Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஜெ.வுக்கு புகழாரம் சூட்டிய கேரள அரசின் விளம்பரம்!

 

kerala_advertisment_13331.jpg

மறைந்த ஜெயலலிதாவுக்கு திருக்குறள் மூலம் புகழாரம் சூட்டியுள்ளது கேரள அரசு.

கடந்த 5-ம் தேதி மறைந்த ஜெயலலிதா உடலுக்கு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, கேரளா முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், கர்நாடக அரசு ஒருநாள் துக்கம் அனுசரித்தது. இந்தநிலையில், ஜெயலலிதாவுக்கு கேரளா அரசு புகழாரம் சூட்டியுள்ளது. தமிழக பத்திரிகை ஒன்றில் திருக்குறளுடன் தமிழில் கேரள அரசு விளம்பரம் செய்துள்ளது.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
கூரையின் சிதைவுகள் தலையில் விழும் எனும் அச்சத்தில் தலைக்கவசம் அணிந்துள்ள ஆசிரியர்களும் மாணவர்களும்
 

மெக்­ஸி­கோ­வி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் ஆசி­ரி­யர்­களும் மாண­வர்­களும் தலைக்­க­வசம் அணிந்த நிலையில் கற்றல் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­கின்­றனர்.

 

21128_school1.jpg

 

இடிந்த விழும் நிலை­யி­லுள்ள கூரையின் சிதை­வுகள் தமது தலையில் விழுந்­து­விடும் என்ற அச்­சமே இதற்குக் காரணம். மெக்­ஸி­கோவின் லொஸ் மோசிஸ் நக­ரி­லுள்ள இப்­ பா­ட­சாலைக் கட்­டத்தின் கூரை சேத­ம­டைந்த நிலையில் உள்­ளது.

 

இதனால் இது­வரை எவரும் காய­ம­டை­ய­வில்லை. எனினும் எவ்­வே­ளை­யிலும் இக்­கூ­ரையின் ஓடுகள், பல­கைகள் மாண­வர்கள் மற்றும் ஆசி­ரி­யர்கள் மீது விழக்­கூடும் என அச்சம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

இந்­நி­லையில், ஆசி­ரி­யர்­களும் மாண­வர்­களும் நிர்­மா­ணத்­துறை ஊழி­யர்கள் பயன்­ப­டுத்தும் தலைக்­க­வ­சங்­களை அணிந்த நிலையில் கற்றல் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­கின்­றனர்.

 

21128_school4.jpg

 

மோட்டார் சைக்­கி­ளோட்­டிகள் பயன்­ப­டுத்தும் தலைக்­க­வ­சங்­க­ளையும் சிலர் அணிந்­தி­ருக்­கின்­றனர். நவம்பர் 14 ஆம் திக­தி­யி­லி­ருந்து இவர்கள் இவ்­வாறு வகுப்­ப­றையில் தலைக்­க­வசம் அணி­கின்­றனர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  

 

21128_school2.jpg

 

தற்­போது, மேற்­படி பாட­சாலைக் கட்­ட­டத்தின் கூரை விரைவில் சீரமைக்கப்படும் என உள்ளுர் கல்வித் திணைக்கள அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிறந்தநாள் கேக்கில் அதிக மெழுகுவர்த்திகள் ஏற்றி சாதனை..!

 

 

 

அமெரிக்காவில் பிறந்தநாள் கேக்கில் 72,585 மெழுகுவர்த்திகள் ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆன்மீக குரு ஶ்ரீ சின்மாய் அவர்களின் 85-வது பிறந்தநாளுக்காக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள ஶ்ரீசின்மாய் மையத்தின் 100 பேர் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர். இதற்கு முன்னர் 50,151 மெழுகுவர்த்திகள் ஏற்றியதே சாதனையாக இருந்தது. அனைத்து மெழுகுவர்த்திகளும் 40 நாடுகளுக்கு எறியவிடப்பட்டு, கார்பன்டை ஆக்சைடு வாயு மூலம் அணைக்கப்பட்டது. பிறகு சாப்பிடுவதற்கு இந்த கேக் பரிமாறப்பட்டது.

vikatan

  • தொடங்கியவர்

'பெண்கள் இதற்காக குரல் கொடுத்தே ஆக வேண்டும்' - கத்ரீனா கைப்!

 

 

katrina_kaif_14423.jpg

திருமணத்துக்குப் பிறகு பெண்கள் பாலியல் தொந்தரவு சம்பந்தமாகப்  தைரியமாக பேச வேண்டும் என பிரபல நடிகை கத்ரீனா கைப் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கத்ரீனா, பல பெண்கள் அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள். இப்படி அமைதியாக இருக்கக்கூடாது. சில நேரங்களில் படித்தப் பெண்கள் கூட தங்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து வெளியில் பேச தயங்குகிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் பலவீனமான பாலினம் கிடையாது. திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் பாலியல் குற்றத்துக்கு எதிராக சமூகத்தில் உள்ளவர்கள் குரல் கொடுக்க வேண்டும். ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் பெண்கள் பல வன்முறைகளுக்கு ஆளாகி வருகின்றனர். தினம் தினம் பெண்களின் வன்முறைகள் குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்களுக்காக பெண்கள் பலரும் போராட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: பறவையால் விமானம் நொறுங்குமா?

 

 
flight_3099896f.jpg
 
 
 

பறவைகள் என்றாலே இறக்கைகளை விரித்துப் பறக்கும் அழகுதான் உங்களுக்கு முதலில் ஞாபகத்துக்கு வரும். பறவைபோலப் பறந்தால் எப்படி இருக்கும் என்றுகூடக் கற்பனை செய்து பார்த்திருப்பீர்கள். இப்படி மென்மையான பறவை, பிரம்மாண்டமான விமானத்தையே வீழ்த்திவிடுகிறது என்பது எத்தனை விசித்திரம்.

பறவை மோதி விமானம் நொறுங்கியது என்கிற செய்தியை நீங்கள் படித்திருக்கிறீர்களா? அப்போதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் வியப்பு ஏற்பட்டிருக்கும். மென்மையான ஒரு பறவை மோதி வலிமையான விமானம் சிதைந்து விடுமா என்று யோசித்திருப்பீர்கள். இந்த ஆச்சரியத்தின் காரணத்தை அறிந்துகொள்வதற்கு முன்பு இன்னொரு ஆச்சரியமான விஷயத்தையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

வேகம்

துப்பாக்கி முனையிலிருந்து வெளிவரும் தோட்டாவை யாராவது கையால் பிடிக்க முடியுமா? அதெப்படி முடியும்? சினிமாவில் வேண்டுமானால் அது நடக்கலாம். ஆனால், நிஜத்தில் அதெல்லாம் நிகழ வாய்ப்பே இல்லை என்றுதானே நினைக்கிறீர்கள்? நிச்சயமாகத் துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டுகளைக் கைகளால் பிடிக்க முடியும்.

துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டா, மணிக்குச் சுமாராக 1,500 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாயும். அப்போது அதைத் தடுக்கவோ, பிடிக்கவோ முடியாது. ஆனால், அந்தத் தோட்டா எதன் மீதும் படாமல் நேராகப் பயணிக்கும்போது, ஒரு கட்டத்தில் மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்துக்குக் குறைந்துவிடும். அப்போது நடந்துபோகும் ஒருவர் தோட்டாவைப் பிடித்துவிட முடியும்.

நடந்து போகும் ஒருவரின் வேகமும், கிட்டதட்ட பயணத்தின் முடிவில் இருக்கும் தோட்டாவின் வேகமும் சமமாக இருப்பதால் இருவருக்குமான இயற்பியல் நிலை என்பது இயக்கமற்ற நிலையாகவே இருக்கும். எனவே, கீழே கிடக்கும் பொருளை எடுப்பது போல் தோட்டாவைப் பிடித்துவிட முடியும்.

உதாரணம்

கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேன் அருகில் நிற்கும் வீரர் ஹெல்மெட் அணிந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஏனென்றால் பேட்ஸ்மேனால் விளாசப்படும் பந்து மிக வேகமாக வரும். சில சமயம் ஹெல்மெட்டைக்கூட அந்தப் பந்து உடைத்துவிடும். பேட்ஸ்மேன் அருகில் நிற்கும் ஃபீல்டர் பந்தைப் பிடிப்பது மிகவும் சிரமம். ஆனால், அதே பந்தை எல்லைக் கோட்டின் அருகில் நிற்கும் ஃபீல்டர் எளிதாகப் பிடித்துவிடுவார். தவறிப் பந்து அவர் மேல் விழுந்தால்கூடப் பெரிய காயம் ஏற்படாது. ஏனெனில் பந்து தனது பயணத்தை நிறைவு செய்யும்போதுதான் அதைப் பிடிக்க முயல்கிறார். தோட்டாவைப் பிடிக்கும் தருணமும் இப்படித்தான் இருக்கும்.

