கள் பகிர்வுகள் மிகவும் பாராடடத்தக்கவை .. ..  தா ங்களும் ரசித்து மற்ற்வர்களுக்கும்  ரசிக்க தந்தமைக்கு ...நன்றி

.:)  எனக்கும் இயற்கையை ரசிக்க பிடிக்கும்  

  • தொடங்கியவர்

மனம் அற்ற நிலையே தியானம்
 
 

article_1479871549-sadhguru-on-meditatioதொலைக்காட்சியில் ஒருவர் தாங்கள் மக்களுக்கு ஞானமூட்டும் விதத்தினை இப்படிச் சொன்னார். 

“நீங்கள் நோய்வாய்ப்பட்டால் ‘கப்சியூல்ஸ்’ (கூட்டுக்குளிசை) எடுக்கின்றீர்கள். அது உங்கள் நோய்களை உடனே நீக்கிவிடுகின்றது. அது போலவே நாங்களும் உங்களுக்கு மூன்றே மூன்று நாட்கள் தியானப் பயிற்சியின் ஊடாகத் தியானத்தை முழுமையாகச் சொல்லிக் கொடுக்கின்றோம்” என்றார். 

மனம் அற்ற நிலையே தியானம் ஆகும். இன்று எத்தனை பேர் மனம் அற்ற நிலையை அடைந்து விட்டார்கள்? மனம் அற்ற தியான நிலை என்ன சாதாரணமா? ரிஷிகள் எத்தனை வருடங்கள் தவம் இருந்து பெறும் நிலையல்லவா? இது என்ன விற்பனைக்குரிய வியாபாரமா? 

மூன்று நாட்களில் ஞானியாக்க முடியும் என்று எத்தர்கள் சொன்னதைக் கேட்டு, இலட்சாதி இலட்சம் மக்கள் கூடுகின்றார்கள். வெட்கம்!

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்த 10 தவறுகளைச் செய்யாதீர்கள் இளைஞர்களே! #Alert

தவறு

பொதுவாக நாற்பது வயதில் தான் ஒரு மனிதன்  முழுமையாகிறான் எனச்  சொல்வார்கள் ஆனால் இப்போது வேலைப்பளு, மனம் போன வாழ்வு, ஒழுக்கமின்மை என பல காரணங்களால், தவறுகளால்  இப்போது நாற்பதிலியே மனிதன்  முடமாகிறான். அறுபது - எழுபது வயதுகளில் வர வேண்டிய பல வகையான  நோய்கள் தற்போது முப்பது - நாற்பது வயதுகளிலேயே வர ஆரம்பித்திருக்கிறது. உலகம் முழுவதும் இளம் வயது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தவாறே இருக்கிறது. . சர்க்கரை வியாதி, பிபி, கொலஸ்ட்ரால், கல்லீரல் பிரச்னை என அத்தனையும் நாற்பது வயதிலேயே வர ஆரம்பித்திருக்கிறது. 

கார்த்திக்குக்கு 28 வயது தான் ஆகிறது, கடும் உழைப்பாளி, நல்ல சம்பளமும் வாங்கிக்கொண்டிருந்தான். பெற்றோர்கள் அவனுக்கு வரன் பார்த்திருந்தார்கள், ஆசை ஆசையாக ஊருக்குச் சென்றவன், அங்கே திடீரென மயங்கி விழுந்தான்.  முதன் முதலாக மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்ற கார்த்திக்கிடம், அவருக்கு  சர்க்கரை நோய், பி.பி, இதய நோய் வந்துள்ளது என மருத்துவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்தான், மனமுடைந்தான். கொஞ்சம் நிதானித்து முன் கூட்டியே உடல்நலனை கவனித்திருந்தால் இந்த நோய்களை தடுத்திருக்கமுடியும் என மருத்துவர் சொன்னதை கேட்டு முற்றிலும் நொறுங்கிப்போனான். இன்று தமிழகம் முழுவதும் கார்த்திக்கை போன்ற பல நபர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு நூறு பேர் அய்யோ கொஞ்சம் யோசிச்சிருக்கலாமே என உச் கொட்டுகிறார்கள். இதற்கு யார் காரணம்? எது தீர்வு ?

