Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

 

குஷிப்படுத்தும் பாட்டிகள்
-----------------------------------------------
அமெரிக்காவில் வயதான பலர் இணைந்து, பொது நிகழ்வுகளில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் பணியை செய்துவருகின்றனர்.
அடுத்தவர்களை மகிழ்விக்க வயது ஒரு தடையல்ல என இவர்கள் நிரூபித்துள்ளனர்.

BBC

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பார்வையற்றோருக்கு உதவும் மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட்..!

 

PPT_19011.png

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் தனது 'பவர்பாயின்ட்' மென்பொருளில் புது வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பவர்பாயின்ட் மென்போருளில் புகைப்படங்களை தரவேற்று போது அதற்கு ஒப்பான வாக்கியத்தை உருவாக்கி அதை ஆட்டோமேட்டிக்காக சொல்லும்படி வடிவமைக்கப் போகிறது மைக்ரோசாஃப்ட். இதன் மூலம் பார்வையற்றோருக்கும் பவர்பாயின்ட் பிரசன்டேஷன் புரியுமாம். ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (Artificial Intelligence) மூலம் இது சாத்தியப்படும். இந்த புது வசதிக்கு alt-text என்று பெயரிடப்பட்டுள்ளது.

'இந்து புது alt-text வசதி மூலம், இனி புகைப்படங்களை வார்த்தைகளாக மாற்றுவது சுலபமாக இருக்கும்.' என்று கூறியுள்ளது மைக்ரோசாஃப்ட்.

vikatan

  • தொடங்கியவர்

கொண்டாட கண்டுபிடிக்கப்பட்ட ‘வாவ்’ தீவுகள்! #MustSee

அரசியல் தலைவர்களின் தேர்தல்பிரசார சுற்றுப்பயணங்கள் போலதான் பெரும்பாலானவர்களின் சுற்றுலா திட்டங்களும். தினமும்  இத்தனை இடங்களை பார்த்தே ஆக வேண்டும் என அலுவலக டார்கெட்களை அங்கேயும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டே திரிவது இந்தியர்களின் மரபு. வீடு திரும்பியதும் நான்கு நாள் சுற்றுலா களைப்பைப் போக்கவே, ஒரு வாரம் ரெஸ்ட் எடுப்பவர்கள் நாம். ஆனால் பயணமும் சுற்றுலாவும் அப்படி இருக்க கூடாது. ’இந்த ஊருக்கு போங்க. அதுதான் உண்மையான சுற்றுலா’ என சில தீவுகளை கைகாட்டியிருக்கிறார்கள் எக்ஸ்பெர்ட்ஸ். ‘கொண்டாட கண்டுபிடித்து கொண்டா ஒரு தீவு’ என முணுமுணுத்துக்கொண்டே டாப்  தீவுகளுக்கு போகலாம் வாங்க.


1) போராபோரா: 

தீவு

அழகழகான குடிகள். விண்டோ ஏ.ஸி.க்கு பதில்,விண்டோவே ஏ.ஸீ. மரக்குடிலின் வெளியே நின்று நீங்கள் பார்த்தால் தண்ணீருக்கு கீழே பவளப்பாறைகளும், மீன்கள் ஓடுவதும் தெரிந்தால் எப்படி இருக்கும்? ’ மீண்டும் பிள்ளளையாவோம் அலையோடு ஆடி’ என்கிறீர்களா?

 போரா போரா தீவில்தான் இந்த குடில்கள் நிறைந்த ரிசார்ட்கள் இருக்கின்றன. உலகின் பெரும்பாலான சுற்றுலாவாசிகளின் சாய்ஸ் போரா போராதான்.. காரணம், கூட்டம் குறைவு. அங்கே தங்கும் ஹோட்டலை நீங்கள் தேர்ந்தெடுத்துக்விட்டால், அவர்களாகவே தனி ஃப்ளைட் வைத்து உங்களைக் ’கடத்திக்’ கொண்டு போய்விடுவார்கள். ஆழ்கடலுக்குள் மாஸ்க் போட்டுக்கொண்டு நீந்தி, பவளப்பாறைகளையும், அரியவகை மீன்களையும் கண்டு களிக்கலாம். ஸ்கூபா டைவிங்கும் இங்குண்டு.தீவுச் சுற்றுலாவிலேயே கொஞ்சம் காஸ்ட்லியானதென்றால் போரா போராதான். ’எவ்ளோ செலவானாலும் பரவால்ல’ வகையறாக்களின் ஃபேவரிட் ஹனிமூன் ஸ்பாட்டும் இதுதான்!

 

2) மாவோய், ஹவாய் 

maui_09056.jpg


 அட்வென்ச்சர், அமைதி என  கலக்கல் காக்டெயில் ரசிகர்களின் முதல் சாய்ஸ் மாவோய் என்கிற ஹவாயின் இரண்டாவது பெரிய தீவு. The Valley Isle என்று செல்லமாக அழைக்கடும் மாவோ-யின் பரப்பளவு கிட்டத்தட்ட டெல்லிக்கு சமம். கண்ணாடி போன்ற  க்ரிஸ்டர் க்ளியர் கடற்கரைகளை ரசிக்க ஒரு பாதி விடுமுறை விரும்பிகள் படையெடுக்கிறார்கள் என்றால், மற்றொரு பக்கம், தரைமட்டத்திலிருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஹலியாகலா மலையினூடே அட்வென்சர் பயணத்துக்காகவே செல்கிறார்கள். இங்கே பிரபலமாக இருக்கும் ஹெலிகாப்டர் ரைடில் போனால், எப்போதும் தீப்பிழம்பைக் கக்கிக் கொண்டிருக்கும் எரிமலைகளை மிக அருகே சென்று கொஞ்சம் பயந்துவிட்டு வரலாம். இதற்கு எதற்கு ஹவாய்? நம்ம தலைவர்கள் பிரசாரத்திலே ஹெலிகாப்டரும், தீப்பிழம்பும் உண்டு என்பவர்களுக்கு லீவும் கிடைக்காது, தீவும் கிடைக்காது. ’கொல்லும் ராணுவம் அனு ஆயுதம் பசி பட்டினி கரி பாலிடிக்ஸ்’ என நெகட்டிவ் விஷயங்களே இல்லாத ஒரு காந்தி மண் இந்த மாவோய்.

25 ஸ்பெஷல் தீவுகளின் கலக்கல் ஆல்பம் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்


3) சண்டோரினி, க்ரீஸ் 

கிரீஸ் நாட்டில் அமைந்துள்ள சண்டோரினி தீவு, சாட்டிலைட் வ்யூவில் பார்த்தால் படுக்க வைத்த டைனோசர் போலத்தோன்றும்.  இந்தத் தீவு ஒரு 91 சதுரகிலோமீட்டர் சொர்க்கம். வெறும் இருபதாயிரத்திற்குள்தான் மக்கள்தொகை. ஒருபுறம் மலைமுகட்டில் அமைந்துள்ள வெள்ளைச்சுவர் கட்டிடங்கள், மறுபுறம் கடல் என்று ரகளையான இடம் இது. ‘வீசும் காற்றாய் மாறி மலர்களைக் கொள்ளையடி ..மனசுக்குள் வெள்ளையடி’ என்னும் சண்டோரினி, டாப்தீவுகள், டாப் 10 டிராவல் ஸ்பாட்ஸ் என எல்லா பட்டியலிலும் இடம் பெற்றுவிடும். காரணம் கிரேக்க கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கட்டிடங்களும், இந்தக் குட்டித்தீவில் அமைந்துள்ள ஒயின் தொழிற்சாலைகளும் தான். இந்தத் தீவின் சீதோஷ்ணம் கை கொடுப்பதால், விவசாயம்கூட இங்கே பிரபலம். சண்டோரினி தீவில் விளையும் தக்காளிகளுக்கு மவுசு அதிகம். இன்னும் எந்த தமிழ்ப்பாடலிலும் ‘சண்டோரினி தக்காளி கன்னங்கள்’ என எழுதப்படாதது ஏன் என்பது பற்றி விசாரனை கமிஷன் நிச்சயம் தேவை. அப்புறம் ஒரே ஒரு விஷயம்.. வரலாற்றின் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு நடந்த இடங்களில் இதுவும் ஒன்று. பயப்படாதீங்க பாஸ்... அது நடந்து ஜஸ்ட் 3600 வருஷம்தான் ஆச்சாம்! 

4) சிஷெல்ஸ் தீவு
இந்தியப் பெருங்கடலில், ஆப்பிரிகாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து அப்படியே ஒரு ஆயிரத்து ஐநூறு கிலோமீட்டர் போனால் இருக்கிறது சிஷெல்ஸ் தீவு. குறிப்பிடத்தக்க அளவு தமிழர்களும் வாழும் இந்தத் தீவின் சிறப்பம்சம், காடுகளுக்குள் நீங்கள் டிரெக்கிங் போகலாம். அங்கங்கே கண்ணுக்கு விருந்தாய் அமைந்த அருவிகளை ரசித்துக் கொண்டே போனால், கடற்கரையில் முடியும். ஒரே நேரத்தில் காடு, அருவி, கடற்கரை என்று இயற்கையின் பல வடிவங்களை கண்டு மெய் மறக்கலாம். 

சுற்றுலாதான் இவர்களது வாழ்வாதாரம். ஆனாலும் இயற்கையைகெடாமல் பாதுகாப்பதில் கறாராக இருக்கிறார்கள்.  எந்த ஒரு சுற்றுலாத்திட்டமும், இந்ததீவின் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஒப்புதலுக்குப் போனபின்னரே அங்கீகரிக்கடும். சுற்றுச்சூழல் சட்டம் அத்தனை வலிமையானது இங்கே. அதனாலதான், தீவின் இயற்கைப் பாதுகாப்பு அத்தனை பிரபலம். இங்கே நீங்கள் பெரிய பெரிய கடல் ஆமைகளையும் கண்டு களிக்கலாம். பறவையினங்களையும் ரசிக்கலாம். அருவியில் நனையலாம்.கடலில் குளிக்கலாம். ‘பொல்யூஷன் எங்கும்கலந்திடாத தீவு வேண்டும்’என்பதற்கு விடை சிஷெல்ஸ் தீவு.

5) பாலி தீவு, இந்தோனேஷியா

இந்தோனேஷியாவின் பாலி தீவு. சாட்டிலைட்டிலிருந்து பார்த்தால் ஒரு பெரிய திமிங்கிலம்போலத் தோற்றமளிக்கும். வெள்ளை மணல் கடற்கரைக்குப் பிரசித்தம். கடலை ஒட்டி.. உங்கள் ஜன்னல் திரையை விலக்கினால் அலைகளை அதன் சத்தத்தோடு ரசித்தபடி இருக்க முடிகிற அளவுக்கு அறைகள் இருக்கும். ஒருபுறம் மலைகளும், இன்னொரு புறம் கடற்கரையும், நகருக்குள் கட்டிடங்களும் என்று இந்தத் தீவு ஒரு பஃபே டைப் சுற்றுலாத்தளம். 

நீருக்குள், ஊருக்குள் என இங்கிருக்கும் கோவில்களின் அழகை ரசிக்கவே கூட்டம் அள்ளும். ஸ்கை டைவிங், சர்ஃபிங் செய்ய ஏற்ற இடம் இது. ‘வாரம் இருநாள் வாழியவே’க்கு சரியான சாய்ஸ் பாலித்தீவுகள். மற்ற தீவுகளை விட ’நம்ம ஊருக்கு பக்கத்துல’ என்றால் பாலிதான்.இந்தோனேஷியாவில் செலவும் கம்மிதான். இந்தியா ரூபாயில் பத்து ரூபாய் தந்தால், அந்த ஊரு காசு 2000 கிடைக்கும்.

vikatan

  • தொடங்கியவர்

கத்தியே சாதனை படைத்தவர்...