இந்த இரண்டு ஆச்சரியங்களுக்கான காரணம், வேகம்தான் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

தோட்டாவைப் புறப்பட்ட இடத்திலேயே பிடிக்க வேண்டும் என்றால் அது செல்லும் அதே வேகத்தில், அதே திசையில் பயணிக்க வேண்டும். எதிர்த்து நின்றால் அவ்ளோதான். சரி, இப்போது நாம் விமான விபத்துக்கு வருவோம்.

காரணம்

பறவை மோதி விமானம் உடைவதன் காரணத்தை ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், பேப்பர் வெயிட்டை தூக்கி எறிந்து கார் கண்ணாடியை உடைப்பது போன்றதுதான். மணிக்கு சுமாராக

1,000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் விமானத்தின் மீது, அதன் எதிர்த் திசையில் பறவை மோதும்போது, அது விமானத்தின் கண்ணாடியையோ, பக்கவாட்டு பாகங்களையோ தோட்டா போல தாக்கிவிடுகிறது. சில வேளைகளில் பறவைகள் விமானத்தைத் துளைத்துக்கொண்டு உள்ளே செல்வதும் உண்டு. அப்போது விமானத்தின் இன்ஜினுக்குள் விழுந்து சேதத்தை ஏற்படுத்தி, செயலிழக்கச் செய்துவிடுகின்றன.

பறவை மோதி விமானம் விபத்துக்குள்ளாகக் காரணம் விமானத்தின் அதிவேகம்தான். இப்போது புரிகிறதா!

tamil.thehindu

  • தொடங்கியவர்

மோடியின் உலக நாயகன் பட்டம் கைமாறிவிட்டது!

 

timea_19185.jpg

டைம் இதழ் நடத்திய  இந்த ஆண்டின் சிறந்த நபரை (Person of the Year 2016) தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில், ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஒபாமா, புதின், ட்ரம்ப் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி, அதிகமாக மோடி வாக்குகளை  பெற்றிருந்தார். ஆனால், கருத்துக்கணிப்பில் வெற்றி பெற்றாலும், டைம் இதழின் ஆசிரியர்களே 'Person of the Year' தேர்வு செய்வார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதால், ட்ரம்பை இந்த ஆண்டின் சிறந்த நபராக டைம் ஆசிரியர்கள் தேர்வு செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. 
வாக்கெடுப்பில், 18% வாக்குகள் பெற்று மோடி முதல் நிலையிலும், 7% வாக்குகள் பெற்று ஒபாமா, ட்ரம்ப் இரண்டாவது நிலையிலும் இருந்தனர். ஹிலாரி 4% மற்றும் மார்க் சக்கர்பெர்க் 2% வாக்குகளும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

vikatan.

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சமாதி வரையில் தொடரும் அப்போலோ!

 

apollo_jaya3_20059.jpg

செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி ஜெயலலிதா மரணம் வரையில் 75 நாட்களும் அப்போலோவை சுற்றியே அரசியல் அரங்கேறிக் கொண்டிருந்தது. தினமும் வி.ஐ.பி.கள் ஆஜர் என அப்போலோ, அரசியல் களமானது. ‘‘பேசுகிறார்... எழுந்து நடந்தார்... கிச்சடி சாப்பிட்டார்... காவிரிக்காக அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்... கையெழுத்துப் போட்டு அறிக்கை விட்டார்’’ என அப்போலோவில் இருந்து வந்த செய்திகள் பல ரகம். உச்சபட்சமாக டிசம்பர் 4, 5 தேதிகளில் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக அப்போலோ மீது அகில இந்திய மீடியாவின் பார்வை குவிந்தது. டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது. ஆனால், ஜெயலலிதாவின் சமாதி வரையில் அது விடாது போல. ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் ஜெயலலிதாவின் சமாதியை சுற்றி பேரிகார்டுகளை   (தடுப்பரண்)  அடுக்கி பாதுகாப்பு வளையத்தை போட்டிருந்தது போலீஸ். அந்த பேரிகார்டுகளில் ஒன்றில் அப்போலோ விளம்பரம்!

vikatan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது.

  • தொடங்கியவர்

ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் இனி Offline சாத்தியம்..!

 

chrome_1_19005.jpg

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் கூகுள் க்ரோம் அப்டேட் (55.0.2883.84) மூலம் ஆஃப்லைனில் இருக்கும் போதும் வீடியோக்களைப் பார்ப்பதும், இணையதளங்களை ப்ரவுஸ் செய்வதும் சாத்தியமாகப் போகிறது. இந்த புதிய அப்டேட் மூலம் ஒரு புதிய இணையதளத்துக்கு செல்லும் போது அல்லது ஒரு குறிப்பிட்ட வீடியோவை பார்க்க விரும்பும் போது அந்த தளத்தை அல்லது வீடியோவை 'டவுன்லோட்' செய்ய ஒரு ஆப்ஷன் இருக்குமாம். அதை க்ளிக் செய்வதன் மூலம், ஆன்லைனில் இல்லாத போதும் அந்த குறிப்பிட்ட வீடியோவை அல்லது இணையத்தை ப்ரவுசிங் செய்ய முடியுமாம்.

.vikatan.

  • தொடங்கியவர்

உங்கள் வயிறு நிரம்பவில்லை எனில் பொற்கோயில் வருத்தப்படும்! 

 

பொற்கோயில்

பொதுவாகவே எல்லா குருத்வராக்களிலும் சமையற்கூடம் இருப்பது உண்டு. வழிபாட்டுக்கு வருபவர்கள் பசியுடன் செல்லக் கூடாது என்பதே குருத்வாராக்களின் முக்கிய நோக்கம். அதிலும் புனித ஸ்தலமான பொற்கோயிலில் உள்ள கிச்சனைப் பற்றி சொல்லவே வேண்டாம். பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்தரில் இருக்கிறது பொற்கோயில். இங்கு வரும் பக்தர்களுக்கு உணவு அளிப்பதற்காக இரவு பகலாக செயல்படுகிறது மிக பிரமாண்டமான கிச்சன். ஜாதி, மதம், இனப் பாகுபாடு  இல்லாமல் யார் வேண்டுமானாலும் பசித்த நேரத்தில் இங்கு வந்து உணவு அருந்திச் செல்லாம். உலகின் மிகப் பெரிய கிச்சன் இதுதான். இதனை ' குரு கா லாங்கர் ' என்று அழைக்கிறார்கள். 

சுஃபி முஸ்லிம் மத பெரியவர் பாபா ஃபெரித் என்பவர் முதன் முதலில் இப்படி ஒரு திட்டத்தை தோற்றுவித்துள்ளார். அதனை உதாரணமாகக் கொண்டு, சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், குருத்வாராக்களில் இதனை நடைமுறைப்படுத்தினார். ஜாதி, மதம், மொழி,ஆண், பெண், வயது, ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் சமமாக  தரையில் அமர்ந்து உணவு அருந்த வேண்டுமென்பதுதான் அவரது எண்ணம். சீக்கிய மதத்தின் மூன்றாவது குரு அமர்தாஸ் ஜீயால் இந்த திட்டம் பரவலாக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ஒரு சீக்கிய குடும்பமோ அல்லது பல குடும்பங்களோச் சேர்ந்து உணவுச் செலவுகளை ஏற்றுக் கொள்கிறது. பாரம்பரியமாக இது தொடர்கிறது. வெளியில் இருந்து எந்த உணவும் பெறப்படுவதில்லை. அனைத்தும் இஙகேயே சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. 

temp_17018.jpg

தினமும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பொற்கோயிலில் உணவு அருந்துகிறார்கள். பண்டிகை காலங்களில் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். 

தினமும் 1500 கிலோ அரிசி உணவு தயாரிக்கப்படும். 2 ஆயிரம் கிலோ காய்கறிகள் பயன்படுத்தி கறிகள் சமைக்கப்படும். 12 ஆயிரம் கிலோ கோதுமை மாவு பயன்படுத்தி ரொட்டிகள் சுடப்படும்.அது தவிர  13 ஆயிரம் கிலோ பருப்பு வகைகள் கொண்டும் குழம்பு தயாரிக்கப்படும். 

காய்கறி உணவு மட்டுமே மிகவும் சுத்தமாக சமைக்கப்பட்டு சுடச் சுட பரிமாறப்படும். 

இந்த கிச்சனில் தினமும் 2 லட்சம் ரொட்டிகளை சுட்டு எடுக்க முடியும்.  ஒரு மணி நேரத்தில் இங்குள்ள ரொட்டி சுடும் இயந்திரம் 25 ஆயிரம் ரொட்டிகளை சுட்டெடுக்கும். தினமும் 100 கேஸ் சிலிண்டர்கள் காலியாகும். 5 ஆயிரம் கிலோ கரியும் உணவு சமைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன. தினமும் 5000 லிட்டர் பால், ஆயிரம் கிலோ சர்க்கரை, 500 கிலோ வெண்ணெய் பயன்படுத்தி கீர் தயாரிக்கப்படுகிறது. 

wat_17287.jpg

இந்த கிச்சனில் 450 நிரந்தர ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இது தவிர ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களும் பணியில் இருப்பார்கள். சப்பாத்தி உருட்டுவது, காற்கறி நறுக்குவது போன்ற பணிகளில் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபடுவார்கள். 