தவறு

உலகம் முழுவதும்  மருத்துவ உலகில் தற்போது பிரபலாமாகி வரும் சொல் பிரிவென்டிவ் மெடிசின் என சொல்லப்படும்  முன்காப்பு மருத்துவம். ஒரு நோய் வந்த பின்னர் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதை விடவும், அவ்வபோது உரிய பரிசோதனைகளைச் செய்து,  கூடுமானவரை நோய்களை தடுப்பதையே நோக்கமாக கொண்டது தான் பிரிவென்டிவ் மெடிசின். நாம், இருபது வயதுகளில்  செய்யும் தவறுகளின் வெளிப்பாடே நாற்பதில் வரும் பிரச்னைகள். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி,  கல்லூரி பருவத்துக்கு பிறகு அடுத்த பத்தாண்டுகளில் எவ்வாறு தங்களது உடல்நலனில் அக்கறை கொள்கிறார்கள் என்பதை பொறுத்து தான் அவர்களது பிற்பாதி வாழ்க்கை அமைகிறது. இளம் வயதில்  நாம் செய்யும் சின்ன சின்னத் தவறுகள் எல்லாவற்றுக்கும் வட்டியும் முதலுமாக பின்னாளில் வந்து சேர்வது தான் எக்கச்சக்க நோய்கள்.

சரி, நாம் செய்யும் தவறுகள் தான் என்ன? இது குறித்து மருத்துவர் சி. ராஜேந்திரன் விரிவாகச் சொல்கிறார்.

 

தவறு

1. மோசமான  நேர மேலாண்மை :- 

சிறுவயதில் இருந்து கல்லூரி முடிக்கும் வரை பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் வளர்பவர்களுக்கு,  அதன் பின்னர் அவர்களை பிரிந்து வெளியூரில் வேலைக்கு செல்லும் ஆரம்பகட்ட வருடங்களில் கட்டற்ற சுதந்திரம் கிடைக்கிறது. காலையில் எழுந்திருப்பது முதல் இரவு படுப்பது வரை அத்தனையிலும்  மெத்தனம் மேலோங்குகிறது.  உடலை பற்றியும், சுகாதாரம் பற்றியும் அறவே கவலைப்படாமல்  இருப்பார்கள். கட்டற்ற சுதந்திரத்தை சோம்பேறித்தனத்தால் தவறாக பயன்படுத்துவார்கள். எந்த நேரத்தை எப்படி செலவழிப்பது எனத் தெரியாமல் திணறுவார்கள்.சிலர் பாதை மாறுவார்கள். நேரத்தை சரியாக  கடைபிடிக்காமல் இருக்கும் தவறு தான் வாழ்வியல் முறை மாறுவதற்கான அடிப்படை காரணம்.

2. உணவில் அக்கறையின்மை!

சுமார் இருபது வருடங்கள் வரை  பெரும்பாலும் வீட்டில் செய்த உணவையே சாப்பிட்டு வந்தவர்கள், வேலைக்கு சென்ற பின்னர் சொந்த சம்பாத்தியம் இருந்தாலும் வீட்டு சாப்பாடு கிடைக்காமல் தவிக்க நேரிடலாம். இந்த சமயங்களில் ஹோட்டல் உணவுகளையே நாடுவது, துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது , காலை உணவை தவிர்ப்பது, இரவு உணவை வெளுத்து கட்டுவது, சத்தான சமச்சீரான உணவுகளை தவிர்ப்பது என உணவு முறை முற்றிலும் மாறிவிடுகிறது. 

இந்த தவறுகளால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை தவிர்ப்பதால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை சரியாக உடலுக்கு கிடைப்பதில்லை அதே சமயம் மோசமான உணவு பழக்க வழக்கத்தால்  உடலில் தேவையற்ற கொழுப்பும்  சேருகிறது, புற்றுநோயை உண்டாக்கும் உணவுப் பொருள்களை  தொடர்ந்துச் சாப்பிடுவதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு  அதிகரிக்கிறது. 