 

 

ஜெர்மனின் கிறிஸ்டியன் கின்னர் தீவிர கால்பந்து விளையாட்டுப் பிரியர். வித்தியாசமான ஒரு காரணத்திற்காக இந்த ஆண்டு உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.


இருப்பதிலேயே யார் அதிக நேரம் 'கோல்' என்ற வார்த்தையை கத்துகிறார்கள் என்ற போட்டியில், 43.56 நொடிகள் மூச்சு விடாமல் கத்தி சாதனை படைத்துள்ளார் கின்னர். மூன்று பேர் பங்கேற்ற போட்டியில் கின்னர் இந்த சாதனையை படைத்துள்ளார். கத்தும் போது 80 டெசிபிள் அல்லது அதற்கும் மேல் சத்தம் இருக்க வேண்டும் என்பது கின்னஸ் அமைப்பின் விதியாம். 

vikatan.

  • தொடங்கியவர்

தூக்கி எறியும் பொருட்களில் கைவண்ணம் - அசத்தும் அரசுப்பள்ளி மாணவன்!

பொருட்களில்

ன்றைய குழந்தைகளின் வாழ்க்கை முறை மாறிவிட்டது. தெருக்களில் ஓடி ஆடி விளையாடும் சிறுவர்களைப் பார்ப்பது அரிதாக உள்ளது. நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, கிராமப்புறக் குழந்தைகள்கூட தொலைக்காட்சி, செல்ஃபோன், வீடியோ கேம் என வீட்டிலேயே முடங்கிக்கிடக்கின்றனர். இதனால் அவர்களின் கற்பனைத்திறனும் கேள்வி கேட்கும் சிந்தனையும் குறைந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், ஒரு கிராமத்து மாணவர் தன் கற்பனைத்திறனால் எல்லோரையும் அசத்தி, பாராட்டு மழையில் நனைந்துவருகிறார்.

மகேஷ்வரன், கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் உள்ள கவிஞரேறு வாணிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவருகிறார். ஓவியத்தில் ஆர்வம் உள்ள இவர், தன் கற்பனைத்திறனால் வீணான பல்வேறு பொருட்களைக்கொண்டு உருவங்களை உருவாக்குகிறார். ஏழாம் வகுப்பு படிக்கும்போதே தனது ஓவிய ஆசிரியரிடம் இந்தக் கலையைக் கற்க ஆரம்பித்த மகேஷ்வரன், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட உருவங்களை உருவாக்கியுள்ளார்.

15_14272.jpg

மகேஷ்வரனிடம் பேசினோம்.

ஆசிரியர் கற்றுத் தந்த கலை!

''கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்குமாரமங்கலம்தான் எனது சொந்த ஊர். எனக்கு ஓவியம் என்றால் மிகவும் பிடிக்கும். எனது ஆர்வத்தைக் கண்டு ஓவிய ஆசிரியர் உமாபதி சார்தான் Maheshwaran_14213.jpgஇக்கலையை எனக்குக் கற்றுத் தந்தார். எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் என்பதால் ஆர்வத்தோடு நானாகவே நிறைய செய்துபார்த்தேன்.''

வீண் பொருட்கள் கற்பனையால் கலைப்பொருட்கள் ஆயின!

''வீணாகப் போகக்கூடிய தென்னை, பனை மரத்துப் பட்டைகள், கருக்குகள், கட்டைகள், கோணி, மூங்கில், பிரம்பு, பாக்குத்தட்டுகள், வாழை இலை, அரச இலைச் சருகுகள், பிளாஸ்டிக் பொருட்கள் முதலியவற்றைக்கொண்டு, என் கற்பனைக்கேற்ப உருவங்களை உருவாக்குகிறேன்.

பாட்டிதான் அம்மா, அப்பா!

எனக்கு அப்பா, அம்மா இல்லை. எனது பாட்டிதான் என்னையும் தங்கையையும் வளர்க்கிறார். ஆரம்பத்தில், 'குச்சியும், கோலுமா என்னதான் செஞ்சுட்டே இருக்கியோ' என பாட்டி அடிக்கடி திட்டுவதுண்டு. ஆனால், இதில் நான் நிறையப் பரிசுகள், பாராட்டுக்களைப் பெற்றதும் இப்போது சந்தோஷப்படுகிறார்.

மறக்கமுடியாத பாராட்டு!

சென்ற வருடம், புதுவை அரசின் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அப்போது ஏழு நிமிடங்களுக்குள் நானும் எனது நண்பன் ராகேஷ்குமாரும் கரித்துண்டால் 8 அடி உயரம் 5 அடி அகலத்தில் காமராஜர் உருவத்தை வரைந்து அசத்தினோம். விழாவுக்கு வந்திருந்த அப்போதைய புதுவை முதல்வர் ரங்கசாமி, எங்களைப் பாராட்டி, 5,000 ரூபாய் பரிசாகக் கொடுத்தார். பிறகு, அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் எங்கள் பள்ளியைப் பார்வையிட வந்தபோது, நான் செய்துவைத்திருந்த சிற்பங்களைப் பார்த்துப் பாராட்டியதோடு, எங்கள் பள்ளியைச் சிறந்த பள்ளியாகத் தேர்வு செய்தனர். என் வாழ்நாளில் மறக்கமுடியாத பாராட்டுகள்!

doll_14076.jpg

எதிர்கால இலட்சியம்!

உமாபதி சார் எனக்குக் கற்றுந்தந்ததுபோல, இதை நன்கு கற்றுக்கொண்டு நானும் மற்றவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். என் தங்கையை நன்றாகப் படிக்கவைக்க வேண்டும். பண நெருக்கடியிலும் எங்களைப் படிக்கவைத்து கவனித்துக்கொள்ளும் தாத்தா, பாட்டி மற்றும் மாமாவுக்கு உதவியாக இருக்க வேண்டும். அனிமேஷன், ஆர்ட் போன்ற துறை சார்ந்த படிப்பினைத் தேர்ந்தெடுத்து, அதில் சாதிக்க வேண்டும்!"

4_14380.jpg

சாதனைகள் வளரட்டும்!

மகேஷ்வரன் பற்றி கலை ஆசிரியர் உமாபதி கூறுகையில்...

''மகேஷ் போன்று திறமையான மாணவர்கள் உருவாகக் காரணமான இந்தக் கலையைக் கற்பிப்பதில் நான் பெருமையடைகிறேன். கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களிடம் அசாத்தியத் திறமை இருப்பதை உணர்ந்து அவர்களுக்கு உதவினால், அவர்கள் மகத்தான சாதனைகள் புரிவார்கள் என்பதற்கு மகேஷ்வரன் முன்னுதாரணம். இந்தக் கலைக்கு நாங்கள் வைத்திருக்கும் பெயர், 'அழிவின் உயிர்ப்பு'. அழிந்துபோகும் பொருட்களைக்கொண்டு உயிரோட்டமான சிற்பங்களை உருவாக்க முடியும் என்பதாலேயே இந்தப் பெயரைத் தேர்வுசெய்திருக்கிறோம். இந்தப் பொருட்கள் மூலம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்தியுள்ளோம். பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது'' என்றார் பெருமையுடன்.

vikatan

  • தொடங்கியவர்
2016 உலக அழகுராணி போட்டி: தனக்கு வாக்களிக்குமாறு கோருகிறார் இலங்கை அழகுராணி அம்ரிதா
 

2016 ஆம் ஆண்டின் உலக அழ­கு­ராணி (Miss World 2016) போட்டி அமெ­ரிக்­காவில் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது.

 

இலங்­கையின் சார்பில் மிஸ் வேர்ல்ட் ஸ்ரீலங்கா 2016 அழ­கு­ராணி அம்­ரிதா டி சில்வா பங்­கு­பற்­று­கிறார்.

 

21061amritha2.jpg

 

இறுதிச் சுற்று எதிர்­வரும் 18 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. 116 நாடு­களின் அழ­கு­ராணிகள் இப் ­போட்­டியில் பங்­கு­பற்­று­கின்­றனர்.

 

21061amritha5.jpg

அம்­ரிதா டி சில்வா


 

 

21061amritha.jpg

 

இப்­ போட்­டியில் பங்­கு­பற்றும் அழ­கு­ரா­ணி­களில் தமது அபி­மா­னத் ­துக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு இணை­யத்­தளம் மூலம் மக்கள் வாக்­க­ளிக்­கலாம். இந்­நி­லையில், தனக்கு வாக்­க­ளிக்­கு­மாறு இலங்கை அழ­கு­ராணி அம்­ரிதா டி சில்வா கோரி­யுள்ளார்.

 

2106115241771_10154798294349974_25477386

 

2106115171276_10154801220999974_70020009

 

http://pageantsnews.com/vote-now-will-win-miss-world-2016/ எனும் இணை­யத்­த­ளத்தில் வாக்­கு­களை அளிக்க முடியும். இப் போட்டியில் பங்குபற்றும் அழகுராணிகள் சிலரை படங்களில் காணலாம்.

 

2106115192542_10154798239049974_68234277

 
.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சுற்றுச்சூழல் காக்க 1,000 தன்னார்வலர்களை இணைத்த சிறுமிக்கு சர்வதேச விருது!

 

சுற்றுச்சூழல்

ந்தக் காலத்து மாணவர்கள், 'படித்து டாக்டர் ஆவேன், கலெக்டர் ஆவேன், இன்ஜினீயர் ஆவேன்' என்று சொல்லித் திரிவதைப் பார்த்திருப்போம். ஒரு சில மாணவர்கள் டைம் கிடைத்தால் போதும் வீடியோ கேம்ஸ், செல்போன், டி.வி என மூழ்கிவிடுகிறார்கள். இவர்கள் வேறு எதிலும் கவனம் செலுத்துவதில்லை. இவர்களைப் போல் இல்லாத சிலர் சாதனை நோக்கிப் பயணித்து வெற்றி அடைந்துவிடுகிறார்கள். இந்த வரிசையில் துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவி கேஹாஷன் பாசுவும் ஒருவர். வாகனப் புகை மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளால் காற்று மாசுப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு உண்டாவதை அன்றாடச் செய்திகளில் படித்திருப்போம். இதற்குத் தீர்வு காணவேண்டும் என்று எண்ணிய கேஹாஷன், தன்னைப் போல் ஆர்வமுள்ளவர்களை ஒன்றுசேர்த்து ஒரு 'கிரீன் கோப்' என்ற அமைப்பை உருவாக்கி சேவை செய்துவருகிறார்.   

துபாயில் உள்ள, 'தேரா' சர்வதேசப் பள்ளியில் படித்துவரும் துபாய் வாழ் இந்திய மாணவி கேஹாஷன் பாசுவுக்கு, சர்வதேசக் குழந்தைகளுக்கான அமைதி விருது அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அதன் அவசியத்தை மக்களிடையே விழிப்புஉணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டு வந்ததற்காக, அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. 16 வயது கேஹாஷன், 'கிரீன் கோப்' என்ற அமைப்பைத் தொடங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாறுபாடு, உயிரினங்களிடம் அன்பு செலுத்துதல் உள்ளிட்ட செயல்களில் மக்களை ஈடுபடவைக்கும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். கிரீன் கோப் அமைப்பில் இதுவரை, உலகில் உள்ள 10 நாடுகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை இணைத்து பணியாற்றி வருகின்றார் கேஹாஷன்.