மிகப் பெரிய பெரிய அண்டாக்களில் உணவு சமைக்கப்படுகின்றன. கிச்சனில் இரு உணவுக் கூடங்கள் உள்ளன. ஒவ்வொரு கூடத்திலும் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் வரை சாப்பிட முடியும். 

உலகிலேயே 24 மணி நேரமும் இயங்கும் ஒரே கிச்சன் இதுவாகத்தான் இருக்கும். ஷிப்ட் முறையில் உணவு தயாரிப்பு நடந்து கொண்டே இருக்கிறது. உணவு பரிமாறும் பணியில் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபடுகின்றனர். 

தன்னார்வத் தொண்டர்களே பிளேட்டுகளை கழுவுகின்றனர். நாள் ஒன்றுக்கு 3 லட்ச பிளேட்டுகள், தம்ளர்கள் மிக சுத்தமான முறையில் கழுவப்படுகின்றன. தன்னார்வத் தொண்டர்களை 'சேவாதர்ஸ் ' என்று அழைக்கிறார்கள். 

மிகத் தரமான வகையில் உணவுத் தயாரிக்கப்பட்டு சுத்தமான முறையில்  மக்களுக்கு பரிமாறப்படுகிறது. எத்தனை முறை வேண்டுமானாலும் வாங்கி வயிராற உண்ணலாம். உங்கள் வயிறு நிரம்பவில்லை என்றால் மட்டுமே பொற்கோயில் வருத்தப்படும்! -

 

 

 

 

vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

டிசம்பர் - 07

 

கிமு 43 : ரோம அர­சி­யல்­வாதி மார்க்கஸ் டலியாஸ் சிசேரோ படு­கொலை செய்­யப்­பட்டான்.

 

1724 : போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்­பது புரட்­டஸ்­தாந்து மதத்­தி­ன­ருக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டதை அடுத்து அங்கு கல­வரம் மூண்­டது.

 

1787 : டெல­வெயர் முதலாவது மாநி­ல­மாக ஐக்­கிய அமெ­ரிக்­காவில் இணைந்­தது.

 

862varalaru-december-7.jpg1815 : நெப்­போ­லி­ய­னுக்கு ஆத­ர­வாக இருந்த பிரெஞ்சுத் தள­பதி மிக்கேல் நேய் என்­ப­வ­ருக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

 

1900 : மாக்ஸ் பிளாங்க் தனது பேர்லின் இல்­லத்தில் வைத்து புகழ்­பெற்ற கரும்­பொருள் வெளி­யேற்ற விதியைக் கண்­டு­பி­டித்தார்.

 

1917 : முதலாம் உலகப் போர்: ஆஸ்­தி­ரி­யா-­, ஹங்­கேரி மீது ஐக்­கிய அமெ­ரிக்கா போரை அறி­வித்­தது.

 

1941 : இரண்டாம் உலகப் போர்: பின்­லாந்து, ஹங்­கேரி, போலந்து, ருமே­னியா ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக கனடா போர்ப் பிர­க­டனம் செய்­தது.

 

1941 : அமெ­ரிக்­காவின் ஹவாய் தீவி­லுள்ள பேர்ள் துறை­மு­கத்தில் அமெ­ரிக்க கடற்­படை கப்­பல்கள் மீது ஜப்­பா­னிய படை­யினர் அதி­ரடி தாக்­கு­தலை நடத்­தினர்.

 

1946 : அமெ­ரிக்­காவின் ஜோர்­ஜி­யாவின் அட்­லாண்­டாவில் உண­வு­வி­டுதி ஒன்றில் இடம்­பெற்ற தீவி­பத்தில் 119 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1949 : சீனக் குடி­ய­ரசின் அரசு நான்கிங் நகரில் இருந்து தாய்­வா­னுக்கு மாறி­யது.

 

1966 : துருக்­கியில் இரா­ணுவ முகாம் ஒன்றில் இடம்­பெற்ற தீ விபத்தில் 68 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1971 : பாகிஸ்­தானில் நூருல் அமீன் பிர­த­ம­ரா­கவும் சுல்­பிக்கார் அலி பூட்­டோவை உதவிப் பிர­த­ம­ரா­கவும் கொண்ட கூட்­டணி அர­சாங்­கத்தை ஜனா­தி­பதி  யஹ்யா கான் அறி­வித்தார்.

 

1972  : அப்­போலோ திட்­டத்தின் கடைசி விண்­கலம் "அப்­போலோ 17" சந்­தி­ரனை நோக்கி ஏவப்­பட்­டது.

 

1975 : கிழக்குத் தீமோரை இந்­தோ­னேஷியா முற்­று­கை­யிட்­டது.

 

1983 : ஸ்பெயின் மட்ரிட் நகரில் இரண்டு விமா­னங்கள் மோதி­யதில் 93 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1987 : கலி­போர்­னி­யாவில் பறந்து கொண்­டி­ருந்த விமா­னத்தில் பயணி ஒருவன், தனது முன்னாள் மேல­தி­கா­ரி­யையும் விமான ஓட்­டி­யையும் சுட்டுக் கொன்­றபின் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான். இதனால் விமானம் தரையில் மோதி­யதில் அதில் பயணம் செய்த 43 பேரும் கொல்­லப்­பட்­டனர்.

 

1988 : ஆர்­மீ­னி­யாவில்  6.9 ரிச்டர் அள­வி­லான பூகம்­பத்தில் சுமார் 25,000 பேர் கொல்­லப்­பட்டு 3 லட்சம் பேர் காய­ம­டைந்­த­துடன் 400,000 பேர் வீடு­களை இழந்­தனர்.

 

1988 : பலஸ்­தீன விடு­தலை இயக்­கத்தின் தலைவர் யாசர் அரபாத், இஸ்­ரேலை ஒரு நாடாக அங்­கீ­க­ரித்தார்.

 

1995 : கலி­லியோ விண்­கலம் விண்­ணுக்கு ஏவப்­பட்டு 6 ஆண்­டு­களின் பின்னர் வியா­ழனை அடைந்தது.

 

2012 : பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்க மீதான குற்­றச்­சாட்­டு­களை விசா­ரிப்­ப­தற்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த நாடா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வி­லி­ருந்து எதிர்க்­கட்சி உறுப்பினர்கள் விலகினர். 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

டெக்மோரா

 

 

ர்போர்ட், மால், காஃபி ஷாப்... இப்படி எங்கே போனாலும், நம்ம மக்கள் பண்ற முதல் வேலை, ஃபிரீ வை-ஃபை இருக்கானு பார்க்குறதுதான்! இப்படி ஃபிரீ வை-ஃபை வெறிபிடிச்சுத் திரியிறவங்களுக்கு உதவி செய்யவே, புதிய சேவையைக் களமிறக்கியிருக்கிறது ஃபேஸ்புக். யெஸ்... ஃபேஸ்புக்குல இனி நண்பர்களை மட்டுமல்ல, இலவச வை-ஃபை வசதி எங்கே இருக்கு என்பதையும் தேடித் தெரிந்துகொள்ளலாம்!

p52a.jpg

விரைவில் அறிமுகம் ஆகவிருக்கும் இந்தச் சேவை, சோதனை முயற்சியில் இருக்கிறது. குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் இந்த சேவையை சோதித்து வரும் ஃபேஸ்புக் நிறுவனம், நமக்கு அருகில் இருக்கும் இலவச வை-ஃபை வசதியை நமக்குத் தெரிவிக்கும். எவ்வளவு தூரத்தில் இருக்கிறது, எத்தனை இடங்களில் இருக்கிறது எனவும் தெரிந்துகொள்ளலாம். நான் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஃபேஸ்புக் கணக்கிலேயே எல்லா விபரமும் தெரிந்துவிடும்.

இதுபோன்ற இலவச வை-ஃபை வசதியைத் தேடுவதற்காக, ஆண்ட்ராய்டு, ஆப்பிள் அப்ளிகேஷன்கள் பல இருந்தாலும், எதுவுமே 100 சதவீத நம்பகத்தன்மையில் இருப்பதில்லை. தவிர, ஃபேஸ்புக்கில் ஒரு விஷயத்தைத் தேடுவது எளிது என்பதும், நண்பர்களின் பயன்பாடு குறித்த தகவலும் இருக்கும் என்பதால், உண்மையாகவே இலவச வை-ஃபை வசதியைப் பயன்படுத்தும் வாய்ப்பு எளிமையாக இருக்கும் என்பது ஃபேஸ்புக்கின் கருத்து.p52b.jpg

இலவச வை-ஃபை சேவைகள் இந்தியாவில் பொது இடங்களில் வழங்கிக்கொண்டிருப்பது போல, இன்னும் சில நாடுகளிலும் இதே வசதியை நடைமுறைப்படுத்த உள்ளன. இன்னும் சில நாடுகளில் ஏற்கெனவே இருக்கிறது. இதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் ஃபேஸ்புக் நிறுவனம், சோதனை முயற்சியை அதிவேகத்தில் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்தச் சோதனை வெற்றி பெற்றால், ஃபேஸ்புக்கின் 200 கோடி வாடிக்கையாளர்களும், கையில் செல்போனோடு ஃப்ரீ வை-ஃபை இருக்கும் இடத்தை நோக்கிப் படையெடுக்கலாம். போக்கிமேன் தேடி அலைந்தவர்கள் எல்லாம் ஃப்ரீ வை-ஃபைக்குப் பின்னால் ஓடலாம்!