3.  நண்பர்கள் சேர்க்கை : -

பள்ளி, கல்லூரி நண்பர்களை தாண்டி புது இடம், புது நண்பர்கள் என  இளம் வயதில் பலருக்கும் புது சேர்க்கை   உருவாகும். நண்பர்கள் எப்போதுமே நல்ல விஷயம் தான், ஆனால் சில சமயங்களில் தவறான நண்பர்களுடன் சேர்ந்தால் வாழ்கை பாதை மாறிவிடவும் வாய்ப்புண்டு. கல்லூரி செல்லும் வரை பணத்துக்கு இன்னொருவரை எதிர்பார்க்க வேண்டிய நிலை இருக்கும் ஆனால் சம்பாதிக்க ஆரம்பித்தவர்களுக்கு தனது பணம் தானே தாரளமாக செலவு செய்யலாம் என்ற எண்ணம் பிறக்கும். மது, புகைப்பிடித்தல் போன்ற விஷயங்களில் இளம் வயதினர் பலர் சிக்கிக்கொள்வது தவறான சேர்க்கையால் தான்.

தவறு

4. தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகுதல் : -

எதையும் முதலில் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும், பகிர வேண்டும் என்ற ஆவல் இளம் வயதினரிடையே  மிகவும் அதிகம்.பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களை எந்த அளவுக்கு அணுக வேண்டும். எந்த புள்ளியில் நிறுத்திவிட வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. தொழில்நுட்பங்களை தெரிந்து வைத்திருப்பதிலும், தொழில்நுட்பங்களை சிறப்பாக கையாளுவதும், தொழில்நுட்ப அப்டேட்களை விரல் நுனியில் வைத்திருப்பதும்  நல்ல விஷயம். ஆனால் அதே சமயம்  டிஜிட்டல் சாதனங்களில் அடிமையாவது நல்லதல்ல. மனதையும், உடலையும் பாதிக்கும் காரணிகளில் மிகவும் முக்கியமானது மொபைலும், டிஜிட்டல் சாதனங்களும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

5. வேலைவாய்ப்பின்மை : -

வேலைவாய்ப்பின்மை ஒரு மிகப்பெரிய மன அழுத்தம் தரக்கூடிய பிரச்னை. தன்னம்பிக்கையை தளர வைக்கும் கடினமான  கால கட்டம் இது. ஒரு சிலர் வெற்றிகரமாக மன உறுதியுதியுடன் இந்த  காலத்தை கடந்தாலும், பலர்  இந்நாட்களில் தளர்ந்து விடுகிறார்கள். ஒரு நாளை எப்படி கடத்துவது என தெரியாமல் பலர் வித விதமாக யோசிப்பார்கள். சிலர் எப்போதும் மனதுக்குள் புழுங்கி கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் சோகத்தை மறைப்பதற்காக போதை வஸ்துகளை நாடுகிறார்கள்.  இவை எல்லாமே உடலுக்கு கேடு விளைவிப்பதோடு மனதை பாதித்து புத்துணர்ச்சியை கெடுக்கின்றன. 

தவறு

6. வேலைபளு : -

முன்னெப்போதும் விட தற்போதைய தலைமுறை மிக அதிகமாக இளம் வயதிலேயே  உழைக்க தொடங்குகிறார்கள், ஐ.டி உட்பட பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களும்  அதிக லாபம் என்பதையே நோக்கமாக கொண்டு ஊழியர்களை  பிழிய ஆரம்பித்திருகின்றன. உடல் உழைப்பு என்பதை விடவும் அறிவு உழைப்பு அதிகம் தேவைப்படும் நிறுவனங்களில்  நித்தம் நித்தம் புதுப்புது ஐடியாக்களை யோசித்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தங்கள், சக்திக்கு மீறிய டார்கெட்டுகள் போன்றவை வைக்கப்படுவதால் வேலைபளு அதிகமாகிறது, 

இதனால் பலர் வீக் எண்ட் என்றாலே மது, சிகரெட் போதையில் திளைத்து மன அழுத்தத்தை குறைக்க முயலுகின்றனர். மன அழுத்தத்தோடு, புகை, மது ஆகியவற்றின் பாதிப்புகளும் சேர்ந்து  தாக்க ஆரம்பிக்கிறது.

அறிவு சரக்கு, கற்பனைத் திறன் போன்றவை ஒரு கட்டத்தில் தீர்ந்து விடுகிறது. இதனால் நாற்பது வயதாகும் போது, அப்போது நிறுவனத்துக்குள் நுழையும் இளைஞர்களுடன் போட்டி போட்டு பலரால் உழைக்க முடிவதில்லை. விளைவு நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். இது மீண்டும் மன அழுத்தத்தில் தள்ளுகிறது. 