டிசம்பர் 2-ம் தேதி நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரில், 16-வது சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கடந்த 2006-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனஸ், கேஹாஷனுக்கு குழந்தைகளுக்கான அமைதி விருதினை வழங்கி கௌரவித்தார். தனது எட்டு வயதிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரசாரத்தைத் தொடங்கிய கேஹாஷன், கடந்த நான்கு ஆண்டுகளில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க பல்வேறு திட்டங்கள், செயல்படுத்துதல் என சுழன்றுகொண்டிருக்கிறார்.

சர்வதேசக் குழந்தைகளுக்கான அமைதி விருது பெற்ற கேஹாஷனுக்கு சான்றிதழுடன் 1 லட்சம் யூரோ பரிசாக வழங்கப்பட்டது (இந்திய மதிப்பில் சுமார் ரூ.72 லட்சத்து 20 ஆயிரம்). படிப்பிலும் கில்லியான கேஹாஷன், இசை, நடனம், பேச்சுப்போட்டி ஆகியவற்றிலும் தேசிய, சர்வதேச அளவில் பரிசுகள் வாங்கிக் குவித்துள்ளார். இதுகுறித்து கேஹாஷன், AFP செய்தியாளரிடம் கூறுகையில், ''என்னுடைய பணிகள் இத்துடன் நின்றுவிடாது. சுற்றுச்சூழல் பிரசாரத்தை இன்னும் சிறப்பாக மேற்கொள்வேன். சமீபத்தில் கொலம்பியா, ஃப்ரான்ஸ், மெக்ஸிகோ, நேபால், ஓமன் மற்று அமெரிக்க போன்ற நாடுகளில் 5,000-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டிருக்கிறோம்'' என்று தெரிவித்தார். ஒரு நாள், கொல்கத்தாவில் வசிக்கும் பாட்டி வீட்டுக்கு வந்தபோது... பாட்டி, மாடியில் தோட்டம் வைத்துப் பராமரிப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். அப்போதிருந்து தானும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, தன்னாலான முயற்சிகளைச் செய்யத் தொடங்கி, அதனால் எனக்கு இந்த அவார்டு கிடைத்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.     

கேஹாஷன் பாசுவின் சிறப்பான பணிக்கு வாழ்த்துகள்.

vikatan.

  • தொடங்கியவர்

இனி எல்லாம் e-wallet தான்... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

 

e-wallet

கார்டில் சம்பாதித்தாலும் கைநிறைய சம்பாதிக்கிறான் என சொல்வதுதான் நம்ம ஊரு ஸ்டைலு. இனி, அது கொஞ்சம் கஷ்டம் தான். பணத்தின் வாசனையை நுகர்வது குறைந்துதான் ஆக வேண்டும். கேஷ்லெஸ் இந்தியா தான் இனி இலக்கு என அரசு முடிவு செய்தபின் அதை பற்றி நாமும் தெரிந்து கொள்ளதான் வேண்டும். அதில் முக்கியமானது E- Wallet

21-ம் நூற்றாண்டின் சமீபத்தைய வங்கிப் பரிவர்த்தனைகளில் சாதனை என்றால் அது e-wallet தான். அதிலும் பேடிஎம் (Paytm) அசாதாரணமான சேவைகளை வழங்கி முன்னிலை வகிக்கின்றன. ஒரு இ-வேலட்டுக்கு, நம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை அனுப்பிக் கொள்ள வேண்டும். அதன் பின் ரீசார்ஜ் செய்ய, பொருட்களை வாங்க, மின்சார கட்டணங்கள் செலுத்த, பயண டிக்கெட்டுகள் புக் செய்ய,  நம் நண்பர்களுக்கு ரீசார்ஜ் செய்ய என்று அனைத்தையும் ஒரு சில க்ளிக்குகளில் செய்து விடலாம்.

e-wallet 3 வகை இருக்கின்றன. 

1 .க்ளோஸ்டு வேலட்டுக்கள் :
ஒரு நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக தன்னுடைய பொருட்களை மட்டுமே வாங்க ஒரு e-wallet பயன்படுத்தி வந்தால் அதற்கு பெயர் குளோஸ்ட் வாலட். இந்த e-wallet களில் வங்கிக் கணக்குகள் மூலம் பணத்தை செலுத்தினால் அந்த நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவைகளை மட்டுமே பயன்படுத்த முடியும். உதாரணமாக ஜபாங், ஃப்ளிப்கார்ட் மற்றும் மேக் மை ட்ரிப் போன்றவைகளை சொல்லலாம். இந்த வகை வேலட்டுகளில் ஒரு முறை பணத்தை செலுத்திவிட்டால் அந்த நிறுவனத்தின் சேவைகளாகவோ அல்லது பொருளாகவோ தான், நம் காசை செலவழிக்க வேண்டி இருக்கும். பணத்தை திரும்ப எடுக்க முடியாது.  

2. செமி குளோஸ்டு இ வேலட்டுக்கள் :
இந்த இ-வேலட்டுக்களில் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி பணத்தை ஏற்றிய பிறகு, பணம் செலுத்திய e-wallet நிறுவனம் எந்த நிறுவனங்களோடு எல்லாம் ஒப்பந்தம் செய்திருக்கிறதோ அந்த நிறுவனங்களில் எல்லாம் நம் e-wallet பணத்தை செலுத்தி பொருட்களை வாங்கலாம் அல்லது சேவைகளை பெறலாம். அப்படி செலவு செய்ய முடியவில்லை என்றால் தாராளமாக நம் வங்கிக் கணக்குகளுக்கே பணத்தை திரும்ப அனுப்பிக் கொள்ளலாம். உதாரணமாக : பேடிஎம், எஸ்.பி.ஐ பட்டி, மொபிக்விக் போன்ற நிறுவனங்களைச் சொல்லலாம்.

இந்த வகையான வேலட்டுகளில் கூடுதல் வசதி என்னவென்றால்  நாம் வேலட்டில் இருக்கும் பணத்தை யாருக்கு வேண்டுமானாலும் எந்த வங்கிக் கணக்கிற்கு வேண்டுமானாலும் சரியான வங்கிக் கணக்கு மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி கோட்களை அளித்தால் பரிமாற்றம் செய்துவிடலாம். இதில் ஒவ்வொரு வேலட்டுகளும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை கமிஷனாக எடுத்துக் கொள்கிறது. 

சமீபத்தில் குளோஸ்ட் வேலட்டுகளில் இருந்து செமி குளோஸ்டாக மாறிய நிறுவனம் ஓலா மணி. இந்த நிறுவனத்தின் இ-வேலட்டுக்களில் பணம் செலுத்தினால் அது நேரடியாக அவர்களின் டாக்ஸி அல்லது ஆட்டோ சேவைகளை மட்டுமே பயன்படுத்தி கழிக்க முடியும் என இருந்தது. ஆனால் தற்போது நம் போன்களுக்கு ரீசார்ஜ் செய்வது தொடங்கி, டோனினோஸ் பீட்சா, புக் மை ஷோ என்று பல சேவைகளை பயன்படுத்த முடிகிறது. 

3. ஓப்பன் வேலட்டுக்கள் :
ஒரு e-walletல் செலுத்தப்படும் பணத்தை, செமி குளோஸ்ட் வேலட்டுகளைப் போல குறிப்பிட்ட நிறுவனங்களின் சேவைகள் அல்லது பொருட்களை வாங்குவது போலவே இருக்கும். இந்த வகையான வேலட்டுகளை இந்தியாவில் ஆர்பிஐ-ன் அனுமதி பெற்ற வங்கிகள் தான் செய்ய முடியும். உதாரணமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் டெபிட் கார்டுகள். இந்த வகையில் மட்டும் தான் கார்டுகளை பயன்படுத்தி பணத்தை கையில் எடுக்க முடியும்.

e-commerce-40669_960_720_11085.png

டிரெண்ட் :
தற்போதைக்கு செமி குளோஸ்ட் e-wallet தான் டிரெண்டில் இருக்கிறது. வழக்கமாக இது போன்ற அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி மொபைல் ரீசார்ஜ், பள்ளி, கல்லூரி கட்டணங்களை செலுத்துவது, உணவகங்களில் செலவு செய்வது, பஸ், ரயில் & விமான டிக்கேட்டுகளை புக் செய்வது, மாதம் தோறும் செலுத்தும் இன்ஷூரன்ஸ் பிரீமியங்கள், குடிநீர் வாரிய வரி, லேண்ட் லைன் போன் கட்டணங்கள்,  இணையத்திற்கான செலவுகள், டிடிஹெச் ரீசார்ஜ் செய்வது, போன்றவைகள் தான் தற்போதைய டீமானிட்டைசேஷனுக்கு முன் செய்யப்பட்டு வந்தது. இப்போதும் பெரும்பாலான செமி குளோஸ்ட் வேலட்டுகள் மூலம் இவைகளை செய்ய முடிகிறது. டிமானிட்டைசேஷனுக்கு பிறகு பெட்ரோல் பங்குகள் தொடங்கி, பெட்டிக் கடைகள் வரை பேடிஎம் மூலம் பணத்தை பரிமாற்றிக் கொள்வது சகஜமாகி வருகிறது.

கேஷ் பிக்-அப் :
இதில் மொபிக் விக் என்கிற நிறுவனம் ஒரு படி மேலே சென்று கேஷ் பிக் -அப்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சேவை தற்போது டெல்லி, ஜெய்பூர் மற்றும் மும்பை போன்ற இடங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தி இருக்கிறது.  காலை 10 - மாலை 6 மணி வரை கேஷ் பிக் - அப் செய்யப்படுகிறது. ஒரு நபர் நாம் இருக்கும் இடத்திற்கு வந்து பணத்தை வாங்கி கொண்டு செல்கிறார். அவர் வாங்கிய உடனேயே, நம்மிடம் இருந்து வாங்கிய தொகை நம் வேலட்டில் வரவு வைக்கப்படுகிறது. கேஷ் பிக் -அப் செய்ய எந்த கட்டணமும் இல்லை. 

கேஷ் டெபாசிட் :
கிராமப் புறங்களில் இன்று வரை ஒரு பிரபலமான விஷயம் பணத்தை டெபாசிட் செய்வது.  அதையும் மொபிக்விக்  அறிமுகப்படுத்தி இருக்கிறது. கேஷ் டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் அருகில் எந்த இடங்களில் எல்லாம் டெபாசிட் செய்யலாம் என்று ஒரு பட்டியலை காட்டுகிறது. அந்த இடத்திற்குச் சென்று டெபாசிட் செய்து நம் e-wallet பேலன்ஸை அதிகரித்துக் கொள்ளலாம். அதோடு வழக்கம் போல டெபிட் அல்லது க்ரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமாகவும் பணத்தை வேலட்டில் செலுத்தலாம்.

vikatan

  • தொடங்கியவர்

வலைபாயுதே

 

சைபர் ஸ்பைடர்

 

112p1.jpg

twitter.com/@udanpirappe :  விஜய் மல்லையா மோசடியாளர் அல்ல. அவர் தோற்றுப்போன தொழில் முனைவர் - ஜெயமோகன். # அப்போ நாங்கல்லாம்... வெற்றிஅடைந்த பிச்சைக்காரர்களா?

facebook.com/vtkaviarasan: பெண்களுக்கு ஸ்கூட்டி ஸ்டார்ட் பண்ண முடியாதபோது, கண்ணில் படுகிறவர்கள் எல்லோரும் அண்ணன்கள் ஆகிறார்கள்!

twitter.com/@Itz_rajez : அப்பாவிடம், தன் கடைசிக் காலம் வரை மழலையாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள் பெண் குழந்தைகள் ;-))

twitter.com/@Lekhasri_g: நீங்கள் தேடும்போது நான் கிடைக்கலைன்னா, தொலைஞ்சுட்டேன்னு நினைச்சுடாதீங்க. சாப்பிட்டுட்டு இருப்பேன்; இல்லைன்னா தூங்கிருப்பேன்!

facebook.com/sridevi.mohan.7169: அன்று படிக்காத பெண்கள் கருத்து சொல்லும்போது, `படிக்காத கழுதை எல்லாம் பேச வந்துட்டுது!' என்பார்கள். இப்போது படித்த பெண்கள் பேசினால், `படிச்சத் திமிரில் பேசறியா?'னு கேட்கிறாங்க. அவ்வளவுதான் வித்தியாசம்!

twitter.com/@Eakalaivan: தன்னை நிராகரிப்பவரின் அன்பை எப்படியாவது பெற்றுவிடத்தான் அனைவரும் மெனக்கெடுகிறார்கள்!

twitter.com/@udanpirappe: ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டுத் திரும்புறப்போ, `குழந்தைக்கு வீட்டுல நல்லா சொல்லிக்கொடுங்க'னு சொல்லி அனுப்புறாய்ங்களாம். #அடேய்... அதை நாங்க சொல்லணும்டா!