அதெல்லாம் சரி... அப்படியே நம்ம ஊர்ல எந்தெந்த ஏ.டி.எம்-ல பணம் இருக்குனு கண்டுபிடிச்சுச் சொன்னா, நல்லா இருக்கும் மார்க்!

  • தொடங்கியவர்

p108a.jpg

பாப்பரஸிகளின் கேமரா கண்களிலிருந்து செலிபிரிட்டிகள் தப்பவே முடியாது. சமீபத்தில் ஹாலிவுட் நடிகை கேத்தரின் ஸெட்டா ஜோன்ஸ் தன் கணவரோடு பீச்சில் காற்று வாங்கிய தருணத்தை சிலர் போட்டோ ஆல்பமாய் எடுத்து ஆன்லைனில் வெளியிட, ‘இவங்க என்ன என்னை எடுக்கிறது. நானே எடுத்துப் போடுறேன் பாரு!’ என தான் பிகினியில் இருக்கும் படங்களை எடுத்து அப்லோடு செய்திருக்கிறார் கேத்தரின். ‘அவங்க எடுத்த போட்டோ நல்லாவே இல்லை. அதான்’ எனச் சிரிக்கிறார் இந்த அழகி. குறும்பு!

p108b.jpg

கடந்த சில மாதங்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்த அமெரிக்கப் பாடகி செலினா கோமஸ், தற்போது நார்மல் நிலைக்குத் திரும்பி யுள்ளார்.  தான் மீண்டுவந்த ரகசியத்தையும் வெளிப் படையாக ஒரு மேடையில் சொல்லியிருக்கிறார் இந்த சூப்பர் சிங்கர். ‘ஸ்வெட் பெட்' என்னும் பிரத்யேக மெத்தையில் என்னை வைத்து சுருட்டிவிடு வார்கள். காற்று வெளி யேற வழியில்லாமல் கடுமையாக வியர்க்கும். தினமும் ஒருமணி நேரம் இப்படி வியர்வையில் ஊறியதால் இப்போது உடற்கோளாறுகள் எல்லாம் சரியாகிவிட்டன’ என செலினா கூற இப்படியெல்லாமா இருக்கு என வாயைப் பிளக்கிறார்கள் ரசிகர்கள். வியர்வை நல்லது!

p108c.jpg

யாரையும் நெட்டிசன்கள் விட்டுவைப்பதாக இல்லை. சமீபத்தில் அமெரிக்க சூப்பர் மாடல் க்றிஸ்டின் டியாகன் தன் ரசிகர்களோடு ட்விட்டரில் உரையாட, அங்கே அட்டெண்டன்ஸ் போட்ட சில விஷமிகள் ஏடாகூடமாய்க் கேள்வி கேட்டனர். சுதாரித்துக் கொண்ட க்றிஸ்டின் உடனே அவற்றுக்கு நச் பதில்கள் அளிக்க, கேட்டவர்கள் எஸ்கேப். ‘வாவ், செம, இப்படித்தான் இருக்கணும்’ என க்றிஸ்டினைப் பாராட்டித் தள்ளுகிறார்கள் அவரின் அபிமானிகள். வாவ்!

p108d.jpg

பணம், புகழ் என ஏகப்பட்ட சமாசாரங்கள் இருந்தாலும் செலிபிரிட்டி கள் நிம்மதியாக இருப்ப தில்லை என மீண்டும் ஒருமுறை நிரூபண மாகியுள்ளது. ‘நானும் மற்றவர்களைப் போல சாதாரணமாக வாழவே ஆசைப்படுகிறேன். ஆனால் அது நடப்பதில்லை. எங்கே சென்றாலும் யாரோ என்னைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். செலிபிரிட்டியாய் இருப்பது மிகவும் கஷ்டம்’ என சமீபத்தில்  கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார் அமெரிக்கப் பாடகியான லேடி காகா. கஷ்டம்!

vikatan

  • தொடங்கியவர்
ஒன்று வாழ மற்றையது இறக்க வேண்டியுள்ளது
 
 

article_1481022491-article_1446711293-a.பாம்பு ஒன்று ஒரு தவளையை விழுங்குவதை ஒருவர் கண்டுவிட்டார். அந்தத் தவளைமீது கருணைகொண்டவர், தடியினால் ஓங்கித் தலையில் அடித்து விட, பாம்பும் துடிதுடித்து இறந்து விட்டது. ஆனால், தவளையும் பாம்பின் வாயினுள்ளே இறந்து விட்டது. அழிவில்தான் ஜனனம் நடக்கின்றது. தவளையும் சிறு பூச்சிகைளை நம்பித்தான் ஆன வேண்டும்.  

இதை உணராதவர், அதிர்ச்சியுற்று, “அடடா! நான் பாம்பையும் கொன்று விட்டேன்; தவளையும் இறந்து போய் விட்டது. பாம்பைக் கொன்ற பாவம் கூட வந்துவிட்டதே” எனப் பெரிதும் கவலைப்பட்டார்.  

ஒவ்வொரு உயிர்களும் உணவின் பொருட்டு ஏதொவொரு வழியைக் கையாண்டேயாக வேண்டும். காட்டில் வலிமை குறைந்த விலங்குகளை வலிமை கூடிய விலங்குகள் உண்பது போல், கடலில் சின்ன மீனைப் பெரிய மீன்கள் கௌவுவதும் இயற்கைதான்.

வேட்டையாடாமல் அவைகளால் வாழமுடியாது. மனிதரும் மாமிசம் உண்பதில்லையா? ஒன்று வாழ மற்றையது இறக்க வேண்டியுள்ளது. இந்தப் பெரிய மனிதனை கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் கொன்று விடுகின்றன.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சார்க் அமைப்பு உருவான நாள்: 8-12-1985

 
 
 

இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூடான் நாடுகள் 1985-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2007-ல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14-வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 
 
 
 
சார்க் அமைப்பு உருவான நாள்: 8-12-1985
 
இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூடான் நாடுகள் 1985-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2007-ல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14-வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.
 
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
 
* 1864 - இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. * 1881 - ஆஸ்திரியாவில் வியென்னா நகரில் ரிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 620 பேர் கொல்லப்பட்டனர். * 1912 - அல்பேனியாவின் "கோர்சே" நகரை ஓட்டோமான் படையிடம் இருந்து கிரேக்கர்கள் கைப்பற்றினர். * 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் ஹாங்கொங், மலாயா ஆகியவற்றைத் தாக்கினர். * 1941 - பசிபிக் போர்: பேர்ள் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா ஜப்பான் மீது போரை அறிவித்தது. * 1941 - பசிபிக் போர்: சீனக் குடியரசு ஜப்பான் மீது போரை அறிவித்தது.
 
* 1941 - பசிபிக் போர்: சீனாவில் அமைக்கப்பட்டிருந்த கொரிய அரசு ஜப்பான் மற்றும் ஜெர்மனி மீது 1910-ல் இருந்து ஜப்பான் வசமிருந்த கொரிய மக்கள் சார்பாக போரை அறிவித்தது. * 1941 - இரண்டாம் உலகப் போர்: வேக் தீவு மீது ஜப்பான் முதற்தடவையாக போர் தொடுத்தது. * 1941 - பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாசிகள் முதன் முதலாக நச்சு வாயுப் பேருந்தைப் பயன்படுத்தினர்.
 
* 1942 - பெரும் இன அழிப்பு: உக்ரைனின் "டேர்னோப்பில்" என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் அங்கிருந்த 1,400 ப்பெரடங்கிய கடைசித் தொகுதி யூதர்களை பெல்செக் வதை முகாமிற்கு அனுப்பினர். * 1949 - சீனக் குடியரசின் தலைநகர் நான்சிங்கில் இருந்து தாய்பெய் நகருக்கு மாற்றப்பட்டது. 

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

இப்படி எல்லாம் இருக்க கூடாது ஒரு சுற்றுலா! #DontDoList

சுற்றுலா

கோவா பீச்சில்.. ஏன் அவ்வளவு தூரம்? பாண்டிச்சேரி,மாமல்லபுரம்  போன்ற கடற்கரையோர சுற்றுலா ஏரியாக்களில் ஜோடியாகச் சுற்றும் வெளிநாட்டினரை பார்த்திருப்பீர்கள். ஹாயாக ஒரு சேரில் சாய்ந்தபடி கையில் புத்தகம், காதில் ஹெட்செட்டோடு அமைதியாகக் கடலை பார்த்தபடி முழுநாளையும் போக்குவார்கள். அவ்வபோது உடனிருப்பவரிடம் சில வார்த்தைகள். பின் கடலில் ஒரு குளியல். குடும்பம் என்றால் குழந்தைகள் ஒரு பக்கம் மணலில் கோட்டை கட்டி விளையாடிக் கொண்டிருப்பார்கள். எந்தப் பரபரப்பும் இல்லாமல், அலையடிக்கும் கடலை போல அவர்கள் நேரம் செல்லும். எல்லாச் செலவுகளையும் கூட்டினாலும் தினம் 2000ரூபாயை தாண்டி செலவு செய்ய மாட்டார்கள். இதுதான் அவர்களது vacation. உடலையும், மனதையும் சார்ஜ் ஏற்றிக்கொண்டு மீண்டும் தங்களது அன்றாட வேலைக்குத் திரும்பப் போகிறவர்கள்தான் அவர்களும். 