தவறு

7. ரிலேஷன்ஷிப் சிக்கல்கள் :-

ஆண்கள், பெண்கள் இருதரப்பினரும் இளம் வயதில்  சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை ரிலேஷன் ஷிப் சிக்கல்கள் தான். முப்பது வயதுக்குள்ளாகவே திருமணம் முடிந்து விவாகரத்து கோருவோர்களின் எண்ணிக்கை கடந்த  பத்து ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது.

படிப்பு, வேலை என இயந்திரத்தனமாக வளர்ந்த மனிதர்களுக்கு, சக பார்ட்னரை எப்படி கையாளுவது என தெரிவதில்லை. கணவன் - மனைவி குடும்ப  உறவில் பிரச்னை ஏற்படும் போது உச்சக்கட்ட மன அழுத்தத்துக்கு பலர் தள்ளப்படுகிறார்கள். இதனால் மீண்டும் பலர் போதை வஸ்துகளுக்கு அடிமையாகிறார்கள். ரிலேஷன்ஷிப் பிரச்னைகளால் அலுவலகத்தில் பலர் சரியாக பணி புரியாமால் போவதால் அங்கேயும் மரியாதை குறைவதால் இந்த பிரச்னைகள் எல்லாம் ஒரு சுழற்சியாக சுழன்று அடிக்கும். 

8.பாலியல்  கோளாறுகள்  :-

இந்தியாவில் பாலியல் கல்வி இல்லை, பாலியல்  தொடர்பான விழிப்புணர்வும் கிடையாது. ஆண்களும் சரி, பெண்களும் சரி பாலியல் ரீதியாக பாதிக்கபடுவது இந்தக் காலகட்டத்தில் தான். பாலியல் பற்றிய சரியான புரிதல் இல்லாத அதே சமயம் பாலியல் குறித்த அத்தனை தவறான தகவல்களையும் புரிதல்களையும் இணையம், போலி டாக்டர்களின் நிகழ்ச்சிகள் போன்றவை வழியாக தெரிந்து கொள்கிறார்கள். இதனால் பலர் தவறான பாதைக்கு செல்கின்றனர். ஆண்கள், பெண்கள் இருவருக்குமே பாலியல் கோளாறுகளால் தீவிர மன அழுத்தம் ஏற்படுகின்றன.  

தவறு

9. உடற்பயிற்சியின்மை :- 

கல்லூரி வரை செல்வதற்கு முன்னதாக பெரும்பாலும் பலர் ஏதாவதொரு வகையில் விளையாடி கொண்டிருப்பார்கள். இதனால் உடல் பருமன் போன்ற பிரச்னை இருக்காது. ஆனால் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பலர்  தங்கியிருக்கும் இடத்துக்கும் வீடுக்கும் மட்டுமே பயணிப்பார்கள். அதுவும் இரு சக்கர வாகனம் அல்லது காரில் தான்.   உடல் உழைப்பு, உடற்பயிற்சி இரண்டும் இல்லாததால் உடலில் கொழுப்புகள் படிய ஆரம்பிக்கும். சரியான உணவையும் சாப்பிடாமல் தவிர்ப்பதால் உடல் பருமன் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம். உடற்பருமன் வரும்போது கூடவே வரிசையில் நான்கு நோய்கள் நிற்கும். 

தவறு

10. தொலைந்து போன தூக்கம்

தற்போதைய தலைமுறையில் இளம் வயதினர் அநேகம் பேர் தூக்கமின்மை பிரச்னையால் அவதிபடுகின்றனர். நைட் ஷிப்ட் ஒரு காரணம் என்றாலும் லேப்டாப்பில் இரவு இரண்டு படம் பார்ப்பது, நைட் ஷோ தியேட்டருக்கு செல்வது, நள்ளிரவை  தாண்டியும் யாருக்காவது மெசேஜ் செய்து கொண்டிருப்பது, சமூக வலைதளங்களில் மூழ்குவது போன்றவற்றால் இரவு தூக்கம் தடைபடுகிறது.