112p2.jpg

twitter.com/@Dhrogi: தேடும் இடத்தில் ஒளிந்துகொள்வதே ப்ரியத்தின் பெரும் சுவாரஸ்யம்!

twitter.com/@Kozhiyaar:  உலகத்தையே மாற்ற வேண்டும் என்று புறப்பட்ட போராளிகள், 2,000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை மாற்ற முடியாமல் திரும்பி விட்டனர்!

twitter.com/@Baashhu: முன்னர் எல்லாம் சினிமாவை வெச்சு `லொள்ளு சபா'னு பண்ணினாங்க, இப்ப லொள்ளு சபாவைத்தான் சினிமாவா பண்றாங்க.

facebook.com/radha.manalan: மக்கள் பணம் எடுக்கும் அவசரத்தில், கடந்த ஒரு வாரக் காலமாகத் தவறவிட்ட சில முக்கிய நிகழ்வுகள்...

`நாகினி' விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிப் போகிறது. ஷ்ரேயாவுக்கும் ஹீரோ மீது காதல் வந்திருச்சு. இது ஷிவன்யாவுக்குத் தெரிஞ்சிருச்சு. நாகமணி யாரிடம் போகப்போகுதுன்னு ஒரே பதற்றம்!

`கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் ப்ரியாவுக்குப் பதில் மாடல் சைத்ரா ரெட்டி. ப்ரியாவின் அபிமானிகள், இதைத் தாங்கிக்கப்போறாங்களா இல்லை `சைத்ரா’வுக்கு மாறிடப்போறாங்களா?!

`பிரியமானவள்' சீரியலில் இன்ஸ்பெக்டர் கிரி மறுபடியும் பழிவாங்கக் கிளம்பிவிட்டார்!

`வாணி ராணி' சீரியல் முடியும் தருணத்துக்கு வந்துவிட்டது. ராதிகா தீர்க்கவேண்டியது இன்னும் இரண்டே பிரச்னைகள்தான். மற்றவை எல்லாம் solved!

vikatan

  • தொடங்கியவர்

டியர் நெட்டிசன்ஸ்...உங்கள் புத்தகங்களை நீங்களே பிரசுரிக்கலாம்! #Self-publishing

 

புத்தக

சமூகவலைதளங்கள் வாயிலாக நாள்தோறும் உருவாகிக் கொண்டே இருக்கும் புத்தம்புது எழுத்தாளர்களுக்கு இந்தச் செய்தி கங்காரு பாய்ச்சலாக உற்சாகம் அளிக்கும்!

ரூபி கவுர்... கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் புகைப்படக் கலைஞர். இவர் எழுதிய மில்க் அண்ட் ஹனி என்கிற கவிதைத் தொகுப்பு காதல், இழப்பு, வலி, வேதனை, பெண்ணியம் பற்றிப் பேசுகிறது. வழக்கமான கவிதைகளைப் போல அல்லாமல், ஒவ்வொன்றும் இனிப்பு தடவிய கசப்பு மாத்திரை போல மறைமுகமாக வலியை உணர்த்துவதுதான் இந்தத் தொகுப்பின் சிறப்பு. ரூபியின் முதல் தொகுப்பான இது, 5 லட்சம்  பிரதிகளுக்கு மேல் விற்று நியூயார்க் டைம்ஸின் பெஸ்ட் செல்லர் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.பெண்களின் கவிதைப் புத்தகங்கள் என்கிற வரிசையில் அமேசானிலும் இதுவே விற்பனையில் நம்பர் ஒன்!

பெரிய பதிப்பகத்தின் வெளியீடு என்றால் விற்பனையில் சாதனை படைப்பது சாதாரணமாக இருக்கலாம். ரூபியோ தனது முதல் படைப்பையே செல்ஃப் பப்ளிஷிங் முறையில் தானே வெளியிட்டதுதான் இங்கே ஹைலைட்! 

அதென்ன செல்ஃப் பப்ளிஷிங்?
''எல்லாருக்கும் புத்தகம் எழுத ஆசை. என்ன எழுதறது... அதை புத்தகமா கொண்டு வர யாரை, எப்படி அணுகறதுனு நிறைய கேள்விகள். ஒரு பதிப்பாளரை அணுகி புத்தகம் போட வைக்கிறது அவ்வளவு ஈஸியில்லை. புத்தகத்துக்கான பதிப்புரிமை பதிப்பாளர்கிட்ட இருக்கும். ராயல்டியும் அதிகபட்சமா 10 சதவிகிதம்தான் கிடைக்கும்.  நாம புத்தகமா போட நினைக்கிற சப்ஜெக்ட் பதிப்பாளருக்குப் பிடிக்கணும். இப்படி எந்தப் பிரச்னைகளும் இல்லாமப் பண்றதுதான் செல்ஃப் பப்ளிஷிங். நாம புத்தகமா பார்க்க நினைக்கிற விஷயங்களை நாமளே கொண்டு வரலாம். நம்ம புத்தகம் நல்லாருக்கு, நல்லா இல்லைனு யாரும் சர்ட்டிஃபிகேட் கொடுக்க வேண்டாம். இதுல லாபம் 70 சதவிகிதம்...'' என்கிறார் ஜோத்ஸ்னா ராமச்சந்திரன்.  சொந்தமாக புத்தகம் வெளியிட நினைப்போருக்கென்றே ஹேப்பி செல்ஃப் பப்ளிஷிங் என்றொரு நிறுவனத்தை நடத்துபவர்.

எம்.பி.ஏ. ரீட்டெயில் மேனேஜ்மென்ட் முடித்திருக்கிற ஜோத்ஸ்னா, வேறு வேறு வேலைகளைப் பார்த்த அனுபவங்களுக்குப் பிறகு, செல்ஃப் பப்ளிஷிங் பற்றித் தெரிந்து, அதற்கான படிப்புகளை முடித்திருக்கிறார். சுயமாக புத்தகம் போட விரும்புகிற யாருக்கும் புத்தகம் வெளியிட உதவுவதே இவரது இப்போதைய முழுநேர வேலை.

தனது புத்தகத்தை தானே வெளியிட்டதில் கிடைத்த பெருமகிழ்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை எழுத்தாளர் கிராபியென் பிளாக்.
''இன்றைய நவீன இலக்கிய சூழலில் நிலவுகிற அரசியல்களைத் தாண்டி, ஒரு படைப்பாளி தன் புத்தகத்தைக் கொண்டு வருவதென்பது மிகவும் சிரமமானது. தன்னுடைய படைப்பை ஒரு பதிப்பாளரிடம் கொடுக்கும்போது, அவர்கள் அதை மாற்றி எழுதலாம்... வேறொரு எழுத்தாளரிடம் கொடுத்துத் திருத்தச் சொல்லலாம்... பொருளாதார நிலைமையைக் காரணம் காட்டி, புத்தக வெளியீட்டைத் தள்ளிப் போடலாம். இப்படியான நிலையில்தான் பேராசிரியர் சண்முகசுந்தரம் மூலம் பிரிண்ட் ஆன் டிமாண்ட் பற்றித் தெரிந்து கொண்டேன். என்னுடைய 'மாயப் பெருங்கூதன்' புத்தகத்தை அப்படித்தான் வெளியிட்டேன்...'' என்கிறவர், செல்ஃப் பப்ளிஷிங் முறை ஏன் சிறந்தது என்பதையும் விளக்குகிறார்.

''என்னுடைய புத்தகத்தை ஒரு பதிப்பகம் வெளியிடுகிறது என வைத்துக் கொள்வோம். 500 அல்லது 1000 பிரதிகள் அடித்துக் கொடுக்கிறார்கள். அதை என் வீட்டு அறையில் அடுக்கி வைத்தாலே பாதி இடம் நிரம்பிவிடும். செல்ஃப் பப்ளிஷிங்கில் பிரிண்ட் ஆன் டிமான்ட் முறையில் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் புத்தகங்களை அச்சடித்துக் கொள்ள முடியும். இடமும் அடையாது. புத்தம் புதிதாக புத்தகங்களை கொடுக்க முடியும். 

பல பதிப்பகங்களும் இன்று புத்தகம் எழுதுகிறவர்களுக்கு முறையான ராயல்டி கொடுப்பதில்லை. நட்சத்திர அந்தஸ்து உள்ள எழுத்தாளர்களுக்குமே இந்த நிலைமைதான். அந்த வகையில் செல்ஃப் பப்ளிஷிங் முறையில் என்னுடைய புத்தகத்தை நானே வெளியிட்ட போது முதல் பதிப்பு மொத்தமும் விற்று, முறைப்படி காசோலை வந்து சேர்ந்தது. அது எனக்கு மிகப் பெரிய சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தது. இப்போது என்னுடைய நாவலின் அடுத்த பதிப்பு விற்றுக் கொண்டிருக்கிறது. இணையதள விற்பனையும் எனக்கு திருப்தியாகவே இருக்கிறது. திரையுலகில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு நிறைய புதுமுகங்கள் வெளிச்சத்துக்கு வந்தார்கள். பதிப்பகத்துறையிலும் இன்று பிரபலமாகி வருகிற டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, திறமையான நிறைய அறிமுக எழுத்தாளர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும்...'' - நம்பிக்கையுடன் நல்ல வார்த்தைகள் சொல்கிறார் கிராபியென் பிளாக்.
செல்ஃப் பப்ளிஷிங் என்கிற விஷயம் தமிழ்நாட்டில் தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ச்சியடைவதற்கு முன்பிலிருந்தே இருப்பதுதான். பலரும் தங்களது கவிதைத் தொகுப்புகளை செல்ஃப் பப்ளிஷிங் முறையில்தான் வெளியிட்டிருக்கிறார்கள்.  சில பதிப்பகங்கள் இதை ஒரு திட்டமாகவே கொண்டு வந்து, 'உங்களுக்கு புத்தகம் வெளியிட வேண்டுமா? அதற்கு இவ்வளவு செலவாகும். உங்களுக்கு இத்தனை பிரதிகள் கொடுப்போம். நாங்கள் இத்தனை பிரதிகளை வைத்துக் கொள்வோம். நாங்கள் வைத்துக் கொள்கிற பிரதிகளை நூலக ஆணைக்குக் கொடுப்போம் அல்லது யாராவது கேட்டால் விற்றுக் கொள்வோம்... உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரதிகளை நீங்கள் விற்றுக் கொள்ளலாம்'  என்ற அறிவிப்புடன் செய்கிறார்கள்.

image1_13458.jpg


டைப் செட்டிங், பிரிண்ட்டிங் என எந்த அடிப்படைத் தொழில்நுட்பமும் தெரியாத சாதாரண நபர்கள், சில பதிப்பாளர்களை நாடுகிறார்கள். சென்னையைத் தவிர, பல ஊர்களில் பெரிய பதிப்பகங்கள் இல்லை. பதிப்பகங்களே இல்லாத சிற்றூர்களில் புத்தகம் அச்சிட விரும்புகிற ஒரு நபர், கல்யாணப் பத்திரிகையை அச்சிட்டுத் தருகிற மாதிரியான நபர்களைக்கூட அணுகி, தனது புத்தகத்தைக் கொடுத்து அச்சிட்டு வெளியில் கொண்டு வருவதாகத் தகவல்களைக் கேள்விப்படுகிறேன்.