நம் சுற்றுலா எப்படி இருக்கும்? தினம் 7 மணிக்கு அடிக்கும் அலாரம் 4 மணிக்கே அடிக்கும். வழக்கத்தை விடப் பரபரப்பாய் வேலைகள் செய்வாள் அம்மா. மதிய உணவு மட்டுமே சமைப்பவள், அன்று மூன்று வேலைக்கும் புளிசாதம் கிளற வேண்டும். (வெயில்காலம் என்றால் கொடைக்கானல், மழைக்காலமென்றால் குற்றாலம்.ரெண்டே சாய்ஸ்தான்) அடித்துப் பிடித்துக் கிளம்பி வந்தால் டிரெயின் 2 மணி நேரம் தாமதம் என்பார்கள். ரயில் நிலையத்திலே ”காலை” என எழுதப்பட்டிருக்கும் புளிசாத  பாக்கெட் காலியாகும். ரயில் வந்து ஏறுவதற்குள் அதுவும் செரித்துவிடும். ஒரு வழியாகச் சீட் பார்த்து அமர்ந்தால் ஏதேனும் ஒரு bagல் எதாவது ஒன்று கொட்டியிருக்கும். எரிச்சலில் வீட்டுக்காரரை எல்லோர் முன்னாடியும் திட்டும்போதுதான் வீட்டை யார் பூட்டியது, gasஐ யார் மூடியது என்றெல்லாம் தோன்றும். இந்த நினைவுகளோடு ஊட்டிக்கு சென்றால் வெகேஷனா அது? 

டெலஸ்கோப் வழியாக வானத்தைக் காண இன்றும் 15 நிமிடங்கள் க்யூவில் நிற்க வேண்டியிருக்கிறது. “மலர்கள் கண்காட்சி” என மனித கூட்டத்தின் மத்தியில் ஏதோ ஒன்றை வருடா வருடம் அரசு நடத்தி வருகிறது. சீசன் டைம் என்பதால் கொடைக்கானல் தெருக்கள் ரங்கநாதன் தெருவாக மாறியிருக்கும்.மாலை 5 மணிக்கெல்லாம் கால் வலிக்க ஆரம்பித்திருக்கும். நண்பர் சொன்ன ஹோட்டலில் சென்று தங்கலாம் என் நுழையும்போது இரவு 9 ஆகியிருக்கும். குடும்பத்திற்குள் மனம் விட்டு பேச ஒரு வாய்ப்பாக அமையும் என்பதுதான் சுற்றுலாக்களின் அடிப்படை. அதை மறந்துவிட்டு நிற்க நேரமின்றி ஊர் சுற்றி பார்ப்பதென மாற்றி வைத்திருக்கிறோம்.  (இன்னமும் “குணா குகைகள்” ஹைலைட்டான விஷயம்.)அடுத்த நாளும் இவை எல்லாம் ரிப்பீட் ஆகி, வீடு வந்து சேரும்போது உடலில் அனைத்து செல்களும் “low battery” எனக் கத்த ஆரம்பித்திருக்கும். இதற்குப் பதில் வேலைக்குச் சென்றிருந்தால் இரண்டு நாள் சம்பளம் கிடைத்திருக்கும், உடல் அசதி ஆகியிருக்காது. பணம் மிச்சமாகியிருக்கும். இதுதான் ஒரு சராசரி இந்தியனின் மனநிலை. 

குளிரை மட்டும் ரசிப்பதற்காக மலைஸ்தலங்களுக்கு நாம் செல்வதே இல்லை. “புக்கு படிக்கவா இவ்ளோ தூரம் வந்த”. “பேசிட்டு இருக்கிற நேரத்துல lakeஐயாச்சும் பாத்திருக்கலாம்”. இந்தக் கேள்விகளில் இருக்கும் அபத்தம் நமக்குப் புரிவதே இல்லை. பயணங்களின் போதுதான் நம் அம்மாக்கள் ஓவர்டைம் செய்ய வேண்டியிருக்கிறது. பின் எப்படி அவர்களுக்கு இது பிடித்தமான ஒன்றாக அமையும்? பிணைப்புகளை இறுக்க வைக்க வேண்டிய பயணங்கள் எரிச்சலை தான் கொடுக்கின்றன. அன்றாட அவசர ஓட்டங்களில் இருந்து ஓய்வை தர வேண்டிய விடுமுறை பயணங்களில் இன்னும்வேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறோம். அடுத்த முறை வெகேஷனுக்குக் கிளம்பினால் இதையெல்லாம் செய்யாதீர்கள்

அதிகப்படியான திட்டமிடல்: 

செலவை குறைக்க திட்டமிடலாம். ஆனால் அதை ஃபாலோ செய்வதிலே சுற்றுலாவை சந்தோஷமாக அனுபவிக்க முடியாமல் போய் விடும். பயணத்தின் அடிப்படையான விஷயம் மகிழ்ச்சிதான். அதை மீறி எதுவுமில்லை என்பதை மறக்க கூடாது

ஓவர் பேக்கிங்:

எந்த ஊர், எந்த சீசன்என்பதை கொஞ்சம் கவனித்தாலே நமது backbagன் சைஸை குறைத்துவிடலாம். அதிக சுமை அதிக பிரச்சினை என்பதுதான் ஃபார்முலா

டெக்னாலஜி: 

மனித வாழ்க்கை எளிமையாக்கியதும் டெக்னாலஜிதான். பிரச்சினை ஆக்கியதும் அதுதான். முடிந்தவரை மொபைல், லேப்டாப் வகையறாக்களுக்கு தடா போட்டுவிடுங்கள்.

பார்க்க வேண்டிய இடங்களின் லிஸ்ட்:

சுற்றுலாவில் டெட்லைன் கிடையாது. டார்கெட் கிடையாது. அலையை ரசித்தபடி மணிக்கணக்கில் கிடக்க ஆசையென்றால் அதுதான் முக்கியம். இரவு நேர தூறலில் நனைய விருப்பமென்றால் அதுதான் முக்கியம். எத்தனை இடங்களை பார்த்தோம் என்பதல்ல விஷயம். எவ்வளவு நேரம் மகிழ்ச்சியாய் இருந்தோம் என்பதே.

ஃபோட்டோஸ்:

புகைப்படங்கள் நமக்கான வரலாறு. கொடைக்கானலின் லொகேஷன் கைட் அல்ல.. சூசைட் பாயிண்ட்டை கூகிள் செய்தாலே லட்சம் புகைப்டங்கள் கிடைக்கும். நாம் நம் அன்புக்குரியவர்களோடு மனம் விட்டு சிரிக்கும் பொழுதுகளை சுட்டு வையுங்கள்

ஓய்வில்லா டைம் டேபிள்

சுற்றுலாவின் இன்னொரு முக்கியமான விஷயம் ஓய்வு. 24 மனி நேரமும் பிசியாக இருக்க அங்கு ஏன் செல்ல வேண்டும்? நிம்மதியாக பொழுதுகளை போக விடுங்கள். நல்ல இசை, புத்தகங்கள் கையோடு எடுத்து செல்லுங்கள். முடிந்தால் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடலாம். 

Stuffed-Animal-VACATION0616_23078.jpg

ஜப்பானில் சில நிறுவனங்களில்.ஒரு பழக்குமுண்டாம். மதிய உணவு இடைவேளையின் பின் ஒரு மணி நேரம் குட்டித்தூக்கம் போட்டுவிட்டுப் பின் வேலையைத் தொடரலாம். இதனால் உற்பத்தி அதிகமாவதாக அவர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஒரு நாளைக்கே இப்படியென்றால், நாம் தினம் தினம் செய்யும் வேலையில் இருந்து தற்காலிக விடுப்பு எடுத்தால் எவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கும்?  

ஐரோப்பிய கலாச்சாரத்தைப் பின்பற்றும் நாடுகளில் எல்லாம் பயண விடுமுறையைச் சலுகையாகப் பார்ப்பதில்லை. அது ஓர் அத்தியாவசியத் தேவை. உடலும் மனமும் ஓய்வு பெற்று recharge செய்து கொள்வது அவசியமானது என மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகள் பல இதை ஒரு குற்ற உணர்ச்சியோடே பார்க்கின்றன.  