இரவு தூக்கம் தாமதமாகும் சமயத்தில் வளர்சிதை மாற்றம் பாதிக்கபடுகிறது.  இரவு தூக்கம் தாமதமாவதால், அதிகாலை எழுந்திருக்க முடிவதில்லை, அதிகாலையில் மட்டுமே கிடைக்கும் சுத்தமான ஓசோன்  வாயுவை சுவாசிக்கும் வாய்ப்பும் பறிபோகிறது. காலையில் தாமதமாக எழுவதால் அவசர அவசரமாக வேலைக்கு செல்ல நேர்கிறது. இதனால் உடற்பயிற்சி, காலை உணவுக்கு போதிய நேரம் ஒதுக்க முடிவதில்லை . இதன் காரணமாக அன்றைய தினம் சுறுசுறுப்பாக செயல்பட முடிவதில்லை. 

தவறான வாழ்வியல் முறை காரணாமாக என்னென்ன நோய்கள் வருகிறது ?

தவறு

1.உடற்பருமன் 

2. வைட்டமின் டி குறைபாடு 

3. சர்க்கரை நோய் 

4. உயர்  ரத்த அழுத்தம் 

5. தைராய்டு கோளாறுகள் 

6.ஹார்மோன்கள் சமசீரின்மை 

7.  புற்றுநோய் 

8. செரிமான கோளாறுகள் 

9. மன அழுத்தம் 

10. இதய நோய்கள் 

11. நரம்பு மண்டல பாதிப்புகள் 

12. முதுகு வலி, மூட்டு வலி 

13. சரும கோளாறுகள் 

14.பாலியல் தொந்தரவுகள் 

15. சுவாச பிரச்னைகள் .

s14_13191.jpg

தீர்வு என்ன? 

இளம் வயதில் சரியாக தன்னை பராமரிக்க வில்லை என்றால் பல பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அதற்காக வேலைக்கு செல்லுதல், பேச்சலர் வாழ்கை, திருமணம் போன்ற பல விஷங்களை எல்லோராலும்  கடந்து வராமலும் இருக்க முடியாது. 

தனி மனித ஒழுக்கம், தனி மனித சுகாதரம், மன நலம் மற்றும் உடல் நலனில் அக்கறை, தெளிவான பார்வை, திட்டமிடுதல், மன வலிமை, உடல் வலிமை ஆகியவற்றில் கவனம் செலுத்தி  வாழ ஆரம்பித்தாலே பாதி பிரச்னைகள் சரியாகிவிடும், பல்வேறு நோய்கள் வருவதையும் தடுக்க முடியும் . நீண்ட காலம் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியுடன் வாழலாம். 

சிறுதானியங்கள், கீரைகள், பழங்கள், காய்கறிகள் என ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளை உட்கொள்ளவேண்டும். அதே சமயம் மோசமான குப்பை உணவுகளை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி போன்றவற்றுக்கு தினமும் அரை மணி நேரமாவது ஒதுக்க வேண்டும், உடலை தூய்மையாக வைத்து கொள்ளுதல், தன்னைச் சுற்றி சுகாதாரமாக வைத்துக் கொள்வது போன்ற, சில நல்ல பழக்க வழக்கங்களை வழக்கமாக்கி கொண்டால் அறுபதிலும் ஆரோக்கியம் உண்டு.

s15_13568.jpg

ஹெல்த் இன்சுரன்ஸ் அவசியம் :-

ஹெல்த் இன்சுரன்ஸ் பலருக்கும் ஆபத்தான கால கட்டத்தில் ஓரளவு கை கொடுக்கும் விஷயம். எதாவது நோய் வந்தபிறகு இன்சுரன்ஸ் எடுக்கலாம் என நினைத்தால் பிரீமியம் அதிகம் கட்ட நேரிடும். இளம் வயதிலேயே ஹெல்த் நன்றாக அலசி ஆராய்ந்து அவரவர்களுக்கு ஏற்ற பாலிசிகளை எடுத்துகொள்ளும் போது பிரீமியம் வெகுவாக குறையும். எதிர்பாராத காலகட்டத்தில் அவசர அவசியத்தேவைகள்  ஏற்படும் சமயங்களில்  இன்சுரன்ஸ் கைகொடுக்கும். இன்சூரன்ஸ் தொகை, நிறுவனம் ஆகியவற்றை பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு தேர்ந்தெடுப்பது நல்லது.