 2 வருடங்களுக்கு முன்பு வரை இது வெளிப்படையான தொழிலாக இல்லை. தொழில்முறை பதிப்பங்களும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் புத்தகங்கள் அச்சிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தன. மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பு பிரிண்ட் ஆன் டிமாண்ட் மற்றும் டிஜிட்டல் பப்ளிஷிங் தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும் வரை நிலைமையே வேறு.

பெரும்பாலும் புத்தகங்களை ஆஃப்செட்டில்தான் அச்சடிப்பார்கள். 500 அலலது 1000 பிரதிகள்தான் அச்சடித்துக் கொடுப்பார்கள். 200 பிரதிகள் போதும் என்றாலும் 500 பிரதிகளுக்கான செலவை ஏற்றுத்தானாக வேண்டும்.  அந்த 200 புத்தகங்களையே விற்க வழி தெரியாது.
'யாருக்காவது புத்தகம் வெளியிட வேண்டுமா... நான் செய்து தருகிறேன்' என முன்வர ஆளில்லாத நிலை. இத்தனையையும் உடைத்து ஆங்கிலப் புத்தகங்கள் வெளியிடுவதில்தான் முதல் மாற்றம் வந்தது. மின் புத்தகங்கள் பிரபலமாக ஆரம்பித்தன. செல்ஃப் பப்ளிஷிங் என்பது பலருக்கும் வாய்ப்பளிக்கிற ஒரு பெரிய தளமாக மாறியிருக்கிறது. 150 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தின் ஒரு பிரதியை வெறும் 75 முதல் 100 ரூபாய் செலவுக்குள் அச்சடித்துக் கொள்ளலாம். உங்களுக்குத் தேவையான பிரதிகளை நீங்கள் முடிவு செய்யலாம். ஆன்லைன் ஷாப்பிங்கில் விற்றும் காசு பார்க்கலாம். அவற்றை மின் புத்தகங்களாகவும் விற்கலாம்.

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் செல்ஃப் பப்ளிஷிங் முறை ரொம்பவே முன்னேறியிருக்கிறது. நம் நாட்டில் இது ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. குறிப்பாக தமிழ்புத்தகங்களை செல்ஃப் பப்ளிஷிங் முறையில் சந்தைப்படுத்த இன்னும் கொஞ்சம் முயற்சிகள் தேவை. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆன்லைன் விற்பனை, பெரிய புத்தகக் கடை நெட்வொர்க், புத்தகக் கண்காட்சி என மூன்று வகையான சந்தைகள் இருக்கின்றன. நான்காவது சந்தையான கிண்டில் வெர்ஷனில் தமிழில் புத்தகங்கங்கள் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்த வருட இறுதிக்குள் வரும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. புத்தகக் கடைகள் மற்றும் கண்காட்சிகள் மூலம் சந்தைப்படுத்துதல் என்பது அத்தனை எளிதாக இல்லை.

பதிப்பாளர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு இணையத்தில் பெரிய அளவில் பிசினஸ் நடப்பதில்லை. கடை, கண்காட்சி மற்றும் நூலக ஆணை மூலம்தான் அவர்களுக்கு வருமானமே... இந்த வருமானம் பதிப்பாளருக்குத் தொடர்ந்து கிடைக்கும். செல்ஃப் பப்ளிஷிங் முறையில் புத்தகம் வெளியிட்டு, வெற்றி பெற்றாலுமே, அதை ஏற்கனவே உள்ள பதிப்பாளர்கள் யாரையாவது அணுகி விற்றுத் தரச் சொல்லிதான் கேட்க வேண்டும். 

அதே நேரம் இன்னும் 5, 6 வருடங்களுக்குப் பிறகு இணைய சந்தையும், மின் புத்தகச் சந்தையும் 50 முதல் 60 சதவிகித புத்தக விற்பனையை ஆக்கிரமிக்கலாம். 

பெரும்பாலான எழுத்தாளர்கள் தாமே தமது புத்தகங்களை வெளியிட்டுக் கொள்வதாகச் சொல்வதில்லை. அப்படிச் செய்கிற ஒருசிலரும் விநியோகஸ்தர்களுடன் விற்பனை உரிமை என ஒரு ஒப்பந்தம் போட்டுத்தான் செய்கிறார்கள். இதை தனிநபரால் செய்ய முடியாது. எதிர்காலத்தில் இந்த நிலை மாறலாம்.

வருங்காலத்தில் புத்தகக் கடைகள் என்னவாகும்? யூகிக்க முடியவில்லை. ஆனாலும், அடுத்த 5 வருடங்களில் அச்சுப் பதிப்புத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் வரப் போவது மட்டும் நிச்சயம்!''

vikatan

  • தொடங்கியவர்

இன்ஸ்டாகிராமில் இது இல்லை, யாகூ தேடலில் யார் முதலிடம், மார்க்கின் அதிரடி திட்டம்! #WeeklyTechTalks

 

ன்ஸ்டாகிராமில் இது நாள் வரையில் இருந்த ஒரு விஷயம் இப்போ இல்ல..அது என்ன தெரியுமா? 2016ம் ஆண்டில் இணையத்தில் அதிகம் தேடியவர்கள் பட்டியலில் ஐந்தாவது ஆண்டாக முதலிடம் பிடித்தவர் என இந்த வார டாப் ட்ரெண்டிங் #WeeklyTechTalks இதோ...

 

இன்ஸ்டாகிராமில் இது இல்லை கவனித்தீர்களா? #WeeklyTechTalks

WeeklyTechTalks

இது நாள் வரையில் இன்ஸ்டாகிராமில் நீங்கள் பயன்படுத்தி வந்த போட்டோ மேப் எனும் வசதியை இன்ஸ்டாகிராம் நிறுவனம் நீக்கியுள்ளது. எந்த பகுதியில் எந்த புகைப்படம் பகிரப்பட்டது என்ற தகவலை அளிக்கும் இந்த வசதியை, அதிக பயன்பாட்டாளர்கள் இல்லை என்று இன்ஸ்டாகிராம் நிறுத்தியுள்ளது. இதற்கு பதிலாக புதிய வசதியை விரைவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டகிராம் சமீபத்தில் பூமராங் ஸ்டோரிஸ் மற்றும் ஸ்கிரீன்ஷாட் எடுத்தால் நோட்டிஃபிகேஷன் வரும் வசதியையும் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் வீடு மார்க் சக்கர்பெர்க்  #WeeklyTechTalks

Affordable housing is an important problem across the world. Our goal is to connect people everywhere, and that starts with being good neighbors in our local community.

For all the opportunity and jobs the technology industry has created, it has also made the Bay Area a less affordable place to live. We recognize our growth contributes to these challenges, and we're committed to helping solve them so people can afford to live and work here.

Today we're announcing a partnership with community groups and the governments of East Palo Alto and Menlo Park to create more affordable housing, help more people stay in their homes, and offer job training. We're committing $20 million to jump start this effort and to start bringing more people on board.

Affordable housing is a problem beyond the Bay Area too. We can't fix it by ourselves, but if we figure out ideas that work here, then I hope we'll be able to bring them to more cities and countries in the future.

  • தொடங்கியவர்

2016-ன் சிறந்த 25 கண்டுபிடிப்புகள் இதுதான்! (Album)

 

வ்வொரு ஆண்டும் அந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகளை பட்டியலிடுவது டைம் பத்திரிகையின் வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் 'உலகின் சிறந்த 25 கண்டுபிடிப்புகள்' என புதிய பட்டியலை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது டைம். அவற்றின் விவரங்களை புகைப்படங்களுடன் இங்கே காணலாம்...

கண்டுபிடிப்பு

கண்டுபிடிப்புகள் என்றாலே டெக்னாலஜி, கேட்ஜெட் என மட்டுமே யோசிக்க வேண்டாம். உலகப் புகழ் பெற்ற பார்பி பொம்மைகளில் 57 வருடங்களில் இல்லாத மாற்றம், ஆப்பிரிக்க குழந்தைகளை காப்பாற்றும் ஆரஞ்சு சுவைகொண்ட சர்க்கரை வள்ளிக் கிழங்கு, 360 டிகிரியில் சுழலும் சக்கரம் என இந்தப் பட்டியலில் ஏகப்பட்ட ஆச்சரியங்கள்!

அத்துடன் உடலைத் தொடாமலே வெப்பத்தை அளக்கும் வெப்பநிலைமானி, இன்சுலின் அளவை அளக்கும் செயற்கை கணையம், தானாக அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் ஷூ, மிதக்கும் பல்பு என டெக்னாலஜி சுவாரஸ்யங்களும் உண்டு. 

சோலார் கூரை, மடக்கும் ஹெல்மெட், அல்சீமர் நோயாளிகளுக்கு உதவும் பாத்திரங்கள், ஸ்மார்ட்டூத்பிரஷ் என வித்தியாசமான சிந்தனைகளுக்கு உருவம் கொடுத்த கண்டுபிடிப்புகளும் இதில் உண்டு. மொத்தத்தில் வித்தியாசமான சிந்தனை, சமகால பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் தொழில்நுட்பம் என இரண்டிற்கும் இடம்கொடுக்கும் வகையிலான கண்டுபிடிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.

 

placeholder

placeholder

placeholder

placeholder

placeholder

placeholder

placeholderplaceholder

placeholder

placeholder

placeholder

placeholder

placeholder

placeholder

placeholder

 

placeholder

placeholder

placeholder

placeholder

placeholder

placeholder

placeholder

placeholder

placeholder

placeholder

 

vikatan

  • தொடங்கியவர்

என்றும் 16 கிராமம்!

 

 

p68a.jpg

ல்லா நாடுகளிலும் புற்றுநோயின் தாக்கத்தால் இறக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் எந்த விதமான நோய்களின் பாதிப்புக்கும் உள்ளாகாமல், புற்றுநோய்களைப் பற்றித் தெரியாமல் வாழ்ந்துவரும் மக்கள் வசிக்கும் விசித்திரமான நகரம் ஒன்று இருக்கிறது. இயற்கையை அழிக்காமல், ரசாயனம் கலந்த உணவுகளைச் சாப்பிடாமல், இருந்த இடத்திலேயே வேலை பார்க்காமல், வேறு விதமான வேலைகளில் சுறுசுறுப்பாக இருப்பதால்தான்... வடக்கு பாகிஸ்தானில் இருக்கும் `ஹூஞ்குட்ஸ்' எனும் இந்த நகரம் புற்றுநோயைப் பற்றி அறியாத விசித்திர நகரம் என அழைக்கப்படுகிறது!

p68b.jpg

p68c.jpg

இந்த நகரத்தில் வாழ்ந்துவரும் `ஹூஞ்சா' எனும் இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்களின் 70 வயது வரை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் மற்றும் வலிமையாகவும் இருக்கிறார்கள். இந்த ஹூஞ்சாக்களில் சிலர் 130 வயதைக் கடந்தும் வாழ்கிறார்கள். பொதுவாகப் பெண்களுக்கு 40 முதல் 50 வயதிலேயே கருத்தரிப்பு ஏற்படுவது கடினம். ஆனால், இங்கு வாழும் பெண்கள் 65 வயதிலும் கருத்தரிக்கிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயமே. இந்த மக்கள் தங்களது உணவுப் பழக்கவழக்கங்களில் இயற்கை முறையில் விளையும் பழங்கள், காய்கறிகள், பால், உலர்ந்த பழங்கள், முட்டை மற்றும் அதிகமான அளவில் வால்நட்ஸ்களை எடுத்துக்கொள்கிறார்களாம். இந்த நகரத்தில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியக் காரணமாக இருப்பது, இவர்கள் பின்பற்றும் உணவுப்பழக்கம்தான் என்று கூறுகிறார்கள். நான்காம் நூற்றாண்டில் இந்த நகரத்திற்கு அலெக்சாண்டர் வருகை தந்துள்ளதால், இங்கு வாழும் மக்கள் அலெக்சாண்டரின் வழித்தோன்றல்கள் எனவும் கருதப்படுகிறார்கள்!

vikatan

  • தொடங்கியவர்

கண்டசாலா

 
kandasala_3098676f.jpg
 
 
 

தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகரும், இசையமைப் பாளருமான கண்டசாலா (Ghantasala) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே உள்ள சவுதப்பள்ளி கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் (1922) பிறந்தார். முழுப் பெயர் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ். தந்தை ஹரிகதை கூறுவதில் வல்லவர். சிறு வயதிலேயே அவருடன் சென்று பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் கண்டசாலா.