நூறு புத்தகங்கள் படிப்பதற்கு ஈடானது ஒரு பயணம் என்கிறது சீன பழமொழி. பொங்கல் கொண்டாட்டங்களில் ஒரு நாளையே “காணும் பொங்கல்” எனக் கொண்டாடிய தமிழர்களின் வாழ்வில் இப்போது அது அழிந்து கொண்டே வருகிறது. அதை மாற்றுவதும், நம் வாழ்க்கையை இன்னும் சிறப்பாய் வாழ்வதும் நம் கைகளில்தான் உள்ளது.

vikatan

  • தொடங்கியவர்

விமான உணவு: மாறிவரும் சுவையும்-மேம்பட்ட தொழில்நுட்பமும்
-------------------------------------------------------------------------------------------------------------------

விமானங்களின் முதல் வகுப்பில் பயணித்தால் மட்டுமே, நல்ல உணவு கிடைக்கும் என்பது பொதுவான புரிதல்.
ஆனால், தற்போது பல விமான நிறுவனங்கள் தமது உணவுகளை மேம்படுத்த முயல்கின்றன.
ஆசிய அளவில் விமான நிறுவனங்களுக்கு உணவைத் தயார் செய்துகொடுக்கும் உணவகங்களில் ஒன்று சாட்ஸ்.
மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப தனது உத்திகளையும் இந்நிறுவனம் மாற்றி வருகிறது.

 

  • தொடங்கியவர்

அசரடிக்கும் அபுஹாய் படங்கள்!

 

‘அபுஹாய்... உஃபே' என மின்னல் வேகத்தில் கை காலை வைத்து வித்தை காட்டி எதிராளியை துவம்சம் செய்யும் மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்களுக்கு பாரபட்சமில்லாமல் நாம் அனைவருமே ரசிகர்கள்தான். படபட காட்சியமைப்பில் நம்மைக் கண் அசராமல் பார்க்கவைக்கும் சிறந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் பற்றிய சின்ன லிஸ்ட் இது...

Crouching Tiger, Hidden Dragon

p70a.jpg

உலக அளவில் புகழ்பெற்ற சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்த உலக லெவல் சினிமா. ‘பாயும் புலி பதுங்கும் நாகம்’ என்ற தலைப்பில் தமிழில் பட்டி தொட்டிகளிலெல்லாம் சக்கை போடு போட்டது. நாயகி மிச்செல் யோவிற்கு  இந்தப் படம் இன்டர்நேஷனல் விசிட்டிங் கார்டு. வசூல் வாரிக் குவித்ததோடு நான்கு ஆஸ்கார் விருதுகளையும் அள்ளிச் சென்றது. அமெரிக்காவில் அதிகம் வசூலான வேற்று மொழி சினிமா என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.

Enter the Dragon

p70b.jpg

அன்றும் இன்றும் என்றும் மார்ஷியல் ஆர்ட்ஸ் உலகின் சூப்பர்ஸ்டார் புரூஸ் லீ தான். அவரின் தெறி ஹிட்டடித்த படங்களில் இதுவும் ஒன்று. மார்ஷியல் ஆர்ட்ஸ் நிபுணரான புரூஸ் லீக்கு ஒரு மர்ம அழைப்பு வருகிறது. அதன்படி அண்டர்கவர் ஆபீஸராக ஒரு தீவிற்குச் செல்லும் அவர் அங்கே போதைப்பொருள், விபசாரம் என நாட்டாமை செய்யும் வில்லனை துவம்சம் செய்வதுதான் கதை. 1973-ல் வெளியான இந்தப் படம் இப்போதுவரை இந்த ஜானரின் லேண்ட் மார்க் சினிமாவாக இருக்கிறது.

Raid redemption

p70c.jpg

மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் சீனா, அமெரிக்காவில் மட்டும்தான் எடுப்பாங்களா என்ற சவாலோடு இந்தோனேஷியத் திரையுலகம் அளித்த படம் இது. ஜகார்த்தாவில் இருக்கும் ஒரு பிரமாண்ட அப்பார்ட்மென்டில் ரெய்டுக்கு செல்கிறது ஒரு போலீஸ் குழு. அதில் ஒவ்வொருவராய் இறக்க, சோலோவாய் மிஞ்சி துவம்சம் செய்வார் ஹீரோ. டயர்டே ஆகாமல் மாடிக்கு மாடி ஹீரோ அடித்து முன்னேறுவதை `படக் படக்' இதயத்தோடு பார்க்க சூப்பராக இருக்கும். மிஸ் பண்ணாமப் பாருங்க பாஸ்.

Ip Man

p70.jpg

புரூஸ் லீயின் நிஜ குரு யிப் மேனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம். சீன - ஜப்பான் போரின்போது யிப் மேனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து திரைக்கதை அமைத்திருந்தார்கள். இதில் யிப் மேனாக வித்தைகள் காட்டி மெர்சல் செய்திருந்தார் டோனி யென். படம் பாக்ஸ் ஆபீஸில் எகிறி எகிறி அடிக்க, அடுத்தடுத்த பாகங்களை சுடச்சுட சுட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்கள். முதல் பாகத்தைப் போலவே அடுத்தடுத்த பாகங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.

Ong-Bak

p70d.jpg

`தாய்லாந்து மின்னல்'  டோனி ஜாவின் அதிரடியில் அசரடித்த படம். தாய்லாந்தின் ஓரத்தில் இருக்கும் கிராமத்தில் ஒரு பிரமாண்ட புத்தர் சிலை இருக்கிறது. அதைச் சில கொள்ளைக்காரர்கள் கடத்திக்கொண்டு போய்விட, ஹீரோ அதைத் தேடிச் செல்லும் மிஷனே படத்தின் கதை. கிராஃபிக்ஸ் இல்லாமல் தத்ரூபமாகக் காட்சி அமைத்திருந்ததற்காகவே உலகம் முழுக்க சூப்பர் வரவேற்பைப் பெற்றது படம். அதன் பின் டோனி ஜா பிஸியான ஹீரோ ஆனதெல்லாம் வரலாறு.

Kung Fu Hustle

p70f.jpg

மார்ஷியல் ஆர்ட்ஸ் உலகில் புரூஸ் லீ, ஜெட் லீ எல்லாம் சீரியஸ் ரகமென்றால் ஜாக்கி சானும் ஸ்டீபன் செளவும் காமெடி ரகம். விறுவிறு சண்டையை சிரிக்க சிரிக்க காட்சிப்படுத்துவது மிகப்பெரிய சவால். அதைத் திரும்பத் திரும்பக் கச்சிதமாக செய்து கோல் அடிக்கிறார் செள. கால்பந்தை மையமாக வைத்து வந்த முந்தைய படம் செம ஹிட்டடிக்க, முழுக்க முழுக்க மாஸ் மசாலா தடவிப் படம் எடுத்து ஹிட்டடித்தார் இயக்குநரும் ஹீரோவுமான செள. அதிலும் க்ளைமாக்ஸ் அதிரடி எல்லாம் குபீர் ரகம்.

Police Story

p70e.jpg

இந்த ஜானரின் வசூல் சக்ரவர்த்தி ஜாக்கி சான் கெத்து காட்டிய படம். எழுதி இயக்கியதும் அவரே. ஹாங்காங் போலீஸில் சின்சியர் அதிகாரியாக வேலை பார்க்கும் ஜாக்கி ஒரு தாதாவை விரட்டிப் பிடித்து கைது செய்கிறார். பின்னர் ரிலீஸாகும் அந்த தாதா, ஜாக்கியைப் பழிவாங்க முயல அதன் சீரியஸ் விளைவுகள்தான் கதை. அதையும் தன் ஸ்டைலில் காமெடியாகச் சொல்லியிருப்பார் ஜாக்கி. பஸ்சில் தொங்குவது, பைக்கில் பறப்பது என எக்கச்சக்க வித்தைகளைக் கலந்துகட்டி இறக்கியதால் படம் பம்பர் ஹிட். அதன் விளைவாக அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி அவையும் ஹிட்டடித்தன.

Fist of Legend

p70hg.jpg

புரூஸ் லீயின் மிரட்டலில் 1973-ல் வெளியான ‘ஃபிஸ்ட் ஆஃப் ப்யூரி’ படத்தின் ரீமேக் இது. புரூஸ் லீ ரீமேக்கில் நடிக்க ஜெட் லீயை விட்டால் யார் இருக்கிறார்கள்? படத்தில் வந்த `சடீர் படீர்' சண்டைக்காட்சிகளால் ஈர்க்கப்பட்டு அதே ஸ்டன்ட் கொரியோகிராஃபரை தங்கள் படத்தில் பயன்படுத்தியது மேட்ரிக்ஸ் படக்குழு. மேக்கிங் ரீதியாக படம் ஆஹா ஓஹோவெனப் புகழப்பட்டாலும் பொருளாதார நெருக்கடி சமயத்தில் வெளியானதால் வசூலில் மட்டும் கொஞ்சம் டல்லடித்தது. ஆனாலும் ஜெட் லீக்கு இது மைல்கல் சினிமா!

  • தொடங்கியவர்

‘சென்னை 28-II’ படத்தின் முதல் நான்கு நிமிட வீடியோ..!