ஹெல்த் செக் அப் பண்ணுங்க :-

முப்பந்தைந்து வயதுக்கு மேல் தான் பலர் மருத்துவமனை வாசலுக்கே பலர் செல்லுகின்றனர். இது தவறு. மருத்துவமனை சென்றாலே பணம் செலவாகும், தனக்கு எதாவது நோய் இருக்கும் என சொல்லிவிடுவார்கள் என்ற பயம் பலருக்கும் இருக்கிறது. இதனால்  எதாவது பெரிய நோய் வரும் வரை மருத்துவமனை பக்கமே பலர் தலைவைத்து படுப்பதில்லை. 

y17_13099.jpg

'வரும் முன் காப்பது சிறந்தது' என்பது பலருக்கு புரிவதில்லை. ரத்த அழுத்தமோ, சர்க்கரை நோயோ, சுவாச நோயோ, உடல் பருமனோ, புற்றுநோயோ எதுவாக இருந்தாலும் ஆரம்பகட்டத்தில் பரிசோதனை மூலம்  கண்டறிந்தால் இந்த நோய்கள் எல்லாவற்றையுமே தடுக்க முடியும். அதன் பாதிப்புகளை குறைக்க முடியும். 

ஆக,   25 வயதில் இருந்தே ஆண்கள், பெண்கள் இருவரும்  வருடம் ஒரு முறை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு முறையாவது முழு  உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. குடும்பத்தில், பரம்பரையில்  யாருக்காவது மேற்சொன்ன  வாழ்வியல் நோய்கள் வந்திருந்தால்  அந்த இளைஞர்கள் கண்டிப்பாக குடும்ப மருத்துவரை அனுக்கி அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை எடுத்துகொண்டு நோய்களை தடுக்க முயற்சிப்பதே புத்திசாலித்தனம். தனியார் மருத்துவமனைகளில் பல ஆயிரங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும் சூழ்நிலையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்போது  சலுகை விலையில் பொதுமக்களுக்கு மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்யப்படுகிறது, ஆனால் இதை பலர் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை  

y19_13119.jpg

இந்தியாவில்  பரிசோதனைகள் குறித்த   தெளிவின்மை மக்களுக்கு அதிகம், எனவே தான் பல நோய்கள் வருகின்றன, ஒரு சிலர் தனக்கு எதாவது நோய் இருக்குமோ என பயந்து பயந்தே தேவையற்ற பதற்றத்ததை உருவாக்கி கொள்கிறார்கள். ஒருவேளை  நோய் வந்துவிட்டாலும்  அதிக பதற்றமடைகிறார்கள். முன்காப்பு சிகிச்சை குறித்தது தெளிவு வரும்போது,  எதாவது நோய் வந்தால் கூட ஆரம்பக்கட்டதிலேயே மாத்திரை, மருந்துகள்  போன்ற  சிகிச்சைகளே  தேவைப்படாமல் வாழ்வியல் முறை மாற்றத்தால் மட்டுமே பல்வேறு நோய்களை தடுத்து விட முடியும் என்ற நிலை இருக்கும்போது தேவையற்ற  பதற்றத்தை  தவிர்போம். நலமாக, மகிழ்ச்சியுடன் வாழ்வோம்  

vikatan

  • தொடங்கியவர்

593 அடியில் நிகழ்ந்த சாதனை!

சுவிட்சர்லாந்தில் ஒரு அணையின் மேல் இருந்து 593 அடி தொலைவில் உள்ள கூடைக்குள் பந்தைப் போட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளனர் Ridiculous அணியின் Derek Herron.

இவர் நீண்ட தொலைவில் இருந்து பந்தை லாகவமாக கூடையில் போட்டுள்ளார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் 415 அடி தொலைவில் இருந்து பந்தை கூடைக்குள் போட்டதே உலக சாதனையாக இருந்தது. தற்போது  Ridiculous அணியினர் ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்துள்ளனர்.

 

 

vikatan

  • தொடங்கியவர்

 

மெக்ஸிகோவின் மல்யுத்த வீராங்கனைகள்

மெக்ஸிகோவின் பாரம்பரியங்களில் ஒன்று அதன் மல்யுத்தம்.

அதில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பங்கேற்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.