* தந்தை இறந்த பிறகு, தாய் மாமனிடம் வளர்ந்தார். ஒரு இசைக் கலைஞனாக வரவேண்டும் என்ற அடங்காத ஆசை கொண்டிருந்தார். பத்ரயானி சீதாராம சாஸ்திரியிடம் இசை கற்றார். உறவினர்களின் எதிர்ப்பை மீறி, விஜயநகரத்தில் உள்ள இசைப் பள்ளியில் சேர்ந்து ‘சங்கீத வித்வான்’ பட்டம் பெற்றார்.

* 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். விடுதலையான பிறகு, திரைப்படங்களில் பின்னணி பாட முயற்சித்தார். அகில இந்திய வானொலி, ஹெச்எம்வி இசைத்தட்டு நிறுவனத்தில் பாடினார். 1944-ல் ‘சீதா ராம ஜனனம்’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்ததோடு, கோரஸ் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.

* பிரபல இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பாராமன் உட்பட பல பிரபலங்களுடன் தொடர்பு ஏற்பட்டது. திரைப்படங்களில் பாடும் வாய்ப்பும் தேடிவந்தது. முதன்முதலாக ‘சொர்க்க சீமா’ என்ற படத்தில் பாடினார். இசையிலும் வல்லவரான இவர், முதன்முதலாக ‘லக்ஸ்மம்மா’ என்ற படத்துக்கு இசையமைத்தார்.

* ‘பாதாள பைரவி’ திரைப்படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. ‘மாயக்குதிரை’, ‘பாதாள பைரவி’, ‘லவகுசா’, ‘மாயா பஜார்’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கின் அத்தனை முன்னணி கதாநாயகர்களுக்கும் பின்னணி பாடியுள்ளார்.

* கன்னடம், மலையாளம், துளு, இந்தியிலும் பாடியவர். இவர் பாடிய தெய்வீகப் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இந்தியாவிலும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ஐ.நா. சபையில் பாடும் வாய்ப்பும் பெற்றார்.

* தென்னிந்திய திரையுலகில் முன்னணிப் பாடகராக சுமார் 30 ஆண்டுகாலம் வலம் வந்தவர். பிரபல இசையமைப்பாளர் எம்.பி.நிவாசனுடன் சேர்ந்து திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் தொடங்கப்படக் காரணமாக இருந்தார். அதன் முதல் தலைவராகவும் பதவி வகித்தார்.

* தெலுங்கில் 3 திரைப்படங்கள் தயாரித்துள்ளார். இளைய தலைமுறைக் கலைஞர்களை ஆதரித்து, ஊக்குவித்து வந்தவர். ‘அமைதியில்லாதென் மனமே’, ‘துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே’, ‘கனவிதுதான்’, ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’, ‘ஆஹா இன்ப நிலாவினிலே’, ‘நீதானா என்னை அழைத்தது’ ஆகிய இவரது பாடல்கள் ரசிகர்கள் நெஞ்சத்தில் நீங்கா இடம்பிடித்தவை.

* பாடலில் காதல், கருணை, இரக்கம், மகிழ்ச்சி, சோகம் உள்ளிட்ட மென்மையான உணர்வுகளையும் அநாயசமாக வெளிப்படுத்தக் கூடியவர். பத்ம விருது பெற்றவர். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் முதல் ஆஸ்தான வித்வானாக கவுரவிக்கப்பட்டார்.

* இறுதிவரை தனது இசையாலும், குரலாலும் லட்சக்கணக்கான வர்களை மகிழ்வித்துவந்த கண்டசாலா 52-வது வயதில் (1974) மறைந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் 2003-ல் தபால்தலை வெளியிடப்பட்டது..

tamil.thehindu

  • தொடங்கியவர்

ஆப்பிள் புராணம்!

 
apple_3096272f.jpg
 
 
 

தினமும் ஒரு பழமாவது சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அமெரிக்காவில் டிசம்பர் ஒன்றாம் தேதி என்றால் ஆப்பிள் பழத்தை மட்டும்தான் சாப்பிடுவார்கள். ஏன் தெரியுமா? அன்றைய தினம் சிவப்பு ஆப்பிள்களைச் சாப்பிடுவதற்கான நாள். இதை ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் கடைபிடிக்கிறார்கள். அதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான விஷயமும் உள்ளது.

முன்பு ஆப்பிள் உற்பத்தியில் சீனா முதலிடத்தில் இருந்தது. இரண்டாமிடத்தில் அமெரிக்கா இருந்தது. 1880-ம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் சிவப்பு ஆப்பிள் மரங்களை நிறைய வளர்த்தார்கள். நிறைய புதுவகை ஆப்பிள்களையும் விவசாய ஒட்டுமுறையில் உருவாக்கினார்கள். இதில் ‘பென் டேவிஸ்’ வகை ஆப்பிள் எல்லாக் கடினமான வானிலையையும் தாக்குப்பிடித்தது. இந்த ஆப்பிள் மட்டும் நிறைய உற்பத்தி ஆனது.

அப்புறம், நூறாண்டுகளுக்குப் பிறகு 1980-ம் ஆண்டில் அமெரிக்காவில் சிவப்பு நிற ஆப்பிளான ‘ரெட் டெலிசீயஸ்’ வாஷிங்டன் நகரில் அதிகமாக உற்பத்தி ஆனது. அப்போது சிவப்பு ஆப்பிளைச் சாப்பிடுங்கள் என்று பிரசாரம் செய்தார்கள். இதுவே பின்பு சிவப்பு ஆப்பிளைத் தினமும் சாப்பிடுங்கள் (eat a red apple day) என்று ஒரு தினத்தைக் கடைபிடிக்கும் அளவுக்கு மாறியது.

சரி, அமெரிக்காவில் ஆப்பிள் தினம் கொண்டாடுவது இருக்கட்டும். பொதுவாகவே ஆப்பிள் சாப்பிடுவது ரொம்ப நல்லது. ‘தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரைப் பார்க்கப் போக வேண்டியதில்லை’ என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதற்குக் காரணம், அதில் நிரம்பியிருக்கும் சத்துகள்தான். ஆப்பிள் பழத்தில் ஏராளமான தாதுக்களும், வைட்டமின்களும் உள்ளன. ஆப்பிள் பற்றி இன்னும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்ப்போமா?

# ஆப்பிள்களில் சுமார் 7,500 ரகங்கள் உள்ளன. இந்தியாவில் 75 சதவீத ஆப்பிள்கள் ஜம்மு, காஷ்மீரிலேயே விளைகின்றன.

# ரெட் டெலிசீயஸ், கோல்டன் டெலிசீயஸ், மெக் இன்டோஷ், லால் அம்ப்ரி, சவுபாட்டியா அனுபம் ஆகியவை இந்தியாவில் விளையும் ஆப்பிள் ரகங்கள்.

# கஜகஸ்தானில் ஆப்பிள் மரங்கள் நிறைந்த காடு அல்மாட்டி நகரில் உள்ளது. அந்த ஊரின் பெயருக்கு ‘ஆப்பிள்களின் தந்தை’ என்று அர்த்தம்.

# பழத்தைவிடத் தோலில்தான் அதிகச் சத்து உள்ளது. அதனால் ஆப்பிள் சாப்பிடும்போது தோலுடன் சாப்பிடுங்கள்.

# ஆப்பிளைத் தண்ணீரில் போட்டால் மிதக்கும். இதற்குக் காரணம், ஆப்பிளில் 25 சதவீதம் காற்று நிரம்பியிருக்கிறது.

# மனிதர்களைப் போலக் குதிரைகள், குரங்குகள், சிம்பன்சிகள், கரடிகள், முயல்கள் போன்ற விலங்குகளும் ஆப்பிளை விரும்பிச் சாப்பிடும்.

# சீனாவில் பெரியவர்களைப் பார்க்கப்போகும்போது மரியாதை செலுத்த ஆப்பிள் பழத்தை வாங்கிச் செல்வார்கள்.

tamil.thehindu

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

கண்டசாலா

 
kandasala_3098676f.jpg
 
 
 

தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகரும், இசையமைப் பாளருமான கண்டசாலா (Ghantasala) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே உள்ள சவுதப்பள்ளி கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் (1922) பிறந்தார். முழுப் பெயர் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ். தந்தை ஹரிகதை கூறுவதில் வல்லவர். சிறு வயதிலேயே அவருடன் சென்று பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் கண்டசாலா.

* தந்தை இறந்த பிறகு, தாய் மாமனிடம் வளர்ந்தார். ஒரு இசைக் கலைஞனாக வரவேண்டும் என்ற அடங்காத ஆசை கொண்டிருந்தார். பத்ரயானி சீதாராம சாஸ்திரியிடம் இசை கற்றார். உறவினர்களின் எதிர்ப்பை மீறி, விஜயநகரத்தில் உள்ள இசைப் பள்ளியில் சேர்ந்து ‘சங்கீத வித்வான்’ பட்டம் பெற்றார்.

* 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். விடுதலையான பிறகு, திரைப்படங்களில் பின்னணி பாட முயற்சித்தார். அகில இந்திய வானொலி, ஹெச்எம்வி இசைத்தட்டு நிறுவனத்தில் பாடினார். 1944-ல் ‘சீதா ராம ஜனனம்’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்ததோடு, கோரஸ் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.

* பிரபல இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பாராமன் உட்பட பல பிரபலங்களுடன் தொடர்பு ஏற்பட்டது. திரைப்படங்களில் பாடும் வாய்ப்பும் தேடிவந்தது. முதன்முதலாக ‘சொர்க்க சீமா’ என்ற படத்தில் பாடினார். இசையிலும் வல்லவரான இவர், முதன்முதலாக ‘லக்ஸ்மம்மா’ என்ற படத்துக்கு இசையமைத்தார்.

* ‘பாதாள பைரவி’ திரைப்படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. ‘மாயக்குதிரை’, ‘பாதாள பைரவி’, ‘லவகுசா’, ‘மாயா பஜார்’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கின் அத்தனை முன்னணி கதாநாயகர்களுக்கும் பின்னணி பாடியுள்ளார்.

* கன்னடம், மலையாளம், துளு, இந்தியிலும் பாடியவர். இவர் பாடிய தெய்வீகப் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இந்தியாவிலும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ஐ.நா. சபையில் பாடும் வாய்ப்பும் பெற்றார்.