Untitled_10047.jpg

‘சென்னை-28’ படத்தில் நடித்த அனைவரும் இணைந்து இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். நாளை வெளியாகயிருக்கும் இந்த படத்தின் முதல் நான்கு நிமிட காட்சியை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்த நான்கு நிமிட காட்சியில் ஜெய், சிவா, பிரேம்ஜி, அஜய், நிதின் சத்யா, விஜய் வசந்த் ஆகியோர் பாரில் குடித்துக்கொண்டே ஜெய் கல்யாணத்துக்கு ப்ளான் போடுகிறார்கள். 

 

 

  • தொடங்கியவர்
விக்டோரியா சீக்ரெட் பெஷன் ஷோவில்...
 

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பிரபல உள்ளாடைத் தயாரிப்பு நிறுவனமான விக்டோரியா சீக்ரெட் நிறுவனத்தின் பெஷன் ஷோ பாரிஸ் நகரில் அண்மையில் நடைபெற்றது.

 

21146_2016-11-30T220736Z_2077162219_RC14

 

21146_2016-11-30T221615Z_1922350140_RC16

 

21146_2016-11-30T222102Z_339941651_RC1E1

 

உலகின் முன்னிலை மொடல்கள் பலர் இப் பெஷன் ஷோவில் பங்குபற்றினர்.

 

21146_2016-11-30T224109Z_866092287_RC19A

 

21146_2016-11-30T225006Z_709420479_RC1A6

 

21146_2016-11-30T225531Z_827918118_RC121

 

21146_1.jpg

 

21146_574311-01-02.jpg

 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எம்பாமிங் எனப்படும் பிணச் சீரமைப்பு பற்றித் தெரியுமா?

 

எம்பாமிங்

ண்டனைச் சேர்ந்த மார்ட்டின் எனப்படும் பல் மருத்துவரின் கதை மிக சுவாரஸ்யமானது. அவரது மனைவியின் உடல்தான் முதன்முதலில் அறிவியல் அடிப்படையில் எம்பாமிங் செய்யப்பட்டது. பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியான அவரது மனைவி, 1735-ல் இறந்துபோனார். அவரது உயிலில், ‘என்னைப் புதைக்காமல் இருக்கும்வரை... எனது சொத்துக்களை, எனது கணவர் அனுபவிக்க உரிமை உண்டு’ என எழுதி இருந்தார். மார்ட்டினுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அப்போது, மற்றொரு பல் மருத்துவ நண்பரான வில்லியம் ஹண்டர் அவருக்கு உதவ முன்வந்தார். அவருடைய உதவியால், தனது மனைவியின் உடலைப் பதப்படுத்தி தன் மருத்துவமனை வாசலில் காட்சிக்கு வைத்தார். அதனால் மனிதருக்கு கிடைத்தது டபுள் தமாக்கா! ஒரு பக்கம், இந்தக் காட்சியைப் பார்க்கவந்த மக்களால்... இவரது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அவரது மனைவியின் உடல், நீண்ட நாட்கள் பதப்படுத்தப்பட்டதால் அவரால் அத்தனை நாட்களும் அவரது சொத்துக்களை ஆண்டு அனுபவிக்க முடிந்தது.

இறந்த ஒருவரின் உடலைப் பதப்படுத்தி பாதுகாப்பது எகிப்திய நாகரிகம் தொடங்கியே... நடைமுறையில் இருந்தாலும் மேலே சொன்ன வரலாற்றில் வரும் வில்லியம் ஹண்டர் என்னும் மருத்துவர்தான் அதனை அறிவியல் கலையாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு, உலகப் போர் சமயங்களில் இதே பிணச் சீரமைப்பு போர் முனையிலிருந்து உடலை உறவினர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க உதவியது. அதன் பின்னர், பல முக்கியத் தலைவர்களின் உடல்களைப் பதப்படுத்தி அருங்காட்சியகத்தில் வைக்க இதே முறையைப் பின்பற்றினார்கள். இன்றும் ரஷ்ய அருங்காட்சியகத்தில் பிணச் சீரமைப்பு செய்யப்பட்ட லெனின் உடலைக் காணலாம். தமிழகத்தில் ஸ்ரீரங்கத்தில், ராமானுஜரின் உடலை பதப்படுத்தி வைத்திருப்பது அந்தக்கால பிணச் சீரமைப்பு முறைக்கு நல்ல உதாரணம்.

பிணச் சீரமைப்பு எப்படிச் செய்யப்படுகிறது? 

முந்தைய காலத்தில், இறந்துபோன உடலில் ஆர்செனிக் எனப்படும் அமிலம் செலுத்தப்பட்டு, உடல் பாதுகாக்கப்பட்டது. ஆனால், ஆர்செனிக் அமிலத்தில் மண்ணை விஷமாக்கும் வாய்ப்பு இருப்பதாலும்... அப்படிப் பதப்படுத்தப்பட்ட உடல் பிற்காலத்தில் ஆர்செனிக் விஷம் கொடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாலும் அந்த முறையை உபயோகிப்பதை நிறுத்திக்கொண்டனர் மருத்துவர்கள். அதன் பிறகு, ஃபார்மால்டிஹைட் அல்லது ஃபார்மலின் எனப்படும் வேதிப் பொருள் பதனிட உபயோகப்படுத்தப்பட்டது.

பிணச் சீரமைப்பின் வகைகள் யாவை?

நாளங்கள் வழியாகச் செய்யப்படும் எம்பாமிங், வேதிப் பொருட்களை உள்ளே செலுத்துவதில் ஒருவகையாகும். இவை, உள்ளே போகும் அதே நேரம்... உள்ளிருக்கும் ரத்தம் உள்ளிட்ட திரவங்களை வெளியேற்றும். சீரமைப்புச் செய்வதற்கு முன் இறந்த உடலை மசாஜ் செய்ய வேண்டியது அவசியம். அப்போதுதான் திரவம் சீராகப் பரவும்.

பற்களின் கேவிட்டிக்கள் வழியாகச் சீரமைப்பு செய்வது மற்றொரு வகை. இதன்மூலம், தொப்புளின் வழியாக திரவம் செலுத்தப்பட்டு... நெஞ்சகம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தேவையற்ற திரவங்களை வெளியேற்றி, உள்ளே வேறு ஒரு திரவத்தை நிரப்புவதாகும்.

மேல்சரும எம்பாமிங் முறையில் உடல் சீரமைப்பு ஒழுங்காய் நடைபெறாத பகுதிகளில் மட்டும் ஊசி கொண்டு எம்பாமிங் செய்யப்படும்.

மொத்தமாக மேலோட்டமாகச் செய்யப்படும் எம்பாமிங் முறையில், தோல் மக்கிப் போகாதவாறு இருக்க மட்டும் கெமிக்கல் செலுத்தப்படும்.

நீண்டநாட்கள் பதப்படுத்த வேண்டும் என்கிற நிலையில்... உடலில் பல இடங்களில் ஊசி போட வேண்டும்.

மொத்தத்தில் எம்பாமிங் எனப்படும் பிணச் சீரமைப்பு முறையில், பல்வேறு ரசாயனம் மற்றும் உப்புகள் கொண்டு சீரமைப்பு செய்யப்படுவதால் உடலின் நிறம் பாதுகாக்கப்படும். பிணத்தின் கை, கால் பகுதிகளை நாம் நினைத்தது மாதிரி மாற்ற முடியும். உடலில் ஏற்கெனவே தங்கி இருக்கும் மருந்துகளால் உண்டாகும் தேவையற்ற துர்நாற்றத்தை அது கட்டுப்படுத்த உதவும்.

.vikatan

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று...

டிசம்பர் - 08

 

1609 : இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும்.

 

1881 : ஆஸ்திரியாவில் வியன்னா நகரில்  அரங்கொன்றில் ஏற்பட்ட தீயினால் 620 பேர் கொல்லப்பட்டனர்.

 

1912 : அல்பேனியாவின் "கோர்சே" நகரை ஒட்டோமான் படையிடம் இருந்து கிரேக்கர்கள் கைப்பற்றினர்.

 

863saarc-flags.jpg1941 : இரண்டாம் உலகப் போர்: ஹொங்கொங், மலாயா ஆகியவற்றை ஜப்பானியர்கள்  தாக்கினர்.

 

1941 : பசிபிக் போர்: பேர்ள் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா ஜப்பானுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்தது.

 

1941 : ஜப்பானுக்கு எதிராக சீனக் குடியரசு போர் பிரகடனம் செய்தது.

 

1941 : போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக் கொல்வதற்கு ஜேர்மனியின் நாஸிகள் முதன் முதலாக நச்சு வாயு பஸ்ஸை பயன்படுத்தினர்.

 

1942 : யுக்ரைனின் "டேர்னோப்பில்" என்ற இடத்தில் நாஸி ஜேர்மனியர்கள் அங்கிருந்த 1,400 பேர் கொண்ட கடைசித் தொகுதி யூதர்களை பெல்செக் வதை முகாமிற்கு அனுப்பினர்.