* தென்னிந்திய திரையுலகில் முன்னணிப் பாடகராக சுமார் 30 ஆண்டுகாலம் வலம் வந்தவர். பிரபல இசையமைப்பாளர் எம்.பி.நிவாசனுடன் சேர்ந்து திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் தொடங்கப்படக் காரணமாக இருந்தார். அதன் முதல் தலைவராகவும் பதவி வகித்தார்.

* தெலுங்கில் 3 திரைப்படங்கள் தயாரித்துள்ளார். இளைய தலைமுறைக் கலைஞர்களை ஆதரித்து, ஊக்குவித்து வந்தவர். ‘அமைதியில்லாதென் மனமே’, ‘துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே’, ‘கனவிதுதான்’, ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’, ‘ஆஹா இன்ப நிலாவினிலே’, ‘நீதானா என்னை அழைத்தது’ ஆகிய இவரது பாடல்கள் ரசிகர்கள் நெஞ்சத்தில் நீங்கா இடம்பிடித்தவை.

* பாடலில் காதல், கருணை, இரக்கம், மகிழ்ச்சி, சோகம் உள்ளிட்ட மென்மையான உணர்வுகளையும் அநாயசமாக வெளிப்படுத்தக் கூடியவர். பத்ம விருது பெற்றவர். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் முதல் ஆஸ்தான வித்வானாக கவுரவிக்கப்பட்டார்.

* இறுதிவரை தனது இசையாலும், குரலாலும் லட்சக்கணக்கான வர்களை மகிழ்வித்துவந்த கண்டசாலா 52-வது வயதில் (1974) மறைந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் 2003-ல் தபால்தலை வெளியிடப்பட்டது..

tamil.thehindu

 

இவருடைய நினைவு நாளில் இந்தப்பாடலை இணைக்கின்றேன்.

அருமையான பாடல். எனக்கு சகோதரர்கள் இல்லை இருவருமே தங்கைகள். என்றாலும் இந்தப்படல் என்னை மிகவும் கவர்ந்த பாடல்.

இதேவேளை எமது யாழ் உறவுகளின் சகோதரர்கள் பல நாடுகளில் வாழலாம். உறவுகள் இந்த பாட்டின்போது தாங்கள் சகோதரர்களை நினத்துக்கொள்ளவும்.

 

என்னைக் கவர்ந்த பாடல் இது. 
உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பாடல் : முத்துக்கு முத்தாக...
படம் : அன்புச் சகோதரர்கள்
பாடகர் : திரு.கண்டசாலா
பாடலின் mp3 : http://odeo.com/show/7899703/1181981/download/MuththukkuMuththaaka.mp3 

பாடலின் வரி வடிவம் இதோ:

முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... (பாடல்)
=============================================
முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக
அண்ணன் த்ம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக 
(முத்துக்கு...)

தாயாரும் படித்ததில்லை தந்தை முகம் பார்த்ததில்லை
தாலாட்டு கேட்டதன்றி ஓர் பாட்டும் அறிந்ததில்லை
தானாக படித்து வந்தான் தங்கமென வளர்ந்த தம்பி
தள்ளாத வயதினில் நான் வாழுகிறேன் அவனை நம்பி 
(முத்துக்கு...)

அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம் வேதமெனும் தம்பி உள்ளம்
அன்னையென வந்த உள்ளம் தெய்வமெனக் காவல் கொள்ளும்
சின்னத்தம்பி கடைசித்தம்பி செல்லமாய் வளர்ந்த பிள்ளை
ஒன்றுபட்ட இதயத்திலே ஒரு நாளும் பிரிவு இல்லை 
(முத்துக்கு...)

ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல் நாங்கள்கொண்ட சொந்தமடா
ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா
நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா 
(முத்துக்கு...)

 

  • தொடங்கியவர்

 

ரோந்துப் பணியில் அழகிய அல்பகாக்கள் - காணொளி

  • தொடங்கியவர்

p99a.jpg

டோலிவுட் ஷான்வி ஸ்ரீவத்சவா

வாரணாசியில் பூத்த ரோஜாப்பூ. ஸ்கூல், காலேஜ் எல்லாம் மும்பையில். கல்லூரியில் படிக்கும்போதே `லவ்லி' தெலுங்குப் படத்தில் வாய்ப்பு கிடைக்க, ஆந்திர வாலாக்களுக்கு அறிமுகமானார். படம் சுமார்தான் என்றாலும், இவரின் அழகில் மயங்கியது திரையுலகம். அடுத்தடுத்து `அடா', `சந்திரலேகா', `ரெளடி', `பியார் மே படிப்போயனே' என வரிசைகட்டி படங்களில் நடித்து அசத்தினார். குறிப்பாக அம்மணியின் `க்யூட் எக்ஸ்பிரஷன்கள் செம' என திருஷ்டி கழித்தது டோலிவுட். இப்போது அடுத்த ரவுண்டில் கன்னடம், தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார். வெல்கம் பேபி!

சாண்டல்வுட் அய்ந்ரிதா ராய்

p99b.jpg

இந்த பிங்க் பேபி பிறந்தது ராஜஸ்தானின் உதய்பூரில். அப்பா விமானப்படையில் இருந்ததால் இந்தியா முழுக்க சுற்றி கடைசியில் பெங்களூரில் செட்டிலானார்கள். அங்கே சின்னச் சின்ன விளம்பரங்களில் இவர் நடிக்க, அதன் மூலம் கிடைத்தது வெள்ளித்திரை பிரேக். `மேரவனிகே' என்ற கன்னடப் படத்தில் அறிமுகமாகி அசத்தியவரது காட்டில், அதன்பின் அடைமழைதான். சராசரியாக ஆண்டுக்கு நான்கு படங்கள் எனப் படபடவென நடித்து, முப்பது படங்களை நெருங்கிவிட்டார். அதில் கன்னட சூப்பர் ஸ்டார்களோடு ஜோடி சேர்ந்த படங்களும் அடக்கம். வரணும். தமிழுக்கும் வரணும்!

மல்லுவுட் ராகினி நந்த்வானி

p99c.jpg

டேராடூனில் பிறந்த வெல்வெட் தேவதை. டி.வி ஷோக்களில் சின்னச் சின்ன ரோல்களில் தலைகாட்டுவதன் மூலம் தொடங்கியது இவரின் கலைப் பயணம். அவற்றின் மூலம் பாலிவுட் பட வாய்ப்பு கிடைக்க, தன் முதல் இந்திப் படத்தில் நடித்தார். படம் வசூலில் சொதப்பினாலும், ராகினி தனியாய்த் தெரிந்தார். இரண்டாவது வாய்ப்பே இளைய தளபதியுடன். `தலைவா' படத்தில் செகண்ட் ஹீரோயின். அங்கிருந்து கேரளம் சென்றவர் `பெருச்சாளி'யில் மோகன்லாலோடு ஜோடி சேர்ந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். இப்போது `ஹடியா' என்ற மலையாளப் படத்தில் பிஸி. சீக்கிரம் இங்கே திரும்பி வாங்க மேடம்!

vikatan

  • தொடங்கியவர்
குற்றம் களைந்த வாழ்வே இறை தரிசனம்
 

article_1480908762-fhgh.jpgஎல்லோரிடத்திலும் கடவுள் இருக்கின்றார். ஆனால், அவரை வெளிப்படுத்தி உணர்ந்து, சூவீகாரம் செய்வதற்குத் தடையாக அமைவது, மனிதரின் தவறுதான். 

அற்பமான விடயங்களுக்கே சந்தேகம் கொள்ளும் மனிதன், ஆழமான சங்கதிகளை எவ்வாறு நம்பப் போகின்றான். 

காணாத பொருள் உள்ளே இருக்கும் பொருள் என்றால், கண்டுகொள்வது எப்படி? நம்பிக்கையற்ற வழிபாடுகளால் பிரயோசனம் இல்லை. பக்தனுக்குள் பிரவாகிக்கும் நெஞ்சத்துப் புழகாங்கிதம், அவனுக்கே தெரியும் அற்புத ஸ்பரிசமாகும். பக்தர்களை பித்துப் பிடித்தவர்கள் போலானவர்கள் என்றும் சொல்வார்கள். பக்திப் பரவசப்படும் மானுடர்கள் அடுத்த சில நிமிடங்களில் சாதாரண நிலைக்கு வந்தவுடன் எல்லாமே மறந்து பழையபடி, பாவம் செய்யவும் தலைப்படுகின்றனர். 

இந்த நிலை அறுந்து என்றும் சாஸ்வதமான தெளிவுடன் இறைபக்தி உருவாக்க முனைதல் பிறவிக் கடமையாகும். குற்றம் களைந்த வாழ்வே இறை தரிசனத்துக்கு மேன்மை தரும்.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

15355557_1207216175993741_28739124999930

"நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே சுருதி எங்கே?'
என்று போற்றிப்புகழப்படும் ஆறுமுக நாவலர் நினைவு தினம்.

தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம்,நல்லூரில் தோன்றி, தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்.

  • தொடங்கியவர்
வெந்நீர் குளியல் வசதி கொண்ட ரோலர்கோஸ்டர் ஜப்பானிய உல்லாச நகரில் அமைக்கப்படவுள்ளது
 

பொது­மக்கள் வெந்நீர் குளி­யலில் ஈடு­பட்டுக் கொண்டே  ரோலர் கோஸ்­டரில் சவாரி செய்யும் வசதி  ஜப்­பா­னிய நக­ர­மொன்றில் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

 

20965bath.jpg

 

வீடி­யோ­வொன்று வேக­மாக பர­வி­யமை இத்­ திட்­டத்­துக்கு வழி­வ­குத்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. ஜப்­பானின் தென் பகுதித் தீவான கியூஷுவி­லுள்ள பேப்பு எனும் நகரம் உல்­லாசப் பொழு­து­போக்­கு­க­ளுக்குப் பிர­சித்­த­மா­னது.

 

இந் ­ந­கரில் சுமார் 2000 வெந்நீர் ஊற்­றுகள் உள்­ளன. இந்­நி­லையில், சுற்­று­லாத்­
து­றையை ஊக்­கு­விக்கும் வகையில், அங்­குள்ள உல்­லாச பய­ணத்­துறை அதி­கா­ரி கள் விளம்­பர வீடி­யோ­வொன்றை வெளி­யிட்­டனர்.

 

பேப்பு நக­ரி­லுள்ள உல்­லாசப் பூங்காவொன்றில் மக்கள் வெந்நீர் நிரப்­பப்­பட்ட தொட்­­டி­களில் அமர்ந்து ரோலர்­கோஸ்­டரில் பயணம் செய்­வ­தாக அவ் ­வீ­டி­யோ வில் காட்­டப்­பட்­டது.

 

உள்ளூர் வெந்நீர் ஊற்­று­க­ளி­லி­ருந்து பெறப்­பட்ட 12 தொன் வெந்நீர் இந்த விளம்­ப­ரத்­துக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த வீடியோ வேக­மாக பரவிக் கொண்­டி­ருந்த நிலையில், பேப்பு நகர மேயர் யசு­ஹிரோ நகனோ அற­ிவிப்­பொன்றை வெளி­யிட்டார்.

 

இந்த வீடியோ 10 இலட்சம் தட­வைகள் பார்­வை­யி­டப்­பட்டால், இவ் ­வீ­டி­யோவில் உள்­ளதைப் போன்ற வெந்நீர் குளியல் வசதி உல்­லாசப் பூங்கா அமைக்­கப்­படும் என்­பதே அந்த அறி­விப்பு.

 

தற்­போது 18 இலட்­சத்­துக்கும் அதி­க­மான தட­வைகள் இந்த வீடியோ பார்­வை­யி­டப்­பட்­டுள்­ளது. இதையடுத்து மேயர் யசுஹிரோ நகனோவின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என  அவரின் அலுவலகம் ஊடக அறிக்கையொன்றை வெளி யிட்டுள்ளது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

டிசம்பர் - 5

 

1360 : பிரெஞ்சு நாணயமான பிராங்க் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

1492 : கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஹிஸ்பனியோலா தீவை (தற்போதைய ஹெய்ட்டி, டொமினிக்கன் குடியரசு) அடைந்தார். 