 

1953 : “அணு அமைதிக்கே” என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனோவர் அறிவித்தார்.

 

1963 : அமெரிக்காவின் மேரிலாந்தில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 81 பேர் கொல்லப்பட்டனர்.

 

1966 : கிரேக்கக் கப்பல் ஒன்று மத்திய தரைக் கடலில்  மூழ்கியதில் 200 பேர் கொல்லப்பட்டனர்.

 

1969 : கிரேக்கத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 93 பேர் கொல்லப்பட்டனர்.

 

1972 : அமெரிக்காவின் சிக்காகோவில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியதில் 45 பேர் கொல்லப்பட்டனர்.

 

1980 : பிரபல பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த ஜோன் லெனன் நியூயோர்க்கில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

1982 : சூரினாமில் இராணுவ ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் கொல்லப்பட்டனர்.

 

1985 : இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் சார்க் அமைப்பு  உருவாக்கப்பட்டது.

 

1987 : பெருவின் தலைநகர் லீமாவுக்கு அருகில் சென்று கொண்டிருந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் அதில் பயணம் செய்த பெருவின் கால்பந்தாட்ட அணியொன்றின் அனைத்து வீரர்களும் கொல்லப்பட்டனர்.

 

1991 : சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், யுக்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.

 

1998 : அல்ஜீரியாவில் 81 பேர் ஆயுதக் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.

 

2009 : ஈராக்கின் பாக்தாத் நகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 127 கொல்லப்பட்டனர்.

 

2013: சிங்கப்பூரில் பஸ் விபத்து ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து இரு மணித்தியாலங்கள் பாரிய வன்முறைகள் நிலவின. 1969 ஆம் ஆண்டின் பின்னர் சிங்கப்பூரில் இடம்பெற்ற இத்தகைய முதலாவது வன்முறை இதுவாகும். 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

 

35p1.jpg

பிரேசிலைச் சேர்ந்த உள்ளூர் கால்பந்து அணி `சப்பேகோயன்ஸ்' வீரர்கள், கோபா சவுத் அமெரிக்கா கால்பந்து தொடரில் பங்கேற்பதற்காக கொலம்பியாவின் மெடலின் நகருக்கு விமானத்தில் சென்றுகொண்டிருந்தனர். வழியில் விமானம் விபத்தில் சிக்கி, 19 கால்பந்து வீரர்கள் உள்பட 76 பேர் பலி. தற்போது சப்பேகோயன்ஸ் அணியில் ஆறு வீரர்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறார்கள். முழுமையான ஒரு கால்பந்து அணிக்கு 23 வீரர்கள் தேவைப்படுவார்கள். இதைக் கேள்விப்பட்ட ரொனால்டினோ, ஓய்வு முடிவுக்கு முழுக்குப்போட்டுவிட்டு சப்பேகோயன்ஸ் அணிக்காக விளையாட முடிவுசெய்துள்ளார். இவரைப் போலவே இன்னும் பல முன்னணி வீரர்களும் சப்பேகோயன்ஸ் அணிக்கு ஆட ஆர்வம்காட்ட... விபத்துச் சோகத்தில் இருந்த பிரேசில் உற்சாகமாகியிருக்கிறது. நம்பிக்கை நட்சத்திரங்கள்!


35p2.jpg

ஷாரூக்கானின் இந்த ஃபேமிலி போட்டோதான் கடந்த வார ஆன்லைன் வைரல். இன்டீரியர் டிசைனரான கௌரிகான் எழுதியிருக்கும் `டிசைன் அண்ட் கான்டெம்ப்ரரி லிவிங்' என்ற புத்தகத்தில் பயன்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட போட்டோ இது. `என் குழந்தைகள் என்ன செய்ய வேண்டும் எனத் தேர்ந்தெடுப்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. எதுவாக இருந்தாலும் அதில் தீவிரமாக உழைப்பார்கள். எனது ஆசை ஒன்றுதான். அவர்கள், தங்கள் கனவுகளின் மீது அதீத ஆர்வமுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்' என்று இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கௌரிகான். வளர்ப்பு காண்!


35p3.jpg

`காதலன்' படத்தில் வந்த `ஊர்வசி... ஊர்வசி... டேக் இட் ஈஸி ஊர்வசி...' பாடலின் சரணங்களை ஓர் இசை நிகழ்ச்சிக்காக மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இசைப்புயல். `அந்தப் பாடலுக்கு இப்போதைய காலகட்டத்துக்கு ஏற்ற வரிகளை நீங்களும் கொடுக்கலாம். ஆனால், டொனால்டு ட்ரம்ப், ஹிலாரி கிளின்டனைப் பற்றியும், ரூபாய் நோட்டுப் பிரச்னை பற்றியும் வேண்டாமே' என ஸ்டேட்டஸ் தட்ட, `டி.பி மாத்தியும் லைக் வரலைன்னா... டேக் இட் ஈஸி ஊர்வசி', `ரெஸ்யூம் வாங்கிட்டு கால் பேக்னு சொன்னா... டேக் இட் ஈஸி ஊர்வசி' என கமென்ட்களைக் குவித்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஊர்வசி, ஒரு ஃபேன்டசி!


35p4.jpg

லையாளத்தில் `பிரேமம்', `கலி' படங்களைப்போல் இப்போது தெலுங்கு என்ட்ரிக்கு ரெடியாகி வருகிறார் சாய் பல்லவி. இவர் வீட்டில் இருந்து இன்னொரு ஹீரோயினும் ரெடி. சாய் பல்லவியின் தங்கை பூஜா, `காரா' என்னும் குறும்படம் மூலம் நடிப்புக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். `சினிமா என்ட்ரி எப்போது?' என விசாரித்தால், `இன்னும் ஒரு வருஷம் கல்லூரிப் படிப்பு இருக்கு. முடிச்சப் பிறகுதான் மத்ததெல்லாம்'' என கண்டிஷனோடு காத்திருக்கிறார் சிஸ்டர். சின்ன மலர்!


35p5.jpg

`என் திருமண வாழ்க்கைப் பற்றியும், நான் எப்போது குழந்தைப் பெற்றுக்கொள்ளப்போகிறேன் என்றும் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். திருமணமான பெண் என்பதைத் தாண்டி, எனக்கென ஓர் அடையாளம் இருக்கிறது. திருமணமானதால், கணவர்தான் முக்கியம் என்று சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது சரி அல்ல. கணவரை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனாலும் என் வாழ்வில் நான்தான் முக்கியமான நபர். இப்படிச் சொல்வதில் நான் சுயநலவாதி என மக்கள் நினைத்தாலும் கவலை இல்லை' எனப் பொங்கி எழுந்திருக்கிறார் வித்யாபாலன்.கெத்து கேர்ள்!


35p6.jpg

லகின் உச்சபட்ச கார் ரேஸ் பந்தயமான ஃபார்முலா-1 ரேஸில் சாம்பியன் பட்டம் வென்ற அடுத்த சில நாட்களிலேயே ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நிக்கோ ராஸ்பெர்க். 31 வயதான ராஸ்பெர்க்குக்கு ஃபார்முலா-1 கார் ரேஸ் சாம்பியன் ஆகவேண்டும் என்பதுதான் 25 வருடக் கனவு. `என் அப்பா ஃபார்முலா-1 சாம்பியன். அவரைப்போல நானும் சாம்பியன் ஆகவேண்டும் என கனவு கண்டேன். ஆனால், அது நிறைவேற 10 வருடங்கள் ஆகிவிட்டன. சாம்பியன் பட்டத்தோடு ஓய்வுபெறுவதுதான் சரியாக இருக்கும். இனி என் குடும்பத்தோடு நேரம் செலவிட விரும்புகிறேன்' என்று ரேஸ் உலகைத் திடுக்கிடவைத்திருக்கிறார் ராஸ்பெர்க். ரியல் சாம்பியன்!


ல்லா பொருட்களுக்கும் டூப்ளிகேட் போடுகிற சீனா, இப்போது `டைட்டானிக்' கப்பலை உருவாக்க இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கான இந்த முயற்சியை, சீன அரசு கையில் எடுத்திருக்கிறதாம். கப்பல் கட்டுமான நிறுவனமான வாச்சுவான் குரூப் இதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது. ஒரிஜினல் டைட்டானிக்கில் இருந்த டைனிங் ஹால், தியேட்டர், ஆடம்பர அறைகள், நீச்சல்குளம் அனைத்தும் அப்படியே வைத்து உருவாகும் இந்தக் கப்பல், 2018-ம் ஆண்டின் இறுதிக்குள் தயாராகிவிடும். ரிசர்வேஷன் உண்டா?

vikatan

  • தொடங்கியவர்

 

மாதவிடாய் வலி : பெண் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டுமா?

BBC

  • தொடங்கியவர்

15230619_1227100124031596_17149257114256

 
 
உலகின் மிகப் பெரிய காய்கறிச்
சந்தையாக இருக்குமோ?

15400433_1235082526566689_93084622670036

 
 
குழாய்களிலும் செடிகள்...
வியக்கவைக்கும் வீட்டுத்தோட்டம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.