 

1497 : போர்த்துக்கல்லின் மன்னன் முதலாம் மனுவேல், யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான்.

 

1746 : ஸ்பானிய ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது.

 

86023.jpg1831 : அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி  ஜோன் குயின்ஸி அடம்ஸ், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தபின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் இவர் மாத்திரமே.

 

1848 : கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் போக் அறிவித்தார்.

 

1896 : சென்னை கன்னிமாரா பொது நூலகம் ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக் என்பவரால் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.

 

1936 : சோவியத் ஒன்றியம் தனது புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. கிர்கிஸ்தான் சோவியத் ஒன்றியத்திற்குள் முழுமையான குடியரசாக அறிவிக்கப்பட்டது.

 

1941 : இரண்டாம் உலகப் போரில் பின்லாந்து, ஹங்கேரி, ருமேனியா நாடுகளின் மீது பிரித்தானியா போரை அறிவித்தது.

 

1941 :  ஜேர்மனிய ஆக்கிரமிப்புக்கு எதிராக கியோர்கி சூக்கொவ் தலைமையில் சோவியத் படைகள் மொஸ்கோவில் பெரும் தாக்குதலைத் தொடுத்தன.

 

1957 : இந்தோனேஷியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.

 

1958 : எஸ்.டி.டி. தொலைபேசி இணைப்பு சேவை ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.

 

1969 : வியட்னாமின் மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது.

 

1978 : சோவியத் ஒன்றியம், ஆப்கானிஸ்தானுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

 

1983 : ஆர்ஜென்டீனாவில் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.

 

1995 : இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் முழுமையாகக் கைப்பற்றியதாக அறிவித்தது.

 

2003 : தெற்கு ரஷ்யாவில் ரயில் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டனர்.

 

2003 : இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம், குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்திருப்பதாக அறிவித்தது.

 

2006 : பிஜியில் இராணுவப் புரட்சி மூலம் அதன் இராணுவத் தளபதி வொரெக் பைனிமரமா அரசைக் கைப்பற்றினார்.

 

2006 : இந்திய மத்திய அரசில் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த சிபு சோரன், 1994 இல் அவரது உதவியாளரைக் கொலை செய்த குற்றத்துக்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

 

2012 : ஈரானில் இடம்பெற்ற பூகம்பத்தினால் 8 பேர் உயிரிழந்தனர்.

 

2013 : யேமன் தலைநகர் சனாவனில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு கட்டடத் தொகுதியில் ஆயுதபாணிகள் நடத்திய தாக்குதலில் 56 பேர் பலியானதுடன்  200 பேர் காயமடைந்தனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகின் அழகான விமான நிலையங்கள்

 
airport_3099206f.jpg
 
 
 

ஒரு காலத்தில் விமானத்தில் செல்வதே பெரிய விஷயமாக கருதப்பட்டது. ஆனால் இன்று விமானத்தில் செல்வது மிகச் சாதாரணமாகிவிட்ட சூழ்நிலையில் அதன் தரத்தைப் பற்றி பேசுவது இந்த நேரத்தில் சரியாக இருக்கும். ஏனெனில் விமான நிலையத்திற்கு கட்டிட அமைப்பு ரொம்ப முக்கியமானது. மிகப் பெரிய கட்டிடமாக இருக்க வேண்டும். எந்த இடர்பாடுகளையும் தாங்கக்கூடியதாக இருக்கவேண்டும். இந்திய விமான நிலையத்தின் தரத்திற்கு மோசமான உதாரணம் சென்னை பன்னாட்டு விமான நிலையம். சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை கண்ணாடி விழுவது கணக்கில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

நடிகர் விவேக் சொன்னது போல் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு விமான நிலையத்திற்கு செல்லும் நிலை வெகுதொலைவில் இல்லை என்பது போல்தான் தெரிகிறது. ஆனால் இதே நேரத்தில் உலக நாடுகளில் விமான நிலையத்தின் அமைப்புகள் நம்மை மிரள வைக்கின்றன. சமீபத்தில் மிக அழகான வடிவமைப்புடைய விமான நிலையங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முதல் ஐந்து இடத்தில் உள்ள விமான நிலையங்களையும் அதன் கட்டிட அமைப்புகளையும் பற்றிய சில தகவல்கள்….

1. அடால்போ விமான நிலையம்

1_3099211a.jpg

> ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் நகரத்தில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.

> 1927-ம் ஆண்டு இந்த விமான நிலையம் கட்ட ஆரம்பித்து 1931-ம் ஆண்டு விமான நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது.

> 2006-ம் ஆண்டு ரிச்சர்டு ரோஜர்ஸ் மற்றும் அந்தோனியா லேம்லா ஆகிய கட்டிடக்கலை நிபுணர்கள் இந்த விமான நிலையத்தை புதுப்பித்தனர். அதாவது இந்த விமான நிலையத்தின் மேற்கூரை முழுக்க முழுக்க மூங்கிலை வைத்து அமைக்கப்பட்டது.

> 2015-ம் ஆண்டு மொத்தம் 4,68,28,279 பயணிகள் வந்துச் சென்றுள்ளனர்.

> மேற்கூரையில் மிகப் பெரிய அளவுக்கு ஜன்னல்கள் வைத்துள்ளதால் சூரிய வெளிச்சம் எளிதாக உள்ளே வருகிறது. இதன் மூலம் மின்சாரம் மிச்சப்படுத்தப்படுகிறது.

> மேலும் இந்த விமானநிலையத்தினுள் சுரங்க ரயில் பாதை வசதியும் செய்யப்பட்டுள்ளது.

 

2. ஷென்ஜென் போயன் சர்வதேச விமான நிலையம், சீனா

2_3099210a.jpg

> தென் சீனாவில் அமைந்துள்ள இந்த பன்னாட்டு விமான நிலையம் 1991-ம் ஆண்டு 10 கிலோ மீட்டர் சுற்றளவில் ஆரம்பத்தில் கட்டப்பட்டது.

> 2008-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த விமான நிலையம் விரிவுப்படுத்தப்பட்டது.

> மேம்படுத்தப்பட்ட பாரமெட்ரிக் (parametric developed structure) என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இது தற்போது கட்டப்பட்டுள்ளது.

> இந்த விமான நிலையத்தின் மூன்றாவது டெர்மினல் 2013-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் 63 நிலையான கதவுகளும் 15 தானாக இயங்ககூடிய கதவுகளும் உள்ளன. மேலும் எந்தவொரு வகையான விமானமும் இங்கு இறக்கமுடியும்.

> இந்த விமான நிலையத்திற்கும் கீழாக பஸ் சேவை மற்றும் ரயில் சேவை ஆகியவை உள்ளன.

> வருடத்திற்கு இந்த விமான நிலைத்திற்கு 3 கோடி மக்கள் வந்து செல்கின்றனர்.

 

3. வெலிங்டன் சர்வதேச விமான நிலையம்

3_3099209a.jpg

> நியூஸிலாந்தில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.

> 1956-ம் ஆண்டு 5 மில்லியன் ஈரோ தொகையில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டது. அதன் பின் படிப்படியாக இந்த விமான நிலையம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

> பிரமீடு வடிவத்தில் முழுக்க ஸ்டீல்களை கொண்டு இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. தி ஸ்டுடியோ பசிபிக் நிறுவனத்தின் கட்டிடக்கலை நிபுணர்கள் இந்த விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்தனர்.

> மேற்கூரை முழுவதும் தாமிர தகடுகளை வைத்து அமைக்கப்பட்டுள்ளது.

> எஸ்கலேட்டர் உட்பட இதன் உள்புறம் அனைத்தும்

> மரத்திலான பொருட்களையே பயன்படுத்தியுள்ளனர்.

> இந்த விமான நிலையத்தை `தி ராக்’ என்று அழைக்கின்றனர்.

 

4. லெய்டா -அல்குய்ரே விமான நிலையம், ஸ்பெயின்

4_3099208a.jpg

> இது ஒரு பிராந்திய விமான நிலையம். ஸ்பெயின் நாட்டில் கேடலோனியா மாநகரத்தில் அமைந்துள்ளது.

> 4 லட்சம் பயணிகள் வருடத்திற்கு வந்து செல்வது போல் இந்த விமான நிலையம் கட்டப்பட்டது.

> விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறை மற்றும் உடனடி சேவைகள் மையம் அனைத்தும் ஒரு கோபுரத்தில் உள்ளது. இந்த கோபுரம் 41 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இரண்டாவது தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை சேவைகளை வழங்கக்கூடிய டெர்மினல் கட்டிடங்கள். கோபுரமும் டெர்மினல் கட்டிடமும் இணைக்கப்பட்டுள்ளது.

> முழுவதும் உலோக தகடுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறம் முழுவதும் கண்ணாடி சுவர்களே உள்ளன.

 

5. அரசர் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையம், சவூதி அரேபியா

5_3099207a.jpg

> அட்கின்ஸ் என்ற கட்டிடக்கலை நிபுணர் இந்த விமான நிலையத்தை அமைப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். சுமார் 36 மாதங்களில் இந்த விமான நிலையத்தை கட்டி முடித்தனர்.

> சிறப்பு விமான நிலைய அமைப்பு, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பு என அனைத்தும் டெர்மினல் கட்டிடத்தில் உள்ளது.

> 56 அறைகள் கொண்ட ஹோட்டலும் விமான நிலையத்திற்கு உள்ளேயே இருக்கிறது.

> இந்த விமான நிலையம் சவூதி அரேபியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையமாகும்.

> ஒரே நேரத்தில் 80 ஆயிரம் பயணிகள் இந்த விமான நிலையத்திற்கு வந்துச் செல்ல முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

15325163_1207221229326569_77900289985301

கறுப்பு காந்தி' , தென் ஆபிரிக்காவின் தேசபிதா, உலகின் அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த விடுதலைப் போராட்ட வீரர், தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் நினைவு தினம்

  • தொடங்கியவர்

கங்காருவின் முகத்தில் குத்திய நபர் ; சில நொடிகள் கதிகலங்கிப்போன கங்காரு

 

 

அவுஸ்திரேலியாவின் நியூவ் சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள மிருகக்காட்சிசாலையொன்றில் இடம்பெற்ற சம்பவமொன்று சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.

 

3B0BC25000000578-4000266-Greig_Tonkin_ci

 

கிரிக் டொன்கின்ஷ் என்ற யானை பராமரிப்பாளர் ஒருவர் நியூவ் சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள மிருகக்காட்சிசாலையொன்றுக்கு சுற்றுலா சென்ற போது அவரது செல்லப்பிராணியான நாய் ஒன்று கங்காருவிடம் சிக்கிக்கொண்டது.

3B0B238900000578-4000266-Mr_Tonkins_ran_

சிக்கிக்கொண்ட தனது செல்லப்பிராணியை காப்பாற்றுவதற்காக டொன்கின்ஷ் கங்காருவின் அருகில் சென்று கங்காருவின் முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளார்.

3B0B244900000578-4000266-Mr_Tonkins_coll

இதில் சில நொடிகள் கதிகலங்கி போன கங்காரு அவ்விடத்திலிருந்து நகர்ந்து சென்றுள்ளது.

இந்நிலையில் குறித்த காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.

3B0B27EA00000578-4000266-After_the_dog_m

3B0B24C100000578-4000266-After_landing_t

3B03929B00000578-4000266-Eventually_the_

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.